ஜனவரி 7, 2024 அன்று, பங்களாதேஷில் தேசிய தேர்தல்கள் நடத்தப்பட்டன, ஆனால் அவை வன்முறை மற்றும் எதிர்ப்புகளால் சிதைக்கப்பட்டன. ஆளும் கட்சியான அவாமி லீக் (Awami League) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட 300 இடங்களில் 225 இடங்களைப் பெற்று குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றன. பிரதான எதிர்க்கட்சியான வங்காளத்தின் தேசியவாதக் கட்சி (Bangladesh Nationalist Party (BNP)), அதன் தலைவரும் முன்னாள் பிரதமருமான கலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், நடுநிலையான அரசாங்கத்தின் கீழ் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று கோரி, தேர்தலைப் புறக்கணித்தனர். அவாமி லீக் 2009 இல் ஆட்சிக்கு வந்த பிறகு, அரசியலமைப்புச் சட்டத்தை ரத்து செய்தது.
கடந்த காலங்களில், அவாமி லீக்கின் கீழ் 2014 மற்றும் 2018 தேர்தல்களில், தேர்தல் கையாளுதல், முறைகேடுகள் மற்றும் வன்முறை போன்ற குற்றச்சாட்டுகள் உட்பட, வங்கதேசம் இதே போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டது. இது சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களின் (criticism from international election) விமர்சனத்திற்கு உள்ளானது.
பிராந்திய மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் விளையாடுகிறது
உலக அரங்கில் ஒருமுறை கவனிக்கப்படாத நிலையில், 2022 ஆம் ஆண்டில் 7.1% வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியுடன், $400 பில்லியனுக்கும் அதிகமான பொருளாதாரம் மற்றும் 165 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன் தெற்காசியாவில் வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக வங்காளதேசம் உயர்ந்துள்ளது. இந்த இராஜதந்திர ரீதியாக அமைந்துள்ள நாடு, சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் செல்வாக்கிற்காக போட்டியிடும் புவிசார் அரசியல் போட்டியில் ஒரு மையப்புள்ளியாக இது அமைந்துள்ளது.
பகிரப்பட்ட வரலாறு மற்றும் கலாச்சாரத்துடன் வங்காளதேசத்தின் நெருங்கிய அண்டை நாடான இந்தியா, குறிப்பிடத்தக்க இராஜதந்திர நலன்களைக் கொண்டுள்ளது. இருதரப்பு வர்த்தகமும் ஆண்டுதோறும் $15 பில்லியனை நெருங்குகிறது. மேலும் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் முதலீடுகள், பயங்கரவாத எதிர்ப்பு, ஆற்றல் மற்றும் நதி நீர் பகிர்வு ஆகியவற்றை கொண்டுள்ளது. இது இருநாட்டின் வலுவான உறவை எடுத்துக்காட்டுகிறது. அதன் ஒரு பெல்ட் ஒரு சாலை முன்முயற்சி (Belt and Road Initiative (BRI)) உள்கட்டமைப்பு திட்டங்கள் உட்பட சீனாவின் பிராந்திய செல்வாக்கை சமநிலைப்படுத்துவதில் இந்தியாவிற்கு வங்காளதேசம் முக்கியமானதாக உள்ளது. இது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் உறுதியற்ற தன்மையை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் வங்கதேசத்துடனான உறவில் இந்தியா தீவிரமாக முதலீடு செய்கிறது. ஷேக் ஹசீனாவின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அவருக்கு வாழ்த்து தெரிவித்ததில் ஆச்சரியமில்லை, அவர்களது கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை முடக்குதல் தொடர்பான பிரச்சினைகளுக்காக வங்காளதேச அரசாங்கத்தை அமெரிக்கா விமர்சித்துள்ளது. வங்காளதேசம் அதிகாரிகளுடன் அமெரிக்கா, நல்ல உறவைப் பேண விரும்புவதால், ஜனநாயக பண்புகளை மேம்படுத்துவதில் அமெரிக்கா ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறது. வங்காளதேசத்தில் ஜனநாயக தேர்தல் செயல்முறையை குறைவான மதிப்பிற்கு உட்படுத்தும் வங்காளதேசம் நபர்களுக்கு விசா (visa) கட்டுப்பாடுகளை விதிக்கும் நோக்கத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
சீனா மற்றும் ரஷ்யாவின் பதில்கள்
வங்காளதேசத்திற்கான சீனத் தூதர் யாவ் வென்னின், சீனா பங்களாதேஷின் சிறந்த வர்த்தக பங்காளியாக, ஆண்டு வர்த்தகம் $25 பில்லியனைத் தாண்டியுள்ளது. அதன் ‘ஒரு பெல்ட் ஒரு சாலை முன்முயற்சி (Belt and Road Initiative (BRI))’ மூலம், துறைமுகங்கள், பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களில் 10 பில்லியன் டாலர்களுக்கு மேல் சீனா முதலீடு செய்துள்ளது.
தேர்தலுக்குப் பிறகு, அமெரிக்கா மற்ற போட்டியாளர்களுடன் இணைந்து ‘தேர்தல்கள் சுதந்திரமானவை, ஆனால் நியாயமானவை அல்ல, மேலும் இவை குறைந்த பங்கேற்பு’ என்றும் கூறியுள்ளது. மாறாக, சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், அவாமி லீக்கின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார் மற்றும் திட்டமிட்டபடி அதன் தேசியத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக வங்காளதேசத்தை பாராட்டினார்.
இந்தியா வங்கதேசத்தின் ‘சிறந்த நண்பன்’ என்று தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமர் ஷேக் ஹசீனா கூறினார். நாட்டின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றான ரூப்பூர் 2,400 மெகாவாட் அணுமின் நிலையத்திற்கு $12 பில்லியன் மதிப்பிலான நிதியளிப்பதன் மூலம் வங்காளதேசத்தை மாஸ்கோ வலுப்படுத்தியுள்ளது. இந்த முக்கிய முதலீடுகள் காரணமாக வங்கதேச தேர்தலில் ரஷ்யா அதிக ஆர்வம் காட்டி வருகிறது. 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்கத் தடைகள் காரணமாக அணுசக்தி பொருட்களை ஏற்றிச் செல்லும் ரஷ்யக் கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது, இந்தியா சரக்குகளைப் பெற்றுக் கொண்டு சாலை வழியாக கட்டுமானப் பகுதிக்கு கொண்டு சென்றது. ஷேக் ஹசீனாவின் தேர்தல் வெற்றிக்கு ரஷ்யாவும் வாழ்த்து தெரிவித்ததுடன், வங்கதேசத்துக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் மாண்டிட்ஸ்கியை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வரவேற்றார். தேர்தலுக்கு முன், ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா 2023-ல், வங்காளதேசத்தின் உள் அரசியல் செயல்முறைகளில் செல்வாக்கு செலுத்துவதற்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் முயற்சிகளை அவர்கள் மீண்டும் மீண்டும் முன்னிலைப்படுத்தியதாக சுட்டிக்காட்டினார்.
வங்காளதேசத்திற்கு முன்னால் உள்ள பிரச்சனைகள்
வங்காளதேசத்தின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் இராஜதந்திரத்தின் முக்கியத்துவம் காரணமாக 2024 தேர்தல் முடிவுகள் புவிசார் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளன. இது அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் வங்காளதேசத்துடன் வணிகம் செய்வது சற்று சவாலாக உள்ளது. மேலும் அவர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பது நிச்சயமற்றது. ஆடைத் தொழில் வங்காளத்தேசத்தின் குறிப்பிடத்தக்க வருமான ஆதாரமாகும். மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகள் ஒரு பிரச்சனையாக இருக்கலாம், ஏனெனில் அவர்கள் வங்காளத்தேசத்தில் இருந்து நிறைய ஆடைகளை வாங்குகிறார்கள்.
2007 இல், வங்காளத்தின் தேசியவாதக் கட்சியானது, எதிர்க்கட்சிகள் தேர்தல்களை கையாள முயற்சித்த போது, ஐக்கிய நாடுகள் சபை அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்பதை வங்காளதேசத்தை நிறுத்தக்கூடும் என்று எச்சரித்தது. இது 2008 இல் இராணுவ ஆதரவுடைய அரசாங்கம் தேர்தலை நடத்த வழிவகுத்தது. அவாமி லீக் வெற்றியானது விமர்சனங்களுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் இந்த முறை மேலும் நடவடிக்கை எடுக்குமா என்பது தெளிவாக இல்லை.
சமீபத்திய மாதங்களில் எரிசக்தி இறக்குமதி விலைகள், டாலர் கையிருப்பு குறைதல் மற்றும் பலவீனமான உள்ளூர் நாணயம் ஆகியவற்றைக் கையாள்வதில் உள்ள சவால்களுடன் அரசாங்கம் போராடுவதால், சமீபத்திய மாதங்களில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) வங்காளதேசத்தை பாதிக்கும் பல்வேறு பொருளாதார சிக்களை சுட்டிக்காட்டியுள்ளது. உக்ரைன் போரின் காரணமாக விநியோக சங்கிலி சீர்குலைவுகள் (supply chain disruptions) மற்றும் பணவீக்கம் மோசமடைந்துள்ளது. பிரதம மந்திரி ஹசீனாவின் அரசாங்கத்திற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வரவிருக்கும் மாதங்கள் சவாலானதாக இருக்கும். ஏனெனில் அவர்கள் பலவீனமடைந்து வரும் பொருளாதாரத்தை நிர்வகிப்பது மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதன் மூலம் புவிசார் அரசியலை வழிநடத்துவது.
சையத் முனீர் கஸ்ரு (www.syedmunirkhasru.org) டாக்கா, டெல்லி, மெல்போர்ன், துபாய் மற்றும் வியன்னாவில் உள்ள கொள்கை, வக்காலத்து மற்றும் ஆளுகைக்கான நிறுவனம் (IPAG) என்ற சர்வதேச சிந்தனைக் குழுவின் தலைவராக உள்ளார்.
Original article: