நீடித்த நிலையான வளர்ச்சி (Sustainable development) என்பது ஆக்கப்பூர்வமாக சிந்திப்பது மற்றும் அதன், இயக்கத்தை மையமாகக் கொண்டு செயல்படுவது ஆகும். நாடுகளின் வளர்ச்சியானது நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் வளர்ச்சியில் வேரூன்றியுள்ளது. மேலும் பிராந்திய முன்னேற்றம் என்பது பொருளாதாரம் ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல், ஒப்பீட்டு நன்மையை மேம்படுத்துதல், எதிர்காலத்திற்கான பகிரப்பட்ட பார்வை, இராஜதந்திர நட்பின் சூழல் மற்றும் சில பகுதிகளில், எல்லாவற்றிற்கும் மேலாக, போக்குவரத்து இணைப்பின் சுறுசுறுப்பு மற்றும் அடர்த்தி ஆகியவற்றைப் பொறுத்தது.
வங்காளதேசம், பூட்டான், இந்தியா மற்றும் நேபாளம் (Bangladesh, Bhutan, India, and Nepal (BBIN)) ஆகியவற்றின் பிராந்திய வளர்ச்சியின் உத்தி நாற்கர திட்டத்தில் (quadrangle) கவனிக்கத்தக்கது. இது கூட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளுடன் வளர்ந்து வரும் துணைப் பிராந்தியமாகும். இந்த நாற்கர திட்டத்தை வேறுபடுத்துவது, தனிப்பட்ட இரயில்வே அமைப்புகளின் சாத்தியக்கூறு மட்டுமல்ல, பிராந்திய இணைப்பு, குறிப்பாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக செலவுகளைக் குறைத்து, ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
உதாரணமாக, கொல்கத்தாவிலிருந்து அகர்தலாவுக்கு ஒரு சரக்கு ரயிலை, பங்களாதேஷ் ரயில்வே வழியாக திருப்பி விடப்பட்டால், போக்குவரத்து செலவுகளையும் நேரத்தையும் மூன்றில் இரண்டு பங்கு குறைக்க முடியும். இது இந்தியா, பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளுக்கும் பெரிதும் பயனளிக்கும். நேபாளம், நிலத்தால் சூழப்பட்டிருந்தாலும், பிரட்நகரிலிருந்து (Biratnagar) ரயில் வழியாக சட்டோகிராம் துறைமுகத்தை (Chattogram port) அணுக முடியும். மேலும் பூட்டானில் உள்ள கெலெபுவிலிருந்து (Gelephu) சரக்கு ரயில்களைப் பயன்படுத்தி மோங்லா துறைமுகத்தை (Mongla port) அடைய முடியும்.
வங்காளதேசம், பூட்டான், இந்தியா மற்றும் நேபாளத்தின் (BBIN) முன்முயற்சி நாடுகளுக்கு இடையிலான வலுவான வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டதுடன், இது இந்த பகுதிக்கு அசாதாரணமானது. பகிர்ந்தளிக்கப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் அதன் யோசனைகளிலிருந்து உண்மையான திட்டங்களுக்கு நகர்ந்துள்ளன. பங்களாதேஷ், பூட்டான், இந்தியா மற்றும் நேபாளம் (BBIN) உயர்ந்த நோக்கங்களைக் கொண்டுள்ளது. ஆனால் இது நடைமுறைக்குரியது மற்றும் விரைவாக செயல்படுத்தப்படலாம். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வெவ்வேறு வழித்தட அளவுகளுடன் பிராந்தியத்தை இணைக்கும் தடையற்ற ரயில் வலையமைப்பை உருவாக்குவதாகும். ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் நிறுவன கட்டமைப்புகளை முடிப்பது வங்காளதேசம், பூட்டான், இந்தியா மற்றும் நேபாளத்தை (BBIN) கிழக்கு தெற்காசியாவின் வளர்ச்சிக்கான விரிவாக்கத்திற்க்கு தயார்படுத்தும்.
இந்த கட்டத்தில், எல்லைகளைக் கடந்து முக்கியமான பிராந்தியத்தில் நடந்துகொண்டிருக்கும் ரயில்வே திட்டங்களை கோடிட்டுக் காட்ட வடிவமைப்பு சிந்தனையைப் பயன்படுத்துவது முக்கியம். பெரும்பாலான திட்டங்கள், இந்திய மற்றும் வங்காளதேச ரயில்வேயுடன் தொடங்கி, பூட்டான், நேபாளம் மற்றும் வங்காளதேசத்தில் புதிய முனையங்கள், துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை (Special Economic Zone (SEZ)) உள்ளடக்கியது.
செப்டம்பர் 2022 இல், இந்தியாவுக்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான ஒரு கூட்டு அறிக்கையானது, டோங்கி-அகௌரா பாதையின் (Tongi-Akhaura line) பாதையை மாற்றுதல், கவுனியா-லால்மோனிர்ஹாட்-மொகல்காட்-புதிய கிதல்தாஹா இணைப்பை (Kaunia-Lalmonirhat-Mogalghat-New Gitaldaha link) உருவாக்குதல், ஹில்லி மற்றும் பிரம்பூரை (Hilli and Birampur) இணைத்தல், தடங்கள் மற்றும் அதன் குறியீடுகளை மேம்படுத்துதல் (upgradation of track and signaling), சிராஜ்கஞ்சில் ஒரு கொள்கலன் கிடங்கை அமைத்தல் (container depot at Sirajganj) மற்றும் வங்காளதேச ரயில்வேக்கு என்ஜின்களை வழங்குதல் உள்ளிட்ட குறிப்பிட்ட நடவடிக்கைகளை வரவேற்றது. கடந்த ஆண்டு நவம்பரில், அகர்தலா-அகௌரா ரயில் இணைப்பு (Agartala-Akhaura rail link) மற்றும் குல்னாவிலிருந்து பங்களாதேஷின் மோங்லா துறைமுகம் (Khulna to Mongla port in Bangladesh) வரையிலான ரயில் பாதை ஆகிய இரண்டு முக்கியமான ரயில் திட்டங்கள் தொடங்கப்பட்டன. இவை, மேற்கு மற்றும் வடக்கு வங்காளதேசத்தை இந்தியா மற்றும் பூட்டானுடன் இணைக்கிறது.
தற்போது, இந்திய ரயில்வேயானது, வங்காளதேச ரயில்வேயுடன், பெட்ராபோல்-பெனாபோல் (Petrapole-Benapole), கெடே-தர்ஷனா (Gede-Darshana), சிங்காபாத்-ரோஹன்பூர் (Singhabad-Rohanpur), ராதிகபூர்-பிரோல் (Radhikapur-Birol) மற்றும் ஹல்திபரி-சிலாஹதி (Haldibari-Chilahati). அகர்தலா மற்றும் அகாவ்ரா (Agartala and Akhaura) ஆகிய ஐந்து இடங்களில் இணைக்கிறது. இந்த வழித்தடங்களுக்கு இடையே சோதனை ஓட்டங்கள் நடந்துள்ளன. மேலும், பெலோனியா-ஃபெனி (Belonia-Feni), போக்ரா-சிராஜ்கஞ்ச் (Bogra-Sirajganj), மஹிசாசன் ஜீரோ பாயிண்ட் (Mahisasan Zero point)மற்றும் பாலுர்காட்-ஹிலி (Balurghat-Hili) ஆகிய நான்கு ரயில் திட்டங்கள் ஆய்வுக் கட்டத்தில் உள்ளன.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வங்காளதேசத்துடன் இணைக்க அகௌரா-அகர்தலா ரயில் இணைப்பு (Akhaura-Agartala rail link) முக்கியமானது. இது கிழக்கு இந்தியாவிற்கும் அதன் வடகிழக்கு மாநிலங்களுக்கும் இடையில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களை மாற்றியமைக்கக்கூடும். கொல்கத்தாவிலிருந்து நியூ ஜல்பைகுரி-குவஹாத்தி வழியாக அகர்தலா செல்லும் 1,600 கி.மீ ரயில் பாதையை கொல்கத்தா-டோங்கி-அகாவுரா-அகர்தலா பாதையைப் பயன்படுத்துவதன் மூலம் 500 கி.மீ ஆகக் குறைக்க முடியும். அகர்தலா மற்றும் கொல்கத்தா இடையே தற்போது ஒரு பயணிகள் ரயிலில் பயணிப்பதற்கு 36 மணி நேரம் ஆகிறது. ஆனால் இதன் இரயில் மாற்றியமைப்பின் மூலம் 10 மணி நேரத்திற்கும் குறைவாகவே குறைக்கப்படலாம். மேலும், சரக்கு கட்டணங்களை மூன்றில் இரண்டு பங்கு குறைக்க முடியும். இது இந்தியாவில் உள்ள தொழில்களுக்கு பயனளிக்கும் மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்கும், அதே நேரத்தில் வங்காளதேச ரயில்வே துறைக்கு குறிப்பிடத்தக்க வருவாயை உருவாக்கும்.
இதை எவ்வளவு விரைவாக அடைய முடியும்? தொழில்நுட்ப ரீதியாக, அகர்தலா இப்போது சட்டோகிராம்-டாக்கா மீட்டர் கேஜ் பாதையில் (Chattogram-Dhaka meter gauge line) அகௌரா ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. டோங்கி வழியாக கெடே மற்றும் பெட்ராபோல் முதல் டாக்கா வரை (Gede/Petrapole to Dhaka via Tongi) பிராட்-கேஜ் மற்றும் டிஜி ரயில் வரை உள்ளது. அகர்தலாவை அடைய டோங்கியில் இருந்து அகௌரா வரை மீட்டர் கேஜ் மாற்ற வேண்டும். டோங்கி-அகௌரா பிரிவின் அகல பாதை மற்றும் இரட்டை பாதை மற்றும் பங்கபந்து பாலத்தை (Bangabandhu Bridge) விரைவில் முடிப்பது ஆகியவை ஆகியவை எந்த மாற்றியமைக்கப்பட்ட போக்குவரத்திற்கும் தடையற்ற செயல்பாடுகளை உறுதி செய்வதற்கான முன்னேற்பாடாகும். கூடுதலாக, இந்த ஆண்டு பணிகள் முடிந்ததும் அகர்தலாவிலிருந்து டாக்கா வழியாக கொல்கத்தாவுக்கு ஒரு குறுகிய பி.ஜி ரயில் பாதை (BG rail route)கிடைக்கக்கூடும்.
இந்தியாவும் நேபாளமும் தற்போது ஜெயநகரில் இருந்து பிஜல்புரா வரையிலான ஒரே ஒரு குறுக்கு எல்லை இரயில் இணைப்பைக் கொண்டுள்ளன. இவை, நேபாளத்தில் உள்ள பார்டிபாஸ் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் 2023 இல், ஜொக்பானி-பிரத்நகர் ரயில் இணைப்பில் பத்னாஹா மற்றும் நேபாள சுங்கம் யார்டு இடையே எல்லை தாண்டிய சரக்கு இரயில் இயக்கத்தின் தொடக்க ஓட்டத்தை இரு நாட்டு பிரதமர்களும் பார்வையிட்டனர். பல்வேறு சாத்தியமான இரயில் இணைப்புத் திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. இதில், 140 கிமீ ரக்சௌல்-காத்மாண்டு இணைப்புக்கான (Raxaul-Kathmandu link) ஆய்வு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே இரயில் இணைப்பை ஏற்படுத்துவதில் இரு நாட்டு அரசாங்கங்களும் கவனம் செலுத்தி வருகின்றன. தற்போது, ஆறு சாத்தியமான ரயில் இணைப்புத் திட்டங்கள் ஆய்வு நிலையில் உள்ளன. நவம்பர் 2023 இல் இந்தியா மற்றும் பூட்டான் வெளியிட்ட கூட்டு அறிக்கை, கெலேபு (பூடான்) இலிருந்து கோக்ரஜார் (இந்தியா) வரையிலான இரயில் இணைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த 58 கி.மீ இரயில் பாதை கெலெபுவை இந்திய ரயில்வே இணையம் மூலமாகவும், ஹல்திபாரி (இந்தியா)-சிலாஹதி (பங்களாதேஷ்) இரயில் பரிமாற்ற முனையம் (rail interchange point) வழியாக வங்காளதேசத்துடன் இணைக்கும்.
தனிப்பட்ட நாடுகளால் நிதியளிக்கும் பாரம்பரிய வழிகளில் இருந்து விலகி, இந்த பிராந்திய இரயில் இணைப்புத் திட்டங்களில் பெரும்பாலானவை கூட்டாக நிதியளிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இந்திய அரசாங்கம் தனது கடன் வரிசையை நீட்டித்துள்ளது, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம், பட்ஜெட்டில் இருந்து உதவிகளை வழங்கியதுடன், ரயில்கள் மற்றும் பிற ரயில் வாகனங்களின் தேவையை பூர்த்தி செய்வதில் உதவுகிறது. வங்காளதேசம், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளிலும் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளன. உலக வங்கியும் (World Bank), ஆசிய வளர்ச்சி வங்கியும் (Asian Development Bank (ADB)) நிதி இடைவெளியை நிரப்ப நீண்ட கால கடன்கள் மற்றும் நிதியுதவியை வழங்குகின்றன.
இருப்பினும், வங்காளதேசம், பூட்டான், இந்தியா மற்றும் நேபாளம் முழுவதும் தடையற்ற ரயில் இணைப்புக்கு உள்கட்டமைப்பு இருந்தால் போதாது. எல்லை தாண்டிய இயக்க விதிகள், கட்டணங்கள், நிலையான இயக்க நடைமுறைகள் (standard operating procedures (SOP)) மற்றும் விதிமுறைகள் போன்ற நிறுவன ஏற்பாடுகளும் முக்கியமானவை. ஒரு பிராந்திய ரயில் ஒப்பந்தம், இருதரப்பு ஏற்பாடுகள் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளுடன் சேர்ந்து, இந்த செயல்முறையை விரைவுபடுத்தக்கூடும். வங்காளதேசம், பூட்டான், இந்தியா மற்றும் நேபாளம் வளர்ச்சி நாற்கரத்தில் ரயில் இணைப்பு என்பது பாதைகளைச் சேர்ப்பது மட்டுமல்ல, இது பிராந்திய வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பது பற்றியதாகும்.
கட்டுரையாளர் உலக வங்கியின் மூத்த ஆலோசகர் மற்றும் ரயில்வே வாரியத்தின் முன்னாள் உறுப்பினர்.