வரிகளுக்கு கீழே

 தமிழ்நாட்டு வரவு-செலவுத் திட்ட உள்ளீடுகள் :


சமீபத்தில் தமிழ்நாடு தனது 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, பட்ஜெட் திட்டங்களை எவ்வாறு தயாரித்தார்கள் என்பது குறித்த ஒரு சுவாரஸ்யமான உண்மையை மாநில நிதித் துறை அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் பொருளாதார வல்லுநர்கள், நிதித்துறை ஆலோசகர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் மற்றும் பலருடன் கலந்தாலோசித்ததோடு மட்டுமல்லாமல், சில திட்டங்களை வடிவமைக்க சமூக ஊடகங்களையும் நம்பியிருந்ததாக மாநில நிதி செயலாளர் டி உதயச்சந்திரன் கூறினார்.


மாநிலத்தின் சில தொலைதூர மலைப்பாங்கான பகுதிகளில் அணுகல் இல்லாததால் பழங்குடியின மாணவர்களிடையே இடைநிற்றல் விகிதம் சமீபத்தில் அதிகரித்துள்ளதாக சமூக ஊடகங்களில் அறிக்கைகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அறிக்கையின் உரிய சரிபார்ப்புக்குப் பிறகு, தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும் பிற மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மலைப்பகுதிகளில் உள்ள 14 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது.


'மஸ்க்'டீயர்கள் (‘Musk’eteers)


இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ, ஒரு காலத்தில் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்கின் (Starlink) தீவிர எதிர்ப்பாளர்களாக இருந்து. இருப்பினும், இப்போது அவர்கள் செயற்கைக்கோள் இணைய வழங்குநருடன் இணைந்துள்ளனர். இது 12 மணி நேரத்திற்குள் நடந்தது. முன்னதாக, நியாயமற்ற அலைக்கற்றை ஒதுக்கீட்டை (spectrum allocation) மேற்கோள் காட்டி ஸ்டார்லிங்கின் நுழைவுக்கு (Starlink’s entry) எதிராக அவர்கள் போராடினர். இப்போது, ​​இந்தியாவின் டிஜிட்டல் பிளவைக் கட்டுப்படுத்துவதற்கான திறவுகோல் என்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன மாறியது? புவிசார் அரசியல் மாற்றங்கள், உயர் மட்ட சந்திப்புகள் மற்றும் மஸ்க்கின் செயற்கைக்கோள் திட்டத்தை எதிர்த்துப் போராடுவது அர்த்தமற்றது என்பதை உணர்ந்துகொள்வது ஆகியவற்றின் கலவையாகும். வணிகத்தில், போட்டியாளர்கள் என்றென்றும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, ஆர்வங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.


அழைப்பாணைகள்


அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடமிருந்து (US Securities and Exchange Commission) பெறப்பட்ட அழைப்பாணையை, தொழிலதிபர் கௌதம் அதானியின் நகர முகவரியில் வழங்குவதற்காக, அகமதாபாத்தில் உள்ள அமர்வு நீதிமன்றத்திற்கு ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. அவர் அதைப் பெற்றால், அதானி அல்லது அவரது வழக்கறிஞர் குழு அமெரிக்க நீதிமன்ற அறைக்குள் நுழைய வேண்டியிருக்கும். அதானி குழுமம் "ஆதாரமற்ற" (baseless) குற்றச்சாட்டுகளை நிராகரித்தது மற்றும் அதன் சட்டப்பூர்வ ஆயுதங்களை தயார் செய்து வருகிறது. அதானி தன்னைத் தற்காத்துக் கொள்வாரா, எதிர்த்துப் போராடுவாரா அல்லது வெற்றி பெற ஒரு புத்திசாலித்தனமான சட்ட நடவடிக்கையைக் கண்டுபிடிப்பாரா?


அதிக பருப்பு வகைகள் (Heavy pulse)


கடந்த வாரம், 2025-ம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை மஞ்சள் பருப்புகளின் வரியில்லா இறக்குமதியை ஒன்றிய அரசு நீட்டித்ததால் பருப்பு வர்த்தகம் ஒரு அதிர்ச்சியடைந்தது. முன்னதாக, ஒன்றிய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடாததால், வரி இல்லாத இறக்குமதி முடிந்துவிட்டதாக வர்த்தகம் நினைத்தது.


பருப்பு விலையில் தற்போதைய வீழ்ச்சிக்கு மஞ்சள் பட்டாணி முக்கிய காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, காரிஃப் பருவத்தில் உளுந்து பருப்பு (black matpe) உற்பத்தி 25% குறைவாக இருந்தபோதிலும், அதன் விலைகள் இன்னும் குறைந்துள்ளன.


ஓய்வுபெற்ற ஒரு அதிகாரியின் குடும்பம் இந்த திடீர் மாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக ஒரு வட்டாரம் கூறுகிறது. அதிகாரி சக்திவாய்ந்தவர் மற்றும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.


இனிமையான மொழி


தமிழ்நாட்டில் மொழிகள் குறித்த விவாதத்திற்கு மத்தியில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை சென்னை அருகே நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார். அவர் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாராட்டினார். மேலும் அவர் குறிப்பிட்டதாவது, “தமிழ் மிகவும் இனிமையான மொழி. நாம் அனைவரும் தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் மொழியையும் மதிக்கிறோம். இது நமது நாட்டின் மதிப்புமிக்க பகுதியாகும். மேலும் உலகிற்கு ஒரு பொக்கிஷமாகும். இதில் நாம் பெருமைப்பட்டு அதில் மகிழ்ச்சியைக் காண வேண்டும். அனைத்து இந்திய மொழிகளையும் பாராட்டுவோம். இது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையாகும். "ஒவ்வொரு இந்திய மொழிக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அவர் பாடுபடுகிறார்," என்று அவர் கூறினார், அதே நேரத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உடனிருந்தார்.


விண்கல் எழுச்சி (Meteoric rise)


இருபது ஆண்டுகளுக்கு முன்பு, பிளாக்ஸ்டோன் இந்தியாவில் முதலீடு செய்ய முடிவு செய்தது. அந்த நேரத்தில், அதன் நிர்வாகத்தின் கீழ் வெறும் 50 பில்லியன் டாலர் சொத்துக்கள் மட்டுமே இருந்தன. இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன் கடந்த வாரம் தனது நிறுவனத்தின் 20 ஆண்டுகளைக் கொண்டாட இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது, ​​இந்தியாவில் நிறுவனத்தை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பது குறித்து தனது மேஜையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்ததை அவர் நினைவு கூர்ந்தார். "அப்போது நாங்கள் மிகவும் சிறியவர்களாக இருந்தோம். எங்களுக்கு எந்த உதவிக்கும் ஆலோசகர்கள் இல்லை," என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.


"நாங்கள் இப்போதுதான் இந்த யோசனையைக் கொண்டு வந்தோம். நான் என் மேஜையில் அமர்ந்து யோசித்தேன். இந்தியாவில் ஏன் ஒரு பில்லியன் டாலர்களை முதலீடு செய்யக்கூடாது? எனவே, நான் பத்திரிகை செய்தியை எழுதி அதை அனுப்பினேன். அந்த நேரத்தில், ஒரு பில்லியன் டாலர்கள் என்பது ஒரு மிகப்பெரிய தொகையாகும். அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, அதுதான் இலக்காகவும் இருந்தது.


இப்போது, ​​இருபதாண்டுகளுக்குப் பிறகு, பிளாக்ஸ்டோன் இந்தியாவில் சுமார் 50 பில்லியன் டாலர் சொத்துக்களை நிர்வகிக்கிறது. உலகளவில், இது 1 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் நிர்வகிக்கிறது."



Original article:

Share:

இலட்சிய மாவட்டங்கள் திட்டத்தை செயல்படுத்துதல் -குஷாங்கூர் தேய் ஜெய் குமார் தாக்கூர்

 இலட்சிய மாவட்டங்களில் விவசாய உற்பத்தித்திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க பிரதமர் தன் தன்ய கிருஷி யோஜனா (PM–DDKY) திட்டத்தை ஒரு பிரத்யேக திட்டமாக செயல்படுத்துவது கட்டாயமாகும்.


இலட்சிய மாவட்டங்கள் திட்டத்தின் (Aspirational Districts Programme (ADP)) வெற்றியால் ஈர்க்கப்பட்டு, 2025-26 பட்ஜெட்டில், மாநிலங்களுடன் இணைந்து பிரதம மந்திரி தன்யா கிரிஷி யோஜனா (Prime Minister Dhan Dhanya Krishi Yojana (PM–DDKY)) திட்டம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் 100 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து அதன்மூலம் சுமார் 1.7 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.


இலட்சிய மாவட்டங்கள் திட்டம் (ADP) விவசாயம் மற்றும் நீர்வளங்களை அதன் ஐந்து துறைகளில் ஒன்றாக உள்ளடக்கியது. இருப்பினும், ஒரு புதிய திட்டம் ஏன் தொடங்கப்படுகிறது? அது இலட்சிய மாவட்டங்கள் திட்டத்துடன் (ADP) இணைந்து செயல்படுமா அல்லது தேவையற்றதாக இருக்குமா? போட்டித்திறன் மற்றும் சமூக முன்னேற்ற கட்டாயத்திற்கான நிறுவனத்தின் (2020) மதிப்பீட்டு அறிக்கை, பெரும்பாலான இலட்சிய மாவட்டங்களில் விவசாயம், நீர்வளங்கள் மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகியவை மேம்படுத்துவதற்கு கடினமான பகுதிகள் என்பதைக் காட்டுகிறது. எனவே, பிரதம மந்திரி தன்யா கிரிஷி யோஜனா (PM–DDKY) இந்த பகுதிகளில் விவசாய உற்பத்தித்திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க ஒரு கவனம் செலுத்தும் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இந்தத் திட்டம் பருப்பு வகைகள் மற்றும் தினைகளில் கவனம் செலுத்தும். நிலையான விவசாயம், பயிர் பல்வகைப்படுத்தல், ஒருங்கிணைந்த வேளாண் முறைகள், வேளாண் காடுகள் மற்றும் அதிக மகசூல் தரும் வகை விதைகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதே இதன் குறிக்கோள் ஆகும்.


பிரதம மந்திரி தன்யா கிரிஷி யோஜனா (PM–DDKY) திட்டத்திற்கான மாவட்டத் தேர்வு அளவுகோல்கள் குறைந்த உற்பத்தித்திறன், மிதமான பயிர் தீவிரம் மற்றும் சராசரிக்கும் குறைவான கடன் பெறுதல் ஆகியவை அடங்கும். எனவே, PM–DDKY, இலட்சிய மாவட்டங்கள் திட்டத்தின் (ADP) 3C-க்கான கட்டமைப்பை கடைபிடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பு (Convergence)- ஒன்றிய மற்றும் மாநிலத் திட்டங்களின் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு (Collaboration)- ஒன்றிய மற்றும் மாநில அளவிலான நோடல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் இணைந்து பணியாற்ற வேண்டும். போட்டி (Competition)- தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்கள் ”மாற்றத்திற்கான சாம்பியன்ஸ்” (CoC) கண்காணிப்பு டேஷ்போர்டைப் பயன்படுத்தி போட்டியிட வேண்டும்.


மாவட்ட அளவிலான தரவுத்தளம்


அரை வறண்ட வெப்பமண்டலங்களுக்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் (International Crop Research Institute) மற்றும் டாடா கார்னெல் நிறுவனம் (Tata Cornell Institute) ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட மாவட்ட அளவிலான தரவுத்தளத்தை மாநில அரசுகள் பயன்படுத்தலாம். இந்தத் தரவுத்தளம், இந்தத் துறையில் இன்னும் எதிர்பார்த்த முடிவுகளை அடைய முடியாத கூடுதல் இலட்சியமுள்ள மாவட்டங்களைத் தேர்வுசெய்ய அவர்களுக்கு உதவும். இந்த அணுகுமுறையைப் பயன்படுத்துவது மாவட்டங்களைத் தேர்ந்தெடுப்பதில் சார்புநிலையைக் குறைக்கலாம் மற்றும் தலையீடானப் பகுதிகளில் நகலெடுப்பதைத் (duplication) தடுக்கலாம்.


மூன்றாவதாக, இலட்சிய மாவட்டங்கள் திட்டம் (ADP) 49 செயல்திறன் குறிகாட்டிகளையும் 81 தரவுப் புள்ளிகளையும் தேர்ந்தெடுத்தது. இவற்றில், 10 குறிகாட்டிகள் விவசாயம் மற்றும் நீர்வளங்களுடன் தொடர்புடையவை ஆகும். நிகர பாசனப் பரப்பளவு, ஏக்கருக்கு பயிர் மகசூல், சான்றளிக்கப்பட்ட விதை விநியோகம், பயிர் காப்பீடு, மின்னணு சந்தைகள் மற்றும் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களுக்கான (APMC) விவசாயிகளின் அணுகல், கால்நடை செயற்கைக் கருவூட்டல் மற்றும் விலங்கு தடுப்பூசி ஆகியவை இதில் அடங்கும். கூடுதலாக, இந்தத் துறைக்கு 12 தரவுப் புள்ளிகளும் பரிசீலிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சேர்ந்து, விவசாயம் மற்றும் நீர் வளங்களில் மாவட்ட செயல்திறனை தரவரிசைப்படுத்தப் பயன்படுத்தப்படும் மொத்த கூட்டு மதிப்பெண்ணில் 20% பங்களிக்கின்றன. மாவட்ட நிர்வாகம் இந்த குறிகாட்டிகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும் அல்லது புதியவற்றைச் சேர்க்க வேண்டும். 'டெல்டா' தரவரிசைக்காக காலப்போக்கில் அதிகரிக்கும் மாற்றங்களைக் கண்காணிக்க அவர்கள் தங்கள் அளவீட்டு முறைகளையும் புதுப்பிக்க வேண்டும்.


அரசு சாரா நிறுவனங்கள், சமூக அடிப்படையிலான அமைப்புகள் மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். அவர்கள் திட்டத்தை முறையாகத் திட்டமிட்டு செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் முயற்சிகள் இலட்சிய மாவட்டங்கள் திட்டத்துடன் (ADP) ஒத்துப்போக வேண்டும்.


தேய் ஐஐஎம் லக்னோவில் இணைப் பேராசிரியராக உள்ளார். ஜெய் தாக்கூர் அதே நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்ற அறிஞராக உள்ளார்.



Original article:

Share:

டிரம்பின் வரிவிதிப்புப் போர் : இந்தியா எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? -அசோக் குலாட்டி, சுலக்ஷனா ராவ், தனாய் சுண்ட்வால்

 இந்தியா தனது சொந்த நலன்களுக்கு தீங்கு விளைவிக்காமல் அமெரிக்க வர்த்தக நலன்களை ஆதரிக்க முடியும். இதில், வரிகளைக் குறைப்பது உள்ளூர் சந்தையை பெரிதும் பாதிக்காத பொருட்களை அடையாளம் காண்பதன் மூலம் இது தொடங்க வேண்டும்.


டிரம்பின் பரஸ்பர வரிவிதிப்புக் கொள்கை ஏப்ரல் 2 முதல் தொடங்கும் என்பதால், அதற்கான பதிலுடன் இந்தியா தயாராக இருக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் சாத்தியமான வெற்றி மற்றும் வெற்றியின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் இது பதிலடியாகவோ அல்லது ஒத்துழைப்பாகவோ இருக்க வேண்டுமா? இரு நாடுகளும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிச் செயல்படுவதால், தற்போதுள்ள மாதிரியிலிருந்து இந்தியா விலகி சந்தைகளைத் திறக்க வேண்டும் என்று அமெரிக்க வர்த்தகச் செயலர் ஹோவர்ட் லுட்னிக் சமீபத்தில் கூறினார். கடந்த மாதம் ட்ரம்ப்-மோடி சந்திப்பு திட்டம்-500 (Mission 500) ஆனது, 2030-ம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இது 2023-ம் ஆண்டில் 200 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது. தற்போதைய கருத்துப்படி, இது ஒரு வெற்றி மற்றும் வெற்றியின் சூழ்நிலைக்கான வாய்ப்பை வழங்குகிறது. நாம் நம்முடைய அட்டைகளை புத்திசாலித்தனமாக பூர்த்தி செய்வதுடன், இதற்கான பதிலடியை தவிர்க்க வேண்டும். வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலின் அடுத்த அமெரிக்கப் பயணமானது, இரு நாடுகளும் ஒத்துழைப்பு மற்றும் புரிதலைப் பொறுத்து நமது நாட்டின் உத்தியின் அடிப்படையில் நாம் வெற்றி பெறுவோம் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியமாக இருக்கும்.


அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பரஸ்பர வரிவிதிப்புக் கொள்கையுடன் உலக வர்த்தகத்தை மீட்டமைக்க உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்காவின் பெரும்பாலான முக்கிய வர்த்தக நட்பு நாடுகள் தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது அமெரிக்காவில் குறைந்த இறக்குமதி வரிகளில் பயனடைந்துள்ளனர். அதே நேரத்தில், அவர்கள் தங்கள் சொந்த இறக்குமதி வரிகளை ஒப்பீட்டளவில் அதிகமாக வைத்துள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. ட்ரம்பின் "பரஸ்பர வரிவிதிப்புகள்" (reciprocal tariffs) கொள்கை ஒரு எளிய யோசனையை அடிப்படையாகக் கொண்டது. அமெரிக்க பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிவிதிப்பு பதிலடிக்கு வழிவகுக்கும். இந்தக் கொள்கையானது வரிவிதிப்பின் வருவாயில் பில்லியன் கணக்கான டாலர்களைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையையும் கணிசமாகக் குறைக்கும் என்று டிரம்ப் எதிர்பார்க்கிறார்.


டிரம்ப் பலமுறை கிண்டல் செய்ததைப் போல இந்தியா கிட்டத்தட்ட ஒரு "வரிவிதிப்பு மன்னர்" (Tariff King) என்பதை ஒப்புக்கொள்வதில் வெட்கமில்லை. இந்தியா விதிக்கும் வரிவிதிப்புகள் அமெரிக்கா விதிக்கும் வரியை விட பல மடங்கு அதிகம். உலக வர்த்தக அமைப்பின் தரவுகளின்படி, இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியைவிட 5.2 மடங்கு அதிகமாக இந்தியா விதிக்கிறது. கனடா (1.2 மடங்கு), மெக்சிகோ (2.1 மடங்கு), ஐரோப்பிய ஒன்றியம் (1.5 மடங்கு) மற்றும் சீனா (2.3 மடங்கு) ஆகிய மற்ற முக்கிய வர்த்தக நட்பு நாடுகள் முழுவதும் வரிவிதிப்பு தொடர்பான  ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. இதில் முக்கியமாக, விவசாயப் பொருட்களுக்கு ஏற்றத்தாழ்வு இன்னும் மோசமாக உள்ளது. இந்தியாவின் விவசாய வரிவிதிப்புகள், இந்திய வேளாண் ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா சுமத்துவதைவிட 7.8 மடங்கு அதிகம் ஆகும். கனடா (2.96 மடங்கு), மெக்சிகோ (2.38 மடங்கு), ஐரோப்பிய ஒன்றியம் (2.16 மடங்கு), மற்றும் சீனா (2.8 மடங்கு) ஆகியவையும் கணிசமான அளவு அதிக விவசாய வரிவிதிப்புகளைத் தொடர்கின்றன. உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்க பொருட்கள் சமமற்ற முறையில் நடத்தப்படுவது குறித்து டிரம்ப் ஏன் வருத்தப்படுகிறார் என்பதை இந்த ஏற்றத்தாழ்வு விளக்குகிறது.


                  2024-ம் ஆண்டில் பொருட்கள் மற்றும் சேவைகளில் அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை $918.4 பில்லியனை எட்டியது. இதனால், டிரம்பிற்கு ஒரு பெரிய கவலையாக உள்ளது. பொருட்கள் வர்த்தக பற்றாக்குறை $1,211.7 பில்லியனாக இருந்தது. இது சேவை வர்த்தகத்தில் $293.3 பில்லியன் உபரியால் ஓரளவு ஈடுசெய்யப்பட்டது. இந்தப் பற்றாக்குறைக்கு சீனா முக்கியக் காரணம். அது $295.4 பில்லியன் பங்களிக்கிறது. அடுத்த பெரிய பங்களிப்பாளர்கள் ஐரோப்பிய ஒன்றியம் (EU), மெக்சிகோ, வியட்நாம் மற்றும் கனடா (விளக்கப்படம் பார்க்கவும்) போன்றவை ஆகும். இதில் இந்தியா, சிறியதாக இருந்தாலும், 10-வது இடத்தில் உள்ளது. 2024-ம் ஆண்டு USBEA தரவுகளின்படி, அமெரிக்க பற்றாக்குறைக்கு $45.7 பில்லியனை பங்களிக்கிறது. சில நாடுகளுடனான பற்றாக்குறை எவ்வளவு வேகமாக வளர்ந்துள்ளது என்பது இன்னும் கவலைக்குரியது. 2020 மற்றும் 2024-க்கு இடையில், கனடாவுடனான அமெரிக்காவின் பற்றாக்குறை 239.4% அதிகரித்துள்ளது. தென் கொரியாவுடனான பற்றாக்குறை 161%, தைவான் 147.1% மற்றும் இந்தியா 88.1% அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி டிரம்பை வருத்தப்படுத்தியுள்ளது மற்றும் கவலையடையச் செய்துள்ளது.


இந்தியாவின் பங்குகள் அதிகம். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நட்பு நாடாக அமெரிக்கா உள்ளது. இந்தியா எப்படி அமெரிக்க நலன்களுக்கு இடமளிக்க முடியும்? எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இதுவே முக்கிய சவாலாகும்.


எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆகியவை அமெரிக்க நலன்களுக்கு இடமளிக்கும் வகையில் கவனம் செலுத்த வேண்டிய இரண்டு முக்கியப் பகுதிகள் ஆகும். இந்திய அரசின் வணிகத் துறையின் தரவானது, 2023-24 நிதியாண்டில், இந்தியா $139.2 பில்லியன் மதிப்புள்ள கச்சா பெட்ரோலிய எண்ணெயை இறக்குமதி செய்தது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அதில் ரஷ்யா 34.6 சதவீதமும், ஈராக் 20.7 சதவீதமும், சவுதி அரேபியா 16.8 சதவீதமும், அமெரிக்கா 4 சதவீதமும் கொண்டுள்ளது. அமெரிக்காவிடமிருந்து எரிசக்தி வாங்குவதை இந்தியா எளிதாக அதிகரிக்க முடியும். தேவைப்பட்டால், F-35 போர் விமானங்கள் போன்ற சில உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு கொள்முதல் மூலம் அதை நிரப்பவும். இதன் மூலம் இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை எளிதாக சமன் செய்ய முடியும். இந்தியாவின் கண்ணோட்டத்தில், நடந்து வரும் அமெரிக்க-சீனா வர்த்தகப் போர் இந்தியாவிற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். குறிப்பாக, பொம்மைகள், ஜவுளிகள் மற்றும் தோல் பொருட்கள் உள்ளிட்ட உழைப்பு மிகுந்த தயாரிப்புகளில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.


ஆனால், வரிவிதிப்புகளைக் குறைப்பது உள்நாட்டு சந்தையில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் அமெரிக்க நலன்களைப் பூர்த்தி செய்யும் பொருட்களை இந்தியா அடையாளம் காணத் தொடங்க வேண்டும். விஸ்கி, வோட்கா, ரம், ஸ்பார்க்லிங் ஒயின் மற்றும் சுருட்டுகள் போன்ற மதுபானங்கள் மற்றும் புகையிலை பொருட்கள் மீது மிக உயர்ந்த வரிகள் உள்ளன. இந்தப் பொருட்கள் 150% வரை வரிகளை எதிர்கொள்கின்றன. இதேபோல், ஆட்டோமொபைல்கள் மற்றும் மின்சார வாகனங்கள் (EVகள்) 125% வரை வரி விதிக்கப்படுகின்றன. வால்நட்ஸ், தேன், காபி, பச்சை தேயிலை மற்றும் சர்க்கரை போன்ற முக்கிய விவசாயப் பொருட்களுக்கு 50% முதல் 100% வரை வரி விதிக்கப்படுகிறது.


இந்த வரிகளை இவ்வளவு அதிகமாக வைத்திருப்பது நியாயமானதா? சில முக்கியமான சந்தர்ப்பங்களில், ஆம் நியாயமானதே. ஆனால் மற்ற சந்தர்ப்பங்களில், வரிகள் மிக அதிகமாக உள்ளன. அதிகப்படியான அனைத்து வரிகளும் அதிகபட்சமாக 50% ஆகக் குறைக்கப்பட வேண்டும் என்று நம்புகிறோம். ஒரு தொழில்கள் 50% வரி பாதுகாப்புடன்கூட உயிர்வாழ முடியாவிட்டால், அவை பாதுகாக்கத் தகுதியற்றவை ஆகும்.


இந்தியாவில் அதன் உணர்திறனைக் கருத்தில் கொண்டு, விவசாயத்தில் பேச்சுவார்த்தைகள் கடினமாக இருக்கும். இவை அமெரிக்கக் கண்ணோட்டத்தில், அதன் முதன்மை விவசாய ஏற்றுமதிகளில் சோயாபீன் ($27.9 பில்லியன்), மக்காச்சோளம் ($13.3 பில்லியன்), பருத்தி ($6 பில்லியன்) ஆகியவை அடங்கும். இவற்றின் மீது இந்தியா முறையே 45 சதவிகிதம், 50 சதவிகிதம் மற்றும் 5 சதவிகிதம் வரிகளை விதிக்கிறது. கூடுதலாக, அமெரிக்காவின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான ($5.7 பில்லியன்) உணவு தயாரிப்புகளுக்கு 150 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பாலாடை நீக்கப்பட்ட பால் பவுடர் (Skimmed Milk Powder (SMP)) மீது 60 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவிற்கான சிறந்த வழி, வரிவிதிப்பு விகித ஒதுக்கீடுகளை பேச்சுவார்த்தை நடத்தி அமெரிக்கத் தயாரிப்புகளுக்கு சில அணுகலை வழங்குவதாகும்.


அதற்கு ஈடாக, இந்தியா அதன் பல ஏற்றுமதி செய்யக்கூடிய விவசாயப் பொருட்களுக்கு சிறந்த சந்தை அணுகலைக் கோரலாம். இதில் மாதுளை, திராட்சை, மாம்பழம், வாழைப்பழங்கள், இந்திய சிற்றுண்டி மற்றும் உணவு தயாரிப்புகள் அடங்கும். அமெரிக்காவிற்கு வலுவான ஏற்றுமதிக்கான வழிகளை உருவாக்குவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். சுகாதார மற்றும் தாவரத் தூய்மை தரநிலைகள் (sanitary and phytosanitary standards) குறித்த அமெரிக்காவின் கவலைகளையும் அது நிவர்த்தி செய்ய வேண்டும். இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் ஒரு உத்தியை உருவாக்க இந்தியா இந்தப் பணியைச் செய்ய வேண்டும்.


குலாட்டி ஒரு மேன்மைமிகு பேராசிரியர், ராவ் ஒரு மூத்த ஆய்வாளர், சுந்த்வால் ICRIER-ல் ஒரு ஆராய்ச்சி உதவியாளர்.



Original article:

Share:

சீர்மிகு நகரங்கள் திட்டம் என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்தி : பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மூன்று காலநீட்டிப்புகளைக் கொண்ட இத்திட்டம், மார்ச் 31 அன்று முடிவடைகிறது. இருப்பினும் தற்போது நடைபெறும் திட்டங்களில் 7% காலக்கெடுவைக் கடந்தும் நீட்டிக்கப்படலாம்.


முக்கிய அம்சங்கள்:


• 100 சீர்மிகு நகரங்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது. ஜனவரி 2016 முதல் ஜூன் 2018 வரை நடைபெற்ற போட்டி சுற்றுகளில் நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மேலும். நகரங்கள் அந்தந்த தேர்விலிருந்து ஐந்து ஆண்டுகள் அதாவது 2021 முதல் 2023 வரை திட்டங்களை முடிக்க வேண்டும்.


• 2021-ல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அனைத்து 100 நகரங்களுக்கான காலக்கெடுவை ஜூன் 2023 வரை நீட்டிக்க முடிவு செய்தது.


• காலக்கெடு மேலும் ஜூன் 30, 2024 ஆகவும், பின்னர் மார்ச் 31, 2025 ஆகவும் நீட்டிக்கப்பட்டது. இப்போது, ​​திட்டத்திற்க்காக ஒதுக்கப்பட்ட ஒன்றிய அரசின் நிதியில் 1%-க்கும் குறைவான தொகையே ஒப்புதலுக்காக மீதமுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள தொகை மார்ச் 31-க்கு முன்பு ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த திட்டம் முடிவுக்கு வரும்.


• 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, அமைச்சகத்தின் முன்மொழிவை மதிப்பாய்வு செய்தது. மாநில அரசுகள் தங்கள் சொந்த நிதியைப் பயன்படுத்தி முடிக்கப்படாத திட்டங்களை முடிக்க வேண்டும் என்று அமைச்சகம் பரிந்துரைத்தது. இருப்பினும், குழு இதற்கு உடன்படவில்லை. அமைச்சகம் திட்டங்களை வெறுமனே ஒப்படைப்பது மட்டுமல்லாமல், அவற்றை முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியது.

• சீர்மிகு நகரங்கள் திட்ட வலைதளத்தின் படி, நகரங்கள் ரூ.1.50 லட்சம் கோடி மதிப்பிலான 7,491 திட்டங்களை நிறைவு செய்துள்ளன.  ரூ.14,357 கோடி மதிப்பிலான 567 திட்டங்கள் (7%) இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன.



Original article:

Share:

வனவிலங்குகளுக்கான தேசிய வாரியம் - குஷ்பு குமாரி

 தற்போதைய கதை என்ன : பதவியேற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 3 தேதி அன்று உலக வனவிலங்கு தினத்தன்று, தேசிய வனவிலங்கு வாரியத்தின் (National Board for Wildlife (NBWL)) முதல் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.


முக்கிய அம்சங்கள்:


. கடைசியாக முழு அளவிலான தேசிய வனவிலங்கு வாரியத்தின் கூட்டம் செப்டம்பர் 5, 2012 அன்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. பிரதமர் தேசிய வனவிலங்கு வாரியத்தின் அதிகாரப்பூர்வ தலைவர் ஆவார்.


. வனவிலங்குகளுக்கான தற்போதைய தேசிய வாரியம் 2003-ல் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 திருத்திய பின் உருவாக்கப்பட்டது.


. 2014-ல் பாஜக அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, NBWL மறுசீரமைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அதிகாரங்களை குறைத்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது. மூன்று அரசு சாரா உறுப்பினர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். அதில் ஒன்று குஜராத் அரசாங்கத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான குஜராத் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை (Gujarat Ecological Education and Research Foundation (GEER)) ஆகும்.


.  கடந்த பத்தாண்டுகளில், NBWL வனவிலங்கு வாழ்விடங்களில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களை அனுமதித்துள்ளது. இது சூழலியலாளர்களின் சர்ச்சை மற்றும் எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. கென் பெட்வா நதியை இணைக்கும் திட்டத்தின் டவுதான் அணை மற்றும் ஹோலோங்கபார் கிப்பன் சரணாலயத்தின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் வேதாந்தாவின் எண்ணெய் ஆய்வுத் திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.


. 1952-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய வனவிலங்கு வாரியத்தை (Indian Board for Wildlife (IBWL)) தேசிய வனவிலங்கு வாரியம் மறுசீரமைத்தது. அதை ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றுவதன் மூலம் அதை வலுப்படுத்துவதே நோக்கமாக இருந்தது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒழுங்குமுறை அதிகாரங்களும் அதற்கு வழங்கப்பட்டன.


. இந்திய வனவிலங்கு வாரியம் (IBWL), மார்ச் 1952-ல் உருவாக்கப்பட்டபோது அது முதலில் ஒன்றிய வனவிலங்கு வாரியம் என்று அழைக்கப்பட்டது. நவம்பர் 24 முதல் டிசம்பர் 1, 1952 வரை மைசூரில் உள்ள லலிதா மஹால் அரண்மனையில் நடந்த அதன் முதல் கூட்டத்தின்போது இது IBWL என மறுபெயரிடப்பட்டது. வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைவதைச் சரி செய்ய இந்த வாரியம் உருவாக்கப்பட்டது.


உங்களுக்குத் தெரியுமா:


வனவிலங்கு கொள்கைக்கான இந்தியாவின் உயர் அமைப்பாக தேசிய வனவிலங்கு வாரியம் உள்ளது. இது வனவிலங்குகள் மற்றும் வனப் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது மற்றும் புதிய தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை வழங்குகிறது.


. NBWL 47 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதன் தலைவராக பிரதமர் மற்றும் துணைத் தலைவராக ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் உள்ளனர்.


. தேசிய வனவிலங்கு வாரியத்திற்கு (National Board for Wildlife (NBWL)) ஒரு நிலைக்குழு உள்ளது. தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியுள்ள வன நிலங்களில் உள்ள திட்டங்களை மதிப்பிடுதல் மற்றும் 10-கிமீ பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் உள்ள திட்டங்கள் போன்ற முக்கியப் பணிகள் இதில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நிலைக்குழுவின் முடிவுகள் பரிந்துரைக்கப்பட்டவை. இருப்பினும், சுற்றுச்சூழல் அமைச்சகம் அதை நிராகரிக்கலாம்.


. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் (Wild Life Protection Act (WLPA)) தேசிய பூங்காக்களுக்கு அறிவிப்பதற்கான கட்டமைப்பை வகுத்தது. வனவிலங்குகள் மற்றும் வாழ்விடப் பாதுகாப்பிற்கான சட்டப்பூர்வ ஆதரவை வழங்கியது. அழிந்துவரும் உயிரினங்களை வேட்டையாடுவதை தடைசெய்தது மற்றும் வனவிலங்கு வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தியது. இது 1973-ல் புலித் திட்டத்திற்கு வழி வகுத்தது.



Original article:

Share:

இந்திய கூட்டாட்சி அமைப்பின் சவால்கள் என்ன? -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி : இந்தியாவில் கூட்டாட்சி முறையைப் பற்றிய பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. வடக்கு மற்றும் தென்னிந்தியாவிற்கு இடையேயான தொகுதி மறுவரையறை மற்றும் பிரதிநிதித்துவ சமநிலை ஆகியவற்றைக் கவனமாக கையாள்வது அவசியம்.


முக்கிய அம்சங்கள்: 


. வளர்ச்சியில் மாநிலங்களுக்கு இடையிலான கிடைமட்ட சமநிலையின்மை (horizontal imbalance) தொடர்ந்து ஒரு சவாலாகவே உள்ளது. தற்போதைய, வளர்ச்சி சவால்களை எதிர்கொள்ள ஒன்றிய, மாநில மற்றும் பொதுப் பட்டியல்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.


. சர்வாதிகாரத்தின் (authoritarianism) எழுச்சி கூட்டாட்சி முறையை பலவீனப்படுத்தக்கூடும். சில நேரங்களில், மாநிலங்களைப் பற்றிய ஒரே மாதிரியான கலாச்சாரக் கருத்துக்களும் (stereotypes) அரசியல் பதட்டங்களை உருவாக்குகின்றன.


. கூட்டாட்சி நடைமுறை என்பது குழப்பமானதாக உள்ளது. அதன் சவால்களை எதிர்கொள்ள பல வழிகள் உள்ளன. கூட்டாட்சியின் அடிப்படை நிர்வாகக் கொள்கைகள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் உள்ளன. இந்திய கூட்டாட்சி வரலாற்றில், நாம் பார்க்கும் மையமயமாக்கல் முக்கியமாக மத்திய மற்றும் மாநிலங்கள் இரண்டாலும் உருவாக்கப்பட்டது.


. அரசியல், கலாச்சார, நிர்வாக மற்றும் பொருளாதார கூட்டாட்சி ஆகியவை ஒரு பொதுவான விதியைப் பின்பற்றவில்லை என்பதாலும் கூட்டாட்சி அரசியலும் சிக்கலானதாக உள்ளது.


. கட்சித் தாவல் தடைச் சட்டம் (anti-defection law) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகள் இப்போது சட்டமன்றத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதிகாரங்களை முறையாகப் பிரிப்பதைவிட கட்சி விசுவாசத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், நாடாளுமன்றத்தால் நிர்வாகத்தை திறம்பட மேற்பார்வையிட முடியாது. இது கூட்டாட்சிக்கு ஒரு பெரிய சவாலை உருவாக்குகிறது.


. கூட்டாட்சி என்பது பொதுவாக ஒன்றிய அரசுக்கும் தனிப்பட்ட மாநிலங்களுக்கும் இடையிலான உறவாகக் கருதப்படுகிறது. ஆனால் ஒரு வகையில், இங்கே மூன்று அரசாங்கங்கள் உள்ளன (உள்ளூர் அரசாங்கத்தைப் தவிர) ஒன்றிய அரசு, தனிப்பட்ட மாநிலங்கள் மற்றும் அனைத்து மாநிலங்களும் ஒன்றாக ஒரு குழுவாக செயல்படுகின்றன.


சரக்கு மற்றும் சேவை வரி என்பது அனைத்து மாநிலங்களும் அனைவருக்கும் பொருந்தும் வகையில் கூட்டு முடிவுகளை எடுப்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்கட்டாகும். சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களை நிர்ணயிப்பது என்பது ஒன்றிய அரசுக்கும் தனிப்பட்ட மாநிலங்களுக்கும் இடையிலான மோதல் மட்டுமல்ல. அது அனைத்து மாநிலங்களும் சேர்ந்து எடுக்கும் கூட்டு முடிவாகும்.


உங்களுக்குத் தெரியுமா?


. காலனித்துவ ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தின்போது இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவம் தொடங்கியது. பல்வேறு மொழி, கலாச்சார மற்றும் புவியியல் குழுக்கள் சுயாட்சியைக் கோரின. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை வடிவமைக்கும் அதே வேளையில், வேற்றுமையில் ஒற்றுமையைப் (unity in diversity) பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்டனர்.


. இதன் விளைவாக, இந்திய அரசியலமைப்பு ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை உருவாக்கியது. இரண்டு அவைகள் உள்ளன. ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. திருத்துவதற்கு மிகவும் எளிதானதோ அல்லது மிகவும் கடினமானதோ அல்ல. எழுதப்பட்ட அரசியலமைப்பு மற்றும் கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலைகளின் முறையை நிலைநிறுத்த ஒரு தன்னாட்சி நீதிமன்றம் போன்ற கூட்டாட்சியின் அனைத்து பண்புகளையும் கொண்டுள்ளது.

Original article:

Share:

இன்னொரு புலிகள் காப்பகம்: இந்தியாவிற்கு அவை ஏன் தேவைப்படுகின்றன, சில காப்பகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்?. -நிகில் கனேகர்

 2022-23ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கடைசி மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, இந்தியாவில் 3,681 புலிகள் (வரம்பு 3167-3925) உள்ளன.


மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள மாதவ் தேசிய பூங்கா இந்த மாத தொடக்கத்தில் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம்   நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கையை 58-ஆக அதிகரித்தது.


சமீபத்திய புதிய புலிகள் காப்பகம் 1,651 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் ஒரு குட்டி உட்பட ஆறு புலிகளைக் கொண்டுள்ளது. புதிய புலிகள் காப்பகம் ரந்தம்போர்-குனோ-மாதவ் தேசிய பூங்கா வழித்தடத்தில் (Ranthambore-Kuno-Madhav National Park corridor) புலிகள் சுதந்திரமாக நடமாட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ந்து வரும் புலிகளின் எண்ணிக்கைக்கு இந்தப் பகுதி ஒரு நல்ல வாழ்விடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.


புலிகள் திட்டம் (Project Tiger)


இந்தியாவில் உள்ள பூர்வீக உயரடுக்குகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெரிய விலங்குகளை வேட்டையாடி வந்தாலும், ஆங்கிலேய ஆட்சியின் போது, ​​வேட்டையாடுதல் தீவிர நிலைக்கு அதிகரித்தது. சுதந்திரத்திற்குப் பிறகும், இந்திய உயரடுக்குகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே புலிகள் பிரபலமாக இருந்தது. இது இந்திய காடுகளில் புலிகள் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது.


1960-களில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது (பண்ணை நிலங்களை வெட்டுவதற்காக விரைவான காடழிப்பு காரணமாகவும்) குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 1969-ஆம் ஆண்டில், இந்திரா காந்தி தலைமையிலான ஒன்றிய அரசு புலித் தோல்களை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தது. அதே ஆண்டில், டெல்லியில் நடைபெற்ற சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் 10-வது மாநாட்டில், புலிகள் அழிந்து வரும் உயிரினமாக அங்கீகரிக்கப்பட்டன.  மேலும், அவற்றைக் கொல்வதைத் தடை செய்ய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இந்திய வனவிலங்கு வாரியத்தின் தலைவர் கரண் சிங் தலைமையில் ஒரு பணிக்குழுவையும் அரசாங்கம் தொடங்கியது.


இந்தப் பணிக்குழுவின் பரிந்துரைகள், 1972ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் (Wildlife Protection Act) நிறைவேற்றப்பட்ட சில நாட்களிலேயே, 1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்க வழி வகுத்தன. இந்தத் திட்டம் ஆரம்பத்தில் ஆறு ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், இன்றுவரை தொடர்கிறது. புலிகளின் எண்ணிக்கையைப் பராமரிப்பதையும் அவற்றின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதையும் இந்தத் திட்டம் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.


காப்பகங்களின் நோக்கம்


மனாஸ் (அசாம்), ஜிம் கார்பெட் (தற்போது உத்தரகண்ட்), கன்ஹா (மத்தியப் பிரதேசம்), பலமாவ் (தற்போது ஜார்க்கண்ட்), ரந்தம்போர் (ராஜஸ்தான்), சிம்லிபால் (ஒடிசா), மெல்காட் (மகாராஷ்டிரா), பந்திப்பூர் (கர்நாடகா), மற்றும் சுந்தரவனக்காடுகள் (மேற்கு வங்கம்) ஆகிய 9 புலிகள் காப்பகங்களுடன் புலிகள் திட்டம் (Project Tiger) தொடங்கப்பட்டது.


இந்த சரணாலயங்கள் ஏற்கனவே தேசிய பூங்காக்கள் இருந்த பகுதிகளில் உருவாக்கப்பட்டன. அவை ஒன்றிய நிதியுதவி திட்டத்தின் மூலம் நிதியைப் பெற்றன.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைத் தவிர, வெட்டுதல், மேய்ச்சல் மற்றும் மக்கள் நடமாட்டம் தடைசெய்யப்பட்ட ஒரு "மையப் பகுதியை" உருவாக்குவதே இந்த காப்பகங்களின் நோக்கமாகும். மேலும், மனித செயல்பாடு குறைவாக இருக்கும் ஒரு "இடையக மண்டலம்" என்று சுனிதா நரைனின் கீழ் அமைக்கப்பட்ட 2005 புலி பணிக்குழுவின் அறிக்கையான “புள்ளிகளில் இணைதல்” குறிப்பிட்டது.


2005-06ஆம் ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர், புலிகள் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்துவதை மேற்பார்வையிடுவதற்காக ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (Tiger Conservation Authority (NTCA)) உருவாக்கப்பட்டது.


புலி பரவல்


2022-23ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கடைசி மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, இந்தியாவில் 3,681 புலிகள் (வரம்பு 3167-3925) இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. NTCA மதிப்பீட்டின் படி, பெரிய பூனைகள் சுமார் 89,000 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளன. இது ஜோர்டானின் பரப்பளவிற்கு சமமானது. மேலும், ஆஸ்திரியாவின் பரப்பளவைவிட பெரியது. சிவாலிக் மலைகள் மற்றும் கங்கை சமவெளிகள், மத்திய இந்திய மலைப்பகுதிகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள், மேற்கு தொடர்ச்சி மலைகள், வடகிழக்கு மலைகள் மற்றும் பிரம்மபுத்ரா வெள்ளப்பெருக்கு சமவெளிகள் மற்றும் சுந்தரவனக்காடுகள் ஆகிய ஐந்து முக்கிய நிலப்பரப்புகளில் புலிகள் பரவலாகக் காணப்படுகின்றன


260 புலிகளைக் கொண்ட கார்பெட், அதிக புலிகளின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து பந்திப்பூர் (150), நாகர்ஹோல் (141), பந்தவ்கர் (135), துத்வா (135), முதுமலை (113), கன்ஹா (105), காசிரங்கா (104), சுந்தரவனக்காடுகள் (100), தடோபா-அந்தாரி (97), சத்தியமங்கலம் (85), மற்றும் பென்ச் (77) புலிகளின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளன.


மாநிலங்களில், மத்தியப் பிரதேசத்தில் 785 புலிகள் உள்ளன. அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 563, உத்தரகண்டில் 560 மற்றும் மகாராஷ்டிராவில் 444 புலிகள் உள்ளன.


சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், 2006 மற்றும் 2018-க்கு இடையில், புலிகள் வசிக்கும் பகுதி 30% அதிகரித்துள்ளது.  மேலும், புலிகள் வசிக்கும் பகுதியில் சுமார் 45%-ல் சுமார் ஆறு கோடி மக்கள் வாழ்ந்தனர்.


புலிகளின் வாழ்விடங்களில் 25% மட்டுமே காப்பகங்களின் முக்கிய பகுதிகளில் இருப்பதாகவும், 20% பாதுகாப்பு மண்டலங்களில் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


கவலைக்குரிய பகுதிகள்


இன்று, 50-க்கும் மேற்பட்ட புலிகள் கொண்ட 26 புலிகள் காப்பகங்கள் உள்ளன.


மீதமுள்ள 27 காப்பகங்களில், புலி அடர்த்தி குறித்து கவலைகள் உள்ளன. உண்மையில், 2022 அறிக்கையின்படி, புலிகள் இல்லாத, அல்லது ஆண் புலிகள் மட்டுமே உள்ள, அல்லது ஐந்துக்கும் குறைவான புலிகள் கொண்ட 16 காப்பகங்கள் இருந்தன. இந்த காப்பகங்கள் அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஒடிசாவில் இருந்தன.


தெலுங்கானா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள புலிகளின் எண்ணிக்கை, ஒடிசாவில் உள்ள சட்கோசியா காப்பகத்தைப் போல, உள்ளூரில் ஒரே மாதிரியாக, குறைந்து, அல்லது மறைந்துவிட்டதால், கவலையளிக்கிறது.


மோசமான சமூக-பொருளாதார நிலைமைகள், அரசியல் நிலையின்மை, கிளர்ச்சிகள், சுரங்கம், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வன வளங்களுக்கான போட்டி போன்ற காரணிகள் அனைத்தும் இந்த சிக்கலுக்கு பங்களித்துள்ளன என்பதை சயின்ஸ் இதழ் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.



Original article:

Share:

புற்றுநோய் ஒரு அறிவிக்கத்தக்க நோயாக இருக்க வேண்டுமா? -சி. அரவிந்தா

 புற்றுநோய் கண்காணிப்பை மேம்படுத்துவதற்கான சிறந்தவழி, தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதாகும்.


இந்தியாவில் புற்றுநோயை ஒரு அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் மீண்டும் எழுகின்றன. இது கண்காணிப்பு மற்றும் சிகிச்சையை மேம்படுத்தும் என்று சிலர் வாதிட்டாலும், ஒன்றிய அரசு இந்த வாதத்தை எதிர்க்கிறது. தொற்று நோய்களை மட்டுமே அறிவிப்பது நடைமுறை என்றும், புற்றுநோய் என்பது தொற்றக்கூடியது அல்ல என்றும் தொற்றாத நோய்  என்றும் கூறியது.


நோய் அறிவிப்புக் கொள்கைகளில் சமீபத்திய மாற்றங்கள் இந்தக் காரணம் இன்னும் சரியாக பொருந்துமா என்ற கேள்விகளை எழுப்புகின்றன. 2024-ஆம் ஆண்டில், பாம்புக் கடிகளை ஒரு அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசாங்கம் அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டது. இது இது இந்தியாவிற்கு மட்டும் உரியதல்ல. 1995-ஆம் ஆண்டில், அமெரிக்கா ஈய நச்சுத்தன்மையை (lead poisoning) ஒரு அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்கத்தது. இது தொற்றா நோய்களைக் கண்காணிப்பதற்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது. பொது சுகாதாரக் கொள்கையில் ஏற்பட்ட இந்த மாற்றம், இந்தியாவில் புற்றுநோய் குறித்து அறிவிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புகிறது.


தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதே நோய் அறிவிப்பின் முக்கிய நோக்கமாகும். தொற்று நோய்களைப் பற்றி சுகாதார அதிகாரிகளிடம் மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். புற்றுநோய் தொற்று நோய்களிலிருந்து வேறுபட்டது. ஏனெனில், அது ஒருவருக்கு நபர் பரவுவதில்லை அல்லது திடீர் மரணங்களை ஏற்படுத்துவதில்லை. இதில் பல வகைகள் உள்ளன. மேலும், கண்டறிவதற்கு சிக்கலான சோதனைகள் தேவைப்படுகின்றன. புற்றுநோயை அறிவிக்கத்தக்கதாக மாற்றுவதை ஆதரிப்பவர்கள், இது முன்கூட்டியே கண்டறிவதற்கும் வளங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கும் உதவும் என்று நம்புகிறார்கள்.


இருப்பினும், இந்த அணுகுமுறையில் அடிப்படை சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக, புற்றுநோய் ஒரு கட்டத்தில் கண்டறியப்படுவதில்லை. மேலும், லேசானது முதல் கடுமையானது என பல வகைகளை கொண்டுள்ளது. ஒரு நோயைப் அறிவிக்கதக்கதாக மாற்றுவது பொதுவாக விரைவான நடவடிக்கைக்கு வழிவகுக்கும். ஆனால், புற்றுநோய்க்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதில்லை, நீண்டகால சிகிச்சை தேவைப்படுகிறது. மருத்துவர்கள் மீது சுமத்தப்படும் சட்டப்பூர்வ கடமைகள் கூடுதல் சுமையை உருவாக்கக்கூடும். இந்தியாவின் தேசிய புற்றுநோய் பதிவு திட்டம் (National Cancer Registry Programme (NCRP)) 1982-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது புற்றுநோய் தொடர்பான தகவல்களுக்கான தரவு சேகரிப்பு அமைப்பாக செயல்படுகிறது. NCRP முக்கிய விவரங்களை சேகரிக்கிறது. அவற்றில் சில, புற்றுநோய் நோயாளிகளின் மக்கள்தொகை, வகை, நிலை மற்றும் உருவவியல் உள்ளிட்ட புற்றுநோய் அடையாளம், கண்டறிதலின் நேரம் மற்றும் கண்டறிதலின்போது நிலை, கீமோதெரபி, கதிர்வீச்சு மற்றும் அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சை விவரங்கள் மற்றும் பின்தொடர்தல் மற்றும் உயிர்வாழும் விளைவுகள் பற்றிய முக்கியமான தகவல்களைத் தொகுக்கிறது. புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகளில் இருந்து தரவுகளை சேகரிக்கும் மருத்துவமனை சார்ந்த பதிவேடுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் புற்றுநோய் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் மக்கள் தொகை சார்ந்த பதிவேடுகள் ஆகியவை NCRP-யில் இடம்பெற்றிருக்கும்.


2022-ல் 269 மருத்துவமனை சார்ந்த மற்றும் 38 மக்கள்தொகை அடிப்படையிலான பதிவுகள் உள்ளன. அவை போதுமானதாக இல்லை. அனைத்து மாவட்ட தலைமையக மருத்துவமனைகள் உட்பட புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் மருத்துவமனை சார்ந்த பதிவுகளை விரிவுபடுத்தப்பட வேண்டும். இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் பதிவேடு இருக்க வேண்டும். இது நாடு தழுவிய புற்றுநோய் கண்காணிப்பை உறுதி செய்யும். புற்றுநோய் அறிக்கையிடலை சட்டப்பூர்வ தேவையாக மாற்றுவதற்கு பதிலாக, ஏற்கனவே உள்ள புற்றுநோய் பதிவேடுகளை வலுப்படுத்துவது சிறந்த நடவடிக்கையாக இருக்கும். 


இரண்டாவதாக, புற்றுநோயை ஒரு அறிவிக்கத்தக்க நோயாக மாற்றுவது தனியுரிமை கவலைகளை ஏற்படுத்தும். ஏனெனில், நோய் அறிவிப்பு என்பது தனிப்பட்ட தனியரிமையைவிட பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதாகும். புற்றுநோய் இன்னும் சமூகத்தில் ஒரு பிரச்னையை  ஏற்படுத்துகிறது. பல மாநில பொது சுகாதாரச் சட்டங்களில் இன்னும் சுகாதார அவசரநிலையின் போது உள்ளூர் அதிகாரிகளுக்கு விரிவான அதிகாரங்களை வழங்கும் விதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை காலப்போக்கில் பயனற்றதாக மாற்றப்பட்டாலும், சட்ட முன்மாதிரி இன்னும் உள்ளது. இதுபோன்ற சட்ட கட்டமைப்பில் புற்றுநோயைச் சேர்ப்பது நோயாளிகள் நோயறிதல் மற்றும் சிகிச்சைக்காக முன்வருவதில் நோயாளிகளிடையே தயக்கத்தை அதிகரிக்கக்கூடும். ஏனெனில், பிரச்சனை மற்றும் பாகுபாடு மக்கள் சரியான நேரத்தில் மருத்துவ உதவி பெறுவதைத் தடுக்கலாம். உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) முக்கியமாக புற்றுநோய் பதிவேடுகளை ஆதரிக்கிறது. உலக சுகாதார அமைப்பு அறிவிப்பை தனிப்பட்ட மட்டத்தில் ஒரு விருப்ப செயல்முறையாக மட்டுமே பரிந்துரைக்கிறது கட்டாய விதியாக அல்ல.


அனைத்து மூன்றாம் நிலை மற்றும் மாவட்ட மருத்துவமனைகளிலும் விரிவான தரவு சேகரிப்பை உறுதிசெய்ய தேசிய புற்றுநோய் பதிவு திட்டத்தை (National Cancer Registry Programme (NCRP)) விரிவுபடுத்துவதே ஒரு பயனுள்ள அணுகுமுறையாகும். புற்றுநோய் பரிசோதனை முயற்சிகளை மேம்படுத்துவது முன்கூட்டியே கண்டறிவதை இது போன்ற நடவடிக்கைகள் உறுதி செய்யும். சட்டப்பூர்வ ஆணைகள் இல்லாமல் அறிக்கையிடல் வழிமுறைகளை வலுப்படுத்துவது புற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் சுகாதார வழங்குநர்கள் நிர்ப்பந்தத்தின் கீழ் புகாரளிப்பதற்குப் பதிலாக தானாக முன்வந்து துல்லியமான தரவை வழங்க அனுமதிக்கும். விரைவாகப் பரவும் தொற்று நோய்களுக்கு கட்டாய அறிவிப்பு சிறப்பாகச் செயல்படும். புற்றுநோய்க்கு, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பதிவு அமைப்பு ஒரு சிறந்த தீர்வாகும். தனியார் மருத்துவமனைகள் மற்றும் வலுவான பின்தொடர்தல் வழிமுறைகள் உட்பட பரந்த மருத்துவமனை பங்கேற்பால் வலுப்படுத்தப்பட்ட நன்கு கட்டமைக்கப்பட்ட பதிவு அமைப்பு, இந்தியாவில் புற்றுநோய் கண்காணிப்பை மேம்படுத்தும்.


டாக்டர். சி. அரவிந்தா ஒரு கல்வியியல் மற்றும் பொது சுகாதார மருத்துவர்.



Original article:

Share: