ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 27-வது கிழக்கு மண்டலக் குழு (Eastern Zonal Council) கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கிழக்கு மண்டல குழுவில் - ஜார்கண்ட், பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு கிழக்கு மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் 25 மண்டல குழு கூட்டங்கள் நடைபெற்றதற்கு ஒப்பிடும்போது, 2014 முதல் 2025 வரையிலான காலத்தில் 63 மண்டல குழு கூட்டங்கள் நடைபெற்றதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மண்டல குழுக்கள் விவாத மன்றங்களிலிருந்து "கூட்டு முயற்சிகளின் இயந்திரங்களாக" (engines of cooperation) மாற்றமடைந்துள்ளன என்றும், அவற்றின் கூட்டங்களில் பேசப்பட்ட பிரச்சனைகளில் 83% தீர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
முக்கிய அம்சங்கள்:
1. 1956-ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, மண்டலக் குழுக்களை உருவாக்கும் யோசனையை முன்மொழிந்தார். மாநிலங்களை மறுசீரமைப்பது குறித்த விவாதத்தின்போது, மாநிலங்களை 4 அல்லது 5 மண்டலங்களாகப் பிரித்து, இந்த மாநிலங்களிடையே "கூட்டுறவுப் பழக்கத்தை வளர்க்க" (to develop the habit of cooperative working) ஒரு ஆலோசனைக் குழுவைக் கொண்டிருக்கலாம் என்று பரிந்துரைத்ததாக உள்துறை அமைச்சகத்தின் (Ministry of Home Affairs (MHA)) பதிவுகள் தெரிவிக்கின்றன.
2. நேருவின் பார்வையில், மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956-ன் பகுதி III-ன் கீழ் ஐந்து மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை சட்டரீதியான அமைப்புகள் (statutory bodies) ஆகும்.
3. மண்டலக் குழுக்களின் தற்போதைய அமைப்பு பின்வருமாறு:
கிழக்கு மண்டல குழுவில் (Eastern Zonal Council) பீகார், ஜார்கண்ட், ஒரிசா மற்றும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
வடக்கு மண்டலக் குழு (Northern Zonal Council) ஹரியானா, இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் மற்றும் டெல்லி, சண்டிகர் யூனியன் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
மத்திய மண்டலக் குழு (Central Zonal Council) - சத்தீஸ்கர், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
மேற்கு மண்டலக் குழு (Western Zonal Council) கோவா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி (Dadra & Nagar Haveli) மற்றும் தமன் & தீவு (Daman & Diu) யூனியன் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
தென்மண்டலக் குழு (Southern Zonal Council) - ஆந்திர பிரதேசம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
4. இதனுடன், வடகிழக்குக் குழு (North Eastern Council (NEC)) ஒரு சட்டரீதியான ஆலோசனை அமைப்பாக NEC சட்டம் 1971 (84 of 1971) கீழ் உருவாக்கப்பட்டு, 1972 ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி ஷில்லாங்கில் இயங்கத் தொடங்கியது. இதில் அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, மிசோரம், மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் உறுப்பினர்களாக உள்ளன. முன்பு கிழக்கு மண்டல குழுவில் இருந்த சிக்கிம் மாநிலம் 2002-ஆம் ஆண்டில் வடகிழக்கு மண்டலக் குழுவில் சேர்க்கப்பட்டது.
5. ஒவ்வொரு குழுவின் அமைப்பு பின்வருமாறு:
(a) ஒன்றிய உள்துறை அமைச்சர் ஒவ்வொரு சபையின் தலைவராக (chairman) இருக்கிறார்.
(b) ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களின் முதல்வர்கள் சுழற்சி முறையில் அந்த மண்டல சபையின் துணைத்தலைவர்களாக (Vice-Chairman) செயல்படுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு வருட காலம் பதவி வகிக்கிறார்கள்.
(c) ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் முதல்வர் மற்றும் ஆளுநரால் நியமிக்கப்பட்ட மற்ற இரு அமைச்சர்கள், மற்றும் அந்த மண்டலத்தில் உள்ள யூனியன் பிரதேசங்களிலிருந்து இரு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
(d) ஒவ்வொரு மண்டல குழுவிற்கும் திட்டக்குழுவால் (planning commission) நியமிக்கப்பட்ட ஒரு நபர், தலைமைச் செயலாளர்கள் (Chief Secretaries) மற்றும் அந்த மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தால் நியமிக்கப்பட்ட மற்றொரு அதிகாரி போன்ற முக்கிய நபர்கள் இடம் பெற்றுள்ளனர்.
6. 2018-ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை, ஒன்றிய உள்துறை அமைச்சரை வடகிழக்கு சபையின் பதவி வகிக்கும் தலைவராக (ex-officio chairman) நியமிக்கவும், வடகிழக்கு பிரதேச மேம்பாட்டு அமைச்சராக (Minister of Development of North Eastern Region (DoNER)) சபையின் துணைத்தலைவராக பணியாற்றவும் ஒப்புதல் அளித்தது.
7. ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே மற்றும் மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சனைகளை சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள் மூலம் தீர்க்க மண்டல குழுக்கள் ஒரு சிறந்த மன்றமாக அமைகின்றன என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட மாநிலங்களுக்கான ஒத்துழைப்பு முயற்சிகளின் பிராந்திய மன்றங்களாக இந்த குழுக்கள் செயல்படுகின்றன.
அரசியலமைப்பு அமைப்பு மற்றும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பு
01. அரசியலமைப்புச் சட்டத்திற்கும் (constitutional body) சட்டப்பூர்வ அமைப்புக்கும் (statutory body) உள்ள வேறுபாடு என்ன?
அரசியலமைப்பு அமைப்புகள் என்பவை அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட அமைப்புகளாகும். அவற்றின் அதிகாரங்களும் பொறுப்புகளும் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அரசாங்க அதிகாரத்தை சரிபார்த்து சமநிலைப்படுத்தும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் பங்கு வெறும் நிர்வாக செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. மாநிலங்களுக்கு இடையேயான குழு (Inter-State Council) ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும்.
மறுபுறம், சட்டரீதியான அமைப்புகள் (Statutory bodies) என்பது நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களின் சட்டத்தால் நிறுவப்பட்ட அமைப்புகளாகும். அவை அரசியலமைப்பிலிருந்து நேரடியாக இல்லாமல் சட்டத்திலிருந்து அவற்றின் அதிகாரத்தைப் பெறுகின்றன. மண்டலக் குழுக்கள் (Zonal Councils) சட்டரீதியான அமைப்புகள் ஆகும்.
மாநிலங்களுக்கிடையேயான குழு (Inter-State Council)
1. அரசியலமைப்பின் 263-வது பிரிவின் கீழ் மாநிலங்களுக்கு இடையேயான குழு அமைக்கப்பட்டது. தேவைப்பட்டால் குடியரசுத்தலைவர் இந்த குழுவை உருவாக்கலாம். அதன் முக்கிய கடமைகள்:
(a) மாநிலங்களுக்கிடையே எழக்கூடிய தகராறுகளை விசாரித்து அவற்றின் மீது ஆலோசனை வழங்குதல்;
(b) சில அல்லது அனைத்து மாநிலங்கள் அல்லது மத்திய அரசு மற்றும் ஒன்று அல்லது பல மாநிலங்களுக்கு பொதுவான நலன் உள்ள விஷயங்களை விசாரித்து விவாதித்தல்; அல்லது
(c) அந்தப் பிரச்சினைகளில் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை பரிந்துரைத்தல்
இந்த குழு பல்வேறு அரசாங்கங்களுக்கிடையேயான விவாதங்களுக்கான ஒரு மன்றமாக பணியாற்ற வேண்டும்.
2. குறிப்பிடத்தக்க வகையில், மாநிலங்களுக்கிடையேயான குழு ஒரு நிரந்தர அரசியலமைப்பு அமைப்பு அல்ல. 1988-ஆம் ஆண்டில், நீதிபதி ஆர்.எஸ். சர்க்காரியா தலைமையில் மத்திய-மாநில உறவுகள் குறித்து ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் பின்வருமாறு:
(a) பிரிவு 263 கீழ் அரசுகளுக்கிடையேயான குழு (Inter-Governmental Council (IGC)) என்று அழைக்கப்படும் நிரந்தர மாநிலங்களுக்கிடையேயான குழு அமைக்கப்பட வேண்டும்.
(b) சமூக-பொருளாதார திட்டமிடல் மற்றும் மேம்பாடு தவிர, பிரிவு 263-ன் உட்பிரிவுகள் (b) மற்றும் (c)-ல் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகள் அரசுகளுக்கிடையேயான குழுவிற்கு வழங்கப்பட வேண்டும்.
3. பிரதமரே இந்தக் குழுவின் தலைவராக உள்ளார். அனைத்து மாநிலங்கள் மற்றும் சட்டமன்றங்களைக் கொண்ட யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் உறுப்பினர்களாக உள்ளனர். பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்துள்ள ஆறு அமைச்சர்களும் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.
4. 1990-ஆம் ஆண்டு முதல் மாநிலங்களுக்கிடையேயான குழு பதினொரு 11 கூடியுள்ளது. கடைசி கூட்டம் 2016-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அங்கு மத்திய-மாநில உறவுகள் குறித்த பஞ்சி ஆணையத்தின் பரிந்துரைகள், அடையாள அட்டையை (Aadhaar) அடையாளங் காட்டியாக பயன்படுத்துதல், மற்றும் மானியங்கள், நன்மைகள் மற்றும் பொது சேவைகளை வழங்குவதற்கு நேரடி பலன் பரிமாற்றத்தை (Direct Benefit Transfer (DBT)) பயன்படுத்துதல் ஆகியவை விவாதிக்கப்பட்ட சில முக்கிய பிரச்சினைகள் ஆகும்.
5. நிலைக்குழு, வழக்கமான விவாதங்களை நடத்துவதற்கும், குழு பரிசீலிக்க வேண்டிய விஷயங்களைக் செயல்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலில் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பு மத்திய-மாநில உறவுகள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் செயல்படுத்தவும், குழுவின் பரிந்துரைகளின் பேரில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதை கண்காணிக்கவும் இந்த நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கடைசியாக நவம்பர் 2024 இல் அமைக்கப்பட்டது.
Original article: