இந்தியாவில் கல்விச் செலவுகளின் வெளிப்படையான உண்மை -வச்சஸ்பதி சுக்லா, சந்தோஷ் குமார் தாஷ்

'விரிவான கூறுநிலை ஆய்வு: கல்வி' (Comprehensive Modular Survey: Education) என்ற தலைப்பில் தேசிய மாதிரி ஆய்வின் 80வது சுற்று கண்டுபிடிப்பு, தரமான கல்வியை பெறுவதில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கிறது.


இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21A (86வது திருத்தம், 2002) 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமையை வழங்குகிறது. 2020ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை இந்தப் பார்வையை மேலும் விரிவுபடுத்தி, 3 முதல் 18 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் தொடக்கக் கல்வி முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகள் அடங்கும்.2030-ஆம் ஆண்டுக்குள் தொடக்கம் முதல் மேல்நிலைப் பள்ளி (secondary level) வரையிலான கல்வியை அனைவருக்கும் சென்றடையச் செய்வதே தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும். கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது கொள்கையாக இருந்தாலும், இன்றும் பெரும்பான்மையான மாணவர்கள் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளிலேயே பயில்கின்றனர். அங்கு கணிசமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால், பல மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களுக்கு செல்கின்றனர். இது நிதிச் சுமையை அதிகரிக்கிறது.


அரசியலமைப்புச் சட்டத்தின்படி இலவசக் கல்வி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் அடிப்படைப் பள்ளிப்படிப்பு எவ்வளவு விலை உயர்ந்தது? பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப எவ்வளவு செலவு செய்கிறார்கள் - அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கொள்கையளவில் அரசாங்கத்திடம் உள்ள ஒரு கடமை எது? "விரிவான கூறுநிலை ஆய்வு: கல்வி (Comprehensive Modular Survey: Education)” என்ற தலைப்பில் தேசிய மாதிரி ஆய்வின் 80வது சுற்று (ஏப்ரல்-ஜூன் 2025) கணக்கெடுப்பு, இந்தக் கேள்விகளை ஆராய்வதற்கான சமீபத்திய தரவை வழங்குகிறது.


பள்ளிகளில் மாணவர் சேர்க்கை போக்குகள்


தேசிய அளவில், 55.9% மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலும், 11.3% மாணவர்கள் தனியார் உதவி பெறும் பள்ளிகளிலும், 31.9% மாணவர்கள் தனியார் உதவி பெறாத பள்ளிகளிலும் கல்வி கற்று வருகின்றனர். தனியார் பள்ளிகளில் சேர்க்கை ஊரக பகுதிகளை விட நகர்ப்புறங்களில் அதிகமாக உள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள மொத்த பள்ளி மாணவர்களில், 51.4% பேர் தனியார் பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர். அதே, நேரத்தில் இந்த பங்கு ஊரக பகுதிகளில் 24.3% ஆகும். இருப்பினும், தனியார் பள்ளி சேர்க்கையில் பாலின இடைவெளி குறைவாக உள்ளது.—ஆண் குழந்தைகளில் 34%, பெண் குழந்தைகளில் 29.5% மட்டுமே தனியார் பள்ளிகளில் கல்வி கற்று வருகின்றனர்.


ஊரக பகுதிகளில், தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் அதிகமாகச் சேர்கிறார்கள். தனியார் பள்ளிகளில் சேர்க்கை முன் தொடக்கக் கல்வியில் 28.1%, தொடக்கக் கல்வியில் 25.9%, நடுநிலை மற்றும் இடைநிலைக் கல்வியில் 21%, மற்றும் உயர்நிலைக் கல்வியில் 25.8% ஆகும். இதற்கு நேர்மாறாக, நகர்ப்புறங்களில், தனியார் பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் பங்கு அதிகமாக உள்ளது - முன் தொடக்கக் கல்வியில் 62.9%, தொடக்கக் கல்வியில் 55.3%, நடுநிலைக் கல்வியில் 49.8%, இடைநிலைக் கல்வியில் 44% மற்றும் உயர்நிலைக் கல்வியில் 42.3% ஆகும். கல்வியின் தரம் அதிகரிக்கும் போது, ​​நகர்ப்புறங்களில் தனியார் பள்ளிகளில் சேர்க்கை குறைகிறது.


கல்வி குறித்த தேசிய மாதிரி ஆய்வின் முந்தைய சுற்றுடன் (75வது சுற்று; ஜூலை 2017-ஜூன் 2018) ஒப்பிடும்போது, ​​தனியார் பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் பங்கு அதிகரித்துப்பது தெளிவாக தெரிகிறது. ஊரக பகுதிகளில், தனியார் பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் பங்கு தொடக்க நிலையில் 20.9%-இலிருந்து 25.9%ஆகவும், நடுத்தர அளவில் 16.7%-இலிருந்து 21%ஆகவும், உயர்நிலைப் பள்ளியில் 17.3%-இலிருந்து 21.1%ஆகவும் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில், தனியார் பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் பங்கு தொடக்க நிலையில் 50.5%-இலிருந்து 55.3% ஆகவும், நடுத்தர அளவில் 41.8% இலிருந்து 49.8% ஆகவும் அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேருவதால் கல்விக்கான செலவு  அதிகரித்து வருகிறது.


அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் சேர்க்கை என்பது கல்விச் செலவுடன் (educational expenditure) நெருக்கமாகத் தொடர்புடையது. பல மாணவர்கள் இன்னும் பாடநெறிக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளது என்று கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. ஊரக பகுதிகளில், அரசுப் பள்ளி மாணவர்களில் 25.3% பேரும், தனியார் பள்ளி மாணவர்களில் 98.2% பேரும் பாடநெறி கட்டணம் செலுத்துவதாக தெரிவித்தனர். நகர்ப்புறங்களில், அரசுப் பள்ளி மாணவர்களில் 34.7% பேரும், தனியார் பள்ளி மாணவர்களில் 98% பேரும் பாடநெறி கட்டணம் செலுத்துவதாக தெரிவித்தனர்.


அரசு பள்ளி கட்டணம் தனியார் பள்ளி கட்டணங்களை விட குறைவாக இருப்பதாக கணக்கெடுப்பு காட்டுகிறது. ஊரக பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில், முன் தொடக்கக் கல்வியில் ஆண்டு கட்டணம் ரூ.823இலிருந்து மேல்நிலைக் கல்வியில் ரூ.7,308 வரை உயர் நடுநிலைக் கல்வியில் இருக்கும் என்றும், நகர்ப்புற அரசுப் பள்ளிகளில், அவை ரூ.1,630இலிருந்து ரூ.7,704 வரை இருக்கும் என்றும் கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது. தனியார் பள்ளிகளில், கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. ஊரக பகுதிகளில் தனியார் பள்ளிகள் ரூ.17,988 முதல் ரூ.33,567 வரை வசூலிக்கின்றன, நகர்ப்புற தனியார் பள்ளிகள் ஆண்டுக்கு ரூ.26,188 முதல் ரூ.49,075 வரை வசூலிக்கின்றன.


இந்த புள்ளிவிவரங்களை மாதம் மாதம் மாற்றும்போது, ​​தனியார் பள்ளிக் கல்வியின் நிதிச் சுமை தெளிவாக வெளிப்படுகிறது. ஊரக பகுதிகளில், தனியார் பள்ளிக் கல்விக்கான மாதாந்திரச் செலவு முன்பள்ளிக்கு ரூ.1,499 முதல் மேல்நிலைக் கல்விக்கு ரூ.2,797 வரை இருக்கும். நகர்ப்புறங்களில், இந்த புள்ளிவிவரங்கள் கணிசமாக உயர்ந்து, ரூ.2,182 முதல் ரூ.4,089 வரை இருக்கும். வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) 2023-24ஆம் ஆண்டு  கணக்கெடுப்பின் மாதாந்திர தனிநபர் செலவினத்துடன் (Monthly Per Capita Expenditure (MPCE)) ஒப்பிடும்போது, ​​முன்பள்ளி மட்டத்தில் தனியார் பள்ளிக் கல்விக்கான செலவு, ஏழ்மையான 5% குடும்பங்களின் மாத வருமானத்திற்குச் சமமாக இருப்பது தெளிவாக வெளிப்படுகிறது. அதே, நேரத்தில் உயர்நிலைக் கல்வி மட்டத்தில் உள்ள செலவு மூன்றாம் வருமான பத்தில் உள்ள குடும்பங்களின் MPCE உடன் ஒத்துப்போகிறது. தரமான கல்வியைப் பெறுவதில் பல குடும்பங்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை இந்த வேறுபாடு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


தனியார் பயிற்சி (Private Tuition) பெறும் விகிதமும் செலவும்


நடப்பு கல்வியாண்டில் ஒரு மாணவர் தனியார் பயிற்சி எடுத்துக் கொண்டாரா அல்லது எடுத்தாரா என்பது குறித்த தகவல்களை இந்த கணக்கெடுப்பு சேகரித்தது. இந்த கணக்கெடுப்பில், தனியார் பயிற்சி குறித்த தகவல்கள் பள்ளிக் கல்விக்கான செலவினத்தின் ஒரு அங்கமாக சேர்க்கப்படாமல் தனித்தனியாக சேகரிக்கப்பட்டன. ஊரக பகுதிகளில் 25.5% குழந்தைகளும் நகர்ப்புறங்களில் 30.7% குழந்தைகளும் தனியார் பயிற்சி மேற்கொள்வதாக கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. ஊரக பகுதி மற்றும் நகர்ப்புறங்களில், நாம் கீழ் நிலையிலிருந்து உயர் நிலைக் கல்விக்கு மாறும்போது தனியார் பயிற்சி எடுக்கும் மாணவர்களின் விகிதம் அதிகரிக்கிறது. கிராமப்புறங்களில், இது முன் தொடக்கக் கல்வியில் 10.7%, தொடக்கக் கல்வியில் 21.6%, நடுநிலைக் கல்வியில் 29.1%, இடைநிலைக் கல்வியில் 36.7% மற்றும் உயர்நிலைக் கல்வியில் 33.1% ஆகும். நகர்ப்புறங்களில், முன் தொடக்கக் கல்வியில் 13.6%, தொடக்கக் கல்வியில் 26.6%, நடுநிலைக் கல்வியில் 31%, இடைநிலைக் கல்வியில் 40.2% மற்றும் உயர்நிலைக் கல்வியில் 44.6% ஆகும்.


நடப்பு கல்வியாண்டில், ஒரு மாணவருக்கு தனியார் பயிற்சிக்கான சராசரி செலவு, ஊரக பகுதிகளை விட நகர்ப்புறத்தில் அதிகமாக உள்ளது. நகர்ப்புறங்களில் இது ரூ.13,026 ஆகவும், ஊரக பகுதிகளில் ரூ.7,066 ஆகவும் உள்ளது. நாம் கீழ்நிலைக் கல்வியிலிருந்து உயர்நிலைக் கல்விக்கு மாறும்போது, ​​தனியார் பயிற்சிக்கான சராசரி செலவு அதிகரிக்கிறது. கிராமப்புறங்களில், முன் தொடக்கக் கல்விக்கு ரூ.3,980, தொடக்கக் கல்விக்கு ரூ..4,825, நடுநிலைக் கல்விக்கு ரூ.6,043, இடைநிலைக் கல்விக்கு ரூ.8,616 மற்றும் உயர்நிலைக் கல்விக்கு ரூ.13,803 ஆக உள்ளது. நகர்ப்புறங்களில், முன் தொடக்கக் கல்விக்கு ரூ.5,815, தொடக்கக் கல்விக்கு ரூ.7,947, நடுநிலைக் கல்விக்கு ரூ.10,765, இடைநிலைக் கல்விக்கு ரூ.16,415 மற்றும் உயர்நிலைக் கல்விக்கு ரூ.22,394 ஆக உள்ளது.


அதிக வருமானம், படித்த பெற்றோர் மற்றும் நகரங்களில் வசிக்கும் குடும்பங்கள் தனியார் கல்விக்கு அதிக செலவு செய்வதாக ஆராய்ச்சி காட்டுகிறது. தனியார் பயிற்சி மாணவர்களின் கற்றலை மேம்படுத்த உதவுகிறது என்றும் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.


இதன் விளைவாக, கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நிதி ஆதாரங்களைக் கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனியார் பயிற்சி வகுப்பில் முதலீடு செய்ய அதிக வாய்ப்புள்ளது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே அதிகமாக உள்ளது. தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தாலும், பல ஆசிரியர்களுக்கு ஊதியம் போதுமானதாக இல்லை. இதனால் மாணவர்கள் பாடத்தைப் புரிந்துகொள்ளவும், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறவும் தனியார் பயிற்சியையே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும், சில அறிஞர்கள் கூறுவது போல, தனியார் பயிற்சி வகுப்புக்கு அனுப்புவது இன்றைக்கு பல குடும்பங்களிடையே ஒரு “கௌரவ அங்கீகாரமாக” (symbol of prestige) மாறிவிட்டது.


பொதுநிதியால் நடத்தப்படும் பள்ளிகளை வலுப்படுத்துதல்


தேசிய மாதிரி ஆய்வின் 80வது சுற்று கண்டுபிடிப்பு, இந்தியாவில் கல்விச் செலவு குறித்த கடுமையான உண்மையைக் காட்டுகின்றன. அரசியலமைப்புச் சட்டம் இலவசக் கல்விக்கு உத்தரவாதம் அளித்திருந்தாலும், கணிசமான மாணவர்கள் (கிராமப்புறத்தில் 24.3%, ஊரக பகுதிகளில் 51.4%) கட்டணம் அதிகம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளிலேயே கல்வி கற்று வருகின்றனர். தனியார் கல்விக் கட்டணம் கூடுதல் செலவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் பல குடும்பங்களுக்கு, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு கல்வியை பெறுவது கடினமாகிறது.


இந்தப் போக்கு தரமான கல்வியை அணுகுவதில் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அடிப்படை மற்றும் அனைவருக்குமான கல்வியின் கொள்கையை அச்சுறுத்துகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது.


மேலும், தனியார் பயிற்சி என்ற அதிகரித்து வரும் நிகழ்வு கற்றல் ஏற்றத்தாழ்வுகளை (learning inequalities) மேலும் அதிகப்படுத்துகிறது. இதில் பண வசதி படைத்த குடும்பங்கள் ஏழை மற்றும் பின்தங்கிய குடும்பங்களை விட முன்னணியில் உள்ளனர். எனவே, பொது நிதியுதவி பெறும் பள்ளிகளில் கற்றல் தரத்தை வலுப்படுத்துவதன் மூலம் இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்த முடியும்.


இந்த சவால்களை நிவர்த்தி செய்வதற்கு அவசர சீர்திருத்தங்கள் தேவை. அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் அணுகலை வலுப்படுத்துவது கல்வி ஒரு சலுகையாக அல்ல, ஒரு உரிமையாக இருப்பதை உறுதி செய்வதற்கு மிக முக்கியமானது. பொருளாதார வல்லுநர்களான அங்குஷ் அகர்வால், பருல் குப்தா மற்றும் டெபாசிஸ் மொண்டல் ஆகியோரால் தி ஜர்னல் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸில் 2024 இல் வெளியிடப்பட்ட ஆய்வில், தனியார் கல்விக் கட்டணம் பள்ளி தரக் குறிகாட்டிகளுடன் எதிர்மறையாக தொடர்புடையது என்பதைக் கண்டறிந்துள்ளது. இதன் பொருள் 'சிறந்த' பள்ளிகளில் உள்ள மாணவர்கள் பயிற்சிக் கல்வியை குறைவாக நம்பியுள்ளனர். எனவே, கற்றல் தரத்தை வலுப்படுத்துவது வெவ்வேறு சமூக-பொருளாதார பின்னணியைச் சேர்ந்த மாணவர்களிடையே விரிவடையும் இடைவெளியைக் குறைக்க உதவும். இந்த முயற்சிகள் மூலம் மட்டுமே இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் உண்மையிலேயே சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வியை அடைவதை நோக்கி நாம் நகர முடியும்.


இந்த சவால்களை எதிர்கொள்வதற்கு அவசர சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் அணுகலை வலுப்படுத்துவது, கல்வி ஒரு சலுகையாக அல்ல, ஒரு உரிமையாக இருப்பதை உறுதி செய்வதற்கு இது போன்ற நடவடிக்கை முக்கியமானது. பொருளாதார வல்லுநர்களான அங்குஷ் அகர்வால், பருல் குப்தா மற்றும் டெபாசிஸ் மொண்டல் ஆகியோரால் 2024 ஆம் ஆண்டு The Journal of Development Studies வெளியிடப்பட்ட ஆய்வில், தனியார் கல்வி பள்ளி தர குறிகாட்டிகளுடன் எதிர்மறையாக தொடர்புடையது என்பதைக் கண்டறிந்துள்ளது. சிறந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு குறைவான பயிற்சி தேவைப்படுகிறது. கற்றல் தரத்தை மேம்படுத்துவது பணக்கார மற்றும் ஏழை மாணவர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவும். இந்த வழியில் கல்வியை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நியாயமான மற்றும் உள்ளடக்கிய கல்வி பெறுவதை உறுதி செய்ய முடியும்.


வச்சஸ்பதி சுக்லா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனத்தில் (Sardar Patel Institute of Economic and Social Research (SPIESR)) உதவிப் பேராசிரியராக உள்ளார். சந்தோஷ் குமார் தாஷ் குஜராத்தில் உள்ள ‘திரிபுவன்’ சகாரி பல்கலைக்கழகத்தின் ஆனந்த் கிராமப்புற மேலாண்மை நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.

Original link:

The stark reality of educational costs in India 


 

Share:

போதைப்பொருள் சோதனைகள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதைக் குறிக்கிறது? -சி.பி.பி. ஸ்ரீவஸ்தவா

சம்மதம் இல்லாமல் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் சோதனைக்கு அனுமதி அளித்த பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ஏன் ரத்து செய்தது?


கட்டாய அல்லது விருப்பமில்லாத போதைப்பொருள் சோதனைகள் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அம்லேஷ் குமார் மற்றும் பீகார் மாநிலம் (2025) வழக்கில் அத்தகைய சோதனையை அனுமதித்த பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை இந்தத் தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவு செல்வி மற்றும் கர்நாடக மாநிலம் (2010) வழக்கில் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


போதைப்பொருள் சோதனை என்றால் என்ன?


போதைப்பொருள் சோதனை என்பது ஒரு புலனாய்வு முறையாகும். இதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சோடியம் பென்டோதால் போன்ற மயக்க மருந்துகள் செலுத்தப்படும். இவை அவரது மனத்தடைகளையும் பகுத்தறியும் திறனையும் குறைத்து, மறைத்த உண்மைகளை வெளிப்படுத்த உதவும் என்று கருதப்படுகிறது.  இந்த முறையானது பொய் கண்டறியும் சோதனை அல்லது மூளை வரைபடம் (brain mapping) மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை வரைபடமாகப் புரிந்துகொள்ள உதவும் தொழில்நுட்பம் போன்ற ஒரு வன்முறையற்ற உத்தியாகக் கருதப்படுகிறது. 


இந்த சோதனைகள் ஏன் அரசியலமைப்பு ரீதியாக சிக்கலானவை?


அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 20(3), குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரைத் தனக்கு எதிராகச் சாட்சியமளிக்க வற்புறுத்துவதிலிருந்து பாதுகாக்கிறது. இதன் பொருள், எவரும் தமக்கு எதிராகச் சாட்சியம் சொல்லும்படி கட்டாயப்படுத்தப்பட முடியாது என்பதாகும்.


உச்ச நீதிமன்றம், செல்வி vs  கர்நாடக மாநிலம் (2010) தீர்ப்பின்  வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தன்னார்வ ஒப்புதல் இல்லாமல் இத்தகைய சோதனைகளை நடத்துவது அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும், அவற்றிலிருந்து பெறப்பட்ட எந்தவொரு தகவலும் ஆதாரமாகப் பயன்படுத்தப்பட முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 20-ன் மூன்று உட்பிரிவுகளும் இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பின் மையமாக அமைகின்றன. உட்பிரிவு (1) முன்னோக்கு விளைவுச் சட்டங்களை (ex-post facto laws) தடை செய்கிறது—அதாவது, ஒரு செயல் செய்யப்பட்ட பிறகு, அதை குற்றமாக்கும் சட்டங்களை இது தடை செய்கிறது. உட்பிரிவு (2): ஒரே குற்றத்திற்காக ஒரு நபரை இரண்டு முறை வழக்கு தொடர்ந்து தண்டிக்க முடியாது (இரட்டை ஆபத்து தடுப்பு). உட்பிரிவு (3): யாரையும் தனக்குத் தானே குற்றம் சாட்டும் வகையில் சாட்சி சொல்ல வற்புறுத்த முடியாது (சுய குற்றச்சாட்டிலிருந்து பாதுகாப்பு) என்று தெளிவுபடுத்துகிறது.


ஒரு ஜனநாயக குற்றவியல் நீதி அமைப்பு, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகளையும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும். தனக்கு எதிராகச் சாட்சியமளிக்கும் உரிமைக்கு எதிரான உரிமையை மீறுவது ஜனநாயக விழுமியங்களை கடுமையாகப் பாதிக்கிறது. தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் மற்றும் தனிமையுரிமை (Right to Privacy) உரிமையை உள்ளடக்கிய சட்டப்பிரிவு-21 (Article 21) மிகவும் முக்கியமானது. குற்றம் சாட்டப்பட்டவரின் தெளிவான ஒப்புதல் இல்லாமல் செய்யப்படும் அத்தகைய சோதனைகள் எதுவும் இந்த அடிப்படை மனித உரிமையை மீறுவதாகவே கருதப்படும் என்று தெரிவிக்கின்றனர். 


மேலும், மேனேகா காந்தி வழக்கில் (1978) உச்சநீதிமன்றம் கூறியவாறு, அரசியலமைப்பின் பிரிவு-14 (சமத்துவ உரிமை), பிரிவு-19 (பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்), பிரிவு-21 (வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம்) ஆகிய மூன்றும் சேர்ந்து 'பொன் முக்கோணத்தை' (Golden Triangle) உருவாக்குகின்றன. இதன்படி, தனியுரிமையை மீறுவது வாழ்வுரிமையையும் தனிநபர் சுதந்திரத்தையும் மீறுவதாகும். எனவே, அது முழு பொன் முக்கோணத்தையே மீறுவதாகக் கருதப்படும் என்று கூறப்படுகிறது. 


சாட்சிய மதிப்பு பற்றி நீதிமன்றங்கள் என்ன கூறியுள்ளன?


இங்கே மேலும் இரண்டு வழக்குச் சட்டங்கள் முக்கியமானவை. மனோஜ் குமார் சைனி vs மத்தியப் பிரதேச மாநிலம் (2023) மற்றும் வினோபாய் எதிர் கேரளா மாநிலம் (2025) ஆகிய வழக்குகளில், போதைப்பொருள் சோதனை முடிவுகள் குற்றத்தை நிரூபிக்க முடியாது என்று நீதிமன்றங்கள் கூறின. அதன் மூலம் பெறப்பட்ட எந்தவொரு தகவலும் விசாரணைக்கு உதவலாம் என்கின்றனர். ஆனால், அது மற்ற ஆதாரங்களால் ஆதரிக்கப்பட வேண்டும். போதைப்பொருள் சோதனைக்கு சம்மதம் அளிப்பது, தெரிவிக்கப்பட்ட சம்மதத்தின் (informed consent) அடிப்படையில், ஒரு நீதிபதி முன் கொடுக்கப்பட வேண்டும் மற்றும் சரியான மருத்துவ, சட்ட, மற்றும் செயல்முறை சார்ந்த பாதுகாப்புகளுடன் செய்யப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறுகிறது.


அரசியலமைப்புச் சட்டப்பிரிவு-21-ல் உள்ள 'சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறை' (procedure established by law) என்ற சொற்றொடர், எந்தவொரு சட்டப்பூர்வ நடைமுறையும் நியாயமானதாக இருக்க வேண்டும் என்று பொருள்படும். ஆக்கிரமிப்பு அல்லாத சோதனைகளை (non-invasive tests) மேற்கொள்வதற்கு முன், அனைத்து நடைமுறைப் பாதுகாப்புகளும் (procedural safeguards) பின்பற்றப்பட வேண்டும். ஒரு குற்றஞ்சாட்டப்பட்ட நபர், இந்திய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) 253-வது பிரிவின்கீழ் தற்காப்பு ஆதாரம் அளிக்கும் போது, போதைப்பொருள் பகுப்பாய்வு சோதனைக்கு தானாக முன்வந்து ஒப்புக் கொள்ளலாம். ஆனால், அதை கட்டாயமாகக் கோரும் முழு உரிமை அவருக்கு இல்லை என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.


அறிவிக்கப்பட்ட சம்மதத்தின் முக்கிய நோக்கம், ஒவ்வொரு நபரின் தன்னாட்சி உரிமை (autonomy) ஆகும். இது இயற்கை நீதி (natural justice) கொள்கையுடன் தொடர்புடையது. ஒருவரின் முழுசம்மதத்துடன் மட்டுமே செய்யப்படும் செயலே நெறிமுறைக்கு உட்பட்டது என்று தத்துவஞானி இம்மானுவேல் கான்ட் (Immanuel Kant) கூறினார். எனவே, ஒருவரை பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவது நெறிமுறை கொள்கைகளுக்கும் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் விழுமியங்களுக்கும் எதிரான செயலாகும்.


சி.பி.பி. ஸ்ரீவஸ்தவா டெல்லியில் உள்ள பயன்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் தலைவராக உள்ளார்.

Original link:

What does the Supreme Court’s ruling on narco tests mean?


Share: