அமராவதி : சந்திரபாபு நாயுடு மீண்டும் உருவாக்க விரும்பும் நகரத்தின் சுருக்கமான வரலாறு -வலே சிங்

சந்திரபாபு நாயுடு, நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்றதும், குண்டூரில் உள்ள சிறிய நகரமான அமராவதியை ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக மாற்றுவதற்கு உறுதியளித்துள்ளார். ஜெகன் ரெட்டியின் மூன்று தலைநகரங்கள் எனும் திட்டம் தொடராது என்றும் அவர் அறிவித்தார்.

அமராவதியைத் தேர்ந்தெடுப்பதற்கான நாயுடுவின் முடிவு, பண்டைய சாதவாகன வம்சத்தின் (கிமு 2-3 CE) தலைநகராக இருந்த அதன் வரலாற்று முக்கியத்துவத்தால் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இந்த வம்சம் அவர்களின் இருப்பிடமாக நம்பப்படும் அருகிலுள்ள கிராமமான தரணிகோட்டாவில் இருந்து ஆட்சி செய்தனர். சாதவாகனர்கள் மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் இன்றைய மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளை ஆட்சி செய்தனர்.

சாதவாகனர்கள் புத்த மதத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். அமராவதியின் சமீபத்திய வரலாறு, 18 ஆம் நூற்றாண்டின் ஜமீன்தார் வசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடுவை எடுத்துக்காட்டுகிறது, அவர் 1790களில் தனது கோட்டையை அங்கு கட்டி நகரின் புராதானப் பெருமையை மீட்டெடுத்தார்.

அமராவதியின் வரலாறு 2300 ஆண்டுகளுக்கு முன்பு, கி.மு. 2-3ஆம் நூற்றாண்டில், கிருஷ்ணா நதியின் வலது கரையில் தொடங்கியது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரல் கர்னல் கொலின் மெக்கன்சி என்பவரால் 1816-17ஆம் ஆண்டில் இந்தத் தளம் முதன்முதலில் ஆவணப்படுத்தப்பட்டது.

மெக்கன்சியின் ஆரம்ப வருகைக்குப் பிறகு, உள்ளூர்வாசிகள், வெங்கட்த்ரி நாயுடுவின் ஆதரவுடன், அமராவதி ஸ்தூபியில் இருந்து ஏராளமான கல் அடுக்குகள் மற்றும் பிற பகுதிகளை அகற்றி அவற்றை கொண்டு  தங்களுக்கு சொந்த வீடுகளையும் கட்டிடங்களையும் கட்டினார்கள்.

மெக்கன்சியின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்த அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள், கல்வெட்டுகள் மற்றும் தொல்பொருட்கள் இப்போது இந்தியாவில் சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் இங்கிலாந்து முழுவதும் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

ராபர்ட் இ. ஃபிஷர் போன்ற அறிஞர்கள் அமராவதியை "உணர்வுபூர்வமான மற்றும் நிறைவான நகரம்" என விவரித்துள்ளனர். 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள் காரணமாக, ஆந்திரப் பிரதேசத்தில் நாகரகொண்டா போன்ற பிற தளங்களில் கிடைத்த தொல்பொருட்களும் அமராவதியின் கலைப் பள்ளிக்கு சிறந்த உதாரணம்.

மஹா சைத்யா, ஒரு பெரிய சரணாலயம் என்று அழைக்கப்படும் ஸ்தூபம், அசோகப் பேரரசரின் ஆட்சியின்போது கி.மு. 268-232-ல் கட்டப்பட்டிருக்கலாம், இது ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் சரியான தோற்றம் பற்றி அறிஞர்களுக்கு உறுதியாக தெரியவில்லை. அமராவதியின் சதா வம்சமும் ஆட்சி செய்ததாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பேராசிரியர் அகிரா ஷிமடா குறிப்பிடுகையில், குண்டப்பள்ளியில் உள்ள கல்வெட்டுகள், சதாக்கள் தங்களை கலிங்க மன்னர்கள் என்று அழைத்துக் கொண்டதையும், மகாமேகவாஹனர்களுடன் கிமு 2 - கிபி 4ஆம் ((2nd BCE- 4th CE) ஆண்டில் தொடர்பு கொண்டிருந்ததையும் காட்டுகின்றன.

இந்த வம்சங்களின் கலவையானது சிக்கலானது, இது பிராந்தியத்தின் சர்ச்சை வரலாற்றைப் பிரதிபலிக்கிறது, இது இன்றும் தொடர்கிறது.

ஆரம்ப நூற்றாண்டுகளில் இருந்து வரலாற்றுப் பதிவுகள் குறைவாகவே உள்ளன. சாதவாகனருக்குப் பிறகு, பல்வேறு வம்சங்கள் ஆட்சி செய்தன: ஆந்திர இஷ்க்வாகுக்கள், பல்லவர்கள், காகத்தியர்கள், டெல்லி சுல்தானகம், பஹ்மனி சுல்தானகம், விஜயநகரப் பேரரசு மற்றும் கோல்கொண்டா சுல்தானகம், அதைத் தொடர்ந்து முகலாயப் பேரரசு. உள்ளூர் ஆட்சியாளர்கள் இருந்தனர், ஆனால் அவர்களின் பதிவுகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

அமராவதி ஸ்தூபியின் பழுது பற்றி இலங்கையில் இருந்து 14ஆம் நூற்றாண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

1. 1724-ல், ஹைதராபாத் நிஜாம் இப்பகுதியின் நிர்வாகத்தைக் கைப்பற்றினார். 1750இல், பிரெஞ்சுக்காரர்களும் ஒரு ஒப்பந்தத்தின் மூலம் நிர்வாகத்தை பெற்றனர். அதே ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வந்து 1947-ல் இந்தியா சுதந்திரம் பெறும் வரை ஆட்சி செய்தது.

2. சுதந்திரத்தின் போது, ​​இந்தப் பகுதி ஹைதராபாத்தில் இருந்து வெகு தொலைவில் இருந்ததாலும், பெரும்பாலும் இந்துக்கள் என்பதாலும் ரசாகர் வன்முறையைத் தவிர்த்தது.

3. ஆங்கிலேயர் ஆட்சியின் போது, ​​வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு வரிகளை எதிர்த்து அவர்களை எதிர்க்கத் தொடங்கினார். வரலாற்றாசிரியர் ராபர்ட் இ. ஃப்ரைகன்பெர்க், "குண்டூர் மாவட்டம் 1788-1848 தென்னிந்தியாவில் உள்ளூர் செல்வாக்கு மற்றும் மத்திய அதிகாரத்தின் வரலாறு" என்ற தனது புத்தகத்தில், பிரிட்டிஷ் கொள்கைகள் வாசிரெட்டியை எவ்வாறு பாதித்தன என்பதை விவரித்தார். அவர்கள் சிந்தபல்லியில் உள்ள அவரது கோட்டையில் வீரர்களை நிறுத்தி, அவரது இராணுவத்தைக் கலைத்தனர், மேலும் அவரது காவலர் படையை கட்டுப்படுத்தினர். ஜமீன்தாரே குண்டூரில் சிறிது காலம் காவலில் இருந்தார்.

4. சுதந்திரத்தை இழந்த போதிலும், வசிரெட்டி எதிர்த்து நின்றார். அவர் தனது அரண்மனைக்குத் திரும்பவில்லை, அதற்குப் பதிலாக புத்த இடிபாடுகளில் இருந்து கல்லைப் பயன்படுத்தி அமராவதியில் புதிய அரண்மனை ஒன்றைக் கட்டினார். இந்த புதிய அரண்மனையில் வெள்ளி மற்றும் தங்கத் தூண்கள், செம்பு கூரை, மற்றும் தோட்டங்கள் மற்றும் கோவில்கள் ஆகிவற்றை அமைத்தார். அங்கு, அவர் மேலும் 20 ஆண்டுகளுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றார்.

6. 1796ஆம் ஆண்டில், வசிரெட்டி, அமராவதியில் உள்ள பழமையான அமர்லிங்கேஸ்வரர் சிவன் கோவிலை புதுப்பித்தார். அப்பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் மதத்தினருக்கும் தாராளமாக நன்கொடைகள் வழங்கினார். 2015ஆம் ஆண்டு கோயில் திருப்பணியின் போது, ​​கி.பி.2 முதல் 3ஆம் நூற்றாண்டு வரையிலான பழங்கால புத்த சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவரது சந்ததியினர் இன்னும் அறக்கட்டளைகள் மூலம் அதிகமான நிலத்தை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.

7. அமராவதியின் இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுப்பது, புத்த மற்றும் பௌத்தம் அல்லாத கூறுகளை உள்ளடக்கியது, ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக அதை நிறுவுவதற்கான லட்சிய வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியமானது.

original link:

https://www.hindustantimes.com/analysis/historicity-amaravati-a-brief-history-of-the-city-that-chandrababu-naidu-wants-to-build-again-101718301938226.html


Share:

வளர்ந்த நாடுகளின் குறிக்கோள்களுக்கு ஆழமானக் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை - எம்.கோவிந்த ராவ்

அரசாங்கக் கடனைக் குறைப்பதன் மூலம் வணிகங்களின் கடன் வாங்கும் செலவுகளைக் குறைப்பதே மிக முக்கியமான சீர்திருத்தமாகும்.

இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி விரைவில் வளர்ந்த நாடாக மாறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 100-வது சுதந்திர தினமான 2047-ம் ஆண்டிற்குள் இதை நிறைவேற்ற பிரதமர் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடைவது என்பது தனிநபர் வருமானத்தை $2,600-லிருந்து $10,205 ஆக ஐந்து மடங்குக்கும் அதிகமாக அதிகரிக்க வேண்டும். இந்த இலக்கை அடைய ஆண்டு தனிநபர் வருமான (per capita income) வளர்ச்சி 7.5% மற்றும் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி (Gross Domestic Product (GDP))  9%-ஆக இருக்க வேண்டும்.

வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைவது மட்டும் போதாது; அது அனைவரையும்  உள்ளடக்கியதாக  இருக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் ஆண்டுதோறும் நான்கு மில்லியன் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, அது உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படும்போது, ​​விவசாயத்தில் நலிவடையும் தொழிலாளர்களில் 44% மற்றும் குறைந்த உற்பத்தி மற்றும் வருமானம் கொண்ட சிறு நிறுவனங்களில் 42% அதிக உற்பத்தி மற்றும் வருமானம் கொண்ட வேலைகளுக்கு மாற்றப்படும். இது ஒரு கடுமையான சவாலை ஏற்படுத்தக்கூடும். 20-33 வயதுடையவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு உயர்நிலைப் பள்ளியைத் தாண்டிய தகுதிகள் இல்லாததால், சேவைத் துறையில் போதுமான அதிக ஊதியம் தரும் வேலைகள் இல்லை. எனவே, உழைப்பு மிகுந்த உற்பத்திக்கு கவனம் செலுத்த வேண்டும். இதை அடைவதற்கு கல்வி மற்றும் திறன் நிலைகளை மேம்படுத்துவதைத் தவிர, மூலதனம் மற்றும் தொழிலாளர் சந்தைகளில் அதிக நெகிழ்வுத்தன்மை தேவைப்படுகிறது.

இந்தியா தனது பெரும்பொருளாதார நிலைப்பாடு (macroeconomic stability), நிதித்துறையை மேம்படுத்துவதிலும், டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும், 9% வளர்ச்சி விகிதத்தை அடைய, கூடுதல் நடவடிக்கைகள் தேவை. அரசாங்கக் கடனைக் குறைப்பதன் மூலம் வணிகக் கடன் வாங்கும் செலவைக் குறைப்பதே முக்கிய சீர்திருத்தமாகும். 2025-26-ஆம் ஆண்டிற்குள் நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5%ஆகக் குறைக்க நிதியமைச்சர் திட்டமிட்டுள்ளார். இந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி ₹2.1 லட்சம் கோடியை மாற்றுகிறது. உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் திறன்களில் முதலீடு செய்யும்போது பற்றாக்குறை மற்றும் கடன்களை நிர்வகிப்பது முக்கியம். இதற்கு வரிகளை மிகவும் திறமையானதாக்குவது மற்றும் செலவின முன்னுரிமைகளை மறு ஒதுக்கீடு செய்வது அவசியம்.

கடந்த சில ஆண்டுகளாக  வரிவருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) வசூல் ₹2.1 லட்சம் கோடியாக வரி வருவாய் அதிகரித்துள்ளது. இருப்பினும், அதிக வருவாய் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும், சேதங்களைக் குறைப்பதற்கும் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) இப்போது இரண்டாம் தலைமுறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த சீர்திருத்தங்கள் அடித்தளத்தை விரிவுபடுத்த வேண்டும் மற்றும் விகித அடுக்கை நியாயப்படுத்த வேண்டும். தனிநபர் வருமான வரியில், வரிவிலக்குகள் மற்றும் விருப்பத்தேர்வுகள் நீக்கப்பட வேண்டும். புதிய முறையில் தற்போதுள்ள ஐந்தில் இருந்து மூன்றாகக் குறைக்கப்பட வேண்டும்.

சந்தைகளின் செயல்திறனை மேம்படுத்த, கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம். குறிப்பிட்ட சீர்திருத்தங்களில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அவை:

முதலாவதாக, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் உற்பத்தி வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். உற்பத்திப் பணியாளர்களில் 75%-க்கும் அதிகமானோர் பணிபுரியும் சிறிய அளவிலான நிறுவனங்கள், உலகச் சந்தைகளில் போட்டியிட முடியாது. அதிக உற்பத்தித்திறன் மற்றும் ஊதியத்துடன் நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழில்களாக வளர அவர்களுக்கு உதவுவது அவசியம்.

தொழிலாளர் சட்டங்கள்தான் மிக முக்கியமான தடுப்பு. நான்கு தொழிலாளர் குறியீடுகள் இந்தச் சிக்கலை தீர்க்க உதவும். ஆனால், இன்னும் செய்ய வேண்டும். நெகிழ்வுத்தன்மை மற்றும் திறம்பட செயல்படுத்துதல் ஆகியவை முக்கியமானவை, மாநிலங்களுக்கு இதில் முக்கிய பங்கு உண்டு.

இரண்டாவதாக, ஏற்றுமதியை அதிகரிப்பதிலும் பாதுகாப்புவாதத்தைத் தவிர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். நீடித்த உயர் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி முக்கியமானது என்பதை வரலாறு காட்டுகிறது. தற்போது, ​​உலக ஏற்றுமதியில் இந்தியா 2.5% மட்டுமே செய்கிறது. 2017 முதல் சுங்கவரிகள் அதிகரித்து வருகின்றன. மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதியின் பங்கு குறைந்து வருகிறது. விவசாய வர்த்தகத்தில் நியாயமான கொள்கைகள் முக்கியம். 9% வளர்ச்சியை அடைய இந்த போக்குகளை மாற்றுவது அவசியம். 9% வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கு இந்த நடவடிக்கைகளை மாற்றியமைக்க வேண்டும். பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையில் (Regional Comprehensive Economic Partnership (RCEP)) சேராத இந்தியாவின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் (Free Trade Agreements (FTAs)) கையெழுத்திடுவது முக்கியம். மேலும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளை வேகப்படுத்த வேண்டும். 

மூன்றாவதாக, திவால் மற்றும் நொடிப்புச் சட்டம்  (Insolvency and Bankruptcy Code (IBC))  ஒரு குறிப்பிடத்தக்க சீர்திருத்தமாக இருந்தாலும், திவால் நிலைகளைத் தீர்க்கும் செயல்முறை விரைவாகவும், திறமையாகவும், நியாயமாகவும் இருப்பதை உறுதிசெய்வது முக்கியம்.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்க அனுமதிக்க மூன்று வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும், இந்த சட்டங்கள் விவசாயிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்டன. பின்னர் அவை திரும்பப் பெறப்பட்டன. இந்த உதாரணம் இறுதியில் தோல்வியடையும், தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கான சவாலை எடுத்துக்காட்டுகிறது. தோல்வியடைந்த சீர்திருத்தங்களை புதுப்பிப்பது சவாலானது. இதுபோன்ற சீர்திருத்தங்களுக்கு அங்கீகாரம் பெற, மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு இணைந்து செயல்பட வேண்டும். விவசாயம் என்பது மாநில விவகாரம் என்பதால் விவசாய சீர்திருத்தங்களுக்கு இந்த ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.

எம்.கோவிந்த ராவ், தக்ஷஷிலா இன்ஸ்டிடியூஷனின் கவுன்சிலர். தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் (National Institute of Public Finance and Policy (NIPFP)) முன்னாள் இயக்குநரான இவர், 14-வது நிதி ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். 

Share:

புதிய குற்றவியல் சட்டங்களால், உச்சநீதிமன்றத்தில் போராடி வென்றெடுக்கப்பட்ட உரிமைகள் அரசாங்கத்தால் முறியடிக்கப்படும் அபாயம் -இந்திரா ஜெய்சிங்

 இந்தப் புதிய குற்றவியல் சட்டங்கள், IPC, CrPC மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று அடிப்படை குற்றவியல் சட்டங்களின் ஒவ்வொரு பிரிவையும் கிட்டத்தட்ட மறுபரிசீலனை செய்கின்றன. குற்றவியல் சட்டங்களில் முன்கணிப்பு மற்றும் உறுதிப்பாடு ஆகியவை சட்டத்தின் ஆட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளாகும். சட்டங்களில் உள்ள நிச்சயமற்றத் தன்மை குடிமக்களின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் பாதிக்கிறது.

சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் புதிய தேசிய வழக்குக் கொள்கையை அறிவித்தார். அவரைப் பொறுத்தவரை, அரசாங்கத்தை மிகவும் திறமையாகவும் பொறுப்பாகவும் மாற்றுவதே அதன் குறிக்கோள் ஆகும். சட்டச் செலவுகளைக் குறைப்பது, நீதிமன்றங்களில் அரசு வழக்குகளைக் குறைப்பது மற்றும் நீதிமன்றப் பணிச்சுமையைக் குறைப்பது போன்றவற்றை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1, 2024 முதல் தொடங்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அறிவித்தார்.

குற்றவியல் சட்டங்கள் குற்றவியல் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும், ஏனெனில் அவை மக்களின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் பறிக்கும். சட்டப்பூர்வ நடைமுறை இல்லாதவரை யாரும் தங்கள் வாழ்க்கையையோ சுதந்திரத்தையோ இழக்க முடியாது என்று அரசியலமைப்புப் பிரிவு 21 கூறுகிறது. இந்த சட்ட செயல்முறை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Criminal Procedure Code (CrPC)) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இப்போது, ​​குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) மூன்று புதிய குற்றவியல் சட்டங்களால் மாற்றப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) கணிசமானக் குற்றங்களை வரையறுத்து, என்ன நடத்தை குற்றம், எது இல்லை என்பதை நமக்குச் சொல்கிறது. இதுவும் மாற்றப்பட்டு புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குற்றவியல் வழக்கில் குற்றவாளியாகக் கருதப்படும் குடிமகனுக்கு இதன் தாக்கங்கள் என்ன? மூன்று புதிய சட்டங்கள் சட்டச் செலவைக் குறைத்து நீதிமன்ற நேரத்தை மிச்சப்படுத்துமா?

ஒவ்வொரு குற்றவியல் வழக்கிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அரசு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது. மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் IPC, CrPC மற்றும் இந்திய சாட்சியச் சட்டத்தின் (Indian Evidence Act) ஒவ்வொரு பிரிவையும் மாற்றுகின்றன. இந்தச் சட்டங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளன. இந்திய உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. குற்றவியல் சட்டங்களில் முன்னறிவிப்பு மற்றும் உறுதிப்பாடு ஆகியவை சட்டத்தின் ஆட்சிக்கு முக்கியமாகும். மக்கள் ஏற்கனவே உள்ள சட்டங்களைப் பின்பற்றுகிறார்கள் மற்றும் குற்றங்களைச் செய்வதைத் தவிர்க்க தங்கள் நடத்தையை சரிசெய்கிறார்கள். குற்றவியல் சட்டங்களைப் பற்றிய நிச்சயமற்றத் தன்மை குடிமக்களின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. ஏனெனில், இந்த சட்டங்களை மீறுவது கைது செய்ய வழிவகுக்கும்.

ஜூலை 1 முதல், இரண்டு வெவ்வேறு குற்றவியல் நீதி அமைப்புகள் இருக்கும். இதன் அடிப்படைச் சட்டங்கள் முன்னோடியாகப் பயன்படுத்த முடியாது. நடைமுறைச் சட்டங்கள் வேறுவிதமாக நிரூபிக்கப்படாத வரை குற்றம் சாட்டப்பட்டவருக்கு தீங்கு விளைவிக்கும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், புதிய நடைமுறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக வாதிடலாம். மேலும், இந்த வாதங்கள் உச்சநீதிமன்றத்தை அடைய நீண்ட நேரம் ஆகலாம். அதுவரை, எந்தச் சட்டங்கள் நமக்குப் பொருந்தும் என்பதை அறியாததால், நமது வாழ்வு மற்றும் சுதந்திரத்திற்கான உரிமைகள் குறித்து நிச்சயமற்ற நிலை இருக்கும்.

இவை அனைத்தும் நீதித்துறையை மேலும் சுமையாக மாற்றிவிடும். இது நீண்டகால தாமதத்தை ஏற்படுத்தும். மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இந்த தாமதங்களை எவ்வாறு பாதிக்கும் அல்லது குற்றவியல் நீதி எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதை மேம்படுத்த என்ன உள்கட்டமைப்பு தேவை என்பதை யாரும் தணிக்கை செய்யவில்லை.

தேசிய நீதித்துறை தரவுக் கட்டம் (National Judicial Data Grid), இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதில், மொத்தம் 83,000 வழக்குகள் உள்ளன. இந்தப் பின்னடைவு சுமார் 30% அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால், மக்களுக்கு நீதி கிடைப்பதை கடினமாக்குகிறது.

செலவுகள் மற்றும் நிலுவைகள் தவிர, நமது சுதந்திரம் மற்றும் அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடிய புதிய குற்றங்களை உருவாக்குவது பற்றிய கவலைகளும் உள்ளன. தேசத்துரோகத்தை வரையறுக்கும் IPC-ன் பிரிவு 124A, தற்போது இந்திய உச்சநீதிமன்றத்தால் சவால் செய்யப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் மிகக் கடுமையான பதிப்பு, புதிய குற்றவியல் சட்டத்தில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (Bharatiya Nyaya Sanhita Act), 2023-ன் பிரிவு 152 இல் சேர்க்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் (IPC), முந்தைய சட்டத்தைப் போலன்றி, புதிய சட்டம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான குற்றத்தை உள்ளடக்கியது. ஒரு சாதாரண கலவரம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதலாக பார்க்கப்படுவதாக உள்ளது.

2013-ம் அண்டில், லலிதா குமாரி vs உத்திரபிரதேச அரசு (Lalita Kumari vs Government of Uttar Pradesh) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம், அறியக்கூடிய குற்றம் வெளிப்படுத்தப்பட்டால் முதல் தகவல் அறிக்கை (First Information Report (FIR)) பதிவு செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. புகார்தாரரின் தவறான நோக்கங்கள் அல்லது வணிகப் போட்டி சந்தேகிக்கப்படும் சில அரிய நிகழ்வுகளில் மட்டுமே, முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வதற்குமுன் ஆரம்ப விசாரணை நடத்தப்படுகிறது.

பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bhartiya Nagrik Suraksha Sanhita (BNSS)), 2023, மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆனால் ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனையாக இருக்கும் ஒவ்வொரு அறியக்கூடிய குற்றத்திலும் அதிகாரப்பூர்வ விசாரணையை கட்டாயமாக்குகிறது. பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 173(3)-ன் படி, இது உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை சிறிதும் மதிக்கவில்லை. நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்ட சுதந்திரங்கள் சட்டமன்றத்தால் முறியடிக்கப்படும் ஒரு காலகட்டத்தை இது பரிந்துரைக்கிறது.

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) விதிகளை உள்ளடக்கியது. இது கடுமையானது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகளைக் குறைக்கிறது. UAPA-ன் பிரிவுகள் 15 முதல் 20 வரை பயங்கரவாதச் செயல்கள், பயங்கரவாதத்திற்கான நிதியுதவி, பயங்கரவாதத்திற்கு ஆட்சேர்ப்பு போன்றவற்றை உள்ளடக்கியது. இந்தப் பிரிவுகள் பெரும்பாலும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், 2023-ன் பிரிவு 113-ல் சேர்க்கப்பட்டுள்ளன.

தேசிய புலானாய்வு முகமை (NIA) மற்றும் மாநிலத்தின் உள்ளூர் காவல்துறை ஆகிய இரண்டு வெவ்வேறு முகமைகளால் இரண்டு வெவ்வேறு சட்டங்களின் கீழ் ஒரே குற்றத்திற்காக வழக்குத் தொடரப்படுவதை இது சாத்தியமாக்குகிறது. இந்த முன்னேற்றங்கள், இந்தியாவின் உச்சநீதிமன்றத்திலிருந்து நாம் பெற்றுள்ள உரிமைகள் பெரும்பான்மை அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் முறியடிக்கப்படும் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றன.

தேசிய வழக்கு கொள்கை (National Litigation Policy) அறிவிக்கப்புடன், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023, பாரதிய நியாய சன்ஹிதா, 2023, மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம், 2023 ஆகியவை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரக்கூடாது. இந்தச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு நீதித்துறை தணிக்கை மூலம் விரைவாக நீதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். குற்றவியல் வழக்குகளின் நிலுவை எவ்வளவு அதிகரிக்கும் என்பதையும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளை இந்தச் சட்டங்கள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் ஆய்வு ஆராய்கிறது.

எழுத்தாளர் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர்கள் கூட்டிணைப்பின் அறங்காவலர் ஆவார்.


Share:

தேசியத் தேர்வு முகமை (NTA) 1,563 NEET விண்ணப்பதாரர்களுக்கான 'சலுகை மதிப்பெண்களை' (Grace Marks) ஏன் ரத்து செய்தது? - தீக்ஷா தெரி

தேசியத் தேர்வு முகமை (National Testing Agency (NTA)) இப்போது இந்த 1,563 விண்ணப்பதாரர்களுக்கு மறுதேர்வை நடத்தும். மேலும், தனிப்பட்ட வழக்குகளுக்கு நீதிமன்ற உத்தரவுகளால் தேவைப்படும் மற்ற மாணவர்களையும் அவர்கள் மறுபரிசீலனை செய்வார்கள்.

புதன் கிழமையன்று, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முதன்முதலில் அறிவித்தபடி, தேர்வு நேரத்தை இழந்ததால் 'சலுகை மதிப்பெண்கள்' (grace marks) வழங்கப்பட்ட இந்த விண்ணப்பதாரர்களுக்கு இப்போது இரண்டு வழிகள் உள்ளன: ஒன்று சலுகை மதிப்பெண்கள் இல்லாமல், முதலில் வழங்கிய NEET-UG மதிப்பெண்ணை ஏற்றுக்கொள்வது அல்லது ஜூன் 23-ம் தேதி தேர்வில் மீண்டும் பங்கேற்க வேண்டும். "தேர்வு அதே ஆறு நகரங்களில் நடத்தப்படும். ஆனால், வெவ்வேறு மையங்களில் நடத்தப்படும்" என்று ஒரு மூத்த தேசியத் தேர்வு முகமை (NTA) அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

சலுகை மதிப்பெண்கள் ஏன் முதலில் வழங்கப்பட்டது?

மே 5ஆம் தேதி தேர்வுக்குப் பிறகு, சத்தீஸ்கர், மேகாலயா, சூரத், பஹதுர்கர் மற்றும் சண்டிகர் போன்ற பல்வேறு இடங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பஞ்சாப் & ஹரியானா, டெல்லி மற்றும் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தனர். குறிப்பிட்ட மையங்களில் தேர்வுகள் தாமதமாகத் தொடங்கியதால், முடிக்க போதிய நேரம் இல்லை என்று அவர்கள் கூறினர்.

தேசியத் தேர்வு முகமை (NTA) விசாரணை நடத்த ஒரு குறைதீர்க்கும் குழுவை (Grievance Redressal Committee (GRC)) அமைத்தது. குறைதீர்க்கும் குழு (GRC) போட்டி மாணவர்களின் கவலைகளை ஏற்றுக்கொண்டது மற்றும் இழந்த நேரத்திற்கு இழப்பீடு வழங்க பரிந்துரைத்தது. இதேபோன்ற சூழ்நிலையில் 2018 பொதுச் சட்ட நுழைவுத் தேர்வு (Common Law Admission Test (CLAT)) தேர்வின்போது உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இயல்பான முறையைப் பயன்படுத்த அவர்கள் முன்மொழிந்தனர்.

இந்தப் பரிந்துரையைத் தொடர்ந்து, 1,563 விண்ணப்பதாரர்களுக்கு தேசிய தேர்வு முகமை (NTA) சலுகை மதிப்பெண்கள் (grace marks) வழங்கியது. இதன் விளைவாக, NEET-UG-ல் ஆறு பேர் 720/720 மதிப்பெண்களைப் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, சில மாணவர்கள் மற்றும் பங்குதாரர்கள் தேசியத் தேர்வு முகமை (NTA) மற்றும் உச்சநீதிமன்றத்திடம் கவலைகளை எழுப்பினர். இந்தத் தீர்வு நியாயமானதல்ல என்று வாதிட்டனர்.

ஜூன் 8 அன்று, கல்வி அமைச்சகம் (Ministry of Education (MoE)) மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) ஆகியவை இந்த 1,563 போட்டி மாணவர்களின் முடிவுகளை மதிப்பாய்வு செய்ய உயர் அதிகாரம் கொண்ட குழுவை (high-powered committee (HPC)) அமைத்தன.

உயர் அதிகாரம் கொண்ட குழு (HPC) என்ன பரிந்துரைத்தது?

தேசியத் தேர்வு முகமை (NTA) தலைவர் பேராசிரியர் பிரதீப் குமார் ஜோஷி, பேராசிரியர் டி சி ஏ ஆனந்த், பேராசிரியர் சி பி சர்மா மற்றும் டாக்டர் (பேராசிரியர்) பி ஸ்ரீனிவாஸ் ஆகிய நான்கு மூத்த நிபுணர்களைக் கொண்ட உயர் அதிகாரக் குழு (HPC) ஜூன் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கூடி, ஏழு நாட்களுக்குள் பரிந்துரைகளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்தக் குழுவின் கூட்டங்களுக்குப் பிறகு, 1,563 விண்ணப்பதாரர்களின் இயல்பான மதிப்பெண்களை ரத்து செய்ய உயர் அதிகாரக் குழு (HPC) பரிந்துரைத்தது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களின் உண்மையான மதிப்பெண்களை (சலுகை மதிப்பெண்கள் தவிர்த்து) தங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் மூலம் பெற வேண்டும் என்று அவர்கள் முன்மொழிந்தனர். மாணவர்கள் விருப்பப்பட்டால் மீண்டும் தேர்வெழுதுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது. மறுதேர்வைத் தேர்வு செய்பவர்களின் முந்தைய மதிப்பெண்கள் ரத்து செய்யப்படும். இந்தப் பரிந்துரைகளை செயல்படுத்த தேசியத் தேர்வு முகமை (NTA) ஒப்புக்கொண்டது.

இந்தப் பரிந்துரைகளுக்குப் பின்னால் உள்ள உயர் அதிகாரக் குழுவின் (HPC) காரணம் என்ன?

பொதுச் சட்ட நுழைவுத் தேர்வு (Common Law Admission Test (CLAT)) 2018 இயல்பானதாக இதன் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளும்போது, ​​குறைதீர்க்கும் குழு (GRC) முக்கிய அம்சங்களைக் கவனிக்கவில்லை என்று உயர் அதிகாரக் குழு (HPC) கண்டறிந்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நகலைப் பெற்ற தேசியத் தேர்வு முகமைக்கு (NTA) சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, கணினி அடிப்படையிலான சோதனைகளைப் போலல்லாமல், NEET-UG போன்ற OMR அடிப்படையிலான தேர்வுகளில் தானியங்கு நேர மதிப்பீட்டு முறைகள் இல்லை என்பதை ​​குறை தீர்க்கும் குழு (GRC) கருத்தில் கொள்ளவில்லை என்று உயர் அதிகாரக் குழு (HPC) குறிப்பிட்டது.

கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி தாமதம் காரணமாக போட்டி மாணவர்கள் இழந்த நேரத்தை தேசியத் தேர்வு முகமை (NTA) மதிப்பீடு செய்தது. இருப்பினும், உயர் அதிகாரக் குழுவுக்கு (HPC) இந்த முறையானது ஆறு மையங்களிலும் நியாயத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை என்று கருதியது.

கூடுதலாக, உயர் அதிகாரக் குழுவானது (HPC) குறை தீர்க்கும் குழுவின் (GRC) இழப்பீட்டுக்கான விதிமுறைகள், முயற்சி செய்யப்படாத கேள்விகளில் நேரத்தை இழந்ததற்குக் காரணமாக இல்லை. இதன் விளைவாக பல போட்டி மாணவர்களுக்கு நியாயமற்ற முறையில் அதிக மதிப்பெண்கள் கிடைத்தன.

இதன் விளைவாக, சிக்கலை உடனடியாகத் தீர்க்க மிகவும் பொருத்தமான மற்றும் நியாயமானத் தீர்வாக 1563 விண்ணப்பதாரர்களுக்கு மறு பரிசோதனையை உயர் அதிகாரக் குழு (HPC) பரிந்துரைத்தது.

இப்போது என்ன நடக்கிறது?

தேசியத் தேர்வு முகமையானது (NTA) 1,563 விண்ணப்பதாரர்கள் மற்றும் மற்றவர்களுக்கு நீதிமன்றங்களால் மறுதேர்வு செய்ய மறுபரிசீலனை செய்யப்படும். பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பெறுவார்கள் மற்றும் விரைவில் புதிய அனுமதி அட்டைகளைப் (admit cards) பெறுவார்கள். இதற்கான, மறுதேர்வு முடிவுகள் ஜூன் 30ம் தேதிக்குள் வெளியிடப்படும்.

கூடுதலாக, தேசியத் தேர்வு முகமை (NTA) அடுத்த ஆண்டு முதல் NEET-UG பதிவை முன்கூட்டியே தொடங்க திட்டமிட்டுள்ளது. ‘இந்த முறை நாங்கள் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கினோம், ஆனால் எதிர்காலத்தில், பதிவுகள் மற்றும் தேர்வு நாளுக்கு இடையே அதிக நேரத்தை அனுமதிக்க நாங்கள் விரைவில் தொடங்குவோம்’ என்று ஒரு மூத்த தேசியத் தேர்வு முகமை (NTA) அதிகாரி குறிப்பிட்டார். இது தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறந்த திட்டமிடலுக்கு உதவும்.

மேலும், இந்த ஆண்டு ஆறு நகரங்களின் மையங்களில் காணப்படுவது போன்ற தாமதங்களைத் தடுக்க கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சியை மேம்படுத்துவதை தேசியத் தேர்வு முகமை (NTA) நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், "நாங்கள் ஆண்டுதோறும் பயிற்சி நடத்துகிறோம். ஆனால், இப்போது நாங்கள் அதில் அதிகக் கவனம் செலுத்துகிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களைத் தடுக்க தேசிய தேர்வு முகமை (NTA) உறுதிபூண்டுள்ளது" என்று அதிகாரி கூறினார்.

original link:
Share:

வானியற்பியல், நரம்பியல், நுண்ணறிவியல் துறைகளில் நோபலுக்கு இணையான காவ்லி பரிசு (Kavli Prize) பற்றி . . .

காவ்லி பரிசு (Kavli Prize), பிரெட் காவ்லியின் பெயரால் அழைக்கப்படுகிறது. அவர் ஒரு நார்வே-அமெரிக்கத் தொழிலதிபர் மற்றும் கொடையாளர் ஆவார். இந்த ஆண்டு காவ்லி பரிசு மற்றும் அதை வென்ற விஞ்ஞானிகள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.

2024 காவ்லி பரிசின் வெற்றியாளர்கள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டனர். (இந்தப் பரிசு காவ்லி பதக்கத்திலிருந்து வேறுபட்டது.) இந்த ஆண்டு எட்டு வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. வானியற்பியல், நரம்பியல் மற்றும் நுண்ணறிவியல் (Nano-science) ஆகியவற்றில் அவர்கள் செய்த பங்களிப்புகளுக்காக அவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.

பிரெட் காவ்லி

நோர்வே-அமெரிக்க தொழிலதிபரும் (Norwegian-American businessman) கொடையாளருமான பிரெட் காவ்லி (1927-2013) நினைவாக காவ்லி பரிசு (Kavli Prize)  வழங்கப்படுகிறது. 

நார்வேயின் எரெஜ்ஸ்போர்டில் பிறந்த காவ்லி, பொறியியல் பட்டம் பெற்ற பிறகு 1956-ல் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்தார். அமெரிக்காவில், ஏவுகணைகளுக்கான உயர் தொழில்நுட்ப சென்சார்களை உருவாக்கும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றினார். ஒரு வருடத்திற்குள் அதன் தலைமை பொறியாளரானார்.

1958-ல், அவர் தனது சொந்த நிறுவனமான காவ்லிகோவைத் தொடங்கினார். இப்போது, ​​கவ்லிகோ அழுத்தம் உணர்விகள் (pressure sensors) மற்றும் சிஸ்டம்களின் (systems) சிறந்த தயாரிப்பாளராக உள்ளது. இவை விமானம் மற்றும் வீட்டு உபகரணங்கள் போன்ற பல தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன. காவ்லிகோவின் அழுத்தம் மாற்றிகள் மிகவும் துல்லியமானவை, நிலையானவை மற்றும் நம்பகமானவை என்பதற்காக நன்கு அறியப்பட்டவை. இந்த சாதனங்கள் அழுத்தத்தை மின் சமிக்ஞையாக (electric signal) மாற்றுகின்றன.

2000-ம் ஆண்டில், காவ்லி தனது நிறுவனத்தை $340 மில்லியனுக்கு விற்று காவ்லி அறக்கட்டளையை (Kavli Foundation) நிறுவினார். உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பரந்த அளவிலான அடிப்படை ஆராய்ச்சியை ஆதரிப்பதை இந்த அறக்கட்டளை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வானியற்பியல், நரம்பியல், நானோ அறிவியல் மற்றும் கோட்பாட்டு இயற்பியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற 20 நிறுவனங்களை நடத்துகிறது.

வானியற்பியல், நானோ அறிவியல் மற்றும் நரம்பியல் ஆகிய மூன்று பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்படுவதாக காவ்லி விவரித்தார். இந்தத் துறைகள் 21-ம் நூற்றாண்டிலும் அதற்கு அப்பாலும் மிகவும் உற்சாகமானவை என்று அவர் நம்பினார். இதற்கான தொடக்கத்தில் பரிசு 2008-ல் அறிவிக்கப்பட்டு ஏழு விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது. இதுவரை 19 நாடுகளைச் சேர்ந்த 73 விஞ்ஞானிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 10 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.

காவ்லி பரிசு வானியற்பியல், நரம்பியல் மற்றும் நானோ அறிவியல் ஆகிய துறைகளில் நோபல் பரிசு போல வடிவமைக்கப்பட்டது. இருப்பினும், இது மிகவும் தொலைநோக்குக் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது. முந்தைய ஆண்டில் செய்த சாதனைகளுக்காக வழங்கப்படும் நோபல் பரிசு போலல்லாமல், காவ்லி பரிசுக்கு அத்தகைய கட்டுப்பாடு இல்லை.

காவ்லி பரிசில் ஒவ்வொரு துறைக்கும் $1 மில்லியன் ரொக்கப் பரிசு, ஒரு ஆவணச்சுருள் மற்றும் 7 செ.மீ விட்டம் கொண்ட பதக்கம் ஆகியவை அடங்கும். இந்த விழா நோபல் பரிசை விட விரிவானது, விருந்தினர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட காவ்லி அறக்கட்டளையுடன் இணைந்து, நார்வே அறிவியல் மற்றும் கடிதங்கள் நிறுவனங்கள் (Norwegian Academy of Science and Letters) மற்றும் நார்வே கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சகத்துடன் (Norwegian Ministry of Education and Research) இணைந்து இந்த பரிசு வழங்கப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள மதிப்புமிக்க அறிவியல் நிறுவனங்களால் பரிந்துரைக்கப்பட்ட, சீன அறிவியல் நிறுவனம் (Chinese Academy of Sciences), பிரெஞ்சு அறிவியல் நிறுவனம் (French Academy of Sciences), ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் கழகம் (Germany’s Max Planck Society), அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனம் (French Academy of Sciences) மற்றும் இங்கிலாந்தில் உள்ள அரச கழகம் (Royal Society in the UK) ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட மூன்று தேர்வுக் குழுக்கள் உள்ளன. இந்தக் குழுக்கள் கூட்டாக நார்வே அறிவியல் மற்றும் கடிதங்கள் நிறுவனங்களுக்கு (Norwegian Academy of Science and Letters) வெற்றியாளர்களை பரிந்துரைக்கின்றன.

விருது வழங்கும் விழா செப்டம்பர் 3-ம் தேதி ஒஸ்லோ நிகழ்ச்சி அரங்கில் (Oslo Concert Hall) நடைபெறும். அங்கு, நார்வே அரச குடும்ப உறுப்பினர்கள் பரிசுகளை வழங்குவார்கள்.

2024-ல் வெற்றியாளர்கள்

இந்த ஆண்டு, எட்டு விஞ்ஞானிகள் காவ்லி பரிசை வென்றனர். அவர்கள் அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் ஆவார்.

வானியற்பியல் : இந்த ஆண்டுக்கான வானியற்பியல் பரிசை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் சார்போன்னோ மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த சாரா சீகர் ஆகியோர் வென்றனர். வெளிக்கோள்களை கண்டுபிடித்ததற்காகவும், கோள்களின் வளிமண்டலத்தைப் பற்றிய ஆய்வுக்காகவும் இவர்கள் கௌரவிக்கப்பட்டனர். சார்போனியூ மற்றும் சீஜர் ஆகியோர் கிரகத்தின் வளிமண்டலத்தில் அணுப் பொருட்களைக் கண்டறியவும் அவற்றின் அகச்சிவப்பு வெப்பத்தை அளவிடவும் புதிய வழிகளை உருவாக்கினர். இது பெரிய மற்றும் சிறிய கிரகங்களைச் சுற்றியுள்ள வளிமண்டலங்களின் தனித்துவமான பண்புகளை விஞ்ஞானிகள் அடையாளம் காண உதவியது.

நுண்ணறிவியல் (NANOSCIENCE) : மாசசூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தைச் (Massachusetts Institute of Technology (MIT)) சேர்ந்த ராபர்ட் லாங்கர், சிகாகோ பல்கலைக்கழகத்தைச் (University of Chicago) சேர்ந்த அர்மண்ட் பால் அலிவிசாடோஸ் மற்றும் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சாட் மிர்கின் ஆகியோர் நானோ அறிவியல் பரிசை வென்றனர். சிகிச்சை மூலக்கூறுகளின் கட்டுப்படுத்தப்பட்ட வெளியீட்டிற்கான பொருட்களை லாங்கர் வடிவமைத்தார். அலிவிசாடோஸ் "குவாண்டம் குறிப்புகள்" (quantum dots) என்று அழைக்கப்படும் குறைக்கடத்தி படிகங்களை உருவாக்கினார். இந்தப் புள்ளிகள் இப்போது பயோ-இமேஜிங்கில் ஒளிரும் ஆய்வுகளாகப் (fluorescent probes in bio-imaging) பயன்படுத்தப்படுகின்றன. இது நோயாளிகளின் பல வண்ண நோயறிதல் இமேஜிங்கை அனுமதிக்கிறது மற்றும் மருத்துவம் மற்றும் உயிரியலில் ஆராய்ச்சியை ஆதரிக்கிறது. மிர்கின், கோள நியூக்ளிக் அமிலங்களை (spherical nucleic acids (SNA)) அறிமுகப்படுத்தினார். இது ஒரு புதியவகை அடர்த்தியாக செயல்படும் நியூக்ளிக் அமிலங்கள் ஒரு நானோ துகள்களின் மையத்தைச் சுற்றி கோள வடிவில் அமைக்கப்பட்டது. இந்த கோள நியூக்ளிக் அமிலங்களை (spherical nucleic acids (SNA)) உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியில் புதிய சாத்தியங்களைத் திறந்துவிட்டன.

நரம்பியல் : மாசசூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தைச் (MIT) சேர்ந்த நான்சி கன்விஷர், ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தைச் (Rockefeller University) சேர்ந்த வின்ரிச் ஃப்ரீவால்ட் (Winrich Freiwald) மற்றும் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் (University of California at Berkeley) சேர்ந்த டோரிஸ் சாவோ ஆகியோர் நரம்பியல் பரிசை வென்றுள்ளனர். முக அங்கீகாரத்துடன் மூளை எவ்வாறு இணைகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக பல ஆண்டுகளாக அவர்கள் செய்த பணிக்காக இந்த விருதைப் பெற்றுள்ளனர். முகங்களை உள்வாங்கும் மூளையின் குறிப்பிட்ட பகுதியை கின்விஷர் கண்டுபிடித்தார். Tsao மற்றும் Freiwald பின்னர் இந்த செயல்பாட்டிற்காக மனித மூளை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை மேலும் புரிந்து கொள்ள மூளை செல்களிலிருந்து இமேஜிங் மற்றும் பதிவுகளைப் பயன்படுத்தினர்.

Share:

ஜி-7 உச்சிமாநாட்டை இத்தாலி நடத்துகிறது : குழுவாக்கம் ஏன் உருவாக்கப்பட்டது மற்றும் இந்த ஆண்டு செயல்திட்டத்தில் என்ன உள்ளது? -சைமா மேத்தா

 வளர்ந்த நாடுகளுக்கான பொருளாதார மன்றமாக 1970களில் ஜி-7உருவாக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, அதன் பங்கு மாறிவிட்டது. சமீபகாலமாக, அதன் அமைப்பு பற்றி பல விமர்சனங்கள் உள்ளன. அதைப்பற்றி ஒரு விரைவான கண்ணோட்டம்.

ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு ஜூன் 13 முதல் 15 வரை இத்தாலியின் அபுலியா பகுதியில் நடைபெறுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இத்தாலி ஜி-7 தலைமைப் பொறுப்பை ஏற்றது.

இத்தாலி, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அதன் உறுப்பு நாடுகள் ஆகும். சிக்கலான உலகளாவிய சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், ஜி7 க்கு ஒரு முக்கியமான நேரத்தில் இந்த உச்சிமாநாடு வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்க உள்ளார். பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில் "விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச அமைப்பை" பாதுகாப்பது, மத்திய கிழக்கு மோதலுக்கு தீர்வு காண்பது மற்றும் வளரும் நாடுகளுடன், குறிப்பாக ஆப்பிரிக்காவில் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது ஆகியவை நிகழ்ச்சி நிரலில் அடங்கும். முக்கிய முன்னுரிமைகளில் இடம்பெயர்வு, காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு மற்றும் மனிதகுலத்திற்கான செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கங்கள் ஆகியவை அடங்கும்.

ஜி-7-ன் வரலாறு, அது எவ்வாறு உருவானது மற்றும் இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படும் முக்கிய பிரச்சினைகள் பற்றிய சுருக்கமான கண்ணோட்டம் இங்கே உள்ளது.

ஜி-7 என்றால் என்ன?

ஜி-7 ஆனது 1973-ல் பிரான்சின் பாரிஸில் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்துடன் தொடங்கியது. இது எண்ணெய் நெருக்கடி, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அமெரிக்க டாலர் தங்கத்துடன் பிணைக்கப்பட்ட பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் (Bretton Woods system) சரிவு போன்ற பொருளாதார சவால்களுக்கு விடையிறுப்பாக இருந்தது.

அந்த நிலையான விகிதத்தில் டாலர் மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்பட்டதால், மாற்று விகிதங்களுக்கான புதிய அமைப்பு தேவை, உலகளாவிய ஒத்துழைப்பும் தேவைப்பட்டது.

எனவே, முக்கியத் தொழில்மயமான ஜனநாயக நாடுகள் பொதுவான சவால்களைச் சமாளிக்க பொருளாதாரக் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் ஒரு மன்றத்தை உருவாக்க முடிவு செய்தனர். முதல் ஜி-7 உச்சி மாநாடு 1975-ல் பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய இராஜ்ஜியம், அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரான்சின் ராம்போய்லெட்டில் நடைபெற்றது. அடுத்த ஆண்டு கனடா இந்தக் குழுவில் இணைந்தது.

1977 முதல், ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் (இப்போது ஐரோப்பிய ஒன்றியம்) பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யா 1998-ல் உறுப்பினரானது, குழுவை ஜி8 ஆக்கியது, ஆனால் கிரிமியாவை இணைத்ததற்காக 2014-ல் இடைநீக்கம் செய்யப்பட்டது.


ஜ7 எவ்வாறு உருவாகியுள்ளது மற்றும் அதன் பொருத்தம் குறித்த கேள்விகள்

ஜி7, முதலில் ஒரு பொருளாதார மன்றம், பல்வேறு உலகளாவிய பிரச்சினைகளை சமாளிக்க காலப்போக்கில் வளர்ந்துள்ளது. இது நிரந்தர நிர்வாக அமைப்பு இல்லாமல் இயங்குகிறது, அதன் தலைவர் பதவி ஒவ்வொரு ஆண்டும் சுழற்சிமுறையில் இருக்கும், மேலும் ஒரு தற்காலிக செயலகமும் செயல்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், ஜி-7 உச்சிமாநாடு அரசியல் கடமைகளை கோடிட்டுக் காட்டும் அறிக்கையுடன் முடிவடைகிறது. உலகளாவிய நிர்வாகத்தில் செல்வாக்கு செலுத்துவதிலும், செயல்திட்டங்களை அமைப்பதிலும், முடிவுகளை எடுப்பதிலும் இந்த உச்சிமாநாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஜி-7, முதலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிற முக்கிய பொருளாதாரங்களை உள்ளடக்கியது, பல ஆண்டுகளாக அதன் உலகளாவிய பொருளாதார செல்வாக்கு சரிவைக் கண்டது. புரூகலின் கூற்றுப்படி, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவர்களின் பங்கு 1970களில் சுமார் 50%-ல் இருந்து 2018-ல் சுமார் 30% ஆகக் குறைந்தது. சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் விரைவான பொருளாதார வளர்ச்சியால் இந்தச் சரிவுக்குக் காரணம், மேலும் உள்ளடக்கிய உலகளாவிய நிர்வாகக் கட்டமைப்பிற்கான அழைப்பு.

இதற்கு நேர்மாறாக, 2008 நிதிநெருக்கடிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஜி20, மேலும் உள்ளடக்கிய மாற்றாகக் கருதப்படுகிறது. ஜி20-ன் உருவாக்கம் நவீன நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதில் ஜி-7-ன் வரம்புகளை எடுத்துக்காட்டுகிறது என்று ப்ரூகல் (Bruegel) வாதிடுகிறார். இருப்பினும், அதன் பெரிய மற்றும் மாறுபட்ட உறுப்பினர்களின் காரணமாக, ஜி20 நெருக்கடி இல்லாத காலங்களில் முடிவெடுப்பதில் திறமையற்றதாக விமர்சிக்கப்படுகிறது.

ப்ரூகல் புதுப்பிக்கப்பட்ட "ஜி7+" ஐ முன்மொழிகிறார், இது ஒரு யூரோ-மண்டல பிரதிநிதியை சேர்க்கும் மற்றும் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவற்றை உள்ளடக்கியது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மக்கள்தொகை ஆகிய இரண்டின் அடிப்படையில் தற்போதைய உலகப் பொருளாதார நிலப்பரப்பை சிறப்பாகப் பிரதிபலிக்கும் நோக்கத்தை சரிசெய்தலை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜி-7க்குள் உள் ஒருங்கிணைப்பு பற்றிய கவலைகளும் உள்ளன. உதாரணமாக, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மற்ற ஜி-7 தலைவர்களுடன் அடிக்கடி மோதல் ஏற்பட்டது மற்றும் காலநிலை பிரச்சினைகள் குறித்த 2019 உச்சிமாநாட்டையும் தவிர்த்தார்.

இந்த சவால்கள் இருந்தபோதிலும், ஜி-7 குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. இது பொருளாதாரக் கொள்கைகளை ஒருங்கிணைத்துள்ளது, தடையற்ற வர்த்தகத்திற்காக வாதிட்டது, உலகளாவிய நிர்வாகத்தை பாதித்தது மற்றும் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை ஆதரித்தது.

2024 ஜி-7 உச்சிமாநாட்டின் செயல்திட்டத்தில் என்ன இருக்கிறது?

இத்தாலியில் நடைபெறவுள்ள ஜி7 உச்சிமாநாடு பல காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த உச்சிமாநாடு பல முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது:


1. பணவீக்கம் மற்றும் வர்த்தக முரண்பாடுகளுக்கு மத்தியில் உலகப் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான பொருளாதாரக் கொள்கைகளை ஒருங்கிணைத்தல்.


2. கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான உத்திகளைப் பற்றி விவாதித்தல் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் மற்றும் நிலையான எரிசக்தி ஆதாரங்களை மேம்படுத்தவும். சமீபத்திய காலநிலை பதிவுகள் காரணமாக கூட்டு நடவடிக்கை முக்கியமானது.


3. கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து படிப்பினைகளின் அடிப்படையில் தொற்றுநோய் தயார்நிலை மற்றும் தடுப்பூசி விநியோகம் உள்ளிட்ட உலகளாவிய சுகாதார முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்தல்.


4. சீனா மற்றும் ரஷ்யாவுடனான உறவுகள் மற்றும் தற்போதைய உலகளாவிய மோதல்கள் உள்ளிட்ட புவிசார் அரசியல் பதட்டங்களை நிவர்த்தி செய்தல்.


5. உலகளாவிய வளர்ச்சிக்கு பயனளிக்கும் வகையில் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள், தரவுத் தனியுரிமை மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றின் ஒழுங்குமுறையை ஆராயுங்கள்.


நூலாசிரியர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பயிற்சியாளராக உள்ளார்.

original link:

https://indianexpress.com/article/explained/explained-global/italy-g7-summit-modi-origins-relevance-9390135/


Share:

கொழுப்பு கல்லீரல் நோய் (fatty liver disease) பெருந்தொற்றை சமாளிப்பது குறித்து . . . -முருகன் என்., ஆகாஷ் ராய்

 கொழுப்பு கல்லீரல் (fatty liver) நோய்க்கும் உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பின் அளவு உள்ளிட்ட வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது

இந்த ஆண்டு சர்வதேச கொழுப்பு கல்லீரல் தினத்தின் கருப்பொருள் "இப்போது செயல்படுங்கள், இன்று சோதனையிடுங்கள்" (“‘Act Now, Screen Today”) என்பதாகும். இது ஆண்டுதோறும் ஜூன் மாதம் கடைப்பிடிக்கப்படும் விழிப்புணர்வு முயற்சியாகும். இந்த கருப்பொருள் முன்பைவிட இன்று மிகவும் அவசரமானது. கல்லீரல் நோய்கள் முக்கியமாக மது அருந்துவதால் ஏற்படும் என்று மக்கள் நினைத்தார்கள். அதிகப்படியான மது அருந்துவது தீவிர கல்லீரல் நோய்க்கு ஒரு முக்கிய காரணமாகும்.

கடந்த சில ஆண்டுகளாக, மது அருந்துதல் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் ஆரோக்கியத்திற்கு (non-alcoholic fatty liver disease) ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவாகிவருகிறது. கொழுப்பு கல்லீரல் வளர்சிதை மாற்ற ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் ஆபத்து போன்றவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. இந்த சுகாதார சீர்கேடு இப்போது "வளர்சிதை மாற்ற செயலிழப்புடன் தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோய்" (“Metabolic dysfunction-associated steatotic liver disease” (MASLD)) என்று அழைக்கப்படுகிறது. கல்லீரல் ஆரோக்கியத்தில் எவ்வாறு  கவனம் செலுத்துகிறோம் என்பதை இது மாற்றியுள்ளது. சோதனை மற்றும் சிகிச்சை ஆகியவை முக்கியமானது.

பெருகும் சுமை

கொழுப்பு கல்லீரல் நோய் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது.  வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய ஸ்டீட்டோஹெபடைடிஸ், மாஷ் (Metabolic dysfunction-associated steatohepatitis (MASH)), கல்லீரல் அழற்சி மற்றும் வடுக்களை (scarring) ஏற்படுத்தும் ஒரு கடுமையான வகை, நாள்பட்ட கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில், (வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய ஸ்டீட்டோஹெபடைடிஸ்), 25-30% மக்களை பாதிக்கிறது. இந்தியாவில், 2022-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொழுப்பு கல்லீரல் பாதிப்பு பெரியவர்களில் 38.6% ஆகவும், பருமனான குழந்தைகளில் 36% ஆகவும் உள்ளது.

கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி ஆகியவற்றுக்கு இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இதில் உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிகக் கொழுப்பு அளவு ஆகியவை அடங்கும். இந்த நிலைமைகள் உள்ளவர்கள் பெரும்பாலும் "வளர்சிதை மாற்ற செயலிழப்புடன் தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோயின்” (“Metabolic dysfunction-associated steatotic liver disease” (MASLD)) உயர் விகிதங்களைக் கொண்டுள்ளனர்: நீரிழிவு நோய்க்கு 55.5% முதல் 59.7%, உடல் பருமனுக்கு 64.6% முதல் 95% மற்றும் கடுமையான வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கு 73%. அதிகப்படியான சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகளை சாப்பிடுவது வளர்சிதை மாற்ற சிக்கல்களை ஏற்படுத்துவதன் மூலம் இந்த சிக்கல்களை மோசமாக்குகிறது. உடலில் அதிகப்படியான குளுக்கோஸ் கிடைக்கும் போது, ​​செல்கள் குளுக்கோஸை எடுத்துக் கொள்ள அதிக இன்சுலினை உற்பத்தி செய்கிறது. ஆனால், தொடர்ந்து அதிக கார்போஹைட்ரேட்டுகளை உட்கொண்டால், அது இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கிறது. அங்கு செல்கள் இன்சுலினுக்கு குறைவாக பதிலளிக்கின்றன.

இன்சுலின் எதிர்ப்பு உடல் ஆற்றலை எவ்வாறு பயன்படுத்துகிறது மற்றும் கல்லீரலில் சேமிக்கப்படும் கூடுதல் குளுக்கோஸை கொழுப்பு அமிலங்களாக மாற்றுகிறது. இது கல்லீரல் செல்களை கொழுப்பால் நிரப்புகிறது. இதன் விளைவாக கொழுப்பு கல்லீரல் உருவாகிறது. இந்த தொடர்ச்சியான சேதம் இறுதியில் கல்லீரலின் வேலை செய்யும் திறனை பாதிக்கலாம். எளிய கொழுப்பு கல்லீரலில் இருந்து ஸ்டீடோஹெபடைடிஸ் மற்றும் சிரோசிஸ் போன்ற தீவிர நிலைகளுக்கு நகரும். அவை 'வளர்சிதை மாற்ற செயலிழப்புடன் தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோயின்  முக்கிய அறிகுறிகளாகும் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை (liver transplant) தேவைப்படலாம்.

கொழுப்பு கல்லீரல் நோய் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஏனெனில், இவை ஆரம்பத்தில் அறிகுறிகளைக் காட்டாது. குறிப்பிடத்தக்க கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, நோய் கண்டறிதல் சில நாட்களுக்கு பின்னர் நிகழ்கிறது. ஆரம்பகால கண்டறிதல் முக்கியமானது மற்றும் முழுமையான சுகாதாரப் பரிசோதனையை உள்ளடக்கியது: விரிவான வரலாறு, உடல் பரிசோதனை (உயரம், எடை, பிஎம்ஐ, வயிற்று சுற்றளவு மற்றும் இரத்தப் பரிசோதனைகள் (இதயம் மற்றும் இரத்த எண்ணிக்கை, சர்க்கரை போன்ற வளர்சிதை மாற்ற அபாயங்களை உள்ளடக்கியது. இந்த நடவடிக்கைகள் சுகாதாரப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும்.

அப்பல்லோ மருத்துவமனைகளில், 50,000 பேர் பரிசோதிக்கப்பட்டவர்களில், 33% பேருக்கு அல்ட்ராசவுண்ட் மூலம் கொழுப்பு கல்லீரல் கண்டறியப்பட்டது, ஆனால் 3ல் ஒருவருக்கு மட்டுமே அவர்களின் இரத்தப் பரிசோதனையில் கல்லீரல் என்சைம்கள் அதிகரித்துள்ளன.

இரத்தப் பரிசோதனைகள் இதயம் மற்றும் இரத்த எண்ணிக்கை, சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவுகள், கல்லீரல் செயல்பாடு மற்றும் சிறுநீரக ஆரோக்கியம் போன்ற வளர்சிதை மாற்ற அபாயங்களை சரிபார்க்கின்றன. அப்பல்லோ மருத்துவமனைகளில், 50,000 பேரில் பரிசோதிக்கப்பட்டவர்களில், 33% பேருக்கு அல்ட்ராசவுண்ட் மூலம் கொழுப்பு கல்லீரல் கண்டறியப்பட்டது. ஆனால் 3ல் ஒருவருக்கு மட்டுமே அவர்களின் இரத்தப் பரிசோதனையில் கல்லீரல் நொதிகள் அதிகரித்துள்ளன. கல்லீரல் நோயைத் சோதனையிடுவதற்கு வயிற்று அல்ட்ராசவுண்ட் முக்கியமானது மற்றும் கொழுப்புக் கல்லீரலைக் கண்டறிவதில் ஒரு முக்கியமான முதல் படியாகும். இருப்பினும், கதிரியக்க வல்லுநர்களின் வரம்புக்குட்பட்ட இருப்பு மற்றும் கடுமையான ஒழுங்குமுறை ஒப்புதல்கள் காரணமாக இது பெரும்பாலும் சுகாதாரச் சோதனைகளில் கவனிக்கப்படுவதில்லை.

மேம்பட்ட கல்லீரல் சோதனைகளில் கல்லீரல் ஃபைப்ரோஸிஸ் மதிப்பீடு கல்லீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கண்டறியும்.  அதிர்வு-கட்டுப்படுத்தப்பட்ட நிலையற்ற எலாஸ்டோகிராபி போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இது மிகவும் துல்லியமாக பாதிப்பின் அளவைக் கண்டறிகிறது. இந்த எளிய, ஆக்கிரமிப்பு இல்லாத கருவி கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களை மதிப்பிடுவதற்கு கல்லீரல்  இறுக்கத்தை (liver stiffness) அளவிடுகிறது. சிகிச்சையின் முன்னேற்றம் மற்றும் பதில்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும் இது பயன்படுத்தப்படலாம்.

அல்ட்ராசவுண்ட், விரிவான வளர்சிதை மாற்ற சோதனையிடல் மற்றும் எலாஸ்டோகிராபி ஆகிய கருவிகள் ஒன்றாக இணைந்து, கல்லீரல் நோய்களை ஆரம்ப நிலையிலேயே திறம்பட கண்டறிந்து நிர்வகிக்க ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்குகின்றன.

தனிப்பயனாக்கம் என்பது முக்கியமானது

சோதனைகளின் தேர்வு மற்றும் அவை நிகழ்த்தப்படும் அதிர்வெண் ஆகியவை தனிப்பயனாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த முடிவு குடும்ப வரலாறு, வாழ்க்கை முறை மற்றும் ஏற்கனவே இருக்கும் சுகாதார நிலைமைகள் போன்ற தனிப்பட்ட ஆபத்து காரணிகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். மருத்துவர்கள் வயது அல்லது உடல் குறிப்பான்களின் அடிப்படையில் மட்டும் பொதுவான நடவடிக்கைகளைச் செய்யக்கூடாது. தொற்றாத நோய்கள் குழந்தைகள் உட்பட பலதரப்பட்ட மக்களை அதிகளவில் பாதிக்கின்றன.

பல காரணிகள் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. எனவே, ஒருங்கிணைந்த உத்திகள் அவசியம். உணவுமுறை மாற்றங்கள், வழக்கமான உடல் செயல்பாடு மற்றும் கல்லீரல் நோய் அபாயங்களைக் குறைக்க பயனுள்ள எடை மேலாண்மை ஆகியவை இதில் அடங்கும்.

கல்லீரல் ஒரு "அமைதியான உறுப்பு" ஆகும். இது ஒரு மேம்பட்ட நிலையை அடையும் வரை பொதுவாக சேதத்தின் அறிகுறிகளைக் காட்டாது. வாழ்க்கை முறைத் தேர்வுகளின் நீண்டகால தாக்கத்தை புரிந்துகொள்வது அவசியம். நாம் நமது ஆரோக்கியத்தில்  தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும்.  நாம்  உணவு உட்கொள்வதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அடிக்கடி பரிசோதனை  செய்ய வேண்டும். நல்ல ஆரோக்கியமே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளமாகும்.

 முருகன் என்., சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கல்லீரல் நோய் வல்லுநர் (Hepatologist) மற்றும் மூத்த ஆலோசகர். ஆகாஷ் ராய்,  கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் கல்லீரல் நோய் வல்லுநர் (Hepatologist).

original link:
Share:

கூட்டணி அரசாங்கங்கள் பொருளாதார சீர்திருத்த செயல்திட்டங்களை தாமதப்படுத்துகிறதா? -சோபனா கே நாயர்

2014 மக்களவைத் தேர்தல் வரை, இந்தியாவில் 21 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சியின் மூலம் அரசாங்கங்கள் இருந்தன. பின்னர், 2014 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, மக்களவையில் பாஜகவுக்கு 240 இடங்கள் உள்ளன. இதனால், இப்போது மீண்டும் ஒரு கூட்டணியுடன் ஆட்சியில் அமைந்துள்ளது. கூட்டணி அரசியல் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) பலவீனமானத் தலைமை அதன் இலட்சிய சீர்திருத்தங்கள் குறித்த சட்டத்தை நிறைவேற்றுவதை சவாலாக மாற்றக்கூடும் என்று ஃபிட்ச் கூறினார். பொருளாதார சீர்திருத்தங்களுக்கு கூட்டணி அரசுகள் தடையாக உள்ளதா? கே.கே.கைலாஷ் மற்றும் சஞ்சய் ரூபரேலியா ஆகியோர் இந்த கேள்வியை விவாதிக்கின்றனர். உரையாடலை சோபனா கே. நாயர் நெறிப்படுத்துகிறார்.

கூட்டணி அரசுகள் பல கொள்கைகளை விட்டுக்கொடுக்குமா?

கே.கே.கைலாஷ் : இந்தக் கேள்வி இரண்டு அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த அனுமானங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். முதலாவதாக, ஒற்றைக் கட்சி அரசாங்கங்கள் இயற்கையான ஒழுங்கு என்றும், பல கட்சி அரசாங்கங்கள் ஒரு பிறழ்வு என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்த அரசாங்கங்கள் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், ஒப்பீட்டு ஆய்வுகள் இது உண்மையல்ல என்று காட்டுகின்றன. இரண்டாவதாக, ஒற்றைக் கட்சி அரசாங்கம் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாக செயல்படுகிறது. எவ்வாறாயினும், இந்த இரண்டு அனுமானங்களையும் நீக்கியவுடன், கூட்டணி மற்றும் ஒற்றைக் கட்சி அரசாங்கங்களுக்கு இடையே குறைவான வேறுபாடுகளைக் காண்போம். எப்போதும் போட்டி எண்ணங்களும் ஆர்வங்களும் இருக்கும். இதன் விளைவாக, இரண்டு வகையான அரசாங்கங்களிலும் கொள்கை சமரசங்களையும் பேரங்களையும் நாம் காண வாய்ப்புள்ளது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், பல கட்சி அரசாங்கங்களில், சமரசங்கள் மிகவும் பகிரங்கமாகவும், அவை மிகவும் வெளிப்படையானவையாகவும் உள்ளன.  கூட்டணி அரசுகளுடனான இந்தியாவின் அனுபவம் மோசமாக இல்லை. ஒற்றைக் கட்சி அரசாங்கங்களுடன் ஒப்பிடும்போது அரசாங்கங்கள் சிறப்பாக செயல்பட உதவும் சரிபார்ப்புகளும் சமநிலைப்படுத்தலும் உள்ளன.

சஞ்சய் ரூபரேலியா : பொருளாதார வளர்ச்சிக்கு சீர்திருத்தம் தேவை. சீர்திருத்தத்திற்கு தீர்க்கமான தன்மை தேவை என்று பலர் நம்புகிறார்கள். முடிவெடுப்பதற்கு, ஒற்றைக் கட்சி பெரும்பான்மை அரசாங்கம் தேவை என்று கருதப்படுகிறது. இருப்பினும், இது மிகவும் சிக்கலானது. அரசாங்கத்தின் வடிவம் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் பல காரணிகளில் ஒன்றாகும். பொருளாதாரத்தை தாராளமயமாக்கும் செயல்முறை ஜனதா கட்சி அரசாங்கத்தின் கீழ் தற்காலிகமாகத் தொடங்கியது. பின்னர் ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் தேசிய முன்னணி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. நரசிம்மராவின் குறைவான பெரும்பான்மைக் கொண்ட அரசு அதை முழுமையாக அறிமுகப்படுத்தியது. அப்போதிருந்து, அது ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கீழும் அதற்கு அப்பாலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முந்தைய கூட்டணி அரசாங்கங்கள் கூடுதலான சமூக ஜனநாயக செயற்பாட்டியலுக்கு அவை உறுதிபூண்டிருந்த போதிலும் சமூகக் கொள்கை சீர்திருத்தங்களில் பின்னடைவுகளை எதிர்கொண்டன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) உரிமைகள் அடிப்படையிலான நலன்சார்ந்த முன்னுதாரணத்தை அறிமுகப்படுத்தியது. கூட்டணி அரசாங்கங்களில் பேச்சுவார்த்தை, பேரம் பேசுவது  மற்றும் சமரசம் ஆகியவை கூட்டணிக் கட்சிகளுக்கு பல மறுப்புரிமை (வீட்டோ-veto) விதிமுறைகளை (veto points) உருவாக்கும். "பலவீனமான சீர்திருத்தத்திற்கு வலுவான ஒருமித்தக் கருத்து உள்ளது" என்று மான்டெக் சிங் அலுவாலியா ஒருமுறை கூறியுள்ளார். இதன் பொருள் என்னவென்றால், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் கட்சிகள் குறைந்த தீவிர மாற்றத்திற்கும் அதிக கொள்கை நிலைத்தன்மைக்கும் வழிவகுக்கும். இது நீண்ட கால முதலீடுகளை எளிதாக்குகிறது. ஒற்றைக் கட்சி பெரும்பான்மை அரசாங்கங்கள் மிகக் குறைந்த காசோலைகள் மற்றும் சமநிலைகளைக் கொண்டுள்ளன. இது கடந்த பத்தாண்டுகளில் காணப்பட்டதைப் போல சாதகமற்ற கொள்கை முடிவுகளுக்கு வழிவகுக்கும்.


கடந்த காலங்களில் கூட்டணி அரசாங்கங்கள் பொருளாதார செயல்திட்டத்தில் எவ்வாறு செயல்பட்டன?

கே.கே.கைலாஷ் : அரசாங்கங்களுக்கும் அவற்றின் கொள்கைகளுக்கும் இடையே பெரும் தொடர்ச்சி உள்ளது. இதில், பெரிய பின்னடைவுகள் காணப்படவில்லை. வெவ்வேறு அரசாங்கத்தின் கொள்கை மாற்றம் 1991 முதல் படிப்படியாகவும் அதிகரித்தும் வருகிறது. கட்சிகளுக்கிடையிலான பகிரங்க பேரம்பேசுவது வெவ்வேறு கருத்துக்கள் கேட்கப்பட்டு இடமளிக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. காலப்போக்கில், கூட்டணிகள் வெவ்வேறு குரல்களை உள்ளடக்கிய முடிவெடுக்கும் செயல்முறைகளை நிறுவனமயமாக்கியுள்ளன.  மிக முக்கியமான பிரச்சினைகளை ஆராய வி.பி.சிங் அரசாங்கம் ஆறு குழுக்களை அமைத்தது. இவை, அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தின் கீழ் 'அமைச்சர்கள் குழு' (Group of Minister) என்று செயல்பட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் தொடர்ந்தன.


சீர்திருத்தங்கள் என்று வரும்போது, கூட்டணி அரசாங்கங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. ஒரு கட்சி அரசில், வேளாண் சட்டங்கள் போன்ற முடிவுகள் அனைவரையும் ஒன்றிணைக்காமல் எடுக்கப்பட்டன. பேச்சுவார்த்தை அதிகமாக இருப்பதால் கூட்டணியில் இது நடக்க வாய்ப்பில்லை.


சஞ்சய் ரூபரேலியா : மத்திய-மாநில உறவுகளை மேம்படுத்தும் அமைப்புகள் கூட்டணி அரசுகளில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன. ஏனெனில், கூட்டணிக் கட்சிகள் பெரும்பாலும் பிராந்தியக் கட்சிகளாக இருக்கின்றன. கொள்கை உருவாக்கும் செயல்முறை மிகவும் சவாலானதாக இருந்தாலும் கூட, அதிக தகவலறிந்ததாக இருக்கும். கூட்டணி அரசுகளில் பேச்சுவார்த்தை நடத்துவதும் கசப்பானதாக மாறலாம். இதனால், கூட்டணி அரசுகளில் ஏற்பட்ட சீர்திருத்தங்கள் தேக்கமடைந்த எடுத்துக்காட்டுகள் உள்ளன.


சஞ்சய் ரூபரேலியா : நிச்சயமாக. ஜனதா கட்சி அரசு ஏழைகளுக்கு ஆதரவான, தொழிலாளர் நலன் சார்ந்த கொள்கைகளில் உறுதியாக இருந்தது. இருப்பினும், ஒப்பீட்டளவில் வசதியான சமூகங்கள் மற்றும் சாதிகளுக்கு தொழில்துறை உரிமம் ரத்து மற்றும் விவசாய மானியங்களையும் அது அதிகரித்தது. இதனால் நிதிப் பற்றாக்குறை அதிகரித்தது. இந்த அரசாங்கத்தின் முடிவில் இந்தியா ஒரு மந்தநிலையை எதிர்கொண்டது. இது உலகளாவிய மந்தநிலையுடன் (recession) ஒத்துப்போனது. ஒட்டுமொத்தமாக, கூட்டணி அரசாங்கங்கள் இயல்பாகவே மோசமானவை அல்ல. சுதந்திர இந்திய வரலாற்றில் ராஜீவ்காந்தி தலைமையிலான அரசு அதிக இடங்களைப் பெற்றிருந்தது. அது பொருளாதார தாராளமயமாக்கலைத் தொடர முயன்றது. ஆனால், காங்கிரசுக்குள் இருந்த உள் கட்டுப்பாடுகள் அந்த செயல்திட்டத்தைத் தடுத்தன.

கே.கே.கைலாஷ் : பெரும்பாலும், நாங்கள் முடிவை மட்டுமே பார்க்கிறோம். முடிவு எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதை அல்ல. முடிவெடுப்பதில் அதிகமான மக்கள் ஈடுபடும்போது, கொள்கைகள் நிலையானதாகவும் நீண்ட காலம் நீடிப்பதாகவும் இருக்கும். முடிவெடுக்கும் செயல்முறை முடிவைப் போலவே முக்கியமானது.

கடந்த ஐந்தாண்டுகளில், பகிர்ந்தளிக்கத்தக்க வரிகளில் மாநில அரசின் பங்கு குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. இப்போது ஒரு கூட்டணி அரசு ஆட்சியில் இருப்பதால் மாநிலங்களுக்கு அதிக பங்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா?

சஞ்சய் ரூபரேலியா : ஒரு தேசிய கூட்டணியில் மாநில அரசுகளின் பங்கு உயர்ந்துள்ளது. இந்த கேள்வியைக் கேட்பது முரண்பாடானது. ஏனென்றால், பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலில் ஆட்சிக்கு வந்தபோது, "கூட்டுறவு கூட்டாட்சி" (cooperative federalism) மூலம் இந்திய கூட்டாட்சியை வலுப்படுத்துவதாக உறுதியளித்தார். மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரிகளில் மாநில அரசுகளின் பங்கை அதிகரிப்பதற்கான 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டது.

இருப்பினும், கடந்த பத்தாண்டில், பிரிக்கக்கூடிய தொகுப்பின் ஒரு பகுதியாக இல்லாத சிறப்பு செஸ் வரிகள் (cesses) அறிமுகப்படுத்தப்பட்டதால் வருவாயில் ஒன்றிய அரசின் பங்கு அதிகரித்துள்ளது. மேலும், திட்டக் குழுவும் கலைக்கப்பட்டது. பகிர்ந்தளிக்கப்படுவதில் குறைபாடு இருந்தாலும், அது பேச்சுவார்த்தைக்கு ஒரு இடத்தை வழங்கியது. அதற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள நிதி ஆயோக், தொழில்நுட்ப ரீதியாகவும் ஒன்றிய அரசுக்கு அதிக கடமைப்பட்டதாகவும் உள்ளது.

கடந்த பத்தாண்டுகளில், முடிவெடுப்பது பிரதமர் அலுவலகம் வரை அரசியல் ரீதியாக மையப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து நேரடியாக வருவதாக தொகுக்கப்பட்ட சமூகநலச் சலுகைகள் மீதும் அதிகக் கட்டுப்பாடு உள்ளது. இந்த மையப்படுத்தல் நிறைய அதிருப்தியைத் தூண்டுகிறது.

கே.கே.கைலாஷ் : ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையேயான வரிப் பங்கீடு சிக்கலானது. மாநிலங்களுக்கு கிடைக்கும் நிதிப் பொருளாதாரத்தின் செயல்திறனைப் பொறுத்தது. பொருளாதாரம் நன்றாக இருக்கும்போது, விநியோகிக்க அதிக பணம் நேர்மாறாகவும் இருக்கும். மாநிலங்களுக்கு இடையேயான பிராந்திய மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒன்றிய மற்றும் மாநிலங்களுக்கு இடையே ஒரு சாதகமான ஏற்றத்தாழ்வு உள்ளது. பதற்றத்தின் மற்றொரு ஆதாரம் ஜிஎஸ்டியின் கீழ் வரிகளைப் பகிர்வதாகும். இதன் மூலம், பேச்சுவார்த்தைகள் 17 ஆண்டுகள் நீடித்தன. ஆனால், இந்த முறை அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டபோது அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொள்ளவில்லை. GST-க்கு முன் அதிக வரி விதிக்கப்பட்ட பொருட்கள் குறைந்த வரி வரம்புக்குள் போடப்பட்டு, மாநில வருவாய் குறைவதற்கு வழிவகுத்தது. GST-க்கு முந்தைய ஆட்சியின் கீழ், குறைவான பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது. மாநிலங்களின் கவலைகள் முழுமையாக கேட்கப்படவில்லை அல்லது அவர்கள் தங்கள் கவலைகளை தெளிவாக வெளிப்படுத்தவில்லை என்று தெரிகிறது. பொதுவாக, GST முறையால் மாநிலங்களுக்கு எந்தப் பலனும் இல்லை.


தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது பதவிக்காலத்தை இப்போதுதான் தொடங்குகிறது. அவர்களின் தொகுதி மக்களுக்கும் இதே போன்ற பொருளாதாரப் பார்வை இருப்பதை நீங்கள் காண்கிறீர்களா?

சஞ்சய் ரூபரேலியா : பாஜகவுக்கு அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையாக இருக்க வேண்டும். ஆனால், அது அனைத்து முக்கிய அமைச்சகங்களையும் வைத்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளின் முடிவெடுக்கும் மற்றும் நிர்வாக பாணி கணிசமாக மாறுமா என்பது நிச்சயமற்றது. கூட்டணிக் கட்சிகளின் பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆரம்பத்தில் தாராளவாதியாக இருந்தார். இதில் முக்கிய வேறுபாடு அதிகாரப் பகிர்வு மற்றும் முடிவெடுக்கும் பாணியில் உள்ளது.

CSDS-லோக்நிதி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு | அரசாங்கத்தின் செயல்திறன் மற்றும் வாக்களிப்பு முறைகளில் அதன் தாக்கத்தை மதிப்பீடு செய்தல்

கே.கே.கைலாஷ் : அனைத்து தரப்பினரும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை ஆதரிப்பதால், பொருளாதாரக் கொள்கைகளில் எந்த முரண்பாட்டையும் நான் காணவில்லை. முடிவுகளின் வேகம் மட்டுமே வித்தியாசமாக இருக்கலாம். இது முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன மற்றும் பயன்படுத்தப்படும் வழிமுறைகளைப் பொறுத்தது. பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நிறுத்தப்படுமா அல்லது முன்னேறுமா என்பதை இந்த காரணிகள் சுட்டிக்காட்டலாம்.

கே.கே. கைலாஷ் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பணிபுரிகிறார். சஞ்சய் ரூபாரேலியா டொராண்டோ மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்தின் இணைப் பேராசிரியராக உள்ளார், அங்கு அவர் ஜரிஸ்லோவ்ஸ்கி ஜனநாயகத் தலைவராகவும் உள்ளார். 'Divided We Govern: Coalition Politics in Modern India என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

Original link:

https://www.thehindu.com/opinion/op-ed/do-coalition-governments-slow-down-the-economic-reforms-agenda/article68286644.ece



Share: