அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் கோக்போரோக் மற்றும் போஜ்புரி மொழிகளைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி… -ரோஷ்னி யாதவ்

 அரசியலமைப்பின் 344(1) மற்றும் 351 பிரிவுகள் 8-வது அட்டவணை தொடர்பான விதிகளைக் கொண்டுள்ளன.

 

தற்போதைய செய்தி:


கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோக்போரோக் சாகித்ய பரிஷத் சங்கம், திரிபுரா முதல்வர் டாக்டர் மாணிக் சஹாவுக்கு ஒரு கடிதம் எழுதி, இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் கோக்போரோக் மொழியைச் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. பழங்குடி இலக்கிய அமைப்பு, கோக்போரோக் (Kokborok) மொழிக்கான எழுத்து வடிவம் பெங்காலி அல்லது தேவநாகரியாக இருக்கலாம் என்று கூறியது.


குறிப்பாக, சர்வதேச தாய்மொழி தினத்தன்று (பிப்ரவரி 21), டாக்டர் சந்தோஷ் படேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தரில் கூடி, இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் போஜ்புரியைச் கோரிக்கை விடுத்தனர். போஜ்புரி (Bhojpuri) பல நாடுகளில் கோடிக்கணக்கான மக்களால் பேசப்பட்டு வருகிறது. போஜ்புரி மொழி, மொரீஷியஸ் மற்றும் நேபாளத்தில் அரசியலமைப்பு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், இது இன்னும் இந்தியாவில் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெறவில்லை. பல குழுக்கள் தங்கள் மொழிகளுக்கு அங்கீகாரம் கோருவதால், 8-வது அட்டவணை என்ன, அது ஏன் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் இந்திய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 344(1) மற்றும் 351 பிரிவுகள் 8-வது அட்டவணை தொடர்பான விதிகளைக் கொண்டுள்ளன.


2. அரசியலமைப்பின் பிரிவு 344 (1) அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட 5 ஆண்டுகள் பிறகும் மற்றும் அதன்பிறகு அத்தகைய தொடக்கத்திலிருந்து 10 ஆண்டுகள் முடிந்ததும் குடியரசுத்தலைவரால் ஒரு ஆணையத்தை அமைப்பதற்கு வழிவகை செய்கிறது. இந்த ஆணையத்தில் ஒரு தலைவர் மற்றும் 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்ட வெவ்வேறு மொழிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்த ஆணையம் ஒன்றிய அரசின் அலுவலக நோக்கங்களுக்காக இந்தியின் படிப்படியான பயன்பாட்டிற்கு குடியரசுத்தலைவருக்கு       பரிந்துரைகளை வழங்கும்.


3. அரசியலமைப்பின் பிரிவு 351, இந்தி மொழியின் பரவலை ஊக்குவிப்பதும், அதை வளர்ப்பதும் ஒன்றிய அரசின் கடமையாகும் என்று கூறுகிறது. இந்தியாவின் வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்தியை வளர்ப்பதே இதன் நோக்கமாகும். இதைச் செய்ய, இந்தி என்பது இந்துஸ்தானி மற்றும் 8-வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள பிற இந்திய மொழிகளிலிருந்து சொற்கள், பாணிகள் மற்றும் வெளிப்பாடுகளை உள்ளடக்கியிருக்க வேண்டும். மேலும், தேவையான அல்லது விரும்பத்தக்க இடங்களில், அதன் சொற்களஞ்சியத்திற்காக, முதன்மையாக, சமஸ்கிருதத்திலும், இரண்டாவதாக பிற மொழிகளிலும் வரையப்படுவதன் மூலம் மூலம் இதைச்செய்ய வேண்டும் .


4. மே 2025 நிலவரப்படி, அரசியலமைப்பின் 8-வது அட்டவணையின் கீழ் 22 மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், ஆரம்பத்தில், 8-வது அட்டவணையில் 14 மொழிகள் இடம்பெற்றிருந்தன அவை அசாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, மலையாளம், மராத்தி, ஒரியா (2011இல் ஒடியா என மறுபெயரிடப்பட்டது), பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மற்றும் உருது போன்ற மொழிகள் ஆகும்.


5. 1927-ஆம் ஆண்டில் துணைக்கண்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட மொழியியல் வகைகளை பட்டியலிட்ட ஜார்ஜ் ஏ கிரியர்சன் தனது இந்திய மொழியியல் ஆய்வில் அடையாளம் கண்ட நூற்றுக்கணக்கானவற்றிலிருந்து இந்த 14 மொழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.


6. காலப்போக்கில், இந்த அட்டவணை அங்கீகரிக்கப்பட்ட 14 மொழிகளைத் தாண்டி போடோ, டோக்ரி, கொங்கனி, மைதிலி, மணிப்பூரி, நேபாளி, சந்தாலி மற்றும் சிந்தி ஆகியவற்றை உள்ளடக்கி விரிவடைந்து 22 மொழிகளாக அதிகரித்தது.


7. 1967-ஆம் ஆண்டின் 21-வது திருத்தச் சட்டத்தின் மூலம் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.  1992-ஆம் ஆண்டின் 71-வது திருத்தச் சட்டத்தின் மூலம் கொங்கனி, மணிப்பூரி மற்றும் நேபாளி ஆகியவை சேர்க்கப்பட்டன. போடோ, டோக்ரி, மைதிலி மற்றும் சாந்தாலி ஆகியவை 2003-ஆம் ஆண்டின் 92-வது அரசியலமைப்பின் திருத்தச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டன.

    

8. சுவாரஸ்யமாக, ஆங்கிலம் - அதன் பரவலான பயன்பாடு மற்றும் அதிகாரப்பூர்வ துறைகளில் பங்கு வகித்த போதிலும் 8-வது அட்டவணையின் ஒரு பகுதியாக ஒருபோதும் சேர்க்கப்படவில்லை.


8-வது அட்டவணையில் மொழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல்கள் என்ன?


1. 8-வது அட்டவணையில் மொழிகளைச் சேர்ப்பதற்கான எந்தவொரு முறையான அளவுகோலையும் அரசியலமைப்புச் சபை வகுக்கவில்லை. இருப்பினும், அவ்வப்போது, ​​பல்வேறு குழுக்களால் சேர்ப்பதற்கான தெளிவான அளவுகோல்களை வரையறுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


2. 1996-ஆம் ஆண்டு அசோக் பஹ்வா குழு (Ashok Pahwa Committee) ஒரு மொழியை எதன் அடிப்படையில் 8-வது அட்டவணையில் சேர்க்கலாம் என்று முன்மொழிந்தது.


(i) அது குறைந்தபட்சம் ஒரு மாநிலத்திலாவது அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தால் சேர்க்கலாம் என்றும்;


(ii) ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் அதைப் பேசினால் சேர்க்கலாம் என்றும்;


(iii) அது ஏற்கனவே பட்டியலிடப்பட்ட ஒன்றின் பேச்சுவழக்கு அல்லது வழித்தோன்றல் அல்ல, மாறாக ஒரு தன்னிச்சையான மொழியாக இருந்தால் சேர்க்கலாம் என்றும்;


(iv) அது சாகித்ய அகாடமியின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தால் சேர்க்கலாம் என்றும்;


(v) அது நன்கு வரையறுக்கப்பட்ட மற்றும் வளர்ந்த இலக்கிய மரபைக் கொண்டிருந்தால் சேர்க்கலாம் என்று முன்மொழிந்தது.


3. பின்னர், 2003-ஆம் ஆண்டு சீதகாந்த் மொஹபத்ரா குழு (Sitakant Mohapatra Committee) குறிப்பிட்ட அளவுகோல்களைச் சேர்த்தது. அதன் படி, கடந்த 30-ஆண்டுகளின் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில், ஒரு மொழி கணிசமான மக்கள்தொகையால் பேசப்படுவதற்கு தகுதி பெற குறைந்தபட்சம் 5 கோடி பேச்சாளர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்தது. அந்த மொழி குறைந்தபட்சம் இரண்டாம் நிலை வரை, முன்னுரிமை பல்கலைக்கழக நிலை வரை பயிற்றுவிக்கும் மொழியாகவும் இந்த மொழி செயல்பட வேண்டும். கூடுதலாக, அதன் எழுத்துமுறை- பூர்வீகமாக இருந்தாலும் சரி, ஆதிக்கம் செலுத்தும் பிராந்திய மொழியிலிருந்து எடுக்கப்பட்டதாக இருந்தாலும் சரி அல்லது தேவநாகரியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் சரி - குறைந்தபட்சம் 50 ஆண்டுகளாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டது.


கோக்போரோக் (Kokborok)

திரிபுராவில் உள்ள பழங்குடி சமூகத்தினரால் பேசப்படும் பழமையான மற்றும் மிகவும் பொதுவாகப் பேசப்படும் மொழிகளில் கோக்போரோக் ஒன்றாகும்.

4. குறிப்பிடத்தக்க வகையில், இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், 8-வது அட்டவணையில் சேர்க்க மொழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு எந்த அதிகாரப்பூர்வ விதியும் இல்லை. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணிகளால் மொழிகளும் பேச்சு வழக்குகளும் மாறிக்கொண்டே இருப்பதால், இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் எதை ஒரு மொழியாகக் கணக்கிட வேண்டும் அல்லது சேர்க்க வேண்டும் என்பதற்கான தெளிவான அளவுகோல்களை அமைப்பது கடினம் என்று உள்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை விளக்குகிறது.

8-வது அட்டவணையில் மொழியைச் சேர்ப்பதன் நன்மைகள்

8-வது அட்டவணையில் சேர்க்கப்படுவது குறியீட்டு மற்றும் நடைமுறை நன்மைகளைத் தருகிறது, அவை:

(i) ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அந்த மொழியைப் பேசினால், மொழிபெயர்ப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன.

(ii) ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணைய (Union Public Service Commission (UPSC)) தேர்வுகளில் இந்திய மொழித் தாளுக்கு பதிலாக அந்த மொழியைத் தேர்வு செய்யலாம்.

(iii) மொழி பொதுப் பட்டியலின் கீழ் வருவதால், அந்த மொழி ஒன்றிய அரசிடமிருந்து மேம்பாட்டு நிதியைப் பெறலாம்.

செம்மொழிகள் (Classical languages)

1. கடந்த ஆண்டு, மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளுக்கு “செம்மொழி” அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனால் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்ட செம்மொழிகளின் மொத்த எண்ணிக்கையை 11 ஆக உயர்ந்தது. முன்னதாக, 6 மொழிகள் மட்டுமே ‘செம்மொழி' அங்கீகாரத்தைப் பெற்றிருந்தன: தமிழ் (2004), சமஸ்கிருதம் (2005), கன்னடம் (2008), தெலுங்கு (2008), மலையாளம் (2013), மற்றும் ஒடியா (2014) போன்ற மொழிகளாகும்.

(குறிப்பு: அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் பட்டியலிடப்படாத இரண்டு பாரம்பரிய மொழிகள் பிராகிருதம் மற்றும் பாலி மட்டுமே)

2. செம்மொழிகள் இந்தியாவின் பண்டைய மற்றும் ஆழமான கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றன. அவை அந்தந்த சமூகங்களின் வளமான வரலாறு, இலக்கியம் மற்றும் மரபுகளைப் பாதுகாக்கின்றன. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார நிலப்பரப்பின் மொழியியல் சாதனைகளை பாதுகாக்கவும் அரசாங்கம் மொழிகளுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

3. அக்டோபர் 2004-ல், ஒன்றிய அரசு "செம்மொழிகள்" என்ற புதிய வகை மொழிகளை உருவாக்க முடிவு செய்தது. அக்டோபர் 12, 2004 அன்று, அதன் உயர்ந்த தொன்மை மற்றும் வளமான இலக்கிய மரபின் காரணமாக "செம்மொழி" (classical) அங்கீகாரத்தைப் பெற்ற முதல் இந்திய மொழியாக தமிழ் உள்ளது.

Original article:
Share:

உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறையை கேள்விக்குள்ளாக்குகிறது: இந்தியாவின் நிதிக் குற்றக் கண்காணிப்பு அமைப்பின் அதிகாரங்கள் என்ன? — கண்ணன் கே.

 சமீபகாலமாக, அமலாக்க இயக்குநரகத்தின் (Enforcement Directorate) நடவடிக்கைகள் "கூட்டாட்சி கட்டமைப்பை மீறுதல்" உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. ஆனால், 1956-ல் தொடங்கப்பட்டதிலிருந்து காலம் காலமாக அதன் அதிகாரம் வளர்ந்து வந்த இந்த பொருளாதார புலனாய்வு அமைப்பில் குறைபாடுகள் எங்கே உள்ளன?


அரசு நடத்தும் மதுபான விற்பனை நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் (Tamil Nadu State Marketing Corporation (TASMAC)) சோதனைகளை நடத்தி, "அனைத்து வரம்புகளையும் மீறியதற்காக" மற்றும் "கூட்டாட்சி கட்டமைப்பை மீறியதற்காக" (violating the federal structure) அமலாக்க இயக்குநரகத்தை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கண்டித்தது. மாநில நிறுவனத்திற்கு எதிரான ஒன்றிய நிறுவனத்தின் நடவடிக்கைகள் அரசியலமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பை மீறுவதாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி B R கவாய் விவரித்தார்.


குறிப்பாக, TASMAC வழக்கில் உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறையை கடுமையாக கண்டிப்பது முதல் முறை அல்ல. இந்த மாத தொடக்கத்தில், சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழல் வழக்கில் "எதையும் குறிப்பிடாமல் குற்றச்சாட்டுகளை" சுமத்தியதற்காக நீதிமன்றம் அந்த அமைப்பை விமர்சித்தது. சத்தீஸ்கரில் நடந்த மற்றொரு வழக்கில், "குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகள்" குறித்து அந்த அமைப்பு மிகக் குறைவாக கவனம் செலுத்தியதற்காக நீதிமன்றம் அதைக் கண்டித்திருந்தது.


இந்த முன்னேற்றங்கள் இந்தியாவின் பொருளாதார புலனாய்வு அமைப்பின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சி மற்றும் பொருளாதார சட்டங்களை அமல்படுத்துவதிலும் நிதி குற்றங்களை எதிர்த்துப் போராடுவதிலும் அதன் பங்கை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை உருவாக்குகின்றன.


இந்தியப் பொருளாதார புலனாய்வு அமைப்பின் பரிணாமம்


நிதி அமைச்சகத்தின் கீழ் 'அமலாக்கப் பிரிவாக' மே 1, 1956 அன்று அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate (ED)) அமைக்கப்பட்டது. அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Foreign Exchange Regulation Act (FERA)) கீழ் அந்நியச் செலாவணி விதிகளை மீறுவதைக் கையாள்வதே இதன் முக்கிய வேலையாக இருந்தது.  பின்னர், இது அமலாக்க இயக்குநரகம் என மறுபெயரிடப்பட்டு, வருவாய்த் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டது. பின்னர் பரந்த அளவிலான நிதிச் சட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.


1999-ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தை மாற்றியமைத்து அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் (Foreign Exchange Management Act (FEMA)) கொண்டு வரப்பட்டபோதும், 2000-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) அறிமுகப்படுத்தப்பட்டபோதும், அமலாக்க இயக்குநரகம் அதிக அதிகாரத்தைப் பெற்றது. இந்த மாற்றங்கள் நிதிக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப, குறிப்பாக நிதி நடவடிக்கை பணிக்குழு (Financial Action Task Force (FATF)) பரிந்துரைத்தவற்றுக்கு ஏற்ப அமலாக்க இயக்குநரகம் செயல்பட உதவியது.


உலகம் முழுவதும் பணமோசடி தடுப்பு முயற்சிகளை ஒருங்கிணைக்க 1989-ல் உருவாக்கப்பட்ட நிதி நடவடிக்கை பணிக்குழுவால் 2006-ஆம் ஆண்டில் இந்தியா பார்வையாளர் அங்கீகாரத்தைப் (observer status) பெற்றது. பின்னர், 2010-ஆம் ஆண்டில், இந்தியா FATF-ன் முழு நேர உறுப்பினரானது.


சட்டங்களை அமல்படுத்துவதற்கான ஆணை


பணமோசடி மற்றும் அந்நியச் செலாவணி மீறல்கள் தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்கு ED ஒரு பரந்த ஆணையைக் கொண்டிருந்தாலும், பின்வரும் முக்கிய சட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அதிகாரம் பெற்றுள்ளது:


- பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (Prevention of Money Laundering Act, 2002 (PMLA)): பணமோசடி நடவடிக்கைகளில் இருந்து சொத்துக்களைக் கண்டறிந்து, குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுப்பதை உறுதிசெய்வதற்கும், அத்தகைய சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் (பொதுவாக உரிமையை நிரந்தரமாகக் கைப்பற்றுவது) ED-யின் பொறுப்பாகும்.


- அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 (Foreign Exchange Management Act, (FEMA)): FEMA  சட்டம் குற்றவாளிகள் மீது அபராதம் விதிப்பதற்கும், 1973-ஆம் ஆண்டின் அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தை (Foreign Exchange Regulation Act (FERA)) ரத்து செய்வதற்கு முன் பதிவுசெய்யப்பட்ட மீறல்கள் தொடர்பான வழக்குகளிலும் தண்டனைகளை விதிப்பதற்கு சட்ட அமலாக்க அமைப்பு பொறுப்பாகும்.  FERA வழக்குகளைக் கையாள்வதும் அவற்றின் பொறுப்பு ஆகும்.


- தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம், 2018 (Fugitive Economic Offenders Act, (FEOA)): வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதன் மூலம் இந்தியச் சட்டத்தைத் தவிர்க்கும் பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் (விற்பனையைத் தடுக்கும் வகையில் சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்வதற்கும், பொதுவாக சோதனைக் கட்டத்தின்போதும்) சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் ED-க்கு அதிகாரம் உள்ளது.


- அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (Conservation of Foreign Exchange and Prevention of Smuggling Activities Act (COFEPOSA)), 1974: இயக்குநரக சட்டத்தின் கீழ் வழக்குகளுக்கு நிதியுதவி செய்கிறது மற்றும் COFEPOSA அடிப்படையில் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட (Foreign Exchange Management Act (FEMA)) மீறல்களைத் தடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கலாம்.


அமலாக்க இயக்குநரகத்தின் (Enforcement Directorate) அதிகாரம் மற்றும் கூட்டாட்சி அமைப்பு


பொருளாதாரச் சட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முதன்மை அமைப்பாக, பொருளாதாரக் குற்றங்களை விசாரிப்பதற்கும், கண்டறிவதற்கும், தடுப்பதற்கும் குறிப்பிடத்தக்க அதிகாரங்களை ED கொண்டுள்ளது. உதாரணமாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act (PMLA)) கீழ், தனிநபர்களை வரவழைக்கவும், அவர்களின் வருகையை நடைமுறைப்படுத்தவும், அவர்களின் அறிக்கைகளை பதிவு செய்யவும் ஒன்றிய அரசின் அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளது. அவை ஆதாரமாக செல்லுபடியாகும்.


'நம்புவதற்கான காரணம்' பதிவுசெய்யப்பட்டிருந்தால் மற்றும் சட்டப்பூர்வ முன்நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், சோதனைகளை நடத்துவதற்கும், பணமோசடியுடன் தொடர்புடைய சொத்து அல்லது ஆவணங்களைக் கைப்பற்றுவதற்கும் ED-க்கு அதிகாரம் உள்ளது. ஆதாரங்கள் மற்றும் எழுத்துப்பூர்வ நியாயத்தின் அடிப்படையில் கைதுகளை மேற்கொள்ளலாம். ஆனால், கைது செய்வதற்கான காரணங்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தெரிவிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் நடவடிக்கைகளை செய்யவேண்டும். இது பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) கீழ் கைது செய்யப்படுவதைவிட அதிகமான வரம்பு ஆகும்.


விசாரணையின் போது அவற்றின் விற்பனையைத் தடுக்க 180 நாட்கள் வரை குற்றச் செயல்களின் வருமானம் என்று சந்தேகிக்கப்படும் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரமும் ED-க்கு உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என்பதை அரசாங்கம் நிரூபிக்க வேண்டியதற்குப் பதிலாக, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் சட்டப்பூர்வமானவை என்பதைக் காட்டி அவர்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பது PMLA-வில் உள்ள ஒரு சிறப்பு விதியாகும்.


அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (Foreign Exchange Management Act (FEMA)) கீழ், அந்நிய செலாவணி விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நீதிமன்றத்தைப் போல ED செயல்பட முடியும். தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம் (FEOA) இந்தியாவிலிருந்து தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை ED கையகப்படுத்தி வைத்திருக்க அனுமதிக்கிறது.


FEMA-ன் கீழ், ED தீர்ப்பு அதிகாரங்களைக் கொண்டுள்ளது மற்றும் அந்நிய செலாவணி ஒழுங்குமுறை மீறல்களுக்கு அபராதம் விதிக்க ஒரு அரை நீதி அமைப்பாக (quasi-judicial body) செயல்படுகிறது. மேலும், இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் (FEOA) ED-க்கு அதிகாரங்களை வழங்குகிறது.


இருப்பினும், இந்த அதிகாரங்கள் கூட்டாட்சியில் வேரூன்றிய அரசியலமைப்பு வரம்புகளுக்கு உட்பட்டவை. மாநில சுயாட்சிக்கு மதிப்பளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், ஒன்றிய-மாநில சமநிலைக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்கவும், ED தனது அதிகார வரம்பை மீறுவது குறித்து உச்சநீதிமன்றம் பலமுறை எச்சரித்துள்ளது. இந்த அறிவுறுத்தல்கள் பொருத்தமானவை. குறிப்பாக, மாநில அதிகார வரம்பிற்கு உட்பட்ட விசாரணைகளில் தலையிட ED-ஐ ஒரு கருவியாகப் பயன்படுத்துவது குற்றச்சாட்டாக உள்ளது.


செயல்பாட்டு சுதந்திரம் பற்றிய கவலைகள்


இந்தியாவின் நிதி ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் ED ஒரு முக்கியப் பங்கைக் கொண்டிருந்தாலும், அதன் செயல்பாடுகள் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்பியுள்ளன. இது TASMAC வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய விமர்சனத்தில் காணப்பட்டது. தலைமை நீதிபதி, ED அரசியலமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பை மீறுவதாக சுட்டிக்காட்டினார். மேலும் அமைப்பின் சுதந்திரம் மற்றும் சாத்தியமான அரசியல் சார்பு குறித்து கவலைகளை எழுப்பினார். இது ED அதன் நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க வேண்டியதன் அவசியத்தைக் காட்டியது.


அமலாக்கக்த்துறையின் (ED)  மீதான பெரிய விமர்சனம் PMLA-வின் கீழ் அதன் குறைந்த தண்டனை விகிதம் ஆகும். 2014 முதல் 2024 வரை, 5,297 வழக்குகளில், 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது. இதன் காரணமாக, வலுவான ஆதாரங்கள் மற்றும் சிறந்த வழக்குத் தொடுப்புகளில் அதிக கவனம் செலுத்துமாறு ஆகஸ்ட் 2024-ல் அமலாக்கக்த்துறையிடம் உச்சநீதிமன்றம் கூறியது. இது வழக்குகளை விசாரித்து வெற்றி பெறுவதில் ED எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்று மக்களை கேள்வி எழுப்பியுள்ளது.


ED-க்கு வழங்கப்பட்டுள்ள விரிவான அதிகாரங்கள், குறிப்பாக PMLA -ன் கீழ், கைது செய்யும் அதிகாரம், சொத்துக்களை தற்காலிகமாக இணைத்தல் மற்றும் ஒரு தலைகீழ் சுமை ஆதாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அவை உரிய செயல்முறை மற்றும் குடிமை உரிமைகள் (civil liberties) மீதான தாக்கம் பற்றிய விவாதங்களுக்கு வழிவகுத்தன.


குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதி என்பதை நிரூபிக்கும் வகையில் சாட்சியச் சுமையை சுமத்துவது எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போதுமான ஆதாரங்கள் இல்லாமல் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், ஆதாரங்கள் இல்லாததால் பல வழக்குகள் கைவிடப்பட்டதாகவும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.  இத்தகைய கவலைகளை அதை உறுதிப்படுத்துகின்றன.


ED-யின் செயல்பாட்டு சுதந்திரம் குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. அரசியல் செல்வாக்கு மற்றும் குறிப்பிட்ட தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை குறிவைப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள்  அதிகரித்துள்ளன. இது பொதுமக்களின் பார்வையையும் அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மையையும் பாதிக்கிறது. அதன் வழக்குத் தேர்வு செயல்முறை, விசாரணைகள் மற்றும் தண்டனை விகிதங்களில் அதிக வெளிப்படைத்தன்மையின் தேவை பரவலாக விவாதிக்கப்படுகிறது. கூடுதலாக, ED-யின் நடவடிக்கைகள் சில நேரங்களில் அதன் அதிகார வரம்பை மீறி, TASMAC வழக்கில் காணப்படுவது போல், மாநிலங்களின் வரம்பிற்குள் வரும் வழக்குகளை எடுத்துக்கொள்கின்றன. இது கூட்டாட்சி மோதலுக்கு (federal friction) வழிவகுக்கிறது.


முன்னோக்கி செல்லும் வழி என்ன?


அதன் செயல்திறனை அதிகரிப்பதையும், அதன் செயல்பாடு குறித்த பொதுமக்களின் கருத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) பயனடையும். அதிகார வரம்பை மீறுவதைத் தடுக்க, விசாரணை, கைது மற்றும் பறிமுதல் செயல்முறைகளை வலுவான நீதித்துறை மேற்பார்வையின் கீழ் அமைப்பை வைப்பது ஒரு முக்கிய படியாக இருக்கலாம்.


அரசியல் நலன்கள் (political interests) மற்றும் துன்புறுத்தல் (harassment) குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு உரிய நடைமுறையை கண்டிப்பாக கடைபிடிப்பது மற்றொரு படியாகும். இது தெளிவான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை நிறுவுதல் மற்றும் ED அலுவர்களுக்கு பயனுள்ள பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மூலம் ஆதரிக்கப்படலாம். புலனாய்வுகளை உளவுத்துறை சார்ந்ததாக மாற்ற ED-ன் செயல்பாட்டை மறுசீரமைத்தல் மற்றும் வலுவான சான்றுகள் மூலம் தண்டனைகளில் கவனம் செலுத்துதல் ஆகியவை சார்பு உணர்வை அகற்ற உதவும்.


முடிவாக, இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் நிதிக் குற்றங்களைத் தடுக்கவும் அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) போன்ற ஒரு அமைப்பு முக்கியமானது. காலத்திற்கு ஏற்றவாறு சீர்திருத்தங்கள் மற்றும் உரிய நடைமுறைகள் மற்றும் அரசியலமைப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது அதன் நியாயமான மற்றும் பயனுள்ள செயல்பாட்டை உறுதி செய்வதற்கு முக்கியமானதாக இருக்கும்.


கண்ணன் கே ஹைதராபாத்தில் உள்ள பொருளாதார மற்றும் சமூக ஆய்வு மையத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.


Original article:
Share:

சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்பது என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி:


ஞாயிற்றுக்கிழமை பகிரப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 16.4 சதவீதம் அதிகரித்து, மே மாதத்தில் ரூ.2.01 லட்சம் கோடியை எட்டியுள்ளது (ஏப்ரல் மாதத்தில் செய்யப்பட்ட விற்பனைக்கு). மே மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் ஏப்ரலில் வசூலான ரூ.2.37 லட்சம் கோடியைவிட குறைவாக இருந்தாலும், மே மாதத்தில் வளர்ச்சி விகிதம் ஏப்ரலில் 12.6 சதவீதத்திலிருந்து 16.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:


* ஏப்ரல் மாதத்தில், ஆண்டு இறுதி விற்பனையால் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் உதவியது. ஆனால், மே மாதத்தில், உள்நாட்டு GST வசூல் குறைந்துள்ளது. இறக்குமதிகள் மூலம் GST வசூல் கடந்த ஆண்டை விட 25.2% அதிகரித்து. மே மாதத்தில் ரூ.51,266 கோடியை எட்டியது. ஏப்ரல் மாதத்தில், இறக்குமதிகள் மூலம் GST வசூல் ரூ.46,913 கோடியாக இருந்தது.


* நாட்டிற்குள், மே மாதத்தில் GST வசூல் 13.7% அதிகரித்து ரூ.1.50 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், இது ஏப்ரல் மாதத்தில் ரூ.1.90 லட்சம் கோடிக்கும் குறைவாகவே வசூலிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக, GST வசூல் 20.4% அதிகரித்து ரூ.1.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டைவிட 16%-க்கும் அதிகமான வளர்ச்சி பொருளாதாரம் நன்றாக மீண்டு வருவதைக் காட்டுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.


* KPMG-யின் மறைமுக வரித் தலைவர் அபிஷேக் ஜெயின் கூறுகையில், "ஆண்டு இறுதி சரிசெய்தல் காரணமாக கடந்த மாத அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டைவிட 16% க்கும் அதிகமான அதிகரிப்புடன் இந்த மாத நிலையான வளர்ச்சி வலுவான வேகத்தையும் பொருளாதாரத்தில் தெளிவான மீட்சியையும் காட்டுகிறது."


உங்களுக்குத் தெரியுமா?:


* மே மாதத்தில் மொத்த மீள் தொகை (refund) ரூ.27,210 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 4 சதவீதம் குறைவு. மே மாதத்தில் உள்நாட்டு மீள் தொகை 53.7 சதவீதம் அதிகரித்து ரூ.18,314 கோடியாக இருந்தது. ஆனால், இறக்குமதிகளுக்கான மீள் தொகை (refund) 45.9 சதவீதம் குறைந்து ரூ.8,896 கோடியாக இருந்தது.


* ஏப்ரல் மாதத்தில், உள்நாட்டு மீள் தொகை (refund)  22.4 சதவீதம் அதிகரித்து ரூ.13,386 கோடியாக இருந்தது. இறக்குமதிகளுக்கான மீள் தொகை (refund) 86.1 சதவீதம் அதிகரித்து ரூ.13,955 கோடியாக இருந்தது.


* அக்டோபர் மாதத்திற்கான தரவுகள், 38 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 20 மாநிலங்கள் தேசிய சராசரியான 16.4 சதவீதத்தை விட GST வசூலில் அதிக வளர்ச்சியைக் கொண்டிருந்தன என்பதைக் காட்டுகின்றன.


* மகாராஷ்டிரா அதிகபட்ச GSTயை ரூ.31,530 கோடியாக வசூலித்தது. இது 17 சதவீத வளர்ச்சியாகும். அதைத் தொடர்ந்து கர்நாடகா ரூ.14,299 கோடி (20 சதவீத வளர்ச்சி), தமிழ்நாடு ரூ.12,230 கோடி (25 சதவீத வளர்ச்சி), குஜராத் ரூ.11,737 கோடி (4 சதவீத வளர்ச்சி), டெல்லி ரூ.10,366 கோடி (38 சதவீத வளர்ச்சி) ஆகிய மாநிலங்கள் உள்ளன.


* சில மாநிலங்கள் மே மாதத்தில் GST வசூலில் சரிவை சந்தித்தன: ஆந்திரப் பிரதேசம் ரூ.3,803 கோடி (2 சதவீதம் குறைவு), உத்தரகாண்ட் ரூ.1,605 கோடி (13 சதவீதம் குறைவு), தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ரூ.351 கோடி (6 சதவீதம் குறைவு), மிசோரம் ரூ.29 கோடி (26 சதவீதம் குறைவு) என்ற அளவில் இருந்தது.


* மத்திய அரசு மாநிலங்களுக்குள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரியான மத்திய GST (CGST) ரூ.35,434 கோடி ரூபாயாகவும், மாநிலங்களால் வசூலிக்கப்படும் வரியான மாநில GST (SGST) ரூ.43,902 கோடி ரூபாயாகவும் மற்றும்  மாநிலங்களுக்கு இடையேயான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரியான ஒருங்கிணைந்த GST (IGST) ரூ.1.09 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. இந்த மாதத்தில் வசூலிக்கப்பட்ட செஸ் ரூ.12,879 கோடி ரூபாய் ஆகும்.


Original article:
Share:

MGNREGA திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெறுவதற்கான தகுதி அளவுகோல்கள் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி: 


கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (MoRD) 2029-30 வரை ஐந்து ஆண்டுகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கு (MGNREGS) ரூ.5.23 லட்சம் கோடி ஒதுக்க முன்மொழிந்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:


* மத்திய அரசு அங்கீகரித்ததை விட 12% அதிகமாக செலவழிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இது 2020-21ஆம் ஆண்டு முதல் 2024-25ஆம் ஆண்டு வரையிலான நிதியாண்டுகளில் MGNREGS-க்கு ரூ.4.68 லட்சம் கோடியாக இருந்தது.


* கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கிய ஒரு வருடத்திற்குப் பிறகு, 2020-21-ஆம் ஆண்டில் அதிகபட்ச தொகை செலவிடப்பட்டது. அப்போது 7 கோடிக்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தின. அந்த ஆண்டு, ரூ.1,09,810 கோடி வழங்கப்பட்டது.


* வேலைகளை இழந்து நகரங்களிலிருந்து கிராமங்களுக்குத் திரும்பிய குடும்பங்களுக்கு MGNREGS ஒரு ஆதரவு அமைப்பாக மாறியது. மே 15 அன்று கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவின்படி, இந்தத் திட்டம் அனைத்து அரசுத் திட்டங்களுக்கும் பட்ஜெட்டுகளை அங்கீகரிக்கும் செலவு நிதிக் குழுவிற்கு அனுப்பப்பட்டது.


* பொருளாதாரம் மெதுவாக ஆனால் நிலையான முறையில் மீண்டு வருவதால் குறைவான குடும்பங்களுக்குத் திட்டம் தேவைப்பட்டதால், 2024-25ஆம் ஆண்டில் மிகக் குறைந்த தொகை ரூ.85,680 கோடியாக வழங்கப்பட்டது. 2024-25ஆம் ஆண்டில் 5.79 கோடி குடும்பங்கள் மட்டுமே இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தின. மேலும், மேற்கு வங்கத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.


* அடுத்த நிதி ஆணைய சுழற்சியைத் திட்டமிட உதவும் வகையில், திட்டத்தின் இலக்குகள் மற்றும் முடிவுகளை EFC மதிப்பாய்வு ஆராய்கிறது. இருப்பினும், MGNREGS ஒரு அரசுத் திட்டம் என்பதால், EFCயின் ஒப்புதல் பெரும்பாலும் ஒரு சம்பிரதாயமாகும். எனவே, திட்டத்திற்கு நிதியளிக்கும் விதத்தில் எந்த மாற்றமும் திட்டமிடப்படவில்லை.


உங்களுக்குத் தெரியுமா?:


* MGNREG சட்டம், 2005-ன் பிரிவு 4 இன் கீழ், MGNREGS மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் நடத்தப்படுகிறது. இந்த சட்டம் ஒவ்வொரு மாநிலமும் கிராமப்புற குடும்பங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 100 நாட்கள் உத்தரவாதமான திறமையற்ற வேலையை வழங்கும் திட்டத்தை அமைக்க வேண்டும் என்று கோருகிறது.


* பிரிவு 22 நிதி எவ்வாறு பகிரப்படுகிறது என்பதை விளக்குகிறது: மத்திய அரசு அனைத்து ஊதியங்கள், இயக்க செலவுகள் மற்றும் சமூக தணிக்கை அலகுகள் மற்றும் திறமையான மற்றும் அரை திறமையான தொழிலாளர்களுக்கான ஊதியம் உட்பட 75% வரை பொருள் செலவுகளுக்கு பணம் செலுத்துகிறது. வேலையின்மை சலுகைகள், பொருள் செலவுகளில் 25% மற்றும் மாநில கவுன்சிலின் செலவுகளுக்கு மாநிலங்கள் பணம் செலுத்த வேண்டும்.


Original article:
Share:

குழந்தை பருவ உடல்பருமனுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான அவசரத் தேவையை எய்ம்ஸ் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

 குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி வழிநடத்தவும், இந்தப் பிரச்சினையைத் தடுக்கவும், விதிகள், கற்பித்தல் மற்றும் சமூகத்தின் உதவியை உள்ளடக்கிய ஒரு வலுவான பொது சுகாதார முயற்சி முக்கியமானது.


அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (All India Institute of Medical Sciences (AIIMS)) நடத்திய ஆய்வில், டெல்லியில் உள்ள பள்ளிக் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல்நலப் பிரச்சினை குறித்து கவலை எழுந்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 19 வயது வரையிலான கிட்டத்தட்ட 4,000 மாணவர்களில், 13.4% பேர் அதிக எடையுடன் இருப்பதும், 7.4% பேர் உயர் இரத்த அழுத்தத்துடன் இருப்பதும் கண்டறியப்பட்டது.


தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே தெளிவான வேறுபாட்டையும் இந்த ஆய்வு காட்டுகிறது. தனியார் பள்ளி மாணவர்களில் சுமார் 24% பேர் அதிக எடையுடன் இருந்தனர். அதே நேரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களில் 4.5% பேர் மட்டுமே அதிக எடையுடன் இருந்தனர். தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உயர் இரத்த சர்க்கரை இரு மடங்கு அதிகமாகவும், உயர் இரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற கொழுப்பின் அளவு மற்றும் இரத்த சர்க்கரையை முறையாகக் கட்டுப்படுத்தாதது உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாகவும் உள்ளது.


ஆரம்பத்திலேயே சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்தப் பிரச்சினைகள் இதய நோய், மூட்டு வலி, மன அழுத்தம் மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.


விரிவான தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பு (2016-18) இந்தியாவில் பள்ளி வயது குழந்தைகளில் 15.35% பேரும், இளம் வயதினரில் 16.18% பேரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாகக் காட்டுகிறது. AIIMS ஆய்வோடு சேர்த்து, இது ஒரு கவலைக்குரிய போக்கைக் காட்டுகிறது. ஒரு காலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகப் போராடிய இந்தியா, இப்போது இரட்டைப் பிரச்சினையைக் கொண்டுள்ளது. நகரங்களிலும், பணக்கார குடும்பங்களிலும், சிறந்த வாழ்க்கை நிலைமைகள் விசித்திரமாக அதிக உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளன. 


இந்தியாவில் அதிக எடை கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1990ஆம் ஆண்டில் 0.4 மில்லியனிலிருந்து 2022ஆம் ஆண்டில் 12.5 மில்லியனாக உயர்ந்துள்ளதாக லான்செட்டில் 2024ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. வேகமான நகர வளர்ச்சி, கலோரிகள் அதிகம் உள்ள ஆனால் ஊட்டச்சத்து குறைவாக உள்ள ஆரோக்கியமற்ற உணவை எளிதில் அணுகுதல், அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகள் மற்றும் ஆரோக்கியமாகத் தோன்றும் சர்க்கரை பானங்கள்  அதிக நேரம் கணினி திரைகளில் செலவிடுதல் மற்றும் குறைவான உடல் செயல்பாடு ஆகியவை இந்த மிகப்பெரிய உயர்வுக்குக் காரணம்.


பள்ளிப் படிப்பைப் போலவே மாணவர்களின் ஆரோக்கியத்திற்கும் அவசர கவனம் தேவை என்பதை AIIMS அறிக்கை காட்டுகிறது. அதிக சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்க சர்க்கரை வாரியங்களை அமைக்குமாறு CBSE சமீபத்தில் பள்ளிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது ஒரு நல்ல நடவடிக்கை. உடற்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். மேலும், புகையிலை முன்பு தடைசெய்யப்பட்டது போல பள்ளி உணவகங்களில் இருந்து சத்தற்ற உணவை (junk food) அகற்ற வேண்டும். வீட்டிலேயே ஆரோக்கியமான தேர்வுகளை செய்வது பற்றி பெற்றோர்களும் சிந்திக்க வேண்டும். விதிகள் மற்றும் கொள்கைகளும் முக்கியம். குழந்தை பருவ உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கான தேசியத் திட்டங்கள் வெறும் காகிதத்தில் எழுதப்படாமல், உண்மையான செயல்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும். குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உதவும் வகையில் விதிகள், கற்பித்தல் மற்றும் சமூகத்தின் ஆதரவை உள்ளடக்கிய ஒரு வலுவான சுகாதாரத் திட்டம் தேவை. இல்லையெனில், எதிர்காலத்தில் இந்தியா கடுமையான மற்றும் விலையுயர்ந்த சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும்.


Original article:
Share:

இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் திரும்பியுள்ளதாக மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. -தர்மகீர்த்தி ஜோஷி

 நாட்டிற்குள் தனியார் முதலீடு பலவீனமாக இருந்தாலும், நிதி சிக்கல்கள் காரணமாக அரசாங்கத்திற்கு செலவு செய்ய குறைந்த பங்கே இருந்தாலும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் மாற்றங்களால் இந்தியா ஆதாயமடைந்து வருகிறது.


தேசிய புள்ளிவிவர அலுவலகம் (National Statistics Office (NSO)) படி, இந்தியாவின் பொருளாதாரம் (GDP) 2024-25-ஆம் ஆண்டில் 6.5% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டின் கடைசி காலாண்டில் 7.4% வலுவான வளர்ச்சி காணப்பட்டது. குறைவான தரவுகளின் அடிப்படையில், முந்தைய கணிப்புகள் 6.4% மற்றும் 6.5% வளர்ச்சியை மதிப்பிட்டிருந்தன.


கடந்த மூன்று ஆண்டுகளில் காணப்பட்ட GDPயில் எதிர்பாராத அதிகரிப்புகள் குறைந்தபட்சம் இப்போதைக்கு தொடராமல் போகலாம். பொருளாதாரம் அதன் வழக்கமான வளர்ச்சி முறைக்குத் திரும்பி வருவதாகத் தெரிகிறது. COVID-19 தொற்றுநோய்க்கு முன்பு, பத்து ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி 6.6% ஆக இருந்தது.


2023-24-ஆம் ஆண்டில், வளர்ச்சியின் முதல் மதிப்பீடு 7.3%-ஆக இருந்தது. இது பின்னர் 8.2% ஆகவும் பின்னர் மீண்டும் 9.2% ஆகவும் திருத்தப்பட்டது. இந்தியாவில், தற்காலிக மதிப்பீடுகள் முந்தைய மதிப்பீடுகளைவிட மிகவும் துல்லியமானவை மற்றும் நிலையானவை. 2025 நிதியாண்டிற்கான அடுத்த மதிப்பீடு 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும். அதுவரை, உலகளாவிய நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், திட்டமிடலுக்கான நிலையான அடித்தளத்தை இந்த தற்போதைய மதிப்பீடுகள் வழங்குகின்றன.


பணவீக்கத்தையும் சேர்த்து இந்தியாவின் மொத்த பொருளாதாரம் 2025 நிதியாண்டில் 9.8% வளர்ந்தது. இதன் பொருள் பொருளாதாரத்தின் மொத்த அளவு 2024 நிதியாண்டில் $3.6 டிரில்லியனில் இருந்து $3.91 டிரில்லியனாக அதிகரித்துள்ளது.


தனியார் செலவினம் 7.2% வளர்ந்தது, முக்கியமாக வலுவான கிராமப்புற தேவை காரணமாக, நகர்ப்புற செலவினம் குறைவாகவே இருந்தது. இருப்பினும், இந்த செலவின வளர்ச்சி கடந்த காலாண்டில் 6% ஆகக் குறைந்தது. அரசாங்க செலவினமும் குறைவாக இருந்தது, ஆண்டுக்கு 2.3% மட்டுமே வளர்ச்சியடைந்தது மற்றும் கடந்த காலாண்டில் 1.8% சரிந்தது. இருப்பினும், கடந்த காலாண்டில் அரசாங்க முதலீடு கடுமையாக உயர்ந்தது, இது மொத்த முதலீடு பொருளாதாரத்தை விட வேகமாக வளர உதவியது. திருத்தப்பட்ட பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டதை விட மத்திய அரசு திட்டங்களுக்கு அதிகமாக செலவிட்டது.


உற்பத்தி பக்கத்தில், விவசாயம் மற்றும் சேவைகள் சிறப்பாக செயல்பட்டன, ஆனால், உற்பத்தி பலவீனமாக இருந்தது. எனினும் அவை 4.5% மட்டுமே விவசாயத்தை விடக் குறைவாக வளர்ச்சியடைந்தது. முந்தைய ஆண்டு $437.07 பில்லியனாக இருந்த பொருட்களின் ஏற்றுமதி கிட்டத்தட்ட அதே அளவில் 437.41 பில்லியனாக இருந்தது. பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும் கட்டுமானம், முந்தைய ஆண்டு வலுவான இரட்டை இலக்க வளர்ச்சியைத் தொடர்ந்து 9.4% வளர்ச்சியடைந்தது. இது புதிய வேலைவாய்ப்புகளுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும்.


2026 நிதியாண்டிற்கான பொருளாதாரக் கண்ணோட்டம், உலகளாவிய கட்டண மாற்றங்கள் இந்தியாவை எவ்வாறு பாதிக்கின்றன. இது இந்தியா எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்பதைப் பொறுத்தது. இந்தியாவின் பொருளாதாரம் முக்கியமாக நாட்டிற்குள் செயல்பாடுகளைச் சார்ந்திருந்தாலும், வளர்ந்த நாடுகளுடனான அதன் வளர்ந்து வரும் வர்த்தக மற்றும் நிதி தொடர்புகள், உலகளாவிய பிரச்சினைகளால் இன்னும் பாதிக்கப்படலாம் என்பதாகும்.


இந்த ஆண்டு, அமெரிக்காவும் பிற நாடுகளும் ஒருவருக்கொருவர் பொருட்களின் மீது புதிய வரிகளை அறிமுகப்படுத்திய பிறகு, உலகளாவிய நிலைமை நிறைய மாறிவிட்டது. இந்த மாற்றங்கள் இந்தியாவை இரண்டு வழிகளில் பாதிக்கலாம். முதலாவதாக, அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அதிக வரிகள் மூலம் நேரடியாக, இது இந்திய பொருட்களை குறைந்த போட்டித்தன்மை கொண்டதாக ஆக்குகிறது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சி 2024 நிதியாண்டில் 2.8%-லிருந்து 2025 நிதியாண்டில் 1.5% ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதிகளுக்கான தேவையும் குறையும். இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பிறகு முழு விளைவும் தெளிவாகத் தெரியும்.


இரண்டாவதாக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசியா போன்ற பிற பிராந்தியங்களில் மெதுவான வளர்ச்சியால் மறைமுக விளைவுகள் ஏற்படும்.  அவை இந்திய ஏற்றுமதிகளுக்கான பெரிய சந்தைகளாகும். உலகப் பொருளாதார வளர்ச்சி 2024 நிதியாண்டில் 3.3% ஆக இருந்து 2025 நிதியாண்டில் 2.7% ஆகக் குறையும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. சீனப் பொருட்களுக்கான அமெரிக்காவின் அதிக வரிகள் சீனாவின் பிரச்சினைகளை மோசமாக்குகின்றன. அதாவது அதிக உற்பத்தி மற்றும் விலை வீழ்ச்சி போன்றவை காரணமாகும். சீனா இந்தியா உட்பட பிற நாடுகளுக்கு அதிக பொருட்களை விற்க முயற்சிக்கலாம். 90 நாட்களுக்கு வரிகளைக் குறைப்பதற்கான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சமீபத்திய தற்காலிக ஒப்பந்தம் சிறிது நிம்மதியை அளித்தது. ஆனால், அதன் பிறகு என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.


இந்த தொடர்ச்சியான நிச்சயமற்றத் தன்மை தனியார் நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் தாமதங்களை ஏற்படுத்துகிறது மற்றும் நிதிச் சந்தைகள், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஆபத்துகளை உருவாக்குகிறது. இருப்பினும், இந்தியாவுக்கு சில பாதுகாப்பு உள்ளது. மேலும், சில நல்ல முன்னேற்றங்கள் இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கு உதவக்கூடும்.


இந்தியாவின் ஏற்றுமதி அமைப்பு சில வலிமையை அளிக்கிறது. ஏனெனில், சேவைகள் இப்போது மொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதியை உருவாக்குகின்றன. மேலும், பொருட்களைவிட உலகளாவிய வர்த்தக சிக்கல்களால் குறைவாக பாதிக்கப்படுகின்றன. 2025 நிதியாண்டில் உலகளாவிய பொருட்கள் வர்த்தகம் 0.2% சுருங்கும் என்று உலக வர்த்தக அமைப்பு எதிர்பார்க்கிறது. ஆனால், சேவை வர்த்தகம் 4% வளரும். சேவை ஏற்றுமதிகளும் மெதுவாக இருந்தாலும், அவை பொருட்கள் ஏற்றுமதியைப் போலக் குறையாது. இது தாக்கத்தை சமப்படுத்த உதவுகிறது.


இந்தியாவின் குறைந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை, நியாயமான வெளிநாட்டுக் கடன் மற்றும் வலுவான அந்நியச் செலாவணி இருப்பு (தற்போது $686 பில்லியன்) ஆகியவை உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தைக் குறைக்கின்றன. இருப்பினும், அவை முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை.


சாதனை அளவிலான கோதுமை பயிர் மற்றும் வலுவான பருப்பு வகைகள் உற்பத்தி, நல்ல பருவமழை முன்னறிவிப்புடன், விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் உணவு விலைகளைக் கட்டுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு $65 ஆகக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரணிகள் இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்க அதிக சுதந்திரத்தை அளிக்கின்றன. RBI வட்டி விகிதங்களை தலா 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.


குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு, உணவு மற்றும் எரிபொருள் அவர்களின் செலவினத்தில் பெரும் பகுதியை எடுத்துக்கொள்கின்றன. எனவே, குறைந்த உணவு பணவீக்கம் அவர்கள் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மற்ற விஷயங்களுக்கு அதிகமாக செலவிட உதவும். இந்த ஆண்டு நடைமுறைக்கு வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் வருமான வரி குறைப்புகளிலிருந்து நகரச் செலவுகளும் ஊக்கத்தைப் பெறும். இது கிராமப்புற செலவினங்களையும் ஆதரிக்கும்.


கடந்த ஆண்டைப் போலல்லாமல், இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு மூலதனச் செலவினத்தில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. ஏப்ரல் மாதத்தில், மூலதனச் செலவு ரூ.1.59 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது ஆண்டு இலக்கில் 14.3% ஆகும்.


நாட்டில் தனியார் முதலீடு இன்னும் மெதுவாக இருந்தாலும், அரசாங்கத்திடம் முதலீடு செய்ய குறைந்த பணம் இருந்தாலும், உலகளாவிய விநியோகச் சங்கிலி மாற்றங்களால் இந்தியா லாபம் ஈட்டி வருகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது பெரும்பாலான ஐபோன்களை அமெரிக்காவிற்காக இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. வியட்நாமிய மின்சார வாகன நிறுவனமும் ஜூன் மாதத்தில் இந்தியாவில் ஒரு ஆலையைத் தொடங்கும் என்றும் இந்த ஆண்டு தயாரிப்பு வெளியீடுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. சீனாவிலிருந்து நிறுவனங்கள் விலகிச் செல்லும்போது இதுபோன்ற முதலீடுகள் மேலும் தொடரக்கூடும். இந்திய நிறுவனங்கள், குறிப்பாக பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நல்ல நிதி நிலையில் உள்ளன. மேலும், இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக உள்ளன.


இருப்பினும், நீண்டகால பிரச்சினைகளைச் சரிசெய்து, நாட்டை முதலீட்டிற்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற இந்தியா இன்னும் முக்கியமான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 6.5% வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த எண்ணிக்கையைக் குறைக்கக்கூடிய அபாயங்களும் உள்ளன.


எழுத்தாளர் CRISIL-ன் தலைமைப் பொருளாதார நிபுணர்.


Original article:
Share:

அமெரிக்கா-இந்திய கடலடி கேபிள் திட்டத்தை வலுப்படுத்துதல் -வேதிகா பாண்டே, துருவ் சேகர், சம்ரிதி குமார்

 டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பிராந்தியத்தை மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் அபாயங்களிலிருந்து பாதுகாக்க உத்தி மற்றும் வணிக இலக்குகளை முன்னேற்றுவதற்கும் இது முக்கியமானது.


இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளில் (Bilateral commercial engagement), உடனடி வர்த்தக உடன்படிக்கைக்கு கட்டுப்படுத்தப்படாமல், பல முனைகளில் துரிதப்படுத்தப்படுகிறது. இரு அரசாங்கங்களும் முக்கியமான இராஜதாந்திரத் துறைகளில் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றன. தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளை மிகவும் மாறுபட்டதாகவும், குறைவான ஆபத்தானதாகவும் மாற்றுவது முக்கியம் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். உலகம் மேலும் நிச்சயமற்றதாகி வருவதால் இது குறிப்பாகத் தேவைப்படுகிறது. இந்தப் பணியின் ஒரு பகுதி TRUST கட்டமைப்பை மேம்படுத்துவதாகும். TRUST என்பது நெகிழ்ச்சி, திறந்த மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கான தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது. இது iCET எனப்படும் முந்தைய அமெரிக்க-இந்திய சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்முயற்சியைப் பின்பற்றுகிறது.


இந்த ஆண்டின் பிற்பகுதியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குவாட் உச்சிமாநாட்டிற்காக இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குவாடில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி இந்த உச்சிமாநாட்டிற்கு முன்னதாக கையெழுத்திடப்படும். இது டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைகளில் ஆழமான ஒத்துழைப்பின் உறுதியான அடிப்படையை அமைக்கும்.


சமீபத்திய முன்னேற்றங்களுக்கு மத்தியில் கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் ஒரு முக்கிய மையமாக மாறி வருகின்றன. இந்த கேபிள்கள் உலகளாவிய இணையத்தின் இயற்பியல் முதுகெலும்பாகும். அவை சர்வதேச தரவு போக்குவரத்தில் 95%-க்கும் அதிகமானவற்றைக் கொண்டுள்ளன. இதன் பொருள் அவை கிட்டத்தட்ட அனைத்து டிஜிட்டல் தொடர்புகளையும் செயல்படுத்துகின்றன. இந்த கேபிள்கள் நிலத்தை அடையும் போது, ​​அவை பயனர்களுடன் அல்லது தரவு மையங்களுடன் நேரடியாக இணைக்கப்படுகின்றன. இந்த தரவு மையங்கள் கிளவுட் சேவைகள் (cloud services) மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பை (critical infrastructure) இயக்குகின்றன. சீனா இந்தோ-பசிபிக் முழுவதும் கடலுக்கு அடியில் உள்ள உள்கட்டமைப்பை விரைவாக விரிவுபடுத்துகிறது. இது அதன் டிஜிட்டல் சில்க் சாலை முன்முயற்சி (Digital Silk Road Initiative) மூலம் நடக்கிறது. இந்த வளர்ச்சி எதிர்காலத்திற்கு நம்பகமான மாற்றுகள் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது.


உலகளாவிய பொது நலத்தின் ஒரு பகுதி


பாதுகாப்பான மற்றும் நம்பகமான கடல்சார் அமைப்புகளை உருவாக்குவதற்கான வலுவான இந்தியா-அமெரிக்கா கூட்டாண்மை முழு உலகிற்கும் பயனளிக்கும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு வழங்குநராக இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கை TRUST கட்டமைப்பு ஒப்புக்கொள்கிறது. நம்பகமான விற்பனையாளர்களைப் பயன்படுத்தி இந்தப் பகுதியில் கடல்சார் கேபிள் உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் திட்டங்களையும் இது ஆதரிக்கிறது. இந்தியாவில் தற்போது சுமார் 17 கடல்சார் கேபிள்கள் உள்ளன. அவற்றில் சில கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் சிங்கப்பூர் மிகவும் சிறியதாக இருந்தாலும், இது சிங்கப்பூரின் 26 கேபிள்களை விடக் குறைவு. இந்த நிலைமை மாற வேண்டும். ஏனெனில், இந்தியா ஒரு பிராந்திய இணைப்பு மையமாக மாற நல்ல நிலையில் உள்ளது. இந்தியாவுக்குத் தேவையான அனைத்தும் உள்ளன. இது 11,098 கிலோமீட்டர் நீளமான கடற்கரை, இந்தோ-பசிபிக் பகுதியில் ஒரு மைய இடம் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்றவை ஆகும்.


இந்தியாவின் கடற்கரை அதன் மொத்த எல்லையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது. ஆனால், 17 சர்வதேச கடல்சார் கேபிள்களில் 15, மும்பையில் வெறும் ஆறு கிலோமீட்டர் பரப்பளவில் ஒன்றிணைகின்றன. இந்த கடல்சார் கேபிள்கள் கேபிள் தரையிறங்கும் நிலையங்கள் மூலம் நிலத்துடன் இணைகின்றன. இந்த நிலையங்கள் முக்கியமாக மும்பை, சென்னை, கொச்சி, தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஐந்து நகரங்களில் காணப்படுகின்றன. இந்த நெட்வொர்க் வசதிகளை மேலும் விரிவுபடுத்துவது முக்கியம். ஒரு பகுதி இயற்கைப் பேரழிவுகள், மனித தவறுகள் அல்லது நாசவேலை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால், அது பெரிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.


பரவலாக அமைந்த நிலையங்களின் வலையமைப்பு, பணிநிறுத்தம் ஏற்படும்போது தரவை மற்ற இணைப்புகளுக்கு மாற்றி அனுப்பும் திறனான - பிணையத்தின் மீள்பயனாக்கத்தை அதிகரிக்கும். 2024ஆம் ஆண்டு, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் உள்ள கடலடி கேபிள்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்திய இயக்குநர்கள், பணிநிறுத்தத்தைத் தவிர்க்க, மற்ற கேபிள் அமைப்புகளுக்கு போக்குவரத்தை மாற்றி அனுப்ப வேண்டியிருந்தது. இதேபோன்று, இந்தியாவுக்கு அருகில் ஏற்படும் பணிநிறுத்தம், உள்நாட்டு மற்றும் சர்வதேச தகவல்தொடர்புகளில் பழுதுகளுக்கு வழிவகுக்கலாம்.


ஒரு போக்குவரத்து மையமாக சாத்தியம்


கடல்சார் கேபிள் வழிகள் (Subsea cable routes) வரலாற்று கடல்சார் வர்த்தக வழிகளை பிரதிபலிக்கின்றன. ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையில் அமைந்துள்ள இந்தியா, ஹார்முஸ் ஜலசந்தி, மலாக்கா ஜலசந்தி மற்றும் பாப்-எல்-மண்டேப் ஆகிய முக்கிய கடல்சார் சோக் புள்ளிகளுக்கு அருகில் அமர்ந்திருக்கிறது. இது உலகளாவிய கேபிள் நெட்வொர்க்குகளுக்கு நாட்டை இயற்கையான மையமாக மாற்றுகிறது.


இந்தோனேசியா உட்பட ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் மாறும் பொருளாதாரங்களில் அதிகரித்துவரும் தேவைக்கு சேவை செய்து, வேகமான பிராட்பேண்ட் விரிவாக்கம் (fastest broadband growth) கொண்ட பிராந்தியத்தின் மையத்தில் இந்தியாவும் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்து ஆப்பிரிக்கா-ஆசியா மற்றும் ஐரோப்பா-ஆசியா நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்களுக்கான முக்கிய சந்திப்பாக இது செயல்படுகிறது. அதிகரித்து வரும் உள்நாட்டு தேவைக்கு சேவை செய்வதற்கும் மேம்படுத்தப்பட்ட இணைப்பு முக்கியமானது. இந்தியாவின் அலைவரிசை தேவை 2021 மற்றும் 2028-க்கு இடையில் 38%-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது அதிகரித்து வரும் நுகர்வு மற்றும் தரவு மைய முதலீடுகளால் தூண்டப்படுகிறது.


இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பெய்ஜிங்கின் செல்வாக்கை எதிர்கொள்ள அமெரிக்கா ஒரு நீண்டகால கொள்கையைக் கொண்டுள்ளது. இந்த சூழலில், இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, குறிப்பாக கடல்சார் கேபிள்கள், ஒரு முக்கியமான சொத்து. அதற்கு இன்னும் வலுவான பாதுகாப்பு தேவை.


நடவடிக்கைகள் தேவை


முதலீட்டாளர்கள் சந்தையில் நுழைவதை இந்தியா எளிதாக்க வேண்டும். கடலுக்கடியில் கேபிள்களுக்கு உரிமம் வழங்குவதற்கான விதிகள் மிகவும் சிக்கலானவை மற்றும் மாற்றப்பட வேண்டும். கேபிள்களை அமைப்பதற்கு பல்வேறு அரசாங்க அமைச்சகங்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட ஒப்புதல்கள் தேவை. மேலும், இந்தியா வெளிநாட்டு கேபிள் பழுதுபார்க்கும் கப்பல்களைச் சார்ந்துள்ளது. இந்தக் கப்பல்கள் பெரும்பாலும் சிங்கப்பூர் மற்றும் துபாயில் அமைந்துள்ளன. கேபிள் பிரச்சனை ஏற்படும்போது, ​​இந்தக் கப்பல்கள் அதை சரிசெய்ய மூன்று முதல் ஐந்து மாதங்கள் வரை ஆகும். கப்பல்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால் இந்த தாமதம் ஏற்படுகிறது. அவை மெதுவான சுங்க சோதனைகளையும் எதிர்கொள்கின்றன, கடற்படையின் அனுமதி தேவை, மேலும் அவற்றின் குழுவினருக்கு ஒப்புதல் தேவை. இந்த தாமதங்கள் நிதி சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.


இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் முக்கியமான டிஜிட்டல் உள்கட்டமைப்பில் அமெரிக்கா அதிக முதலீடு செய்ய வேண்டும். இதில் குறைந்த வட்டி கடன்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதும் அடங்கும். கேபிள் பாதை பன்முகத்தன்மையை ஆதரிப்பது மற்றும் சைபர் பாதுகாப்பை மேம்படுத்துவதும் இதன் பொருள். கேபிள் திட்டங்களில் முன்னணியில் இருக்க அமெரிக்கா தனது நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்.


உதாரணமாக, மெட்டா 50,000 கிலோமீட்டர் கடலுக்கு அடியில் கேபிள் திட்டத்தில் முதலீடு செய்கிறது. இந்த திட்டம் இந்தியப் பெருங்கடல் முழுவதும் இணைப்பை மேம்படுத்தும். இது பிப்ரவரி 2025-ல் அமெரிக்கா-இந்தியா கூட்டணித் தலைவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் தொடங்கும் மற்றும் ஐந்து கண்டங்களை இணைக்கும்.


உள்ளூர் நீர்மூழ்கி கேபிள் பழுதுபார்க்கும் அமைப்பை உருவாக்குவதையும் அமெரிக்கா ஆதரிக்க வேண்டும். பழுதுபார்க்கும் கிடங்குகளை உருவாக்குதல் மற்றும் இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்களைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். இந்த முயற்சிகள் TRUST கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.


இறுதியாக, மேம்படுத்தப்பட்ட கடலடி கேபிள் ஒத்துழைப்பு, தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்யும், ஏனெனில் இது மிகவும் ஆற்றல்மிக்க தொழில்நுட்ப ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் துறைகளில் உடனடி நடவடிக்கைகள், பிராந்தியத்தின் டிஜிட்டல் மீள்திறனை மேம்படுத்தி, பகிரப்பட்ட இராஜதந்திர மற்றும் வணிக இலக்குகளை முன்னேற்றும்.


வேதிகா பாண்டே, துருவ் சேகர், சம்ரிதி குமார் ஆகியோர் புது தில்லியில் உள்ள கோன் ஆலோசனைக் குழுவில் தொழில்நுட்பக் கொள்கை ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர்.


Original article:
Share: