பிப்ரவரி மாத சில்லறைப் பணவீக்கம் பணவியல் கொள்கைக் குழுக்கான பாதையை தெளிவுபடுத்துகிறது

 உணவு மற்றும் முக்கிய பணவீக்கம் (core inflation) இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்குப் பிறகு ஒன்றிணைந்துள்ளது.


பிப்ரவரி மாத சில்லறை பணவீக்கம் ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.61% ஆகக் குறைந்துள்ளது. இதற்கு, உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்ததே முக்கியக் காரணமாகும். மார்ச் மாத பணவீக்கமும் 4 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது நடந்தால், அடுத்த மாதம் பணவியல் கொள்கைக் குழு (Monetary Policy Committee) கூடும்போது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் விகிதங்களைக் குறைக்கலாம். கணிப்பு சரியாக இருந்தால், ஜனவரி மாத பணவீக்கம் 4.26% ஆக இருந்ததால், நான்காவது காலாண்டில் (Q4) பணவீக்கம் RBI-யின் கணிப்பான 4.4% ஐ விட சுமார் 50 அடிப்படை புள்ளிகள் குறைவாக இருக்கும். RBI, FY26-ல் 6.7% வளர்ச்சியையும், ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்பில் 4.2% பணவீக்கத்தையும் கணித்துள்ளது. இது அதன் ஏற்றுக்கொள்ளத்தக்க வரம்பில் மிகக் குறைந்த அளவில் உள்ளது. பணவியல் கொள்கைக் குழுவின் (MPC) பிப்ரவரி மாத முடிவைத் தொடர்ந்து 25 அடிப்படை புள்ளி விகிதக் குறைப்பு சாத்தியமாகத் தெரிகிறது. இது நுகர்வு மற்றும் தனியார் முதலீட்டை அதிகரிக்க உதவும்.


2026-ம் நிதியாண்டில் முக்கிய பணவீக்கம் (core inflation) 4-4.5 சதவீதமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது ஒரு மிதமான விகிதக் குறைப்புக்கான சாத்தியத்தைக் குறிக்கிறது. இருப்பினும், டிரம்பின் வரி விகிதங்கள் முக்கிய பணவீக்கத்தை உயர்த்தக்கூடும் என்ற ஆபத்து உள்ளது. கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஒட்டுமொத்த பணவீக்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கத்தின் பங்கு கடுமையாக அதிகரித்துள்ளது என்று SBI ஆய்வு குறிப்பிடுகிறது.


பணவியல் கொள்கைக் குழு (MPC) உணவு பணவீக்கத்தை புறக்கணிக்க வேண்டுமா என்ற கேள்வியும் உள்ளது. குறிப்பாக கோடைகால தொடக்கத்தில், கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்தால் இது நடக்கும். 2023-ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து, உணவு பணவீக்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணியாக இருந்து வருகிறது. அதே நேரத்தில், முக்கிய பணவீக்கம் (core inflation) குறைந்து வருகிறது (பொருளாதார கணக்கெடுப்பு 2024-25).


இந்த சூழ்நிலையில், பிப்ரவரி 2023 முதல் 6.5 சதவீதமாக இருக்கும் ரெப்போ விகிதத்தைக் குறைக்க RBI நீண்ட நேரம் காத்திருந்தது. நுகர்வு மற்றும் முதலீட்டில் வளர்ந்து வரும் மந்தநிலை இருந்தபோதிலும் இந்த தாமதம் ஏற்பட்டது. இந்த நிதியாண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில், உணவு பணவீக்கம் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில், முக்கிய பணவீக்கம் (core inflation) குறைவாக இருந்தது. இருப்பினும், அதன் பிறகு இரண்டும் நெருங்கி வந்துள்ளன. 2025 நிதியாண்டில் பணவீக்கம் 2024 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது சற்று குறைவாக உள்ளது.


உணவுப் பணவீக்கம் அக்டோபர் 2024-ம் ஆண்டில் 10.9%-லிருந்து (ஒட்டுமொத்த பணவீக்கம் 6.2% ஆக இருந்தது) பிப்ரவரியில் 3.75% ஆகக் குறைந்துள்ளது. இந்த பணவீக்கத்திற்கு, அடிப்படை விளைவைக் கருத்தில் கொண்டாலும் இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். ஜூன் 2020 மற்றும் ஜூன் 2024-க்கு இடையில் மாதத்தில் 57 சதவீதத்தில் உணவுப் பணவீக்க விகிதம் 6%-க்கும் அதிகமாக இருந்தது. இது முக்கியமாக காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டது என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உணவு விலைகளில் மட்டுமே கவனம் செலுத்தும் கடந்த காலத் தவறை இந்திய ரிசர்வ் வங்கி தவிர்க்க வேண்டும். எதிர்கால விகிதக் குறைப்புக்கள் நிதி மற்றும் புவிசார் அரசியல் சவால்களில் ஏற்படும் எந்தவொரு அதிகரிப்பையும் சேர்த்து, முக்கிய பணவீக்கத்தையும் சார்ந்திருக்கும்.


உணவுப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் பணவீக்கத்திற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்ய வேண்டும். உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். விநியோகச் சிக்கல்களைச் சரிசெய்வதன் மூலம் இதைச் செய்ய முடியும். அதே நேரத்தில், அமெரிக்கப் பொருளாதாரம் சிக்கலுக்கான அறிகுறிகளைக் காட்டுகிறது. இது டாலரை பலவீனப்படுத்தக்கூடும். இந்த பலவீனமான அறிகுறிகளுடன் டாலரின் மதிப்பு இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்க ஒரு வாய்ப்பை உருவாக்கக்கூடும்.



Original article:

Share:

மதிப்புக்கூட்டு வரி (VAT) தவிர, அனைத்து மாநில வரி வகைகளும் வலுவான வளர்ச்சிக் கண்ணோட்டத்தைக் காட்டுகின்றன : தமிழ்நாடு நிதிச் செயலாளர்

 2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் வரி வருவாய் ₹1,92,752 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் டி. உதயச்சந்திரன் கூற்றுப்படி, மதிப்புக்கூட்டு வரி (Value Added Tax (VAT)) தவிர, பெரும்பாலான வரி வகைகளில், தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் சிறப்பாக செயல்படுகிறது.


2024-25 ஆம் ஆண்டிற்கான, திருத்தப்பட்ட மதிப்பீடுகளில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ₹1,92,752 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது பட்ஜெட்க்கான திட்டமிடப்பட்ட மதிப்பீடுகளில் ₹1,95,173 கோடியை விட சற்று குறைவு ஆகும். 2025-26ஆம் ஆண்டிற்கான வருவாய் ₹2,20,895 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வணிக வரிகள் மூலம் ₹1,63,930 கோடி, முத்திரைகள் மற்றும் பதிவு மூலம் (Stamps and Registration) ₹26,109 கோடி, மோட்டார் வாகன வரிகள் (Motor Vehicle Taxes) மூலம் ₹13,441 கோடி மற்றும் மாநில கலால் வரி மூலம் ₹12,944 கோடி ஆகியவை அடங்கும்.


“ஜிஎஸ்டி வசூலில், நாட்டின் முதல் மாநிலங்களில் தரவரிசையில் சிறப்பான முறையில் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. இதன் வளர்ச்சி விகிதம் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது. மேலும், இந்த மாநிலத்திற்கான நிலுவைத் தொகையை திறம்பட மீட்டெடுக்க தரவு பகுப்பாய்வு மூலம் நம் மாநிலத்தின் வரி நிர்வாகத்தை மேம்படுத்தியுள்ளோம்,” என்று நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் குறிப்பிடுகிறார்.


2025-26ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வசூல் 22.74% அதிகரித்து ₹93,620 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ₹76,277 கோடியாக இருந்தது.


இருப்பினும், டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் அதன் தொடர்புடைய பகுதிகளில் சில சவால்களையும் அவர் ஒப்புக்கொண்டார். இதில், முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய தெளிவற்றப் பகுதிகள் (grey areas) உள்ளன. டிஜிட்டல் பொருளாதாரத்திலிருந்து வருவாய் நம் மாநிலத்தின் அமைப்பிற்குள் வருவதை உறுதிசெய்ய நாம் கட்டணத் திரட்டிகளுடன் (payment aggregators) இணைந்து பணியாற்றி வருகிறோம். மேலும், இதன் மூலம் தரவுகளையும் சேகரித்து வருகிறோம். சரக்கு மற்றும் சேவை வரி வலையமைப்பையும் (Goods and Services Tax Network(GSTN)) தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சினையை தீவிரமாகக் கையாண்டு வருகிறோம்.


2026 நிதியாண்டில் 12 சதவீத வளர்ச்சியை ₹13,441 கோடியாகக் கணித்திருப்பதால் மோட்டார் வாகன வரி வசூல் சிறப்பான செயல்திறனைக் காட்டியுள்ளது. போக்குவரத்து வாகனப் பிரிவு (transport vehicle segment) உற்சாகமாக இருக்கும் அதே வேளையில், நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை ஜனவரி முதல் உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்த வளர்ச்சி தொடருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்கள் (stamp duty and registration charges) மூலம் கிடைக்கும் வருவாய் 14 சதவீதமாக, ₹26,110 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பெட்ரோல் மற்றும் மதுபான விற்பனையிலிருந்து வரும் விற்பனை வரி/வாட் வருவாய் அவ்வளவு வேகமாக வளரவில்லை. மற்ற வரிகளுடன் ஒப்பிடும்போது அவை குறைந்த வளர்ச்சியைக் காட்டுகின்றன. நிதியாண்டு 2026-ல், பட்ஜெட் மதிப்பீட்டின்படி, திட்டமிடப்பட்ட வருவாய்க்கான விற்பனை/வாட் வருவாய் 7 சதவீதம், ₹70,311 கோடி வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Original article:

Share:

கிராமப்புற இந்தியாவிற்கு வளங்கள் மீது அதிகளவில் அதிகாரப்பகிர்வு இருக்க வேண்டும். -அமர்ஜீத் சின்ஹா

 சிறந்த கிராமப்புற பள்ளிகளுக்கு, ஐடிஐக்கள் மற்றும் திறன் கல்வி, மற்றும் ஒரு அர்ப்பணிப்புள்ள கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டம் ஆகியவை கிராமப்புற இளைஞர்கள் வளர்ந்துவரும் உள்ளூர் வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை உறுதி செய்யும்.


வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களின் சமீபத்திய போக்குகள் மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற தனிநபர் மாதாந்திர நுகர்வு செலவினங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பது, பல கொள்கை வகுப்பாளர்களை கிராமப்புற இந்தியா மேம்பட்டு வருவதாக நம்புகிறார்கள். இருப்பினும், கிராமப்புற ஊதியங்கள் தேக்கமடைந்து, மற்றவர்கள் இந்த முடிவை கேள்வி கேட்க வைக்கிறது.


ஏழைகளுக்கு ஆதரவான பல பொது நலத் திட்டங்களான, ஜன்தன் வங்கிக் கணக்குகள், உஜ்வாலா எரிவாயு இணைப்புகள், ஸ்வச் பாரத் மிஷன் தனிநபர் இல்லக் கழிப்பறைகள், பிரதான் மந்திரி ஆவாஸ் கிராமின் வீடுகள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச மின்சாரம், அதிக நோய்த்தடுப்பு விகிதங்கள், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சுய உதவிக் குழுக்களில் உள்ள நூறு மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் கடன் இணைக்கப்பட்ட சுவாமித்வா சொத்து அட்டைகளில் 50%-க்கும் அதிகமானவை, வீட்டு சொத்து பிணையங்கள் மூலம் அதிக வங்கிக் கடனைப் பெறுவது, 92.5 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் 2.5 கிமீ தொலைவில் அனைத்து வானிலை சாலைகளையும் கொண்டிருக்கின்றன, இவை அனைத்தும் கிராமப்புறங்களில் வாழ்க்கை நிலைமைகள் மேம்பட்டு வருவதைக் காட்டுகின்றன.


பல முயற்சிகள் குறுகிய காலத்திற்கு கஷ்டங்களைக் குறைக்க உதவியுள்ளன. விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு பணப் பரிமாற்றங்களை வழங்குவதன் மூலம் அவர்கள் இதைச் செய்துள்ளனர். இருப்பினும், இந்த பணப் பரிமாற்றங்கள் நிலைத்தன்மை குறித்த கவலைகளை எழுப்புகின்றன. இத்தகைய நிதி உதவி காரணமாக அதிக பொதுக் கடன் ஒரு தீவிரமான பிரச்சினையாக உள்ளது. உதவி வழங்குவதைவிட மக்களை அதிகாரம் அளிப்பதே முக்கிய சவாலாகும். இது மக்களுக்கு மீன் கொடுப்பதற்குப் பதிலாக மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதற்கு இணையாகும்.


கிராமப்புறங்களில் உண்மையான ஊதியம் தேக்கமடைவது உற்பத்தித்திறன், உயர்தர கல்வி மற்றும் திறன் போன்ற பிரச்சினைகளை எழுப்புகிறது. கோவிட் தொற்றுக்குப் பிறகு, பின்தங்கிய குடும்பங்கள் நகர்ப்புறங்களில் மிகக் குறைந்த ஊதியம் அல்லது மோசமான வாழ்க்கை நிலைமைகளுடன் இடம்பெயர விரும்பவில்லை. இதனால், நகரங்களுக்கு இடம்பெயர்வு விகிதம் குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில், நுகர்வு மெதுவாக அதிகரித்து வருகிறது, மேலும் கீழ் நடுத்தர மற்றும் உயர் ஏழை வகுப்பைச் சேர்ந்த பலர் சேமிப்பில் சரிவைக் காண்கிறார்கள்.  அதிகமான மக்கள் வேலைகளைப் பெற்றாலும், இது வருமான நெருக்கடியைக் காட்டுகிறது. வேலையின்மை பிரச்சினை நாம் உணர்ந்ததை விட மிகவும் தீவிரமானது. விவசாயம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் இது காட்டப்படுகிறது.


கிராமப்புற பொருளாதாரம் ஒரு பெரியளவில் உழைக்கும் வயதுடைய மக்களை ஆதரிக்க வேண்டும். பல உடல்திறன் கொண்ட மக்கள் வேளாண் அல்லாத வேலைகளுக்குச் செல்லாததால் இது நடக்கிறது. உற்பத்தி மற்றும் கட்டுமானப் பணிகளில் பாதிக்கும் மேற்பட்டவை மற்றும் சேவைப் பணிகளில் ஐந்தில் ஒரு பங்கு கிராமப்புறங்களில் இருந்தாலும், பல பின்தங்கிய கிராமப்புற குடும்பங்கள் இந்த வாய்ப்புகளில் சேர்க்கப்படவில்லை. இதை மாற்ற, மனித மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.


தற்போதைய சூழ்நிலையில், கிராமப்புற மக்களின் கேள்வி என்னவாக இருக்க வேண்டும்?


பரவலாக்கப்பட்ட நடவடிக்கை


முதலாவதாக, பரவலாக்கப்பட்ட சமூக நடவடிக்கை மற்றும் நிதிப் பகிர்வு பற்றி மட்டும் பேசுவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. கல்வி, சுகாதாரம், திறன்கள், ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரங்களுக்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இந்தப் பகுதிகள் அடித்தளத்திலிருந்து ஒன்றிணைந்து செயல்படும்போது சிறந்த முடிவுகள் கிடைக்கும். இது இந்திய அரசியலமைப்பின் 11-வது அட்டவணையின் கட்டமைப்பிற்குள், 29 துறைகளை உள்ளூர் அரசாங்கங்களுக்கு (local governments) ஒதுக்குகிறது. இந்தத் துறைகள் ஒன்றோடொன்று மிகவும் ஒருங்கிணைந்தவை. மேலும், ஒரு துறையில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் நல்ல முடிவுகளைப் பெற முடியாது.


இரண்டாவதாக, உள்ளூர் சமூக நடவடிக்கைக்கு அவநம்பிக்கையிலிருந்து நம்பிக்கைக்கு மாறுவது அவசியம். உள்ளூர் அரசாங்கங்களுக்கு அதிக பிணையமற்ற நிதிகள் தேவை. தரவு சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பொறுப்புத் தன்மை அமைப்பும் அவர்களுக்குத் தேவை. சிறந்த முடிவுகளை அடைய நிபுணர்களை பணியமர்த்த இந்த அமைப்பு அவர்களுக்கு உதவ வேண்டும். மிஷன் அந்த்யோதயா கட்டமைப்பு (Mission Antyodaya framework) ஒரு நல்ல தீர்வாகும். இது 216 உள்ளூர் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த சமூகத்தால் சரிபார்க்கப்பட்ட தரவை ஒவ்வொரு ஆண்டும் சேகரிக்கிறது. இந்த அணுகுமுறை தெளிவான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இருப்பினும், வெற்றி என்பது சமூக மட்டத்தில் பிணையமற்ற நிதிகளை வழங்குவதைப் பொறுத்தது. மையப்படுத்தப்பட்ட (centralisation) கட்டுப்பாடு வளர்ச்சி மற்றும் புதுமைகளை கட்டுப்படுத்துகிறது.


மூன்றாவதாக, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் செயல்திறன் மற்றும் தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (Industrial Training Institutes (ITI)) மற்றும் பல்தொழில்நுட்பப் பயிலகங்களுக்கான (பாலிடெக்னிக்) அணுகல் ஆகியவை கிராமப்புறங்களுக்கு கணிசமாக மேம்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், உயர்தர திறன்கள் எப்போதும் திருப்திகரமான கற்றல் விளைவுகளுடன் முறையான இடைநிலைக் கல்வியின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சுகாதார சவால்கள் காரணமாக ஏற்படும் நோயுற்ற தன்மை ஆகியவை உற்பத்தித்திறனை சமரசம் செய்யலாம். கிராமப்புற மேல்நிலைப் பள்ளிகளுக்கு நல்ல வல்லுநர்கள் தேவை.


நான்காவதாக, கிராமப்புறங்கள் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் சேவைகளில் அதிக வாய்ப்புகளைப் பெறுகின்றன. சரியான திறன்களைக் கொண்டிருந்தால், கிராமப்புற இளைஞர்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வேளாண் அல்லாத தொகுப்புகளின் (non-farm clusters) வளர்ச்சிக்கு நகர்ப்புறங்களைப் போன்ற உள்கட்டமைப்பு தேவைப்படும். ரூர்பன் மிஷன் (Rurban Mission) 300 தொகுப்புகளில் இதற்கு உதவியது. இந்தத் திட்டத்தை நாம் மீண்டும் கொண்டு வர வேண்டும். கூடுதலாக, நகர் பஞ்சாயத்துகளாக மாற விரும்பும் கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கு நிதி உதவி வழங்குவதன் மூலம் நாம் ஆதரவளிக்க வேண்டும்.


ஐந்தாவது, மகளிர் கூட்டு முயற்சிகள் பெரிய அளவில் லட்சாதிபதி சகோதரிகளாக (lakhpati didis) மாற முடியும் என்பதைக் காட்டியுள்ளன. சுய உதவிக்குழு உறுப்பினர்களின் (SHG members) ஜன் தன் கணக்குகளை அவர்களின் SHG வரவுடன் (SHG credit) இணைக்க வேண்டும். இது ஒரு முழுமையான கடன் வரலாற்றை உருவாக்கவும் அவர்களின் சிபில் (CIBIL) மதிப்பெண்ணை மேம்படுத்தவும் உதவும். இது முதல் தலைமுறை பெண் தொழில்முனைவோருக்கு பயனளிக்கும். புத்தொழில் கிராம தொழில்முனைவோர் திட்டத்தின் (Start Up Village Entrepreneurship Programme (SVEP)) வெற்றியை பெரிய அளவில் விரிவுபடுத்த வேண்டும்.


கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டம்


ஆறாவது, ஒரு கிராமப்புற உள்கட்டமைப்புத் திட்டம் (rural infrastructure programme) இருக்க வேண்டும். இது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்துடன் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) கூடுதலாக இருக்க வேண்டும். கடுமையான நீர் பிரச்சினைகள் மற்றும் அதிக பற்றாக்குறை உள்ள மாவட்டங்களை எதிர்கொள்ளும் 2,500 இருண்ட தொகுதிகளில் (dark Blocks) MGNREGS கவனம் செலுத்த அனுமதிப்பதே இதன் நோக்கம். மற்ற பகுதிகளுக்கு, ஒரு பெரிய கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டம் தேவை. தேசிய உள்கட்டமைப்பு குழாய்த்திட்டத்தில் கிராமப்புற திட்டங்களைச் சேர்ப்பதும் உதவும். இது கிராமப்புற உள்கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளை சரிசெய்யும் செயல்முறையை விரைவுபடுத்தும்.


கிராமப்புறக் கோரிக்கை வலுவான பொருளாதாரத்தை ஆதரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி குடும்பங்கள் MGNREGS-ஐ நம்பியிருக்க வேண்டிய தேவையைக் குறைக்க வேண்டும். கல்வி, திறன்கள், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவை மேம்பட வேண்டும். சிறந்த வாழ்வாதாரங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும்.


அதிகாரப் பரவலாக்கம் உள்ளூர் நடவடிக்கைக்கான ஒரு தளத்தை உருவாக்கும். முழு வெளிப்படைத்தன்மையுடன் வலுவான பொறுப்புதன்மைக்கான அமைப்பை உருவாக்க தொழில்நுட்பம் உதவும். இதில் சமூக மற்றும் நிதி தணிக்கைகள், IT/DBT, புவிசார் குறியிடுதல் மற்றும் சான்றுகள் சார்ந்த ஆராய்ச்சி ஆகியவை அடங்கும். பொதுத் தகவல் மற்றும் பயன்படுத்த எளிதான பயன்பாடுகள் நிர்வாகத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றும். நிலையான கால ஒப்பந்தங்களில் நிபுணர்களை சந்தை விகிதங்களில் பணியமர்த்தலாம். அவர்கள் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் இதற்கான வரையறையை மாற்ற உதவலாம்.


ஒரு கிராம பஞ்சாயத்தை மேம்படுத்த அவர்கள் தங்கள் தற்போதைய வேலையிலிருந்து தற்காலிக விடுப்பு எடுக்கலாம். மாற்றப்பட்ட 29 துறைகளுக்கு அறிவியல் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும், நெகிழ்வான நிதியை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதன் மூலமும் இதைச் செய்வார்கள்.


எழுத்தாளர் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தில் மூத்த உறுப்பினர்.



Original article:

Share:

பிச்சை எடுப்பதை ஒழிக்க சட்டத்தை ஆயுதமாக்குதல் -ஸ்னேகா பிரியா யானப்பா

 போபால் மாவட்ட நிர்வாகம் பிச்சை எடுப்பதைத் தடைசெய்து தண்டிக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது, சில குழுக்களை வெறும் கூட்டாகக் குற்றவாளிகளாகக் கருதும் (criminalisation by association) காலனித்துவ கால மனநிலையை பிரதிபலிக்கிறது.


பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு எதிராக அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது என்ன நடக்கும்? சமீபத்தில், போபால் மாவட்ட ஆட்சியர் பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (Bharatiya Nagrik Suraksha Sanhita, 2023, (BNSS)) பிரிவு 163(2)-ன் கீழ் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவு பொது இடங்களில் பிச்சை எடுப்பதைத் தடை செய்கிறது. பிச்சைக்காரர்கள் மற்றும் பிச்சை கொடுப்பவர்கள் இருவரும் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று அந்த உத்தரவில் எச்சரிக்கையாக குறிப்பிப்பட்டிருந்தது.


பிரிவு 163 (2) (முன்னர் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973-ன் பிரிவு 144) பொது அமைதியைக் காக்க அரசாங்கத்தை அனுமதிக்கிறது. இடையூறு அல்லது ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ள அவசர சூழ்நிலைகளில் (urgent cases of nuisance or apprehended danger) அதிகாரிகள் இதைப் பயன்படுத்தலாம். இந்தப் பிரிவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. சட்டம் மாநிலத்திற்கு தடுப்பு நடவடிக்கை எடுக்க அனுமதிப்பதால், அதை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இருப்பினும், இது அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் என்பதால், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க (to preserve law and order) மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். இது போன்ற சூழல்களில் பாதிக்கப்பட்ட நபர்களின் வாதங்களைக் கேட்காமல் இந்தப் பிரிவின் கீழ் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும். இந்தப் பிரிவின் கீழ் ஒரு "அவசரநிலை" திடீரென ஏற்பட வேண்டும் என்றும் கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும் நீதிமன்றங்கள் கூறியுள்ளன.


போக்குவரத்து சிக்னல்களில் பல பிச்சைக்காரர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று கூறுவது இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிச்சைக்காரர்களை ஒரு குற்றவியல் குழுவாக சித்தரிக்கும் பலவீனமான மற்றும் தெளிவற்ற குற்றச்சாட்டாகும். இந்த உத்தரவு, 1871-ஆம் ஆண்டு குற்றவியல் பழங்குடியினர் சட்டம் (Criminal Tribes Act) போன்ற ஒரு காலனித்துவ மனநிலையை பிரதிபலிக்கிறது. இது கூட்டாண்மை அடிப்படையில் மக்களை தண்டித்தது. இது சட்ட அமலாக்கத்திற்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை அளிக்கிறது. பிச்சை எடுப்பதை நிறுத்துதல் என்ற பெயரில் தெருக்களில் இருந்து பிச்சைக்காரர்களை அகற்றுகிறது. தேவைக்காக பிச்சை எடுப்பவர்களுக்கும், பிச்சைக்காரர்களை சுரண்டும் குற்றவியல் குழுக்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இது காணத் தவறிவிட்டது.


இந்த உத்தரவு பிப்ரவரி 24-25 தேதிகளில் போபாலில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டிற்கு சில வாரங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்டது, இது தற்செயல் நிகழ்வு அல்ல. குற்றங்களைத் தடுப்பதோ அல்லது பொது அமைதியைப் பேணுவதோ அல்ல, மாறாக பொது இடங்களில் இருந்து பிச்சைக்காரர்களை அகற்றுவதே இதன் நோக்கமாகும். நாக்பூரில் (2023) நடந்த G20 உச்சிமாநாடு மற்றும் ஹைதராபாத்தில் (2017) நடந்த உலகளாவிய தொழில்முனைவோர் உச்சிமாநாட்டிற்கு முன்பும் இதே போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  அங்கு மக்களுக்கும் போக்குவரத்திற்கும் சிரமம் இருப்பதாகக் கூறி பிச்சை எடுப்பது தடைசெய்யப்பட்டது.


பிச்சைக்காரர்களைத் தண்டிப்பது என்பது, அவர்களைப் பாதுகாத்தல், மறுவாழ்வு அளித்தல் மற்றும் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைத்தல் என்ற குறிக்கோளுக்கு எதிரானது. இந்த உத்தரவு பிச்சைக்காரர்களுக்கான தங்குமிடம் பற்றி குறிப்பிடுகிறது. ஆனால், வறுமை மற்றும் போதுமான அரசாங்க ஆதரவு இல்லாதது போன்ற ஆழமான பிரச்சினைகளை புறக்கணிக்கிறது, இவையே பிச்சை எடுப்பதற்கான உண்மையான காரணங்களாகும். 2018-ஆம் ஆண்டு ஹர்ஷ் மந்தர் VS இந்திய ஒன்றியம் வழக்கில், பிச்சை எடுப்பது ஆழமான சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளால் ஏற்படுகிறது என்பதை உச்சநீதிமன்றம் அங்கீகரித்தது. பெரும்பாலான மக்கள் தங்கள் விருப்பப்படி அல்ல, உயிர்வாழ்வதற்காகவே பிச்சை எடுக்கிறார்கள் என்று கூறியது.


இந்த உத்தரவு ஒன்றிய அரசின் நலத்திட்டமான பிச்சை எடுக்கும் செயலில் ஈடுபடும் நபர்களுக்கான விரிவான மறுவாழ்வுக்கு எதிரானது. இந்த திட்டம் போபால் உட்பட 81 நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது. அதன் வழிகாட்டுதல்கள் பிச்சைக்காரர்களை தங்குமிடங்களுக்கு மாற்ற பரிந்துரைக்கின்றன. ஆனால், இதை அமல்படுத்த மாநில அதிகாரத்தை அதிகமாகப் பயன்படுத்துவதை இது நியாயப்படுத்தாது. பிச்சைக்காரர்களின் இருப்பு, அரசு தனது குடிமக்களை முறையாகக் கவனித்துக் கொள்ளத் தவறிவிட்டதைக் காட்டுகிறது. அவர்களைத் தண்டிப்பது, இந்தப் பிரச்சினையில் அரசின் குறுகிய அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. "யாரும் பிச்சை எடுக்கக் கூடாது" (nobody should beg) என்று சொல்வதற்குப் பதிலாக, "யாரும் பிச்சை எடுக்க வேண்டியதில்லை" (nobody should have to beg) என்பதை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.



Original article:

Share:

நடிகை ரன்யா ராவ் வழக்கு: இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்ய என்ன சட்டங்கள் உள்ளன? -அஜோய் சின்ஹா ​​கர்புரம்

 துபாயிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் “14 கிலோவுக்கு மேல் தங்கம் கடத்திய” வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. அவரது வழக்கு என்ன, இந்தியாவில் தங்கக் கடத்தல் தொடர்பாக சட்டங்கள் உள்ளன?


"சமீப காலங்களில் பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த மிகப்பெரிய தங்க பறிமுதல்களில் இதுவும் ஒன்று" என்று வருவாய் புலனாய்வு இயக்குனரக (Directorate of Revenue Intelligence (DRI)) அதிகாரிகள் தெரிவித்தனர்.


ராவ் அடிக்கடி துபாய்க்குப் பயணம் செய்ததால், இது ஒரு முறை நடந்த சம்பவமா அல்லது தங்கக் கடத்தல் வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்ததா என்று வருவாய் புலனாய்வு இயக்குனரகம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு காவல்துறையின் ஈடுபாடு குறித்த கவலைகளையும் எழுப்புகிறது. ஏனெனில், உள்ளூர் அதிகாரிகள் ராவை அடிக்கடி துபாய் பயணங்களுக்குப் பிறகு விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.


இந்தியாவில் தங்கக் கடத்தல் எவ்வாறுகையாளப்படுகிறது? ராவ் மீதான வழக்கு என்ன?


இந்தியாவில் தங்கக் கடத்தல் தொடர்பான சட்டங்கள்


1990ஆம் ஆண்டு ரத்து செய்யப்படும் வரை, 1968ஆம் ஆண்டு தங்க (கட்டுப்பாட்டு) சட்டம், தங்க இறக்குமதியை கண்டிப்பாகக் கட்டுப்படுத்தியது மற்றும் இந்தியாவில் மக்கள் தங்கத்தை வாங்குவது, சொந்தமாக வைத்திருப்பது மற்றும் விற்பனை செய்வது ஆகியவற்றில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால், 1990-களில் பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு, அரசாங்கம் தனது அணுகுமுறையை மாற்றியது. 10 கிராமுக்கு ரூ.250 இறக்குமதி வரியை அறிமுகப்படுத்தியது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் தங்க இறக்குமதியில் அதிகரிப்புக்கு வழிவகுத்தது.


இந்தியாவில் தங்க இறக்குமதிகள் இப்போது 1962-ஆம் ஆண்டு சுங்கச் சட்டம் (Customs Act) மற்றும் ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் (Central Board of Indirect Taxes and Customs (CBIC)) கட்டுப்படுத்தப்படுகின்றன. தங்கத்திற்கான சுங்க வரி, பயணி ஒருவர் எடுத்துச் செல்லும் தங்கத்தின் அளவு மற்றும் இந்தியாவுக்குத் திரும்புவதற்கு முன் வெளிநாட்டில் செலவழித்த கால அளவைப் பொறுத்து வேறுபடலாம். இந்த விதிகள் சுங்கச் சட்டத்தின் கீழ், 2016ஆம் ஆண்டு பயணப் படி விதிகளில் (Baggage Rules) கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.


இந்த விதிகளின்படி, ஒரு வருடத்திற்கும் மேலாக வெளிநாட்டில் வசித்து வரும் ஒரு ஆண் 20 கிராம் வரை தங்க நகைகளை வரி இல்லாமல் கொண்டு வரலாம்.  ஆனால், அதன் மதிப்பு ரூ.50,000 விட அதிகமாக இருக்கக்கூடாது. ஒரு பெண் 40 கிராம் வரை கொண்டு வரலாம். அதன் மதிப்பு ரூ 1 லட்சம் வரை மட்டுமே இருக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கும் மேலாக துபாயில் வசித்துவிட்டு, அங்கிருந்து திரும்பும் இந்தியப் பயணிகள் 1 கிலோ தங்கம் வரை கொண்டு வரலாம். ஆனால் அவர்கள் தேவையான சுங்க வரியை செலுத்த வேண்டும் என்று ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் சிறப்பு விதிகளை கொண்டுள்ளது.


தங்கத்திற்கான சுங்க வரி:


ஆண்கள் 20-50 கிராமும் பெண்கள் 40-100 கிராமும் தங்கம் கொண்டு வந்தால் 3% சுங்க வரி விதிக்கப்படலாம்.


ஆண்கள் 50-100 கிராமும் பெண்கள் 100-200 கிராமும் தங்கம் கொண்டு வந்தால் 6%  சுங்க வரி விதிக்கப்படலாம்.


10% சுங்க வரி: ஆண்கள் 100 கிராமுக்கு மேலும் பெண்கள் 200 கிராமுக்கு மேலும் தங்கம் கொண்டு வந்தால் 10% சுங்க வரி விதிக்கப்படலாம்.


2003ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம், தொடர்புடைய நிபந்தனைகள் அல்லது கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமல் இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு பொருளையும் "தடைசெய்யப்பட்ட பொருள்" என்று கருத வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அத்தகைய பொருட்கள் பிரிவு 111-ன் கீழ் பறிமுதல் செய்யப்படவும், பிரிவு 112-ன் கீழ் தண்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது. தண்டனையில் பொருட்களின் மதிப்பு வரை அபராதம் விதிக்கப்படலாம். கடத்தப்பட்ட பொருட்களின் சந்தை விலை ரூ. 1 லட்சத்தைத் தாண்டினால் பிரிவு 135, 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கிறது.


பாரதிய நியாய சன்ஹிதா, 2023-ன் பிரிவு 111-ன் கீழ் கடத்தல் தண்டனைக்குரியது. இது "சட்டவிரோத பொருட்களை கடத்துவதை" (trafficking in…illicit goods) குற்றமாகக் கருதுகிறது. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், இது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம். சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டப் பிரிவு 15-ன் கீழ் இந்தியாவின் பண நிலைத்தன்மைக்கு தீங்கு விளைவித்தால், கடத்தல் ஒரு பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுகிறது. மற்ற பயங்கரவாதச் செயல்களைப் போலவே இதற்கும் அதே தண்டனை வழங்கப்படும்.


ரன்யா ராவ் கைது


மார்ச் 5ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், DRI, “உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், மார்ச் 3, 2025 அன்று எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாயிலிருந்து பெங்களூருக்கு வந்த சுமார் 33 வயதுடைய இந்தியப் பெண் பயணியை DRI அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சோதனையில், 14.2 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை அந்த நபர் புத்திசாலித்தனமாக மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது” என்று கூறியது.


ஆறு மாதங்களில் ராவ் 27 முறை துபாய்க்குப் பயணம் செய்ததாக DRI கூறுகிறது.


DRI ராவின் வீட்டை சோதனை செய்ததில், அவர்களின் அறிக்கையின்படி, “சோதனையில் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.2.67 கோடி மதிப்புள்ள இந்தியப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது”. இந்த வழக்கில் மொத்த பறிமுதல் தொகை ரூ.17.29 கோடி என்று கூறுகிறது.


பெங்களூரு விமான நிலையம் வரும்போதெல்லாம் ராவ் VIP சேனல்களைப் பயன்படுத்தி வெளியேறினார். ஒரு நெறிமுறை அதிகாரி அவளை வெளியேறும் இடத்திற்கு அழைத்துச் செல்வார், அங்கு உள்ளூர் காவல்துறையினர் அந்த பெண்ணை வரவேற்று வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள், வழக்கமான பயணிகளுக்கான விரிவான சோதனைகள் அந்த பெண்ணிடம் நடத்தப்படவில்லை.  


மூத்த ஐபிஎஸ் அதிகாரியும், டிஜிபியுமான ராவின் மாற்றாந்தந்தை (stepfather), பத்தாண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்குச் சென்ற தங்கப் பொருட்களைக் கொள்ளையடித்ததில் தொடர்புடையவர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் மீது உத்தியோகபூர்வ நடவடிக்கை எடுக்கப்படாத போதிலும், பின்னர் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.


மார்ச் 10 அன்று, கர்நாடகாவில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, ராவ் அதிகாரப்பூர்வ சலுகைகள் மற்றும் நெறிமுறை சலுகைகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் புகாரை விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலாளர் கௌரவ் குப்தாவுக்கு உத்தரவிட்டது. அவரது மாற்றாந்தந்தை விசாரணையின் முக்கிய புள்ளியாக இருந்தார்.



Original article:

Share:

கவனம் கொள்ள வேண்டிய, ஒரு பள்ளி மூடல். -அன்ஷுல் திரிவேதி

 மகாராஷ்டிராவின் ஒரே கோண்டி-நடுநிலைப் பள்ளியை மூடுவதற்கான உத்தரவும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அவமதிப்பு


மகாராஷ்டிராவின் ஒரு கிராமத்தில் உள்ள ஒரே கோண்டி-நடுநிலைப் பள்ளியை மூடுவதற்கான உத்தரவு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. பழங்குடியின மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் ஆரம்பக் கல்வியை கற்பிப்பதன் மூலம் சிறந்த கற்றல் விளைவுகளை அடைய, கிராம பஞ்சாயத்தின் தீர்மானத்தின் விளைவாக, 2019-ஆம் ஆண்டில், கட்சிரோலி மாவட்டத்தின் 5-வது அட்டவணை பகுதியில் உள்ள மொஹ்கான் கிராமத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. இந்த முயற்சி அரசியலமைப்பின் பிரிவு 29-ஐப் பின்பற்றுகிறது. இந்த பிரிவு சிறுபான்மையினருக்கு அவர்களின் தனித்துவமான மொழிகள், எழுத்துருக்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பாதுகாக்கும் உரிமையை வழங்குகிறது. இது பிரிவு 350(a)-ஐயும் பின்பற்றுகிறது. இது அரசு தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என்று கோருகிறது. இது சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் கல்வி பெறுவதை உறுதி செய்கிறது.


ஆனால், உள்ளூர் நிர்வாகம், இந்தப் பள்ளி கல்வி உரிமைச் சட்டம் (Right to Education Act), 2009-ன் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்று கூறுகிறது. இதன் காரணமாக, அவர்களால் அதன் தரத்தை கண்காணிக்க முடியாது. பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கப்படாவிட்டால், மாணவர்கள் உயர் வகுப்புகளுக்குச் செல்லும்போது அவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படும். இருப்பினும், பள்ளி மூடப்பட்டால், மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


சார்பு மூலம் அடிபணிதல்


நிர்வாகத்தின் ஆட்சேபனை அதிகாரத்துவ மொழியில் முன்வைக்கப்பட்டாலும், அங்கீகாரம் என்பது அடிப்படையில் அதிகாரத்தைப் பற்றிய கேள்வியாகும். அது வழித்தோன்றலாக நடைமுறையைப் பற்றியது மட்டுமே என்பதை வலியுறுத்த வேண்டும். பள்ளியின் அங்கீகாரம் மறுக்கப்பட்டதற்குக் காரணம் ஆதிவாசி சமூகங்களின் சமூக மற்றும் அரசியல் அங்கீகாரத்தின் நிலைதான். ஏனெனில், அவர்களின் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு எதிராக அரசு ஒரு சார்பைக் கொண்டுள்ளது. உள்ளூர் நிர்வாகத்தின் “அதிகாரத்துவ” (bureaucratic’) மறுப்புக்குப் பின்னால் உள்ள தார்மீக மற்றும் அரசியல் காரணங்களை ஆராய்வது முக்கியம்.


ஆதிவாசி சமூகங்கள் தங்களுக்கென தனித்துவமான முறையில் வளர்ச்சியடைய வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு உறுதியாக நம்பினார். அவரது பார்வை கடந்த 200 ஆண்டுகளின் வரலாற்று நிகழ்வுகளால் வடிவமைக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், பல பழங்குடி சமூகங்கள் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டன. உலகெங்கிலும் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் நடத்திய தீவிர வன்முறையின் காரணமாக இது நடந்தது.


எனவே, அரசியலமைப்பில் பழங்குடியினரின் வாழ்க்கை முறை - நிலம், மொழி, கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் மீதான உரிமைகளைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் சட்டங்கள் உள்ளன. இந்த சட்டங்கள் பழங்குடி சமூகங்கள் தேசத்தைக் மீட்டெடுக்க செயல்பாட்டில் பங்கெடுக்கும் அதே வேளையில் அவர்களின் அடையாளத்தை இழப்பதற்கு எதிராகக் காத்துக்கொள்ளும் நோக்கத்தில் உள்ளன.


உள்வாங்கும் சக்திகள்


எவ்வாறாயினும், சுதந்திரத்திற்குப் பிறகு, மதச்சார்பற்ற மற்றும் மதப் பகுதிகளில் உள்வாங்கப்படுவதால் பழங்குடி சமூகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மதச்சார்பற்ற உலகில், பழங்குடி சமூகங்களை உள்வாங்குவதில் அரசும் சந்தையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத உலகில், பழங்குடி நம்பிக்கைகள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன, சிதைக்கப்படுகின்றன, அழிக்கப்படுகின்றன. இந்த இரண்டு சக்திகளும் ஒன்றையொன்று ஆதரித்து பலப்படுத்துகின்றன.


பள்ளி மூடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த இந்த குறிப்பிட்ட வழக்கு, பழங்குடி கலாச்சாரத்தின் கூறுகளை அங்கீகரிக்காததன் மூலம் செயல்படும் மாநிலத்தின் மூலம் உள்வாங்கப்படுவதாகும். அரசியலமைப்பில் ஆதிவாசி மொழிகளின் நிலை இந்த சிக்கலை எடுத்துக்காட்டுகிறது. எட்டாவது அட்டவணை 22 மொழிகளை பட்டியலிடுகிறது. ஆனால், கோண்டி மற்றும் பிலி போன்ற முக்கிய பழங்குடி மொழிகள் சேர்க்கப்படவில்லை.


2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆறு மாநிலங்களில் 29 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கோண்டி மொழியைப் பேசுகிறார்கள். இருப்பினும், இது 8-வது அட்டவணையில் சேர்க்கப்படவில்லை. எனவே, அதை தேசிய அளவில் ஊக்குவிக்க வேண்டிய கடமை அரசுக்கு இல்லை.


மாறாக, நாடு முழுவதும் 25,000க்கும் குறைவான மக்களால் பேசப்படும் தேவபாஷை அல்லது கடவுள்களின் மொழியாகக் கருதப்படும் சமஸ்கிருதம் 8-வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் மற்றும் கோண்டி இரண்டும் சிறுபான்மை மொழிகளாக உள்ளன. இரண்டு மொழிகளும் சந்தையால் பரவலாக ஆதரிக்கப்படுவதில்லை அல்லது வேலைவாய்ப்புக்கு அவசியமானவை அல்ல. இருப்பினும், அவற்றை கையாளும் விதம் மிகவும் வேறுபட்டது. சமஸ்கிருதம் அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோண்டி புறக்கணிக்கப்படுகிறது. இந்த வேறுபாடு அவற்றை ஊக்குவிக்கும் சமூகங்களின் சமூக-அரசியல் சக்தி காரணமாக ஏற்படுகிறது. காடுகளை அழித்தல், நகரமயமாக்கல் மற்றும் சந்தை விரிவாக்கம் ஆகிய மூன்று முக்கிய காரணிகளால் ஆதிவாசி அடையாளம் வேகமாக அழிந்து வருகிறது. வாய்மொழியாகக் கடத்தப்படும் அவர்களின் வரலாற்று நினைவுகள், அவர்களின் அடையாளத்தின் அடித்தளமாகும். தற்போதைய சூழலில், இந்த வாய்வழி பாரம்பரியம் ஆபத்தில் உள்ளது.


ஆதிவாசி மொழிகளின் தனித்தன்மை


ஆதிவாசி சமூகங்களுக்கு அரசு வழங்கவேண்டிய அங்கீகாரம் மிகவும் முக்கியமானது. அவர்களின் கலாச்சாரம் வாய்மொழி மரபுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த மரபுகளில் மூல புராணங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் வரலாற்றுக் கதைகள் இடம்பெற்றிருக்கும். தற்போதைய சூழலில், காடுகள் அழிக்கப்படுதல், அதிகரித்து வரும் நகரமயமாக்கல் மற்றும் சமூகத்தின் பரவலான சந்தைப்படுத்தல் காரணமாக ஆதிவாசி அடையாளம் வேகமாக அளிக்கப்பட்டு வருகிறது. ஆதிவாசி அடையாளம் என்பது வரலாற்று நினைவகத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு, வாய்மொழியாகக் கடத்தப்படுகிறது. இந்த பாரம்பரியம் இப்போது ஆபத்தில் உள்ளது. ஒரு ஆதிவாசி மொழி மறைந்துவிட்டால், அது அவர்களின் அடையாளத்தை நிரந்தரமாக சேதப்படுத்தும். எனவே, ஆதிவாசி மொழிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அந்த மொழிகளுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.


“நாம், மக்கள்” என்பதிலிருந்து அதன் சட்டபூர்வமான தன்மையைப் பெறுகின்ற அரசியலமைப்பைப் பின்பற்றுவதாகக் கூறுபவர்கள், தேவபாஷையை அங்கீகரித்து ஊக்குவிக்கிறார்கள், ஆனால் ஆதிவாசி மக்களின் ‘ஜன்பாஷா’வைப் (மக்களின் மொழி) புறக்கணிப்பது முரண்பாடாக உள்ளது. இந்த மோசமான தார்மீக தோல்விக்கு சரி செய்யப்பட வேண்டும். முதல் படி, கேள்விக்குரிய கோண்டி மொழி பேசும் பள்ளியை அங்கீகரிப்பதும், பின்னர் அத்தகைய பள்ளிகளை விரிவுபடுத்துவதும் ஆகும். அவ்வாறு செய்தால் அது அரசியலமைப்பின் மதிப்புகளை நிலைநிறுத்தும்.


அன்ஷுல் திரிவேதி இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினர்.



Original article:

Share:

நவீன கால உச்சிமாநாடு, அதன் இடர்கள் மற்றும் வாய்ப்புகள் -எம்.கே. நாராயணன்

 டிரம்ப் பங்குபெறும் உச்சிமாநாடுகள் போன்ற சில சந்திப்புகள் தெளிவற்றதாகவோ அல்லது பயனற்றதாகவோ தோன்றினாலும், சர்வதேச உறவுகளில் உயர் மட்ட ராஜதந்திரம் முக்கியமானதாகவே இருக்கும்.


அரசியல் மற்றும் ராஜதந்திரத் துறைகள் உட்பட உலகெங்கிலும் உள்ளவர்கள், ஒரு வலிமையான தலைவர் இருந்தால் உதவிகரமாக இருக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இது பொதுவாக அதிக அதிகாரம் கொண்ட, பல முக்கியமான முடிவுகளைக் கட்டுப்படுத்தும். இது அரசாங்கக் கொள்கைகள் மற்றும் அவர்களின் அரசியல் கட்சி இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு தலைவரைக் குறிக்கிறது.


இன்றைய உலகில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வலுவான தலைவர்களாகக் காணப்படுகிறார்கள். சமீபத்தில், இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இந்தக் கருத்தை ஆதரித்தார். வாஷிங்டனில் வீடியோ மூலம் நடந்த பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டில், அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் 'ஒரு புதிய பழமைவாத இயக்கத்தை' (‘A New Conservative Movement’) வடிவமைத்து வருவதாக அவர் கூறினார்.


இரு தலைவர்களும் நவீன உச்சிமாநாட்டு ராஜதந்திரத்தில் தீவிரமாக பங்கேற்கின்றனர். இந்த அணுகுமுறை நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் கொண்டுள்ளது. வலுவான முடிவுகளை எடுப்பது நன்மை பயக்கும். ஆனால், ஒருவரின் சொந்த முடிவை மட்டுமே நம்பியிருப்பது சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இதில் அபாயங்கள் இருந்தபோதிலும், உச்சிமாநாட்டு ராஜதந்திரம் சக்திவாய்ந்த தலைவர்களுக்கு ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ளது, குறிப்பாக போர் மற்றும் அமைதி விஷயங்களில் முக்கியப் பங்கு வகிக்கும்.


கடந்த காலத்திலிருந்து நிகழ்காலம் வரை


பெரும்பாலான விமர்சகர்கள் உச்சிமாநாட்டு ராஜதந்திரம் வியன்னா காங்கிரஸுடன் (1814-15) தொடங்கியது என்று நம்புகிறார்கள். இந்த மாநாடு நெப்போலியன் போர்களுக்குப் பிறகு ஐரோப்பாவின் வரைபடத்தை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. சமீபத்திய காலங்களில், உச்சிமாநாட்டு ராஜதந்திர மோதல்கள், அதன் தீர்வு மற்றும் அமைதியைக் கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.


1978ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட கேம்ப் டேவிட் ஒப்பந்தங்கள் (Camp David Accords) ஒரு பெரிய வெற்றியாகும். இந்த ஒப்பந்தம் எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு தற்காலிக அமைதிக்கு வழிவகுத்தது. மற்றொரு முக்கியமான உதாரணம் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனுக்கும் சோவியத் தலைவர் மிகைல் எஸ்க்கும் இடையே நடந்த ஒப்பந்தமாகும். இது அவர்களின் விவாதங்கள் மற்றும் பனிப்போர் பதட்டங்களை வெகுவாகக் குறைக்க உதவியது.


இருப்பினும், உச்சிமாநாட்டு ராஜதந்திரம் வெற்றி பெற்றதைவிட அதிக முறை தோல்வியடைந்துள்ளது. தலைவர்கள் பெரும்பாலும் விரைவான வெற்றியைக் காண்பிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள், இதன் விளைவாக உண்மையான மதிப்பு இல்லாத பலவீனமான சமரசங்கள் ஏற்படுகின்றன.


உண்மையான விளைவு எதுவாக இருந்தாலும், வலிமையானவர்களாகத் தோன்ற விரும்பும் தலைவர்களிடம் இது அடிக்கடி நிகழ்கிறது. சதாம் உசேனின் ஆட்சிக் காலத்தில் ஈராக்கில் நிலவிய சூழ்நிலையை மேற்கு நாடுகள் எவ்வாறு தவறாகப் புரிந்துகொண்டன என்பது ஒரு தெளிவான உதாரணம். அவரிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக அவர்கள் நம்பினர். ஆனால், இது உண்மையல்ல. இத்தகைய தவறான புரிதல்கள் காரணமாக, உச்சிமாநாட்டின் ராஜதந்திரம் பெரும்பாலும் சிக்கலானதாகிறது.


அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான சமீபத்திய பரிமாற்றங்களின் பின்னணியில் போலியான உச்சிமாநாட்டின் இராஜதந்திரத்தின் ஆபத்துகள் தெளிவாகத் தெரிகிறது. பிப்ரவரி 28, 2025 அன்று வெள்ளை மாளிகையில் அவர்களின் சூடான கருத்துப் பரிமாற்றங்கள், உச்சிமாநாட்டின் இராஜதந்திரத்தை மிக மோசமான நிலையில் காட்டுகின்றன. உச்சிமாநாடு பொதுவாக தனிப்பட்ட முறையில் நடத்தப்படுகிறது. 


தலைவர்களுக்கிடையேயான விவாதங்கள் டிரம்ப்-ஜெலென்ஸ்கி பரிமாற்றங்களின்போது காணப்படும் குறைந்த நிலைகளை அரிதாகவே அடைகின்றன. அவர்களின் பரிமாற்றங்களில் பெரும்பாலானவை தொலைக்காட்சியில் நடந்தன. டிரம்பின் இயல்பை முழுமையாக அறிந்த ஜெலென்ஸ்கி, அவரை 'துணிச்சலாக' நடத்துவது போல் தோன்றியது. இது ஒரே ஒரு முடிவுக்கு மட்டுமே வழிவகுத்திருக்க முடியும். எனவே, அதிபர் டிரம்பின் பதில் ஆச்சரியம் அளிப்பது இயல்பானது. அவர்  ஜெலென்ஸ்கிக்கு ஒரு தெளிவான இறுதி எச்சரிக்கையை விடுத்தார். ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது உக்ரைன்-ரஷ்யா குழப்பத்தில் இருந்து அமெரிக்கா விலகும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அவரிடம் கூறினார். 


ஜெலென்ஸ்கி ஒரு புதிய வகையான ராஜதந்திரத்தைத் தொடங்கினார். அவர் ஒரு சலுகையுடன் வாஷிங்டனுக்குப் பயணம் செய்தார். அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்வதே அவரது முன்மொழிவாகும். இந்த ஒப்பந்தம் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள கனிம உரிமைகளை உக்ரைனுக்கு வழங்குவதை உள்ளடக்கியது. இது உக்ரைனுக்கு கடந்த கால அமெரிக்க இராணுவ உதவிக்கான திருப்பிச் செலுத்துதலாகக் கருதப்பட்டது.


டிரம்ப்-ஜெலென்ஸ்கி பரிமாற்றங்கள் காரணமாக ஐரோப்பா சவால்களை எதிர்கொண்டது. மேலும், மாற்று அணுகுமுறையைக் கண்டுபிடிக்க அது போராடியது. 19 ஐரோப்பியத் தலைவர்களின் கூட்டம் லண்டனில் விரைவாக ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் புதிய யோசனைகளை முன்மொழிந்தனர். ஆனால், அவற்றில் எந்த அர்த்தமும் இல்லை. பின்பு, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டார். ஐரோப்பா உக்ரைனின் பாதுகாப்பிற்காக "கடினமான வேலைகளைச் செய்ய வேண்டும்" என்று உச்சிமாநாட்டில் பேசினார். இதை "இன்றைய வரலாற்றில் ஒரு குறுக்கு வழி" என்று அழைத்தார்.


இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைவிட நெருக்கமாக இணைந்த இரண்டு நாடுகள் எதுவும் இல்லை என்பதை அவர் சேர்த்துக் கொள்ள மறக்கவில்லை. இது ஒரு பின்னோக்கிய சிந்தனையாக இருக்கலாம். இருப்பினும், இந்த உணர்வு மிகவும் உண்மையானதாகத் தெரிகிறது. ஐரோப்பாவில் ஆதிக்க நம்பிக்கை வேறுபட்டது. அதிபர் டிரம்பின் கீழ் அமெரிக்கா, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தியைப் பின்பற்ற விரும்பவில்லை என்று பலர் நினைக்கிறார்கள். எனினும், பைடன் ஜெலென்ஸ்கியின் உக்ரைன் நிலைப்பாட்டை ஆதரித்தார்.


இந்தியா மற்றும் ஒரு பணி பயணம் 


டிரம்ப்-ஜெலென்ஸ்கி பரிமாற்றங்கள், டிரம்பை உலக அரசியலில் ஒரு 'அடாவடிக்காரர்' என்று சிலர் பார்க்க வழிவகுத்துள்ளன. இருப்பினும், இது முற்றிலும் உண்மையாக இருக்காது. பிப்ரவரி 13, 2025 அன்று டிரம்ப்  மற்றும்  மோடி இடையேயான சந்திப்பில், கொடுமைப்படுத்துதலுக்கான சிறிய அறிகுறியே காணப்பட்டது. இது மோடியின் சுருக்கமான பயணத்தின்போது இந்த சந்திப்பு நடந்தது.


டிரம்ப் இந்தியாவின் வரிகள் மற்றும் வரித் தடைகளை எதிர்த்தாலும், எந்த ஆக்ரோஷமான நடவடிக்கைகளை தொடங்கவில்லை. இந்தியாவின் வரித் தடைகளை அவர் கடுமையாக விமர்சித்தார். அவை தொடர்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார். எனினும், பரிமாற்றங்கள்  வழக்கமான முறையில் இருந்தன. 


அமெரிக்கத் தரப்பு சலுகைகளுக்கு அழுத்தம் கொடுத்தது, மோடி சிலவற்றிற்கு ஒப்புக்கொண்டார். இருப்பினும், அழுத்தத்தின் கீழ் அவர் அடிபணிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்தப் பரிமாற்றத்தில்  டிரம்ப் தெளிவான வெற்றியாளர் அல்ல என்று உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அதற்கு பதிலாக, தங்கள் வலுவான ஆளுமைகளுக்கு பெயர் பெற்ற இரு தலைவர்களும் நியூட்டனின் 'மூன்றாவது இயக்க விதியை' பின்பற்றுவதாகத் தோன்றியது. அங்கு ஒவ்வொரு செயலுக்கும் சமமான மற்றும் எதிர்வினை இருக்கும்.


விவாதங்களில் ஒரு முக்கியமான காரணி டிரம்ப் இந்தியாவுக்கு வழங்கிய 'தூண்டில்' ஆகும். இந்த தூண்டில் இந்தியாவிற்கு F-35 போர் விமானங்களை விற்பனை செய்தது.


மோடி-டிரம்ப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை தெளிவாக இல்லை. இது சாத்தியமான ஒத்துழைப்புகளில் கவனம் செலுத்தியது. ஆனால், ஆசியாவில் இந்தியாவின் பாதுகாப்பு கவலைகளையும் குறிப்பிட்டது. இருப்பினும், உண்மையான நோக்கம் இந்தியாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு விற்பனையை அதிகரிப்பதாக இருக்கலாம்.


உலகின் சிறந்த விமானங்களில் ஒன்றாகக் கருதப்படும் F-35 ஒரு முக்கிய சலுகையாகும். இதுவரை, இந்தியா அதை அணுக முடியவில்லை. சீனாவிற்கு எதிரான ஒரு நடவடிக்கையாக இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள அரசாங்கத்தை இந்திய விமானப்படை இதைப் பயன்படுத்தக்கூடும் என்பதால் இந்த சலுகை குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது.


ஒட்டுமொத்தமாக, இது ஒரு நல்ல விளைவு. இருப்பினும், டிரம்ப் எதிர்பாராத நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர். இதன் பொருள், மோடி தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அதிபர் டிரம்புடனான முதல் சந்திப்பின் இறுதி முடிவு இன்னும் நிச்சயமற்றது.


அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்புக்கு மேடை அமைக்க இந்தியப் பிரதமர் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தினார். டிரம்பைச் சந்திப்பதற்கு முன்பு, அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் மற்றும் தொழிலதிபரும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க் ஆகியோரைச் சந்தித்தார். குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி சில சலுகைகளை வழங்குவதில் பெயர் பெற்றவர் என்பதால், இந்த சந்திப்புகள் கவனமாகத் தயாராக இருப்பதைக் காட்டுகின்றன. இது போன்ற ஒரு உச்சி மாநாடு கூட்டத்திற்கு நிலையான விதிகள் எதுவும் இல்லை. மேலும், உச்சி மாநாடு ராஜதந்திரத்தில், அரிதாகவே தெளிவான வெற்றியாளர்களோ அல்லது தோல்வியுற்றவர்களோ இருப்பார்கள்.


வேறு கண்ணோட்டம் 


அதிபர் டிரம்பின் ஆரம்பகால உச்சிமாநாட்டு ராஜதந்திர முயற்சிகள் வழக்கமான முறையை முழுமையாகப் பின்பற்றுவதில்லை. உச்சிமாநாட்டு ராஜதந்திரம் முக்கியமாக மோதல்களைத் தீர்ப்பதிலும் அமைதியைக் கட்டியெழுப்புவதிலும் கவனம் செலுத்துகிறது. தலைவர்களிடையே உறவுகளையும் நம்பிக்கையையும் உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


இருப்பினும், இன்று பெரும்பாலான உலகத் தலைவர்கள் சரியான முடிவு இல்லாமல் உச்சிமாநாட்டு ராஜதந்திரத்தில் ஈடுபடுகிறார்கள். தேசிய நலன்கள் மற்றும் அதிகாரத்தில் பெரிய வேறுபாடுகள் இருந்தபோதிலும் இது நிகழ்கிறது. இதன் விளைவாக, இந்த உச்சிமாநாடுகள் பெரும்பாலும் உண்மையான தாக்கம் இல்லாத மக்கள் தொடர்பு நிகழ்வுகளாக மாறுகின்றன.


இருப்பினும், உச்சிமாநாட்டு ராஜதந்திரம் நவீன சர்வதேச உறவுகளில் முக்கியமானதாகவே உள்ளது. பல சந்தர்ப்பங்களில், அது அவசியமானது. உலகளாவிய சவால்கள் மிகவும் சிக்கலானதாக மாறும்போது, ​​உச்சிமாநாட்டு ராஜதந்திரம் இன்னும் பெரிய பங்கை வகிக்கக்கூடும். மேலும், கூட்டு நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கு இது அவசியமாக இருக்கும்.


எம்.கே. நாராயணன் முன்னாள் இயக்குநர், உளவுத்துறை பணியகம், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மேற்கு வங்காளத்தின் முன்னாள் கவர்னர்.



Original article:

Share:

தன்னார்வ ஆணை : APAAR மாணவர் அடையாள அட்டை பற்றி . . . -தலையங்கம்

 முறையான சட்டம் இல்லாமல் தானியங்கி நிரந்தர கல்விக் கணக்குப் பதிவேடு (Automated Permanent Academic Account Registry (APAAR)) அடையாள அட்டையை அறிமுகப்படுத்தக்கூடாது.


ஒவ்வொரு மாணவரின் கல்விப் பிரதிகளையும் டிஜிட்டல் மயமாக்குவதற்காக, கல்வி அமைச்சகத்தால் ஒரு தானியங்கி நிரந்தர கல்விக் கணக்குப் பதிவேடு அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள கல்விச்சூழல் அமைப்பில் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களின் அனைத்துப் பதிவுகளுக்கும் "உண்மையின் ஒற்றை ஆதாரத்தை" உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆதாருடன் இணைக்கப்பட்ட APAAR, இந்தியாவில் பள்ளி பதிவுகளை விரைவாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான முதல் படியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. தேசிய கல்விக் கொள்கை, 2020 செயல்படுத்தப்பட்டதிலிருந்து, கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (Unified District Information System for Education Plus (UDISE+)) மற்றும் மாணவர் தரவுத்தள மேலாண்மை தகவல் அமைப்பை முன்னெடுத்துள்ளனர். பதிவுகளை பராமரிப்பதில் தொழில்நுட்ப மாற்றங்கள் ஒரு பிரச்சனையாக உள்ளது. இருப்பினும், இந்த மாற்றங்களை பெற்றோர்கள் மீது சட்டவிரோதமான வழிகளில் திணிப்பதும், மாநில அளவில் அவற்றை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதும் ஒரு கடுமையான பிரச்சினையாகும். APAAR சட்டவிரோதமானது என்ற கூற்று வெறும் கருத்து அல்ல. கல்வி அமைச்சின் வலைத்தளம் இந்தத் திட்டம் கட்டாயமில்லை என்று தெளிவாகக் கூறுகிறது. இதைப் பயன்படுத்த வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. இருப்பினும், பள்ளிகளும் மாவட்டக் கல்வி நிர்வாகிகளும் இதைப் பின்பற்றுவதில்லை.


உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகாவில், பள்ளிகளுக்கு 100% சேர்க்கை என்ற தெளிவான இலக்கு வழங்கப்பட்டுள்ளது. இது "முழு நிறைவு புள்ளி" (saturation) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இலக்கை அடையும் ஆர்வத்தில், பள்ளிகள் மாணவர்களை சேர்க்கை தவறினால் ஏற்படும் விளைவுகள் குறித்து பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும், மாநில கல்வி அதிகாரிகள் மத சிறுபான்மை நிறுவனங்கள் மற்றும் பிற நிர்வாகிகள் மீதும் அழுத்தம் கொடுத்துள்ளனர். APAAR மற்றும் ஏற்கனவே உள்ள பதிவுகளுக்கு இடையில் பொருந்தாத சேர்க்கை தரவுகள் குறித்து அவர்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர். ஆரம்ப நாட்களில், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) இந்தப் பெயரில் அழைக்கப்படவில்லை. அரசாங்கம் ஆதார் மற்றும் டிஜி யாத்ரா போன்ற சேவைகளை தீவிரமாக ஊக்குவித்தது. பலர் முழு விழிப்புணர்வு அல்லது ஒப்புதல் இல்லாமல் இந்த சேவைகளை ஏற்றுக்கொண்டனர். அவற்றின் பயன்பாடு பரவியதால், அவற்றை அதிகாரப்பூர்வமாக கட்டாயமாக்குவது தவிர்க்க முடியாததாக மாறியது. பெயர் பொருத்தமின்மை போன்ற பொதுவான பிரச்சினைகள் பதிவு தோல்விகளுக்கு காரணமாகின்றன. எந்தவொரு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பிற்கும் தகவலறிந்த ஒப்புதல் அடித்தளமாக இருக்க வேண்டும். இல்லையெனில், அது நடைமுறையில் கட்டாயமாகிவிடும். பாதுகாப்பு மற்றும் வசதிக்காக இந்தத் தரவைச் சேகரித்து டிஜிட்டல் மயமாக்குவது ஊக்குவிக்கப்படுகிறது. இருப்பினும், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், 2023 இன்னும் அமலுக்கு வராததால் இது கவலைக்குரியதாக உள்ளது. மிக முக்கியமாக, அடிப்படைக் கல்விக்கு ஆதாரை கட்டாயமாக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நேரடியாக மீறாமல் தவிர்ப்பதற்கான ஒரு மறைமுக வழி தானியங்கி நிரந்தர கல்விக் கணக்குப் பதிவேடு (Automated Permanent Academic Account Registry (APAAR)) ஆகும். கல்விப் பதிவுகளுக்கான நம்பகத்தன்மையையும் அணுகலையும் மேம்படுத்த அரசாங்கம் விரும்பினால், இந்த முயற்சியை ஆதரிக்க ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும்.



Original article:

Share: