44% பேச்சுத்திறன் மற்றும் மொழித்திறன் கொண்ட நபரை மருத்துவக் கல்வியைத் தொடர அனுமதிக்கும் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
உடல் குறைபாடுகளின் தரநிலைகளின் அடிப்படையில் தனிநபர்களுக்கு கல்வி நிறுவனங்களில் வாய்ப்புகளை மறுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. ஒரு நபரின் குறைபாடு ஒரு படிப்பை வெற்றிகரமாக முடிப்பதைத் தடுக்கிறதா என்பதை மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு வாரியங்கள் (disability assessment boards) மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அது அறிவுறுத்தியது.
அணுகல்தன்மை குறித்த நீண்ட காலப் பிரச்சினையை எடுத்துரைத்த நீதிபதிகள் பூஷன் ஆர் கவாய், அரவிந்த் குமார் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு வாரியம், குறிப்பிட்ட உடல் குறைபாடு உள்ளவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று தீர்மானிக்கிறது. வாரியம் இவ்வாறு செய்வதைத் தடுக்க போதுமானதாக விதிமுறைகள் இல்லை என்றும் கூறியது. மேலும், “அளவீடு இயலாமை என்பது, கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு பரிசீலிக்கப்படுவதிலிருந்து குறிப்பிட்ட உடல் குறைபாடு கொண்ட ஒரு நபரை விலக்கிவிடாது என்று நாங்கள் நம்புகிறோம்.
உடல் குறைபாடு உள்ளவர்களை மதிப்பீடு செய்யும் மாற்றுத்திறனாளி மதிப்பீட்டு வாரியங்கள், நபரின் உடல குறைபாடு மாற்றுத்திறனாளி தகுதிப்பாட்டிற்குள் வருமா என்பதை நேர்மறையாகப் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு வாரியங்கள் ஒரு நபர் படிப்பைத் தொடர தகுதியற்றவர் என்று முடிவு செய்தால் அதற்கான காரணங்களைக் குறிப்பிட வேண்டும். மேலும், மதிப்பீட்டு வாரியத்தின் முடிவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான ஒரு வழிமுறையை உருவாக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் ( National Medical Commission (NMC)) உத்தரவிட்டது.
அத்தகைய மேல்முறையீட்டு அமைப்புகளை உருவாக்குவது நிலுவையில் உள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு வாரியங்களின் எதிர்மறையான கருத்துக்களை நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளில் முறையீடு செய்யலாம் என அமர்வு உத்தரவிட்டது. இதை நீதிமன்ற தெளிவிற்காக எந்தவொரு முதன்மை மருத்துவ நிறுவனத்திற்கும் அனுப்பலாம். மேலும், அந்த மருத்துவ நிறுவனத்தின் கருத்தின் அடிப்படையில் அந்த நபருக்கு நிவாரணம் வழங்கப்படும் அல்லது மறுக்கப்படும்."
44% பேச்சு மற்றும் மொழி குறைபாடுள்ள நபர் மருத்துவக் கல்வியைத் தொடர முயன்ற வழக்கில் இருந்து இந்த தீர்ப்பு எழுந்தது. 40% க்கும் அதிகமான பேச்சு மற்றும் மொழி குறைபாடு உள்ள நபர்களை மருத்துவப் படிப்புகளில் இருந்து தடுக்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் கடுமையான விதியின் காரணமாக மனுதாரருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு இந்தியாவில் மருத்துவக் கல்வியில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை உருவாக்குகிறது. இது மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை (Medical Education Regulation ) 1997-க்கு சவால் விடுகிறது. தற்போது 40% அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடு உள்ள நபர்களை மருத்துவ படிப்புகளில் இருந்து விலக்குகிறது. பல்வேறு வகையான குறைபாடுகளை வேறுபடுத்தி பார்க்க தவறியதற்காகவும், ஒரு நபரின் உண்மையான செயல்திறன் திறனைக் கருத்தில் கொள்ளாததற்காகவும் இந்த விதியை உச்ச நீதிமன்ற அமர்வு விமர்சித்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, கல்வி முறை மற்றும் பிற துறைகளில் குறைபாடுகளை எவ்வாறு நடத்துகிறது என்பதில் மாற்றங்களை பரிந்துரைக்கிறது. கடந்த கால நிகழ்வு மற்றும் சதவீதங்களை நாம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அதற்கு பதிலாக, ஒவ்வொரு நபரின் உண்மையான திறன்களைப் புரிந்து கொள்ள தனித்தனியாக மதிப்பீடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றது.
செப்டம்பர் 18 அன்று ஒரு சுருக்கமான உத்தரவின் மூலம் மனுதாரரை மருத்துவப் படிப்பில் சேர்க்க அனுமதி அளித்தாலும், செவ்வாய்கிழமை தீர்ப்பு அந்த முடிவிற்கான காரணத்தை வழங்கியது. ஒவ்வொரு நபரை தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியது.
இயலாமையின் சதவீதத்தை மட்டுமின்றி, நபரின் திறனில் அதன் தாக்கத்தையும் மதிப்பிடும் வகையில், மதிப்பீட்டு வாரியங்கள் முழுமையான அணுகு முறையை பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
நீதிபதி விஸ்வநாதன் எழுதிய தீர்ப்பில், “மாற்றுத்திறனாளி மதிப்பீட்டு வாரியங்கள் ஒரு நபரை நீக்கம் செய்வதற்கான இயலாமை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல் குறைபாடுகளை மட்டும் பார்க்கும் ஒரே மாதிரியாக செயல்படும் இயந்திரங்களை போல் செயல்படக் கூடாது என்று விளக்கினார். அத்தகைய அணுகுமுறை அரசியலமைப்பின் 14 மற்றும் 21 (சமத்துவம் மற்றும் கண்ணியம்) மற்றும் நீதி, சமத்துவம் மற்றும் நல்ல மனசாட்சியின் அனைத்து கொள்கைகளுக்கும் முரண்படும்.
ஒரு நபரின் குறைபாடு அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் என்று மாற்றுத்திறனாளி மதிப்பீட்டு வாரியம் கண்டறிந்தாலும், இந்த முடிவை நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியும் என்று அமர்வு தெளிவுபடுத்தியது. குறிப்பிட்ட மேல்முறையீட்டு கட்டமைப்புகள் நிறுவப்படும் வரை நீதித்துறை மறுஆய்வு ஒரு விருப்பமாக இருக்கும் என்ற கருத்தை இது வலுப்படுத்துகிறது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் (Right of Persons with Disabilities Act) 2016, உள்ளடக்கிய விளக்கத்திற்கு அழைப்பு விடுத்த அமர்வு, எதிர்கால விதிமுறைகள் "உள்ளடக்கிய அணுகுமுறையை" பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்குப் பதிலாக வழங்கப்படுவதை இது உறுதி செய்கிறது.
மாற்றுத்திறனாளி நபர்களுக்கான அணுகல் மற்றும் பங்கேற்பை எளிதாக்குவதற்கு நிறுவனங்கள் செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள் சட்டத்தில் உள்ள ஒரு தரநிலையான "முறையான உதவி" குறித்தும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் உடனான நேர்மறையான தொடர்புக்காக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தை (Union ministry of social justice and empowerment) நீதிமன்ற அமர்வு பாராட்டியது மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பில் இதே போன்ற மாற்றங்களை வலியுறுத்தியது.
தனித்தனி நடவடிக்கைகளில் நீதிமன்ற உத்தரவால் தூண்டப்பட்டு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (Union ministry of social justice and empowerment) ஜனவரி 25, 2024 அன்று தேசிய மருத்துவ ஆணையத்திற்க்கு ஒரு தகவல் அனுப்பியது. இதில் தகவல் தொடர்பு உதவி சாதனங்கள் இயலாமையின் விளைவுகளை குறைக்க உதவும் மற்றும் பிற தொழில்நுட்பங்களின் வளர்ச்சிகளை பரிசீலிக்க தேசிய மருத்துவ ஆணையம் கோரியது.
விண்ணப்பப் படிவங்களில் குறைபாடுகளை முறையாக வகைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அது வலியுறுத்தியது. தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டவுடன், அவர்களின் குறைபாடுகள் காரணமாக அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை இது உறுதி செய்கிறது. மதிப்பீட்டு வாரிய முடிவுகளை முறையீடு செய்ய, மேல்முறையீட்டு அமைப்புகளை நிறுவவும் முன்மொழிந்தது.
40%க்கும் அதிகமான குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பை சீராக மறுக்கும் மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை விதியை இந்தத் தீர்ப்பு ஏற்கவில்லை.
"பாகுபாடு குறித்த மனுவை விசாரிக்கும் அரசிலமைப்பு நீதிமன்றம் உண்மையான சமத்துவம் உள்ளதா என்பதை பரிசீலிக்க வேண்டும். மேலோட்டமான சமத்துவத்தின் முன்கணிப்பால் நீதிமன்றத்தைத் திசைதிருப்பக்கூடாது என்று அமர்வு குறிப்பிட்டது. தனிப்பட்ட வேறுபாடுகளை அங்கீகரிக்கும் மற்றும் மதிப்பிடும் அமைப்புக்காகவும் வாதிடுகிறது.
குறைபாடுகள் உள்ள நபர்களை விலக்குவதற்கான காரணங்களைத் தேடுவதற்குப் பதிலாக அவர்களை வரவேற்கும் சூழலை உருவாக்குவதில் நிறுவனங்களின் பங்கை நீதிமன்றம் எடுத்துக்காட்டியது. அதில், “அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் அணுகுமுறை, மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகளை வழங்குவது எப்படி என்பதில் சிறந்ததாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை எப்படி தகுதி நீக்கம் செய்வது என ஆராய கூடாது என்றது.
இந்த உள்ளடக்கிய மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் திருத்தப்பட்ட விதிமுறைகளை வெளியிடுமாறு தேசிய மருத்துவ ஆணையத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டத்தின் நோக்கங்களை மேலும் மேம்படுத்தும் வகையில் ஒழுங்குமுறைகளை விளக்குவதற்கு நீதிமன்றத்தை கட்டாயப்படுத்தும் என குறிப்பிட்டது.
இந்தியா மற்றும் உலக அளவில் குறைபாடுகள் உள்ள பல குறிப்பிடத்தக்க நபர்களை இந்த தீர்ப்பு மேற்கோள் காட்டியது. அவர்கள் சவால்களை மீறி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். பரதநாட்டிய நடனக் கலைஞர் சுதா சந்திரன், மலையேறும் அருணிமா சின்ஹா மற்றும் மாற்றுத்திறனாளி உரிமை ஆர்வலர் டாக்டர் சதேந்திர சிங் போன்ற இந்திய சாதனையாளர்களை உதாரணமாகக் குறிப்பிட்டார்.
மேலும், நீதிமன்ற அமர்வு அதன் தீர்ப்பின் முடிவில் வரலாற்று சின்னங்களை குறிப்பிட்டுள்ளது. அதில், "ஹோமர், மில்டன், மொஸார்ட், பீத்தோவன், பைரன் மற்றும் பலர் தங்கள் முழுத் திறனையும் உணர அனுமதிக்காமல் இருந்திருந்தால் இந்த உலகம் மிகவும் ஏழ்மையாக இருந்திருக்கும்" என குறிப்பிட்டது.