ககன்யானின் முக்கிய அவசரகால வெளியேறும் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது? -S. உன்னிகிருஷ்ணன் நாயர்

 மனித விண்வெளி பயணங்களுக்கு ஒர் அவசரகால வெளியேறும் அமைப்பு (Crew Escape System (CES)) ஏன் அவசியம்? இஸ்ரோ அதன் அவசரகால வெளியேறும் அமைப்பை எவ்வாறு சோதித்துள்ளது?


தற்போதைய செய்தி: 


ககன்யான் திட்டமானது, இந்திய விண்வெளி வீரர்களை பூமியிலிருந்து 400 கி.மீ உயரத்தில், HLVM3 எனப்படும் சிறப்பு ராக்கெட்டைப் பயன்படுத்தி பாதுகாப்பாக விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அவர்களை பாதுகாப்பாக மீண்டும் கொண்டு வருவதும் இதில் அடங்கும். மனித விண்வெளி பயணங்களில், பயண வெற்றியை விட வீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. ஏவுதளம், ஏற்றம், சுற்றுப்பாதை மற்றும் இறங்குதல் போன்ற அனைத்து கட்டங்களிலும் பாதுகாப்பை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியம்.


அவசரகால வெளியேறும் அமைப்பு (Crew Escape System (CES)) என்றால் என்ன?


ககன்யான் திட்டத்தின் வளிமண்டல கட்டத்தின் ஆரம்ப பகுதியில், அவசரகால வெளியேறும் அமைப்பு (CES) எனப்படும் ஒரு சிறப்பு அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. தவறு ஏதேனும் நடந்தால் விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க இந்த அமைப்பு உள்ளது. அவசரகால வெளியேறும் அமைப்பு, செயலிழந்த ஏவுகணை வாகனத்திலிருந்து, குழுவினருடன் சேர்ந்து, குழு தொகுதியை விரைவாகப் பிரித்து, மிகக் குறைந்த நேரத்தில் பாதுகாப்பான தூரத்திற்கு நகர்த்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மிகக் குறைந்த நேரத்தில் அவர்களை பாதுகாப்பான தூரத்திற்கு நகர்த்துகிறது. வளிமண்டலத்தில் ராக்கெட் பறக்கும்போது, ​​அது மிகவும் ஆபத்தான கட்டத்தைக் கடந்து செல்கிறது. 


இந்த நேரத்தில், அது ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகத்தை அதிகரிக்கிறது மற்றும் அதிக அழுத்தத்தை எதிர்கொள்கிறது. HLVM3 ராக்கெட் இரண்டு வலுவான திட-எரிபொருள் பூஸ்டர்களை (S200) உயர்த்துகிறது.  இந்த திரவ அல்லது கிரையோஜெனிக் என்ஜின்களைப் போல் இல்லாமல், திட மோட்டார்களை ஒரு முறை இயக்கியவுடன் மீண்டும் அதை அணைக்க முடியாது. அவசரகால வெளியேறும் அமைப்பு என்பது ராக்கெட்டின் முன்புறத்தில் வைக்கப்பட்டுள்ள வேகமாக செயல்படும் அமைப்பாகும். மேலும், இது பல சிறப்பு-நோக்க திட மோட்டார்களுடன் உள்ளது. இது அதிக சக்தியையும் வேகத்தையும் உற்பத்தி செய்ய உதவுகிறது. இதனால் அவசரகாலத்தில் வீரர்கள் விரைவாக தப்பிக்க முடியும்.


ககன்யான் திட்டத்தில், அவசரகால வெளியேறும் அமைப்பு (Crew Escape System (CES)) ஈர்ப்பு விசையை விட 10 மடங்கு வலிமையான சக்தியை உருவாக்க முடியும். இது மிகவும் வலிமையானது. ஆனால், ஒரு ஆரோக்கியமான நபர் சரியான முறையில் அமர்ந்தால் தொட்டிலில் இருக்கும் குழந்தையைப் போல, இருக்கைக்கு எதிராக முதுகை வைத்து, மார்பில் அழுத்தம் கொடுத்து உட்காரும் போது இந்த வலுவான சக்தியை சில வினாடிகள் மட்டுமே கையாள முடியும். ராக்கெட்டுகள் விமானங்களை விட மிகவும் சிக்கலானவை மற்றும் குறைவான நம்பகத்தன்மை கொண்டவை. ஆனால், அவசரகால வெளியேறும் அமைப்பு (Crew Escape System (CES)) அதன் நிரூபிக்கப்பட்ட வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வலுவான பணி திட்டமிடல் காரணமாக குழுவினர் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.


வெவ்வேறு வகைகள் என்னென்ன?


அவசரகால வெளியேறும் அமைப்பு (Crew Escape System (CES)), பிரித்தெடுக்கும் விதத்தின் அடிப்படையில் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது: 


  1. இழுப்பான் வகை (puller type) - ககன்யானில் பயன்படுத்தப்படுகிறது. அங்கு அவசரகால வெளியேறும் அமைப்பை ஏவுகனை வாகனத்திலிருந்து விலக்குகிறது.


  1. வெளியேற்றும் வகை (pusher type) - SpaceX இன் Falcon 9 போன்ற வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. அங்கு சிறிய சக்திவாய்ந்த திரவ எரிபொருள் இயந்திரங்களைப் பயன்படுத்தி தள்ளப்படுகிறது.


செப்டம்பர் 1983-ல், இரண்டு சோவியத் விண்வெளி வீரர்கள் Soyuz ராக்கெட் புறப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் ஏவுதளத்தில் தீப்பிடித்தபோது பாதுகாப்பாகத் தப்பினர். இதுவே, ராக்கெட்டு ஏவப்படுவதற்கு முன்பு, குழுவினருடன் கூடிய அவசரகால வெளியேறும் அமைப்பு செயல்படுத்தப்பட்ட முதல் மற்றும் கடைசி முறையாகும்.


அவசரகால வெளியேறும் அமைப்பு (CES) பழுதடைந்த ராக்கெட்டிலிருந்து குழு தொகுதியை பாதுகாப்பான தூரத்திற்கு நகர்த்தியவுடன், அவை வெளியிடப்பட்டு, ஒரு பாராசூட் அமைப்பு மூலம் படிப்படியாக மெதுவாக்கப்படுகிறது. அது குழுவினருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் கடலில் தரையிறங்குகிறது. ஆனால் சோவியத் யூனியனின் முதல் மனித விண்வெளிப் பயணத்தின் போது, Yuri Gagarin தோராயமாக 7 கிமீ உயரத்தில் Vostok தொகுதியிலிருந்து வெளியேறி, பாராசூட்டில் இருந்து பாதுகாப்பாக தரையில் குதித்தார்.


ஒருங்கிணைந்த வாகன சுகாதார மேலாண்மை அமைப்பு (Integrated Vehicle Health Management system (IVHM)) உணர்விகள் (sensors), மின்னணுவியல் மற்றும் மென்பொருளால் ஆனது.  ஏதேனும் சிக்கல் இருந்தால், அவசரகால வெளியேறும் அமைப்பை (CES) எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க இது உதவுகிறது. இது ராக்கெட்டின் முக்கியமான பகுதிகளையும் குழுவினரின் ஆரோக்கியத்தையும் எப்போதும் கண்காணிக்கிறது. இந்தத் தகவலைப் பயன்படுத்தி, இது ஏதேனும் சிக்கல்களை விரைவாகக் கண்டறிந்து, தவறான எச்சரிக்கைகளைத் தவிர்த்து, குழுவினரைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவசரகால வெளியேறும் அமைப்வை முன்கூட்டியே செயல்படுத்துகிறது.


இது சோதிக்கப்பட்டதா?


அவசரகால வெளியேறும் அமைப்பை (CES) (Crew Escape System (CES)) சரிபார்க்க Vikas இயந்திரம் மூலம் இயக்கப்படும் செலவு குறைந்த, ஒற்றை-நிலை சோதனை (single-stage test) வாகனத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (Indian Space Research Organisation (ISRO)) உருவாக்கியுள்ளது. முதல் வெற்றிகரமான சோதனை அக்டோபர் 2023-ல் நடந்தது. மேலும், சோதனை வாகனம் ஒலி வேகத்தை அடையும் போது அவசரகால வெளியேறும் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை சரிபார்க்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் மேலும் சோதனை விமானங்களைத் திட்டமிட்டுள்ளது. ககன்யான் பணிக்கு இத்தகைய வெளியேறும் அமைப்பு மிகவும் முக்கியமானது மற்றும் விண்வெளி வீரர்களின் பாதுகாப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. மேம்பட்ட தொழில்நுட்பம், கவனமாக சோதனை செய்தல் மற்றும் ஒருங்கிணைந்த வாகன சுகாதார மேலாண்மை அமைப்பு (Integrated Vehicle Health Management system (IVHM)) போன்ற வலுவான அமைப்புகளுடன், எதிர்பாராத சவால்களை எதிர்கொண்டாலும், இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமானது, அதன் வீரர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு முன்னுரிமை அளிக்கும் என்பதை அவசரகால வெளியேறும் அமைப்பு உறுதி செய்கிறது.


உன்னிகிருஷ்ணன் நாயர் எஸ். முன்னாள் இயக்குனர், VSSC; நிறுவன இயக்குனர், HSFC; மற்றும் சுற்றுப்பாதை மறு நுழைவு மற்றும் மனித விண்வெளிப் பயண தொழில்நுட்பங்களில் நிபுணர் ஆவார்.



Original article:

Share: