நுகர்வோர் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து மருத்துவ நிபுணர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமா? 1995 தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம் - அஜய் சிஹ்னா கற்பகம்

 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் (Consumer Protection Act, 2019) கீழ் வழக்கறிஞர்கள் மீது வழக்குத் தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. ஆனால், இது 1995-ஆம் ஆண்டு மருத்துவர்கள் பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு அதே சட்டத்திற்கும் எதிரானது.


30 ஆண்டுகளுக்குப் முன்பு, உச்சநீதிமன்றம் இதேபோன்ற ஒரு வழக்கிற்கு தீர்ப்பளித்தது. செவ்வாய்க்கிழமை, மே 14 அன்று, வழக்கறிஞர்கள், தொழில் வல்லுநர்கள், தவறான சேவையை  வழங்குவதற்காக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 (CPA)-ன் கீழ் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த முடியாது என்று தீர்ப்பளித்தது. முன்னதாக, மருத்துவத் துறையில் உள்ள நிபுணர்களுக்கான இதே போன்ற வாதங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.


1995ஆம் ஆண்டில், இந்திய மருத்துவ சங்கம் எதிர் வி பி சாந்தா வழக்கில் (Indian Medical Association vs V P Shantha (1995), நீதிபதிகள் எஸ் சி அகர்வால், குல்தீப் சிங் மற்றும் பி எல் ஹன்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. பழைய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி மருத்துவ வல்லுநர்கள் "சேவை" (“service”) வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தச் சட்டம் "சேவை" என்பதன் தற்போதைய வரையறைக்கு ஒத்த வரையறையைக் கொண்டுள்ளது. எனவே, தவறான சேவையை வழங்கியதற்காக மருத்துவ நிபுணர்கள் மீது  நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். செவ்வாய்கிழமை தீர்ப்புக்குப் பிறகு, இந்த முடிவு இப்போது மறுபரிசீலனைக்காக பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 


1995 தீர்ப்பு மற்றும் அதன் பின்னணியில் உள்ள நீதிமன்றத்தின் தர்க்கம் பற்றிய ஒரு நினைவு 


மருத்துவ வல்லுநர்கள் ஒரு 'சேவையை' வழங்குகிறார்கள்


1995-ஆம் ஆண்டில், நீதிமன்றம் தொழில்முறைத் தொழில்கள் (professional occupations) பெரும்பாலும் திறமையான வேலை என்று ஒப்புக்கொண்டது. அவை உடல்உழைப்பிற்குப் பதிலாக மனம்சார்ந்த உழைப்பு தேவைப்படும் ஒன்று. இந்தத் தொழில்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றன. ஏனெனில், வெற்றி பெரும்பாலும் தொழில்முறை கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளைப் (“beyond the professional man’s control”) பொறுத்தது. இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே (Advocate Harish Salve), ஒரு மருத்துவப் பயிற்சியாளரை நிலையான விதிமுறைகள் அல்லது தரநிலைகளின் அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என்று வாதிட்டார். எனவே, "சேவை" என்ற வரையறையின் கீழ் அவர்களை கட்டுப்படுத்தமுடியாது அல்லது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் "சேவையில் குறைபாடு" (“deficiency in service”) வழக்குத் தொடர முடியாது என்று அவர் வாதிட்டார்.


ஆனால், நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு சில கடமைகளைக் கடன்பட்டிருக்கிறார்கள் என்று நீதிமன்றம் கூறியது. நோயாளிக்கு சிகிச்சையளிக்கலாமா, என்ன சிகிச்சை கொடுக்க வேண்டும், சிகிச்சை எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது எனபதில் மருத்துவர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். மருத்துவர் முறையான கவனிப்பை மேற்கொள்ளவில்லை என்றால், மேலும் செய்யவேண்டிய கடமைகளில் ஒன்றை மீறினால், அவர்கள் சேவையின் குறைபாடுக்கு பொறுப்பாவார்கள்.


2024ஆம் ஆண்டில் நீதிபதிகள் பெலா திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு, மருத்துவப் பயிற்சியாளர்கள், "தொழில் வல்லுநர்களாக" மற்ற தொழில்களைப் போல் மதிப்பிடக் கூடாது என்பதை புரிந்துகொண்டதாகத் தெரிகிறது. CPA-ன் நோக்கம் நுகர்வோரை "நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நெறிமுறையற்ற வணிக நடைமுறைகளிலிருந்து மட்டுமே" பாதுகாப்பதாகும் என்று அவர்கள் கூறினர். சட்டமன்றம் ஒருபோதும் "தொழிலையோ அல்லது தொழில் வல்லுநர்களையோ சட்டத்தின் வரம்பிற்குள் சேர்க்க விரும்பவில்லை" என்று அவர்கள் வாதிட்டனர்.



சிக்கல் என்பது நுகர்வோர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒரு தடையல்ல


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சட்ட நடவடிக்கைகள் மாவட்ட, மாநில மற்றும் தேசியமட்டங்களில் அமைக்கப்பட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களால் (Consumer Redressal Commissions) விசாரிக்கப்படுகின்றன. 1995ஆம் ஆண்டில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் 1986 பதிப்பின்கீழ், ஒவ்வொரு ஆணையத்தின் தலைவரும் முறையே மாவட்ட, உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த அல்லது இருக்க தகுதி பெற்ற ஒரு நபராக இருப்பார். மற்ற உறுப்பினர்கள் (மாவட்ட மற்றும் மாநில அளவில் இருவர், மற்றும் தேசிய அளவில் நான்கு) "பொருளாதாரம், சட்டம், வணிகம், கணக்கியல், தொழில், பொது விவகாரங்கள் அல்லது நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளை" கையாள்வதற்கான அறிவு, அனுபவம் அல்லது திறன் கொண்ட நபர்களாக இருப்பார்கள்.


விபி சாந்தா (V P Shantha) வழக்கில், மருத்துவப் பயிற்சி பெறாதவரை ஆணைய உறுப்பினர்கள் மருத்துவப் பயிற்சியாளர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் சிக்கலான மருத்துவப் பிரச்சினைகளைக் கையாள முடியாது என்று மனு தாக்கல் செய்து வாதிட்டனர். ஆனால், நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்கவில்லை, ஒவ்வொரு வழக்கிலும் உறுப்பினர்கள் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு எதிரானது என்று நீதிமன்றம் கூறியது. உதாரணமாக, ஒரு மாவட்ட ஆணையத்தில் அறிவுள்ள உறுப்பினர் இருந்தால், மாநில ஆணையத்தால் முடியாத ஒரு வழக்கை அவர்களால் கையாள முடியும். அதற்குப் பதிலாக, உறுப்பினர்கள் நன்றாக முடிவெடுப்பதற்குத் தேவையான ஆதாரங்களை சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்க வேண்டும்.


மருத்துவ வல்லுநர்கள் தங்கள் சேவைகளை இலவசமாக வழங்கினால், அவர்கள் இன்னும் பொறுப்பாக இருக்க முடியும்.


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் சேவையின் வரையறை (1986 மற்றும் 2019 மறு செய்கைகள் இரண்டும்) பரந்ததாக உள்ளது, ஆனால் இரண்டு வகையான சேவைகளை வெளிப்படையாக வழங்குகிறது: இலவசச் சேவைகள் மற்றும் தனிப்பட்ட சேவைகள்.


மருத்துவ சேவைகளுக்கு நீதிமன்றம் மூன்று வேறுபாடுகளை வழங்கியது: அனைவருக்கும் இலவச சேவைகள், அனைவருக்கும் கட்டண சேவைகள் மற்றும் அவற்றை வாங்க முடியாத சில குழுக்களுக்கு விலக்கு அளிக்கும் சேவைகள். முதல் வகை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தால் உள்ளடக்கப்படவில்லை. நீதிமன்றம் மூன்றாவது வகையை மையமாகக் கொண்டது. அங்கு சிலருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இலவசச் சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டால், பணம் செலுத்தக் கூடியவர்களை மட்டுமே சட்டம் பாதுகாக்கும் என்று அது குறிப்பிட்டது. இது சட்டமியற்றுபவர்களின் நோக்கத்திற்கு எதிரானது. பணம் செலுத்தக்கூடியவர்களுக்கு மட்டும் சிறந்த சிகிச்சை வழங்குவதற்கு வழிவகுக்கும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு ஏற்ற சிகிச்சை வழங்குவது சாத்தியமற்றதாகி விடும்.  இதை சரி செய்ய, மூன்றாவது பிரிவில் உள்ள அனைத்து சேவைகளும், இலவசமோ இல்லையோ, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்று நீதிமன்றம் முடிவு செய்தது.


"தனிப்பட்ட சேவை ஒப்பந்தத்தின்" (“contract of personal service”) கீழ் மருத்துவ கவனிப்பு வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது. இத்தகைய ஒப்பந்தங்கள் இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு முதலாளி-பணியாளர் அல்லது "எஜமானர் மற்றும் வேலைக்காரன்" உறவு போன்ற சூழ்நிலையை ஏற்படுத்தும். எனவே, "மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையில் எஜமானர் மற்றும் வேலைக்காரன் என்ற உறவு இல்லாததால், மருத்துவருக்கும் அவரது நோயாளிக்கும் இடையிலான ஒப்பந்தத்தை தனிப்பட்ட சேவையின் ஒப்பந்தமாக கருத முடியாது." என்றும் நீதிமன்றம் கூறியது.




Original article:

Share: