இந்தியா பரந்தளவிலான அரியவகை புவி இருப்புக்களைக் கொண்ட நாடுகளுடன் உறவுகளை அதிகரிக்க வேண்டும் மற்றும் உள்நாட்டுத் திறன்களை மேம்படுத்த வேண்டும்.
இந்தியாவின் மின்சார வாகனத் திட்டங்களில் ஒரு மறைக்கப்பட்ட சிக்கல் உள்ளது. இது மின்கலத்தின் உள்ளே (inside the battery) ஆழமாக அமர்ந்திருக்கிறது. லித்தியம் (Lithium), நியோடைமியம் (neodymium), டிஸ்ப்ரோசியம் (dysprosium), பிரசோடைமியம் (praseodymium) ஆகியவை பூமியின் அரிதான தனிமங்கள் ஆகும். இந்த அரியவகை புவிப் பொருட்களின் ஆய்வக செயலாக்கம் நிரந்தர காந்தங்களை அளிக்கிறது. அவை பல் (dental), விண்வெளி (aerospace), பாதுகாப்பு (defence), மின்னணுவியல் (electronics), மின்கலன்கள் (batteries) மற்றும் வாகனத் துறைகளில் (automotive sectors) பரவியிருக்கும் பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. தற்போது, இந்தியா தனது நிரந்தர காந்தங்களை பெரும்பாலும் சீனா எனும் ஒரே ஒரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது.
2024-ம் ஆண்டின் பிற்பகுதியில், நிரந்தர காந்த ஏற்றுமதி மீதான தனது கட்டுப்பாட்டை சீனா கடுமையாக்கியது. இது தேசிய பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கவலைகள் போன்ற காரணங்களை வழங்கியது. உலகின் அரியவகை மண் தாதுக்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை சீனா உற்பத்தி செய்து சுத்திகரிக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவின் 240 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆட்டோமொபைல் தொழில் (auto industry) பாதிக்கப்படக்கூடியதாக மாறியது.
இந்திய கார் தயாரிப்பாளர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் காந்தங்களை இறக்குமதி செய்தனர். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், இறக்குமதிகள் கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் மற்றும் 87 சதவீதம் அதிகரித்தன. ஆனால் இந்த கையிருப்பு விரைவில் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா போக்குவரத்தை மின்மயமாக்கவும், சுத்தமான தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறவும் விரும்பினால், முதலில் மற்ற நாடுகள் இந்த சவாலை எவ்வாறு நிர்வகித்தன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அமெரிக்காவின் உத்தி பலித்ததா?
ஆரம்பத்தில், சீனா ஏற்றுமதியை நிறுத்தியபோது, அமெரிக்கா மூன்றாம் நாடு வழியாக இறக்குமதி செய்வதன் மூலம் முன்னேறியது. அமெரிக்க நிறுவனங்கள் மூன்றாவது நாடுகள், பெரும்பாலும் தாய்லாந்து மற்றும் மெக்சிகோ வழியாக விநியோகச் சங்கிலிகளை அமைதியாக திருப்பிவிட்டன.
டிசம்பர் 2024 மற்றும் ஏப்ரல் 2025-க்கு இடையில், அமெரிக்கா சுமார் 3,834 டன் ஆண்டிமனி ஆக்சைடை (antimony oxide) இறக்குமதி செய்தது. இந்த பொருள் ஒரு வகை அரியவகை மண்ணிலிருந்து பெறுகிறது. இறக்குமதிகள் இரண்டு நாடுகளிலிருந்து வந்தன. இந்த அளவு முந்தைய மூன்று ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட மொத்தத்தைவிட அதிகம்.
எந்த ஏற்றுமதியும் சீனாவிலிருந்து வந்ததாக பட்டியலிடப்படவில்லை. ஏனென்றால், அதிகாரப்பூர்வமாக அவை எந்த அறிக்கையிலும் குறிப்பிடவில்லை. ஆனால் உண்மையில், பொருட்கள் முதலில் சீனாவிலிருந்து இடைத்தரகர்களுக்கு அனுப்பப்பட்டன. அந்த இடங்களில், அவை மறுபெயரிடப்பட்டு மீண்டும் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டன. பெரும்பாலும், அவை துத்தநாகம், இரும்பு அல்லது கலைப் பொருட்கள் போன்ற பிற தயாரிப்புகளாக மாற்றப்படுகின்றன.
அமெரிக்க விதிகள், ஏற்றுமதிகளுக்கு முறையான உரிமங்கள் இருந்தால், அத்தகைய மறு-வழிமாற்றத்தை அனுமதிக்கின்றன. சீனா அல்லது பெய்ஜிங் இந்த செயல்முறையை எளிதில் நிறுத்த முடியாது. ராய்ட்டர்ஸ் இந்த ஏற்றுமதிகளில் 3,366 டன்களுக்கு மேல் யுனிபெட் இண்டஸ்ட்ரீஸ் (Unipet Industries) என்ற தாய் நிறுவனத்திற்குக் கண்காணித்தது. இந்த நிறுவனம் யங்சன் கெமிக்கல்ஸ் (Youngsun Chemicals) என்ற சீன நிறுவனத்தின் ஒரு பகுதியாகும். கப்பல் ஆவணங்களில் பொருட்களின் உண்மையான தோற்றம் குறிப்பிடப்படவில்லை. இறுதியாக வாங்குபவர்கள் அமெரிக்காவில் இருந்தனர், மேலும் அவர்கள் சீன சுங்கச்சாவடிகளை நேரடியாகக் கையாள வேண்டியதில்லை.
இருப்பினும், மூன்றாம் நாடுகளின் வழியே திருப்பியனுப்புவதற்கான இந்த உத்தி நீண்டகாலம் செயல்படவில்லை. சீன அரசாங்கம் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. அமெரிக்காவிற்கு பரிமாற்ற வழித்தடங்கள் (transshipment channels) மூலம் பொருட்களை வாங்குவது கடினமாக்குகிறது.
மே 2025 முதல், சீன வர்த்தக அமைச்சகம் (Chinese Ministry of Commerce (MOFCOM)) இந்த இராஜதந்திர ரீதியின் நாடுகளின் பொருட்களை கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக மாற்றுவதற்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை தொடங்கியது. அமெரிக்காவிற்கு பொருட்களை திருப்பி அனுப்புவதில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிரான சுங்கச் சோதனைகள், விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர்.
இறுதியில், ராய்ட்டர்ஸ் (Reuters) மற்றும் CNN அறிக்கைகளின்படி, அமெரிக்கா இறுதியில் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. இது, ஜூன் தொடக்கத்தில் டிரம்புக்கும் ஜி (Xi)-க்கும் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொலைபேசி அழைப்புக்கு வழிவகுத்தது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவுக்கு அரியவகைப் பொருள் ஏற்றுமதிக்கான தடையை நீக்க சீனா ஒப்புக்கொண்டது. பதிலுக்கு, ஜி வாஷிங்டனை "சீனாவிற்கு எதிராக எடுக்கப்பட்ட எதிர்மறையான நடவடிக்கைகளை அகற்ற வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
"சீனாவுடனான எங்கள் ஒப்பந்தம் முடிந்தது, அதிபர் ஜி என்னுடன் ஏற்பட்ட இறுதி ஒப்புதலுக்கு உட்பட்டது" என்று டிரம்ப் கூறியதன் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, EDA கருவிகள் எனப்படும் சில்லு-வடிவைமைப்பு மென்பொருளுக்கான (chip-design software) ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியது. இது சீமென்ஸ், சினோப்சிஸ் மற்றும் கேடன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கான ஈத்தேன் மீதான கட்டுப்பாடுகளையும் நீக்கியது. இது சீனாவிற்கு ஒரு பெரிய நன்மையாக இருந்தது. பைடன் நிர்வாகத்தின்கீழ் காணப்பட்ட அளவிற்கு கட்டணங்கள் குறைக்கப்பட்டன. இருப்பினும், அமெரிக்காவிற்கு அதிகப்படியான ஃபெண்டானைலை (fentanyl) ஏற்றுமதி செய்வதாகக் கண்டறியப்பட்ட நிறுவனங்கள் கூடுதலாக 20 சதவீத வரியை எதிர்கொண்டன.
சீன உத்தி
பாதுகாப்புவாதத்தின் கொள்கையை சீனா நன்கு அறிந்திருக்கிறது. 2008 உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் அதிகரித்துவரும் அமெரிக்க கட்டணங்களுக்குப் பிறகு, குறிப்பாக டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், பெய்ஜிங் சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து உற்பத்தியை நகர்த்தத் தொடங்கியது. ஆனால் இது ஒரு பின்வாங்கல் அல்ல. மாறாக, அது ஒரு மாற்று வழித்தடமாகும்.
முதலில், சீன உற்பத்தியாளர்கள் தங்கள் செயல்பாடுகளை குறைந்த விலைப் பகுதிகளுக்கு மாற்றினர். இதில் கிரேட்டர் மீகாங் துணைப் பகுதி (Greater Mekong subregion), மத்திய அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் அடங்கும். இந்த நடவடிக்கை அவர்களின் பொருட்களை உலக சந்தையில் போட்டித்தன்மையுடன் வைத்திருக்க உதவியது. வர்த்தக மோதல்களைத் தவிர்க்கவும் இது அவர்களுக்கு உதவியது.
இரண்டாவதாக, சீன நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வதன் மூலம் வரிகளிலிருந்து நேரடி தாக்கத்தைத் தவிர்த்தன. ஏப்ரல் 2024-ல், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டாய், சீனா வர்த்தகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக மெக்சிகோ வழியாக எஃகு பொருட்களை அனுப்புவதாகக் குற்றம் சாட்டினார்.
2023-ம் ஆண்டில், மெக்சிகோவிலிருந்து அமெரிக்க இறக்குமதி $475 பில்லியனாக உயர்ந்தது. இது முந்தைய ஆண்டைவிட $20 பில்லியன் அதிகமாகும். அதே நேரத்தில், சீனாவிலிருந்து இறக்குமதி $10 பில்லியன் குறைந்து $427 பில்லியனை எட்டியது.
2020-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டு கால சராசரியுடன் ஒப்பிடும்போது, 2023-ம் ஆண்டில் மெக்சிகோவில் சீன அன்னிய நேரடி முதலீடு மூன்று மடங்கு அதிகரித்து $3.7 பில்லியனாக இருந்தது. இது, EV நிறுவனங்களான BYD மற்றும் Chery உட்பட, 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின. 2024-ல் சீனாவில் இருந்து மெக்சிகோவிற்கு கொள்கலன் போக்குவரத்து (Container traffic) 22 சதவீதம் அதிகரித்துள்ளது. விளையாட்டில் தொடர்ந்து இருக்க சீனா வெறுமனே வரைபடத்தை மீண்டும் வரைந்துள்ளது.
மூன்றாவதாக, சீனா தனது சொந்த எரிசக்தி மற்றும் மூலப்பொருள் தேவைகள் மீதான அழுத்தத்தைக் குறைக்க ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் முதலீடுகளைப் பயன்படுத்தியது.
இந்தியாவின் முறை
எனவே, இந்தியா என்ன செய்ய வேண்டும்?
நிலை ஒன்று: பாதுகாப்பான மாற்றுகளை இந்தியா கண்டுபிடிக்க வேண்டும். அரியமண் தனிமங்களுக்கு நடுநிலையான வழித்தடங்களாகச் செயல்படக்கூடிய நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த நாடுகள் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் நிலையான உறவுகளைக் கொண்டிருக்க வேண்டும். இருப்பினும், இந்த தீர்வு தற்காலிகமானது.
நிலை இரண்டு: வெளிநாடுகளில் முதலீடு செய்யுங்கள். ஆப்பிரிக்காவில் லித்தியம், கோபால்ட் மற்றும் தாமிரத்தின் பெரிய இருப்புக்கள் உள்ளன, அவை இன்னும் வளர்ச்சியடையவில்லை. இந்தியா ஏற்கனவே சாம்பியா, காங்கோ மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சொத்துக்களைப் பார்த்து வருகிறது. இந்த முயற்சி பெரிதாக வளர்ந்து வேகமாக நகர வேண்டும். உலகில் அரியவகை பூமி கூறுகளை உற்பத்தி செய்யும் மூன்றாவது பெரிய நாடு ஆஸ்திரேலியா. இது ஒரு இராஜதந்திர ரீதியில் நட்பு நாடாக கருதப்பட வேண்டும்.
நிலை மூன்று: சுரங்கத்தில் புதிய முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் உள்நாட்டில் வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரியவகை பூமி செயலாக்கத்திற்கான நிதியை ஆதரிக்கவும். மாற்றுகளை உருவாக்க ஒரு ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவும். இந்தியாவில் உலகின் மூன்றாவது பெரிய அரியவகை பூமியில் இருப்பு உள்ளது, இதன் மொத்தம் 6.9 மில்லியன் டன்கள் ஆகும்.
இருப்பினும், இந்தப் பொருட்களை அகழ்வாராய்ச்சி செய்வது விலை உயர்ந்தது. தனியார் நிறுவனங்கள் இதைத் தாங்களாகவே செய்வது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை. அரசாங்கத்தின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்கள் EV அசெம்பிளி லைன்களை ஆதரிப்பதைவிட அதிகமாகச் செய்ய வேண்டும். அவை ஆரம்பத்திலிருந்தே அரியவகை மண் விநியோகச் சங்கிலிகளையும் ஆதரிக்க வேண்டும்.
நியோடைமியம் போன்ற அரியவகை மண் பொருட்களுக்கு நெருக்கமான மாற்றீடுகளைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நியோடைமியம் இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகிறது. சரியான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினால், அதை சிறந்த அரியவகை மண் காந்தப் பொருட்களாக மாற்ற முடியும். அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடனும் இந்தியா ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். இந்த ஒத்துழைப்பு மூலப்பொருட்களுக்கும் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி ஆதரவிற்கும் இருக்க வேண்டும்.
நிலை நான்கு: சீன அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரவுகளுக்கு இந்தியா மிகவும் திறந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். இருப்பினும், முதலீட்டிற்கான நிபந்தனையாக தொழில்நுட்ப பரிமாற்றத்தைக் கோரும் ஒரு பிணைப்பு விதி (binding rule) இதில் அடங்கும். 2024-25-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இந்த யோசனையை வலுவாக ஆதரிக்கிறது. இந்தியா உலகளாவிய மின்சார வாகன (EV) மாற்றத்தை வழிநடத்த விரும்பினால், அரியவகை பூமி பொருட்கள் சந்தையில் அது ஒதுங்கி இருக்க முடியாது.
எழுத்தாளர் ஹைதராபாத்தில் உள்ள மஹிந்திரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்.