காற்று மாசுபாட்டைக் சமாளிக்க GRAP III மற்றும் பிற நடவடிக்கைகள். -ரோஷ்னி யாதவ்

 ஒவ்வொரு ஆண்டும், நமது நாட்டின் காற்றின் தரக் குறியீடு (Air Quality Index (AQI)) தீவிர நிலையை அடைந்து வருவதால், GRAP நிலை III அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் (Graded Response Action Plan (GRAP)) என்றால் என்ன? மேலும், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த இதைத் தவிர இன்னும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்?


தற்போதைய செய்தி?


'மிகவும் மோசமானது' (very poor) என்பதிலிருந்து 'கடுமையானது' (severe) என காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்துள்ளதால், காற்று தர மேலாண்மை ஆணையம் (Commission for Air Quality Management (CAQM)) நமது நாட்டின் தலைநகரில்  தரப்படுத்தப்பட்ட மறுமொழி செயல் திட்டத்தின் (GRAP) மூன்றாம் கட்டத்தை அமல்படுத்தியுள்ளது. தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்ட நிலை III இன் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அதிகமாக இருக்கும் மாசு அளவைக் குறைக்கக்கூடும் என்றாலும், நமது நாட்டின் நமது நாட்டின் காற்றின் தரத்தை மேம்படுத்த, தலைநகர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


முக்கிய அம்சங்கள்:


1. GRAP என்பது அவசரகால நடவடிக்கைகளின் தொகுப்பாகும். இது காற்றின் தரம் ஒரு குறிப்பிட்ட வரம்பை எட்டியவுடன் மேலும் மோசமடைவதைத் தடுக்க செயல்படுகிறது.


2. காற்றின் தரக் குறியீடு 'மோசமான' வரம்பில் (201–300 வரை) இருக்கும்போது தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் நிலை 1 செயல்படுத்தப்படுகிறது. இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது நிலைகள், காற்றின் தரக் குறியீடு 'மிகவும் மோசமான' வகை (301 முதல் 400வரை) இருக்கும்போது, 'கடுமையான' வகை (401 முதல் 450 வரை) மற்றும் 'கடுமையான +' வகை (450க்கு மேல்) ஆகியவற்றை அடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக முறையே செயல்படுத்தப்படுகின்றன.


3. முந்தைய பிரிவுகளின் கீழ் விதிக்கப்படும் நடவடிக்கைகள், அடுத்த பிரிவு செயல்படுத்தப்படும் போதும் தொடர்கின்றன. நிலை-2இன் கீழ் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டால், நிலை-1 இன் கீழ் நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.


4. குறிப்பிடத்தக்க வகையில், தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் (GRAP) முதலில் ஜனவரி 2017-ல் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)) சமர்ப்பித்த திட்டத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.


5.  தலைநகருக்கான GRAP திட்டத்தைச் செயல்படுத்துவது சுற்றுச்சூழல் மாசுபாடு (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) ஆணையத்தின் பொறுப்பாகும். இது 2021ஆம் ஆண்டு  முதல் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறது. 



காற்றின் தரத்தை மேம்படுத்த வேறு என்ன நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன?


1. நகராட்சி திடக்கழிவு (Stop municipal solid waste (MSW) எரிப்பதை நிறுத்துதல்: நகராட்சி திடக்கழிவு, நாம் தினசரி பயன்படுத்தி பின்னர் தூக்கி எறியும் பொருட்களாகும்.   இதில் பொட்டணமாக்கப்பட்ட பொருள்கள், மரச் சாமான்கள், ஆடைகள், பாட்டில்கள், உணவு கழிவுகள், செய்தித்தாள்கள், மின்சாதனங்கள் மற்றும் மின்கலன்கள் போன்றவை அடங்கும்.


2. மின்சார, BS-VI வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல்: டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் உமிழ்வுகளை கணிசமாகக் குறைக்க டீசல் தூசி வடிக்கட்டியை (Diesel Particulate Filter (DPF)) பயன்படுத்தலாம். அதிக மின்சார, கலப்பின (hybrid) மற்றும் BS-VI வாகனங்களை அறிமுகப்படுத்துவதும் உதவும். பொது போக்குவரத்தை மேம்படுத்துவதும் முக்கியம்.


3. மின்சார நிலையங்களில் காற்றில் உள்ள சல்பர் ஆக்சைடு (SOx) மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு (NOx) குறைக்கும் அமைப்புகள்: டெல்லியில் உள்ள பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் சல்பர் டயாக்சைடு (SO₂) மற்றும் நைட்ரஜன் ஆக்சைட்ஸ் (NOx) போன்ற மாசுபாடுகளை வெளியிடுகின்றன. இதை கட்டுப்படுத்த, இந்த மின்சார நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் சல்பர் ஆக்சைடை குறைக்கும் அமைப்பையும், நைட்ரஜன் ஆக்சைடை குறைக்கும் அமைப்பையும்  நிறுவ வேண்டும்.


4. கட்டுமான மற்றும் இடிப்பு தளங்களில் கட்டுமானப் பொருட்களை பாதுகாக்க வேண்டும்: கட்டுமானப் பகுதியை செங்குத்தாக மூடி வைத்தல், மூலப்பொருட்களை மூடி வைத்தல், தண்ணீர் தெளித்தல் மற்றும் காற்றுத் தடுப்பான்கள் பயன்படுத்தி மணல் போன்ற மூலப்பொருட்கள் பறக்காமல் தடுத்தல், கழிவுகளை வளாகத்திற்குள் சேமித்தல், சாலையில் கொண்டு செல்லும் போது கட்டுமானப் பொருட்களை மூடிவைத்தல் போன்ற நடவடிக்கைகள் காற்றின் தரத்தை 50% மேம்படுத்தும் என்று அறிக்கை கூறுகிறது.


5. அனைவருக்குமான திரவ எரிவாயு (Liquefied Petroleum Gas (LPG)): ஒவ்வொரு வீட்டிலும் சமையலுக்கு விறகு, பயிர் எச்சம், சாணம் மற்றும் நிலக்கரியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அனைவருக்கும் திரவ எரிவாயு கிடைக்க வேண்டும். இது மிகச் சிறிய தூசி துகள்கள் (PM 2.5), சிறிய தூசி துகள்கள் (PM 10) மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு வாயுக்கள் அளவுகளைக் குறைக்கும்.


6. பெட்ரோல் பம்புகளில் ஆவி மீட்பு அமைப்புகள் நிறுவுதல்: பெட்ரோலில் ஆவியாகும் கரிம சேர்மங்கள் (volatile organic compounds (VOCs)) உள்ளன. அவை பெட்ரோல் சேமிப்பு தொட்டிகளுக்கு மாற்றப்படும்போது அல்லது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படும்போது காற்றில் வெளியேறுகின்றன. இந்த ஆவிகள் புகை மூட்டத்தை ஏற்படுத்தி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீராவி மீட்பு அமைப்புகள் (Vapour recovery systems), எரிபொருள் இறக்குதல் மற்றும் எரிபொருள் நிரப்புதல் ஆகியவற்றின் போது வெளியாகும் ஆவியாகும் கரிம சேர்மங்களைச் சேகரிக்கவும், உமிழ்வைக் குறைக்கவும் உதவுகின்றன.


காற்றின் தரக் குறியீடு (Air Quality Index (AQI))


1. காற்று மாசுபாட்டை மக்கள் எளிதாகப் புரிந்துகொள்வதற்காக, 2014ஆம் ஆண்டு மத்திய அரசால் தூய்மை இந்தியா இயக்கத்தின் (Swachh Bharat campaign) கீழ் காற்று தரக் குறியீடு (AQI) தொடங்கப்பட்டது. மருத்துவர்கள், காற்று தர நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய நிபுணர் குழு, கான்பூர் ஐஐடியுடன் இணைந்து பணியாற்றியது. இது ஒரு ஆய்வை நடத்தி ஒரு எளிய காற்றின் தரக் குறியீடு அமைப்பை பரிந்துரைத்தது.


2. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (Central Pollution Control Board (CPCB)) கூற்றுப்படி, காற்றின் தரக் குறியீடு பல்வேறு மாசுபடுத்திகளின் சிக்கலான காற்றின் தரத் தரவை ஒற்றை எண் (குறியீட்டு மதிப்பு), பெயரிடல் மற்றும் நிறமாக மாற்றுகிறது. அளவிடப்பட்ட மாசுக்களில் PM 10, PM 2.5, நைட்ரஜன் டை ஆக்சைடு, ஓசோன், கார்பன் போன்றவை அடங்கும்.


3. காற்றின் தரக் குறியீடுக்கு ஆறு வகைகள் உள்ளன. அவை, 'நல்ல' அளவு (0-50), 'திருப்திகரமான' அளவு (51-100), 'மிதமான மாசுபட்ட' அளவு (101-200), 'மோசமான' அளவு (201-300), 'மிகவும் மோசமான' அளவு (301-400), மற்றும் 'கடுமையானது' அளவு (401-500) ஆகும்.


4. PM 10 மற்றும் PM 2.5 மாசுபடுத்திகள் மிகவும் நுண்ணிய துகள் பொருள் (particulate matter (PM)) துகள்களாகும். அவற்றுடன் இணைந்த இலக்கங்கள் அவற்றின் விட்டத்தைக் (diameter) குறிக்கின்றன. PM 10 மற்றும் PM 2.5 ஆகியவை முறையே 10 மற்றும் 2.5 மைக்ரான்களை விட சிறிய விட்டம் கொண்டவை. துகள்கள் எவ்வளவு நுண்ணியதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது கடினமாகிறது.


5. அவற்றின் அளவு காரணமாக, மிகச் சிறிய தூசி (PM 2.5) துகள்கள் மூக்கு மற்றும் தொண்டையை எளிதில் கடந்து இரத்த ஓட்ட அமைப்பில் நுழைய முடியும். இந்த துகள்கள் ஆஸ்துமா, மாரடைப்பு, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் பிற சுவாச பிரச்சனைகள் போன்ற நீண்டகால நோய்களுக்கும் வழிவகுக்கும்.



Original article:


Share: