எச்சரிக்கை மற்றும் பழமைவாதத்தை தவிர்ப்பது -Editorial

 நிதிநிலை அறிக்கை பழமைவாதமானது. இருப்பினும், புதிய யோசனைகளை முயற்சிக்க இது திறந்திருக்கும்.


சமீபகால மக்களவைத் தேர்தலில், மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கம் சமர்ப்பித்த ஒன்றிய நிதிநிலை அறிக்கை நேர்த்தியான முறையில் வழிகாட்டும் கொள்கையைப் பின்பற்றுகிறது.  அரசாங்கம் முழு மெஜாரிட்டியைப் பெறத் தவறியது நிதி ஒழுக்கத்தை புறக்கணிக்க வழிவகுக்கும் என்ற கவலைகள் இருந்தன. இருப்பினும், நிதிநிலை அறிக்கையின் முக்கிய நபர்கள் இது நடக்காது என்று உறுதியளித்தனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு குழுக்களை இலக்காகக் கொண்டு பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், வீடு வாங்குபவர்கள் மற்றும் பிற ஆர்வமுள்ள குழுக்களும் இதில் அடங்குவர். முக்கிய  மாநிலங்களுக்கு தாராளமாக வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் இருந்தபோதிலும், அரசாங்கம் நிதி ஒருங்கிணைப்பை இலக்காகக் கொண்ட பாதையில் உள்ளது. இது ஒரு சாதகமான முடிவாக உள்ளது. 

 

நிதிப்பற்றாக்குறையானது, நிதியாண்டு-2025 க்கு 4.9 சதவீதமாக இருக்கும் என்று ஒன்றிய அரசு எதிர்பார்க்கப்படுகிறது. இது நிதியாண்டு-2024 இல் இருந்த 5.6 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் பெரும் ஈவுத்தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதம் என்பது, நிதிப்பற்றாக்குறையை குறைக்க உதவுகிறது. இதில், ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கைகளின் எண்கள் தற்போதைய குழுவின் பழமைவாத அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன. வருவாய் வரவுகளில் கணிக்கப்பட்ட 14.6 சதவீத வளர்ச்சியானது வரி வசூல் 11 சதவீத வளர்ச்சியால் ஆதரிக்கப்படுகிறது. இது எளிதில் அடையக்கூடிய எண்ணிக்கையாகும். இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இருந்து ₹11.1 லட்சம் கோடிக்கான மூலதனச் செலவு பராமரிக்கப்படுகிறது. இந்த தொகை 17 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது. இதற்கான, வருவாய் செலவுகள் 6 சதவீதம் மட்டுமே உயரும் என நிதிநிலை அறிக்கையில் (budget) தெரிவிக்கப்பட்டுள்ளதால், அரசாங்கம் மிகவும் கவனமாக செலவழிக்க திட்டமிட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. பொதுவாக நிதிநிலை அறிக்கையை (budget) சமப்படுத்தப் பயன்படுத்தப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் மூலம் கிடைக்கும் வருமானம் இந்த முறை விலக்கப்பட்டுள்ளது. 10.5 சதவிகிதம் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (nominal GDP) வளர்ச்சி என்ற அனுமானமும் யதார்த்தமாக கருதப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, நிதிநிலை அறிக்கை அரசாங்கத்திற்கு அதன் இறையாண்மை மதிப்பீட்டில் நீண்டகாலமாக தேவைப்படும் வளர்ச்சிக்கு அழுத்தம் கொடுக்க வலுவான வாதங்களை முன்வைக்கிறது. இது, உலகளாவிய குறியீடுகளில் இந்திய இறையாண்மைப் பத்திரங்கள் சேர்க்கப்பட்டதிலிருந்து தயங்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, இப்போது முதலீடு செய்வதற்கு மற்றொரு காரணமும் கிடைத்துள்ளது.


நிதிநிலை அறிக்கையில், ஒட்டுமொத்த செலவினங்களை விரிவுபடுத்துவதில் சிக்கனமாக இருந்தாலும், பல புதிய திட்டங்களில் அதன் ஒதுக்கீடுகளை குறைவான அளவில் விநியோகிப்பதற்கான சூழ்நிலையை தேர்வு செய்துள்ளது. உதாரணமாக, இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் அவர்களின் வேலை வாய்ப்புகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவது சரியானது. தொழில்துறை பயிற்சி நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் மேம்பாடு மற்றும் கல்விக்கான மானியக் கடன்கள் நல்ல யோசனைகளாகப் பார்க்கப்படுகிறது. கோவிட் தொற்றுநோய் காலத்தில் இதேபோன்ற திட்டத்தின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, முதல் இரண்டு ஆண்டுகளில் புதிய ஊழியர்களின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி  (Employees' Provident Fund(EPF)) பங்களிப்புகளுக்கான அரசாங்க ஆதரவும் புரிந்துகொள்ளத்தக்கது. இந்தப் புதிய முன்முயற்சிகளுக்கு 2 கோடி முறையான துறை ஊழியர்களுக்கு ஒரு மாதச் சம்பளத்துக்குச் சமமான நேரடி ரொக்கப் பணம் ஏன் தேவைப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. கூடுதலாக, பிரதமர் ஆவாஸ் யோஜனா கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு ₹84,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வீடு வாங்குபவர்களுக்கு புதிய வட்டி மானியம் தேவையற்றதாகத் தெரிகிறது. ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission), PM கிராம் சதக் யோஜனா (PM Gram Sadak Yojana), கிருஷி சிஞ்சாய் யோஜனா (Krishi Sinchai Yojana), மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) போன்ற நிறுவப்பட்ட திட்டங்களின் செலவில் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் விவசாயிகளுக்கான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து இது கேள்விகளை எழுப்புகிறது. இந்த அரசாங்கத்திற்கான முன்னுரிமைப் பகுதிகள் கூறப்பட்ட போதிலும், பாதுகாப்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில்வேக்கான ஒதுக்கீடுகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளன.


பல நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள் உள்ளன. அவை, வருவாயை கணிசமான தாக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், வணிகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? அல்லது மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள்? என்பதை அவர்கள் பெரிதும் மேம்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, வெற்றிகரமான அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டம் (Emergency Credit Line Guarantee Scheme (ECLGS)) தனிப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) திட்டக் கடன்களுக்கு ₹100 கோடி வரை உத்தரவாதத்தை வழங்குகிறது. கடன் வாங்கியவர் ஏற்கும் உத்தரவாதக் கட்டணத்துடன், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) அளவை அதிகரிக்க உதவும். பிணைய அடிப்படையிலான MSME கடன் வழங்கும் பழைய மாதிரிகளை புதுப்பிக்க வங்கிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. டிஜிட்டல் தடயங்களை (digital footprints) நம்பியிருக்கும் நவீன மாதிரிகளை பயன்படுத்த வேண்டும். மேலும், இந்த மாற்றம் ஒரு திருப்பு முனையாக இருக்கலாம். ஏஞ்சல் வரியை (angel tax) ரத்து செய்வது புத்தொழில் நிதியில் (start-up funding) பெரும் தடையை நீக்கும். இது அன்னிய நேரடி முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும். தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (National Company Law Tribunal (NCLT)) மற்றும் கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் (Debt Recovery Tribunal (DRT)) கூடுதல் அமர்வுகள் அமைக்கப்படும். இது தீர்க்கப்படாத கடன் மீட்பு வழக்குகளின் நிலுவையைக் குறைக்க உதவும். கடந்தகால மதிப்பீடுகளை மீண்டும் திறப்பதற்கான வரம்பு தற்போது 10 ஆண்டுகளுக்குப் பதிலாக 5 ஆண்டுகளாக அமைக்கப்பட்டால் தனிப்பட்ட வரி செலுத்துவோர் நிச்சயமாக நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். வருமான வரிச் சட்டம் (Income Tax Act) 1961 ஐ எளிதாக்குவது ஒவ்வொரு வரி செலுத்துவோரின் விருப்பமாகும். நேரடி வரி குறியீடு 2010  (Direct Tax Code 2010)  இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.என்பதைக் குறிப்பிட வேண்டும்.


பங்கு வர்த்தகம் மற்றும் மூலதன ஆதாயங்கள் மீதான வரிகளின் அதிகரிப்பு முதலீட்டாளர்களிடையே பிரபலமாக இல்லாவிட்டாலும், ஊக வர்த்தகத்தைக் குறைக்க உதவும். வெவ்வேறு வகையான சொத்துக்களை (பட்டியலிடப்பட்ட பங்குகளுக்கு 12 மாதங்கள் மற்றும் மற்றவர்களுக்கு 24 மாதங்கள்) நீங்கள் வைத்திருக்க வேண்டிய நேரத்தை தரப்படுத்துதல் மற்றும் பல்வேறு சொத்து வகைகளில் (பங்குகள், பத்திரங்கள், சொத்து போன்றவை) 12.5% ​​என்ற நிலையான நீண்ட கால மூலதன ஆதாய வரி விகிதத்தைப் பயன்படுத்துதல். மற்றும் தங்கம்)   நிதி முதலீடுகளுக்கு இடையே விஷயங்களை நியாயமானதாக மாற்றும்.


இறுதியாக,  அரசாங்கத்தின் செலவினங்களில் பெரும்பகுதிக்கு நிதியளிக்கும் வருமான வரி செலுத்துவோருக்கு இந்த பட்ஜெட் கணிசமாக வரிகளைக் குறைக்கவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. நிலையான விலக்குகளின் அதிகரிப்பு மற்றும் வரி படிமுறைகளில் (slabs) மாற்றங்கள் நேர்மறையானவை என்றாலும், எதிர்பார்க்கப்படும் ₹29,000 கோடி வரி வருவாய் இழப்பு நடுத்தர வர்க்க வருமானத்தில் சிறிய அதிகரிப்பாக மட்டுமே இருக்கும்.



Original article:

Share:

கல்வி, வேலைவாய்ப்பு, திறன் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்திற்கு தயாராக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும் -நிலேஷ் ஷா

 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை  4.9 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையுடன் (fiscal deficit) நிதி ஒருங்கிணைப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவது இந்த பட்ஜெட்டின்   முக்கியமான  அம்சமாகும்.  

       

பல தொடர்ச்சியான உலகளாவிய அசாதாரண சூழ்நிலைகள் இருந்தபோதிலும், இந்தியப் பொருளாதாரம் "பாலைவனத்தில் சோலை" (oasis in the desert) போல் தொடர்ந்து செழித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், அனைவரும் 2024-25 மத்திய பட்ஜெட்டில் கவனம் செலுத்தினர். வளர்ந்த இந்தியா கனவை (Viksit Bharat dream) நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பற்றி அறிய, 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அனைவரின் பார்வையும் இருந்தது.


மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இலக்கு 4.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறையுடன் நிதி ஒருங்கிணைப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவது பட்ஜெட்டில் கூறப்பட்ட அம்சமாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இடைக்கால பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட 5.1 சதவீதத்தை விட இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. 4.9 சதவீத நிதிப்பற்றாக்குறை, நுண்ணியல்  பொருளாதாரதின்  (macroeconomic) உறுதித் தன்மையை பராமரிப்பதில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது.


மத்திய  பட்ஜெட், உற்பத்திச் செலவுக்கும் நிதி ஒருங்கிணைப்புக்கும் இடையே ஒரு நல்ல சமநிலையைப் பேணியுள்ளது. இந்த ஆண்டு ரிசர்வ் வங்கியிடமிருந்து அரசாங்கம் பெற்ற கூடுதல் தொகையான 1,23,000 கோடி ஈவுத்தொகையை அது நன்றாகப் பயன்படுத்தியுள்ளது. வரி வசூல் வளர்ச்சிக்கான முன்னறிவிப்பு எச்சரிக்கையாகத் தெரிகிறது. இதன் விளைவாக, நிதிப் பற்றாக்குறை இலக்கு யதார்த்தமானதாகவும், அடையக்கூடியதாகவும் தோன்றுகிறது. மிக முக்கியமாக, நிதிப் பற்றாக்குறையை 2026 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைக்கவும், எதிர்காலத்தில் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி  விகிதத்தைக் குறைப்பதற்கான வழிகாட்டுதலுடன், நிதி ஒருங்கிணைப்புப் பாதையில் அரசாங்கம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதன் விளைவாக, நிகர மற்றும் மொத்த சந்தை கடன் வாங்குதல் 2024-ம் நிதியாண்டின் அளவை விட குறைவாக இருக்கும்.


ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு முக்கிய குழுக்களின் மீதும் பட்ஜெட் கவனம் செலுத்தியது. பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒன்பது முன்னுரிமைப் பகுதிகளை இது கோடிட்டுக் காட்டியது.


பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் “சுயசார்பு இந்தியா” (Atmanirbhar Bharat) என்ற கொள்கையில் அரசாங்கம் கவனம் செலுத்துவதால், விவசாயப் பிரிவில் உற்பத்தித்திறன் மற்றும் பின்னடைவைக் கட்டியெழுப்புவது முன்னுரிமைகளில் ஒன்றாகத் தெரிகிறது. இது கிராமப்புற பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்தில் வலுப்படுத்தவும் உதவ வேண்டும். கிராமப்புறங்களில் சாலை இணைப்பில் அதிக கவனம் செலுத்துவது மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana (PMAY)) திட்டத்தின் கீழ் மூன்று கோடி புதிய வீடுகள் கட்டப்படும், இது கிராமப்புற வளர்ச்சிக்கும் உதவும்.


உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பில் கொள்கை தொடர்ச்சிக்கான உறுதிப்பாட்டை பட்ஜெட் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இதில் நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வீட்டுவசதி ஆகியவை அடங்கும்.


செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் முதலீடு சார்ந்த வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிகிறது. கடந்த பத்தாண்டுகளில், சுதந்திரத்திற்குப் பிறகு அதுவரை கட்டியெழுப்பப்பட்ட உள்கட்டமைப்பைபோல் பல மடங்கு விளைவை உருவாக்கி இந்தியாவை உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாற உதவியது. தற்போதைய வளர்ச்சிப் பாதையில், இந்தியா விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற வாய்ப்புள்ளது.


கடந்த பத்தாண்டுகளில் விநியோகப் பகுதியில் (Supply-side) மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் வளர்ந்து வரும் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கும் அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் புதிய, மேம்பட்ட சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும்.  கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதில் பட்ஜெட் கவனம் செலுத்துகிறது. புதிய மற்றும் கூடுதல் வேலைகளை உருவாக்குவதற்கான வேலைவாய்ப்பு அடிப்படையிலான ஊக்கத்தொகை வரவேற்கத்தக்கது மற்றும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.


வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும், ஆற்றல் மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை தணித்தல் ஆகியவை மறக்கப்படவில்லை. பசுமை ஆற்றல், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட மாற்றம் ஆகியவற்றை பட்ஜெட் வலியுறுத்துகிறது.


வரி விதிப்பைப் பொறுத்தவரை, பட்ஜெட் இணக்கம், கட்டமைப்பின் எளிமை மற்றும் அதிகமான மக்களை வரிசெலுத்துவதன் கீழ் கொண்டு வருவதை மேம்படுத்துகிறது. புதிய வரி முறையின் கீழ் வருமான வரியில் சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன, அடுக்குகள்/விகிதங்களில் மாற்றங்கள் மற்றும் நிலையான விலக்கு அதிகரிப்பு. குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டாலும், பங்குகளின் மீதான நீண்ட கால மூலதன ஆதாய வரியை மாற்றாமல் வைத்திருப்பது நீண்ட கால முதலீடுகளை ஆதரிக்க வேண்டும். நிதி மற்றும் நிதி அல்லாத சொத்துகளுக்கான வரி விகிதங்களை சீரமைப்பது முதலீட்டாளர்கள் வரிச் சலுகைகளை விட இடர் மற்றும் வருவாயின் அடிப்படையில் தேர்வு செய்ய உதவும். அடுத்த ஆறு மாதங்களில் வரி முறையை மேலும் எளிமைப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.


சுருக்கமாக, மத்திய பட்ஜெட் நிலையான மற்றும் உற்பத்தி செலவினங்களில் அரசாங்கத்தின் கவனத்தை ஆதரிக்கிறது. இது நிதி ஒழுக்கத்தை பேணுவதையும் வலியுறுத்துகிறது. பட்ஜெட் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கிறது. இந்த மாற்றங்கள் வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இலக்குகளை அடைய, இந்த திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவது முக்கியம்.

கட்டுரையின் ஆசிரியர் கோடக் மஹிந்திரா AMC நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்.



Original article:

Share:

2023-24 பொருளாதார ஆய்வில் இருந்து முக்கிய குறிப்புகள் -உதித் மிஸ்ரா

 நடப்பு நிதியாண்டில் (FY 2024-25) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 6.5% முதல் 7% வரை இருக்கும் என்று  பொருளாதார ஆய்வு கூறுகிறது.


2023-24 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு முந்தைய பொருளாதார ஆய்வுகளிலிருந்து வேறுபட்டது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய தெளிவான பார்வையை வழங்குகிறது. 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8% க்கும் அதிகமாக உயர்ந்தாலும், நடப்பு நிதியாண்டின் (FY 2024-25) மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.5% முதல் 7% வரை இருக்கும் என்று கணக்கெடுப்பு கூறுகிறது.


பொருளாதார ஆய்வு மூலம் சுட்டிக்காட்டப்பட்ட சில முக்கிய சவால்கள் இங்கே உள்ளன. இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கான பரிந்துரைகளும் இந்த ஆய்வில் அடங்கும்.  


பொருளாதார ஆய்வு பற்றிய ஒரு பகுப்பாய்வு 


உலகளாவிய தலையீடு : வரும் ஆண்டுகளில் அன்னிய நேரடி முதலீடு (foreign direct investment (FDI)) வளருவதற்கான சூழல் மிகவும் சாதகமாக இல்லை. வளர்ந்த நாடுகளில் அதிக வட்டி விகிதங்கள் நிதிச் செலவை உயர்த்தியது மட்டுமல்லாமல், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பையும் அதிகரித்துள்ளது. மேலும், இந்தியா போன்ற பொருளாதாரங்கள் உள்நாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் கணிசமான மானியங்களை உள்ளடக்கிய வளர்ந்த நாடுகளில் தொழில்துறை கொள்கைகளுடன் போட்டியிட வேண்டும்.  கூடுதலாக, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் ஒரு சவாலாகவே உள்ளன.


சீன சவால் : இறக்குமதிக்காக, குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்காக (renewable energy) இந்தியா சீனாவை எப்படி அதிகமாகச் சார்ந்திருக்கிறது என்பதை தலைமைப் பொருளாதார ஆலோசகர் (Chief Economic Advisor (CEA)) அடிக்கோடிட்டுக் காட்டினார். குறைந்த திறன் உற்பத்தியில் சீனா தனது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த இடத்தை இந்தியா கைப்பற்ற விரும்பியது, ஆனால் சீனா அதைக் கைவிடவில்லை. 


செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தல் : தொலைத்தொடர்பு மற்றும் இணைய வசதியுள்ள வணிக செயல்முறை அயலாக்கம் (business process outsourcing (BPO)) குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளதாக கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. இருப்பினும், தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியின் (technological evolution) அடுத்த அலை இந்த போக்கை முடிவுக்கு கொண்டு வரக்கூடும். 


மிதமிஞ்சிய தனியார் முதலீடு (Tepid private investment) : பெரு நிறுவனத்துறை பதிலளிக்கவில்லை என்று பொருளாதார ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. மூலதன உருவாக்கத்தை ஊக்குவிப்பதற்காக 2019 செப்டம்பரில் ஒன்றிய அரசு வரிகளை குறைத்த போதிலும் இது நடந்தது. தலைமைப் பொருளாதார ஆலோசகரின்   கூற்றுப்படி, இந்திய நிறுவனத் துறையின் வரிகளுக்கு முன் அடைந்த லாபமானது நிதியாண்டு-2020 மற்றும் நிதியாண்டு-2023 க்கு இடையில் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், பணியமர்த்தல் (Hiring) மற்றும் இழப்பீடு (compensation) ஆகியவற்றில் வளர்ச்சி இந்த அதிகரிப்புக்கு ஈடுகொடுக்கவில்லை. 


வேலைவாய்ப்பு இன்றியமையாதது : இந்தியப் பொருளாதாரம் 2030-ம் ஆண்டு வரை சராசரியாக ஏறக்குறைய 78.5 லட்சம் வேலை வாய்ப்புகளை விவசாயம் அல்லாத துறையில் (non-farm sector) அதிகரித்து வரும் தொழிலாளர்களைக் கொண்டு பூர்த்தி செய்ய வேண்டும்.  


தரவு குறைபாடு : குறிப்பாக, வேலைவாய்ப்பைப் பற்றிய தரமான மற்றும் சரியான நேரத்தில் தரவை வழங்காததற்காக மக்கள் அரசாங்கத்தை அடிக்கடி விமர்சிக்கின்றனர். கணக்கெடுப்பில், தலைமைப் பொருளாதார ஆலோசகர், இந்த இடைவெளி சரியான பகுப்பாய்வைத் தடுக்கிறது என்று ஒப்புக்கொண்டார். உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்து சரியான நேரத்தில் தரவு கிடைக்கவில்லை என்று அறிக்கை கூறுகிறது. இதில் முறையான மற்றும் முறைசாரா வேலைகள் அடங்கும். இதற்கு, வருடாந்திர அடிப்படையில் கூட தரவு கிடைக்கவில்லை. இந்த பிரச்சனை விவசாயம் (agriculture), தொழில் (industry), உற்பத்தி மற்றும் சேவை (manufacturing and services) போன்ற பல்வேறு துறைகளைப் பாதிக்கிறது. இந்த தரவு இல்லாமல், நாட்டின் தொழிலாளர் சந்தை நிலவரத்தை பகுப்பாய்வு செய்வது கடினம். 


வாழ்க்கை முறை குறைபாடுகள் : சமூக ஊடகங்கள் (social media), திரை நேரம் (screen time), உட்கார்ந்திருக்கும் பழக்கம் (sedentary habits) மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை (unhealthy food) ஆகியவை ஆபத்தான கலவையை உருவாக்குகின்றன என்று பொருளாதார ஆய்வு குறிப்பிடுகிறது. இந்த கலவையானது பொது சுகாதாரத்திற்கும் உற்பத்தித்திறனுக்கும் தீங்கு விளைவிக்கும். இந்தியாவின் பொருளாதார திறனையும் குறைக்கலாம். 


பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகள்


தனியார் துறையால் வேலை உருவாக்கம் : கடந்த இரண்டு முறை, நரேந்திர மோடி அரசாங்கங்களின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் பங்கைக் குறைத்து, தனியார் துறையை ஆதிக்கம் செலுத்துவதற்கு ஊக்குவிப்பதாகும். இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு நம்பியது. இந்த நம்பிக்கையை எதிரொலிக்கும் பொருளாதார ஆய்வு, அதிக லாபம் ஈட்டும் இந்திய பெரு நிறுவனத் துறையின் நலனுக்காக, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்துவது நல்லது.


தனியார் துறையின் வாழ்க்கை முறை மாற்றங்கள் : இந்தியாவின் பாரம்பரிய வாழ்க்கை முறை, உணவு மற்றும் சமையல் குறிப்புகள் பல நூற்றாண்டுகளாக இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுடன் எவ்வாறு ஆரோக்கியமாகவும் இணக்கமாகவும் வாழ்வது என்பதைக் காட்டுகின்றன. இந்திய வணிகங்கள் அவற்றைப் பற்றி அறிந்துகொள்வது வணிக ரீதியாக அர்த்தமுள்ளதாக இருக்கிறது. ஏனெனில், அவை உலகளாவிய சந்தையை கேள்வி கேட்பதற்குப் பதிலாக வழிநடத்தப்படுவதற்கு காத்திருக்கின்றன, என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் (CEA) எடுத்துரைக்கிறார். 


வேளாண்மைத் துறையின் முக்கியத்துவம் : பாரம்பரிய பொருளாதார கோட்பாடுகளின் அடிப்படையில் பொருளாதாரங்கள் வளர்ச்சியடையும் போது, ​​அவை விவசாயத்திலிருந்து உற்பத்தி மற்றும் சேவைகளுக்கு மாறுகின்றன என்று கூறுகின்றன. எவ்வாறாயினும், வர்த்தக பாதுகாப்புத்தன்மை (trade protectionism), வளங்களை பதுக்கி வைத்தல் (resource-hoarding), அதிகப்படியான திறன், குப்பைகளை குவித்தல் (excess capacity and dumping), உற்பத்தி (production) மற்றும் செயற்கை நுண்ணறிவின் அதிகரிப்பு ஆகியவை உற்பத்தி மற்றும் சேவைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதுடன், வழக்கமான கருத்துக்களை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. பாரம்பரிய விவசாய முறைகள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவது பல நன்மைகளைத் தரும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் கூறுகிறார். விவசாயப் பொருட்களின் மதிப்பை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும். இந்த அணுகுமுறையானது இந்தியாவின் நகர்ப்புற இளைஞர்களுக்கு விவசாயத்தை ஈர்க்கக்கூடியதாகவும், பலனளிக்கக்கூடியதாகவும் மாற்றும். 


ஒழுங்குமுறை இடையூறுகளை நீக்குதல் : அரசாங்கத்தின் அனைத்து நிலைகளாலும் வணிகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள உரிமம் (Licensing), ஆய்வு (Inspection) மற்றும் இணக்கத் தேவைகள் (Compliance requirement) பெரும் சுமையாகும். கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இந்த சுமை இலகுவானதாக இருந்தாலும், அது இருக்க வேண்டிய இடத்துடன் ஒப்பிடுகையில் இன்னும் அதிகமாக உள்ளது. தலைமைப் பொருளாதார ஆலோசகர், நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு (Medium, Small and Micro Enterprises (MSMEs)) இந்த விதிமுறைகளில் இருந்து அதிக நிவாரணம் தேவை என்று எடுத்துக்காட்டினார்.

Original article:

Share:

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த காலநிலை நிதி வகைப்பாடு (climate finance taxonomy) என்றால் என்ன?

 காலநிலை நிதி வகைப்பாடு (climate finance taxonomy) இந்தியா அதன் காலநிலை இலக்குகளை அடையவும் பசுமை நடைமுறைகளை நோக்கி மாறவும் உதவும்.


​​'காலநிலை நிதி வகைப்பாட்டை' (‘climate finance taxonomy’) உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்றிய பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்யும் போது அறிவித்தார். இந்த முயற்சியானது காலநிலை தகவமைத்தல் மற்றும் தணிப்பு முயற்சிகளுக்கான நிதியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தியா தனது காலநிலை இலக்குகளை அடைவதற்கும், பசுமை மாற்றத்தை நோக்கி நகர்வதற்கும் உதவும்.


காலநிலை நிதி வகைப்பாடு என்றால் என்ன?


காலநிலை நிதி வகைப்பாடு, பொருளாதாரத்தின் பகுதிகளை நிலையான முதலீடுகளாக வகைப்படுத்துகிறது. இது முதலீட்டாளர்களுக்கும் வங்கிகளுக்கும் டிரில்லியன் கணக்கான டாலர்களை காலநிலை மாற்றத்தை திறம்பட சமாளிக்கும் முதலீடுகளுக்கு செலவிட உதவுகிறது.  


கனடா அரசாங்கத்தின் அறிக்கையின்படி, பசுமைப் பத்திரங்கள் (green bonds) போன்ற காலநிலை தொடர்பான நிதிக் கருவிகளை வகைப்படுத்துவதற்கு வகைபிரித்தல்கள் பயன்படுத்தப்படுகின்றன. காலநிலை இடர் மேலாண்மை (climate risk management), நிகர-பூஜ்ஜிய உமிழ்வுகளை நோக்கிய மாற்றங்களுக்கான திட்டமிடல் (net-zero transition planning) மற்றும் அவற்றின் தரப்படுத்தல் நன்மைகள் காரணமாக காலநிலை வெளிப்பாடு ஆகியவற்றிலும் அவை அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.


வகைப்பாடு ஏன் முக்கியமானது?


உலகளவில் வெப்பநிலை அதிகரித்து  வருகிறது, காலநிலை மாற்றத்தின் எதிர்மறையான தாக்கத்தின் காரணமாக, நாடுகள் நிகர-பூஜ்ஜிய பொருளாதாரத்தை நோக்கி மாற வேண்டும். இதன் பொருள் வளிமண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும் அளவுடன் உற்பத்தி செய்யப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவை சமநிலைப்படுத்துவதாகும். 


பொருளாதார நடவடிக்கைகள் அறிவியல் அடிப்படையிலான திட்டங்களைப் பின்பற்றுகின்றனவா என்பதை காலநிலை நிதி வகைப்பாடு தீர்மானிக்க முடியும். அவை காலநிலை நிதியைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கின்றன மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளைப் பற்றி தவறான கூற்றுக்களை உருவாக்கும் பசுமைக் கழுவுதல்  (greenwashing) அபாயங்களைக் குறைக்கின்றன.


ஒரு காலநிலை நிதி வகைப்பாடு இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக காலநிலை சம்மந்தமான  நிதிகளை ஈர்க்க உதவும். தற்போது, ​​இந்தியாவில் பசுமை நிதிகள் நாட்டின் தற்போதைய தேவைகளை முழுமையாக பூர்த்திசெய்யவில்லை. அவை இந்தியாவிற்கு வரும் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 3% மட்டுமே பங்களிக்கிறது என்று காலநிலை கொள்கை முன்முயற்சியால் வெளியிடப்பட்ட இந்தியாவில் பசுமை நிதியத்தின் நிலப்பரப்பு அறிக்கை 2022 கூறுகிறது.


பசுமை நிதியத்தின் (green finance) மிகக் குறைந்த அளவுக்கான ஒரு காரணம், நிலையான செயல்பாடுகளாகத் தகுதி பெறுவது பற்றிய நிச்சயமற்ற தன்மையாகும். ஒரு வகைப்பாட்டியலை செயல்படுத்துவது இந்த சிக்கலை தீர்க்கும்.


இந்தியாவில் பசுமை முதலீடுகளுக்கான சாத்தியம் என்ன?


சர்வதேச நிதிக் கழகத்தின் (International Finance Corporation (IFC)) அறிக்கையின் படி, 2018 முதல் 2030-வரை $3.1 டிரில்லியன் மதிப்புள்ள முதலீடுகள் இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் புதிய வாகனங்களின் முழு மின்மயமாக்கலை இந்தியா இலக்காகக் கொண்டிருப்பதால், மின்சார வாகனங்களில் மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பு $667 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையும் முதலீடுகளுக்கு உறுதியளிக்கிறது. மொத்தம் முதலீடு $403.7 பில்லியன் என்று  அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


மற்ற நாடுகளில் காலநிலை நிதி வகைப்பாடுகள் உள்ளதா?


ஆம், பல நாடுகள் தங்கள் வகைப்பாடுகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன. தென்னாப்பிரிக்கா, கொலம்பியா, தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர், கனடா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் ஏற்கனவே காலநிலை நிதி வகைப்பாடுகளை உருவாக்கியுள்ளன. 


இந்தியாவின் காலநிலை உறுதிப்பாடுகள் என்ன?


இந்தியா 2070-ஆம் ஆண்டிற்குள் நிகர-பூஜ்ஜிய (net-zero) பொருளாதாரத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2005-ம் ஆண்டிலிருந்து 2030-ஆம் ஆண்டளவில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கரிம உமிழ்வுக்கான தீவிரத்தை 45% குறைக்க திட்டமிட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், அதன் மொத்த மின்சாரத்தில் 50% புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி ஆதாரங்களில் இருந்து வரும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது.



Original article:

Share:

நிதிநிலை அறிக்கையில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு புறக்கணிக்கப்படுவது, இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஆபத்தானது -அசோக் குலாட்டி

 ஆராய்ச்சியை விட நலனுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் தற்போதைய நிதிநிலை அறிக்கையானது  விவசாயத் துறையை வளர்க்கத் தவறிவிட்டது. 


2023-24 ஆம் ஆண்டில், இந்தியப் பொருளாதாரம் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை 8.2 சதவீதமாகப் பதிவு செய்து, மேலும் பெரும்பாலான கணிப்புகளின்படி 2025-ம் நிதியாண்டில் அது 7 சதவீதத்திற்கு மேல் இருக்கும். இருப்பினும், விவசாயத் துறையின் வளர்ச்சி நிதியாண்டு-2023 இல் 4.7 சதவீதத்திலிருந்து நிதியாண்டு-2024 இல் 1.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தப் பின்னணியில், வரவு-செலவு திட்டம் விவசாயத்துக்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வளர்ந்த இந்தியா 2047 இலக்கைப் பின்தொடர்வதற்கான விதிமுறைகளை வழங்கியுள்ளார். விவசாயம் (agriculture), வேலைவாய்ப்பு (employment) மற்றும் திறன் (skilling), மனிதவள மேம்பாடு (human-resource development) மற்றும் சமூக நீதி (social justice), உற்பத்தி (manufacturing) மற்றும் சேவைகள் (services), நகர்ப்புற மேம்பாடு (urban development), எரிசக்தி பாதுகாப்பு (energy security), உள்கட்டமைப்பு (infrastructure), புதுமை (innovation), ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (research and development) மற்றும் அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்கள் (next-generation reforms) ஆகியவற்றில் உற்பத்தித்திறன் ஆகிய ஒன்பது முக்கிய முன்னுரிமைப் பகுதிகளை அவர் அடையாளம் கண்டுள்ளார். மேலும், இதில் விவசாயம் சார்ந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், பருவநிலையை எதிர்க்கும் தன்மையை அதிகரிப்பதற்கும் கணிசமான ஒதுக்கீட்டின் நம்பிக்கையை எழுப்பியது.  


இதைச் செய்வதற்கான சிறந்த வழி, வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் கவனம் செலுத்துவது ஆகும். வேளாண்-ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (agri-R&D) முதலீடு செய்வதால் கிடைக்கும் வருமானமானது 10 மடங்கு அதிகமாகும். இதன் அடிப்படையில், 1,000 கோடி கூடுதல் முதலீடு என்பது வேளாண்-மொத்த உள்நாட்டு உற்பத்தி (agri-GDP) அடிப்படையில் ரூ.10,000 கோடியாக இருக்கும். இத்தகைய முதலீடு விவசாயம் வேகமாக வளர உதவியிருக்கும். இருப்பினும், வரவு-செலவு திட்டத்திற்கான எண்ணிக்கை அடிப்படையில் இந்த உத்தரவாதத்தை வழங்கவில்லை. வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை (Department of Agricultural Research and Education (DARE)) ரூ.99.4 பில்லியனைப் பெற்றுள்ளது. இது நிதியாண்டு-2024 இல் ரூ.98.8 பில்லியனில் வெறும் 0.7 சதவீதம் மட்டுமே அதிகமாகும். இந்த அதிகரிப்பு எதிர்பார்த்ததை விட மிகக் குறைவானதாகும். 


2020-21 ஆம் ஆண்டில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் (agriculture R&D) செலவுகள் ரூ.160 பில்லியனாகவும், இதில் 89 சதவீதம் பொதுத்துறையிலிருந்தும், 11 சதவீதம் தனியார் துறையிலிருந்தும் வந்ததாக ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. இந்த எண்கள் தரவின் அளவைப் பற்றிய ஒரு யோசனையை அளிக்கும் அதே வேளையில், விவசாயத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (Agri-GDP) ஒப்பிடும் சதவீதத்தைக் கருத்தில் கொள்வது முக்கியம். இது வேளாண் ஆராய்ச்சி தீவிரம் (Agriculture Research Intensity (ARI)) என மதிப்பிடப்பட்டுள்ளது. வேளாண் ஆராய்ச்சி தீவிரம் (ARI) 2008-09ல் 0.75 சதவீதமாக உயர்ந்து 2022-23ல் 0.43 சதவீதமாக உள்ளது. இது நிதியாண்டு-2025 இல் மேலும் குறைவதுடன், இந்த பிரிவுக்கான ஒதுக்கீடு உண்மையான அடிப்படையில் குறைந்துவிட்டது. இது நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு நல்ல செய்தியாக இல்லை. மேலும், உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவாது.  


கிராமப்புறப் பொருளாதாரம் புறக்கணிக்கப்பட்டால், விக்சித் பாரத்@2047 (Viksit Bharat@2047) இன் தொலைநோக்குத் திட்டத்தை அடைய முடியாது. இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு கிராமப்புறங்களில் வாழ்கிறது. 2022-23 ஆம் ஆண்டில் 45.8 சதவீதத்துடன் உழைக்கும் மக்கள்தொகையில் மிகப்பெரிய பகுதியை விவசாயம் பயன்படுத்துகிறது.

 

வரவு-செலவு திட்டத்தில், விவசாயம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ரூ.1.22 டிரில்லியன் தொகையைப் பெற்றுக்கொண்டது. இந்த நிதியாண்டில் ரூ.1.16 டிரில்லியனில் இருந்து 5 சதவீதம் அதிகமாகும். இந்த சிறிய அதிகரிப்பு பணவீக்கத்தை குறைக்கிறது. மீன்பிடி, கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள அமைச்சகத்துக்கான வரவு செலவுத் திட்டம் 27 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில் 56 பில்லியனில் இருந்து 71 பில்லியனாக அதிகரித்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்தத் துறைக்கு இது ஒரு சாதகமான வளர்ச்சியாகும்.  


விவசாயம், உணவு மற்றும் கிராமப்புறத் துறைகளுக்கான ஆதரவு முக்கியமாக நலன்சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் மானியங்கள் மூலம் கவனம் செலுத்துகிறது. உணவு மற்றும் உர மானியங்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) ஆகியவை முக்கிய கூறுகளில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் விவசாய அமைச்சகத்தை நேரடியான இலக்காகக் கொண்டிருக்கவில்லை என்றாலும், அவை விவசாய உணவு-கிராமப்புறத் துறைக்கு உதவுகின்றன. இந்த ஆதரவு விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனளிக்கும். PM-KISAN, கடன் மானியங்கள் மற்றும் PM-Fasal Bima Yojana போன்ற திட்டங்கள் மூலம் விவசாய அமைச்சகம் குறிப்பிடத்தக்க வருமான ஆதரவை வழங்குகிறது.  இந்த நலன் மற்றும் மானிய நடவடிக்கைகள் மூலம் நிதியாண்டு-2025க்கு ரூ.5.52 டிரில்லியன் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நிதியாண்டு-2024க்கான திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.5.8 டிரில்லியனை விட சற்று குறைவாகும். இந்த ஆதரவு மொத்த வரவு-செலவு திட்டத்தில் 11.5 சதவீகிதமான, ரூ.48 டிரில்லியன் ஆகும். இது நிதியாண்டு-2025க்கான ஒன்றிய அரசின் நிகர வரி வருவாயில் 21.4 சதவீகிதத்தைக் குறிக்கிறது.   


உணவு மானியம் நிதியாண்டில் 2.12 டிரில்லியன் ரூபாயில் இருந்து 2.05 டிரில்லியன் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பு இருந்தபோதிலும், மானியம் இன்னும் முக்கியமாக விவசாயிகளை விட நுகர்வோருக்குப் பயனளிக்கிறது. PM-Garib Kalyan Yojana மூலம் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குவது அரசியல் கண்ணோட்டத்தில் சரியானதாக இருக்கலாம். இருப்பினும், இவ்வளவு பெரிய மக்களுக்கு இந்த ஆதரவைத் தொடர வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய கேள்விகள் உள்ளன. மோடி அரசாங்கத்தின் 10 ஆண்டுகளில் ஏறக்குறைய 250 மில்லியன் மக்கள் பல பரிமாண வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று நிதியமைச்சர் அறிக்கையில் கூறினார். 


விவசாயிகளின் நலன்களைப் புறக்கணித்து, இயற்கை வளங்களைத் தற்செயலாகப் பாதிப்படையச் செய்யும் விவசாயக் கொள்கைகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, 2023-24 பொருளாதார ஆய்வறிக்கையில் இந்திய அரசு நம்முடைய கவலைகளைப் பிரதிபலித்துள்ளது. அவை, விவசாய உற்பத்தியை அதிகரித்திருந்தாலும்,  பல சிக்கல்களுக்கு வழிவகுத்தன. மண்வளம் குறைந்து, நிலத்தடி நீர் குறைந்து, நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் மீத்தேன் வெளியேற்றம் அதிகரித்து, பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நார்ச்சத்து மற்றும் புரதத்தை விட சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை ஊக்குவிப்பதன் மூலம் அவை பொது சுகாதாரத்தை பாதிக்கின்றன. வளர்ச்சியைத் தூண்டும் வகையில் விவசாயத்தை தீவிரமாக மாற்ற வேண்டும். இது விவசாயிகளுக்கும், பூமிக்கும் உதவும் விவசாய முறைகளை பின்பற்றுவதாகும். மானியங்களை சரிசெய்வது உட்பட நல்ல கொள்கை உருவாக்கம் விவசாயத்தில் மதிப்பை அதிகரிக்கும். விவசாயிகளின் வருவாயை உயர்த்தவும், உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும். இது அடுத்த வரவு-செலவு திட்டத்தில் கவனிக்கப்பட வேண்டும். 


குலாட்டி ஒரு பேராசிரியர் மற்றும் தங்கராஜ் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்தியன் கவுன்சிலின் (ICRIER) ஆலோசகர் ஆவார்.



Original article:

Share:

ஒன்றிய நிதி நிலை அறிக்கை 2024-25 : வளர்ச்சி, சீர்திருத்தங்கள் மற்றும் உள்கட்டமைப்பு -பி.பி.பாலாஜி

 இந்த ஆண்டுக்கான, வரவுசெலவுத் திட்டம் மீள்தன்மை கொண்ட விவசாயத்திற்கு கவனம் செலுத்துவதுடன், திறன் மேம்பாட்டை வலியுறுத்துகிறது. இது வேலைவாய்ப்பு (employment), உள்ளடக்கம் (inclusivity) மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை (infrastructure development) துரிதப்படுத்த முயல்கிறது.  எரிசக்தி பாதுகாப்பு, புதுமை மற்றும் சீர்திருத்தங்களை ஊக்குவித்தல் இந்த வரவு-செலவு திட்டத்தில் குறிப்பிடப்படுகிறது.


 2024 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை ஒரு கொள்கைத் தொடர்ச்சியாகவே உள்ளது.  நாம் உண்மையான வளர்ச்சி விகிதங்களை 7%-க்கு மேல் இலக்காகக் கொண்டுள்ளோம். கடந்த ஆண்டின் நிதிப்பற்றாக்குறையான 4.9 சதவிகிதமானது, முன்பு குறிப்பிட்டிருந்ததைபோல் 5.1% ஐ விடக் குறைவாகும். வரும் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை மேலும் 4.5% ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், உள்கட்டமைப்பில் முதலீடுகளை தொடர்ந்து ஆதரித்து வருவதுடன், இதற்காக கிட்டத்தட்ட ₹11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த உத்திக்கான முதலீடுகள் மூலம் வளர்ச்சியை செலுத்துகிறது. அதே சமயம், நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அணுகுமுறை நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.


குறிப்பாக, இந்த வரவு-செலவு திட்டமானது பல முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்துகிறது. இவற்றில், மீள்தன்மை கொண்ட  விவசாயம் (resilient agriculture) மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல் (promoting skill development), வேலைவாய்ப்பு மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வரவு-செலவு திட்டமானது, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் புதுமைகளை வளர்ப்பதை வலியுறுத்துகிறது. இறுதியாக, இது முற்போக்கான சீர்திருத்தங்களை ஊக்குவிக்கிறது. இவை அனைத்தும்  கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான பகுதிகள் ஆகும். 


வாகனத் துறையின் (automotive industry) கண்ணோட்டத்தில், மூன்று முக்கிய அம்சங்கள் தனித்து நிற்கின்றன.


உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துதல்


உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4% க்கு சமமான மூலதனச் செலவினங்களுக்காக அரசாங்கம் ₹11 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கியுள்ளது. இந்த பெரிய முதலீடு, நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் நிலையான வளர்ச்சியை அடைவதற்கான அரசாங்கத்தின் வலுவான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. கூடுதலாக, பிராந்திய உள்கட்டமைப்பு மேம்பாட்டை ஆதரிக்க மாநிலங்களுக்கு ₹1.5 லட்சம் கோடி நீண்ட கால, வட்டியில்லா கடனாக வழங்கப்படும். சாத்தியமான இடைவெளி நிதி (viability gap funding) மற்றும் ஆதரவான கொள்கைகள் தனியார் துறையின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும். இந்த இலக்கு நடவடிக்கைகள் நாடு முழுவதும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்துவதோடு ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கும் உதவும்.


ஆட்டோமொபைல் துறையில் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தில் (Production Linked Incentive Scheme (PLI)) 6 மடங்கு அதிகரிப்பு


கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ₹604 கோடியை விட 2025 நிதியாண்டில் ₹3,500 கோடியாக இருந்த ஆட்டோமொபைல் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் (Automobile Production Linked Incentive Scheme) செலவு 6 மடங்கு அதிகமாகும். இது, ‘சுயசார்பு இந்தியாவை’ (Atmanirbhar Bharat) உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இது காட்டுகிறது மற்றும் ‘உலகத்திற்காக இந்தியாவில் உருவாக்குங்கள்’ (Make in India for the World) என்ற பெரிய தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான உலகளாவிய மையத்தை உருவாக்குவதற்கான அதன் உத்வேகத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. செலவினம் அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்திற்கான நிதியை உரிமை கோருவதற்கும், இதற்கு தீர்வு செய்வதற்குமான நடைமுறைகளை விரைவில் முடிப்பதற்கு சாத்தியம் உள்ளது. இது அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கு (Original Equipment Manufacturer (OEM))  மின்சார வாகன ஊடுருவலைத் தூண்டுதல், உள்ளூர்மயமாக்கலை மேம்படுத்துதல், மதிப்புக் கூட்டல்களை மேம்படுத்துதல் மற்றும் இந்த முயற்சியின் முழுமையான பலன்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த உதவும். இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட FAME-3 திட்டத்துடன் இணைந்து மின்சார வாகனங்களை பெருமளவில் ஏற்றுக்கொள்வதற்கான அடுத்த கட்டத்தை வழங்கும். 

பசுமை ஆற்றல் (green energy) மீது கவனம் செலுத்துதல்


பிரதம மந்திரி சூரிய ஒளி இலவச மின்சார திட்டம் (PM Surya Ghar Muft Bijli Yojna) 1.28 கோடி பதிவுகள் மற்றும் 14 லட்சம் விண்ணப்பங்களுடன் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை ஆதரிக்கும் வகையில், சூரிய மின்கலங்கள் மற்றும் பேனல்கள் (solar cells and panels) தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலதனப் பொருட்களின் மீதான சுங்க வரி விலக்கு அளிக்கப்படும். இதன் மூலம், சூரிய சக்தி உற்பத்தி செலவைக் குறைக்க உதவும். லித்தியம், கோபால்ட் மற்றும் பிற அரிய கனிமங்களின் இறக்குமதி மீதான சுங்க வரி விலக்கு மற்றும் லி-அயன் மின்கலன்கள் (Li-Ion cells) மீதான சலுகை சுங்க வரி விலக்கை மார்ச் 2026 வரை நீட்டிப்பது,  ஆற்றலைச் சேமிப்பதற்கான செலவை குறைக்கும். இந்த இலக்கு நடவடிக்கைகள், நாட்டின் காலநிலை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கும், பசுமை ஆற்றலை ஏற்றுக்கொள்வதற்கும் அரசாங்கத்தின் உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்துகின்றன.


ஒட்டுமொத்தமாக, இந்த நிதிநிலை அறிக்கை  ஒரு செயல்திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையைத் தூண்டுகிறது. மேலும், எதிர்கால வாய்ப்பைப் பயன்படுத்தி, 'வளர்ச்சியடைந்த இந்தியாவை' (Viksit Bharat) உருவாக்கும் அதே வேளையில், சமமான, உள்ளடக்கிய, சமநிலையான முறையில் அதை அடைவதற்கான வலுவான முன்னேற்றங்களை நாம் மேற்கொண்டு வருகிறோம்.


எழுத்தாளர் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் குழும தலைமை நிதி அதிகாரி (CFO) ஆவார்.



Original article:

Share:

நிதிநிலை அறிக்கை 2024 : சமூகத் துறையில் (social sector) உள்ள பழைய பிரச்சனைகளுக்கான பழைய தீர்வுகள் -தீபா சின்ஹா

 நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில்  சமூகத்துறை (social sector) திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது.  


இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் ஏழைகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டபோதிலும், நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சமூகத் துறைக்கான நிதி ஒதுக்கீடுகளில் முந்தைய ஆண்டுகளை விட எந்த வித்தியாசமும் காட்டப்படவில்லை.  பொருளாதார ஆய்வறிக்கையில் ‘சமூகத் துறை: அதிகாரமளிக்கும் நன்மைகள்’ (Social Sector: Benefits that Empower) என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சி சமூக மற்றும் நிறுவன முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது என்று இந்த அத்தியாயம் கூறுகிறது. இந்தியாவின் பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி சமூக மற்றும் நிறுவன மேம்பாடுகளுடன் தொடர்புடையது. அரசின் திட்டங்கள் பயனுள்ளவையாகவும், மக்களுக்கு அதிகாரமளிப்பதாகவும், நலனை மேம்படுத்துவதாகவும் உள்ளன. இருப்பினும், பணவீக்கத்தை சரி செய்யும் வகையில்  பட்ஜெட்டில் பல சமூகத் துறை திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. 


ஏமாற்றமளிக்கும் ஒதுக்கீடுகள்


பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு பெயரளவு ₹5,000 கோடியாகவும், உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு ₹3,000 கோடியாக சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு நிகழ்வுகளிலும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மதிப்பிடப்பட்ட ‘மீட்புகள்’ (recoveries) கணிசமான அதிகமாக உள்ளன. கல்வி நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலித்து சுயநிதி பாடப்பிரிவுகளை அதிகளவில் பயன்படுத்துவதையே இது காட்டுகிறது. கடந்த ஆண்டை விட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ₹1,500 கோடி மட்டுமே அதிகரித்துள்ளது. 


கடந்த ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் (revised estimates) ஒப்பிடும்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்கான (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, (MGNREGA)) நிதி ஒதுக்கீடு முந்தயை ஆண்டுகளைப் போல மாறாமல் உள்ளது. MGNREGA என்பது தேவையின் அடிப்படையில் இயக்கப்படும் திட்டமாக இருந்தாலும், ஒதுக்கப்பட்ட தொகையானது மாநிலங்கள் அணுகக்கூடிய வரம்பை நிர்ணயிக்கிறது. இந்த ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை கிடைப்பது உறுதிசெய்யப்படுகிறது. கூடுதலாக, தற்போதைய மக்கள் தொகை அளவை சரி செய்ய வேண்டிய அவசியம் இருந்தாலும், உணவு மானியம் சிறிதளவு  அதிகரித்துள்ளது. பொது விநியோக அமைப்பு இன்னும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாக உணவு தானியங்களின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவும் சிறிய திட்டங்கள் அதிக கவனத்தைப் பெறவில்லை. போஷன் திட்டம் (POSHAN scheme) எனப்படும் பள்ளி குழந்தைகளுக்கான  மதிய உணவு திட்டம், முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில், ₹11,600 கோடியிலிருந்து ₹12,467 கோடியாக ஒதுக்கீடு சிறிதளவு அதிகரித்துள்ளது.  இருப்பினும், இது 2022-23ல் ₹12,681 கோடியாக இருந்த செலவை விடக் குறைவு. ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பயன்பெறும் சக்ஷம் அங்கன்வாடி திட்டத்திற்கு (Saksham Anganwadi scheme), முந்தைய பட்ஜெட்டில் ₹20,554 கோடியாக இருந்த நிலையில், தற்போது ₹21,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு அதிக சம்பளம் (2018 முதல் மாற்றப்படவில்லை ), மதிய உணவு சமைப்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட கவுரவ ஊதியம் அல்லது குழந்தைகளுக்கான கூடுதல் ஊட்டச்சத்துக்கான ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்படவில்லை.  


பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (Pradhan Mantri Matru Vandana Yojana, (PMMVY)) மற்றும் குழந்தைக் காப்பக (க்ரீச்) திட்டங்கள் (creche scheme) போன்ற மகப்பேறு உரிமைகளை பாதுகாப்பதற்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு முந்தைய பட்ஜெட்டில் ₹2,582 கோடியிலிருந்து ₹2,517 கோடியாக குறைந்துள்ளது. பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனாவானது தகுதியுள்ள பெண்களில் பாதி பெண்களை திட்டத்தில் இருந்து நீக்குகிறது. மேலும், 2017-ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கியதில் இருந்து ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கான ₹5,000 தொகை மாறாமல் உள்ளது. தேசிய சமூக உதவித் (National Social Assistance Programme (NSAP)) திட்டத்திற்கான பட்ஜெட், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களை வழங்குகிறது. முதியோர், தனியாக வசித்து வரும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு நிதி ஒதுக்கீடு எந்த மாற்றமும் இல்லாமல் முந்தையை ஆண்டுகளை போல ₹9,652 கோடியாக உள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு பணவீக்கத்தை சரி செய்வதற்கு பயன்படவில்லை. 2009-ஆம் ஆண்டு முதல், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ஒன்றிய அரசின் பங்கு ஒரு நபருக்கு ஒரு  மாதத்திற்கு ₹200 ஆகும்.


இந்த வரவு செலவுத் திட்டக் குறைப்புகளை சிறந்த திட்டங்கள் மாற்றியமைத்துவிட்டதாகக் கூறி நியாயப்படுத்த முடியாது. ஓய்வூதியத்திற்கான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana) போன்ற பங்களிப்புத் திட்டங்களினால் இப்பொது சில நன்மைகள் ஏற்படுகின்றன. கல்வி மற்றும் சுகாதாரம், தனியார்மயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கலை நோக்கி நகர்கிறது. சமூக செலவினங்களை அதிக செலவு குறைந்ததாக (‘cost-effectiveness’) மாற்றுவதை  புதிய நலன்புரி அணுகுமுறையின் முக்கிய பகுதியாக பொருளாதார ஆய்வு குறிப்பிடுகிறது. இருப்பினும், இந்த அணுகுமுறை இந்த சேவைகளில் சந்தைக் கொள்கைகளைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்களை முழுமையாக எதிர்கொள்ளவில்லை அல்லது மனித வளர்ச்சியின் விளைவுகளை மேம்படுத்துவதன் நீண்டகால பொருளாதார நன்மைகளைக் கருத்தில் கொள்ளவில்லை. முக்கியமான, பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுகின்றன. 


வேலைவாய்ப்பு சவால்


மறுபுறம், வேலைவாய்ப்பு சவாலை எதிர்கொள்ளும் தனியார் துறையின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ‘வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான பிரதம மந்திரியின் தொகுப்பு’ (Prime Minister’s Package for Employment and Skilling) என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் பயிற்சிகள், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation (EPFO)) ​​பதிவுகள் மூலம் வேலைகளை முறைப்படுத்துவதற்கான ஊக்கத்தொகை மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இருப்பினும், ஒதுக்கப்பட்ட நிதியின் காரணமாக இந்தத் திட்டங்கள் போதிய கவனம் பெறவில்லை. இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்ட தொகுப்பு ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ₹2 லட்சம் கோடி ஆகும். வழங்கப்படும் நிதியானது பெரும்பாலும் தொழில்துறையின் சூழலை பொறுத்து இருக்கும். கூடுதலாக, தனியார் துறையில் உள்ள நிறுவன சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility (CSR)) நிதியைப் பயன்படுத்தி இந்தத் தொகுப்பிற்குப் பங்களிக்க வேண்டும். மேலும், இந்தத் தொகுப்பிற்கு நிதியளிக்க தனியார் துறையின் நிறுவன சமூகப் பொறுப்பு  நிதியைப் பயன்படுத்த வேண்டும். இதன் விளைவாக, நிறுவனங்கள் பொதுவாக குறைந்தபட்ச சமூக பங்களிப்புகளுக்கு பயன்படுத்தும் நிறுவன சமூகப் பொறுப்பு நிதிகள், இப்போது தங்கள் சொந்த ஊதியத்திற்கு மானியமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.  


2024-25 நிதிநிலை அறிக்கையில் சமூகத் துறை 


குறைக்கப்பட்ட தேவை, தேக்கநிலை ஊதியங்கள் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான தீர்வுகளுக்குப் பதிலாக, இந்த அறிவிப்பு விநியோகத் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க தனியார் துறையை ஊக்குவிப்பதே இந்த பட்ஜெட்டின் நோக்கமாக உள்ளது. இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட இம்மாதிரியான முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்தத் அறிவிப்புகள் இன்னும் சிறப்பாகச் செயல்படும் என்று தற்போதும் உறுதியாகக் கூற இயலாது.



Original article:

Share: