
அப்பர் சியாங் திட்டம் என்பது அருணாச்சல பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் உள்ள சியாங் நதியில் கட்ட திட்டமிடப்பட்ட 11,000 மெகாவாட் நீர்மின் திட்டமாகும். சியாங் ஆறு திபெத்தில் கைலாஷ் மலைக்கு அருகில் சாங்போ என்ற இடத்தில் உற்பத்தியாகி, கிழக்கு நோக்கி 1,000 கி.மீக்கு மேல் பாய்ந்து, நம்சா பார்வா சிகரத்தைச் சுற்றி வந்து, அருணாச்சலப் பிரதேசத்தில் சியாங் பகுதியில் நுழைகிறது. அசாமில் அது பிரம்மபுத்திரா நதி என அழைக்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டில், அரசாங்கம் 5,500 மெகாவாட் சியாங் மேல் நிலை-I மற்றும் 3,750 மெகாவாட் சியாங் மேல் நிலை-II திட்டங்களை பெரிய அப்பர் சியாங் (Siang Upper Stage-I) திட்டத்தில் இணைக்க திட்டமிட்டது. இந்த புதிய திட்டமானது, தேசிய நீர்மின்சாரக் கழகத்தால் (National Hydroelectric Power Corporation (NHPC)) நிர்மாணிக்கப்பட உள்ளது, இது 300 மீட்டர் உயரமான அணையை உள்ளடக்கியது, இது கட்டிமுடிக்கப்பட்டாள் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய அணையாக இருக்கும்.
மத்திய மின்சார ஆணையத்தின் நவம்பர் 2022 அறிக்கையின்படி, சியாங் நதிப் படுகையில் மொத்தம் 18,326 மெகாவாட் திறன் கொண்ட 29 நீர்மின் திட்டங்கள் உள்ளன. முன்மொழியப்பட்ட அப்பர் சியாங் திட்டம் இந்த மொத்த திறனில் சுமார் 60% நிறுவப்பட்ட திறனைக் கொண்டிருக்கும்.
இந்த அணையானது அதன் நீர்மின் ஆற்றலுக்கு மட்டுமல்ல, சாங்போவில் சீனாவின் நீர்மின் திட்டங்களை எதிர்கொள்ளும் நோக்கில் இராஜதந்திர ரீதியாகவும் முக்கியமானது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைக்கு அருகில் உள்ள திபெத்தின் மெடாக் கவுண்டியில் 60,000 மெகாவாட் 'சூப்பர் டேம்' (super dam) கட்டுவதற்கான திட்டங்களை அதிகாரிகள் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இந்த அணையின் கொள்ளளவு உலகின் மிகப்பெரிய நீர்மின் நிலையமான சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள மூன்று கோர்ஜஸ் அணையை (Three Gorges Dam) விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். இந்த அணையானது தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, சீனாவின் வடக்குப் பகுதிகளுக்கு தண்ணீரைத் திருப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதேபோல் அப்பர் சியாங் திட்டம் சாத்தியமான குறைக்கப்பட்ட ஓட்ட விளைவுகளைத் தணிக்கும் நீர்த்தேக்கமாக செயல்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல், சமூக அக்கறைகள்
மூன்று அணை எதிர்ப்பு அமைப்புகள் (Three anti-dam organizations) - சியாங் பழங்குடி விவசாயிகள் மன்றம் (Siang Indigenous Farmers Forum (SIFF)), திபாங் எதிர்ப்பு மற்றும் வடகிழக்கு மனித உரிமைகள் (Dibang Resistance, and North East Human Rights) - கட்டாருக்கு ஒரு குறிப்பாணை வழங்க திட்டமிட்டுள்ளன. இது சியாங் மெகா அணை திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் பற்றிய கவலைகளைக் கோடிட்டுக் காட்டுகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்கனவே பல அணைகள் உள்ளதாகவும், அதன் ஆறுகள் பல ஆண்டுகளாக நீர்மின் திட்டங்களுக்கு பயன்படுவதாகும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட சியாங் மெகா அணை, நமது முன்னோர்களின் தாயகத்தில் உள்ள நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும், வனவிலங்குகளின் வாழ்விடங்களுக்கும், பல்லுயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.
மேல் சியாங் மாவட்டத் தலைமையகமான யிங்கியோங் உட்பட, ஆதி பழங்குடியினரின் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்களை இடம்பெயர்க்கும் திட்டத்தால் ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.
"பல நூற்றாண்டுகளாக, சியாங்கின் ஆறுகள் மற்றும் அனைத்து பழங்குடி நிலங்களும் நமது பாரம்பரியமாக. நமது வாழ்வாதாரம், கலாச்சார நடைமுறைகள் மற்றும் உயிர்வாழ்வது இந்த நதிகளை சார்ந்துள்ளது. முன்மொழியப்பட்ட புதிய அணை உள்ளூர் மக்களின் வாழ்க்கை முறையை பாதிக்கிறது," என்று குறிப்பிடுகிறார்கள்.
கெட்டே கிராமத்தைச் சேர்ந்த சியாங் பழங்குடி விவசாயிகள் மன்ற (Siang Indigenous Farmers Forum (SIFF)) செயல்பாட்டாளரான கெகாங் ஜொங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு பேட்டியளிக்கையில். சியாங் பள்ளத்தாக்கை ஒட்டிய கிராமங்களில் இத்திட்டத்தின் தாக்கம் குறித்து அவர் கவலை தெரிவித்தார். "எல்லா கிராமங்களும் நீரில் மூழ்கினால், நாங்கள் எங்கு செல்வது? பனிப்பொழிவு பகுதிகளுக்கு மேல்நோக்கி செல்ல முடியாது, நாங்கள் பிழைக்க வேண்டும், ஆனால் விவசாயமோ தோட்டமோ இருக்காது," என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அருணாச்சலப் பிரதேசத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான தனது பிரச்சாரத்தின் போது, முதல்வர் பெமா காண்டு இந்தத் திட்டம் குறித்த மக்களின் கவலைகளை எடுத்துரைத்தார். மக்களின் ஒப்புதலுடன் மட்டுமே இந்த திட்டம் தொடரும் என்று உறுதியளித்தார்.
புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் எதிர்ப்பு
மக்களின் ஒப்புதலுடன் மட்டுமே இந்த திட்டம் தொடரும் என்று முதல்வர் பெமா காண்டு பொதுமக்களுக்கு உறுதியளித்தார். ஆனால், அதிகாரிகள் தங்கள் கட்டுமானத்திற்கு முந்தைய நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர். இது எதிர்ப்பவர்கள் மத்தியில் மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நீர்மின் திட்டத்தின் (National Hydroelectric Power Corporation (NHPC)) மூத்த அதிகாரிகள் ஜூன் 25 அன்று இட்டாநகரில் அருணாச்சலப் பிரதேசத்தின் துணை முதல்வர் சௌனா மெய்ன் சந்தித்தனர். அவர்கள் சியாங் வடிநிலத் திட்டங்களை முன்கூட்டியே தொடங்குவது குறித்து விவாதித்தனர்.
மேல் சியாங் மாவட்ட நிர்வாகம் இந்த ஆண்டு பல கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டங்கள் அப்பகுதியில் முன் சாத்தியக்கூறு கணக்கெடுப்புக்கு அடித்தளமிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. கணக்கெடுப்பு என்பது ஒரு திட்டத்தின் சாத்தியமான செலவு மற்றும் கொடுக்கப்பட்ட பகுதியில் அதன் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கான ஒரு ஆரம்ப பகுப்பாய்வு ஆகும். தேசிய நீர்மின் திட்டத்தின் (NHPC) சாத்தியக்கூறு ஆய்வுக்காக சியாங் - உகெங் (Ugeng), டைட் டைம் (Dite Dime) மற்றும் பரோங் (Parong) ஆகிய மூன்று தளங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், மக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேசிய நலன் மற்றும் பகுதி மேம்பாட்டிற்காக கணக்கெடுப்பு பணிகளை அவர்கள் அனுமதிக்க வேண்டும். கணக்கெடுப்பு பணி விரைவில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர், உள்ளூர் எம்.எல்.ஏ., மற்றும் அணையால் பாதிக்கப்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் பொதுமக்களிடம் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பிரச்சாரம் திட்டத்திற்கான ஆதரவை பறை சாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. NHPC நிறுவனம் ரூ.325 கோடி நிறுவன-சமூக பொறுப்புணர்வு (CSR) நிதியை வழங்க அனுமதி அளித்துள்ளது. இந்தத் தொகுப்பு வாழ்வாதாரத் திட்டங்களுக்கும், சுகாதாரம், கல்வி மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும். இந்த நடவடிக்கைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தற்போது கையெழுத்திடப்பட்டு வருகின்றன.
"இது ஒரு முக்கிய தேசிய நலன் சார்ந்த திட்டமாகும், இதை ஒரு பகுதி மக்கள் எதிர்க்கின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பொது விழிப்புணர்வு நடவடிக்கைகளை நடத்துகிறோம். பல்வேறு நடவடிக்கைகள் நடைபெறுவதற்க்கு முன் சாத்தியக்கூறுகளுக்கான கணக்கெடுப்புகளை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக. மேல் சியாங் டிசி ஹேகே லைலாங் கூறினார்.
எவ்வாறாயினும், சமூக ஆர்வலர்கள் தேசிய நலன்களின் அடிப்படையில் திட்டத்தை வடிவமைப்பதில் எச்சரிக்கையாக உள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டு வன (பாதுகாப்பு) திருத்தச் சட்டத்தின் விதியால் (Forest (Conservation) Amendment Act) அவர்கள் கவலைப்படுகிறார்கள். இந்திய எல்லையில் இருந்து 100 கி.மீ.க்குள் இராஜதந்திர திட்டங்களுக்காக வன நிலத்தை மாற்றுவதற்கு இந்தச் சட்டம் விலக்கு அளிக்கிறது.
அப்பர் சியாங் அணையானது (Upper Siang dam) தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக சித்தரிக்கப்படுவதாக ஆர்வலர் பானு தடாக் கூறினார், இது பிராந்தியத்தின் அணை எதிர்ப்பின் வரலாற்றின் காரணமாக சிக்கலாக உள்ளது.
Original article: