கடந்த இருபதாண்டுகளாக இந்தியாவின் வேளாண்த் துறை மேம்பட்ட வளர்ச்சியைக் காட்டியுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கத்தின் பத்து ஆண்டு காலத்தில் இது குறிப்பாக உண்மை என்று சமீபத்திய நிதி ஆயோக் அறிக்கை கூறுகிறது.
இத்துறையின் மொத்த மதிப்பு கூடுதல் (gross value added (GVA)) அடிப்படையில் விவசாயத்திற்கான வருடாந்திர வளர்ச்சி விகிதம் இரண்டு காலகட்டங்களாக 1984-85-ஆம் ஆண்டு முதல் 1993-94-ஆம் ஆண்டு மற்றும் 1994-95-ஆம் ஆண்டு முதல் 2003-04-ஆம் ஆண்டு வரை சராசரியாக 2.9% ஆக இருந்தது.
நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் மற்றும் ஆலோசகர் ஜஸ்பால் சிங் ஆகியோரின் கட்டுரையில், இந்த ஆட்சியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது. 2004-05-ஆம் ஆண்டு முதல் 2013-14-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் (UPA) கீழும், 2014-15-ஆம் ஆண்டு முதல் 2023-24-ஆம் ஆண்டு வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழும் இந்த வளர்ச்சி ஏற்பட்டது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சிக் காலத்தில் வேளாண் மொத்த மதிப்பு கூடுதல் (gross value added (GVA)) ஆண்டுக்கு சராசரியான அதிகரிப்பு 3.5% ஆக இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில், 2023-24-ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில், இது 3.7% ஆக அதிகரித்துள்ளது. நெருக்கடியில் உள்ள ஒரு துறையின் பொதுவான கருத்துக்கு இது முரண்படுகிறது.
2004-05-ஆம் ஆண்டு மற்றும் 2022-23-ஆம் ஆண்டுக்கு இடையில் தானிய உற்பத்தி 185.2 மில்லியன் டன்னிலிருந்து 303.6 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளதாக அரசாங்க மதிப்பீடுகள் காட்டுகின்றன. இருப்பினும், தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (National Sample Survey Office (NSSO)) தரவுகளின் அடிப்படையில் வீட்டு தானிய நுகர்வு இந்த நேரத்தில் 153-156 மெட்ரிக் டன்னாக மாறாமல் உள்ளது. தானிய உற்பத்திக்கும் வீட்டு உபயோகத்திற்கும் இடையே உள்ள இடைவெளி கணிசமாக அதிகரித்துள்ளது. 2004-05-ஆம் ஆண்டில் 29.5 மில்லியன் டன்னாக இருந்த இது 2011-12-ஆம் ஆண்டில் 84 டன்னாகவும், பின்னர் 2022-23-ஆம் ஆண்டில் 151 டன்னாகவும் வளர்ந்தது.
நாட்டின் மதிப்பிடப்பட்ட பால் உற்பத்தியில் இரண்டரை மடங்கு அதிகரிப்பு குறித்தும் இதே போன்ற சந்தேகங்கள் உள்ளன. இது 2004-05-ஆம் ஆண்டில் 92.5மெட்ரிக் டன்லிருந்து 2022-23-ஆம் ஆண்டில் 230.6 மெட்ரிக் டன்னாக ஆக உயர்ந்தது. ஆனால், தேசிய மாதிரி ஆய்வு அலுவலக (NSSO) குடும்ப ஆய்வுகளின்படி நுகர்வு அதிகரிப்பு இல்லை.
இந்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், செப்டம்பர் 28 அன்று எகனாமிக் & பொலிட்டிகல் வீக்லி இதழில் வெளியான நிதி ஆயோக் கட்டுரையானது, முக்கிய கண்டுபிடிப்புகளை முன்வைக்கிறது. இந்த கண்டுபிடிப்புகள் கொள்கை வகுப்பதில் தாக்கங்களைக் கொண்டுள்ளன மற்றும் இந்திய விவசாயத்தில் வெற்றிகரமான பகுதிகள் மற்றும் சவால்கள் இரண்டையும் அடையாளம் காண உதவும்.
பிரிக்கப்பட்ட வேறுபாடு
விவசாயத்தின் பல்வேறு துணைத் துறைகளிடையே செயல்திறனில் பெரிய மாறுபாடு உள்ளது.

பொதுவாக விவசாயத்துடன் தொடர்புடைய பயிர்கள் துணைத் துறையானது, 2014-15-ஆம் ஆண்டு முதல் 2022-23-ஆம் ஆண்டு வரையிலான உற்பத்தி மதிப்பில் (2011-12 விலையில் பணவீக்கத்திற்குச் சரி செய்யப்பட்டது) சராசரியாக 2.3% மட்டுமே ஆண்டு வளர்ச்சியைக் கண்டது. இந்த வளர்ச்சி விகிதம் காங்கிரஸ் ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் இருந்த 3.4% வளர்ச்சியை விட குறைவாக இருந்தது.
இதற்கு நேர்மாறாக, கால்நடைகள் மற்றும் மீன்வளத் துணைத் துறைகள் 2014-15-ஆம் ஆண்டு முதல் 2022-23-ஆம் ஆண்டு வரை முறையே 5.8% மற்றும் 9.2% என்ற சராசரி ஆண்டு உற்பத்தி வளர்ச்சியை அனுபவித்தன. இந்த விகிதங்கள் 2013-14-ஆம் ஆண்டில் முடிவடைந்த 10 ஆண்டுகளில் தொடர்புடைய வளர்ச்சி விகிதங்களான 4.5% மற்றும் 4.3% ஐ விட அதிகமாக இருந்தது.
எளிமையான வகையில், மோடி தலைமையிலான அரசாங்கத்தின் போது விவசாயத் துறையின் ஒட்டுமொத்த சிறந்த வளர்ச்சி செயல்திறன், ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில், முக்கியமாக பாரம்பரிய பயிர் விவசாயத்தை விட கால்நடை மற்றும் மீன்வளத் துறைகளில் முதன்மையாகக் கொண்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் துணைத் துறை உற்பத்தி வளர்ச்சியினை வழங்குகிறது. கோழி இறைச்சி (9.2%), மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு (9.1%), முட்டை (6.6%) மற்றும் பால் (5.8%) ஆகியவற்றிலிருந்து அதிக சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் இருந்துள்ளது. பயிர்களுக்குள், தோட்டக்கலை உற்பத்தி ஆண்டுக்கு 3.9% என்ற வலுவான விகிதத்தில் வளர்ந்துள்ளது.
இருப்பினும், தோட்டக்கலை அல்லாத அல்லது வழக்கமான வயல் பயிர்கள், 1.6% க்கும் குறைவான வளர்ச்சி விகிதத்தைக் கண்டுள்ளன. பருத்தி, சணல், புகையிலை, தேநீர் மற்றும் காபி ஆகியவற்றில் மெதுவான வளர்ச்சி உள்ளது. தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் மிதமான வளர்ச்சியைக் காட்டுகின்றன. அதே நேரத்தில், பருப்பு வகைகள் மற்றும் கரும்புகள் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளன.
2014-15-ஆம் ஆண்டு முதல் 2022-23-ஆம் ஆண்டு வரை வருடாந்திர விவசாய வளர்ச்சி சராசரியாக 4% அல்லது அதற்கு மேல் இருந்த 13 மாநிலங்களை அட்டவணை 2 காட்டுகிறது. இந்த பட்டியலில் பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்கம் ஆகியவை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காலக்கட்டத்தில், இந்த மாநிலங்களில் விவசாயத்திலிருந்து மொத்த மதிப்பு கூடுதல் (gross value added (GVA)) சராசரி ஆண்டுக்கு ஆண்டு உயர்வு பஞ்சாப்க்கு 2%, ஹரியானாவுக்கு 3.4% மற்றும் மேற்கு வங்காளத்திற்கு 2.8% மட்டுமாக உள்ளது. இந்த மாநிலங்களில் பயிர்களின் வளர்ச்சி முறையே 0.5%, 0.7% மற்றும் 1.9% ஆகக் குறைவாக இருந்தது.
13 மாநிலங்களின் வளர்ச்சி பெரும்பாலும் கால்நடைகள் மற்றும் மீன்வளத்தால் இயக்கப்படுகிறது. மத்தியப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் மட்டுமே பயிர் துணைத் துறை வளர்ச்சி 5% அதிகமாக இருந்தது. கடந்த இருபதாண்டுகளாக அதிகரித்த விவசாய வளர்ச்சியானது தோட்டக்கலை பயிர்கள், கால்நடைகள் மற்றும் மீன்வளம் ஆகியவற்றில் பல்வகைப்படுத்தலின் விளைவாகும். காய்கறிகள், பழங்கள், பால், இறைச்சி, முட்டை மற்றும் மீன் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்த மாற்றம் சந்தையை வழிநடத்துகிறது.
எனவே, பண்ணைகளில் பல்வகைப்படுத்தல் உணவு முறைகளில் மாற்றத்திற்கு வழிவகுத்தது. மக்கள் இப்போது கலோரிகள் நிறைந்த உணவுகளுக்குப் பதிலாக புரதங்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்கின்றனர். இந்த மாற்றம் புதிய தொழில்நுட்பங்களால் ஆதரிக்கப்படுகிறது. காய்கறிகள் மற்றும் மக்காச்சோளத்தில் கலப்பினங்கள், சொட்டு நீர் பாசனம், வாழையில் அதிக அடர்த்தி கொண்ட திசு வளர்ப்பு மற்றும் அதிக மகசூல் தரும் பிராய்லர் மற்றும் அடுக்கு இனங்கள் கோழி வளர்ப்பு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் இதற்கு துணைபுரிகின்றன.
இருப்பினும், அனைத்து இந்திய விவசாயிகளும் கால்நடை வளர்ப்பு, மீன்வளம் அல்லது தோட்டக்கலை ஆகியவற்றில் ஈடுபடவில்லை. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (NSSO) 2018-19 விவசாயக் குடும்பங்களுக்கான சூழ்நிலை மதிப்பீட்டு ஆய்வின்படி, கால்நடை வளர்ப்பில் 53% விவசாயிகள் மட்டுமே வருமானம் ஈட்டியுள்ளனர். அவர்களில் 6.5% பேர் தோட்டக்கலை பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
44.2% விவசாயக் குடும்பங்களுக்கு, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, பருத்தி மற்றும் பிற தோட்டக்கலை அல்லாத பயிர்கள் மூலம் முக்கிய வருமானம் கிடைத்தது. இவற்றில் சில பயிர்கள் எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் அல்லது எத்தனால் உற்பத்திக்கு கரும்புகளைப் பயன்படுத்துவது போன்ற உணவு அல்லாத பயன்பாடுகளால் நல்ல உற்பத்தி வளர்ச்சியை அடைந்துள்ளன.
இருப்பினும், பல்வகைப்படுத்தல் மற்றும் புதிய உற்பத்தி தொழில்நுட்பங்களின் நன்மைகள் தோட்டக்கலை அல்லது கால்நடைகளுக்கு இருப்பதைப் போல வயல் பயிர்களுக்கு நீட்டிக்கப்படவில்லை. எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளுக்கான விளைச்சல் குறைவாகவே உள்ளது, இதனால் தேவையின் கணிசமான பகுதி இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. பருத்தியில், மரபணு மாற்றப்பட்ட கலப்பினங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் சராசரி உள்நாட்டு உற்பத்தியான 325 லட்சம் பேல்கள் 2012-13-ஆம் ஆண்டு முதல் 2014-15-ஆம் ஆண்டு வரை எட்டப்பட்ட 370-400 லட்சம் சிப்பங்களை (bales) விட குறைவாக உள்ளது.
குறிப்பாக, அரிசி மற்றும் கோதுமை குறைந்தபட்ச ஆதரவு விலை (minimum support price) கீழ் உள்ளதால், பயிர்கள் துணைத் துறையின் குறைந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலை தேவை-பக்க காரணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. நிதி ஆயோக் அறிக்கையின்படி, இந்த காரணிகள், உற்பத்தி தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளுடன், அரசாங்க உற்பத்தி விலை அல்லது உள்ளீட்டு மானியத் தலையீடுகளை விட விவசாய வளர்ச்சியை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Original article: