பெரும்பாலான வேலைவாய்ப்புகள் விவசாயம் மற்றும் முறைசாரா துறையில் (informal sector)' சுய வேலைவாய்ப்பு' உருவாக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில், 2021-ஆம் ஆண்டு மற்றும் 2024-ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியா 7.8 கோடி வேலைகளை உருவாக்கியதாகவும், ஆண்டுக்கு சராசரியாக 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாகவும் ஒன்றிய அரசு கூறியது. இவை KLEMS (K-capital (மூலதனம்), L-labor(உழைப்பு) , E-energy (ஆற்றல்), M-materials(பொருட்கள்), and S-purchased services(வாங்கிய சேவைகள்)) தரவுத்தளம், பணியாளர் எதிர்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation (EPFO)) மற்றும் காலமுறை தொழிலாளர் நலன் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) ஆகியவற்றின்தரவுத்தள தரவுகளால் பெறப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதங்கள் 2021-ஆம் ஆண்டு 5.1 சதவிகிதம், 2022-ஆம் ஆண்டு 3.3 சதவிகிதம், 2023-ஆம் ஆண்டு 3.2 சதவிகிதம் மற்றும் 2024-ஆம் ஆண்டு 6.0 சதவிகிதம். இருப்பினும், உருவாக்கப்படும் வேலைகளின் தரம் விரும்பத்தக்கதாக இருக்கும் என்பதை காட்டுகிறது.
முறைசாரா துறையில் விவசாயம் மற்றும் சுய வேலைவாய்ப்பில் பெரும்பாலான வேலை வளர்ச்சி ஏற்பட்டதாக காலமுறை தொழிலாளர் நலன் கணக்கெடுப்பு (PLFS) தரவு காட்டுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% க்கும் குறைவான பங்களிப்பை வழங்கும் விவசாயம், சுமார் 45% தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறது.
2009-ஆம் ஆண்டு முதல் 2012 -ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் விவசாயத் தொழிலாளர்களின் வீழ்ச்சி ஏற்பட்டது. கொரோனாவுக்குப் பிறகு, பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் விவசாயத்திற்குத் திரும்பினர். இது வேலையின்மைக்கு வழிவகுத்தது. நகர்ப்புறங்களுக்கு குடியேறுபவர்கள் இப்போது குறைந்த வருமானம் கொண்ட நடவடிக்கைகளை நம்பியுள்ளனர். இது மோசமான வேலை தரத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவின் தொழிலாளர் சக்தியில் பெரும்பான்மையானவர்கள் (57%) சுயதொழில் செய்பவர்கள். இது 2020-21-ஆம் ஆண்டு முதல் அதிகரித்துள்ளது. ஆண் சுயதொழில் செய்பவர்கள் மாதத்திற்கு சராசரியாக ₹15,763 வருவாய் ஈட்டுகிறார்கள். பெண்கள் ₹5,637 வருவாய் ஈட்டுகிறார்கள். கூடுதலாக, சுயதொழில் செய்யும் பெண்களில் 37% ஊதியம் பெறாத குடும்ப உழைப்பில் வேலை செய்கிறார்கள்.
ஜூலை 2022-ஆம் ஆண்டு மற்றும் ஜூன் 2023-ஆம் ஆண்டுக்கு இடையில், சுயதொழில் செய்யும் தொழிலாளர்களின் சராசரி வருவாய் உண்மையான அடிப்படையில் 3% குறைந்துள்ளது. பெரும்பாலும் குறைந்த ஊதியம் பெறும் பெண் தொழிலாளர்களின் பங்கு அதிகரித்து வருகிறது.
தற்காலிக தொழிலாளர்கள் தொழிலாளர் சக்தியில் 23% உள்ளனர். இவர்கள் ஒப்பந்தங்கள் இல்லாமல் தினமும் வேலை செய்கிறார்கள். ஜூன் 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆண் சாதாரண தொழிலாளர்கள் தினமும் ₹432 சம்பாதிக்கிறார்கள். பெண் சாதாரண தொழிலாளர்கள் ₹291 சம்பாதிக்கிறார்கள். ஜூலை 2022-ஆம் ஆண்டு முதல் ஜூன் 2023-ஆம் ஆண்டு வரை, அவர்களின் வருவாய் உண்மையான அடிப்படையில் 3% குறைந்துள்ளது.
தற்காலிக தொழிலாளர்களுக்கு வேலைப் பாதுகாப்பு இல்லை. பெரும்பாலான தொழிலாளர் சட்டங்களின் கீழ் வருவதில்லை மற்றும் நிறுவன சமூக பாதுகாப்புக்கான அணுகல் இல்லை.
நிரந்தர தொழிலாளர்கள் தொழிலாளர் சக்தியில் வெறும் 21% மட்டுமே. இவர்களில், 62% பேருக்கு எழுத்துப்பூர்வ வேலை ஒப்பந்தம் இல்லை (அவர்கள் EPF மற்றும் ESI இன் கீழ் இருந்தாலும்), 51% பேர் ஊதிய விடுப்பு பெறவில்லை. 60% பேருக்கு சமூக பாதுகாப்பு இல்லை. ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தியில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பங்கு 2002-03-ஆம் ஆண்டில் 23% ஆக இருந்து 2021-22-ஆம் ஆண்டில் 40% ஆக அதிகரித்துள்ளது என்பதை 2021-22-ஆம் ஆண்டின் தொழில்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Industries (ASI)) தரவு காட்டுகிறது.
வழக்கமான தொழிலாளர்களின் இந்தியாவின் பங்கு (23%) மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது விதிவிலக்காக குறைவாக உள்ளது. பெண்களின் பங்களிப்பு 2018-19-ஆம் ஆண்டில் 25% ஆக இருந்து. 2022-23-ஆம் ஆண்டில் 37% ஆக அதிகரித்தாலும், இந்த வளர்ச்சியின் பெரும்பகுதி விவசாயம் மற்றும் ஊதியம் பெறாத சுயவேலைவாய்ப்பில் ஏற்பட்டது.
பெண் தொழிலாளர்களில் 15% மட்டுமே வழக்கமான சம்பள வேலைகளை வைத்திருக்கிறார்கள். மேலும், குறிப்பிடத்தக்க பாலின ஊதிய இடைவெளி உள்ளது, குறிப்பாக சுயதொழில் செய்பவர்களிடையே.
கூடுதலாக, கடந்த பத்தாண்டுகளில் நடைமேடை தொழிலாளர்களின் பங்கு அதிகரித்துள்ளது. இது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடைமேடை தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு குறியீடு 2020-ஆம் ஆண்டின் கீழ் முறைசாரா தொழிலாளர்களாகக் கருதப்படுகிறார்கள் மற்றும் ஆகஸ்ட் 2021-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இ-ஷ்ரம் போர்ட்டலில் (e-shram portal ) சுயமாக பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். இருப்பினும், கிக் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பு முறைகள் தெளிவற்றதாகவே உள்ளன. மேலும், தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களின் கீழ் நடைமேடை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
பணியாளர் எதிர்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சேர்க்கையின் நிகர அதிகரிப்புக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியதே காரணம் என்று கூறுவது சவாலானது. தற்போதுள்ள பயனாளிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை மறுசீரமைப்பதும் தரவுகளில் உள்ளடங்கும். இவை இந்த புள்ளிவிபரங்களை மிகைப்படுத்துகிறது. நிகர ஊதிய தரவு (Net payroll data) நேரடி வேலை உருவாக்கத்தை விட பணியாளர் எதிர்கால வைப்பு நிதி அமைப்புக்குள் (EPFO) மாற்றங்களை பிரதிபலிக்கிறது.
பணியாளர் எதிர்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சேர்க்கை தரவுகளின் மாதாந்திர வெளியீடு ஏப்ரல் 2018-ஆம் ஆண்டில் தொடங்கியதிலிருந்து (செப்டம்பர் 2017 முதல் தரவை உள்ளடக்கியது). இது திட்டத்தின் கீழ் வராத முன்னர் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களை உள்ளடக்கியது. இந்த தொழிலாளர்களை முறைப்படுத்துவது நேர்மறையானது என்றாலும், இது புதிய வேலை உருவாக்கத்திற்கான தெளிவான ஆதாரமாக பார்க்கப்படக்கூடாது.
இந்தியாவின் தொழிலாளர் கட்டமைப்பு அமைப்பில் குறைபாடுகள் உள்ளன. தொழில்களின் விநியோகம் நாட்டு வருமானத்தின் துறைவாரியான பகிர்வுக்கு ஈடுகொடுக்கவில்லை. விவசாயத்திலிருந்து உபரி உழைப்பு ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தித் துறைக்கோ அல்லது முறையான சேவைத் துறைக்கோ உறிஞ்சப்படவில்லை.
உழைப்பை உறிஞ்சுவதில் இந்த தோல்வி வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் அளவு மற்றும் தரம் இரண்டையும் பாதித்துள்ளது. கொரோனாவுக்குப் பிறகு விவசாயத்திற்குத் திரும்பும் பல தொழிலாளர்கள் முந்தைய போக்குகளின் தலைகீழ் மாற்றத்தைக் குறிக்கின்றனர். இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் கூறப்பட்ட வேலைவாய்ப்பு வளர்ச்சியைக் கொண்டாடுவதற்கு எந்த காரணமும் இல்லை.
கிங்சுக் சர்க்கார் கட்டுரையாளர் மற்றும் கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் ஆசிரிய உறுப்பினர்.