1996 ஆம் ஆண்டு டி என் கோதவர்மன் (T N Godavarman) வழக்கிலிருந்து காடுகளின் வரையறையைப் பயன்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் அரசாங்கங்களுக்குத் தெரிவித்தது. நாட்டில் உள்ள அனைத்து காடுகளின் முழுமையான பதிவு கிடைக்கும் வரை அவர்கள் இதைச் செய்ய வேண்டும்.
வன பாதுகாப்பு சட்டம், 1980 இல் 2023 திருத்தங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பிப்ரவரி 19 திங்கட்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த மாற்றங்கள் காடுகளின் வரையறையை நீர்த்துப்போகச் செய்வதாகவும், சட்டத்தின் நோக்கத்தைக் குறைப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது.
வன பாதுகாப்பு சட்டம் 2023 இல் ஏன் திருத்தப்பட்டது?
கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்டில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வன பாதுகாப்பு திருத்த மசோதா (Forest Conservation Amendment Bill), 2023க்கான பொருள்கள் மற்றும் காரணங்கள் அறிக்கையில், டி என் கோதவர்மன் திருமால்பேட் vs. யூனியன் ஆஃப் இந்தியா (T N Godavarman Thirumalpad vs. Union of India) டிசம்பர் 12, 1996 வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக வன பாதுகாப்பு சட்டத்தின் பொருந்தக்கூடிய தன்மை விரிவாக்கப்பட்டதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. "இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு, சட்டத்தின் விதிகள் ஏற்கனவே காடுகளாக நியமிக்கப்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்டன, அவை காடுகள் அல்லாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும் கூட. இது நில பயன்பாட்டை மாற்றுவதிலிருந்தோ அல்லது வளர்ச்சி அல்லது பயன்பாடு தொடர்பான நடவடிக்கைகளை அனுமதிப்பதில் இருந்து அதிகாரிகளைத் தடுத்தது" என்று பொருள்கள் மற்றும் காரணங்கள் அறிக்கையில் (the Statement of Objects and Reasons) தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனப் பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றங்கள் தேவை என்று நாடாளுமன்றத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் விளக்கினார். 1996 தீர்ப்பு குழப்பத்தை ஏற்படுத்தியதே இதற்கு காரணம் என்றார். 'காடு' என்பதன் அகராதி வரையறைக்கு ஏற்ற அனைத்து பகுதிகளுக்கும் சட்டம் பொருந்தும். இதை சரிசெய்ய, சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இப்போது, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மற்றும் அரசாங்கப் பதிவேடுகளில் 'காடு' என்று பட்டியலிடப்பட்ட நிலங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
சட்டத்தின் நோக்கங்களுக்காக உச்ச நீதிமன்றம் ‘காடு’ என்பதை எப்படி சரியாக வரையறுத்தது?
வனப் பாதுகாப்புச் சட்டம் (Forest Conservation Act (FCA)) அதிகாரப்பூர்வமாக 'காடு' என்று பதிவுசெய்யப்பட்ட அல்லது அகராதியில் 'காடு' என்றால் என்ன என்பதைப் போன்ற அனைத்து நிலங்களையும் உள்ளடக்கும் என்று நீதிமன்றம் முடிவு செய்தது.
நீதிபதி ஜே எஸ் வர்மா மற்றும் நீதிபதி பி என் கிர்பால் ஆகியோரின் 1996 தீர்ப்பு, "'காடு' என்ற சொல்லை அதன் அகராதி அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சட்டம் அங்கீகரிக்கும் அனைத்து காடுகளும் அடங்கும், அவை பாதுகாக்கப்பட்டவை. எனவே, 'வன நிலம்' என்றால், அகராதியில் நாம் காணும் 'காடுகள்' மட்டுமல்ல, அரசுப் பதிவேடுகளில் காடாகப் பட்டியலிடப்பட்டுள்ள எந்தப் பகுதியும், அது யாருடையதாக இருந்தாலும் சரி காடாக கருதப்படும்" என்று விளக்கியது.
இந்திய தலைமை நீதிபதியின் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த கொள்கையை திங்களன்று உறுதி செய்தது. 1980 ஆம் ஆண்டு வனப் பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கும்போது நாடாளுமன்றத்தின் நோக்கத்துடன் பொருந்துவதற்காக நீதிமன்றம் காடுகளின் அகராதி அர்த்தத்தைத் தேர்ந்தெடுத்ததாக அவர்கள் கூறினர்.
உச்ச நீதிமன்றத்தின் 1996 தீர்ப்பு வனப் பாதுகாப்புச் சட்டம், 1980 இன் நோக்கத்தை எவ்வளவு விரிவுபடுத்தியது? 2023 ஆம் ஆண்டு திருத்தமானது, உச்ச நீதிமன்றத்தின் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் வரம்பைப் பற்றிய பரந்த விளக்கத்தால் ஏற்பட்ட சிக்கலைச் சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், வனப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 2 இன் ii, iii மற்றும் iv பிரிவுகளின்படி, சட்டத்தின் நோக்கம் "ஒதுக்கப்பட்ட காடுகளுக்கு" (reserved forest) மட்டும் வரையறுக்கப்படவில்லை. எந்தவொரு வன நிலத்தையும் வனமற்ற நோக்கங்களுக்காக அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்துவதையும் இது தடுக்கிறது.
வனப் பாதுகாப்புச் சட்டத்தில், "ஒதுக்கப்பட்ட காடு" (reserved forest) குறிப்பாக அதன் ஒதுக்கப்பட்ட நிலையை அகற்றும் சூழலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிவு 2(i) மத்திய அரசின் முன் அனுமதியின்றி ஒதுக்கப்பட்ட வனம் அதன் நிலையை இழக்க முடியாது என்று கூறுகிறது. ஒதுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட காடுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீட்டைப் பற்றிய பிரிவு பொருந்தும் என்பதை இது குறிக்கிறது.
உச்ச நீதிமன்றம் ஜூலை 2022 இல் நரிந்தர் சிங் & ஓர்ஸ் vs திவேஷ் பூடானி & ஓர்ஸ் (Narinder Singh & Ors vs Divesh Bhutani & Ors) வழக்கில் இந்த விளக்கத்தை வலியுறுத்தியது. பிரிவு (i) என்பது ஒதுக்கப்பட்ட வனத்தை குறிப்பதால், ஷரத்துகள் (ii), (iii) மற்றும் (iv) மற்ற அனைத்து வகை காடுகளுக்கும் பொருந்த வேண்டும் என்று நீதிமன்றம் விளக்கியது. எனவே, அகராதி அர்த்தத்தில் வரையறுக்கப்பட்டுள்ள காடுகள் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் (FCA) பிரிவு 2 இன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. நீதிபதி சிடி ரவிக்குமார், நீதிபதி அபய் எஸ் ஓகா, நீதிபதி ஏஎம் கன்வில்கர் ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
வனப் பாதுகாப்புச் சட்டத்தை பலவீனப்படுத்த முயற்சி செய்வதை அமைச்சகம் தொடர்ந்து மறுத்தாலும், இறுதியில் சட்டத்தை வலுப்படுத்த பரிந்துரைத்த மிக தீவிரமான மாற்றத்தை அது நீக்கியது. இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் அக்டோபர் 2021 இல் வெளியிடப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்தச் சட்டத்தில் புதிய அம்சத்தை சேர்ப்பது குறித்து பரிசீலிப்பதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த அம்சம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதிக சுற்றுச்சூழல் மதிப்பு கொண்ட சில பழமையான காடுகளை பாதுகாக்கும். இதற்குக் காரணம் சட்டத்தில் விதிகள் இல்லாததுதான். அதிக பாதுகாப்பு தேவைப்படும் பகுதிகளில் வனம் அல்லாத நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு எந்த விதிகளும் இல்லை. இந்த பகுதிகள் தனித்துவமானவை மற்றும் முழு நிலப்பரப்பையும் பார்க்கும்போது பெரும் மதிப்பைக் கொண்டிருந்தன.
இருப்பினும், இந்த குறிப்பிடத்தக்க பாதுகாப்பு சார்பு யோசனை வன பாதுகாப்பு திருத்த மசோதா 2023 இல் சேர்க்கப்படவில்லை.
டி என் கோதவர்மன் தீர்ப்புக்குப் பிறகு, வன பாதுகாப்பு சட்டம் அரசின் நலத் திட்டங்களுக்குத் தடையாக இருந்தது என்ற வாதம் பற்றி?
காடுகளில் வாழும் பழங்குடியினரின் வளர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வனப் பாதுகாப்புச் சட்டத்தில் 2023 திருத்தங்கள் தேவை என்று அரசாங்கம் வாதிட்டது. தற்போதைய வனப் பாதுகாப்புச் சட்டத்தில் கட்டுப்பாடுகள் பழங்குடியின பெண்களுக்கான பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டுவது போன்ற அடிப்படை முன்னேற்றங்களுக்கு இடையூறாக இருப்பதாக அமைச்சர் யாதவ் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இருப்பினும், வன உரிமைகள் சட்டம் 2006, குறிப்பாக பிரிவு 3, ஏற்கனவே பழங்குடி சமூகங்களின் வளர்ச்சி தேவைகளை நிவர்த்தி செய்கிறது. வனப் பாதுகாப்புச் சட்டத்தால் நிறுத்தப்படாமல், அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் வசதிகளுக்காக வன நிலத்தைத் திருப்புவதற்கு இது அனுமதிக்கிறது. இந்த வசதிகளில் பள்ளிகள், மருந்தகங்கள்/மருத்துவமனைகள், அங்கன்வாடிகள் குழந்தை பராமரிப்பு மையங்கள், ரேஷன் கடைகள், மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள், தண்ணீர் தொட்டிகள் மற்றும் குழாய்கள், சிறு நீர்ப்பாசன கால்வாய்கள், தொழில் பயிற்சி மையங்கள், சாலைகள், சமூக மையங்கள் மற்றும் பல உள்ளன.
எனவே, பழங்குடியின சமூகங்களுக்கு இந்த வகையான வசதிகளை உருவாக்குவதற்கு வன பாதுகாப்பு சட்டத்திற்க்கு ஒரு திருத்தம் தேவையில்லை.
சட்டத்தில் 2023 திருத்தங்களை யார் சவால் செய்தார்கள், எந்த அடிப்படையில்?
அசோக் குமார் ஷர்மா, IFS ஓய்வு & ஓர்ஸ் vs யூனியன் ஆஃப் இந்தியா vs ஒர்ஸ் (Ors v. Union of India & Ors) வழக்கின் சட்டரீதியான சவாலை, ஓய்வு பெற்ற இந்திய வன சேவை அதிகாரிகள் மற்றும் வனசக்தி மற்றும் கோவா அறக்கட்டளை உள்ளிட்ட அரசு சாரா நிறுவனங்களின் குழு முன்வைத்தது.
திருத்தங்களை மறுபரிசீலனை செய்த கூட்டு நாடாளுமன்றக் குழுவின் கருத்து வேறுபாடு கொண்ட உறுப்பினர்களின் கவலைகளைப் போன்றே மனுக்கள் கவலைகளை எழுப்பின. பதிவுசெய்யப்பட்ட வனப் பகுதிகளுக்கு வெளியே அமைந்துள்ள இந்தியாவின் 28% காடுகளை வனப் பாதுகாப்புச் சட்டத்தின் பாதுகாப்பில் இருந்து விலக்குவது பற்றி முதன்மையான கவலை இருந்தது.
1996 உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட நிபுணர் குழுக்களால் வகைப்படுத்தப்படாத அனைத்து காடுகள், அறிவிக்கப்படுவதற்கு முன்மொழியப்பட்டவை, உள்ளாட்சி அமைப்புகளால் வனமாக பதிவுசெய்யப்பட்ட நிலங்கள் மற்றும் காடு போன்றதாகக் கண்டறியப்பட்ட பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கும் என்று அமைச்சகம் நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு உறுதியளித்தது. இந்த உத்தரவாதம் தற்போதைய வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் சவால் செய்யப்பட்டது.
திருத்தப்பட்ட 2023 விதிகளின்படி காடுகளின் ஒருங்கிணைந்த பதிவேடு முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக மனுதாரர்கள் வாதிட்டனர். 1996 ஆம் ஆண்டின் தீர்ப்பின் கீழ் காடுகளாக கருதப்படும் நிலப் பகுதிகள் இப்போது வனம் அல்லாத நோக்கங்களுக்காக, வனப் பாதுகாப்புச் சட்டத்தின் (Forest Conservation Act (FCA)) கீழ் எந்த அனுமதியும் தேவையில்லாமல் பயன்படுத்தப்படலாம்.
இதற்குப் பதிலளித்த உச்ச நீதிமன்றம், 1996 ஆம் ஆண்டு காடுகள் பற்றிய அதன் வரையறையை ஒருங்கிணைந்த வனப் பதிவேடு முடியும் வரை கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பாக அறிவுறுத்தியது.
இப்போது என்ன நடக்கிறது?
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் காடுகளின் விரிவான பதிவுகளை சமர்ப்பிக்க மார்ச் 31 வரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது. 1996 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட நிபுணர் குழுக்களால் இந்தக் காடுகளை அடையாளம் காண வேண்டும். இந்தப் பதிவுகளைப் பெற்ற பிறகு, அமைச்சகம் இந்தத் தகவலை ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
2023 விதிகளின் கீழ் நிறுவப்பட்ட நிபுணர் குழுக்கள் முந்தைய நிபுணர் குழுக்கள் செய்த பணிகளை பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. எவ்வாறாயினும், இந்த குழுக்களுக்கு எந்தவொரு வன நிலத்தையும் பாதுகாப்பதற்கு தகுதியானதாகக் கருதும் பாதுகாப்பை நீட்டிக்க சுதந்திரம் உள்ளது. இந்த விவகாரம் ஜூலை மாதம் இறுதி தீர்ப்புக்காக விசாரிக்கப்படும்.
Original article: