பொருளாதாரத்தை மிகவும் துல்லியமாக அளவிடுவதை நோக்கி… -கார்த்திகேய பத்ரா, அமித் பாசோல், அர்ஜுன் ஜெயதேவ்

 

வேலைவாய்ப்புகள், உற்பத்தி, வருமானம், செலவு மற்றும் முதலீடு ஆகியவற்றை மிகவும் துல்லியமாகவும் அடிக்கடி கண்காணிக்க அரசாங்கம் புள்ளிவிவர அமைப்புகளை மேம்படுத்தியுள்ளது.


இந்தியப் பொருளாதாரத்தை அளவிடுவது எளிதல்ல. வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு நிலைகளில் உருவாகின்றன. மேலும், முறையான மற்றும் முறைசாரா துறைகள் இரண்டும் ஒன்றாக உள்ளன. மக்கள் பல வகையான வேலைகளையும் செய்கிறார்கள். இது அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் சரியாகப் பதிவு செய்வதை கடினமாக்குகிறது. மற்றொரு சிரமம் தகவல்களை அடிக்கடி புதுப்பிப்பதும், காலப்போக்கில் ஒப்பிடக்கூடிய தரவைச் சேகரிப்பதும் ஆகும். இந்தியாவில், முக்கியமான ஆய்வுகள் அடிக்கடி செய்யப்படாததால் இது கடினமாக உள்ளது.


தேசிய மற்றும் துணை தேசிய மட்டங்களில் நம்பகமான மற்றும் நிலையான நடவடிக்கைகள், பொருளாதாரம் எவ்வளவு வளர்ந்து வருகிறது மற்றும் மாறுகிறது என்பதை மட்டுமல்ல, அந்த வளர்ச்சி எங்கே, யாருக்காக நிகழ்கிறது என்பதையும் புரிந்துகொள்வது முக்கியம். இது சம்பந்தமாக, புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) பல புதிய முயற்சிகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை வேலைவாய்ப்பு, வெளியீடு, வருமானம், நுகர்வு மற்றும் முதலீடு போன்ற முக்கிய பொருளாதார மாறிகள் குறித்த உயர் அதிர்வெண், இடம்சார்ந்த பிரிக்கப்பட்ட தகவல்களை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.   


அளவிடப்படாதவற்றை அளவிடுதல்


2021-22ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) உற்பத்தி, வர்த்தகம் மற்றும் பிற சேவைகளின் (கட்டுமானம் =

தவிர) முறைசாரா துறையில் வருடாந்திர பொருளாதார நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தொடங்கியது. இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்புக்கு முன்பு, முறைசாரா துறை தொடர்பான கணக்கெடுப்புகள் ஆண்டுக்கு ஒரு முறை நடந்தன. இடைப்பட்ட காலத்தில், புள்ளிவிவர வல்லுநர்கள் பகுப்பாய்விற்காக கணிப்புகளை நம்பியிருக்க வேண்டியிருந்தது.


தற்போதைய, அமைப்பில் மற்றொரு பெரிய இடைவெளி முறையான சேவைத் துறையின் வருடாந்திர அளவீட்டைப் பற்றியது. பொருளாதாரத்தின் இந்தக் கூறுகளைப் பிடிக்கும், ஒருங்கிணைந்த சேவைகள் துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பை (Annual Survey of Incorporated Services Sector Enterprises (ASISSE)) தொடங்குவதாக அமைச்சகம் அறிவித்துள்ளது. முறையான உற்பத்தித் துறையை உள்ளடக்கிய வருடாந்திர தொழில்துறை கணக்கெடுப்பு (Annual Survey of Industries (ASI)) போல் இல்லாமல், சேவைகளுக்கான வருடாந்திர கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு, வருடாந்திர தொழில்துறை கணக்கெடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த சேவைகள் துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு ஆகியவை இணைந்து, அனைத்துத் துறைகள் மற்றும் பிராந்தியங்களிலும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த நம்பகமான தரவை வழங்கும்.


உயர் அதிர்வெண் குறிகாட்டிகள் (High-frequency indicators)


2017ஆம் ஆண்டில், நாட்டின் தொழிலாளர் சக்தி தொடர்பான வருடாந்திர மதிப்பீடுகளை வழங்கும் நோக்கத்துடன், இந்தியா காலமுறை தொழிலாளர் நலன் கணக்கெடுப்பை (Periodic Labour Force Survey (PLFS)) தொடங்கியது. இந்த கணக்கெடுப்பு தொடங்கப்படுவதற்கு முன்பு, தேசிய சேவைத் திட்டம் (National Service Scheme (NSS) வேலைவாய்ப்பு-வேலையின்மை கணக்கெடுப்புகள் மூலம் வேலைவாய்ப்பு தரவு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே சேகரிக்கப்பட்டது. காலமுறை தொழிலாளர் நலன் கணக்கெடுப்பு ஆண்டு மதிப்பீடுகளை வழங்குவதன் மூலம் இதை மாற்றியது. ஜனவரி 2025-ல், PLFS தரவு இப்போது தேசிய அளவில் மாதந்தோறும் கிடைக்கும் என்றும், காலாண்டு மதிப்பீடுகள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கும் என்றும் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) அறிவித்தது (முன்னர், நகர்ப்புறங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன).

கூடுதலாக, மாவட்டங்களை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் காலமுறை தொழிலாளர் நலன் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) மாதிரி மேம்படுத்தப்பட்டுள்ளது. விரிவான வேலைவாய்ப்பு தரவு மாவட்டங்கள் முழுவதும் உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தைக் கண்காணிக்க உதவும். அதேபோல், வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) பழைய நுகர்வு கணக்கெடுப்புகளை மாற்றியுள்ளது. இப்போது அது அடிக்கடி நடத்தப்படும்.


மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொடருக்கான புதிய அடிப்படை ஆண்டு


மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் "அடிப்படை ஆண்டை" ஒரு குறிப்புப் புள்ளியாகப் பயன்படுத்துகின்றன. மேலும், இந்தியா தற்போது 2011-12 நிதியாண்டை அதன் அடிப்படை ஆண்டாகப் பயன்படுத்துகிறது. இந்த அடிப்படை ஆண்டு காலாவதியானது. எனவே, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) அதைப் புதுப்பித்து வருகிறது. புதுப்பிப்புடன், மதிப்பீடுகளை மிகவும் துல்லியமாக்க சரக்கு மற்றும் சேவை வரித் தரவுத்தளம் மற்றும் சமீபத்திய ஆய்வுகள் போன்ற புதிய தரவு மூலங்களைப் பயன்படுத்தி மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை மேம்படுத்த புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.


இதேபோல், பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கு, அவற்றின் மொத்த உற்பத்தி பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொடர்புடைய துறைக்கும் ஒதுக்கப்படும். சமீபத்திய வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பின் (HCES) தரவைப் பயன்படுத்தி பணவீக்கத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் பொருட்களின் பட்டியல் புதுப்பிக்கப்படும். புதிய தொடர் அடுத்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கம் பற்றிய நமது புரிதலிலும், தேசிய மற்றும் துணை தேசிய மட்டங்களில் பணவீக்கத்தால் சரிசெய்யப்பட்ட உற்பத்தியிலும் தாக்கங்களை ஏற்படுத்தும்.


தேசியத்திலிருந்து துணை தேசியம் வரை


தேசிய அளவில் பொருளாதாரத்தின் அளவீட்டை மேம்படுத்துவதோடு, இந்த நடவடிக்கைகள் துணை தேசிய மட்டங்களில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான மதிப்பீடுகளை மிகவும் துல்லியமாக மாற்றும். அக்டோபர் 2025-ல், ஒரு பொது நிகழ்வில் பேசிய அமைச்சகத்தின் செயலாளர், இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) மற்றும் PLFS-ன் சமீபத்திய நெறிப்படுத்தப்பட்ட பதிப்புகளைப் பயன்படுத்தி, மாவட்ட உள்நாட்டு உற்பத்தியின் (District Domestic Product (DDP)) மதிப்பீடுகளை உருவாக்க மாநில அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.


இந்தச் சூழலில் ASUSE மற்றும் PLFS தரவைப் பயன்படுத்துவது ஒவ்வொரு மாவட்டத்திலும் வணிக நடவடிக்கைகள் மற்றும் வேலைகளை சிறப்பாகக் கண்காணிக்கும். இது கொள்கை வகுப்பாளர்களுக்கு உள்ளூர் பொருளாதாரங்களைப் பற்றிய தெளிவான விளக்கத்தை வழங்கும். ஒரு திடமான மாவட்ட உள்நாட்டு உற்பத்தி (DDP) அமைப்பு மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் இடையிலான ஒப்பீடுகளை செயல்படுத்தும். இது வளர்ச்சி மற்றும் பொருளாதார மாற்றங்களின் உண்மையான இயக்கிகளைக் கண்டறிய உதவுகிறது.

சீர்திருத்தங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன


புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), தேசிய வீட்டு வருமான கணக்கெடுப்பு (National Household Income Survey (NHIS)) என்ற புதிய வருடாந்திர கணக்கெடுப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இது வெற்றிகரமாக தொடங்கப்பட்டால், இது மிகவும் துல்லியமான வீட்டு வருமான புள்ளிவிவரங்களை வழங்கும். இது பிராந்தியங்கள் மற்றும் வயது அல்லது தொழில் போன்ற மக்கள்தொகை குழுக்களுக்கு (demographic groups) இடையே வருமானத்தை ஒப்பிட்டுப் பார்க்க அனுமதிக்கும்.


இதுவரை, இந்தியா தனது கவனிக்கப்பட்ட செலவினங்கள் மூலம் வீட்டு வருமானத்தைப் மதிப்பிடுவதற்கு NSS நுகர்வு கணக்கெடுப்பை மட்டுமே நம்பியிருந்தது. ஆனால், இந்த கணக்கெடுப்பு பொருளாதார விளைவுகளின் முக்கிய குறிகாட்டியின் நேரடி அளவீட்டை வழங்கும்.

பொருளாதாரம் எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதில் அமைச்சகம் முக்கியமான மாற்றங்களைச் செய்து வருகிறது. இருப்பினும், இந்த மாற்றங்கள் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருந்தால் மட்டுமே சிறப்பாக செயல்படும். தரவுத் தொகுப்புகளின் பொது வெளியீடு, தெளிவான வழிமுறை ஆவணங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் திறந்த ஆலோசனைகள் ஆகியவை உருவாக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் நம்பகமானவை மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும்.

புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் அடிக்கடி ஏற்பாடு செய்யப்படும் தரவு பயனர் மாநாடுகள், அரசாங்க புள்ளிவிவர வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் அமைச்சகத்தின் முயற்சிகளைப் பற்றி விவாதிக்க ஒரு வெளிப்படையான தளத்தை வழங்கியுள்ளன. நம்பகத்தன்மையை வளர்ப்பதற்கும், விரிவாக்கப்பட்ட தரவு உள்கட்டமைப்பு அதன் பயனர்களுக்கு பொறுப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கும் இத்தகைய மன்றங்கள் மிக முக்கியமானவை.


கடந்த காலங்களில், 2017-18 நுகர்வு செலவு கணக்கெடுப்பு போன்ற முக்கிய கணக்கெடுப்புகளை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ரத்து செய்தபோது அல்லது தாமதப்படுத்தியபோது கவலைகள் எழுப்பப்பட்டன. இது அமைப்பின் மீதான நம்பிக்கையை பலவீனப்படுத்துகிறது. அமைச்சகத்தின் புதிய கொள்கை செயல்படுத்தப்பட வேண்டுமானால், இதுபோன்ற பின்னடைவுகளைத் தவிர்ப்பது அவசியம்.


புள்ளியியல் நிபுணர் PC மஹலனோபிஸின் தாயகமான இந்தியா, உயர்தர புள்ளிவிவர அமைப்பை உருவாக்கி இயக்கும் திறன்களைக் கொண்டுள்ளது. அமைச்சகத்தின் சமீபத்திய முயற்சிகள் சரியான திசையில் நகர்கின்றன. இது போன்ற  பெரிய திட்டங்கள் நீண்ட காலத்திற்கு தொடரும் என்று நம்பப்படுகிறது.


எழுத்தாளர்கள் பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள்.

Original link:

Towards measuring the economy more accurately.


Share:

சஞ்சார் சாதி செயலி கட்டாயமல்ல என சிந்தியா தெளிவுபடுத்துகிறார்: தனியுரிமை மற்றும் பயனர் தரவு குறித்து… -சௌம்யரேந்திர பாரிக்


சஞ்சார் சாதி செயலியின் (Sanchar Saathi App) விளக்கம்: சஞ்சார் சாதி என்றால் என்ன, அனைத்து திறன்பேசிகளிலும் இதை நிறுவுமாறு அரசாங்கம் நிறுவனங்களுக்கு ஏன் உத்தரவிட்டுள்ளது. மேலும், எந்த வகையான தனிப்பட்ட தரவை அது அணுக முடியும்?


இந்திய திறன்பேசி தயாரிப்பாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் புதிய கைப்பேசிகளை விற்பனை செய்வதற்கு முன்பு, அவற்றில் சஞ்சார் சாதி என்ற அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு செயலியை நிறுவ வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)) கூறியுள்ளது. இந்த செயலியில் பயனர்கள் போலி அழைப்புகள், போலியான செய்திகள் மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகளை குறித்து எளிதாக புகாரளிக்க உதவுகிறது.


பயனர்களால் இந்த செயலியை நீக்கவோ, கட்டுப்படுத்தவோ அல்லது முடக்கவோ முடியாது என்று தொலைத்தொடர்புத் துறை முன்னதாக நிறுவனங்களுக்குத் தெரிவித்திருந்தது. இருப்பினும், இந்த செயலியை கட்டாயமாக்குவது குறித்து மக்கள் கவலைகளை எழுப்பியதை அடுத்து, டிசம்பர் 2 அன்று தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இதை நிறுவுவது பயனரின் விருப்பத்திற்குரியது என்று கூறினார்.


நீங்கள் செயலியை நீக்க விரும்பினால், உங்களால் முடியும். ஆனால் அது கட்டாயமில்லை. உதாரணமாக, நீங்கள் செயலியைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், அதற்குப் பதிவு செய்யாதீர்கள், அது செயலற்ற நிலையில் இருக்கும்.  நீங்கள் விரும்பினால் அதை நீக்கலாம். டிஜிட்டல் மோசடி மற்றும் திருட்டில் இருந்து அவர்களைப் பாதுகாக்க உதவும் இந்த செயலியைப் பற்றி பலருக்குத் தெரியாது. எனவே, அனைவரும் அதை அணுக முடியும் என்பதை அரசாங்கம் உறுதி செய்ய விரும்புகிறது என்று சிந்தியா கூறினார்.

அனைத்து புதிய சாதனங்களிலும்  இந்த செயலியை நிருவாவதோடு மட்டுமல்லாமல், மென்பொருள் புதுப்பிப்பு மூலம் ஏற்கனவே விற்கப்பட்ட போன்களில் இதைச் சேர்க்குமாறும் தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)) அமைச்சகம் நிறுவனங்களைக் கேட்டுள்ளது. தொலைத் தொடர்புத் துறையின் உத்தரவு முதலில் Reuters-ல் தெரிவிக்கப்பட்டது. 


தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)) அமைச்சகம் என்ன சொன்னது


தொலைத்தொடர்பு இணையப் பாதுகாப்பு திருத்த விதிகள் (Telecommunication Cybersecurity Amendment Rules) 2025-ன் கீழ் நவம்பர் 28 அன்று வெளியிடப்பட்ட தொலைத்தொடர்புத் துறை அமைச்சக உத்தரவு, தனியுரிமை மற்றும் கண்காணிப்பு குறித்து மக்கள் கவலைப்பட்டதால் விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்த உத்தரவு, பயனர்கள் செயலியைப் பயன்படுத்த விரும்புகிறீர்களா இல்லையா என்பதில் எந்தக் கருத்தும் கொண்டிருக்கவில்லை என்பதையும், அவர்களின் தொலைபேசியில் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால் அதை நீக்குவதா என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியாது.


இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கைப்பேசிகளையும் அரசாங்க மென்பொருளை இயக்க வேண்டிய ஒரு சாதனமாக மாற்றும், பயனர்களால் மறுக்கவோ, கட்டுப்படுத்தவோ அல்லது நீக்கவோ முடியாது. இந்த வழியில் செயல்பட, பயன்பாட்டிற்கு ஆழமான கணினி அணுகல் தேவைப்படும். மேலும், பயனர்கள் அதை முடக்க முடியாது. சரியாக வேலை செய்ய, செயலிக்கு ஆழமான கணினி அணுகல் தேவைப்படலாம். எனவே அதை நீக்க முடியாது. இந்த வடிவமைப்பு, செயலிகள் ஒருவருக்கொருவர் தரவை அணுகுவதைத் தடுக்கும் வழக்கமான பாதுகாப்புகளை பலவீனப்படுத்துகிறது என்றும், ஒவ்வொரு இந்திய கைப்பேசிகளிலும் சஞ்சார் சாதி செயலி நிரந்தர, தேவையற்ற அணுகல் புள்ளியாக மாற்றுகிறது என்றும் Internet Freedom Foundation தெரிவித்துள்ளது.


இதை தவிர, தனியுரிமைக் கொள்கை (privacy policy) மற்றும் அது அணுகக்கூடிய பயனர் தரவின் வகை குறித்த கவலைகள் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு திறந்த மூல பயன்பாட்டு சோதனை சேவையாவது (open-source application testing service) இந்த சிக்கல்கள் குறித்து எச்சரிக்கைகளை எழுப்பியுள்ளது.

அரசு ஆதரவு பெற்ற செயலியை தொலைபேசிகளில் நிறுவுவதை கட்டாயமாக்கும் உத்தரவை அரசாங்கம் பிறப்பித்திருப்பது இதுவே முதல் முறையாகும். பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் இது அசாதாரணமானது என்றாலும், இதற்கு முன்பும் இது நடந்துள்ளது. எடுத்துக்காட்டாக, ரஷ்யா சமீபத்தில் தொலைபேசி தயாரிப்பாளர்களிடம் அதன் அரசு ஆதரவு செய்தியிடல் செயலியான MAX-ஐ முன்கூட்டியே நிறுவுமாறு கூறியது. இது WhatsApp-க்கு போட்டியாக உருவாக்கப்பட்டது. இது பயனர்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.


மேலும், 2023ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு சட்டம் (Telecommunications Act) இறுதி செய்யப்பட்டபோது, ​​அது இணைய தளங்களுக்கும் பொருந்தக்கூடும் என்று மக்கள் கவலைப்பட்டனர். இது நடக்காது என்று அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால், இப்போது அந்தச் சட்டத்தின் அடிப்படையில் தொலைத்தொடர்பு இணையப் பாதுகாப்பு விதிகள் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கப் பயன்படுத்தப்படுகின்றன.


சஞ்சார் சாதின் தனியுரிமை கட்டமைப்பு  பற்றி


சஞ்சார் சாதி அணுகக்கூடிய தனிப்பட்ட தரவுகளையும், ஒரு பிரபலமான திறந்த மூல பயன்பாட்டு சோதனை சேவை அது தேடும் அனுமதிகள் குறித்து எழுப்பியுள்ள எச்சரிக்கைகளையும் இங்கே காணலாம்:


ஒரு தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்வது அவசியம். மேலும், பயனர் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் கூட, Android தொலைபேசிகளில் இது தானாகவே நடக்கும்.


பயன்பாட்டின் அம்சங்களைப் பயன்படுத்த விரும்பும் பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி சஞ்சார் சாதி செயலியில் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும். "பயன்பாட்டின்... சேவைகளைப் பயன்படுத்தி மொபைல் எண்ணை அடையாளம் காண" பதிவு அவசியம் என்று செயலியில்   ஒரு குறுஞ்செய்தியை தெரிவிக்கும்.


ஆண்ட்ராய்டு சாதனங்களில், சஞ்சார் சாதி செயலி தானாகவே பதிவு செய்யும். இது உங்கள் தொலைபேசி எண்ணைக் கண்டறிந்து, நீங்கள் எதுவும் செய்யாமலேயே தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)) அமைச்சகத்திற்கு பதிவுச் செய்தியை அனுப்புகிறது. இருப்பினும், iOS சாதனங்களில், பதிவு செய்தியில் அனுப்பு என்பதை கைமுறையாக அழுத்த வேண்டும்; அது தானாகவே நடக்காது. இந்த வேறுபாடு பயன்பாட்டின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளிலிருந்து வருகிறது.


இந்த உத்தரவு சாதன தயாரிப்பாளர்களை கவலையடையச் செய்துள்ளது. ஏனெனில், இதற்கு தொலைபேசியின் இயக்க முறைமையில் பெரிய மாற்றங்கள் தேவைப்படும். இது அரசாங்க ஆதரவு பெற்ற செயலி என்பதால் மக்கள் தனியுரிமை மற்றும் கண்காணிப்பு குறித்தும் கவலைப்படுகிறார்கள். அரசாங்கமும் அதன் நிறுவனங்களும் பெரும்பாலும் இந்தியாவின் தரவுப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து (Data Protection Act) விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. மேலும், சிலர் இதை அரசாங்கம் இணையத்தின் மீது கூடுதல் கட்டுப்பாட்டைப் பெற முயற்சிப்பதாகக் கருதுகின்றனர்.


பயனர்களின் தொலைபேசிகளில் சஞ்சார் சாதி என்ன விதமான தகவலை பெற முடியும்?


Android சாதனங்களில், சஞ்சார் சாதி செயலி பின்வரும் அனுமதிகளைக் கோருகிறது:


தொலைபேசி அழைப்புகளைச் செய்து நிர்வகிக்கவும்: தொலைபேசியில் உள்ள மொபைல் எண்களைக் கண்டறிய அனுமதி கோருகிறது.


குறுஞ்செய்தி அனுப்பவும்: தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்திற்கு தானியங்கி செய்தியை அனுப்பி பதிவை முடிக்க வேண்டும்.


அழைப்பு/குறுஞ்செய்தி பதிவுகள்: சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது செய்திகளைப் புகாரளிக்க பயன்பாட்டிற்கு இவை தேவை.


புகைப்படங்கள் மற்றும் கோப்புகள்: தொலைந்து போன/திருடப்பட்ட தொலைபேசிகளைப் புகாரளிக்கும்போது அழைப்புகள், குறுஞ்செய்தி அல்லது ஆதாரங்களின் ஸ்கிரீன்ஷாட்களைப் பதிவேற்றத் தேவை.


கேமரா: சர்வதேச மொபைல் உபகரண அடையாளம், அல்லது ஒவ்வொரு தொலைபேசிக்கும் ஒரு தனித்துவமான குறியீடு) இன் பார்கோடை ஸ்கேன் செய்து உண்மைத்தன்மையை சரிபார்க்கப் பயன்படுகிறது.


குறிப்பாக, iOS சாதனங்களில், இந்த செயலி தொலைபேசி அழைப்புகளைச் மேற்கொள்ளவும் அவற்றை நிர்வகிக்கவும் மற்றும் தானாகவே குறுஞ்செய்தி அனுப்பவும் அனுமதி கோருவதில்லை. ஒருவேளை இயக்க முறைமைக்குள் இருக்கும் பாதுகாப்புத் தடுப்புகள் காரணமாக இருக்கலாம். ஆப்பிள் கைப்பேசி சாதனங்களில், சஞ்சார் சாதி செயலி புகைப்படங்கள், கோப்புகள் மற்றும் கேமராவை பயன்படுத்த மட்டுமே அனுமதி வழங்குகிறது.


சஞ்சார் சாதியின் தரவு சேகரிப்பு மற்றும் தனியுரிமைக் கொள்கை


சஞ்சார் சாதி ஆண்ட்ராய்டு செயலியை (.apk கோப்பு) திறந்த மூல பயன்பாட்டு சோதனை சேவையான மொபைல் பாதுகாப்பு கட்டமைப்பில் (Mobile Security Framework (MobSF)) பகுப்பாய்வு செய்ததில், பல குறியீடுகள் செயலியை பயனர் தரவு தொடர்பான பல பணிகளை மேற்கொள்ள அனுமதிப்பதைக் கண்டறிந்துள்ளது.


சஞ்சார் சாதி செயலி கேமராவைப் பயன்படுத்தி படங்களையும் வீடியோக்களையும் எடுக்கலாம், அழைப்புப் பதிவுகளைப் படிக்கலாம், வெளிப்புற சேமிப்பகத்திலிருந்து (நினைவக அட்டைகள் போன்றவை) தரவைப் படிக்கலாம் மற்றும் "இந்த தொலைபேசியின் தொலைபேசி எண் மற்றும் வரிசை எண், அழைப்பு செயலில் உள்ளதா, அழைப்பு இணைக்கப்பட்டுள்ள எண் மற்றும் பலவற்றை தீர்மானிக்கக்கூடிய" தொலைபேசி அம்சங்கள் போன்றவற்வை அணுகலாம். மொபைல் பாதுகாப்பு கட்டமைப்பின் (Mobile Security Framework (MobSF)) பகுப்பாய்வின்படி, இந்த அனுமதிகள் அனைத்தும் "ஆபத்தான" வகையின் கீழ் வருகின்றன.


இந்த செயலியின் தனியுரிமைக் கொள்கையின்படி, முதலில் உங்களிடம் சொல்லாமல் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்காது. உங்கள் தரவைக் கேட்டால், அதற்கான காரணத்தை விளக்கி, அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கும் என்று அது கூறுகிறது. சட்ட அமலாக்கத்தால் தேவைப்படும்போது தவிர, பொது அல்லது தனியார் என எந்த மூன்றாம் தரப்பினருடனும் உங்கள்தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களை (personally identifiable information (PII)) பகிர்வதை இந்த செயலி தடை செய்கிறது.


விண்ணப்பம் தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு கோரினால், தகவல் சேகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நோக்கங்களுக்காக தெரிவிக்கப்படும். மேலும், தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கொள்கை கூறுகிறது.


இருப்பினும், பயன்பாட்டின் தனியுரிமைக் கொள்கையில் தனியுரிமைக்கான தொழில்துறை தரமாகக் கருதப்படும் சில கூறுகள் இல்லை. எடுத்துக்காட்டாக, பயனர்களின் உரிமைகள் குறித்த வெளிப்படையான அறிக்கை எதுவும் இதில் இல்லை. பயனர்கள் திருத்தம் கோரவோ அல்லது மிக முக்கியமாக, பயன்பாட்டிலிருந்து தங்கள் தரவை நீக்கவோ அனுமதிக்காது. மேலும், விலகல் வழிமுறையும் இல்லை. தனியுரிமைக் கொள்கையின் அடிப்படையில், அது அணுகக்கூடிய தரவை எவ்வளவு காலம் வைத்திருக்கும் என்பதை தனியுரிமைக் கூறப்பட வில்லை.


ஆப்பிள் மற்றும் கூகுளின் ஆப் ஸ்டோர்களில் (app stores), இந்த செயலி எந்த பயனர் தரவையும் சேகரிக்காது என்று தொலைத்தொடர்பு அமைச்சகம் கூறுகிறது. ஆனால், இது உண்மையல்ல. இந்த செயலி தொலைபேசி எண்கள், புகைப்படங்கள் மற்றும் அழைப்பு அல்லது குறுஞ்செய்தி பதிவுகள் போன்ற தனிப்பட்ட தரவை சேகரிக்கிறது.


Original link:

Sanchar Saathi optional, clarifies Scindia: Understanding key concerns around privacy, user data.


Share:

நமது காலநிலை இலட்சியத்தை அதிகரிப்பதற்கான ஒரு ஏழு அம்சத் திட்டம். -மான்டேக் சிங் அலுவாலியா மற்றும் உத்கர்ஷ் படேல்

 கார்பன் உமிழ்வு எப்போது உச்சத்தை எட்டும் என்பதற்கான தேதியை அறிவிப்பது, கார்பனைக் குறைப்பதற்கான நமது வாக்குறுதியை வலுவாகவும் நம்பகத்தன்மையுடனும் மாற்றும். இந்தியா மூன்றாவது பெரிய உமிழ்ப்பான் என்றும் அதன் உமிழ்வு இன்னும் அதிகரித்து வருகிறது என்றும் உள்ள விமர்சனத்திற்கு பதிலளிக்கவும் இது உதவும்.


2035 வரையிலான காலத்திற்கு பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் புதிய தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை (Nationally Determined Contributions (NDCs)) நாம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விரைவில் இதைச் செய்வோம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். வெறுமனே, இந்தப் புதிய தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDCs)  முழுப் பொருளாதாரத்திற்கும் ஒரு பரந்த மாற்றத் திட்டத்திற்குள் பொருந்த வேண்டும். ஆனால், தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDCs) அந்தப் பெரிய திட்டத்தின் ஒவ்வொரு பகுதியையும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.


இந்தக் கட்டுரையில், நமது எரிசக்தி நிலைமாற்ற (energy transition) உத்திக்கான ஏழு கூறுகளை அடையாளம் காண்கிறோம். இது அடுத்த 10 ஆண்டுகளில் முக்கியமானதாக இருக்கும். மேலும், அது நமது புதிய தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளில் பிரதிபலிக்க வேண்டும்.


முதலாவதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product (GDP)) கார்பன் வெளியேற்ற தீவிரத்தைக் (emissions intensity) குறைப்பதற்கான இலக்கை நாம் உயர்த்த வேண்டும். 2005-ஆம் ஆண்டின் அளவை ஒப்பிடும்போது, 2030-ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கார்பன் வெளியேற்ற தீவிரத்தை 45 சதவீதம் குறைப்பதற்கான முந்தைய இலக்கை நாம் அடைவோம். 2035-ஆம் ஆண்டுக்கான இலக்கு இதை 65 சதவீதம் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் எதிர்பார்க்கப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.6 சதவீதம் ஆகும். இதன் பொருள், இந்தியாவின் மொத்த கார்பன் வெளியேற்றங்களின் அளவு தொடர்ந்து உயரும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் குறைந்துவரும் விகிதத்தில், சுமார் 2035-ஆம் ஆண்டில் உச்சத்தை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கார்பன் வெளியேற்றங்களின் அளவு உச்சத்தை அடையும் தேதியை அறிவிப்பது, கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான (decarbonise) நமது உறுதிப்பாட்டிற்கு நம்பகத்தன்மையை அளிக்கும். இந்தியா மூன்றாவது பெரிய கார்பன் வெளியேற்றுபவராக (emitter) உள்ளது மற்றும் அதன் வெளியேற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்ற விமர்சனத்தை எதிர்கொள்ளவும் இது உதவும் என்றும் எதிர்பார்க்கின்றனர். 


இரண்டாவதாக, 2030-ஆம் ஆண்டுக்குள் புதைபடிவமற்ற எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தியின் திறன், மொத்தத் திறனில் 50 சதவீதம் என்ற முந்தைய இலக்கை நாம் அடைந்திருப்பதால், இப்போது 2035-ஆம் ஆண்டுக்குள் அதன் பங்கை 80 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும். பொருளாதாரம் வேகமாக வளரும் என்றும், மின்மயமாக்கல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், மொத்த மின்சாரத் தேவையின் விரைவான வளர்ச்சியை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். இதன் மூலம் மொத்த உற்பத்தித் திறனை 2035-ஆம் ஆண்டுக்குள் சுமார் 1,600 ஜிகாவாட் (Gigga watt (GW)) அளவிற்குக் கொண்டு செல்ல வேண்டும். இதில், சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திறன் சுமார் 1,200 ஜிகாவாட் (Gigga watt (GW)) அளவில் இருக்கும். எனவே, இந்த ஆதாரங்களில் இருந்து வரும் மின்சாரத்தின் பங்கு தற்போதுள்ள 13.5 சதவீதத்திலிருந்து 2035-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இன்று 1 ஜிகாவாட்டுக்கும் (Gigga watt (GW)) குறைவாக இருக்கும் ஆற்றல் சேமிப்புத் திறன், 2035-ஆம் ஆண்டுக்குள் 170 ஜிகாவாட்டாக (GW) உயர வேண்டும். புதிய சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திறன்களுக்கும் மின்கட்டமைப்பு  உள்கட்டமைப்பை விரிவாக்குவது அவசியமாகும்.


மூன்றாவதாக, நமது புதிய தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDCs) கட்டுப்படுத்தப்படாத நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியைக் கட்டம் கட்டமாகக் குறைப்பதற்கான ஒரு தெளிவான இலக்கை உள்ளடக்க வேண்டும். இது சர்வதேச பேச்சுவார்த்தைகளில் ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்துள்ளது. ஆனால், 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியத்தை (Net Zero) அடைவது என்றால், நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களை படிப்படியாக அகற்ற வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். மொத்த கார்பன் வெளியேற்ற அளவு சுமார் 2035-ஆம் ஆண்டை ஒட்டிய உச்சத்தை எட்டுவதை உறுதி செய்ய, 2030-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய, கட்டுப்படுத்தப்படாத நிலக்கரி மின் நிலையங்கள் எதுவும் தொடங்கப்படக் கூடாது என்று மாதிரி முடிவுகள் பரிந்துரைக்கின்றன. தற்போதுள்ள 255 ஜிகாவாட் (GW) நிலக்கரி உற்பத்தித் திறன் சுமார் 2030-ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு 293 ஜிகாவாட்டாக உயர்ந்து, பின்னர் 2040-ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக 230 ஜிகாவாட்டாகக் குறையலாம் என்று கணக்கிடப்படுகிறது. கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு அமைப்புகள் (carbon capture and storage systems) செலவு-போட்டித்தன்மை கொண்டதாக மாறுவதைப் பொறுத்து, சில நிலக்கரித் திறனை 2070-ஆம் ஆண்டு வரை தக்கவைத்துக் கொள்ளலாம். உள்நாட்டு நிலக்கரிக்கான தேவை 2040-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் குறையத் தொடங்கும் என்பதால், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் போன்ற நிலக்கரி உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு, இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான மறுபயிற்சித் திட்டங்கள், பொருளாதார பல்வகைப்படுத்தல் உத்திகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் குறைந்து வரும் வேலைவாய்ப்புக்கு ஏற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளப் போதுமான கால அவகாசம் உள்ளது.


நான்காவதாக, முக்கிய துறைகளை மின்மயமாக்குவது கார்பன் நீக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். மேலும், இதில் போக்குவரத்துத் துறை மிக முக்கியமானதாக இருக்கும். நாம் 99 சதவீதத்திற்கும் அதிகமான ரயில் பாதைகளை மின்மயமாக்கியுள்ளோம். ஆனால், தற்போது 90 சதவீதத்திற்கும் குறைவான போக்குவரத்து மட்டுமே மின்சாரத்தால் இயக்கப்படுகிறது. ரயில்வே துறை

2035-ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 100 சதவீத மின்சார இழுவைத் திறனை அடைவதை இலக்காகக் கொள்ள வேண்டும். அதாவது, டீசல் என்ஜின்களை படிப்படியாக நீக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள நகர பேருந்து போக்குவரத்துகளில் 50 சதவீதம் மின்சார பேருந்துகளை அடைவதை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும். மின்சார ஆட்டோக்கள் (மூன்று சக்கர வாகனங்கள்) விற்பனை ஏற்கனவே மொத்த ஆட்டோக்கள் விற்பனையில் பாதியைத் தாண்டிவிட்டது. இதை அடுத்த சில ஆண்டுகளுக்குள் 100 சதவீதமாக உயர்த்த முடியும். வாகன உற்பத்தியாளர்களுடன் கலந்தாலோசித்து, பிற வாகன வகைகளுக்கும் மின்சார வாகன விற்பனை இலக்குகளை நிர்ணயிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 


ஐந்தாவது, கார்பன் வரவு வர்த்தகத் திட்டமானது (Carbon Credit Trading Scheme (CCTS)) ஏப்ரல் 2026-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்குகிறது. இது ஒரு முக்கியமான முன்முயற்சியாகும். இந்தத் திட்டத்தை, அனுபவத்தின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் நிறைவில் மறுபரிசீலனை செய்யப்படும் என்பதைக் குறிப்பிட்டு, நமது தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளில் (NDCs) சேர்க்கலாம். காலப்போக்கில், இந்தத் திட்டம் தற்போது விலக்கப்பட்டுள்ள மின்சாரம் போன்ற துறைகளை உள்ளடக்கியவாறு விரிவுபடுத்தப்படலாம். மேலும், இதன் உள்ளடக்கத்தை மத்திய-அளவிலான அலகுகளை (medium-scale units) சேர்ப்பதற்கு வலியுறுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர். கட்டாய அலகுகளுக்கான (obligated units) உமிழ்வு செறிவூட்டல் இலக்குகள் ஆரம்பத்தில் தளர்வாகவே இருக்கும் என்கின்றனர். ஆனால், நாடு நிகர-பூஜ்யம் (net-zero) இலக்கை அடைய வேண்டும் என்பதற்கேற்ப காலப்போக்கில் அவை கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 


ஆறாவதாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் அதிகப் பங்கு, மின்சார உற்பத்தியில் நாளுக்குள் மற்றும் பருவகால அளவில் மிகப் பெரிய ஏற்ற இறக்கங்களைக் குறிக்கும். இது மின்கட்டமைப்பை (grid) நிர்வகிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மின்கலன் மற்றும் நீரேற்று சேமிப்பு உதவும் என்றாலும், மின்சார விலையில் பெரிய மாற்றங்கள் தேவைப்படும். இப்போது நிலையான விலையில் மின்சாரம் வாங்கும் ஒப்பந்தங்களை விட்டுவிட்டு, மொத்த விற்பனை சந்தையில் விலை அதிகமாக ஏறவும் இறங்கவும் அனுமதிக்க வேண்டும். அதாவது, பங்குச் சந்தை போல மின்சாரத்தை நேரடியாக வாங்கவும் விற்கவும் செய்யும் மின்சார பரிவர்த்தனை முறைக்கு மாற வேண்டும். இதனால் வீடுகளிலும் கடைகளிலும் “நாளின் நேரப்படி கட்டணம்” (time-of-day tariff) வரும்.  அதாவது காலையும் மாலையும் விலை அதிகம் மற்றும் நள்ளிரவில் விலை குறைவு என்று மாறும் என்கின்றனர். இதை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், பெரிய விழிப்புணர்வு மற்றும் பொதுமக்கள் ஆதரவு தேவை என்றும் தெரிவிக்கின்றனர். 


ஏழாவதாக, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி மற்றும் சேமிப்புத் திறனில் முன்மொழியப்பட்ட விரிவாக்கம் மற்றும் அதற்கான கட்டமைப்பு வலையமைப்பின்  விரிவாக்கம் கூடுதல் முதலீட்டைக் கோரும் என்கின்றனர். 2026-2035 ஆகிய காலகட்டத்தில் இது ஆண்டுதோறும் $62 பில்லியன் (அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டுக்கு சுமார் 0.84 சதவீதம்) தேவைப்படும் என்று மதிப்பிடுகிறது. இதன் சுமார் 80 சதவீதம் கூடுதல் உள்நாட்டு சேமிப்பு, கூடுதல் தனியார் முதலீடு போன்றவற்றின் மூலம் உள்நாட்டு ஆதாரங்களில் இருந்து வர வேண்டும். மீதமுள்ள 20 சதவீதம், அதாவது ஆண்டுதோறும் சுமார் $12.5 பில்லியன், கூடுதல் தனியார் கடன் மற்றும் பங்குப் பரிமாற்றங்கள் வடிவில் சர்வதேச ஆதாரங்களில் இருந்து வர வேண்டும். ஆபத்துகளைக் குறைப்பதற்கான (risk mitigation) பன்முக வளர்ச்சி வங்கிகளின் (Multilateral Development Banks (MDBs)) விரிவாக்கப்பட்ட கடனுதவியால் இதற்குப் பெரிதும் உதவ முடியும் என்றும் கூறப்படுகிறது. கட்டுரையின் பகுதி 1-ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, தேவையான ஆதரவு சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, இந்தியப் பொருளாதாரம்  வளர்ந்த இந்தியா (விக்சித் பாரத்) பாதையை நோக்கிச் செல்வதாகக் கருதப்பட்டால், இந்தக் குறிக்கோளுக்கு ஆதரவளிக்கப் பெரிய அளவில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்க முடியும் என்கின்றனர்.


மேலே கூறப்பட்டுள்ள  ஏழு அம்ச செயல்திட்டத்தை ஒரு பொருளாதாரம் தழுவிய மாற்றத்திற்கான திட்டமாக விரிவுபடுத்தலாம். அத்தகைய ஒரு உத்தியைச் செயல்படுத்துவதற்கு, ஒன்றிய அரசு, மாநிலங்கள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கைகள் தேவைப்படும். பிரதம மந்திரியின் பருவநிலை மாற்றத்திற்கான கூட்டமைப்பை (Prime Minister’s Council on Climate Change) மீண்டும் செயல்படுத்தி, அதை தேசிய செயல் திட்டத்தை அனுமதிக்கும், பல்வேறு பங்குதாரர்களுடன் அதன் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும்.  அதன் முன்னேற்றத்தை காலமுறையில் ஆய்வு செய்யும், வகையில் அமைக்கப்பட வேண்டும். மேலும், அனுபவம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளின் வெளிச்சத்தில் அதை மாற்றி அமைக்கும் மத்திய அமைப்பாக உருவாக்குவதற்கு வலுவான அடிப்படை உள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகிறது. 


இந்தக் கூறுகளில் சில, பொருத்தமான வடிவில், நமது புதிய தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளாக (Nationally Determined Contributions (NDCs)) சமர்ப்பிக்கப்படலாம். இது கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் (decarbonisation) இந்தியா தொடர்ந்து உறுதியுடன் இருக்கிறது என்ற வலுவான அறிகுறியை உண்டாக்கும். நிதியளிப்புப் பிரச்சினைக்குத் திருப்திகரமான தீர்வு காணப்பட்டால், இந்தக் கூறுகள் சமர்ப்பிப்புக்கு உட்பட்டு உருவாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


அலுவாலியா முன்னாள் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவராகவும், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையத்தின் (Centre for Social & Economic Progress (CSEP)) புகழ்பெற்ற ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார். படேல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையத்தில் (CSEP) ஆராய்ச்சியாளராக  இருக்கிறார்.

Original link:

A seven-point plan to scale up our climate ambition.


Share:

ஐக்கிய நாடுகள் சபையின் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் உடன்படிக்கை (UNCRPD) என்பது என்ன? -ரோஷ்னி யாதவ், குஷ்பு குமாரி

முக்கிய அம்சங்கள்:


— இரத்த உறைவு நோய் (haemophilia) உள்ளவர்களுக்கு நடக்கவோ நகரவோ கடுமையாகச் சிரமம், தொடர்ந்து மருத்துவமனைக்குப் போக வேண்டிய நிலை, எப்போதும் மருந்து-சிகிச்சையைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஆகியவை வருவதால் அவர்களது அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது என்று மனுதாரர்கள் வாதிட்டனர். ஆனாலும், இந்த நோயாளிகளுக்கு இதர மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைக்கும் இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு உரிமைகள் போன்ற சலுகைகள் இன்னும் மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.


— 'மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் (Rights of Persons with Disabilities Act (RPwD)) சட்டத்தின் நோக்கம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தவிர அது ஒரு விலக்கு அல்ல' என்று குறிப்பிட்டதுடன், நீண்ட கால உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. 


— இவை முதல் பார்வையில், குழப்பமாகத் தோன்றலாம். ஆனால், இரத்த உறைவு நோய் (haemophilia) , தலசீமியா (thalassaemia) மற்றும் அரிவாள் செல் நோய் (sickle cell disease) ஆகியவை ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் (RPwD) குறிப்பிடப்பட்டுள்ள 21 குறைபாடுகளுக்குள் பட்டியலிடப்பட்டுள்ளன. சட்டப்பூர்வ அங்கீகாரம் இருந்தபோதிலும் செயல்படுத்தலில் என்ன இடைவெளிகள் நீடிக்கின்றன? மேலும், ஏன் கூடுதல் உள்ளடக்கம் தேவைப்படுகிறது? எனவே, தொடர்ந்து விலக்கு அளிக்கப்படுவது முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது:


— இவற்றை நிவர்த்தி செய்ய, இந்தச் சட்டத்தின் பரிணாமம், அதன் நோக்கம், மற்றும் அது முந்தைய மாற்றுத்திறனாளிகள் சட்டம், 1995-ல் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது  என்பதைப் பரிசீலிக்க வேண்டியது மிகவும் முக்கியம். 


— ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் முழுமையான பங்கேற்பு மற்றும் சமத்துவம் குறித்த பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்ட உடன்படிக்கையை நிறைவேற்றும் விதமாக மாற்றுத்திறனாளிகள் சட்டம், (RPwD) 1995-ஆம் ஆண்டு  இயற்றப்பட்டது.


— இது பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் உடன்படிக்கையை (United Nations Convention on the Rights of Persons with Disabilities (UNCRPD)) 2007-ஆம் ஆண்டு இந்தியா அங்கீகரித்ததைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 மூலம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது.


— 2016-ஆம் ஆண்டு சட்டம் மூன்று முக்கிய வழிகளில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அவை


(i) இது இயலாமை பற்றிய தனிப்பட்ட மருத்துவப் பார்வையிலிருந்து விலகி, சமூக-மருத்துவ மாதிரியை நோக்கி () நகர்ந்தது, இது உடல் குறைபாடுகளை மட்டும் பார்க்காமல், சமூகத் தடைகளே அவர்களின் ஈடுபாட்டைக் கட்டுப்படுத்துகின்றன என்று கருதுகிறது.


(ii) இது, 1995ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ் இருந்த ஏழு குறைபாடுகளில் இருந்து, விரிவான 21 குறைபாடுகள் கொண்ட ஒரு தொகுப்பாக தகுதியை விரிவுபடுத்துவதன் மூலம், சட்டப் பாதுகாப்பின் எல்லையை குறிப்பிடத்தக்க அளவில் விரிவுபடுத்தியது.


(iii) ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் உடன்படிக்கைக்கு (UNCRPD) இணங்க ஒரு உரிமைகள் அடிப்படையிலான சொற்களஞ்சியத்தை இது அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நலன்சார்ந்த சொற்களை சமத்துவம், கண்ணியம் மற்றும் முழுமையான பங்கேற்பு ஆகியவற்றின் நடைமுறைப்படுத்தக்கூடிய உத்தரவாதங்களுடன் மாற்றியமைத்தது.

— இந்தச் சட்டம் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சமத்துவம் மற்றும் பாகுபாடின்மை, சமூகத்தில் வாழும் உரிமை, வன்முறை மற்றும் தவறான பயன்பாட்டிலிருந்து பாதுகாப்பு, உள்ளடக்கிய கல்வி, அணுகக்கூடிய வாக்களிப்பு மற்றும் நீதி பெறுவதற்கான அணுகல் உள்ளிட்ட பல உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தாலும், உரிமைகளில் இன்னும் சமநிலை ஏற்படவில்லை. 


— இவை, குறிப்பிடப்பட்ட குறைபாடுகளில் 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடு உள்ளவர்கள், அதாவது, நிர்ணயிக்கப்பட்ட அளவிலான குறைபாடுள்ள நபர்களுக்காக ஒதுக்கப்பட்டவை ஆகும். அவர்களுக்கு உயர்கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்புகளில் 4 சதவீத இடஒதுக்கீடு மற்றும் 6 முதல் 18 வயது வரை இலவசக் கல்வி ஆகியவை அவர்களின் உரிமைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.


— இருப்பினும், அரசு வேலைகளில் உள்ள 4 சதவீத இடஒதுக்கீடு ஐந்து வகைக் குறைபாடுகளுக்கு மட்டுமே பொருந்தும்: பார்வை இன்மை மற்றும் குறைந்த பார்வை; காது கேளாமை மற்றும் செவித்திறன் குறைபாடு; இயக்கக் குறைபாடு; மன இறுக்கம், அறிவாற்றல் குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு மற்றும் மன நோய்; மேலும், செவித்திறன் மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளிட்ட மேற்கண்ட வகைகளில் இருந்து எழும் பலவகை குறைபாடுகள் ஆகும்.


— இடஒதுக்கீட்டிற்கு யார் தகுதியானவர்கள் என்பதை உற்று நோக்கினால் மூன்று முக்கியப் பிரச்சினைகள் தெரியவருகின்றன. முதலாவதாக, வெளிப்படையாகத் தெரியும் அல்லது பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட குறைபாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால், குறைவாகத் தெரியும். கணிசமான அளவில் இயலாமையை ஏற்படுத்தும் நிலைகள் தவிர்க்கப்படுகின்றன.


— இரண்டாவது, இடஒதுக்கீட்டு அமைப்பு இன்றும் 1995ஆம் ஆண்டு சட்டத்தில் இருந்த பழைய ஏழு வகை குறைபாட்டு வகைகளையே பின்பற்றுகிறது. இது 2016ஆம் ஆண்டு சட்டத்தில் கொண்டு வந்த விரிவான பட்டியலைப் புறக்கணிப்பதாக உள்ளது.


— மூன்றாவதாக, இது ஒரு கட்டமைப்பு ரீதியான இரட்டைப் பாதிப்பை உருவாக்குகிறது: இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் “மருத்துவ ரீதியாக தகுதியற்றவர்” என்று வேலை வாய்ப்பிலிருந்தும் விலக்கி வைக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களுக்கு திறந்த நிலை போட்டியில் நியாயமான வாய்ப்பும் கிடைப்பதில்லை, 40% அல்லது அதிக குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான (Persons with Benchmark Disabilities (PwBD)) இடஒதுக்கீட்டின்கீழ் எந்த உரிமையும் கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.


— அந்த வகையில், இந்த வழக்கானது, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் (RPwD) சட்டத்தின் உரிமைகள் அடிப்படையிலான நோக்கத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்கும் — கண்ணியம் மற்றும் சமவாய்ப்பு ஆகியவை ஒரு குறைபாட்டின் வகை அல்லது தெரிவுநிலையைப் பொறுத்தது அல்ல என்பதை உறுதி செய்வதற்கும் ஒரு முக்கிய வாய்ப்பை வழங்குகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


— சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (International Day of Persons with Disabilities (IDPD)) ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைத் தீர்மானம் 47/3-ஆல் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 1992ஆம் ஆண்டு முதன்முதலில் அனுசரிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டது.


— 2006ஆம் ஆண்டில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்த உடன்படிக்கை (Convention on the Rights of Persons with Disabilities (CRPD)) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 2030ஆம் ஆண்டிற்கான நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளைச் செயல்படுத்துவதன் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்குச் சமமான வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


— 2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் "சமூக முன்னேற்றத்தை முன்னேற்றுவதற்காக மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய சமூகங்களை வளர்ப்பது" (“fostering disability-inclusive societies for advancing social progress.”) என்பதாகும். இதன் பொருள், உலகத் தலைவர்கள் அனைவருக்கும் நியாயமான, உள்ளடக்கிய, சமமான மற்றும் நிலையான ஒரு உலகத்தை உருவாக்குவதற்கான இரண்டாவது உலக சமூக மேம்பாட்டு உச்சி மாநாட்டில் அளித்த வாக்குறுதியை மீண்டும் உறுதிப்படுத்துகிறார்கள் என்பதாகும்.

Original link:

 What is the United Nations Convention on the Rights of Persons with Disabilities (UNCRPD)? 


Share:

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 90-ஐ தாண்டியது : சரிவுக்கு என்ன காரணம்? -ஜார்ஜ் மேத்யூ, சந்தீப் சிங்

 தொடர்ச்சியான டாலர் வெளியேற்றம் மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் நீடித்த தாமதம் போன்றவைகளால் இந்திய ரூபாய் தொடர்ச்சியான அழுத்தத்தை சந்தித்து வருகிறது. எதிர்காலம் குறித்து மற்றும் அதன் விவரம் குறித்து கீழே குறிப்பிட்டுள்ளது,


இந்தியாவின் நாணய மதிப்பு புதன்கிழமை உளவியல் ரீதியாக, டாலருக்கு 90 என்ற அளவை விடக் குறைந்தது. இது, நிதிச் சந்தைகளை உலுக்கியது மற்றும் பரந்த பேரியல் பொருளாதாரம் குறித்த கவலைகளை அதிகரித்தது. இந்த காலாண்டில் ரூபாயின் மதிப்பு 5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்த நிலையில், செவ்வாய்க்கிழமை டாலருக்கு 90 என்ற அளவைவிடக் குறைந்து ஒரு கவலையை ஏற்படுத்தியது. இது ஒரு திடீர் நிகழ்வால் அல்ல, மாறாக காலப்போக்கில் பல அழுத்தங்கள் அதிகரித்து நம்பிக்கையை பலவீனப்படுத்துவதால் ஏற்பட்டது.


மேலோட்டமாக, பேரியல் பொருளாதார பின்னணி ஆதரவாகத் தெரிகிறது. இதனால், கச்சா எண்ணெய் விலைகள் குறைந்துள்ளன. இது இறக்குமதி மசோதாவில் சற்று நிவாரணம் அளிக்கிறது. பணவீக்கம் ஒரு சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. இதனால் வீடுகள் மற்றும் வணிகங்களுக்கான செலவுகள் குறைந்துள்ளன. செப்டம்பர் காலாண்டில் 8.2 சதவீத வலுவான வளர்ச்சியுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக, அத்தகைய வளர்ச்சி ஒரு நாட்டின் நாணயத்தை வலுப்படுத்த வேண்டும். இருப்பினும், இதையும் மீறி இந்திய ரூபாய் தொடர்ந்து அழுத்தத்தை எதிர்கொள்கிறது.


மேலும், இது தொடர்ச்சியான டாலர் வெளியேற்றம் போன்ற காரணிகளால் இயக்கப்படுகிறது. குறிப்பாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (Foreign portfolio investors) லாபத்தை முன்பதிவு செய்து வெளிநாடுகளில் மிகவும் கவர்ச்சிகரமான சந்தைகளுக்கு (attractive markets) மறு ஒதுக்கீடு செய்கிறார்கள். இந்த வெளியேற்றங்கள் பணப்புழக்கத்தை சீராகக் குறைத்து, டாலருக்கான தேவையை

அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் ஏற்படும் தாமதம் இந்தியாவின் வெளிப்புற நிலை குறித்து நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.


தெளிவு இல்லாமல் கடந்து செல்லும் ஒவ்வொரு வாரமும் சந்தை நம்பிக்கையை பலவீனப்படுத்துகிறது. இது எதிர்கால வர்த்தகம், சுங்கவரி போட்டித்தன்மை மற்றும் ஒட்டுமொத்த பணம் செலுத்துகை சமநிலை எதிர்பார்ப்பு (balance-of-payments outlook) பற்றிய கேள்விகளையும் எழுப்புகிறது. இந்திய ரிசர்வ் வங்கியும் ரூபாயை வலுப்படுத்த தீவிரமாக தலையிடவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், இந்த பண்டிகைக் காலத்தில் தங்க இறக்குமதியில் ஏற்பட்ட கடுமையான அதிகரிப்பு ரூபாயின் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக சந்தை பங்கேற்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த அழுத்தங்கள் வலுவான உள்நாட்டு அடிப்படைகளுக்கும், ரூபாயின் இயக்கத்திற்கும் இடையிலான இடைவெளியை ஏற்படுத்தியுள்ளன. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதற்குக் காரணம், உள்நாட்டு பலவீனம் அல்ல, மாறாக உலகளாவிய ஆபத்துக்கான விருப்பம், மாறிவரும் மூலதன ஓட்டங்கள் மற்றும் கொள்கை தெளிவின்மை ஆகியவற்றின் கலவையாகும். இந்த காரணிகள் ஒரே நேரத்தில் நிகழும்போது வலுவான பொருளாதார குறிகாட்டிகளை விட அதிகமாக இருக்கும்.


மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 50% வரிவிதிப்பை அடுத்து ஏற்றுமதிகளை போட்டித்தன்மையுடன் வைத்திருக்க இந்திய ரிசர்வ் வங்கி படிப்படியாக தேய்மானத்தை ஆதரிப்பதாகத் தெரிகிறது. பலவீனமான நாணயம் ஏற்றுமதியாளர்களுக்கு சில ஆதரவை வழங்கக்கூடும் என்றாலும், தலையீட்டிலிருந்து விலகி இருக்க இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவு புத்திசாலித்தனமானது என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், அது அவர்களால் நாணயத்தை செயற்கையாகக் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் முயற்சித்தால், அதிக லாபம் இல்லாமல் தங்கள் இருப்புக்களை குறைக்கலாம்.



இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைகிறதா?


ஒரு நாடு ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதி செய்யும் போது வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுகிறது. வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பது டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு தேய்மானத்திற்கு வழிவகுக்கிறது. ஏனெனில், இந்தியா ஏற்றுமதியிலிருந்து பணம் ஈட்டுவதற்கு பதிலாக இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த அதிக டாலர்கள் தேவைப்படுகின்றன. டாலருக்கான அதிக தேவை ரூபாயின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அதன் மதிப்பைக் குறைக்கிறது.


இந்தியாவின் வர்த்தக நிலையானது நெருக்கடியின் அழுத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இதன் பொருள், வர்த்தகப் பற்றாக்குறை விரிவடையக்கூடும் என்பதற்கான ஆரம்பகால அறிகுறிகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான அமெரிக்காவிற்கான ஏற்றுமதியில் ஏற்பட்ட கடுமையான சரிவு இந்த மாற்றத்திற்கு முக்கிய பங்களிப்பாக உள்ளது. 2025 அக்டோபரில் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 11.8 சதவீதம் குறைந்து, பதினொரு மாதங்களில் இல்லாத அளவுக்கு $34.4 பில்லியனாகக் குறைந்தது. 2024 அக்டோபரில் 16.6 சதவீத வலுவான வளர்ச்சி மற்றும் அதிக வரிவித்ப்புகளுக்கு மத்தியில் இந்த சரிவு ஏற்பட்டது.


பலவீனம் பரந்த அடிப்படையிலானது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் குறைந்ததால் எண்ணெய் ஏற்றுமதி 10.5 சதவீதம் குறைந்து, ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு $3.9 பில்லியனாகக் குறைந்தது. எண்ணெய் அல்லாத ஏற்றுமதிகளும் அவை சிறப்பாகச் செயல்படவில்லை. இது 12 சதவீதம் குறைந்து $30.4 பில்லியனாகவும், பதினொரு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைவாகவும் இருந்தது. பெரும்பாலான முக்கிய ஏற்றுமதிகளும் சரிவைக் கண்டன. மின்னணு பொருட்கள் மட்டுமே வளர்ச்சியடைந்து, 19 சதவீதம் விரிவடைந்தன. கிட்டத்தட்ட ஒவ்வொரு முக்கிய ஏற்றுமதியும் ஆண்டுக்கு ஆண்டு சரிவைக் கண்டன. இவற்றில் பொறியியல் பொருட்கள், இரத்தினங்கள் மற்றும் நகைகள், இரசாயனங்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் அனைத்தும் அடங்கும். எண்ணெய் அல்லாத ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியில் இந்தப் பிரிவுகள் கிட்டத்தட்ட 90 சதவீதத்தைக் கொண்டிருந்தன. இது பலவீனம் எவ்வளவு பரவலாக மாறியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்தாலும், இறக்குமதிகள் எதிர் திசையில் நகர்ந்தன. வணிக இறக்குமதிகள் ஆண்டுக்கு ஆண்டு 16.6 சதவீதம் உயர்ந்தன. அவை 2025 அக்டோபரில் $76.1 பில்லியன் என்ற சாதனை அளவை எட்டின. இது ஒரு வருடத்திற்கு முன்பு $65.2 பில்லியனாக இருந்தது. அக்டோபர் மாதத்தில், பண்டிகைகால மாதமாக தங்கத்தின் இறக்குமதி அசாதாரண உயர்வைக் கண்டது. அவை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த $4.9 பில்லியனுடன் ஒப்பிடும்போது மூன்று மடங்காக அதிகரித்து $14.7 பில்லியனாக உயர்ந்துள்ளது.


இந்தியாவின் வெளிபுறத்துறை அழுத்தத்தில் இருப்பதை இந்த புதிய நிலை காட்டுகிறது. முக்கிய சந்தைகளில் இருந்து தேவை பலவீனமடைந்துள்ளது. அதே நேரத்தில், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான உள்நாட்டு தேவை வலுவாக உள்ளது. வரிச் சூழல் ஏற்றுமதியை குறைந்த போட்டித்தன்மை கொண்டதாக மாற்றுகிறது. இந்தப் போக்குகள் தொடர்ந்தால், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை வரும் மாதங்களில் விரிவடையக்கூடும். இது நாணயத்தின் மீதும் ஒட்டுமொத்த செலுத்துநிலை சமநிலையின் (balance of payment) மீதும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.


அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இன்னும் முடிவடையவில்லை


இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்படாமல் இருப்பதால், சந்தையின் பங்கேற்பாளர்கள் மேலும் கவலையடைந்து வருகின்றனர். ஒப்பந்தம் தொடர்ந்து எட்ட முடியாத நிலையில் இருந்தால், ரூபாய் ஒரு இயற்கையான அழுத்த திருகாக செயல்படக்கூடும். நாணயத்தின் படிப்படியான பலவீனம், இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்கள் உலகளாவிய போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது எதிர்கொள்ளும் சுங்கவரி குறைபாடுகளின் தாக்கத்தை ஓரளவு குறைக்கக்கூடும்.


"இப்போது கவலை நேரத்தைப் பற்றியது மட்டுமல்ல, ஒப்பந்தம் இல்லாதது இறுதியில் வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்குமா என்பதுதான் பெரிய கேள்வி" என்று ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.


நீண்டகால நிச்சயமற்ற தன்மையானது நாணய நிலைத்தன்மை, ஏற்றுமதிக்கான திட்டமிடல் மற்றும் இருதரப்பு பொருளாதார உறவுகளில் ஒட்டுமொத்த நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கவலைப்படுகிறார்கள். தெளிவான அறிவிப்பு வரும் வரை, சந்தை இந்த நிச்சயமற்ற தன்மையை, குறிப்பாக ரூபாயில் பிரதிபலிக்கும்.


டாலர் வெளியேற்றம்


இந்தியாவின் பங்குச் சந்தைகள் கடந்த 14 மாதங்களில் மோசமாகச் செயல்பட்டன. இது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (foreign portfolio investors (FPI)) தங்கள் முதலீடுகளைக் குறைக்க வழிவகுத்தது. பல மாதங்களாக, அவர்கள் தொடர்ந்து இந்திய சொத்துக்களை விற்று வருகின்றனர். இது ரூபாயின் மீது நிலையான கீழ்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஜனவரி 2025 முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPI) உள்நாட்டு பங்குகளில் இருந்து ரூ.1.48 லட்சம் கோடியை திரும்பப் பெற்றுள்ளதாக NSDL தரவு காட்டுகிறது. இது கணிசமான பின்னடைவு ஆகும். இந்தியாவின் பரந்த அளவில் நிலையான பொருளாதார நிலைமைகள் இருந்தபோதிலும் இது நிகழ்ந்திருப்பது இந்தப் போக்கை குறிப்பிடத்தக்கதாக ஆக்குகிறது.


தலைப்புச் செய்திகள் நம்பிக்கையைக் காட்டினாலும், உண்மையான நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. கடந்த ஒரு வருடமாக, முக்கிய உலகளாவிய பங்குச் சந்தைகளில் இந்தியா மிகவும் பலவீனமான செயல்திறன் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. சில நேரங்களில் முக்கிய பங்குச் சந்தைகள் சாதனை உச்சத்தை எட்டின, ஆனால் இது இந்தியாவின் வருமானம் மிக அதிக லாபங்களைக் கண்ட பல சந்தைகளை விட மிகக் குறைவு என்ற உண்மையை மறைக்கிறது. இந்த பெரிய வித்தியாசத்தின் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPI) பெரும்பாலும் மற்ற நாடுகளில் சிறந்த முதலீட்டு வாய்ப்புகளைக் காணும் போதெல்லாம் பணத்தை எடுக்க எளிதான இடமாக இந்தியாவைக் கருதுகிறார்கள் என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


தொடர்ந்து பணம் வெளியேறுவது இந்தியாவின் வெளிப்புற நிதி வலிமையைப் பாதித்துள்ளது. செப்டம்பர் இறுதிக்கும் நவம்பர் 21, 2025 க்கும் இடையில் நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு $12.1 பில்லியன் குறைந்து, மொத்தம் $688.1 பில்லியனாகக் குறைந்தது. இந்த வீழ்ச்சி முக்கியமாக வெளிநாட்டு நாணய சொத்துக்கள் $21.2 பில்லியன் குறைந்ததால் ஏற்பட்டது. தங்க இருப்புக்களின் மதிப்பில் $9.2 பில்லியன் அதிகரிப்பு தாக்கத்தைக் குறைக்க உதவியது, ஆனால் ஒட்டுமொத்த சரிவைத் தடுக்க அது போதுமானதாக இல்லை.


விலை உயர்வுக்கு மத்தியில் தங்க இறக்குமதி அதிகரித்தது


அக்டோபரில் இறக்குமதி அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் தங்கக் கொள்முதல்களில் ஏற்பட்ட அசாதாரண ஏற்றம் ஆகும். தங்க இறக்குமதி மூன்று மடங்காக அதிகரித்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த 4.9 பில்லியன் டாலர்களுடன் ஒப்பிடும்போது முன்னெப்போதும் இல்லாத அளவான 14.7 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இந்த உயர்வுக்கு இரண்டு முக்கிய காரணிகள் இந்த ஏற்றத்திற்கு வழிவகுத்தன. அவை முதலாவதாக, வலுவான பண்டிகை கால கொள்முதல் மற்றும் இரண்டாவது அதிகரித்து வரும் தங்க விலைகள் காரணமாக மக்கள் அதிகமாக வாங்குவது உள்நாட்டு தங்க விலைகள் 10 கிராமுக்கு 1,28,000 ரூபாயைத் தாண்டியுள்ளன.


தங்கத்தைத் தாண்டிய இறக்குமதிகளும் வலுவாகவே இருந்தன. எண்ணெய் அல்லாத, தங்கம் அல்லாத இறக்குமதிகள் ஆண்டுக்கு ஆண்டு 12.4 சதவீதம் அதிகரித்து 46.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்தன. இது வெள்ளி, மின்னணு பொருட்கள், உரங்கள் மற்றும் மின்சாரம் மற்றும் மின்சாரம் அல்லாத இயந்திரங்களுக்கான அதிக தேவையால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டது. இது பண்டிகை நுகர்வு, தொழில்துறை தேவைகள் மற்றும் சரக்கு மறுகட்டமைப்பு ஆகியவற்றின் கலவையை பிரதிபலிக்கிறது. இதற்கு நேர்மாறாக, எண்ணெய் இறக்குமதி 21.7% குறைந்து $14.8 பில்லியனாக இருந்தது. உலகளாவிய எண்ணெய் விலைகள் தணிந்ததால் இது சிறிது நிவாரணம் அளித்தது.


இருப்பினும், இந்த நிலை சவாலாகவே உள்ளது. உலோகங்கள் மற்றும் தங்கத்தின் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவது இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதிக்கான செலவை உயர்த்தியுள்ளது. அமெரிக்காவின் கடுமையான வரிகள் காரணமாக ஏற்றுமதியின் போட்டித்திறன் ஏற்கனவே அழுத்தத்தில் இருக்கும் நேரத்தில் இது நிகழ்ந்துள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு சந்தை உணர்வை, குறிப்பாக இயந்திரங்கள், மின்சார உபகரணங்கள், கனிம எரிபொருள்கள் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் போன்ற இறக்குமதி சார்ந்த துறைகளுக்கு சுமையை ஏற்படுத்தியுள்ளது. அதிக பொருட்களின் விலைகள் மற்றும் மெதுவான ஏற்றுமதி வளர்ச்சி ஆகியவை இந்தியாவின் வெளித் துறையை குறிப்பிடத்தக்க அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், உள்நாட்டு தேவை வலுவாக உள்ளது.


எல்லாவற்றிற்கும் மேலாக, உயர்ந்து வரும் தங்கத்தின் விலைகளும் அதன் விளைவாக இறக்குமதிகளில் ஏற்பட்ட அதிகரிப்பும் இந்தியாவின் வர்த்தக இயக்கவியலை வடிவமைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக மாறியுள்ளன. அவை, நாணயத்தின் மீதான அழுத்தங்களை அதிகரிக்கின்றன மற்றும் வளர்ந்து வரும் வர்த்தக பற்றாக்குறை குறித்த கவலைகளை எழுப்புகின்றன.


இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது?


இந்திய ரிசர்வ் வங்கி வேண்டுமென்றே ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைய அனுமதிக்கிறதா என்பதுதான் இப்போது சந்தையில் உள்ள முக்கிய கேள்வியாக உள்ளது. பொருளாதார வல்லுநர்கள் இது குறித்து வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். "இந்திய ரிசர்வ் வங்கி ரூபாயின் மதிப்பைக் குறைக்கவில்லை" என்று ஒரு வெளிநாட்டு வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் குறிப்பிட்டார். "நாம் பார்ப்பது உலகளாவிய மாற்றங்கள் மற்றும் இந்தியாவின் சொந்த பெரிய பொருளாதார இயக்கவியலின் பிரதிபலிப்பாகும். மத்திய வங்கி ஒரு குறிப்பிட்ட மாற்று விகிதத்தை இலக்காகக் கொள்ளாமல், நிலையற்ற தன்மையைக் குறைக்க டாலர்களை விற்று வருகிறது" என்றார்.


அப்படியிருந்தும், சமீபத்திய வாரங்களில் ஏற்றுமதியை போட்டித்தன்மையுடன் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்பட்ட தலையீடு ரூபாயின் சரிவின் வேகத்திற்கு பங்களித்துள்ளது. வெள்ளிக்கிழமை கொள்கை மறுஆய்வு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நாணயத்தைப் பாதுகாப்பதில் மத்திய வங்கி உறுதியான நிலைப்பாட்டை வரையறுக்க விரும்புகிறதா என்பது குறித்த அறிக்கைகளை வர்த்தகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். தொழில்நுட்ப ரீதியாக, ரூபாய் மதிப்பு அதிகமாக விற்கப்படுவதாகத் தெரிகிறது. மேலும், எந்தவொரு அர்த்தமுள்ள மீட்சிக்கும் 89.80 ரூபாய்க்கு மேல் நிலையான உயர்வு தேவைப்படும்.


பாங்க் ஆஃப் பரோடாவின் (Bank of Baroda) தலைமைப் பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ், ஏற்றுமதியாளர்கள் பின்வாங்கும்போது இறக்குமதியாளர்கள் அவசரமாக வருகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறார். "டாலர் குறியீடு 100-க்கும் குறைவாக உள்ளது. எனவே, ரூபாய் உறுதியாக இருக்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி தலையீடு குறித்து அமைதியாக இருப்பது போல் தெரிகிறது," என்று அவர் கூறினார்.


"இவை அனைத்தும் ரூபாயை கீழே தள்ளும் உணர்வை அதிகரிக்கின்றன. இந்த சரிவு ஏற்றுமதியாளர்களுக்கு சிறிது உதவும். ஆனால் இது இறக்குமதியாளர்களுக்கோ அல்லது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கோ நல்லதல்ல. எந்தவொரு டாலர் விற்பனையும் பணப்புழக்கத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். சர்வதேச நாணய நிதியம் (IMF) சில காலத்திற்கு முன்பு ரூபாய் நகர்வு பற்றி கருத்து தெரிவிக்கிறது. எனவே, இது ஒரு சுவாரஸ்யமான சூழ்நிலை," என்று சப்னாவிஸ் கூறினார். ரூபாய் மதிப்பு குறைவது ஏற்றுமதியாளர்களுக்கு ஓரளவு நன்மையை அளித்தாலும், அது இறக்குமதியாளர்களை பாதிக்கிறது மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்க அபாயத்தை அதிகரிக்கிறது.


தலையீட்டிற்கு இந்திய ரிசர்வ் வங்கி கவனமாக, "மென்மையான" அணுகுமுறையை எடுத்து வருவதாகத் தெரிகிறது. அஅதன் முன்னோக்கிய கணக்கு, கடல்கடந்த வழங்க முடியாத முன்னோக்கிய கணக்குகள் உட்பட, ஏற்கனவே கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது அதன் வளங்களைப் பாதுகாத்து வரக்கூடும் என்பதைக் குறிக்கிறது. ரூபாயை வலுவாகப் பாதுகாப்பதற்குப் பதிலாக, மத்திய வங்கி அதன் கருவிகளை கவனமாகப் பயன்படுத்துவது போல் தெரிகிறது. நிலையற்ற தன்மை ஒழுங்கற்றதாக மாறத் தொடங்கும் போது மட்டுமே அது நடவடிக்கை எடுக்கிறது.


இப்போதைக்கு, இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தி ஒரு சமநிலைப்படுத்தும் செயலை பரிந்துரைக்கிறது. ரூபாயின் வீழ்ச்சி சீர்குலைக்கும் வகையில் மாறினால் தலையிடத் தயாராக இருக்கும்போது சந்தை அதன் நிலையைக் கண்டறிய அனுமதிக்கிறது.




ரூபாய் எங்கே செல்கிறது?


ரூபாயின் இயக்கம் குறித்த தெளிவான பார்வைக்காக சந்தை காத்திருக்கிறது. வெள்ளிக்கிழமை பணவியல் கொள்கையை அறிவிக்கும் போது இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இதை வழங்குவார்.


பெடரல் வங்கி தனது விகிதக் குறைப்புகளைத் தொடர்ந்தால் 2026ஆம் ஆண்டில் டாலர் பலவீனமடையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் ரூபாய் மதிப்பு வலுப்பெறுமா? அது அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் முடிவு, தங்கத்தின் இறக்குமதியின் போக்கு மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்தது. இந்தியாவின் உள்நாட்டு பங்குச் சந்தை செயல்திறனும் ஒரு பங்கை வகிக்கும். ஏனெனில், வலுவான சந்தைகள் பங்குகளில் அதிக நிதியை ஈர்க்கக்கூடும். இந்தக் கேள்விகள் இன்னும் திறந்தே உள்ளன. இன்னும் தெளிவான பதில்கள் இல்லை.


"ரூபாய் ஒரு அளவைக் கடந்து 2-3 நாட்கள் அங்கேயே இருந்தால், அது புதிய அளவுகோலாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம். சந்தை 91 ரூபாய் மதிப்பைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் கொள்கை அறிவிப்புக்கு பிறகு, அது 88-89 ரூபாய்க்கு மீண்டும் சரிந்துவிடும் என்று நாங்கள் நினைக்கிறோம்" என்று சப்னாவிஸ் கூறினார்.


ஆய்வாளர்கள் மற்றும் சந்தைகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். மேலும், நிலையான முடிவை அவர்கள் எதிர்பார்க்கின்றன.


Original link:

Rupee breaches the 90-mark: What’s driving the slide against the dollar


Share: