தேசியப் பாடலின் 150-வது ஆண்டு நிறைவில், இந்தியாவில் சுற்றுச்சூழல் எவ்வளவு தூய்மையாக உள்ளது என்று சிந்திக்க ஒரு நல்ல தருணத்தை வழங்குகிறது.
இந்தியாவின் சுதந்திரத்திற்கான போர்க்குரலாக மாறிய வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாட இந்தியா தொடங்கியுள்ளது. பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் காலத்தால் அழியாத வார்த்தைகளான “சுஜலம், சுபலம், மலையஜ சீதளம், சஸ்ய-ஷ்யாமலம் (தெளிவான நீர்நிலை நிறைந்தது, பழங்கள் நிறைந்தது, மலைக்காற்றால் குளிர்ச்சியடைந்தது, அறுவடை நிறைந்த வயல்களுடன் செழிப்பானது மற்றும் பசுமையானது”) என்பதை நாம் எவ்வளவு தூரம் உணர்ந்துள்ளோம் என்று சிந்திக்க ஒரு நல்ல தருணமாகும்.
பல்லுயிர் பன்முகத்தன்மை கொண்ட நிலம்
இந்தியாவின் சுற்றுச்சூழல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகின் சிறந்த நாகரிகங்களில் ஒன்றின் தொட்டிலாக மாறுவதற்கு மிக முக்கியமானதாக பன்முகத்தன்மை உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை மற்றும் கருவுறுதல் விகிதம் அதன் மண்ணின் வளத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய மக்கள்தொகையை ஆதரிக்க ஏராளமான அறுவடைகளை வழங்க முடிந்தது. உலகின் நிலப்பரப்பில் இந்தியாவின் நிலப்பரப்பு வெறும் 2.4% மட்டுமே என்றாலும், உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாடு, உலகின் உயிரினங்களில் சுமார் 8% இந்தியாவிற்கு தாயகமாக உள்ளது என்பதை நிரூபிக்கிறது. 91,200-க்கும் மேற்பட்ட விலங்கு இனங்களும் 45,500-க்கும் மேற்பட்ட தாவரங்களும் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தியாவின் மழை பெய்யும் காற்றின் நம்பகத்தன்மை, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, புகழ்பெற்ற புவியியலாளர் ஹால்ஃபோர்ட் மெக்கிண்டர், இந்தியாவை உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கும் "பருவமழை ஆற்றல்" (Monsoon power) என்று விவரித்தார்.
ஆனால் இந்த வளமான சுற்றுச்சூழல் பாரம்பரியம் ஒரு கேள்வியை எழுப்புகிறது. நமது நாகரிகத்தை வடிவமைத்த கூறுகளான சுஜலம், சுபலம், மலையஜ சீதளம் ஆகியவற்றை நாம் எவ்வளவு சிறப்பாகப் பாதுகாத்துள்ளோம்? உயிர்களை நிலைநிறுத்தும் இந்தியாவின் ஆறுகள் இப்போது கடுமையான சிக்கலில் உள்ளன. கிட்டத்தட்ட 43% நதி கண்காணிப்பு அமைப்புகள் கன உலோக மாசுபாட்டின் (heavy metal contamination) தடயங்களைக் கண்டறிந்துள்ளன.
பல இந்திய நதிகளில் பூச்சிக்கொல்லிகளின் அளவு (pesticide content) அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட மிக அதிகமாக உள்ளது. உலகளாவிய நீர் தர தரவரிசையில், இந்தியா 122 நாடுகளில் 120வது இடத்தில் உள்ளது. இதில் குறிப்பிடும்படியாக, நமது நீர் ஆதாரங்களிலிருந்து (aquifers) வரும் தண்ணீரை நாம் நம்பவில்லை என்பதில் ஆச்சரியமில்லை.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், 60% இந்திய குடும்பங்கள் தங்கள் குழாய் நீருக்காக வடிகட்டியைப் பயன்படுத்துகின்றன என்று கண்டறியப்பட்டது. யமுனை நதியில் ஏற்படும் மாசுபாடு இப்போது இணையப்பதிவில் (memes) தோன்றலாம். ஆனால், நாம் நமக்காக உருவாக்கிய துயரத்தில் மகிழ்ச்சிக்கு இடமில்லை.
இந்தியாவில் 40%-க்கும் மேற்பட்ட உணவு மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பூச்சிக்கொல்லிகள் இருப்பதாக ஆய்வுகள் மதிப்பிடுகின்றன. ஆச்சரியப்படத்தக்க வகையில், புற்றுநோய் நோயாளிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 12% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நமது காலத்தின் நெருக்கடி
பங்கிம் சந்திர சட்டர்ஜி மட்டுமல்ல, கவிஞர் காளிதாசர் முதல் தாகூர் வரை, இந்தியாவின் புதிய மற்றும் மணம் கொண்ட காற்றைப் புகழ்ந்தனர். டெல்லியின் காற்று தரக் குறியீடு (Air Quality Index (AQI)) பற்றி இன்று அவர்கள் என்ன சொல்ல வேண்டும்? அக்டோபர் 30 அன்று, உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் முதல் 40 இடங்களைப் பிடித்தன. பயண வலைத்தளங்கள் இப்போது இந்தியாவில் உள்ள இடங்களுக்கு "50-க்கும் குறைவான காற்று தரக் குறியீடு” (an AQI less than 50) இருப்பதை முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்துகின்றன.
காற்று மாசுபாட்டின் நிதிச் செலவு இப்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 9.5% ஆகும். இது சமீபத்திய பத்தாண்டு காலங்களில் இந்தியா அடைந்த பொருளாதார முன்னேற்றத்தை அழிக்க அச்சுறுத்துகிறது. அக்டோபரில் வெளியிடப்பட்ட லான்செட் ஆய்வு ஒரு குழப்பமான உண்மையைக் காட்டியது. அதில், மனிதனால் உருவாக்கப்பட்ட காற்று மாசுபாட்டால் 2022-ல் 17 லட்சம் இந்தியர்கள் அகால மரணம் அடைந்தனர். இந்த எண்ணிக்கை 2010-ஐ விட 38% அதிகமாகும்.
மசாலாப் பொருட்கள் மற்றும் கனிம வளங்களுக்குப் பெயர் பெற்ற இந்தியாவின் மிகப்பெரிய செல்வம் எப்போதும் அதன் வேளாண்மைதான். நாட்டில் குறைந்தது 66 வகை பழங்கள் மற்றும் 29 வகை தானியங்கள் அதன் நிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்தியா, குறிப்பிடத்தக்க விவசாய பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தியாவின் விவசாயம் இன்று காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராடி வருகிறது. மேலும், அதற்கு வலுவான மற்றும் நிலையான ஆதரவு தேவை. காலநிலை மாற்றத்தின் தாக்கம் எண்ணற்ற வழிகளில் வெளிப்பட்டுள்ளது. வெப்பநிலையின் அதிகரிப்பு முதல் மண்ணின் தரத்தை பாதித்த ஒழுங்கற்ற மழைப்பொழிவு வரை கணிக்க முடியாத்தாகி வருகிறது. இதன் விளைவாக கர்நாடகாவில் விளையும் சிட்ரஸ் பழங்களில் வைட்டமின்-சி-ன் அளவு குறைந்து வருவதாக குறிப்பிடுகிறது. மகாராஷ்டிராவில் திராட்சைகளில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் மரங்கள் தாமதமாக பூக்கின்றன.
சுத்தமான காற்று மற்றும் தண்ணீருக்கான உரிமை
வந்தேமாதரம் மக்களைத் திரட்டுவதற்கான ஒரு எழுச்சியூட்டும் கூக்குரலைவிடவும், சுதந்திரத்திற்கான ஒரு முழக்கத்தைவிடவும் அதிகமாக இருந்தது. அது எப்போதும் இந்தியர்களுக்கு நம்பிக்கைக்குரிய ஒரு பொருளாக இருந்தது, இன்றும் உள்ளது. அதன் வார்த்தைகள் இந்திய மக்களுக்கு அவர்களின் தாயகம் பற்றிய வாக்குறுதியைக் குறிக்கின்றன. வந்தே மாதரத்தின் எத்தனை சரணங்களைப் பாட வேண்டும் என்பது குறித்து பல ஆண்டுகளாக பல அரசியல் விவாதங்களைக் கண்டிருக்கிறோம். நமது தேசியப் பாடலின் வார்த்தைகள் இன்று எவ்வளவு உண்மை என்பது குறித்து, கருத்தியல் மற்றும் பாகுபாடான
எல்லைகளைத் தாண்டி ஒரு விவாதம் நடத்த வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம்.
அதேபோல், நமது உடல்நலம், நம்முடைய பெற்றோரின் ஆயுள், நமது குழந்தைகளின் நல்வாழ்வு ஆகியவை பணயத்தில் வைக்கப்பட்டிருக்கும் போது, ஒவ்வொரு குடிமகனும் முன்னே வந்து குரல் கொடுக்க வேண்டியது அவசியம். காற்று மாசுக்கு எதிரான சமீபத்திய இந்தியா கேட் போராட்டம் ஒரு அறிகுறியாக மட்டுமே இருக்கலாம். பங்கிம் சந்திர சட்டோபாத்யாயின் “ஆனந்தமடம் (Anandamath)” நாவலில், 1770-ல் தாய்நாட்டை காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க உறுதியாக இருந்த ஒரு குழு சந்நியாசிகள் குறித்து வர்ணிக்கப்படுகிறது. 2025-ல் அந்த உறுதி, ஆரோக்கியமான சுற்றுச்சூழலைக் கோரும் இளம் ஆர்வலர்களிடம் தொடர்கிறது. மாசின் கொடுமைகளிலிருந்தும், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான செயலற்ற தன்மையிலிருந்தும் விடுதலையை கோரும் ஒவ்வொரு பதாகை மற்றும் சமூக ஊடகப் பதிவிலும் அந்த உறுதி வெளிப்படுகிறது.
வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு நிறைவை விட சுஜல், சுபால் மற்றும் சஷ்ய-ஷ்யமல் (Sujal – சுத்தமான நீர்; Suphāl – பயனுள்ள/சிறந்த விளைவு; Sasya-shyamal – பசுமையான பயிர்கள்) இந்தியாவுக்கான அழைப்பை எழுப்புவதற்கு இதைவிட ஒரு சந்தர்ப்பமான தருணம் இருக்க முடியுமா? சுத்தமான காற்றிற்கான நமது உரிமைக்காக மட்டுமல்ல, நாம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் வந்தே மாதரத்தின் வாக்குறுதியை மீட்டெடுக்கச் சொல்ல வேண்டிய நேரம் இது.
இந்தியாவில் காலநிலை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2017-18-ஆம் ஆண்டில் ராஜா கார்த்திகேயா ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் வட்டங்களில் பயணம் செய்தார்.