முக்கிய தாதுக்களை இந்தியாவின் இராஜதந்திர மையமாக மாற்றுதல் -ரிஷப் ஜெயின்

 மத்திய நிதிநிலை அறிக்கையானது, கனிம வளங்கள் விஷயத்தில் இந்தியாவின் புதிய 'உறுதியான முடிவை' வெளிப்படுத்தியுள்ளது.


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா G20 தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, கொள்கைரீதியான விவாதங்களில் முக்கியத் தாதுக்கள்(Critical Minerals) ராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகப் பார்க்கப்படவில்லை. ஆகஸ்ட் மாதம் 2023-ஆம் ஆண்டில்கூட, லித்தியம் உள்ளிட்ட பல முக்கியத் தாதுக்கள் 'அணுத் தாதுக்கள்' (Atomic Minerals) என்றே வகைப்படுத்தப்பட்டிருந்தன. இதனால் தனியார் நிறுவனங்கள் அவற்றை ஆய்வு செய்யவோ அல்லது சுரங்கம் அமைக்கவோ அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், சமீபத்திய மத்திய நிதிநிலை அறிக்கையானது, இந்தியாவின் இந்த அணுகுமுறையில் தெளிவான மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.


ஒன்றிய அரசு தற்போது 'முக்கியமான கனிமங்களை' (critical minerals) நாட்டின் முக்கிய திட்டப்பணிகளின் ஒரு அங்கமாக மாற்றியுள்ளது. இவை இந்தியாவின் தொழில் துறை, எரிசக்தி மற்றும் புவிசார் அரசியல் உத்திகளில் ஒரு முக்கிய அங்கமாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நிதிநிலை அறிக்கை உரையில் "முக்கியமான தாதுக்கள்" என்ற சொல் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டது இந்த மாற்றத்தையே உணர்த்துகிறது. இந்தியாவிற்கு இத்தகைய தாதுக்கள் தொடர்பான கொள்கை தேவையா என்பது குறித்த விவாதங்கள் இப்போது முடிந்துவிட்டன. மாறாக, தேவையான நிபுணத்துவத்தை சரியான வேகம், ஆழம் மற்றும் அளவோடு வளர்த்துக்கொண்டு, இக்கொள்கையை இந்தியாவால் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என்பதே தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது. 


தெளிவான கொள்கை முன்னெடுப்பு

இந்தக் கொள்கையில் ஒரு வலுவான வேகம் காணப்படுகிறது. இந்தியா 30 முக்கியமான தாதுக்களை அடையாளம் கண்டுள்ளதுடன், சிறிய அளவிலான சுரங்க நிறுவனங்கள் ஆய்வுப் பணிகளை எளிதாக மேற்கொள்ள வழிவகை செய்துள்ளது மற்றும் உரிமத் தொகை விகிதங்களையும் முறைப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஜனவரி மாதம் 2025-ஆம் ஆண்டில் இந்திய அரசு ₹16,300 கோடி மதிப்பிலான ‘தேசிய முக்கியமான தாதுக்கள் திட்டத்தை’ (National Critical Mineral Mission (NCMM) அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், முக்கியமான தாதுக்களுக்கான விரிவான மற்றும் லட்சியமான கொள்கைக் கட்டமைப்பைக் கொண்டுள்ள ஒரு சில நாடுகளில் ஒன்றாக இந்தியா இப்போது உருவெடுத்துள்ளது.


இருந்தபோதிலும், வெறும் லட்சியம் மட்டுமே தாது வளப் பாதுகாப்பை உறுதி செய்துவிட முடியாது என்றும் அதைத் திறம்படச் செயல்படுத்துவதே மிக முக்கியமானது என்றும் கூறுகின்றனர். தாதுக்களைக் கண்டறிந்து சுரங்கப்பணிகளைத் தொடங்குவதற்குப் பல ஆண்டுகள்கூட ஆகலாம் என்கின்றனர். அதுமட்டுமின்றி, அவற்றை வெட்டியெடுப்பது மட்டுமே இங்குள்ள ஒரே சிக்கல் அல்ல என்றும் உலகின் பல முக்கியமான கனிமங்களைச் சுத்திகரிக்கும் (processing) திறனில் 90% வரை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைப்பின் (Council on Energy, Environment and Water (CEEW)) ஆய்வுப்படி, இந்தியா ஏற்கனவே சில கனிமங்களை மிக உயர்ந்த தரத்திற்குச் சுத்திகரிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


உதாரணமாக, இந்தியத் தொழிற்சாலைகள் தாமிரம், கிராஃபைட், அரிய மண் ஆக்சைடுகள் (rare earth oxides), தகரம் மற்றும் டைட்டானியம் போன்றவற்றை 99.9 சதவீதத்துக்கும் அதிகமான தூய்மையுடன் உற்பத்தி செய்கின்றன. இருப்பினும், இந்த உற்பத்தி பெரும்பாலும் வழக்கமான தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே உள்ளது. சுத்தமான எரிசக்தித் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இந்தியாவிற்கு மேம்பட்ட தொழில்நுட்பம், ஆழ்ந்த சுத்திகரிப்பு முறைகள் மற்றும் கூடுதல் உற்பத்தித் திறன் தேவைப்படுகிறது. தாதுக்களை அதிகத் தூய்மையுடனும், பெரிய அளவிலும் பதப்படுத்துவதற்கு ரசாயனம், மருந்துப் பொருட்கள் மற்றும் ஜவுளி போன்ற துறைகளில் உள்ள நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.




முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பகுதிகள்


இந்தச் சூழலில், 2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை திட்டமிடல் நிலையிலிருந்துச் செயல்பாட்டு நிலைக்கு மாறுகிறது; இந்த முன்னேற்றத்தைத் தக்கவைக்க இந்தியா மூன்று முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்த வேண்டும். முதலாவதாக, பதப்படுத்தப்பட்ட தாதுக்களுக்கான வலுவான தேவையை உருவாக்க வேண்டும். முக்கியமான தாதுக்களைப் பதப்படுத்தப் பயன்படும் மூலதனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை இந்த நிதிநிலை அறிக்கையானது நீக்கியுள்ளது, இது புதிய சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களின் அதிகப்படியான மூலதனச் செலவுகளைச் சமாளிக்கவும் உதவுகிறது. இருப்பினும், முதலீட்டாளர்களின் முக்கிய சிக்கலாக இருப்பது செலவு மட்டுமல்ல, உள்நாட்டில் இதற்கான தேவை உறுதியாக இருக்குமா என்ற அச்சமே ஆகும். மின்கலன்கள், சூரிய சக்தி தகடுகள், காற்றாலைகள் மற்றும் மின்சார வாகனங்கள் உற்பத்தியை அரசு ஆதரித்தாலும், இந்தத் துறைகளைத் தாதுப் பதப்படுத்துதல் துறையுடன் இணைப்பதில் ஏற்படும் தாமதம் ஒரு நிச்சயமற்ற நிலையை உருவாக்குகிறது. எனவே, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது, சுரங்கம் மற்றும் தாதுப் பதப்படுத்துதல் வரையிலான முழு சங்கிலியையும் வலுப்படுத்தும் என்கின்றனர். ஏனெனில், ஒரு பொருளுக்கான தேவையை உருவாக்குவதே மிகச்சிறந்த தொழில்முறை கொள்கையாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.


இரண்டாவதாக, கனிம ஆய்வில் செயற்கை நுண்ணறிவிற்கு (AI-first) முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். தேசிய முக்கியமான தாதுக்கள் இயக்கம் (National Critical Minerals Mission - NCMM), 2031-ஆம் நிதி ஆண்டிற்குள் 1,200 ஆய்வுத் திட்டங்களை முடிக்க இலக்கு வைத்துள்ளது. ஒன்பது முக்கியமான கனிமங்களின் ஆய்வுச் செலவுகளுக்கு வரி விலக்கு அளிப்பதன் மூலம் இத்திட்டங்களின் சாத்தியக்கூறுகளை மத்திய நிதிநிலைத் திட்டம் (Budget) மேம்படுத்துகிறது. குறிப்பாக பெரிலியம், டான்டலம், லித்தியம் மற்றும் நையோபியம் ஆகிய நான்கு தாதுக்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கரு தாதுக்கள் பட்டியலில் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய தாதுக்களுக்கான ஆய்வில் உள்ள அபாயங்களைக் குறைக்க இந்தியா மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு இயக்கம் (India AI Mission), தேசிய புவிசார் கொள்கை மற்றும் 'மிஷன் அன்வேஷன்' (Mission Anveshan) [Anveshan என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு அகழ்வாராய்ச்சி / முற்றாய்வு என்று பொருள்] ஆகியவற்றோடு இணைந்த ஒரு செயற்கை நுண்ணறிவிற்கு (AI-first) முன்னுரிமை அளிக்கும் உத்தி இதற்கு அவசியமாகும். தற்போது மிஷன் அன்வேஷன் ஹைட்ரோகார்பன் கண்டுபிடிப்பிற்காக நில அதிர்வு சார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்துகிறது. இதேபோன்ற கருவிகளை தேசிய புவி அறிவியல் தரவு களஞ்சியத்திற்கு (National Geoscience Data Repository) விரிவுபடுத்துவதன் மூலம், கனிம வளங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைத் துல்லியமாக ஆய்வு செய்யவும், புதிய இடங்களைக் கண்டறியவும் முடியும் என்றும் கூறப்படுகிறது. 


மூன்றாவதாக, புவிசார் அரசியல் மாற்றங்களை தொழில்நுட்பரீதியான தற்சார்பை உருவாக்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2025-ஆம் ஆண்டில், அரிய வகை மண் காந்தங்கள் (rare earth magnets) மற்றும் மின்கல விநியோகச் சங்கிலிகள் ஆயுதமாக்கப்பட்ட நிகழ்வானது, உலகளாவிய தொழில்முறை மற்றும் தூய எரிசக்தி அமைப்புகளில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்தியது. இதற்குப் பதிலடியாக, கடலோர மாநிலங்களில் அரிய வகை மண் வழித்தடங்களை (rare earth corridors) அமைப்பதாகவும், மோனாசைட் மணல் (monazite sands) மீதான இறக்குமதி வரிகளைக் குறைப்பதாகவும் அரசாங்கம் அறிவித்தது. எனவே, மாநிலங்கள் இப்போது தங்களிடம் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் திறமையான உழைப்பாளர்களைப் பயன்படுத்தி, உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்யவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மற்றும் பிராந்திய வளர்ச்சியை ஆதரிக்கவும் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 


சர்வதேச கூட்டாண்மைகள் முக்கியம்


உள்நாட்டு முயற்சிகளைத் தாண்டி, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது நிறுவன மற்றும் தொழில்முறை கூட்டாண்மைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த நாடுகள் மேம்பட்ட தாது பதப்படுத்துதல் மற்றும் சிக்கலான உற்பத்தித் திறன்களைக் கொண்டிருந்தாலும், தொழில்நுட்பத்தைப் பகிர்வதில் தயக்கம் காட்டுகின்றன, எனவே அவற்றின் நிறுவனங்கள் உலகளாவிய சந்தைகளுக்குச் சேவை செய்யும் வகையில் இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்க ஊக்குவிக்கப்பட வேண்டும். ஊற்றுப்படிவ அரிய வகை பூமி நிரந்தர காந்தங்களுக்கான (sintered rare earth permanent magnets) ₹7,280 கோடி மதிப்பிலான திட்டம் ஒரு நல்ல தொடக்கமாகும், ஆனால் ஒழுங்குமுறை தெளிவு, வலுவான சட்டக் கட்டமைப்பு, சந்தை அணுகல் மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பு ஆகியவையும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலும், சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் உள்ள இங்கிலாந்து-இந்தியா முக்கியத் தாது விநியோகச் சங்கிலி கண்காணிப்பகம் (UK-India Critical Minerals Supply Chain Observatory) போன்ற உலகளாவிய அமைப்புகளுடன், இந்தியாவின் சிறந்த மையங்கள் (centres of excellence) தங்கள் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். 


நாடுகளுக்கிடையே பொருளாதார ஒருங்கிணைப்பு இல்லாத தற்போதைய உலகத்தில், வேகம், தன்னம்பிக்கை மற்றும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் 2026-ஆம் ஆண்டை தனது இலக்குகளை விரைவாக அடையும் ஆண்டாக மாற்ற இந்தியாவால் முடியும் என்கின்றனர். குறிப்பாக, கனிம வளங்கள் துறையில் இந்தியாவின் தலைமைத்துவமானது அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, மாநில அரசுகளின் ஆக்கபூர்வமான தலைமை மற்றும் சர்வதேச நாடுகளுடனான கூட்டாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த செயல்பாட்டைப் பொறுத்தே அமையும் என்றும் கூறப்படுகிறது. 


ரிஷப் ஜெயின், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைப்பின் (CEEW) உறுப்பினராக பணியாற்றுகிறார். இங்கு அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் அவருடைய தனிப்பட்ட கருத்துக்களே ஆகும்.


Original article : The shift of critical minerals to India’s strategic centre -Rishabh Jain

Share:

பத்திர சட்ட மசோதாவில் ஒரு சிக்கலான பிரிவு உள்ளது. -எம்.எஸ். சஹூ, சிகேஜி நாயர்

 நிர்வாக விதிமுறைகளிலிருந்து பொதுத்துறை நிறுவனங்களுக்கு பரந்த விலக்கு அளிப்பது பொறுப்புணர்வு மற்றும் போட்டித்தன்மையை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.


இந்தியாவின் பத்திரச் சட்டக் கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் காலதாமதமான முயற்சியாக 2025-ஆம் ஆண்டு பத்திரச் சந்தைக் குறியீட்டு (Securities Market Code Bill) மசோதா உள்ளது. இது பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், ஒரு விதி, பிரிவு 65(2), மசோதா முன்னெடுக்க  முயற்சிக்கும் சீர்திருத்த நெறிமுறையின் உணர்வை பலவீனப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.


பிரிவு 65(2)  ஒன்றிய  அரசுக்கு பொது நலனுக்காக, எந்த பட்டியலிடப்பட்ட பொது துறை நிறுவனமாக (public sector company (PSC)) இருந்தாலும், முதலீட்டு வெளியீடு, குறைந்தபட்ச சலுகை அளவு, பத்திரங்கள் வெளியீடு மற்றும் பரிமாற்றம், நிறுவனர் மேலாண்மை, தகவல் வெளியீடு, முக்கியமாகப் பெறுதல் மற்றும் கைப்பற்றல் விதிகள், பொதுப் பங்குதாரர்முறை, சுமை மற்றும் நிதிசார்பான விதிகள், அபாய மேலாண்மை மற்றும் தொடர்புடைய விவகாரங்களில் உள்ள அனைத்து தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. இதன்மூலம், நிர்வாகம் ஒரு முழு சொத்துரிமை வகைக்கான முக்கிய பத்திர சந்தை விதிகளை (ownership class) தற்காலிகமாக நிறுத்திவைக்க முடியும். இது 1991-க்குப் பிறகு இந்தியாவில் செய்யப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் அடிப்படைக் கோட்பாட்டில் நேரடியாக தாக்கத்தை  ஏற்படுத்துகிறது.


பொருளாதார தாராளமயமாக்கல் (Economic liberalisation) என்பது தனியார் நிறுவனங்கள் சந்தையில் நுழைய அனுமதி வழங்குவது மட்டுமல்ல; இது சந்தைகளில் அரசின் பங்கை மறுபரிசீலனை செய்வதற்காக  அறிமுகப்படுத்தப்பட்டது. துறைசார் இடஒதுக்கீடு குறைக்கப்பட்டு இறுதியில் ஒழிக்கப்பட்டது; வங்கி, தொலைத்தொடர்பு மற்றும் காப்பீட்டில் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது; மற்றும் முதலீட்டு விலக்கு வணிக நிறுவனங்களில் மாநிலங்களின் உரிமையை பலவீனப்படுத்தியது. சீர்திருத்த ஒருமித்த கருத்து ஒரு எளிய முன்மொழிவின் அடிப்படையில் அமைந்தது: அரசு ஒரு சலுகை பெற்ற சந்தை பங்கேற்பாளரிடமிருந்து விதி வகுப்பாளராகவும் நடுவராகவும் மாறும். பிரிவு 65(2) சொத்துரிமை அடிப்படையிலேயே விதிகளின் வேறுபாட்டை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம் அந்த சமநிலையை சீர்குலைக்கிறது.

            

நடுநிலைமைக்கு குறைந்த முக்கியத்துவம்


சீர்திருத்தத்தின் முக்கியமான அடித்தளம் போட்டித்தன்மை (competitive neutrality) ஆகும். ஒரே சந்தையில் செயல்படும் பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரே போட்டி சட்டம், ஒரே தகவல் வெளியீட்டு தரங்கள், ஒரே மேலாண்மை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படுகின்றன. ஒரு நிறுவனம் பொது சந்தைகளிலிருந்து மூலதனம் (capital) ஈட்டினால், அது பொது சந்தை விதிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். ஆனால், பரிந்துரைக்கப்பட்ட விலக்கு (exemption) விதி இந்த அடிப்படை யோசனையிலிருந்து விலகிச் செல்கிறது. இது இரட்டை ஆட்சியை உருவாக்குகிறது. இதில் தனியார் நிறுவனங்கள் நிர்வாகம், வெளிப்படுத்தல் மற்றும் கையகப்படுத்தல் விதிமுறைகளால் முழுமையாகக் கட்டுப்பட்டிருக்கும். அதேநேரத்தில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிர்வாக அறிவிப்பு மூலம் அவற்றிலிருந்து விடுவிக்கப்படலாம். இது சமநிலையை சீர்குலைத்து, ஒழுங்குமுறை எதிர்பார்ப்புகளில் நிச்சயமற்ற தன்மையை உண்டாக்குகிறது.




அடிப்படையில், இந்த விதி சந்தை அணுகலுக்கும் சந்தை ஒழுக்கத்திற்கும் இடையே ஒரு முரண்பாடான உறவை உருவாக்குகிறது. பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பங்குச் சந்தைகளை அணுகுகின்றன. நிறுவன மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க, திரவீகம் (liquidity) மற்றும் விலை கண்டறிதல் (price discovery) ஆகியவற்றில் நன்மை பெறுகின்றன. மேலும், disinvestment திட்டங்களை ஆதரிக்க சந்தை மதிப்பீட்டை (market valuation) நம்புகின்றன. ஆனால், பிரிவு 65(2)-ன் படி, இந்நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு அடித்தளமாக இருக்கும், பொதுப் பங்குதாரர்முறை, கையகப்படுத்துதல் பாதுகாப்புகள், மேலாண்மை தரங்கள், அபாய மேலாண்மை விதிகளாகும் போன்ற விதிகளிலிருந்து விலக்கு பெறலாம்.


சந்தைகள் பரஸ்பர நம்பிக்கையில் இயங்குகின்றன: பணத்தைப் பெறுவதற்கு வெளிப்படைத்தன்மை, கணிப்பான திட்டமிடல், ஒரே விதிமுறைகளை பின்பற்றுதல் மிகவும் முக்கியம். சந்தையின் ஒழுங்குமுறைக்கு முழுமையாக உட்படாமல் அதன் நன்மைகளை அனுபவிப்பது என்பது ஒழுங்குமுறைக்கு கட்டுப்படாத சலுகைகளை உருவாக்குவதாகும். காலப்போக்கில், இத்தகைய சமச்சீரற்ற தன்மை, பல ஆண்டுகளாக கடினமாகக் கட்டமைக்கப்பட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை பலவீனப்படுத்தும்.


'பொது நலன்' (public interest) என்ற நியாயப்படுத்தல் மட்டுமே இதற்கு முக்கிய காரணமாகும். ஆனால், பொது நலன் என்பது அரசு உரிமையிலிருந்து மட்டுமே வழங்கப்படுகிறது என்று கருத முடியாது. பட்டியலிடப்பட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள், ஒப்பிடக்கூடிய அளவிலான தனியார் நிறுவனங்கள் நேரடியாகப் போட்டியிடும் துறைகளில் செயல்படுகின்றன: அவை வங்கி, காப்பீடு, எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவைகளாகும். ஒரு பொதுத்துறை எஃகு நிறுவனமும் ஒரு தனியார் துறை எஃகு நிறுவனமும் ஒரே வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து ஒரே மூலதனச் சந்தையை அணுகினால், ஒன்றை நிர்வாக விதிமுறைகளிலிருந்து விலக்கி, மற்றொன்றை முழுமையாக சேர்த்து வைத்திருப்பதற்கான தன்மையை நிலைநிறுத்துவது கடினமாகிவிடும்.


பல பொது துறைக் நிறுவனங்கள் ஏற்கனவே தனி சட்டங்களின்கீழ் செயல்பட்டு வருகின்றன. இது தனித்துவமான ஆளுகை (Governance) கட்டமைப்புகளை வழங்குகிறது. வேறுபாடு முக்கியமென கருதப்படும் இடங்களில், நாடாளுமன்ற அதை கவனமாக விளக்கியுள்ளது. பிரிவு 65(2) இந்த ஒழுங்குகளை மீறி, நிர்வாகத்துக்கு அதிகாரத்தை தருகிறது. இத்தகைய அறிவிப்பு அடிப்படையிலான அதிகாரம், ஒழுங்குமுறை சுயாட்சி மற்றும் முன்கணிப்பு பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. 


விதிகள் நிலைத்திருக்கவும், வெளிப்படையாகவும், தற்காலிக அழுத்தங்களிலிருந்து பாதுகாக்கப்படவும் உருவானது. ஒரு வெளியீட்டாளருக்கு அல்லது வெளியீட்டாளர்களின் சில வகைகளுக்கு தனி விதிவிலக்குகள் வழங்கப்படுமெனில், முதலீட்டாளர்களுக்கு  குழப்பம் ஏற்படலாம். குறிப்பாக, ஒழுங்குமுறை விதிகளின் நிலைத்தன்மையை மதிக்கும் உலகளாவிய நிறுவனங்களிடையே குழப்பம் ஏற்படும்.


ஒழுங்குமுறை தளர்வு நிறுவனத்தின் மதிப்பை அதிகரிக்கும் என்பதில் என்பதற்கு போதுமான சான்றுகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளில், பல துறைகளில் தனியார் நிறுவனங்கள், அதே அளவிலான பொதுத்துறை நிறுவனங்களைவிட அதிக மதிப்பீட்டு விகிதங்களைப் பெற்றுள்ளன. சந்தைகள் நிர்வாகத் தரம், வாரிய சுதந்திரம், வெளிப்படையான தகவல் பகிர்வு மற்றும் நம்பகமான சிறிய பங்குதாரர் பாதுகாப்பை மதிக்கின்றன. இது போன்ற துறைகளை பலவீனப்படுத்துவது செயல்திறனை மேம்படுத்தாது; இது நிர்வாக அபாயத்தையும் மூலதனச் செலவையும் அதிகரிக்க செய்யும்.


பாதுகாப்பு தேவைகள்


பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள சிறுபான்மை பங்குதாரர்கள், சில்லறை முதலீட்டாளர்கள், ஓய்வூதிய நிதிகள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் உட்பட, கையகப்படுத்தல் விதிமுறைகள், பொது பங்கு தேவைகள் மற்றும் பாதுகாப்பிற்காக வெளிப்படுத்தல் தரநிலைகளை நம்பியுள்ளனர். அரசு கட்டுப்படுத்தும் பங்குதாரராகவும் விதிகளை உருவாக்கும் நிறுவனமாகவும் இருக்கும்போது, ​​அத்தகைய பாதுகாப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த தரநிலைகளை புறக்கணிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் அதிக பொதுத்துறை நிறுவனங்களை பட்டியலிடுவது மற்றும் பங்கு விற்பனையை அதிகரிப்பது என்பது சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.


அரசு தனது நிறுவனங்களைப் பாதுகாப்பது இயற்கையானது. குறிப்பாக, பொது வளங்கள் மற்றும் கொள்கை நோக்கங்கள் ஒன்றாக இணைந்து செயல்படும் இடங்களில்  இது  இயற்கையானது. ஆனால், அதிகப்படியான பாதுகாப்பு எதிர் விளைவை ஏற்படுத்தும்.


இந்த மசோதா,  நம்பகமான மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை வாய்ந்த மூலதனச் சந்தைகளுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்த ஒரு வாய்ப்பாகும். அந்த உறுதிப்பாடு ஒழுங்குமுறைக்கு முன் சமத்துவம், நிறுவன தெளிவு மற்றும் போட்டி நடுநிலைமை ஆகியவற்றில் தங்கியுள்ளது. பிரிவு 65(2), அதன் தற்போதைய வடிவத்தில், உரிமையானது மீண்டும் ஒழுங்குமுறை கடமையை தீர்மானிக்கக்கூடும்  என்ற  அபாயங்களைக் கொண்டுள்ளது.


பொதுத்துறைநிறுவனங்கள் பொதுச் சந்தைகளில் இருந்து நிதி பெற விரும்பினால், அதற்குப் பிறகு வரும் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். பட்டியலிடப்பட்ட பொதுத்துறைநிறுவனங்கள்களை முக்கிய பத்திர சந்தை துறைகளிலிருந்து விலக்கு அளிக்க அரசாங்கத்தை அனுமதிக்கும் பிரிவு 65(2), 30 ஆண்டுகால பொருளாதார சீர்திருத்தத்தை மாற்றியமைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. வெளிப்படையான ஆலோசனை, ஒரே மாதிரியான அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒழுங்குமுறை திருத்தங்கள் அல்லது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் இலக்கு சார்ந்த மாற்றங்கள் மூலம் உண்மையான துறைசார்ந்த சவால்களை எதிர்கொள்ள முடியும்.



போட்டிச் சந்தைகளில் வேறுபட்ட ஒழுங்குமுறை விதிகளுக்கு உரிமை மட்டுமே அடிப்படையாக மாற முடியாது. ஒரு நவீன பத்திரக் குறியீடு சமமான விதிகளையும் நிறுவன நம்பகத்தன்மையையும் வலுப்படுத்த வேண்டும். அவற்றை பலவீனப்படுத்தக்கூடாது



சாஹூ இந்திய திவால்நிலை மற்றும் நொடிப்புநிலை வாரியத்தின் முன்னாள் தலைவர்; நாயர் தேசிய பத்திர சந்தை நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்.


Original article : Securities Bill has a problematic Section. -MS Sahoo CKG Nair

Share:

மனித பாப்பிலோமா வைரஸ் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் பற்றி… -குஷ்பூ குமாரி, ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி: இந்தியாவின் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் தாக்கத்தை குறைக்க, 14 வயது சிறுமிகளுக்கு நாடு முழுவதும் ஒற்றை வழங்கலளவு (single-dose) மனித பாப்பிலோமா வைரஸ் (single-dose human papillomavirus (HPV)) தடுப்பூசி பிரச்சாரத்தை ஒன்றிய அரசு தொடங்க உள்ளது.


முக்கிய அம்சங்கள்:


இந்தியாவில் பெண்களிடையே ஏற்படும் 2-வது வகை புற்றுநோய் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆகும். ஏறக்குறைய 90% கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் தொடர்ச்சியான மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகின்றன. இது தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இரண்டு வகையான புற்றுநோய்களில் ஒன்றாகும். மற்றொரு புற்றுநோய் கல்லீரல் புற்றுநோய் ஆகும்.


 மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று ஆசனவாய், ஆண்குறி, யோனி, வல்வார் மற்றும் தொண்டை புற்றுநோய்களுயுடன் தொடர்புடையது. தடுப்பூசி மூலம் புற்றுநோய் குறைய வாய்ப்புள்ளது.


 மனித பாப்பிலோமா வைரஸ் (HPV)) என்பது ஒரு பொதுவான, பாலியல்ரீதியாக பரவும் தொற்று ஆகும். வைரஸின் சில வடிவங்கள் மட்டுமே புற்றுநோயாக முன்னேறும். பதின் பருவத்தில் உள்ள பெண்கள் பாலியல்ரீதியாக  தொடர்பு இல்லாமல் இருக்கும் காலக்கட்டத்தில் HPV தடுப்பூசி செலுத்தினால், அவர்களுக்கு நீண்டகால பாதுகாப்பு மற்றும் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.


90 நாட்கள் காலக்கெடு முடிந்தபின் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்படாது. இந்த திட்டம் நாட்டின் வழக்கமான தடுப்பூசி திட்டத்துடன் இணைந்து, சுகாதார மற்றும் நல மையங்களில் தொடர்ந்து செயல்படும். ஒவ்வொரு ஆண்டும் 14 வயதை அடையும் சிறுமிகள் இந்தத் திட்டத்தின் மூலம் தடுப்பூசியைப் பெற முடியும். இந்தியாவில் ஆண்டுதோறும் 1.15 கோடி சிறுமிகள் 14 வயதை எட்டுகின்றனர்.


  புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய குறைந்தது 14 வகையான மனித பாப்பிலோமா வைரஸ்கள் (HPV)) உள்ளன. இவற்றில், HPV 16 மற்றும் 18 வகைகள் கட்டி (tumour) உருவாக அதிக வாய்ப்புள்ளவையாக கருதப்படுகின்றன. உலகளவில் ஏற்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (Cervical Cancer) வழக்குகளில் 70% இதனால்தான் ஏற்படுகிறது. மிகவும் பொதுவான HPV வகைகளில் இரண்டு, நான்கு அல்லது ஒன்பது வகைகள் நுழைவதைத் தடுப்பதன் மூலம் தடுப்பூசிகள் தடுப்புகளாக செயல்படுகின்றன.


இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட HPV தடுப்பூசி இருந்தாலும், அது குறைவானதாக இருக்கும். இருப்பினும் இந்த கட்ட தடுப்பூசி முகாமில் அரசு MSD Pharmaceuticals நிறுவனத்தின் Gardasil தடுப்பூசியைப் பயன்படுத்த உள்ளது.


இதற்குக் காரணம், Serum Institute of India உருவாக்கிய Cervavac தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. மேலும், அதன் ஒற்றை வழங்கலளவு (single-dose) செயல்திறனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research (ICMR)) ஆய்வு செய்து வருகிறது.

இந்த தடுப்பூசி முகாமிற்காக GAVI Vaccine Alliance இந்தியாவுக்கு 2.6 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்குகிறது. இது இரண்டு ஆண்டுகளுக்கு போதுமானதாக இருக்கும். இதில் 1 கோடி டோஸ் ஏற்கனவே இந்தியாவில் உள்ளது. மீதமுள்ளவை இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு முழுவதும் வழங்கப்படும்.


உலகளவில் ஏற்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வழக்குகளில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் 1.25 லட்சம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். 75,000 பேர் உயிரிழக்கின்றனர்.


முன்பு செய்யப்பட்ட ஆய்வுகள் இந்த தடுப்பூசி HPV தொற்றையும், புற்றுநோய்க்குமுன் ஏற்படும் மாற்றங்களையும் குறைக்க உதவுகிறது என்பதை காட்டின. பின்னர் நடந்த ஆய்வுகள், இது நேரடியாக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது என்பதை நிரூபித்தன. முக்கியமாக, பெண் குழந்தைகளுக்கு உலகளாவிய நோய்த்தடுப்பு மருந்து வழங்குவது, ஆண் குழந்தைகளுக்கு தொற்று பரவுவதைக் குறைத்து, பிற புற்றுநோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது.

— இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. இது இன்னும் அதிகமாகக் குறைந்தால், மரண எண்ணிக்கை குறையும். அதிக பளுவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் பிற புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க அதிக நேரத்தை பெற முடியும். உலகின் முதல் HPV தடுப்பூசி 2006-ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. இதுவரை 158 நாடுகள் இந்த தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.


உங்களுக்குத் தெரியுமா?


மிக முக்கியமாக சிக்கிம், பஞ்சாப் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் முன்னர் HPV தடுப்பூசியை அறிமுகப்படுத்த முயற்சித்தன. சிக்கிம் 2018-ஆம் ஆண்டில் மாநில அளவிலான பிரச்சாரத்தை முதன்முதலில் தொடங்கியது. இரண்டு டோஸ்களுக்கு 95%-க்கும் அதிகமான பாதுகாப்பை பெற்றது.


2016-ஆம் ஆண்டில், பஞ்சாப் மான்சா மற்றும் பட்டிண்டா மாவட்டங்களில் தடுப்பூசி பிரச்சாரத்தை மேற்கொண்டது. பின்னர், அது அதிக பாதிப்புகளை கொண்ட சில மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் இந்த பாதுகாப்பு 97%-க்கும் அதிகமாக இருந்தது. டெல்லி அதன் தனித்த புற்றுநோய் மருத்துவமனையான டெல்லி மாநில புற்றுநோய் நிறுவனத்திலிருந்து 2016-ஆம் ஆண்டில் HPV தடுப்பூசி பிரச்சாரத்தையும் தொடங்கியது. இருப்பினும், பெண்கள் மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டதால், திட்டம் வேகமாக முன்னேறவில்லை.


Original article : about the Human Papillomavirus and cervical cancers. -Khushboo Kumari, Roshni Yadav

Share:

சூரிய ஆற்றல் நிறுவனங்கள் (solar firms) மீது அமெரிக்கா வரி விதித்தது -குஷ்பூ குமாரி, ரோஷ்னி யாதவ்

 தற்போதைய நிகழ்வு : அதானி குழும நிறுவனங்களான முந்த்ரா சூரிய ஆற்றல் நிறுவனம் (Mundra Solar Energy Ltd (MSEL)) மற்றும் முந்த்ரா சூரிய ஆற்றல் பிவி நிறுவனம் (Mundra Solar PV Ltd (MSPVL)) ஆகிய இரண்டு நிறுவனங்கள் விசாரணை நடவடிக்கைகளில் இருந்து விலகியதை அடுத்து, அமெரிக்க வர்த்தகத் துறை இந்திய சூரிய ஆற்றல் தயாரிப்புகளுக்கு 126 சதவீத வரி விதித்துள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மதிப்பாய்வு செய்த மானிய எதிர்ப்பு விசாரணை அறிக்கை காட்டுகிறது.


முக்கிய அம்சங்கள் :


தானி குழுமத்தின் நிறுவனங்கள் நடவடிக்கைகளில் "கட்டாய பிரதிவாதிகளாக" (mandatory respondents) கருதப்பட்டன. இதனால், அவர்கள் இந்த செயல்பாட்டில் பங்கேற்க வேண்டியிருந்தது. இருப்பினும், அவர்கள் ஒத்துழைக்கவில்லை. இதன் காரணமாக, அமெரிக்க வணிகத் துறை "கிடைக்கக்கூடிய பாதகமான உண்மைகள்" (Adverse Facts Available) அபராதத்தைப் பயன்படுத்தியது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் துறையானது பயன்படுத்தும் மிகக் கடினமான முறை இதுவாகும். பிப்ரவரி 20 தேதியிட்ட உத்தரவு இந்தத் துறையின்மீது கடுமையான வரிகளை விதிக்க வழிவகுத்தது.


மானிய எதிர்ப்பு விசாரணை அறிக்கை அதற்கான காரணத்தை தெளிவாக விளக்குகிறது. இதற்கு பதிலளிக்காத இந்த கட்டாய பிரதிவாதிகள், முந்த்ரா சூரிய ஆற்றல் மற்றும் முந்த்ரா சூரிய ஆற்றல் பிவி போன்ற நிறுவன வர்த்தகத்தால் கோரப்பட்ட முக்கியமான தகவல்களை மறைத்ததாக அது கூறுகிறது. மேலும், குறிப்பிடக்கூடிய காலக்கெடுவிற்குள் வர்த்தகத்தின் ஆரம்பகால கேள்வித்தாளுக்கு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பதிலளிக்கத் தவறியதன் மூலம் இந்த நடவடிக்கையை கணிசமான அளவில் தடுத்தனர் என்பதை நாங்கள் முதற்கட்டமாகத் தீர்மானிக்கிறோம்.


இந்திய சூரிய ஆற்றல் தயாரிப்புகளுக்கு அதிக வரிகளை விதிக்கும் அதே வேளையில், அமெரிக்க வர்த்தகத் துறை, சீன இறக்குமதிகளை இந்தியா அதிகமாகச் சார்ந்திருப்பதையும் சுட்டிக்காட்டியது.


அமெரிக்க சூரிய ஆற்றல் உற்பத்தியாளர்களின் கூட்டணியான அலையன்ஸ் ஃபார் அமெரிக்கன் சூரிய ஆற்றல் உற்பத்தி மற்றும் வர்த்தகத்திடமிருந்து ஒரு மனுவைப் பெற்றபிறகு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அமெரிக்க வர்த்தகத் துறை எதிர்மானிய வரி (countervailing duty (CVD)) விசாரணையைத் தொடங்கியதாக இந்த ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.


இந்திய அரசு மற்றும் அதானி குழும நிறுவனங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில், வணிகத் துறை ஜனவரி 1, 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரையிலான விசாரணைக் காலத்தை ஏப்ரல் 1, 2024 முதல் மார்ச் 31, 2025 வரை திருத்தியது. இந்த மாற்றம் விசாரணைக் காலத்தை மிகச் சமீபத்தில் நிறைவடைந்த இந்திய நிதியாண்டுடன் சீரமைத்தது.

இந்த வழக்கின் குறிப்பிடத்தக்க அம்சம், அமெரிக்க வணிகத் துறையின் பன்னாட்டு மானியங்களில் கவனம் செலுத்துவதாக ஸ்ரீவஸ்தவா கூறினார். பாலிசிலிகான் (polysilicon), சிலிக்கான் வேஃபர்கள் (silicon wafers), வெள்ளி பசை (silver paste), சோலார் கண்ணாடி (solar glass), அலுமினிய சட்டங்கள் (aluminium frames) மற்றும் மின்இணைப்புப் பெட்டிகள் (junction boxes) போன்ற முக்கிய உள்ளீடுகள் எல்லைகளுக்கு அப்பால் சந்தை விலையைவிடக் குறைவாக வழங்கப்பட்டதா என்பதை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.


இந்தியாவில் இருந்து சூரிய ஆற்றல் இறக்குமதி 2024-ல் $792.6 மில்லியனாக மதிப்பிடப்பட்டது. இது, 2022 நிலைகளுடன் ஒப்பிடும்போது ஒன்பது மடங்கு அதிகமாகும் என்று அமெரிக்க வணிகத் துறை தெரிவித்துள்ளது. 2021 மற்றும் 2024-க்கு இடையில், இந்தியாவின் சூரிய ஒளிமின்னழுத்த தொகுதி (solar photovoltaic module) ஏற்றுமதிகளில் 90%-க்கும் அதிகமானவை அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டதாக இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவு காட்டுகிறது.


பொருளாதாரப் பக்கத்திலிருந்து : இந்திய சூரிய மின்ஆற்றல் தகடுகள் மீதான அமெரிக்க இறக்குமதி வரிகள் உள்நாட்டு அசல் கருவிகள் உற்பத்தியாளர்களைத் (OEM) தாக்கக்கூடும்


இந்தியாவில் இருந்து சூரிய மின்ஆற்றல் இறக்குமதிக்கு 126% முதற்கட்ட எதிர்மானிய வரிகளை (CVD) விதிக்க அமெரிக்கா முடிவு செய்திருப்பது ஒரு முக்கியமான கட்டத்தில் வருகிறது. நாட்டின் சூரிய மின்ஆற்றல் தொகுதி உற்பத்தி திறன் வேகமாக விரிவடைந்து இப்போது ஆண்டுக்கு 140 ஜிகாவாட் (GW)-ஐ தாண்டியுள்ளது.


இந்தியாவில் இருந்து சூரிய மின்ஆற்றல் இறக்குமதி 2024-ல் $792.6 மில்லியனாக மதிப்பிடப்பட்டது. இது 2022 அளவுகளுடன் ஒப்பிடும்போது ஒன்பது மடங்கு அதிகமாகும் என்று வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. 2021 மற்றும் 2024-க்கு இடையில், இந்தியாவின் சூரிய மின்னழுத்த தொகுதி ஏற்றுமதிகளில் 90%-க்கும் அதிகமானவை அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டன என்று இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.


வோல்க்ஸ் எனர்ஜியின் (Volks Energie) இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் கோயல், இந்திய சூரிய ஆற்றல் இறக்குமதிகள் மீதான 126% முதற்கட்ட எதிர்மானிய வரி "பரவலான விளைவுகளை" (widespread consequences) ஏற்படுத்தும் என்றார்.


“உடனடி கவனம் உற்பத்தியாளர்கள்மீது புரிந்துகொள்ளத்தக்கதாக இருந்தாலும், உண்மையான தாக்கம் ஏற்றுமதி எண்ணிக்கைகளுக்கு அப்பால் திட்ட செயல்படுத்தல் மற்றும் மின்துறையின் பரந்த பொருளாதாரம் வரை நீட்டிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.


கோயலின் கூற்றுப்படி, வரிவிதிப்புகள் ஒரே இரவில் முக்கியமான கருத்துகணிப்புகளை மாற்றக்கூடும். இது நிதி கட்டமைப்புகள், திட்ட காலக்கெடு மற்றும் இறுதியில் மின்சாரம் வழங்கப்படும் விலையை பாதிக்கும். இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேவை அதிவேகத்தில் வளர்ந்து வருவதால், உற்பத்தி திறன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


இந்தியாவில் வருடாந்திர சூரிய ஆற்றல் மின் உற்பத்தி நிலையங்கள் சுமார் 45-50 ஜிகாவாட் நேரடி மின்னோட்டமாக (gigawatt direct current (GWdc)) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கணிசமான விநியோக-தேவை இடைவெளியை (supply-demand gap) உருவாக்குகிறது.


இந்தியா, இந்தோனேசியா மற்றும் லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசில் இருந்து தொகுதிகளாக இணைக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், படிக சிலிக்கான் ஒளிமின்னழுத்த செல்கள் (crystalline silicon photovoltaic cells) மீதான துறையின் எதிர்மானிய வரி விசாரணைகளைத் தொடர்ந்து அமெரிக்கா இந்த முடிவை எடுத்தது.


உங்களுக்குத் தெரியுமா? 


ஒளி என்பது ஆற்றலின் ஒரு வடிவம், சோதனையின் தன்மையைப் பொறுத்து ஃபோட்டான்கள் (photons) எனப்படும் தனித்துவமான ஆற்றல் தொகுப்புகளைப் போல செயல்படும் அலை அல்லது துகள் எனக் காணப்படுகிறது. ஃபோட்டான்கள் இணைதிறன் பட்டையில் (valence band) எலக்ட்ரான்களைத் தாக்கும்போது, ​​அவை அவற்றின் ஆற்றலை அந்த எலக்ட்ரான்களுக்கு மாற்ற முடியும். இதனால் அவை கடத்தல் இணைதிறன் பட்டைக்கு மாற அனுமதிக்கின்றன.


சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும்போது மட்டுமே இந்த மாற்றம் நிகழ்கிறது. இந்த நிலைமைகளை முதன்முதலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒளிமின்னழுத்த விளைவு கோட்பாட்டில் விளக்கினார். ஃபோட்டானின் ஆற்றல் இரண்டு பட்டைகளுக்கு இடையிலான ஆற்றலின் வேறுபாட்டிற்கு சமமாக இருக்க வேண்டும். இது இணைதிறன் பட்டை இடைவெளி (band gap) என்றும் அழைக்கப்படுகிறது. இது எலக்ட்ரான் வோல்ட்டுகளில் அளவிடப்படுகிறது. அதிக ஆற்றல் கொண்ட ஃபோட்டான்கள் அதிகப்படியான ஆற்றலை வெப்பமாக மாற்றும், இது எலக்ட்ரான்களை இழக்க வழிவகுக்கும்.



ஆற்றல் அளவுகோலைத் தவிர, இந்த விஷயத்தில் குறைவான பொருத்தமான ஒரு சமச்சீர் அளவுகோலும் உள்ளது. இந்த இரண்டு நிபந்தனைகளும் மொத்த சூரிய நிறமாலையில் தோராயமாக 50.4 சதவீதத்தை உடனடியாக படிக சிலிக்கானால் செய்யப்பட்ட ஒளிமின்னழுத்த (PV) செல்களிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்த முடியாததாக ஆக்குகின்றன. 20.2 சதவீத ஃபோட்டான்கள் குறைந்த ஆற்றலைக் கொண்டுள்ளன. அதேநேரத்தில், 30.2 சதவீதம் மிக அதிக ஆற்றலைக் கொண்டுள்ளன. மேலும் இந்த கூடுதல் ஆற்றல் வெப்பமாக இழக்கப்படுகிறது.

காலியம் ஆர்சனைடு, காட்மியம் டெல்லுரைடு மற்றும் காப்பர் இண்டியம் செலினைடு போன்ற பிற பொருட்கள் சூரிய நிறமாலையின் வெவ்வேறு பகுதியைப் பிடிக்க முடியும். இருப்பினும், அவை பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் அவை இயற்கையில் அரிதானவை. அவற்றைக் கையாள்வதும் கடினம். கூடுதலாக, அவற்றில் சில சுற்றுச்சூழலுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை.


Original article : US slaps tariff on solar firms -Khushboo Kumari, Roshni Yadav

Share:

இந்தியாவின் நகரங்களை மறுவடிவமைப்பதற்கான ஒரு புதிய ஒப்பந்தம் -ஸ்ரீனிவாஸ் கதிகிதலா

 நகர்ப்புற சவால் நிதி, இந்தியா நகர்ப்புற உள்கட்டமைப்பிற்கான சந்தை இணைப்பு, சீர்திருத்தம் சார்ந்த மற்றும் விளைவு சார்ந்த கட்டமைப்பை நோக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது.


இந்தியாவின் நகரமயமாக்கல் இப்போது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. இன்று நகரங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கை வழங்குகின்றன. அவை மிகவும் சுறுசுறுப்பான பொருளாதாரக் குழுக்களை நடத்துகின்றன மற்றும் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரத்தை பெருகிய முறையில் வடிவமைக்கின்றன. இருப்பினும் அவை தொடர்ச்சியான உள்கட்டமைப்பு தொடர்பான பற்றாக்குறைகள், காலநிலை பாதிப்புகள், நிதிக் கட்டுப்பாடுகள் மற்றும் நிறுவன பாகுபாடு எதிர்கொள்கின்றன. உற்பத்திரீதியாகவும், நிலையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் நகரமயமாக்குவதே முக்கிய சவாலாகும்.


சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட நகர்ப்புற சவால் நிதி (Urban Challenge Fund (UCF)) ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. 2025–26 நிதியாண்டு முதல் 2030–31 நிதியாண்டு வரை ரூ.1 லட்சம் கோடி மத்திய உதவி ஒதுக்கீட்டையும், மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் கோடியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வடிவமைப்பையும் கொண்டு, இந்த நிதி, நகர்ப்புற உள்கட்டமைப்பிற்கான சந்தை இணைக்கப்பட்ட, சீர்திருத்தம் சார்ந்த மற்றும் விளைவு சார்ந்த கட்டமைப்பை நோக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது.

மத்திய உதவி மொத்த திட்ட செலவில் 25 சதவீதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், நகரங்கள் சந்தை மூலங்களிலிருந்து குறைந்தபட்சம் 50 சதவீத செலவை திரட்ட வேண்டும். மீதமுள்ள தொகை மாநில அரசுகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அல்லது பிற நிறுவனங்களில் இருந்து வரலாம். இது நகர்ப்புற உள்கட்டமைப்பு பெருகிய முறையில், வருவாய் ஆதரவு திட்டங்கள் மூலம் மூலதனச் சந்தைகளை அதிகளவில் அணுக வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


நகர்ப்புற சவால் நிதி (UCF) மூன்று நிலைகளைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. முதலாவது, வளர்ச்சி மையங்களாக நகரங்கள், ஒருங்கிணைந்த இடம்சார்ந்த மற்றும் போக்குவரத்து திட்டமிடல், பொருளாதார வழித்தடங்களில் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை, சுற்றுலா அல்லது தளவாடக் குழுக்கள் போன்ற பொருளாதார வலிமைகளின் வளர்ச்சியை ஆதரிக்கிறது. இதன் நோக்கம் சொத்துக்களை உருவாக்குவது மட்டுமல்ல, போட்டித்தன்மை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதாகும்.


இரண்டாவது, நகரங்களின் ஆக்கப்பூர்வமான மறுவடிவமைப்பு, வரலாற்று மையங்கள் மற்றும் மத்திய வணிக மாவட்டங்களின் நெரிசல் மற்றும் சரிவை நிவர்த்தி செய்கிறது. பழுப்பு நில மீளுருவாக்கம், போக்குவரத்து சார்ந்த மேம்பாடு மற்றும் பொது நிலத்தை மறுசீரமைப்பதை ஊக்குவிப்பதன் மூலம், நிதி தற்போதுள்ள நகர்ப்புற தடங்களுக்குள் மதிப்பைத் திறக்க முயல்கிறது.


மூன்றாவது நீர் மற்றும் சுகாதாரம், சேவை செறிவு, கழிவுநீர் மறுபயன்பாடு, வெள்ளத்தைக் குறைத்தல் மற்றும் மரபுசார்ந்த கழிவு தளங்களை சரிசெய்தல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. காலநிலை மீள்தன்மை இந்தக் கட்டமைப்பில் பின்னிப் பிணைந்துள்ளது.


மிகவும் புதுமையான பிரிவுகளில் ஒன்று ரூ.5,000 கோடி கடன் திருப்பிச் செலுத்தும் உத்தரவாதத் திட்டம் ஆகும். முதல் முறையாக, சிறிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், குறிப்பாக 1 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் அடங்கும். மலைப்பாங்கான மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நகரங்களுடன், இப்போது மத்திய அரசின் கட்டமைக்கப்பட்ட உத்தரவாதங்களுடன் சந்தை நிதியை அணுக அனுமதிக்கப்படுகின்றன.

மத்திய உதவிக்கான அணுகல் சீர்திருத்தங்களைப் பொறுத்தது. நகரங்கள் முதலில் தங்கள் கடன் தகுதியை மேம்படுத்தும், சொத்து மேலாண்மை அமைப்புகளை வலுப்படுத்தும், சேவை வழங்கலை மின்னணுமயமாக்கும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் மற்றும் நிலப் பயன்பாடு மற்றும் இயக்கத் திட்டமிடலுக்கான ஒருங்கிணைந்தக் கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நகர்ப்புற சவால் நிதி (UCF) தனியார் துறையின் பங்கையும் மறுவரையறை செய்கிறது. சந்தை நிதியுதவியை கட்டாயமாக்குவதன் மூலமும், கட்டமைக்கப்பட்ட இடர்-பகிர்வு ஏற்பாடுகளை (risk-sharing arrangements) ஊக்குவிப்பதன் மூலமும், வடிவமைப்பு, நிதி மற்றும் செயல்பாடுகளில் வலுவான தனியார் பங்களிப்பை அனுமதிக்கிறது.



இந்தக் கொள்கை திட்டத் தயாரிப்புக்கு ஆதரவு, பரிவர்த்தனை ஆலோசனை உதவி மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்புகள், திட்ட நம்பகத்தன்மை மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டவை. திறம்பட செயல்படுத்தப்பட்டால், இது இந்தியாவின் நகராட்சி பத்திர சந்தையை வலுப்படுத்தலாம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பிற்கான நிதி தளத்தை விரிவுபடுத்தலாம்.



வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நகர்ப்புற சவால் நிதியை (UCF) ஒரு பரந்த சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் நிலைநிறுத்தியுள்ளது. மாநிலங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நிதி நிறுவனங்கள், கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அளவில் உருவாக்குபவர்கள் ஆகியோர் போட்டித்தன்மை வாய்ந்த சவால் அடிப்படையிலான செயல்முறையின் மூலம் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயல்முறை தயார்நிலை மற்றும் புதுமைக்கு வெகுமதி அளிக்கிறது.



நகர்ப்புற சவால் நிதி (UCF) நகரமயமாக்கலை ஒரு முதலீட்டு வாய்ப்பாக மறுவடிவமைக்கிறது. முதலீட்டின் மூலம் உருவாக்கக்கூடிய மற்றும் பலப்படுத்தக்கூடிய பகுதிகளாக இது நகரங்களைப் பார்க்கிறது. சந்தை ஒழுக்கம், சீர்திருத்த ஊக்கத்தொகைகள் மற்றும் அளவிடக்கூடிய விளைவுகளை அதன் வடிவமைப்பில் சேர்ப்பதன் மூலம், இந்தியாவின் நகர்ப்புற மாற்றத்தின் அடுத்த கட்டத்தை இயக்க முயல்கிறது.



கட்டுரையாளர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் செயலாளர் ஆவர்.


Original article : A new compact to reshape India’s cities -Srinivas Katikithala

Share:

நீதித்துறையில் ஊழல் பற்றி நாம் விவாதிக்க வேண்டும். -பிரசாந்த் பூஷன்

 நீதித்துறை ஊழலை சரியாகப் புரிந்துகொண்டு வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். திறந்த பொது விவாதம் மூலம் மட்டுமே அர்த்தமுள்ள திருத்த நடவடிக்கைகளை செயல்படுத்த முடியும். நீதித்துறை விவாதத்தை அடக்கவோ அல்லது தகவல் அணுகலை கட்டுப்படுத்த எவ்வளவு முயற்சிக்கிறதோ, அவ்வளவுக்கு குடிமக்களின் மனதில் அவநம்பிக்கை வளரும்.


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) எட்டாம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் பாடப்புத்தகம் இந்தியாவில் நீதித்துறை பற்றிய அத்தியாயத்தில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்களில் ஊழல் மற்றும் நீதித்துறை நிலுவையில் உள்ள வழக்குகளை பட்டியலிடும் உள்ளடக்கங்கள் தொடர்பாக எதிர்கொள்ளும் சவால்களாகக் குறிப்பிடுகிறது. அப்போதிருந்து, NCERT இது குறித்து மன்னிப்பு கேட்டு, பாடப்புத்தகங்களை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்றதாகக் கூறப்படுகிறது.



இவை முன்னேற்றங்களைப் பற்றியவை. நீதிக்கான அணுகல், நீதித்துறை நியமனங்களின் தன்மை, தரம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் உள்ளிட்ட பல சவால்கள்களை நீதித்துறை எதிர்கொண்டாலும், ஊழல் அவற்றில் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. மாநிலத்தின் பிற நிறுவனங்களில் ஊழல் குறைவான தீவிரமானது என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. நிர்வாகக் கிளையிலும் ஊழல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு, நீதித்துறையில் ஊழல் என்பது ஒரு தீவிரமான மற்றும் வலுவாக வேரூன்றிய பிரச்சினையாகவும், பொதுமக்களால் பரவலாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் உள்ளது.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்ட, தனது 2007 உலகளாவிய ஊழல் அறிக்கையில், இந்தியாவில் கணக்கெடுக்கப்பட்ட மக்களில் 77 சதவீதம் பேர் நீதித்துறை அமைப்பை ஊழல் நிறைந்ததாக விவரித்ததாகக் கண்டறிந்துள்ளது. அப்போதிருந்து, நீதித்துறையில் ஊழல் குறைந்துள்ளது என்பதைக் காட்ட சிறிய ஆதாரங்கள் உள்ளன. சமீபத்திய பல வழக்குகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன. நீதிமன்ற அவமதிப்பு பயம் மற்றும் ஊழல் நிறைந்த நீதிபதிகளை கணக்கில் கொண்டுவருவதற்கான எந்தவொரு பயனுள்ள முறையும் இல்லாததன் காரணமாக நீதித்துறை ஊழல் பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்படுவது மிகவும் கடினமாக இருக்கும்போது இது நிகழ்கிறது. உயர்நீதித்துறை நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிப்பதற்கு எந்த சுதந்திரமான வழிமுறையும் இல்லை. அரசியலமைப்புரீதியாக பரிந்துரைக்கப்பட்ட ஒரே செயல்முறையானது பதவி நீக்கம் (impeachment) ஆகும். இது நடைமுறையில், இந்த செயல்முறையைப் பயன்படுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. பதவி நீக்க நடவடிக்கைகளைத் தொடங்க, குறைந்தபட்சம் 100 மக்களவை உறுப்பினர்கள் அல்லது 50 மாநிலங்களவை உறுப்பினர்கள் அறிவிப்பில் கையெழுத்திட வேண்டும். இது அரசியல் விருப்பத்தைச் சார்ந்தது. இது புகாரின் தகுதியை மட்டுமே சார்ந்தது அல்ல. பல கடுமையான புகார்கள்மீது எந்த பரிசோதனையோ அல்லது விசாரணையோ மேற்கொள்ளப்படாததால், கிட்டத்தட்ட செயல்படாதது.


உயர்நீதித்துறை நீதிபதிகளுக்கு எதிராக பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை குறித்து மக்களவையில் குறியிடப்பட்ட நட்சத்திரக் கேள்விக்கு (starred question), பிப்ரவரி 13 அன்று சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், இந்திய தலைமை நீதிபதி அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பதவியில் இருக்கும் நீதிபதிகளுக்கு எதிராக 8,630 புகார்கள் பெறப்பட்டதாகவும், அவை உள்ளக செயல்முறையின்கீழ் கையாளப்படுகின்றன என்றும் பதிலளித்தது. இருப்பினும், மிகச் சில புகார்கள் மட்டுமே உள்ளக விசாரணைக் குழுக்களை அமைக்க வழிவகுத்தன என்பதை நாங்கள் அறிவோம். இதன் விளைவாக, கடுமையான குற்றச்சாட்டுகள்கூட முறையான விசாரணையின் கட்டத்தை எட்டாமல் போகலாம். இந்த பொறுப்புணர்வு வழிமுறைகள் ஒருபோதும் பயனற்றதாகிவிடும். மேலும், நீதித்துறை ஒருமைப்பாட்டின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் சிதைக்கும்.



நீதித்துறை ஊழல், நிதி ஊழல் தவிர்த்து பல்வேறு வடிவங்களில் வெளிப்படலாம். அவற்றில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், உறவுமுறை சார்ந்த சலுகை (nepotism), நலன் முரண்பாடு (conflict of interest), அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். உயர் மட்டத்தில் உள்ள ஊழல், உச்சநீதிமன்றத்தின் பல நீதிபதிகள்/தலைமை நீதிபதிகளால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையில், ஆகஸ்ட் 2020-ல், என்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடந்த விசாரணையின்போது, அப்போதைய இந்திய அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், “உயர் நீதித்துறையில் ஊழல் உள்ளது என்று கூறிய உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகளின் பெயர்கள் தன்னிடம் உள்ளன... அவர்களில் ஏழு பேர் ஓய்வு பெற்ற உடனேயே இவ்வாறு கூறினர். அனைவரிடமிருந்தும் என்னிடம் மேற்கோள்கள் உள்ளன...” என்றார்.


நீதித்துறை ஊழலை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். பொது விவாதத்தின் மூலமே அர்த்தமுள்ள திருத்த நடவடிக்கைகளை செயல்படுத்த முடியும். நீதித்துறை விவாதத்தை அடக்க முயலும்போதோ அல்லது தகவல்களுக்கான அணுகலை கட்டுப்படுத்த முயலும்போதோ, குடிமக்களின் மனதில் அவநம்பிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நீதித்துறை ஆய்வுக்கு அப்பாற்பட்டது அல்ல; மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியது என்பதால், NCERT பாடத்திட்டத்தில் நீதித்துறை ஊழல் மற்றும் வழக்கு தாமதங்கள் குறித்த குறிப்புகளை சேர்ப்பது, நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் மிக முக்கியமாக நீதித்துறையில் பரவ வேண்டிய வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய அரசியலமைப்பு மதிப்புகளுக்கு ஏற்பவே உள்ளது என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.


எழுத்தாளர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், நீதித்துறை பொறுப்புக்கூறல் மற்றும் சீர்திருத்தங்களுக்கான பிரசாரத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.


Original article : Prashant Bhushan writes: We need to talk about judicial corruption -Prashant Bhushan

Share:

பாதுகாப்புத் துறையில் அரசாங்கத்தின் தன்னிறைவு இந்தியா முன்முயற்சி (Atmanirbhar Bharat initiative) என்ன? -குஷ்பூ குமாரி, ரோஷ்னி யாதவ்

 தற்போதைய நிகழ்வு : சசி தரூர் குறிப்பிடுவதாவது, கடந்த கால நிகழ்வுகளிலிருந்து வரவேற்கத்தக்க வகையில், 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை, அதன் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை ரூ.7.85 லட்சம் கோடி (தோராயமாக $86.7 பில்லியன்) சாதனை அளவாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட ரூ.6.81 லட்சம் கோடியுடன் ($81.2 பில்லியன்) ஒப்பிடும்போது 15.19 சதவீதம் அதிகமாகும்.


முக்கிய அம்சங்கள் :


இந்த வளர்ச்சியின் முக்கிய உந்துதலானது மூலதன செலவினத்தில் 21.8 சதவீதம் அதிகரிப்பு ஆகும். இது இராணுவ நவீனமயமாக்கலை விரைவுபடுத்துவதற்கும் போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போன்ற மேம்பட்ட தளங்களை வாங்குவதற்கும் ரூ.2.19 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.


குறிப்பிடத்தக்க வகையில், அரசாங்கம் இந்த நவீனமயமாக்கல் நிதியில் கிட்டத்தட்ட 75 சதவீதத்தை உள்நாட்டு கொள்முதலுக்காக ஒதுக்குவதன் மூலம் அதன் தன்னிறைவு இந்தியா முன்முயற்சியை (Atmanirbhar Bharat initiative) தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், வருவாய்க்கான நிதிநிலை அறிக்கை ரூ.3.65 லட்சம் கோடியாக உயர்த்தி, ஆபரேஷன் சிந்தூரைத் (Operation Sindoor) தொடர்ந்து அதிக செயல்பாட்டு தயார்நிலை மற்றும் வழித்தடங்களை உறுதி செய்கிறது.


இந்தியாவின் பாதுகாப்புச் செலவு குறித்து தவிர்க்க முடியாமல் ஆசியாவில் ஆயுதப் போட்டியைத் தூண்டுகிறது என்று சில நாடுகளிலிருந்து குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு புதியதல்ல. இந்தியா தனது இராணுவத்தை தீவிரமாக நவீனமயமாக்க முயற்சிக்கும் போதெல்லாம், சிலர் அதை நிலைத்தன்மைக்கு ஆளாக்குவது, கவலையளிக்கும் அல்லது அதிகப்படியான தேசியவாதமாக விவரிக்கிறார்கள்.

பல ஆண்டுகளாக, இந்தியா அதன் இராஜதந்திரரீதியில் லட்சியங்களுக்கும் அதன் உண்மையான இராணுவத் தயார்நிலைக்கும் இடையில் ஒரு ஆபத்தான இடைவெளியை எதிர்கொண்டுள்ளது. இந்த நாடாளுமன்றக் குழுக்களின் இடைவெளிகள், இராணுவத் தலைவர்கள் மற்றும் சுதந்திரமான ஆய்வாளர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.


எல்லாவற்றிற்கும் மேலாக, தடுப்பது என்பது கோஷங்கள் அல்லது உணர்ச்சிகளைப் பற்றியது அல்ல. இது உண்மையான திறனில் நிலைத்துள்ள ஒரு பொருள் நிலையாகும். எந்தவொரு ஆக்கிரமிப்பும் தோல்வியடையும் அல்லது அதன் மதிப்புக்கு மேல் செலவாகும் என்று நம்பினால் மட்டுமே ஒரு எதிரி தடுக்கப்படுகிறான். ஒரு நாடு அதன் பாதுகாப்பில் போதுமான முதலீடு செய்யவில்லை என்றால், அது அமைதியைப் பெறுவதில்லை. மாறாக, அது அழுத்தம் மற்றும் வற்புறுத்தலுக்கு ஆளாகிறது.


எனவே, இந்தியாவின் சமீபத்திய பாதுகாப்புக்கான செலவின உயர்வு போர்க்குணத்தின் அறிகுறி அல்ல, மாறாக பொறுப்பின் அறிகுறியாகும். நம்பிக்கை அல்லது ஏக்கத்தின் அடிப்படையில் நம்பகமான தடுப்பு கட்டமைக்க முடியாது என்ற புரிதலை இது காட்டுகிறது. கடந்தகால கட்டுப்பாடு தானாகவே எதிர்கால நிலைத்தன்மையை உறுதி செய்யும் என்ற நம்பிக்கையையும் அது நம்பியிருக்க முடியாது.

இந்தியாவின் பாதுகாப்பு சூழல் மிகவும் சிக்கலானதாகிவிட்டதால், குறிப்பாக இதற்கான அங்கீகாரம் தீவிரமானது. பாகிஸ்தானின் இராணுவ நிலைப்பாடு அதன் அணுசக்தி இராஜதந்திரத்துடன் இறுக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. வழக்கமான இராணுவ வலிமையில் உள்ள எந்தவொரு இடைவெளியையும் பயன்படுத்திக் கொள்ள இது வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உள்நாட்டு அரசியல் அழுத்தத்தின் கீழ், பாகிஸ்தான் நிதானத்தைக் காட்டுவதை இந்தியா பாதுகாப்பானது என்று நம்ப முடியாது.


சீனாவும் பாகிஸ்தானும் தங்கள் இராஜதந்திர மற்றும் இராணுவ ஒருங்கிணைப்பை அதிகரித்து வருவதால் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது. இந்தியா நீண்டகாலமாக கவலைப்பட்டு வருகிறது. ஆனால், இப்போது இந்த கவலை மிகவும் உண்மையானதாகவும், வெளிப்படையாகவும் மாறி வருகிறது.


டொனால்ட் டிரம்பின் கீழ் வாஷிங்டனில் இருந்து புவிசார் அரசியல் நிச்சயமற்றத் தன்மையும் வருகிறது. அங்கு உலகளாவிய உறுதிமொழிகள் பெருகிய முறையில் பரிவர்த்தனை சார்ந்ததாகத் தெரிகிறது. அவை நீண்டகால கொள்கைகளைவிட குறுகிய கால ஒப்பந்தங்களைச் சார்ந்திருப்பதாகத் தெரிகிறது. நட்பு அல்லது இல்லாவிட்டாலும், எந்தவொரு வெளிப்புற சக்தியின் கணிக்க முடியாத முடிவுகளையும் இந்தியா சார்ந்து இருக்க விரும்பவில்லை.


இராஜதந்திர சுயாட்சி, ஏதாவது அர்த்தமுள்ளதாக இருந்தால், அதற்கு வலுவான மற்றும் நம்பகமான தேசிய திறன்கள் தேவை. அதன் எல்லைகளைப் பாதுகாக்கவோ, அதன் கடல் பாதைகளைப் பாதுகாக்கவோ அல்லது நெருக்கடியில் விழாமல் ஆரம்ப தாக்குதலையும் தாங்கும் திறன் கொண்டதாகவோ ஒரு நாடு இராஜதந்திரரீதியாக தன்னாட்சி பெற்றதாக இருக்காது. அது பொதுவாகவே பாதிக்கப்படக்கூடியது.


இந்தியா நமது எதிரிகள் உணரப்பட்ட பலவீனத்தைப் பற்றி ஏதேனும் அறிகுறிகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும் பகுதியில், அவர்கள் பாதிப்பை உணர்ந்தால் அவர்கள் விரைவாக பதிலளிக்கிறார்கள். இந்தியா பாதுகாப்பில் குறைவாக முதலீடு செய்யும்போது, ​​அது ஒரு கடுமையான சிக்கலை உருவாக்குகிறது. அதிக எச்சரிக்கைகள் மற்றும் உரத்த கவலைகள் உள்ளன, ஆனால் வலுவான பாதுகாப்புகள் இல்லை. இது இரண்டு சூழ்நிலைகளிலும் மோசமானதை உருவாக்குகிறது. ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையில் இந்தியாவை அழுத்தம் கொடுக்கவோ அல்லது தண்டிக்கவோ முடியும் என்று நம்புபவர்களால் இந்தியா பலவீனமாகத் தோன்றினால், அது மற்ற நாடுகளை ஆபத்துக்களை எடுக்க ஊக்குவிக்கக்கூடும். இந்தியாவின் தற்போதைய பாதுகாப்பு செலவினங்களின் நோக்கம் அந்த ஆபத்தான சிக்கலில் விழுவதைத் தவிர்க்க அது முயல்கிறது.


மிகவும் பாதுகாப்பான இந்தியா மிகவும் நிலையான ஆசியாவை உறுதி செய்கிறது. அதுதான் எளிமையான ஆனால் இது பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. நிலைத்தன்மை என்பது விருப்பமான சிந்தனையிலோ அல்லது தார்மீக அறிவுரையிலோ வருவதில்லை. இது உண்மையான திறனிலிருந்து வருகிறது. மேலும், நெருக்கடிகளை திறம்பட கையாள முடியும் என்ற அமைதியான நம்பிக்கையிலிருந்தும் இது வருகிறது. பாதுகாப்பு நிதிநிலை அறிக்கை கொள்கையில் ஒரு திருத்தத்தைக் குறிக்கிறது. இது திறனை வலுப்படுத்தவும் சமநிலையை மீட்டெடுக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்தியா தனது பாதுகாப்பை வலுப்படுத்தத் தவறினால், அது தொடர்ந்து குறைவாக முதலீடு செய்தால், தாமதப்படுத்தினால் அல்லது ஒத்திவைத்தால் உண்மையான திறனின் உறுதிப்படுத்தும் விளைவு இல்லாமல் அதிகரித்த பாதுகாப்பின்மைக்கு ஆளாகிறோம். உண்மையான ஆபத்து என்னவென்றால், எந்த நிலைப்படுத்தும் விளைவும் இருக்காது. உண்மையான ஆபத்து என்னவென்றால், பல ஆண்டுகளாக, அது மிகக் குறைவாகவே செலவிட்டது.


இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சமீபத்திய உயர்வு இராணுவவாதத்தின் அடையாளம் அல்ல. இது முதிர்ச்சியின் அடையாளம். ஆயுதங்கள் இல்லாததால் அல்ல, நம்பகமான தடுப்பு இருப்பதால் அமைதி பாதுகாக்கப்படுகிறது என்பதை அங்கீகரிக்கும் நிலையாகப் பார்க்கப்படுகிறது. தடுப்பு ஒருங்கிணைப்பு என்பது தவறுக்கான வாய்ப்பு குறைந்து வரும் ஒரு பிராந்தியத்தில் நிலைத்தன்மைக்கு அடித்தளமாகும். இந்தியா இறுதியாக தனது சொந்த பாதுகாப்பிற்கான உண்மையான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது.


உங்களுக்குத் தெரியுமா? 


பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 2025-26-ஆம் ஆண்டில், டிசம்பர் 2025 வரை, ரூ.2.10 லட்சம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களை முடித்துள்ளது. மேலும், இதுவரை ரூ.3.50 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களுக்கு தேவையை ஏற்றுக்கொள்வதற்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன.


2026-27 நிதியாண்டில் உள்நாட்டுத் தொழில்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்காக அரசாங்கம் ரூ.1.39 லட்சம் கோடியை, அதாவது மூலதன கையகப்படுத்தல் நிதிநிலை அறிக்கையில் 75 சதவீதத்தை ஒதுக்கியது.


2025-26-ஆம் ஆண்டில், அரசாங்கம் ரூ.6.81 லட்சம் கோடியை பாதுகாப்பு நிதிநிலை அறிக்கைக்கு ஒதுக்கியது. இது 2024–25-ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட 6 சதவீதம் அதிகமாகும்.


Original article : What is the Atmanirbhar Bharat initiative of the government in the defence sector? -Khushboo Kumari, Roshni Yadav

Share: