இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் அம்மாநிலத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்களாக மாற்றும் இருகுழந்தை விதிமுறையை (two-child norm) நீக்க ஆந்திரப் பிரதேச அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
புதன்கிழமையன்று முதல்வர் என் சந்திரபாபு நாயுடு அமைச்சரவை எடுத்த முடிவு, இருகுழந்தை விதிமுறையை (two-child norm) நீக்க முடிவு செய்தனர். இந்த விதி முன்பு இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மாநிலத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களாக ஆக்கியது.
1955-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநகராட்சிச் சட்டம் (Andhra Pradesh Municipal Corporation Act) மற்றும் 1965-ம் ஆண்டு ஆந்திர மாநகராட்சிச் சட்டத்தை மாற்ற அமைச்சரவை முடிவு செய்தது. இந்த மாற்றங்கள் மாநகராட்சிகள் (municipal corporations) மற்றும் நகராட்சிகளுக்கு (municipalities) பொருந்தும் என குறிப்பிட்டது. 1994-ம் ஆண்டு ஆந்திர பஞ்சாயத்து ராஜ் சட்டத்தையும் (Andhra Panchayat Raj Act) அவர்கள் திருத்தினார்கள். இதில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடுக்கும் விதிகளை இந்த திருத்தங்கள் நீக்குகின்றன.
மாறிவரும் சமூக-பொருளாதார நிலைமைகள் மற்றும் மொத்த கருவுறுதல் விகிதம் (total fertility rate (TFR)) குறைந்து வருவதால் இருகுழந்தை விதிமுறை (two-child norm) ரத்து செய்யப்பட்டதாக மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கொலுசு பார்த்தசாரதி விளக்கினார். மேலும், தேசியளவில், மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 2.11 ஆகவும், ஆந்திரப் பிரதேசம் 1.5 ஆகவும் உள்ளது. மாநிலத்தில் ஆண்களின் சராசரி கருவுறுதல் வயது 32.5 ஆகும். இது, 2047-ல் 40 வயதாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களின் சராசரி வயது 29 எனவும், 2047-க்குள் 38 வயதாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கு மக்கள் பங்களிப்பதைக் குறைக்கும் என்று அமைச்சர் கூறினார்.
ஆந்திராவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் சதவீதம் தற்போது 11% ஆக உள்ள நிலையில், இது 2047-ல் 19% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தேசிய சாராசரியளவானது தற்போது, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10% ஆக உள்ளது. இது 2047-ல் 15% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ‘இருகுழந்தை விதிமுறை’யை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று பார்த்தசாரதி கூறினார்.
கூடுதல் முடிவாக, ஆந்திர பிரதேச பொது பாதுகாப்பு சட்டம் (AP Public Security Act) 1992-ன் பிரிவு 3 இன் கீழ் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்) மற்றும் புரட்சிகர ஜனநாயக முன்னணி (RDF) கட்சி மீதான தடையை அமைச்சரவை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்தது.
“இந்தத் தடை ஆகஸ்ட் 17, 2005 முதல் நடைமுறையில் உள்ளது. இது இடதுசாரி தீவிரவாத சித்தாந்தத்தைப் பரப்பும் அமைப்புகளை குறிவைக்கிறது. இந்த குழுக்கள் மாநில அரசின் திட்டங்களை எதிர்த்து சமூகத்தில் அமைதியின்மையை உருவாக்குகின்றன. அவர்கள் பொது மற்றும் தனியார் சொத்துக்களையும் சேதப்படுத்துகிறார்கள் மற்றும் மாநிலத்தில் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்கிறார்கள்” என்றார்.
தற்போதைய கலால் கொள்கையை (excise policy) மாற்றியமைக்க அமைச்சரவை முடிவு செய்தது. இந்தக் கொள்கையில் குறைபாடு இருப்பதாகவும், கடந்த ஐந்தாண்டுகளில் வருவாயில் கணிசமான அளவு ₹18,000 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் அது நம்புகிறது. கலால் துறையை (excise department) சீரமைக்க அமைச்சரவை துணைக் குழு அமைக்கப்படும் என்று பார்த்தசாரதி அறிவித்தார். இந்த துணைக்குழு புதிய தடை மற்றும் கலால் கொள்கையை உருவாக்கும். இந்த புதிய கொள்கை அக்டோபர் 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டு சுமார் ஒன்றரை மாதங்களில் தயாராகிவிடும் என்று குறிப்பிட்டார்.
வரி செலுத்தப்படாத மதுபானம், கஞ்சா மற்றும் பிற போதைப் பொருட்களை மாநிலத்திற்குள் கடத்துவதைத் தடுக்க புதிய காவல்துறைப் பிரிவு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும், அனைவருக்கும் மலிவு விலையில் தரமான மதுபானம் வழங்குவதற்கு இந்த காவல்துறைப் பிரிவினர் கவனம் செலுத்துவர் எனவும் குறிப்பிட்டிருந்தது. மேலும், மதுபான விற்பனை நிலையங்களில் 100% டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
மேலும், அமைச்சரவை மற்றொரு முடிவை எடுத்தது. இதில், அவர்கள் 21,86,000 புதிய நில உரிமைப் பத்திரங்களை (new land right title deeds) மீண்டும் வழங்குவார்கள். இந்த பத்திரங்களில் மாநில அரசு சின்னம் (government emblem) மற்றும் QR குறியீடு (QR code) இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
பட்டா வழங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து மக்களிடம் இருந்து பல புகார்கள் வந்ததால், வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமசபை மூலம் விழிப்புணர்வு நடத்துவதற்கும், இந்தக் கூட்டங்கள் மூலம் உண்மையான பயனாளிகளை கண்டறிய உதவும். மேலும், இந்த திட்டம் அடுத்த மூன்று மாதங்களில் செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் பரிந்துரைத்தார். அத்துடன், அதுவரை எந்தவொரு புதிய பதிவுகள் அனுமதிக்கப்பட மாட்டாது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.