போர் வெடித்தால் பாகிஸ்தான் அழிவை சந்திக்கும் -பரண் பாலகிருஷ்ணன்

 பாகிஸ்தான் ராணுவம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் மீளத் தொடங்கும் அதே வேளையில், நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடும். இந்த சூழ்நிலையால் இந்தியாவும் சில எதிர்மறை விளைவுகளை உணரக்கூடும்.


பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை மேம்படத் தொடங்கியிருந்தது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன், நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு $116 பில்லியனை எட்டியது. இது பெரிய தொகை இல்லை என்றாலும், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூடுதல் நிதி உதவி பாகிஸ்தானுக்கு இந்த ஆண்டை கடக்க உதவியது.


இருப்பினும், இந்த முன்னேற்றம் இப்போது ஆபத்தில் உள்ளது. காஷ்மீரில் நடந்த ஒரு கொடிய பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா குழுவை இந்தியா குற்றம் சாட்டுகிறது.


இந்தியா வலுவான நிலையில் உள்ளது. பிரச்சினைகளை சிறப்பாக கையாள முடியும். ஆனால், அதன் தாக்கத்தை அது இன்னும் உணரும். பாகிஸ்தானைப் பொறுத்தவரை, ஒரு நீண்ட மோதல் அல்லது ஒரு குறுகிய போர் கூட அதன் பொருளாதாரத்தை மோசமாகப் பாதிக்கக்கூடும். அது இப்போதுதான் மீளத் தொடங்கியுள்ளது. சில அறிக்கைகள், பாகிஸ்தானின் இராணுவம் வெளிப்புற உதவி இல்லாமல் நான்கு முதல் ஐந்து நாட்கள் மட்டுமே அதன் டாங்கிகளை நகர்த்த முடியும் என்று கூறுகின்றன.


கடன் மதிப்பீட்டு நிறுவனமான Moody’s, நிலைமை மோசமடைந்தால், நீண்டகால சேதம் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு மிகவும் மோசமாக இருக்கும் என்று கூறுகிறது.


கடந்த காலங்களில், உலகத் தலைவர்கள் குறிப்பாக, அமெரிக்கா உலகளாவிய மோதல்களைத் தணிப்பதில் தீவிரப் பங்காற்றினர். உதாரணமாக, 1999ஆம் ஆண்டு ஏற்பட்ட கார்கில் போரின் போது, ​​அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் பாகிஸ்தான் பிரதமரை வாஷிங்டனுக்கு அழைத்து, செயற்கைக்கோள் படங்களைக் காட்டி, பாகிஸ்தான் துருப்புக்களை திரும்பப் பெறுமாறு கோரினார்.


2025ஆம் ஆண்டில், நிலைமை மிகவும் வித்தியாசமானது. அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் 100 நாட்களின் சாதனைகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் குறித்து கேட்டபோது, ​​"அவர்கள் தீர்வுகளை கண்டுபிடிப்பார்கள். அவர்கள் ஆயிரம் ஆண்டுகளாக போராடி வருகின்றனர்" என்று கூறினார். ஒரு நிபுணர் கருத்து தெரிவிக்கையில், "அவர் எங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை" என்று கருத்து தெரிவித்தார்.


டிரம்ப் நடந்து கொண்டிருக்கும் இரண்டு போர்களையும் நிறுத்தத் தவறிவிட்டார். காசாவில் இருந்து அனைத்து பாலஸ்தீனியர்களையும் அகற்ற விரும்புவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதில் அமெரிக்கா எதுவும் கூறவில்லை. உக்ரைன் குறித்த ரஷ்யாவின் பார்வையை முதலில் ஆதரிப்பதன் மூலம் டிரம்ப் உலகை ஆச்சரியப்படுத்தினார். ஆனால், உக்ரைன் அமெரிக்காவுடன் ஒரு கனிம ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட பின்னரே இது நடைபெற்றது.  இருந்தபோதிலும், இன்னும் அமைதி அடையப்படவில்லை.


இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லைப் பகுதியில் நடக்கும் சிறு மோதலுக்கு மேல் தாங்கும் நிலையில் உள்ளதா? இந்தியா தெளிவாக உறுதியான நிலையில் உள்ளது. அதன் வெளிநாட்டு கையிருப்பு $642.5 பில்லியன் என்ற உச்ச அளவில் உள்ளது. பணவீக்கம் குறைந்து வருகிறது மற்றும் இந்த ஆண்டின் வளர்ச்சி 6.5-6.7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு பிரச்சனை உள்ளது. முதலீட்டாளர்கள் போர் என்ற கருத்தை விரும்பவில்லை. நிலைமை மோசமாகிவிட்டால், வெளிநாட்டு நிறுவனங்கள் இப்பகுதியில் தங்கள் திட்டங்களை தாமதப்படுத்தலாம் அல்லது ரத்து செய்யலாம். நீண்ட மோதல்கள் விநியோகச் சங்கிலிகளை உடைக்கலாம், உள்கட்டமைப்பை சேதப்படுத்தலாம் மற்றும் இரு நாடுகளிலும் வணிக நம்பிக்கையை பாதிக்கலாம்.


இராஜதந்திர ஆதரவு இல்லாததும் தவறான கணிப்பின் ஆபத்தை அதிகரிக்கிறது. ஒரு மோசமான ஏவுகணை தாக்குதல் பெரிய நெருக்கடியாக மாறக்கூடும் மற்றும் இந்தியா தனது உலகளாவிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் கவர்ச்சியை இழக்க நேரிடும்.


ஆப்பிள் நிறுவனம் உலகளாவிய உற்பத்தியில் 40 சதவீதத்தை நீண்ட காலத்தில் இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது மற்றும் அண்மை காலத்தில் 25-30 சதவீதம் உற்பத்தி செய்ய உள்ளது. இது 2025ல் தனது ஐபோன் 17 தொடரை இந்தியாவில் சீனாவுடன் ஒரே நேரத்தில் தயாரிக்க தயாராகி வருகிறது. இது இந்தியாவை இணையான உற்பத்தி தளமாக நம்புவதைக் காட்டுகிறது.  இந்தியா ஒரு தீவிர மோதலில் ஈடுபட்டால் ஆப்பிள் இரண்டாவது முறை யோசிக்குமா? சந்தேகமில்லை. மேலும், போர் முக்கிய எரிசக்தி பாதைகளையும் அசைக்கக்கூடும். கப்பல் காப்பீட்டு தொகைகளை உயர்த்தக்கூடும் மற்றும் எண்ணெய் விலைகளை அதிகரிக்கச் செய்யும்.


கூடுதல் அழுத்தம்


இந்தியாவின் எதிர்காலம் குறித்து Moody's அதிகம் கவலைப்படவில்லை. ஆனால் நிலைமை தொடர்ந்தால் பாகிஸ்தானின் பொருளாதாரம் சிரமப்படக்கூடும். சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானை அதன் நாணயத்தின் மதிப்பைக் குறைக்கச் செய்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 155 ரூபாயாக இருந்த ஒரு அமெரிக்க டாலர் இப்போது 281 பாகிஸ்தான் ரூபாய்க்கு சமம்.


அது எண்ணெய் விலைகளை PKR-255 ஆக உயர்த்த வேண்டியிருந்தது. இதனால், கார் உரிமையாளர்கள் இருசக்கர வாகனங்களுக்கு மாற வேண்டிய சூழல் ஏற்ப்பட்டுள்ளது.


மாற்று விகிதம் மிகவும் மோசமாக இருப்பதால், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் இதில் ஆயுதங்களும் அடங்கும். இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தானில் கார் உற்பத்தியும் மிகக் குறைவு. உதாரணமாக, பிப்ரவரியில், பாகிஸ்தானில் 242 மில்லியன் மக்கள் தொகை இருந்தபோதிலும், 12,084 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. மேலும், ஏற்றுமதியை அதிகம் நம்பியுள்ள ஜவுளி போன்ற தொழில்கள், வர்த்தகம் தடைபட்டால் பெரிதும் பாதிக்கப்படும்.


பாகிஸ்தானின் பொருளாதாரம் ஏற்கனவே மின்வெட்டு மற்றும் மூலப்பொருட்களின் பற்றாக்குறையால் அழுத்தத்தில் உள்ளது. எரிபொருள் விலைகள் உயர்வு மற்றும் பாகிஸ்தான் அதன் அனைத்து எண்ணெயையும் இறக்குமதி செய்வதால் நிலைமை மோசமடையக்கூடும். சர்வதேச நாணய நிதியத்துடனான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை மீறாமல் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பது பாகிஸ்தானுக்கு கடினமாக இருக்கும்.


பொருளாதாரம் பலவீனமாக இருந்தாலும், பாகிஸ்தானின் இராணுவத் பிரதமர் அசிம் முனீர் பின்வாங்கவில்லை. இரு நாடுகளின் கோட்பாட்டை ஆதரிப்பதன் மூலமும், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழ முடியாது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். காஷ்மீரை பாகிஸ்தானின் "கழுத்து நரம்பு" (jugular vein) என்றும் அவர் அழைத்தார். 


இதோடு, எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் மக்களிடம் பெரும் ஆதரவு பெற்றிருப்பதால் இராணுவம் தனது முக்கியத்துவத்தை நிலைநாட்ட போராடுகிறது. முன்பு இராணுவமே அவரை பதவியில் இருந்து நீக்கி சிறையில் அடைத்தது. இந்த சூழலில், அமைதியான முடிவுகள் எட்டப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே தெரிகின்றன.


Original article:
Share:

ஆபரேஷன் சிந்தூர்: Scalp Cruise ஏவுகணைகள், இலக்கைத் தாக்க Hammer Smart ஆயுதம் பயன்படுத்தப்பட்டது -ராகுல் சிங்

 Scalp ஏவுகணைகள் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கவும், Hammer ஏவுகணைகள்  அதற்கு அருகிலுள்ள இலக்குகளை அழிக்க  பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.


Scalp ஏவுகணைகள் என்றால் என்ன?


SCALP ஏவுகணை, புயல் நிழல் என்றும் அழைக்கப்படுகிறது. இது வானிலிருந்து ஏவக்கூடிய ஒரு நீண்ட தூர ஏவுகணையாகும். இது பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்டது. Scalp ஏவுகணைகள் 2003ஆம் ஆண்டு  முதல் சேவையில் உள்ளது. பல நட்பு நாடுகளும் இதைப் பயன்படுத்துகின்றன.


புதுடெல்லி: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத தளங்களை குறிவைக்க இந்திய இராணுவம் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் துல்லியமான ஆயுதங்களையும் பயன்படுத்தியது. சுற்றியுள்ள பகுதிகளுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் இருக்க ஆயுதங்கள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டன என்று விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கினார். புதன்கிழமை ஆபரேஷன் சிந்தூர் பற்றி ஊடகங்களுக்குப் பேசிய இரண்டு பெண் அதிகாரிகளில் இவரும் ஒருவர்.


புதன்கிழமை இரவு, அதிகாலை 1:05 மணி முதல் அதிகாலை 1:30 மணி வரை, இந்தியா 25 நிமிட இராணுவப் பணியை மேற்கொண்டது. இது ஏப்ரல் 22 அன்று 26 பேரைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு நேரடி பதிலடியாகும்.


ஒவ்வொரு இலக்கிலும் தாக்குதலின் புள்ளி ஒரு குறிப்பிட்ட கட்டிடம் அல்லது கட்டிடங்களின் குழுவாக இருந்தது என்று  விங் கமாண்டர் கூறினார்.


ஒன்பது பயங்கரவாத முகாம்களைத் தாக்கப் பயன்படுத்தப்பட்ட இராணுவ வன்பொருள் பற்றிய விவரங்கள்  செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்படவில்லை மற்றும் அவை வெளியிடப்படவில்லை.


இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்:


  • Scalp deep-strike cruise ஏவுகணைகள்: இவை ரஃபேல் போர் விமானிகளை தூரத்திலிருந்து தரை இலக்குகளைத் தாக்க அனுமதித்தன.

  • Hammer smart ஆயுத அமைப்பு: ஒரு துல்லியமான ஆயுத அமைப்பு.

  • வழிகாட்டப்பட்ட வெடிகுண்டு கருவிகள்: இவை அதிக துல்லியத்திற்காக தங்கள் இலக்குகளுக்கு குண்டுகளை வழிநடத்துகின்றன.

  • M777 howitzers: இந்த பீரங்கித் துண்டுகள் Excalibur munitions வெடிமருந்துகளை சுட்டன. அவை, துல்லியமான இலக்குக்கான வழிகாட்டப்பட்ட குண்டுகள்.


இலக்குகளைத் தாக்குவதற்கு அவ்வப்போது வெடிமருந்துகளும் பயன்படுத்தப்பட்டதாக நிலைமையை நன்கு அறிந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.


அனைத்து இலக்குகளும் திறமையாக தாக்கப்பட்டன. இது இந்திய ஆயுதப்படைகள் திட்டமிட்டு பணியை நிறைவேற்றுவதில் கொண்டிருந்த தொழில்முறைத் திறனைக் காட்டுகிறது. இராணுவ கட்டிடங்கள் எதுவும் குறிவைக்கப்படவில்லை. மேலும், பொதுமக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை, ”என்று அவர் கூறினார்.


ரஃபேல் போர் விமானங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட ஹேமர் (ஹைலி அஜில் மாடுலர் வெடிமருந்து நீட்டிக்கப்பட்ட வீச்சு), பிரெஞ்சு நாட்டில் இருந்து வாங்கப்பட்ட இந்த ஏவுகணை அனைத்து வானிலைக்கும் ஏற்ற ஸ்மார்ட் ஆயுதமாகும். இது விமானிகள் 60 கிமீ வரை நிலைத்தடுப்பு வரம்பிலிருந்து தரை இலக்குகளை தாக்க அனுமதிக்கிறது.


வழிகாட்டுதல் கருவி மற்றும் Mk80 தொடரின் நிலையான குண்டில் பொருத்தப்பட்ட வரம்பு நீட்டிப்பு கருவியைக் கொண்ட ஹேமர், பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனமான சஃப்ரானால் தயாரிக்கப்படுகிறது.


கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்க Scalp ஏவுகணைகளும், நெருக்கமான சிலவற்றைத் தாக்க Hammer ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.


இலக்கு தேர்வு உரிய விடாமுயற்சியுடன் செய்யப்பட்டது என்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய நுணுக்கமான விவரங்களை ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்ட மற்றொரு பெண் அதிகாரி கர்னல் சோபியா குரேஷி கூறினார்.


ஆபரேஷன் சிந்தூருக்கான இலக்குகளைத் தேர்ந்தெடுப்பது நம்பகமான உளவுத்துறை உள்ளீடுகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்வதில் இந்த வசதிகளின் பங்கை அடிப்படையாகக் கொண்டது. பொதுமக்கள் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவதையும், பொதுமக்கள் உயிர் இழப்பதையும் தவிர்க்க இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன” என்று விக்ரம் மிஸ்ரி கூறினார்.


பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவும், மேலும் எல்லை தாண்டிய தாக்குதல்களை முன்கூட்டியே தடுக்கவும், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத உட்கட்டமைப்புகள் மீது இந்திய இராணுவம் “அளவிடப்பட்ட, விரிவாக்கப்படாத மற்றும் விகிதாசார” தாக்குதல்களை நடத்தியதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி புதன்கிழமை தெரிவித்தார்.


Original article:
Share:

செனாப் ஆற்றில் இந்தியாவின் பெரிய அணைகள். -ஹரிகிஷன் சர்மா, அருண் சர்மா

 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ், செனாப் நதியை பாகிஸ்தான் கட்டுப்படுத்துகிறது. இருப்பினும், அதில் இந்தியா மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க அனுமதிக்கப்படுகிறது.


இருப்பினும், செவ்வாய்க்கிழமை அக்னூரில் நதி அதன் இயல்பான மட்டமான 19-20 அடியை எட்டியது. வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தூர்வாரும் பணிக்கு பின் காலி செய்யப்பட்ட இரண்டு அணைகளின் நீர்த்தேக்கங்கள் நிரம்பிய பிறகு, தண்ணீர் பாய அனுமதிக்கப்பட்டதாக சலால் நீர் மின் திட்டத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.India’s large dams on the Chenab


1960ஆம் ஆண்டு சிந்து நீர் ஒப்பந்தத்தை (Indus Waters Treaty (IWT)) "உடனடியாக" நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்த சில நாட்களுக்குப் பிறகு இது நடந்தது.


பாகிஸ்தான் தீவிரவாதிகளால் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜம்மு காஷ்மீரில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் இந்தியா தனது சொந்த நீர் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது என்று பலர் கருதுகின்றனர்.


மறுபுறம், பாகிஸ்தானில், இந்தியா சிந்து நதியின் மேல்பகுதியில் அணைகள் கட்டுவதன் மூலம் அதன் நீரைப் பறிக்க விரும்புவதாக ஒரு நீடித்த கதை உள்ளது.


செப்டம்பர் 2023ஆம் ஆண்டு நிலவரப்படி ஜம்மு மற்றும் காஷ்மீரில் 15 பெரிய அணைகளின் தேசிய பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது.


தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் (The National Dam Safety Authority (NDSA) ) கீழ்கண்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்யும் போது அதனை 'அணை' (dam) என்று வரையறுக்கிறது:


1. இது 15 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்டது. அடித்தளத்தின் மிகக் குறைந்த புள்ளியிலிருந்து மேல் வரை அளவிடப்படுகிறது.


2. 10 முதல் 15 மீட்டர் உயரமுள்ள ஒரு அணை, அதன் நீளம், நீர்த்தேக்க கொள்ளளவு, வெள்ள வெளியேற்றம், அடித்தளம் அல்லது வடிவமைப்பு தொடர்பான ஐந்து குறிப்பிட்ட நிபந்தனைகளில் குறைந்தபட்சம் ஒன்றைப் பூர்த்தி செய்ய வேண்டும்.


ஜம்மு & காஷ்மீரில் உள்ள 15 பெரிய (குறிப்பிட்ட) அணைகளில் நான்கு செனாப்பில் உள்ளன. சலால் (பாறை நிரப்பு அணை), ஆலால் (கான்கிரீட் அணை), பாக்லிஹார் மற்றும் துல். இந்த நதி இமாச்சலப் பிரதேசத்தில் 122 கி.மீ தூரம் பாய்ந்து ஜம்மு காஷ்மீருக்குள் நுழைகிறது. இது தெற்கு பிர் பஞ்சால் மலைகளின் கிழக்குப் பகுதியிலிருந்தும், ஜம்மு மலைகள் மற்றும் மலையடிவாரங்களை வடிகட்டுகிறது.


சிந்து நீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty (IWT)) மற்றும் செனாப் நதி


சிந்து நீர் ஒப்பந்தம் பாகிஸ்தான் கட்டுப்படுத்தும் மூன்று "மேற்கு நதிகளில்" (சிந்து மற்றும் ஜீலம் உடன்) ஒன்றாக செனாப்பை அடையாளம் காட்டுகிறது.


இருப்பினும், உள்நாட்டு பயன்பாடு, நுகர்வு அல்லாத பயன்பாடு, விவசாய பயன்பாடு (சிந்து நீர் ஒப்பந்தத்தின் இணைப்பு C-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி மற்றும் நீர் மின் உற்பத்தி (இணைப்பு D) ஆகியவற்றிற்காக மூன்று மேற்கு நதிகளின் நீரை இந்தியா கட்டுப்படுத்த அனுமதிக்கப்படுகிறது.


விவசாயத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் 15 முதல் அக்டோபர் 14 வரை 1,000 கனஅடி வரையிலும், ரன்பீர் கால்வாய்க்கு 350 கனஅடி வரையிலும் (அக்டோபர் 15 முதல் ஏப்ரல் 14 வரை) தண்ணீர் எடுக்க சிந்து நீர் ஒப்பந்தம்  இந்தியாவை அனுமதிக்கிறது மற்றும் பிரதாப் கால்வாய்க்கு 400 கனஅடி (ஏப்ரல் 15-அக்டோபர் 14), மற்றும் (அக்டோபர் 15 முதல் ஏப்ரல் 14 வரை) 100 கனஅடி எடுக்க அனுமதிக்கிறது.

India’s large dams on the Chenab

நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக, மூன்று மேற்கு ஆறுகளிலும் இந்தியா நதியின் ஓடும் நீர்மின் நிலையங்களை (run-of-the river plants) அமைக்க அனுமதிக்கப்படுகிறது. நதியின் ஓடும் நீர்மின் நிலையம் இயற்கையான நீரோட்டத்திலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. செனாப்பில் உள்ள சலால் மற்றும் பாக்லிஹார் இரண்டும் நதியின் ஓடும் நீர் மின் திட்டங்களாகும்.


பாக்லிஹார் திட்டம்


143 மீட்டர் உயரம் கொண்ட ராம்பன் மாவட்டத்தில் உள்ள பாக்லிஹார் அணையின் மொத்த சேமிப்பு திறன் 428.28 மில்லியன் கன மீட்டர் (million cubic metres (MCM)) மற்றும் நேரடி சேமிப்பு திறன் 31.11 MCM ஆகும். 2009ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த இந்த அணை, ஜம்முகாஷ்மீர் மின் மேம்பாட்டுக் கழகத்தால் இயக்கப்படுகிறது. இது பாக்லிஹார் நிலை-1 450 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் கொண்டது.




சலால் திட்டம் (Salal project)


சலால் மின் திட்டம் 690 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் கொண்டது (நிலைகள் I மற்றும் II ஒவ்வொன்றும் 3 x115 மெகாவாட் கொண்டது). மேலும், இந்த ஆலை 1987, 1993, 1994 மற்றும் 1995ஆம் ஆண்டுகளில் நிலைகளில் இயக்கப்பட்டது.


81.38 மீட்டர் உயரத்துடன், சலால் (கான்கிரீட் அணை) மொத்த கொள்ளளவு மற்றும் நேரடி சேமிப்பு திறன் முறையே 284.1 MCM மற்றும் 271.3 MCM ஆகும். இந்த அணை தேசிய நீர் மின் கழகம் (National Hydro Power Corporation (NHPC)) நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு இயக்கப்படுகிறது.


Original article:
Share:

கரிம வரி (Carbon Tax) என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 ஐக்கிய இராச்சியம் மற்றும் இந்தியா இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement (FTA)) 2025: கார்பன் வரி இந்தியா-ஐக்கிய இராச்சியம் வர்த்தக ஒப்பந்தத்தில் ஒரு முக்கிய தடையாக இருந்து வந்துள்ளது. கார்பன் வரி, கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) மற்றும் இந்தியாவின் கார்பன் கடன் வரவுத் திட்டம் (Carbon Credit Trading Scheme (CCTS)) பற்றி அறிவோம்.


தற்போதைய செய்தி ?


இந்தியாவும் ஐக்கிய இராச்சியமும் செவ்வாய்க்கிழமை மே 6 அன்று ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது சுமார் மூன்று ஆண்டுகால பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்தது. வர்த்தக ஒப்பந்தத்தை முடிவு செய்வதில் முக்கிய தடைகளில் ஒன்று ஐக்கிய இராச்சியத்தின் கார்பன் வரியாகும். ஐக்கிய இராச்சியத்தின் வரைவு கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை (CBAM) சட்டம், ஜனவரி 1, 2027 முதல் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு இந்த வரி பொருந்தும் என்று கூறுகிறது. மேலும், CBAM பொருட்களை அலுமினியம், சிமெண்ட், உரங்கள், ஹைட்ரஜன், இரும்பு மற்றும் எஃகு என வரையறுக்கிறது. இவை அதிக கார்பன் உமிழ்வுகளுடன் தொடர்புடைய துறைகளாகும்.


ஐக்கிய இராச்சியம் தனது CBAM-ன் கீழ் எந்த சலுகைகளையும் வழங்க தயாராக இல்லாததால், இந்தியா ஒரு "சமநிலை பொறிமுறையை" (rebalancing mechanism) பரிந்துரைத்துள்ளது. இது இந்த ஒழுங்குமுறை காரணமாக இந்திய தொழிலுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு ஐக்கிய இராச்சியம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை கோருகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. "சமநிலை பொறிமுறை” கட்டுரை இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை உரைகளின் “பொது விதிவிலக்குகள்” அத்தியாயத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தியா தனது இழப்புகளுக்கு இழப்பீடு கோர உதவும், மேலும், உலக வர்த்தக அமைப்பில்  (World Trade Organisation (WTO)) இந்தியாவுக்கு எதிராக ஐக்கிய இராச்சியம் ஒரு சர்ச்சையை எழுப்பாது என்பதை உறுதிசெய்யும்" என்று ஒரு அரசு அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.


2. தீர்வைகள் மற்றும் வர்த்தகத்தின் மீதான பொது ஒப்பந்தம் (General Agreement on Tariffs and Trade (GATT)) போன்ற சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களில் "பொது விதிவிலக்குகள்" என்று ஒரு பிரிவு உள்ளது. உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organization (WTO)) கூற்றுப்படி, பொது சுகாதாரம் அல்லது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது போன்ற நல்ல காரணங்கள் இருந்தால், நாடுகள் பொதுவாக வர்த்தக விதிகளை மீறும் நடவடிக்கைகளை எடுக்க இது அனுமதிக்கிறன.


கார்பன் வரி - கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை (Carbon Border Adjustment Mechanism (CBAM))


3. உலக வங்கியின் கூற்றுப்படி, "கார்பன் வரி பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் மீது அல்லது  புதைபடிவ எரிபொருட்களின் கார்பன் உள்ளடக்கத்தின் மீது வரி விகிதத்தை வரையறுப்பதன் மூலம் கார்பனுக்கு நேரடியாக விலையை நிர்ணயிக்கிறது". இது ஒரு வகையான கார்பன் விலையிடல் (carbon pricing) ஆகும் மற்றும் மற்றொரு வகையான கார்பன் விலையிடல் உமிழ்வு வர்த்தக அமைப்புகள் (emissions trading systems (ETS)) ஆகும். கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை என்பது கார்பன் விலையிடல் அமைப்பின் ஒரு வடிவமாகும்.


4. கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை அல்லது கார்பன் வரி முதன்முதலில் 2021ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது உற்பத்தி செயல்முறையில் அவற்றின் கார்பன் உமிழ்வு தடம் அடிப்படையில் பிற நாடுகளிலிருந்து வரும் சில பொருட்களுக்கு வரி விதிக்கிறது. உதாரணமாக, ஐரோப்பா அனுமதிக்கும் அளவை விட அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும் முறையைப் பயன்படுத்தி வேறொரு நாட்டில் எஃகு தயாரிக்கப்பட்டால், ஐரோப்பா அந்த இறக்குமதி செய்யப்பட்ட எஃகுக்கு வரி விதிக்கும்.


5. கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை (CBAM) என்பது ஐரோப்பாவில் உள்ள தொழில்கள் உயர் சுற்றுச்சூழல் தரநிலைகளைத் தொடர்ந்து பராமரிக்கும் அதே வேளையில் போட்டித்தன்மையுடன் இருக்க அனுமதிக்கிறது. இது இந்தத் தொழில்கள் தங்கள் உற்பத்தியை குறைந்த கடுமையான உமிழ்வு விதிமுறைகள் காரணமாக உற்பத்தி மலிவாக இருக்கும் நாடுகளுக்கு மாற்றுவதைத் தடுக்கிறது. இந்த சூழ்நிலை கார்பன் கசிவு (carbon leakage) என்று விவரிக்கப்படுகிறது. இந்தச் செயல்பாட்டில், உலகளாவிய உமிழ்வைக் குறைப்பதற்கு பங்களிக்க இது நம்புகிறது.


6. இருப்பினும், இது சீனா மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் ஏற்றுமதி போட்டித்தன்மையைப் பாதிக்கிறது. வளர்ந்த நாடுகளிலிருந்து வித்தியாசமாக நடத்தப்பட அனுமதிக்கும் உலகளாவிய காலநிலை கட்டமைப்பில் பொதிந்துள்ள "வேறுபாட்டை" கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை கவனிக்கவில்லை என்று வளரும் நாடுகள் சுட்டிக்காட்டுகின்றன.


7. குறிப்பிடத்தக்க வகையில், கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை ஜனவரி 2026ஆம் ஆண்டு நடைமுறைக்கு வர உள்ளது. ஏற்றுமதியாளர்கள் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் தரவை சமர்ப்பிக்க வேண்டிய மாற்றக் காலம் அக்டோபர் 1, 2023 அன்று தொடங்கியது. இந்தியா அதன் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் 15 சதவீதத்திற்கும் அதிகமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்வதால் இது குறிப்பிடத்தக்கது. 2022-23ஆம் ஆண்டில், இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு $75 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது.


8. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பல சூழல்களில், கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை  அல்லது கார்பன் வரியை "நியாயமற்ற" நடவடிக்கை என்றும், பலதரப்பு காலநிலை பேச்சுவார்த்தைகளின் "பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள்" (common but differentiated responsibilities (CBDR)) விதியை மீறுவதாகவும் கூறியுள்ளனர். 


பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள் (Common But Differentiated Responsibilities (CBDR))


காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டால் (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) நிறுவப்பட்ட இந்தக் கொள்கை, அனைத்து நாடுகளும் காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொண்டாலும், அவற்றின் கடமைகள் அவற்றின் திறன்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறுபடுகின்றன என்ற உண்மையை அங்கீகரிக்கிறது.


இந்தியாவின் கார்பன் கடன் வர்த்தகத் திட்டம் (India’s Carbon Credit Trading Scheme (CCTS))


1. வரைவு ஐக்கிய இராச்சியம் கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை சட்டம் உமிழ்வுகள் எவ்வாறு கணக்கிடப்படும் மற்றும் ஐக்கிய இராச்சியம் உமிழ்வு வர்த்தக திட்டத்துடன் ஐக்கிய இராச்சியம் உமிழ்வு வர்த்தகத் திட்டம் தொடர்புடைய உள்நாட்டு துறை விலையின் அடிப்படையில் CBAM விகிதம் எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பதையும் வரையறுக்கிறது. இந்தியாவில், கார்பன் வரவு திட்டம் முழுமையான உமிழ்வுகளை கையாளும் மேற்கத்திய நாடுகளின் அமைப்புக்கு எதிராக ஒரு வளரும் நாட்டின் மாதிரிக்கு ஏற்ப செயல்படுத்தப்படுகிறது.


2. 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கார்பன் வரவு வர்த்தகத் திட்டம், கார்பன் கடன்கள் வர்த்தகத்திற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கும், ஆற்றல்-தீவிர தொழில்களில் உமிழ்வுகளைக் குறைப்பதை எளிதாக்குவதற்கும், 2015ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் காலநிலை உறுதிப்பாடுகளை ஆதரிப்பதற்கும் உருவாக்கப்பட்டது.


3. கார்பன் வரவு வர்த்தகத் திட்டம் (2023) இன்னும் செயல்படவில்லை. அதைத் தொடங்க, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஏப்ரல் 16, 2025 அன்று வரைவு விதிகளை வெளியிட்டது. இந்த விதிகள் திட்டத்தைக் கண்காணித்து செயல்படுத்த ஒரு அமைப்பை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


4. கடந்த ஆண்டு டிசம்பரில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், பாராளுமன்ற கேள்விக்கு பதிலளிக்கையில், CCTS இரண்டு பொறிமுறைகளைப் பின்பற்றுகிறது என்று தெரிவித்தது: ஒரு இணக்க பொறிமுறை (compliance mechanism) மற்றும் ஒரு ஈடுசெய்தல் பொறிமுறை (offset mechanism). "இணக்க பொறிமுறையில், நிர்ணயிக்கப்பட்ட GHG உமிழ்வு தீவிர குறைப்பை பின்பற்றும் கடமைப்பட்ட நிறுவனங்கள் (obligated entities) கார்பன் வரவு சான்றிதழ்களை (Carbon Credit Certificates) வழங்குவதற்கு தகுதி பெறும். ஈடுசெய்தல் பொறிமுறையில், கடமைப்படாத நிறுவனங்கள் (non-obligated entities) கார்பன் வரவு சான்றிதழ்களை வழங்குவதற்காக பசுமை இல்ல வாயு உமிழ்வு குறைப்பு அல்லது அகற்றுதல் அல்லது தவிர்ப்பதற்கான தங்கள் திட்டங்களைப் பதிவு செய்யலாம்.


Original article:
Share:

ஒன்றிய புலனாய்வுப் பிரிவின் (CBI) இயக்குநர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• பிரதமர் அலுவலகத்தில் கூடிய மூன்று உறுப்பினர்கள் அடங்கிய தேர்வுக் குழு, சில மூத்த இந்திய காவல் அதிகாரிகளின் பெயர்கள் குறித்து விவாதித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து புலனாய்வுத் துறையின் இயக்குநர் சூட்டின் பதவிக் காலத்தை ஒரு வருடம் நீட்டிக்க உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டனர்.


• புலனாய்வுத் துறையின் இயக்குநர் சூட்டின் இரண்டு வருட நிலையான பதவிக்காலம் மே 25 அன்று முடிவடைவதற்கு முன்னதாக இந்த விவாதங்கள் நடைபெற்றன.


• 1986-ம் ஆண்டு பிரிவை (batch) சேர்ந்த இந்திய காவல் அதிகாரியான சூட், மே 25, 2023 அன்று புலனாய்வுத் துறையின் இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு மாநில காவல்துறை இயக்குநராகப் பணியாற்றினார். பெல்லாரி மற்றும் ராய்ச்சூரில் காவல் கண்காணிப்பாளராகவும், பெங்களூரு நகரத்தில் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையராகவும் மைசூர் மற்றும் பெங்களூரு இரண்டிலும் காவல் ஆணையராகவும், கூடுதல் காவல்துறை இயக்குநராகவும் (Additional Director General of Police (ADGP)), முதன்மைச் செயலாளர் (உள்துறை); காவல் இயக்குநர் (உள் பாதுகாப்பு); மற்றும் காவல் இயக்குனர் (குற்றப் புலனாய்வுத் துறை) போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். மொரிஷியஸ் அரசாங்கத்தின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.


உங்களுக்குத் தெரியுமா?:


• டெல்லி சிறப்பு காவல்துறை நிறுவன சட்டத்தின் (Delhi Special Police Establishment Act) விதிகளின்படி, ஒன்றிய புலனாய்வு பிரிவின் இயக்குநராகப் இரண்டு ஆண்டுகள் நிலையான பதவிக்காலத்திற்கு பிரதமர், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுகிறார். இந்த செயல்முறை வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்கும், அரசியல் செல்வாக்கிலிருந்து அமைப்பை பாதுகாப்பதை நோக்கமாக உள்ளது.


• ஒன்றிய புலனாய்வு பிரிவு (Central Bureau of Investigation (CBI)), இந்தியாவின் முன்னணி புலனாய்வு அமைப்பாகும். இவை ஒன்றிய அரசு, மாநில அரசுகள் அல்லது நீதிமன்றங்களால் பரிந்துரைக்கப்படும் வழக்குகளை விசாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


• ஒன்றிய புலனாய்வு பிரிவு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் பிரதமர், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். இந்த நியமன செயல்முறை உச்ச நீதிமன்றத்தின் வினீத் நாராயண் தீர்ப்பின் (Vineet Narain judgement, 1997) மூலம் நிறுவப்பட்டது. மேலும், டெல்லி சிறப்பு காவல்துறை நிறுவன சட்டம் (The Delhi Special Police Establishment (DSPE) Act, 1946)) லோக்பால் மற்றும் லோகாயுக்தாக்கள் சட்டம், 2013 (The Lokpal and Lokayuktas Act, 2013) மூலம் மாற்றங்கள் செய்யப்பட்டன.


Original article:
Share:

உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

 இந்தியாவின் தேசிய நீர்வழிகளில் மொத்தம் 100 படகுகள் படிப்படியாக பயன்பாட்டுக்கு வரும். 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியன் டன்களுக்கும் அதிகமான சரக்குகளை நகர்த்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையமும் Rhenus Logistics நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.


முக்கிய தேசிய நீர்வழிகள் வழியாக சரக்குகளை கொண்டு செல்வதற்கான சரக்கு சேவைகளை தொடங்கும் முயற்சியில், இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் (IInland Waterways Authority of India (IWAI)) செவ்வாயன்று (மே 6, 2025) உலகளாவிய ஏற்றுமதி இறக்குமதி நிறுவனமான Rhenus Logistics India Private Limited உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.


புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, Rhenus Logistics நிறுவனம் தேசிய நீர்வழிப்பாதைகளில் 100 படகுகளை படிப்படியாக அறிமுகப்படுத்தும் அதே வேளையில், 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் டன்களுக்கும் அதிகமான சரக்குகளை நகர்த்துவதை இலக்காகக் கொண்டு முதல் கட்டமாக 20 படகுகள் மற்றும் 6 தள்ளும் படகுகள்பயன்படுத்தப்பட உள்ளன.


"உள்நாட்டு நீர்வழிகள் பசுமையான, செலவு குறைந்த மற்றும் திறமையான வணிக வலையமைப்பை உருவாக்க ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகின்றன" என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்ப்நந்தா சோனோவால் நிகழ்ச்சியில் கூறினார்.


உள்நாட்டு நீர்வழிகள் வழியாக சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க ‘ஜல்வஹக்’ (‘Jalvahak’) திட்டத்தை சோனோவால் வெளியிட்டார். கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் பராக் நதிகள் மற்றும் இந்தோ-பங்களாதேஷ் நெறிமுறை வழித்தடத்தில் ரீனஸ் நிறுவனம் செயல்படும். வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா முழுவதும் சரக்குகளை மொத்தமாக கொண்டு செல்லும் (தரப்படுத்தப்படாத, தனிப்பட்ட அலகுகள்) மற்றும் தேசிய நீர்வழிகளுக்கு படிப்படியாக விரிவாக்கம் செய்யும்.


ஐரோப்பிய உள்நாட்டு கப்பல் போக்குவரத்தில் ரெனஸின் அனுபவத்துடனும், 1,100க்கும் மேற்பட்ட படகுகளைக் கொண்ட அதன் பெரிய கடற்படையுடனும், இந்த கூட்டாண்மை இந்தியாவிற்கு சிறந்த சர்வதேச முறைகளைக் கொண்டுவர விரும்புகிறது. பெரிய மற்றும் சிறிய சரக்குகளை எடுத்துச் செல்ல, ஆழமற்ற நீர் பரப்பில் பயணிக்க கூடிய வடிவமைக்கப்பட்ட நகர்த்தும் படகுகள் எனப்படும் சிறப்பு படகுகளைப் பயன்படுத்துவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் செயல்படும் தேசிய நீர்வழிகளின் எண்ணிக்கை 2014-15ஆம் ஆண்டில் மூன்றில் இருந்து 2023-24ஆம் ஆண்டில் 24 ஆக உயர்ந்தது. 2024-25ஆம் ஆண்டில் 29 இலக்கை எட்டியது. 2014-15ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 30 மில்லியன் மெட்ரிக் டன்களாக (million metric tonnes per annum (MMTPA)) இருந்த சரக்கு இயக்கம் 2023-24ல் 133 MMTPA ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் 779 MMTPA மேல் அதிகரித்துள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தற்சமயம், 14,500 கி.மீ நீளமுள்ள பயணிக்கக்கூடிய நீர்வழிகள் 111 தேசிய நீர்வழிப் பாதைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தத் துறையானது நாட்டின் பன்முக வணிக கட்டமைப்பில் மாற்றத்தக்க பங்கை வகிக்கத் தயாராக உள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Original article:
Share:

KSEB-யின் நீர்மின் திட்டங்கள் புதிய கவலைகளை எழுப்புகின்றன - டிக்கி ராஜ்வி

 கேரளாவின் நீண்டகால சர்ச்சைக்குரிய அதிரப்பில்லி நீர்மின் திட்டம் (Athirappilly hydroelectric project) மீண்டும் விவாதிக்கப்படுகிறது.


சுற்றுலா பிரபலமானது மற்றும் லாபகரமானது. ஆனால், கேரளாவில் இப்போது பெரிய கேள்வி என்னவென்றால், சர்ச்சைக்குரிய நீர் மின் திட்டத்தை ஊக்குவிக்க சுற்றுலா பயன்படுத்தப்பட வேண்டுமா என்பதுதான். இந்த திட்டம் பல ஆண்டுகளாக கடுமையான சந்தேகங்களையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


ஒரு வாரத்திற்கு முன்பு, மாநில அரசால் நடத்தப்படும் கேரள மாநில மின்சார வாரியம் (Kerala State Electricity Board (KSEB)) எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்டது. அதிரப்பள்ளி நீர்மின் திட்டத்தை சுற்றுலா மற்றும் மின் உற்பத்தி ஒருங்கிணைந்த திட்டமாக மாற்ற முடியுமா என்பதை ஆராய்வதாக அது கூறியது.


இந்த திட்டம் கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் மேற்கு நோக்கி பாயும் சாலக்குடி ஆற்றில் திட்டமிடப்பட்டுள்ளது. இது 1979ஆம் ஆண்டு முதன்முதலில் முன்மொழியப்பட்ட 163 மெகாவாட் (மெகாவாட்) நீர்மின் திட்டமாகும். பல ஆண்டுகளாக, இது மாநிலத்தில் கவனக்குறைவான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் சேதத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.


நீண்ட காலமாக ரேடாரில் இருந்து விலகி இருந்த பிறகு, இந்த திட்டம் மீண்டும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. ஏப்ரல் 24 தேதியிட்ட உத்தரவின் காரணமாக இது நடந்தது. KSEB இன் முழுநேர இயக்குநர்கள் "அதிரப்பள்ளி HEP-ஐ சுற்றுலா நட்பு திட்டமாக மறுவடிவமைக்கும்" யோசனையை அங்கீகரித்ததாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


அதிரப்பள்ளி நீர் மின் திட்டத்திற்கு 1998ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்திடமிருந்து சுற்றுச்சூழல் ஒப்புதல் கிடைத்தது. இருப்பினும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் காரணமாக அது முன்னேறவில்லை. சுற்றுச்சூழல் குழுக்கள் அதை கடுமையாக எதிர்த்தன. இது பல்லுயிர் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். இந்தத் திட்டத்தில் ஒரு அணை கட்டுவது அடங்கும். இது கரையோரக் காடுகளின் பெரிய பகுதிகளை அழிக்கக்கூடும். இது உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் அச்சுறுத்தும். கூடுதலாக, இந்தப் பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த கடார் இனத்தவர் இடம்பெயர்வார்கள்.


இந்தத் திட்டம் சாலக்குடி நதியை மாற்றும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வாதிடுகின்றனர். இது அழகிய அதிரப்பள்ளி மற்றும் வாழச்சல் நீர்வீழ்ச்சிகளையும் அழிக்கக்கூடும்.


எதிர்ப்புகள் காரணமாக, இந்தத் திட்டம் ஒருமித்த கருத்துடன் மட்டுமே முன்னேற முடியும் என்று மாநில அரசுகள் கூறியுள்ளன. இதன் விளைவாக, இந்தத் திட்டம் நீண்ட காலமாக தாமதமாகி வருகிறது. இறுதியில் அது ரத்து செய்யப்படும் என்று பலர் நம்பினர். இருப்பினும், கேரளாவில் மின்சாரத்தைக் கையாளும் கேரள மாநில மின்சார வாரியம் (KSEB), இந்தத் திட்டத்தை ஒருபோதும் முழுமையாகக் கைவிடவில்லை.


ஏப்ரல் 28 அன்று, KSEB ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிட்டது. சுற்றுலா வசதிகளுடன் நீர் மின் திட்டத்தினையும் உருவாக்க முடியுமா என்பதைப் பார்ப்பதற்கான அவர்களின் நோக்கத்தை அவர்கள் விளக்கினர். பொது விவாதத்திற்கான யோசனையையும் அவர்கள் முன்வைக்க விரும்பினர். இந்த அறிவிப்பு விரைவில் விமர்சனங்களைப் பெற்றது. KSEB இந்த திட்டத்தை சுற்றுலாத் திட்டமாக மறுபெயரிட முயற்சிப்பதாக மக்கள் கூறினர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் எதிர்வினைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தத் திட்டத்திற்கு அரசியல் ஆதரவு இல்லை என்பதை மாநில அரசாங்க வட்டாரங்கள் மறுத்தன.


ஆயினும்கூட, அதிரப்பள்ளி நீர் மின் திட்டம் மீண்டும் செய்திகளில் வந்துள்ளது. கேரளாவின் மின்துறை பெரிய மாற்றங்களைச் சந்தித்து வரும் நேரத்தில் இது வருகிறது.


மின் பற்றாக்குறை உள்ள மாநிலத்திற்கு பாரம்பரியமாக நீர் மின்சாரம் முக்கிய மின்சார ஆதாரமாக இருந்து வருகிறது. இருப்பினும், உள்நாட்டு உற்பத்தி மாநிலத்தின் மின்சாரத் தேவைகளில் சுமார் 30% மட்டுமே பூர்த்தி செய்துள்ளது. இதன் விளைவாக, கேரளா மத்திய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரம் மற்றும் பிற இடங்களிலிருந்து கொள்முதல் செய்வதை பெரிதும் நம்பியுள்ளது.


சமீபத்தில், கேரளா புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாட்டில், குறிப்பாக சூரிய சக்தியின் பயன்பாட்டில் அதிகரிப்பு கண்டுள்ளது. 2040ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை முழுமையாகச் சார்ந்து, 2050 ஆம் ஆண்டுக்குள் நடுநிலையாக கார்பன் (carbon neutral) மாறுவதை மாநிலம் நோக்கமாகக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில், கேரளா சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களிலிருந்து 3,000 மெகாவாட் மற்றும் நீர் மின் திட்டங்களிலிருந்து 1,500 மெகாவாட் சேர்க்க திட்டமிட்டுள்ளது. (நீர் மின் திட்டங்களில் அதிரப்பள்ளி திட்டம் சேர்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.)


இவை தவிர, கேரளா அழுத்தப்பட்ட (pumped) ஆற்றல் சேமிப்பு திட்டங்கள், பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் முயற்சிகளிலும் செயல்பட்டு வருகிறது.


குறிப்பாக புதிய, மலிவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய எரிசக்தி விருப்பங்கள் இருக்கும்போது பல ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு சூழ்நிலைகளில் திட்டமிடப்பட்ட அதிரப்பள்ளி நீர்மின் திட்டம் இன்று அர்த்தமுள்ளதாக இருக்கிறதா என்று மக்கள் இப்போது கேட்கிறார்கள்.

மேலும், கேரளா சமீபத்திய ஆண்டுகளில் பல இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில், குறிப்பாக உணர்திறன் வாய்ந்த பகுதிகளில், மேம்பாட்டுத் திட்டங்களை கவனமாகவும் முழுமையாகவும் மதிப்பாய்வு செய்ய வேண்டும். இந்தத் திட்டங்கள் அவற்றின் சுற்றுச்சூழல் பாதிப்பு, பாதுகாப்பு மற்றும் பொதுமக்களுக்கு நீண்டகால நன்மைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.


Original article:
Share:

டிஜிட்டல் செல்வாக்கின் பலம் மற்றும் அபாயங்கள் -கோபால் ஜெயின்

 தயாரிப்புகள் (Brands) நுகர்வோர் கல்வியில் முதலீடு செய்ய வேண்டும். அதே நேரத்தில், ஒழுங்குமுறை அதிகாரிகளும் மற்றும் அது சார்ந்த தளங்களும் தவறான தகவல்களுக்கு எதிராக கடுமையான வழிகாட்டுதல்களைச் செயல்படுத்த வேண்டும்.


டிஜிட்டல் இணைப்பு வளரும்போது, ​​தவறான தகவல் (misinformation) மற்றும் செல்வாக்கு நீக்கத்திற்கு (de-influencing) எதிராக இந்தியா கடுமையான போரை எதிர்கொள்கிறது. சமூக ஊடகங்கள் மக்கள் தொடர்பு கொள்ள உதவுகின்றன. ஆனால், அது சரிபார்க்கப்படாத உள்ளடக்கத்தையும் பரப்புகிறது. செல்வாக்கு செலுத்துபவர்கள் (influencer) வாங்குதல்களை ஊக்கப்படுத்தாத இடங்களில், கவனத்துடன் நுகர்வை ஊக்குவிக்கலாம். ஆனால், இவை பெரும்பாலும் பரபரப்பையும் (sensationalism) ஈடுபாட்டிற்காக கிளிக்பைட்டையும் நம்பியிருக்கிறது.


கிளிக் பைட் (Clickbait) என்பது இணையத்தில், ஒரு செய்தியைப் பின்தொடர மக்களை கவர்ந்திழுக்க உருவாக்கப்பட்ட ஒரு பரபரப்பான தலைப்பு அல்லது உள்ளடக்கம் ஆகும். 


அதேநேரத்தில், நிபுணர்களின் ஆலோசனை முக்கியமானது. ஆனால், டிஜிட்டல் தளங்கள் பெரும்பாலும் மக்கள் முதலில் பயன்படுத்தத் திரும்பும் முக்கிய இடமாகப் பார்க்கப்படுகிறது. இது தவறான தகவல்களை விரைவாகப் பரப்ப அனுமதிக்கிறது. இதைத் தடுக்க, கடுமையான விதிமுறைகள் தேவை.


உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum’s)  2024 உலகளாவிய  அறிக்கையில், தவறான தகவல் மற்றும் தவறான தகவல்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக இந்தியாவை அடையாளம் கண்டுள்ளனர். இது பெரும்பாலும் AI-உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தின் எழுச்சி மற்றும் சமூக ஊடக தளங்களின் செல்வாக்கால் இயக்கப்படுகிறது. நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் "ஒப்புதல்கள்" (Endorsement Know-hows) மற்றும் ASCI/SEBI வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், தவறான சுகாதார ஆலோசனைகள் (misleading health advice) மற்றும் எடை இழப்பு காணொளிகள் (weight loss reels)  போன்றவை உண்மையான ஆலோசனையை விளம்பரங்களுடன் கலக்கின்றன. செல்வாக்கு செலுத்துபவர்கள் பெரும்பாலும் அதிர்ச்சியூட்டும் தலைப்புச் செய்திகள், கவர்ச்சிகரமான சொற்றொடர்கள் மற்றும் ஓரளவு உண்மையான கூற்றுகளைப் பயன்படுத்தி அதிக பார்வைகளைப் பெறுகிறார்கள். இது தவறான தகவல்களை விரைவாகப் பரப்புகிறது.


சட்டப்பூர்வ நிலப்பரப்பு


அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a) பேச்சு சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இருப்பினும், பிரிவு 19(2) இன் கீழ் நியாயமான கட்டுப்பாடுகளால் இந்த உரிமை வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளில் அவதூறு, பொது ஒழுங்கு மற்றும் ஒழுக்கம் ஆகியவை அடங்கும். பேச்சு சுதந்திரம் தவறான அல்லது தீங்கு விளைவிக்கும் தகவல்களைப் பரப்புவதைப் பாதுகாக்காது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 (Consumer Protection Act), தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடை செய்கிறது. ஏமாற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கு செல்வாக்கு செலுத்துபவர்களையும் இது பொறுப்பாக்குகிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) (பிரிவு 66 & 67) மற்றும் இடைநிலை வழிகாட்டுதல்கள், 2021 இன் கீழ் உள்ள டிஜிட்டல் விதிமுறைகள், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைத் தண்டிக்கின்றன. கூடுதலாக, அவதூறு மற்றும் மின் வணிகச் சட்டங்கள் (e-commerce) ஒப்புதல்கள் துல்லியமாக இருப்பதை உறுதிசெய்து, தவறான செயல்களைத் தண்டிக்கின்றன.


இந்திய விளம்பர தரநிலைகள் கவுன்சில் (Advertising Standards Council of India (ASCI)) வழிகாட்டுதல்கள் சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை என்றாலும், அவை நெறிமுறை தரங்களை அமைக்கின்றன. செல்வாக்கு செலுத்துபவர்கள் அவர்களைப் பின்பற்றவில்லை என்றால், அவர்களை கருப்புப் பட்டியலில் சேர்த்து, பொதுதளத்தில் கண்டிக்க முடியும்.


கடுமையான அமலாக்கத்துடன், செல்வாக்கு செலுத்துபவர்கள் வெளிப்படையாகவும் நம்பகமானவர்களாகவும் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். டிஜிட்டல் உலகில் நெறிமுறை உள்ளடக்கத்தை உருவாக்குவது இப்போது எப்போதையும் விட முக்கியமானது.


ஒரு செல்வாக்கு செலுத்துபவர் தயாரிப்புகளை விமர்சிக்கும்போது அவர்களின் நோக்கம் முக்கியமானது. நேர்மையான மதிப்புரைகள் நுகர்வோருக்கு உதவுகின்றன. இருப்பினும், கிளிக்குகள் அல்லது ஆதரவு நிறுவனங்களுக்கு (sponsorships) எதிர்மறையை மிகைப்படுத்துவது ஒரு வணிக உத்தியாகும். இந்திய அவதூறு சட்டங்கள் தவறான உள்ளடக்கத்திலிருந்து பாதுகாக்கின்றன. மேலும், நம்பகத்தன்மையின் அவசியத்தைக் காட்டுகின்றன.


செல்வாக்கு செலுத்துபவர்கள் பல துறைகளில் பணிபுரிகிறார்கள். ஆனால், சுகாதாரம் தொடர்பான உள்ளடக்கம் மிகவும் முக்கியமானது. ஆனால், சுகாதாரத் துறையில் வலுவான நடவடிக்கைகள் தேவை. ஆலோசனை நம்பகமானதாகவும் பொறுப்பாகவும் இருப்பதை இது உறுதி செய்கிறது.


செல்வாக்கு செலுத்துபவர் உள்ளடக்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட தரவு, தெளிவற்ற மொழி போன்றவை தவறாக வழிநடத்தும். தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட செய்திகள் மற்றும் உணர்ச்சிபூர்வமான முறையீடுகள் தவறான கதைகளை உருவாக்குகின்றன. இந்த இடுகைகள் (posts) துல்லியமாக இருப்பதை விட கவனத்தை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன.


"புற்றுநோயைத் தவிர்ப்பது எப்படி" அல்லது "கல்லீரல் நச்சு நீக்க நீர்" (“make liver detox water.”) போன்ற கவர்ச்சிகரமான தலைப்புச் செய்திகளை நாம் அனைவரும் படித்திருக்கிறோம். இந்த போக்குகள் செல்வாக்கு செலுத்துபவர்கள் மக்கள் பேசுவதை எவ்வாறு வடிவமைக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. சரிபார்க்கப்பட்ட உண்மைகளை விட வைரல் பதிவுகள் வேகமாகப் பரவுகின்றன, எனவே கவனமாக சிந்திப்பது, ஆதாரங்களைச் சரிபார்ப்பது மற்றும் நிபுணர்களைக் கேட்பது முக்கியம்.


பரிணாம வளர்ச்சி ஒழுங்குமுறை


சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்களுக்கான விதிகள் கடுமையாகி வருகின்றன. குறிப்பாக, அவர்கள் இடுகையிடும் விஷயங்களுக்கு அவர்களை மிகவும் பொறுப்பானவர்களாக மாற்றுவதற்காக. நிதி பற்றிப் பேசும் செல்வாக்கு செலுத்துபவர்களான "ஃபின்ஃப்ளூயன்சர்களுக்கு" (finfluencers) செபி (இந்தியாவில் நிதி ஒழுங்குமுறை ஆணையம்) புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிகள் இப்போது அவர்களின் கல்வி வீடியோக்களில் நேரடி பங்குச் சந்தை தரவைக் காண்பிப்பதைத் தடுக்கின்றன. தகுதியற்றவர்கள் மற்றவர்களின் நிதி முடிவுகளை பாதிக்கக்கூடிய ஆலோசனைகளை வழங்குவதைத் தடுப்பதே இதன் குறிக்கோள்.


சட்டப்பூர்வ ஆய்வு இப்போது தவறான விளம்பரங்களுக்கு பொருந்தும். இந்திய மருத்துவ சங்கம் vs இந்திய ஒன்றியம் வழக்கில் (Indian Medical Association vs Union of India), தவறான ஒப்புதல்களுக்கு செல்வாக்கு செலுத்துபவர்களை நீதிமன்றம் பொறுப்பாக்கியது. குறிப்பாக சுகாதார உள்ளடக்கத்தில், கூற்றுக்களை சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தை டெல்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தியது. நிபுணர்கள் அல்லாதவர்கள் ஒழுங்குபடுத்தப்படாத தளங்களில் பிரபலமடைந்து வருவதால், சுகாதார ஆலோசனை தகுதிவாய்ந்த நிபுணர்களிடமிருந்து மட்டுமே வர வேண்டும். தவறான தகவல்களைத் தடுக்க வலுவான நெறிமுறை வழிகாட்டுதல்கள் மற்றும் சட்ட மேற்பார்வை தேவை.


ஒரு முக்கிய தீர்ப்பில், டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு செல்வாக்கு செலுத்துபவர் ஒரு தயாரிப்பின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதைத் தடுத்தது. பிரிவு 19(1)(a) இன் கீழ் பேச்சு சுதந்திரம் வரம்பற்றது அல்ல என்பதை அது எடுத்துக்காட்டியது. அவதூறுகளைத் தடுக்க நீதிமன்றம் கட்டுப்பாடுகளை உறுதி செய்தது. சுகாதார உள்ளடக்கம் தங்கள் சான்றுகளை வெளிப்படுத்தும் தகுதிவாய்ந்த நிபுணர்களால் ஆதரிக்கப்பட வேண்டும் என்றும் அது தீர்ப்பளித்தது.


செல்வாக்கு செலுத்துபவர்கள் நம்பிக்கையைப் பெறுகிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கையை தனிப்பட்ட ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது அவர்களின் நம்பகத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும். நம்பிக்கை குறையும் போது, ​​செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்கள் நம்பகத்தன்மையை இழக்கும் அபாயம் உள்ளது.


பொது சுகாதாரத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கான பதிவு அமைப்பு அல்லது தரவுத்தளத்தை உருவாக்குவது முக்கியம். இந்த அமைப்பு தொடர்ச்சியான கண்காணிப்பை அனுமதிக்கும் மற்றும் அவர்கள் உருவாக்கும் உள்ளடக்கத்திற்கான பொறுப்புணர்வை உறுதி செய்யும். இது தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும் உதவும். நுகர்வோர் சிறந்த தகவலறிந்த முடிவுகளை எடுக்க முடியும். 


பொது சுகாதாரத் தகவல்தொடர்பு நெறிமுறை கவலைகளைக் கொண்டுள்ளது. பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான சட்ட நடவடிக்கைகளுடன் வலுவான நெறிமுறை நடைமுறைகளும் செயல்பட வேண்டும்.


தயாரிப்பாளர்கள் நுகர்வோருக்கு கல்வி கற்பிப்பதில் முதலீடு செய்ய வேண்டும். தவறான தகவல்களுக்கு எதிராக ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் தளங்கள் கடுமையான விதிகளை அமல்படுத்த வேண்டும். நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்க, செல்வாக்கு செலுத்துபவர்களை அவர்களின் உள்ளடக்கம் மற்றும் விளம்பர நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க வைப்பது அவசியம்.


கோபால் ஜெயின் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்.


Original article:
Share: