புவி வெப்பமடைதலுக்கு கார்பன் டை ஆக்சைடுக்கு அடுத்தபடியாக மீத்தேன் இரண்டாவது பெரிய காரணியாக உள்ளது. வெவ்வேறு இடங்களிலிருந்து எவ்வளவு மீத்தேன் வெளியிடப்படுகிறது, அதை யார் வெளியிடுகிறார்கள், காலப்போக்கில் அந்த உமிழ்வு அதிகரிக்கிறதா, அல்லது குறைகிறதா, என்பதை மீத்தேன்சாட் (MethaneSAT) கண்டுபிடிக்கும்.
உலகளவில் மீத்தேன் உமிழ்வைக் கண்காணிக்கவும் அளவிடவும் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோள் மீத்தேன்சாட்(MethaneSAT), கலிபோர்னியாவிலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் (SpaceX Falcon9 rocket) மூலம் திங்கள்கிழமை மார்ச் 4 விண்ணில் ஏவப்பட்டது.
சலவை இயந்திரத்தின் (washing-machine) அளவிலான செயற்கைக்கோள் மீத்தேன் உமிழ்வைக் கண்டறிந்து அளவிடும் முதல் விண்கலம் அல்ல என்றாலும், இது கூடுதல் விவரங்களை வழங்கும் மற்றும் அதன் முன்னோடிகளை விட மிகவும் பரந்த பார்வையைக் கொண்டிருக்கும்.
மீத்தேன்சாட் (MethaneSAT) பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது.
முதலில், மீத்தேன் உமிழ்வுகளை நாம் ஏன் கண்காணித்து அளவிட வேண்டும்?
மீத்தேன் ஒரு சக்திவாய்ந்த பசுமை இல்ல வாயு, இது புவி வெப்பமடைதலை ஏற்படுத்துவதில் கார்பன் டை ஆக்சைடுக்கு அடுத்தபடியாக உள்ளது. தொழில்துறை புரட்சிக்குப் பிறகு புவி வெப்பமடைதலில் சுமார் 30% க்கு இந்த மீத்தேன் வாயு பொறுப்பாகும். ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் படி (United Nations Environment Programme), 20 ஆண்டு காலங்களில் கார்பன் டை ஆக்சைடை விட மீத்தேன் புவி வெப்பமயமாதலில் 80 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.
கூடுதலாக, மீத்தேன் பூமியின் மேற்பரப்புக்கு சற்று மேலே உள்ள தீங்கு விளைவிக்கும் வாயுவான தரை மட்ட ஓசோனை உருவாக்க பங்களிக்கிறது. 2022 ஆம் ஆண்டின் ஒரு அறிக்கை, தரை மட்ட ஓசோனின் வெளிப்பாடு ஆண்டுதோறும் சுமார் ஒரு மில்லியன் அகால மரணங்களுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறது.
எனவே, மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைப்பது முக்கியம். மற்றும் முக்கிய உமிழ்வுகள் புதைபடிவ எரிபொருள் செயல்பாடுகள், இது மனிதனால் ஏற்படும் மீத்தேன் உமிழ்வுகளில் சுமார் 40 சதவீதம் ஆகும். இந்த இலக்கை அடைய உதவுவதே மீத்தேன்சாட் (MethaneSAT) இன் நோக்கம்.
மீத்தேன்சாட் (MethaneSAT) என்றால் என்ன?
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியம் (Environmental Defense Fund (EDF)), அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற சுற்றுச்சூழல் வாதிடும் குழு, மீத்தேன்சாட்டுக்கு பொறுப்பாகும். அவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (Harvard University), ஸ்மித்சோனியன் வானியற்பியல் ஆய்வுக்கூடம்(Smithsonian Astrophysical Observatory), மற்றும் நியூசிலாந்து விண்வெளி நிறுவனம் (New Zealand Space Agency) ஆகியவற்றுடன் இணைந்து செயற்கைக்கோளை உருவாக்கினர்.
எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் கவனம் செலுத்தும் மீத்தேன்சாட் தினமும் 15 முறை பூமியை சுற்றி வரும். மீத்தேன் எங்கிருந்து வருகிறது, யார் பொறுப்பு, உமிழ்வு அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பன போன்ற ஏராளமான தரவுகளை இது சேகரிக்கும்.
மீத்தேன்சாட் சேகரிக்கும் தரவு நிகழ்நேரத்தில் இலவசமாகக் கிடைக்கும். இது மீத்தேன் உமிழ்வைக் குறைக்க பங்குதாரர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் உடனடியாக செயல்பட உதவும்.
மீத்தேன்சாட்டின் சிறப்பம்சங்கள் என்ன?
மீத்தேன் உமிழ்வைக் கண்காணிப்பது மற்றும் அவற்றை அளவிடுவது வரலாற்று ரீதியாக கடினமாக உள்ளது. சில செயற்கைக்கோள்கள் விரிவான தரவை வழங்குகின்றன, ஆனால் குறிப்பிட்ட தளங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. மற்றவைகள் பெரிய பகுதிகளை உள்ளடக்கியது. ஆனால், பல பிராந்தியங்களில் அதிக உமிழ்விற்க்கு பங்களிக்கும் சிறிய ஆதாரங்களைக் கண்டறிய முடியாது என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியம் தெரிவித்துள்ளது.
இந்த முரண்பாட்டின் காரணமாக, சர்வதேச ஆற்றல் முகமை (IEA) அறிக்கையின்படி, உலகளாவிய மீத்தேன் உமிழ்வு தேசிய அரசாங்கங்களால் அறிவிக்கப்பட்ட அளவை விட 70 சதவீதம் அதிகமாக உள்ளது.
மீத்தேன்சாட் இந்த சிக்கலை தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உயர் தெளிவுத்திறன் கொண்ட அகச்சிவப்பு சென்சார் (high-resolution infrared sensor) மற்றும் ஸ்பெக்ட்ரோமீட்டர் (spectrometer) மூலம், மீத்தேன் செறிவுகளில் உள்ள சிறிய வேறுபாடுகளைக் கூட பில்லியனுக்கு மூன்று பகுதிகள் வரை கண்டறிய முடியும். இது முந்தைய செயற்கைக்கோள்களால் தவறவிடப்பட்ட சிறிய உமிழ்வு மூலங்களைக் கண்டறிய அனுமதிக்கிறது. மீத்தேன்சாட் "சூப்பர் உமிழ்ப்பான்கள்" (super emitters) என்று அழைக்கப்படும் பெரிய உமிழ்ப்பான்களைக் கண்டறிய 200 கிமீ முதல் 200 கிமீ வரை பரந்த பார்வையைக் கொண்டுள்ளது.
சேகரிக்கப்பட்ட தரவுகள் திட்ட பங்காளி (mission partner) நிறூவனமான கூகுள் உருவாக்கிய மேகக்கணினி (cloud-computing) மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்படும். மேலும் தரவு கூகுளின் எர்த் எஞ்சின் இயங்குதளம் (Google’s Earth Engine platform) மூலம் பகிரங்கப்படுத்தப்படும் என்று தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
மீத்தேன்சாட்டால் சேகரிக்கப்பட்ட தரவு மேகக் கணினி (cloud computing) மற்றும் செயற்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்படும், இதை திட்டத்தின் ஒரு பங்குதாரரான கூகுள் வழங்கும். தி நியூயார்க் டைம்ஸின் (New York Times) அறிக்கையின்படி, கூகிளின் எர்த் எஞ்சின் தளத்தின் (Google's Earth Engine platform) மூலம் தகவல் பொதுமக்களுக்கு அணுகப்படும்.
இது ஏன் முக்கியமானது?
மீத்தேன் தொடர்பான விதிகளை உலகம் கடுமையாக்கியுள்ள நிலையில், மீத்தேன்சாட் விண்ணில் ஏவப்படுகிறது. 150 க்கும் மேற்பட்ட நாடுகள் 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய மீத்தேன் உறுதிமொழியில் கையெழுத்திட்டன, இது 2030 க்குள் 2020 நிலைகளில் இருந்து அவற்றின் ஒருங்கிணைந்த மீத்தேன் உமிழ்வை குறைந்தது 30%ஆக குறைக்கும் நோக்கில் உள்ளது. கடந்த ஆண்டு COPஇல், 50 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீத்தேன் உமிழ்வு மற்றும் வழக்கமான எரிப்பு தன்மையை கிட்டத்தட்ட அகற்றுவதாக உறுதியளித்தன. இந்த இலக்குகளை அடைய மீத்தேன்சாட் (MethaneSAT) அவர்களுக்கு உதவும்.
இந்த செயற்கைக்கோள் வெளிப்படைத் தன்மையின் புதிய சகாப்தத்தையும் கொண்டு வரும். உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் அதன் தரவு, அரசாங்கங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அளித்த மீத்தேன் குறைப்பு வாக்குறுதிகளைக் கண்காணிக்கும்.
இருப்பினும், மாசுபடுத்துபவர்களை அவற்றின் உமிழ்வைக் கட்டுப்படுத்த தரவு கட்டாயப்படுத்தும் என்று அர்த்தமல்ல. மீத்தேன்சாட் (MethaneSAT) உடன் தொடர்பில்லாத டியூக் பல்கலைக்கழகத்தின் (Duke University) பூவி அறிவியல் பேராசிரியர் (earth-science professor) ட்ரூ ஷிண்டெல் (Drew Shindell) தி நியூயார்க் டைம்ஸிடம் "இந்த தகவல் நடத்தையின் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்று கூறினார்.