மாநிலங்கள் பொது கொள்முதலுக்கான அளவை அதிகரிக்க வேண்டும்.
புத்தொழில் நிறுவனங்களின் சாதனையானது இரண்டு முக்கிய காரணிகளைப் பொறுத்து அமைகிறது. அவை, மூலதனம் (capital) மற்றும் சந்தைகள் (markets) ஆகும். கடந்த பத்தாண்டுகளில், புத்தொழில் நிறுவனங்கள் விரைவான அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளன. இருப்பினும், சந்தைகளை அணுகுதல் என்பது புத்தொழில் நிறுவனங்களுக்கு இன்னும் ஒரு சவாலாக உள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொது கொள்முதல் (Public procurement) சுமார் 25% ஆகும். இந்த இடைவெளியை நிரப்புவதில் இது ஒரு பெரிய பங்கை வகிக்க முடியும். அரசு மின் சந்தை (Government eMarketplace (GeM)) மூலம் புத்தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் வாங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம், முன் அனுபவம் (prior experience) மற்றும் முன்பண வைப்புத்தொகை (Earnest Money Deposits (EMD)) போன்ற தேவைகளை இது நீக்கியுள்ளது. இது புத்தொழில் நிறுவனங்களின் பங்கேற்பதை எளிதாக்கியுள்ளது. இருப்பினும், அரசாங்க ஒப்பந்தங்களில் புத்தொழில் நிறுவனங்களின் திறனை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை.
மார்ச் 2023 நிலவரப்படி, அரசு மின் சந்தையின் (GeM) புத்தொழில் நிறுவனங்களின் தளங்களானது ₹11,865 கோடி மதிப்புள்ள கொள்முதல் ஆணைகளைச் செயல்படுத்த உதவியுள்ளது. இருப்பினும், இதில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையில் (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) பதிவுசெய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் 12% மற்றும் மொத்த பொது கொள்முதலில் 6% மட்டுமே அடங்கும். அரசுடன் இணைந்து பணியாற்ற புத்தொழில் நிறுவனங்களை இந்தியா எளிதாக்கினால், பொது கொள்முதலில் அவர்களின் பங்கேற்பு கணிசமாக அதிகரிக்கும்.
ஒரு பொருளாதார மடங்கு
அரசு ஒப்பந்தங்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கு பல வழிகளில் உதவுகின்றன. அவை, சரிபார்ப்பை வழங்குவதன் மூலம் புத்தொழில் நிறுவனங்கள் வளர உதவுகின்றன. மேலும், வேலைகளை உருவாக்குகின்றன மற்றும் நிலையான வருமானத்தை உறுதி செய்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் நிச்சயமற்ற துணிகர மூலதனத்தைச் (venture capital) சார்ந்திருப்பதையும் குறைக்கின்றன.
புத்தொழில் நிறுவனங்கள் பொது சேவைகளை மேம்படுத்தும் புதிய மற்றும் செலவு குறைந்த தீர்வுகளைக் கொண்டு வருகின்றன. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சமீபத்தில் புதிய தயாரிப்புகளை வாங்குவதை எளிதாக்கியுள்ளது. இந்த மாற்றம் புத்தொழில் நிறுவனங்கள் வழங்கக்கூடிய மதிப்பைக் காட்டுகிறது.
பல உலகளாவிய முன்முயற்சிகள் புத்தொழில் நிறுவனங்களின் கொள்முதலில் நன்மைகளை எடுத்துக்காட்டுகின்றன. அமெரிக்கா சிறு வணிக கண்டுபிடிப்பு ஆராய்ச்சி (Small Business Innovation Research (SBIR)) திட்டம், இஸ்ரேலின் 'இஸ்ரேலுக்காக வாங்கும்' (Buy for Israel) கொள்கையானது உள்நாட்டு புத்தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஆஸ்திரேலியாவின் புத்தொழில்களின் கொள்முதல் (Startup Procurement) முயற்சி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) முன்முயற்சிகள் உதாரணங்களாக செயல்பட முடியும்.
இலக்கு கொள்முதல் திட்டங்களுடன் இந்தியா வெற்றி கண்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள iDEX முன்முயற்சியானது, ஆயுதப்படைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தயாரிப்புகளை உருவாக்க புத்தொழில் நிறுவனங்களுக்கு ₹25 கோடி வரை வழங்குகிறது.
மகாராஷ்டிரா புத்தொழில் வாரம், பாரம்பரிய டெண்டர் செயல்முறையைத் தவிர்த்து, வெற்றிபெறும் புத்தொழில் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ₹15 லட்சம் ஒப்பந்தங்களை வழங்குகிறது. மும்பையின் ஸ்மைல் குழுமம் (SMILE Council) குடிமை-தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களை வரிசைப்படுத்தத் தயாரான தீர்வுகளுக்கான உத்தரவாத ஒப்பந்தங்களுடன் ஆதரிக்கிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் DPIIT-ல் பதிவுசெய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு பிரத்தியேகமாக ₹50 லட்சம் வரை நேரடி கொள்முதல் செய்யும் முன்னுரிமை சந்தை அணுகல் முயற்சியை ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்தது. இந்த மாதிரிகளை நாடு முழுவதும் அளவிடுவது மிகவும் குறிப்பிடத்தக்க பொருளாதார தாக்கத்திற்கு அவசியம்.
மூன்று மாதிரிகள்
மூன்று மாதிரிகள் இந்தியாவில் புத்தொழில் நிறுவனங்களின் கொள்முதலுக்கு முன்னுரிமை அளிக்கலாம். அதன் மூலம், அவற்றில் அரசாங்க முதலீடுகளின் வருவாயைப் பெருக்க உதவும்.
திறந்த கொள்முதல் (Open Procurement) : இந்தியா முழுவதும் 450 அரசு ஆதரவு இன்குபேட்டர்கள் (government-supported incubators) உள்ளன. இந்த இன்குபேட்டர்கள் புத்தொழில் நிறுவனங்கள் அரசு மின் சந்தையில் (GeM) பதிவு செய்ய உதவும். இது பொது நிறுவனங்களுக்கு புத்தொழில் நிறுவனங்களை மேலும் தெரியும்படி செய்யும்.
சவால் அடிப்படையிலான கொள்முதல் (Challenge-Based Procurement) : iDEX மற்றும் மகாராஷ்டிரா புத்தொழில் வாரத்தைப் போலவே, அரசாங்கத் துறைகளும் புதுமைக்கான சவால்களை வெளியிடலாம். இதில் வெற்றிபெறும் புத்தொழில் நிறுவனங்களுக்கு வரையறுக்கப்பட்ட கொள்முதல் ஒப்பந்தங்களுக்கு உத்தரவாதம் அளிக்கலாம்.
நேரடி கொள்முதல் ஆணை (Direct Procurement Mandate) : ஒன்றிய அமைச்சகங்களுக்கான 25 சதவீதம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) கொள்முதல் ஆணையைப் போலவே, ஒரு புத்தொழில் நிறுவனங்களின் கொள்முதலுக்கு ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்படலாம். இந்த ஒதுக்கீடு, சுற்றுச்சூழல் வளர்ச்சியின் அடிப்படையில் துறை வாரியாக சரிசெய்யப்படும்.
இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பிறகும், புத்தொழில் நிறுவனங்களின் கொள்கை வகுப்பாளர்கள் கொள்கைகளை மேலும் மேம்படுத்த வேண்டும். இது ஒரு நெகிழ்வான பொது கொள்முதல் அமைப்பை உருவாக்க உதவும். புத்தொழில் நிறுவனங்கள் சந்தையில் நுழைவதற்கு ஒரு தெளிவான வழி இருப்பதையும் இது உறுதி செய்யும்.
பொது கொள்முதலில் புத்தொழில் நிறுவனங்களின் திறனை உண்மையாக உணர, இந்தியா முன்னோடி திட்டங்களுக்கு அப்பால் செல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, அடல் புத்தாக்கத் திட்டம்-2.0 (Atal Innovation Mission)-ன் கீழ் உள்ள துறைரீதியாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் (Sectoral Launchpad programme) ஒரு எடுத்துக்காட்டாகும். இந்த திட்டம் புத்தொழில் நிறுவனங்களை முக்கிய தொழில்களில் ஒருங்கிணைக்க உதவுகிறது.
வைஷ்ணவ், அடல் புத்தாக்கத் திட்டம், நிதி ஆயோக்கில் முன்னாள் இயக்குநர் திட்டம் மற்றும் வருகைதரு ஆய்வாளர் ஆவார். பட், ஒரு புத்தொழில் நிறுவனங்களின் ஆலோசகர் மற்றும் சைன்-ஐஐடி பாம்பேயின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். ஷேக், அடல் புத்தாக்கத் திட்டம், நிதி ஆயோக்கில் புத்தாக்கத் தலைவர் ஆவார்.