அரிய பூமி கருதுகோள் (The Rare Earth Hypothesis) புதைபடிவவியல் அறிஞர் பீட்டர் வார்ட் மற்றும் வானியலாளர் டொனால்ட் பிரவுன்லீ ஆகியோரால் 2000-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு புத்தகத்தில் முன்மொழியப்பட்டது. பிரபஞ்சத்தில் எளிமையான, நுண்ணுயிர் வாழ்க்கை பொதுவானதாக இருக்கலாம். ஆனால், சிக்கலான, பல செல் உயிர்கள் அரிதானதாகவே இருக்கும் என்று வாதிடுகிறது. விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர்ச்சியான பல நிலைமைகளைப் பூர்த்தி செய்வதன் மூலமே இந்த யோசனை வேரூன்றியுள்ளது என்கின்றனர்
வாழ்க்கையைப் பற்றி நாம் அடிக்கடி எளிமையான (எ.கா. பாக்டீரியா மற்றும் ஈஸ்ட்) முதல் சிக்கலான (எ.கா. மனிதர்கள் மற்றும் ஆக்டோபஸ்கள்) வரை பேசினாலும், வாழ்க்கை என்பது ஒரு சிக்கலான நிகழ்வு மற்றும் பல காரணிகள் சரியான இடத்தில் இருப்பதன் விளைவாகும். பூமியிலேயே இந்தக் காரணிகளைப் படிப்பது கடினமானது மற்றும் இப்போதும் முடிக்கப்படாத பணியாக உள்ளது. மேலும், பல ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கிரகங்களில் அவற்றைத் தேடுவது சவாலான ஒன்றாகவே உள்ளது. மற்ற கிரகங்களில் உயிர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் படிக்கும் விஞ்ஞானிகள் காலப்போக்கில் குறிப்பிட்ட அம்சங்களில் அம்சங்களில் கவனம் செலுத்தி வந்துள்ளனர். சிலர், புரவலன் நட்சத்திரத்தின் வாழக்கூடிய மண்டலத்தில் மேற்பரப்பு நீரைக் கொண்ட பாறை உலகம் போன்ற கிரக கூறுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். மற்ற விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட இடங்களில் உள்ள ராட்சத கிரகங்கள் போன்ற அமைப்பு-நிலை கட்டமைப்புகளில் ஆர்வம் கொண்டுள்ளனர். இன்னும் சிலர் நீண்டகால காலநிலை ஒழுங்குமுறை மற்றும் நிலையான வளிமண்டலத்தைப் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
2000-ஆம் ஆண்டு முதல், வெளிப்புறக் கோள்கள் மற்றும் கோள் அறிவியல் பற்றிய கணிசமான அளவு தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைக்குத் தேவையான பல நிலைமைகள் விஞ்ஞானிகள் ஒரு காலத்தில் அஞ்சியதை விடக் குறைவான கட்டுப்பாடுகளைக் கொண்டதாகத் தோன்றுகின்றன. அதே நேரத்தில், மற்ற பல நிபந்தனைகள் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விடப் பூர்த்தி செய்வதற்கு மிகவும் கடினமானதாகத் தோன்றுகின்றன.
ஒரு கோளைப் புரிந்துகொள்வது
உயிர்கள் வாழ்வதற்கு உகந்த பூமி அளவுள்ள கோள்கள் எவ்வளவு அடிக்கடி உருவாகின்றன என்று பார்க்கலாம். நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி 2009-2018 காலக்கட்டத்தில் வழங்கிய ஆரம்பத் தரவுகளின் அடிப்படையிலான ஆய்வுகள், பால்வெளி மண்டலத்தில் உள்ள சூரியனைப் போன்ற நட்சத்திரங்களின் குறிப்பிடத்தக்க பகுதியானது, பூமி பெறும் சூரிய ஒளியுடன் ஒப்பிடக்கூடிய ஒளியைப் பெறும் சிறிய கோள்களைக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. ஒரு ஆய்வில், சூரியனைப் போன்ற நட்சத்திரங்களில் ஐந்தில் ஒரு பங்கு நட்சத்திரங்கள் தங்கள் வாழ்விட மண்டலங்களில் (habitable zones) பூமி அளவுள்ள கோள்களைக் கொண்டிருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டது. இருப்பினும், இந்தத் தரவுகளில் பல நிச்சயமற்ற தன்மைகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்திய ஆய்வுகள், கெப்ளர் தரவுகளின் அடிப்படையில், GK dwarf நட்சத்திரங்கள் எனப்படும் நட்சத்திரங்களின் வாழ்விட மண்டலங்களில் பாறைக் கோள்கள் உருவாகும் விகிதம் புறக்கணிக்க முடியாதது என்கிற முடிவுக்கு வந்துள்ளன. அது போன்ற பிற கண்டுபிடிப்புகளும், பொருத்தமான நட்சத்திரத்திலிருந்து ஏறக்குறைய சரியான தூரத்தில், சரியான அளவில் உள்ள உலகங்கள் அரிதானவை அல்ல என்று முடிவுக்கு வந்துள்ளன. இதனால், இந்தக் கருதுகோளில் உள்ள மிக ஆழமான கூற்றும் பலவீனமடைகிறது. எனவே, கேள்வி 'ஒரு கோள் எங்கே இருக்கிறது' என்பதில் இருந்து 'ஒரு கோள் எப்படிப்பட்டது' என்பதற்கு மாறியுள்ளதாகத் தெரிகிறது. சூரிய குடும்பத்தில், புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் பூமியைப் போன்ற உயிர்கள் வாழ்வதற்கேற்ற தன்மையைக் கொண்டிருக்கவில்லை. அதே சமயம், புளூட்டோ (Pluto) மிகத் தொலைவில் உள்ளது. பூமி மற்றும் வெள்ளி (Venus) ஆகிய இரண்டும் சூரியனின் வாழ்விட மண்டலத்தில் இருந்தாலும், வெள்ளியின் வளிமண்டலம், பூமியைப் போன்று உயிர்கள் அங்கு வாழ்வதற்கு ஆபத்தானதாக ஆக்குகிறது.
குளிர்ந்த மற்றும் சுறுசுறுப்பான M-dwarf நட்சத்திரங்களைச் சுற்றி வரும் சிறிய கோள்கள் தங்கள் வளிமண்டலத்தையும் மேற்பரப்பு நீரையும் பில்லியன் கணக்கான ஆண்டுகளாக வைத்திருக்க முடியுமா என்பது ஒரு முக்கியமான பதிலளிக்கப்படாத கேள்வியாகும். M-dwarf நட்சத்திரங்களின் வலுவான கதிர்வீச்சுக்கு மில்லியன் கணக்கான ஆண்டுகளாக வெளிப்படும் கோள்கள் பெரும்பாலும் தங்கள் தண்ணீரை இழந்து ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலங்களை உருவாக்குகின்றன.
M-dwarf நட்சத்திரத்தில் இருந்து வரும் தீவிர புற ஊதா கதிர்வீச்சு (ultraviolet radiation) கோளின் மீதுள்ள நீர் மூலக்கூறுகளை உடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்: H2O → H+ + OH–. மேலும், உடைவதால் O மற்றும் H அணுக்கள் வளிமண்டலத்தில் குவிகின்றன. காலப்போக்கில், O அணுக்களை விட H அணுக்கள் விண்வெளிக்கு எளிதாகத் தப்பிச் செல்கின்றன. மீதமுள்ள O அணுக்கள் இணைந்து O2 அணுக்களை உருவாக்குகின்றன. இந்த ஆக்ஸிஜனை விரைவாக உறிஞ்சக்கூடிய மேற்பரப்பு 'உறிஞ்சிகள்' (surface 'sinks') போதுமான அளவில் இல்லாவிட்டால் — பூமியில் பாறைகள் மற்றும் கடல்கள் செய்வது போல O2 குவியும். ஒரு தொலைநோக்கி இந்த கோளைப் பார்த்து, அதன் வளிமண்டலத்தில் அதிகப்படியான ஆக்ஸிஜனைக் கண்டால், அந்தக் கோளின் மேற்பரப்பில் ஒளிச்சேர்க்கை (photosynthesis) இருப்பதாக விஞ்ஞானிகள் நினைக்க வாய்ப்புள்ளது. இதுதான் பூமியின் வளிமண்டலத்தில் அதிக ஆக்ஸிஜன் இருப்பதற்கான காரணம். ஆனால் உண்மையில் இது M-dwarf நட்சத்திரத்தின் கதிர்வீச்சால் நிகழ்கிறது என்பதை அறிவியல் அறிஞர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.
மறுபுறம், பெரும்பாலான கோள்களால் முடியாவிட்டாலும், M-dwarf நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள சில கோள்கள் தங்கள் காற்றை நீண்ட காலத்திற்குத் தக்க வைத்துக் கொள்கின்றன. நட்சத்திரத்தின் காந்தப் பாய்வுகள் (magnetic outflows) அதன் காந்தப்புலத்தால் நட்சத்திரத்திலிருந்து வீசப்படும் மின்னூட்டம் பெற்ற துகள்களின் நீரோடைகள் பலவீனமாகவோ அல்லது கோளைக் கடுமையாகத் தாக்காத வகையில் அமைக்கப்பட்டிருந்தாலோ, கோள் தொலைவில் மற்றும் குளிர்ச்சியாக இருந்தாலோ, அதன் வளிமண்டலம் மெதுவாக அரிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஒரு வலுவான கோள் காந்தப்புலமும் நட்சத்திரக் காற்றின் ஒரு பகுதியைத் திசை திருப்பலாம். அதே சமயம், தொடர்ச்சியான எரிமலை செயல்பாடு கொண்ட ஒரு பெரிய கோள் இழந்த சில வாயுக்களை மாற்றீடு செய்யவும் வாய்ப்புள்ளது என்கின்றனர்.
இவை அனைத்தும் கோள் மண்டலத்திற்குத் தனித்துவமான நிலைமைகளாகும். இதற்கு நட்சத்திர செயல்பாடு, காந்தப்புலங்கள், சுற்றுப்பாதை, கோளின் நிறை, சுழற்சி மற்றும் உள் வெப்பம் ஆகியவற்றின் ஒரு குறிப்பிட்ட கலவை தேவைப்படுகின்றது. அவை அனைத்தும் சரியாக இணையும் போது, ஒரு கோள் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குத் தனது வளிமண்டலத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது என்கின்றனர். இருப்பினும், இதுபோன்ற கோள்கள் கண்டறிந்த வரையில் சிறிய அளவிலேயே உள்ளன. ஏனெனில் M-dwarf நட்சத்திரங்கள் பெரும்பாலும் வலுவான தீப்பிழம்புகளை உருவாக்குகின்றன. மேலும், அருகில் உள்ள பல கோள்களுக்கு வலுவான காந்தக் கேடயங்கள் வலுவானதாக இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.
விஞ்ஞானிகள் இந்த அவதானிப்புகளை இன்று நேரடியாகச் சோதிக்க முடியும். நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் (James Webb Space Telescope (JWST)) பயன்படுத்தி, வானியலாளர்கள் அருகிலுள்ள பாறைக் புறக்கோள்களிலிருந்து (exoplanets) வெளியாகும் வெப்பத்தை அளவிடத் தொடங்கியுள்ளனர். 40.7-ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, அதன் மண்டலத்தின் வாழ்விட மண்டலத்தின் உள் விளிம்பிற்கு அருகில் அமைந்துள்ள இடமாற்றம் செய்யும் கோள்கள் மற்றும் சிறிய கோளவிடுக்களின் சிறிய தொலைநோக்கியில் ((TRAnsiting Planets and PlanetesImals Small Telescope (TRAPPIST-1c)), கார்பன் டை ஆக்சைடு நிறைந்த தடிமனான வளிமண்டலத்தை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope (JWST)) நிராகரித்துள்ளது. இதற்கு முன்னர், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி வழங்கிய தரவைப் பயன்படுத்திய விஞ்ஞானிகள், உள் விளிம்பில் உள்ள இடமாற்றம் செய்யும் கோள்கள் மற்றும் சிறிய கோளவிடுக்களின் சிறிய தொலைநோக்கி (TRAnsiting Planets and PlanetesImals Small Telescope (TRAPPIST-1b)) கோளுக்கு கணிசமான வளிமண்டலம் இல்லாதிருப்பதைக் கண்டறிந்தனர்.
இவை, ஒரே மண்டலத்தில் உள்ள இரண்டு உலகங்கள் மட்டுமே. ஆயினும், அவை 'பூமி அளவுள்ள' என்பது 'பூமி போன்றது' என்பதற்கு ஒத்ததாக இல்லை என்பதைக் காட்டுகின்றன. பூமி போன்ற உயிர்கள் நிலைத்திருக்கக்கூடிய இடங்களில், வளிமண்டலங்கள் எவ்வளவு அடிக்கடி நிலைத்திருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு, விஞ்ஞானிகளுக்கு இன்னும் குளிர்ச்சியான, மிதமான கோள்களின் அளவீடுகள் தேவைப்படுகிறது.
காலநிலை நிலைப்படுத்தல்
அரிய பூமி கருதுகோளின் (rare earth hypothesis) மற்றொரு தூண் நீண்ட கால காலநிலை நிலைப்படுத்தல் ஆகும். பூமியில், கண்டப் பாறைகளின் சிதைவு மற்றும் பூமியின் உட்பகுதிக்கும் வளிமண்டலத்திற்கும் இடையில் உள்ள கார்பன் சுழற்சி ஆகியவை புவியியல் காலத்தில் காலநிலையைப் பாதுகாத்து வந்துள்ளன. இந்தக் காப்பீட்டுக்கு (buffering) பல ஆராய்ச்சியாளர்கள், கார்பனேற்றப்பட்ட மேலோட்டைக் கீழே தள்ளி புதிய மேற்பரப்புப் பாறைகளை உருவாக்கும் தட்டுப் புவிப்பொறையியலை (plate tectonics) காரணமாகக் கூறுகின்றனர். இருப்பினும், கோள்களின் உட்புறங்கள் வெவ்வேறு வழிகளில் செயல்படுகின்றன. பாறைக் கோள்கள் (Rocky planets) அரிதாகவே அசையும் ஒரு கடினமான ஓட்டைக் கொண்டிருக்கலாம், அல்லது நீண்ட காலங்களுக்குப் பிறகு மேலோட்டு அசைவின் குறுகிய வெடிப்புகள் இருக்கலாம், அல்லது (பூமியில் உள்ளது போல) தட்டுப் போன்ற புவிப்பொறையியலைக் கொண்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர். ஒரு கோள் காலப்போக்கில் இந்த முறைகளுக்கு இடையில் கூட மாற வாய்ப்புள்ளது. நவீன தட்டுப் புவிப்பொறையியல் இல்லாவிட்டாலும் கூட, எரிமலைச் செயல்பாடு (வாயுக்களைச் சேர்க்கிறது), சிதைவு (வாயுக்களை நீக்குகிறது), புதைப்பு (பொருட்களைப் பிடித்து வைக்கிறது), மற்றும் மேலோட்டுக் கரைதல் (crustal foundering - மேலோட்டைக் கீழே மூழ்குதல்) ஆகியவற்றை சமநிலைப்படுத்துவதன் மூலம் ஒரு கோள் உயிர்கள் வாழக்கூடிய காலநிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று சில மாதிரிகள் காட்டுகின்றன. இது குறித்து, விஞ்ஞானிகளிடையே ஒருமித்த கருத்து இதுவரை ஏற்படவில்லை. தட்டுப் புவிப்பொறையியல் நிலையான காலநிலையைப் பராமரிக்க உதவகின்றன. இது சிக்கலான உயிர்களை ஆதரிக்க முடியும் என்றாலும், அது உயிர்கள் தோன்ற கண்டிப்பாகத் தேவைப்படும் ஒன்றாக இருக்கவும் வாய்ப்பில்லை என்று தெரிவிக்கின்றனர்.
பூத கோள்களின் பங்கு
மூன்றாவது விவாதம், வியாழன் போன்ற பிரமாண்டமான கோள்களின் பங்கைப் பற்றியதாக உள்ளது. பூர்வீகமாக, வியாழன் போன்ற கிரகங்கள் வால்மீன்கள் மற்றும் சிறுகோள்களைத் திசைதிருப்பி பூமியைப் ‘பாதுகாக்கின்றன’ என்ற கருத்து நிலவியது. இருப்பினும், பிற்கால ஆய்வுகள் இந்தக் கதையைச் சிக்கலாக்கியுள்ளன. ஒரு ராட்சத கிரகத்தின் நிறை (mass) மற்றும் சுற்றுப்பாதையைப் (orbit) பொறுத்து, அது உள் அமைப்பை நோக்கி வரும் மோதல்களின் வேகத்தைக் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ முடியும் என்றும், மேலும் ஆரம்ப காலத்தில் நீர்த்தன்மை நிறைந்த விண்கலங்களைத் (water-rich bodies) தரவும் முடியும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த முன்னணியில் உலகளாவிய 'பொதுவான ‘வடிகட்டி’ (universal ‘filter’) இல்லை என்று தெரிகிறது. இவை அனைத்தும் அமைப்பின் கட்டமைப்பைப் பொறுத்தது. இந்த முடிவு, ஒரு அமைப்பில் பாறையாலான கோளில் சிக்கலான உயிர் உருவாக, வியாழன் போன்ற கிரகம் அத்தியாவசியமான ஒன்று என்ற கூற்றை பலவீனப்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக, சிறிய, மிதமான வெப்பநிலைக் கோள்களைக் கண்டறிவது என்ற கேள்விக்கு, இன்று பல விஞ்ஞானிகள் சூரியனைப் போன்ற நட்சத்திரங்களின் வாழக்கூடிய மண்டலங்களில் பூமி அளவுள்ள கோள்கள் தோன்றும் வீதம் (occurrence rate) முற்றிலும் இல்லை என்றில்லாமல், கெப்ளர் தரவுகளின்படி, வரையறைகள் மற்றும் விரிவாக்கங்களைப் பொறுத்து, பத்து சதவீதமாக இருக்கலாம் என்றும் வாதிடுகின்றனர். இது, பூமியின் அடிப்படை சுற்றுப்பாதை மற்றும் அளவு கட்டமைப்பு மிகமிக அசாதாரணமானது என்ற கருத்தை தகர்க்கிறது. மறுபுறம், கோள்களின் வளிமண்டலங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் திறன், நீண்ட காலநிலைக் காலச்சுழற்சிகளைக் கொண்டிருத்தல், பேரழிவு தரும் நிகழ்வுகளைத் தவிர்க்கும் திறன் போன்ற கேள்விகளுக்கு, தரவுகள் மிகவும் நம்பிக்கையுள்ளதாக மாறியுள்ளன. சிக்கலான உயிர்க்கோளங்களை (complex biospheres) ஆதரிக்கும், உண்மையான, பூமி போன்ற மேற்பரப்புச் சூழல்கள், வாழக்கூடிய மண்டலத்தில் உள்ள பூமி அளவுள்ள கோள்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே இருக்கக்கூடும் என்ற சாத்தியத்தை இந்த முடிவுகள் ஏற்படுத்துகின்றன.
உறுதியானதல்ல
அரிய மற்றும் பொதுவான விவாதத்தில் இன்னும் இரண்டு கருத்துகள் உள்ளன. முதலாவதாக, பூமி போன்ற கோள்களின் எண்ணிக்கைக்கு ஓர் உச்ச வரம்பை நிர்ணயிக்க சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி, விஞ்ஞானிகளால் இன்னும் பெரிய அளவில் ஆய்வு செய்ய முடியாத வளிமண்டல செயல்முறைகளைச் சார்ந்து நிறைய உள்ளது என்பதை வலியுறுத்தியது.
இரண்டாவதாக, தொழில்நுட்ப அடையாளங்களுக்கான (technosignatures) தேடல்கள், வேற்று கிரக உயிரினங்களால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் அறிகுறிகள், குறிப்பாக இயற்கை தானாகவே உருவாக்க வாய்ப்பில்லாத விஷயங்கள் - ரேடியோ அலைகளை வெளியிடும் செயல்பாடுகளின் நாகரிகங்களின் பரவலின் வரம்புகளைக் கூர்மைப்படுத்தியுள்ளன. இதில் பூமியில் 'ரேடியோ-சத்தமான' செயல்பாடுகளில் டிவி மற்றும் வானொலி மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கான ஒளிபரப்பு அடங்கும்.
பிரேக்த்ரூ லிசன் திட்டத்தின் (Breakthrough Listen project) மூலம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களின் பல ஆண்டு ஆய்வுகள் இதுவரை எந்த தெளிவான சமிக்ஞைகளையும் கண்டுபிடிக்கவில்லை. ஒன்றும் கண்டறியப்படவில்லை என்பதனால் அது இல்லை என்று நிரூபிக்கப்படாவிட்டாலும், அது அண்டத்தில் எவ்வளவு பொதுவானதாக இருக்க முடியும் என்பதற்கான உச்ச வரம்புகளை இது நிர்ணயிக்கிறது என்கின்றனர்.
இவற்றை ஒருங்கே எடுத்துக்கொண்டால், அரிய பூமி கருதுகோள் (Rare Earth Hypothesis) சிக்கலான உயிரினங்களுக்கு இன்றும் சாத்தியமானதாகவே உள்ளது. ஆனால், அது நிரூபிக்கத்தக்க வகையில் உண்மை என்று கூற முடியாது. இந்தத் தருணத்தில், மூன்று வளர்ச்சிகள் இந்த நிலையை மாற்றக்கூடும்:
(i) பாறை நிறைந்த, மிதமான கோள்களின் வளிமண்டலங்களில், முன்னுரிமையாக சூரியனைப் போன்ற நட்சத்திரங்களைச் சுற்றி, செயலில் உள்ள மேற்பரப்பு நீர் சுழற்சிகளுக்கு இசைவான வாயுக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தால்;
(ii) விஞ்ஞானிகள், புறக்கோள்களில் உள்ள புவி ஓடு நகரும் அமைப்புகள் (tectonic regimes) குறித்து (மறைமுகமாக இருந்தாலும்) மேலும் வலுவான, சிறந்த கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினால், இதன் மூலம் நீண்ட கால காலநிலை நிலைப்படுத்திகள் பரவலாக உள்ளதா அல்லது அரிதாக உள்ளதா என்பதைக் குறிக்கும்; மற்றும்
(iii) விஞ்ஞானிகள் உயிர் அடையாளங்கள் (biosignatures) அல்லது தொழில்நுட்ப அடையாளங்களைக் (technosignatures) கண்டறிந்தால்.
முதல் கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. தற்போது கட்டப்பட்டு வரும் மிகப் பெரிய நிலத்தொலைநோக்கிகள் மற்றும் எதிர்கால விண்வெளிப் பயணங்கள் மிதமான வளிமண்டலம் கொண்ட கோள்களையே நேரடி இலக்காகக் கொண்டுள்ளன.
இருப்பினும், அவர்களின்ஆய்வுகள் முதிர்ச்சியடையும் வரை, ஒரு நியாயமான சுருக்கம் இதுதான்: நுண்ணுயிர் வாழ்க்கை பொதுவானதாக இருந்தாலும், நிலம் மற்றும் கடலைத் தழுவி, சிக்கலான உயிரினங்களை உருவாக்கக்கூடிய நீண்ட கால சுற்றுச்சூழல் அமைப்புகள் இன்னும் அரிதான ஒன்றாகவே இருக்கலாம். இந்த தரவுகளால் இன்று நாம் அறியக்கூடிய மிக அதிகபட்ச தகவல் இதுதான் என்றும் தெரிவிக்கின்றனர்.
Original article: