பின்னடைவான விசாரணைகள் பொதுவானவை. இருப்பினும், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) கடுமையான விசாரணை செயல்முறையையை ஒரு தண்டனையாக மாற்றுகிறது.
மூன்று சமீபத்திய நிகழ்வுகள், கடுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA), 1967-ன் கீழ் நீடித்த தடுப்புக்காவல், பின்னடைவான விசாரணைகள் மற்றும் ஜாமீன் விவகாரங்களில் தாமதம் ஆகியவற்றின் மீது மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளன.
அக்டோபர் 12-ம் தேதி, டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா ஒரு பத்தாண்டுகால சிறைவாசத்தைத் தொடர்ந்து, UAPA வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சில மாதங்களில் இவர் மரணமடைந்தார்
கடந்த வாரம், UAPA வழக்கின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித்தின் ஜாமீன் மனுவானது, நீதிபதிகள் விடுமுறையில் இருந்ததால் நீதிமன்ற அமர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த மாதம் உச்சநீதிமன்றம் UAPA வழக்கின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த நபர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார் எனவும், இவரின் விசாரணையில் தாமதம் ஏற்பட்டதே ஜாமீன் வழங்குவதற்கான காரணம் என நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த ஆண்டு இரண்டு முறை, உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு மற்றும் UAPA வழக்குகளின் கீழ் விசாரணையில் தாமதம் தொடர்பான கருத்துகளை மேற்கொண்டது. UAPA வழக்குகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர் இருந்தாலும், "ஜாமீன் என்பது விதிமுறை மற்றும் சிறை என்பது விதிவிலக்கு" (bail is the rule and jail is the exception) பற்றி ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், கடுமையான ஜாமீன் நிபந்தனைகளுடன் கூடிய கடுமையான குற்றங்களுக்கு, விசாரணைகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று செப்டம்பர் மாதம் நீதிமன்றம் குறிப்பிட்டது. 2022-ம் ஆண்டின் இறுதியில், UAPA வழக்குகளின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பாதி வழக்கு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காவல் விசாரணையின் பல்வேறு கட்டங்களில் நிலுவையில் இருப்பதாக தரவு காட்டுகிறது. இது, கொலை, சூதாட்டம் உள்ளிட்ட 122 குற்றப் பிரிவுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இந்த வழக்கு இரண்டாவது அதிகப் பங்காகும்.
விளக்கப்படம் 1 இரண்டு முக்கிய தகவல்களைக் காட்டுகிறது. கிடைமட்ட அச்சுக்கோடு வழக்குகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. இதில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காவல் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளின் பங்கை செங்குத்து அச்சுக்கோட்டில் காட்டுகிறது. இந்தத் தரவு இந்திய தண்டனைச் சட்டத்தால் (Indian Penal Code) வரையறுக்கப்பட்ட அனைத்து 122 குற்ற வகைகளையும் உள்ளடக்கியது, இது இப்போது பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita) என்று குறிப்பிடப்படுகிறது.
2022-ம் ஆண்டின் இறுதியில், 2,020-க்கும் மேற்பட்ட UAPA வழக்குகள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையானது நிலுவையில் உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டுகளில் உள்ள மொத்த நிலுவையில் உள்ள 4,037 வழக்குகளில் UAPA-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் 50% ஆகும்.
பதிவான மொத்த வழக்குகளின் எண்ணிக்கையில் UAPA-ன் வழக்கு அதிக எண்ணிக்கையால் தனித்து நிற்கிறது. இதில், அதிகப்பட்ச வழக்குகளின் எண்ணிக்கையாக, 1981-ம் ஆண்டு போலி மற்றும் கள்ளநோட்டு சட்டத்தின் (Forgery and Counterfeiting Act) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 57% ஆகும். 1967-ம் ஆண்டின் பாஸ்போர்ட் சட்டத்தின் (Passports Act) கீழ் உள்ள வழக்குகள் 43% ஆகும்.
குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான UAPA-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நிலுவையில் உள்ளன. சமீபகாலமாக இது அதிகரித்துள்ளது. இது 2019-ன் இறுதியில் 40% இலிருந்து 2022-ன் இறுதியில் 50% ஆக உயர்ந்துள்ளது என்பதை விளக்கப்படம் 2 காட்டுகிறது.
2017 முதல் 2022 வரை UAPA-ன் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை விளக்கப்படம் 3 காட்டுகிறது. இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள், விடுவிக்கப்பட்டவர்கள், நிரபராதியாக விடுவிக்கப்பட்டவர்கள் மற்றும் தண்டனை பெற்ற நபர்களின் எண்ணிக்கையையும் இது காட்டுகிறது.
இந்தக் காலகட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இந்தக் காலகட்டத்தில் தண்டனை பெற்ற அல்லது விடுவிக்கப்பட்ட அதே நபர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அங்கீகரிப்பது முக்கியம் என்றாலும், இதற்கான தரவு இன்னும் ஒட்டுமொத்த தன்மையையும் பயனுள்ளதாக வழங்குகிறது.
இந்த காலகட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 10%-க்கும் குறைவானவர்கள்தான் குற்றவாளிகள், விடுவிக்கப்பட்டவர்கள் மற்றும் நிரபராதியாக விடுவிக்கப்பட்டவர்கள் ஆவர். ஏனெனில், இதற்கான விசாரணை தாமதம் என்பதை இதன் முக்கிய காரணமாக சுட்டிக்காட்டுகிறது. இந்திய நீதி அமைப்பில் தாமதமான வழக்குகள் மற்றும் பின்னடைவான காவல் விசாரணைகள் பொதுவானவை என்றாலும், UAPA போன்ற சட்டங்கள் கடுமையானதாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், கைது செய்யப்பட்டவர்களுக்கு குறைவான விகிதத்தில் ஜாமீன் வழங்கப்படுகிறது.
2018 முதல் 2020 வரை UAPA-ன் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை விளக்கப்படம் 4 காட்டுகிறது. இதில் எத்தனை பேர் குற்றவாளிகள், விடுவிக்கப்பட்டனர், ஜாமீன் வழங்கப்பட்டனர் அல்லது இந்த வகைகளில் எதிலும் வரவில்லை என்பதையும் இது காட்டுகிறது. விளக்கப்படம் 3-க்கு பொருந்தும் அதே விதிமுறை விளக்கப்படம் 4-க்கும் பொருந்தும். UAPA-ன் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 23% பேர் ஜாமீன் பெற்றனர், 3% பேர் குற்றவாளிகள் மற்றும் 7% பேர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 67% பேர் இன்னும் சிறையில் உள்ளனர். UAPA-ன் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், சட்ட செயல்முறை தண்டனையின் ஒரு வடிவமாக செயல்படுகிறது என்பதை விளக்கப்படங்கள் குறிப்பிடுகின்றன.