வரிச் சட்டங்களில் முக்கியமான திருத்தங்கள் -மோகன் ஆர் லவி

 அறிவிக்கப்பட்ட 63 திருத்தங்கள் ஆச்சரியமளிக்கின்றன. இந்தத் திருத்தங்களில் சில அவசியமானவை. மற்றவை முற்றிலும் நிர்வாகத் தன்மை கொண்டவை.


புதிய வருமான வரிச் சட்டம் (Income Tax Act) ஏப்ரல் 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம், நிதி அமைச்சர் தனது 2026 நிதிநிலை அறிக்கை உரையின் பகுதி B-ஐத் தொடங்கினார். இதில், விதிகள் மற்றும் படிவங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.


புதிய சட்டம் இன்னும் சில மாதங்களில் வரவிருப்பதால், தற்போதைய விதிகளில் நிதிநிலை அறிக்கையில் அதிக திருத்தங்கள் இருக்காது என்று ஒருவர் நினைத்திருக்கலாம். இருப்பினும், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. நிதியமைச்சர் வெவ்வேறு வரி விதிகளில் சுமார் 63 திருத்தங்களை முன்மொழிந்துள்ளார்.


வருமானக் கணக்கீடு மற்றும் வெளிப்படுத்தல் தரநிலைகள் (Income Computation and Disclosure Standards (ICDS))


வருமானக் கணக்கீடு மற்றும் வெளிப்படுத்தல் தரநிலைகளின் (ICDS) தேவைகளை இந்திய கணக்கியல் தரநிலைகளில் (Indian Accounting Standards (Ind AS)) இணைப்பதற்காக, பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆகியவற்றின் கூட்டுக்குழுவை அமைக்கும் முன்மொழிவை வரி செலுத்துவோர் வரவேற்பார்கள்.


வருமானக் கணக்கீடு மற்றும் வெளிப்படுத்தல் தரநிலைகள் (ICDS) அடிப்படையிலான தனி கணக்கியல் தேவை 2027-28 நிதியாண்டு முதல் வரி நீக்கப்படும். ICDS விதிகளைச் சேர்ப்பதற்காக இந்திய கணக்கியல் தரநிலைகளில் (Ind AS) தரநிலைகளைத் திருத்துவது என்பது சர்வதேச நிதி அறிக்கை தரநிலைகளிலிருந்து (International Financial Reporting Standards (IFRS)) சில விலக்குகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இந்தக் கூட்டுக்குழு இதை எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.


புதிய வருமான வரிச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் வருமானக் கணக்கீடு மற்றும் வெளிப்படுத்தல் தரநிலைகள் (ICDS) உண்மையில் தேவையா என்பதைப் பார்க்க, அந்தக் கூட்டுக்குழு ஒரு செலவு-பயன் பகுப்பாய்வையும் மேற்கொள்ள வேண்டும்.


வரி வசூல் ஆதாரம்


ஆறு வெவ்வேறு வகையான பரிவர்த்தனைகளுக்கான வரி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன.


வெளிநாட்டுப் பயணம் (overseas travel), பணம் அனுப்புதல் (remittances) மற்றும் டெண்டு இலைகள் (tendu leaves) விற்பனைக்கான விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், கனிமங்கள் விற்பனை, மனித நுகர்வுக்கான மதுபானம் விற்பனை மற்றும் கழிவுப் பொருட்கள் விற்பனைக்கு இந்த விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.


குறைந்தபட்ச மாற்று வரி (Minimum Alternate Tax(MAT))


நிறுவன வரி விதிப்பு முறையில் உள்ள ஒரே மாற்றம், குறைந்தபட்ச மாற்று வரி (MAT) விதிமுறையில் செய்யப்பட்டுள்ள திருத்தமாகும். பழைய வரி விதிப்பு முறையில், குறைந்தபட்ச மாற்று வரி (MAT) விதிகளின்கீழ் செலுத்தப்பட்ட வரியை இறுதி வரியாகக் கருதவும், புதிய குறைந்தபட்ச மாற்று வரி (MAT) கடன் எதையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்தபட்ச மாற்று வரிக்கான (MAT) வரி விகிதம் தற்போதுள்ள 15 சதவீதத்திலிருந்து புத்தக லாபத்தில் 14 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.


புதிய வரி முறையில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு, வரிப் பொறுப்பில் 25 சதவீதம் வரை மட்டுமே குறைந்தபட்ச மாற்று வரி (MAT) கடனைச் சரிக்கட்ட அனுமதிக்கப்படலாம். வெளிநாட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை, சாதாரண வரி குறைந்தபட்ச மாற்று வரியை (MAT) விட அதிகமாக இருக்கும் வரி ஆண்டில், மொத்த வருமானத்தின் மீதான வரிக்கும் குறைந்தபட்ச மாற்று வரிக்கும் இடையிலான வித்தியாசத்தின் அளவிற்குச் சரிக்கட்ட அனுமதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.


இந்தத் திருத்தங்கள், கழிவுகள் மற்றும் விலக்குகளைக் கொண்டிருந்த பழைய வரி முறையிலிருந்து புதிய வரி முறைக்கு நிறுவனங்கள் எளிதாக மாற உதவும்.


அனுமான வரிவிதிப்பைத் (presumptive taxation) தேர்ந்தெடுக்கும் வெளிநாட்டவர்களின் அனைத்துப் பல்வேறு குறிப்பிட்ட வணிகங்களுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையை உறுதி செய்வதற்காக, சொகுசுக் கப்பல்களை இயக்கும் வணிகம் மற்றும் இந்தியாவில் ஒரு உள்நாட்டு நிறுவனத்திற்கு மின்னணு உற்பத்தி வசதியை அமைப்பதற்காக சேவைகள் அல்லது தொழில்நுட்பத்தை வழங்கும் வணிகம் ஆகியவையும் குறைந்தபட்ச மாற்று வரியின் (MAT) பொருந்தக்கூடிய தன்மையிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.


கருப்புப் பணச் சட்டம் (Black Money Act)


பல இந்திய வரி செலுத்துவோர் வெளிநாடுகளில் சொத்துக்களை வைத்துள்ளனர். உள்நாட்டு வரி செலுத்துவோரால் வைத்திருக்கப்படும் வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான சிக்கலைச் சமாளிக்க, கருப்புப் பணம் (வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள்) மற்றும் வரி விதிப்புச் சட்டம்-2015 (Black Money (Undisclosed Foreign Income and Assets) and Imposition of Tax Act) உருவாக்கப்பட்டது.


தாங்களாகவே முன்வந்து இணங்குவதை எளிதாக்குவதற்கும், சிறிய வரி செலுத்துவோரின் இத்தகைய பழைய வழக்குகளுக்குத் தீர்வு காண்பதற்கும், வெளிநாட்டுச் சொத்துக்கள் மற்றும் வெளிநாட்டு மூல வருமானத்தை அறிவிப்பதற்கான ஒரு காலவரையறைத் திட்டத்தை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இதில், சொத்து கையகப்படுத்தப்பட்ட தன்மை மற்றும் மூலத்தின் அடிப்படையில் வரி அல்லது கட்டணம் செலுத்துதல் மற்றும் அறிவிக்கப்பட்ட விஷயங்கள் தொடர்பாக கருப்புப் பணச் சட்டத்தின்கீழ் அபராதம் மற்றும் வழக்குத் தொடர்வதிலிருந்து வரையறுக்கப்பட்ட விலக்கு வழங்குதல் ஆகியவை அடங்கும். ஏற்கனவே வழக்கு விசாரணையில் உள்ள அல்லது குற்றச் செயல்களின் வருமானத்துடன் தொடர்புடைய வழக்குகள் இதில் சேர்க்கப்படாது. அசையாச் சொத்துக்களைத் தவிர்த்து, வெளிநாட்டுச் சொத்துக்களுக்காக இந்தச் சட்டத்தின்கீழ் வரி செலுத்துவோர் மீது வழக்குத் தொடர்வதற்கான வரம்பு ₹25 லட்சம் என முன்மொழியப்பட்டுள்ளது.


நிதிநிலை அறிக்கை 2026, முன்கூட்டியே விலை நிர்ணய ஒப்பந்தத்தில் (Advance Pricing Agreement (APA)) இருந்த ஒரு சிக்கலையும் சரி செய்துள்ளது. அதாவது, வரி செலுத்துவோர் செய்த முன்கூட்டியே விலை நிர்ணய ஒப்பந்தத்தின் (APA) அடிப்படையில் தொடர்புடைய நிறுவனமும் தங்கள் வருமான வரிக் கணக்கைத் திருத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக, 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைத் திட்டம், வரிச் சட்டங்களில் பலதரப்பட்ட திருத்தங்களை முன்மொழிகிறது. அவற்றில் சில நன்மை பயக்கும். சில அவசியமானவை, மற்றும் சில முக்கியமாக நிர்வாகம் சார்ந்தவை.


கட்டுரையாளர் ஒரு பட்டயக் கணக்காளர் ஆவார்.



Share:

நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையில் ‘ஆரஞ்சு பொருளாதாரம்’ (orange economy) பற்றிக் குறிப்பிட்டார் : அது என்ன?, அதை மேம்படுத்த அரசாங்கம் எப்படித் திட்டமிடுகிறது? -தீபனிதா நாத்

 ஆரஞ்சு பொருளாதாரம் (orange economy) என்றால் என்ன?, இந்தச் சொல் எங்கிருந்து வந்தது? நிதிநிலை அறிக்கையில் இது தொடர்பாக என்னென்ன அறிவிப்புகள் வெளியிடப்பட்டன? என்பதை கீழே குறிப்பிட்டுள்ளன.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிதிநிலை அறிக்கை உரையில், இந்தியாவின் படைப்பாற்றல் துறை (India’s creative industry) குறிப்பிடப்பட்டது. அப்போது அவர் நாட்டின் ‘ஆரஞ்சு பொருளாதாரத்தை’ மேம்படுத்துவதற்கான திட்டங்களை அறிவித்தார்.


இந்தியாவின் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (Animation, Visual Effects, Gaming and Comics (AVGC)) துறை ஒரு வளர்ந்து வரும் துறையாகும் என்றும், 2030-ம் ஆண்டுக்குள் இதற்கு இரண்டு மில்லியன் வல்லுநர்கள் தேவைப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் சீதாராமன் கூறினார். "மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜி (Indian Institute of Creative Technologies) நிறுவனத்திற்கு ஆதரவளித்து, நாடு முழுவதும் உள்ள 15,000 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) உள்ளடக்கத்தை உருவாக்கும் ஆய்வகங்களை அமைக்க உதவுவதற்கு நான் முன்மொழிகிறேன்," என்று நிதியமைச்சர் கூறினார்.


இந்திய வடிவமைப்புத் துறை (National Institute of Design) வேகமாக விரிவடைந்து வருவதாகவும், இருப்பினும் இந்திய வடிவமைப்பாளர்களுக்குப் பற்றாக்குறை இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். "இந்தியாவின் கிழக்கு பிராந்தியத்தில் வடிவமைப்பு கல்வி மற்றும் மேம்பாட்டை (design education and development) மேம்படுத்துவதற்காக, ஒரு போட்டி வழிமுறை மூலம், ஒரு புதிய தேசிய வடிவமைப்பு நிறுவனத்தை நிறுவ நான் முன்மொழிகிறேன்," என்று சீதாராமன் கூறினார்.


பாரம்பரியம் மற்றும் கலாச்சார சுற்றுலா குறித்துப் பேசியபோது, ​​லோத்தல், தோலாவிரா, ராகிகர்கி, ஆதிச்சநல்லூர், சாரநாத், ஹஸ்தினாபுரம் மற்றும் லே அரண்மனை உட்பட 15 தொல்பொருள் தளங்களை "துடிப்பான, அனுபவமிக்க கலாச்சாரத் தலங்களாக" மேம்படுத்துவது பற்றி நிதியமைச்சர் பேசினார்.


"அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட நிலப்பரப்புகள் பிரத்யேக நடைபாதைகள் மூலம் பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்படும் என்று அவர் கூறினார். பாதுகாப்பு ஆய்வகங்கள், விளக்க மையங்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ஆதரவளிக்க, ஆழ்ந்த கதை சொல்லும் திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.


இந்த முன்முயற்சிகள், 2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வின் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப அமைந்துள்ளன. அதன்படி, 2024-ல் கேமிங்கில் இருந்து கிடைத்த வருவாய் சுமார் ரூ.232 பில்லியனாகவும், அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மூலம் கிடைத்த வருவாய் சுமார் ரூ.103 பில்லியனாகவும் இருந்தது. நேரலை பொழுதுபோக்குத் துறை 2024-ல் ரூ.100 பில்லியனுக்கும் அதிகமான வருவாயைப் ஈட்டியது. இது சுற்றுலா மற்றும் நகர்ப்புற சேவைகளிலும் வலுவான நேர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தியது. 


ஜெய்ப்பூர் இலக்கிய விழா மற்றும் மஹிந்திரா நாடகக் கலைக்கான சிறப்பு விருதுகள் உள்ளிட்ட நாட்டின் சில முக்கிய நிகழ்வுகளைத் தயாரிக்கும் டீம்வொர்க் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் (Teamwork Arts produces) நிர்வாக இயக்குநரும், முன்னணி கலாச்சார தொழில்முனைவோருமான சஞ்சய் ராயின் கூற்றுப்படி, நிதி அமைச்சரின் அறிவிப்பு "மிகவும் அவசியமானது மற்றும் முற்றிலும் சிறப்பானது" என்று குறிப்பிட்டிருந்தார்.


வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், உள்ளூர் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பதிலும் படைப்பாற்றல் துறையின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குப் பல ஆண்டுகள் எடுத்ததாகவும் மற்றும் ஒருவேளை கோல்ட்ப்ளே போன்ற இசை நிகழ்வுகள் (Coldplay concerts) தேவைப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமாக, ஒரு படைப்பாற்றல் பொருளாதாரம் என்பது புத்தாக்கத் துறைக்கு அடிப்படையாக அமைகிறது. வெறும் ஐந்து நாட்கள் நடைபெறும் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவே உள்ளூர் பொருளாதாரத்திற்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானத்தை ஈட்டித் தருகிறது” என்று அவர் கூறினார்.


படைப்பாற்றல் சேவைகளை ஏற்றுமதி செய்வதிலும், நமது அறிவுசார் ஆற்றலை மேம்படுத்துவதிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று ராய் மேலும் கூறினார். "நாங்கள் எந்தவித ஊக்கத்தொகையும் இல்லாமல், இந்தியாவின் திருவிழாக்களை உலகம் முழுவதும் நடத்திவரும் நிலையில், அது அதிக விழிப்புணர்வையும் நீண்டகால சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் ஏற்படுத்தும். ஜெய்ப்பூர் இலக்கிய விழா நிகழ்வுகள் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதன் மூலம் மேலும் பல குழுக்கள் இந்தியாவிற்கு வருகின்றன," என்று அவர் கூறினார்.


ஆரஞ்சு பொருளாதாரம் (Orange Economy) என்றால் என்ன?


'ஆரஞ்சு பொருளாதாரம்' (Orange Economy) என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்திய பெருமை கொலம்பியாவின் முன்னாள் அதிபர் இவான் டியூக் மார்க்வெஸ் மற்றும் முன்னாள் கலாச்சாரத் துறை அமைச்சர் ஃபெலிப் புயிட்ராகோ ஆகியோரையே சேரும். 2013-ல் அவர்கள் எழுதிய ‘ஆரஞ்சு பொருளாதாரம்: ஒரு எல்லையற்ற வாய்ப்பு’ (The Orange Economy: An Infinite Opportunity) என்ற புத்தகத்தில், அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார். அவை, “ஆரஞ்சு பொருளாதாரம் என்பது, யோசனைகள் அறிவுசார் சொத்துரிமையால் அதன் மதிப்பு தீர்மானிக்கப்படும் கலாச்சாரப் பொருட்கள் மற்றும் சேவைகளாக மாற்றப்படும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட செயல்பாடுகளின் குழுவாகும். இந்த ஆரஞ்சுப் பிரபஞ்சத்தில் பின்வருவன அடங்கும்: i) கலாச்சாரப் பொருளாதாரம் மற்றும் ஆக்கப்பூர்வத் தொழில்கள் ஆகும், இதில் வழக்கமான கலாச்சாரத் தொழில்கள் அடங்கும். மற்றும் ii) படைப்பாற்றலை ஆதரிக்கும் செயல்பாடுகள்” ஆகும்.


‘ஆரஞ்சு’ நிறத்தை அவர்கள் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பது குறித்து, அந்தப் புத்தகம், அந்த நிறம் “அடிக்கடி கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் அடையாளம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது” என்றும், பல மதங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது என்றும் கூறுகிறது.


2024-ல் ஐ.நா. செய்திகளுக்கு அளித்த ஒரு நேர்காணலில், ஃபெலிப் புயிட்ராகோ குறிப்பிட்டதாவது, “ஒலி-ஒளி ஊடகங்கள், திரைப்படத் தயாரிப்பு, தொலைக்காட்சி, காணொலி கேம்கள், அனைத்து வடிவங்களிலும் இசை, அத்துடன் கைவினைப் பொருட்கள், நுண்கலைகள், நாடகம் மற்றும் வடிவமைப்பு, ஃபேஷன் போன்ற செயல்பாடுகள், மேலும் அதிகரித்து வரும் தகவல்தொடர்புகளின் பிற மின்னணு வெளிப்பாடுகள் போன்ற செயல்பாடுகள் நாம் யார் என்பதைப் பிரதிபலிக்கின்றன என்றும், நமது அடையாளத்தை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார். இந்தத் துறையை அவர் பொருளாதாரத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஒரு பகுதியாக விவரித்தார்.


பொருளாதாரத்தின் மற்ற ‘நிறங்கள்’


பொருளாதாரத்தின் பல துறைகள் நிறங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. பசுமைப் பொருளாதாரம் (Green Economy) என்பது ஆற்றல் திறன் கொண்ட, நிலையான தொழில்துறையைக் குறிக்கிறது. அதேசமயம், வெள்ளை பொருளாதாரம் (White Economy) என்பது சுகாதாரம் மற்றும் சமூகப் பராமரிப்பைக் குறிக்கிறது. நீலப் பொருளாதாரம் (Blue Economy) என்பது கடல் மற்றும் பெருங்கடல் சார்ந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடையது. வெள்ளிப் பொருளாதாரம் (Silver Economy) என்பது முதியோர் மக்கள்தொகையுடன் தொடர்புடைய துறைகளில் கவனம் செலுத்துகிறது.


இந்தியாவில் படைப்பாற்றல் துறையின் தற்போதைய நிலை


உலகளவில், படைப்பாற்றல் பொருளாதாரம் ஆண்டுக்கு 2 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டி, கிட்டத்தட்ட 50 மில்லியன் வேலைகளை உருவாக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்தியா குறித்து, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகஸ்ட் 2024-ல் அகில இந்திய படைப்பாற்றல் பொருளாதார முன்முயற்சியைத் தொடங்கி வைத்தபோது, ​​“இந்தியாவில் படைப்பாற்றல் துறை இப்போது 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு துறையாகும். மேலும், இது இந்தியாவின் உழைக்கும் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 8 சதவீதத்தினருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது,” என்றும் அவர் கூறினார்.


2023-24 ஆம் ஆண்டில் மட்டும் படைப்பாற்றல் சார்ந்த ஏற்றுமதிகள் 20 சதவீதம் அதிகரித்து, 11 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளன என்றும் அவர் கூறினார். “வரும் ஆண்டுகளில் இந்தத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.


சஞ்சய் ராய், அமைப்பாளர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் அனுமதிகள் மற்றும் தடையில்லாச் சான்றிதழ்கள் உள்ளிட்ட சிக்கல்கள் குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். ஒற்றைச் சாளர அனுமதி முறையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் சரியான திசையில் எடுக்கப்பட்டவை. மகாராஷ்டிராவும் டெல்லியும் கடந்த 10 ஆண்டுகளாக ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்த முயற்சித்து வருகின்றன,” என்று அவர் கூறினார்.


Share:

கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) தொழில்நுட்பத்திற்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு : இது எப்படி செயல்படுகிறது? மற்றும் இது ஏன் ஊக்குவிக்கப்படுகிறது?

 CCUS என்பது வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளைக் குறிக்கிறது. இந்தக் கருத்து, இந்திய அரசாங்கம் இதை எப்படிப் பார்க்கிறது?, மற்றும் இது குறித்த விவாதம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் :


பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை அன்று தனது நிதிநிலை அறிக்கை உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (Carbon Capture, Utilisation and Storage (CCUS)) தொழில்நுட்பங்களுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 20,000 கோடி ஒதுக்கீடு செய்ய முன்மொழிந்தார்.


கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) என்பது புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் முக்கிய காரணியான கார்பன்-டை-ஆக்சைடின் வளிமண்டல வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான ஒரு வழியாகும். சமீபத்திய ஆண்டுகளில், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களும் நிறுவனங்களும் தொழில்துறை உமிழ்வுகளை வெளியேற்றுவதற்கு ஒரு தீர்வாகவும், எதிர்காலத்தில் பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான ஒரு சாத்தியமான வழியாகவும் இது பார்க்கப்படுகிறது.


ஆனால் இந்தத் தொழில்நுட்பம் ஒரு முழுமையான தீர்வாக இல்லை. இந்தக் கருத்தையே இலக்காகக் கொண்டு பல விமர்சனங்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்தக் கருத்து, இந்திய அரசாங்கம் இதை எப்படிப் பார்க்கிறது, மற்றும் இது குறித்த விவாதம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் குறித்த விவாதம் ஆகியவற்றை விளக்குகின்றன.


1. கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (Carbon Capture, Utilisation and Storage (CCUS)) தொழில்நுட்பங்கள் என்றால் என்ன?


இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் வரையறுக்கப்பட்டுள்ளபடி, “கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்புத் திட்டத்தின் நோக்கம், கார்பன்-டை-ஆக்சைடை சேமிப்பதன் மூலமோ அல்லது மீண்டும் பயன்படுத்துவதன் மூலமோ அதன் வெளியேற்றத்தைக் குறைப்பதாகும். இதனால் பிடிக்கப்பட்ட கார்பன்-டை-ஆக்சைடு வளிமண்டலத்தில் கலக்காமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் இலக்காகும்.”


நடைமுறை ரீதியாக, இது புதைபடிவ எரிபொருளை எரிப்பதற்கு முன்பு கார்பன்-டை-ஆக்சைடை அகற்றி, அதைப் பிடித்து, பின்னர் அதை திரவ நிலைக்கு சுருக்கி, பொருத்தமான சேமிப்புத் தளங்களுக்கு கொண்டு செல்வது போன்ற முறைகளை உள்ளடக்கியிருக்கலாம். சர்வதேச எரிசக்தி முகமை (International Energy Agency (IEA)) இந்த செயல்முறையை ஒரு வரைபடத்தில் விளக்கியுள்ளது.

How CCUS works.உலகளவில், இந்தத் தொழில்நுட்பம் பல நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் தனது புத்தாக்க நிதிச் சுற்றின் கீழ் கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) திட்டங்களுக்கு சுமார் $1.5 பில்லியன் நிதியையும், அதன் ' ஐரோப்பாவை இணைக்கும் வசதி' திட்டத்தின் கீழ் CO2 போக்குவரத்து மற்றும் சேமிப்புத் திட்டங்களுக்கு $500 மில்லியனுக்கும் அதிகமான நிதியையும் வழங்கியுள்ளது என்று சர்வதேச எரிசக்தி முகமை (IEA) தெரிவித்துள்ளது. நெதர்லாந்து CCUS தொடர்பான முயற்சிகளில் 7.3 பில்லியன் டாலர்களை முதலீடுகளையும் மற்றும் டென்மார்க்கும் 1.2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

2. இந்தியா கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) திட்டத்துடன் எவ்வாறு பரிசோதனை செய்துள்ளது?


2018 முதல், இந்திய அரசாங்கம், “கார்பன்-டை-ஆக்சைடு பிடித்தல், பிரித்தல், சேமித்தல் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு மதிப்பு கூட்டுதல் ஆகிய துறைகளில் திருப்புமுனை தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து முன்னுரிமை அளிப்பதற்காக” பல நாடுகளுடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.


அரசாங்கத்தின் சிந்தனைக் குழுவான நிதி ஆயோக்கின் 2022 அறிக்கை, இந்தத் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தியது. அதில், “இந்தியா தனது மின் கட்டமைப்பை கணிசமான அளவில் பசுமையாக்கி, 2030-க்குள் 500 ஜிகாவாட் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடையும் இலக்கை அடைந்தாலும், சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை சீரற்ற மற்றும் பிற தேவைக்கேற்ப வழங்க முடியாத தன்மை காரணமாக, புதைபடிவ எரிபொருட்கள் (பெரும்பாலும் நிலக்கரி) அல்லது பிற தேவைக்கேற்ப அனுப்பக்கூடிய ஆதாரங்களில் இருந்து அடிப்படை மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.


2050-க்குள் கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வை பாதியாகக் குறைப்பதற்கும், 2070-க்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கும் இந்தியா கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) திட்டம் ஒரு “முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது” என்று அந்த அறிக்கை கூறியது. நிகர பூஜ்ஜியம் என்பது, பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வின் மொத்த அளவு, இயற்கையாகவோ அல்லது செயற்கையாக அகற்றும் நடவடிக்கைகள் மூலமாகவோ உறிஞ்சப்பட்டு நடுநிலையாக்கப்படும் அளவிற்கு குறைக்கப்பட்டு, ஒட்டுமொத்த உமிழ்வு பூஜ்ஜியமாக மாறுவதாகும்.


3. இந்தியா கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) திட்டத்திற்கு எதிரான வாதங்கள் என்ன?


முதல் விமர்சனம் இந்தியா கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) திட்டங்களின் செலவு மற்றும் சாத்தியக்கூறுகளில் இருந்து எழுகிறது. நிதி ஆயோக் அறிக்கை, “அதிகமான உபகரணங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் உள்கட்டமைப்பு அமைப்பதற்கான செலவுகள் காரணமாக, குறைந்த CO2 அளவுகள் மற்றும் உருவாக்கப்பட்ட பெரிய அளவிலான உள்கட்டமைப்பு ஆகியவற்றால், ஆரம்ப ஆண்டுகளில் இந்தியா கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) கொத்துத் திட்டங்களின் (cluster projects) பொருளாதாரம் மிகவும் சவாலானதாக உள்ளது” என்று குறிப்பிட்டது.


பல பத்தாண்டுகளாக இந்தத் தொழில்நுட்பம் முன்னிறுத்தப்பட்ட போதிலும், உலகளவில் சில செயல்பாட்டில் உள்ள கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு (Carbon Capture and Storage (CCS)) திட்டங்கள் மட்டுமே உள்ளன. 2023-ல் 40 செயல்பாட்டில் உள்ள கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு (CCS) திட்டங்கள் இருந்ததாகவும், அவை ஆண்டுதோறும் 45 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான கார்பன்-டை-ஆக்சைடைப் பிடித்ததாகவும் சர்வதேச எரிசக்தி முகமை (IEA) கூறியது. இதை ஒப்பிடுகையில், சீனா மட்டும் 2021-ல் 12,466.32 மெட்ரிக் டன்கள் கார்பன்-டை-ஆக்சைடை வெளியிட்டது.

இலண்டன் பொருளியல் பள்ளி (London School of Economics (LSE)) 2023 அறிக்கையானது, “பெரிய அளவிலான உமிழ்வு குறைப்புகளை அடைய கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (CCUS) திட்டம் மூலம் கைப்பற்றப்பட வேண்டிய கார்பன் டை ஆக்சைடின் அளவு, CO₂ பயன்பாட்டிற்கான தற்போதைய சந்தையைவிட மிக அதிகமாக உள்ளது” என்றும் விளக்கியுள்ளது. 


'தி கான்வர்சேஷன்' இதழில் (The Conversation) எழுதிய வேதியியல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் புகழ்பெற்ற பேராசிரியரான தியானி மா, இந்தத் தொழில்நுட்பம் "எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழில்துறையால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும்," காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான ஒரு விரிவான உத்தியில் இதற்கு ஒரு இடம் உண்டு என்று கூறினார். 


அதேநேரத்தில், "இந்தத் தொழில்நுட்பம் புதைபடிவ எரிபொருட்களை முடிந்தவரை விரைவாகக் கைவிடுவதை விட, அவற்றின் பயன்பாட்டை நீட்டிக்கவே பயன்படுத்தப்படும்" என்ற வாதத்தையும் அவர் ஒப்புக்கொண்டார். இந்த நோக்கில், புதைபடிவ எரிபொருள் ஆலை இயக்குநர்களும் நிறுவனங்களும் நிலக்கரி அல்லது எரிவாயுவை 'பசுமையானதாக'க் காட்டுவதற்கும், முழுமையான மாற்றத்தை தாமதப்படுத்துவதற்கும் கார்பன் பிடிப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவார்கள்.


சூரிய மற்றும் காற்றாலை போன்ற பசுமை எரிசக்தி ஆதாரங்களில் முதலீடுகள் அதிகரித்து வந்தாலும், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருக்கும் நிலை தொடரும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். உலகளாவிய தரவுகளும், உலகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறிக்கொண்டிருந்தாலும், இந்த முன்னேற்றத்தில் பெரும்பகுதி ஒரே ஒரு நாடான சீனாவிலிருந்து வரும் மிகப்பெரிய முதலீடுகளால் உந்தப்படுகின்றன என்பதைக் காட்டுகின்றன.


அவர் மேலும் குறிப்பிட்டாலும், "கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு பிரபலமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைவதில் நாம் தீவிரமாக இருக்கப் போகிறோம் என்றால், இது நமக்குத் தேவைப்படும். தற்போது, ​​எளிதில் குறைக்க முடியாத துறைகளுக்கு இதை ஒப்பிடக்கூடிய வேறு தீர்வு எதுவும் இல்லை. புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை ஆதரிக்கவோ அல்லது நீட்டிக்கவோ இது பயன்படுத்தப்படக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.


Original Article : Rs 20,000 cr for Carbon Capture Utilisation and Storage tech: How it works, and the push for it.


Share:

‘பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மாண்’ (PM-POSHAN) திட்டம் என்பது என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


 சத்தீஸ்கரில் மதிய உணவு சமைப்பவர்களுக்கு மாதம் ரூ.2,000 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் தங்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் நடைபெற்றக் கூட்டத்தில், கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் வழங்கப்பட்ட விவரங்களின்படி, 22 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மதிப்பூதியத்தை உயர்த்துமாறு வலியுறுத்தியுள்ளன. 2025-26-ஆம் ஆண்டிற்குப் பிறகும் இத்திட்டத்தை நீட்டிப்பதற்கான ஒரு முன்மொழிவு தயாரிக்கப்படுவதற்கு முன்பு, திட்டத்தில் செய்யப்பட வேண்டிய மேம்பாடுகள் மற்றும் மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளைக் கோரி கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைச்சகம் விடுத்த அழைப்பிற்குப் பதிலளிக்கும் விதமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.


பீகார், அருணாச்சல பிரதேசம், ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், தெலங்கானா, குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இந்தத் தொகையை மாதம் ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை உயர்த்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அளிக்கப்பட்ட தரவுகளின்படி, கோவா, மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் டெல்லி உட்பட எட்டு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மதிய உணவு சமைப்பவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் எந்த கூடுதல் தொகையும் இல்லாமல் ரூ.1,000 ஆக உள்ளது என்றும் மற்ற மாநிலங்கள் ஆரம்பத்தில் வழங்கப்படும் ரூ.1,000 உடன் வெவ்வேறு தொகைகளை வழங்கி வருகின்றன. உதாரணமாக, தமிழ்நாட்டில் மாதாந்திரத் தொகை மொத்தம் ரூ.4,100 முதல் ரூ.12,500 வரையிலும், கேரளாவில் ரூ.12,000 ஆகவும், புதுச்சேரியில் ரூ.10,000 ஆகவும் உள்ளது.


கடந்த ஆண்டு நிகழ்வில், மாநிலங்கள் குறிப்பிட்ட பரிந்துரைகளுக்கான அழைப்பிற்குப் பதிலளித்தாலும், மதிய உணவை சமையல்காரர்களுக்கான குறைந்த ஊதியம் குறித்து மாநிலங்கள் சுட்டிக்காட்டுவது இது முதல் முறையல்ல. PM-POSHAN திட்டத்திற்கான வரவு செலவுத் திட்டம் மற்றும் திட்டமிடல் குறித்து விவாதிக்க ஒன்றிய அரசுடன் நடைபெறும் வருடாந்திரக் கூட்டங்களில் பல மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளன.


கடந்த ஆண்டு கூட்டடத்தொடரில் PM-POSHAN திட்டத்தின், கீழ் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியம் குறித்த கேள்விக்கு, கல்வித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி பதிலளித்ததாவது: தகுதியுள்ள குழந்தைகளுக்கு சூடான, சத்தான உணவை வழங்குவது மற்றும் சமையலர்-உதவியாளர்களை (cook-cum-helpers (CCHs)) நியமிப்பது உட்பட, இந்தத் திட்டம் சரியாகச் செயல்படுவதற்கான முழுப் பொறுப்பும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசகளிடமே உள்ளது..


மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் முன்வைத்த மற்ற பரிந்துரைகளில், உணவிற்கான மூலப்பொருள் செலவை அதிகரித்தல், 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குத் திட்டத்தை விரிவுபடுத்துதல் மற்றும் திட்டத்தின் கீழ் காலை உணவை வழங்குதல் ஆகியவை அடங்கும்.


மதிய உணவை சமைப்பவர்களுக்கான ஊதியத்தை உயர்த்த பல மாநிலங்கள் விரும்புவதாகவும், இது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


உங்களுக்குத் தெரியுமா?


பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மாண் (Pradhan Mantri Poshan Shakti Nirman scheme (PM-POSHAN)) திட்டத்தின்கீழ், ஒன்றிய அரசு உணவு தானியங்களை வழங்குகிறது. மேலும், மூலப்பொருள் செலவை மாநிலங்களுடன் (மற்றும் சட்டமன்றங்களைக் கொண்ட டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுடன்) 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கிறது. வடகிழக்கு மற்றும் இமயமலைப் பிராந்தியத்தில் உள்ள மாநிலங்களுக்கு இந்த விகிதம் 90:10 ஆகும். இது முக்கிய உணவுப் பொருட்களில் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின்களைச் சேர்ப்பதை ஊக்குவிக்கிறது.


— அரசியலமைப்பின் 21-வது பிரிவின்கீழ் உள்ள வாழ்வுரிமையின் ஒரு பகுதியாக, உணவுக்கான உரிமை (Right to Food) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு குடிமகனுக்கும் போதுமான உணவு மற்றும் ஊட்டச்சத்தைப் பெறுவதற்கான உரிமையை வழங்குகிறது. அரசுக்கு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளின் 47-வது பிரிவு, ஊட்டச்சத்து மற்றும் பொது சுகாதாரத்தின் தரத்தை மேம்படுத்துவது அரசின் கடமை (state to raise the level of nutrition and public health) என்று கூறுகிறது.




Share:

தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வரி செலுத்துவோருக்கு என்ன இருக்கிறது? மூலத்தில் வசூலிக்கப்படும் வரி உயர்வு, மூலத்தில் வசூலிக்கப்படும் வரி நிவாரணம் மற்றும் பிற முக்கிய நடவடிக்கைகள் பற்றி… -சுகல்ப் ஷர்மா, சந்தீப் சிங்

 2026-27ஆம் வரி செலுத்துவோருக்கான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை: கடந்த ஆண்டின் வருமான வரிச் சலுகைகளுக்குப் பிறகு, 2026-27-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையில் தனிநபர் வரி செலுத்துவோருக்காக எந்த ஒரு பெரிய அறிவிப்பும் இல்லை. இருப்பினும், சில பிரிவுகளில் உள்ள தனிநபர்களைப் பாதிக்கும் பல சிறிய மாற்றங்களும் அறிவிப்புகளும்  இடம்பெற்றுள்ளன.


பியூச்சர் மற்றும் ஆப்ஷன்ஸ் (future and options (F&O)) வர்த்தகங்களுக்கான பத்திரப் பரிவர்த்தனை வரியை (Securities Transaction Tax (STT)) உயர்த்துவது முதல், வெளிநாட்டில் வசிக்கும் தனிநபர்களிடமிருந்து (Persons Resident Outside India (PROIs)) முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மூலதன வரவுகளை அதிகரிக்க முயற்சிப்பது வரை, வெளிநாட்டுக் கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களுக்கான மூலத்தில் வரி வசூலிக்கும் (tax collection at source) விகிதங்களைக் குறைப்பது முதல், வரி விதிப்பதை எளிதாக்குவதற்கும், வரி அபராதம் மற்றும் வழக்குத் தொடர்வதை முறைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் அறிவிப்பது வரை, தனிநபர்களுக்கான முக்கிய அம்சங்கள் இங்கே:


எதிர்காலம் மற்றும் விருப்பத்தேர்வு வர்த்தகங்களில் அதிக பத்திரப் பரிவர்த்தனை வரி விகிதங்கள்


பங்கு வர்த்தகத்தில் "பியூச்சர் மற்றும் ஆப்ஷன்ஸ் பிரிவில் நியாயமான திருத்தத்தை" வழங்கும் நோக்கத்துடனும், அதே நேரத்தில் அரசுக்கு கூடுதல் வருவாயை ஈட்டும் நோக்கத்துடனும், பியூச்சர் மற்றும் ஆப்ஷன்ஸ் வர்த்தகங்களில் பத்திரப் பரிவர்த்தனை வரியை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பியூச்சர் மற்றும் ஆப்ஷன்ஸ் மீதான பத்திரப் பரிவர்த்தனை வரி 0.02%-லிருந்து இரண்டரை மடங்கு அதிகரித்து 0.05%-ஆக உயர உள்ளது. ஆப்ஷன்ஸ் பிரீமியம் மற்றும் ஆப்ஷன்ஸ் செயல்படுத்துதல் மீதான பத்திரப் பரிவர்த்தனை வரி முறையே தற்போதைய 0.1% மற்றும் 0.125% என்ற விகிதத்திலிருந்து 0.15% ஆக உயர்த்தப்படும்.


இந்த நடவடிக்கை, சில்லறை முதலீட்டாளர்களின் பங்கேற்பு பெருமளவில் அதிகரித்திருந்த எதிர்காலம் மற்றும் விருப்பத்தேர்வு பிரிவில் ஊக வணிகத்தைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சந்தை ஒழுங்குமுறை அமைப்பான இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (Securities and Exchange Board of India (SEBI)) கூற்றுப்படி, இந்தத் துறையில் உள்ள 90%-க்கும் மேற்பட்ட தனிநபர் வர்த்தகர்கள் இழப்பைச் சந்திக்கின்றனர். இந்த நடவடிக்கை இந்தத் துறையில் வர்த்தக அளவுகளில் ஒரு மிதமான நிலைக்கு வழிவகுக்கும் என்று  சந்தை ஆய்வாளர்கள் கூறினார்


இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் நபர்களிடமிருந்து (Persons Resident Outside India (PROIs)) பங்கு முதலீடுகளை ஊக்குவித்தல்


இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் நபர்கள், போர்ட்ஃபோலியோ முதலீட்டுத் திட்டம் மூலம் பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனங்களின் பங்குப் பத்திரங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்தத் திட்டத்தின்கீழ் ஒரு தனிநபர் வெளிநாட்டு முதலீட்டாளருக்கான முதலீட்டு வரம்பை 10%-ஆக இரட்டிப்பாக்கவும், அனைத்து தனிநபர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான ஒட்டுமொத்த முதலீட்டு வரம்பை தற்போதைய 10%-லிருந்து 24%-ஆக அதிகரிக்கவும் வரவு செலவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கைகள் குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதையும், மூலதன வரவுகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (Foreign Exchange Management Act (FEMA)) கீழ் இந்தியாவின் குடியுரிமைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யாத எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனமும் வெளிநாட்டு முதலீட்டாளர் ஆவார். இந்த மாற்றங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (non-resident Indians (NRIs)) மற்றும் இந்தியக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் (Overseas Citizens of India (OCIs) ஆகியோரைத் தவிர, பிற இந்தியர் அல்லாத வெளிநாட்டினரிடமிருந்தும் முதலீடுகளை ஈர்க்க உதவும்.


தற்போது, ​​இந்தியாவில் வசிக்காத ஒரு நபர், எந்தவொரு குறிப்பிட்ட இந்திய நிறுவனத்திலும் அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment (FDI)) அல்லது அந்நிய போர்ட்ஃபோலியோ முதலீடு (Foreign Portfolio Investment (FPI)) வடிவில் வெளிநாட்டு முதலீடுகளை வைத்திருக்கலாம். இந்த முதலீடுகள் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ள நுழைவு வழிகள், துறைசார் வரம்புகள் அல்லது முதலீட்டு வரம்புகளுக்கு உட்பட்டவை. இந்த நடவடிக்கைகளின் மூலம், மூலதன வரவுகள் ஊக்கம் பெறும் (capital inflows) என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வெளிநாட்டு கல்வி, சிகிச்சை, சுற்றுலாக்களுக்கான மூலத்தில் வரி வசூலில்  நிவாரணம்


தாராளமயமாக்கப்பட்ட அந்நியச் செலாவணி திட்டத்தின்கீழ், வெளிநாட்டில் கல்வி கற்பதற்கோ அல்லது மருத்துவ சிகிச்சை பெறுவதற்கோ ஆண்டுக்கு மொத்தம் ரூ.10 லட்சம் வரையிலான தொகைக்கு விதிக்கப்படும் மூலத்தில் வரி வசூல் (TCS) தற்போதைய 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


இந்த நடவடிக்கை, முன்கூட்டியே செலுத்த வேண்டிய வரியைக் குறைப்பதன் மூலம், சர்வதேச கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான தடையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூலத்தில் வரி வசூல் என்பது இறுதி வரிப் பொறுப்பிற்கு எதிராகச் சரிசெய்யப்படக்கூடியதாக இருந்தாலும், மூலத்தில் வரி வசூல் விகிதக் குறைப்பு என்பது வரி செலுத்துவோரின் பணம் குறைந்த அளவே வரியாக முடக்கப்படும் என்பதைக் குறிக்கிறது. இது வரி செலுத்துவோரின் பணப்புழக்கத்தை மேம்படுத்தும்.


கூடுதலாக, வெளிநாட்டு சுற்றுலாத் திட்டங்களின் விற்பனை மீதான மூலத்தில் வரி வசூல் (TCS) வரி விகிதமும், 5% (ரூ. 10 லட்சம் வரை) மற்றும் 20% (மொத்தத் தொகை ரூ. 10 லட்சத்திற்கு மேல் இருந்தால்) என்பதிலிருந்து 2%-ஆகக் குறைக்கப்படும்.


தனிநபர்களுக்கான வருமான வரி விதிகளில் இணக்கத்தை எளிதாக்க மாற்றங்கள்


வருமான வரிச் சட்டம், 1961-ஐ விரிவாக மறுஆய்வு செய்ததைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட வருமான வரிச் சட்டம், 2025-ன் படி, எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி விதிகள் மற்றும் படிவங்கள் விரைவில் அறிவிக்கப்படும். சாதாரண குடிமக்கள் சிரமமின்றி விதிகளைப் பின்பற்றக்கூடிய வகையில் படிவங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


வரி செலுத்துவோர் ஒரு பெயரளவிலான கட்டணத்தைச் செலுத்தி, திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், வரி ஆண்டைத் தொடர்ந்து டிசம்பர் 31-லிருந்து மார்ச் 31 வரை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளது. இந்தத் திருத்தப்பட்ட கணக்கு அசல் கணக்காகவோ அல்லது தாமதமாகத் தாக்கல் செய்யப்பட்ட கணக்காகவோ இருக்கலாம். இந்த வசதியைப் பயன்படுத்த விரும்பும் வரி செலுத்துவோர், வருமானம் ரூ. 5 லட்சம் வரை உள்ளதா அல்லது அதற்கு மேல் உள்ளதா என்பதைப் பொறுத்து ரூ. 1,000 அல்லது ரூ. 5,000 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.


பெரும்பாலான தனிநபர்களுக்கான (ITR 1 மற்றும் ITR 2) காலக்கெடு ஜூலை 31 அன்று மாறாமல் அப்படியே உள்ளது. ஆனால், கணக்குகள் தணிக்கை செய்யப்படாத தனிநபர் வணிக உரிமையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இப்போது ஒரு கூடுதல் மாதம் அவகாசம் பெற்று, ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம்.


விதி அடிப்படையிலான தானியங்கி அமைப்பு, குறைந்த அளவு வரி செலுத்துவோர் ஆவண வேலைகள் ஏதுமின்றி மூல வரியில் வரிப் பிடித்தம் செய்வதைத் தவிர்க்கவோ அல்லது குறைத்துக்கொள்ளவோ ​​உதவுகிறது. விதிமுறைகளின் அடிப்படையிலான ஒரு கருவி, உங்கள் ஆண்டு வரி குறைவாக இருக்குமா என்பதைச் சரிபார்த்து, உடனடியாக ஒரு சான்றிதழை வழங்குகிறது. அதிகாரியிடம் விண்ணப்பிக்கத் தேவையில்லை. மதிப்பிடப்பட்ட வருடாந்திர வருமான வரிப் பொறுப்பு, நிலையான மூலத்தில் வரிப் பிடித்தம் (TDS) விகிதத்தை விடக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும்போது, ​​இந்தச் சான்றிதழ் மூலத்தில் வரிப் பிடித்தத்தைக் குறைக்கவோ அல்லது முழுமையாக நீக்கவோ அனுமதிக்கிறது.


மேலும், குடியுரிமை பெறாத ஒருவரால் அசையாச் சொத்து விற்பனை செய்யப்படும்போது, ​​அதற்கான மூலத்தில் வரிப் பிடித்த (tax deducted at source (TDS)) தொகையானது, வரி பிடித்தம் மற்றும் வசூல் கணக்கு எண்ணுக்குப் (Tax Deduction and Collection Account Number (TAN)) பதிலாக, சொத்தை வாங்கும் குடியுரிமை பெற்றவரின் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number (PAN)) அடிப்படையிலான சலான் மூலம் பிடித்தம் செய்யப்பட்டு செலுத்தப்படும். தற்போது, ​​குடியுரிமை பெறாத ஒருவரிடமிருந்து அசையாச் சொத்தை வாங்குவதற்கு, குடியுரிமை பெற்ற தனிநபர்கள் ஒரு வரி பிடித்தம் மற்றும் வசூல் கணக்கு எண்ணை கட்டாயம் பெற வேண்டும்.


குறைந்த அளவு வரி செலுத்துவோருக்கான ஒருமுறை வெளிநாட்டுச் சொத்து வெளிப்படுத்தல் திட்டம்


மாணவர்கள், இளம் தொழில் வல்லுநர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், வெளிநாட்டிலிருந்து திரும்பிய இந்தியர்கள் போன்ற குறைந்த அளவு வரி செலுத்துவோரின் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், அரசாங்கம் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஆறுமாத கால வெளிநாட்டுச் சொத்து வெளிப்படுத்தல் (six-month foreign asset disclosure scheme) திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டத்தின்கீழ், அத்தகைய வரி செலுத்துவோர் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கீழ் வருமானம் அல்லது சொத்துக்களை ஆவணமாக இணைக்கலாம்.


இந்தத் திட்டம் இரண்டு வகையான வரி செலுத்துவோருக்கானது: தங்களின் வெளிநாட்டு வருமானம் அல்லது சொத்துக்களைப் பற்றித் தெரிவிக்காதவர்கள் மற்றும் தங்களின் வெளிநாட்டு வருமானத்தைப் பற்றித் தெரிவித்து வரி செலுத்தியிருந்தாலும், தாங்கள் வாங்கிய சொத்துக்களை தெரியப்படுத்தாதவர்களுக்கானது.


முதல் வகையினருக்கு, வெளிப்படுத்தப்படாத வருமானம் அல்லது சொத்தின் வரம்பு ரூ. 1 கோடி வரை இருக்கும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. அவர்கள் சொத்தின் நியாயமான சந்தை மதிப்பில் 30% அல்லது வெளிப்படுத்தப்படாத வருமானத்தை வரியாகவும், அபராதத்திற்குப் பதிலாக கூடுதல் வருமான வரியாக 30% செலுத்த வேண்டும். இது அவர்களுக்கு சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கும். இரண்டாவது வகையினருக்கு, சொத்தின் மதிப்பு ரூ. 5 கோடி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற சூழலில், ரூ. 1 லட்சம் கட்டணம் செலுத்துவதன் மூலம் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.


வரி அபராதம், சட்ட நடவடிக்கைகளை முறைப்படுத்துதல்


பலதரப்பட்ட வரி நடைமுறைகள் வணிகம் செய்வதை எளிதாக்குவதைத் தடுப்பதால், அரசாங்கம் மதிப்பீடு மற்றும் அபராத நடவடிக்கைகளை இரண்டிற்கும் பொதுவான ஒரு உத்தரவின் மூலம் ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது. முதல் மேல்முறையீட்டு அதிகாரிக்கு முன்பான மேல்முறையீட்டுக் காலத்திற்கு, மேல்முறையீட்டு செயல்முறையின் முடிவு எப்படி இருந்தாலும், வரி செலுத்துவோர் மீது அபராதத் தொகைக்கு வட்டித் தொகை எதுவும் விதிக்கப்பட்டது. மேலும், முன்கூட்டியே செலுத்த வேண்டிய தொகையின் அளவு 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, அது அடிப்படை வரித் தேவையின் அடிப்படையில் மட்டுமே தொடர்ந்து கணக்கிடப்படும் என்று நிர்மலா சீதாராமன் தனது வரவு செலவு அறிக்கை உரையில் தெரிவித்தார்.


வழக்குகளைக் குறைப்பதற்கான ஒரு கூடுதல் நடவடிக்கையாக, மறுமதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட பிறகும், வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரிக் கணக்குகளைப் புதுப்பிக்க அனுமதிக்க முன்மொழிகிறேன். இதற்கு ஆண்டிற்குப் பொருந்தக்கூடிய விகிதத்திற்கு மேல் கூடுதலாக 10% வரி விகிதம் விதிக்கப்படும். பின்னர், மதிப்பீட்டு அதிகாரி தனது நடவடிக்கைகளில் இந்த புதுப்பிக்கப்பட்ட கணக்கை மட்டுமே பயன்படுத்துவார் என்று நிதியமைச்சர் கூறினார்.


கூடுதலாக, வருமானத்தைக் குறைத்துக் காட்டும் வழக்குகளில் அபராதம் மற்றும் வழக்கு நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிப்பதற்கான தற்போதைய கட்டமைப்பு, தவறாகத் தகவல் அளிக்கும் வழக்குகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அத்தகைய வழக்குகளில், வரி செலுத்துபவர் வழக்கமான வரி மற்றும் வட்டியுடன், கூடுதலாக 100% அபராதத்தையும் சேர்த்து இருமடங்கு தொகையைச் செலுத்த வேண்டும்.


கணக்குகளைத் தணிக்கை செய்யத் தவறுதல், பரிமாற்ற விலை நிர்ணயத் தணிக்கை அறிக்கையைச் சமர்ப்பிக்காதது மற்றும் நிதி பரிவர்த்தனைகளுக்கான அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் போன்ற சில தொழில்நுட்பத் தவறுகளுக்கான அபராதங்கள் கட்டணமாக மாற்றப்பட உள்ளன. சில கடுமையான குற்றங்களில் தடுப்பு நடவடிக்கையை உறுதி செய்யும் அதேவேளையில், வருமான வரிச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குத் தொடர்வதற்கான கட்டமைப்பை முறைப்படுத்த இருப்பதாக  நிதியமைச்சர் கூறினார்.


மேலும், கணக்குப் புத்தகங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்காதது, மற்றும் பணமில்லாப் பரிவர்த்தனைகளின்போது மூலவரிப்பிடித்தம் செலுத்துவதற்கான தேவை ஆகிய குற்றங்கள் குற்றமற்றவையாக ஆக்கப்படும். சிறிய குற்றங்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும், வழக்குத் தொடரப்படாது. மீதமுள்ள வழக்குகள் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படும். அவற்றுக்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை சாதாரண சிறைத் தண்டனை மட்டுமே விதிக்கப்படும். மேலும், அந்தத் தண்டனைகளைக்கூட அபராதமாக மாற்ற நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு.




Share:

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த, உயிரி மருந்து ‘சக்தி (SHAKTI) திட்டத்தில் என்னென்ன அம்சங்கள் உள்ளன?

தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி ஒதுக்கீட்டில் உயிரி மருந்து சக்தி (Biopharma SHAKTI) திட்டத்தை முன்மொழிகிறது. இந்தத் திட்டம் மற்றும் வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதாரம் தொடர்பான பிற அறிவிப்புகள் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இங்கே உள்ளன.


தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை 2026-ன் ஒரு பகுதியாக, இந்தியாவை உயிரி மருந்துத் தொழில்நுட்ப துறையில் ஒரு உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உயிரி மருந்துத் தொழில்நுட்ப சக்தி திட்டத்தை அறிவித்தார்.


நீரிழிவு, புற்றுநோய் மற்றும் தன்னுடல் தாக்கக் கோளாறுகள் போன்ற தொற்றா நோய்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மேலும், குறைவான விலையில் மக்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவுவதற்கு உயிரியல் மருந்துகள் முக்கியமானவை என்று நிதியமைச்சர்  குறிப்பிட்டார்.


முன்மொழியப்பட்ட திட்டம் குறித்து


நிதியமைச்சர், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி ஒதுக்கீட்டில், அறிவு, தொழில்நுட்பம் மற்றும் புதுமை மூலம் சுகாதார மேம்பாட்டிற்கான உத்தி (Strategy for Healthcare Advancement through Knowledge, Technology and Innovation (SHAKTI))  என்ற திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.


சேர்க்கப்பட்டுள்ள மருந்துகள்:


உயிரினங்கள் (செல்கள், பாக்டீரியா அல்லது விலங்குகள்) அல்லது அவற்றின் கூறுகளான புரதங்கள் மற்றும் மரபணுக்களிலிருந்து பெறப்படும் சிக்கலான மருந்துகளான உயிரியல் மருந்துகளை (Biologics) உள்நாட்டு உற்பத்திக்குத் தேவையான சூழலை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். புற்றுநோய்கள், தன்னுடல் தாக்க நோய்கள் (வாதம், குடல் அழற்சி நோய் மற்றும் சொரியாசிஸ்) மற்றும் மரபணு கோளாறுகள் போன்ற கடுமையான நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க உயிரியல் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இது போன்ற மருந்துகளை சுத்திகரிப்பது, பதப்படுத்துவது மற்றும் உற்பத்தி செய்வது சிக்கலானதாக இருக்கும்.


இந்தத் திட்டம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு மருந்துகளின் (biosimilar medications) உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இவை உயிரியல் மருந்துகளுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், முற்றிலும் ஒரே மாதிரியாக இருக்காது.




உள்கட்டமைப்பு ஆதரவு:


இந்தத் திட்டத்தின்கீழ், மூன்று புதிய தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (National Institutes of Pharmaceutical Education and Research (NIPER)) தொடங்ப்படவுள்ளது. மேலும், தற்போதுள்ள 7  நிறுவனங்கள் உயிரிமருத்துவத் துறையை மையமாகக் கொண்ட வலையமைப்பின் (Biopharma-focused network) ஒரு பகுதியாக மேம்படுத்தப்படும்.


இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் மருத்துவப் பரிசோதனைகளுக்காக 1,000-க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற தளங்களின் வலையமைப்பும் உருவாக்கப்படும்.


உலகத் தரநிலைகள் மற்றும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட காலக்கெடுவை எட்டுவதற்காக, ஒரு பிரத்யேக அறிவியல் ஆய்வுக் குழு மற்றும் நிபுணர்கள் மூலம் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பை (Central Drugs Standard Control Organisation) வலுப்படுத்த இருப்பதாக நிதி அமைச்சர் கூறினார்.


உயிரி மருந்து சக்தி திட்டம் (Biopharma SHAKTI) ஏன் தொடங்கப்பட்டது?


தொற்று நோய்களுக்குப் (non-communicable diseases (NCDs)) பதிலாக, இந்தியா அதிக அளவில் நீண்டகால நோய்களை எதிர்கொண்டு வருகிறது என்பதை இந்தத் திட்டம் அங்கீகரிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்படும் அனைத்து இறப்புகளிலும் 63% தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. இதில், இருதய நோய்கள் மொத்த இறப்புகளில் 27% ஆகவும், அதைத் தொடர்ந்து நாள்பட்ட சுவாச நோய்கள் (11%), புற்றுநோய்கள் (9%), மற்றும் நீரிழிவு நோய் (3%) ஆகவும் உள்ளன.


முக்கியமாக, இந்தத் திட்டம் சரியான நேரத்தில் வந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் நிறுவன அடையாள மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு அக்டோபர் 2025 முதல் 100% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த பிறகு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மருந்து இறக்குமதிகள் தேசியப் பாதுகாப்புக்கு மருந்து இறக்குமதிகள் அச்சுறுத்தலாக உள்ளதா என்பது குறித்து டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட பிரிவு 232 விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தத் தீர்வைகள் பொதுவான மருந்துகள் மற்றும் அமெரிக்காவில் உற்பத்தித் தளங்களைக் கொண்ட நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்பதால், இந்தியா இந்த அபாயத்தை தவிர்த்துவிட்டது. இந்தியாவின் மருந்துப் பொருட்களின் ஏற்றுமதியில் 90% பொது மருந்துகளாகும் (generic medicine). இவற்றில் பாதி அமெரிக்காவிற்குச் செல்கின்றன. மேலும், பல இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் மருந்துத் தொழிற்சாலைகளும் உள்ளன.


வரி விதிப்பு நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டதால், அக்டோபர் 2025-ல் அமெரிக்காவிற்கான இந்தியாவின் மருந்து ஏற்றுமதி முந்தைய ஆண்டைவிட 23.7 சதவீதம் சரிந்தது. ஆனால், அடுத்த மாதமே அது முந்தைய ஆண்டைவிட 9.8 சதவீதமாக அதிகரித்தது.


இந்த வரி விகிதம் 250% வரை உயரக்கூடும் என்பதால், பயோலாஜிக்கல்ஸ் மற்றும் பயோசிமிலர்கள் துறையில் கவனம் செலுத்துவது, மருந்து சார்ந்த வரிகளிலிருந்து இந்தியாவின் மருந்துத் துறையைப் பாதுகாக்க உதவும். மேலும், அதன் நிலையை ‘உலகின் மருந்தகம்’ (pharmacy of the world) என்பதிலிருந்து, சிக்கலான பயோசிமிலர் மற்றும் உயிரியல் மருந்துகளுக்கான ஒரு மையமாக மாற்றுவதற்கும் இந்தத் திட்டம் வழிவகுக்கும்.


Biologicals மற்றும் Biosimilars என்றால் என்ன?


         உயிரியல் மருந்துகள் (Biologicals) என்பது  இயற்கை உயிரி (மிகச்சிக்கலான புரதங்கள், நுண்ணுயிர்கள் போன்றவை) பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மருந்துகள் ஆகும்.  ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு மருந்துகள் (Biosimilars) என்பது உயிரியல் மருந்துகளுக்கு ஏற்றதாக இருந்தாலும், ஒரே மாதிரி அல்லாத நகல் மருந்துகள் ஆகும்.


இந்தியாவின் மருந்துவத் துறை எவ்வாறு செயல்பட்டுள்ளது


இந்தியாவின் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியில் ஆயுஷ் மற்றும் மூலிகைப் பொருட்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், மொத்த மருந்துகள், மருந்து இடைநிலைப் பொருட்கள், மருந்து உருவாக்கங்கள் மற்றும் உயிரியல் மருந்துகள் இடம்பெற்றிருக்கும்.


இந்தியாவின் மருந்துத் துறை உலகின் மூன்றாவது பெரிய துறையாகும். இது உலகளாவிய மரபுவழி மருந்துகளுக்கான (உயிரியல் மருந்துகளுக்கு ஏற்ற மாதிரிகள்) தேவையில் 20%-ஐப் பூர்த்தி செய்கிறது. மேலும், 2025-ஆம் ஆண்டு  நிதியாண்டில் 191 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ஏற்றுமதிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற அதிகவரி கொண்ட  ஒழுங்குமுறை சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன.


குறைந்த விலையில் தடுப்பூசிகளை வழங்குவதில் இந்தியா ஒரு முன்னணி நாடக உள்ளது. உலகின் பெரும்பாலான டிப்தீரியா, டேட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் (diphtheria, tetanus and pertussis (DPT)) தடுப்பூசிகள், பேசிலஸ் கால்மெட்-குவெரின் (Bacillus Calmette-Guerin (BCG)) மற்றும் தட்டம்மை தடுப்பூசிகளை இந்தியா வழங்கி வருகிறது.


2025-ஆம் ஆண்டு நிதியாண்டில், இத்துறையின் ஆண்டு வருவாய் ரூ.4.72 லட்சம் கோடியை எட்டியது. 2015 முதல் 2025 நிதியாண்டு வரை ஏற்றுமதி ஆண்டுக்கு 7 சதவீத கூட்டு வளர்ச்சி விகிதத்தில் அதிகரித்துள்ளது.


இந்தியாவின் மருத்துவ சாதனங்கள் துறையும் உலக அளவில் போட்டித்தன்மை கொண்டதாக மாறியுள்ளது. 2025ஆம் ஆண்டு நிதியாண்டில் 187 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதன் ஏற்றுமதிகளில் காந்த அதிர்வு அலை வரைவு (Magnetic Resonance Imaging (MRI) மற்றும் கணினி வழி அகத்தோற்ற வரைவு  (Computed Tomography Scan (CT)) வரைவுகள், நேரியல் முடுக்கிகள் (inear accelerators), இதயம் சார்ந்த ஸ்டென்ட்‌கள் மற்றும் வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பங்கள், நுட்பமான படமெடுக்கும் கருவிகள் மற்றும் உயிர் ஆதரவு தொழில்நுட்பங்களில் விரிவடைந்துள்ளதை குறிக்கிறது.


பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிற சுகாதாரத் தொடர்பான முன்முயற்சிகள்


உள்கட்டமைப்பு மேம்பாடு: தற்போதுள்ள துணை மருத்துவ வல்லுநர்களுக்கான (Allied Health Professionals (AHPs)) நிறுவனங்கள் மேம்படுத்தப்படும் என்றும், அதே நேரத்தில் தனியார் மற்றும் பொதுத் துறைகளில் புதிய துணை மருத்துவ வல்லுநர்களுக்கான நிறுவனங்கள் நிறுவப்படும் என்றும் வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கண் மருத்துவம், கதிரியக்கவியல், மயக்க மருந்து, அறுவை சிகிச்சை அரங்க தொழில்நுட்பம், பயன்பாட்டு உளவியல் மற்றும் நடத்தை ஆரோக்கியம் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 10 துறைகளில் கவனம் செலுத்தும். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் துணை மருத்துவ வல்லுநர்களை உருவாக்கும்.


முதியோர் பராமரிப்பில் கவனம் (geriatric care): முதியோர் மற்றும் அது தொடர்பான பராமரிப்பில் கவனம் செலுத்தும் ஒரு வலுவான பராமரிப்புச் சூழல் அமைப்பு (CARE ecosystem) திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டில் 1.5 லட்சம் பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக்கியப் பராமரிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய திறன்களை ஒருங்கிணைத்து, பல்வேறு திறன் கொண்ட பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, தேசிய திறன் தகுதி கட்டமைப்புடன் இணைந்த பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட உள்ளது.


மருத்துவ சுற்றுலா மையங்கள் (Medical tourism hubs): ஐந்து பிராந்திய மருத்துவ மையங்களை உருவாக்கவும், இந்த முயற்சியில் மாநிலங்களுக்கு ஆதரவளிக்கவும் தனியார் துறையுடன் இணைந்து ஒரு திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. நிதி அமைச்சரின் கூற்றுப்படி, இந்த மையங்கள் மருத்துவம், கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளை ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்களாகச் செயல்படும். இந்த மையங்களில் ஆயுஷ் மையங்கள் மற்றும் மருத்துவ மதிப்பு சுற்றுலா வசதி மையங்களும் இடம் பெற்றிருக்கும். இந்த முயற்சி, மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார நிபுணர்கள் என இருவருக்கும் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆயுஷ் மீதான கவனம்: தற்போதைய காலகட்டத்தில் யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நிதியமைச்சர் மூன்று புதிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்களை அமைப்பதற்கும், உயர் தரச் சான்றிதழ் சூழல் அமைப்புக்காக ஆயுஷ் மருந்தகங்கள் மற்றும் மருந்துப் பரிசோதனை ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கும் திட்டங்களை அறிவித்தார். பாரம்பரிய மருத்துவத்திற்கான சான்றுகள் அடிப்படையிலான ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்தும் வகையில், ஜாம்நகரில் உள்ள உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தை மேம்படுத்துவதற்கான திட்டமும் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


மனநலப் பராமரிப்பு மற்றும் அதற்கான அணுகலுக்கு ஊக்கம்: வட இந்தியாவில் 2-வது தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் நிறுவப்படும் என்றும், ராஞ்சி மற்றும் தேஜ்பூரில் உள்ள தேசிய மனநல நிறுவனங்கள் மேம்படுத்தப்படும் என்றும் வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை மையங்களை நிறுவுவதன் மூலம் அவற்றின் திறன்களை 50% விரிவுபடுத்தவும் இந்த வரவு செலவுத் அறிக்கை முன்மொழிகிறது.

 

Original Article : What’s in Biopharma SHAKTI scheme announced by FM Sitharaman?



Share: