தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான சமீபத்திய சட்டம் எவ்வாறு உருவாக்கப்பட்டது? நியமனங்களும் சட்டமும் ஏன் கேள்விக்குள்ளாக்கப்பட்டன அல்லது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டன? எந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஒரு சட்டத்திற்கு தடை விதிக்க முடியும்?
ஓய்வுபெற்ற குடிமைப் பணி அதிகாரிகளான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோரை தேர்தல் ஆணையர்களாக நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மார்ச் 21 அன்று நிராகரித்தது. இதில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023 (Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Act, 2023) நியமனங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதை இடைநீக்கம் செய்யவும் அது மறுத்துவிட்டது.
நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா (Sanjiv Khanna) மற்றும் தீபங்கர் தத்தா (Dipankar Datta) ஆகியோர், தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இப்போது அதற்கான நியமனங்களை இடைநிறுத்துவது குழப்பத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கும் என்று விளக்கினார்.
தேர்தல் ஆணைய சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் சவாலின் ஒரு பகுதியாக நியமனங்களை இடைநிறுத்துமாறு ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reform) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கேட்டுக் கொண்டது.
சட்டம் எப்படி வந்தது? நியமனங்களும் சட்டமும் ஏன் சவாலுக்கு உட்படுத்தப்பட்டன? எந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஒரு சட்டத்திற்கு தடை விதிக்க முடியும்?
நியமன முறை எப்படி வந்தது?
மார்ச் 2023 இல், அனூப் பரன்வால் vs இந்திய ஒன்றியம் (Anoop Baranwal vs Union of India) வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) உறுப்பினர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள் என்பதில் உச்ச நீதிமன்றம் சில திருத்தங்களைச் செய்தது. இந்த முடிவுக்கு முன்பு, பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்தார்.
உச்சநீதிமன்றம் ஒரு தற்காலிக திட்டத்தை வகுத்தது. அதன் அடிப்படையில், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோருடன் ஒரு குழுவை அமைத்து தேர்தல் ஆணையரின் நியமனங்களைக் கையாள்கின்றனர். பிரிவு 324 (2) இன் படி, இந்த நோக்கத்திற்காக நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், டிசம்பர் 2023 இல், இந்திய தலைமை நீதிபதிக்கு பதிலாக "பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட ஒன்றிய அமைச்சரை" (a Union Cabinet Minister to be nominated by the Prime Minister) குழு உறுப்பினராக நியமிக்கும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அதாவது, தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஒன்றிய அரசுக்கு இப்போது பெரும்பான்மை வாக்குகள் உள்ளன.
தேர்தல் ஆணைய சட்டம் ஏன் சவால் செய்யப்பட்டது?
இந்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி, மருத்துவ நிபுணரும் இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினருமான டாக்டர் ஜெயா தாக்கூர் (Dr. Jaya Thakur) உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். தேர்தல் ஆணைய சட்டத்தின் (Election Commission Act) 7வது பிரிவின் கீழ் உருவாக்கப்பட்ட தேர்வுக் குழுவின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மையை (constitutionality of the selection committee) எதிர்த்து ஒரு மனு தாக்கல் செய்தார்.
டாக்டர் தாக்கூர் தனது மனுவில், தேர்தல் ஆணைய சட்டமானது (Election Commission Act) அனூப் பரன்வால் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்று வாதிட்டார். இந்த சட்டம் ஒன்றியத்தில் ஆளும் கட்சி நியமன செயல்முறையில் அதிக செல்வாக்கு செலுத்த அனுமதிக்கிறது. இது, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் வெளிப்படையான மற்றும் நியாயமான தேர்தலுக்கான உரிமையை முற்றிலும் பாதிக்கிறது. இதையடுத்து, தேர்தல் ஆணைய சட்டத்தை எதிர்த்து டாக்டர் தாக்கூருடன் இணைந்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கமும் (Association for Democratic Reforms(ADR)) ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
கடந்த காலங்களில், உச்ச நீதிமன்றம் அதன் முந்தைய தீர்ப்புகளுக்கு முரணான சட்டங்களை ரத்து செய்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஜூலை 2021 இல், நீதிமன்றம் தீர்ப்பாய சீர்திருத்தங்கள் அவசரச்சட்டம் (Tribunals Reforms (Rationalisation and Conditions of Service) Ordinance), 2021 ஐ ரத்து செய்தது. இந்த, அவசரச் சட்டம் 2020 நவம்பரில் நீக்கப்பட்டதைப் போன்ற தீர்ப்பாய உறுப்பினர்களின் பணி நிலைமைகள் தொடர்பான பல விதிகளை அறிமுகப்படுத்தியது.
காலியாக உள்ள இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதவிகளுக்கு நியமனங்களை பரிந்துரைக்க தேர்வுக் குழு கூடியிருந்த அதே நாளில், மார்ச் 15 ஆம் தேதி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் விண்ணப்பத்தை நீதிமன்றம் விசாரித்தது. இருப்பினும், தேர்வுக் குழு ஒரு நாள் முன்னதாக கூடி ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் ஆகியோரை புதிய தேர்தல் ஆணையர்களாக நியமித்தது.
தேர்தல் ஆணையர், அருண் கோயல் மார்ச் 9 அன்று திடீரென ராஜினாமா செய்ததால், தேர்தல் ஆணையத்தில் இரண்டு காலிப்பணி இடங்கள் உருவாகின. எனவே, மக்களவைத் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பே, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், என்ற ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே தேர்தல் ஆணையத்தில் இருந்தார்.
மார்ச் 15 அன்று, தேர்தல் ஆணையர் நியமனங்களுக்கு தடை கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தது. அவர்களின் விண்ணப்பத்தில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், "இந்த மாண்புமிகு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முன் கூட்டியே... 14.03.2024 அன்று தேர்வுக் குழுவின் கூட்டத்தைக் கூட்டியுள்ளது" என்று கூறியுள்ளது. அவ்வாறு செய்வதற்கான சரியான செயல்முறையை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்க முடியும்.
எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையரின் பெயர்களைக் கோரினார். ஆனால் அவற்றை முன்கூட்டியே பெறவில்லை என்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் கூறியது. இதனால், தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு பட்டியலிடப்பட்ட பெயர்களை மதிப்பாய்வு செய்யவும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையரின் திறன்களை மதிப்பிடவும் நேரம் இல்லை என்பதே இதன் பொருள்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஒன்றிய அரசு எப்படி பதிலளித்தது?
மார்ச் 20 அன்று, உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசானது, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம், தேர்வுக் குழுவில் நீதித்துறை உறுப்பினர் இருப்பதன் மூலம் "உருவாகாது" என்று தெரிவித்தது. மேலும், நீதித்துறை உறுப்பினர்கள் இல்லாத தேர்வுக் குழுக்கள், எப்போதும் ஒருபக்கச் சார்பானதாக இருக்கும் என்று கூறுவது முற்றிலும் தவறானது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மறுநாள் நிறுத்தி வைப்பதற்காக தேர்வுக் குழு கூட்டம் (selection committee meeting) மார்ச் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாக அரசு சாரா அமைப்பு (NGO) தெரிவித்துள்ளது. அருண் கோயல் ராஜினாமா செய்ததால், கூட்டத்தை மார்ச் 9-ம் தேதிக்கு மாற்றியதாக அரசு தெரிவித்தது. நீதித்துறையின் நடைமுறைகளில் தலையிட எந்த முயற்சியும் இல்லை என்று அரசாங்கம் வலியுறுத்தியது.
மார்ச் 13 ஆம் தேதி சௌத்ரிக்கு, வேட்பாளர்கள் பட்டியலை வழங்கியதால் அவருக்கு பெயர்கள் தாமதமாக கிடைத்ததாக அரசாங்கம் கூறியது. ஆனால், தேடல் குழு (search committee) தங்கள் வேலையை முடிக்காததால் அவர்களால் இன்னும் குறுகிய பட்டியலை அவருக்கு வழங்க முடியவில்லை.
உச்ச நீதிமன்றம் எப்போது ஒரு சட்டத்திற்கு தடை விதிக்க முடியும்?
தற்போதைய சூழ்நிலையில், உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணைய சட்டத்தின் பிரிவு 7 ஐ நிறுத்த மறுத்துவிட்டது. இது, "விதிவிலக்கான சூழ்நிலைகள்" (exceptional circumstances) இல்லாவிட்டால் சட்டங்களை இடைநிறுத்த முடியாது என்று அவர்கள் கூறினர்.
"அரசியலமைப்பின் அனுமானம்" (presumption of constitutionality) கோட்பாட்டின் காரணமாக நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களை நீதிமன்றங்கள் இடைநிறுத்துவது சாதாரணமானவை இல்லை. பொதுவாக, இந்த கோட்பாடு அரசியலமைப்பை மீறுவதாக நிரூபிக்கப்படாத வரை, சட்டம் செல்லுபடியாகும் என்று கருதப்படுகிறது.
பவிஷ் டி. பாரிஷ் vs இந்திய ஒன்றியம் (Bhavish D. Parish vs Union of India) 2000 வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு கொள்கையை விளக்கியது. ஒரு சட்டத்தை தற்காலிகமாக அமுல்படுத்துவதைத் தடுக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் போது, அந்தச் சட்டம் தெளிவாக நியாயமற்றதாகவோ அல்லது தெளிவாக அரசியலமைப்புக்கு எதிராகவோ இருந்தால், கவனமாக இருக்க வேண்டும். அதைத் தடுக்க அவசரப்படக்கூடாது என்பதை நீதிமன்றங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. ஒரு சட்டம் மறுபரிசீலனை செய்யப்படுவதால், விவாதத்திற்குரிய பிரச்சினை கொண்டுவரப்படுவதால், இந்த விஷயத்தைப் பார்க்க நீதிமன்றங்களை நம்ப வைப்பதால், அந்த விவகாரம் தீர்க்கப்படும் வரை சட்டமியற்றுபவர்களின் நோக்கங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல.