ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (AB PM-JAY) என்பது என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய  அம்சங்கள்:


* தேசிய சுகாதார ஆணையத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து சிகிச்சைகளிலும் பாதிக்கும் மேற்பட்டவற்றை தனியார் மருத்துவமனைகள் வழங்குகின்றன. மேலும், மொத்த சிகிச்சைச் செலவுகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கைப் பெறுகின்றன.


* இந்தத் திட்டம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து, ₹1.29 லட்சம் கோடி மதிப்புள்ள 9 கோடிக்கும் அதிகமான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.


* இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 31,005 மருத்துவமனைகளில், 45% மட்டுமே தனியார் துறையால் நடத்தப்படுகின்றன. இருப்பினும், இந்தத் திட்டத்தின் கீழ் 9.19 கோடி மருத்துவமனை நோயாளிகள் சேர்க்கைகளில் 52% தனியார் துறை மருத்துவமனைகளில் நடந்தவை என அறிக்கை வெளிப்படுத்தியது.




* இந்தத் திட்டத்தின் கீழ் மிகவும் பொதுவான சிகிச்சைகள் ஹீமோடையாலிசிஸ் மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான நோய்கள் உள்ளன.


* காய்ச்சல் (4%), இரைப்பை குடல் அழற்சி (3%) போன்ற வயிற்றுத் தொற்றுகள் மற்றும் விலங்கு கடித்தல் (3%) ஆகியவை அடங்கும்.


* உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் சிகிச்சைக்காக வேறு இடங்களுக்குச் சென்று சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.


* மருத்துவமனைகள் முழுவதும் சுகாதாரப் பதிவுகளைப் பகிர்ந்துகொள்ள அரசாங்கம் ஒரு டிஜிட்டல் அமைப்பையும் உருவாக்கி வருகிறது. 2021-ஆம் ஆண்டு முதல், இந்த முயற்சியின்கீழ் 50 கோடி சுகாதாரப் பதிவுகள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளன.


உங்களுக்குத் தெரியுமா?


— அனைவருக்கும் சுகாதார காப்பீட்டை வழங்குவதற்காக ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் 2018-ல் தொடங்கப்பட்டது. இது முக்கியமானது, ஏனெனில் பெரும்பாலான மருத்துவமனை பராமரிப்பு நகரங்களில் 60% மற்றும் கிராமப்புறங்களில் 52%  தனியார் மருத்துவமனைகளால் வழங்கப்படுகிறது.


— இந்தத் திட்டம் மக்கள் தங்கள் சேமிப்பைச் செலவிடுவதையோ அல்லது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கடனில் சிக்குவதையோ தவிர்க்க உதவுகிறது. அரசாங்கம் அதிகமாகச் செலவழித்தாலும், குறைக்கப்பட்ட செலவினங்களால் இது காட்டப்படுகிறது.


— PMJAY இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் உள்நோயாளி பராமரிப்பை உள்ளடக்கியது. இது வெளிநோயாளி பராமரிப்பை உள்ளடக்காது. முன்னர் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக இருந்த ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் (Ayushman Arogya Mandirs (AAMs)) மூலம் வெளிநோயாளி பராமரிப்பு வழங்கப்படுகிறது. இலவச ஆலோசனைகள், பல இலவச மருந்துகள் (172 வரை) மற்றும் இலவச நோயறிதல் சோதனைகள் (63 வரை) வழங்கும் 1,75,000-க்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் உள்ளன.


— AB PM-JAY என்பது உலகின் மிகப்பெரிய பொது சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும். இது தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை வழங்குகிறது, இது வயதைப் பொருட்படுத்தாமல், ஏழ்மையான 40% மக்களை உள்ளடக்கியது.



Original article:

Share:

ஸ்டேபிள்காயின்கள் மற்றும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் பற்றி... -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்திகளில் ஏன்?


சர்வதேச பணப்பரிமாற்றங்களை எளிதாக்க, ஸ்டேபிள்காயின்களுக்கு பதிலாக மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களை (Central Bank Digital Currencies (CBDCs)) பயன்படுத்தவும் ஊக்குவிக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா மற்ற மத்திய வங்கிகளை வலியுறுத்தினார்.


வாஷிங்டன்னில் நடந்த உலக வங்கி குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund (IMF)) வருடாந்திர கூட்டத்தில் பேசிய மல்ஹோத்ரா, கிரிப்டோகரன்சிகள் குறித்த இந்திய மத்திய வங்கியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். அவற்றின் பயன்பாடு பணவியல் கொள்கை, மூலதனக் கணக்கு ஓட்டங்கள் மற்றும் பணமோசடி ஆகியவற்றில் தாக்கங்களை ஏற்படுத்துவதாகக் கூறினார்.


முக்கிய  அம்சங்கள்:


1. ஸ்டேபிள்காயின்கள் என்பது ஒரு குறிப்பிட்ட சொத்து அல்லது சொத்துக்களின் குழுவுடன் ஒப்பிடும்போது அவற்றின் மதிப்பை நிலையானதாக வைத்திருக்க உருவாக்கப்பட்ட கிரிப்டோகரன்சிகள் ஆகும். அவை ஒரு பிளாக்செயினில் உள்ள டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் காலப்போக்கில் நிலையான மதிப்பை வைத்திருக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை வழக்கமான பணம், பொருட்கள் அல்லது பிற கிரிப்டோகரன்சிகள் போன்றவற்றால் ஆதரிக்கப்படுகின்றன.


2. ஜேபி மோர்கனின் கருத்துப்படி, ஸ்டேபிள்காயின்கள் இரண்டு வகைகளில் வருகின்றன :


  • முழுமையாக ஒதுக்கப்பட்ட ஸ்டேபிள்காயின்கள் – இவை வழக்கமான பணம் அல்லது குறுகியகால அரசாங்க பத்திரங்கள் போன்ற உயர்தர சொத்துக்களால் 1:1 என்ற விகிதத்தில் ஆதரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வெளியிடப்பட்ட நாணயமும் ஒரு அடிப்படை சொத்தால் ஆதரிக்கப்படுவதால், நிலையான விலையை வழங்குகிறது.


  • அல்காரிதமிக் (Algorithmic) ஸ்டேபிள்காயின்கள் – இவை அவற்றின் மதிப்பை நிலையானதாக வைத்திருக்க ஸ்மார்ட் ஒப்பந்தங்களைப் பயன்படுத்துகின்றன. வழங்கல் மற்றும் தேவையைப் பொறுத்து அமைப்பு நாணயங்களைச் சேர்க்கிறது அல்லது நீக்குகிறது. விலை மிக அதிகமாக இருந்தால், அது அதிக நாணயங்களை உருவாக்குகிறது. விலை மிகவும் குறைவாக இருந்தால், அது சில நாணயங்களை அழிக்கிறது.


3. ஜூன் மாதத்தில், அமெரிக்க ஸ்டேபிள்காயின்களை வழிநடத்தவும் விதிகளை அமைக்கவும் அமெரிக்க செனட் GENIUS சட்டத்தை அங்கீகரித்தது. அதே மாதத்தில், தென்கொரியாவின் தேசிய சட்டமன்றம் தென் கொரிய வோன் (KRW) ஸ்டேபிள்காயின்களை சட்டப்பூர்வமாக்க டிஜிட்டல் சொத்து அடிப்படைச் சட்டத்தை நிறைவேற்றியது. மே மாதத்தில், ஹாங்காங்கின் சட்டமன்றம் உள்ளூர் ஃபியட் ஆதரவு பெற்ற ஸ்டேபிள்காயின்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு சட்டத்தை அங்கீகரித்தது.


4. உலகளவில், அமெரிக்க டாலர் ஸ்டேபிள்காயின்கள் $300 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மதிப்பைக் கொண்டுள்ளன. CoinGecko-ன் படி, அனைத்து கிரிப்டோ டோக்கன்களின் மொத்த சந்தை மதிப்பு $4 டிரில்லியனுக்கும் அதிகமாகும். தற்போது, ​​டெதர் மற்றும் USDC இரண்டு பெரிய ஸ்டேபிள்காயின்கள் அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு $285 பில்லியன் உலகளாவிய ஸ்டேபிள்காயின் சந்தையில் சுமார் 90% ஆகும்.


5. RBI  கூற்றுப்படி, "CBDC என்பது ஒரு மத்திய வங்கியால் வழங்கப்படும் டிஜிட்டல் பணம் ஆகும். இது வழக்கமான நாணயத்தைப் போன்றது மற்றும் அதனுடன் ஒன்றுக்கு ஒன்று பரிமாறிக்கொள்ளலாம். இதில் உள்ள ஒரே வித்தியாசம் அதன் டிஜிட்டல் வடிவம் ஆகும்." இவற்றை பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் ஆதரிக்கப்படும் டிஜிட்டல் வாலட்களுடன் பயன்படுத்தலாம்.


6. டிசம்பர் 2022–ல், சில்லறை விற்பனையாளர்களுக்காக சோதனை அடிப்படையில், டிஜிட்டல் ரூபாய் அல்லது இ-ரூபாய் எனப்படும் இந்தியாவின் CBDC-யை RBI அறிமுகப்படுத்தியது. தற்போது, ​​RBI சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனை போன்ற இரண்டு வகையான CBDCகளை சோதித்து வருகிறது.


7. மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் (Central Bank Digital Currencies (CBDCs)) பிட்காயின் மூலம் ஈர்க்கப்பட்டன. ஆனால், அவை கிரிப்டோகரன்சிகளிலிருந்து வேறுபட்டவை. கிரிப்டோகரன்சிகள் அரசாங்கத்தால் வெளியிடப்படுவதில்லை, மேலும் அவை சட்டப்பூர்வமானவை அல்ல. CBDCகள், வங்கி அல்லது இடைத்தரகர் தேவையில்லாமல் நாட்டிற்குள்ளும் எல்லைகளுக்கு அப்பாலும் பரிவர்த்தனைகளைச் செய்ய மக்களை அனுமதிக்கின்றன.


8. மல்ஹோத்ராவின் கூற்றுப்படி, மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் (Central Bank Digital Currencies (CBDCs)) என்பவை அரசாங்கப் பணம் ஆகும். அவை சில நன்மைகளைக் கொண்டுள்ளன. டோக்கனைஸ் செய்யப்படலாம், மேலும் பணத்தைப் பாதுகாப்பாகவும் ஒன்றிணைக்கவும் வைக்கின்றன. அவற்றை பெரிய அளவில் பயன்படுத்த அனைவரும் அவற்றை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


9. மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களுக்கும் (CBDC) கிரிப்டோகரன்சிக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால், மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் ஒரு மத்திய வங்கியால் வழங்கப்படுகிறது என்பதே உலகப் பொருளாதார மன்றம் கூறுகிறது. இது மத்திய வங்கியின் "நேரடிப் பொறுப்பாகவும்" அமைகிறது.


10. மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் காகிதப் பணத்தைப் போன்றவை என்று ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ கூறுகிறது. ஏனெனில், அவை மத்திய வங்கியின் நேரடிப் பொறுப்புகளாக உள்ளது. இது வணிக வங்கிகளால் வழங்கப்படும் டிஜிட்டல் பணத்தைவிட அவற்றைப் பாதுகாப்பானதாக்குகிறது.


ரூபாய் அடிப்படையிலான ஸ்டேபிள்காயின்கள் நன்மைகள்


நிலேஷ் ஷா, எக்ஸ்பிரஸ் ஒப்பீனியனில், ரூபாய் அடிப்படையிலான ஸ்டேபிள் நாணயம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது என்று எழுதினார். இது வெளிநாட்டு நாணய விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களிலிருந்து இந்திய பயனர்களைப் பாதுகாக்கும் மற்றும் வெளிநாட்டுப் பணத்தைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும். இந்தியாவின் பணம் அனுப்புதல் மற்றும் வர்த்தக அமைப்புகளுடன் இதை இணைப்பது ரூபாய் அடிப்படையிலான ஸ்டேபிள் நாணயங்களுக்கான தேவையை அதிகரிக்கும். ரூபாய் அடிப்படையிலான ஸ்டேபிள் நாணயம் பல பொருளாதார சிக்கல்களைத் தீர்க்கும் மற்றும் இந்தியாவின் நிதி அமைப்பை மேம்படுத்தும்.


1. பணம் அனுப்புதல்: 


இந்தியா வெளிநாடுகளில் இருந்து அதிகப் பணத்தைப் பெறுகிறது (ஒவ்வொரு ஆண்டும் $125 பில்லியன்). ஸ்டேபிள்காயின்களைப் பயன்படுத்துவது பணம் அனுப்புவதை 90% வரை மலிவாகவும் வேகமாகவும் மாற்றும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவும்.


2. எல்லை தாண்டிய வர்த்தகம்: 


பிளாக்செயினில் ஏற்றுமதி ஒப்பந்தங்கள் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு பணம் செலுத்துவதை எளிதாக்கும், இந்தியாவின் வர்த்தகத்தை மேம்படுத்தும்.

3. நிதி உள்ளடக்கம்: 


ஸ்டேபிள்காயின்கள் e-rupee உடன் இணைந்து, குறிப்பாக கிராமங்களில் உள்ளவர்களுக்கு டிஜிட்டல் நிதியை அணுக உதவும்.

4. உலகளாவிய செல்வாக்கு: 


இந்திய (INR) ஆதரவுபெற்ற ஸ்டேபிள்காயின், ரூபாயை உலகளவில் பரவலாகப் பயன்படுத்தச் செய்யலாம், USD ஸ்டேபிள்காயின்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கலாம் மற்றும் இந்தியாவின் ஃபின்டெக் இருப்பை வலுப்படுத்தலாம்.


5. குறைந்த கடன் செலவு: 


ரூபாய் அடிப்படையிலான ஸ்டேபிள் நாணயங்களை வெளியிடும் நிறுவனம் பூஜ்ஜியம் முதல் குறைந்தவட்டி விகிதங்களில் கடன் வாங்கும். இது வழங்கும் வங்கிகள் அல்லது இந்திய அரசாங்கத்துடன் அதன் பலனைப் பகிர்ந்துகொள்ளலாம்.



Original article:

Share:

அனைவரையும் உள்ளடக்கிய பாடத்திட்டங்கள் இல்லாமல், மாற்றுப் பாலின மாணவர்களுக்கு கல்வி கிடைப்பது பாதி வெற்றிதான். -ஹுசைன் ஆனீஸ் கான்

 விளிம்புநிலை குழுக்களைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்பறைகளில் பிரதிநிதித்துவத்தைப் பெறும்போது, ​​அரசியல் மற்றும் கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் முன்கூட்டியே கொண்டாடுகின்றன. ஆனால் சேர்க்கை கிடைப்பது மட்டுமே, அவர்கள் இதில் முழுமையாக இணைந்துவிட்டார்கள் என்பதைக் குறிக்காது.


கடந்த மாதம், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, ஒன்றிய அரசு, NCERT மற்றும் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில அரசுகளுக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியது. பள்ளி பாடத்திட்டங்கள் திருநங்கை, திருநம்பிகள் உள்ளிட்ட மாற்றுப் பாலின மாணவர்களுக்கு ஏன் பொருந்தவில்லை என்பதை விளக்குமாறு கேட்டுக்கொண்டது. உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


எளிதில் சொன்னால், மாற்றுப் பாலின மாணவர்கள் பள்ளிகளில் சேர்ந்த பிறகு அவர்கள் சேர்க்கப்பட்டதாக உணர அரசாங்கங்களும் கல்வி அதிகாரிகளும் ஏன் உதவவில்லை என்பதை நீதிமன்றம் அறிய விரும்புகிறது. இது "சேர்க்கைக்குப் பிந்தைய சேர்க்கை" (“post admission inclusion”) என்று அழைக்கப்படும் செயல்முறையாக உள்ளது.


சேர்க்கைக்குப் பிந்தைய சேர்க்கை என்பது சட்டக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முக்கியமான அரசியலமைப்பு விதியாகும். ஒரு மாணவரின் கல்வி மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. சேர்க்கைக்கு முன் (before admission (preadmission)), சேர்க்கைக்குப் பிறகு (after admission (post admission)) மற்றும் படிப்பை முடித்த பிறகு (after finishing studies (post-completion)).


ஒரு மாணவர் நிறுவனத்தில் சேர்ந்தவுடன் சேர்க்கைக்குப் பிந்தைய நிலை தொடங்குகிறது. சேர்க்கைக்குப் பிந்தைய சேர்க்கை என்ற கருத்து, மாணவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் மற்றும் நியாயமான ஆதரவு வழங்கப்பட வேண்டும், பாகுபாடு இல்லாமல் சுதந்திரமாகப் படிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதாகும்.


பிரதிநிதித்துவம் இல்லாத குழுக்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்பதை பல அரசியல் மற்றும் கல்வி நிறுவனங்கள் கொண்டாடுகின்றன. ஆனால், சேர்க்கை பெறுவது மட்டும் போதாது. இது உண்மையான சேர்க்கை சேர்க்கைக்குப் பிறகுதான் நடக்கும்.

எடுத்துக்காட்டாக, சில நிறுவனங்கள் பெண் மாணவர்களின் அணுகலை மேம்படுத்த சிறப்பு சேர்க்கை ஒதுக்கீட்டை வழங்குகின்றன. இருப்பினும், அவர்கள் இன்னும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு கட்டடுப்பாட்டு நேரங்களை வைத்திருக்கிறார்கள். இது சேர்க்கைக்குப் பிறகு பாகுபாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.


மாற்றுப்பாலின மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் சேர உதவுவதற்கான நடவடிக்கைகளை எடுத்த பிறகு, சேர்க்கைக்குப் பிறகு அவர்கள் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரு அமைப்பும் இருக்க வேண்டும். இதற்கு நிறுவனத்தின் கலாச்சாரத்தில் முழுமையான மாற்றம் தேவை.


பிரிவு 46-ன் கீழ் கடமைகள்


அரசு கொள்கை வழிகாட்டுதல் கோட்பாடுகளின் (Directive Principles of State Policy (DPSP)) கீழ் உள்ள பிரிவு 46, சமூகத்தின் பலவீனமான பிரிவுகளின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் (சட்டமன்றம் மற்றும் நிர்வாகக் குழு) சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகிறது.


திருநங்கை மாணவர்களை சேர்க்கைக்குப் பிறகு சேர்ப்பது, பிரிவு 46-ன் கீழ் அரசாங்கம் தனது கடமையை நிறைவேற்ற உதவுகிறது. அத்தகைய சேர்க்கையை ஆதரிப்பது சம வாய்ப்புகள் தேவைப்படுபவர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.


பாலினம் மற்றும் பாலின அடிப்படையிலான சேர்க்கை


சமூகமும் சட்டமும் பெரும்பாலும் உயிரியல் பாலினத்தை ஒரு நபரின் பாலினத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகப் பார்க்கின்றன என்று டெபோரா ஜலேஸ்னே சரியாகக் கூறுகிறார். குறிப்பாக அவர்களின் வெளிப்புற உறுப்புகளில் உள்ள வேறுபாடுகள் காரணமாக திருநங்கைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையேயான உயிரியல் வேறுபாடுகள் காரணமாக சேர்க்கைக்குப் பிறகு பாகுபாடு ஏற்படுகிறது. திருநங்கை மாணவர்களுக்கு தனி கழிப்பறைகளை வழங்காதது பாலின அடிப்படையிலான பாகுபாட்டின் ஒரு வடிவமாகும். எனவே, உள்ளடக்கிய பாடங்கள் மற்றும் படிப்புகள் இல்லாமல், விளிம்புநிலைக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அணுகலை வழங்குவது ஒரு பகுதி வெற்றியாக மட்டுமே உள்ளது.


பொதுநல வழக்குகள் மற்றும் நீதிமன்ற அமைப்பை மட்டும் நாம் சார்ந்திருக்கக்கூடாது. அரசியல் தலைவர்களும் அரசுத் துறைகளும் சேர்க்கைக்குப் பிறகும் அனைவரையும் சேர்க்க வேண்டிய தங்கள் அரசியலமைப்பு கடமையைப் புரிந்துகொள்ள வேண்டும். சேர்க்கைக்குப் பிறகும் அவர்கள் கல்வியைத் தொடர்வதை உறுதிசெய்யும் சட்டங்களை இயற்றுவதற்கு அவர்களிடம் போதுமான வளங்களும் அதிகாரமும் உள்ளன. இந்த முயற்சிகள் பெண்கள், சலுகை பெற்ற சாதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் மத சிறுபான்மையினருக்கும் உதவும்.


ஹுசைன் OP ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும், மெல்போர்ன் சட்டப் பள்ளியில் அலெக்ஸ் செர்னோவ் அறிஞராகவும் உள்ளார்.



Original article:

Share:

இந்தியாவின் வாழ்க்கை முறை நோய்களின் சுமை அதிகரித்து வருகிறது. நமக்கு பன்முக அணுகுமுறை தேவை.

 உதாரணமாக, சுற்றுச்சூழலை இலக்காகக் கொண்ட திட்டங்கள், தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் (National Clean Air Programme) மற்றும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை திட்டங்களுடன் இணைப்பது மிகவும் முக்கியம். இது தாமதமின்றி நடக்க வேண்டும்.


2017-ஆம் ஆண்டில், தேசிய சுகாதாரக் கொள்கை (National Health Policy), இதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற தொற்றா நோய்கள் (non-communicable diseases (NCDs)) மீது கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நோய் முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டது. இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய உலகளாவிய நோய் சுமை ஆய்வின் அறிக்கை, இந்தக் கொள்கை செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து 8 ஆண்டுகளில் இந்த மாற்றம் மிகவும் தெளிவாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது. 


சுற்றுச்சூழல் மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவுமுறைகள் மற்றும் அமர்ந்து பணி செய்யும் வாழ்க்கை முறைகளின் பாதகமான விளைவுகளை அங்கீகரிக்கும் ஒரு சுகாதார உத்திக்கு இது ஒரு வலுவான வாதத்தை உருவாக்குகிறது. அறிக்கையின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தியர்கள் நீண்டகாலம் வாழ்ந்தாலும், நாள்பட்ட நோய்கள் மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கின்றன.

இந்தியாவில் தொற்றா நோய்கள் குறித்த சமீபத்திய ஆய்வுகளுடன் சேர்த்து, உலகளாவிய நோய் சுமை ஆய்வையும் படிக்க வேண்டும். உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவில் ஏற்படும் இறப்புகளில் ஏறக்குறைய 65 சதவீதத்திற்கும், தொற்றா நோய்களால் பாதிக்கப்படுபவர்களில் நான்கில் ஒரு பங்கு பேர் 70 வயதுக்குட்பட்டவர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை அமெரிக்காவிற்கு தோராயமாக 12 சதவீதமாகவும், சீனாவிற்கு 17 சதவீதமாகவும் உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இருதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் நுரையீரல் நோய்கள் இந்தியர்களில் பெரும் பகுதியினரின் வாழ்க்கையைக் குறைத்து, அவர்களின் குடும்பங்கள், சமூகம் மற்றும் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது. 


இந்த நோய்களில் சில நோய்களை பற்றி நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை என்பது ஒரு முக்கியப் பிரச்சனையாக உள்ளது. உலகளாவிய நோய் பாதிப்பு ஆய்வு, அத்தகைய ஒரு நோயான நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease (COPD)) மீது கவனத்தை ஈர்க்கிறது - இது நாட்டின் சுவாச நோய்களின் சுமையில் 75 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் குணப்படுத்த முடியாதது. ஆனால், சிகிச்சையளிக்க முடியாதது அல்ல. மேலும், ஆரம்பகால நோயறிதல் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். இருப்பினும், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் இருப்பதால் மருத்துவர்கள் முறையாக நெறிமுறைகளைப் பின்பற்றாததால் இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதால் பல நோயாளிகள் சரியாகக் கண்டறியப்படுவதில்லை. 


கடந்த சில ஆண்டுகளில், கிராமப்புறங்களில் சமூக சுகாதார மையங்கள் (community health centres (CHCs)) மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களை (primary health centres (PHCs)) அரசாங்கம் வலுப்படுத்தியுள்ளது. உலகளாவிய நோய் சுமை ஆய்வு, தேசிய சுகாதாரக் கொள்கையில் உள்ள அடுத்தகட்ட சவாலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது - சமூக சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ள மருத்துவர்களின் நோயறிதல் நுண்ணறிவை வலுப்படுத்துவது.


மருத்துவ ஆராய்ச்சி, ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலின் புரிதலை இணைக்கும் அணுகுமுறை நமது நாட்டிற்குத் தேவைப்படுகிறது. மக்கள் ஆரோக்கியமான தேர்வுகளை மேற்கொள்வதை உறுதிசெய்வதற்கு, சிறு வயதிலிருந்தே பள்ளிகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மூலம் உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் செயல்பாடுகள், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவது மிகவும் முக்கியம். சுற்றுச்சூழலை இலக்காகக் கொண்ட திட்டங்கள், எடுத்துக்காட்டாக, தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவது அவசியம். இதை யாரும் தாமதப்படுத்த முடியாது.



Original article:

Share:

நகர்ப்புற நிலத்தை விடுவித்தல்: இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் தவறவிடப்பட்ட சீர்திருத்தம். -அவ்னி லவாசா

 கட்டுப்பாடு நிறைந்த சட்டங்கள், பிரிக்கப்பட்ட பதிவுகள் மற்றும் மோசமான நில பயன்பாடு ஆகியவை நகர்ப்புற வளர்ச்சியை தடுக்கின்றன (choking).


நகரங்கள் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான, புதுமைக்கும் வேலைவாய்ப்புகளுக்கான முக்கிய இயக்கிகள் என்று நாம் அதிகமாகக் கேட்கிறோம். சில நாட்களுக்கு முன்னர், வெளிவந்த ஒரு கட்டுரை ('இந்த 15 நகரங்கள் இந்தியாவின் வளர்ச்சியை வேகப்படுத்தலாம். அதற்கான வழிகள் இங்கே,'- இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூலை 5) பல நகரங்களின் பிரச்சனைகளையும், அவற்றை தீர்க்க வேண்டிய தேவையை வெளிப்படுத்தியது. தேவையான பணம் மற்றும் கொள்கை பரிந்துரைகள் நன்கு அறியப்பட்டவை. இருப்பினும், கேள்வி என்னவெனில்: ஏன் தீர்வுகள் இன்னும் கிடைக்காமல் உள்ளன? பரந்த கொள்கை பரிந்துரைகளைத் தவிர, மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் செயல்படுத்துபவர்கள் இவற்றை கற்பனை செய்து செயல்படுத்த முடியுமா?


மேற்கோள் காட்டப்பட்ட இந்தக் கட்டுரை காற்று மாசுபாடு, குப்பை, நீர் மற்றும் போக்குவரத்து போன்ற சரிசெய்ய வேண்டிய பெரிய பிரச்சனைகளைப் பற்றிப் பேசுகிறது. மலிவு விலையில் வீடுகளைக் கட்ட உதவுவதற்கு அதிக அளவிலான ஊக்கத்தொகைகள் என்று அழைக்கப்படும் ஒன்றைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறது. அதிக அளவிலான என்பது நகரங்களால் கட்டிட நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், ஒரு நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் கட்டமைக்கப்பட்ட சூழல் மற்றும் ரியல் எஸ்டேட் சந்தையை பாதிக்கவும் பயன்படுத்தப்படும் மேம்பாடு கட்டுப்பாட்டு விதிமுறைகளின் (development control regulations (DCRs)) ஒரு பகுதியாகும். தீர்வு DCR-களை குறைவான கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தி அதிக அடர்த்தியை அனுமதிப்பது எளிமையானதா?


மேம்பாடு கட்டுப்பாட்டு விதிமுறைகள் மட்டும் இந்திய நகரங்களின் வீட்டுவசதி, நிலம் மற்றும் இடப் பற்றாக்குறை பிரச்சினையை தீர்க்க முடியாது. இது நிலப் பயன்பாட்டு விதிமுறைகளுடன் இணைந்து பார்க்கப்பட வேண்டும். அவை இந்திய நில அமைப்பில் உள்ள சிக்கலுக்கு முக்கியக் காரணியாக உள்ளன. இது நமது நகரங்களில் சீர்திருத்தம் மற்றும் முன்னேற்றத்தை மெதுவாக்குகிறது. இதனால் நகர்ப்புற நிலம் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக உற்பத்தி திறன் மற்றும் மதிப்பு முழுமையாக வெளிப்படவில்லை. மேலும், நிலம் மாநிலப் பட்டியலில் (state subject) உள்ளது என்பதால், மாநிலங்களுக்கு இடையில் நில பயன்பாட்டு சட்டங்களில் வித்தியாசங்கள் இருக்கிறது.


நிலத்தின் வளர்ச்சித் திறனைத் அதிகரிக்க சீர்திருத்தத்திற்கான தேவையான பகுதிகளாக மாநிலங்கள் மற்றும் நகரங்கள் (பொருந்தக்கூடிய இடங்களில்) பரிசீலிக்க வேண்டிய சில பகுதிகளை இந்தக் கட்டுரை பரிந்துரைக்கிறது.


செயல்பாடுகள் மற்றும் நடைமுறை அடிப்படையிலான பிரச்சினைகளை முதலில் கருப்பொருள்களாக வகைப்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும். உலகளாவிய நில கருவி வலைப்பின்னல் (Global Land Tool Network) நில நிர்வாகம் மற்றும் மேலாண்மைக்கான முக்கியப் பணிகளை அடையாளம் கண்டு அவற்றை நில உரிமை (land tenure), நில மதிப்பு (land value), நிலப் பயன்பாடு (land use) மற்றும் நில மேம்பாடு (land development) என வகைப்படுத்துகிறது. இந்தியாவில், செயல்முறை சார்ந்த சிக்கல்களும் உள்ளன.


நில உரிமை (Land tenure)


நில உரிமை மற்றும் பாதுகாப்பு என்பது நிலம் மற்றும் இயற்கை வளங்களில் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மாற்றுதல் ஆகியவற்றின் அம்சங்களை உள்ளடக்கியது. இது பட்டா வழங்குதல், நிலப் பிரச்சனைகள், நிலங்களை கையகப்படுத்துதல் மற்றும் முறைசாரா குடியிருப்புகளை நிர்வகித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. நில மேலாண்மைக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தாலும், இதற்கு ஒரு இணையான மற்றும் தன்னிச்சையான பகுப்பாய்வு தேவைப்படுகிறது. இந்தக் கட்டுரையில் இது குறிப்பிடப்படவில்லை. நகர்ப்புற வாழ்விடங்களின் தேசிய புவியியல் அறிவு சார்ந்த நில ஆய்வு (NAtional geospatial Knowledge-based land Survey of urban HAbitations (NAKSHA)) எனப்படும் திட்டத்தின்மூலம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நகர்ப்புற நில பட்டா வழங்குதல், சொத்து அட்டைகள் வழங்கப்படும். இது பட்டாக்கள் மற்றும் உரிமைகோரல்கள் குறித்து அதிகம் தெரிந்து கொள்வதற்கு வழிவகுக்கும். ஆனால் மாநிலங்களுக்கு இடையே வேறுபடும் நிலத்தின் உரிமையை நிர்வகிக்கும் சட்டங்களில் மாற்றம் தேவைப்படும்.


நிலப் பயன்பாடு (Land use)


நிலப் பயன்பாடு என்பது நிலம் மற்றும் இயற்கை வளங்களின் பயன்பாட்டின் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாட்டை உள்ளடக்கியது. விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத நிலமாக மாற்றுவது தொடர்பான சட்டங்களில் உள்ள குறைபாடுகள் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், உணவு உற்பத்திக்கு வளமான நிலத்தைப் பாதுகாக்கவும் நகரமயமாக்கலுக்கு தேவையற்ற ‘வேளாண் நிலத்தை’ மட்டும் மாற்ற அனுமதிக்கவும் சமநிலையான அணுகுமுறை தேவைப்படுகிறது. நில மாற்றத்திற்கான தெளிவான சட்டங்கள் நில மதிப்பின் முழு திறனையும் பற்றிய அறிய முக்கிய காரணியாக இருக்கும்.


மேலும், தனியார் தலைமையிலான முயற்சிகளில் திறமையான நிலப் பயன்பாட்டை ஒழுங்குமுறை கட்டமைப்பு உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், நில ஒருங்கிணைப்பு (land pooling) மற்றும் துணைப்பிரிவு சட்டங்களால் செயல்படுத்தப்படும் அளவு தேவை. துணைப்பிரிவைத் தடுக்கும் சட்டங்கள் மற்றும் அளவின் பொருளாதாரத்தைச் சுருக்கும் நில உச்சவரம்பு சட்டங்கள் (land ceiling laws) ஊகங்களைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில் முழுமையான நில மதிப்பின் உணர்வை ஊக்குவிக்க கவனமாக மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். குறிப்பாக, மக்கள்தொகையின் ஏழை பிரிவுகளின் தேவைகளுக்கு நில வங்கிகள் விலைகளை நியாயமான வரம்புகளுக்குள் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும். இந்த நிலைமையை மேலும் சிக்கலாக்குவது என்னவென்றால், நிலப் பதிவுகளில் குடியிருப்பு நில வகைகள் முழுவதும் உடைமை அடிப்படையிலான பயன்பாட்டு உரிமைகள் (usufructuary rights) இருந்தாலும், அத்தகைய சூழல்களில் பட்டா வழங்குவது சமமான கொள்கையாக இருக்காது. இந்த பிரச்சனைகள் அரசியல் மற்றும் குழப்பமான நிர்வாக நடைமுறைகளில் சிக்கியுள்ளதால், நிலங்கள் செயலிழந்த வகையில் பயன்படுத்தப்படுகின்றன.





நில மதிப்பீடு


நில மதிப்பீடு மற்றும் வரி கொள்கைகள் நகர்ப்புறப் பகுதிகளில் நில சந்தையை கணிசமாக பாதிக்கின்றன. நிலத்திற்கான சந்தையாக செயல்படுவதைத் தவிர, நகர்ப்புற நில சந்தை ஒரு பெரிய முதலீட்டு சந்தையாகவும் செயல்படுகிறது. இந்தச் செயல்பாட்டில், நில ஊக வணிகம் சந்தையிலிருந்து கணிசமான அளவு நிலத்தை எடுத்துச் செல்கிறது. காலியாக உள்ள நிலங்களுக்கு வரி விதிக்காதது நிலப் பயன்பாட்டு திறனை திறமையற்ற முறையில் பயன்படுத்தும் சூழலை உருவாக்குகிறது.


நில மேம்பாடு


நகர்ப்புற வளர்ச்சியின் முக்கிய அங்கமாக நில மேம்பாடு உள்ளது. உள்ளூர் கட்டிட விதிமுறைகள் அதிகபட்ச தள பரப்பு விகிதம் (Floor Area Ratio (FAR)), கட்டிட உயரம், தரைப் பரப்பு, ஓரங்கள் மற்றும் இடைவெளிகளை ஆகியவற்றை நிர்ணயிப்பதன் மூலம் அதிகபட்ச கட்டுமான இடத்தைக் கட்டுப்படுத்துகின்றன. உயர கட்டுப்பாடுகள் மேம்பாடு செய்யக்கூடிய இடத்தை இழக்க வழிவகுக்கின்றன. இதன் விளைவாக புறநகர் விரிவடைதல் (suburban sprawl) மற்றும் செயற்கை பற்றாக்குறையால் சமூக செலவுகளை சுமத்துகிறது. ஒருங்கிணைந்த போக்குவரத்து-நில பயன்பாட்டுத் திட்டமிடல் மூலம் கட்டிட விதிமுறைகளைத் தளர்த்தலாம். போக்குவரத்து சார்ந்த மேம்பட்டு கொள்கைகள் (Transit-oriented development policies) ஒருங்கிணைப்பை அதிகரிக்கும், நெரிசலைக் குறைக்கும் மற்றும் வளங்களை உருவாக்கும் நகரங்களை உருவாக்குவதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.



சவால்கள்


இந்திய நகரங்களில் அதிகரித்துவரும் அடர்த்தியைத் தக்கவைக்க போதுமான உள்கட்டமைப்பை வழங்குவதில் உள்ள சவாலை அங்கீகரிக்கும் அதே வேளையில், நகர்ப்புற விரிவாக்கம் ஒரு பெரிய சவாலாக இருக்கலாம் என்று கொள்கை வகுப்பாளர்களிடையே ஒருமித்தக் கருத்து உள்ளது. கட்டுப்பாடு நிறைந்த கட்டிட விதிமுறைகள் அதிகமான விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத பயன்பாடுகளுக்கு மாற்ற வழிவகுக்கின்றன. தள பரப்பு விகித அதிகரிப்பதற்கு ஒருவர் வாதிடலாம். ஆனால், விதிமுறைகளை அமல்படுத்துவதில் அரசியல் விருப்பம் மற்றும் நிர்வாகத் திறன் இல்லாதது வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிமுறை சீர்திருத்தங்களை வடிவமைக்கும் போது கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.


தற்போதைய இந்திய நகர்ப்புற திட்டமிடல் வரைபடங்கள், முக்கிய நகரமைப்பு திட்டங்கள் மற்றும் மண்டல விதிமுறைகள் பெரிய முறைசாரா துறைக்கு வழங்கவில்லை. ‘முறைசாரா தன்மை’ (Informality) அது உண்மையான சந்தை இயக்கவியலைக் குறிக்கும் என்றாலும் அது அங்கீகரிக்கப்படவில்லை. இந்த இயக்கவியலை ஒருங்கிணைக்காமல் சீர்திருத்தம் செய்வது சந்தை நடவடிக்கைகளில் ஒரு செயற்கையான தடையை உருவாக்கும். முறை மற்றும் முறைசாரா தன்மை, நவீன திட்டமிடல் மற்றும் உள்ளூர் நிலைமைகள், சந்தை இயக்கவியல், சட்ட மற்றும் அரசாங்க விதிகளுக்கு இடையில் ஒரு சமநிலையைக் கண்டறிய வேண்டும்..


முக்கிய பிரச்சினைகளைத் தவிர, நில உடைமையின் மாற்றம், பதிவு மற்றும் கட்டிட அனுமதிகளைப் பெறுவது தொடர்பான தாமதமான மற்றும் சிக்கலான நடைமுறைகள், சட்டங்களில் ஒருமைப்பாடு இல்லாமை மற்றும் முரண்பட்ட விதிமுறைகளுடன் ஒரே மாதிரியான பாத்திரங்களை நிறைவேற்றும் பல நிறுவனங்கள்மீது முழுமையான மறுஆய்வு தேவை. பல மாநிலங்களில், நில பரிவர்த்தனைகளுக்கான நிலப் பதிவு செயல்முறை, சொத்து வரி முறை மற்றும் வருவாய் துறையால் பராமரிக்கப்படும் உரிமைப் பதிவு ஆகியவற்றிற்கு இடையே அதிக ஒருங்கிணைப்பை நாம் கொண்டு வரவேண்டும். சில நகரங்கள் நில வருவாய் மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு இடையே பதிவுகளின் மாற்றத்தை ஒப்பீட்டளவில் நன்றாக நிர்வகித்திருந்தாலும், மற்றவை அவ்வாறு செய்யவில்லை. டிஜிட்டல் நகர நிலப் பதிவுகளை நிர்வகிக்க ஒரு துறை இருப்பது நிலத்தை சிறப்பாகப் பயன்படுத்த உதவும்.

இந்திய நகரங்கள் வளர்ச்சியடைந்து வருவதால், அவை நிலப் பயன்பாட்டுத் திறனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பிரச்சினைகளை அடையாளம் காண, குறிப்பிட்ட அடிப்படை காரணங்கள் மற்றும் சீர்திருத்த உத்திகளை வகுக்க ஆழமாக ஆராய்வதன் மூலம் உயர்தர யோசனைகளிலிருந்து (higher-level ideas) குறிப்பிட்ட சீர்திருத்த நடவடிக்கைக்கு நாம் செல்ல வேண்டும்.


எழுத்தாளர் ஒரு அரசு ஊழியர்.



Original article:

Share:

மின்-ஆளுகையை திறம்பட செயல்படுத்துவதில் எந்த கட்டமைப்பு காரணிகள் தடையாக இருக்கின்றன? -ஷாம்னா தச்சம் போயில்

 டிஜிட்டல் மயமாக்கல் மூலம் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றம், ஊழல் மற்றும் விருப்புரிமை மூலம் பாரம்பரிய முறைகளை அகற்ற உதவியுள்ளது. இருப்பினும், மின்-ஆளுகையில் தொழில்நுட்பத்தை (techno-centrism) அதிகமாக நம்பியிருப்பது மக்களை விலக்கிவைப்பதற்கான அபாயத்தை ஏற்படுத்துகிறதா?


20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 2019-ஆம் ஆண்டு வரையிலான இந்தியாவின் மின்-ஆளுகைப் பயணம் பல்வேறு கட்டங்களாக வளர்ச்சியடைந்தது. இதில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பின்புல கருவியாக (back-end tool) இருந்து சில காலகட்டத்திற்கு பின்னர் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் சூழல் அமைப்பாக மாறியது.


COVID-19 தொற்றுநோய் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் நான்காவது கட்டம் தொடங்கியது. இதில் தொழில்நுட்பம் ஒரு சேவை-விநியோக கருவியாக (service-delivery tool) இருந்து கொள்கை நோக்கங்கள் மற்றும் செயல்படுத்தல் முறைகள் இரண்டையும் வடிவமைக்கும் அறிவாற்றல் கட்டமைப்பை உருவாக்குகிறது. இந்த மாற்றம் மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பரிமாணங்களில் வெளிப்படுகிறது. அவற்றைப் பார்ப்போம்.


முதலாவதாக, தொழில்நுட்பத்தின் பங்கு சுகாதார கண்காணிப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் விரிவடைந்தது. ஆரோக்ய சேது (Aarogya Setu) மற்றும் கோ-வின் (CoWIN) போன்ற தளங்கள் பெரிய அளவிலான டிஜிட்டல் பொது சுகாதார உள்கட்டமைப்பாக மாறியதை காட்டுகின்றன. அதே நேரத்தில், பொலிவுறு நகர (Smart City) கட்டுப்பாட்டு மையங்கள் இப்போது போக்குவரத்து மேம்பாடு (traffic optimisation) மற்றும் வள ஒதுக்கீடு போன்றவவற்றிற்காக செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence (AI)) பயன்படுத்தி பகுப்பாய்வுகளை ஒருங்கிணைக்கின்றன.


இரண்டாவதாக, நலத்திட்டங்களை சரியாக வழங்க தொழில்நுட்பம் கடந்த காலங்களைவிட முக்கியமானதாக மாறியுள்ளது. ஆதார் சார்ந்த பொது விநியோக முறை (Aadhaar enabled Public Distribution System (AePDS)) போன்ற அமைப்புகள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்துகின்றன. மேலும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் (Ayushman Bharat Digital Mission) ஒரு விரிவான டிஜிட்டல் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது.


மூன்றாவதாக, தரவுத் பகுப்பாய்வின் (data analytics) மூலம் எதிர்பார்ப்புத்தன்மையுள்ள ஆட்சி நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டது. தேசிய தரவு பகுப்பாய்வுத் தளம் (National Data Analytics Platform) போன்ற தளங்கள், நிகழ்நேர கண்காணிப்பு எவ்வாறு கொள்கை தேர்வுகளை முன்கூட்டியே வடிவமைக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.


உள்கட்டமைப்பை உருவாக்கிய முந்தைய கட்டங்களைப் போல் இல்லாமல், தற்போதைய கட்டம், சட்டபூர்வமான நிர்வாகத்தின் கட்டமைப்பையே உருவாக்கி வருவதால், தொழில்நுட்பத்தின் வளர்ந்துவரும் பங்கைக் காணமுடிகிறது. கொள்கை உருவாக்கம் மற்றும் செயல்படுத்தலுக்கு டிஜிட்டல் மயமாக்கல் ஒரு முன்நிபந்தனையாக (precondition) மாறியுள்ளது. இந்த பரிணாம வளர்ச்சி மூலம் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றம், ஊழல் மற்றும் விருப்புரிமை மூலம் பாரம்பரிய முறைகளை அகற்ற உதவியுள்ளது. அதே நேரத்தில் புதிய வகையான புறக்கணிப்பு அமைப்புகளை உருவாக்கியுள்ளது.


இந்த நான்காம் கட்ட மின்-ஆளுகை தொலைநோக்குப் பார்வையை திறம்பட செயல்படுத்துவதில், மூன்று கட்டமைப்புகளில் உள்ள தடையாக உள்ளன.


உள்ளடக்கிய மின்-ஆளுகை (inclusive e-governance) குறிப்பிடத்தக்க தடைகளில் ஒன்று டிஜிட்டல் எழுத்தறிவு ஆகும். ஏனெனில், பல தனிநபர்கள், கிராமப்புற பகுதிகளிலும் வயதான மக்களிடமும், மின்-ஆளுகை சேவைகளை திறம்பட பயன்படுத்தும் திறன் இன்னும் ஏற்படவில்லை. இந்திய குடும்பங்களில் 38 சதவீதம் மட்டுமே டிஜிட்டல் எழுத்தறிவு உடையவர்கள், கிராமப்புற பகுதிகளில் 25 சதவீதம், நகர்ப்புற பகுதிகளில் 61 சதவீதம் உள்ளது. முறைசாரா தொழிலாளர்களின் மிகப்பெரிய பிரிவை உருவாக்கும் விவசாய சாதாரண தொழிலாளர்களிடம் டிஜிட்டல் எழுத்தறிவு 13 சதவீதமாக உள்ளது. வேளாண்மை அல்லாத தொழிலாளர்களில் 53% பேருக்கு டிஜிட்டல் திறன்கள் உள்ளன.


இந்தியாவின் மொழி பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, பல மாநில மொழிகளில் மின்னணு ஆளுமை சேவைகளை வழங்குவது வள-நிறைவானதாகவும் (resource-intensive), தொழில்நுட்பரீதியாக சவாலானதாகவும் உள்ளது, ஆயினும் 98 சதவீத இணைய பயனர்கள் மாநில மொழிகளில் உள்ளடக்கத்தை அணுகுகின்றனர். பல பகுதிகளில் இன்னும் நம்பகமான இணைய அணுகலும், நிலையான மின்சார விநியோகமும் இல்லை, இவை மின்னணு ஆளுமை தளங்கள் சீராக இயங்குவதற்கு அவசியமானவை.


உலகின் மிகப்பெரிய முறைசாரா தொழிலாளர் தரவுத் தளமான இ-ஷ்ரம் தளம் (e-Shram portal), பயனர் அனுபவத்தைவிட பின்தள தரவு திரட்டலுக்கு முன்னுரிமை அளிக்கும் தொழில்நுட்ப, மேலிருந்து கீழ் வடிவமைப்பு செயல்முறைகள் சில நேரங்களில் அணுகல் சவால்களை எவ்வாறு கவனிக்காமல் போகலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.


30.48 கோடி முறைசாரா தொழிலாளர்கள் (informal workers) பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 13.5 கோடி பேர் இன்னும் தளத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த தளத்திற்கு ஸ்மார்ட்போன்கள், நிலையான இணையம், செயல்படும் வங்கிக் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் திறன்களைக் தேவைப்பட்டன. ஆனால், பயனர்களின் வாழ்க்கை சூழல்களைப் புரிந்துகொள்ள அல்லது வடிவமைப்பின்போது கருத்துக்களைச் சேகரிக்க சில பங்கேற்பு வழிமுறைகள் இருந்தன.


அரசு ஊழியர்களின் எதிர்ப்பு, வேலை இழப்பு பயம் மற்றும் விழிப்புணர்வு இல்லாமை காரணமாக பல்வேறு மின்-ஆளுகை திட்டங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இந்த சவால்கள் நல்ல நோக்கத்துடன் கொண்ட மின்-ஆளுகை திட்டங்கள்கூட எவ்வாறு அடிமட்ட அளவில் (grassroot level) கட்டமைப்புத் தடைகளை கவனிக்காமல் விடுகின்றன என்பதை காட்டுகின்றன.


இந்தியாவின் மின்-ஆளுகை முயற்சிகள் லட்சிய இலக்குகளை பின்பற்றியுள்ளன - தொழில்நுட்ப அங்கீகாரம் மூலம் முறைகேடுகளை குறைத்தல் மற்றும் திட்டங்கள் பயனாளிகளை திறம்பட சென்றடைவதை உறுதி செய்தல்,  நலத்திட்டங்களில் மோசடிகளைத் தடுக்க பயோமெட்ரிக் அமைப்புகளை பயன்படுத்துதல் மற்றும் தடையற்ற சேவை அணுகலுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் தளங்களை உருவாக்குதல் ஆகியவை ஆட்சி நிர்வாகத்தை நவீனமயமாக்குவதற்கான நல்ல நோக்கமுடைய முயற்சிகளாக உள்ளன. இருப்பினும், இந்த திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்தும் அனுபவங்கள், முழுமையான வெற்றியை அடைய சில அடிப்படைக் கட்டமைப்பு குறைகள் உள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றன.


நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் மோசடியைத் தடுப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட பயோமெட்ரிக் அங்கீகார அமைப்புகள், இந்தியா போன்ற அதிக  மக்கள்தொகையும், பல்வேறு வகையான நுட்பமான பாதிப்புகளை உள்ள நாட்டில் பரந்த அளவில் செயல்படுத்தப்படும்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன. உதாரணமாக, தொழிலாளர்களிடையே தேய்மானம் அடைந்த கைரேகைகள் அல்லது வயதான குடிமக்களிடையே கருவிழி வடிவங்கள் மாற்றப்பட்டதால், ஜார்க்கண்டில் 49 சதவீதமும், ராஜஸ்தானில் 37 சதவீதமும் போன்ற மாநிலங்களில் சரிபார்ப்பு தோல்வியின் அதிக விகிதங்கள் பதிவாகியுள்ளன.


இந்த அங்கீகார சவால்கள் தொழில்நுட்ப வடிவமைப்பு அனுமானங்கள் மற்றும் நிலைமை உண்மைகளுக்கு இடையிலான இடைவெளிகளிலிருந்து எழுகின்றன மற்றும் தகுதியான பயனாளிகளின் சமூக நலத்திட்டங்களுக்கான அணுகலை பாதிக்கின்றன.


மேலும், அங்கீகார தோல்விகளை எதிர்கொள்ளும் குடிமக்கள் பெரும்பாலும் தங்கள் தரவை சரிசெய்ய மையங்களுக்கு பல முறை வருகை தருகிறார்கள். அதே நேரத்தில் இந்த அங்கீகார தளங்களில் குறைபாடுள்ள பயோமெட்ரிக் பதிவுக்கான உள்ளமைக்கப்பட்ட பொறுப்பான அமைப்புகள் அல்லது குறைதீர்ப்பு வழிமுறைகள் இல்லை. எனவே, மாற்று அங்கீகார வழிமுறைகளை உறுதிப்படுத்துவது தொழில்நுட்பத் திறனை மனித மாற்றத்துடன் சமநிலைப்படுத்த உதவும். அதனால், அமைப்பு அதிக அளவு பயனருக்கு-ஏற்றதாக (user-centric) மாறும்.


எல்லாவற்றையும் டிஜிட்டல் முறையில் ஒன்றிணைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், 31-க்கும் மேற்பட்ட மத்திய மின்-ஆளுகைத் திட்டங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதால், ஒருங்கிணைப்பது இன்னும் கடினமாக உள்ளது. அவை நன்றாக இணைக்கப்படுவதில்லை. சில சமயங்களில் ஒரே மாதிரியான வேலைகளைச் செய்கின்றன.


இதன் காரணமாக, மக்கள் பெரும்பாலும் வித்தியாசமாகத் தோற்றமளிக்கும் மற்றும் செயல்படும் பல வேறுபட்ட பயன்பாடுகள் அல்லது வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அவர்களின் அடையாளச் சரிபார்ப்பு தோல்வியுற்றால், அதற்கான காரணம் அவர்களுக்கு எப்போதும் சொல்லப்படுவதில்லை. இது போன்ற சூழலைக் கருத்தில்கொண்டு மாற்று வழிகளை வலுப்படுத்த வேண்டியிருக்கலாம்.


இங்கு மின்-ஆளுகையில், தொழில்நுட்ப மையப்படுத்தல், மனித மாறுபாடுகளை விட இயந்திர துல்லியத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் சில மக்களை விலக்கி வைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. வலுவான மாற்று வழிமுறைகளை உருவாக்குவது, தொழில்நுட்ப தேவைகள் தற்செயலாக உரிமையுள்ள நலன்புரி பயன்களைப் பெறுவதற்கு தடைகளை உருவாக்காமல் இருப்பதை உறுதி செய்யும், குறிப்பாக உயிரியல் முறைகளில் இயல்பாக மாறுபாடு கொண்டிருக்கும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு அல்லது இந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள குறைந்த திறனும் விழிப்புணர்வும் உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது.



Original article:

Share:

ஏன் தங்கத்தின் விலை உயர்வு இந்தியக் குடும்பங்களை பணக்காரர்களாக ஆக்குகிறது மற்றும் ஏன் சச்சின் டெண்டுல்கர் இப்போது பொருளாதார ஆசிரியராக இருக்கிறார்? -சித்தார்த் உபாசனி

 இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வு, இந்தியா 2025 தங்க முதலீடு : மோர்கன் ஸ்டான்லியின் கூற்றுப்படி, இந்திய குடும்பங்கள் 34,600 டன் தங்கத்தை வைத்திருக்கின்றன. இது தோராயமாக $3.8 டிரில்லியன் மதிப்புடையது அல்லது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 89 சதவீதமாகும்.


இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வு : 


சச்சின் டெண்டுல்கர் இப்போது இந்தியாவின் பெரிய பொருளாதார நிலைத்தன்மையை ஊக்குவிக்கிறார். அதாவது, டாடாவுக்குச் சொந்தமான நகை பிராண்டான தனிஷ்க்கின் விளம்பரத்தில் அவர் தோன்றுவதுடன் அதில், இந்தியர்கள் தங்கள் பழைய தங்கத்தை ஏன் புதிய நகைகளுக்கு மாற்ற வேண்டும் என்பதை விளக்குகிறார். இது இந்தியப் பொருளாதாரம் பிரகாசிக்க உதவும் என்று அவர் கூறுகிறார்.


"இந்தியா கிட்டத்தட்ட எல்லா தங்கத்தையும் இறக்குமதி செய்கிறது. ஆனால் உங்கள் பழைய தங்கத்தை புதிய நகைகளுக்கு மாற்றினால், தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை. இது நம் நாட்டை வலிமையாக்கும்,” என்று டெண்டுல்கர் கூறினார். அவரது செய்தியானது, கிரிக்கெட்டைப் பின்பற்றுபவர்கள், தங்கம் வாங்குபவர்கள் மற்றும் பொருளாதாரம் மற்றும் நிதி சமூகத்தில் உள்ளவர்கள் என மூன்று வேறுபட்ட பார்வையாளர்களை ஒன்றிணைக்கிறது.


தனிஷ்க் மற்றும் சச்சின் தவறாக இருக்க வாய்ப்பில்லை. அதிக தங்க இறக்குமதிகள் இந்தியாவின் வணிகப் பற்றாக்குறையை அதிகரிக்கின்றன. இதன் பொருள், ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட, இந்தியா வெளிநாட்டு நாணயங்களில் அதிகமாகச் செலுத்த வேண்டியுள்ளது. ஒரு பெரிய பற்றாக்குறை இந்திய ரூபாயின் மதிப்பை பலவீனப்படுத்த அழுத்தம் கொடுக்கிறது. ரூபாய் மதிப்பு பலவீனமடையும் போது, ​​வெளிநாட்டுப் பொருட்கள் மற்றும் சேவைகள் இந்தியர்களுக்கு அதிக விலை கொண்டதாக மாறும். இந்தியாவின் வர்த்தக சூழ்நிலையில் தங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது.


இந்தியர்கள் தங்கத்தை விரும்புகிறார்கள்.


தங்கத்திற்கான தேவையில் இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக தங்க கவுன்சிலின் (World Gold Council (WGC)) கூற்றுப்படி, 2024-ம் ஆண்டில் சீன நுகர்வோர் 857 டன்) தங்கத்தை வாங்கிய நிலையில், இந்தியர்கள் 803 டன் தங்கத்தை வாங்கியுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில், இரு நாடுகளும் தங்கத்திற்கான உலகளாவிய நுகர்வோர் தேவையில் பாதிக்கும் சற்று அதிகமாகவே உள்ளன.



ஆனால் இது தங்கத்திற்கான வருடாந்திர தேவை மட்டுமே. மோர்கன் ஸ்டான்லி பொருளாதார வல்லுநர்களான உபஸ்னா சச்ரா மற்றும் பானி கம்பீர் ஆகியோரின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் இந்திய குடும்பங்கள் 34,600 டன் தங்கத்தை வைத்திருந்தன. மேலும், விலைகள் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், இந்த தங்கம் தோராயமாக $3.8 டிரில்லியன் மதிப்புடையது அல்லது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 89 சதவீதத்தை உள்ளடக்கியது.


கடந்த வாரம் ஒரு குறிப்பில் சச்ராவும் கம்பீரும் குறிப்பிட்டது என்னவென்றால், தங்கம் கையிருப்பில் இருப்பது வீடுகளுக்கு நேர்மறையான செல்வ விளைவை அளிக்கிறது. பணவியல் கொள்கை தளர்வு காரணமாக குறைந்த வட்டி செலுத்துதலும் இந்த நன்மைக்கு துணைபுரிகிறது. கூடுதலாக, நேரடி மற்றும் மறைமுக வரி குறைப்புக்கள் மூலம் செலவழிப்புக்கான வருமானம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


சேமிப்புப் பிரிவு


தொடர்ந்து தங்கத்தை இறக்குமதி செய்வதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து குறித்து ஒரு உலகளாவிய நிபுணர் கடைசியாக ஒரு பத்தாண்டிற்கு முன்பு இந்தியர்களை எச்சரித்தார். இது ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநராக இருந்தபோது நடந்தது. அந்த நேரத்தில், வேகமாக உயர்ந்துவரும் விலைகளால் தங்கள் சேமிப்பு குறைக்கப்படுவதைத் தடுக்க வீடுகள் தீவிரமாக தங்கத்தை வாங்கின. உண்மையில், உலக தங்க கவுன்சில் (WGC) தரவுகள், இந்தியர்களின் தங்கத்திற்கான நுகர்வு தேவை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கிட்டத்தட்ட 20 சதவீதம் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இது ஓரளவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி நெகிழ்வான பணவீக்க இலக்கு கட்டமைப்பை ஏற்றுக்கொண்டதன் காரணமாகும். இது 2012-13-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10 சதவீதமாக இருந்த சராசரி சில்லறை பணவீக்கம் நடப்பு நிதியாண்டில் எதிர்பார்க்கப்படும் 2.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளது.


தங்கத்திற்கான தேவை குறைவதற்கு பணவீக்கம் வீழ்ச்சியடைவது மட்டுமே காரணம் அல்ல. இந்தியர்களும் இப்போது பல்வேறு வகையான சொத்துக்களில் முதலீடு செய்கிறார்கள்.



சமீபத்திய இந்திய ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, 2024-25-ஆம் ஆண்டில் வீடுகளின் பரஸ்பர நிதி மற்றும் பங்கு முதலீடுகள் அவர்களின் மொத்த நிதி சேமிப்பில் 15.2% ஆக இரட்டிப்பாகின. பங்குச் சந்தைக்கு ஏற்பட்ட பெரிய மாற்றத்தால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டது. 2024-ஆம் ஆண்டில் தனிநபர்கள் இந்தியப் பங்குகளில் நிகர அடிப்படையில் ரூ.1.66 லட்சம் கோடி முதலீடு செய்ததாக NSE தரவு காட்டுகிறது. இது முந்தைய 10 ஆண்டுகளில் முதலீடு செய்யப்பட்ட ரூ.1.53 லட்சம் கோடியைவிட அதிகம்.


ஆனால் நிதி சார்ந்த சொத்துக்களை வாங்குவதற்கு அல்ல, நேரடி சொத்துக்களை (physical assets) வாங்கப் பயன்படுத்தப்படும் பணத்தைப் பற்றி என்ன?


புள்ளியியல் அமைச்சகத்தின் தரவுகளின்படி, குடும்ப சேமிப்பு உருவில் உள்ள நேரடி சொத்துக்கள், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டுகளில் குறைந்து, 2011-12ல் 45.9 சதவீதமாக இருந்தது 2020-21ல் 36.9 சதவீதமாக குறைந்தது. இருப்பினும், பின்னர் அது 2022-23ல் 43.8 சதவீதமாக உயர்ந்தது — இது பொதுவாக குறைந்த வட்டி விகிதங்களைப் பயன்படுத்தி மக்கள் வீடுகள் மற்றும் வாகனங்கள் வாங்கியதால் என்று கருதப்படுகிறது — பின்னர் 2023-24ல் மீண்டும் 41.5 சதவீதமாக சற்று குறைந்தது. 2024-25-க்கான தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை.


தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களில் சேமிப்பதற்கான போக்கு ஒத்திருக்கிறது. இது 2011-12 ஆம் ஆண்டில் மொத்த சேமிப்பில் 1.1%-லிருந்து 2020-21-ஆம் ஆண்டில் 0.7% ஆக உயர்ந்தது. பின்னர் அது 2022-23-ல் 0.8% ஆக சற்று உயர்ந்து 2023-24-ல் 0.7% ஆகத் திரும்பியது.


டெண்டுல்கரின் பொருளாதார சிறப்பு வகுப்பு


இந்தியர்கள் முன்பைவிட குறைவாக தங்கம் வாங்குகிறார்கள் என்றால், தனிஷ்க் ஏன் டெண்டுல்கரை வேலைக்கு அமர்த்தியது? தங்க இறக்குமதியைக் குறைப்பது ஏன் இந்தியப் பொருளாதாரத்திற்கு உதவுகிறது என்பதை பொதுமக்களுக்கு விளக்க அவர் பணியமர்த்தப்பட்டார். ஏனெனில், அதிகரித்து வரும் தங்க விலைகள் ஏற்கனவே தங்கத்தை வைத்திருப்பவர்களை மிகவும் பணக்காரர்களாக ஆக்குகின்றன.


அமெரிக்காவின் வரிப் போரால் ஏற்பட்ட நிச்சயமற்றத் தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தில் அதன் சாத்தியமான தாக்கம், புவிசார் அரசியல் அபாயங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளின் கொள்முதல்கள் போன்ற பல காரணிகள், ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக தங்கத்தின் விலை உயர வழிவகுத்தன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தங்கம் 10 கிராமுக்கு ரூ.1 லட்சத்தைத் தாண்டியது. இப்போது, ​​அது ரூ.1.3 லட்சத்தை நோக்கி நகர்கிறது. ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டைவிட விலை 50%-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.


இந்த உயர்வு இந்தியர்கள் தங்கம் வாங்கும் திறனைப் பாதித்துள்ளதுடன், நகைக்கடைக்காரர்களைப் பாதிக்கிறது. குறிப்பாக, பண்டிகைக் காலத்தில் பழைய தங்கத்தை புதிய நகைகளுக்கு மாற்றுவது ஒரு கவர்ச்சிகரமான வணிக யோசனையாக மாறியுள்ளது.


இந்தியாவின் வர்த்தகத் தரவுகளில் அதிக விலைகளின் விளைவு தெரியும். புதன்கிழமை வெளியிடப்பட்ட தரவு, செப்டம்பரில் தங்க இறக்குமதி $9.62 பில்லியனாக உயர்ந்ததாகக் காட்டுகிறது. கடந்த ஆண்டு, அதே மாதத்தில், இறக்குமதி $4.65 பில்லியனாக இருந்தது. இந்த ஏற்றம் இருந்தபோதிலும், 2025-26-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இறக்குமதிகள் இன்னும் 9% குறைந்துள்ளன.


பரிவர்த்தனை-வர்த்தக நிதி (exchange-traded fund (ETF)) விருப்பம்


ஒரு முதலீடாக, இந்த விலைமதிப்பற்ற உலோகத்திற்கான தேவை இன்னும் நீடிக்கிறது.


"தங்க இறக்குமதி அதிகரிப்பின் ஒரு பகுதி, தங்கத்தின் விலைகள் உயர்ந்து வருவதால் முதலீட்டு தேவை அதிகரிப்பதாலும் ஏற்படலாம். வெள்ளி இறக்குமதியிலும் ஒரு உயர்வு காணப்படுகிறது (செப்டம்பரில் $1.3 பில்லியன் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் $452 மில்லியன்), இது ஒரு முதலீட்டு விருப்பமாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது," என்று IDFC FIRST வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் கவுரா சென் குப்தா வியாழக்கிழமை தெரிவித்தார்.


தங்கம் மற்றும் வெள்ளி பரிவர்த்தனை-வர்த்தக நிதிகளில் (ETF) முதலீடுகள் இந்தப் பொருட்களில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகள் உண்மையில் அதிகரித்து வருகின்றன. செப்டம்பர் மாதத்தில் தங்க பரிவர்த்தனை-வர்த்தக நிதிகளில் (ETF) முதலீடு கடந்த ஆண்டைவிட கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகரித்து ரூ.8,363 கோடியாக இருந்தது. இந்த தங்கம் மற்றும் வெள்ளி நிதிகளில் முதலீடு செய்வதற்கான விருப்பம் அதிக அளவுக்கு இருந்ததால், சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து அதிக பணம் எடுப்பதை நிறுத்திவிட்டன.


"நேரடி வெள்ளியின் கடுமையான பற்றாக்குறை காரணமாக, உள்நாட்டு விலைகள் இப்போது சர்வதேச அளவுகோல்களைவிட 5–12 சதவீத கூடுதல் விலையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இதன் விளைவாக, உள்ளூர் சந்தையில் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய முதலீட்டாளர்கள் தற்போது உலகளாவிய நியாய விலையைவிட கணிசமாக அதிகமாக செலுத்துகின்றனர்," என்று Groww மியூச்சுவல் ஃபண்டின் தலைமை நிர்வாக அதிகாரி வருண் குப்தா இந்த வாரம் LinkedIn-ல் குறிப்பிட்டிருந்தார்.


"புதிய பரிவர்த்தனை-வர்த்தக நிதி (ETF) அலகுகளை உருவாக்கும்போது, ​​நிதி நிறுவனங்கள் வெள்ளியை வாங்க வேண்டும். இந்த கட்டத்தில் புதிய மொத்த முதலீடுகளை தொடர்ந்து ஏற்றுக்கொள்வது என்பது தற்காலிகமாக உயர்த்தப்பட்ட விலைகளில் புதிய முதலீடுகளைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். இது பிரீமியம் இயல்பு நிலைக்கு வந்தவுடன் சரிசெய்யப்படலாம்," என்று குப்தா மேலும் கூறினார்.


Original article:

Share: