இலவசங்கள் மற்றும் நேரடி பணப்பரிமாற்றம் தொடர்பான நிதி சார்ந்த சிக்கல்கள் என்னென்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மானியங்களை வழங்கத் திட்டமிடும் அரசாங்கங்கள் அவற்றை தங்களின் நிதிநிலைத் திட்டத்தில்  சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.


— நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம் பான்சோலி ஆகியோரைக் கொண்ட இந்த அமர்வு, 2024-ஆம் ஆண்டின் மின்சார திருத்த விதிகளில் உள்ள 'விதி 23'-க்கு எதிராக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்தது.


— இயற்கைப் பேரிடர் காலங்களைத் தவிர மற்ற நேரங்களில், மின்சாரக் கட்டணமானது அதன் உண்மையான உற்பத்திச் செலவைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட வருவாய் தேவைக்கும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் இடையே எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது என்று இந்த விதியில் கூறப்பட்டுள்ளது.


— ஒன்றிய அரசுக்கு அறிவிப்பாணை அனுப்பியபோது, வருமான நிலை அல்லது கட்டணம் செலுத்தும் திறனைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கும் மாநில அரசுகளின் நடவடிக்கை குறித்து தலைமை நீதிபதி குறிப்பிட்டார். மேலும், இந்தச் செலவுகள் அனைத்தையும் மாநில அரசே ஏற்றுக்கொள்வது பொது நலனுக்கு ஏற்றதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 


— கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெற வசதியில்லாத மக்களுக்கு அரசு உதவ வேண்டும் என்பது புரிந்து கொள்ளத்தக்கது; அத்தகைய உதவியை சமூகம் வரவேற்க வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார். இருப்பினும், ஏற்கனவே போதிய வசதி படைத்த செல்வந்தர்களுக்கும் இந்தச் சலுகைகள் சென்றடைய வேண்டுமா என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், மாநில அரசுகள் தங்களது கொள்கை திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


— மக்கள் நலத் திட்டங்களின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளை முடிவு செய்வது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் பொறுப்பு என்று தலைமை நீதிபதி கூறினார். இருப்பினும், மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையில் இருக்கும்போதும் இத்தகைய திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து அவர் கவலை தெரிவித்தார். அதோடு, இதற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 


— ஒழுங்குமுறை ஆணையத்திற்காக (Regulatory Commission) ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளின்கீழ் வரும் (Directive Principles of State Policy) பிரிவு 39 (b)-ஐ மேற்கோள்காட்டிய அவர், சமுதாயத்தின் வளங்களின் உரிமையும் கட்டுப்பாடும் பொதுநலனுக்குச் சிறந்த முறையில் பயன்படும் வகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று அந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.


— நீதிபதி பாக்சி  கூறுகையில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ் உருவாக்கப்படும் நலத்திட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை என்றார். இருப்பினும், இந்த 32-வது சட்டப்பிரிவு மனுவில் உள்ள உண்மையான கவலை 'திட்டமிட்ட செலவினம்' (Planned Expenditure) மற்றும் 'திட்டமிடப்படாத செலவினம்' (Non-planned Expenditure) பற்றியது. அரசாங்கங்கள் நலத்திட்டங்களை விரும்பினால், கல்விக்கான ஒதுக்கீடு அல்லது வேலையில்லா திண்டாட்ட கால சலுகைகள் போன்றவற்றை முறையான விளக்கங்களுடன் வரவு செலவுத் திட்டத்தில் (Budget) தெளிவாகச் சேர்க்க வேண்டும் என்றும் மாறாக, இந்த வழக்கில் காணப்படுவது போன்ற முறையில் அவற்றைச் செயல்படுத்தக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 





உங்களுக்குத் தெரியுமா:


— கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா தனது நலத்திட்ட முறையை ரேஷன் கடைகள் மற்றும் பொதுப்பணித் திட்டங்களில் இருந்து மாற்றி, டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மற்றும் பெண்களுக்கு வருமான உதவி வழங்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு, பல மாநிலங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெண்களின் வங்கித் கணக்குகளுக்கே நேரடியாகப் பணம் அனுப்பத் தொடங்கியபோது இந்த மாற்றம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. 


— இவ்வாறு, இந்தியாவின் நலத்திட்ட முறை அதன் ஆரம்ப காலத்திலிருந்து நீண்டதூரம் பயணித்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு, அரசு வறுமையை ஒழிப்பதிலும் அடிப்படை பொருளாதாரப் பாதுகாப்பை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியது. அரசியலமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகளான, சமத்துவமின்மையைக் குறைத்தல் (பிரிவு 38) மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்தல் (பிரிவு 41), உணவு விநியோகம், பொதுப்பணித் திட்டங்கள் மற்றும் மானிய விலையிலான சேவைகளின் அடிப்படையில் அமைந்த இந்த நலத்திட்ட மாதிரிகளை  வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது. 


— பற்றாக்குறைகள் மற்றும் பலவீனமான பொருளாதாரச் சந்தைகளுடன் போராடிக்கொண்டிருந்த ஒரு நாட்டில், பொது விநியோகத் திட்டம் (Public Distribution System (PDS)), நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் ஆரம்பகால வேலைவாய்ப்புத் திட்டங்கள் ஆகியவை அவசியமான கருவிகளாக மாறின.


— காலப்போக்கில், சமூக நலத்திட்டங்கள் இரண்டு தெளிவான வடிவங்களை எடுத்தன. ஆரம்பத்தில், பொருட்களாக வழங்குதல் (In-kind transfers) மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன: பொது விநியோகத் திட்டத்தின் (Public Distribution System (PDS)) மூலம் மானிய விலையில் தானியங்கள், பிரதமரின் ஊட்டச்சத்துத் திட்டத்தின்கீழ் (Pradhan Mantri POSHAN (PM-POSHAN)) சமைத்த உணவுகள், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் (PMAY (Pradhan Mantri Awas Yojana)) மூலம் வீடுகள் மற்றும் பிரதமரின் விரிவான ஊட்டச்சத்துத் திட்டத்தின்கீழ் (POSHAN (Prime Minister’s Overarching Scheme for Holistic Nourishment)) ஊட்டச்சத்துக் பெட்டகங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. குடும்ப வருமானம் குறையும் காலங்களில், இத்திட்டங்கள் மக்களுக்கு ஒரு குறைந்தபட்ச பாதுகாப்பு நிலையை உறுதி செய்தன.


— ஆரம்பத்தில் பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், பணப்பரிமாற்றங்கள்  ஆதார் (Aadhaar), ஜன்-தன் வங்கி கணக்கு (Jan-Dhan), மற்றும் நேரடிப் பயன் பரிமாற்றம் (Direct Benefit Transfer (DBT)) ஆகியவற்றின் மூலமாகவே பின்னாட்களில் சாத்தியமானது. இந்தத் திட்டங்கள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பணத்தைச் செலுத்துவதால், குடும்பங்கள் தங்களின் தேவைக்கேற்ப அந்தப் பணத்தைப் பயன்படுத்தும் சுதந்திரத்தைப் பெறுகின்றன. உதாரணமாக, PM-KISAN (Pradhan Mantri Kisan Samman Nidhi) திட்டம் விவசாயிகளுக்கு வருமான ஆதரவை வழங்குகிறது. அதேபோல் முதியோர்கள், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியங்கள் பொதுவாக இந்த நேரடிப் பரிமாற்றங்கள் மூலமாகவே வழங்கப்படுகின்றன. 


— பணம் மற்றும் பொருட்கள்/சேவைகள் ஆகிய இந்த இரண்டு வடிவங்களும் இணைந்து, குடும்பகளோடு நெருங்கிய தொடர்புடைய ஒரு கலப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசை (Hybrid Welfare State) உருவாக்கியுள்ளன. அதாவது, மக்களுக்குத் தேவையான நிதி உதவியையும், அதே சமயம் உணவு அல்லது கல்வி போன்ற நேரடி வசதிகளையும் தங்குதடையின்றி வழங்குவதை அரசு உறுதி செய்கிறது. 

 


Original article : What are the financial concerns related to freebies and direct cash transfers? -Khushboo Kumari

Share:

உச்சநீதிமன்றத்தில் மாயத்தோற்றங்கள்: மோசமான வரைவு என்பது வெறும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஏற்படும் பிரச்சனை மட்டுமல்ல. -ஸ்வப்னில் திரிபாதி

 முறையாக எழுதப்படாத மனுக்கள், சரியான பகுப்பாய்வின்றி அளவுக்கு அதிகமாக மேற்கோள்களைப் பயன்படுத்துதல் மற்றும் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் தீர்ப்பு முன்னுதாரணங்களை மேலோட்டமாகப் பயன்படுத்துதல் போன்றவை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாவதற்கு முன்பே இருந்தன. சொல்லப்போனால், ஏற்கனவே இருந்து வரும் இந்த பலவீனத்தை தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது வெளிக்காட்டியுள்ளது.


இந்த மாத தொடக்கத்தில், இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கருவிகளின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட மனுக்களில் போலி வழக்கு மேற்கோள்கள் இடம்பெறுவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியது. இந்த நடைமுறையை "அதிர்ச்சியளிக்கக்கூடியது" மற்றும் "முற்றிலும் தேவையற்றது" என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆபத்துகளை மட்டுமல்லாமல், வழக்கறிஞர்களின் தொழில்முறை சார்ந்த ஒரு தீவிரப் பிரச்சினையையும் சுட்டிக்காட்டுவதாகக் கூறினார். உண்மையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பிரச்சினையல்ல என்றும் அதை கவனமாகப் பயன்படுத்தினால் அன்றாட வேலைப் சுமைகளைக் குறைத்து ஆய்வுகளுக்கு உதவியாக இருக்கும். ஆனால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கும் தகவல்களை கண்மூடித்தனமாக நம்புவதும், குறிப்பாக இல்லாத வழக்கு விவரங்களைச் சேர்ப்பதும்தான் உண்மையான சிக்கல் என்றும் தெரிவிக்கின்றனர். இதுவே தொழில்நுட்ப ரீதியாக மாயத்தோற்றம் அல்லது பிழையான தகவல் உருவாக்கம் (Hallucination) என்று கூறப்படுகிறது.


இந்திய நீதிமன்றங்கள் இத்தகைய சூழல்களை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பதில் மனுவில், உண்மையில் இல்லாத சில தீர்ப்புகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதேபோல், வருமான வரி அதிகாரி ஒருவர் வழங்கிய தீர்ப்புகளில் மேற்கோள் காட்டப்பட்ட முந்தைய வழக்குகள் போலியானவை என்பதை மும்பை உயர்நீதிமன்றம் கண்டுபிடித்தது. கர்நாடகாவிலும் ஒரு நீதிபதி தனது உத்தரவை எழுதும்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கிய தவறான தீர்ப்புகளைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இச்சம்பவங்கள் அனைத்தும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் தரும் தகவல்களைச் சரிபார்க்காமல் அப்படியே உண்மை என்று நம்புவது வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நீதித்துறைக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துகின்றன.


இது இந்தியாவுக்கு மட்டுமே உரிய பிரச்சனை அல்ல என்றும் உலகின் பிற நாடுகளிலும் உள்ள நீதிமன்றங்கள் இத்தகைய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உதாரணமாக, அமெரிக்காவில் 'ரோபர்டோ மாதா vs ஏவியங்கா' (Roberto Mata vs Avianca) என்ற வழக்கில், ஒரு வழக்கறிஞர் ChatGPT உருவாக்கிய போலி சட்ட முன்னுதாரணங்களை வழங்கியதற்காக அந்நாட்டு மத்திய நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்தது. அதேபோல் இங்கிலாந்தில், 89 மில்லியன் பவுண்ட் இழப்பீடு கோரப்பட்ட ஒரு முக்கிய வணிக வழக்கு உட்பட பல வழக்குகளில், போலியாக உருவாக்கப்பட்ட சட்ட மேற்கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த உதாரணங்கள் உலகளாவிய ஒரு கசப்பான உண்மையை உணர்த்துகின்றன. அதாவது, செயற்கை நுண்ணறிவு (Generative AI) கருவிகள் மிகவும் சக்திவாய்ந்தவை என்றாலும், அவை நம்பகமான சட்டத் தரவுத்தளங்கள் அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றனர்.  எனவே அவற்றை மனிதர்கள் எப்போதும் தீர ஆராய்ந்து சரிபார்ப்பது அவசியம் என்றும் தெரிவிக்கின்றனர். 


சர்வதேச அளவில், நீதிமன்றங்கள் இதற்கு இரண்டு முக்கிய வழிகளில் பதிலளித்துள்ளன. முதலாவதாக, சரிபார்க்கப்படாத செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட தகவல்களைச் சமர்ப்பிக்கும் வழக்கறிஞர்களுக்கு அபராதம் அல்லது தடைகளை விதித்துள்ளன. இரண்டாவதாக, நீதிமன்றங்களும் தொழில்முறை அமைப்புகளும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன; இதன்படி வழக்கறிஞர்கள் தாங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை என்றோ, அல்லது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் ஏதேனும் இருந்தால் அவை தங்களால் சரிபார்க்கப்பட்டது என்றோ சான்றளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன. 


இந்தியாவில் தற்போதைய நிலையில் நீதிமன்ற வழக்குகளில் செயற்கை நுண்ணறிவை (Generative AI) பயன்படுத்துவது குறித்து முழுமையான விதிகள் ஏதும் வரையறுக்கப்படவில்லை. இந்திய உச்சநீதிமன்றம் இது தொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன், கேரள உயர்நீதிமன்றம் போன்ற சில நீதிமன்றங்கள் தங்களின் நிர்வாக மற்றும் தொழில்நுட்பப் பணிகளுக்காகப் பரந்த செயற்கை நுண்ணறிவுக் கொள்கைகளை உருவாக்கிப் சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதே சமயம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வழங்கும் பதில்களைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளன. இருப்பினும், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து ஒருங்கிணைந்த மற்றும் விரிவான வழிகாட்டுதல்களும், தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்கான முறையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் இன்னும் தேவைப்படுகின்றன.


இதன் முக்கியப் பொறுப்பு வழக்கறிஞர்களிடமே உள்ளது. செயற்கை நுண்ணறிவால் தற்செயலாக உருவாக்கப்பட்டிருந்தாலும், தவறான தீர்ப்பு முன்னுதாரணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது வெறும் தொழில்நுட்பப் பிழை மட்டுமல்ல என்றும் அது ஒரு நேர்மையற்ற செயல் மற்றும் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கறிஞர் செய்ய வேண்டிய கடமையை மீறும் செயல் என்றும் கூறப்படுகிறது.  உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரை, மனுக்களைத் தாக்கல் செய்யும் பொறுப்பைக் கொண்டுள்ள 'பதிவுபெற்ற வழக்கறிஞர்களுக்கு' (Advocates-on-Record (AOR)) இந்தப் பொறுப்பு இன்னும் அதிகம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த 'பதிவுபெற்ற வழக்கறிஞர்' முறை உருவாக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட தவறுகள் இடம் பெற்றால், அது தொழில்நுட்பத் தோல்வி அல்ல, மாறாக மேற்பார்வை செய்யத் தவறியதே ஆகும் என்றும் கூறியுள்ளது. எனவே இதற்குத் தகுந்த தண்டனை அல்லது தடுப்பு நடவடிக்கை அவசியமாகும். அதேபோல், இந்திய வழக்கறிஞர் சங்கம் (Bar Council of India (BCI)) மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகள், சட்டத்துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துவது குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இதற்கான தீர்வு செயற்கை நுண்ணறிவுக்குத் தடை விதிப்பது அல்ல என்றும் மாறாகப் பொய்யான மேற்கோள்கள் உருவாகும் அபாயம் உள்ளிட்ட அதன் வரம்புகளைப் புரிந்துகொள்ள வழக்கறிஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதே ஆகும்.


அதே நேரத்தில், நீதிமன்றம் தனது சொந்த பங்களிப்பைக் குறித்தும் சிந்திக்க வேண்டும். அண்மைக் காலங்களில், குறிப்பாக 'சிறப்பு விடுப்பு மனுக்களில்' (Special Leave Petitions), தெளிவான சட்ட ரீதியான காரணங்களுக்குப் பதிலாக நீண்ட மேற்கோள்கள் மட்டுமே இடம் பெறுவதாகவும், இதனால் முறையான சட்ட ஆவணங்களைத் தயாரிக்கும் கலை (art of legal drafting) நலிவடைந்து வருவதாகவும் நீதிபதி பாக்சி விசாரணையின் போது கவலை தெரிவித்தார். இந்த விவகாரமானது வெறும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த விவாதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு முக்கியப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. 


செயற்கை நுண்ணறிவு (Generative AI) உருவாவதற்கு முன்பே, தரமற்ற முறையில் மனுக்களைத் தயாரிப்பது, முறையான பகுப்பாய்வின்றி அளவுக்கு அதிகமான மேற்கோள்களைக் கையாளுவது மற்றும் சூழலைப் புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாக முன்மாதிரித் தீர்ப்புகளைப் பயன்படுத்துவது போன்ற பழக்கங்கள் நடைமுறையில் இருந்தன.  இருப்பினும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வருகை இந்த பலவீனங்களை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. துல்லியமான வாதங்களைவிட நீளமான பக்கங்களுக்கும், தெளிவான சிந்தனையைவிட இயந்திரத்தனமான மேற்கோள்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் சட்டக் கலாச்சாரமே இத்தகைய குறுக்கு வழிகளை ஊக்குவிக்கிறது. மேலும், இதில் நிறுவன ரீதியான சிக்கலும் உள்ளது. நீதிமன்றங்கள் சில சமயம் மனுக்களின் தரத்தை முறையாக வலியுறுத்தாமல் அவற்றை ஏற்றுக்கொள்வதால், சட்ட வல்லுநர்களிடையே துல்லியமாகச் செயல்பட வேண்டிய அவசியம் குறைகிறது. தெளிவான வழக்குக் காரணம், தொடர்புடைய உண்மைகள் மற்றும் குறிப்பிட்ட சட்டப்பிரிவுகள் போன்ற முறையான விதிகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். இந்த விதிகளைத் துல்லியமாக நடைமுறைப்படுத்தினால், மனிதர்கள் உருவாக்கினாலும் அல்லது இயந்திரங்கள் உருவாக்கினாலும், மேலோட்டமான மற்றும் தரமற்ற மனுக்கள் உருவாவதை இயற்கையாகவே தடுத்து நிறுத்த முடியும் என்று கூறப்படுகிறது. 


ஸ்வப்னில் திரிபாதி,  எழுத்தாளர் மற்றும் விதி சட்டக் கொள்கை மையத்தில் உள்ள அரசியலமைப்பு சட்ட மையமான சர்க்காவை வழிநடத்துகிறார்.


Original article : Hallucinations in the Supreme Court: Poor drafting isn’t just an AI problem. -Swapnil Tripathi

Share:

சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த ஒரு திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான செயல்முறை என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள் :


நதி பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்டங்களுக்கான நிபுணர் மதிப்பீட்டுக் குழு (expert appraisal committee (EAC)) ஜனவரி 9 கூட்டத்தில் இந்த முடிவை எடுத்தது. நீர் மின் திட்டங்களுக்கு தளர்வு அளிக்கும் பல்வேறு அறிவிப்புகள் மற்றும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (National Company Law Tribunal (NCLT)) அல்லது நீதிமன்றங்களில் வழக்குத் தொடர இழந்த நேரத்தை 'பூஜ்ஜிய காலம்' (‘zero period’) என்று கருதும் 2025 அக்டோபர் மாத முக்கிய அலுவலக குறிப்பாணை (office memorandum (OM)) ஆகியவற்றை நம்பியிருந்தது.


இருப்பினும், இந்தக் குழு ஒரு முக்கிய விவரத்தை கவனிக்கவில்லை என்று தெரிகிறது. திட்டத்தின் வன அனுமதிக்கு எதிரான மேல்முறையீடு தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) விவகாரம் திட்டத்தை நிறுத்தியது மட்டுமல்லாமல், திட்டத்தின் வனவிலங்கு அனுமதியை தீர்ப்பாயம் ஒதுக்கி வைப்பதில் உச்சத்தை அடைந்தது.


இந்த வனவிலங்கு அனுமதி முன்னர் வன அனுமதி வழங்குவதற்கான அடிப்படையாக இருந்தது. இந்த விஷயத்தை மீண்டும் மறுபரிசீலனை செய்யுமாறு தேசிய வனவிலங்கு வாரியத்திடம் தீர்ப்பாயம் கூறியது. அதே நேரத்தில், வன அனுமதியை அது தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. பின்னர், திட்டம் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. 2018-ல் மீண்டும் ஒருமுறை வனவிலங்கு அனுமதியைப் பெற்றது.


தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிபுணர் உறுப்பினர்களின் கருத்துக்களை சரியான காரணமின்றி நிராகரித்து. அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் முடிவுக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. அசாமில் உள்ள திப்ரு-சைகோவா தேசிய பூங்காவில் ஏற்படக்கூடிய தாக்கத்திற்காக நிபுணர்கள் இந்த திட்டத்தை எதிர்த்தனர்.


நீதிமன்ற வழக்குகள் காரணமாக இழந்த நேரத்தை அமைச்சகத்தின் 2025 அலுவலக குறிப்பாணை "பூஜ்ஜிய காலம்" என்று கருதுகிறது. இருப்பினும், நீதிமன்றங்கள் திட்ட அனுமதிகளை ரத்து செய்த வழக்குகளில் இந்த விதி பொருந்துமா என்பதை அது தெளிவுபடுத்தவில்லை.


நிபுணர் மதிப்பீட்டுக் குழு அறிவிப்பின் கீழ், திட்டங்களின் புதிய மதிப்பீட்டிற்கு மட்டுமே புதிய அடிப்படை ஆய்வுகள் கோரப்படுகின்றன. மேலும், ஒரு திட்டம் இன்னும் பரிசீலனையில் இருக்கும்போது மட்டுமே அடிப்படை ஆய்வுகளுக்கு ஒரு நிலையான செல்லுபடியாகும் தன்மை உள்ளது.


2025ஆம் ஆண்டின் அலுவலக குறிப்பாணைக்கு முன், சுற்றுச்சூழல் அனுமதியின் செல்லுபடியாகும் காலத்திற்குள் பணியைத் தொடங்காத எந்தவொரு திட்டத்தையும் தொடக்கத்திலிருந்தே மீண்டும் பரிசீலிக்க வேண்டியிருந்தது. இது "புதிய" பரிசீலனை என்று அழைக்கப்படுகிறது. கூடுதல் தாமதங்களைத் தடுக்க "பூஜ்ஜிய காலம்" விதி பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. தாமதங்கள் அவர்களின் தவறு அல்லாதபோது திட்டத்தை உருவாக்குநர்களுக்கு உதவுவதற்கும், இழந்த நேரத்தைக் கணக்கிடுவதற்கும் இது நோக்கமாக இருந்தது.


பிப்ரவரி 2010-ல் முதலில் வழங்கப்பட்ட திட்டத்தின் சுற்றுச்சூழல் அனுமதி (EC) 2020ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும். இருப்பினும், 2022ஆம் ஆண்டு அறிவிப்பின் அடிப்படையில், நீர் மின் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதிகள் (EC) அவற்றின் நீண்ட காலம் காரணமாக 13 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். மேலும், சுற்றுச்சூழல் அனுமதிகள் (EC) செல்லுபடியை இறுதி வன அனுமதி வழங்கப்பட்ட தேதியிலிருந்து அல்லது அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள், எது குறைவாக இருக்கிறதோ, அதிலிருந்து கணக்கிடப்பட வேண்டும் என்றும் 2022ஆம் ஆண்டின் அலுவலக குறிப்பாணை கூறியது. இந்த விதிகளின் அடிப்படையில், டெம்வே திட்டத்தின் சுற்றுச்சூழல் அனுமதி (EC) செல்லுபடியாகும் தன்மை பிப்ரவரி 2012ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்பட்டது.


இதன் காரணமாக, பிப்ரவரி 2025ஆம் ஆண்டு வரை அதன் சுற்றுச்சூழல் அனுமதி (EC) செல்லுபடியாகும் தன்மையை தக்க வைத்துக் கொண்டது. மேலும், இந்த திட்டத்திற்கு ஒரு வருட கோவிட் கால தளர்வு கிடைத்தது. இதனால் பிப்ரவரி 2026ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும்.

இந்த திட்டம், அஞ்சாவ் மற்றும் லோஹித் மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டத்தில் லோஹித் ஆற்றின் குறுக்கே 162.12 மீட்டர் உயரமுள்ள கான்கிரீட் ஈர்ப்பு அணை கட்டப்படும். 1,416 ஹெக்டேர் வன நிலம் திருப்பி விடப்படும். மேலும், 1,589.97 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கும்.


திட்டத்தின் மேல் பகுதியில் உள்ள லோஹித் படுகை மற்றும் கம்லாங் புலிகள் சரணாலயம், மிகவும் அழிந்து வரும் வெள்ளை-வயிற்று ஹெரான் (White-Bellied Heron) இனத்திற்கு ஒரு முக்கியமான வாழ்விடமாக செயல்படுகிறது. 2020-ஆம் ஆண்டில் நிபுணர் மதிப்பீட்டுக் குழு (EAC) இந்தப் பறவைக்கான விரிவான பாதுகாப்புத் திட்டத்தைத் தயாரிக்க பரிந்துரைத்திருந்தாலும், ஜனவரி 2026ஆம் ஆண்டு கூட்டப் பதிவுகள் பல்லுயிர் பெருக்கம் குறித்து எந்த விவாதமும் இல்லை என்பதைக் காட்டுகின்றன.


கிரீன்கோவின் சமர்ப்பிப்புகளின்படி, டெம்வே லோயர் என்பது 3,000 மெகாவாட் நீர் மின் திட்டத்தின் ஒதுக்கப்பட்ட நதிப் பகுதியில் மிகக் குறைந்த திட்டம்/நிலையாகும்.


உங்களுக்குத் தெரியுமா? :


வளர்ச்சி-சுற்றுச்சூழல் விவாதம் என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையிலான மோதலை ஆராயும் ஒரு சமகால விவாதப் பொருளாகும். சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான சவால்களை ஒரே நேரத்தில் எதிர்த்துப் போராடும் அதே வேளையில், அதன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் லட்சியங்களைக் கொண்ட இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த பிரச்சினை மிகவும் பொருத்தமானது.


சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment (EIA)) என்பது பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை சமநிலைப்படுத்தும் நாடுகளுக்கு உதவுகிறது. சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் இழப்பில் பொருளாதார வளர்ச்சி நடக்காது என்பதை இது உறுதி செய்கிறது.


சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) என்பது ஒரு முன்மொழியப்பட்ட திட்டம் அல்லது மேம்பாட்டின் சாத்தியமான நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு முறையான செயல்முறையாகும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) முதன்மை நோக்கங்களில் வளர்ச்சித் திட்டங்களின் சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களின் கணிப்பு மற்றும் மதிப்பீடு ஆகியவை அடங்கும்.


இது முன்மொழியப்பட்ட திட்டத்தின் வலுவான பகுப்பாய்வை வழங்குவதன் மூலம் முடிவெடுப்பதை எளிதாக்குகிறது மற்றும் திட்டமிடல் கட்டத்தில் சாத்தியமான எதிர்மறை விளைவுகளை அடையாளம் காண்பதன் மூலம் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதேநேரத்தில், தீங்கைக் குறைப்பதற்கான பொருத்தமான மாற்றுகள் மற்றும் நடவடிக்கைகளை இது பரிந்துரைக்கிறது.


Original article : What is the process of getting environment clearance for an ecologically sensitive project? -Khushboo Kumari

Share:

MANAV தொலைநோக்குப் பார்வை என்பது என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


புது தில்லியில் நடைபெற்ற இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் (India AI Impact Summit) உலகளாவிய தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனர்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கேட்டபோது, ​​மோடி, "செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு 'இராஜதந்திர சொத்து' என்றும் இரகசியமாக உருவாக்கப்பட வேண்டும் என்று நம்பும்" "சில நாடுகள் மற்றும் நிறுவனங்களிலிருந்து" "இந்தியா வித்தியாசமாக சிந்திக்கிறது" என்று கூறினார்.


"செயற்கை நுண்ணறிவுக்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வையைப் பகிர்ந்து கொண்டார். அவர் இந்த பார்வையை ”MANAV” என்று அழைத்தார். இதன் பொருள் மனிதன் ஆகும்.


MANAV தொலைநோக்கு பார்வை பின்வருவனவற்றைக் குறிக்கிறது. அவை, 


M - தார்மீக மற்றும் நெறிமுறை அமைப்புகள் (Moral and ethical systems) : செயற்கை நுண்ணறிவு (AI) தெளிவான நெறிமுறை வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட வேண்டும்.


A - பொறுப்பான நிர்வாகம் (Accountable governance): செயற்கை நுண்ணறிவு (AI) வெளிப்படையான விதிகளைப் பின்பற்ற வேண்டும். இது வலுவான மேற்பார்வையையும் கொண்டிருக்க வேண்டும்.


N - தேசிய இறையாண்மை (National sovereignty): தரவு அதை உருவாக்கும் மக்களுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும்.


A – அணுகக்கூடியது மற்றும் உள்ளடக்கியவை (Accessible and inclusive): செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு சிலரால் கட்டுப்படுத்தப்படக்கூடாது. இது அனைவருக்கும் பயனளிக்க வேண்டும்.


V – செல்லுபடியாகும் மற்றும் சட்டபூர்வமானது (Valid and legitimate): செயற்கை நுண்ணறிவு (AI) சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். இது நம்பகமானதாகவும் சரிபார்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.


வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான மூத்த கொள்கை ஆலோசகர் ஸ்ரீராம் கிருஷ்ணன், இந்தியா உட்பட அதன் நட்பு நாடுகள் அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு (AI) நிலையின் மேல் தங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்று கூறிய ஒரு நாள் கழித்து அவரது கருத்துக்கள் வந்தன.


அதே வியாழக்கிழமை, முன்னணி சர்வதேச மற்றும் உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்கள் உச்சிமாநாட்டில் புது தில்லி எல்லைப்புற செயற்கை நுண்ணறிவு (AI) தாக்க உறுதிமொழிகளில் கையெழுத்திட்டன. இது ஒரு தன்னார்வ மற்றும் வழிகாட்டும் கட்டமைப்பாகும். இதன் கீழ் உலகளாவிய சூழல்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளை மதிப்பிடுவதில் பணியாற்ற அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். "செயற்கை நுண்ணறிவை (AI) ஜனநாயகப்படுத்துவதற்கு" மொழிகளுக்கு இடையேயான ஆதரவு உதவியாக இருக்கும் என்பதை அங்கீகரித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ஒரு சிலரால் மட்டுமே கட்டுப்படுத்தப்படுவதைத் தடுக்க இந்தியாவின் உந்துதலுடன் இந்த யோசனை பொருந்துகிறது.


தனது உரையில், உலகளாவிய தரநிலைகளுக்கான அவசரத் தேவையை எடுத்துரைத்த பிரதமர்,  deepfakes  மற்றும் போலி டிஜிட்டல் உள்ளடக்கம் திறந்த சமூகங்களை "நிலைத்தன்மையின்மைக்கு ஆளாக்குகின்றன" என்று சுட்டிக்காட்டினார். உணவில் ஊட்டச்சத்து அடையாளங்களுக்கு இணையாக, மின்னணு உள்ளடக்கமும் நம்பகத்தன்மை அடையாளங்களைக் கொண்டிருக்க வேண்டும். இதனால் மக்கள் உண்மையான மற்றும் AI-உருவாக்கப்பட்ட பொருட்களை வேறுபடுத்தி அறிய முடியும் என்றார். வாட்டர்மார்க்கிங் மற்றும் தெளிவான மூல தரநிலைகளுக்கான வளர்ந்து வரும் தேவையை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.


குழந்தை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மோடி, பள்ளி பாடத்திட்டங்கள் நிர்வகிக்கப்படுவது போலவே, செயற்கை நுண்ணறிவு (AI) இடமும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாகவும் குடும்பத்தால் வழிநடத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். இன்று இரண்டு வகையான மக்கள் இருப்பதாக அவர் கூறினார். ஒன்று செயற்கை நுண்ணறிவில் (AI) பயத்தைப் பார்ப்பவர்கள் மற்றும் மற்றொரு குழு செயற்கை நுண்ணறிவில் (AI) வாய்ப்பையும் நன்மைகளையும் பார்ப்பவர்கள் ஆவர். இந்தியா AI இல் வாய்ப்பையும் எதிர்காலத்தையும் காண்கிறது என்று அவர் மேலும் கூறினார். இந்த நம்பிக்கை இந்தியாவின் வலுவான திறமை, வளர்ந்து வரும் ஆற்றல் திறன் மற்றும் தெளிவான கொள்கைகளிலிருந்து வருகிறது.


பொருளாதார பயன்பாட்டிற்கான உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) தத்தெடுப்பின் பகுப்பாய்வை மேம்படுத்த பங்கேற்கும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படும். அடுத்த AI உச்சிமாநாட்டிற்குள், சர்வதேச முயற்சிகளுக்கு பங்களிப்புகள் மூலம் நேரடியாகவோ அல்லது (பொருத்தமான இடங்களில்) அநாமதேயப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் வகைபிரிக்கப்பட்ட பயன்பாட்டுத் தரவுகளிலிருந்து பெறப்பட்ட புள்ளிவிவர நுண்ணறிவுகளை வெளியிடுவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.


சி. ராஜா மோகன் குறிப்பிடுவதாவது, டெல்லியில் இந்த வார AI தாக்க உச்சி மாநாடு-2023 இல் பிளெட்ச்லி பூங்காவில் தொடங்கி சியோலில் (2024) மற்றும் பாரிஸில் (2025) தொடர்ந்த தொடரில் நான்காவது செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய உரையாடலில் ஒரு தீர்க்கமான மாற்றத்தைக் குறிக்கிறது.


பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து பிரிட்டனில் தொடங்கிய, தென் கொரியாவின் பாதுகாப்புத் தடுப்புகள் மீதான அக்கறையைக் கடந்து, பிரான்சில் உள்ளடக்கிய ஒரு சொல்லாட்சிக் குழுவைப் பெற்ற, இப்போது டெல்லியில் AI-ஐ விரைவாகவும், பரவலாகவும் ஏற்றுக்கொள்வதற்கான அழைப்பாக மாறியுள்ளது. இது குறிப்பாக வளரும் நாடுகளை இலக்காகக் கொண்டது. இந்த அணுகுமுறை கடுமையான பிணைப்பு விதிகளை அல்ல, தன்னார்வ பாதுகாப்புகளை நம்பியுள்ளது.


இது கடுமையான ஒப்பந்தம் போன்ற கடமைகளை விட "தன்னார்வ" உறுதிமொழிகளை இந்த உச்சிமாநாடு வலியுறுத்தியது. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா இடையே கடுமையான புவிசார் அரசியல் போட்டியின் மறைமுகமான ஒப்புதலாகும். இது உலகளாவிய விதி உருவாக்கத்தை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கியுள்ளது.


டொனால்ட் டிரம்பிற்கு, இலக்கு தெளிவாக உள்ளது. சீனாவிற்கு எதிராக அவர் முதன்மையாகக் காணும் ஒரு போட்டியில் AI, பிரபஞ்சத்தின் மீது அமெரிக்க ஆதிக்கத்தை அவர் விரும்புகிறார். மோடியைப் பொறுத்தவரை, இந்தியாவின் பொருளாதார மாற்றத்தை விரைவுபடுத்தவும், வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய தொழில்நுட்ப சக்தியின் படிநிலையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கான சரியான இடத்தைப் பெறவும் செயற்கை நுண்ணறிவைப்  பயன்படுத்துவதே அவர் விரும்புகிறார்.


பிப்ரவரி 2025-ல் பாரிஸ் AI உச்சி மாநாட்டில், துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் இந்த கொள்கைகளை உலகளவில் ஊக்குவித்தார். "பயம் சார்ந்த ஒழுங்குமுறையை நோக்கிய உயரடுக்கு ஐரோப்பிய சாய்வு" என்று அவர் அழைத்ததை அவர் நிராகரித்தார். உலகிற்கு AI குறைவாக அல்ல, அதிகமாகத் தேவை என்று அவர் வாதிட்டார்.


இது கடுமையான ஒழுங்குமுறைக்கான ஐரோப்பாவின் நீண்டகால விருப்பத்திற்கு முரணாக இருந்தது. டெல்லி உச்சிமாநாட்டில் மூத்த அமெரிக்க அரசியல் குழு இல்லாவிட்டாலும், மூத்த அதிகாரிகள், முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் செல்வாக்கு மிக்க கொள்கை குரல்களும் அங்கு இருந்தன. இது விவாதங்களை வடிவமைத்து இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமைப் பங்கை ஆதரித்தன.


பாரிஸ் வாஷிங்டனின் லட்சியத்தை அடையாளம் கண்டால், டெல்லி இந்தியாவின் கருத்தை வெளிப்படுத்தியது. AI இன் ஆரம்பகால மற்றும் உற்சாகமான விளம்பரதாரரான மோடி, தெளிவான இராஜதந்திர நோக்கத்துடன் 2026 கூட்டத்தை நடத்தும் உரிமைகளைப் பெற பாரிஸ் உச்சிமாநாட்டைப் பயன்படுத்தினார். உலகளாவிய AI விவாதத்தில் இந்தியாவை ஒரு முக்கிய நட்பு நாடாகச் சேர்ப்பது மற்றும் இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்ப வேகத்திற்கான சர்வதேச ஆதரவையும் சேகரிக்க அவர் விரும்பினார்.


மோடியின் செயற்கை நுண்ணறிவு (AI) இராஜதந்திரத்தை மூன்று ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கூறுகள் ஆதரிக்கின்றன. முதலாவது இந்தியாவின் வலுவான திறமைக் குழு. பல திறமையான மக்கள் வளரவும் புதுமைப்படுத்தவும் தயாராக உள்ளனர். இரண்டாவது, இந்திய நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்யும் திறன். இது உச்சிமாநாட்டில் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி மற்றும் டாடா குழுமத்தின் பெரிய AI உறுதிமொழிகள் மூலம் காட்டப்பட்டது. மூன்றாவது அமெரிக்கா மற்றும் அதன் தொழில்நுட்ப நிறுவனங்களுடனான இந்தியாவின் வளர்ந்து வரும் கூட்டாண்மை.


திறமை, மூலதனம் மற்றும் கூட்டாண்மை ஆகிய இந்த மூன்று பிரிவுகளும் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) லட்சியங்களின் அடித்தளமாக மாறியுள்ளன.


வெள்ளிக்கிழமை முறைப்படுத்தப்படவுள்ள அதன் Pax Silica முன்முயற்சியில் இந்தியாவை அழைக்கும் அமெரிக்காவின் முடிவு, சீனா தலைமையிலான குறைமின்கடத்தி விநியோகச் சங்கிலிகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) உலகின் புவிசார் அரசியல் கட்டமைப்பை வடிவமைப்பதில் இந்தியாவின் பங்கை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


செயற்கை நுண்ணறிவு (AI) மீதான இந்தியாவின் கவனம் வரலாற்றிலிருந்து ஒரு முக்கியமான பாடத்தையும் பிரதிபலிக்கிறது. பெரிய தொழில்நுட்ப புரட்சிகளில் பின்னர் சேரும் நாடுகள் தைரியமாக செயல்பட்டால் வெற்றிபெற முடியும். ஜப்பானும் தென் கொரியாவும் மின்னணுவியலில் அவ்வாறு செய்தன. சீனா உற்பத்தியில் இதைச் செய்தது. இந்தியாவே தகவல் தொழில்நுடபச் சேவைகளில் முன்னதாகவே இதைச் செய்தது.


செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் அமெரிக்க தலைமையிலான முயற்சியில் சேர இந்தியா அழைக்கப்படும் என்று அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் அறிவித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்தியாவும் அமெரிக்காவும் வெள்ளிக்கிழமை Pax Silica பிரகடனத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளது.


அமெரிக்க வெளியுறவுத்துறையின் கூற்றுப்படி, பாக்ஸ் சிலிக்கா, முக்கிய தொழில்நுட்பங்கள் பாதுகாப்பானவை, நம்பகமானவை மற்றும் விரோதப் போக்கால் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக “நட்பு மற்றும் நம்பகமான” நாடுகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


உலகளாவிய உற்பத்தி விநியோகச் சங்கிலியின் மீதான சீனாவின் வலுவான கட்டுப்பாட்டை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகக் கருதப்படும் இந்த இராஜதந்திர முயற்சி, டிசம்பர் 12, 2025 அன்று “கட்டாய சார்புகளைக் குறைப்பதற்கும்” “பாதுகாப்பான, வளமான மற்றும் புதுமை சார்ந்த சிலிக்கான் விநியோகச் சங்கிலியை” உருவாக்குவதற்கும் தொடங்கப்பட்டது. முக்கியமான கனிமங்கள் மற்றும் எரிசக்தி உள்ளீடுகளிலிருந்து மேம்பட்ட உற்பத்தி, குறைமின்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் வரை ஆகியவை அடங்கும்.


அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், அமெரிக்கா, இங்குள்ள பலரை ஆச்சரியப்படுத்தும் விதமாக, ஜப்பான், கொரியா குடியரசு, சிங்கப்பூர், நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம், இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற “கூட்டணி அமைப்புகளை” குறிப்பிட்டு, இந்த முயற்சியில் இருந்து இந்தியாவை விலக்கியது. இது வர்த்தக ஒப்பந்தத்தைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை இரு நாடுகளுக்கும் இடையே பரந்த வேறுபாடுகளை உருவாக்குகிறது என்ற கவலைகளுக்கு வழிவகுத்தது.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் கூற்றுப்படி, இந்த முயற்சி, கவலைக்குரிய நாடுகளின் தேவையற்ற அணுகல் அல்லது கட்டுப்பாட்டிலிருந்து உணர்திறன் வாய்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதையும், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) அமைப்புகள், ஃபைபர்-ஆப்டிக் கேபிள்கள் (fibre-optic cables), தரவு மையங்கள், அடிப்படை மாதிரிகள் மற்றும் பயன்பாடுகள் உள்ளிட்ட நம்பகமான தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதையும் உள்ளடக்கும். தொலைத்தொடர்பு போன்ற அதன் முக்கியமான உள்கட்டமைப்பில் சீனாவின் ஈடுபாடு குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது.


Original article : What is MANAV vision? -Khushboo Kumari

Share:

தமிழ் தத்துவஞானி திருவள்ளுவரின் திருக்குறள் இன்றும் ஏன் பொருத்தமானதாக உள்ளது?. -டி.கே. ஜாபிர்

 தமிழர்களால் பண்டைய துறவி, கவிஞர் மற்றும் தத்துவஞானி என போற்றப்படும் திருவள்ளுவரை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற தலைவர்கள் அடிக்கடி குறிப்பிட்டுள்ளனர். ஆனால், திருவள்ளுவர் யார்?, திருக்குறளில் அவர் விவாதித்த முக்கிய கருப்பொருள்கள் என்ன?


தமிழர்களால் பண்டைய துறவி, கவிஞர் மற்றும் தத்துவஞானி என போற்றப்படும் திருவள்ளுவரை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற தலைவர்கள் அடிக்கடி குறிப்பிட்டுள்ளனர். கடந்த மாதம் (ஜனவரி 16) திருவள்ளுவர் தினத்தன்று, பிரதமர் தனது " திருவள்ளுவரின் படைப்புகள் மற்றும் இலட்சியங்கள் எண்ணற்ற மக்களை ஊக்குவிக்கின்றன. மேலும், திருவள்ளுவர் தமிழ் கலாச்சாரத்தின் சிறந்த மதிப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்" என்றும் கூறினார்.


இருப்பினும், அவர் வாழ்ந்த காலம் குறித்து சில கேள்விகள் எழுந்துள்ளதால், அவரது வாழ்க்கையை மர்மம் சூழ்ந்துள்ளது. தமிழ் இலக்கிய அறிஞர்கள் அவரது பெயர், வாழ்க்கை மற்றும் அவரது தலைசிறந்த படைப்பான திருக்குறளின் தலைப்பு பற்றிய தகவல்களை வழங்கியுள்ளனர். பிரதமர் மோடி மக்களை "மாபெரும் திருவள்ளுவரின் சிறந்த அறிவாற்றலைப் பற்றிய ஒரு பார்வையைத் தரும் திருக்குறளைப் படிக்க" வலியுறுத்தியுள்ளார்.


திருவள்ளுவர் யார்?


தமிழ்நாட்டில் வள்ளுவர் என்று பிரபலமாக அறியப்படும் திருவள்ளுவர், மத மற்றும் கலாச்சார எல்லைகளைத் தாண்டிய நெறிமுறை பார்வை கொண்ட ஒரு ஒப்பற்ற தத்துவஞானியாகக் கருதப்படுகிறார். தமிழில் 'திரு' என்றால் துறவி என்று பொருள். மேலும், 'வள்ளுவர்' என்பது ஜோதிடர்கள் அல்லது பாதிரியார்களின் சமூகத்துடன் தொடர்புடைய ஒரு பட்டமாகும். திருவள்ளுவர் முதர்பாவலர், தெய்வப்புலவர், ஞானவெட்டியன், மாதான்பங்கி, நான்முகனார் மற்றும் நாயனார் போன்ற பல்வேறு பெயர்களிலும் அறியப்படுகிறார்.


அவரது வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டாலும், அவரது பிறந்த இடம் சென்னைக்கு அருகிலுள்ள மயிலாப்பூர் என்றும், அங்கு அவரது நினைவாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் அவருடன் தொடர்புடைய ஒரே நினைவுச்சின்னமாக உள்ளது என்றும் நம்பப்படுகிறது. அவர் வாசுகி என்ற பெண்ணை மணந்ததாகவும் நம்பப்படுகிறது. திருவள்ளுவர் பற்றிய புராணக்கதைகள் மற்றும் அவரது படைப்பான திருக்குறளிலிருந்து சில உள் சான்றுகள் அவரது வாழ்க்கையைப் பற்றிய சில குறிப்புகளைத் தருகின்றன.


திருக்குறள் வள்ளுவரின் அறியப்பட்ட ஒரே படைப்பாகும். ஆனால், உரையில் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை. திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது நெறிமுறைகள், அரசியல், பொருளாதாரம் மற்றும் காதல் பற்றிய 1,330 குறள்களைக் கொண்ட இரண்டு அடி ஜோடிகளின் (தமிழில் 'குறள்கள்') தொகுப்பாகும்.


திருக்குறள் வலியுறுத்துவது


திருக்குறளைக் குறிப்பிடாமல், வள்ளுவரின் எந்த விளக்கமும் முழுமையடையாமல் உள்ளது. திருக்குறள் 133 அத்தியாயங்களாக அமைக்கப்பட்ட 1,330 குறட்பாட்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் 10 குறள்களைக் கொண்டுள்ளது. இந்த உரை மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று ஒழுக்கம் (அறம்), இரண்டு பொருள் வாழ்க்கை (பொருள்), மற்றும் மூன்று காதல் (இன்பம்) ஆகும். இந்தப் பிரிவுகளில் அறநெறி பற்றிய 38 அத்தியாயங்களும், பொருள் பற்றிய 70 அத்தியாயங்களும், காதல் பற்றிய 25 அத்தியாயங்களும் உள்ளன.


திருக்குறள் ஒழுக்க நடத்தையை வலியுறுத்துகிறது மற்றும் மனித வாழ்க்கையின் யதார்த்தங்களைப் பற்றிப் பேசுகிறது. வள்ளுவர் சாதி, மதம் மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையிலான பிரிவுகளை நிராகரித்தார். அதற்கு பதிலாக ஒழுக்கமும் கருணையும் அர்த்தமுள்ள மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்று வலியுறுத்தினார்.


கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட திருக்குறள், இருபத்தியோராம் நூற்றாண்டில் மிகவும் பொருத்தமான நிதர்சனத்தைக் கொண்டுள்ளது. ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை துன்பத்திற்கு வழிவகுக்கும் என்றும், தனிநபர்கள் பொறாமை, பேராசை, கோபம் மற்றும் கடுமையால் ஆதிக்கம் செலுத்தப்படுவார்கள் என்றும் வள்ளுவர் எச்சரித்தார். மனித வாழ்க்கையையும் சமூகத்தையும் மேம்படுத்த, அவர் ஆன்மீகம், தொண்டு மற்றும் அன்பு போன்ற நற்பண்புகளை பரிந்துரைத்தார்.


19-ம் நூற்றாண்டின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரான இ.எஸ். ஏரியல், திருக்குறளை மொழிபெயர்த்தார். "அவர் அதை "பெயர் இல்லாத ஒரு ஆசிரியரின் புத்தகம்" என்று பிரபலமாக விவரித்தார். திருவள்ளுவரைப் பற்றிய ஒரு முக்கியமான ஆதாரம் "திருவள்ளுவ மாலை" ஆகும். இது 55 தமிழ் வசனங்களின் தொகுப்பாகும். ஒவ்வொரு வசனமும் வெவ்வேறு கவிஞரால் எழுதப்பட்டது. அனைத்து கவிஞர்களும் குறள் என்றும் அழைக்கப்படும் திருக்குறளையும் அதன் ஆசிரியரையும் புகழ்கிறார்கள். இந்தக் கவிஞர்கள் 1-ம் நூற்றாண்டில் தொடங்கி வெவ்வேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அதேநேரத்தில், இந்தத் தொகுப்பு 10-ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது.


வள்ளுவரை முறையாகப் படித்த முதல் அறிஞர்களில் ஒருவர் ஆங்கிலிகன் கிறிஸ்தவ மிஷனரி மற்றும் தமிழ் அறிஞர் ஜார்ஜ் உக்லோ போப் (1820-1908), அவருக்கு "உலகளாவிய மனிதனின் பார்ட்" (The Bard of Universal Man) என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார். பல நூற்றாண்டுகளாக, திருக்குறள் சாதி மற்றும் மதப் பிரிவுகளுக்கு அப்பாற்பட்டு, நீடித்த நெறிமுறை, சமூக மற்றும் அரசியல் ஞானத்தை மனிதகுலத்துடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் ஒரு தலைசிறந்த படைப்பாக இருந்தது.


கடவுள், அன்பு, கல்வி பற்றிய கருத்துக்கள்


தமிழ் மரபில், திருவள்ளுவர் தெய்வீக நுண்ணறிவு மற்றும் தீர்க்கதரிசன பார்வை கொண்ட ஒரு அறிஞராக பரவலாகக் கருதப்படுகிறார். வாழ்க்கையின் நித்திய உண்மைகளையும், வாழும் கலையின் நுணுக்கங்களையும் பிரதிபலிக்கும் அவரது எழுத்துக்களின் அடிப்படையில், சில அறிஞர்கள் திருவள்ளுவரின் சிந்தனை கிரேக்க, ரோமானிய, பௌத்த, சமண, வேத, வைணவ மற்றும் சைவ தத்துவஞானிகளுடன் எதிரொலிக்கிறது என்று கூறுகின்றனர்.


திருவள்ளுவரின் கடவுள் பற்றிய கருத்து தனித்துவமானது. அவரைப் பொறுத்தவரை, கடவுள் தெய்வீக நுண்ணறிவு மற்றும் எல்லாம் அறிந்தவர். மேலும் ஞானம், இரக்கம், ஒழுக்கம் மற்றும் அன்பை உள்ளடக்கியுள்ளார். **இன்பம்** என்ற பிரிவின் கீழ் அவர் காதலை விளக்குகிறார். அவர் காதலை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்: ”களவியல்” மற்றும் ”கற்பியல்” ஆகும். களவியல் என்பது திருமணத்திற்கு முந்தைய காதலைக் குறிக்கிறது. இது பின்னர் முறையான சடங்குகள் இல்லாவிட்டாலும் திருமணத்திற்கு வழிவகுக்கும். கற்பியல் பாரம்பரிய திருமண வாழ்க்கையில் உள்ள காதலைக் குறிக்கிறது. வளமான கவிதை படங்கள் மற்றும் பல்வேறு நாடக மற்றும் பாடல் சூழ்நிலைகள் மூலம், வள்ளுவர் அன்பின் எண்ணற்ற பண்புகளை ஆராய்கிறார். அவரது வசனங்கள் காதலை வெறும் உணர்ச்சியாக மட்டுமல்லாமல், அமைதியான மகிழ்ச்சியின் மூலமாகவும் சித்தரிக்கின்றன.


கல்வியின் முக்கியத்துவம் குறித்த திருவள்ளுவரின் பிரதிபலிப்புகள் சிறந்த கிரேக்க தத்துவஞானி பிளேட்டோவின் பிரதிபலிப்புகளுடன் ஒத்திருக்கின்றன. திருவள்ளுவர் பாரம்பரிய கிரேக்க காலத்திற்குப் பிறகு வாழ்ந்தாலும், சில அறிஞர்கள் அவர் பண்டைய கடல்சார் வர்த்தக வழிகளால் எளிதாக்கப்பட்ட கிரேக்கத்திலிருந்து அறிவைப் பெற்றிருக்கலாம் என்று ஊகிக்கின்றனர். திருவள்ளுவருக்கு, நல்லொழுக்கம், ஞானம் மற்றும் கல்வி ஆகியவை பிரிக்க முடியாதவை. ஒசரியான கல்வியைப் பெற்றவரே உண்மையான நல்லொழுக்கமுள்ளவர் என்று அவர் நம்பினார்.


திருவள்ளுவர் ஒரு இருத்தலியல்வாதியா (existentialist)?


பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில், மனித அனுபவத்தை அறிவின் அடித்தளமாக திருவள்ளுவர் வலியுறுத்துவது கார்ல் மார்க்ஸ், பிரீட்ரிக் நீட்சே மற்றும் ஜீன் பால் சார்த்தர் போன்ற சிந்தனையாளர்களின் கருத்துக்களுக்கு ஒத்ததாகும். அவர்களைப் போலவே, உண்மையான அறிவு உண்மையான மனித வாழ்க்கையிலிருந்தும் புறநிலை புரிதலிலிருந்தும் வருகிறது என்று அவர் நம்பினார். இந்த ஒற்றுமை காரணமாக, சிலர் அவரது கருத்துக்களை இருத்தலியல்வாதத்துடன் ஒப்பிடுகிறார்கள். அறிவு மற்றும் கல்வியின் இறுதி இலக்கு மனித வாழ்க்கையை மேம்படுத்துவதாகவும் திருவள்ளுவர் நம்பினார்.


பண்டைய தமிழ் இலக்கியப் படைப்புகளில், அறிவு பனை ஓலைகளில் பாதுகாக்கப்பட்டது. இருப்பினும், கற்றல் என்பது எழுத்தறிவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஏனெனில், படிக்க முடியாதவர்கள் புரிதலும் அனுபவமும் கொண்ட மனிதர்களைக் கவனமாகக் கேட்பதன் மூலம் அறிவைப் பெற முடியும். இந்த வாய்வழி மரபை பிரதிபலிக்கும் வகையில், வள்ளுவர் திருக்குறளில் கூறுகிறார். "செல்வத்தின் செல்வம் என்பது காது மூலம் பெறப்பட்ட செல்வம்; அது அனைத்து செல்வங்களிலும் உன்னதமானது." ஒரு கற்றறிந்த மனிதன் உண்மையை விளக்குவதைக் கேட்பது, அவருக்கு, அறிவுபூர்வமாக அறியாமல் இருப்பதை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


வள்ளுவர் தனது வாழ்நாளில், அன்பு, கருணை மற்றும் நெறிமுறைச் செயல் மூலம் மனித விடுதலையில் அக்கறை கொண்டிருந்தார். கர்மா பற்றிய அவரது சிந்தனை செயலற்ற தன்மையை விட செயல்பாட்டை வலியுறுத்தியது. செயலின் மூலம், மக்கள் எது சரி, எது தவறு என்பதைப் புரிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் கூறினார். இறுதியில், அவரது எண்ணங்களை உண்மையிலேயே புரிந்து கொள்ள, ஒருவர் திருக்குறளில் நெருக்கமாக ஈடுபட வேண்டும்.


Original article : Why Thirukkural by Tamil philosopher Thiruvalluvar remains relevant today?. -TK Jabir

Share:

மாநிலங்களவைத் தேர்தல்கள் ஏன் முக்கியமானது? -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி?


இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை, 37 மாநிலங்களவை இடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. மார்ச் 16-ஆம் தேதி வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது.


பதவிக்காலம் முடிவடையும் நாடாளுமன்ற உறுப்பினர்களில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஏழு பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு பேர், மேற்கு வங்கம் மற்றும் பீகாரைச் சேர்ந்த தலா ஐந்து பேர், ஒடிசாவைச் சேர்ந்த நான்கு பேர், அசாமில் இருந்து மூன்று பேர், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த தலா இரண்டு பேர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர்.


முக்கிய அம்சங்கள்:


1. மாநிலங்களவையில் 245 இடங்கள் உள்ளன. இது ஒரு நிரந்தர ஆகும். இந்த அவையை கலைக்க முடியாது. அவை நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக, உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பிறகு, அரசியலமைப்பின் பிரிவு 83(1)-ன் கீழ் ஓய்வு பெறுகிறார்கள். மேலும், இந்த காலியிடங்களை நிரப்ப "இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள்" (biennial elections) நடத்தப்படுகின்றன. ஒரு உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.


2. 245 உறுப்பினர்களில், 12 உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரால் பரிந்துரைக்கப்படுகிறார்கள். மீதமுள்ள, 233 உறுப்பினர்கள் டெல்லி மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் ஆவார். ராஜினாமா, மரணம் அல்லது தகுதியிழப்பு காரணமாக ஏற்படும் காலியிடங்கள் இடைத்தேர்தல்கள் மூலம் நிரப்பப்படுகின்றன. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தங்களுக்கு முன்பு அந்தப் பதவியில் இருந்த உறுப்பினரின் மீதமுள்ள பதவிக் காலத்தை நிறைவு செய்வார்கள்.


3. பிரிவு 80(3)-ன் கீழ், பரிந்துரைக்கப்பட்ட 12 உறுப்பினர்கள் இலக்கியம், அறிவியல், கலை போன்ற விவகாரங்களில் நிபுணத்துவம் அல்லது நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் ஒரு கட்சியில் சேரலாம்.


4. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு நபரும் இந்திய குடிமகனாகவும் 30 வயதுக்குக் குறையாதவராகவும் இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தால் பரிந்துரைக்கப்படும் பிற தகுதிகளைக் அந்த நபர் பெற்றிருக்க வேண்டும்.


5. இந்தியாவில் எந்த  ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் தேர்தலில் போட்டியிடலாம். முன்னதாக, ஒரு மாநிலத்தைச் சேர்ந்த பூர்வீகக் குடிமக்கள் மட்டுமே மாநிலங்களவைத் தேர்தல்களில் போட்டியிட முடியும். குல்தீப் நாயர் vs இந்திய ஒன்றிய (Kuldip Nayar v. Union of India case) வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் 2003-ஆம் ஆண்டு திருத்தம் இந்தக் கட்டுப்பாட்டை நீக்கியது.


6. மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்  மறைமுகத் தேர்தல் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பிரிவு 80(4)-ன்படி, மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் விகிதாசார பிரதிநிதித்துவத்தைப் (proportional representation) பயன்படுத்தி ஒற்றை மாற்றத்தக்க வாக்கு (single transferable vote) மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


7. அரசியலமைப்பின் 4-வது அட்டவணை, ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகையின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மாநிலங்களவை இடங்களை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கிறது. உதாரணமாக, உத்தரபிரதேசத்தில் 31 மாநிலங்களவை இடங்களும், கோவாவில் 1 இடமும் உள்ளன. காலியிடங்களை விட அதிகமான வேட்பாளர்கள் இருக்கும் இடங்களில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இல்லையெனில், வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


8. ஒரு வேட்பாளருக்குத் தேவையான வாக்குகளின் எண்ணிக்கை காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் அவையின் பலத்தைப் பொறுத்து இருக்கும். ஒரே ஒரு காலியிடம் இருந்தால், தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிகள், 1961-ன் கீழ் தேவையான ஒதுக்கீடு, பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை எடுத்து, அதை 2-ஆல் வகுத்து, 1-ஐக் கூட்டுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, ஒரு சட்டமன்றத்தில் 100 வாக்குகள் பதிவானால், மாநிலங்களவை வேட்பாளருக்குத் 

100/2 + 1 = 51 வாக்குகள் தேவைப்படும்.


9. ஒன்றுக்கு மேற்பட்ட காலியிடங்கள் இருந்தால், ஒவ்வொரு முதல் விருப்ப வாக்குக்கும் 100 மதிப்பு வழங்கப்படும். அனைத்து வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளின் மொத்த மதிப்பு ஒன்றாகக் கூட்டப்பட்டு, பின்னர் காலியிடங்களின் எண்ணிக்கையை விட ஒன்றால் வகுக்கப்பட்டு, இறுதியாக 1 முடிவோடு சேர்க்கப்படும்.


உதாரணமாக, ஒரு சட்டமன்ற உறுப்பினர் 100 பேர் 3 மாநிலங்களவை காலியிடங்களுக்கு வாக்களித்தால், எந்தவொரு வேட்பாளருக்கும் தேவைப்படும் ஒதுக்கீடு (100 × 100)/(3 + 1) + 1 = 2501 ஆகும்.


எந்தவொரு இடத்திற்கும், வேட்பாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையைப் பெறத் தவறினால், இரண்டாம் முன்னுரிமை வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், அவை குறைந்த மதிப்புடன் இருக்கும். 


10. குறிப்பாக, மக்களவை உறுப்பினராக இருக்கும் ஒரு அமைச்சருக்கு மாநிலங்களவையில் பேசவும் பங்கேற்கவும் உரிமை உண்டு. ஆனால், மாநிலங்களவையில் வாக்களிக்கும் உரிமை இல்லை.


மாநிலங்களவையின் வரலாறு


1. மாநிலங்களவை என்றும் அழைக்கப்படும் 'மாநிலங்களின் அவை' (Council of States), பெயரை முதன்முறையாக ஆகஸ்ட் 23, 1954 அன்று பெற்றது. மாநிலங்களின் அவையின் உருவாக்கம் 1918-ஆம் ஆண்டின் மாண்டேக்-செல்ம்ஸ்ஃபோர்டு அறிக்கையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


2. இந்திய அரசு சட்டம், 1919, அப்போதைய சட்டமன்றத்தின் 2-வது சபையாக 'மாநிலங்களின் அவை' ஒன்றை உருவாக்குவதற்கு வழிவகுத்தது. இது உண்மையில் 1921-ல் நடைமுறைக்கு வந்தது.


3. சுதந்திர இந்தியாவில் 2-வது சபையின் பயன்பாடு குறித்து அரசியலமைப்பு சபையில் விரிவான விவாதத்திற்குப் பிறகு, இந்தியா இரண்டு சபைகளைக் கொண்ட சட்டமன்றத்தைக் கொண்டிருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.


4. அரசியலமைப்பு சபை விவாதத்தின் போது, அரசியலமைப்பு குழுவின் அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போது,


இந்த இரண்டாவது சபை இருப்பதன் மூலம் நாம் உண்மையில் பெறுவது, வேகமாகக் கொண்டு வரப்படக்கூடிய நடவடிக்கைகளை தாமதப்படுத்த ஒரு கருவியாகவும், தீவிர அரசியலில் ஈடுபடாத ஆனால் விவாதத்தில் கலந்து கொள்ள தயாராக இருக்கக்கூடிய அனுபவசாலியான நபர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இதுவே இந்த சபையின் ஒரே நோக்கம் என ஸ்ரீ கோபாலசாமி அய்யங்கார் குறிப்பிட்டார்:


5. 1951-ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மக்களவைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களவைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையும் உருவாக்கபட்டது. தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தல்களை மார்ச் 1952-ல் நடத்தியது. மேலும், மாநிலங்களவை ஏப்ரல் 3, 1952-ல் அமைக்கப்பட்டது. முதல் முறையாக மாநிலங்களவை 1952 மே 13 அன்று கூடியது.


6. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையின் முதல் தலைவராக இருந்தார். 1952 முதல் 1957 வரை மற்றும் 1957 முதல் 1962 வரை இரண்டு முறை எதிர்ப்பு இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் துணைத் தலைவர் ஸ்ரீ எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் ஆவார். இவரும் 1962 வரை பணியாற்றினார்.


மாநிலங்களவையின் அதிகாரம்


1. நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அதிகாரத்தைப் பொறுத்தவரை, மாநிலங்களவை மக்களவைக்கு சமமான அதிகாரத்தைக் கொண்டுள்ளது. ஒரு அரசியலமைப்பு திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் அறிமுகப்படுத்தலாம். மேலும், ஒவ்வொரு அவையும் அதை நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு திருத்த மசோதாவில் ஏற்படும் தடைகளைத் நீக்க இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடத்தப்படுவதில்லை.


2. மாநிலங்களவை சில சிறப்பு அதிகாரங்களைப் பெற்றுள்ளது. மாநிலப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு விவகாரத்தில் நாடாளுமன்றம் ஒரு சட்டம் இயற்றுவது "தேசிய நலனுக்காக முக்கியமானது அல்லது பொருத்தமானது" என்று கூறி, குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி வாக்களித்தால், அந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற அதிகாரம் பெறுகிறது. அத்தகைய தீர்மானம் அதிகபட்சமாக ஒரு வருடம் வரை அமலில் இருக்கும். ஆனால், இதே போன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் இந்தக் காலத்தை ஒரு வருடம் நீட்டிக்க முடியும்.


3. ஒன்றிய அரசு மற்றும் மாநிலங்களுக்கு பொதுவான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அகில இந்திய சேவைகளை உருவாக்க பரிந்துரைக்க இதேபோன்ற வழியை ஏற்றுக்கொள்ளலாம். அத்தகைய சேவைகளை உருவாக்க நாடாளுமன்றம் அதிகாரம் பெறுகிறது.


4. தேசிய அவசரநிலை, மாநில அரசியலமைப்பு தோல்வி அல்லது நிதி அவசரநிலை ஆகியவற்றிற்கான பிரகடனங்களை குடியரசுத்தலைவர் வெளியிடும்போது மாநிலங்களவை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு பிரகடனத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்.


5. இருப்பினும், சில சூழ்நிலைகளில், மாநிலங்களவை சிறப்பு அதிகாரங்களைப் (special powers) பெறுகிறது. மக்களவை கலைக்கப்பட்ட நேரத்தில் அல்லது மக்களவை கலைக்கப்பட்ட நேரத்தில் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டால், அதை அங்கீகரிக்கும் தீர்மானம் அரசியலமைப்பின் பிரிவுகள் 352, 356 மற்றும் 360-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டால், அந்த பிரகடனம் (proclamation) அமலில் இருக்கும்.


Original article :Why Rajya Sabha elections matter. -Khushboo Kumari

Share: