மானியங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதும், மறுசீரமைப்புத் திட்டங்களும் நேரடி மானிய செலவினங்களைக் குறைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
2024-25 நிதியாண்டிற்கான மொத்த நேரடி பலன் பரிமாற்றங்கள் (Direct Benefit Transfers (DBT)) மூன்று ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிற்குக் குறைந்துள்ளன. DBT போர்ட்டலின் தரவுகளின்படி, உணவு மற்றும் உர வழங்களில் ஏற்பட்ட சரிவு இதற்கு முக்கியக் காரணமாகும். இருந்தபோதிலும், பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
திட்டங்களின் மறுசீரமைப்பு மற்றும் மானியங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதே DBT மதிப்பில் குறைவுக்குக் காரணம் என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், இது நலத்திட்டங்களைக் குறைப்பதாக அர்த்தமல்ல. FY23-ல் மொத்த DBT ₹7.16 லட்சம் கோடிக்கு மேல் இருந்ததாக தரவு காட்டுகிறது, இது FY24-ல் ₹6.91 லட்சம் கோடியாகவும், மேலும் ₹6.77 லட்சம் கோடியாகவும் குறைந்தது. இந்தக் காலகட்டத்தில், பொருளாக DBT குறைந்தாலும், ரொக்கமாக அதிகரித்தது. மேலும், இந்தத் திட்டம் முழுவதும் பயனாளிகளின் மொத்தத் தொகை FY23-ல் 166 கோடியிலிருந்து FY24-ல் 176 கோடியாக உயர்ந்து FY25-ல் 185.6 கோடியாக உயர்ந்துள்ளது.
முக்கியத் திட்டங்கள்
நிதியாண்டு 25 இறுதிக்குள், 55 மத்திய அமைச்சகங்களின் 327 திட்டங்கள் நேரடி பலன் பரிமாற்றம் (Direct Benefit Transfer(DBT)) மூலம் செயல்படுத்தப்படும். இதில், முக்கியத் திட்டங்களில் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், உர மானியங்கள், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொது விநியோக முறை, எல்பிஜி மானியத்திற்கான பஹால் (PAHAL), பல்வேறு உதவித்தொகை திட்டங்கள் மற்றும் பிரதமர் ஆவாஸ் யோஜனா (கிராமின்) ஆகியவை அடங்கும். உரங்கள் மற்றும் ஒரு சில திட்டங்களைத் தவிர, நன்மைகள் நேரடியாக பொருளாக வழங்கப்படுகின்றன. அனைத்து ரொக்கமாக வழங்குவதும் JAM (ஜன் தன், ஆதார் மற்றும் மொபைல்) முறையைப் பயன்படுத்தி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகின்றன.
BlueKraft டிஜிட்டல் அறக்கட்டளையின் புதிய அறிக்கை, 2014 முதல் 2024 வரை, DBT அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மானிய ஒதுக்கீடுகள் மொத்த அரசாங்க செலவினத்தில் 16%-லிருந்து 9%-ஆகக் குறைந்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது. "பாதுகாப்புத் தன்மையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தபோதிலும், மானியங்களைக் குறைப்பது நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவதில் DBTயின் பங்கைக் காட்டுகிறது. இது போலி பயனாளிகள் மற்றும் இடைத்தரகர்களை நீக்கி, பட்ஜெட்டில் விகிதாசார அதிகரிப்பு இல்லாமல் உண்மையான பெறுநர்களுக்கு நிதியை இயக்கியது" என்று அறிக்கை கூறியது. மார்ச் 2023 வரையிலான மொத்த மதிப்பிடப்பட்ட சேமிப்பு ₹3.48 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருந்தது.
DBT இணையதளத்தின்படி, துறைசார்ந்த தாக்கங்களின் விளக்கம், DBT பல திட்டங்களில் கழிவுகளைக் குறைக்க எவ்வாறு உதவியது என்பதைக் காட்டுகிறது. உதாரணமாக, உணவு மானியங்களில் (PDS) ₹1.85 லட்சம் கோடி சேமிக்கப்பட்டது. இது மொத்த DBT சேமிப்பில் 53% ஆகும். ஆதார்-இணைக்கப்பட்ட ரேஷன் கார்டு அங்கீகாரத்தால் இந்த சேமிப்பு முக்கியமாக ஏற்பட்டது.
கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில், 98% ஊதியங்கள் சரியான நேரத்தில் வழங்கப்பட்டன. இது DBT-இயக்கப்படும் பொறுப்புத் தன்மை மூலம் ₹42,500 கோடிக்கு மேல் சேமிக்கப்பட்டது.
PM-KISAN-ன் கீழ், ₹22,000 கோடி சேமிக்கப்பட்டது. இது 2.1 கோடி தகுதியற்ற பயனாளிகளை இந்தத் திட்டத்திலிருந்து நீக்குவதன் மூலம் செய்யப்பட்டது. உர மானியங்களில், 158 லட்சம் மெட்ரிக் டன் உர விற்பனை குறைக்கப்பட்டது. இது இலக்கு விநியோகம் மூலம் ₹18,699.8 கோடியை சேமிக்கிறது.
நேரடி பலன் பரிமாற்றத்தின் (Direct Benefit Transfer(DBT)) பங்கு
ஜனவரி 1, 2013 அன்று நேரடி பலன் பரிமாற்றம் (Direct Benefit Transfer(DBT)) திட்டம் தொடங்கப்பட்டது. அரசாங்க விநியோக முறையை சீர்திருத்துவதே இதன் நோக்கமாக இருந்தது. தகவல் மற்றும் நிதிகளின் ஓட்டத்தை எளிமைப்படுத்தி விரைவுபடுத்துவதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. பயனாளிகளை துல்லியமாக இலக்கு வைப்பதை உறுதி செய்வதிலும் இந்த அமைப்பு கவனம் செலுத்தியது. இது நகல் பதிவுகளை அகற்றுவதற்கும் மோசடியைக் குறைப்பதற்கும் (duplicate records and reducing fraud) உதவும்.
இந்தத் திட்டம் 2022-ம் ஆண்டில் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றது. இதை சாத்தியமாக்குவதில் தொழில்நுட்பத்தின் பங்கை சர்வதேச நாணய நிதியம் (IMF) பாராட்டியது. அதே ஆண்டில், உலக வங்கியின் அப்போதைய தலைவரான டேவிட் மால்பாஸ், இந்தியாவின் அணுகுமுறையை மற்ற நாடுகளும் ஏற்றுக்கொள்ள ஊக்குவித்தார். பரந்த மானியங்களிலிருந்து இலக்கு வைக்கப்பட்ட பணப் பரிமாற்றங்களுக்கு மாற அவர் பரிந்துரைத்தார். 85% கிராமப்புற குடும்பங்களுக்கும் 69% நகர்ப்புற குடும்பங்களுக்கும் இந்தியா வெற்றிகரமாக உணவு அல்லது பண ஆதரவை வழங்கியதை அவர் எடுத்துரைத்தார்.