மே 2-ஆம் தேதி, கியானு சலோனே மற்றும் அவரது மனைவி பசந்தி ஆகியோர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் உள்ள சுன்ராகோட் கிராமத்தில் உள்ள மலைகளுக்குச் சென்று காட்டில் உள்ள சிர் பைன் மரங்களிலிருந்து (chir pine trees) பிசின் சேகரிக்க சென்றனர். இந்த தம்பதியினர் கடந்த ஆண்டு நேபாளத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தங்கள் மூன்று குழந்தைகளின் சிறந்த வாழ்க்கை மற்றும் கல்விக்காக குடிபெயர்ந்தனர். அன்று காலை வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தது. ரமேஷ் பகுனி என்ற ஒப்பந்ததாரருக்கு மலைகளில் லீசா எனப்படும் பிசின் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், ஆறு மாதங்கள் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்தால் ₹50,000-60,000 சம்பாதித்தார்கள்.
அவர்கள் இந்த இடத்திலிருந்து புறப்படத் தயாரானபோது, ஒரு அலறல் சத்தம் கேட்டது. மலை உச்சியில் தீப்பிழம்புகளால் சூழப்பட்ட ஒரு மனிதன் ஓடுவதைக் கண்டனர். அவர் தங்கள் நண்பர் தீபக் புஜாரா என்பதை அவர்கள் அதிர்ச்சியுடன் உணர்ந்தனர். மலை உச்சிக்கு விரைந்து சென்ற சாலவுன்கள், புஜாராவின் மனைவி தாரா பாதி எரிந்த நிலையில் தரையில் கிடப்பதைக் கண்டனர். உடனடியாக அவர்கள் அருகிலிருந்த மரத்தில் இருந்த பச்சை கிளையை முறித்து புஜாராவை தாக்கத் தொடங்கினர். யாரும் அவர்களுக்கு உதவுவதற்குள், பாதிக்கப்பட்ட நான்கு பேரும் கடுமையாக எரிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கியானு சலோனேனின் குழந்தைகளிடம் பல நாட்கள் அந்தச் செய்தியைச் சொல்ல ரமேஷ் பகுனிக்கு தைரியம் இல்லை. “அவர்கள் என் தோட்டத்தில் பல மாதங்களாக விளையாடுகிறார்கள். என்ன நடந்தது என்பதை அவர்களிடம் சொல்ல எனக்கு மனம் இல்லை, ”என்று பகுனி கூறுகிறார். மேலும், மக்கள் இனி தனக்கு வேலை செய்ய மாட்டார்கள் என்று கவலைப்படுகிறார். குழந்தைகள் இப்போது நேபாளத்தின் பஜாங் மாவட்டத்தில் உள்ள அவர்களின் மாமாவின் பராமரிப்பில் உள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர், 4 பேர் காயமடைந்துள்ளனர். 2019 இந்திய வனக் கணக்கெடுப்பு (Forest Survey of India) அறிக்கையின்படி, உத்தரகண்ட் 38,000 சதுர கிலோமீட்டர் பதிவு செய்யப்பட்ட வனப்பகுதியைக் கொண்டுள்ளது. இது அதன் புவியியல் பரப்பளவில் 71.05% ஆகும். நவம்பர் 2023 முதல், 1,038 காட்டுத் தீ சம்பவங்கள் நடந்துள்ளன. அவை, மே 10 வரை 1,385.5 ஹெக்டேர் வன நிலத்தை அழித்துள்ளது. இந்த தீ விபத்துகள் மலைப்பகுதிகளில் "வருடாந்திர விவகாரங்கள்" (annual affairs) என்று அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். ஆனால், அதற்கான விளைவை மலைகளை நம்பியுள்ள மக்களே எதிர்கொள்கின்றனர்.
வனங்களின் தீச்சுடர்
உத்தரகண்ட் வனத்துறை இணையதளத்தில் உள்ள ஒரு கையேடு, உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு பலர் இடம்பெயர்ந்து செல்வதை விளக்குகிறது. இந்த இடம்பெயர்வினால் மலைகள் தரிசாக மாறிவிட்டன. உயர் அழுத்த கம்பிகள் (high-tension wires) மற்றும் சிர் பைன் மரங்கள் (chir pine trees) ஏராளமாக உள்ளதால், அவை எளிதில் எரியக்கூடியவை. இளைஞர்களுக்கு காட்டுத்தீயை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. ஏனெனில், தற்போதைய கல்விப் பாடத்திட்டம் அவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து கற்பிக்கவில்லை. மலைகளில் பெரும்பான்மையாக வசிக்கும் பழைய தலைமுறையினர், தீயைக் கட்டுப்படுத்த மலை உச்சிகளில் ஏற முடியாமல் தவிக்கின்றனர்.
மத்திய அரசின், உஜ்ஜவாலா திட்டத்தின் (Ujjawala scheme) மூலம் மலைவாழ் மக்கள் தற்போது சமையல் எரிவாயுவைப் பெறுகின்றனர். இதனால், மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதிகளுக்குச் சென்று சமையலுக்கு விறகு சேகரிக்கச் செல்வதை கிராம மக்கள் நிறுத்திவிட்டனர். இந்த மாற்றமும் காட்டுத் தீ அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது. இந்த ஆண்டு அதிகப்படியான வறட்சி மற்றும் வழக்கத்தை விட குறைவான பனிப்பொழிவு காரணமாக மேற்பரப்புகள் வறண்டுவிட்டன என்று உத்தரகண்ட் வனப்படைத் தலைவரின் பொறுப்பாளரான (Head of Forest Force) தனஞ்சய் மோகன் கூறுகிறார். இதனால் பைன் மரங்கள் நிறைந்த வனப்பகுதிகளில் தீ வேகமாக பரவி வருகிறது. வனத்துறை வலைத்தளத்தின்படி, உத்தரகண்ட் மாநிலத்தில் 3,94,383.84 ஹெக்டேர் சிர் பைன் காடுகள் உள்ளன. மேலும், இந்த மாநிலத்தில் உள்ள 13 வகையான மரங்களில் சிர் பைன் மரங்கள் 15% ஆகும்.
ஏற்கனவே தீ விபத்துக்கு உகந்த இந்த சூழலில், கிராமவாசிகள் வயல்களில் உள்ள பயிர்க் கழிவுகளை எரிக்கும்போது காட்டுத் தீ விரைவாகப் பரவுகிறது என்று அவர் கூறுகிறார். மாநிலத்தில் கிராமங்களும் காடுகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. தீவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று நம்பி நிலத்தை சுத்தம் செய்வதற்காக மக்கள் எரிந்த சிகரெட்டுகளை காட்டில் விட்டுச் செல்லும்போது அல்லது காடுகளுக்கு தீ வைக்கும்போது காட்டுத் தீ ஏற்படுகிறது, என்று அவர் கூறுகிறார்.
மாம்பழ பானம் மற்றும் ரொட்டிகளுக்காக தீயை அணைத்தல்
மே 6 அன்று, குமாவுன் இமயமலையில் (Kumaon Himalayas) கடல் மட்டத்திலிருந்து 1,900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அல்மோராவின் சிட்லகேட்டில் (Almora’s Sitlakhet), ஒரு காலத்தில் பசுமையாகவும், உயரமான மரங்கள் நிறைந்ததாகவும் இருந்த மலைகள், அடர்த்தியான புகைமூட்டம் காரணமாக கிராம வீடுகளின் பால்கனிகளில் இருந்து பார்க்க முடியாது. மரங்கள் இப்போது கருப்பு நிறத்தில் உள்ளன. எரிந்த பைன் இலைகளின் சாம்பல் காட்டின் தரையை மூடியுள்ளது. சுத்தமான மற்றும் குளிர்ந்த காற்றுக்கு பெயர் பெற்ற மலைகள், இப்போது வெப்பத்தையும் எரிந்த விறகின் வாசனையையும் வெளிப்படுத்துகின்றன. சிட்லகேட் (Sitlakhet) மற்றும் அருகிலுள்ள பக்கர் கிராமத்தைச் (Bhakar village) சேர்ந்த சுமார் 20 பெண்கள் காட்டுத் தீயை அணைத்த பின்னர் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கி வருகிறார்கள். உயரமான தீப்பிழம்புகளுக்கு எதிரான அவர்களின் ஒரே ஆயுதமான பச்சை புதர்களைப் பயன்படுத்தி, அவர்கள் 10 மணி நேரம் கடுமையாக உழைத்தனர். அவர்களின் ஆடைகள் வியர்வையிலும் சாம்பலிலும் நனைந்துள்ளன. அவர்கள் களைத்துப் போயிருக்கிறார்கள்.
சிட்லாகெட்டில் உள்ள 300 உறுப்பினர்களைக் கொண்ட 'ஜங்கிள் கே தோஸ்த்' (Jungle Ke Dost-காடுகளின் நண்பர்கள்) என்ற குழுவில் பெண்கள் உள்ளனர். இவர்களின் வழிகாட்டி கஜேந்திர பதக், 56 வயதான இவர் உள்ளூர் சுகாதார மையத்தில் மருந்தாளராக (pharmacist) பணிபுரிகிறார். கடந்த ஆண்டு, காட்டுத் தீயை நிவர்த்தி செய்வதற்கான ஒரு சமூக முயற்சிக்காக அவர் இந்த பெண்களையும் சில ஆண்களையும் ஒன்றிணைத்தார். அவரது அழைப்பின் பேரில், பெரும்பாலும் பெண்கள், தீயை அணைக்க புறப்படுகிறார்கள். அவர்களின் முயற்சிகளுக்கு பிரதிபலனாக, ஜங்கிள் கே தோஸ்த்-ன் பெண்களுக்கு 125 மில்லி லிட்டர் டெட்ரா பேக் ஃப்ரூட்டி என்ற மாம்பழ பானம் மற்றும் சில ரொட்டிகள் (125 milliliter pack of Frooti and some biscuits) வழங்கப்படுகின்றன.
நைனிடால் மாவட்டத்தின் பட்வா தாகர் கிராமத்தில், ஏப்ரல் 19 முதல் 20-க்கும் மேற்பட்ட காட்டுத்தீயை அணைக்க சுனில் ராவத் உதவியுள்ளார். "இது சிட்லாகெட்டில் மட்டும் நடக்கவில்லை. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பல கிராம மக்கள் வனத்துறைக்கு உதவ பெரிய குழுக்களாக வெளியே வருகிறார்கள். இதற்கு முன்பு இதைத் தடுக்க வனத்துறை செயல்படவில்லை. ஆனால், இப்போது இந்த சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கிறது.
நைனிடாலின் மாவட்ட வன அலுவலர் சந்திர சேகர் ஜோஷி கூறுகையில், தீயை அணைக்க உதவும் கிராமவாசிகளுக்கு ஊதியம் கேட்டு வனத்துறை மாநில அரசுக்கு ஒரு திட்டத்தை அனுப்பியுள்ளது. மாநிலத்தின் மிகப்பெரிய வனப்பகுதியை 70.67% அளவு கொண்ட நைனிடால் மாவட்டத்தில் சுமார் 300 காட்டுத் தீ கண்காணிப்பாளர்கள் உள்ளனர். அவர்களில் பாதிப் பேர் பெண்கள் ஆவர்.
உத்தரகண்டில் பதிவு செய்யப்பட்ட 38,000 சதுர கி.மீ வனப்பகுதியில், மனித நுழைவு தடைசெய்யப்பட்ட 26.5 லட்சம் ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட காடுகளை வனத்துறை நிர்வகிக்கிறது. வன பஞ்சாயத்துகள் அல்லது சமூகம் தலைமையிலான வன மேலாளர்கள் 7.32 லட்சம் ஹெக்டேரை நிர்வகிக்கின்றனர். வனத்துறை அறிக்கையின்படி, வன பஞ்சாயத்துகளால் நிர்வகிக்கப்படும் காடுகளைவிட பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தீ விபத்துகளுக்குப் பிறகு, வனத்துறையின் 4,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.3 லட்சம் காப்பீட்டுத் தொகையை மாநில அரசு அறிவித்துள்ளது.
அரசியல் விளையாட்டு
மே 8 அன்று, உத்தரகண்ட் அரசு உச்சநீதிமன்றத்தில், "காட்டுத் தீ தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் மனிதனால் உருவாக்கப்பட்டவை" என்று கூறியது. காடுகளுக்கு தீ வைத்தவர்கள்மீது மாநிலம் முழுவதும் 388 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கைது செய்யப்பட்ட நபர்கள் சருகுகளை எரிக்க முயன்றனர். ஆனால், பலத்த காற்று காரணமாக பரவிய தீயைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர்.
அரசாங்கத்தின் 380 பக்கங்கள் கொண்ட நீதிமன்ற அறிக்கை, உத்தரகாண்ட் மாநிலத்தில் 40% தீப்பிடித்துள்ளதாக சில ஊடகங்கள் கூறியதாகவும், ஆனால் அது உண்மையல்ல என்றும் கூறியுள்ளது. காடுகளில் 0.1% மட்டுமே தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியது. காட்டுத் தீயை அணைக்க மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் (State Disaster Response Force) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (National Disaster Response Force) ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்திய விமானப்படை பாம்பி பக்கெட்களை (Bambi Buckets) தீயை அணைக்க பயன்படுத்தியது.

Bambi Buckets-ஹெலிகாப்டரில் இருந்து தொங்கும் மற்றும் அதிக அளவு தண்ணீரை வெளியேற்றும் கொள்கலன்கள் |
உத்தரகண்ட் காட்டுத் தீ தணிப்புத் திட்டம் (Uttarakhand Forest Fire Mitigation Project) 2023-28 மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது என்று அரசாங்கம் மேலும் கூறியது. மாநிலத்தில் காட்டுத்தீ ஏற்படுவது புதிதல்ல என்றும், இனி "அவசர" சூழ்நிலை இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மழைப்பொழிவை அதிகரிக்கவும், மழைப்பொழிவைத் தூண்டவும் மேக விதைப்பு (cloud seeding) குறித்து ஆராய ஐ.ஐ.டி ரூர்க்கியுடன் (IIT Roorkee) கூட்டு சேர்ந்துள்ளதாக அரசாங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. காட்டுத் தீக்கு "மேக விதைப்பு அல்லது மழைக் கடவுள்களைச் சார்ந்திருப்பது தீர்வாகாது" (cloud seeding or depending on [the] rain gods is not the answer) என்று கூறி நீதிமன்றம் இந்தத் தீர்வை நிராகரித்தது.
மழை பெய்த மறுநாள், அனைத்து காட்டுத் தீயையும் நிறுத்தியதாக அரசாங்கம் கூறியது. ஆனால், தீ விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மே 17 அன்று மட்டும் 11 தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.
அதே நாளில், பிரச்சனையைச் சமாளிக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த அரசின் பதிலில் திருப்தி தெரிவித்த நீதிமன்றம் வழக்கை செப்டம்பர் 2024க்கு ஒத்திவைத்தது. காடு வளர்ப்பு இழப்பீட்டு நிதி முழுவதையும் தீயணைப்பு மற்றும் தீ தடுப்புக்கு பயன்படுத்தியதாகவும், வனத்துறையில் கள அளவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதாகவும் அரசு கூறியது.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மாநில அரசாங்கத்தை குறிவைக்க காங்கிரஸ் அதன் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த பிரச்சினையை விரைவாக பயன்படுத்தியது. ஏப்ரல் மாதத்தில் காட்டுத்தீ தொடர்ந்து காடுகளை எரித்துக் கொண்டிருந்த நிலையில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய பிற மாநிலங்களுக்குச் செல்வதில் மும்முரமாக இருந்தார். வனத்துறை அமைச்சர் சுபோத் யூனியல் கூட அசாமில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் என்று காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் கரிமா தசௌனி கூறினார்.
தனது பிரச்சாரத்தை முடித்த பிறகு, புஷ்கர் சிங் தாமி அதிகாரிகளைச் சந்தித்து, குண்டர் சட்டம் மற்றும் உத்தரகண்ட் பொது மற்றும் தனியார் சொத்து சேத மீட்பு சட்டம், 2024 (Gangster Act and the Uttarakhand Public and Private Property Damage Recovery Act) ஆகியவற்றின் கீழ் காடுகளுக்கு தீ வைப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
தீர்வுகள் எங்கே உள்ளன
சிர் பைன் மரம் தீ விபத்துக்கு நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்படுவதாக பதக் நம்புகிறார். இந்த மரத்திற்கு அதிக பராமரிப்பு தேவையில்லை, பல நன்மைகள் உள்ளன. மக்கள் அதன் மரச்சாமான்கள் தயாரிப்பதற்கும், அதன் இலைகளை அலங்காரத்திற்கும், அதன் பட்டைகளை கரி, பிசின் மற்றும் நிலக்கரி தார் செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர். கிராமவாசிகள் இந்த பொருட்களைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் விற்பனையும் செய்கிறார்கள். அவை பணம் சம்பாதிப்பதற்காக நமக்குப் பல பயனுள்ள விஷயங்களைக் கொடுக்கும் வேறு எந்த மரமாவது இவ்வளவு கொடுக்குமா?
மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் மரங்களில் இருந்து விழும் பைன் ஊசிகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க அரசாங்கம் ஒரு யோசனையை முன்வைத்தது. ஆனால் பிரச்சனை என்னவென்றால், இந்த ஊசிகளை சேகரிப்பதற்கான ஊதியம் மிகவும் குறைவு.
இந்த ஆண்டு, முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஒரு புதிய திட்டத்தை அறிவித்தார். பிருல் லாவோ-பைசா பாவ் (Pirul Lao-Paise Pao-பைன் இலைகளைக் கொண்டு வந்து பணம் பெறுங்கள்) என்பது இதன் பொருள். இதன்கீழ் அரசு பைன் இலைகளை ஒரு கிலோவுக்கு ₹50-க்கு வாங்குகிறது. இது முந்தைய விலையான கிலோவுக்கு ₹3-ஐ விட மிக அதிகம்.
காட்டுத் தீயைத் தணிக்க சமூகப் பங்களிப்பில் அரசாங்கம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று பதக் அறிவுறுத்துகிறார். உதவி இயற்கை மீளுருவாக்கம் (Assisted Natural Regeneration (ANR)) நுட்பத்தை மாநிலம் முழுவதும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் நம்புகிறார். இந்த எளிய மற்றும் குறைந்த செலவில் வன மறுசீரமைப்பு முறையானது உள்நாட்டு மர இனங்களின் வளர்ச்சிக்கு சாதகமான நிலைமைகளை வழங்குவதன் மூலம் சீரழிந்த அல்லது காடழிக்கப்பட்ட நிலங்களின் இயற்கையான மீளுருவாக்கத்தை எளிதாக்குவதை உள்ளடக்கியது. இந்த வேலை வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்துகிறது. ஆக்கிரமிப்பு இனங்களை அகற்றுதல், புதிய தாவரங்களுக்கு சிறிய பகுதிகளை உருவாக்குதல் மற்றும் இயற்கையாக வளரும் இளம் தாவரங்களிலிருந்து விலங்குகளை விலக்கி வைப்பது ஆகியவை இதில் அடங்கும். "மரம் நடுவதற்கு அரசாங்கம் செலவிடும் தொகையில் பாதிகூட உதவி இயற்கை மீளுருவாக்கத்திற்கு (Assisted Natural Regeneration (ANR)) செலவாகாது. இறுதியாக, நடப்பட்ட மொத்த மரக்கன்றுகளில் 10% கூட அரசாங்கத்தின் முயற்சியை நாங்கள் காணவில்லை", என்று அவர் கூறுகிறார். தீயைத் தணிக்க மலைகளின் குறுக்கே தீயணைப்புக் கோடு நிறுவுவது முக்கியம் என்று அவர் மேலும் கூறுகிறார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ சம்பவங்களுக்குப் பின்னால், தீ பரவியபோது இளைஞர்கள் கொண்டாடுவதைக் காட்டிய ஒரு காணொலி பின்னர் வகுப்புவாத பதட்டங்களையும் பற்றவைத்துள்ளது. பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) அறிமுகப்படுத்தியதற்காகவும், பிப்ரவரியில் ஹல்த்வானியில் "ஆக்கிரமிப்பு எதிர்ப்பு இயக்கத்தை" (anti-encroachment drive) நடத்தியதற்காகவும் மாநில அரசை "பழிவாங்க" (take revenge) முஸ்லிம்கள் தீ வைத்ததாக சிலர் குற்றம் சாட்டினர். பீகாரைச் சேர்ந்த ஆண்களை கைது செய்த காவல் துறையினர், இன்ஸ்டாகிராமில் (Instagram) 'விருப்புகளை' (likes) பெறுவதற்காக காணொலியை பதிவு செய்ததாகக் கூறினர்.
Original article: