பாகிஸ்தான் ஆகஸ்ட் 14 அன்றும், இந்தியா ஆகஸ்ட் 15 அன்றும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது ஏன்?

 இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஒரே நாளில் சுதந்திரம் அடைந்த நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை ஏன் கொண்டாடுகிறது. 


ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு நாள் முன்னதாக, பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14 அன்று கொண்டாடுகிறது. அதற்கான காரணம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.


தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேதி


பிப்ரவரி 1947-ல், பிரிட்டனில் கிளெமென்ட் அட்லீயின் தொழிற்கட்சி அரசாங்கம் லூயிஸ் மவுண்ட்பேட்டனை இந்தியாவிற்கான ஆங்கிலேய பிரபு நியமித்தது. ஜூன் 30, 1948-க்குள் இந்தியர்களுக்கு சுதந்திரம் வழங்கும் அதிகாரம் மவுண்ட்பேட்டனுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், சி ராஜகோபாலாச்சாரி பின்னர், ஜூன் 1948 வரை மவுண்ட்பேட்டன் காத்திருந்திருந்தால், "பரிமாற்றம் செய்ய எந்த அதிகாரமும் இருந்திருக்காது" என்று குறிப்பிட்டார்.


வளர்ந்து வரும் வகுப்புவாத மோதல்கள் மற்றும் மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமையை மாற்றியமைக்கும் சூழ்நிலையில், மவுண்ட்பேட்டன் அதிகாரத்தை மாற்றும் தேதியை ஆகஸ்ட் 1947-க்கு மாற்ற முடிவு செய்தார். இது வன்முறை மற்றும் கடுமையான மோதலைத் தடுக்கும் என்று அவர் நம்பினார். இருப்பினும் பின்னோக்கிப் பார்த்தால், இது ஒரு தவறாகப் பார்க்கப்பட்டது. வன்முறை தீவிரமடைவதற்கு முன்னர் ஆங்கிலேயர் வெளியேற வேண்டும் என்று மவுண்ட்பேட்டன் விரும்பினார்.


ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம்


இந்திய சுதந்திர மசோதாவிற்கு (Indian Independence Bill) மவுண்ட்பேட்டன் உள்ளீடு வழங்கினார். ஜூலை 4, 1947-ல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில் (House of Common) இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, இரண்டு வாரங்களில் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி ஆகஸ்ட் 15, 1947 அன்று முடிவடையும் என்று அந்த மசோதா கூறுகிறது. அந்த தேதியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு புதிய ஆதிக்க நாடுகளாக நிறுவப்படும். இருப்பினும், புதிய நாடுகளின் எல்லைகள் ஆகஸ்ட் 17 வரை வெளியிடப்படாது என்று குறிப்பிட்டிருந்தது.


மவுண்ட்பேட்டன் பின்னர், லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லாபியரின் நள்ளிரவில் சுதந்திரம் (Freedom at Midnight) நூலில் 1975-ல் மேற்கோள் காட்டியபடி, “நான் தேர்ந்தெடுத்த தேதி எதிர்பாராதது” என்று கூறினார். மேலும், “முழு நிகழ்வையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைக் காட்ட விரும்புவதாக அவர் கூறினார். மேலும், ஒரு தேதியை முடிவுசெய்துவிட்டோமா என்று அவர்கள் கேட்டபோது, ​​​​அது விரைவாக அமைய வேண்டும் என்று எனக்குத் தெரியும். அந்த நேரத்தில், நான் சரியான தேதியை குறிப்பிடவில்லை. ஆனால், ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் அதற்கான தேதி இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால், ஆகஸ்ட் 15-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தேன். ஏன்? ஏனென்றால் அது ஜப்பான் சரணடைந்ததின் இரண்டாம் ஆண்டாக இருந்தது” என்றார்.

 

ஆகஸ்ட் 15, 1945 அன்று, ஜப்பானிய பேரரசர் ஹிரோஹிட்டோ, பதிவு செய்யப்பட்ட வானொலி உரையில் நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. தென்கிழக்கு ஆசிய கட்டளையின் தலைமை கூட்டணி தளபதி என்ற முறையில், மவுண்ட்பேட்டன், செப்டம்பர் 4, 1945 அன்று சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வமாக ஜப்பான் சரணடைதலில் கையெழுத்திட்டார். 


வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, காந்திக்குப் பிறகு இந்தியா-2007 (India After Gandhi-2007) என்ற புத்தகத்தில் தேசியவாத உணர்வைக் காட்டிலும் ஏகாதிபத்திய பெருமையுடன் எதிரொலித்த ஒரு நாளில் சுதந்திரம் வந்தது என்று எழுதினார். காங்கிரஸின் பூர்ணா ஸ்வராஜ் பிரகடனத்திற்குப் (Purna Swaraj Declaration) பிறகு 1930 முதல் சுதந்திர தினமாக அனுசரிக்கப்படும் ஜனவரி 26-ம் தேதியை பல இந்தியர்கள் விரும்பியிருப்பார்கள். 


பாகிஸ்தான் வழக்கு 


ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தான் தனது சுதந்திரத்தை கொண்டாடுவது ஏன்? அதற்கு ஒரு நாள் முன்னதாக சுதந்திரம் கிடைத்ததா? 


இல்லை. இந்திய சுதந்திர மசோதா (Indian Independence Bill) ஆகஸ்ட் 15-ஐ இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் சுதந்திர தேதியாக தேர்ந்தெடுத்தது. பாகிஸ்தான் வெளியிட்ட முதல் தபால் தலையில் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் காயிதே-ஆசாம் (மாபெரும் தலைவர்) முகமது அலி ஜின்னாவும் ஆகஸ்ட் 15-ஐ சுதந்திர தினமாக அங்கீகரித்தார். புதிதாக சுதந்திரம் பெற்ற பாகிஸ்தானுக்கு தனது முதல் உரையில், ஜின்னா, "ஆகஸ்ட் 15 சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட பாகிஸ்தானின் பிறந்த நாள்” என்று அறிவித்தார். தனது தாயகத்தைப் பெறுவதற்காக கடந்த சில ஆண்டுகளில் பெரும் தியாகங்களைச் செய்த முஸ்லிம் தேசத்தின் விதியின் நிறைவை இது குறிக்கிறது. 


 

ஆகஸ்ட் 14-க்கு மாற்றப்பட்டது இரண்டு காரணங்களுக்காக 1948-ல் நடந்தது. முதலாவதாக, அதிகார பரிமாற்ற விழா ஆகஸ்ட் 14, 1947 அன்று கராச்சியில் பகலில் நடந்தது. மவுண்ட்பேட்டன் அங்கு விழாவை முடித்துவிட்டு விமானம் மூலம் புதுடெல்லி சென்றார். புது தில்லியில் விழா ஆகஸ்ட் 14 இரவு 11 மணிக்கு தொடங்கியது மற்றும் அதிகாரப் பரிமாற்றம் நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக நடைபெற்றது. இரண்டாவது, ஆகஸ்ட் 14, 1947, ரம்ஜானின் 27 வது நாள், இது இஸ்லாத்தில் மிகவும் புனிதமான தேதியாகப் பார்க்கப்பட்டது.


1948-ம் ஆண்டு முதல், பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இருப்பினும், இந்தியா ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை கடைபிடிக்கிறது.



Original article:

Share:

சமீபத்திய குரங்கம்மை பரவல் ஏன் 'சர்வதேச அவசர நிலையாக’ அறிவிக்கப்பட்டது? -அனோனா தத்

 உலக சுகாதார அமைப்பின் (world health organization) தரவுகளின்படி, 2022-முதல் 116 நாடுகளில் இருந்து குறைந்தது 99,176 நோயாளிகளில், குரங்கம்மை காரணமாக 208 இறப்புகள் பதிவாகியுள்ளன.


உலக சுகாதார அமைப்பு இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக குரங்கம்மை பரவல் காரணமாக சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை (Public health emergency of international concern (PHEIC)) அறிவித்துள்ளது. இது ஜூலை 2022 மற்றும் மே 2023-க்கு இடையில் அதிகரித்ததன் காரணமாக  இது போன்ற சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலை அறிவிப்பைப் வெளியிடுகிறது. காங்கோ ஜனநாயகக் குடியரசு (Democratic Republic of Congo (DRC)) மற்றும் அருகிலுள்ள நாடுகளில் கடந்த சில நாட்களாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 


குரங்கம்மை  (Mpox) என்றால் என்ன?


Mpox, முன்பு குரங்கம்மை என்று அழைக்கப்பட்டது, இது mpox வைரஸால் (mpox virus (MPXV)) ஏற்படும் வைரஸ் தொற்று ஆகும். பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி தசை மற்றும் முதுகு வலி, குறைந்த ஆற்றல், வீங்கிய நிணநீர் முனைகள், இரண்டு முதல் மூன்று வாரங்கள் நீடிக்கும் சொறிகுரங்கம்மை பொதுவாக தானாகவே குணமாகிவிடும். ஆனால், குழந்தைகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இது ஆபத்தானது.


குரங்கம்மை, 1970-ஆம் ஆண்டு முதல் மனிதர்களில் பதிவாகியுள்ளது. பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் 2022 வரை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கவலை ஒரு புதிய வகை கிளாட் ஐபி (clade Ib) வைரஸால் ஏற்படுகிறது. இது முக்கியமாக பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறது.


ஒரு கிளேடில் உள்ள உயிரினங்கள் பொதுவான மூதாதையர்களைப் பகிர்ந்து கொள்கின்றன. குரங்கம்மைக்கு, இரண்டு கிளேடுகள்(clades) உள்ளன. கிளேட் I மற்றும் கிளேட் II. கிளேட் II ஐ விட கிளாட் I மிகவும் ஆபத்தானது.


ஜனவரி மாதம்  வளர்ந்து வரும் தொற்று நோய் (Emerging Infectious Disease) வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை, கிளேட் I நோய்த்தொற்றுகளின் பாலியல் பரவுதல் இதற்கு முன் தெரிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டது. வரலாற்று ரீதியாக, கிளேட் I நோய்த்தொற்றுகள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நெருங்கிய தொடர்பு மூலம் பரவுகின்றன. இந்த வழியில் பரவும் கிளேட் Ia நோய்த்தொற்றுகள் காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின்  பகுதிகளைத் தொடர்ந்து பாதிக்கின்றன.


சமீபத்தில், 100 க்கும் மேற்பட்ட கிளேட் ஐபி நோய்த்தொற்றுகள் நான்கு காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் அண்டை நாடுகளில் பதிவாகியுள்ளன. புருண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா - இது இதற்கு முன்பு குரங்கம்மைப் புகாரளிக்கவில்லை. அறிகுறிகளுடன் கூடிய பலர் பரிசோதிக்கப்படாமல் இருப்பதால், உண்மையான நோய் பாதித்தவர்களின்  எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். இந்த ஆண்டு மட்டும் 15,600-க்கும் மேற்பட்ட  நோய் பதிவுகள் மற்றும் 537 இறப்புகளுடன் நோயின் அதிகரிப்பு உள்ளது.


உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization (WHO)) நிர்வாக இயக்குநர் டாக்டர். டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், “புதிய வகை குரங்கம்மையின் தோற்றம், கிழக்கு காங்கோ ஜனநாயக குடியரசு பகுதிகளில் வேகமாக பரவுவது மற்றும் பல அண்டை நாடுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மிகவும் கவலையளிக்கிறது. காங்கோ ஜனநாயக குடியரசு  மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளில் மற்ற குரங்கம்மை கிளேட்களின் பரவலுடன், இந்த வெடிப்புகளைத் தடுத்து உயிர்களைக் காப்பாற்ற ஒரு ஒருங்கிணைந்த சர்வதேச புரிதல் தேவை என்பது தெளிவாகிறது.


கடந்த ஆண்டின் பிற்பகுதியில் *நேச்சர்* இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, சமீபத்திய நிகழ்வுகள் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவதன் மூலம் இயக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. வைரஸ் மனிதர்களில் பல பரம்பரைகளாகப் பன்முகப்படுத்தப்பட்டு பல புதிய பிறழ்வுகளைப் பெறுகிறது.


ஆப்பிரிக்காவுக்கு வெளியே அதிக தொற்றக்கூடிய கிளேட் ஐபி குரங்கம்மையின் முதல் வழக்கு வியாழன் அன்று ஸ்வீடனில் பதிவாகியுள்ளது. உலகளாவிய பயண இணைப்புகளுடன், வழக்குகள் மற்ற நாடுகளுக்கும் பரவக்கூடும்.


2022-ஆம் ஆண்டில் உலகளாவிய வெடிப்பின் போது, ​​இந்தியாவில் குறைவான கொடிய கிளேட் II வகையிலிருந்து mpox நோய் தொற்றுகள் பதிவாகியுள்ளன. ஆரம்பத்தில், சர்வதேச பயணம் மேற்கொண்ட கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டன. பின்னர், இதுபோன்ற பயண வரலாறு இல்லாதவர்களில் டெல்லியிலும் நோய்த்தொற்றுகள் தோன்றின. WHO தரவுகளின்படி, இந்தியாவில் குறைந்தது 27 உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகள் மற்றும் ஒரு இறப்பு உள்ளது.


சர்வதேச சுகாதார விதிமுறைகள் (International health regulations) அவசரநிலைக் குழுவின் தலைவர் பேராசிரியர் டிமி ஓகோயினா, “ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் தற்போது அதிகரித்துள்ள குரங்கம்மையின் தற்போதைய பரவல், பாலியல் ரீதியாக பரவக்கூடிய புதிய வைரஸின் பரவலுடன் சேர்ந்தது” என்றார். ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கம்மை 2022-ஆம் ஆண்டில் உலகளாவிய வெடிப்பை ஏற்படுத்தியது. இவை மீண்டும் நிகழாமல் தடுக்க நாம் தீர்க்கமாக செயல்பட வேண்டும்.


குரங்கம்மைக்கான தடுப்பூசிகள் உள்ளதா?


குரங்கம்மைக்கு குறைந்தபட்சம் இரண்டு தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. நோய்த்தடுப்பு தொடர்பான நிபுணர்களின் உலக சுகாதார அமைப்பின் ராஜதந்திர ஆலோசனைக் குழு இந்த தடுப்பூசிகளை பரிந்துரைத்துள்ளது.


கடந்த வாரம், குரங்கம்மை தடுப்பூசிகளுக்கான அவசரகால பயன்பாட்டுப் பட்டியலை உலக சுகாதார அமைப்பு தயாரித்தது. தேசிய அளவில் இன்னும் அங்கீகரிக்கப்படாத குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான தடுப்பூசி தேவையயை இது அதிகப்படுத்தும். தடுப்பூசிகள் மற்றும் தடுப்பூசிகளுக்கான உலகளாவிய கூட்டணி (Global Alliance for Vaccines and Immunization (GAVI)) மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (United Nations Children's Fund (UNICEF)) போன்ற நிறுவனங்கள் இந்த நாடுகளில் தடுப்பூசிகளை வாங்கவும் விநியோகிக்கவும் இந்த பட்டியல் அனுமதிக்கிறது.


உலக சுகாதார அமைப்பு சாத்தியமான தடுப்பூசி நன்கொடைகளில் நாடுகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது. தடுப்பூசிகள், சிகிச்சைகள், நோயறிதல்கள் மற்றும் பிற கருவிகளுக்கான நியாயமான தேவைகளை உறுதி செய்வதற்காக இடைக்கால மருத்துவ எதிர் நடவடிக்கைகள் வலைதளங்கள் மூலம் பங்குதாரர்களுடன் ஒருங்கிணைக்கிறது. 2022-ல் முந்தைய வைரஸ் தாக்கத்தின்போது, ​​தடுப்பூசிகள் மற்றும் நோயறிதல்களை தயாரிக்க நிறுவனங்களுக்கும் இந்தியா அழைப்பு விடுத்திருந்தது.



Original article:

Share:

சுதந்திர இந்தியாவின் முதல் தபால் தலைகள் (postage stamps) யாவை? -வந்தனா கல்ரா

 இந்தியாவின் சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் மூன்று தபால் தலைகள் வெளியிடப்பட்டன - அவை அனைத்தும் ஆகஸ்ட் 15, 1947 தேதியும், தேவநாகரி எழுத்தில் 'ஜெய் ஹிந்த்' என்ற வார்த்தையும் இடம் பெற்றிருந்தது. 


ஆகஸ்ட் 15, 1947-அன்று இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய தபால் மற்றும் தந்தித் துறை (Indian Post and Telegraph Department) ஒரு சிறப்பு முத்திரையை வெளியிட்டு இந்த நிகழ்வை நினைவுகூர விரும்பியது. இருப்பினும், பிரிவினை மற்றும் தேவையான மறுசீரமைப்பு மற்றும் நிர்வாக இடமாற்றம் காரணமாக இந்த துறைகளில் அவ்வாறு செய்ய முடியவில்லை. 


சுதந்திர இந்தியாவின் முதல் தபால் தலை (first stamp) இறுதியாக நவம்பர் 21, 1947 அன்று வெளியிடப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் மூன்று தபால் தலைகள் வெளியிடப்பட்டன - அவை அனைத்தும் ஆகஸ்ட் 15, 1947 தேதியையும், தேவநாகரி எழுத்தில் 'ஜெய்ஹிந்த்' என்ற சொற்களையும் கொண்டிருந்தன. நவம்பர் 1947-ல் வெளியிடப்பட்ட முதல் தபால் தலையில், இந்தியக் கொடி மேகங்களுக்கு மத்தியில் வானத்தில் பறந்ததை போல் இருந்தது. அதன் மதிப்பு மூன்றரை அணா.  மற்ற இரண்டு தபால் தலைகளும் டிசம்பர் 1947-ல் வெளியிடப்பட்டன. அவற்றில் ஒரு முத்திரையில் அசோகரின் சிங்க தலைநகரம் பொறிக்கப்பட்டிருந்தது. இது கிமு 250-ல் சாரநாத்தில் பேரரசர் அசோகரால் கட்டப்பட்ட தூணில் இருந்த ஒரு சிறப்மாகும். இந்த முத்திரையில் மூன்று ஆசிய சிங்கங்கள் (நான்காவது பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது), வலதுபுறத்தில் ஒரு காளை மற்றும் இடதுபுறத்தில் ஒரு குதிரை கொண்ட புடைப்புச் சக்கரம் மற்றும் கீழே மணி வடிவ தாமரை ஆகியவற்றைக் கொண்ட சிற்பத்தின் உருவம் இருந்தது. அதன் விலை ஒன்றரை அணா. 


 முகலாயர்கள் "டாக்" (“dawk”) அல்லது "டாக்" (“dak”) என்று அழைக்கப்படும் ஒரு தகவல் தொடர்பு முறையைப் பயன்படுத்தினாலும்- விரைவான விநியோகங்களுக்கு "குதிரை ஓட்டப்பந்தய வீரர்கள்" (“horse runners”) மற்றும் குறுகிய தூரங்களுக்கு கால் ஓட்டப்பந்தய வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். கிழக்கிந்திய கம்பெனியின் (East India Company) வருகைக்கு பின்னர் இந்தியாவில் முறையான அஞ்சல் அமைப்பு நிறுவப்பட்டது. 


  ஆரம்பத்தில், 1720களில், நிறுவனம் முதன்மையாக உள் தகவல் தொடர்புக்காக ஒரு அஞ்சல் சேவையை அமைத்தது. 1766-ஆம் ஆண்டில், அப்போதைய ஆங்கிலேய பிரபு ராபர்ட் கிளைவ் (Robert Clive) ஒரு வழக்கமான அஞ்சல் முறையை நிறுவினார். 1774-ஆம் ஆண்டில், வாரன் ஹேஸ்டிங்ஸ் கல்கத்தாவில் முதல்  பொது அஞ்சல் அலுவலகத்தை ((General Post Office (GPO)) நிறுவுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். மெட்ராஸ் பொது அஞ்சல் அலுவலகம் (Madras GPO) 1786-ல் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1794-ல் பம்பாய் மெட்ராஸ் பொது அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது. 


அஞ்சலகச் சட்டம், 1837, கிழக்கிந்திய கம்பெனியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடிதங்களை அனுப்புவதற்கான பிரத்யேக உரிமையை அரசாங்கத்திற்கு வழங்கியது. 1854-ஆம் ஆண்டில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான அஞ்சல் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1852-ஆம் ஆண்டில், ஆசியாவிலேயே தனது சொந்த அஞ்சல் தலைகளை வெளியிட்ட முதல் நாடாக இந்தியா ஆனது. சிந்து மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வட்ட வடிவில், "சிந்தே டாக்" (Scinde Dawk”) என்ற பெயரிடப்பட்ட அஞ்சல் தலை அஞ்சல் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக மாவட்ட ஆங்கிலேய பிரபு பார்ட்லே ஃப்ரெரேவால் (Sir Bartle Frere) அறிமுகப்படுத்தப்பட்டது. 


தபால்தலைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, கடிதத்தைப் பெறுபவர் தபால் கட்டணத்தைச் செலுத்த வேண்டும், மேலும் அந்தக் கடிதத்தை ஏற்க வேண்டாம் என்று அவர்கள் தேர்வு செய்யலாம். அரை அணா மதிப்புள்ள சிண்டே டாக் முத்திரையில் கிழக்கிந்திய கம்பெனியின் வணிகர் குறி இடம்பெற்றிருந்தது. இதய வடிவ மையக்கருத்துடன் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் கிழக்கிந்திய கம்பெனியைக் குறிக்கும் EIC எழுத்துக்களில் ஒன்றைக் கொண்டிருந்தது. அதன் மதிப்பு அரை அணா என்று கீழே எழுதப்பட்டிருந்தது. வடிவமைப்பைச் சுற்றி பெரிய எழுத்துக்களில் "சிந்தே மாவட்ட டாக்" (“Scinde district dawk”) என்று எழுதப்பட்டிருந்தது. 


1854-ஆம் ஆண்டில், விக்டோரியா மகாராணியின் உருவப்படத்துடன் ( இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் முதல் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. அதே ஆண்டில் இந்தியாவில் ரயில் அஞ்சல் சேவை (railway mail service) அறிமுகப்படுத்தப்பட்டது.



Original article:

Share:

மூத்த வழக்கறிஞர்களை நியமிக்கும் செயல்முறையும் அதன் தற்போதைய மாற்றங்களும் - அஜய் சிஹ்னா கற்பூரம்

 39 வழக்கறிஞர்களை மூத்த வழக்கறிஞர்களாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நியமித்தது. மூத்த வழக்கறிஞர்கள் யார்? அவர்களின் தேர்வுக்கான வழிமுறைகள் என்ன? 


உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 14-ஆம் தேதியன்று 10 பெண்கள் உட்பட 39 வழக்கறிஞர்களை மூத்த வழக்கறிஞர்களாக நியமித்தது. இடஒதுக்கீட்டுக்கு 50% உச்சவரம்பை நிர்ணயித்த 1992-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வழிவகுத்த வழக்கைத் தாக்கல் செய்த இந்திரா சஹானி, பஞ்சாப் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஷதன் ஃபராசத், பாஜக எம்பி பன்சூரி ஸ்வராஜ் மற்றும் இந்திய பார் அசோசியேஷன் துணைத் தலைவர் அனிந்திதா பூஜாரி ஆகியோர் இந்த பதவியைப் பெற்றவர்களில் அடங்குவர். 


         ' மூத்த வழக்கறிஞர்' பதவி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித்த 2018 வழிகாட்டுதல்களில் திருத்தங்களைக் கோரும் வழக்கில் நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு மே 12, 2023-ஆம் ஆண்டு அன்று வழங்கிய புதிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த பதவிகள் வழங்கப்பட்டன. 


மூத்த வழக்கறிஞர் என்றால் என்ன? 


வழக்கறிஞர்கள் சட்டம் (Advocates Act), 1961 இன் பிரிவு 16 மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் பிற வழக்கறிஞர்கள்" என்ற இரண்டு வெவ்வேறு வகை வழக்கறிஞர்களை பரிந்துரைக்கிறது. நீதிபதி கவுல் 2023-ஆம் ஆண்டு தீர்ப்பில், மூத்த வழக்கறிஞர் பதவி "தங்களை தனித்துவப்படுத்திக் கொண்ட மற்றும் சட்டத் தொழிலின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த வழக்கறிஞர்களுக்கு சிறப்பான அடையாளமாகும். யாருடைய அந்தஸ்தும் சாதனைகளும் ஒரு எதிர்பார்ப்பை நியாயப்படுத்தும் என்று வாதிடுபவர்களை அது அடையாளம் காட்டுகிறது... நீதி நிர்வாகத்தின் சிறந்த நலனுக்காக அவர்கள் வழக்கறிஞர்களாக சிறந்த சேவைகளை வழங்க முடியும்." 


மூத்த வழக்கறிஞர்கள் சில கூடுதல் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படலாம் என்றும் பிரிவு 16 கூறுகிறது. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்களுக்கு, இந்த கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்ற விதிகள், 2013-ல் காணலாம். அவர்கள் வக்காலத்து மனு (vakalatnama) தாக்கல் செய்வது, ஜூனியர் அல்லது வழக்கறிஞர் இல்லாமல் நீதிமன்றத்தில் ஆஜராவது, வரைவு வேலை செய்வது அல்லது வாடிக்கையாளர்களிடமிருந்து வழக்குகளுக்கான சுருக்கங்களை நேரடியாக பெறுவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. 


மூத்த வழக்கறிஞர்கள் பதவிக்கான சமீபத்திய வழிகாட்டுதல்கள் என்ன சொல்கின்றன? 


இந்திய தலைமை நீதிபதி, வேறு எந்த உச்சநீதிமன்ற நீதிபதியுடனும் சேர்ந்து, பதவிக்கான வழக்கறிஞரின் பெயரை எழுத்துப்பூர்வமாக பரிந்துரைக்க முடியும்.  புதிய வழிகாட்டுதல்கள் 'மூத்த வழக்கறிஞர்' பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயதை  45 என பரிந்துரைக்கின்றன. எவ்வாறாயினும், மூத்த வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான குழு, தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு வழக்கறிஞரின் பெயரை பரிந்துரைத்திருந்தால், இந்த வயது வரம்பை தளர்த்தலாம். 2018-ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களின் கீழ் குறைந்தபட்ச வயது எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை. 


பதவிக்கான விண்ணப்பதாரர்கள் 100 மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்கள் "கல்வி கட்டுரைகளை வெளியிடுதல், சட்டத் துறையில் கற்பித்தல் பணிகளின் அனுபவம்" மற்றும் "சட்டப் பள்ளிகள் மற்றும் தொழில்முறை நிறுவனங்களில் வழங்கப்படும் விருந்தினர் விரிவுரைகளுக்கு மொத்தம் 5 மதிப்பெண்கள் மட்டுமே சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது". முன்னதாக, வெளியீடுகளுக்கு 15 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டது. மறுபுறம், அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத தீர்ப்புகளுக்கு (சட்டத்தின் எந்தக் கோட்பாட்டையும் வகுக்காத உத்தரவுகளைத் தவிர்த்து) வழங்கப்படும் முக்கியத்துவம் புதிய வழிகாட்டுதல்களில் 40 முதல் 50 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. 


2018 வழிகாட்டுதல்கள் என்ன சொல்கின்றன? அவை ஏன் நடைமுறைக்கு வந்தன? 


2018-ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் 'மூத்த வழக்கறிஞர்களின் பதவியை வழங்குவதை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்' பட்டியலை வெளியிட்டது. வழிகாட்டுதல்கள் 'ரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்களிக்கும்' முறையை அவை  ஊக்கப்படுத்தின. அது "தவிர்க்க முடியாத" சந்தர்ப்பங்களைத் தவிர, 'மூத்த வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான குழு' ஒன்றை உருவாக்கினர், இது தலைமை நீதிபதி தலைமையில் இரண்டு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்திய தலைமை வழக்கறிஞர் மற்றும் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட "பார் உறுப்பினர்" மற்றும் பிற உறுப்பினர்களை உள்ளடக்கியது. 


தலைமை நீதிபதி அல்லது வேறு எந்த நீதிபதியும் ஒரு வழக்கறிஞரின் பெயரை பதவிக்கு பரிந்துரைக்க முடியும். மாற்றாக, வழக்கறிஞர்கள் தங்கள் விண்ணப்பங்களை 'நிரந்தர செயலகத்திற்கு' சமர்ப்பிக்கலாம்.  இது ஒரு வழக்கறிஞர், மாவட்ட நீதிபதி அல்லது இந்திய தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக பல ஆண்டுகள் சட்ட நடைமுறை உட்பட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் அவர்களை மதிப்பீடு செய்யும். 


பதவி செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மை கோரி மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தாக்கல் செய்த மனுவில் நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அக்டோபர் 12, 2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து இந்த வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வந்தன. இந்தியாவின் முதல் பெண் மூத்த வழக்கறிஞரான ஜெய்சிங், தற்போதுள்ள செயல்முறை "ஒளிபுகாதது" (opaque), "தன்னிச்சையானது"(arbitrary) மற்றும் "குடும்ப பாகுபாடு நிறைந்தது" (fraught with nepotism) என்று சவால் விடுத்தார். 


2018-ஆம் ஆண்டுக்கு முன்பு, வழக்கறிஞர்கள் சட்டம், 1961-ன் பிரிவு 16, மூத்த வழக்கறிஞர்களை நியமிப்பதை நிர்வகித்தது. "மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் பிற வழக்கறிஞர்களில் இரண்டு வகுப்புகள் இருக்கும்" என கூறியது. மேலும், "உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றம்" "அவரது திறமை, வழக்கறிஞர் நிலைப்பாடு அல்லது சிறப்பு அறிவு அல்லது சட்டத்தில் அனுபவம் ஆகியவற்றின் காரணமாக, அவர் அத்தகைய சிறப்புக்கு தகுதியானவர்" என்று கருதினால், ஒரு மூத்த வழக்கறிஞர் பதவிக்கு அனுமதிக்கப்பட்டது. தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள் இந்த நியமனத்தை செய்தனர். 


2017-ஆம் ஆண்டு தீர்ப்பு, செயலகத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்தது. இது விண்ணப்பங்களைக் கையாளும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்மொழிவுகளை வெளியிடும் மற்றும் பரிந்துரைகளை வரவேற்கும். பின்னர், விண்ணப்பங்களை குழுவுக்கு அனுப்பும். கமிட்டி பின்னர் ஒரு வேட்பாளரை நேர்காணல் செய்வார். மேலும், ஒரு புள்ளி முறையின் அடிப்படையில் ஒட்டுமொத்த மதிப்பீட்டைச் செய்வார். ஒப்புதலுக்குப் பிறகு, பெரும்பான்மையின் அடிப்படையில் முடிவெடுக்க ஒரு வேட்பாளரின் பெயர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்.  நீதிமன்றமும் ஒரு மூத்த வழக்கறிஞர் என்ற பதவியையும் திரும்பப் பெறலாம். 



2023-ஆம் ஆண்டு புதிய வழிகாட்டுதல்கள் ஏன் வெளியிடப்பட்டன? 


பிப்ரவரி 16, 2023-ஆம் ஆண்டு, வழிகாட்டுதல்களை மாற்றுவதற்கான விண்ணப்பத்தை ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனுவில், நேர்காணல் மூலம் அளவிடப்பட்ட வெளியீடுகள், ஆளுமை மற்றும் பொருத்தம் ஆகியவற்றிற்கு 40 சதவீத முக்கியத்துவம் அளிக்கும் "புள்ளி அடிப்படையிலான அமைப்பை" (point-based system) ஒன்றிய அரசு  சவால் செய்தது.  இந்த முறை, பயனற்றது மற்றும் "பாரம்பரியமாக வழங்கப்படும்  மதிப்பு நிலை மற்றும் கண்ணியத்தை" நீர்த்துப்போகச் செய்கிறது என்று வாதிட்டது. "பொய்யான" மற்றும் "போலி" பத்திரிகைகளின் பரவலான சுழற்சியை மேற்கோள் காட்டி, கட்டுரைகளின் உள்ளடக்கம் மற்றும் தரம் குறித்து எந்தவொரு கல்வி மதிப்பீடு இல்லாமல், "பெயரளவு தொகையை" (paying a nominal amount) செலுத்துவதன் மூலம் மக்கள் தங்கள் கட்டுரைகளை வெளியிட முடியும். 


மேலும், பதவிக்கான தற்போதைய தேவைகள் "புறம்பானவை" என்றும், மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்படுவதற்கான பிரச்சினைக்கு பொருந்தாத காரணிகளின் அடிப்படையில் தகுதியான நபர்களை வெளியேற்ற வழிவகுத்துள்ளது என்றும் ஒன்றிய  அரசு வாதிட்டது. 


கடைசியாக, அந்த விண்ணப்பம் ஒரு சாதாரண பெரும்பான்மையின் ஆட்சியை ஒரு இரகசிய வாக்கெடுப்பு மூலம் மீட்டெடுக்க முனைந்தது. அங்கு நீதிபதிகள் எந்தவொரு வேட்பாளரும் "எந்த சங்கடமும் இல்லாமல்" பொருத்தம் குறித்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியும், இரகசிய வாக்கெடுப்பு வழக்கறிஞர்களின் வாக்குகளுக்கான பிரச்சாரத்தை குறைக்கும் என்று காரணம் கூறியது. 


2023-ஆம் ஆண்டு தீர்ப்பு 2018-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட  வழிகாட்டுதல்களை உறுதிப்படுத்தியது. ஆனால், வெளியீடுகளுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களின் எண்ணிக்கையை 15 முதல் 5 ஆகக் குறைத்தது. ரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்களிப்பது விதிவிலக்கான சூழ்நிலைகளில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அந்த சூழ்நிலைகளில், அதற்கான காரணங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.



Original article:

Share:

கட்டமைப்பு வேலையின்மை பிரச்சினை மற்றும் 2024 ஒன்றிய நிதிநிலை அறிக்கை

 2017-18ல் 6 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 2022-23ல் 3.2 சதவீதமாக குறைந்துள்ளதாக காலமுறை தொழிலாளர்வள  கணக்கெடுப்பு காட்டுகிறது. ஆனால், கட்டமைப்பு வேலையின்மை பிரச்சினையை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்க முற்படுகிறது? 


வேலையில்லா திண்டாட்டம், குறிப்பாக இளைஞர்களிடையே, இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய கவலையாக உள்ளது. இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி விவாதிக்க, முதலில் நாம் சில முக்கிய கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.


பொருளாதார வல்லுநர்கள் மக்களை வேலையின் அடிப்படையில், இரண்டு குழுக்களாகப் பிரிக்கிறார்கள். 1. தொழிலாளர் வளம் (labor force) மற்றும் 2. தொழிலாளர் வளத்தில் இல்லாதவர்கள் (not in the labor force) ஆவார். தொழிலாளர் வளம் பொதுவாக 15 முதல் 60 வயது வரையிலான (இந்த வயது வரம்பு நாடு வாரியாக மாறுபடும்) பணிபுரியும் வயதினரை உள்ளடக்கியது. தொழிலாளர் அல்லாத வளத்தில் குழந்தைகள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் அல்லது வயதானவர்கள் உள்ளனர். தொழிலாளர் வளத்தில், இரண்டு துணைக்குழுக்கள் உள்ளன. இதில், வேலை (employed) மற்றும் வேலையில்லாதவர்கள் (unemployed) ஆவார். வேலை செய்பவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டு. வேலையில்லாதவர்கள் வேலை செய்ய விரும்புகிறார்கள் ஆனால் எந்த வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை.


பொருளாதார வல்லுநர்கள் தொழிலாளர் சந்தைகளைப் புரிந்துகொள்ள இரண்டு முக்கிய பொருளாதார குறிகாட்டிகளைப் பயன்படுத்துகின்றனர். முதலாவது, தொழிலாளர் வள பங்கேற்பு விகிதம் (labour force participation rate), இது வயது வந்தோருக்கான தொழிலாளர் வள விகிதமாகும். இரண்டாவதாக, வேலையின்மை விகிதம், இது வேலையில்லாத தொழிலாளர் வளத்தின் சதவீதமாகும். ஒட்டுமொத்த மக்கள்தொகையின் தொழிலாளரின் போக்குகளை அளவிடுவது விரும்பத்தக்கது என்றாலும், இது அதிக நேரம் எடுக்கும் மற்றும் விலை உயர்ந்ததாக உள்ளது. எனவே, பொருளியலாளர்கள், புள்ளியியலாளர்களின் உதவியுடன் தொழில் சந்தையின் போக்குகளை மதிப்பிடுவதற்கு ஆய்வுகளை நடத்துகின்றனர்.  


இந்தியாவில், தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (National Sample Survey Office(NSSO)) 1972 முதல் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்புகளை நடத்தி வந்தது. இந்த ஆய்வுகள் இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை நிலை குறித்த தரவுகளை வழங்கின. இருப்பினும், இந்த ஆய்வுகள் ஒரு பெரிய கால தாமதத்தைக் கொண்டிருந்தன. மேலும் அடிக்கடி ஆய்வுகள் தேவைப்பட்டது. வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, 2017-18 முதல், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MOSPI)) காலாண்டு மற்றும் வருடாந்திர கணக்கெடுப்புகளை அவ்வப்போது காலமுறை தொழிலாளர் வள கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) என்ற பெயரில் வெளியிடத் தொடங்கியுள்ளது. காலமுறை தொழிலாளர் வள கணக்கெடுப்பு (PLFS) இந்தியாவின் தொழிலாளர் சந்தைகளின் போக்குகளை அளவிடுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.  


காலமுறை தொழிலாளர் வள கணக்கெடுப்பு (PLFS) 2017-18 "ஒட்டுமொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் மிக அதிகமாக உள்ளது" என்று குறிப்பிட்டது. வேலையின்மை விகிதம் 6 சதவீதமாகவும், இளைஞர்களின் வேலையின்மை விகிதம் (15-29 வயது) 18 சதவீதமாகவும் உள்ளது. காலமுறை தொழிலாளர் வள கணக்கெடுப்பு (PLFS) 2022-23 இன் படி, வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது. ஆனால், மொத்த தொழிலாளர் வளத்தில் வேலையின்மைக்கும் இளைஞர் வேலையின்மைக்கும் இடையிலான வேறுபாடு அதிகமாக உள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 3.2 சதவீதமாகவும், இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 10 சதவீதமாகவும் உள்ளது.  


கிராமப்புற-நகர்ப்புறத்தைப் பொறுத்தவரை, கிராமப்புற இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 8 சதவீதமாகவும், நகர்ப்புற வேலையின்மை விகிதம் 15.7 சதவீதமாகவும் உள்ளது. தன்னாட்சி ஆராய்ச்சி அமைப்பான, இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy (CMIE)) ஒரு தனி வேலையின்மை தரவை வெளியிடுகிறது. இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (CMIE) படி, 2022-23 ஆம் ஆண்டில் இளைஞர் வேலையின்மை விகிதம் 45.4 சதவீதமாக இருந்தது. 


பாலின வாரியான வேலையின்மை விகிதம் ஆண் மற்றும் பெண் இளைஞர்களின் வேலையின்மையை முறையே 9.7 சதவீதம் மற்றும் 10 சதவீதமாகக் காட்டுகிறது. பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2017-18 ஆம் ஆண்டில் 17 சதவீதத்திலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் 27.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2017-18 ஆம் ஆண்டில் 55.5 சதவீதமாக இருந்தது. இது 2022-23 ஆம் ஆண்டில் 56.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொழிலாளர் வளத்தில் பெண்களின் குறைந்த பிரதிநிதித்துவமும் இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய பிரச்சினையாகும்.  


பொருளாதார ஆராய்ச்சி இரண்டு வகையான வேலையின்மைகளை வேறுபடுத்துகிறது. முதலாவது, உராய்வு வேலையின்மை (frictional unemployment), தொழிலாளர்கள் தங்கள் ரசனை மற்றும் திறன்களுக்கு மிகவும் பொருத்தமான வேலைகளைத் தேடுவதற்கு நேரம் எடுத்துக்கொள்வதால் இது நிகழ்கிறது. இரண்டாவது, கட்டமைப்பு ரீதியான வேலையின்மை (structural unemployment), அங்கு வேலை வாய்ப்புகளை விட அதிகமான மக்கள் வேலை தேடும் போது இது நிகழ்கிறது.


உராய்வு வேலையின்மை (frictional unemployment) தவிர்க்க முடியாதது, ஏனெனில் பொருளாதாரம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது, புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது மற்றும் பழையவற்றை அழித்து வருகிறது. எனவே பொருளாதார வல்லுநர்கள் உராய்வு வேலையின்மை பற்றி அதிகம் கவலைப்படவில்லை.


ஆனால், கட்டமைப்பு வேலையின்மை (structural unemployment) பொருளாதார நிபுணர்களுக்கு ஒரு பெரிய கவலைய்ளிப்பதாக உள்ளது. அதிகரித்து வரும் தொழிலாளர்களுக்குப் போதுமான வேலைகளை பொருளாதாரம் உருவாக்கவில்லை என்று அர்த்தம். இது இந்தியாவில் நடப்பதாகத் தெரிகிறது. 


கட்டமைப்பு வேலையின்மை (structural unemployment) இருப்பதைக் காண்பதற்கான ஒரு வழி, வேலைவாய்ப்பில் பல்வேறு துறைகளின் பங்கை பொருளாதார நடவடிக்கை அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு துறைகளின் பங்குடன் ஒப்பிடுவதாகும் (அட்டவணை 1). மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 15 சதவீதமாகவும், வேலைவாய்ப்பில் விவசாயத்தின் பங்கு 46 சதவீதமாகவும் இருப்பதை நாம் காண்கிறோம். மற்ற இரண்டு துறைகளில், அதாவது தொழில்துறை மற்றும் சேவைகளில் நாம் எதிர்மாறானதைக் காண்கிறோம். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு அதிகமாக உள்ளது. ஆனால் வேலைவாய்ப்பின் பங்கு குறைவாக உள்ளது.  


ஆண்-பெண் வகைப்பாட்டின் போக்குகளை பகுப்பாய்வு செய்யும்போது, குறைந்த வளர்ச்சி கொண்ட விவசாயத் துறையில் முக்கியமாக பெண்கள் வேலை செயவதை நாம் கவனிக்கிறோம். பெரும்பாலான ஆண்கள் வேகமாக வளர்ந்து வரும் சேவைத் துறையில் பணிபுரிகின்றனர். ஆண்களைவிட பெண்கள் ஏன் குறைந்த ஊதியம் பெறுகிறார்கள் என்பதை இந்த வேறுபாடு ஓரளவு விளக்குகிறது.  


அட்டவணை 1 : வேலைவாய்ப்பில் பல்வேறு துறைகளின் பங்கையும் பொருளாதார நடவடிக்கைகளில் அவற்றின் பங்கையும் ஒப்பிடுக. இரண்டும் சதவீதத்தில் அளவிடப்படுகிறது.


 


பொருளாதார நடவடிக்கைகளில், விவசாயத்தின் பங்கு 1951-ல் 60 சதவீதத்திலிருந்து இன்று 15 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், விவசாயத்தில் வேலைவாய்ப்பில் இதேபோன்ற வீழ்ச்சியை நாம் காணவில்லை. அதிக வளர்ச்சியை உருவாக்கும் துறைகள் வேலைவாய்ப்பில் இதேபோன்ற வளர்ச்சியை உருவாக்கவில்லை. இது இந்தியாவில் கட்டமைப்பு வேலையின்மை பிரச்சினையைக் காட்டுகிறது.  


விவசாயம் மாறுபட்ட வேலையின்மையை (disguised unemployment) எதிர்கொள்கிறது. மற்ற துறைகளில் வேலைகளுக்கான வாய்ப்புகள் இல்லாததால் தேவைக்கு அதிகமான மக்கள் வேலை செய்கிறார்கள். முறைசாராத் துறைகளில் உள்ள வேலைகள் பற்றாக்குறையால் தொழிலாளர்கள் முறைசாரா துறைகளில் வேலை தேட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது வேலை வாய்ப்புப் பிரச்சினையை மோசமாக்குகிறது. முறைசாரா துறையில், ஊதியம் குறைவாக உள்ளது. தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை.


கட்டமைப்பு வேலையின்மை (structural unemployment), தேவை மற்றும் விநியோக முனைகளில் தீர்க்கப்பட வேண்டும். வளர்ச்சித் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கும் அதே வேளையில், உயர் வளர்ச்சித் துறைகளில் பணிபுரிய உதவும் வகையில் கல்வி மற்றும் தொழிலாளர்களின் திறன் தொகுப்புகளை மேம்படுத்துவதன் மூலம் தேவைக்கான காரணிகளில் பணியாற்ற வேண்டிய அவசியமும் உள்ளது.  


ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2024-ல், பொருளாதார வளர்ச்சிக்கு ஒன்பது முன்னுரிமைகளில் அரசாங்கம் செயல்படும் என்று நிதியமைச்சர் கூறினார். ஒன்பது முன்னுரிமைகளில் ஒன்று 'வேலைவாய்ப்பு மற்றும் திறன்' (Employment & Skilling) ஆகும். 'வேலைவாய்ப்பு மற்றும் திறன்' (employment and skilling) என்பதன் கீழ், நிதியமைச்சர் வேலைவாய்ப்பு கவலைகளை நிவர்த்தி செய்ய மூன்று திட்டங்களை அறிவித்துள்ளார்.


முறையான துறையில் வேலைகளை உருவாக்க புதிய ஊழியர்கள் மற்றும் முதலாளிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த மூன்று திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க கூடுதல் சலுகைகளையும் வழங்குகின்றன. ஏனென்றால், அதிக குறிப்பிட்ட திறன்கள் தேவைப்படும் சேவைத் துறையுடன் ஒப்பிடுகையில், விவசாயத்திலிருந்து உபரி தொழிலாளர்களை உறிஞ்சுவதற்கு உற்பத்தி மிகவும் பொருத்தமானது.


மேலும், தொழிலாளர் திறன்களை மேம்படுத்த புதிய திட்டங்களை நிதிநிலை அறிக்கை முன்மொழிந்துள்ளது. இதில், ஒரு திட்டம் 1,000 தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மேம்பாடானது அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாடநெறியின் உள்ளடக்கம் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் படிக்கும்போதே தொழில்துறைக்குத் தயாராக இருக்க உதவுகிறது. மேலும், மாணவர்களின் திறன்களை மேம்படுத்த உதவும் வகையில் ரூ.7.5 லட்சம் வரை திறன்களுக்கான கடன்களை (skill loans) வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.


நிதிநிலை அறிக்கை குறிப்பிடத்தக்க ஆர்வத்தை தூண்டிய குறிப்பிடத்தக்க முன்மொழிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்பு (internship) வழங்குவதற்காக, இந்தியாவின் சிறந்த 500 நிறுவனங்களுடன் அரசாங்கம் இணைந்து செயல்படும். இந்த பயிற்சி வகுப்பு 12 மாதங்கள் நீடிக்கும் எனவும். அடுத்த 5 ஆண்டுகளில், இத்திட்டம் 1 கோடி இளைஞர்களை சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாதம் ரூ.5,000 பயிற்சி வகுப்பு உதவித்தொகையுடன் ஒருமுறை உதவியாக ரூ.6,000 அரசு வழங்கும். நிறுவனங்கள் தங்களது பெருநிறுவன சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibility (CSR)) நிதியைப் பயன்படுத்தி பயிற்சிக்கான செலவை ஈடு செய்யும்.   


பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை (labor force participation rate (LFPR)) அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் நிதிநிலை அறிக்கையில் அடங்கும். இது தொழில்துறையுடன் இணைந்து பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிகளை உருவாக்கும் மற்றும் அரசு காப்பகங்களையும் அமைக்கும். கூடுதலாக, இது தொழில்துறையில் உள்ள பெண்களுக்கு குறிப்பாக திறன் திட்டங்களை ஏற்பாடு செய்யும். பெண்கள் சுயஉதவி குழுக்களால் (self-help groups (SHG)) நடத்தப்படும் நிறுவனங்களுக்கான சந்தைக்கான அணுகலை மேம்படுத்துவதை நிதிநிலை அறிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்தியா நீண்ட காலமாக கட்டமைப்பு வேலையின்மை (structural unemployment) பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையின்மையைக் குறைக்க அரசாங்கங்கள் கடந்த காலங்களில் பல திட்டங்களைக் கொண்டு வர முயற்சித்தன. ஆனால், அவை குறைந்தளவே வெற்றியைப் பெற்றுள்ளன. கொள்கை வகுப்பாளர்களும் உற்பத்தியை ஊக்குவிக்கவும் முயற்சித்தனர். ஆனால், அது ஒரு தொலைதூர கனவாகவே உள்ளது.  


தற்போதைய அரசாங்கம் புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தக் கொள்கைகளின் செயல்திறன் அவற்றின் உண்மையான மதிப்பைக் காட்டும். இது வேலைவாய்ப்பில் சமீபத்திய திட்டங்கள் உட்பட அனைத்து அரசாங்க திட்டங்களுக்கும் பொருந்தும். மக்களவைத் தேர்தலின் ஒரு நேர்மறையான முடிவு, வேலையில்லாத் திண்டாட்டமாக மாறியுள்ளது. இப்பிரச்னைக்கு ஒன்றிய, மாநில அரசுகள் உடனடி தீர்வு காண வேண்டும்.


2022-23ல் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 3.2 சதவீதமாக உள்ளது. இருப்பினும், இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 10 சதவீதமாக உள்ளது. அதாவது பொதுமக்களைவிட இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்பின்மையை எதிர்கொள்கின்றனர். இளைஞர்களின் வேலையின்மை ஏன் அதிகமாக உள்ளது என்பதை மதிப்பிட்டு பார்க்க வேண்டும்.



Original article:

Share:

மாயத் தோற்றம் : பணவீக்கம் குறித்து . . .

 பணவீக்கத்தின் வீழ்ச்சி குடும்பங்களுக்கு எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை.

 

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 3.54 சதவீதம் உயர்ந்துள்ளது. இது ஜூன் மாதத்தில் 5.1% ஆக இருந்து, மெதுவாக அதிகரித்துள்ளது. சுமார் மூன்று ஆண்டுகளாக அதிகமாக இருந்த உணவு பணவீக்கம் (Food Inflation) 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.4% ஆக குறைந்துள்ளது. நுகர்வோர் விலைக் குறியீட்டால் (Consumer Price Index (CPI)) அளவிடப்படும் பணவீக்கம் ஆகஸ்ட் 2019-க்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் சராசரி பணவீக்க இலக்கான 4% உடன் பொருந்தி செல்வது இதுவே முதல் முறை. கடந்த வாரம், நாணயக் கொள்கைக் குழு (Monetary Policy Committee (M.P.C)) தொடர்ந்து ஒன்பதாவது முறையாக வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்தது.


 நாணயக் கொள்கைக் குழு பணவீக்க விகிதத்தில் வீழ்ச்சிக்காக காத்திருக்கிறது. ஜூலை மாதத்தின் நேர்மறையான பணவீக்க எண்கள் இருந்தபோதிலும், நாணயக் கொள்கைக் குழு அதன் நிலைப்பாட்டை மாற்ற வாய்ப்பில்லை. நாணயக் கொள்கைக் குழு இந்த காலாண்டின் சராசரி பணவீக்கத்திற்கான கணிப்பை 3.8%-லிருந்து 4.4% ஆக உயர்த்தியுள்ளது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பணவீக்கம் விலை உயர்வு 4%-க்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. கடந்த, ஜூலை மாதத்தில் குறைந்த பணவீக்க எண்ணிக்கை முக்கியமாக கடந்த ஜூலை மாதத்தில் சிபிஐ 7.4% ஆகவும், உணவுப் பொருட்களின் விலை 11.5% ஆகவும் இருந்தபோது அடிப்படை விளைவுகளால் ஏற்பட்டது. 

கடந்த மாத வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாக இருந்த காய்கறி பணவீக்கம் (Vegetable inflation), ஜூன் மாதத்தில் 29.3% ஆக இருந்தது, ஜூலை மாதத்தில் வெறும் 6.8% ஆக குறைந்தது. இருப்பினும், இந்த குறைவு முந்தைய ஆண்டு ஜூலை மாதத்தில் குறிப்பிடத்தக்க 37.3% உயர்வுக்கு மேல் உள்ளது. கடந்த ஜூலையில், தக்காளி விலை ஒரு கிலோவுக்கு சுமார் 110 ரூபாயாக உயர்ந்தது, இது அதிக காய்கறி பணவீக்கத்திற்கு காரணியாக அமைந்தது. குடும்பங்கள் ஆண்டுதோறும் செலவுகளின் தாக்கத்தை மட்டும் உணரவில்லை, அவர்கள் மாதந்தோறும் தங்கள் செலவுகளை சரிசெய்ய வேண்டும். வெப்ப அலை காரணமாக காய்கறி மற்றும் தக்காளி விலைகள் ஏற்கனவே மே மாதத்தில் அதிகமாக இருந்தபோதிலும், ஜூலை மாத விலைகள் மே மாதத்தை விட 30% அதிகமாகவும், ஜூன் மாதத்தை விட 14% அதிகமாகவும் இருந்தன.  


  பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் போன்ற சில உணவுப் பொருட்களின் பணவீக்கம் அடிப்படை விளைவுகள் இருந்தபோதிலும் அதிகமாக உள்ளது. பருப்பு விலைகள் தொடர்ச்சியாக 15-வது மாதமாக இரட்டை இலக்கங்களால் உயர்ந்துள்ளன. கடந்த ஜூலை மாதத்தில் 13.3% அதிகரிப்புக்கு மேல் இந்த ஜூலை மாதம் 14.8% அதிகரித்துள்ளது. மறுபுறம், முக்கிய பணவீக்கம் (உணவு மற்றும் எரிசக்தி விலைகளைத் தவிர்த்து) ஜனவரி 2023-க்குப் பிறகு முதல் முறையாக உயர்ந்தது. தொலைத்தொடர்பு கட்டண உயர்வால் உந்தப்பட்ட போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு போன்ற சேவைகளில் அதிக விலைகள் இதற்கு முக்கிய காரணமாகும். உற்பத்தி மற்றும் சேவைகள் குறித்த தனியார் கணக்கெடுப்புகள், உணவுப் பொருட்களைத் தாண்டி விலை அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. அடுத்த அறுவடை சந்தைக்கு வரும் அக்டோபர் மாதத்திற்குள் மட்டுமே உணவுப் பொருட்களின் விலை கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


  காரீப் பயிர் விதைப்பில் ஏற்பட்ட முன்னேற்றத்திலிருந்து சில நம்பிக்கைகள் உருவாகியுள்ளது. ஆனால், செப்டம்பர் பருவமழை இன்னும் பயிர்களை பாதிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பணவீக்கம் சற்று குறைந்திருந்தாலும், செலவினங்களை பாதித்து புதிய தனியார் முதலீடுகளை மெதுவாக்கும். இது  விலை குறைப்புக்கு  பெரிதும் உதவாது. சிறிதளவு பணவீக்க குறைவு எந்த நிவாரணத்தையும் அளிக்காது.

Original article:

Share:

வீழ்ச்சியடைந்த ஏற்றுமதி குறித்து . . .

 வர்த்தகக் கண்ணோட்டம், ஏற்றுமதி ஆதரவு திட்டங்கள் (export support schemes) குறித்த சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்க வேண்டும். 


இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி மூன்று மாத வளர்ச்சிக்குப் பிறகு ஜூலை மாதத்தில் பின்னடைவை எதிர்கொண்டது. இது 2023-24ஆம் ஆண்டில் சீரற்ற செயல்திறனில் இருந்து மீண்டு வருவதற்கான நம்பிக்கையை எழுப்பியது. ஜூலை மாதத்தில் வணிக ஏற்றுமதியின் மதிப்பு $34 பில்லியனுக்கும் குறைவாக இருந்தது. இது 2023-ல் இருந்து 1.5% வீழ்ச்சியைக் காட்டுகிறது. இது அக்டோபர் 2022-க்குப் பிறகு, நவம்பர் 2023-ல் நடந்த மிகக் குறைந்த இரண்டாவது எண்ணிக்கையாகும். இதில், எலக்ட்ரானிக்ஸ் (37.3%), ஆயத்த ஆடைகள் (11.8%) மற்றும் கைவினைப் பொருட்கள் (13.2%) உள்ளிட்ட இந்தியாவின் முதல் 30 ஏற்றுமதி பொருட்களில் 18 பொருட்களுக்கு வளர்ச்சியைக் கண்டாலும், பிற துறைகள் ஒட்டுமொத்த செயல்திறனைக் குறைத்துள்ளன. பெட்ரோலிய ஏற்றுமதி 22.2 சதவீதமும், இரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் 20.4 சதவீதமும், இரசாயனங்கள் 12 சதவீதமும் சரிந்துள்ளன.  முக்கியமாக பெட்ரோலிய இறக்குமதியில் 17.4% அதிகரித்ததன் காரணமாக இறக்குமதிக்கான கட்டணம் 7.5% அதிகரித்துள்ளது. எலெக்ட்ரானிக்ஸ், பருப்பு வகைகள் மற்றும் தாவர எண்ணெய்கள் போன்ற நுகர்வுப் பொருட்களின் இறக்குமதியும் கணிசமாக உயர்ந்துள்ளது. அவை 'எண்ணெய் அல்லாத (non-oil), தங்கம் அல்லாத (non-gold)' இறக்குமதிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. தங்கம், இறக்குமதியில் டாலர் மதிப்பில் 10.7% குறைந்துள்ளது. ஆனால், ஏப்ரல் முதல் $3 பில்லியன் முதல் $3.4 பில்லியன் வரை வரம்பில் இருந்தது. ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் இறக்குமதி பொருட்களுக்கான வரிகளை குறைத்துள்ளது. இதனால், தங்கத்தின் இறக்குமதியை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். கூடுதலாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் குறைந்த வரி காரணமாக வெள்ளிக்கான இறக்குமதியும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஜூலையில், வெள்ளி இறக்குமதி கிட்டத்தட்ட 440% அதிகரித்துள்ளது. மேலும், 2024-25 முதல் நான்கு மாதங்களில், அவை கிட்டத்தட்ட 202% உயர்ந்துள்ளன.


குறைந்து வரும் ஏற்றுமதி மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதிகளின் வர்த்தக பற்றாக்குறையில் 24% அதிகரிப்புக்கு வழிவகுத்தது. இது 23.5 பில்லியன் டாலராக, இது ஒன்பது மாதங்களில் மிக உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் ஏற்றுமதிக்கான உலகளாவிய தேவையுடன் ஒப்பிடும்போது உள்நாட்டு தேவை வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இதற்கான அபாயங்கள் மேலும் உள்ளன. இந்தியாவில் உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு, வலுவான சேவைக்காக, கடந்த ஆண்டின் ஏற்றுமதிக்கான மொத்தத்தை இந்தியா முறியடிக்கும் என்று வர்த்தக அமைச்சகம் நம்பிக்கையுடன் உள்ளது. இருப்பினும், தற்போதைய மற்றும் புதிய புவிசார் அரசியல் இடையூறுகள் (வங்கதேசத்தை உள்ளதைப் போல) மற்றும் அதிகரித்து வரும் சரக்குக்கான செலவுகள் சில ஏற்றுமதிகளை லாபமற்றதாக ஆக்குவதால், இதற்கான கண்ணோட்டம் நிச்சயமற்றதாக உள்ளது. பொருட்களின் விலைகளில் சமீபத்திய வீழ்ச்சி மற்றொரு கவலையாக உள்ளது. குறிப்பாக சீனாவின் மந்தமான பொருளாதாரம் அதன் உற்பத்தியாளர்களை உலகச் சந்தைகளில் விலைகளைக் குறைக்க காரணமாகிறது. உலகளாவிய வர்த்தகம் 2023-ஐ விட வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியா நாடுகளுக்கிடையே போட்டித்தன்மையுடன் இருக்கவும், எந்தவொரு சாத்தியமான ஆதாயங்களையும் கைப்பற்றவும் கடினமாக உழைக்க வேண்டும். புதிய சந்தைகளை ஆராய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்றாலும், ஏற்றுமதியாளர்களுக்கு அவர்களின் போட்டித்தன்மையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ திட்டங்களின் எதிர்காலம் குறித்த தெளிவான வழிகாட்டுதலை வழங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, உலகளாவிய பண்டிகை ஆர்டர்கள் (global festive orders) ஏலத்திற்கு வருவதற்கு முன்பு இது மிகவும் முக்கியமானது. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரிகள் மற்றும் வரிகளை நீக்குதல் (Remission of Duties and Taxes on Exported Products(RoDTEP)) திட்டம் செப்டம்பர் 30 வரை மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பெரிய நிறுவனங்களுக்கான வட்டி மானியத் திட்டம் ஜூன் மாதம் முடிவடைந்தது. சிறிய நிறுவனங்களுக்கும் இந்த மாதம் முடிவடையும். இந்தத் திட்டங்களைத் தொடர்வது மற்றும் விரிவாக்குவது குறித்து அமைச்சகங்களுக்கு இடையேயான விவாதங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும். இது ஏற்றுமதியாளர்களுக்கு நீண்ட காலத்திற்கு அதிக தெளிவைக் கொடுக்கும், மேலும் அவர்கள் சிறப்பாக திட்டமிட அனுமதிக்கும். கடைசி நிமிட ஆச்சரியங்களைத் தவிர்க்க வேண்டும்.



Original article:

Share: