உச்சநீதிமன்றம் அதன் சொந்த தீர்ப்புகளை அரிதாகவே மதிப்பாய்வு செய்கிறது. தீர்ப்புகளில் உள்ள சில தவறுகளை சரி செய்து நீதியை நிலை நிறுத்துவதே உச்ச நிதிமன்றத்தின் நோக்கமாகும்.
என்ன வழக்கு ?
ஜூலை 27, 2022 அன்று, விஜய் மதன்லால் சவுத்ரி வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா (Vijay Madanlal Choudhary v. Union of India ) வழக்கில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் முக்கிய விதிகளை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 540 பக்க தீர்ப்பில், மனுதாரர்களால் சவால் செய்யப்பட்ட அனைத்து பிரச்சினைகளிலும் அரசாங்கத்தின் வாதங்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பிணை (bail) வழங்கும்போது குற்றமற்றவர் என்ற அனுமானத்தை மாற்றியமைப்பது முதல் நிதிச் சட்டத்தின் கீழ் பண மசோதாவாக திருத்தங்களை நிறைவேற்றுவது மற்றும் அமலாக்க இயக்குநரகத்தின் (Enforcement Directorate (ED)) அதிகாரங்களை வரையறுப்பது ஆகியவை இதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு மாதம் கழித்து, ஆகஸ்ட் 25, 2022 அன்று, மதன்லால் முடிவை மறுபரிசீலனை செய்ய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முடிவு செய்தது. இந்த மனுவை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ளார். இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவில் உள்ள இரண்டு விஷயங்களை பரிசீலிக்க வேண்டும் என்று கூறியது.
மதிப்பாய்வுக்கான (grounds for review) காரணங்கள் என்ன?
பிணை (bail) விதிகள்: மதன்லால் வழக்கில், பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோர்க்கு கடுமையான பிணை நிபந்தனைகள் அவசியம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற பணமோசடி தடுப்பு சட்டத்தின் பிணை விதிகளை (bail provisions) உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
மனுதாரர்கள் முதல் தகவல் அறிக்கை , குற்றப்பத்திரிக்கை அல்லது வழக்கு நாட்குறிப்பு இல்லாமல், அரசுத் தரப்பு பயன்படுத்திய ஆவணங்கள் இல்லாமல், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தாம் குற்றவாளி இல்லை என்ற உண்மையை நிரூபிக்க முடியாது என்று வாதிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் குற்றவாளிகள் இல்லை என்று சிறப்பு நீதிமன்றத்தில் காட்ட முடியாது என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.
அமலாக்க இயக்குநகரமானது ‘’காவல்துறையிலிருந்து’’ வேறுபட்டது:
மதன்லால் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பணமோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 50-ஐ உறுதிப்படுத்தியது. இது அமலாக்க இயக்குநகரக அதிகாரிகளுக்கு எந்தவொரு நபரிடமிருந்தும் உறுதிமொழியை பதிவு செய்ய அதிகாரம் அளிக்கிறது. காவல்துறைக்கு அளிக்கப்படும் அறிக்கைகள் அல்லது வாக்குமூலங்களைப் போல் இல்லாமல் அமலாக்க இயக்குநகரக நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். அமலாக்க இயக்குநகரக அதிகாரிகள் "காவல்துறை அதிகாரிகள்" அல்ல என்றும், விசாரணை அமைப்பின் அதிகாரிகள் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. மேலும், அமலாக்க இயக்குநரகம் (ED) கைது செய்யப்பட்ட நபரிடம் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையின் (Enforcement Case Information Report (ECIR)) நகலை வழங்கத் தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அமலாக்க இயக்குநரகம் தனது முடிவை எடுக்கும்போது தண்டனை அதிகாரங்களை வழங்கும் தெளிவான விதிகளை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.
தீர்ப்பு எவ்வாறு மதிப்பாய்வு செய்யப்படுகிறது?
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது மற்றும் பிணைப்புக்குரியது (binding). எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 137-வது (Article 137) பிரிவு அதன் தீர்ப்புகள் அல்லது உத்தரவுகளை மறுபரிசீலனை செய்யும் அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திற்கு வழங்குகிறது. தீர்ப்பு வெளியான 30-நாட்களுக்குள் மறு ஆய்வு செய்ய மனு தாக்கல் செய்ய வேண்டும். மரண தண்டனை தொடர்பான வழக்குகளைத் தவிர, மறு ஆய்வு மனுக்களை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்காமல், நீதிபதிகள் தங்கள் அறைகளில் "சுழற்சி" முறையில் விசாரிக்கின்றனர். வழக்கறிஞர்கள் பேசும் வாதங்களுக்குப் பதிலாக எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளுடன் தங்கள் வழக்கை முன் வைக்கின்றனர். தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் மறுஆய்வு மனு மீதும் முடிவு செய்கிறார்கள்.
உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்புகளின் மதிப்பாய்வுகளை அரிதாகவே வழங்குகிறது. நீதியின் சிதைவுக்கு காரணமான கடுமையான பிழைகளை சரிசெய்வதற்கு குறுகிய அளவில் மறுஆய்வு அனுமதிக்கப்படுகிறது. "பதிவின் முகத்தில் ஒரு தவறு தெளிவாகத் தெரிகிறது" என்பது மறுபரிசீலனை செய்யப்படும் அடிப்படைகளில் ஒன்றாகும். இந்த தவறு கண்கூடாக மற்றும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.