ஆப்பிரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் குழு (African Group of Negotiators (AGN)) இந்தியாவின் நிலைப்பாட்டை வலுவாக ஆதரித்தது. இது, வளரும் நாடுகளிடையே ஒரு ஐக்கிய முன்னணியை பிரதிபலித்துள்ளது.
COP29 காலநிலை பேச்சுவார்த்தைகள் உலகளாவிய தெற்கிற்கு ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. இந்தப் பகுதியில், காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள், காலநிலை தணிப்பு நடவடிக்கைக்கு உறுதியளிக்க, இந்தியா ஒரு முக்கியமான சுற்று பேச்சுவார்த்தைகளின் போது, இந்தியாவின் முன்னணி பேச்சுவார்த்தையாளர்கள், உலக நாடுகளில் குறைந்தபட்சம் $1.3 டிரில்லியன் திரட்ட உறுதியளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
வியாழக்கிழமை அன்று, காலநிலை நிதி தொடர்பான உயர்மட்ட அமைச்சர்களின்போது, இந்தியாவின் முன்னணி பேச்சுவார்த்தையாளர் நரேஷ் பால் கங்வார் ஒரு எச்சரிக்கையை எழுப்பினார். இதில், பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் வளர்ந்த நாடுகளின் நிதிக் கடமைகளை பலவீனப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்த பேச்சுவார்த்தைகளில் முன்னோடியில்லாத வகையில் புதைபடிவ எரிபொருள் நலன்களின் முன்னிலையில் இது வந்தது.
2030-ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது $1.3 டிரில்லியன் டாலர்கள் செலவழிக்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகளை கங்வார் வலியுறுத்தினார். இந்த ஆதரவு வளரும் நாடுகளுக்கு மானியங்கள், சலுகை நிதி மற்றும் கடனைத் தூண்டாத உதவி மூலம் வர வேண்டும். வளரும் நாடுகள் காலநிலை தாக்கங்களால் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்வதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தணிப்பு மற்றும் தழுவல் (mitigation and adaptation) நடவடிக்கைகள் ஆகிய இரண்டிற்கும் நிதியளிக்க அவர்கள் போராடுகின்றனர்.
"காலநிலை மாற்றத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தில் நாங்கள் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். இங்கு நாம் எடுக்கும் முடிவுகள் நம் அனைவருக்கும் குறிப்பாக உலகளாவிய தெற்கில் உள்ளவர்களுக்கு உதவும். இந்த முடிவுகள், காலநிலை தாக்கத்தை குறைக்கவும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்பவும் துணிச்சலான நடவடிக்கை எடுக்க அனுமதிக்கும்,” என்றார் நரேஷ் பால் கங்வார். வளரும் நாடுகளை பாதிக்கும் தீவிர வானிலை நிகழ்வுகளின் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் தீவிரத்தை அவர் எடுத்துரைத்தார்.
காலநிலை நிதி தொடர்பான, புதிய கூட்டு அளவுகோலை (New Collective Quantified Goal (NCQG)) மாற்றும் முயற்சிகளுக்கு எதிராக இந்தியா வலுவான நிலைப்பாட்டை எடுத்தது. இந்த இலக்கு பாரிஸ் ஒப்பந்தத்தின் $100 பில்லியன் ஆண்டு இலக்கை மாற்றுவதாகும். 100 பில்லியன் டாலர் இலக்கு 2009-ம் ஆண்டில் வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பூர்த்தியடையவில்லை. NCQG-யை முதலீட்டுக்கான இலக்காக மாற்றக் கூடாது என்று கங்வார் வலியுறுத்தினார். இது ஒரு நிதிக்கான இலக்காக இருக்க வேண்டும். அங்கு வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு ஆதரவை வழங்குகின்றன. மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் ஆணைக்கு அப்பாற்பட்ட விதிமுறைகளை இலக்கில் சேர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.
இந்த தலையீடு இரண்டு முக்கிய கவலைகளை எடுத்துரைத்தது. முதல் கவலை காலநிலை நிதிக் கடமைகளை மாற்றும் முயற்சியாகும். இது வளர்ந்த நாடுகளில் உள்ள பொது ஆதாரங்களில் இருந்து சந்தைக்கான வழிமுறைகள் மற்றும் தனியார் முதலீட்டிற்கு நிதிக்கான பொறுப்பை மாற்றும். இரண்டாவது கவலை, பாரம்பரிய பொறுப்பை அங்கீகரிக்க வேண்டும். பாரீஸ் ஒப்பந்தம் இந்த பொறுப்பை வளர்ந்த நாடுகள் மீது தெளிவாக சுமத்தியுள்ளது.
ஆப்பிரிக்க பேச்சுவார்த்தை குழு (African Group of Negotiators (AGN)) இந்தியாவின் நிலைப்பாட்டை வலுவாக ஆதரித்துள்ளது. இது வளரும் நாடுகளுக்கிடையேயான ஐக்கிய முன்னணியைக் காட்டுகிறது. ஆப்பிரிக்க பேச்சுவார்த்தை குழு (AGN) தலைவர் அலி டி முகமது, “பாரிஸ் ஒப்பந்தத்தின் கடமைகளை மாற்றும் முயற்சிகளுக்கு எதிராக நாங்கள் உறுதியாக நிற்கிறோம். வளர்ந்த நாடுகளால் செய்யப்பட்ட நிதியுதவி உறுதிமொழிகள் இன்னும் இணைக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்கா மற்றும் பிற வளரும் நாடுகளுக்கு, $1.3 டிரில்லியன் நிதியை காலநிலை தழுவல், மீள்தன்மை மற்றும் உமிழ்வு குறைப்புகளை அடைவதற்கு இது முக்கியமானது.
இந்தியாவின் அறிக்கை COP29-ல் முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த முன்னேற்றம் பிரேசிலில் COP-30 நோக்கிய வேகத்தைத் தக்கவைக்க முக்கியமானது. COP30-ல், நாடுகள் புதுப்பிக்கப்பட்ட தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை (Nationally Determined Contributions (NDC)) சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள உறுதிமொழிகளில், குறிப்பாக 2009-ம் ஆண்டு முதல் நிறைவேற்றப்படாத 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள உறுதிமொழியில் வளர்ந்த நாடுகளின் செயல்திறன் குறித்து கங்வார் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். "ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இதற்கான இலக்குகளை வெளிப்படுத்துவதற்கான பொதுவான காலக்கெடு எங்களிடம் உள்ளது. இங்கு, காலநிலை நிதியைப் பொறுத்தவரையிலும் இதேபோன்ற தேவை உள்ளது. மேம்பட்ட இலக்குகளை செயல்படுத்துவதற்கும் இந்த COP29-ஐ வெற்றிகரமாக மாற்றுவதற்கும் வளர்ந்த நாடுகள் தங்கள் பொறுப்பை உணரும் என்று நாங்கள் மிகவும் நம்புகிறோம், "என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிதி விவாதங்களின் விளைவு பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைவதற்கான உலகளாவிய சமூகத்தின் திறனை கணிசமாகப் பாதிக்கும். குறிப்பாக, சமீபத்திய மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகள் உலகம் ஏற்கனவே 1.3 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது என்பதைக் காட்டுகின்றன. இது பாரிஸ் ஒப்பந்தத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட 1.5 டிகிரி செல்சியஸ் இலக்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தனியார் துறையின் நிதி போதுமானதாக இல்லை
ஆயில் சேஞ்ச் இன்டர்நேஷனலின் (Oil Change International) புதிய பகுப்பாய்வு, வளர்ந்த நாடுகள் தனியார்துறை நிதி திரட்டலுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. உலக மக்கள்தொகையில் 42%ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் குறைந்த மற்றும் குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள், 2022-ம் ஆண்டில் சுத்தமான எரிசக்தி முதலீட்டில் வெறும் 7% மட்டுமே பெற்றன என்று அறிக்கை வெளிப்படுத்தியது. இந்த ஆய்வு, வளர்ந்த நாடுகளின் காலநிலை நிதியத்திற்கான அணுகுமுறையில் ஒரு முக்கிய அடிப்படையான அனுமானத்தை ஆய்வு கேள்விக்குள்ளாக்கியது. அதாவது, பொதுநிதியின் ஒவ்வொரு டாலரும் தனியார் முதலீட்டில் $5-7 ஈர்க்க முடியும். உண்மையில், ஒவ்வொரு டாலரும் தனியார் நிதியில் 85 சென்ட் மட்டுமே ஈர்த்தது என்றும், குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் வெறும் 69 சென்ட் மட்டுமே என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நெருக்கடியில் புதைபடிவ எரிபொருள் பரப்புரையாளர்கள்
பேச்சுவார்த்தையில் புதைபடிவ எரிபொருள் துறையின் செல்வாக்கு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. குறைந்தபட்சம் 1,773 புதைபடிவ எரிபொருள் பரப்புரையாளர்கள் COP29-ல் கலந்து கொள்கிறார்கள் என்பதே இதற்குக் காரணம். Kick Big Polluters Out (KBPO) கூட்டணியின் விரிவான பகுப்பாய்விலிருந்து இந்தத் தகவல் வெளியாகிறது.
பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைவிட தொழில் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஹோஸ்ட் அஜர்பைஜான் (2,229), COP30 ஹோஸ்ட் பிரேசில் (1,914), மற்றும் Türkiye (1,862) மட்டுமே பெரியளவில் பிரதிநிதிகளை அனுப்பியுள்ளன.
"காலநிலை பேச்சுவார்த்தைகளில் புதைபடிவ எரிபொருள் பரப்புரையின் பிடியானது நமது கிரகத்தின் எதிர்காலத்தை சுற்றி வரும் ஒரு விஷ பாம்பு போன்றது" என்று KBPO வில் இருந்து Nnimmo Bassey கூறினார். அவர் பேச்சுவார்த்தைகளில் இருந்து தொழில்துறை செல்வாக்கை அகற்ற அழைப்பு விடுத்தார். KBPO பகுப்பாய்வு நவம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட UNFCCC இன் தற்காலிக பங்கேற்பாளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டது, முந்தைய COPகளின் புதைபடிவ எரிபொருள் லாபி பதிவுகள் மற்றும் வெளிப்புற பரப்புரை பதிவுகளுக்கு மேற்கோள் காட்டப்பட்டது.