கடந்த சில ஆண்டுகளாக, அடிக்கடி ஏற்படும் மற்றும் கடுமையான வெள்ளம், நிலச்சரிவுகள், மேகவெடிப்புகள் மற்றும் மண்சரிவுகள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கம் மற்றும் தீவிரத்தன்மைக்கு இந்தியா அதிகளவு பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இந்த பேரிடர்கள் உயிர் இழப்புகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழக்க செய்கின்றன. மேலும், உள்கட்டமைப்பை சேதப்படுத்துகின்றன. சுற்றுச்சூழலையும் மற்றும் பொது சுகாதாரத்தையும் பாதிக்கின்றன.
காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழுவானது தனது 6-வது மதிப்பீட்டு அறிக்கையில் (sixth Assessment Report (AR6)) அடுத்து வரவிருக்கும் ஆண்டுகளில், தீவிரமான கோடை பருவமழை, அதிக மழைப்பொழிவு நிகழ்வுகள், வெள்ளப் பெருக்கு மற்றும் கடுமையான வெப்ப அலைகளை இந்தியா சந்திக்கும் என்று கணித்துள்ளது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (Centre for Science and Environment (CSE)) அறிக்கை ஏற்கனவே ஒரு குழப்பமான போக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியா 2024-ல் 322 நாட்கள், 2023-ல் 318 நாட்கள் மற்றும் 2022-ல் 314 நாட்களில் என தீவிர நிகழ்வுகளை எதிர்கொண்டது. இந்த தீவிர நிகழ்வுகளில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு, வெப்பம் மற்றும் குளிர் அலைகள், சூறாவளிகள் மற்றும் மின்னல் ஆகியவை அடங்கும்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (India Meteorological Department (IMD)) கூற்றுப்படி, ஜூன்-செப்டம்பர் பருவமழைக் காலத்தில் குறைந்தது 1,528 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களாகும். 2024-ம் ஆண்டில் மட்டும், 3,472 பேர் உயிரிழந்தனர், 67,399 கால்நடைகளும் உயிரிழந்தன மற்றும் 4.07 மில்லியன் ஹெக்டேர் பயிர் செய்யப்பட்ட நிலங்கள் பாதிப்புகளை சந்தித்தன. மேலும், தீவிர வானிலை நிகழ்வுகள் காரணமாக 2.9 லட்சம் வீடுகள் சேதமடைந்தன.
இந்த தீவிர வானிலை நிகழ்வுகளும் அவற்றின் தாக்கமும் இந்தியாவின் காலநிலை மீள்தன்மையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக, தொலையுணர்தல் (Remote Sensing (RS)) மற்றும் புவியியல் தகவல் அமைப்புகள் (Geographic Information Systems (GIS)) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது போன்ற தொழில்நுட்பங்கள் பேரிடர்களை திறம்பட நிர்வகிப்பதற்கும், மாறிவரும் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றுவதற்கும், அத்தகைய நிகழ்வுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கு முக்கியமானதாக உள்ளன.
காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC)) தீவிர வானிலை நிகழ்வுகளை 'ஒரு குறிப்பிட்ட இடத்தில் மற்றும் வருடத்தின் எந்த நேரத்திலும் நடக்கும் அரிதாக நிகழ்வு' (an event that is rare at a particular place and time of year) என வரையறுக்கிறது. இந்த தீவிர நிகழ்வுகளின் பரவல் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. இந்த ஆண்டு மழைக்காலம் வயநாடு நிலச்சரிவு, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்முவில் திடீர் வெள்ளம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலம் தாராலியில் மேக வெடிப்புகள் மற்றும் மண்சரிவு போன்ற பேரிடர் நிகழ்வுகளால் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பஞ்சாப், பீகார் மற்றும் அசாம் போன்ற மாநிலங்கள் கடுமையான வெள்ளத்தை சந்தித்தன. அதே நேரத்தில் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நின்றதால் (waterlogging) பாதிப்புகளை சந்தித்தன.
வரலாற்று ரீதியாக, வறட்சியால் வகைப்படுத்தப்படும் மராத்வாடா பகுதி, இந்த ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் அதன் வழக்கமான பருவமழையில் 128 சதவீதத்தைப் பெற்றது. கனமழையால் உயிர் சேதம், பயிர்கள், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வெப்ப அலைகளின் தீவிரம் மற்றும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வடக்கு சமவெளிகள் மற்றும் மத்திய இந்தியாவை உள்ளடக்கிய வெப்ப மைய மண்டலம் (heat core zone) முழுவதும் இதன் தாக்கம் அதிகரித்தது. நிலப்பரப்பு சார்ந்த பரவலில் உள்ள இந்த பன்முகத்தன்மை உள்ளூர் நில அமைப்புகள், வானிலை முறைகள் மற்றும் உலகளாவிய காலநிலை காரணிகளுக்கு இடையேயான சிக்கலான தொடர்புகள் காரணமாக மழையின் சீரற்ற விநியோகம் ஏற்படுகிறது.
இந்தியாவின் வேளாண் உற்பத்தி, மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் இருப்புக்களை நிரப்புதல் மற்றும் நீர் மின் உற்பத்திக்கு நல்ல பருவமழை மிக முக்கியமானது. இந்தியாவின் மொத்த மழைப்பொழிவில் 75 சதவீதம் பருவமழை காலத்தில் (ஜூன்-செப்டம்பர்) வருகிறது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு சீரற்றதாகவும், தீவிரமாகவும், கணிக்க முடியாததாகவும் மாறியுள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவை இத்தகைய ஒழுங்கற்ற மற்றும் தீவிர மழைப்பொழிவுக்கு முக்கிய காரணங்களாகும். இதன் விளைவாக அடிக்கடி, கடுமையான வெள்ளம் மற்றும் பிற பேரிடர்களுக்கு வழிவகுக்கும். திட்டமிடப்படாத நகரமயமாக்கல், காடழிப்பு, உள்ளூர் நிலப்பரப்பு, பலவீனமான உள்கட்டமைப்பு மற்றும் சில சமூகங்களின் மோசமான சமூக-பொருளாதார நிலைமைகள் காரணமாக இந்த நிகழ்வுகளின் பாதகமான தாக்கம் மேலும் அதிகரிக்கும்.
திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் சாலைகள் மற்றும் நீர் மின்சாரம் போன்றவை பொது உள்கட்டமைப்புகளில் பல ஆண்டுகளாக முதலீடுகளை அழித்து வருகின்றன. உயிர் மற்றும் சொத்து இழப்புகளை தாண்டி, இந்த பேரிடர்கள் பாதிக்கப்பட்ட சமூகங்களில் உளவியல் ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த உளவியல் தாக்கம் கொள்கை விவாதங்களில் புறக்கணிக்கப்படுகிறது. மேலும், அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் வெப்ப அலை போன்ற நிலைமைகள் தொழிலாளர் உற்பத்தித்திறனை நேரடியாக பாதிக்கின்றன மற்றும் ஆற்றல் தேவைகளை அதிகரிக்கின்றன. அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக நமது சுகாதார அமைப்புக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
ஆனால், இந்த தீவிர நிகழ்வுகளை கண்காணித்து குறைப்பதில் பல சவால்கள் உள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் இந்த நிகழ்வுகளைப் புகாரளிப்பதற்கான சீரற்ற தரநிலைகள், முழுமையற்ற தகவல்கள் மற்றும் சேதங்களின் முழுமையற்ற மதிப்பீடு ஆகியவை இதில் அடங்கும். இதன் விளைவாக, காலநிலை நிகழ்வுகளின் உண்மையான தாக்கம் பெரும்பாலும் குறைவாகவே அறிக்கை செய்யப்படுகிறது.
மேலும், இமயமலைப் பகுதிகளில் வானிலை கண்காணிப்பு நிலையங்களின் போதுமான எண்ணிக்கை மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் தரவு குறைவாக இருப்பது துல்லியமான பேரிடர் மதிப்பீடு மற்றும் நிலைப்பரப்பு சார்ந்த பாதுகாப்புத் தன்மையை தடுக்கிறது.
முதலில், தீவிர நிகழ்வுகள் மற்றும் அவற்றின் தாக்கம் பற்றிய சுருக்கமான இடம்சார்ந்த கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.
இத்தகைய தீர்வுகளை நிவர்த்தி செய்வதற்கு முன், தீவிர நிகழ்வுகளின் பரவல் மற்றும் அவற்றின் விளைவுகளைப் புரிந்துகொள்வது முக்கியம். இந்த சூழ்நிலையில், தொலையுணர்தல் (RS) மற்றும் புவியியல் தகவல் அமைப்புகள் (GIS) போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது பயனுள்ள பேரிடர் மேலாண்மைக்கு மிக முக்கியமானதாகிறது.
தொலையுணர்தல் (Remote Sensing (RS))
தொலையுணர்தல் என்பது பூமியின் மேற்பரப்பைப் பற்றிய தகவல்களை நேரடியாக சேகரிக்கும் ஒரு முறையாகும். இது பொதுவாக செயற்கைக்கோள்கள் (satellites), ஆளில்லா விமானங்கள் (drones) அல்லது விமானம்-சார்ந்த உணர்விகள் (aircraft-based sensors) மூலம் பெறுவதற்கான செயல்முறையாகும். முழுமையான பூஜ்ஜிய அளவை விட (-273 டிகிரி செல்சியஸ்) அதிக வெப்பநிலை கொண்ட அனைத்துப் பொருட்களும் தொடர்ந்து கதிர்வீச்சைக் கொண்டிருப்பதால், இந்த செயல்முறை மின்காந்த கதிர்வீச்சின் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுகிறது.
தொலையுணர்தல் மூலம், பல்வேறு அலைக்கற்றை பட்டைகளில் (different spectral bands), வெப்பம் (thermal), அகச்சிவப்பு (infrared) மற்றும் நுண்ணலை வரம்புகளில் (microwave ranges) அறியக்கூடிய வெவ்வேறு நிறமாலை பட்டைகளில் தரவைச் சேகரிக்க முடியும்
புவியியல் தகவல் அமைப்புகள் (Geographic Information Systems (GIS))
Landsat என்பது பூமியை படம் பிடிக்கும் செயற்கைக்கோள்களின் தொடர் ஆகும்.
LISS என்பது ரேகை படங்கள் மற்றும் தானாக ஸ்கேன் செய்யும் உணரி (Linear Imaging and Self-Scanning Sensor) |
இவை கணினி அடிப்படையிலான அமைப்புகள், அவை இடம்சார்ந்த தரவை ஒழுங்கமைக்கவும், சேமிக்கவும், விளக்கவும் மற்றும் பகுப்பாய்வு செய்யவும் உதவுகின்றன. Landsat மற்றும் LISS செயற்கைக்கோள்கள் போன்ற தொலைநிலை உணர்திறன் செயற்கைக்கோள்களின் வரலாற்றுத் தரவுகள் புவியியல் தகவல் அமைப்புகளுடன் (GIS) ஒருங்கிணைக்கப்பட்டு, காலப்போக்கில் சுற்றுச்சூழல் மாற்றங்களைக் கண்காணிக்கவும், நிலப் பயன்பாடு மற்றும் நிலப்பரப்பு மாற்றங்களின் போக்குகள் மற்றும் வடிவங்களை அடையாளம் காணவும், இது முன்கணிப்பு மாதிரியாக்கத்திற்கும் (predictive modelling) முக்கியமானது.
இந்த தொழில்நுட்பங்கள் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. இதில் ஆபத்து ஏற்படக்கூடிய தன்மை மற்றும் பாதிப்பு மண்டல வரைபடமாக்கல், வெப்ப முரண்பாடுகளைக் கண்டறிதல், வெள்ள அளவு மதிப்பிடுவதற்கு, காட்டுத் தீ, பயிர்களின் வளர்ச்சி, கிரையோஸ்பியர் கண்காணிப்பு மற்றும் நகர்ப்புற விரிவாக்கம் போன்றவை அடங்கும்.
நவீன பேரிடர் மேலாண்மை உத்திகள்
தொலையுணர்தல் (RS) மற்றும் புவியியல் தகவல் அமைப்புகள் (GIS) ஆகியவை நவீன பேரிடர் மேலாண்மையின் கண்கள் மற்றும் மூளையைப் போல இணைந்து செயல்படுகின்றன. அவர்கள், நிகழ்நேர இருப்பிட அடிப்படையிலான தகவல்களை வழங்குகின்றன. இது பேரிடர்களைக் கண்காணிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொலையுணர்தல் (RS) தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஆளில்லா விமானங்கள், குறிப்பிட்ட பகுதிகளின் விரிவான இடம்சார்ந்த தகவல்களைப் பிடிக்க உதவுகின்றன.
Mission Mausam : மௌசம் திட்டம் என்பது "வானிலைக்குத் தயாரான மற்றும் காலநிலைக்கு ஏற்ற முறையில்" இந்தியாவை உருவாக்குவதற்காக இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தால் (MoES) தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். |
மிஷன் மௌசம் (Mission Mausam) போன்ற முன்முயற்சிகள் அடுத்த தலைமுறையான மேம்பட்ட ரேடார்கள் மற்றும் செயற்கைக்கோள் அமைப்புகளை புவியியல் தகவல் அமைப்புகள் (GIS)-அடிப்படையிலான தானியங்கு முடிவு ஆதரவு அமைப்புடன் நிகழ்நேர தரவைப் பகிர்ந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த ஒருங்கிணைப்பு சுற்றுச்சூழல் தரவுகளுக்கான அணுகலை அதிகரிக்கும் மற்றும் பேரிடர் தணிப்புக்கான ஆதார அடிப்படையிலான கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்க அரசாங்கங்களுக்கு உதவும்.
சமீபத்தில், NASA மற்றும் ISRO இணைந்து NISAR செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. இது உலகம் முழுவதும் இலவச தரவுகளை வழங்கும். NISAR இன் ரேடார் பூமியில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து நிலம் மற்றும் பனி மேற்பரப்புகளையும் ஒவ்வொரு 12 நாட்களுக்கும் இரண்டு முறை கண்காணிக்கும். இதில் ஒரு சென்டிமீட்டர் வரை சிறிய இயக்கங்களைக் கண்டறிய முடியும். இது இயற்கை பேரிடர்கள் குறித்த முன்னறிவிப்பையும், காலநிலை மாற்ற விளைவுகளைக் கண்காணிப்பதையும் பெரிதும் மேம்படுத்தும்.
காலநிலை தாங்கும் தன்மையை உருவாக்குதல்
இத்தகைய தீவிர நிகழ்வுகளின் தொடர்ச்சியான தன்மை இருந்தபோதிலும், தற்போதைய கொள்கையின் பதில் பெரும்பாலும் எதிர்வினையாகவே உள்ளது. இதனால், பேரிடர்கள் ஏற்பட்ட பின்னரே நாம் செயல்படுகிறோம். எனவே, இந்த அணுகுமுறையை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. பேரிடருக்குப் பிறகு பதிலளிப்பதை விட, அபாயங்களைக் குறைத்தல், தயார்நிலையை மேம்படுத்துதல் மற்றும் சமூக மீள்தன்மையை உருவாக்குதல் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இது பேரிடர் அபாயக் குறைப்புக்கான செண்டாய் கட்டமைப்புடன் (Sendai Framework) (2015-2030) இணைகிறது. இது "பேரிடர்களை நிர்வகிப்பதில் இருந்து பேரிடர் அபாயங்களை நிர்வகிப்பதற்கான மாற்றத்தை" ஊக்குவிக்கிறது.
மேலும், சிறந்த முன்-எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு ஆகியவற்றிற்காக அதிக இடம்சார்ந்த தெளிவுத்திறன் மற்றும் அடிக்கடி மறுபரிசீலனை செய்யும் திறன் கொண்ட அதிக செயற்கைக்கோள்களின் தேவை உள்ளது. தற்போது, இந்த தீவிர நிகழ்வுகளின் தரவு சிதறிக்கிடக்கிறது மற்றும் முழுமையடையாது. இது ஒரு ஒருங்கிணைந்த தரவு கட்டமைப்பின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த பேரிடர்கள் பெரும்பாலும் நிர்வாக எல்லைகளைக் கடக்கின்றன. எனவே, கொள்கைகள் வரையறுக்கப்பட்ட பகுதிகளை விட பெரிய புவியியல் பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். காலநிலை மாற்றத்தின் எதிர்மறை விளைவுகளைக கையாளவும், அவற்றைக் குறைக்கவும், இந்தியாவிற்கு ஒரு விரிவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய திட்டம் தேவை. இந்தத் திட்டம் அனைத்து பிராந்தியங்களையும் துறைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். தொலையுணர்தல் (RS), புவியியல் தகவல் அமைப்புகள் (GIS) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழில்நுட்பங்களின் பயன்பாடு இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
இந்த தொழில்நுட்பங்களை முழுமையாக ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தியா வலுவான மீள்தன்மையை உருவாக்க முடியும். இந்த மீள்தன்மை அதன் மக்களையும் பொருளாதாரத்தையும் காலநிலை மாற்றத்தின் வளர்ந்து வரும் சவால்களிலிருந்து பாதுகாக்க உதவும்.
Original article: