புகையிலை தொற்றுநோயைக் கையாளுதல் -ரித்மா கவுல்

 உலகளாவிய புகையிலை பயன்பாடு குறித்த சமீபத்திய WHO அறிக்கை, புகையிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2000-ஆம் ஆண்டில் 1.38 பில்லியனில் இருந்து 2024-ல் 1.2 பில்லியனாகக் குறைந்துள்ளதாகக் காட்டுகிறது.


2010-ஆம் ஆண்டு முதல், புகையிலை பயன்பாடு 120 மில்லியன் மக்களால் குறைந்துள்ளது. இது 27% சரிவு அடைந்துள்ளது. அனைத்து வயதினரையும் சேர்ந்த ஆண்களும் பெண்களும் 2000 மற்றும் 2024-ஆம் ஆண்டுக்கு இடையில் புகையிலை பயன்பாட்டை படிப்படியாகக் குறைத்துள்ளனர்.


புகையிலையை விட்டு வெளியேறும் முயற்சியில் பெண்கள் முன்னணியில் உள்ளனர். அவர்கள் 2025-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய குறைப்பு இலக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அடைந்து, 2020-ல் 30% குறைப்பை அடைந்தனர். பெண்களிடையே புகையிலை பயன்பாடு 2010-ல் 11% இருந்து 2024-ல் 6.6% ஆகக் குறைந்தது. மேலும், பெண் புகையிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 277 மில்லியனில் இருந்து 206 மில்லியனாகக் குறைந்தது.


புகையிலை தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று அறிக்கை கூறுகிறது. உலகளவில் ஐந்து பெரியவர்களில் ஒருவர் இன்னும் புகையிலையைப் பயன்படுத்துகிறார். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான தடுக்கக்கூடிய இறப்புகள் ஏற்படுகின்றன. நுரையீரல், தலை மற்றும் கழுத்து புற்றுநோய்கள் உட்பட பல புற்றுநோய்களுக்கு புகையிலை முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


அதிக வருமானம் உள்ள நாடுகளில் குறைந்தது 86 மில்லியன் பெரியவர்கள் இன்னும் புகையிலையைப் பயன்படுத்துகிறார்கள் என்று தரவு காட்டுகிறது. இது ஒரு தீவிர பொது சுகாதார கவலையாகும்.


புதிய தயாரிப்புகள் பயனர்களையும், குறிப்பாக குழந்தைகளையும் ஈர்க்கின்றன. 13-15 வயதுடைய குறைந்தது 15 மில்லியன் குழந்தைகள் ஏற்கனவே மின்-சிகரெட்டுகளைப் பயன்படுத்துகின்றனர். தரவுகளின் படி, உலகளாவிய புகையிலை கட்டுப்பாட்டு முயற்சிகள் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் புகையிலையை விட்டுவிடுகிறார்கள் அல்லது தவிர்க்கிறார்கள்," என்று WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார். இந்த முன்னேற்றத்திற்கு எதிர்வினையாக, புகையிலைத் தொழில் புதிய நிக்கோடின் தயாரிப்புகளை ஊக்குவித்து இளைஞர்களை குறிவைத்து வருகிறது. அரசாங்கங்கள் வேகமாகச் செயல்பட வேண்டும் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட புகையிலை கட்டுப்பாட்டுக் கொள்கைகளை அமல்படுத்த வேண்டும்.


புகையிலைத் தொழில் சிகரெட்டுகள், மின்-சிகரெட்டுகள், நிக்கோடின் பைகள் மற்றும் சூடான புகையிலை பொருட்கள் உள்ளிட்ட புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் WHO தெரிவித்துள்ளது.


"மின்-சிகரெட்டுகள் நிக்கோடின் போதைப்பொருளின் புதிய அலையை உருவாக்குகின்றன," என்று WHO சுகாதார மேம்பாடு மற்றும் தடுப்பு இயக்குனர் எட்டியென் க்ரூக் கூறினார். "அவை பாதுகாப்பான விருப்பமாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், அவை உண்மையில் குழந்தைகளை நிக்கோடினுக்கு அடிமையாக்குகின்றன. மேலும்,  அவர்களின்  முன்னேற்றத்தை அழிக்கக்கூடும்."


என்ன செய்ய வேண்டும்? WHO அரசாங்கங்களை புகையிலை கட்டுப்பாட்டை வலுப்படுத்தக் கேட்டுக்கொள்கிறது. இதில் புகையிலை வரிகளை உயர்த்துவது, விளம்பரங்களைத் தடை செய்வது மற்றும் புகைபிடிப்பதை நிறுத்த விரும்பும் மக்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவது ஆகியவை அடங்கும்.


புகையிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலமும், வலுவான புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலமும் இந்தியா நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது.


"புகையிலை தொடர்பான உடல்நலக் பாதிப்புகளிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்க இந்தியா தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் புகையிலை சித்தரிப்பை ஒழுங்குபடுத்துவதில் முன்னணியில் இருப்பது, சுகாதார எச்சரிக்கைகள் மற்றும் புகையிலை எதிர்ப்பு செய்திகள் பல்வேறு பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும். புகையிலையின் வரம்பை மேலும் கட்டுப்படுத்த, அனைத்து வகையான புகையிலை விளம்பரம், ஊக்குவிப்புகள் மற்றும் ஆதரவு நிகழ்ச்சிகள் ஆகியவை கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. அனைத்து புகையிலை பெட்டிகளில் பெரிய படங்களுடன் சுகாதார எச்சரிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இது உலகளவில் வலுவான ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ”என்று வியாழக்கிழமை டெல்லியில் புகையிலை இல்லாத இளைஞர் பிரச்சாரம் 3.0-ன் மூன்றாவது பதிப்பைத் தொடங்கி வைத்து சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் கூறினார்.


"18 வயதுக்குட்பட்ட எவருக்கும் பள்ளிகளிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மின்-சிகரெட்டுகளை தயாரிப்பது, விற்பனை செய்வது, கொண்டு செல்வது மற்றும் சேமிப்பதும் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது," என்று படேல் கூறினார்.


"புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதிலும், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதிலும் இந்தியா உலகளாவிய தலைவராக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று படேல் மேலும் கூறினார்.



Original article:

Share:

அரிய மண் தாதுக்கள்: விதிமுறைகள் அடிப்படையிலான கட்டமைப்பு ஏன் தேவைப்படுகிறது?

 பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (Organization of the Petroleum Exporting Countries (OPEC)) போன்ற ஒரு கூட்டமைப்பைச் சார்ந்திருப்பதைத் தடுக்க, அரிய மண் மற்றும் முக்கியமான தாதுக்கள் மீதான தேசிய பணிகளும் அவசியம்.


அரிய மண் தாதுக்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை சீனா கடுமையாக்கியதை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா மீது 100% கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார். அன்றாடப் பொருட்கள் முதல் மேம்பட்ட தொழில்நுட்பம் வரை பல பொருட்களை உற்பத்தி செய்வதற்கு இந்தக் கனிமங்கள் அவசியம். டிரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு அப்பால், நாடுகள் தங்கள் அரிய மண் மற்றும் முக்கியமான கனிம வளங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதும், அவற்றின் விநியோகத்தை நிர்வகிக்க ஒரு உலகளாவிய ஒழுங்குமுறை அமைப்பின் தேவையும்தான் பெரிய பிரச்சினை. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பலதரப்பு முடிவெடுப்பதில் தற்போதைய சரிவு இந்தப் பணியை கடினமாக்குகிறது. இருப்பினும், இந்த தாதுக்கள் ஆற்றல் மாற்றம், AI மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங்கிற்கு மிக முக்கியமானவை என்பதால், உலகம் அவற்றின் விநியோகத்தை வளங்களை வைத்திருக்கும் நாடுகளின் அரசியல் முடிவுகளுக்கு விட்டுவிடவோ அல்லது ஒரு கூட்டமைப்பை உருவாக்க அனுமதிக்கவோ முடியாது.


சீனாவின் நிலைமை சிக்கலைத் தெளிவாகக் காட்டுகிறது. உலகின் அரிய மண் தாதுக்களில் 61% சீனா உற்பத்தி செய்கிறது மற்றும் அவற்றில் 92%-ஐ செயலாக்குகிறது. இது பிற ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மேம்படுத்தப்படும் வரை விநியோகத்தின்மீது கிட்டத்தட்ட முழுமையான கட்டுப்பாட்டை அளிக்கிறது. சீனாவின் புதிய விதிகள் இந்த தாதுக்களின் ஏற்றுமதியை மட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றை ஆராய்வதற்கும், சுரங்கப்படுத்துவதற்கும், சுத்திகரிப்பதற்கும் தேவையான தொழில்நுட்பங்களுக்கான அணுகலையும் கட்டுப்படுத்துகின்றன. அதே நேரத்தில், சீனா மற்ற நாடுகளில் இருப்புக்களில் அதிக முதலீடு செய்கிறது. இது சீனாவிற்கு இரண்டு வழிகளில் ஒரு நன்மையை அளிக்கிறது. முதலாவதாக, அரிய மண் தாதுக்கள் எவ்வளவு மற்றும் எவ்வளவு விரைவாக வழங்கப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தலாம், விலைகளை பாதிக்கலாம் மற்றும் அமெரிக்காவுடனான கடந்தகால பேச்சுவார்த்தைகளில் காணப்பட்டபடி, வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இந்த சக்தியைப் பயன்படுத்தலாம். இரண்டாவதாக, தொழில்நுட்பத்தில் அமெரிக்காவைவிட இது முன்னிலை பெறுகிறது. இது சீனாவை உலகளாவிய வல்லரசாக மாற்ற உதவும்.


இந்த வளங்களின் மிகப்பெரிய செல்வாக்கு உலகளாவிய ஒழுங்குமுறைக்கு அழைப்பு விடுகிறது. ஆனால், இதை எதிர்பார்ப்பது நடைமுறைக்கு மாறானது. எண்ணெய் மற்றும் எரிவாயுவில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (Organization of the Petroleum Exporting Countries (OPEC)) போன்ற அமைப்பின் கட்டுப்பாட்டைத் தடுப்பது முக்கியம். ஆனால், இது நடக்குமா என்பது நிச்சயமற்றது. எடுத்துக்காட்டாக, சீனாவின் கட்டுப்பாடுகள் இந்தியாவின் மின்சார வாகனத் திட்டங்கள், சுத்தமான எரிசக்தி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உற்பத்தியை மெதுவாக்கலாம். இந்த சூழ்நிலையில், இந்தியா போன்ற நாடுகள் பிரேசிலில் உள்ள COP30 போன்ற சர்வதேச மன்றங்களைப் பயன்படுத்தி முக்கியமான மற்றும் அரிய மண் தாதுக்களின் விதிகள் அடிப்படையிலான மேலாண்மைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்கள் தங்கள் சொந்த எல்லைகளுக்குள் இந்த வளங்களை ஆராய்ந்து மேம்படுத்த வேண்டும், பயன்படுத்தப்படாத வைப்புத்தொகைகளைக் கொண்ட நாடுகளுடன் கூட்டாண்மைகளை உருவாக்க வேண்டும் மற்றும் மாற்று ஆதாரங்களைக் கண்டறிய வேண்டும்.



Original article:

Share:

சர்க்கரை அல்லாமல், தானியங்கள் எவ்வாறு இந்தியாவின் எத்தனால் உற்பத்தியை இயக்குகின்றன? -ஹரிஷ் தாமோதரன்

 கரும்பு வேளாண் செய்யும் உழவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டம் இப்போது ரூ.40,000 கோடி மதிப்புள்ள முதலீடுகளை ஈர்த்துள்ளது. மேலும், இது முழுமையான தானிய அடிப்படையிலான எத்தனால் உற்பத்தியாளர்களுக்கு இன்னும் அதிக பயனளிக்கிறது.


எத்தனால் கலப்புத் திட்டம் முக்கியமாக சர்க்கரை ஆலைகள் கரும்பு பதப்படுத்துதலில் இருந்து கூடுதல் வருமான ஆதாரத்தை உருவாக்குவதன் மூலம் உழவர்களுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்த உதவும் வகையில் தொடங்கப்பட்டது.


2017-18ஆம் ஆண்டு வரை, சர்க்கரை ஆலைகள் C-வகை அடர் பாகுவிலிருந்து (C-heavy molasses) மட்டுமே எத்தனாலை உற்பத்தி செய்தன. இது சர்க்கரையை பிரித்தெடுத்த பிறகு மீதமுள்ள இறுதி அடர் பழுப்பு திரவமாகும். இந்த துணைப் பொருளில் சில சுக்ரோஸ் உள்ளது. ஆனால், அதை சர்க்கரையாக பதப்படுத்த முடியாது.


2018-19 விநியோக ஆண்டிலிருந்து, ஆலைகள் B-வகை அடர் பாகு (B-heavy molasses) எனப்படும் முந்தைய கட்டத்தில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யத் தொடங்கின. இது நொதித்தலுக்கு அதிக சுக்ரோஸைக் கொண்டுள்ளது. 


B-வகை அடர் பாகுவிலிருந்து (B-heavy molasses) தயாரிக்கப்பட்ட எத்தனாலுக்கு அதிக விலைகளை வழங்குவதன் மூலமும், நேரடி கரும்பு சாறு இந்த மாற்றத்தை அரசாங்கம் ஊக்குவித்தது. சர்க்கரையை குறைவாகவோ அல்லது இல்லாமலோ உற்பத்தி செய்வதன் மூலம் ஆலைகள் எதிர்கொள்ளும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய இது செய்யப்பட்டது.


விளைவு: 


2013-14 மற்றும் 2018-19 நிதியாண்டுக்கு இடையில், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு (oil marketing companies (OMC)) மொத்த எத்தனால் வழங்கல் வெறும் 38 கோடியிலிருந்து கிட்டத்தட்ட 189 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. பெட்ரோலில் அகில இந்திய சராசரி எத்தனால் கலப்பதும் 1.6%-லிருந்து 4.9% ஆக உயர்ந்துள்ளது.


சர்க்கரை முதல் தானியம் வரை


இது கரும்பு மட்டுமல்ல.


2018–19 நிதியாண்டு முதல், மோடி அரசாங்கம் அரிசி, சோளம் மற்றும் சேதமடைந்த உணவு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கு தனித்தனி முன்-வடிகட்டுதல் விலைகளையும் (ex-distillery prices) நிர்ணயித்தது. இந்த நடவடிக்கை முக்கியமாக சர்க்கரை ஆலைகளை ஆதரிப்பதற்காக இருந்தது. பல சர்க்கரை ஆலைகள், அறுவடை பருவத்தில் (நவம்பர் முதல் ஏப்ரல் வரை) பாகு மற்றும் சாறு பயன்படுத்தி செயல்படக்கூடிய வடிகட்டுதல் ஆலைகளை உருவாக்கின.  மேலும், கரும்பு கிடைக்காத பருவத்தில் (மே முதல் அக்டோபர் வரை) தானியங்களைப் பயன்படுத்துவதற்கு மாறின.


எத்தனால் உற்பத்தியில் ஈஸ்ட்கள் மூலம் சர்க்கரை நொதித்தல் முறையும் அடங்கும். பாகு அல்லது கரும்புச் சாற்றில், சர்க்கரை சுக்ரோஸாக உள்ளது. இருப்பினும், தானியங்களில் ஸ்டார்ச் உள்ளது. ஒரு சிக்கலான கார்போஹைட்ரேட், இது முதலில் பிரித்தெடுக்கப்பட்டு, நொதித்தல், வடிகட்டுதல் மற்றும் நீரிழப்புக்கு முன் எளிய சர்க்கரைகளாக மாற்றப்பட்டு 99.9% ஆல்கஹால் செறிவுடன் எத்தனாலை உற்பத்தி செய்ய வேண்டும்.


ஊக்கத்தொகைகள் சர்க்கரை ஆலைகள் பருவம் இல்லாத காலத்தில் தானியங்களை மாற்று மூலப்பொருளாகப் பயன்படுத்த ஊக்குவித்தன. விரைவில், பஞ்சாப், ஹரியானா, பீகார், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் தானியங்களை மட்டுமே பயன்படுத்தும் பல புதிய எத்தனால் ஆலைகள் அமைக்கப்பட்டன.


இதில் பயன்படுத்தப்படும் முக்கிய தானியங்கள் மக்காச்சோளம் மற்றும் அரிசி ஆகும். இவற்றில் இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India (FCI)) மற்றும் திறந்த சந்தையிலிருந்து உபரி மற்றும் உடைந்த அல்லது சேதமடைந்த தானியங்களும் இதில் அடங்கும்.


2023–24 விநியோக ஆண்டில் (நவம்பர்–அக்டோபர்), எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMC) 672.49 கோடி லிட்டர் எத்தனாலை வாங்கின. இந்தியா முழுவதும் சராசரி கலப்பு விகிதம் 14.6% ஐ எட்டியது.


மொத்த 672.49 கோடி லிட்டரில், 270.27 கோடி லிட்டர் (40.2%) மட்டுமே கரும்பு சார்ந்த பொருட்களிலிருந்து வந்தது. இதில் 57.56 கோடி லிட்டர் C-வகை அடர் பாகுவிலிருந்தும், 148.81 கோடி லிட்டர் B-வகை அடர் பாகுவிலிருந்தும் மற்றும் 63.90 கோடி லிட்டர் கரும்பு சாறுலிருந்தும் வந்தது.


மீதமுள்ள 402.22 கோடி லிட்டர் தானியங்களிலிருந்து வந்தது. 286.47 கோடி லிட்டர் மக்காச்சோளத்திலிருந்தும், 115.62 கோடி லிட்டர் உடைந்த அல்லது சேதமடைந்த உணவு தானியங்களிலிருந்தும், 0.13 கோடி லிட்டர் இந்திய உணவுக் கழக (Food Corporation of India (FCI)) அரிசியிலிருந்தும் வந்தது. மக்காச்சோளம் மட்டும் அனைத்து கரும்பு சார்ந்த பொருட்களையும் சேர்த்து உற்பத்தி செய்ததை விட அதிக எத்தனால் உற்பத்தி செய்தது.


நடப்பு விநியோக ஆண்டிலும் இதே போக்கு தொடர்கிறது. எதிர்பார்க்கப்படும் 920 கோடி லிட்டரில், 300 கோடி லிட்டர் மட்டுமே (மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானது) கரும்பு சார்ந்த மூலங்களிலிருந்து வரும். மீதமுள்ள 620 கோடி லிட்டர் தானியங்களிலிருந்து வரும், மக்காச்சோளம் சுமார் 420 கோடி லிட்டருக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தானியங்கள் சர்க்கரைக்கு பதிலாக எத்தனாலின் முக்கிய ஆதாரமாக மாறியதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.


முதல் காரணம் வறட்சி. இது 2023–24 மற்றும் 2024–25ஆம் ஆண்டுகளில் கரும்பு அறுவடை மோசமாக வழிவகுத்தது. எத்தனால் உற்பத்திக்கு B-வகை பாகு மற்றும் கரும்பு சாறு அல்லது சிரப் பயன்பாட்டை அரசாங்கம் மட்டுப்படுத்தியது. இதன் காரணமாக, எத்தனாலுக்கு மாற்றப்பட்ட சர்க்கரையின் அளவு 2022–23-ஆம் ஆண்டில் 45 லட்சம் டன் (லிட்டர்) இலிருந்து அடுத்த இரண்டு பருவங்களில் 24 லிட்டராகவும், அடுத்த இரண்டு பருவங்களில் 35 லிட்டராகவும் குறைந்தது.


இதன் விளைவாக, இந்தியாவின் சர்க்கரை உற்பத்தியும் 2021–22-ஆம் ஆண்டில் 359.25 லிட்டராகவும், 2022–23 ஆம் ஆண்டில் 330 லிட்டராகவும் இருந்து 2023–24 ஆம் ஆண்டில் 319 லிட்டராகவும், 2024–25-ஆம் ஆண்டில் 261.1 லிட்டராகவும் குறைந்தது.


இரண்டாவது காரணம் எத்தனால் மூலங்களுக்கான வெவ்வேறு விலைகள் பற்றியது.


2024-25 விநியோக ஆண்டில், மக்காச்சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலின் விலை லிட்டருக்கு ரூ.71.86 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இது C-வகை பாகு (ரூ.57.97), B-வகை பாகு(ரூ.60.73), கரும்பு சாறு அல்லது சிரப் (ரூ.65.61), இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India (FCI)) உபரி அரிசி (ரூ.58.50) மற்றும் உடைந்த அல்லது சேதமடைந்த தானியங்கள் (ரூ.64) போன்ற பிற மூலங்களிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கு எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCகள்) செலுத்தும் விலைகளைவிட அதிகமாகும்.


சர்க்கரைத் தொழிலுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டம், தானிய அடிப்படையிலான எத்தனால் உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக மக்காச்சோளத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மாறியுள்ளது.


கொள்கை தாக்கங்கள்


2025-26-ஆம் ஆண்டிற்கு, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) 1,050 கோடி லிட்டர் எத்தனால் வழங்க ஒப்பந்தப்புள்ளிகள் விடுத்தன. இது சராசரியாக 20% கலப்பு இலக்கின் அடிப்படையில் அமைந்தது. நவம்பர் முதல் ஆகஸ்ட் 2024-25 வரை, அடையப்பட்ட உண்மையான கலப்பு விகிதம் 19.12% ஆகும்.


அக்டோபர் 7-ஆம் தேதி முடிவடைந்த டெண்டருக்கு பதிலளிக்கும் விதமாக, வடிகட்டும் தொழிற்சாலைகள் (distilleries) மொத்தம் 1,776.49 கோடி லிட்டர் எத்தனால் வழங்கின. இதில் 1,304.86 கோடி லிட்டர் தானியங்கள் மற்றும் 471.63 கோடி லிட்டர் கரும்பு சார்ந்த மூலங்களிலிருந்து அடங்கும்.


தானிய அடிப்படையிலான மூலங்களில், மக்காச்சோளம் 831.89 கோடி லிட்டர்களுடன் மிகப்பெரிய பங்கை அளித்தது. அதைத் தொடர்ந்து இந்திய உணவுக் கழகத்திலிருந்து (FCI) 396.60 கோடி லிட்டர் உபரி அரிசியை வழங்கியது.


எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (oil marketing companies (OMC)) தேவையான 1,050 கோடி லிட்டர்களை மட்டுமே வாங்கும் என்று தெரிகிறது. இது தானியத்திலிருந்து 650 கோடி லிட்டர்களுக்கும் கரும்பிலிருந்து 400 கோடி லிட்டர்களுக்கும் இடையில் பிரிக்கப்படும்.


கொள்கைக் கண்ணோட்டத்தில், இரண்டு முக்கியப் பிரச்சினைகள் உள்ளன. முதலாவது அதிகப்படியான திறன். இந்தியாவில் தற்போது சுமார் 499 வடிகட்டும் தொழிற்சாலைகள் (distilleries) உள்ளன. அவை ஆண்டுக்கு 1,822 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தித் திறனை உருவாக்க சுமார் 40,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. இருப்பினும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு எத்தனால் பெட்ரோலில் கலக்கப்படலாம் என்பதற்கு வரம்புகள் உள்ளன.


இரண்டாவது பிரச்சினை, நன்கு அறியப்பட்ட "எரிபொருள் எதிராக உணவு மற்றும் தீவனம்" (“fuel versus food and feed”) பற்றிய விவாதம் ஆகும். எத்தனால் கலப்பு திட்டம், சோள தானியங்களுக்கு ஒரு புதிய சந்தையை உருவாக்குவதன் மூலம் மக்காச்சோள உழவர்களுக்கு உதவியுள்ளது, இது பொதுவாக கோழி மற்றும் கால்நடை தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.


ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து சுமார் 380 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய முடியும். எனவே, 2024–25-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 420 கோடி லிட்டர் எத்தனால் 11 மில்லியன் டன்களுக்கு மேல் சோளத்தைப் பயன்படுத்தியிருக்கும். இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 42 மில்லியன் டன் மக்காச்சோளத்தை உற்பத்தி செய்கிறது. ஆனால் பால், முட்டை மற்றும் இறைச்சிக்கான தேவை அதிகரித்து வருவதால் இதற்கும் விலங்கு தீவனமாக மக்காச்சோளம் தேவைப்படுகிறது. எத்தனால் தயாரிப்பதற்கு இதைப் பயன்படுத்துவது நிலைத்தன்மை கவலைகளை எழுப்புகிறது.

அரிசிக்கும் இதே பிரச்சினை பொருந்தும். 2025–26-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட 396.60 கோடி லிட்டர் எத்தனால், இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India (FCI)) கிடங்குகளில் சேமிக்கப்படும் அரிசியின் கூடுதல் இருப்புகளைப் பொறுத்தது. இருப்பினும், இந்த உபரி ஒவ்வொரு ஆண்டும் கிடைக்காமல் போகலாம். சர்க்கரையைப் பொறுத்தவரை, "உணவு vs. எரிபொருள்" (“food vs. fuel”) பிரச்சனை சிறியது. ஏனெனில், உள்நாட்டு சர்க்கரை நுகர்வு அதிகமாக வளரவில்லை. இது உயிரி எரிபொருளை உருவாக்குவதற்கு அதிக கரும்புகளை கிடைக்கச் செய்கிறது.



Original article:

Share:

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) பொறுப்பு மற்றும் செயல்பாடு என்ன? -குஷ்பூ குமாரி

 

Directorate General of Civil Aviation (DGCA) : சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்.


முக்கிய அம்சங்கள் :


இந்த அசாதாரணமான சம்பவம், வெளிப்படையான கட்டளை இல்லாமல் ராம் ஏர் டர்பைன் (Ram Air Turbine (RAT)) பயன்படுத்தப்பட்டது. இது போயிங் 787 விமானம் பற்றிய கவலையை எழுப்பியுள்ளது. ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 787 விமானம் 260 பேரைக் கொன்ற பேரழிவுகரமான விபத்துக்கு நான்கு மாதங்களுக்குள் இது நடந்தது.


நவீன விமானங்களில், மொத்த மின் செயலிழப்பு (electrical failure), வலுவிழக்கும் ஹைட்ராலிக் செயலிழப்பு (severe hydraulic failure) அல்லது இரட்டை எஞ்சின் செயலிழப்பு (dual engine failure) போன்ற கடுமையான அவசரநிலைகளின் போது ராம் ஏர் டர்பைன் (RAT) தானாகவே பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகள் மிகவும் அரிதானதாகக் கருதப்படுகின்றன விமானிகள் அதை நேரடியாகக் கையாளும் (manually) முறையை பயன்படுத்தலாம். எனவே, அவசரநிலை இல்லாமல் தற்செயலான தானியங்கி RAT பயன்படுத்தல் மிகவும் அசாதாரணமானது மற்றும் கிட்டத்தட்ட கேள்விப்படாத நிகழ்வு ஆகும்.


இந்தியாவின் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இந்த வினோதமான சம்பவம் குறித்து விசாரணை நடத்தும். இதற்கிடையில், இந்திய விமானிகளின் கூட்டமைப்பு (Federation of Indian Pilots (FIP)) இந்தியாவில் இயங்கும் அனைத்து போயிங் 787 விமானங்களின் மின் அமைப்புகளை ஆய்வு செய்யுமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தை (DGCA) வலியுறுத்தியது. போயிங் 787 விமானங்களில் மின்சார அமைப்பு சிக்கல்கள் இருக்கலாம் என்று RAT தொடர்ச்சியாக சுட்டிக்காட்டுவதாக அவர்கள் வாதிட்டனர். இந்த சம்பவம் அகமதாபாத் விபத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் கூறினர்.


RAT என்பது, ஒரு முக்கியமான அமைப்பு, இதன் அடிப்படையில் போயிங்-787-ன் வானுர்தியின் கட்டுமானச் சட்ட (fuselage) அடிப்பகுதியில், விமானத்தின் இறக்கைக்குப் பின்னால் ஒரு பெட்டியில் வைக்கப்படும் காற்றாலை விசையாழி ஆகும். முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மின்மூலங்கள் ஆதாரங்கள் தோல்வியடையும்போது மட்டுமே மின்சாரத்தை உருவாக்க இது காற்றோட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது.


மொத்த இயந்திரம் செயலிழந்தால் முக்கியமான விமான அமைப்புகளுக்குத் தேவையான சக்தியை வழங்க விமானம் துணை சக்தி அலகுகளுடன் (auxiliary power units (APU)) பொருத்தப்பட்டிருந்தாலும், ராம் ஏர் டர்பைன் (RAT) கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இது, மற்ற அனைத்தும் தோல்வியடையும் போது விமானத்தின் கடைசி அவசர மின் அமைப்பாக இது செயல்படுகிறது.


ராம் ஏர் டர்பைன் (RAT) ஆனது ராம் அழுத்தத்தை (ram pressure) செலுத்துவதன் மூலம் காற்றோட்டத்திலிருந்து ஆற்றலை உருவாக்குகிறது. இது விமானத்தின் முன்னோக்கி இயக்கத்தால் உருவாக்கப்படுகிறது. மேலும் அந்த நேரத்தில் விமானத்தின் வேகத்தைப் பொறுத்தது. மொத்த மின்சாரம் செயலிழந்தால், விமானக் கட்டுப்பாடுகள், விமான-முக்கியமான கருவிகள், வழிசெலுத்தல் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட முக்கிய அமைப்புகளுக்கு RAT உதவுகிறது.


விமானத்தின் ஆற்றல் இழப்பு மற்றும் ராம் ஏர் டர்பைன் (RAT) பயன்படுத்தப்படுவதற்கு இடைப்பட்ட குறுகிய காலத்தில், குறைந்தபட்ச அத்தியாவசிய கருவிகள் தொடர்ந்து செயல்படுவதை விமானத்தின் மின்கலன்கள் (plane’s batteries) உறுதி செய்கின்றன.


அதிக பயண உயரங்களிலும் அல்லது அதிக விமான வேகத்திலும் ராம் ஏர் டர்பைன் (RAT) குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். இது விமானிகளுக்கு விமானத்தின் அத்தியாவசிய அமைப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை இயக்க போதுமான நேரத்தையும் ஆற்றலையும் வழங்குகிறது. விமானத்தை அருகிலுள்ள விமானநிலையத்திற்கு நகர்த்த முயற்சிக்கவும் இது அவர்களுக்கு உதவுகிறது. இருப்பினும், ராம் ஏர் டர்பைன் (RAT) இயந்திர ஆற்றலை மாற்ற முடியாது.


இந்த அவசரகால மின்சார அமைப்பு கடைசி முயற்சியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது பல பெரிய விமானப் பேரழிவுகளைத் தடுக்க உதவியுள்ளது. RAT உற்பத்தியாளரான காலின்ஸ் ஏரோஸ்பேஸின் கூற்றுப்படி, இந்த விசையாழிகள் “கடந்த ஐம்பதாண்டுகளில் 2,400-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளன.”


உங்களுக்குத் தெரியுமா? 


சிவில் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு முழு நிதி மற்றும் நிர்வாக சுயாட்சியை வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு தன்னாட்சி இல்லாததுதான் ஒழுங்குமுறை ஆணையம் தனது பணியை திறம்படச் செய்யும் திறனுக்கு “ஒற்றை மிகப்பெரிய தடையாக” (single greatest impediment) உள்ளது என்று அது கூறியது.


இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட ‘சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு குறித்த ஒட்டுமொத்த மறுஆய்வு’ என்ற அறிக்கையில், போக்குவரத்து, சுற்றுலா மற்றும் பண்பாட்டு நிலைக்குழு, DGCA (விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம்) தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறைப் பணியாளர்களின் “ஆழமான மற்றும் தொடர்ச்சியான” பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாகவும், இந்தப் பணியாளர் பற்றாக்குறை இந்தியாவின் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் ஒருமைப்பாட்டிற்கு “ஒரு இருத்தலியல் அச்சுறுத்தலாக” உள்ளது என்றும் தெரிவித்தது.


மாநிலங்களவை உறுப்பினரும், ஜே.டி.யு., தலைவருமான சஞ்சய் குமார் ஜா தலைமையிலான குழு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு (DGCA) தன்னாட்சி வழங்குவதற்கான காலவரையறை திட்டத்தை பரிந்துரைத்தது.


அறிக்கை மற்ற பிரச்சினைகளுடன், அதாவது குழுவின் அறிக்கை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் (air traffic controllers (ATCO)) பற்றாக்குறை மற்றும் கட்டுப்பாட்டாளர்களிடையே சோர்வு ஆகியவற்றை உள்ளடக்கும்.


இந்தியாவில் சிவிலியன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுச் செயல்பாட்டைக் கையாளும் இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India (AAI)), விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கான கடமை நேர வரம்புகளை கடைபிடிக்கவில்லை என்றும் அது விமர்சித்தது.


உடனடிப் பரிந்துரையாக, குழுவானது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கான (ATCO) தேசிய சோர்வு இடர் மேலாண்மை அமைப்பை (national Fatigue Risk Management System (FRMS)) உருவாக்குவதற்கும், ஒரு விரிவான பணியாளர் தணிக்கைக்கும் அழைப்பு விடுத்தது.



Original article:

Share:

மனித ஆரோக்கியத்தில் செயற்கை ஒளியின் (artificial light) தாக்கம் என்ன? - குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள் :


ஆய்வின் கண்டுபிடிப்புகள் சர்வதேச நரம்பியல் இதழான 'சர்வதேச நரம்பியல் வேதியியலில்' (Neurochemistry International) வெளியிடப்பட்டுள்ளன. தூக்கத்தை முறையாக நிர்வகிப்பது மூளையை பலவீனப்படுத்தும் நோய்களின் தாக்கத்தை கணிசமாக தாமதப்படுத்தலாம் அல்லது குறைக்கலாம் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன என்று பேராசிரியர் சர்க்கார் கூறினார். இது மூளை ஆரோக்கியத்திற்கு தூக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.


டிமென்ஷியா மற்றும் பிற வயது தொடர்பான மூளைக் கோளாறுகள் உலகளவில் பாதிக்கும் அதிகமாக வயது முதிர்ந்தவர்களுக்கு அல்சைமர் நோய் (Alzheimer’s disease) மட்டுமே முக்கிய உலகளாவிய சுகாதார சவாலாக மாறியுள்ளன. இந்தியாவில், 2050-ம் ஆண்டுக்குள் டிமென்ஷியா (dementia) நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 14.3 மில்லியனாக உயரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


ஆய்வில், தொடர்ச்சியான செயற்கை ஒளி அல்லது "ஒளி மாசு" காரணமாக தூக்கம் தடைபடுவது, டிமென்ஷியா தொடர்பான அறிகுறிகளின் ஆரம்ப தொடக்கத்தை துரிதப்படுத்தி, அவற்றின் தீவிரத்தை மோசமாக்கும் என்று கண்டறியப்பட்டது.


பேராசிரியர் சர்க்கரின் கூற்றுப்படி, இந்த கண்டுபிடிப்புகள் நவீன வாழ்க்கை முறைகள், குறிப்பாக பிரகாசமான நகர்ப்புறங்களில், மூளை ஆரோக்கியத்தை அமைதியாக தீங்கு விளைவிக்கும் என்பதற்கான புதிய நுண்ணறிவை இந்த கண்டுபிடிப்புகள் வழங்குகின்றன.


ஆனால் இன்றைய உலகில், நகர விளக்குகள் ஒருபோதும் மங்காது, திரைகள் இரவு நேரம் வரை ஒளிர்கின்றன, இதனால் மூளையின் நுட்பமான சமநிலை பாதிக்கப்படுகிறது. இந்த தொடர்ச்சியான செயற்கை ஒளி வெளிப்பாடு, அவர்கள் எச்சரிக்கையாகக் கூறுகின்றனர், மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்துகிறது, குறிப்பாக அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற நரம்பியல் நோய்களுக்கு ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு.


தங்கள் ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் ப்ரெர்னா அகர்வால், வீரேந்தர் மற்றும் பேராசிரியர் சர்க்கார், அல்சைமர் நோயின் அடையாளமான டாவ் புரதத்தின் (tau protein) மனித வடிவத்தைச் சுமந்து செல்லும் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பழ ஈக்களை (டிரோசோபிலா மெலனோகாஸ்டர்) பயன்படுத்தினர்.


இந்த ஈக்கள் தொடர்ச்சியான செயற்கை ஒளியில் வெளிப்படும் போது, ​​அவற்றின் இயல்பான தூக்க முறைகளை சீர்குலைக்கும் போது, ​​​​அவற்றின் மூளை செல்கள் மிக வேகமாக சிதைவதை இந்தக் குழு கண்டுபிடித்தது. மேலும் நினைவகம் (memory), கற்றல் (learning) மற்றும் தூக்கம் (sleep) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூளைப் பகுதிகளில் இயக்கம் சிரமங்கள் மற்றும் தெளிவான கட்டமைப்பு சேதத்தின் ஆரம்பகால அறிகுறிகளை ஈக்கள் வெளிப்படுத்தின.


ஆராய்ச்சியாளர்கள், ஆரோக்கியமற்ற ஒளி வெளிப்பாடு டாவ் தொடர்பான நோய்க்கு ஒரு தூண்டுதலாக செயல்பட்டதாகக் கண்டறிந்தனர். இது டாவ் புரதத்தின் ஒட்டுத்தன்மையை கணிசமாக அதிகரித்து, நரம்பணுக்களை மிக வேகமாக அடைத்து நச்சு கட்டிகளை உருவாக்குவதை ஊக்குவித்தது.


அசாதாரண ஒளி வெளிப்பாடு நீண்டகாலமாக சீர்குலைந்த சர்க்காடியன் தாளங்கள் மற்றும் தொந்தரவு செய்யப்பட்ட தூக்க-விழிப்பு சுழற்சிகளுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், சமீபத்திய ஆய்வு நரம்புச் சிதைவு நோய்களை (neurodegeneration) இயக்கும் மூலக்கூறு மற்றும் செல்லுலார் மாற்றங்களை மோசமாக்குவதில் அதன் சாத்தியமான பங்கை சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், ஒளி மாசுபாடு செல்லுலார் மட்டத்தில் நோய் முன்னேற்றத்தை எவ்வாறு தீவிரப்படுத்துகிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். "இரவு-நேர தொழிலாளர்கள் முதல் தங்கள் தொலைபேசிகள் மூலம் முடிவில்லாமல் ஸ்க்ரோலிங் செய்பவர்கள் வரை, நம்மில் பலர் இப்போது கிட்டத்தட்ட நிலையான செயற்கை ஒளியின் கீழ் வாழ்கிறோம்,” என்று பேராசிரியர் சர்க்கார் எச்சரித்தார்.


உங்களுக்குத் தெரியுமா? 


மனிதர்கள் இயற்கையாக நிகழும் வெளிப்புற ஒளி அளவை (outdoor light levels) மாற்றும்போது ஒளி மாசுபாடு ஏற்படுகிறது. அதிக வெளிச்சம் (over-light), நேரங்காட்டிகள் (timers) மற்றும் உணர்விகளைப் (sensors) பயன்படுத்தத் தவறினால் அல்லது ஒளியின் தவறான நிறத்தைப் பயன்படுத்தினால், புலம்பெயர்ந்த பறவைகள், மகரந்தச் சேர்க்கைகள், கடல் ஆமைகள் மற்றும் மனிதர்கள் உட்பட பாலூட்டிகள் உட்பட நமது உலகின் பல பகுதிகளை எதிர்மறையாக பாதிக்கலாம்.


அல்சைமர் என்பது டிமென்ஷியாவின் மிகவும் பொதுவான வகையாகும். இது அறிவாற்றல் செயல்பாட்டின் இழப்பை உள்ளடக்கிய பல நிபந்தனைகளுக்கான ஒரு நிலையாகும். அல்சைமர் என்பது மூளையில் உருவாகும் பிளேக்குகள் மற்றும் சிக்கல்களை உள்ளடக்கியது. இது நினைவக சேமிப்பு மற்றும் செயலாக்கத்தைக் கையாளும் நியூரான்களின் வயதாவதையும் தீவிரப்படுத்துகிறது.


2023-ம் ஆண்டின் உலக சுகாதார அமைப்பின் (WHO) மதிப்பீட்டின்படி, உலகளவில் 55 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டிமென்ஷியாவால் பாதிக்கப்படுகின்றனர். அல்சைமர் இந்த நிகழ்வுகளில் சுமார் 75% பங்களிக்கிறது. 3 முதல் 9 மில்லியன் இந்தியர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. இந்தியாவின் மக்கள் தொகை அதிகரிக்கும் போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Original article:

Share:

சாவல்கோட் திட்டம் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி . . . - குஷ்பூ குமாரி

 

Sawalkote project : சாவல்கோட் திட்டம் என்பது ஜம்மு & காஷ்மீரில் செனாப் ஆற்றின் மீது கட்டப்படவிருக்கும் ஒரு பெரிய நீர்மின் திட்டமாகும்.




முக்கிய அம்சங்கள் :


ஜம்மு & காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் தேசிய நீர்மின்சக்தி நிறுவனம் (National Hydroelectric Power Corporation(NHPC)) மூலம் கட்டப்படும் 1,865 மெகாவாட் திட்டமானது, மேற்கு நோக்கி பாயும் செனாப் ஆற்றில் கட்டப்பட்ட மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாக இருக்கும். இது 1,159 ஹெக்டேர் பரப்பளவில் 530 மில்லியன் கன மீட்டர் நீர்த்தேக்கத் திறன் கொண்ட 192.5-மீட்டர் உயர கான்கிரீட் புவியீர்ப்பு அணையைக் (high concrete gravity dam)கொண்டுள்ளது. நிறுவப்பட்ட கொள்ளளவு நிலை I-ல் 1,406 மெகாவாட் மற்றும் நிலை II-ல் 450 மெகாவாட் ஆகும்.


1984-ம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை ஒன்றிய அரசு விரைவுபடுத்தியது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (Indus Waters Treaty (IWT)) நிறுத்தி வைத்த பிறகு இது நடந்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் (IWT) கீழ், மேற்கு நோக்கி பாயும் செனாப், சிந்து மற்றும் ஜீலம் நதிகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்துகிறது.


சுவாரஸ்யமாக, செனாப் படுகைக்கான ஒட்டுமொத்த தாக்க மதிப்பீடு (cumulative impact assessment (CIA)) மற்றும் சுமந்து செல்லும் திறன் ஆய்வுகள் (carrying capacity studies (CCS)) தொடர்பான அனுமதியை பரிந்துரைக்கும் முன் பரிசீலிக்கப்பட்டதா என்பதை நிபுணர் மதிப்பீட்டுக் குழு (EAC) சில நிமிடங்கள்கூட குறிப்பிடவில்லை. இத்தகைய ஆய்வுகள் பொதுவாக பெரிய நீர்மின் திட்டங்களின் நீண்டகால சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்களை மதிப்பிடுவதற்கு அமைச்சக விதிமுறைகளின் கீழ் தேவைப்படுகிறது.


இந்த ஆய்வுகளிலிருந்து விலக்கு அளிப்பது குறித்த கேள்வி சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வன ஆலோசனைக் குழுவால் (Forest Advisory Committee (FAC)) வன அனுமதியை பரிசீலிக்கும் போது முன்வைக்கப்பட்டது. இந்தத் திட்டம் 1984-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, 2013-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த தாக்க மதிப்பீடு (CIA) மற்றும் சுமந்து செல்லும் திறன் ஆய்வுகள் (CCS) வழிகாட்டுதல்கள் பின்னோக்கிப் பொருந்தாது என்று வன ஆலோசனைக் குழு கூறியது. உத்தியின் அடிப்படையில் விலக்கு கோரி மின்சாரம் மற்றும் உள்துறை அமைச்சகங்களின் கடிதங்களையும் அது கவனத்தில் எடுத்தது.


உள்துறை அமைச்சகம் தனது கடிதத்தில், இந்த திட்டம் "இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது" என்றும், "செனாப் நதியின் ஆற்றலை மேம்படுத்துவதற்கு விரைவான கட்டுமானம் அவசியம்" என்றும் கூறியது. "தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையில்", ஆய்வுகளை மேற்கொள்வது, ஜம்மு & காஷ்மீரில் முக்கிய நீர்மின் திட்டங்களை (hydel projects) செயல்படுத்துவதையும், அனுமதிகளை தாமதப்படுத்துவதையும் பாதிக்கும் என்று மின் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


செனாப் படுகை ஏற்கனவே மூன்று செயல்பாட்டுத் திட்டங்களை வழங்குகிறது  ஒன்று, கிஷ்த்வாரில் 390 மெகாவாட் துல்ஹஸ்தி, இரண்டு ராம்பனில் 890 மெகாவாட் பாக்லிஹார் மற்றும் மூன்று ரியாசியில் 690 மெகாவாட் சலால் போன்றவை ஆகும்.


உங்களுக்குத் தெரியுமா? :


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒன்பது வருட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, செப்டம்பர் 19, 1960 அன்று கராச்சியில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் 12 பிரிவுகளையும் மற்றும் 8 இணைப்புகளையும் கொண்டுள்ளது, அவை A முதல் H வரை பெயரிடப்பட்டுள்ளன.


இந்த ஒப்பந்தத்தின் விதிகளின்படி, சிந்து அமைப்பின் "கிழக்கு நதிகளின்" சட்லெஜ், பியாஸ் மற்றும் ராவி போன்ற அனைத்து நதிகளும் இந்தியாவின் "கட்டுப்பாடற்ற பயன்பாட்டிற்கு" கிடைக்கும். சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய "மேற்கு நதிகளில்" இருந்து பாகிஸ்தான் தண்ணீரைப் பெறும்.


சிந்துவின் மிகப்பெரிய துணை நதியான செனாப் நதி இந்தியாவில் 1,180 கி.மீ நீளம் கொண்டது. இது ஹிமாச்சலப் பிரதேசத்தின் கீலாங்கில் உள்ள தண்டியில் சந்திரா மற்றும் பாகா நதிகளின் சங்கமத்தால் உருவாக்கப்பட்டது.



Original article:

Share:

சுதேசியின் நீடித்த அரசியல் ஈர்ப்பு மற்றும் மற்றும் அது ஏன் பொருளாதார ரீதியாக நல்லதல்ல என்பன குறித்து… -அர்ஜுன் சென்குப்தா

 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்திய அரசியலில் சுதேசி மிகவும் செல்வாக்கு மிக்க சிந்தனைகளில் ஒன்றாகும். ஆனால், பொருளாதாரக் கொள்கைக்கான (economic policy) வழிகாட்டியாக அதன் அனுபவப் பதிவு, பலவீனமாகவே உள்ளது.


அரசாங்கம் இப்போது சுதேசியின் இயக்கத்தின் மீது அதன் கவனம் இரட்டிப்பாக்கியுள்ளது. அதன் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அக்டோபர் 8-ம் தேதி புதன்கிழமை அன்று, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜோஹோ மின்னஞ்சலைப் (Zoho Mail) பயன்படுத்தத் தொடங்கிய சமீபத்திய மத்திய அமைச்சரவை உறுப்பினராவார்.


'சுதேசி இயக்கத்தின் கீழ் டிஜிட்டல் இறையாண்மையை வலுப்படுத்துதல்' (Strengthening digital sovereignty under the Swadeshi movement) என்ற தலைப்பில் கல்வி அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இது "உள்நாட்டு கண்டுபிடிப்புகளுடன் இந்தியாவை மேம்படுத்தவும், டிஜிட்டல் இறையாண்மையை வலுப்படுத்தவும், தற்சார்பு எதிர்காலத்திற்காக தேசிய தரவைப் பாதுகாக்கவும்" அதிகாரப்பூர்வ திட்டங்களுக்கு "உள்ளூர்" (indigenous) என்ற அடையாளமாக ஜோஹோ அலுவலகத் (Zoho Office) தொகுப்பைப் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.


ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான ஜோஹோ நிறுவனம் (Zoho Corporation), அரசாங்கத்தின் சுதேசி திட்டத்தின் சமீபத்திய பெருநிறுவன பயனாளியாகும். இருப்பினும், கடந்தகால அனுபவங்கள் முக்கியமான பாடங்களை வழங்குகின்றன.


மிக முக்கியமாக, 2020-21 ஆம் ஆண்டில், அரசாங்கம் மோகன்தாஸ் பை நிதியுதவி செய்த கூ (Koo) என்ற மைக்ரோபிளாக்கிங் தளத்தை ட்விட்டருக்கு (இப்போது X) மாற்றாக ஏற்றுக்கொண்டது. ஆரம்ப வெற்றிகரமான பரபரப்பு இருந்தபோதிலும், கூவின் வணிக மாதிரியில் இருந்த அடிப்படை குறைபாடுகளால், கடந்த ஆண்டு அது மூடப்பட்டது.


உண்மையில், கடந்த 150 ஆண்டுகளாக இந்திய அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்க கருத்தாக்கங்களில் ஒன்றாக சுதேசி இருந்தபோதிலும், பொருளாதாரக் கொள்கைக்கு வழிகாட்டியாக அதன் அனுபவப் பதிவு மாறுபட்டதாகவே உள்ளது. இதோ சுதேசியின் சுருக்கமான வரலாறு மற்றும் அது சுதந்திரத்திற்குப் பிந்தைய பொருளாதாரக் கொள்கையை எவ்வாறு பாதித்தது, பெரும்பாலும் இந்தியாவுக்கு பாதகமாக இருந்தது பற்றி...


ஒரு பொருளாதார யோசனை...


சுதேசி என்ற சிந்தனையானது, பிரிட்டிஷ் ஆட்சியின் ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு விமர்சனங்களில் இருந்து அறியப்படுகிறது. ஒன்று, காலனித்துவம் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக அழிவை ஏற்படுத்தியது. இரண்டவது, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நெறிமுறைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகக் காணப்பட்டது.


முந்தைய விமர்சனம் 1857-ம் ஆண்டின் கிளர்ச்சிப் பிரகடனங்கள் உட்பட 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து நடுப்பகுதி வரை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தப்பட்டது. ஆனால், அதன் மிகவும் நுட்பமான கருத்துக்கள் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தாதாபாய் நௌரோஜி (1825-1917) மற்றும் இரமேஷ் சுந்தர் தத் (1848-1909) ஆகியோரால் முன்வைக்கப்பட்டன. "ஒட்டுமொத்தமாக, பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக தீங்கு விளைவிப்பதாகவும், ஒருவேளை அது வேண்டுமென்றே அவ்வாறு இருந்திருக்கலாம்" என்றும் வாதிட்டனர். இந்த கூற்று, பிபன் சந்திராவின், இந்தியாவில் பொருளாதார தேசியவாதத்தின் எழுச்சி மற்றும் வளர்ச்சி-1966 (The rise and growth of economic nationalism in India) என்ற கட்டுரையில் இடம்பெற்றிருந்தது.


இரமேஷ் சுந்தர் தத்தின் "தொழில்மயமாக்கல் ஒழிப்பு" கோட்பாடு (deindustrialisation theory), ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்களை அழித்து, விவசாயத்தில் “உதவியற்ற சார்புநிலையை” உருவாக்கினர், இது பின்னர் அதிகப்படியான வரிகளால் பாழாக்கப்பட்டது. அவரது கருத்துக்கள், குறிப்பாக இடதுசாரி அறிஞர்கள் மத்தியில், 1970கள் மற்றும் 1980கள் வரை பிரபலமாக நடைமுறையில் இருந்தன. மறுபுறம் தாதாபாய் நௌரோஜியின் "செல்வ சுரண்டல்" கோட்பாடு (drain of wealth theory), இந்திய வரி செலுத்துவோர் எவ்வாறு பிரிட்டிஷ்காரர்களுக்கு தனது சொந்த அடிமைத்தனத்திற்கு திறம்பட பணம் செலுத்துகிறார்கள் என்பதைக் காட்டியது.


பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியப் பொருளாதாரத்தின் இந்த பகுப்பாய்வு, சுதேசிக்கான வாதத்தை வலுப்படுத்தின. "இந்தியா மூலப்பொருட்களை வழங்குபவர் மற்றும் பிரிட்டிஷ் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது," என்று வரலாற்றாசிரியர் சுமித் சர்க்கார் 1903-08 (1973)-ல் வங்காளத்தில் சுதேசி இயக்கம் (Swadeshi Movement in Bengal) என்ற நூலில் குறிப்பிட்டிருந்தார். இது, "பாரம்பரிய கைவினைப் பொருட்களில் எஞ்சியிருப்பதைப் பாதுகாப்பதும், நவீன வழிகளில் தொழில்மயமாக்கலுக்கு அழுத்தம் கொடுப்பதும் இந்த சார்பு நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வெளிப்படையான வழிகள் ஆகும்".


… தார்மீக பரிமாணங்களுடன்


1872-ல் பூனாவில் (இப்போது புனே) நிகழ்த்திய தொடர் உரையில், மகாதேவ் கோவிந்த் ரானடே (1842-1901) "ஒருவரின் சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், வெளிநாட்டு பொருட்களைவிட விலை அதிகமாக இருந்தாலும் அல்லது தரம் குறைவாக இருந்தாலும்கூட சொந்த நாட்டு உற்பத்தியின் முக்கியத்துவத்தை," பற்றி பேசினார் (சந்திரா 1966).


சுதேசியைத் தேர்ந்தெடுப்பது ஒரு தார்மீக மற்றும் தேசபக்தி கடமை என்ற நம்பிக்கையாகும். அது பொருளாதார தர்க்கத்திற்கு எதிரானதாக இருந்தாலும் கூட, அதன் நீடித்த அரசியல் செல்வாக்கிற்கும், அதன் குறைபாடுகளுக்கும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.


மகாத்மா காந்தி (1869–1948) சுதேசியை ஒரு தார்மீகக் கொள்கையாகக் கடைப்பிடிப்பதில் மிகவும் வலிமையானவராவர். 1916-ம் ஆண்டு ஒரு உரையில், அவர் அதை "நம்மை நெருக்கமாகச் சுற்றியுள்ளவற்றின் பயன்பாடு மற்றும் சேவையில் மட்டும் கட்டுப்படுத்தி, தொலைவில் உள்ளவற்றை விலக்கும் நம்மிலுள்ள ஆன்மா" (the spirit in us which restricts us to the use and service of our immediate surroundings, excluding the more distant ones) என்று வரையறுத்தார் (எம்.கே. காந்தியின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்கள், 1922).


காந்தியைப் பொறுத்தவரை, இந்த தார்மீக சக்தியாக அரசியல், மதம் மற்றும் பொருளாதாரம் போன்ற அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. கல்வியாளர் சிபி கே.ஜோசப் 2012-ம் ஆண்டு தனது ”காந்தியின் சுதேசி பார்வையைப் புரிந்துகொள்வது” (Understanding Gandhi’s Vision of Swadeshi) என்ற படைப்பில் விளக்கியபடி, அவர் சுதேசியை "சட்டங்களின் சட்டம்" (the law of laws) என்று பார்த்தார். இது மனித இயல்பில் ஆழமாக வேரூன்றிய ஒன்றாகும்.


பொருளாதாரத்தில், எடுத்துக்காட்டாக, சுதேசி என்றால் "ஒருவரின் நெருங்கிய அண்டை வீட்டாரால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதைக் குறிக்கிறது" (ஜோசப் 2012). காந்தியின் வாதம் தார்மீகக் கருத்தாக்கங்களிலிருந்து எழுந்தது. “ஒரு தனிநபரின் அல்லது ஒரு தேசத்தின் தார்மீக நல்வாழ்வைப் பாதிக்கும் பொருளாதாரம் ஒழுக்கக்கேடானது, எனவே பாவமானது... மேலும், அமெரிக்க கோதுமையை சாப்பிட்டுவிட்டு, என் அண்டை வீட்டாரான தானிய வியாபாரியை பட்டினியால் வாட விடுவது பாவம்…” என்று அவர் 1921-ல் யங் இந்தியாவில் (Young India) எழுதினார்.


அரசியலில் ஈடுபடுத்துதல்...


சுதந்திரப் போராட்டத்தின்போது, ​​ஆங்கிலேயர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் புறக்கணிப்பு செய்வதும் மற்றும் அதே நேரத்தில், இந்திய தொழில் உற்பத்தி மற்றும் நிறுவனங்களுக்கு வளர்ச்சியை ஊக்குவிப்பதும் சுதேசியின் அரசியல் நிலைகளில் ஏற்பட்டது.


1896-ம் ஆண்டில், பால் கங்காதர திலகர் (1856-1920) பம்பாய் மாகாணத்தில் வெளிநாட்டுத் துணிகளை பொது மக்கள் எரிக்க ஏற்பாடு செய்தார். இது இந்தியத் துணிகள் மீது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கலால் வரிகளுக்குப் பதிலளிக்கும் விதமாக செயல்பட்டது. ஒரு பத்தாண்டுகாலத்திற்கும் குறைவான காலத்திற்குப் பிறகு, சுதந்திரப் போராட்டத்தின் முதல் "தீவிர இயக்கம்" (mass movement), சுதேசி இயக்கமானது. இது கர்சன் பிரபு வங்காளத்தைப் பிரிப்பதற்கு தூண்டப்பட்டது. இந்த இயக்கம் திலகரின் பல முறைகளில் கடன் வாங்கியது, அதில் வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணிப்பதும் அடங்கும்.


வெளிநாட்டுத் துணிகளைப் புறக்கணிக்கும் செய்தியானது மக்களைத் தெளிவாகச் சென்றடைந்தது. அதாவது, பிரிட்டிஷ் துணியானது விற்பனையில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியால் இது வெளிப்பட்டது. சில கிராமப்புற மாவட்டங்களில், செப்டம்பர் 1904 மற்றும் செப்டம்பர் 1905-க்கு இடையில் அதன் மதிப்பு ஐந்து முதல் பதினைந்து மடங்கு குறைந்தது. இந்த உண்மையை சந்திரா, மிருதுளா முகர்ஜி, ஆதித்யா முகர்ஜி, கே.என்.பன்னிகர் மற்றும் சுசேதா மகாஜன் ஆகியோர் ”இந்திய சுதந்திரப் போராட்டம், 1857–1947” (1989) -ல் குறிப்பிட்டனர்.


வெளிநாட்டு பொருட்களைப் புறக்கணிப்பதைத் தவிர, மக்கள் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், நீதிமன்றங்கள், பட்டங்கள், அரசு சேவைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைநிறுத்தங்களையும் புறக்கணித்தனர். நிர்வாகத்தை "சாத்தியமற்றதாக" மாற்றுவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும் (சந்திரா மற்றும் பலர், 1989).


தீவிர அரசியலின் காந்திய காலகட்டத்தில், காலனித்துவத்தின் தேசியவாத விமர்சனமானது சாமானிய மக்களிடையே பரப்பப்பட்டது. இதில், "செல்வ சுரண்டல் மற்றும் இந்தியாவை ஆங்கிலேய உற்பத்திப் பொருட்களுக்கான சந்தையாகப் பயன்படுத்துதல் மற்றும் இதன் விளைவாக இந்திய கைவினைத் தொழில்களின் அழிவு..." என்ற இரட்டை கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டது. 


பல வழிகளில், சுதேசி என்பது சுதந்திர இயக்கத்தின் பொதுவான மொழியாக மாறியது. இது வாழ்க்கையின் பல்வேறு தரப்பு மக்களையும், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணியில் உள்ள மக்களை ஒரு பொதுவான குறிக்கோளுக்காகப் போராட ஒன்றிணைத்தது.


… மற்றும் கொள்கையில்


சுதேசி என்பது வெளிநாட்டுப் பொருட்களை நிராகரிப்பது மட்டுமல்ல. உள்நாட்டுத் தொழிலை ஆதரிப்பதையும் குறிக்கிறது. இடதுசாரிகள் உட்பட பெரும்பாலான இந்திய தேசியவாதிகள், நாட்டின் ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்மயமாக்கல் தேவை என்பதை ஒப்புக்கொண்டனர். இந்தக் கருத்துக்கு காந்தி ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்காக இருந்தார்.


"நவீன தொழில்துறை மற்றும் விவசாய வளர்ச்சியின் அடிப்படையில் நாட்டின் முழுமையான பொருளாதார மாற்றத்தின் நோக்கத்தை இந்திய தேசிய இயக்கம் ஆரம்பத்திலிருந்தே ஒருமனதாக ஏற்றுக்கொண்டது” என்று சந்திரா மற்றும் பலர் குறிப்பிட்டிருந்தனர். இந்த இந்தியர்களுக்குச் சொந்தமான நவீன தொழில்களைக் கட்டியெழுப்புதல் மற்றும் மக்களின் நலனுக்காக இயக்கப்படும்.


1930-களில், பொருளாதார வரலாற்றாசிரியர் ஆஷிஷ் வெல்கர் குறிப்பிட்டது போல், சுதேசி என்ற கருத்து முதலாளித்துவ கோரிக்கைகளை முன்வைப்பதற்கான ஒரு ஆதாரமாக மாறியது என்று குறிப்பிட்டார்.


"இந்திய மூலதனம் இந்திய குடிமக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து 1930-களில் தேசியவாத சிந்தனைக்குள் ஒரு முக்கியக் கோட்பாடாக நிறுவப்பட்டது. இந்தக் கொள்கையானது சுதந்திரத்திற்குப் பிந்தைய வளர்ச்சித் திட்டமிடல் (post-independence development planning) மற்றும் பாதுகாப்புவாதக் கொள்கைகளின் (protectionist policies) மையக் கோட்பாடாகவும் அமைந்தது" என்று வேல்கர் 'காலனித்துவ பாம்பேயில் சுதேசி முதலாளித்துவம்-2020' (Swadeshi Capitalism In Colonial Bombay) என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.


சுதேசியின் ஆபத்துகள் (Pitfalls of Swadeshi)


தக்ஷஷிலா நிறுவனத்தின் (Takshashila Institution) இயக்குனரான நிதின் பாய், தனது 2021-ம் ஆண்டு கட்டுரையான ‘சுதேசியின் சுருக்கமான பொருளாதார வரலாறு’ (A Brief Economic History of Swadeshi) என்ற ஆய்வறிக்கையில், "பொருளாதார ஏகாதிபத்தியத்தின் பயம்" ஜவஹர்லால் நேருவின் இந்தியாவை பொதுத்துறைக்கு ஒரு பெரிய பங்கைக் கொண்ட ஒரு கலப்பு பொருளாதார மாதிரியை ஏற்றுக்கொள்ளத் தூண்டியது என்றாலும், "கொள்கை கருவியாக இறக்குமதி மாற்றீட்டைப் பயன்படுத்துவது இறுதியில் ஒரு முடிவாக மாறியது" என்று எழுதினார்.


விளைவு : பல காலங்களாக உள்நாட்டு தொழில்துறை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள உதவும் குறிக்கோளானது பாதுகாப்புவாதம் (protectionism) ஆகும். இந்தப் பாதுகாப்புவாதம், உள்ளூர் முதலாளித்துவவாதிகளை போட்டியிலிருந்து பாதுகாப்பதன் மூலம் அவர்களின் பாதுகாப்பின்மையைக் குறைத்தாலும், இறுதியில் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவித்தது என்று பொருளாதார வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.


உதாரணமாக, பாதுகாப்புவாதம் இந்திய நிறுவனங்களை போட்டியற்றதாக மாற்றுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கான தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தைக் குறைத்தது. மேலும், இது செலவுகளையும் அதிகரித்தது. "உள்நாட்டு நிறுவனங்களை சர்வதேச போட்டியிலிருந்து பாதுகாப்பது நுகர்வோர் மீது அதிக செலவுகளை சுமத்துவதுடன், சேமிப்பு மற்றும் முதலீடு செய்யக்கூடிய உபரியைக் குறைக்கிறது. மேலும், உரிமம் வைத்திருப்பவர்களை பிற பாதுகாக்கப்பட்ட தொழில்களில் பன்முகப்படுத்த உதவுகிறது" என்று நிதின் பாய் குறிப்பிடுகிறார்.

நேருவின் ஆட்சிக் காலத்தில்கூட, சுதேசிக்கு சவால்விட போதுமான சான்றுகள் இருந்தன. ஆனால், அதன் தார்மீக மற்றும் அரசியல் சக்தி இந்த பாதையிலிருந்து விலகிச் செல்வதை கடினமாக்கியது.


"1950களின் பிற்பகுதியிலும் 1960களின் பிற்பகுதியிலும் நாகரீகமாக மாறிய ஏற்றுமதி அவநம்பிக்கையானது, உண்மையான தரவுகளில் பலவீனமான ஆதரவைக் கொண்டிருந்தது மற்றும் கோட்பாடுகளில் பலவற்றைக் கொண்டிருந்தது" என்று மேகநாத் தேசாய் 1999-ல் ஒரு கட்டுரையில் கூறினார். ('உலகமயமாக்கல் உலகில் இந்தியாவின் பொருளாதார முன்னுரிமைகள் என்னவாக இருக்க வேண்டும்').


1980-களில்தான், இந்தியப் பொருளாதாரம் தேக்கமடைந்து கடுமையான பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொண்டபோதுதான், இந்தியாவில் சுதேசிக்கான ஈடுபாடு குறையத் தொடங்கியது.


ஒரு மந்தநிலை மற்றும் மறு எழுச்சி


1991-ம் ஆண்டின் நோக்கமானது, பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்ந்து இந்தியா தனது பொருளாதாரத்தைத் திறந்த பிறகு, சுதேசி இரண்டு காலக்கட்டங்களாக பின்தங்கியிருந்தது. இந்தக் காலகட்டம் உலகமயமாக்கலின் உச்சக்கட்டமாக இருந்தது. பிரான்சிஸ் ஃபுகுயாமாவால் (Francis Fukuyama) "வரலாற்றின் முடிவு" என்று பிரபலமாக அழைக்கப்பட்டது. 


"ஏறக்குறைய இரண்டு தசாப்த காலமாக நீடித்த...அதி-உலகமயமாக்கல்...காலம், உலக வர்த்தக அளவு உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) அதிகரிப்பை தொடர்ந்து மிஞ்சிய முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியால் குறிக்கப்பட்டது," என்று சமூகவியலாளர் டிபோர் ரூட்டர் ”பால்கிரேவ் சமகால புவிசார் அரசியலின் கையேடு-2024 (Palgrave Handbook of Contemporary Geopolitics) என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்ட 'உலகமயமாக்கலின் எழுச்சி மற்றும் வெளிப்படையான சரிவு' (The Rise and Apparent Decline of Globalization) என்ற கருத்தை குறிப்பிட்டிருந்தார்.


ஆனால் இந்த, மிகை-உலகமயமாக்கல் (hyper-globalization), பழைய விநியோகச் சங்கிலிகள் மற்றும் தொழில்களை, குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் சீர்குலைத்தது. அதே நேரத்தில் உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளான சீனா, இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு வேகமாக அதே நிலைப்பாட்டுடன் வளர்ச்சியடையச் செய்தது. இதனால், 2008-ம் ஆண்டின் நிதி நெருக்கடியுடன் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், வளர்ந்த நாடுகளில் பொருளாதார தேக்கநிலை, மற்றும் பொருளாதாரம் மற்றும் குடியேற்றத்திற்கு எதிரான வளர்ந்துவரும் பொதுமக்களின் வெறுப்பும் வெளிப்பட்டுள்ளது.


காங்கிரஸ் தாராளமய-உலகமயமாக்கப்பட்ட (liberal-globalized) அணுகுமுறையை நோக்கி மாறியபிறகு, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (Rashtriya Swayamsevak Sangh (RSS)) 1990-களில் சுதேசியைத் தழுவியது. பொருளாதாரம் குறித்த வலுவான தேசியவாதக் கண்ணோட்டத்தில் வேரூன்றிய RSS-ன் சுதேசியின் செயல் திட்டம், பாஜக ஆட்சியின் கடந்த பத்தாண்டுகளில் வலுப்பெற்றுள்ளது.


பாஜக பெரும்பாலும், அந்நிய நேரடி முதலீட்டு (foreign direct investment (FDI)) விதிகளை தளர்த்துவதை ஆதரித்துள்ளது. இருப்பினும், நரேந்திர மோடியின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியதிலிருந்து, அரசாங்கம் அதன் சுதேசி இயக்க உந்துதலை புதுப்பித்துள்ளது. இதன் விளைவாக, அதன் உரைகளிலும், உண்மையான கொள்கைகளிலும் வெளிப்படுகிறது. இந்தியாவில் தயாரிப்போம் முன்முயற்சி (Make in India initiative) மற்றும் தன்னிறைவு இந்தியா (Aatmanirbhar Bharat) உருவாக்குவதற்கான முக்கியத்துவம் ஆகியவை 19-ம் நூற்றாண்டிலிருந்து சுதேசியின் ஆதரவாளர்கள் கொண்டிருந்த கவலைகள் மற்றும் பரிந்துரைகளை எதிரொலிக்கின்றன. ஆனால், கோவிட்-19 தொற்றுநோயின்போது விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் சீனாவுடனான இந்தியாவின் சவாலான உறவால் இந்த உந்துதல் பாதிக்கப்படுகிறது.


கடந்தகால அனுபவங்கள் சுதேசியை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது பின்வாங்கும் என்பதைக் காட்டுகின்றன. நிதின் பாய் குறிப்பிட்டது போல், "பொருளாதார தேசியவாதத்தின் தன்மை சுதேசியைவிட சாமர்த்தியத்தை (திறமை) சுட்டிக்காட்டுகிறது. திறன் என்பது எல்லாவற்றையும் ஒருவரின் சொந்த நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அர்த்தமல்ல, திறன் இருந்தாலும் கூட. மாறாக, எங்கு உற்பத்தி செய்யப்பட்டாலும், தேவையானதை அணுகும் சக்தியைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.



Original article:

Share: