ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி சிறிதளவு அதிகரித்தது. ஆனால், அந்த முன்னேற்றம் இறக்குமதி கட்டணம் உயர்வு காரணமாக குறைந்துவிட்டது.
பல்வேறு புவிசார் அரசியல் மற்றும் தளவாட இடையூறுகள் (logistical disruptions) காரணமாக இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 2023-24ல் 3%-க்கும் கீழ் குறைந்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு சிறிய முன்னேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஏப்ரல் மாதத்தில், ஏற்றுமதிகள் $34.99 பில்லியன் மதிப்புடையதாக இருந்தது. இது கடந்த ஆண்டைவிட $370 மில்லியன் அல்லது 1.07% அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு ஏப்ரலில், இந்தியாவின் முதல் 30 ஏற்றுமதிப் பொருட்களை கடந்த 17 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் விற்பனை கணிசமாக சரிந்துள்ளது. இது முந்தைய மாதங்களில் குறைந்திருந்த 13 பொருட்களை விட அதிகம். ஏப்ரல் 2023-லிருந்து விற்பனை 12.7% குறைந்துள்ளதால் ஏற்கனவே குறைந்த ஏற்றுமதி எண்ணிக்கையில் இந்தக் குறைவுகள் ஏற்படுகின்றன என்பதையும், முதல் 30 பொருட்களில் 20 அவற்றின் ஏற்றுமதி மதிப்புகளில் சரிவைக் கண்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த மாதத்தில் நான்கு பொருட்கள் சிறிதளவு வளர்ச்சியைக் கண்டுள்ளது மருந்துகள், ரசாயனங்கள், மின்னணு மற்றும் பெட்ரோலியம் ஆகிய பொருட்கள் ஆகும். குறிப்பாக, பெட்ரோலிய பொருட்கள் மார்ச் மாதத்தில் 35% சரிவிலிருந்து மீண்டுள்ளது. உலகளவில் எண்ணெய் விலை இதற்கு முக்கிய காரணமாகும். மறுபுறம், ஏப்ரல் மாதத்தில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்வு நாட்டின் பொருட்களின் இறக்குமதி 10.25% அதிகரித்து. 54 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, கடந்த மாத வர்த்தகப் பற்றாக்குறை நான்கு மாதங்களில் மிக அதிகமாக $19.1 பில்லியன் இருந்தது. இது மார்ச் மாத பற்றாக்குறையைவிட 22.5% அதிகரித்துள்ளது. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு குழு (Organization of the Petroleum Exporting Countries (OPEC)) ஜூன் மாதம் கூட்டம் கூடும் போது எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்தால், அது எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100 வரை உயரக்கூடும். மேலும், மக்கள் தங்கத்தை பாதுகாப்பான விருப்பமாக கருதி தொடர்ந்து முதலீடு செய்தால், அது இந்தியாவில் தங்கத்தின் விலையை மேலும் அதிகரிக்கச் செய்யும். இது இந்தியாவிற்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தலாம். ஏனெனில், இது எரிபொருளுக்கான விலையை அதிகரிக்கும். நாட்டின் வர்த்தக இருப்பு மற்றும் நாணயத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும்.
உலகளாவிய வர்த்தக அளவுகள் மற்றும் இந்தியாவின் வாய்ப்புகள்
உலகளவில் வர்த்தக அளவு 2023-ல் 1.2% சரிந்தது. இருப்பினும், உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization (WTO)) இந்த ஆண்டு 2.6% உயர்வை எதிர்பார்க்கிறது. முக்கிய மேற்கத்திய சந்தைகளில் குறைந்த பணவீக்கம் மற்றும் மேம்பட்ட வளர்ச்சி விகிதங்கள் தேவையை அதிகரிக்கும் என்று இந்திய அரசு நம்புகிறது. இருப்பினும், இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இந்தியா தனது கொள்கையை மேம்படுத்த வேண்டும். உள்நாட்டுப் பொருளாதாரம் முழுவதும் செல்வத்தை உருவாக்கும் என்பதை இது உறுதி செய்யும்.
ஆடைகள் மற்றும் காலணிகள் போன்ற தொழிலாளர் செறிந்த துறைகளில் உள்ள சவால்களை எதிர் கொள்ள வேண்டும். பங்களாதேஷ், வியட்நாம் போன்ற போட்டியாளர்களிடம் இந்தியா இந்தப் பகுதிகளில் தனது தளத்தை இழந்து வருகிறது. இந்த சரிவு நகைகள் மற்றும் விவசாய பொருட்கள் போன்ற துறைகளையும் பாதிக்கிறது. உற்பத்தியின் தரத்தை மேம்படுத்துதல், தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் விவசாய ஏற்றுமதியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஏற்றுமதியை அதிகரிக்கவும், வர்த்தகத்தை சமநிலையில் வைத்திருக்கவும் புதிய அரசு விரைந்து செயல்பட வேண்டும்.