பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை நிறுவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை (EU’s Digital Markets Act) போன்ற ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
டிஜிட்டல் பொருளாதாரத்தின் எழுச்சி அதை ஒழுங்குபடுத்துபவர்களுக்கு சில சவால்களைக் கொண்டுவருகிறது. பெரிய நிறுவனங்கள் போட்டிக்கு இடையூறாக இல்லை என்பதை உறுதி செய்யும் அதே நேரத்தில் அவர்கள் மேம்பட்டு வரும் டிஜிட்டல் சந்தையை ஆதரிக்க வேண்டும். இந்த சவாலுக்கு ஒரு எடுத்துக்காட்டு, Google- இன் விதிகளைப் பின்பற்றாததற்காக அதன் Playstore-லிருந்து செயலிகளை அகற்றுவதற்கான சமீபத்திய நடவடிக்கை ஆகும். Google-ன் ஆன்லைன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் விரிவான அணுகலைக் கொண்டுள்ளன. இது, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க ஆற்றலை அளிக்கிறது. அவை, நுகர்வோரின் நடத்தையில் செல்வாக்கு செலுத்துவதற்கும், உலகளாவிய அளவில் அரசியல் தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் Google ஐ பயன்படுத்துகின்றன.
இந்தியாவில், கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் (Google's Android operating system) திறன்பேசி சந்தையில் (smartphone market) கிட்டத்தட்ட 85% ஆதிக்கம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களுக்கான செயலியை உருவாக்கும் இந்திய நிறுவனங்கள் மீது அதிகக் கட்டணங்களைச் சுமத்துவது போன்ற நுழைவுக்கானத் தடைகளை அமைத்து, அதன் PlayStore-ன் செல்வாக்கை Google நிறுவனம் பயன்படுத்துகிறது. இந்நிறுவனங்களின் செயலிகளை PlayStore லிருண்டு Google அகற்றுவது அதன் ஏகபோக சக்தியை (monopolistic muscle) பிரதிபலிக்கிறது. புத்தொழில் நிறுவனங்களின் புகார்கள் இருந்தபோதிலும், இந்திய போட்டி ஆணையம் (Competition Commission of India (CCI)) நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டி வருகிறது. பிரச்சினை எழுப்பப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இதற்கு நேர்மாறாக, தங்கள் ஆப் ஸ்டோர்களில் போட்டிக்கு எதிரான நடைமுறைகளுக்காக Google மற்றும் ஆப்பிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக ஐரோப்பிய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்க இந்தியா நிறுவனங்களையும் பொறுப்பாக்க வேண்டும். நியாயமற்ற நுழைவுத் தடைகள் இல்லாத நியாயமான சந்தை, இந்தியாவின் வளர்ந்து வரும் புத்தொழில் தொடங்குவதற்கான சூழலுக்கு முக்கியமானது.
இந்தியா பன்முக அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். முதலாவதாக, ஏகபோக நடைமுறைகளைத் தடுக்க, புத்தொழில் நிறுவனங்களுக்கு Google வசூலிக்கக்கூடிய கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியமானது. வணிகத்தின் மீதான பொதுவாக சந்தையானது அதிகாரத்தால் வழிநடத்தப்பட்டாலும், ஏகபோக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போது அரசின் தலையீடு அவசியமாகிறது. 11% முதல் 26% வரையிலான கட்டணத்தை Google நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பல புதிய தொடக்கங்களுக்கு அதிகமாக இருக்கலாம். இருப்பினும், செயலியை உருவாக்குபவர்கள் தங்கள் விற்பனையில் 40-50% க்கும் அதிகமான பகுதியை PlayStore-ன் விரிவான வரம்பிற்குக் காரணம் என்று குறிப்பிடுவது முக்கியம். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தலைமையில் நடந்து வரும் முயற்சிகள், கூகுள் தனது சேவைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டணத்தை நிர்ணயிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவை, நியாயமான மற்றும் சமநிலையான தீர்வுக்காக பாடுபட வேண்டும். இரண்டாவதாக, இயங்குதளங்கள் (operating systems) அல்லது வன்பொருள் பிராண்டுகளைப் (hardware brands) பொருட்படுத்தாமல், PlayStore-க்கு இந்தியா தொழில்துறை சார்ந்த ஒரு மாற்றத்தை அரசாங்கம் உருவாக்கவும் மற்றும் அனைத்து சாதனங்களிலும் அதன் அணுகலை உறுதி செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை உள்ளூர் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் மற்றும் நியாயமான நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள கூகுளைத் தூண்டும். இந்தியாவின் இருப்பு தயாரிப்புகளான UPI (Unified Payments Interface) மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க் (Open Network for Digital Commerce (ONDC)) போன்றவை டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் மின்-வர்த்தகத்தை கணிசமாக முறைப்படுத்தியுள்ளன. இதே மாதிரி ஒரு இந்திய செயலியை நிறுவ நாம் பயன்படுத்தலாம்.
மூன்றாவதாக, ஜெயந்த் சின்ஹா தலைமையிலான நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு (Parliamentary Standing Committee) முன்வைத்த பரிந்துரைகளை அரசு ஆராய வேண்டும். அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தைகள் சட்டம் (Digital Markets Act (DMA)) போன்ற ஒரு சட்டத்தை உருவாக்க முன்மொழிகிறார்கள். இது பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பை கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு தனித்துவமான டிஜிட்டல் போட்டிச் சட்டத்தின் (Digital Competition Law) அவசியத்தை ஆராய பெருநிறுவன விவகார அமைச்சகம் (Ministry of Corporate Affairs) பிப்ரவரி 2023 இல் டிஜிட்டல் போட்டிச் சட்டம் (Digital Competition Law) குறித்த குழுவை நிறுவியது. ஆனால், அந்தக் குழு இன்னும் அதன் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. ஒரு சட்ட கட்டமைப்பு இல்லாமல், நியாயமற்ற சந்தை நடைமுறைகளை எதிர்கொள்வது சவாலானதாக இருக்கும்.