மதிப்புக்கூட்டு வரி (VAT) தவிர, அனைத்து மாநில வரி வகைகளும் வலுவான வளர்ச்சிக் கண்ணோட்டத்தைக் காட்டுகின்றன : தமிழ்நாடு நிதிச் செயலாளர்

 2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் வரி வருவாய் ₹1,92,752 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் டி. உதயச்சந்திரன் கூற்றுப்படி, மதிப்புக்கூட்டு வரி (Value Added Tax (VAT)) தவிர, பெரும்பாலான வரி வகைகளில், தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் சிறப்பாக செயல்படுகிறது.


2024-25 ஆம் ஆண்டிற்கான, திருத்தப்பட்ட மதிப்பீடுகளில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ₹1,92,752 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது பட்ஜெட்க்கான திட்டமிடப்பட்ட மதிப்பீடுகளில் ₹1,95,173 கோடியை விட சற்று குறைவு ஆகும். 2025-26ஆம் ஆண்டிற்கான வருவாய் ₹2,20,895 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வணிக வரிகள் மூலம் ₹1,63,930 கோடி, முத்திரைகள் மற்றும் பதிவு மூலம் (Stamps and Registration) ₹26,109 கோடி, மோட்டார் வாகன வரிகள் (Motor Vehicle Taxes) மூலம் ₹13,441 கோடி மற்றும் மாநில கலால் வரி மூலம் ₹12,944 கோடி ஆகியவை அடங்கும்.


“ஜிஎஸ்டி வசூலில், நாட்டின் முதல் மாநிலங்களில் தரவரிசையில் சிறப்பான முறையில் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. இதன் வளர்ச்சி விகிதம் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது. மேலும், இந்த மாநிலத்திற்கான நிலுவைத் தொகையை திறம்பட மீட்டெடுக்க தரவு பகுப்பாய்வு மூலம் நம் மாநிலத்தின் வரி நிர்வாகத்தை மேம்படுத்தியுள்ளோம்,” என்று நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் குறிப்பிடுகிறார்.


2025-26ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வசூல் 22.74% அதிகரித்து ₹93,620 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ₹76,277 கோடியாக இருந்தது.


இருப்பினும், டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் அதன் தொடர்புடைய பகுதிகளில் சில சவால்களையும் அவர் ஒப்புக்கொண்டார். இதில், முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய தெளிவற்றப் பகுதிகள் (grey areas) உள்ளன. டிஜிட்டல் பொருளாதாரத்திலிருந்து வருவாய் நம் மாநிலத்தின் அமைப்பிற்குள் வருவதை உறுதிசெய்ய நாம் கட்டணத் திரட்டிகளுடன் (payment aggregators) இணைந்து பணியாற்றி வருகிறோம். மேலும், இதன் மூலம் தரவுகளையும் சேகரித்து வருகிறோம். சரக்கு மற்றும் சேவை வரி வலையமைப்பையும் (Goods and Services Tax Network(GSTN)) தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சினையை தீவிரமாகக் கையாண்டு வருகிறோம்.


2026 நிதியாண்டில் 12 சதவீத வளர்ச்சியை ₹13,441 கோடியாகக் கணித்திருப்பதால் மோட்டார் வாகன வரி வசூல் சிறப்பான செயல்திறனைக் காட்டியுள்ளது. போக்குவரத்து வாகனப் பிரிவு (transport vehicle segment) உற்சாகமாக இருக்கும் அதே வேளையில், நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை ஜனவரி முதல் உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்த வளர்ச்சி தொடருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்கள் (stamp duty and registration charges) மூலம் கிடைக்கும் வருவாய் 14 சதவீதமாக, ₹26,110 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பெட்ரோல் மற்றும் மதுபான விற்பனையிலிருந்து வரும் விற்பனை வரி/வாட் வருவாய் அவ்வளவு வேகமாக வளரவில்லை. மற்ற வரிகளுடன் ஒப்பிடும்போது அவை குறைந்த வளர்ச்சியைக் காட்டுகின்றன. நிதியாண்டு 2026-ல், பட்ஜெட் மதிப்பீட்டின்படி, திட்டமிடப்பட்ட வருவாய்க்கான விற்பனை/வாட் வருவாய் 7 சதவீதம், ₹70,311 கோடி வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Original article:

Share: