வறண்ட வானிலை

எல் நினோ (El Nino) காலநிலை மாற்றம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)), உண்மையான மதிப்பீட்டை வழங்க வேண்டியது அவசியமாகிறது. 


2024-ஆம் ஆண்டு முதல் நீடித்து வரும் ஈரான்-இஸ்ரேல் மோதலின் பொருளாதாரத் தாக்கத்தை ஆய்வாளர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கும் வேளையில், வரவிருக்கும் பருவமழை குறித்த புதிய கவலை எழுந்துள்ளது. உலகளாவிய வானிலை நிபுணர்கள் இந்த ஆண்டு மீண்டும் எல் நினோ (El Niño) ஏற்படக்கூடும் என்று கணித்துள்ளனர். உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization (WMO)) மார்ச் மாத தொடக்கத்தில் வெளியிட்ட தகவலின்படி, பலவீனமடைந்து வரும் லா நினா (La Niña) சூழல், மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் 40% வாய்ப்புடன் வெப்பமயமான எல் நினோவாக மாறக்கூடும் என்று கூறியுள்ளது. மேலும், ஐரோப்பிய நடுத்தர கால வானிலை முன்னறிவிப்பு மையம் (European Centre for Medium-Range Weather Forecasts (ECMWF)) இந்த ஆண்டு "சூப்பர்" எல் நினோ ஏற்பட 22% வாய்ப்பும், ஒரு வலுவான நிகழ்விற்கு 80% வாய்ப்பும், மிதமான நிகழ்விற்கு 98% வாய்ப்பும் இருப்பதாக நேரடி முன்னறிவிப்பை வழங்கியுள்ளது. ஒருவேளை இந்த கணிப்புகள் உண்மையானால், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி மற்றும் பணவீக்கம் ஆகிய இரண்டிலும் சவால்களைச் சந்திக்க நேரிடும் எனவும் இதனால் மிகவும் கவனமான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.


சமீபத்திய ஆண்டுகளில் எல் நினோ (El Nino) குறித்த எச்சரிக்கைகள் சில நேரங்களில் தவறாக முடிந்துள்ளன. மேலும், அதன் தீவிரம் மாறுபடும் என்பதால் ஒவ்வொரு எல் நினோவும் இந்திய வேளாண் சாகுபடியை மோசமாகப் பாதிப்பதில்லை. குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole (IOD)) போன்ற பிற காரணிகள் பருவமழை மீதான அதன் தாக்கத்தைக் குறைக்கக்கூடும் என்கின்றனர். இருப்பினும், 1950-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஏற்பட்ட 15 வறட்சி ஆண்டுகளில் 10 ஆண்டுகள் எல் நினோவுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது. மிதமான முதல் வலுவான எல் நினோ காலங்களில், மழையளவானது நீண்டகால சராசரியைவிட (Long-Period Average (LPA)) 14–15% வரை குறைந்துள்ளது. இதன் விளைவாக, அந்த ஆண்டுகளில் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட (Gross Value Added (GVA)) பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கு 1–2 சதவீத புள்ளிகள் சரிந்தது. தற்போதைய அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, 2026-ஆம் நிதியாண்டில் விவசாய மொத்த மதிப்பு கூட்டப்பட்ட (GVA) வளர்ச்சி 2.4% மட்டுமே உள்ளது. இந்த மந்தநிலை தொடர்ந்தால் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் குறையக்கூடும் என்கின்றனர். மேலும், மிதமான அல்லது வலுவான எல் நினோ காலங்களில் காரிஃப் (Kharif) பயிர் உற்பத்தி 6–12% வரை சரிந்ததால் உணவுப் பணவீக்கமும் ஏற்பட்டுள்ளது. எல் நினோவின் தாக்கத்தைக் கணக்கில் கொள்ளாமலேயே, 2027-ஆம் நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் நுகர்வோர் விலை பணவீக்கம் 4–4.2%-ஆக உயரும் என இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)) ஏற்கனவே கணித்துள்ளது. 

சமீபத்திய ஆண்டுகளில், எல் நினோ (El Niño) விளைவுகளால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, பிரச்சனை ஏற்பட்ட பிறகே நடவடிக்கை எடுக்கும் முறையையே அரசாங்கம் பின்பற்றி வருகிறது. இதற்காக மத்திய கையிருப்புத் தொகுப்பிலிருந்து உணவு தானியங்களை விடுவித்தல், ஏற்றுமதிக்குத் தடை விதித்தல் மற்றும் தட்டுப்பாடு நிலவும் வேளாண் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்ய அனுமதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், இத்தகைய உடனடித் தீர்வுகள் ஒரு பின்னடைவையும் கொண்டுள்ளன. திடீர் ஏற்றுமதித் தடைகள் மற்றும் இறக்குமதி வரிக் குறைப்பு போன்ற செயல்கள், ஏற்கனவே அதிக சிக்கல்கள் நிறைந்த தொழிலாக இருக்கும் வேளாண் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வருமானத்தைக் கணிசமாகக் குறைக்கின்றன.


காரீஃப் (Kharif) பயிர் சாகுபடி காலத்திற்கு முன்னதாகவே, வரவிருக்கும் எல் நினோ (El Nino) காலநிலையின் வலிமை மற்றும் அது தொடங்கும் நேரம் குறித்து தெளிவான புரிதலைப் பெறுவது மிகவும் அவசியமாகிறது. இது வர்த்தகம், பயிர் விதைப்பு மற்றும் நீர் சேமிப்பு குறித்து அரசாங்கம் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) தனது ஏப்ரல் மாத பருவமழை கணிப்பில், எல் நினோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதன் தீவிரம் குறித்த ஒரு உண்மையான மதிப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. கடந்த கால அனுபவங்கள், எல் நினோவின் பாதிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடுவதைக் காட்டுகின்றன. உதாரணமாக, 2018-ஆம் ஆண்டு மற்றும் 2023-ஆம் ஆண்டு ஆகிய எல் நினோ ஆண்டுகளில், பருவமழை இயல்பாக இருக்கும் என்றும், நீண்டகால சராசரியில் (LPA) முறையே 97% மற்றும் 96% மழை பொழியும் என்றும் கணிக்கப்பட்டது. இருப்பினும், உண்மையான மழைப்பொழிவு 91% மற்றும் 94% என மிகக் குறைவாகவே இருந்தது. எனவே, வேளாண் திட்டமிடலுக்கு மிகவும் துல்லியமான வானிலை கணிப்புகள் அவசியமாகின்றன.


Original Link: Dry run 

Share:

இந்தியாவில் வேளாண் தொழிலாளர்களின் பயிரிடும் முறையை உயிரி உரங்கள் எவ்வாறு மாற்றியமைத்து வருகின்றன? -ஹர்ஷ் வர்தன் பாக்சந்த்கா

உயிரியல் உள்ளீடுகள் (biologicals) எவ்வளவு புத்திசாலித்தனமாக வேளாண்மையில் ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே இந்தியாவின் வேளாண் தொழிலின் எதிர்காலம்  அமையும் என்கின்றனர். 


இந்தியா முன்னெப்போதையும்விட அதிக உணவு உற்பத்தியைச் செய்து வருகிறது. ஆனால், அதன் மண்ணின் வளம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. பல ஆண்டுகளாக, சாதனை அளவிலான அறுவடைகளைப் பெற வேளாண்மை ரசாயன உரங்களையே பெரிதும் நம்பியிருந்தது. தற்போது இந்த முறையை மாற்றியமைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இப்போது கவனம், 'எவ்வளவு அதிகமாக விளைவிக்க முடியும்?' என்பதிலிருந்து, 'நிலத்தைப் பாதிக்காமல் எப்படி உணவை உற்பத்தி செய்வது?' என்பதற்கு மாறியிருக்கிறது. பழைய முறைகள் உடனடி உணவுத் தேவையைத் தீர்க்க உதவினாலும், காலப்போக்கில் அவை மண் வளம் குறையவும், இயற்கைச் சமநிலை சீர்குலையவும் காரணமாகின. இதற்குத் தீர்வாக, இயற்கையோடு இணைந்த உயிரியல் முறைகளை (Biological solutions) அடிப்படையாகக் கொண்ட புதிய வேளாண் அணுகுமுறை உருவாகி வருகிறது.


தேசிய பொருளாதாரத்திற்கு ஆதாரமாக விளங்கும் மண்ணின் வளத்தை மீட்டெடுக்கும் அதே வேளையில், வேளாண் உற்பத்தியை அதிகரிக்க ஒரு நடைமுறை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வழியை வழங்குவதன் மூலம், உயிர் உரங்கள் (Biofertilisers) இந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. இந்த மாற்றம் என்பது ஒரு தற்காலிகமானது அல்ல என்றும் மாறாக, இது அதிகரித்துவரும் சாகுபடி செலவுகள் மற்றும் கடந்த பத்தாண்டுகளில் பாரம்பரிய வேளாண்மையில் காணப்பட்ட குறைந்த அளவிலான பயிர் விளைச்சலைச் சமாளிக்க வேளாண் தொழிலாளர்கள் எடுத்துள்ள ஒரு உத்திமுறையிலான நடவடிக்கையை பிரதிபலிக்கிறது.




மண் வளம் மற்றும் உயிர்ச்சத்துக்கள் குறைந்து வருவதைச் சரிசெய்தல்


இந்த மாற்றத்தின் அடிப்படையில் சக்திவாய்ந்த உயிரி உரங்களைப் (Biofertilizers) பயன்படுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது. ஏனெனில், இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் மண் வளம் குறைந்து வருவது ஒரு தீவிரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (Indian Council of Agricultural Research (ICAR)) கூறுகையில், இந்தியாவில் சுமார் 147 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு பல்வேறு வகையான நிலச் சீரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய விவசாயப் பகுதிகளில், மண்ணில் உள்ள கரிமக் கார்பன் (Organic carbon) அளவு 0.5% என்ற அபாயகரமான நிலைக்குக்கீழ் குறைந்துவிட்டது என்றும் இது மண்ணின் உயிரியல் செயல்பாட்டையும், பாதிப்புகளிலிருந்து மீண்டெழும் தன்மையையும் பெருமளவில் குறைத்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளது. 


தொடர்ச்சியான தீவிர விவசாய முறைகளால் மண்ணின் இயற்கை கனிம வளங்கள் தீர்ந்து, பரவலான ஊட்டச்சத்து சமநிலையின்மையும் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளன. இரண்டாம் நிலை மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் மட்டுமின்றி, முதன்மை ஊட்டச்சத்துக்களும் இப்போது மிகவும் சீரற்ற விகிதத்தில்  பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக பரிந்துரைக்கப்படும்  நைட்ரஜன்-பாஸ்பரஸ்-பொட்டாசியம் (Nitrogen, Phosphorus, Potassium (NPK)) விகிதம் 4:2:1 ஆகும். ஆனால், சில பகுதிகளில் இந்த விகிதம் 10.9:4.1:1 என மிக மோசமாக மாறியுள்ளது. இது அதிகப்படியான நைட்ரஜன் பயன்பாட்டையும், மண்ணின் ஊட்டச்சத்து பயன்பாட்டுத் திறன் குறைந்து வருவதையும் காட்டுகிறது.


சமீபத்திய மண் பரிசோதனைகளின்படி, இந்தியாவின் விளைநிலங்களில் 58.6%-க்கும் அதிகமான நிலங்களில் கந்தகச் (Sulfur) சத்துக் குறைபாடும், சுமார் 36% நிலங்களில் துத்தநாகக் (Zinc) குறைபாடும் நிலவுகிறது. அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் மண்ணின் காரத்தன்மை (pH) அளவு அதிகரித்து வருவது (அதாவது காரத்தன்மை அதிகரிப்பது) கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. மண்ணில் ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், இந்த அதிகப்படியான காரத்தன்மை காரணமாக பயிர்களால் அவற்றைச் சரியாக உறிஞ்ச முடிவதில்லை என்றும் இது உரப்பயன்பாட்டுத் திறனைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது. காலப்போக்கில், இந்த உயர் pH நிலைகள் மண்ணுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டைத் தடுத்து, மண்ணின் ஆரோக்கியத்தையும் விளைச்சலையும் பலவீனப்படுத்துகின்றன. இருப்பினும், குறிப்பிட்ட நுண்ணுயிர் உட்புகுத்திகளை (Microbial inoculants) பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் மண்ணின் உயிரியல் செயல்பாட்டை மீண்டும் மீட்க முடியும் என்கின்றனர். இவை மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தி, ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் திறனை அதிகரிக்கின்றன. இத்தகைய உயிரியல் தீர்வுகளே எதிர்கால விவசாயத்திற்கு ஒரு நடைமுறைச் சாத்தியமான வழியாக அமைகின்றன.


நுண்ணுயிர் வினையூக்கிகளின் தொழில்நுட்ப செயல்பாடுகள் மற்றும் வேர் மண்டல மறுசீரமைப்பு


தற்கால உயிரி உரங்கள் வளிமண்டலம் மற்றும் மண்ணில் சேமிக்கப்பட்டுள்ள சத்துக்களைத் தாவரங்கள் எளிதில் உட்கொள்ளும் நிலைக்கு மாற்றும் பல்வேறு உயிரியல் செயல்முறைகள் மூலம் செயல்படுகின்றன. ரைசோபியம் (Rhizobium), அசோடோபாக்டர் (Azotobacter) மற்றும் அசோஸ்பைரில்லம் (Azospirillum) போன்ற நைட்ரஜனை நிலைப்படுத்தும் நுண்ணுயிரிகள், செயற்கை நைட்ரஜன் உரங்களின் தேவையைக் குறைக்கவோ அல்லது முழுமையாக மாற்றவோ உதவுவதால் விவசாயிகளுக்கு மிகவும் அவசியமாகின்றன. இவற்றுடன் இணைந்து பேசிலஸ் (Bacillus) மற்றும் சூடோமோனாஸ் (Pseudomonas) போன்ற பாஸ்பேட்-கரைக்கும் பாக்டீரியாக்கள், மண்ணில் உறைந்து கிடக்கும் பாஸ்பரஸ் சத்தை விடுவிக்க உதவுகின்றன. மேலும், மைக்கோரைசா (Mycorrhizal) பூஞ்சைகள் பயிர்கள் ஊட்டச்சத்தை உறிஞ்சும் முறையையே மாற்றியுள்ளன. இந்தப் பூஞ்சைகள் செடிகளின் வேர்கள் எட்டாத தூரம் வரை பரவி நீர், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைச் சேகரிப்பதோடு, பல்வேறு உயிரினங்களை ஒன்றிணைக்கின்றன. இத்தகைய தொடர்புகள் தாவரங்களுக்கு வெறும் ஊட்டமளிப்பதோடு மட்டுமல்லாமல், வேர் மண்டலத்தைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பதன் மூலம் மண் மூலம் பரவும் நோய்க்கிருமிகளை எதிர்க்கவும், நீண்டகால வறட்சி போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களைத் தாங்கி வளரவும் உதவுகின்றன.



வேளாண் தொழிலாளர்களுக்கான உற்பத்தித் திறன் அதிகரிப்பு மற்றும் நிதி நிலைத்தன்மையை அளவிடுதல்


உயிரி உரங்களின் (biological inputs) பயன்பாட்டை நோக்கிய இந்த மாற்றம், அதிக லாபம் மற்றும் நிலையான விளைச்சல் கிடைப்பதற்கான வலுவான ஆதாரங்களால் ஆதரிக்கப்படுகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (Indian Council of Agricultural Research (ICAR)) போன்ற முக்கிய ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆய்வுகள், உயிரி உரங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு காலநிலை மண்டலங்களில் பயிர் விளைச்சலை 20-30% வரை அதிகரிக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன. தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற அதிக மதிப்புள்ள பயிர்களுக்கு, இந்த உற்பத்தித் திறன் இன்னும் கூடுதலாக இருக்கும் என்றும் லாபரீதியாகப் பார்த்தால், பருவநிலை மாற்றம் மற்றும் மண் வளம் குறைவதால் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க இந்த அணுகுமுறை மிகவும் ஏற்றது என்பது தெளிவாகிறது. இன்று மண்ணின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதன் மூலம், வேளாண் துறை வருங்காலத்திற்கான வளமான மற்றும் நிலையான அறுவடையை உறுதி செய்கிறது.


தேசிய அளவிலான உத்திமுறை கொள்கை மற்றும் உயிரியல் சந்தையின் விரிவாக்கம்


இத்தகைய மாற்றத்தை ஆதரிப்பதற்காக, இந்திய அரசு, தாய் மண்ணைப் பாதுகாப்பதற்கும், அதன் வளத்தை மீட்டெடுப்பதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மற்றும் மேம்படுத்துவதற்குமான பிரதமரின் திட்டம் (Programme for Restoration, Awareness, Nourishment and Amelioration of Mother Earth (PM-PRANAM)) போன்ற திட்டங்களின் மூலம் உயிரியல் உள்ளீடுகளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளது. இது நாட்டின் மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் ரசாயன உர மானியங்களால் ஏற்படும் பெரும் நிதிச் சுமையைக் குறைக்கவும் முயல்கிறது. மாற்று ஊட்டச்சத்து ஆதாரங்களைப் பின்பற்றுவதற்கு மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம், நிலையான விவசாயத்திற்கான ஒரு வலுவான அமைப்பை அரசாங்கம் உருவாக்கி வருகிறது. இந்த கொள்கை மாற்றம் சந்தை போக்குகளிலும் தெளிவாகத் தெரிகிறது. சுமார் 153 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய உயிரி உரச் சந்தை, 2033-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 12-16% கூட்டு வளர்ச்சி விகிதத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நச்சுக்களற்ற உணவுகளுக்கான தேவை அதிகரிப்பால், இந்திய இயற்கை உணவுச் சந்தை 2031-ஆம் ஆண்டிற்குள் சுமார் 3.21 பில்லியன் டாலரை  எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, உயிரி உரங்களைப் பயன்படுத்துவது பெரிய அளவிலான சந்தைகளில் நுழைவதற்கும் எதிர்கால ஏற்றுமதி வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் அவசியமாகிறது. 


எதிர்கால உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக ஒரு வலுவான அமைப்பை உருவாக்குதல்


இந்தியாவின் அடுத்த தலைமுறை வேளாண்மையானது, சூழலியல் அறிவும் மேம்பட்ட நுண்ணுயிர் தொழில்நுட்பமும் (microbial technology) இணைந்த ஒரு புதிய வடிவத்தைப் பெற்று வருகிறது. கடந்த காலங்களில், வேளாண் தொழிலாளர்களிடையே இது குறித்த விழிப்புணர்வு குறைவாக இருந்ததும், தயாரிப்புகளின் இருப்புக்காலம் குறைவாக இருந்ததும் சிக்கல்களாக இருந்தன. இருப்பினும், முறையான பயிற்சித் திட்டங்கள் மற்றும் உள்ளூர் அளவிலான செயல்முறை விளக்கங்கள் மூலம் வேளாண் தொழிலாளர்களின் தொழில்நுட்பத் திறன் தற்போது மேம்பட்டுள்ளது. குறிப்பாக, நிலைப்படுத்தப்பட்ட திரவ வடிவங்கள் (liquid formulations) மற்றும் நவீன அமைப்புகளின் (customised carrier systems) அறிமுகம் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இத்தகைய உயிரியல் தீர்வுகளை நோக்கி நகர்வதன் மூலம், தீவிரமான காலநிலை மாற்றங்களையும் மோசமான மண் மேலாண்மையையும் தாங்கி வளரக்கூடிய வலுவான ஒரு விவசாயச் சூழல் உருவாகியுள்ளது. இன்று மண்ணின் ஆரோக்கியத்தில் நாம் செலுத்தும் கவனம், எதிர்காலத்தில் செழிப்பான மற்றும் நிலையான அறுவடைக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். இந்திய வேளாண்மையின் எதிர்காலம் என்பது நாம் எவ்வளவு உரங்களைப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது அல்ல என்றும் மாறாக உயிரியல் தீர்வுகளை எவ்வளவு புத்திசாலித்தனமாக விவசாய முறையில் ஒருங்கிணைக்கிறோம் என்பதிலேயே அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 


ஆசிரியர், IPL Biologicals - International Panaacea Limited நிறுவனத்தின் தலைவர் ஆவார்.


Original Link: How biofertilisers are changing farmer practices in India.


Share:

கட்டாய பாலினமாற்று நடவடிக்கைக்கு ஆயுள் தண்டனை : 2019-ஆம் ஆண்டின் திருநங்கையர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது - சிஷிர் சின்ஹா

முன்மொழியப்பட்ட இந்தச்  சட்டமானது, குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை, ஹார்மோன் மாற்றங்கள் அல்லது உடல் உறுப்புகளைச் சிதைப்பது போன்ற முறைகள் மூலம் பாலினமாற்று சிகிச்சையை (Transgender Conversion) கட்டாயப்படுத்துவோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ₹5 லட்சம் அபராதத்தை வழங்க வழிவகை செய்கிறது.


ஒன்றிய அரசு கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-ல் (Transgender Persons (Protection of Rights) Act, 2019) திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. இந்த நடவடிக்கை திருநங்கைகளின் உரிமைகளை நிர்வகிக்கும் சட்டக் கட்டமைப்பை கணிசமாக வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


முன்மொழியப்பட்ட இந்தச்  சட்டமானது, குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை, ஹார்மோன் மாற்றங்கள் அல்லது உடல் உறுப்புகளைச் சிதைப்பது போன்ற முறைகள் மூலம் பாலின மாற்று சிகிச்சையை (Transgender Conversion) கட்டாயப்படுத்துவோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ₹5 லட்சம் அபராதத்தை வழங்க வழிவகை செய்கிறது. அதே போல, பெரியவர்களை இத்தகைய செயல்களுக்குக் கட்டாயப்படுத்துவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை (இது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம்) மற்றும் ₹2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இந்த சட்ட வரைவு பெரும்பாலும் பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita (BNS)) அல்லது குறிப்பிட்ட மாநில சட்டத் திருத்தங்களின்கீழ் கொண்டுவரப்படுகிறது.


அரசின் நோக்கம் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கையின்படி, இந்த விதிமுறைகள் பொதுவான குற்றவியல் சட்டத்துடன் இணைந்து செயல்பட்டு, உடல் பாதுகாப்பு ஒருமைப்பாட்டிற்கான (bodily integrity) அரசியலமைப்புச் சட்ட உரிமையைப் பாதுகாப்பதோடு, ஆள் கடத்தல் மற்றும் கட்டாய உழைப்புக்கு எதிராகச் சட்டரீதியான பாதுகாப்பை வழங்கும் என்று முதன்மை சட்ட அமைப்பான (Main Statutory Sanhita (M.S.S.)) பாரதிய நியாய சன்ஹிதா அல்லது அதன் முந்தைய வடிவமான இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code (IPC)) ஆகியவற்றின் மூலமும் உறுதியளிக்கிறது.


இந்த சட்டத்திருத்தம் திருநங்கையர் அல்லாத (non-transgender) குழந்தைகளைத் திட்டமிட்டு சுரண்டுவதையும் தடுக்கிறது; அதன்படி, ஒரு குழந்தையை பிச்சை எடுப்பதற்கோ, பாலியல் தொழிலுக்கோ அல்லது கொத்தடிமை முறைக்கோ பயன்படுத்தும் நோக்கில், அக்குழந்தையை ஒரு திருநங்கையாகக் காட்டிக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்துபவர்களுக்கு அல்லது தூண்டுபவர்களுக்குக் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் மேலும் இந்தத் தண்டனைக் காலம் 14 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 


இந்த சட்ட முன்வரைவானது (Bill), தண்டனைகளைத் தாண்டி திருநங்கை அல்லது மாற்றுப்பாலினத்தவர் என்பதற்கான சட்டப்பூர்வ வரையறையை விரிவுபடுத்த முன்மொழிகிறது. இந்தப் புதிய வரையறையானது கின்னர் (kinner), ஹிஜ்ரா (hijra), அரவாணி (aravani) மற்றும் ஜோக்தா (jogta) போன்ற சமூக-கலாச்சார அடையாளங்களையும், அத்துடன் பிறப்பிலிருந்தே பாலியல் பண்புகளில் மாறுபாடுகள் கொண்டவர்கள், அதாவது குரோமோசோம்கள் மற்றும் இயற்கையான ஹார்மோன் உற்பத்தியில் மாற்றங்களைக் கொண்டவர்களையும் (Differences of Sex Development (DSD)) உள்ளடக்கியதாக அமைகிறது.


முக்கியமாக, ஒரு திருநங்கை அல்லாத (non-transgender) குழந்தையை, திருநங்கையைப் போல உடை அணியவோ, தோற்றமளிக்கவோ அல்லது நடந்துகொள்ளவோ கட்டாயப்படுத்துபவர்கள், மிரட்டுபவர்கள் அல்லது தூண்டுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டப்பிரிவு வழிவகை செய்கிறது. மேலும், அத்தகைய குழந்தைகளை பிச்சை எடுக்கவோ, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவோ அல்லது கொத்தடிமைத் தொழிலில் ஈடுபடுத்தவோ பயன்படுத்துவதும் குற்றமாகக் கருதப்படும் என்றும் இத்தகைய குற்றங்களுக்குக் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய கடுங்காவல் தண்டனையும், ரூ. 3 லட்சத்திற்குக் குறையாத அபராதமும் விதிக்கப்படும் என்று இந்தச் சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.


சமூகத்தின் நிர்வாக மற்றும் சமூக மாற்றத்தை எளிதாக்கும் வகையில், அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் புதுப்பிக்க உதவுவதற்கு ஒரு குறிப்பிட்ட அதிகார அமைப்பை (Designated Authority) இந்த மசோதா வழங்குகிறது. மேலும், தேசிய கூட்டமைப்பை (National Council) மறுசீரமைக்கவும் இந்த மசோதா முன்மொழிகிறது. இதன்படி வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய மண்டலங்களிலிருந்து குறைந்தபட்சம் இயக்குநர் அந்தஸ்தில் உள்ள பிரதிநிதிகளை சுழற்சி முறையில் உறுப்பினர்களாகச் சேர்க்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.


மேலும், இந்தச் சட்டமானது அதிகாரிகளுக்குத் தேவைப்படும்போது நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வழிவகை செய்கிறது; இதன்மூலம் இடைநிலை பாலினத்தவர் (Intersex Variations) மற்றும் பாலின அடையாளங்கள் (Gender Identity) சார்ந்த சிக்கலான மருத்துவ மற்றும் சட்டப்பூர்வமான அம்சங்கள், முறையான தொழில்முறை நிபுணத்துவத்துடன் கையாளப்படுவதை உறுதி செய்கிறது.


Original Link: Centre proposes life term for forced transgender conversion; moves to amend 2019 Act.

Share:

NCERT நிபுணர்களை தடை செய்வதன் மூலம், உச்சநீதிமன்றம் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறது.

நீதிமன்றத்தின் திறந்த மனப்பான்மை மற்றும் பரந்த சிந்தனை கொண்ட நீண்டகால நற்பெயருக்கு, ஒரு அதீத உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினை முரணாக அமைகிறது. நீதித்துறையின் இத்தகைய நற்பெயர் என்பது பல நீதிபதிகள் அடங்கிய அமர்வுகளால் காலப்போக்கில் கட்டமைக்கப்பட்டதாகும்.


கடந்த மாதம், எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு பகுதியை இந்திய உச்சநீதிமன்றம் கடுமையாக எதிர்த்தது. குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (National Council of Educational Research and Training (NCERT)) பாடப்புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட பல மாற்றங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக இருந்ததால், இந்த குறிப்பிட்ட பகுதியும் தவறான எண்ணத்துடன் சேர்க்கப்பட்டதாகக் கருதப்பட்டது. நீதித்துறை ஒரு முக்கியப் பங்காற்றுவதால், அதன் செயல்பாடுகள் குறித்த எந்தவொரு மதிப்பீடும், குறிப்பாக இளம் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில், மிகுந்த கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். நீதிமன்றத்தின் இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, அரசாங்கம் அந்தப் பாடப்புத்தகத்தைத் திரும்பப் பெற்றதுடன், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (NCERT) அமைப்பைக் கண்டித்தது. இருப்பினும், இந்த விவகாரத்தை இத்துடன் நிறுத்தாமல், வரலாற்றாசிரியர் மிஷல் டானினோ, சட்ட நிபுணர் அலோக் பிரசன்னா குமார் மற்றும் கல்வியாளர் சுபர்ணா திவாகர் ஆகிய தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) உறுப்பினர்களுடன் ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றும் கடந்த புதன்கிழமை அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்தத் தடையும் கட்டுப்பாடுகளும் ஏமாற்றமளிப்பதாக உள்ளன. கருத்துச் சுதந்திரத்தின் எல்லையை விரிவுபடுத்திய பல தீர்ப்புகளின்மூலம் நீதித்துறை பெற்ற நற்பெயருக்கு எதிராக, இத்தகைய உணர்ச்சிகரமான அணுகுமுறை அமைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். 


கடந்த பத்தாண்டுகளில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (National Council of Educational Research and Training (NCERT)) பாடப்புத்தகங்கள் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, குஜராத் கலவரம் குறித்த குறிப்புகள் நீக்கப்பட்டது, இடைக்கால இந்திய வரலாறு தொடர்பான பாடங்கள் சுருக்கப்பட்டது, போராட்ட இயக்கங்கள் பற்றிய தகவல்கள் குறைக்கப்பட்டது மற்றும் பாபர் மசூதி இடிப்பு குறித்த வரிகள் நீக்கப்பட்டது போன்றவை குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும். இத்தகைய மாற்றங்கள் சமூகத்தின்  உண்மைநிலையை எளிமைப்படுத்துவதோடு, ஆளுங்கட்சியின் சித்தாந்தத்திற்கு ஏற்ப பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. அதே சமயம், மாறிவரும் அரசியல் சூழல்களுக்கு மத்தியிலும், அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் உரிய சட்ட நடைமுறைகளில் உறுதியாக இருப்பதே தனது பலம் என்பதை உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. இந்த உறுதிப்பாடானது நீதித்துறை தன்னையே சுயபரிசோதனை செய்துகொள்ளவும் வழிவகுத்துள்ளது. அந்த சுயபரிசோதனை உணர்வின் வெளிப்பாடாகவே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "வருந்தத்தக்க வகையில், நீதித்துறைக்குள்ளும் ஊழல் வழக்குகள் உள்ளன" என்று குறிப்பிட்டார். தற்போது திரும்பப் பெறப்பட்ட பாடப்புத்தகத்தில் நீதிபதி கவாயின் இந்த உரை இடம்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


நீதிமன்றத்தின் மாண்பை அவமதிக்கும் முயற்சியாகக் கருதி, உச்சநீதிமன்றம் வெளிப்படுத்திய கோபம் தவறானது அல்ல என்றாலும் நீதிமன்றத்தின் அந்தக் கண்டனம் தற்போது கருத்துச் சுதந்திரத்தைத் தடுக்கும் தணிக்கையாக மாறுமானால், விமர்சனங்களை பெருந்தன்மையுடன் எதிர்கொண்ட அதன் சொந்த வரலாற்றுப் பெருமைக்கே அது இழுக்காக அமைந்துவிடும் என்றும் தெரிவிக்கின்றனர். 


Original Link: In blacklisting NCERT experts, SC does itself a disservice.


Share:

கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க இந்தியா HPV தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. - குஷ்பூ குமாரி

14 வயதுடைய சிறுமிகளுக்கான நாடு  முழுவதும்  மனித பாப்பிலோமா வைரஸ்  தடுப்பூசித் திட்டம் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், இம்முயற்சிக்குக் காரணமாக அமைந்தவை யாவை? இது 'அனைவருக்குமான நோய்த்தடுப்புத் திட்டத்தின்' (Universal Immunization Programme) கீழ் சேர்க்கப்பட்டுள்ளதா?


தற்போதைய செய்தி


ராஜஸ்தானின் அஜ்மீருக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, ​​கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதுடைய சிறுமிகளுக்கான நாடு முழுவதும் 'மனித பாப்பிலோமா வைரஸ்' (Human Papillomavirus (HPV)) தடுப்பூசித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 28 அன்று தொடங்கி வைத்தார். இந்தியாவில் பெண்களிடையே காணப்படும் புற்றுநோய் வகைகளில், கருப்பை வாய்ப் புற்றுநோயானது இரண்டாவது அதிகம் பரவும் தன்மை கொண்ட புற்று நோயாகும்.


முக்கிய அம்சங்கள்:


1. மனித பாப்பிலோமா வைரஸ் என்பது பாலியல் தொடர்பு மூலம் பரவும் ஒரு பொதுவான நோய்த்தொற்றாகும். இந்த வைரஸின் குறிப்பிட்ட சில வகைகள் மட்டுமே புற்றுநோயாக மாறுகின்றன. பாலியல் செயல்பாடு தொடங்காத இளம்வயதில், குறிப்பாக பெண்கள் பருவமடையும் (puberty) காலத்தில் மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி செலுத்தினால், அது நீண்ட காலத்திற்கு தேவையான  பாதுகாப்பை வழங்குகிறது.


2. பொதுவாக உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமானது மனித பாப்பிலோமா வைரஸ் தொற்றை இரண்டு ஆண்டுகளுக்குள் இயல்பாகவே வெளியேற்றிவிடும் என்றாலும், மிக குறைந்த சதவீதத்தினரிடம் மட்டும் இந்த வைரஸ் நீண்ட காலத்திற்குத் தங்கி, சில இயல்பான செல்களை அசாதாரண செல்களாகவும், பின்னர் புற்றுநோயாகவும் மாற்றக்கூடும் என்று 'நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்' (Centers for Disease Control and Prevention (CDC)) தெரிவிக்கின்றன.


3. தகுதிபெற்ற சிறுமிகள், கோவிட்-19 பெருந்தொற்றின் போது மக்கள் 'Co-Win' தளத்தைப் பயன்படுத்தியது போலவே, 'U-win' எனும் தடுப்பூசி மேலாண்மைத் தளத்தைப் பயன்படுத்தி அரசு சுகாதார மையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான நேரத்தை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த 90 நாட்கள் கால அவகாசம் முடிந்த பிறகும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடையாது. நாட்டின் வழக்கமான நோய்த்தடுப்புத் திட்டத்திற்கு இணையாக, சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில் இத்திட்டம் தொடர்ந்து நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் 14 வயதை எட்டும் சிறுமிகள், இம்முறையின் கீழ் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.15 கோடி சிறுமிகள் 14 வயதை எட்டுகின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


4. புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய குறைந்தது 14 வகையான மனித பாப்பிலோமா வைரஸ்கள் உள்ளன. இவற்றில், மனித பாப்பிலோமா வைரஸ் வகைகள் 16 மற்றும் 18 ஆகியவை கட்டிகள் உருவாவதற்கு அதிக வாய்ப்புள்ள வகைகளாகக் கருதப்படுகின்றன. உலகளவில் ஏற்படும் கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகளில் 70 சதவீதத்திற்கு இந்த இரண்டு வகைகளே காரணமாக அமைகின்றன. இந்த தடுப்பூசிகள், அதிகமாக காணப்படும் மனித பாப்பிலோமா வைரஸின் இரண்டு, நான்கு அல்லது ஒன்பது வகைகள் உடலில் நுழைவதைத் தடுக்கின்றன.


5. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ நிலையங்களில், 14 வயதுப் பெண் குழந்தைகளுக்கு அரசு Quadrivalent Gardasil தடுப்பூசியை இலவசமாக வழங்கி வருகிறது. 'Gavi' தடுப்பூசி கூட்டமைப்பு உடனான ஒப்பந்தத்தின் மூலம் இம்முயற்சி சாத்தியமாகியுள்ளது. 15 வயதுக்குட்பட்ட 90% பெண் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதன் மூலம், 2030-ஆம் ஆண்டிற்குள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஒழிப்பதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization (WHO)) உலகளாவிய உத்தியுடனும் இம்முயற்சி ஒத்துப்போகிறது.


6. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் நான்கு-வகை மனித பாப்பிலோமா வைரஸ் (quadrivalent human papillomavirus (qHPV)) தடுப்பூசியான, 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா'வின் Cerevac தடுப்பூசிக்கு அரசு மாறக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது இன்னும் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஒப்புதலைப் பெறவில்லை. மேலும், இதன் ஒற்றை டோஸின் செயல்திறனை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Medical Research (ICMR)) இன்னும் ஆய்வு செய்து வருகிறது. இது மனித பாப்பிலோமா வைரஸ் வகைகள் 16, 18, 6 மற்றும் 11 ஆகியவற்றிற்கு எதிராகப் பாதுகாப்பை வழங்குகிறது.


7. மனித பாப்பிலோமா வைரஸ் 99 சதவீத கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களை ஏற்படுத்துகிறது. இருப்பினும், இது பிறப்புறுப்பு மருக்கள், ஆண்குறி, ஆசனவாய் மற்றும் வாய் மண்டல தொண்டை சார்ந்த (oropharyngeal) புற்றுநோய்   ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக உள்ளது. எனவே, பல புற்றுநோயியல் நிபுணர்கள் மனித பாப்பிலோமா வைரஸ்க்கு எதிராக பாலின-நடுநிலை தடுப்பூசிக்கு (gender-neutral vaccination) அழைப்பு விடுக்கின்றனர்.


cervical cancer

8. 2026-ஆம் ஆண்டின் தொடக்க நிலவரப்படி, அனைவருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை (herd immunity) ஊக்குவிக்கவும் பல்வேறு வகையான புற்றுநோய்களைத் தடுக்கவும், சிறுவர் மற்றும் சிறுமியர் இருவரையும் உள்ளடக்கிய தேசிய மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசித் திட்டங்களை 50-க்கும் மேற்பட்ட நாடுகள் செயல்படுத்தி வருகின்றன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் ஜெர்மனி ஆகியவை இதில் அடங்கும்.



9. பெங்களூருவின் நாராயணா ஹெல்த் சிட்டியின் மகளிர் மருத்துவ புற்றுநோயியல் துறையின் மருத்துவத் தலைவர் டாக்டர் ரோஹித் ரகுநாத் ரனாடே, “மனித பாப்பிலோமா வைரஸ் பற்றிய மிகவும் தவறான கருத்து என்னவென்றால், உங்களுக்கு கருப்பை வாய் இல்லையென்றால், நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பது. அறிவியல்ரீதியாக, இது உண்மையான கருத்து அல்ல என்று கூறியுள்ளார். 2023 செப்டம்பரில் வெளியான The Lancet Global Health ஆய்வு ஒன்று, 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் குறைந்தபட்சம் மூன்று நபர்களில் ஒருவருக்கு வகையான பாலியல் மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறிந்தது.


10. இங்கிலாந்தில், தேசிய சுகாதாரச் சேவை (National Health Service (NHS)) 2019-ஆம் ஆண்டில், 12 முதல் 13 வயதுடைய சிறுவர்களையும் சேர்க்கும் வகையில் தனது மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்தியது. இதற்கான அடிப்படைக் கூற்று தெளிவாக இருந்தது: மனித பாப்பிலோமா வைரஸ் தொடர்பான நோய்களை நாம் முற்றிலுமாக ஒழிக்க விரும்பினால், அதற்கான தீர்வில் ஆண் மக்களையும் சேர்க்காமல் இருக்க முடியாது. இந்த முறையை ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலியா, 2035-ஆம் ஆண்டிற்குள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக திறம்பட ஒழிக்கும் உலகின் முதல் நாடாக மாறுவதற்கு தற்போது பயணித்து வருகிறது. Rohit இதுபற்றி, ஆண் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தாமல் இந்த சாதனையை  அடைய முடியாது என்று  கூறினார்


மனித பாப்பிலோமா வைரஸ்  தடுப்பூசியின் முக்கியத்துவம்


1. பல ஆண்டுகளாக, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது நாட்டில் பெண்களின் உயிரைப் பறிக்கும் மிகவும் கொடிய நோயாகும். அதே சமயம் தடுப்பதற்கான வாய்ப்புள்ள நோய்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இருப்பினும், இத்தடுப்பூசியின் விலை, அதை பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தவறான தகவல்களால் உருவான தவறான நம்பிக்கைகள் காரணமாக குறைவாக இருந்தது.


2. உலகளவில் ஏற்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகளில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் நிகழ்கிறது. நாட்டிற்குள், இது பெண்களிடையே ஏற்படும் இரண்டாவது மிகவும் பொதுவான புற்றுநோயாகத் தொடர்ந்து இருந்து வருகிறது; இது ஒவ்வொரு ஆண்டும் 1.25 லட்சம் பெண்களைப் பாதிக்கிறது. 75,000 பெண்களின் உயிரைப் பறிக்கிறது.


3. மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று மற்றும் புற்றுநோய்க்கு முந்தைய நிலை பாதிப்புகளைக் குறைப்பதில் இத்தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கிறது என்று முந்தைய சான்றுகள் சுட்டிக்காட்டியிருந்தாலும், பின்னர் நடந்த ஆய்வுகள் இது புற்றுநோய் ஏற்படும் அளவையும் குறைக்கிறது என்பதையும் நிரூபித்துள்ளன.


4. ஸ்வீடன் நாட்டில் இத்தடுப்பூசியின் நடைமுறை விளைவுகளை மதிப்பிடும் ஒரு முக்கிய ஆய்வு, 2020-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அந்த ஆய்வின்படி, 17 வயதிற்குள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்களிடையே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 88% குறைவாக இருந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.


5. முக்கியமாக, பெண்களுக்கு பொதுவான தடுப்பூசி வழங்குவது ஆண்களுக்கும் வைரஸ் பரவலைக் குறைத்து, அவர்களையும் பிற புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.


அனைவருக்குமான நோய்த்தடுப்பு திட்டம் (Universal Immunization Programme (UIP))


1. இந்தியாவின் பொது சுகாதார உத்தியில் பல ஆண்டுகளாக நோய்த்தடுப்பு முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவின் நோய்த்தடுப்பு திட்டம் உலகின் மிகப்பெரிய பொது சுகாதார திட்டங்களில் ஒன்றாகும். 1978-ஆம் ஆண்டில், விரிவாக்கப்பட்ட நோய்த்தடுப்பு (Expanded Programme on Immunization) திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர், அது நகர்ப்புறங்களை தாண்டி விரிவடைந்த பிறகு 1985-ல் அனைவருக்குமான நோய்த்தடுப்பு திட்டமாக (Universal Immunization Programme) மறுபெயரிடப்பட்டது.


2. டிசம்பர் 12, 2025 அன்று மக்களவையில் முக்கிய கேள்விக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (Ministry of Health and Family Welfare (MoHFW)) அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், அனைவருக்குமான நோய்த்தடுப்பு திட்டத்தில் (UIP), 12 தடுப்பூசி-தடுக்கக்கூடிய நோய்களுக்கு (vaccine-preventable diseases (VPDs)) 11 தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இது மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி அனைவருக்குமான நோய்த்தடுப்புத் திட்டத்தின் (UIP) ஒரு பகுதியாக இல்லை.


3. அனைவருக்குமான நோய்த்தடுப்புத் திட்டத்தின்கீழ், தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய 12 நோய்களுக்கு எதிராக தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது:


தேசிய அளவில் டிப்தீரியா, பெர்டுசிஸ், டெட்டனஸ், போலியோ, தட்டம்மை, ரூபெல்லா, குழந்தைப் பருவ காசநோயின் கடுமையான வடிவம், ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு, ஹெபடைடிஸ் பி, ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை B மற்றும் நிமோகோகல் நிமோனியாவால் ஏற்படும் மூளைக்காய்ச்சல் மற்றும் நிமோனியா உள்ளிட்ட 11 நோய்களுக்கு எதிராக; மற்றும்


துணை-தேசிய அளவில் (சில பகுதிகளில் மட்டும்) – ஜப்பானிய என்செபலிடிஸ் (Japanese Encephalitis) எனும் ஒரு நோய்க்கு எதிராக (JE தடுப்பூசி, பரவலாக உள்ள மாவட்டங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது).


4. இந்திரதனுஷ் திட்டம்: அமைச்சகத்தின் கூற்றுப்படி, இது 2014ஆம் ஆண்டு உலகளாவிய தடுப்பூசி திட்டத்தின் (UIP) கீழ் தொடங்கப்பட்ட ஒரு சிறப்பு கண்ணோட்ட தடுப்பூசி பிரசாரமாகும். குறைந்த தடுப்பூசி பரவல் உள்ள பகுதிகளில் நடத்தப்படுகிறது. இதன் மூலம் தவறவிடப்பட்ட (left-out) மற்றும் இடைநிறுத்தப்பட்ட (dropped-out) குழந்தைகள் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படுகிறது. UIP-யில் பயன்படுத்தப்படும் 11 வகையான தடுப்பூசிகள் இத்திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

Original Link: India launches HPV vaccination drive to prevent cervical cancer.


Share:

மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவு எவ்வாறு பொருளாதாரத்தை தவறாகப் புரிந்துகொள்கிறது, கொள்கையை சிக்கலாக்கியது? -அபிஷேக் ஆனந்த், ஜோசுவா ஃபெல்மேன், அரவிந்த் சுப்பிரமணியன்

பல்வேறு காலகட்டங்களில், பொருளாதாரம் பலவீனமாக இருக்கும்போது அதற்கானத் தரவு வலிமையைக் குறிக்கிறது. மேலும் மற்ற நேரங்களில், வளர்ச்சி வலுவாக இருக்கும்போதுகூட கொள்கைகள் தளர்த்தப்பட வேண்டும் என்று அது பரிந்துரைத்தது.


சமீபத்தில், அரசாங்கம் புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்களின் தொடரை வெளியிட்டது. அவர்கள் இரண்டு முக்கிய காரணங்களுக்காக அவ்வாறு செய்தனர். முதலாவதாக, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் நிலைகள் புதுப்பிக்கப்பட வேண்டியிருந்தது. 2011-12-ல் அதன் நிலைகள் கடைசியாக நிறுவப்பட்டதிலிருந்து இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்ததால், இந்த நடவடிக்கை நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது. இரண்டாவதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியை மதிப்பிடுவதற்கான வழிமுறையில் உள்ள குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும்.


இதன் முறையை மாற்றும் செயல்முறை மிகவும் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்பட்டது. இந்த அணுகுமுறைக்கு புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) பாராட்டுக்குரியது. ஆனால், சிக்கல்கள் கணிசமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை மதிப்பிடுவதற்கு நேரம் எடுக்கும். மேலும் இது இறுதியில் புதிய எண்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையைப் பொறுத்தது.


முதல் பார்வையில், தெளிவாக முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், சில வினோதங்கள் உள்ளன. உதாரணமாக, பொருட்களின் பணவீக்கம் (உற்பத்தி GVA பணவீக்கத்தால் அளவிடப்படுகிறது) 10 காலாண்டுகளுக்கு விசித்திரமாக எதிர்மறையாக உள்ளது, இது துறையின் உண்மையான வளர்ச்சி விகிதத்தில் அசாதாரண முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. மேலும், இறக்குமதி பணவீக்கங்கள் முந்தைய தொடரில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை, இது உண்மையான இறக்குமதி வளர்ச்சியில் கூர்மையான மாற்றங்களை உருவாக்கியுள்ளது.


ஆனால் புதிய முறையை முழுமையாக மதிப்பிடுவதற்கு முன், நாம் புரிந்து கொள்ள வேண்டும். பழைய முறையின் சிக்கல்கள் என்ன? அந்த சிக்கல்கள் தீவிரமாக இருந்தனவா? ஒரு புதிய ஆய்வறிக்கையில், இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கிறோம்.


பிரச்சனையின் வெளிப்பாட்டிலிருந்து தொடங்கலாம். இரு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்களுக்கும் பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தை அளவிட பொருளாதார வல்லுநர்கள் கண்காணிக்கும் நிலையான பேரியல்-குறிகாட்டிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. ஏற்றுமதி, கடன், வரிகள், மின்சார நுகர்வு, விற்பனை மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீடு ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், ஜனவரி 2015-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடும் முறை முழுமையாக திருத்தப்பட்டபிறகு இந்த நெருங்கிய உறவு முறிந்தது.


ஒரு முக்கியப் பிரச்சனை பொருத்தமற்ற தரவு மூலங்களைப் பயன்படுத்துவது ஆகும். குறிப்பாக, முறையான துறையிலிருந்து தரவைப் பயன்படுத்தி முறைசாரா துறையின் செயல்திறனைப் பிரதிபலிப்பது. இது சாதாரண காலங்களில் ஒரு நியாயமான அணுகுமுறையாக இருந்திருக்கலாம். ஆனால், 2015-க்குப் பிறகு முறைசாரா துறை மூன்று கடுமையான தாக்கங்களால் விகிதாசாரமற்ற முறையில் பாதிக்கப்பட்டது. அவை: பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி (GST) அறிமுகம் மற்றும் கோவிட் பெருந்தொற்று ஆகியவை ஆகும். இந்த தாக்கங்கள் முறைசார் துறையைவிட முறைசாரா துறையையே மிகக் கடுமையாகப் பாதித்தன. இதன் காரணமாக, அந்த மதிப்பீட்டு முறை முறைசாரா துறையின் செயல்பாட்டை மிகைப்படுத்திக் காட்டியது. இது ஒரு தீவிரமான பிரச்சனையாகும். 2011–12-ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தில் முறைசாரா நிறுவனங்களின் பங்கு 45 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.


மற்றொரு முக்கியப் பிரச்சனை, பொருத்தமற்ற 'விலை சரிசெய்தல் காரணிகளை' (deflators) பயன்படுத்தியதே ஆகும். பலரும் "இரட்டை விலை சரிசெய்தல்" (double deflation) முறை இல்லாதது குறித்தே கவனம் செலுத்தினர். ஆனால் அதைவிடப் பெரிய பிரச்சனை, பொருத்தமற்ற விலை குறியீடுகளைப் பயன்படுத்தியதே ஆகும்; குறிப்பாக, சேவைத் துறையின் உற்பத்தியை மதிப்பிடும்போது 'மொத்த விலை குறியீட்டை' (WPI) பயன்படுத்தியதே இதில் முக்கியமானது. ஏனெனில், மொத்த விலைக் குறியீடு சேவை விலைகளை உண்மையாகவே பிரதிபலிப்பதில்லை. கடந்த பத்தாண்டுகளில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் மொத்த விலை குறியீடு (WPI) வெகுவாகக் குறைந்திருந்த சூழலில், இப்பிரச்சனை மிகவும் தீவிரமாக இருந்தது. இதன் விளைவாக, பணவீக்கத்தின் அளவு குறைத்து மதிப்பிடப்பட்டது. அதேசமயம், உண்மையான பொருளாதார வளர்ச்சி மிகைப்படுத்திக் காட்டப்பட்டது.


இந்தப் பிரச்சினைகள் மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் பெற்றன. 2015-ம் ஆண்டின் மதிப்பீட்டு முறை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எண்களுக்குப் பயன்படுத்தப்பட்டபோது குறிப்பிடத்தக்க தவறான மதிப்பீட்டை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் 2011-12 முதல் பின்னர் 2004-05 வரையிலான தரவுகளுக்கும் பயன்படுத்தியபோது இது பொருளாதார மதிப்பீடுகளில் குறிப்பிடத்தக்க பிழைகளை ஏற்படுத்தியது.


2011-12 மற்றும் 2023-24-க்கு இடையில் சராசரியாக வளர்ச்சி சுமார் 1.5 முதல் 2 சதவீத புள்ளிகள் வரை மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. பொருத்தமற்ற தரவுகளும் பணவீக்கக் காரணிகளும் தோராயமாக சமமாக பங்களித்தன. இதன் விளைவாக, இந்த 12 ஆண்டுகளில் பொருளாதாரம் 6 சதவீதத்திற்குப் பதிலாக சராசரியாக 4 முதல் 4.5 சதவீதமாக அதிகரித்ததாக மதிப்பிடுகிறோம். இந்தியாவின் சாத்தியமான வளர்ச்சியின் மதிப்பீடுகள் அதற்கேற்ப மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.


இதற்கு முந்தைய காலகட்டத்தைப் பொறுத்தவரை, 2015-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கணக்கீட்டு முறை (methodology) எதிர்விளைவைக் கொண்டிருந்தது. இது 2004-05 மற்றும் 2011-12-க்கு இடையில் சராசரியாக சுமார் 1 முதல் 1.5 சதவீத புள்ளிகள் வளர்ச்சியைக் குறைத்து மதிப்பிட்டது.


இதன் விளைவாக, கடந்த 20 ஆண்டுகால வளர்ச்சிப்பாதையானது தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. 2000-களின் தொடக்கத்தில் ஏற்பட்ட வலுவான பொருளாதார ஏற்றமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மந்தநிலையும் தற்போதுள்ள தரவுகளில் தெளிவாகப் பிரதிபலிக்கவில்லை. மாறாக, அக்காலகட்டம் முழுவதும் பொருளாதாரம் சீராகவும் வேகமாகவும் வளர்ந்ததைப் போன்ற ஒரு சித்திரத்தையே தற்போதைய தரவுகள் நமக்குக் காட்டுகின்றன.


புள்ளிவிவரங்கள் ஒரு தெளிவான சிக்கலைக் காட்டுகின்றன. 1990-களில் இருந்து ஆரம்பகால பேரியல்-குறிகாட்டிகள் உயர்ந்தன. அதன் பிறகு, அவை கடுமையாக குறைந்து, 2005க்கு முந்தைய நிலைகளுக்குக் கீழே சரிந்தன (அம்புக்குறிகளைப் பார்க்கவும்). இருப்பினும், அதிகாரப்பூர்வ மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி புள்ளிவிவரங்கள் (நிழலான பகுதி) முழு காலகட்டத்திலும் நிலையான வளர்ச்சியின் படத்தை காட்டுகின்றன.



இந்தப் படத்தில், 2003 மற்றும் 2010-க்கு இடையில் இந்தியா ஒளிர்கிறது என்ற காலம் இல்லை. உண்மையில், அந்தக் காலம் வலுவான மற்றும் துடிப்பான பொருளாதார நடவடிக்கைகளால் குறிக்கப்பட்டது. இந்த சுறுசுறுப்பு எல்லா இடங்களிலும், அனைத்து முக்கிய பொருளாதார குறிகாட்டிகளிலும் காணப்பட்டது. உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு எந்த மந்தநிலையும் இல்லை, இரட்டை இருப்புநிலைக் குறிப்பின் பிரச்சனையின் தாக்கமும் இல்லை. 2015-க்குப் பிந்தைய நான்கு பெரிய தாக்கங்களான பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, உள்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதி சேவைகள் லிமிடெட் (IL&FS) தூண்டப்பட்ட கடன் நெருக்கடி மற்றும் கோவிட் ஆகியவையும் இல்லை. கடந்த இருபதாண்டுகள் 6-7 சதவீத வளர்ச்சியின் தடையற்ற காலகட்டமாக இருந்ததாக அதிகாரப்பூர்வ தரவு தெரிவிக்கிறது.


இந்தத் தவறான புரிதல் சிக்கலான பேரியல் பொருளாதாரக் கொள்கையை உள்ளடக்கியது. பல்வேறு காலகட்டங்களில் தரவு பொருளாதாரம் பலவீனமாக இருந்தபோது வலிமையைக் குறித்தது, மற்ற நேரங்களில், வளர்ச்சி வலுவாக இருக்கும்போது கொள்கையை எளிதாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இந்த நிலைமை பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அவசரத்தையும் குறைத்தது. குறிப்பாக 2014-15 மற்றும் 2019-20-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில். எல்லாவற்றிற்கும் மேலாக, ஏற்கனவே உலக அளவில் வளர்ச்சியை உருவாக்கிக் கொண்டிருந்தபோது கொள்கை கட்டமைப்பை ஏன் மாற்ற வேண்டும்?


சமீபத்திய ஆண்டுகளில், அடிக்கடி பொருளாதார புதிர்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. வளர்ச்சி வலுவாக இருந்தால், தனியார் முதலீடு ஏன் மிகவும் பலவீனமாக உள்ளது? நிகர அந்நிய நேரடி முதலீடு ஏன் குறைந்து வருகிறது? திறன் பயன்பாடு, ஊதிய வளர்ச்சி, வேலைவாய்ப்பு வளர்ச்சி ஏன் இவ்வளவு மந்தமாக உள்ளது? சமீபத்தில், மற்றொரு கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவின் உண்மையான வளர்ச்சி மற்ற நாடுகளைவிட மிக அதிகமாக இருந்தால், ரூபாயின்மீது ஏன் அழுத்தம் ஏற்பட்டது? ஒவ்வொரு புதிரும் அதன் சொந்த சிக்கலான மற்றும் மாறுபட்ட விளக்கத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால் ஆகாமின் ரேஸரின் (Occam’s Razor) கோட்பாட்டின் உணர்வில், அவை அனைத்திற்கும் ஒரு எளிய, பகுதியளவு என்றாலும், எளிய விளக்கத்தையே தேர்ந்தெடுக்குமாறு பரிந்துரைக்கிறது. அந்த விளக்கம் என்னவென்றால், பொருளாதார வளர்ச்சி தோற்றமளிக்கும் அளவுக்கு வலிமையானதாக இல்லாமல் இருக்கக்கூடும் என்பதே ஆகும்.


உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருப்பதில் இந்தியா கணிசமான பெருமை கொள்கிறது. சர்வதேச நாணய நிதியம் (IMF) தரவுகளின்படி, 2011 மற்றும் 2023 க்கு இடையில் இந்தியா நான்காவது வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. ஆனால் எங்கள் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி கூட, இந்தியா முதல் ஏழு அல்லது எட்டு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும். பொருளாதார வளர்ச்சி குறித்த தேசியப் பெருமை இப்போதும் நியாயமானதாகவே இருக்கலாம். இருப்பினும், அத்தகைய பெருமையானது வெறும் புள்ளிவிவரங்களின் துணையை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது.


தங்களின் பகுப்பாய்வு புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) சமீபத்திய முயற்சிக்கு பாராட்டு மற்றும் சிறப்பு ஆகும். இந்த பகுப்பாய்வு மற்றும் பிற அறிஞர்களால் அடையாளம் காணப்பட்ட சவால்களை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இப்போது எதிர்கொள்ள முயற்சித்திருப்பதால் இது பாராட்டுக்குரியது. புதிய முறை எதிர்கால மதிப்பீடுகளுக்குப் பொருந்தும் என்றாலும், எங்கள் ஆராய்ச்சி கடந்த காலத்தைப் பற்றியது, வரலாற்றுப் பதிவைச் சரிசெய்வதில் கவனம் செலுத்துகிறது. கடந்த ஒன்று அல்லது இருபதாண்டுகளுக்கான மதிப்பீடுகளை வழங்குவதற்கான பின்னடைவுப் பயிற்சியை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) மேற்கொள்ளும்போது, புதிய முறையை மதிப்பிடுவதற்கான அளவுகோலையும் இதற்கான ஆராய்ச்சி வழங்கும்.


கடந்த காலத்தைப் பற்றிய குழப்பம் நீங்கும் என்று நம்புகிறோம். இது எதிர்காலத்தில் சிறந்த புரிதலை உருவாக்க உதவும்.


எழுத்தாளர்கள் முறையே மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் டெவலப்மென்ட் ஸ்டடீஸ், JH கன்சல்டிங் மற்றும் பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ் (PIIE) ஆகியவற்றை சார்ந்தவர்கள். ஆய்வறிக்கைக்கான தரவு மற்றும் பிரதி குறியீடு PIIE இணையதளத்தில் கிடைக்கின்றன.


Original Link: How GDP data misread the economy, complicated policy?

 

Share:

வளர்ச்சி உத்திகள் வலுவான நிறுவனங்களுடன் சிறப்பாகச் செயல்படும். -அரிஜித் தாஷ், சவுரவ் ராய்

நிறுவனங்களின் திறனை வலுப்படுத்துதல், ஆராய்ச்சி, மற்றும் நிர்வாக அமைப்புகளில் ஒரேநேரத்தில் முதலீடு செய்ய வேண்டும். நிறுவனங்களை வலுப்படுத்தாமல், நிர்வாகமும் (governance) வளர்ச்சித் திட்டமும் வெற்றி பெறாது.


இந்தியா பொது முதலீடுகளில் பல ஆண்டுகளில் இல்லாத அளவு முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஆனால், இந்த முதலீடுகள் மட்டும் நீண்டகால மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. 2025–26 நிதிநிலை அறிக்கையில், ஒன்றிய அரசு ₹11.21 லட்சம் கோடி ($123 பில்லியன்) ஒதுக்கியுள்ளது. குறிப்பாக, இந்த தொகையில் பாதுகாப்பு உற்பத்தி, உள்நாட்டு உற்பத்தி மற்றும் பெரிய அளவிலான அடிப்படை கட்டமைப்பு (infrastructure) மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. முதலில், பார்க்கும்போது இந்த அறிகுறிகள் நம்பிக்கை அளிக்கின்றன. உதாரணமாக, Financial Times வெளியிட்ட தகவலின்படி, 2025-ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இந்தியா $50.4 பில்லியன் வெளிநாட்டு நேரடி முதலீட்டை (foreign direct investment (FDI)) பெற்றது. இது கடந்த ஆண்டின் அதே காலத்துடன் ஒப்பிடும்போது 16% அதிகமாகவும், புதிய சாதனையாகவும் உள்ளது. ஆனால், அதே தரவுகள், நிகர முதலீடு (net figure)  $7.7 பில்லியன் மட்டுமே இருப்பதாக காட்டுகிறன. இதன் பொருள் பெரிய அளவில் முதலீடுகள் இந்தியாவில் செய்யப்பட்டன. ஆனால், முதலீட்டு விலக்கல் மற்றும் மூலதனத்தை  நாடுகள் (repatriation) மீண்டும் பெற்றதால் $42.7 பில்லியன் இந்தியாவில்  இருந்து வெளியேறியுள்ளது. இந்த முதலீட்டு வரவும் வெளியேறும் நிலை ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: இந்த முதலீடுகளும் மேம்பாட்டு உத்திகளும் நீடித்த பொருளாதார வளர்ச்சியாக மாறுமா என்பதைத் தீர்மானிக்கும் காரணிகள் எது?


இந்த வளர்ச்சி திட்டங்கள் எதிர்பார்த்த விளைவுகளை அளிக்கிறதா என்பதை புரிந்துகொள்ள சமூக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தற்போது நிறுவனங்களின் பங்கு என்ன என்பதை அதிகமாக ஆய்வு செய்து வருகின்றனர். இன்று கொள்கை உருவாக்கத்தை பற்றிய பல விவாதங்கள் நிறுவனங்களின் தரம் குறிப்பாக அரசின் செயல்பாடு மற்றும்  முதலீட்டின் செயல்திறன் ஆகியவற்றின் தொடர்பை ஆய்வு செய்கிறது. நிறுவனங்கள் இன்றைய பிராந்திய வளர்ச்சித் திட்டங்களின் மையத்தில் உள்ளன இது உள்ளூர் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களாக இருக்கலாம் அல்லது உள்ளூர் பங்காளிகளுக்கிடையே விவாதங்களையும் பேச்சுவார்த்தைகளையும் ஏற்படுத்துவதற்கான முறைகளாக இருக்கலாம். அதிகாரபூர்வமான மற்றும் அதிகாரபூர்வமற்ற நிறுவனங்கள் இப்போது பிராந்திய வளர்ச்சி கொள்கையின் புதிய அணுகுமுறையை முன்னெடுத்து வருகின்றன. நிறுவனங்களின் முக்கியத்துவம் ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union (EU)) ஐந்தாவது ஒற்றுமை அறிக்கையில், பலவீனமான நிறுவனங்கள் பிராந்திய வளர்ச்சி திட்டங்களின் செயல்திறனை தடுக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் இந்தக் கட்டுரை நிறுவனங்களின் தரம் வளர்ச்சி திட்டங்களின் பலனை எவ்வாறு தீர்மானிக்கிறது என்பதை விளக்குகிறது. இதற்காக கோட்பாட்டு கருத்துகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமை கொள்கையிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களையும் பயன்படுத்துகிறது.


இரட்டை சக்கரங்கள்


பிராந்திய பொருளாதார வளர்ச்சியை விவரிக்க ஒரு மிதிவண்டியின் உருவகத்தைப் பயன்படுத்தி, ரோட்ரிக்ஸ்-போஸ் (2013) "நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் செயல்படும் வளர்ச்சி உத்திக்கு" இரண்டு வட்டமான சக்கரங்களுக்கு இடையில் பயனுள்ள சீரமைப்பு தேவை என்று வாதிடுகிறார். இதில் முன்சக்கரம் ஒரு பகுதியின் தேவைகளுக்கேற்ப உருவாக்கப்பட்ட வளர்ச்சித் திட்டத்தை குறிக்கிறது. பின்சக்கரம் செயல்திறன் கொண்ட அதிகாரபூர்வ மற்றும் அதிகாரபூர்வமற்ற நிறுவனங்களை குறிக்கிறது. இந்த இரண்டும் சரியாக இணைந்தால் அந்த பகுதி வளர்ச்சியில் முன்னேற முடியும் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் குறையும். ஆனால், இந்த இரண்டு சக்கரங்களுக்கும் இடைவெளி அதிகமாக ஏற்பட்டால் மூன்று மோசமான நிலைகள் உருவாகலாம். முதல் நிலையில், பல பிராந்திய வளர்ச்சி திட்டங்கள் பெரிய அளவிலான திட்டங்களை முன்னிலைப்படுத்துகின்றன. ஆனால், நிறுவனங்களின் வலிமையை புறக்கணிக்கின்றன. இதன் காரணமாக முன்சக்கரம் பெரியதாகவும் பின்சக்கரம் மிகவும் சிறியதாகவும் இருக்கும் நிலை உருவாகிறது. இந்த ஏற்றத்தாழ்வு 1870-களின் “penny-farthing” மிதிவண்டியைப் போல சமநிலையற்ற நிலையை உருவாக்குகிறது. இரண்டாவது நிலையில், நிறுவன அமைப்பும் வளர்ச்சித் திட்டமும் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் இருந்தால் ஓட முடியாத வண்டியின் நிலை (square wheels situation) உருவாகும். பலவீனமான நிறுவனங்களின் கீழ் தவறான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது, முன்னேற்றம் மெதுவாகி தடைகள் அதிகரிக்கும். இது சமமான சாலையில் சதுர சக்கரத்தை தள்ளிச் செல்ல முயல்வதைப் போன்றதாக இருக்கும். மூன்றாவது நிலையில், நிறுவனங்கள் பலவீனமாகவும் உண்மையான வளர்ச்சி திட்டமே இல்லாமலும் இருந்தால், மிகவும் மோசமான நிலை உருவாகும். அது சக்கரங்கள் இல்லாத மிதிவண்டி கட்டமைப்பைப் (bicycle frame) போல எந்த வளர்ச்சியும் நடைபெறாத நிலையாக இருக்கும். இதனால் ஒரு முக்கியமான விஷயத்தை காட்டுகிறது. ஒரு இடத்தின் நிறுவனங்களின் திறன் மற்றும் சூழலைப் பொருத்து வளர்ச்சி திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் வளர்ச்சிக்கான முயற்சிகள் நல்ல பலன் தரும்.


இந்த தொடர்பை விளக்க ஒரு நல்ல உதாரணம் ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்புக் கொள்கை ஆகும். இந்த கொள்கையின் முக்கிய நோக்கம் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்புக் கொள்கையின் முதன்மை நோக்கம், பொருளாதார, சமூக மற்றும் பிராந்திய ஒற்றுமையை மேம்படுத்துவதும், பிராந்தியங்களுக்கு இடையிலான வளர்ச்சி இடைவெளிகளைக் குறைப்பதுமாகும். இந்த கொள்கையின் செயல்திறன் குறித்து விவாதங்கள் இருந்தாலும், இதற்கு ஆதரவாக கூறப்படும் முக்கியமான கருத்து, இது பிராந்திய மற்றும் உள்ளூர் நிர்வாகங்களின் பங்கினை பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது என்பதாகும்.


ஐரோப்பிய ஒன்றியம் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டுள்ளது: பலவீனமான நிறுவனங்கள், பொருளாதார மற்றும் சமூக ஒற்றுமையை பாதிக்கின்றன. இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் வரைவு கொள்கை 2000 என்ற திட்டத்தை உருவாக்கியது. அதன்படி, ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 4% வரை மட்டுமே ஒற்றுமை நிதி முதலீடு செய்ய முடியும் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஏனெனில், சில நாடுகளின் முதலீட்டை பயன்படுத்தும் திறன் (absorption capacity) குறைவாக இருந்தது. ஆளுகைத் தரம் பற்றிய ஆய்வுகள் குறைவாகவே இருப்பினும், 1996 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 169 பிராந்தியங்களில் ஆண்ட்ரேஸ் ரோட்ரிக்ஸ்-போஸ் மற்றும் என்ரிக் கார்சிலாசோ (2015) ஆகியோர் மேற்கொண்ட ஒரு ஆய்வில், ஆளுகையின் தரம் (எடுத்துக்காட்டாக: சட்டத்தின் ஆட்சி, ஊழல் அல்லது அதிகாரத்துவ நடைமுறைகள்) எப்படி இருந்தாலும், 'ஒற்றுமை நிதி' (Cohesion Fund) முதலீடுகள் பிராந்தியப் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உதவியுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளது.


இருப்பினும், வருடத்திற்கு ஒரு நபருக்கு சுமார் €80 செலவினம் அதிகமாகும்போது அரசாங்கத்தின் தரம் மிக முக்கியமானதாகிறது என்பதையும் ஆய்வு காட்டுகிறது. எளிமையான பொருளாதார சொற்களில், ஆரம்ப ஒருங்கிணைப்பு நிதிகள் பிராந்தியங்களில் அடிப்படை ஆதாயங்களை வழங்க முடியும். ஆனால், ஒரு குறிப்பிட்ட நிதி வரம்பைத் தாண்டி நீடித்த நீண்டகால வளர்ச்சி நிறுவன தரத்தைப் பொறுத்து இருக்கும். ஏழை நிறுவனங்களின் காலநிலையின் கீழ் செயல்படும் சிறந்த மேம்பாட்டு உத்திகள் தவிர்க்க முடியாமல் ஏற்ற வருமானத்தை ஈட்டத் தவறிவிடும் என்பதை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. எனவே, வளர்ச்சி உத்திகளை வகுப்பது, உள்ளூர் நிலைமைகளைப் பற்றிய விரிவான புரிதலை உறுதி செய்கிறது, அதே நேரத்தில் ஏற்கனவே உள்ள இட அடிப்படையிலான நிறுவன நிலைமைகளை கண்காணிப்பதன் மூலம் பல்வேறு வகையான வளர்ச்சி தலையீடுகளின் நம்பகத்தன்மையையும் மதிப்பிடுகிறது.





குறையும் பொருளாதார வேகம்


இந்தியாவில் பலவீனமான நிறுவனங்களின் விளைவுகள் வெறும் கருத்து மட்டுமல்ல. அவை தினசரி வாழ்க்கையில் தாமதமான ஒப்பந்தங்கள், எந்த மாற்றமும் இல்லாத கடன் வழங்கல், நிறுத்தப்பட்ட அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் நீண்டகால வழக்குத் தீர்ப்புகள் போன்ற வடிவங்களில் தென்படுகின்றன. இவை அனைத்தும் பொருளாதார முன்னேற்றத்தை குறைக்கின்றன. இதனை விளக்க ஒரு முக்கியமான உதாரணம் நீதித்துறை மற்றும் சட்ட நிறுவனங்கள் ஆகும். இவை ஒப்பந்தங்களை அமல்படுத்துதல், சட்டஒழுங்கை பாதுகாத்தல் மற்றும் பொருளாதார பொறுப்பை உறுதி செய்தல் போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்திய நீதித்துறையின் அனைத்து நிலைகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகள் (case pendency) குறித்து அதிக கவனம் செலுத்தப்படுகிறது. National Judicial Data Grid தகவலின்படி, 2024 நிலவரப்படி இந்தியாவில் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 77% குற்றவியல் வழக்குகள் ஆகும். 


மாநில வாரியாக பார்க்கும்போது, நாட்டின் மொத்த நிலுவை வழக்குகளில் ஏறத்தாழ 31 சதவீதத்தை உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மட்டுமே உள்ளன. மேலும், வட மற்றும் தென் மாநிலங்களை ஒப்பிடுகையில், டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. 2024-ஆம் ஆண்டின் நிலவரப்படி, இந்த மாநிலங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 3 மில்லியனிலிருந்து 12 மில்லியன் வரை உள்ளது. இதற்கு மாறாக, தென் மாநிலங்களில் நிலுவை வழக்குகளின் சராசரி எண்ணிக்கை 7,00,000 முதல் 1.8 மில்லியன் வரை மட்டுமே உள்ளது.


நீதிபதிகள் காலியிடங்களும் (judge vacancies) வழக்கு நிலுவைகளும் இடையே வலுவான தொடர்பு இருப்பது தெரிகிறது. வட மாநிலங்களில் இந்த தொடர்பு 0.87 என்ற அளவுக்கு அதிகமாக உள்ளது. ஆனால், தென் மாநிலங்களில் அது 0.54 அளவுக்கு குறைவாக உள்ளது. மக்கள் தொகையை கருத்தில் கொண்டால், நீதிபதிகள் காலியிடங்கள் வட மாநிலங்களில் வழக்குகள் அதிகமாக நிலுவையில்  இருப்பதால் நிலைமை மோசமாக்குகிறது. இது நிறுவனங்களின் திறன் குறைவாக இருக்கும் இடங்களில் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதை காட்டுகிறது. நீதிமன்ற வழக்கு நிலுவைகளுக்கும் பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே நேரடி காரணத் தொடர்பை நிரூபிக்க விரிவான ஆய்வு தேவைப்பட்டாலும், அதன் விளைவுகளை புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து வழக்குகள் தாமதமாகும்போது பரிவர்த்தனைச் செலவுகள் அதிகரிக்கின்றன, ஒப்பந்தங்களை அமல்படுத்துவது பலவீனமாகிறது, வங்கிக் கடன் வழங்கல் குறைகிறது மற்றும் வணிகத் தகராறுகளைத் தீர்ப்பது மெதுவாகிறது. இதன் விளைவாக, பொதுமக்கள் முதலீடு சந்தை சார்ந்த வளர்ச்சி திட்டங்களும் செயல்பட வேண்டிய முக்கிய அமைப்புகளே பாதிக்கப்படுகின்றன. நிறுவனங்களின் திறனை வலுப்படுத்துவதில் முதலீடு செய்வது, குறிப்பாக நிர்வாக மற்றும் சட்ட நிறுவனங்களில், வெறும் சமூகச் செலவு அல்ல. அது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் முக்கியமான முதலீடு என்பது இதன் மூலம் தெளிவாக  தெரிகிறது. 


முக்கிய பொருளாதார கோட்பாடுகள், குறிப்பாக ராபர்ட் சோலோ 1956-ஆம் ஆண்டு முன்வைத்த நியோகிளாசிக்கல் வளர்ச்சி மாதிரி (neoclassical growth model), நிறுவனங்களை (உதாரணமாக சொத்து உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, மற்றும் சார்பில்லாத நீதித்துறை) மாறாத மற்றும் வெளிப்புற காரணிகளாக கருதியது. அவை மாற்றமில்லாதவை என்றும் பொருளாதார வளர்ச்சியில் நேரடி மாறியாக சேர்க்கப்படாதவை என்றும் கருதப்பட்டன. கடந்த இருபது ஆண்டுகளில் New Institutional Economics என்ற அணுகுமுறை வளர்ச்சியடைந்ததால், பொருளாதார வளர்ச்சியில் நிறுவனங்களின் முக்கியத்துவம் அதிகக் கவனம் பெற்றது. குறிப்பாக 1990-களிலிருந்து தொடங்கி 2000-களில் Daron Acemoglu, Simon Johnson, மற்றும் James A. Robinson போன்ற அறிஞர்கள் இந்த கருத்தை பரப்பினர். இவர்களின் குடியேற்ற வரலாற்றுப் பார்வையை (colonial perspective) விமர்சிப்பது தனியான விவாதமாக இருந்தாலும், ஒரு முக்கியமான உண்மையை வெளிக்காட்டியது. இன்றைய முன்னணி பொருளாதார நிபுணர்கள் நிறுவனங்களை இனி புறக்கணிக்கப்படும் காரணிகளாக அல்லாமல், பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய மாறிகளாக கருதுகின்றனர். இந்த பார்வையில், நம்பகமான மத்திய வங்கி, பொறுப்புள்ள நிர்வாகமும் சட்டமன்றமும் மற்றும் சார்பில்லாத திறமையான நீதித்துறையும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை தூண்களாகக் கருதப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகையைவிட மூன்று மடங்கு அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட இந்திய உட்பட, பல்வேறு இடங்களில் அனுபவபூர்வமான ஆய்வுகள் அதிகரித்தாலும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான விரிவான ஆய்வுகள் இன்னும் குறைவாக உள்ளன. இதற்கு முக்கிய காரணம் தேவையான தரவுகள் முழுமையான இல்லாதது ஆகும். இதன் விளைவாக, மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள வளர்ச்சி உத்திகளுடன் நிறுவனங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதற்கான வலுவான சான்றுகள், பிராந்திய கொள்கை வடிவமைப்பை ஆராய்ச்சிக்கு ஒரு திறந்த மற்றும் முக்கியப் பகுதியாக ஆக்குகின்றன.


சமநிலையைக் கண்டறிதல்


இதிலிருந்து கிடைக்கும் பாடம் வெறும் பிராந்திய முதலீட்டு திட்டங்களுக்கு மட்டுமல்ல. இதனுடன் சேர்ந்து நிறுவனங்களின் திறன், ஆராய்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு ஆகும். நிறுவனங்களை வலுப்படுத்தாமல் உருவாக்கப்படும் வளர்ச்சித் திட்டங்கள் தோல்விக்கான திட்டங்களாக மாறும் அபாயம் உள்ளது. மிதிவண்டி உதாரணம் போல, வளர்ச்சி திட்டம் (முன்சக்கரம்) நல்லதாக இருந்தாலும், நிறுவனங்கள் (பின்சக்கரம்) பலவீனமாக இருந்தால் முன்னேற்றம் ஏற்படாது. சமநிலை இல்லையெனில் மிதிவண்டி தள்ளாடும் அல்லது நின்றுவிடும். இந்த நிலையில், இந்தியாவின் சந்தை சார்ந்த வளர்ச்சி சந்தையின் “இல்லாத ஒன்றை” அதிகமாக நம்பியுள்ளது. ஆனால், அதை வழிநடத்தும் நிறுவனங்களின் பங்கு போதுமான அளவில் கவனிக்கப்படவில்லை. வலுவான மற்றும் தெளிவாக செயல்படும் நிறுவனங்கள் சந்தைகளுக்கு தடையாக அல்ல; மாறாக, அவை சந்தைகள் சரியாக செயல்படுவதற்கான அடிப்படை நிபந்தனை ஆகும். பின்சக்கரம் வலுவாக இல்லையெனில் முன்னேற்றம் நிலையாக இருக்காது. இது ஒரு முக்கியமான உண்மையை நினைவூட்டுகிறது: ஆடம் ஸ்மித் கூறிய சந்தையின் “இல்லாத ஒன்று” (invisible hand) செயல்படவும், வளர்ச்சி என்ற மிதிவண்டி நேராகவும் தொடர்ந்து நகரவும் வலுவான நிறுவனங்களின் ஆதரவு  மிகவும் முக்கியம்.


அரிஜித் தாஷ் மற்றும் சவுரவ் ராய் ஆகியோர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட அறிஞர்கள்.


Original Link: Development strategies work best with strong institutions.


Share:

பராமரிக்கும் பொறுப்பு : தடுப்பூசி பாதிப்புக்கான இழப்பீட்டுத் திட்டங்கள்

தடுப்பூசி போடுவதற்கு அரசு வலுவாக ஊக்குவிக்கும்போது அதற்கான பொறுப்பைத் தவிர்க்கக்கூடாது.


இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசி பிரச்சாரத்திலிருந்து எழும் நோய்த்தடுப்பைத் தொடர்ந்து ஏற்படும் கடுமையான பாதகமான நிகழ்வுகளுக்கு (adverse events following immunisation (AEFI)) ஒரு தவறு இல்லாத இழப்பீட்டுத் திட்டத்தை வடிவமைக்க சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்திற்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு நடத்தும் பொது சுகாதாரத் திட்டங்களில் தவறு இல்லாத பொறுப்பு முறையிலிருந்து தவறு இல்லாத நிலைக்கு மாறுவதைக் குறிக்கிறது. கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றபிறகு தங்கள் உறவினர்கள் இறந்துவிட்டார்கள் அல்லது கடுமையான காயம் அடைந்தார்கள் என்று கூறி குடும்பங்கள் பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்த ரிட் மனுக்களிலிருந்து இந்த வழக்கு எழுந்துள்ளது. ரச்சனா கங்கு, 2021-ல் 18 மற்றும் 20 வயதுடைய இரண்டு பெண்களின் மரணங்களால் மிகவும் வருத்தமடைந்தார். இந்த மரணங்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியின் அரிதான சிக்கலான ‘தடுப்பூசியால்-தூண்டப்பட்ட நோயெதிர்ப்பு த்ரோம்போடிக் த்ரோம்போசைட்டோபீனியா’ (VITT) என்ற நிலையால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மாநில நடத்தும் திட்டத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கென இந்தியாவில் எந்த சிறப்பு வழிமுறையும் இல்லை என்று வாதிட்டனர்.


 தடுப்பூசி தன்னார்வமானது, கடுமையான நோய்த்தடுப்பைத் தொடர்ந்து ஏற்படும் கடுமையான பாதகமான நிகழ்வு (AEFI) விகிதங்கள் மிகக் குறைவு, பாதிக்கப்பட்ட குடிமக்கள் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மீது சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்று கூறியதால், பல ஆண்டுகளாக அரசாங்கம் இழப்பீட்டுக் கொள்கையை நிறுவுவதை எதிர்த்தது. இந்த நிலைப்பாட்டை சாதாரண மக்களுக்கு நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று நீதிமன்றம் நிராகரித்துள்ளது. புதிய தீர்ப்பு ஜேக்கப் புலியேல் (2022)-ஐ அடிப்படையாகக் கொண்டது. அந்த வழக்கில், கோவிட்-19 தடுப்பூசிகளின் அவசர ஒப்புதலுக்கான சட்டப்பூர்வ சவால்களை நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால் நோய்த்தடுப்பைத் தொடர்ந்து ஏற்படும் கடுமையான பாதகமான நிகழ்வு (AEFI) தரவை பொதுவில் கிடைக்கச் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.


2024-ம் ஆண்டில், விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவ இதழ்களில் கவலைகளை எழுப்பியிருந்தனர். இதற்குப் பிறகு, கோவிஷீல்ட் அரிதான சந்தர்ப்பங்களில் தடுப்பூசியின் அரியவகை சிக்கலான ‘தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோயெதிர்ப்பு த்ரோம்போடிக் த்ரோம்போசைட்டோபீனியா’வை (VITT) ஏற்படுத்தக்கூடும் என்று அஸ்ட்ராஜெனெகா இங்கிலாந்து நீதிமன்ற ஆவணத்தில் ஒப்புக்கொண்டது. பெரும்பாலான இந்தியர்கள் கோவிஷீல்டுடன் தடுப்பூசி போடப்பட்டதால், தடுப்பூசிக்கும் சில இறப்புகளுக்கும் இடையிலான தொடர்புகள் நிரூபிக்கப்படாதவை அல்லது தற்செயலானவை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இந்த ஒப்புதல் மேலும் பலவீனப்படுத்தியது. இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கங்களில் ஒன்றை மேற்கொண்டது. இருப்பினும், தடுப்பூசி தொடர்பான காயங்களுக்கு மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஒரு தனித்துவமான தேசிய திட்டம் இதற்கு முன்பு இருந்ததில்லை. பல நாடுகளில் இதுபோன்ற திட்டங்கள் உள்ளன. இவற்றில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை அடங்கும். இந்த நாடுகளில், உரிமைகோரல்களை தாக்கல் செய்பவர்கள் அலட்சியத்தை நிரூபிக்க வேண்டியதில்லை. காயத்திற்கும் தடுப்பூசிக்கும் இடையே ஒரு நியாயமான தொடர்பை அவர்கள் காட்ட வேண்டும். உலகளாவிய கோவாக்ஸ் (COVAX) வசதி கூட 92 குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஒரு இழப்பீட்டு முறையை உள்ளடக்கியது. தொற்றுநோய் காலத்தில், தடுப்பூசி போட்ட 219 கோடி டோஸ்களில் 1,100-க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒரு நலன்சார்ந்த அரசுக்கு, இவை தனிப்பட்ட மனித உயிர்களைக் குறிக்கின்றன என்றும், முறையான கொள்கை இல்லாதது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தெளிவான சட்ட ஆதரவு இல்லாமல் போய்விட்டது என்று அது கூறியது. தடுப்பூசிகள் குறிப்பிட்ட காயங்களையோ அல்லது இறப்புகளையோ ஏற்படுத்தியதா என்பதை தீர்ப்பதன் அடிப்படையில் இந்த உத்தரவு இல்லை என்பதும், பொது சுகாதாரத்தில் உள்ள அனைத்து தவறு அடிப்படையிலான சட்டப் பொறுப்புகளையும் இது மாற்றுவதில்லை என்பதும் தெளிவாகிறது. இருப்பினும், HPV-க்கான புதிய தடுப்பூசி உட்பட, எதிர்கால தடுப்பூசி இயக்கங்களுக்கு இது ஒரு முக்கியமான முன்னுதாரணத்தை அமைக்கிறது. பொது நலனுக்காக மருத்துவ தலையீடுகளை அங்கீகரிக்கும்போது மாநிலத்தின் பராமரிக்கும் பொறுப்பை உறுதிப்படுத்துகிறது.


Original Link: Duty of care: On vaccine injury compensation programmes


Share: