இந்தியாவின் காப்பீட்டுத் துறைக்கு 100% நேரடி வெளிநாட்டு முதலீடு (FDI) என்பதன் பொருள் என்ன? -ரௌஹின் தேப், அனன்யா துபே

காப்பீட்டுத் துறையைத் திறப்பது, குறிப்பாக ஆயுள் அல்லாத மற்றும் சுகாதார காப்பீட்டு பிரிவுகளில், மிகவும் தேவையான மூலதனத்தைக் கொண்டுவர வழிவகுக்கும்.


சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சப்கா பீமா சப்கி ரக்ஷா (காப்பீட்டுச் சட்டத் திருத்தம்) மசோதா-2025 (Sabka Bima Sabki Raksha (Amendment of Insurance Laws) Bill), இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை (foreign direct investment (FDI)) அனுமதிப்பதன் மூலம் காப்பீட்டுத் துறையை முழுமையாக அனுமதிக்கிறது. நிதி நிலைக்குழுவின் 66-வது அறிக்கை (2023-24) படி, இந்தியாவில் காப்பீட்டாளர்களுக்கு நிலையான நீண்டகால மூலதன ஆதரவு தேவைப்படுவதால் இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.


இந்தியாவில் உள்ள பல தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், குறிப்பாக ஆயுள் காப்பீடு அல்லாத மற்றும் சுகாதாரப் பிரிவுகளில், இந்திய விளம்பரதாரர்களுக்குத் தொடர்ச்சியாக மூலதனத்தை முதலீடு செய்யும் திறன் குறைவாக உள்ளது. உள்நாட்டு மூலதனத்தின் அதிக செலவு மற்றும் லாபம் ஈட்டுவதற்கு முன் நீண்டகால ஆரம்ப இழப்புகள் காரணமாக மூலதனக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றன. இது காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துதல், தொழில்நுட்பத்தில் முதலீடு செய்தல் மற்றும் குறைவான சேவை அல்லது அதிக இடர்கொண்ட பிரிவுகளில் நுழைவதற்கான திறனைத் தடுக்கிறது. இதன் விளைவாக, நாட்டில் காப்பீட்டுப் பாதுகாப்பு விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது.


ஆரம்பகால இட ஒதுக்கீடுகள் அதன் புதிய உள்நாட்டுத் தொழில்துறையைப் பாதுகாப்பதற்கும் தேசிய சேமிப்புகளைப் பாதுகாப்பதற்கும் காரணமாக இருந்தன. தாராளமயமாக்கலுக்கு முன்பு, இது முக்கியமான நிதி ஆதாரங்களின் மீதான கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்கும் வெளிநாட்டு ஆதிக்கத்தைத் தடுப்பதற்கும் உதவியது.


இருப்பினும், காப்பீட்டுத் துறை அன்று முதல் இன்று வரை கணிசமாக முன்னேறியுள்ளது. அந்நிய நேரடி முதலீடு படிப்படியாகவும் கணிசமாகவும் தாராளமயமாக்கப்பட்டுள்ளது. முதலீட்டு வரம்பு காலப்போக்கில் சீராக அதிகரித்துள்ளது. அது இப்போது 100 சதவீதம் என்ற முன்மொழிவு நிலையை எட்டியுள்ளது.


சீர்திருத்தத்திற்கான பாதை


இந்த செயல்முறை ஆகஸ்ட் 2000-ல் காப்பீட்டுத் துறை திறக்கப்பட்டதன் மூலம் தொடங்கியது. பின்னர், அதிக தனியார் நிறுவனங்களைக் கொண்டு வருவதே இதன் நோக்கமாக இருந்தது. மேலும் இந்த நடவடிக்கை அரசுக்குச் சொந்தமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation of India (LIC)) மற்றும் பொதுக் காப்பீட்டுக் கழகத்தின் (General Insurance Corporation (GIC)) ஏகபோகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. இது ஆகஸ்ட் 2000-ல் சந்தையைத் திறந்து, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 26 சதவீதம் வரை உரிமையை அனுமதித்தது. 2015-ல் காப்பீட்டுச் சட்டம்-1938-ல் ஒரு திருத்தம் மூலம், இதற்கான உரிமை 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும், 2021-ல், மற்றொரு திருத்தம் மூலம், இதற்கான வரம்பு மேலும் 74 சதவீதமாக உயர்த்தப்பட்டது.


இப்போது, ​​காப்பீட்டுத் துறையை மேலும் திறப்பது இந்திய காப்பீட்டுத் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நிச்சயமாகக் கொண்டுள்ளது. முதலாவதாக, மூலதனப் பற்றாக்குறை என்பது காப்பீட்டாளர்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு கட்டமைப்புக் கட்டுப்பாடு ஆகும். காப்பீட்டு நிறுவனங்கள் விரிவடைவதற்கு, அதிக நிதி நிலைத்தன்மை வரம்புகளைப் பராமரிக்க வேண்டும். நீண்டகால சொத்துக்களில் முதலீடு செய்ய வேண்டும் மற்றும் பல பத்தாண்டுகளாக காப்பீட்டு அபாயங்களை ஏற்க வேண்டும். இதற்கு அவர்களுக்கு மூலதனம் தேவைப்படுகிறது.


உள்நாட்டு விளம்பரதாரர்களுக்கு காப்பீடு போன்ற நீண்டகால வணிகத்தில் முதலீடு செய்வதற்கான ஊக்கத்தொகை பெரும்பாலும் இல்லை. அந்நிய நேரடி முதலீடு (FDI) நீண் கால மூலதனத்தை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இரண்டாவதாக, வெளிநாட்டு காப்பீட்டாளர்கள் மூலதனத்தைவிட அதிகமானவற்றை கொண்டு வருகிறார்கள். அவர்கள் புதிய மற்றும் புதுமையான ஆபத்து விலை நிர்ணயம் மற்றும் காப்பீட்டு மாதிரிகள் மற்றும் மேம்பட்ட கணக்கீட்டு அறிவியலைக் (advanced actuarial science) கொண்டு வருகிறார்கள். இது இந்திய நுகர்வோருக்கு தயாரிப்பு புதுமை மற்றும் விருப்பங்களின் பல்வகைப்படுத்தலுக்கு வழிவகுக்கிறது.


மூன்றாவதாக, பின்தங்கிய மக்களுக்கு முதலீடு செய்யத் திட்டமிடும் காப்பீட்டு நிறுவனங்களின் வருமானத்திற்கு நிச்சயமற்ற குறுகிய கால வருமானத்துடன் பெரிய அளவிலான முன்பண முதலீடுகள் தேவைப்படுகின்றன. பன்முகப்படுத்தப்பட்ட உலகளாவிய இலாகாக்களைக் கொண்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்த ஆரம்பகால இழப்புகளை உள்வாங்கி நீண்டகால சந்தை உருவாக்கத்திற்கு நிதியளிக்க சிறந்த நிலையில் உள்ளனர். இது உள்நாட்டு முதலீட்டாளர்கள் செய்யத் தயங்கக்கூடும்.


இறுதியாக, பொதுத்துறை ஆதிக்கம் இந்தத் துறையில் நிலைத்தன்மையை உறுதி செய்துள்ளது. ஆனால், இது போட்டிக்கான அழுத்தத்தைக் குறைத்துள்ளது. புதுமைகளை மெதுவாக்கியுள்ளது மற்றும் தனியார் முதலீட்டை நிராகரித்துள்ளது. அதிக அந்நிய நேரடி முதலீடு என்பது பொதுத்துறை காப்பீட்டாளர்களை அகற்றாமல் விளையாட்டு மைதானத்தை சமன் செய்வதற்கும், தனியார் முதலீட்டாளர்களை வலுப்படுத்துவதற்கும், போட்டியை வலுப்படுத்துவதற்கும் ஒரு வழியாக மறைமுகமாகக் கருதப்படுகிறது.


காப்பீட்டில் அதிகரித்த அந்நிய நேரடி முதலீடு, பல நாடுகளில் மேம்பட்ட சந்தை ஊடுருவல், புதுமையான காப்பீட்டு வழிகள் மற்றும் இடர் விலை நிர்ணய மாதிரிகள் மற்றும் பல்வேறு தயாரிப்புகளுக்கு வழிவகுத்தது. காப்பீட்டு வணிகங்களில் சீனா 100 சதவீத வெளிநாட்டு உரிமையை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் சப் (Chubb) மற்றும் மானுலைஃப் (Manulife) போன்ற நிறுவனங்கள் உள்ளூர் காப்பீட்டு நிறுவனங்களின் முழு உரிமையையும் பெற அனுமதிக்கிறது.


இதேபோல் கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் வெளிநாட்டு உரிமையாளர் கட்டுப்பாடுகளை பெருமளவில் தளர்த்தியுள்ளன. 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை (FDI) நோக்கி நகர்ந்ததைத் தொடர்ந்து, உலகளாவிய காப்பீட்டு நிறுவனமான ஜெனரலி குழுமம் (Generali Group), செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக அதன் இந்திய கூட்டு முயற்சியில் கூடுதல் மூலதனத்தை செலுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. முந்தைய விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்ட புதிய முதலீடுகளை முழு உரிமையாளராகக் கொண்டுவர முடியும் என்பதை இது காட்டுகிறது.


சவால்கள்


இருப்பினும், காப்பீட்டுத் துறையைத் திறப்பது சில சவால்களைக் கொண்டுவருகிறது, அவை தீர்க்கப்படவேண்டும். முதலாவதாக, வெளிநாட்டு காப்பீட்டாளர்களின் நிபுணத்துவம் கேள்விக்குரியது. இது உலகளாவிய நிதி நெருக்கடி போன்ற சம்பவங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. கொரியா நிதி நுகர்வோர் கூட்டமைப்பின்-2014 (Korea Finance Consumer Federation) அறிக்கை, தென் கொரியாவில் உள்ள வெளிநாட்டு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் நிதி மோசடியில் விகிதாச்சாரத்தில் அதிக பங்கிற்கு பொறுப்பேற்றுள்ளன என்பதைக் காட்டுகிறது.


எனவே, இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது, குறிப்பாக முன்னேறிய நாடுகளில் வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாடு விவாதத்தில் இருக்கும் நிலையில், நமது நிதிச் சந்தைகளை அவற்றின் ஆபத்தான நடவடிக்கைகளுக்கு ஆளாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.


இரண்டாவதாக, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் பான்காஷூரன்ஸ் மாதிரி (bancassurance model) போன்ற உள்ளூர் விநியோக மாதிரிகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். இது ஒரு சவாலாக இருக்கலாம். மேலும், குறைந்த வருமானம்கொண்ட பிரிவையும் பூர்த்திசெய்ய அவர்கள் தயாரிப்புகளை பன்முகப்படுத்த வேண்டும்.


மூன்றாவதாக, லாபத்தின் குறிப்பிடத்தக்க பகுதி, அந்நிய நேரடி முதலீடு (FDI) காரணமாக நடைமுறைப்படுத்தும் நாட்டிலிருந்து (host country) வெளியேறுகிறது. இது நீண்டகால உள்ளூர் பொருளாதார நன்மைகளைக் குறைக்கிறது. மேலும், நிறுவனங்களில் முழுமையான உரிமை உள்ளூர் முடிவெடுக்கும் சக்திகளைக் குறைக்கலாம். இறுதியாக, வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு கொள்கைகள் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுக்கும்.


இந்தத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை (FDI) அனுமதிக்கும் அரசின் நடவடிக்கை ஒரு நம்பிக்கையான நடவடிக்கையாகும். இது இந்தியாவின் காப்பீட்டு அமைப்பின் வலிமையின் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. முறையான ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டை உறுதி செய்ய, இந்தச் சீர்திருத்தங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். இதற்காக இந்த மசோதா காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்களிடமிருந்து தவறான ஆதாயங்களை மீட்கும் அதிகாரத்தை இந்த மசோதா இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கு (Insurance Regulatory and Development Authority of India(IRDAI)) வழங்குகிறது. இது அபராதத் தொகையை ₹1 கோடியிலிருந்து ₹10 கோடியாகவும் உயர்த்துகிறது.


சரியாகச் செய்யப்பட்டால், இந்த நடவடிக்கை மூலதன முதலீட்டை அதிகரிக்க முடியும். இது தற்போதுள்ள காப்பீட்டுத் தயாரிப்புகளை மேம்படுத்தி, சந்தை வரம்பை விரிவுபடுத்தவும் முடியும்.


தேப், அசாம் முதலமைச்சர் செயலகத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர். துபே, கொள்கை, அரசியல் மற்றும் ஆளுமை அறக்கட்டளையின் முகர்ஜி ஃபெலோ ஆவார்.


Original Article :  What 100% FDI means for Indian insurance?. -Rouhin Deb, Ananya Dubey

Share:

சூரியனைப் பின்தொடர்வதையும் காற்றைப் பயன்படுத்துவதையும்விட மேலானவை ஆற்றல் மாற்றத்திற்கு தேவை -ஷெஃபாலி கன்னா

இரண்டு முக்கிய சீர்திருத்தங்கள் முக்கியமானவை. முதலாவது, நாடு தழுவிய சந்தை அடிப்படையிலான பொருளாதார மின் விநியோக முறைக்கு மாறுவது. இரண்டாவது, சொந்த மின் உற்பத்தி நிலையங்களை மொத்த விற்பனைச் சந்தைகளில் ஒருங்கிணைப்பது ஆகும்.


இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாற்றம் இனி சுத்தமான மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கும் திறனால் வரையறுக்கப்படவில்லை. சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திறன் 180 ஜிகாவாட்களை தாண்டியுள்ளது. மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலானது இப்போது மிகக் குறைந்த விலை ஆதாரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அதற்கு பதிலாக, விநியோகம் மற்றும் சந்தை வடிவமைப்பில் சீர்திருத்தங்களுக்கான அவசரத் தேவையால் இந்த மாற்றம் கட்டுப்படுத்தப்படுகிறது. மின் அமைப்பு ஏற்கனவே உற்பத்தி செய்யும் பசுமை மின்சாரத்தை முடிந்தவரை மிகவும் திறமையான முறையில் பயன்படுத்த முடியுமா என்பதுதான் இன்றைய சவாலாக உள்ளது.


இந்த சவாலில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன. முதலாவதாக, மின்சார விநியோகத்தைச் சீர்திருத்துவது மிகப்பெரிய தடையாகும். இரண்டாவதாக, சுத்தமான மற்றும் நம்பகமான மின்சாரத்திற்கான அணுகலை அளவிடுவதற்கு மாறும் சில்லறை கட்டணங்களும் திறன்மிகு தொழில்நுட்பங்களும் (smart technologies) மிக முக்கியம். மூன்றாவதாக, முதலீட்டை ஈர்ப்பதற்கும், நாடு முழுவதும் மின்சாரம் எவ்வாறு திட்டமிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படுகிறது என்பதை மேம்படுத்துவதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இழப்பைக் குறைப்பதற்கும் மொத்த மின்சாரச் சந்தையைச் சீர்திருத்துவது அவசியமாகும்.


விநியோக நிறுவனங்கள் (discoms) இந்தியாவின் சுத்தமான எரிசக்தி மாற்றத்திற்கு மையமாக உள்ளன. எனவே, அவற்றின் இயக்க செயல்திறனை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது. தேசிய அளவிலான தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகள் 16 சதவீதமாகவே உள்ளன. மேலும், பல விநியோக நிறுவனங்கள் உதய் (UDAY) மற்றும் ஆர்டிஎஸ்எஸ் (RDSS) போன்ற முயற்சிகளுக்குப் பிறகும் தொடர்ந்து செலவுக்கான குறைபாட்டை எதிர்கொள்கின்றன. இந்த திட்டங்கள் விநியோக உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், திறன்மிகு அளவீடு (smart metering) நிதியளித்தல் மற்றும் திறனை உருவாக்குதல் ஆகியவற்றில் சரியாக கவனம் செலுத்தியுள்ளன. ஆனால், நிதி மற்றும் செயல்பாட்டு அழுத்தம் பரவலாக உள்ளது.


smart metering (திறன்மிகு அளவீடு) : ஸ்மார்ட் மீட்டரிங் மேம்பட்ட டிஜிட்டல் மீட்டர்களைப் பயன்படுத்தி, நிகழ்நேர ஆற்றல் (மின்சாரம், எரிவாயு, நீர்) பயன்பாட்டுத் தரவை தானாகவே பதிவுசெய்து பயன்பாட்டு விநியோகர்களுக்கு அனுப்புகிறது


RDSS : The Revamped Distribution Sector Scheme - புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறைத் திட்டம் 


புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அதிகரிக்கும் போது இந்த சவால் மிகவும் தீவிரமாகிறது. மின்சாரம் மிகவும் மாறக்கூடியதாகிறது. உச்சபட்ச தேவை சேவை செய்வதற்கு விலை உயர்ந்ததாகிறது. மேலும், மின் கட்டமைப்பை சமநிலைப்படுத்துதல் மற்றும் முன்னறிவித்தல் முக்கிய அமைப்பு செயல்பாடுகளாகின்றன. இருப்பினும், விநியோக நிறுவனங்கள் (Discoms) சலுகைகள் இன்னும் முக்கியமாக விற்கப்படும் மின்சாரத்தின் அளவோடு இணைக்கப்பட்டுள்ளன.  அவை ஒட்டுமொத்த அமைப்பின் செயல்திறனை அதிகரிப்பதோடு இணைக்கப்படவில்லை. எரிசக்தி மாற்றத்திற்குத் தேவையான சில மாற்றங்கள் விநியோக நிறுவனங்களுக்கு (Discoms) நிதி ரீதியாக அச்சுறுத்தலாகத் தோன்றலாம். ஏனெனில், அவை விற்பனையைக் குறைத்து நிலையான செலவுகளை சிறிய நுகர்வோர் தளத்திற்கு மாற்றுகின்றன.


பல மாநிலங்களில், விநியோக நிறுவனங்கள் (Discoms) தங்கள் வருவாயில் கணிசமான பங்கை வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோரிடமிருந்து பெறுகின்றன. அவர்கள் செலவுக்கு மேல் கட்டணங்களை செலுத்துகிறார்கள். மேலும், செலவுக்குக் குறைவான கட்டணங்களை செலுத்தும் வீடுகள் மற்றும் விவசாயத்திற்கு மானியம் வழங்குகிறார்கள். இந்த அதிக ஊதியம் பெறும் நுகர்வோர் எரிசக்தி செயல்திறனில் முதலீடு செய்யும்போது, மின்சாரத்திற்கான தேவை குறைகிறது. அவர்கள் கூரை சூரிய சக்தியை நிறுவும்போது, அவர்கள் விநியோக நிறுவனங்களில் இருந்து குறைந்த மின்சாரத்தை வாங்குகிறார்கள். அவர்கள் திறந்த அணுகலுக்கு மாறும்போது, விநியோக நிறுவனங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்திவிடுகிறார்கள். இதன் விளைவாக, விநியோக நிறுவனங்கள் தங்கள் அதிக லாபகரமான விற்பனையை இழக்கின்றன.


அதே நேரத்தில், நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களின்கீழ் வலையமைப்பு செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு முதல் கொள்ளளவு கட்டணங்கள் (capacity payments) வரை விநியோக நிறுவனங்கள் பெரிய, நிலையான செலவுகளை எதிர்கொள்கின்றன. எரிசக்தி திறன் மேம்படும் போது, மின்சார தேவை குறைகிறது. மீட்டருக்குப் பின்னால் உள்ள சூரிய சக்தி விரிவடையும்போது, தேவையும் குறைகிறது. இருப்பினும், இந்த நிலையான செலவுகள் நீங்காது. கட்டணங்கள் பெரும்பாலும் அளவீட்டு ரீதியாக இருந்தால், விற்கப்படும் கிலோவாட்-மணிநேரங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அதே நிலையான வேலைகளை ஈடுகட்ட குறைந்த வருவாய் கிடைக்கும். தேவைக்கான பதில் உச்சபட்ச தேவையைக் குறைக்கலாம். ஆனால், நிலையான செலவுகள் ஆதிக்கம் செலுத்தும்போது மற்றும் வருவாய் உடனடியாக பாதிக்கப்படும்போது மின் கொள்முதல் மீதான ஒட்டுமொத்த செலவு சேமிப்பு கட்டுப்படுத்தப்படலாம்.


கூரை சூரிய சக்தி (Rooftop solar), விநியோக நிறுவனங்களின் மிகவும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் பொருளாதாரத்தை மேலும் மாற்றுகிறது. அனுமதிக்கப்பட்ட இடங்களில், நிகர அளவீடு, சில்லறை கட்டணத்தில் அல்லது அதற்கு அருகில் சூரிய சக்தியை ஏற்றுமதி செய்கிறது. இருப்பினும், அந்த கட்டணத்தில் பெரும்பாலும் வலையமைப்பு செலவுகள் மற்றும் குறுக்கு மானியங்கள் (cross-subsidies) அடங்கும். சூரிய உற்பத்தி அதிகமாக இருக்கும் பகலில் நுகர்வோர் குறைந்த மின்சாரத்தை வாங்குகிறார்கள். அவர்கள் இரவில் மின்கட்டத்தை தொடர்ந்து நம்பியிருக்கிறார்கள். கட்டண வடிவமைப்பு உருவாகாவிட்டால், விநியோக நிறுவனங்கள் அந்த சேவைக்கு முழுமையாக ஊதியம் ஈடுசெய்யப்படாமல் திறம்பட காப்பு மின் வழங்குநர்களாக மாறுகிறார்கள்.


இதன் பொருள் ஆற்றல் திறன், கூரை மேல் சூரிய மின்சக்தி அல்லது தேவைக்கேற்ப மின் பயன்பாட்டுக் கட்டுப்பாடு ஆகியவை மின் விநியோக நிறுவனங்களுக்குத் தீங்கு விளைவிப்பவை என்பதல்ல. இந்த நடவடிக்கைகள் துணைபுரியும் கட்டணச் சீர்திருத்தம் இல்லாதபோது மட்டுமே நிதிரீதியாக ஆபத்தானவையாக மாறுகின்றன.  ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் (smart technologies) முறையாகப் பயன்படுத்தப்படாதபோதும் அவை ஆபத்தானவையாக மாறுகின்றன. மோசமாக வடிவமைக்கப்பட்ட ஊக்கத்தொகைகள் இந்த சிக்கலை மேலும் அதிகரிக்கின்றன. நிலையான வலையமைப்பு செலவுகளை மீட்டெடுக்கவும், நம்பகத்தன்மை, இழப்பு குறைப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மைக்கான வருமானத்தைப் பெறவும் விநியோக நிறுவனங்களை ஒழுங்குமுறை அதிகாரிகள் அனுமதித்தால், இந்த நடவடிக்கைகள் விநியோக நிறுவனங்கள் தவிர்க்க விரும்பும் அபாயங்களுக்குப் பதிலாக தீவிரமாக விரும்பும் பயனுள்ள கருவிகளாக மாறும்.


இந்தியா நேர அடிப்படையிலான கட்டணங்களைக் கட்டாயமாக்கியுள்ளது. இது முன்னோடியில்லாத வேகத்தில் ஸ்மார்ட் மீட்டர்களையும் நிறுவி வருகிறது. சுமார் 49 மில்லியன் ஸ்மார்ட் மீட்டர்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. மேலும், பல திட்டமிடப்பட்டுள்ளன. இது ஒரு நவீன மின் கட்டமைப்பிற்கு அவசியமான அடித்தளமாகும். ஆனால், விலை குறியீடுகள் மட்டும் உச்சபட்ச நேரங்களிலிருந்து தேவையை மாற்ற போதுமானதாக இல்லை. காலப்போக்கில் மாறுபடும் கட்டணங்கள் வேலைசெய்ய, மின்சாரம் எப்போது விலை உயர்ந்தது என்பதை நுகர்வோர் புரிந்து கொள்ள வேண்டும். எந்தெந்த உபகரணங்கள் உச்சபட்ச நுகர்வை இயக்குகின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மேலும், தொடர்ச்சியான முயற்சிகள் இல்லாமல் அவர்களால் பதிலளிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். நடைமுறையில், பல குடும்பங்கள் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றன. பல சிறு வணிகங்களும் இதேபோன்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றன. பல சிறு வணிகங்களும் இதேபோன்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றன. அவர்களிடம் பெரும்பாலும் தெளிவான தகவல்கள் இருப்பதில்லை. இந்த செயல்முறையை கைமுறையாக நிர்வகிக்கத் தேவையான ஒருங்கிணைப்பும் அவர்களிடம் இருப்பதில்லை.


கட்டண சீர்திருத்தத்தின் தேவை தானாகவே பதிலளிக்க அனுமதிக்கும் திறன்மிகு தொழில்நுட்பங்களுடன் இணைக்கப்பட வேண்டும். உதாரணமாக குளிர்விப்பதற்கான ஸ்மார்ட் தெர்மோஸ்டாட்கள் (smart thermostats), மின்சார வாகனங்களுக்கான திறன்மிகு மின்னேற்ற அமைப்பு (smart charging system) மற்றும் சாதன-நிலை தானியக்கத்திற்கான ஸ்மார்ட் பிளக்குகள் (Smart plugs) மற்றும் சுவிட்சுகள் (switches) போன்றவை. அத்தகைய தானியக்கம் இல்லாமல், வீடுகள் உண்மையான நேரத்தில் ஆற்றல் பயன்பாட்டை நிர்வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு பெரும்பாலான மக்களுக்கு நம்பத்தகாதது. மின் கட்டமைப்பு வலையமைப்புகள் மற்றும் எரிசக்தி சேமிப்பில் முதலீடுகள் அவசியம் என்றாலும், நன்கு வடிவமைக்கப்பட்ட தேவை பதில் பெரும்பாலும் குறைந்த செலவில், குறிப்பாக குறுகியகால உச்சங்களை நிர்வகிப்பதற்கு ஒத்த நெகிழ்வுத்தன்மையை வழங்க முடியும்.


மொத்த விற்பனைத் துறையில், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சவாலானது புவியியல் ரீதியாகவும் உள்ளது. புதுப்பிக்கத்தக்க வளங்கள் மாநிலங்கள் முழுவதும் சீராகப் பரவவில்லை. அதேநேரத்தில், மின்சார தேவையானது நகர்ப்புறங்களில் குவிந்துள்ளது. இயற்பியல் மின்கட்டமைப்பு மின்சாரத்தை பிராந்தியங்கள் முழுவதும் கொண்டு செல்ல அனுமதித்தாலும், சந்தை வடிவமைப்பு இன்னும் சிதறிய நிலையிலேயே உள்ளது. பெரும்பாலான விநியோகம் நீண்ட மற்றும் நடுத்தர கால ஒப்பந்தங்களில் பிணைக்கப்பட்டுள்ளது. விநியோக நிறுவனங்கள் பெரும்பாலும் தங்கள் ஒப்பந்தங்களின் அடிப்படையில் சுய-திட்டமிடல் உற்பத்தியை மட்டுமே திட்டமிடுகின்றன. அனுப்புதலை மேம்படுத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட மின் பரிமாற்றங்கள், வழங்கப்படும் மொத்த மின்சாரத்தில் 7 முதல் 9 சதவீதம் வரை மட்டுமே உள்ளன. இது நாடு முழுவதும் மலிவான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை திறமையாகப் பயன்படுத்துவதற்கான இந்தியாவின் திறனைக் கட்டுப்படுத்துகிறது.


இரண்டு மொத்த சீர்திருத்தங்கள் முக்கியமானவை. முதலாவது நாடு தழுவிய சந்தை அடிப்படையிலான பொருளாதார மின் விநியோக அமைப்புக்கு மாறுவதாகும். ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பின்கீழ், மலிவான மின்சாரம் முதலில் விநியோகிக்கப்படும். இதில் பூஜ்ஜிய இறுதிநிலைச் செலவைக் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் அடங்கும். அதிக குறுகியகால இறுதிநிலைச் செலவுகளைக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் பின்னர் விநியோகிக்கப்படும். மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (CERC) மதிப்பீடுகள் தெளிவான நன்மைகளைக் காட்டுகின்றன. இத்தகைய சீர்திருத்தம் ஆண்டு மின்சார கொள்முதல் செலவுகளை சுமார் 1.6 பில்லியன் டாலர் வரை குறைக்கக்கூடும். இது மின்கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் ஒருங்கிணைப்பையும் பெரிதும் மேம்படுத்தும்.


இரண்டாவது கட்டுப்படுத்தப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களை (captive power plants) மொத்த சந்தைகளில் ஒருங்கிணைப்பது. கட்டுப்படுத்தப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் (captive power plants) நெகிழ்வான திறனின் பெரிய மற்றும் பயன்படுத்தப்படாத மூலத்தைக் குறிக்கின்றன. அவற்றை சந்தைகளுக்குள் கொண்டு வருவது போட்டியை அதிகரிக்கும், பணப்புழக்கத்தை மேம்படுத்தும் மற்றும் கணினி செலவுகளைக் குறைக்கும். ஒன்றாக எடுத்துக்கொண்டால், சில்லறை மற்றும் மொத்த விற்பனை சீர்திருத்தங்கள் செயலற்ற இடைத்தரகர்களிலிருந்து செயலில் உள்ள கணினி மேம்படுத்துபவர்களாக விநியோக நிறுவனங்களின் பங்கை மறுவரையறை செய்யக்கூடும். சரியான ஊக்கத்தொகைகள் மற்றும் சந்தை வடிவமைப்புடன், மின் விநியோக நிறுவனங்கள் உச்சபட்ச தேவைகளைக் கையாளவும் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும் தேவைக்கான நெகிழ்வுத்தன்மையை பயன்படுத்த முடியும். மேலும், ஒருங்கிணைந்த மொத்த சந்தைகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைத் திறமையாக ஒருங்கிணைப்பதற்கு ஆதரவளிக்க முடியும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்பு சிறந்த சேவைத் தரத்தை வழங்கினால், பொதுமக்களின் ஆதரவு வலுப்பெறும். அது நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தினால், எதிர்ப்பு அதிகரிக்கும்.


எழுத்தாளர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பாலிட்டிகல் சயின்ஸில் எரிசக்தி பொருளாதாரம் மற்றும் கொள்கையில் ஒரு ஃபெலோ ஆவார். எழுத்தாளர் புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் உள்ளார்.


 Original Article : Energy transition will need more than chasing the sun and harnessing the wind -Shefali Khanna

Share:

சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR) எவ்வளவு? -குஷ்பூ குமாரி

முக்கிய அம்சங்கள்:


— கடன் சுமையில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ₹87,695 கோடி சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (Adjusted Gross Revenue (AGR)) நிலுவைத் தொகையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு தவணை செலுத்தாமல் நிறுத்தி வைப்பது என்று கடந்த புதன்கிழமை அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இது நிறுவனத்துக்கு எதிர்கால நிதிப் பொறுப்புகள் குறித்த தெளிவை அளிக்கும் என்றும் தனியார் துறை வலியுறுத்திய முக்கிய முன்நிபந்தனை இதுவே என்றும் தெரிவிக்கப்படுகிறது.


— இரண்டு பெரிய நிறுவனக் குழுக்கள் வெவ்வேறு காலகட்டங்களில் ஆர்வம் காட்டியுள்ளதாகத் தெரிவித்தனர். அரசு தனது பங்கை வெளியேற்றுவதற்கான ஒரு உள் அளவுகோல் (internal yardstick) என்னவென்றால், அது தனது பங்கை லாபத்தில் விற்கவேண்டும். ஆனால், அரசு பங்குகளை விற்பதற்கான வழிமுறைகளைப்  பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 


— வோடஃபோன் ஐடியா தொலைத்தொடர்பு  நிறுவனத்தின் வட்டி நிலுவைத் தொகைக்குப் பதிலாக, அரசு அந்த நிறுவனத்தில் 49 சதவிகித பங்குகளை பிப்ரவரி மாதம் 2023-ஆம் ஆண்டில் கையகப்படுத்தியது. இந்த 49 சதவிகித பங்குகளுக்கு அப்பால், பங்கு விற்பனை நடந்தபிறகு புதிய முதலீட்டாளர் இறுதியில் பெரும்பான்மை கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முடியும் என்று தெரிய வருகிறது.


— இந்திய தொலைத்தொடர்பு துறையில் சேவை வழங்கும்  நிறுவனங்கள் மிகக் குறைவாக இருப்பது குறித்து அரசு கவலைப்படுகிறது. இந்த முக்கியத் துறையில் பல நிறுவனங்கள் இருக்க வேண்டும் என்பதை அரசு விரும்புகிறது. அதற்கு வோடபோன் ஐடியா நிறுவனம் போட்டியிடக்கூடிய வலுவான நிறுவனமாக இருக்க வேண்டும். ஆனால், அதன் நிதி நிலைமை மோசமாக இருக்கும் இந்த சூழ்நிலையில், கடும் போட்டி உள்ள இந்தச் சந்தையில் இந்த நிறுவனம் தொடர்ந்து இயங்க  முடியுமா என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளதாக ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


— தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ரூ.87,695 கோடி அளவிலான சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவைத் தொகை (AGR) செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்திவைத்து மற்றும் அதை படிப்படியாக திருப்பிச் செலுத்தும் வகையில் மறுசீரமைப்பு  செய்து அமைச்சரவை நிவாரணம் அளித்துள்ளது. மேலும், இந்த முடிவு, உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த நிலுவைத் தொகைகளை அரசு மறுமதிப்பீடு செய்ய அனுமதித்த பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 


— தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு அமைச்சரவை அளித்த நிவாரணத் தொகுப்பு, சட்டப்பூர்வ நிலுவைத் தொகையை நிதியாண்டு FY32 முதல் FY41 வரை 10 ஆண்டு காலத்திற்குள் திருப்பிச் செலுத்துவதை மறுசீரமைக்க அனுமதிக்கிறது. நிதியாண்டு FY18 மற்றும் FY19 நிதியாண்டுக்கான சரிசெய்யப்பட்ட  மொத்த வருவாய் நிலுவைத் தொகைகள் எந்த மாற்றமும் இன்றி தொலைத்தொடர்பு நிறுவனத்தால் FY26 முதல் FY31 வரையிலான காலப்பகுதியில் செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


— வோடபோன் ஐடியா நிறுவனம் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவைத் தொகையில், ஆண்டுக்கு ரூ. 18,000 கோடி மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டு முதல் செலுத்தப்பட வேண்டும். இருப்பினும், இந்த சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரம் தொடர்பாக அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. மேலும், அந்தத் தொகையைச் செலுத்துவதில் இருந்து சலுகை கிடைக்காவிட்டால், அது நிறுவனத்தின் நிதிசார்  உறுதித்தன்மைக்கு ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அரசாங்கத்தின் பங்குகள் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.


— இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்சநீதிமன்றத்தில் அளித்த ஒரு மனுவில், வோடபோன் ஐடியா நிறுவனம் தளர்வு தேவை என்று வாதிட்டது. பின்னர் இந்த அவகாசம் கிடைக்கவில்லை என்றால், அது திட்டமிட்ட முதலீடுகளை செய்யமுடியாது என்றும், நிறுவனத்தின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படுவதற்காக மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகள் நீர்த்துப்போகும் என்றும் குறிப்பிட்டது. அபராதம் மற்றும் வட்டி உட்பட, அரசாங்கத்திற்கு இந்நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த கடன்கள் சுமார் ரூ. 2 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


— இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய நிதிச்சுமை உள்ளது. அதோடு, வருவாயும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகின்றன. இதனால், நிலுவைத் தொகையை செலுத்த போதிய பணப்புழக்கம் நிறுவனத்திடம் இருக்காது. எனவே, அதிகக் கடன் காரணமாக முதலீட்டாளர்களும்  விலகுவதால் பங்குச் சந்தையில் பணம் திரட்டுவதில் சிரமப்பட்டு வந்த இந்நிறுவனத்திற்கு, அமைச்சரவையின் இந்த முடிவு பெரிய ஊக்கமாக அமையும் என்று கருதப்படுகிறது.


— நிதிச் சுமையால் போராடி வரும் இந்த நிறுவனத்திற்கு அரசாங்கம் வழங்கிய இரண்டாவது உதவி இதுவாகும். 2021-ஆம் ஆண்டில் அந்நிறுவனத்திற்காக கொண்டு வரப்பட்ட நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வோடபோன் ஐடியாவின் ரூ. 6,133 கோடி வட்டி நிலுவைத் தொகையை சமபங்குகளாக (equity) மாற்ற அரசாங்கம் பிப்ரவரி 2023-ஆம் ஆண்டில் அரசாங்கம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.


உங்களுக்குத் தெரியுமா?


— தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உரிமக் கட்டணம் மற்றும் அலைக்கற்றை கட்டணங்களை மத்திய அரசுக்கு ‘வருவாய் பங்கு’ வடிவில் செலுத்த வேண்டும். இந்த வருவாய் பங்கை கணக்கிடப் பயன்படுத்தப்படும் வருவாய் தொகையே சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய்  (Adjusted Gross Revenue (AGR)) எனப்படுகிறது.


— 1999-ஆம் ஆண்டில் தான் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிதிநிலை மோசமடைந்தது. அப்போது தொலைத்தொடர்பு துறைக்கான நிலையான கட்டண முறையிலிருந்து வருவாய்-பகிர்வு மாதிரிக்கு மாற அரசாங்கம் முடிவு செய்தது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தொலைத்தொடர்பு மற்றும் தொலைத்தொடர்பு அல்லாத வருவாய்கள் மூலம் அவர்கள் ஈட்டிய சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை உரிமம் மற்றும் அலைக்கற்றை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.


— இந்தக் கட்டுப்பாட்டுகள் தளர்த்தப்பட்டதால், பல நிறுவனங்கள் இத்துறையில் முதலீடு செய்தன. அதிகபட்சமாக, இந்தியாவில் 14-க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் பிராந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் இருந்தனர்.


— 2003-ஆம் ஆண்டில், தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)) சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் கட்டணங்களுக்கான கோரிக்கையை எழுப்பியது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் துணை நிறுவனங்களிடமிருந்து ஈட்டிய பகிர்வுத்தொகை, குறுகிய கால முதலீடுகளின் மீதான வட்டி, வணிகர் தள்ளுபடியாகக் கழிக்கப்பட்ட பணம், அழைப்புகளுக்கான தள்ளுபடி மற்றும் பிற, தொலைத்தொடர்பு சேவைகளில் இருந்து வரும் வருவாய்க்கு மேல் இருந்த அனைத்து வருவாய்களும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் கணக்கீட்டிற்குள் சேர்க்கப்படும் என்று தொலைத்தொடர்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.


— தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை (Telecom Disputes Settlement and Appellate Tribunal (TDSAT)) அணுகின. ஜூலை மாதம் 2006-ஆம் ஆண்டு இந்த விவகாரம் ஒழுங்குமுறை ஆணையமான  இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (Telecom Regulatory Authority of India (TRAI)), புதிய ஆலோசனைக்காக மீண்டும் அனுப்பப்பட வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.


— தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மேல்முறையீட்டு தீர்ப்பாயமானது (Telecom Disputes Settlement and Appellate Tribunal (TDSAT)) அரசாங்கத்தின் வாதத்தை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்குகள் நடந்துகொண்டிருந்தபோது, 2012-ஆம் ஆண்டில் 2G ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் 122 தொலைத்தொடர்பு உரிமங்களை ரத்து செய்தது. இதனால் நிறுவனங்கள் அனைத்தும்  மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகு, அலைக்கற்றை ஏலம் மூலமாகவே ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 


— 2019-ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் முதல் தீர்ப்பை வழங்கியது. அதில், தொலைத்தொடர்புத் துறையின் (DoT) சரிசெய்யப்பட்ட மொத்த வருமானத்தின் (AGR) வரையறைதான் முறையானது என்றும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயையும், அதற்கான வட்டியையும், செலுத்தாததற்கான அபராதத்தையும் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


 Original Article : What is the adjusted gross revenue (AGR)? -Khushboo Kumari

Share:

தேசிய பேரிடர் தற்செயல் வரி (NCCD) என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— சிகரெட் தயாரிப்பாளர்கள் கூடுதல் வரிகளின் அதிகரிப்பு 20-30 சதவீதம் வரை இருக்கும் என்று மதிப்பிடுகின்றனர், ஆனால் அவர்கள் இந்தச் சுமையை உடனடியாகவோ அல்லது தவணைகளாகவோ நுகர்வோருக்கு மாற்றுவதா  என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. மறுபுறம், முதலீட்டு ஆய்வாளர்கள், வரி உயர்வுக்குப் பதிலளிக்கும் வகையில் விலைகள் 15 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயரக்கூடும் என்று தெரிவித்தனர்.


— தேசிய பங்குச் சந்தையில் (National Stock Exchange), சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களான ஐ.டி.சி (ITC) மற்றும் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா (Godfrey Phillips India) ஆகியவற்றின் பங்கு விலைகள் முறையே ஏறக்குறைய 10 சதவீதம் மற்றும் 17 சதவீதம் வீழ்ச்சியடைந்ததன் மூலம், பங்குச் சந்தைகள் அதிக வரி தாக்கத்தை வெளிப்படையாகக் கண்டன.


— சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் (GST) 2.0 40 சதவீத அடுக்குக்கு மேலாக விதிக்கப்படும் கூடுதல் வரிகள், அசல் ஜிஎஸ்டி ஆட்சியின்கீழ் இருந்த முந்தைய இழப்பீட்டு செஸ் விதிப்பில் இருந்து ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.


— சிகரெட்டுகளுக்கான வரி அமைப்பு சிக்கலானது. இப்போதுள்ளபடி, மொத்த வரிகளை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்: அடிப்படை கலால் வரி (basic excise duty) – 1,000 சிகரெட்களுக்கு ரூ. 5 முதல் 10 வரை. தேசிய இடர் தற்செயல் வரி (National Calamity Contingent Duty (NCCD)) – 1,000 சிகரெட் குச்சிகளுக்கு ரூ. 230 முதல் 850 வரை. ஜிஎஸ்டி – 28 சதவீதம். மற்றும் ஒரு இழப்பீட்டு செஸ் வரி ஆகும்.


— இழப்பீட்டு செஸ் இரண்டு கூறுகளைக் கொண்டிருந்தது: மதிப்பின் அடிப்படையில் விதிக்கப்படும் வரி (ad valorem levy) – 5 முதல் 36 சதவீதம் வரை. தட்டையான வரி (flat levy) – 1,000 சிகரெட் குச்சிகளுக்கு ரூ. 2,076 முதல் 4,170 வரை.

பொதுவாக, ஃபில்டர்கள் (filters) மற்றும் நீளமான சிகரெட்டுகளுக்கு அதிக வரிகளும், சுருட்டுகள் (cigars), செரூட்ஸ் (cheroots) மற்றும் சிகாரில்லோஸ் (cigarillos) ஆகியவற்றுக்கு மிக அதிக வரிகளும் விதிக்கப்பட்டன.


— பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல், இழப்பீட்டு செஸ் கூறு நீக்கப்படும். இதனை ஈடுசெய்யும் வகையில், ஜிஎஸ்டி வரி விகிதம் 40 சதவீதமாகவும், கலால் வரிகள் 1,000 சிகரெட் குச்சிகளுக்கு ரூ. 2,050 முதல் 8,500 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.


— ஜூலை மாதம்  2025-ஆம் ஆண்டு வெளியான உலக வங்கியின் ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி, சிகரெட்டுகளின் மொத்த வரிச் சுமை சில்லறை விலையில் சுமார் 53 சதவீதம் மட்டுமே உள்ளது என்றும், இது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த 75 சதவீதத்தைவிட மிகக் குறைவாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.


— சிகரெட்டுகளைத் தவிர, பான் மசாலா மீதும் 40 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், அதனுடன் 'சுகாதாரப் பாதுகாப்பு முதல் தேசியப் பாதுகாப்பு வரை செஸ் (Health Security se National Security Cess)' என்ற வரியும் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி குழுவானது, பான் மசாலா மீதான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்திலிருந்து அதிகபட்ச சட்ட வரம்பான 40 சதவீதமாக உயர்த்த முடிவு செய்தது. "எனவே, தற்போதுள்ள வரிச்சுமையின் மீதமுள்ள பகுதி, இயந்திர அடிப்படையிலான செஸ் (cess) ஆக, 'சுகாதாரப் பாதுகாப்பு முதல் தேசியப் பாதுகாப்பு வரை செஸ் சட்டம், 2025-ன் கீழ் மாற்றப்படுகிறது," என்று ஓர் அதிகாரி தெரிவித்தார்.


— மேலும், மெல்லும் புகையிலை (chewing tobacco), ஜர்தா மணமூட்டிய புகையிலை (jarda scented tobacco), மற்றும் குட்கா ஆகியவற்றை அடைக்கும் இயந்திரங்களின் உதவியுடன் தயாரித்து, பைகளில் அடைக்கும்போது, பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் அதன் உற்பத்தித் திறனின் அடிப்படையில் மத்திய கலால் வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


— பான் மசாலா மற்றும் புகையிலை இரண்டும் வரி ஏய்ப்புக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள, இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் துறைகள் என்றும், அங்கு உண்மையான உற்பத்தியைக் கணக்கிடுவது கடினம் என்றும், எனவே உற்பத்தித் திறனுடன் இணைக்கப்பட்ட வரி விதிப்பு (capacity-linked levy) சிறந்தது என்றும் நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.


— சரக்கு மற்றும் சேவை வரியானது (GST), எவ்வளவு விற்கப்பட்டது மற்றும் என்ன விலைக்கு விற்கப்பட்டது என்பதைக் காட்டும் மதிப்புக் கணக்கீட்டை அளிக்கிறது. அதேசமயம், செஸ் (cess) வரி, எவ்வளவு உற்பத்தி செய்யப்பட்டிருக்கமுடியும் என்று கூறும் உற்பத்தித் திறன் கணக்கீட்டை அளிக்கிறது என்றும் தெரிவிக்கின்றன.


— பிற புகையிலைப் பொருட்களுக்கு, ஹுக்கா (hookah) மீதான கலால் வரி 33 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஒரே மாதிரியாக்கப்பட்ட புகையிலை, மெல்லும் புகையிலை தயாரிப்புகள் மற்றும் சுருட்டுப் பொடி ஆகியவற்றுக்கு 60.5 சதவீதம் வரி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. மெல்லும் புகையிலை மற்றும் ஜர்தா வாசனை புகையிலைக்கு வரி விகிதம் 82 சதவீதம் என அதிகமாக உள்ளது. குழாய்கள் மற்றும் சிகரெட்டுகளுக்கான புகைக்கும் கலவைகளுக்கு 279 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.


— கடந்த மாதம், புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களின்மீது அதிக கலால்வரி விதிப்பதற்கும், பான் மசாலா மீது ‘ஆரோக்கியப் பாதுகாப்பு முதல் தேசியப் பாதுகாப்பு வரை வரி (Health Security se National Security Cess)’ விதிப்பதற்கும் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இரண்டு சட்டங்களை அறிமுகப்படுத்தியது.


உங்களுக்குத் தெரியுமா?


— 2017-ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுச் சட்டப்படி, சரக்கு மற்றும் சேவை வரி அமலான முதல் 5 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட இழப்பீட்டு செஸ் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், கோவிட் பெருந்தொற்று காலத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுக்காக பெறப்பட்ட கடன்களின் வட்டியைத் திருப்பிச் செலுத்த, இந்த செஸ் வரி மார்ச் மாதம்  2026-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


— இழப்பீட்டு செஸ் கணக்கின்கீழ் உள்ள கடன் மற்றும் வட்டி செலுத்துதல் முழுமையாக முடிக்கப்படும் வரை பான் மசாலா, சிகரெட், குட்கா, மெல்லும் புகையிலை, ஜர்தா, பதப்படுத்தப்படாத புகையிலை மற்றும் பீடி போன்ற பிற புகையிலைப் பொருட்களுக்குப் பொருந்தக்கூடிய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் இழப்பீட்டு செஸ் ஆகியவை தற்போதுள்ள விகிதங்களிலேயே தொடரும் என்று நிதியமைச்சர் கூறினார்.


— உலக அளவில் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான பொது சுகாதார அச்சுறுத்தல்களில் புகையிலை பயன்பாடு ஒன்றாக உள்ளது. இது ஆண்டுதோறும் எண்பது லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பலி கொள்கிறது.

சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (Institute for Health Metrics and Evaluation (IHME)) நடத்திய உலகளாவிய நோய்ச் சுமை (Global Burden of Disease) ஆய்வின்படி, இந்த இறப்புகளில் எழுபது லட்சத்திற்கும் அதிகமான இறப்புகள் நேரடி புகையிலை பயன்பாட்டினால் ஏற்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

Original Article : What is the National Calamity Contingent Duty (NCCD)? -Khushboo Kumari

Share:

ஆரவல்லி மலைத்தொடர் முதல் குல்தீப் செங்கார் வரை: உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுகள், சமூகத்துடனான அதன் உறவுகள் குறித்து வெளிப்படுத்துவது என்ன? -சுபம் சுக்லா மற்றும் கார்த்திகே சிங்

ஆரவல்லி மலைத்தொடர் முதல் குல்தீப் செங்கார் வரை: உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுகள், சமூகத்துடனான அதன் உறவுகள் குறித்து வெளிப்படுத்துவது என்ன?

-சுபம் சுக்லா மற்றும் கார்த்திகே சிங்


இந்த உத்தரவுகள், நீதிபதிகளும் சாதாரண மனிதர்களைப் போலவே தவறு செய்யக்கூடியவர்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றன. அத்தகைய தவறுகளை நீதித்துறை செயல்முறையிலேயே மேல்முறையீடு மூலம் சரிசெய்ய முடியும் என்பதையும் அங்கீகரிக்கின்றன. ஆனால், இது ஒரு நியாயமான கேள்வியையும் எழுப்புகிறது: பொதுமக்களின் ஆத்திரத்திற்கு பதிலளிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து (suo motu) வழக்கு எடுப்பது, அவசர நடவடிக்கைக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படையாக மாறிவிட வேண்டுமா?


சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களாலும் நீதிமன்றங்களின் கொள்கைகளாலும் சமூக உறவுகளை, சட்டம் ஒழுங்குபடுத்துகிறது. அரசியலமைப்பு நீதிமன்றங்கள், சட்டத்தின் பொருள் தெளிவில்லாத போது அதை விளக்கி, சட்டம் தன் நோக்கத்தை அடைய உதவுகின்றன. இதற்கு, உச்ச நீதிமன்றம் டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி பிறப்பித்த இரு இடைக்கால உத்தரவுகளை உதாரணமாகச் சொல்லலாம்: ஒன்று, குல்தீப் சிங் செங்கரின் தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது; மற்றொன்று, ஆரவல்லி சுரங்கம் தொடர்பான தன் முந்தைய தீர்ப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இரு வெவ்வேறு பிரச்சினைகளை கையாண்டாலும், இந்த உத்தரவுகள் நீதிமன்றங்கள் சட்டத்தின் தெளிவுக்கும் சமூகத் தேவைகளுக்கும் இடையே சமநிலை தேடுவதையும், சட்டத்துக்கும் சமூக யதார்த்தத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க முயல்வதையும் காட்டுகின்றன.


ஆரவல்லி மலைத்தொடர் தொடர்பான இந்தத் தடையாணை மிகத் தெளிவாக உள்ளது. வழக்கமாக நடக்காத ஒரு நிகழ்வாக, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட விடுமுறைக் கால அமர்வு, நவம்பர் மாதம் 20-ஆம் தேதி அதே எண்ணிக்கையிலான மற்றொரு அமர்வு வழங்கிய தீர்ப்பின் செயல்பாட்டைத் தடைசெய்தது. ஆரவல்லி மலைகளில் ஏற்பட்ட கடுமையான சுற்றுச்சூழல் சேதத்தை நீதிமன்றம் ஒப்புக்கொண்ட போதிலும், இந்த மலைத்தொடரின் புவியியல் எல்லைகள் பற்றி தெளிவின்மையும் வெவ்வேறு வரையறைகளும் இருப்பதைச் சுட்டிக்காட்டியது. முந்தைய தீர்ப்பு, “ஆரவல்லி மலைத்தொடர்கள்” பற்றிய குழுவின் வரையறை பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது. முதல் பார்வையிலேயே, குழுவின் அறிக்கையும் முந்தைய தீர்ப்பும் சில முக்கியப் பிரச்சினைகளைத் தெளிவாகக் கையாளத் தவறிவிட்டன என்று நீதிமன்றம் குறிப்பிடுகிறது. அவை தெளிவுபடுத்தப்படும் வரை, தீர்ப்பை நிறுத்தி வைத்துவிட்டு, புதிய சுரங்க நடவடிக்கைகளுக்கு மட்டும் தடை விதித்துள்ளது.


உச்ச நீதிமன்றம் ஒரு நடைமுறை உண்மையைப் புரிந்துகொண்டதாகத் தெரிகிறது: ஒரு முறை ஒழுங்குமுறை கட்டமைப்பு நடைமுறைக்கு வந்துவிட்டால், அதை மாற்றியமைக்க கடினமான நிர்வாக விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர். அதன் தலையீடு ஒரு விஷயத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: சட்டம் முழுமையாக ஆராயப்படும் அல்லது மறுஆய்வு செய்யப்படும் வரை சட்ட அமைப்பிற்கு வழிகாட்ட ஒரு தற்காலிக ஏற்பாடாக இருந்த ஒழுங்குமுறை அதன் அசல் நோக்கத்திலிருந்து விலகிச் செல்வதற்கு முன்பு ஒரு "கட்டுப்படுத்தக்கூடிய அடிப்படையை" (controllable baseline) பராமரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, நீதித்துறை சட்டமியற்றுதல் பொதுவாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஒரு கடுமையான சட்ட இடைவெளி இருக்கும் சூழ்நிலைகளைத் தவிர. பன்வாரி தேவி வழக்கின் (Bhanwari Devi case) விளைவாக பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கான விசாகா வழிகாட்டுதல்கள் உருவானதும், மரண தண்டனைக் கைதிகள் தொடர்பான வழக்குகளும் அத்தகைய அரிதான சூழ்நிலைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இத்தகைய தலையீடுகள் சாதாரண நடைமுறையாகிவிடக் கூடாது என்றும் கருதுகின்றனர். விசாகா போன்ற நீதித்துறை நடவடிக்கைகள் விதிவிலக்காகவே இருக்க வேண்டும். ஏனென்றால், சட்டமன்றமே மக்களின் விருப்பத்தை மிக நேரடியாகப் பிரதிபலிக்கிறது. நல்ல நோக்கம் இருந்தாலும், அவசரமாக நீதிபதியால் வெளியிடப்படும் உருவாக்கப்பட்ட சட்ட கட்டமைப்புகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் அல்லது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கின்றனர். இந்தச் சூழலில், முந்தைய தீர்ப்பு வந்த ஒரு மாதத்திற்குள்ளேயே இடைக்கால உத்தரவு மூலம் வழங்கப்பட்ட ஆரவல்லி தடையாணை (Aravalli stay), நீதித்துறையின் நிலைத்தன்மை இல்லாத ஒரு தோற்றத்தை பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது. பொது நம்பிக்கை மற்றும் நிறுவன ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.


குழந்தைகள் பாதுகாப்பை வலுப்படுத்துதல்


செங்காரின் வழக்கில் வழங்கப்பட்ட தடையாணை, நீதிக்காக நீண்டகாலமாக நடந்த போராட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்தப் போராட்டத்தில், கட்டமைப்பு ரீதியிலான தடைகளும், ஆழமாக வேரூன்றிய அதிகாரத்தை கையாள்வதில் ஏற்பட்ட கடுமையான நிறுவனரீதியான தோல்விகளும் நிரம்பியுள்ளன. உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை வழக்கமானது போலவே தோன்றும், ஏனெனில், அது ஒரு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்தது. இருப்பினும், பொதுவாக, விடுவிக்கப்பட்ட நபரின் கருத்தைக் கேட்காமல் பிணை அல்லது தண்டனை நிறுத்திவைப்பு (sentence-suspension) உத்தரவுக்குத் தடை விதிக்கக் கூடாது என்ற விதியை நீதிமன்றம் ஒப்புக்கொண்டாலும், இதற்கு விதிவிலக்கு அளிக்கும் அத்தியாவசியமான அசாதாரண சூழல்கள் இருப்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்தத் தலையீட்டின் நோக்கம், நீதி அமைப்பு திருத்த முடியாத சிக்கலான நிலைக்குச் செல்வதைத் தடுப்பதாகும். போக்சோ சட்டத்தில், போலீஸ் காவலர்கள் அல்லது கிராம நிர்வாக அலுவலர்கள் (பட்வாரிகள்) போன்ற கீழ்நிலை அதிகாரிகள்கூட “கடுமையான பாலியல் குற்றங்களுக்கு” பொது ஊழியர்களாகக் கருதப்படுகிறார்கள். ஆனால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் (MLA) அப்படிக் கருதப்படுவதில்லை என்கிற முரண்பாடு நிலவுகிறது. இதன் மூலம் நீதிமன்றம் தெளிவாகச் சொல்கிறது: குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட இந்தச் சிறப்புச் சட்டத்தின் நோக்கத்தையும், அதன் பாதுகாப்பு விதிகளையும் அர்த்தமற்றதாக்கும் வகையிலான கடுமையான அல்லது தொழில்நுட்பரீதியான விளக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. 


ஒரு சட்டமன்ற உறுப்பினர் முறையான "அரசு ஊழியர்" என்று வகைப்படுத்தப்படாததால், அவரால் சட்டப் பாதுகாப்புகளை அச்சுறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ, அல்லது பலவீனப்படுத்தவோ முடியாது என்று வாதிடுவது தவறானது. உச்சநீதிமன்றம் போக்சோ (Protection of Children from Sexual Offences (POCSO) Act, 2012)) சட்டத்தின் பாதுகாப்புக் கட்டமைப்பை பலவீனப்படுத்தும் வகையிலான நீதிமன்றங்களின் குறுகிய விளக்கங்களை பலமுறை எச்சரித்துள்ளது. இந்தியாவின் அரசுத் தலைமை வழக்கறிஞர் vs சதீஷ் (2021) (Attorney General for India v. Satish (2021)) வழக்கில், ஒரு சிறுமியின் ஆடையின்மீது தொடுவது போக்சோ பிரிவு 7-ன் கீழ் "தொடர்பு" அல்லது "உடல் தொடர்பு" ஆகாது என்ற பம்பாய் உயர்நீதிமன்றத்தின் பார்வையை உச்சநீதிமன்றம் கண்டித்ததோடு அந்தத் தீர்ப்பை நிராகரித்தது. இதேபோல், இண்டிபென்டன்ட் தாட் எதிராக இந்திய ஒன்றியம் (Independent Thought v. Union of India) (2017) வழக்கில், நீதிமன்றம் ஒரு குறிக்கோள் சார்ந்த அணுகுமுறையை (purposive approach) கையாண்டது. இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 375-ன் விதிவிலக்கு 2-ஐ (Exception 2) நீக்குவதன் மூலம், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மனைவியுடன் அவரது சம்மதமின்றி பாலியல் உறவு கொள்வது கற்பழிப்பு குற்றத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்ததை நீக்கியது. இந்த விதிவிலக்கு, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்துடன் (போக்சோ சட்டம்) முரண்பட்டிருப்பதையும், மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்துகள் 14, 15, மற்றும் 21 ஆகியவற்றை மீறுவதாகவும் கண்டறிந்த நீதிமன்றம், அரசியலமைப்பு சார்ந்த நீதிநெறி  மற்றும் சட்டமியற்றும் நோக்கத்தை வலியுறுத்தியது. இந்தத் தீர்ப்புகள் அனைத்தும், குழந்தை பாதுகாப்பைப் பொறுத்தவரை, சட்டங்கள் அவற்றின் பாதுகாப்பு நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்யாமல், வலுப்படுத்தும் வகையில் மட்டுமே அமைய வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.




நிறுவன ரீதியான உள்ளுணர்வு


உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவுகளிலிருந்து தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், சட்டம் என்பது தர்க்கம் மற்றும் அனுபவம் ஆகிய இரண்டாலும் வடிவமைக்கப்பட்டிருப்பதால், அது இயல்பாகவே சிக்கலானதாகக் கருதப்படுகிறது. இந்த இரண்டு முடிவுகளிலும் பொதுவாகத் தெரியும் ஒரு விஷயம் என்னவென்றால், சட்டச் சிக்கல்களுக்குப் பதிலளிப்பதில் நீதிமன்றம் கொண்டுள்ள “நிறுவனரீதியான உள்ளுணர்வு” (institutional reflex) ஆகும். இந்த உத்தரவுகள் நீதித்துறை விவேகத்தை வலியுறுத்துகின்றன. அதாவது, நீதிமன்றங்கள் மீள முடியாத சூழ்நிலைகளை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தெளிவு கிடைக்கும் வரை ஒரு “கட்டுப்படுத்தக்கூடிய அடிப்படை நிலையினை” பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. இருப்பினும், அவை இந்தியாவின் நீதி வழங்கல் முறையைப் பற்றிய ஆழமான கவலைகளையும், குறிப்பாக ஒரு இறுதித் தீர்வு கிடைப்பதில் ஏற்படும் தாமதங்களையும் எடுத்துரைக்கின்றன. செங்கார் (Sengar) வழக்கில், பல அம்சங்களைக் கையாளும் விரிவான 53 பக்க உயர்நீதிமன்றத் தீர்ப்பு இருந்தபோதிலும், மேல்முறையீடு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக முடிவெடுக்கப்படாமல் உள்ளது. மிகப் பொதுவாகப் பார்க்கும்போது, நீதி வழங்கல் முறை, பல்வேறு காரணங்களால், இடைக்கால உத்தரவுகளால் மேலும் மேலும் சுமையாகக் கருதப்படுகிறது. இந்த இடைக்கால உத்தரவுகளே, நடைமுறையில், செயல்திறன் மிக்க சட்ட ஆட்சிமுறையாக செயல்படத் தொடங்கிவிட்டன என்று தெரிவிக்கின்றனர்.


இந்தச் சூழலில், இடைக்கால உத்தரவுகள் நமக்கு நினைவூட்டுவது என்னவென்றால், சட்டம் மற்றும் நடைமுறை வாழ்க்கைக்கு இடையேயான ஒவ்வொரு இடைவெளியையும் நீதித்துறை முடிவுகளால் தீர்க்க முடியாது. அதேநேரத்தில், நீதித்துறைக்கு நிறுவனரீதியான பொறுப்புணர்வு இல்லை என்ற கூற்றையும் அவை எதிர்க்கின்றன. இந்த பொறுப்புணர்வு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பரவலாக உள்ள அதிருப்தியையும், ஒரு ஒழுங்குமுறை வெற்றிடத்தை தெளிவுபடுத்த வேண்டிய அவசியத்தையும் குறிப்பிடும் ஆரவல்லி உத்தரவில் நீதிமன்றம் தெளிவுபடுத்துகிறது. இந்த உத்தரவுகள், நீதிபதிகள் அனைவரும் மனிதர்களைப் போலவே தவறுகள் செய்யலாம் என்பதையும், அத்தகைய தவறுகள் நீதித்துறை செயல்முறை மூலம் திருத்தப்படுகின்றன என்பதையும் ஒப்புக்கொள்கின்றன. இருப்பினும், அவை ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன: பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக தாமாக  முன்வந்து (suo motu) நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு, அவசரத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட காரணமாக மாறவேண்டுமா? அப்படியானால், குறைந்த கவனம் பெறும் அதே சமமான தீவிரமான பிரச்சினைகளுக்கு என்ன நிலை? அவை உண்மையிலேயே குறைந்த அவசரமானவையா, அல்லது வெறுமனே குறைந்த கவனத்தை பெறுபவையா? போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. 


எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த உத்தரவுகள் ஒரு நல்ல அம்சத்தை காட்டுகின்றன: உச்ச நீதிமன்றம் எப்போதும் மக்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாக (accessible) இருப்பதே ஆகும். நீதிமன்றங்களின் விடுமுறை காலத்தில்கூட – நீதிபதிகள் சிந்திப்பதற்கும், தீர்ப்புகள் எழுதுவதற்கும், சட்ட ஆராய்ச்சி செய்வதற்கும் தேவையான ஓய்வு நேரத்தில்கூட – அநீதி திருத்தமுடியாத அளவுக்கு ஆழமாகிவிடாமல் இருக்க, அவசர அமர்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அரசியலமைப்பின் முக்கிய அதிகார அமைப்பாக, உச்சநீதிமன்றம் ஒவ்வொரு வழக்கின் மூலமும் சமூகத்துடன் நெருக்கமாக இணைந்திருப்பதைக் காட்டுகிறது. இது நீதிபதி ஜாக்சனின் பிரபலமான வார்த்தைகளை நினைவூட்டுகிறது: “நீதிமன்றங்கள் தவறு செய்யாதவை என்பதால் இறுதியானவை அல்ல; மாறாக, அவை இறுதியானவை என்பதால்தான் தவறு செய்யாதவையாகக் கருதப்படுகின்றன” என்ற வரி நினைவுகூரப்படுகிறது. 


எழுத்தாளர்கள், புது டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்.

 Original Article : From Aravallis to Kuldeep Sengar: What Supreme Court’s interim orders tell us about its relationship with society. -Shubham Shukla and Kartikey Singh

Share:

நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் ஒரு குடிமகன் கடவுச்சீட்டு (Passport) பெறுவதைத் தடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏன் கூறியது? -அமால் ஷேக்

குற்றவியல் நீதிமன்றங்கள் ஒவ்வொரு வழக்கின் அடிப்படையிலும் பயணத்திற்கு அனுமதி வழங்கவோ அல்லது தடுக்கவோ முடியும் என்பதால், ஒரு குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு கடவுச்சீட்டு (passportt) வழங்குவதையோ அல்லது புதுப்பிப்பதையோ அதிகாரிகள் மறுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


நிலுவையில் உள்ள குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு கடவுச்சீட்டு (passport) வழங்குவதையோ அல்லது புதுப்பிப்பதையோ அதிகாரிகள் மறுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஏனெனில் இந்த உரிமை, அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்படும் மீற முடியாத வாழ்வுரிமையின் (right to life) கீழ் வருகிறது. நீதிமன்ற மேற்பார்வையின்கீழ் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் நேரடி கடவுச்சீட்டு மறுப்பு ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை நீதிமன்றம் வலியுறுத்தியது. கடவுச்சீட்டு அதிகாரிகளால் முழுமையாக மறுக்கப்படுவதைவிட விகிதாசார மற்றும் நீதித்துறை மேற்பார்வை தேவை என்பதை வலியுறுத்தியது.


நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோரைக் அடங்கிய அமர்வு, டிசம்பர் 19 அன்று, அரசியலமைப்பின் கீழ் உள்ள சுதந்திரம் என்பது "அரசு வழங்கும் ஒரு பரிசு அல்ல, மாறாக அது அரசின் முதல் கடமையாகும்" என்றும், அது நடமாடுவதற்கும், பயணம் செய்வதற்கும், வாழ்வாதாரத்தையும் வாய்ப்புகளையும் தேடுவதற்கும் உள்ள சுதந்திரத்தையும் கொண்டுள்ளது என்றும் கூறியது.


இரண்டு குற்றவியல் நீதிமன்றங்கள் 'ஆட்சேபனை இல்லை' என உத்தரவிட்டிருந்தபோதிலும், கடவுச்சீட்டு வழங்கும் அதிகாரிகள் (passport authorities) ஒரு சாதாரண கடவுச்சீட்டைப் புதுப்பிக்க மறுத்தபோதுதான் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது. தற்போது, உச்சநீதிமன்றம் இந்த மறுப்பை ரத்து செய்துள்ளது.


என்ன வழக்கு?


இந்தியக் குடிமகனான மகேஷ் குமார் அகர்வால், ஆகஸ்ட் 2013-ல் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் ஒரு சாதாரண கடவுச்சீட்டைப் பெற்றார். இந்தக் காலகட்டத்தில், அவர் ஜார்க்கண்டில் மிரட்டிப் பணம் பறித்ததாகவும், தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு நிதியளித்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக தேசிய புலனாய்வு முகமையின் (National Investigation Agency (NIA)) வழக்கினை எதிர்கொண்டார். மேலும், டெல்லியில் உள்ள மத்திய புலனாய்வு முகமையின் (Central Bureau of Investigation (CBI) நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், அவரது மேல்முறையீடு விசாரிக்கப்படும்வரை டெல்லி உயர்நீதிமன்றம் அந்தத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.


இரண்டு வழக்குகளிலும், அகர்வாலிடம் தனது கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறும், அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. இந்த விதிகள், அவர் தனது விசாரணை மற்றும் மேல்முறையீட்டிற்காக நாட்டில் இருப்பதை உறுதிசெய்வதற்காகவே விதிக்கப்பட்டன.


அகர்வால் தனது கடவுச்சீட்டு காலாவதியாகவிருந்த நிலையில், அதை புதுப்பிப்பதற்காக ராஞ்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார். நீதிமன்றம் அதற்கு ஒப்புக்கொண்டு, இந்த நோக்கத்திற்காக மட்டுமே கடவுச்சீட்டைப் புதுப்பிக்க அனுமதித்தது. அவர் அனுமதியின்றி வெளிநாடு பயணிக்கவோ அல்லது விசாவுக்கு விண்ணப்பிக்கவோ மாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும் என்றும் புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டை நீதிமன்றத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.


அதே நேரத்தில், அகர்வாலுக்கு இன்னும் பயணக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், அவரது கடவுச்சீட்டை வழக்கமான 10 ஆண்டுகளுக்குப் புதுப்பிப்பதைத் தடுப்பதற்கு எந்த சட்டப்பூர்வ காரணமும் இல்லை (no legal basis to deny renewal of the passport) என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது.


இது போன்ற நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், பிராந்திய கடவுச்சீட்டு (regular passport) அலுவலகம் அகர்வாலுக்கு வழக்கமான கடவுச்சீட்டை வழங்க மறுத்துவிட்டது. ஒரு குற்றவியல் வழக்கு நிலுவையில் இருந்தால், கடவுச்சீட்டை மறுக்கலாம் என்று கூறும் கடவுச்சீட்டுச் சட்டத்தின் பிரிவு 6(2)(f)-ஐ அவர்கள் மேற்கோள் காட்டினர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வெளிநாடு செல்ல ஒருவருக்கு நீதிமன்றம் தெளிவாக அனுமதி அளித்திருந்தால் மட்டுமே, இந்த விலக்கு பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


அகர்வால் இந்த நிராகரிப்பை எதிர்த்து கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே புதுப்பிக்க அனுமதித்ததாலும், வெளிநாட்டுப் பயணத்திற்கு அனுமதிக்காததாலும், பிரிவு 6(2)(f)-ன் கீழ் உள்ள சட்டம் இன்னும் பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியது.


சட்டம் என்ன சொல்கிறது?


1967-ஆம் ஆண்டு கடவுச்சீட்டுச் சட்டம் தெளிவான விதிகளை வழங்குகிறது. பிரிவு 5, கடவுச்சீட்டுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதையும், கடவுச்சீட்டு அலுவலகம் அதனை அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ எழுத்துப்பூர்வமான முடிவை வழங்க வேண்டும் என்று கூறுகிறது. பிரிவு 6, ஒரு கடவுச்சீட்டு நிராகரிக்கப்படக்கூடிய குறிப்பிட்ட காரணங்களைப் பட்டியலிடுகிறது. பிரிவு 6(2)(e)-ன் கீழ் உள்ள அந்த அடிப்படைகளில் ஒன்று, தண்டனை விதிக்கப்பட்ட பிறகு செயல்படுத்தப்படுகிறது. மேலும், அது ஒழுக்கக்கேடான தன்மையைக் கொண்ட குற்றங்களுக்கும், இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளுக்கும் மட்டுமே பொருந்தும்.


இந்தச் சட்டம் சட்டத்தின்படி, ஒரு கடவுச்சீட்டு 10 வருடங்களுக்கு  செல்லுபடியாகும் காலத்தை நிர்ணயிக்கிறது. ஆனால், பிரிவு 7-ன் படி அது குறுகிய காலத்திற்கும் வழங்கப்படலாம். பிரிவு 8 இந்தக் குறுகியகால கடவுச்சீட்டுகளை நீட்டிக்கவ அனுமதிக்கிறது. ஒரு குற்றவியல் வழக்கு நிலுவையில் இருந்தாலோ, விதிகள் மீறப்பட்டாலோ அல்லது நீதிமன்றம் பயணிக்கத் தடை விதித்தாலோ, அதிகாரிகள் ஒரு கடவுச்சீட்டைத் திரும்பப் பெறலாம் அல்லது ரத்து செய்யலாம் என்று பிரிவு 10 கூறுகிறது .


பிரிவு 22, பொது நலன் கருதி, இந்தச் சட்டத்தின் செயல்பாட்டிலிருந்து சில நபர்களுக்கு விலக்கு அளிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்தப் பிரிவின் கீழ் செயல்பட்டு, அரசாங்கம் 1993-ல் பொது சட்ட விதிகள் 570(E) என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு, குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு, சம்பந்தப்பட்ட நீதிமன்றம் தனது முடிவை ஆராய்ந்து, தேவைப்படும்போதெல்லாம் ஆஜராவதற்கு விண்ணப்பதாரர் ஒரு உறுதிமொழியை வழங்கினால், பிரிவு 6(2)(f)-லிருந்து ஒரு கட்டுப்படுத்தப்பட்ட விலக்கை வழங்குகிறது. இந்த அறிவிப்பு, கடவுச்சீட்டின் செல்லுபடியாகும் காலத்தை நீதிமன்றத்தின் உத்தரவுடன் இணைக்கிறது. மேலும், நீதிமன்றம் ஒரு காலவரையறையைக் குறிப்பிடாத பட்சத்தில், நிலையான செல்லுபடியாகும் காலங்களை வழங்குகிறது.


2019ஆம் ஆண்டில், வெளியுறவு அமைச்சகம் கடவுச்சீட்டு அலுவலகங்களை பொது சட்டவிதிகள் 570(E) என்ற அறிவிப்பைத் தவறாமல் பின்பற்றுமாறு அறிவுறுத்தியது. ஒருவரிடம் நீதிமன்றத்திடம் இருந்து 'ஆட்சேபனை இல்லை சான்றிதழ்' (No Objection Certificate (NOC)) இருந்தால், அது காவல்துறையின் எந்தவொரு எதிர்மறை அறிக்கையையும்விட முக்கியமாகக் கருதப்பட வேண்டும் என்று அந்த அறிவிப்பு கூறியது. உச்ச நீதிமன்றமும் இதை ஏற்றுக்கொண்டு, நீதிமன்றத்தின் அனுமதிக்குக் காவல்துறை அறிக்கையைவிட முன்னுரிமை உண்டு என்று கூறியது.




உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது?


ஆரம்பத்தில், காலாவதியான கடவுச்சீட்டைப் புதுப்பிப்பது என்பது, புதிதாக வழங்குவதற்குரிய அதே சட்டப்பூர்வ ஆய்வுக்கு உட்பட்டது என்ற அனுமானத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தனது விசாரணையைத் தொடங்கியது. அந்த அடிப்படையிலேயேகூட, விலக்கு அறிவிப்பின்கீழ் உள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன், கடவுச்சீட்டுச் சட்டத்தின் பிரிவு 6(2)(f)-ஐ ஒரு "தளர்த்த முடியாத தடையாக" கருதமுடியாது என்று  தீர்ப்பளித்தது.


ராஞ்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் (National Investigation Agency (NIA)) நீதிமன்றத்திற்கும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்துத் தெரிந்திருந்தும், அகர்வாலின் பயணத்தின் மீது கட்டுப்பாட்டை விதித்தபடியே அவரது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க அனுமதித்தன என்று நீதிமன்றம் கூறியது. இந்த அமைப்பு, ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் இந்திய நீதிமன்றங்களின் அதிகாரத்தின்கீழ் இருப்பதை உறுதி செய்வதே என்ற பிரிவு 6(2)(f)-ன் முக்கிய நோக்கத்தை நிறைவேற்றுகிறது.


கல்கத்தா உயர்நீதிமன்றமும் கடவுச்சீட்டு அதிகாரிகளும் எடுத்த அணுகுமுறையை நிராகரித்த உச்சநீதிமன்றம், கடவுச்சீட்டு வழங்குவதற்கோ அல்லது புதுப்பிப்பதற்கோ ஒரு முன்நிபந்தனையாக, ஒரு குற்றவியல் நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டுப் பயணத்திற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று எந்த ஒரு சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று தீர்ப்பளித்தது. கடவுச்சீட்டுச் சட்டம் அல்லது பொது சட்டவிதிகள் 570(இ) ஆகியவற்றில் உள்ள எதுவும், புதுப்பித்தலுக்கான அனுமதியை 'ஒரு குறிப்பிட்ட பயணத்தை மேற்கொள்வதற்கான ஒருமுறை உரிமமாக' மாற்றுமாறு நீதிமன்றங்களை வற்புறுத்தவில்லை என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.


நீதிமன்றத்தின் வாதத்தின் முக்கிய அம்சம், ஆவணத்திற்கும் செயலுக்கும் இடையிலான வேறுபாடுதான். கடவுச்சீட்டு என்பது ஒரு குடிமை அடையாள ஆவணம் என்றும், வெளிநாட்டுப் பயணம் என்பது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்பாடு என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. குற்றவியல் நீதிமன்றங்கள் ஒவ்வொரு வழக்கின் அடிப்படையிலும் பயணத்தை அனுமதிக்கவோ அல்லது தடைசெய்யவோ அதிகாரம் கொண்டிருக்கும்வரை, கடவுச்சீட்டையே மறுப்பது என்பது சட்டத்திற்கு அப்பாற்பட்டது என்று கண்டறியப்பட்டது.


அவ்வாறு செய்யும்போது, ​​சட்ட நடைமுறைகள் சுதந்திரத்திற்கு நிரந்தரத் தடைகளாக மாறுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் எச்சரித்தது. “செயல்முறைப் பாதுகாப்பு அம்சங்கள் விறைப்பான தடைகளாக மாற்றப்படும்போது, ​​அல்லது தற்காலிகத் தகுதியின்மைகள் காலவரையற்ற விலக்குகளாக அனுமதிக்கப்படும்போது, ​​அரசின் அதிகாரத்திற்கும் தனிநபரின் கண்ணியத்திற்கும் இடையிலான சமநிலை பாதிப்படையகூடிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், அரசியலமைப்பின் வாக்குறுதி ஆபத்தில் ஆழ்த்தப்படக்கூடும் என்று நீதிமன்றம் கூறியது.


கடவுச்சீட்டை வழங்குவது மாநிலத்தின் கட்டுப்பாட்டை பறிக்காது என்றும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. சூழ்நிலைகள் மாறினால், நிபந்தனைகள் மீறப்பட்டால் அல்லது புதிய நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டால், கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய அல்லது ரத்து செய்ய சட்டத்தின் பிரிவு 10-ன் கீழ் கடவுச்சீட்டை வழங்கும் அதிகாரிகள் சட்டப்பூர்வ அதிகாரங்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்கிறார்கள்.


குற்றவியல் நீதிமன்றங்களால் நிர்ணயிக்கப்பட்ட பயண விதிகளைப் பின்பற்றியே, அகர்வாலுக்கு நான்கு வாரங்களுக்குள் வழக்கமான 10 வருட கடவுச்சீட்டை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு உத்தரவிட்டது.

 Original Article : Why SC said pending criminal cases can’t bar a citizen from obtaining passport?. -Amaal Sheikh

Share: