புலப்படாத டிஜிட்டல் தரவுப் போக்குவரத்தைக் கண்காணித்தல். -எஸ்.வி. ராகவன்

இந்தியாவின் முக்கிய உள்கட்டமைப்புகளுக்குப் பொருளாதார இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு டிஜிட்டல் எல்லைச்சுவர் தேவைப்படுகிறது.


இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற தனது இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டின் மிக முக்கியமான அமைப்புகளில் ஒரு மறைமுகமான பலவீனம் வெளிப்பட்டு வருகிறது. குடிமக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (Digital Personal Data Protection Act (DPDP)) போன்ற முக்கிய சட்டங்களை இந்தியா கொண்டாடி வருவது முற்றிலும் சரியானதே ஆகும்.


இருப்பினும், நமது நாட்டின் மின்சாரம், ரயில் போக்குவரத்து மற்றும் வங்கிகள் போன்ற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் மிக முக்கியமான, பலத்த பாதுகாப்புடைய கட்டமைப்பு வசதிகளுக்குள் இன்னும் ஒரு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதுதான் 'கண்காணிக்கப்படாத திறன்பேசிகள்' (Unmonitored smartphones). பல ஆண்டுகளாக, இத்தகைய முக்கியமான உள்கட்டமைப்புகள் தங்களின் பாதுகாப்பிற்காக ‘Air gap’ என்ற பாதுகாப்பு முறையையே பெரிதும் நம்பியிருந்தன.


Air gap: இது கணினித் துறையில் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்பு முறையாகும். ஒரு முக்கியமான கணினி அல்லது  இணைய அமைப்பில் முடக்குநர்கள் ஊடுருவக் கூடாது என்பதற்காக, அதை இணையத்துடனோ அல்லது பிற பொதுவான இணைய அமைப்புகளுடனோ இணைக்காமல் முற்றிலும் தனிமைப்படுத்தி வைத்திருக்கும் தொழில்நுட்ப முறைக்கு 'Air gap' என்று பெயர்.


இதன் யோசனை மிகவும் எளிமையானது: முக்கியமான செயல்பாட்டு கணினி ஒன்று இணையத்துடன் இணைக்கப்படாமல், தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தால், அதை யாராலும் சட்டவிரோதமாக ஊடுருவ (Hack) முடியாது. ஆனால், இன்றைய டிஜிட்டல் உலகில் இந்த பாதுகாப்பு மட்டுமே போதுமானதாக இல்லை. இப்போது இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல், எங்கோ தூரத்திலிருந்து ஒரு சட்டவிரோத ஊடுருவல் நிறுவனத்தின் பாதுகாப்பு தடுப்பை (Firewall) உடைக்க முயற்சிப்பது மட்டுமல்ல; மாறாக, அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பான கணினிகளுக்கும், ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பார்வையாளர்கள் கையில் வைத்திருக்கும் தனிப்பட்ட திறன்பேசிகளுக்கும் இடையே தங்களுக்குத் தெரியாமலேயே தகவல்கள் பரிமாறப்படுவதுதான் தற்போது மிகவும் ஆபத்தான விஷயமாக உருவெடுத்துள்ளது.


தரவுக் கசிவுகள்


இது கொள்கை வல்லுநர்கள் 'ஊடகங்களுக்கு இடையேயான' பாதுகாப்பு நெருக்கடி என்று அழைக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. ஒரு மின்சார விநியோக மையத்தின் உயர்அதிகாரி அல்லது ஒரு வங்கிக் கிளையின் வாடிக்கையாளர் மேலாளரை உங்கள் கற்பனையில் நினைத்துப் பாருங்கள். அவர்கள் மிகவும் பாதுகாப்பான ஒரு நிறுவனக் கணினியில் வேலை செய்கிறார்கள். அவர்கள் அங்கிருந்தபடி, முக்கியமான செயல்பாட்டுத் தரவுகளையோ அல்லது வாடிக்கையாளர்களின் கோப்புகளையோ வெளிநபர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முயன்றால், அந்தப் பாதுகாப்பு அமைப்பு உடனடியாக அந்த முயற்சியைத் தடுத்து, எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்யும்.

இருப்பினும், அந்த கணினிக்கு அருகிலேயே அவர்களுடைய சொந்த திறன்பேசியும் இருக்கிறது. அது வணிகரீதியான ஒரு பொதுவான 5G இணைய சேவை வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த நபர் கணினித் திரையை அப்படியே ஒரு புகைப்படம் எடுத்தாலோ, அல்லது ஏதேனும் ஒரு தனிப்பட்ட குரலை உரையாக மாற்றும் செயலியில் (Voice-to-text app) முக்கியமான நிதித் தகவல்களைப் பேசினாலோ, அந்தத் தரவுகள் ஏற்கனவே கசிந்துவிட்டன என்றுதான் அர்த்தம். அதாவது, அந்தத் தகவல் மிகவும் பாதுகாப்பான மற்றும் விதிகளுக்குட்பட்ட ஒரு டிஜிட்டல் அமைப்பிலிருந்து, கண்காணிக்கப்படாத ஒரு தனிப்பட்ட முறைக்கு மாறிவிடுகிறது.


ஒரு தனியார் தொலைத்தொடர்பு இணைய சேவை வழியாக தரவுகள் வெளியேறுவதால், நிறுவனங்களின் இணைய அமைப்பால் இந்தத் தகவல் கசிவைக் கண்டறிய முடிவதில்லை. இது வெறும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல; இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை நேரடியாகப் பாதிக்கிறது. இந்தியாவில், ஒரு நிறுவனத்தின் தரவுக் கசிவால் ஏற்படும் சராசரி இழப்புச் செலவு சமீபத்தில் ₹22 கோடி என்ற அளவாக உயர்ந்துள்ளது. ஒரு பெரிய மின்சாரக் கட்டமைப்பு அல்லது வங்கி இணைய அமைப்பு இத்தகைய தரவுக் கசிவால் முடங்கும்போது, அதனால் ஏற்படும் உற்பத்தித்திறன் பாதிப்பு ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலி முழுவதும் பரவி, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியைக் குறைக்கிறது.


ஆண்டுக்கு 7 முதல் 8 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள இலக்கு வைத்துள்ள ஒரு நாட்டிற்கு, கண்காணிக்கப்படாத டிஜிட்டல் தரவுக் கசிவுகள் ஒட்டுமொத்தத் தொழில்துறையையும் சீர்குலைக்க அனுமதிப்பது, இந்தியா தாங்கிக்கொள்ள முடியாத ஒரு பெரும் இழப்பாகும்.


தனியுரிமைச் சட்ட குறைபாடு


அரசாங்கங்களோ அல்லது நிறுவனங்களோ இந்தச் சாதனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முயலும் போது, அவை பெரும்பாலும் சில குறிப்பிட்ட நலன் சார்ந்த குழுக்கள் மற்றும் தனிமனித உரிமை ஆர்வலர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்கின்றன. ஒரு ஊழியரின் சொந்தச் சாதனம் (Personal device) என்பது அவருடைய தனிப்பட்ட சொத்து என்றும், அதைக் கண்காணிப்பது ஒருவரது தனிப்பட்ட உரிமையில் தேவையில்லாமல் தலையிடும் அல்லது ஊடுருவும் செயல் என்றும் வாதிடுகின்றனர்.


இருப்பினும், இந்த முழுமையான தனியுரிமைப் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பிற்கும் பொருளாதார நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் எதிரி நாடுகளாலோ அல்லது சமூக விரோதிகளாலோ நாளுக்கு நாள் அதிகமாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழில்நுட்பத் திறன் கொண்ட தாக்குநர்கள் (Attackers), தங்களின் தனியுரிமைக்கான இந்த வாதங்களையே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, யாரும் கண்காணிக்க முடியாத 'தற்காலிகப் பயன்பாட்டு' ரக (Burner) திறன்பேசிகளை மிகவும் பாதுகாப்பான மற்றும் முக்கியமான பணியிடங்களுக்குள் எடுத்துச் செல்கிறார்கள். ஊழியர்களின் சொந்தத் தனிப்பட்ட சாதனங்களைக் கண்காணிக்கக் கூடாது என்று நிறுவனங்கள் அறிவுறுத்தப்படுவதால், இந்தத் திறன்பேசிகள் அந்தப் பாதுகாப்பான வளாகங்களுக்குள்ளேயே யாருக்கும் தெரியாத மறைமுக இணைய இணைப்புகளாக மாறிவிடுகின்றன.


நிறுவனத்திற்கு உள்ளே இருப்பவர்களே ரகசியத் தரவுகளை எளிதாகப் புகைப்படம் எடுத்து, அவற்றை தங்களின் சொந்த தனிநபர் மேகக்கணிமை சேமிப்பகம் (Private cloud storage) பதிவேற்றிவிட முடியும். இந்தத் தரவுகள் அனைத்தும் அவர்களின் சொந்த திறன்பேசியின் இணைய அமைப்பு மூலமாக அனுப்பப்படுவதால், நிறுவனத்தின் பாதுகாப்புப் குழுவால் இந்தத் தரவுப் பரிமாற்றத்தைக் கண்டறியவோ, தடுக்கவோ அல்லது அது எங்குச் சென்றது என்று கண்காணிக்கவோ முடியாது.


இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: தனிமனித தனியுரிமைக்கான உரிமை (Right to personal privacy), ஒரு நாட்டின் சொத்திலிருந்து முக்கியமான தரவுகளையும் பொருளாதார மதிப்பையும் இரகசியமாகத் திருடிச் செல்லக்கூடிய, அரசாங்கத்தால் கண்காணிக்கப்படாத ஒரு சாதனத்தை தங்களோடு எடுத்துச் செல்வதற்கான உரிமையையும் உள்ளடக்கியதா?





கண்காணிப்பிலிருந்து பாதுகாப்பு வரை


நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கம் ஒரு எளிய ஆனால் மிக முக்கியமான ஒழுங்குமுறை மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அதன்படி, அனைத்து முக்கியமான உள்கட்டமைப்பு நிறுவனங்களும் தங்களது வளாகத்திற்குள் பயன்படுத்தப்படும் தனிப்பட்ட மற்றும் தற்காலிக சாதனங்களுக்காக 'மத்தியக் கட்டுப்பாட்டு அணுகல் வலையமைப்பு' (Centrally Managed Access Network (CMAN)) எனப்படும் பிரத்யேக மற்றும் அதிவேகப் பாதுகாப்பு கொண்ட பெருநிறுவன வைஃபை (WiFi) வசதியை வழங்குவதைக் கட்டாயமாக்க வேண்டும்.


திறன்பேசிகளுக்கு நடைமுறைக்குச் சாத்தியமில்லாத தடைகளை விதிப்பதற்கோ அல்லது அவற்றால் ஏற்படும் ஆபத்துகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதற்கோ பதிலாக, நிறுவனங்கள் இந்தச் சாதனங்களை ஒரு நிர்வகிக்கப்படும் டிஜிட்டல் வலையமைப்புடன் இணைக்க வேண்டும். இது விமான நிலையத்தில் உள்ள உலோகத்தைக் கண்டறியும் கருவி (metal detector) அல்லது வங்கியின் பாதுகாப்புப் பெட்டக (Bank vault) அமைப்பு செயல்படுவதைப் போன்றதாகும். இத்தகைய நிர்வகிக்கப்படும் இணையதள அமைப்பு, ஒரு ஊழியரின் தனிப்பட்ட உரையாடல்களையோ அல்லது செய்திகளின் உள்ளடக்கங்களையோ கண்காணிக்காது.


மாறாக, இந்தத் தொழில்நுட்பம் ஒரு சாதனம் எந்த இணையதளத்துடன் அல்லது கணினி வழங்ககத்துடன் (Server) இணைக்க முயற்சிக்கிறது என்பதை மட்டுமே சரிபார்க்கிறது. உதாரணமாக, ஒரு வங்கியின் கருவூலத் துறைக்குள் (Treasury department) இருக்கும் ஒரு சாதனம், மற்றொரு நாட்டில் உள்ள தீங்கிழைக்கும் ஒரு சர்வருடன் இணைக்க முயன்றால், இந்த இணைய அமைப்பு அந்த இணைப்பைத் தடுத்து, பாதுகாப்புப் பிரிவினருக்கு உடனே எச்சரிக்கை செய்கிறது. இந்த அமைப்பினால் கிடைக்கும் நன்மைகள், இதனால் எழும் தனியுரிமை சார்ந்த கவலைகளைவிடப் பல மடங்கு அதிகம். மேலும், ஊழியர்களின் தனிப்பட்ட திறன்பேசிகளில் அவர்களது செயல்பாடுகளைக் கண்காணிக்கும் செயலிகளை கட்டாயமாக நிறுவச் சொல்லும் பல தற்போதைய நிறுவன நடைமுறைகளைவிட, இந்த முறை ஊழியர்களின் தனியுரிமையைச் சிறந்த முறையில் பாதுகாக்கிறது.

ஒரு நிர்வகிக்கப்பட்ட வலையமைப்பு மூலம், கண்காணிப்பு என்பது பணியிடம் மற்றும் அதன் குறிப்பிட்ட வரம்பிற்குள் மட்டுமே செயல்படும். பணியாளர் அந்த அலுவலக வளாகத்தைவிட்டு வெளியேறிய உடனேயே, அந்தச் சாதனத்தில் என்னென்ன செயல்பாடுகள் நடக்கின்றன என்பதை நிறுவனத்தால் பார்க்க முடியாது.


அந்நிய நேரடி முதலீட்டை தடையின்றி அனுமதித்தல்


பாதுகாப்பை மேம்படுத்துவதைத் தாண்டி, இந்த எளிய கொள்கை ஒரு மிகப்பெரிய பொருளாதார நன்மையையும் வழங்குகிறது. இது அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்க்கக்கூடியது. உலகளாவிய முதலீட்டாளர்கள் பொதுவாக ஆபத்துகள் அல்லது நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். சர்வதேச நிறுவனங்களும் அரசாங்கங்களின் இறையாண்மை நிதி அமைப்புகளும் இந்தியாவின் உற்பத்தி, எரிசக்தி மற்றும் நிதித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும்போது, 'இணையவழித் தாக்குதல்களில் இருந்து தப்பித்து மீளும் திறன்' (Cyber resilience) என்பது அவர்களின் முதலீட்டு முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாக மாறியுள்ளது.


இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம், இந்தியாவின் முக்கிய உள்கட்டமைப்புகள் அனைத்தும் "வடிவமைப்பிலேயே பாதுகாப்பானவை" என்பதை இந்தியா உலகிற்கு நிரூபிக்க முடியும். ஒரு கட்டாய டிஜிட்டல் பாதுகாப்பு எல்லையை உருவாக்குவது, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையைத் தரும்; அதாவது, அவர்களுடைய அறிவுசார் சொத்துக்கள், நிதி வழிமுறை அமைப்புகள் (Financial algorithms) மற்றும் விநியோகச் சங்கிலி வலையமைப்புகள் போன்றவை நிறுவனத்திற்குள்ளே இருக்கும் அச்சுறுத்தல்களிலிருந்தும்,                      தரவு கசிவுகளிலிருந்தும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. இது எளிதாக வணிகம் செய்வதற்கான உலகளாவிய தரவரிசையில் இந்தியாவின் இடத்தை மேம்படுத்த உதவும். மேலும், ஒரு வலுவான இணையப் பாதுகாப்பை இந்தியாவின் தனித்துவமான போட்டியாளர்களைவிட கூடுதல் சாதகமாக மாற்றி, மற்ற நாடுகளுக்குச் செல்லவிருக்கும் பில்லியன் கணக்கான டாலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDI) இந்தியாவை நோக்கி ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


அடுத்தகட்ட நடவடிக்கை


அரசாங்கம் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை உருவாக்கும் வழிமுறைகள் மூலமாகவே, உடனடியாக இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். சிறிய ஆனால் மிகவும் முக்கியமான மாற்றங்களை, வரவிருக்கும் 'டிஜிட்டல் இந்தியா சட்டம்' (Digital India Act) அல்லது மேம்படுத்தப்பட்ட தேசிய இணையப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களில் (National cybersecurity guidelines) சேர்த்துக் கொள்ள முடியும். முக்கியமான மற்றும் பாதுகாப்பான அரசு நிறுவனங்களின் உள்ளே இருக்கும் கம்பியில்லா இணையக் கட்டமைப்பை (Wireless network), நாட்டின் தேசியப் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாகக் கருதுவதன் மூலம், அந்த வலையமைப்பில் நடக்கும் தரவுப் போக்குவரத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தேவையான அடிப்படைத் தகுதியை அரசாங்கம் கட்டாயமாக்க முடியும்.


தகவல்கள் பரிமாறப்படும் பணியிடத்திலேயே தகவல்களின் பரிமாற்றத்தைத் துல்லியமாகக் கட்டுப்படுத்துவதன் மூலம், நாம் ஒரு வலுவான பாதுகாப்பு அமைப்பை உருவாக்க முடியும். இது அதற்கு மேல் உள்ள அனைத்துப் பாதுகாப்பையும் பலப்படுத்துகிறது. இந்த நடைமுறையானது, நிறுவனத்திற்குள்ளேயே இருந்து வரும் அச்சுறுத்தல்களைத் தடுக்கவும், வெளிநாட்டு எதிரிகள் தனிநபர்களின் திறன்பேசிகளைப் பயன்படுத்தி உளவு பார்ப்பதைத் தடுத்து நிறுத்தவும், இந்தியாவின் பொருளாதார உற்பத்தியைப் பாதுகாக்கவும் பெரிதும் உதவுகிறது.


நாம் எதை கவனிக்காமல் விடுகிறோமோ, அதை நம்மால் பாதுகாக்க முடியாது. தனிநபர் சாதனங்களிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறும் இந்த மறைமுகத் தரவுப் போக்குவரத்தை, ஒரு முறையான வலையமைப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதன் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பாதுகாப்பு இடைவெளிகளில் ஒன்றை நம்மால் சரிசெய்ய முடியும். டிஜிட்டல் எல்லைகளைக் கட்டுப்படுத்துவது என்பது இனி வெறும் தொழில்நுட்பம் சார்ந்த தேவை மட்டுமல்ல; அது இந்தியாவின் தேசியப் பொருளாதார இறையாண்மையின் ஒரு முக்கியக் காரணி ஆகும்.


கட்டுரையாளர், இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் முன்னாள் அறிவியல் செயலாளர் ஆவார்.


Original Link: Monitoring invisible digital traffic.

Share:

இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பில் ஈரானிய கச்சா எண்ணெயின் பங்கு என்ன? -பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள்:


• ஈரான் நாட்டுத் துறைமுகங்கள்மீது விதித்திருந்த கடற்படை முற்றுகையை நீக்குவதற்கும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. பல ஆண்டுகளாகத் தங்களது கச்சா எண்ணெய் பெரும்பாலும் சீனாவிற்கு மட்டுமே விற்கப்பட்டு வந்த நிலையில், அமெரிக்காவின் இந்த முற்றுகை நீக்கம் மற்றும் பொருளாதாரத் தடைகளில் இருந்து அளிக்கப்பட்டுள்ள விலக்கு ஆகியவை, தங்கள் நாட்டு எண்ணெயை உலகளாவிய சந்தைக்கு ஏற்றுமதி செய்ய உதவும் என்று ஈரான் எதிர்பார்க்கிறது.


• ஈரான் மீதான தடைகளில் இருந்து அளிக்கப்பட்டுள்ள இந்த விலக்கு,                ஒரு காலத்தில் ஈரானிய கச்சா எண்ணெய்யை பெருமளவில் இறக்குமதி செய்து வந்த இந்தியாவிற்கு, மீண்டும் அங்கிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கத் தொடங்குவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தபடி, ஈரானின் தேசிய எண்ணெய் நிறுவனம் (National Iranian Oil Company (NIOC)) இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட சர்வதேச எண்ணெய் நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளது. தங்களுடனான வணிகத் தொடர்புகளை மீண்டும் தொடங்குவதற்கும், இதுகுறித்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதற்கும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


• இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்புத் துறை வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின்படி, இந்திய நிறுவனங்கள் ஈரான் தரப்புடன் தொடர்பில் இருந்து வருகின்றன. மேலும், அமெரிக்கா வழங்கியுள்ள சிறப்பு விலக்கின்கீழ், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியிலான சாத்தியக்கூறுகள் குறித்து இருதரப்பும் ஆலோசித்து வருகின்றன.


• ஒரு குறிப்பிட்ட கச்சா எண்ணெய் இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்குத் தொழில்நுட்ப ரீதியாகப் பொருந்துமா மற்றும் அதை விலைக்கு வாங்குவது வணிக ரீதியாகவும், போக்குவரத்து ரீதியாகவும் சாத்தியமான ஒன்றுதானா என்பதைத் தீர்மானிப்பதற்காக நடத்தப்படும் ஒரு விரிவான மதிப்பீடே தொழில்நுட்ப-வணிகச் சாத்தியக்கூறு ஆய்வு (Techno-commercial feasibility study) ஆகும்.


• எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தள்ளுபடி விலையிலான கச்சா எண்ணெய் வர்த்தகத்தைப் பயன்படுத்திக் கொள்வதால், அடுத்த இரண்டு மாதங்களில் சில ஈரானிய கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வந்தடைய வாய்ப்புள்ளது. இருப்பினும், தற்போதைக்கு பெரிய அளவிலான இறக்குமதிகள் இருக்காது என்றே தொழில்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.


• இந்த அமைதி ஒப்பந்தம் மிகவும் பலவீனமான ஒன்றாக இருப்பதாலும், ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் எதிர்காலம் குறித்து நீண்டகாலத்திற்குத் தெளிவான சூழல் இல்லாததாலும், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தற்காலிக விலக்கு கிடைத்தாலும்கூட, ஈரான் எண்ணெய் வர்த்தகத்தில் வழக்கமாக எதிர்கொள்ளப்படும் போக்குவரத்து மற்றும் பணம் செலுத்துதல் தொடர்பான சிக்கல்கள் சீராகுமா என்பதும் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.


• ஈரான் நாட்டின் கச்சா எண்ணெயை வாங்கத் திட்டமிடும் சுத்திகரிப்பு நிறுவனங்கள் முக்கியமாக மூன்று காரணிகளைக் கருத்தில் கொள்கின்றன, அவை: பொருளாதாரத் தடைகளில் இருந்து அளிக்கப்படும் விலக்கு எவ்வளவு காலம் நீடிக்கும், அதன் விலை மற்றும் தள்ளுபடிகள், மற்றும் பணம் செலுத்துதல், காப்பீடு, கப்பல் போக்குவரத்துத் தொடர்புகள் ஆகியவை ஆகும். இந்த மூன்றில், பணப் பரிவர்த்தனை செய்வதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும், என்று கச்சா எண்ணெய் மற்றும் வணிகச் சந்தை ஆய்வு நிறுவனமான கெப்ளரின் (Kpler) சுத்திகரிப்புப் பிரிவு மேலாளர் சுமித் ரிடோலியா கூறினார்.


• ஈரானின் பெட்ரோலியத் துறை மட்டுமன்றி, அதன் நிதித் துறையும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான பணப் பரிவர்த்தனை மற்றும் இதர விநியோக நடைமுறைகளில் பெரிய சிக்கல்கள் ஏற்படுகின்றன.                 இந்தச் சிக்கல்களில் தெளிவான தீர்வு கிடைத்த பிறகே, ஈரானிய எண்ணெயை இறக்குமதி செய்வது குறித்து முடிவு செய்ய முடியும் என்று இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் உயர்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகளுக்கு ஈரான் ஆளாகிவிடக் கூடாது என்பதற்காகவே, அமெரிக்கத் தடைகளின்கீழ் உள்ள நாடுகளிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதை இந்திய நிறுவனங்கள் தவிர்க்கின்றன.


உங்களுக்குத் தெரியுமா?


• மேற்காசியப் போரின்போது ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீது அமெரிக்கா ஒரு மாதகால விலக்கு அளித்திருந்தது. அந்த ஒருமாத காலத்தில் இந்தியா வாங்கிய எண்ணெயின் அளவை வைத்துப் பார்க்கும்போது, ஈரான் நாட்டில் இருந்து இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியை உடனடியாகவோ அல்லது வேகமாவோ அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


• ஏறத்தாழ ஏழு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் மீண்டும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கியுள்ளன. இருப்பினும், வணிகத் தகவல் மற்றும் புள்ளியியல் பொது இயக்குநரகத்தின் (Directorate General of Commercial Intelligence and Statistics (DGCIS)) தரவுகளின்படி, ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அளவு வெறும் 5,30,000 டன்கள் மட்டுமே ஆகும். இது அந்த மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதியில் சுமார் 3% மட்டுமே ஆகும். இதற்கு முன்பு வழங்கப்பட்ட கட்டண விலக்கு முறையின்போது, பணப்பரிவர்த்தனைக் கட்டுப்பாடுகள் மற்றும் இதர சவால்கள் காரணமாக சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது என்று ரிடோலியா தெரிவித்தார்.



• மேலும், கடந்தமுறை ஈரான் மீதான தடைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தபோது, இந்தியா முக்கியமாக ஈரானிடமிருந்து எண்ணெயை இறக்குமதி செய்தது. ஏனெனில், அப்போது பிற மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டதால் இந்தியாவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. இருப்பினும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் மீண்டும் சீராகும்பட்சத்தில், ஈரானிய எண்ணெயை வாங்குவதில் இருக்கும் சர்வதேச விதிமுறைச் சிக்கல்களையும் ஆபத்துகளையும் ஏற்பதற்கு இந்தியாவுக்குப் பெரிய காரணங்கள் எதுவும் இருக்காது என்று கடோனா தெரிவித்துள்ளார்.


• மார்ச்  மாதம் 20-ஆம் தேதி வழங்கப்பட்ட முந்தைய விதிவிலக்கை கவனிப்பது இதற்கு உதவிகரமாக இருக்கும். அதன்படி, ஈரான் நாட்டிடமிருந்து இந்தியா இரண்டு முறை மட்டுமே கச்சா எண்ணெய் இறக்குமதி செய்திருந்தது; அவை ஏப்ரல் மாத பாதியில் இந்தியாவை வந்தடைந்தன. அந்த நடைமுறையை வைத்துப் பார்க்கும்போது, ஜூலை மாதத்தின் இரண்டாவது பாதியில் ஈரான் எண்ணெயை வாங்குவதில் இந்திய நிறுவனங்களுக்குப் மிகப்பெரிய அளவில் ஆர்வம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் ஏனெனில், அந்த விதிவிலக்கு காலம் முடிவதற்குள் பணப் பரிவர்த்தனைகளையும், எண்ணெய் விநியோகத்தையும் முழுமையாக முடிப்பதற்குப் போதிய நேரம் இருக்க வேண்டும் என்பதால், நிறுவனங்கள் அந்த ஜூலை இறுதி வாரங்களில் தங்களால் முடிந்தவரை அதிக எண்ணெயை வாங்கிப் பாதுகாக்கவே முயற்சிக்கும் என்றும் கடோனா தெரிவித்துள்ளார்.


• அவருடைய கூற்றுப்படி, ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதிக்குப் பிறகு ஈரானிய நிறுவனங்களுக்குச் செலுத்தப்படும் கட்டணங்கள், கடுமையான விதிமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்க வாய்ப்பில்லை. அதன்பிறகும், அவர்கள் ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவார்களா என்பது, பெரும்பாலும் அதற்கான விலக்கு நீட்டிக்கப்படுகிறதா என்பதைப் பொறுத்தே அமையும் என்றும் கூறப்படுகிறது.



• கச்சா எண்ணெயை வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மேம்பட்டாலும் கூட, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கும் வரை, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானிய எண்ணெயைப் பெருமளவில் வாங்குவதற்கு வாய்ப்பில்லை. இப்போதைய முக்கிய சவால், இன்று ஈரானிய கச்சா எண்ணெயைப் பெறுவது மட்டுமல்ல; எதிர்காலத்திலும் இந்த வர்த்தகத்தை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து நடத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும், என்று ரிடோலியா கூறினார்.


• ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியவுடன், ஈரானின் கச்சா எண்ணெயை மிக அதிகமாக வாங்கும் நாடாக சீனா மீண்டும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு வரை, ஈரான் ஏற்றுமதி செய்த ஒட்டுமொத்த கச்சா எண்ணெயில் ஏறக்குறைய பெரும்பாலான அளவை சீனாதான் இறக்குமதி செய்து கொண்டிருந்தது. சீன வியாபரிகளுக்கும் ஈரான் விற்பனையாளர்களுக்கும் இடையே ஏற்கனவே மிகவும் பாதுகாப்பான, வலுவான போக்குவரத்து மற்றும் பணப் பரிவர்த்தனை முறைகள் நடைமுறையில் உள்ளன. எனவே, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு செய்தால், அவர்கள் சீன வியாபரிகளுடனும், அந்த எண்ணெயை வாங்க ஆர்வமாக இருக்கும் மற்ற நாடுகளுடனும் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Original Link: What is the role of Iranian oil in India’s energy security?

Share:

இந்தியாவின் 'மகாசாகர்' தொலைநோக்குத் திட்டம் என்பது என்ன? -பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள்:


• இந்தியப் பெருங்கடலை ஒரு 'வாய்ப்புகளின் கடலாக' மாற்றுவதே எங்களது தொலைநோக்குப் பார்வை" என்று சீஷெல்ஸ் (Seychelles) அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடனான உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர் தெரிவித்தார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இருதரப்பினரும் தங்களுக்கு இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்துத் துறைகளையும் மறுஆய்வு செய்தனர். மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் நடக்கும் சட்டவிரோத மீன்பிடிப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடல் கொள்ளை உள்ளிட்ட இருநாடுகளுக்கும் பொதுவான நலன்சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர்.


• பின்னர் தேசிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மோடி, காலநிலை மாற்றத்தால் வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள், குறிப்பாகத் தீவு நாடுகள்தான் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறினார். மேலும், "நியாயம், பொறுப்புணர்வு மற்றும் சமத்துவம்" ஆகியவற்றின் அடிப்படையில் காலநிலைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். காலநிலை மாற்றத்திற்கு மிகக் குறைந்த அளவே காரணமாய் இருந்த நாடுகள், அதனால் ஏற்படும் மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடாது என்றும் குறிப்பிட்டார். "இதுவே காலநிலை நீதியின் சாராம்சம் ஆகும்," என்றும் கூறினார்.


• சீஷெல்ஸ் (Seychelles) நாட்டின் தேசிய தின விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட மோடிக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி மீதான அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதமாக,    'Guardian of the Blue Horizon' (நீலத் தொடுவானின் பாதுகாவலர்) என்ற கௌரவப் பட்டமும் வழங்கப்பட்டது.



• பேச்சுவார்த்தையின் முக்கிய முடிவுகள், இந்திய அரசு இந்தியப் பெருங்கடலில் உத்திசார்ந்த முக்கிய இடத்தில் அமைந்துள்ள இந்தத் தீவு நாட்டுடனான தனது உறவை மேலும் விரிவுபடுத்துவதை உணர்த்துகின்றன. இனிவரும் காலங்களில், இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு என்பது பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புடன் மட்டும் நின்றுவிடாமல், போக்குவரத்துத் தொடர்பு, திறன் மேம்பாடு, வளர்ச்சி பங்களிப்பு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள், விண்வெளித்துறை, சுகாதாரம், வேளாண்மை மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.


• இந்தியப் பெருங்கடல் நம் இருநாட்டினருக்கும் பொதுவான ஒன்று என்றும்; அதன் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவை நம் இருவரின் கூட்டுப் பொறுப்பு என்றும் நாங்கள் நம்புகிறோம், என்று இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மோடி கூறினார். மேலும், இருநாடுகளும் தங்களது பொருளாதாரக் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்தும், அதை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு தயார்படுத்துவது குறித்தும் விவாதித்ததாக தெரிவித்தார். இருநாடுகளிலும் உள்ள தொழில் துறைகளுக்கான புதிய வாய்ப்புகளை நாங்கள் தொடர்ந்து கண்டறிவோம் என்றும் இந்தியா மற்றும் சீஷெல்ஸ் (Seychelles) இடையேயான போக்குவரத்துத் தொடர்புகளை மேம்படுத்தவும் இணைந்து செயல்படுவோம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.


• கடல்வழி அண்டை நாடுகள் என்ற முறையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது நமது உறவின் மிக முக்கியப் பகுதியாகத் தொடர்கிறது. இந்தியாவின் 'மகாசாகர்' (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான மேம்பாட்டுத் திட்டம்) (Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions (Mahasagar)) தொலைநோக்குத் திட்டத்தில் சீஷெல்ஸ் (Seychelles) நாட்டிற்கு இருக்கும் தனித்துவமான இடத்தை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம். மேலும், கடல் கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மீன்பிடிப்பு மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களுக்கு எதிராகப் போராடுவதற்கான நமது கூட்டுப் பொறுப்பையும் நாங்கள் மறுமுறை உறுதி செய்துள்ளோம் என்று ஹெர்மினி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


• கண்காணிப்பு, கடல்சார் வரைவியல் மற்றும் பாதுகாப்புத் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலமாக, சீஷெல்ஸ் (Seychelles) நாட்டின் கடல்சார் திறன்களை வலுப்படுத்த உதவியதற்காக ஹெர்மினி இந்தியாவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.


• வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் பல முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. எல்லைதாண்டிய குற்றங்களுக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான குற்றவாளிகள் ஒப்படைப்பு ஒப்பந்தம் (Extradition treaty), விண்வெளியை அமைதிப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம், மற்றும் செஷல்ஸ் நாட்டில் இந்தியாவின் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை இடைமுகம் (Unified Payments Interface (UPI)) அடிப்படையிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஆகியவை இதில் அடங்கும். மேலும், இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடன் (Export-Import Bank of India (EXIM Bank)) ஒரு பொதுவான கடன் உதவி ஒப்பந்தமும், செஷல்ஸ் நாட்டில் ஒரு புதிய தேசிய மருத்துவமனையைக் கட்டுவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளைத் தொடங்குவதற்கான ஒப்பந்தமும் இதில் கையெழுத்தாகியுள்ளன.


• இருநாடுகளும் இணைந்து மற்றுமொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டன. அதன்படி, சீஷெல்ஸ் நாட்டிற்கு இந்தியா ஒரு அதிவேக ரோந்துப் படகை பரிசாக வழங்கவுள்ளது. மேலும், சீஷெல்ஸ் பாதுகாப்புப் படைக்கு                          10 பயன்பாட்டு வாகனங்களையும், ஐந்து லேசர் ரேடியல் ரகப் படகுகளையும் (Laser Radial class boats) இந்தியா வழங்கவுள்ளது. இதோடு சேர்த்து, சீஷெல்ஸ் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான 'PS Zoroaster' கப்பலை முழுமையாகப் பழுதுபார்த்து புதுப்பித்துத் தரவும், அங்குள்ள டோர்னியர் (Dornier) ரக விமானத்தை                       நவீன டிஜிட்டல் திரைகள் கொண்ட விமான ஓட்டி அறை (Glass cockpit) வசதியுடன் மேம்படுத்தித் தரவும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.






உங்களுக்குத் தெரியுமா?


• மத்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில், மேற்கு இந்தியப் பெருங்கடலில் சீஷெல்ஸ் (Seychelles) என்னும் தீவு நாடு அமைந்துள்ளது. புவியியல்ரீதியாக,              இது 4° முதல் 11° தெற்கு அட்சரேகை (South latitude) மற்றும் 46° முதல் 56° கிழக்கு தீர்க்கரேகை (East longitude) ஆகியவற்றிற்கு இடையே அமைந்திருக்கிறது.                 இதன் முதன்மைத் தீவுகள், ஆப்பிரிக்க நாடான கென்யாவிற்கு கிழக்கே சுமார்            1,000 மைல் தொலைவிலும், மடகாஸ்கருக்கு வடகிழக்கே சுமார் 700 மைல் தொலைவிலும் உள்ளன. இந்த நாட்டின் தலைநகரமான விக்டோரியா (Victoria), மாஹே (Mahé) என்று அழைக்கப்படும் தீவில் அமைந்துள்ளது.


• இந்தியாவிற்கும் சீஷெல்ஸ் (Seychelles) நாட்டிற்கும் இடையே பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் ஒரு வலுவான பாதுகாப்பு மற்றும் ராணுவக் கூட்டுறவு உள்ளது. ராஜதந்திரரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதிகரித்துவரும் கடல் கொள்ளையர்களின் அச்சுறுத்தல் மற்றும் பிற பொருளாதாரக் குற்றங்களே இந்த நெருக்கமான கூட்டுறவுக்கு முக்கியக் காரணமாகும். சீஷெல்ஸ் அதிபர் ஹெர்மினி அவர்கள் பதவியேற்ற முதல் 100 நாட்களுக்குள்ளேயே இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டது, இந்தியா உடனான தனது உறவுக்கு சீஷெல்ஸ் நாடு அளிக்கும் அதிக்கப்படியான முக்கியத்துவத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.


• மகாசாகர் (Maritime Head for Active Security and Growth for All in the Region (MAHASAGAR)) கொள்கையானது, ஏற்கனவே உள்ள 'சாகர்' (SAGAR) (Security and Growth for All in the Region (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி)) என்ற திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, இந்தியாவின் கடல்சார் ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்துகிறது. இக்கொள்கை இந்தியாவின் அண்டை நாடுகளை மட்டுமன்றி, பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதையும் உள்ளடக்குகிறது. அத்துடன், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைக் கொண்ட குவாட் (Quadrilateral Security Dialogue (QUAD)) கூட்டமைப்புடன் இந்தியாவின் ராஜதந்திரரீதியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.


Original Link: What is India’s MAHASAGAR (Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions) Vision?


Share:

ஆக்சிடோசின் என்றால் என்ன, அறுவை சிகிச்சை பிரசவங்களில் அது ஏன் மிக முக்கியமானது? -குஷ்பூ குமாரி

சந்தேகிக்கப்படும் போலி ஆக்சிடோசினை தாய்மார்களின் மரணங்களுடன் தொடர்புபடுத்தும் அறிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) இந்தியாவிடம் தகவல்களைக் கேட்டுள்ளது. இருப்பினும், ஆக்சிடோசின் என்றால் என்ன, அறுவைசிகிச்சை பிரசவங்களின்போது அது ஏன் செலுத்தப்படுகிறது. மேலும், உயிருக்கு ஆபத்தான இரத்தப்போக்கைத் தடுப்பதில் அது ஏன் மிக முக்கியமானது?


தற்போதைய செய்தி :


ஜூன் 20 அன்று ஜோத்பூர், பவோட்டாவில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரசவம் செய்துகொண்ட 8 பெண்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராஜஸ்தானில் அறுவைசிகிச்சை பிரசவங்களின் தொடர்புடைய தாய்மார்களின் உடல்நலச் சிக்கல்கள் குறித்து ஒரு புதிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, கோட்டா, பிகானேர் மற்றும் ஜோத்பூர் ஆகிய பகுதிகளில் பல தாய்மார்களின் மரணங்கள் பதிவாகியுள்ளன.


முக்கிய அம்சங்கள்:


1. அறுவைசிகிச்சை பிரசவம் (Caesarean section) என்பது தாயின் வயிறு மற்றும் கருப்பையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்கும் ஒரு முறையாகும். இயல்பான பிரசவம் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ ஆபத்தானதாக அமையக்கூடும் சூழலில் இது பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகிறது. பல சூழல்களில், அறுவைசிகிச்சை பிரசவம் உயிர்காக்கும் ஒரு நடைமுறையாக அமைகிறது. இருப்பினும், மற்ற அனைத்து அறுவை சிகிச்சைகளையும் போலவே, இதிலும் சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

2. அறுவைசிகிச்சை பிரசவம் சிகிச்சையின்போது, ​​பிரசவத்திற்குப் பிறகு உடனடியாக, அல்லது சில வாரங்கள் கழித்துக்கூட சிக்கல்கள் ஏற்படலாம். சில சிக்கல்கள் லேசானவையாகவும் சமாளிக்கக்கூடியவையாகவும் இருக்கும். ஆனால், மற்றவை விரைவாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் தீவிரமானவையாக மாறக்கூடும்.


3. மிகவும் பொதுவான சிக்கல்களில் ஒன்று தொற்று (infection) ஆகும். அறுவை சிகிச்சைக் காயத்திலோ, கருப்பையின் உள்ளேயோ அல்லது சிறுநீர்கப்பை போன்ற அருகிலுள்ள உறுப்புகளிலோ தொற்று ஏற்படலாம். தொற்று ஏற்பட்ட பெண்களுக்குக் காய்ச்சல், வலி, தையல்களைச் சுற்றி சிவத்தல், வீக்கம் அல்லது துர்நாற்றம் வீசும் வெளியேற்றம் போன்றவை ஏற்படலாம்.


4. பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு (postpartum hemorrhage) என்று  அழைக்கப்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு, மற்றொரு முக்கிய அபாயமாகும். அறுவைசிகிச்சை பிரசவம் என்பது ஒரு அறுவை சிகிச்சை என்பதால், சுகப்பிரசவத்தைவிட இதில் இரத்தப் போக்கு அதிகமாக இருக்கும். சில சூழல்களில், இரத்தப்போக்கு அதிகமாகும்போது, ​​தாய்க்கு இரத்தமாற்றம் அல்லது அவசர சிகிச்சை தேவைப்படலாம்.


5. மயக்க மருந்து தொடர்பான சிக்கல்களும் ஏற்படலாம். அறுவைச் சிகிச்சையின்போது, பெண்களுக்கு பொதுவாக முதுகுத்தண்டு மயக்கமருந்து (Spinal Anesthesia), எபிட்யூரல் மயக்கமருந்து (Epidural Anesthesia) அல்லது பொது மயக்கமருந்து வழங்கப்படுகிறது. இந்த மயக்கமருந்துகளின் காரணமாக சிலருக்கு ஒவ்வாமை, சுவாசப் பிரச்சினைகள், குறைந்த இரத்த அழுத்தம், கடுமையான தலைவலி அல்லது குமட்டல் (Nausea) போன்ற பக்கவிளைவுகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.


போலி மருந்துகள் எவ்வாறு சிக்கல்களையும் தாய்மார்களின் இறப்பையும் ஏற்படுத்துகின்றன?


1. கோட்டாவில், பிரசவத்திற்கு முன் பிரசவ வலியை அதிகரிக்கவும், பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் இரத்த இழப்பைத் தடுக்க கருப்பையைச் சுருக்குவதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மருந்தான, போலியான அல்லது தரம் குறைந்த ஆக்சிடோசின் (oxytocin) பயன்படுத்தப்பட்டதே உயிரிழப்புகளுக்குக் முக்கியக் காரணம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது. ராஜஸ்தானில் உயிரிழந்த அல்லது உடல்நலச் சிக்கல்களைச் சந்தித்த பல பெண்கள் அதிகப்படியான இரத்த இழப்பைச் சந்தித்திருந்தனர். அந்த மருந்தில் செயல்திறன் கொண்ட மூலப்பொருட்கள் இல்லை என்பதைப் பரிசோதனை முடிவுகள் சுட்டிக்காட்டின.


2. ஆக்ஸிடோசின் என்பது பாலூட்டிகளின் பிட்யூட்டரி சுரப்பியால் இயற்கையாகச் சுரக்கப்படும் ஒரு ஹார்மோன் ஆகும். இது பாலியல் உறவு, பிரசவம், தாய்ப்பால் கொடுக்கும் காலம் மற்றும் சமூக பிணைப்பு போன்ற சூழல்களில் வெளியிடப்படுவதால், இதனை சில சமயங்களில் “மகிழ்ச்சியான ஹார்மோன்” (Love Hormone) என்றும் அழைக்கின்றனர். இருப்பினும், இதை வேதியியல்ரீதியாகவும் தயாரிக்க முடியும். மேலும், இது பிரசவத்தின் போது பயன்படுத்துவதற்காக மருந்து நிறுவனங்களால் விற்கப்படுகிறது. இது ஊசி மூலமாகவோ அல்லது மூக்கு வழியாகச் செலுத்தும் திரவமாகவோ வழங்கப்படுகிறது.


3. ஒரு சுகப்பிரசவத்தின்போது, ​​பிரசவ வலியின் தூண்டுதலுக்கு ஏற்ப உடல் கணிசமான அளவு இயற்கையான ஆக்சிடோசினை வெளியிடுகிறது. இருப்பினும், அறுவை சிகிச்சையின் போது, ​​தண்டுவட அல்லது எபிடியூரல் மயக்க மருந்துகளின் கீழ், இந்த இயற்கையான ஹார்மோன் சுரப்பு போதுமானதாக இல்லாமல் போகலாம்.


4. அறுவை சிகிச்சை பிரசவத்தின்போது ஏற்படும் சுருக்கங்களின்போது, ​​கருப்பை வலுவாகவும் சீராகவும் சுருங்குவதற்கு உதவுவதற்காக ஆக்சிடோசின் கொடுப்பது ஒரு வழக்கமான நடைமுறையாகும். பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் இரத்தப்போக்கைக் குறைப்பதற்கும், உலகளவில் தாய் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தக் கசிவைத் தடுப்பதற்கும் இந்தச் சுருக்கங்கள் முக்கியமானவை.




5. ஆக்சிடோசின் தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டுவதோடு, நஞ்சுக்கொடி பிரிந்து வெளியேறவும் உதவுகிறது. இதன் மூலம் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கிறது.


6. மும்பை சென்ட்ரலில் உள்ள வொக்கார்ட் மருத்துவமனைகளின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ ஆலோசகரான டாக்டர் ரிச்சா பரத்வாஜ், கருப்பையை ஒரு இயற்கையான அழுத்தக் கட்டு (Natural Pressure Bandage) என்று கருதுவதாக விளக்கினார். பிரசவத்திற்குப் பிறகு, நஞ்சுக்கொடி (Placenta) இணைந்திருந்த இடத்தில் உள்ள இரத்த நாளங்கள் திறந்த நிலையிலேயே இருக்கும் என்று கூறினார். 


7. ஆக்ஸிடோசின் கருப்பைத் தசைகளைச் சுருங்கச் செய்து, அந்த இரத்த நாளங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. இதன் மூலம் இரத்த ஓட்டம் குறைந்து, அதிகப்படியான இரத்தப்போக்கு தடுக்கப்படுகிறது. ஆனால், கருப்பை தளர்வாகவே இருந்து, போதுமான அளவு சுருங்கவில்லை என்றால், இரத்த இழப்பு  வேகமாகவும் தீவிரமாகவும் ஏற்படலாம். இது போன்ற சூழலில் அவசர மருத்துவச் சிகிச்சை, இரத்தம் செலுத்துதல் (Blood Transfusion) அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவு  ஆதரவு தேவைப்படலாம் என்று டாக்டர் ரிச்சா பரத்வாஜ் தெரிவித்தார்.


போலி மருந்துகளை கட்டுப்படுத்துவதற்காக க்யூஆர் (QR) குறியீட்டு முறை


சில நாட்களுக்கு முன்னர் அனைத்து தடுப்பூசிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், போதைப்பொருட்கள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் ஆகியவற்றில் பார்கோடு அல்லது கியூஆர் குறியீட்டு முறை இடம்பெற வேண்டும் என ஒன்றிய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், மருந்தின் ஒவ்வொரு குப்பி அல்லது மாத்திரை பொட்டலத்தையும் கண்காணிக்க முடியும்.


மருந்து விதிகளின் அட்டவணை H2-ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மருந்துகளின் உற்பத்தியாளர்களும், மருந்தின் முக்கியப் பொதியின் மீதோ அல்லது இடப்பற்றாக்குறை ஏற்பட்டால், இரண்டாம் நிலை பொதியின் மீதோ ஒரு தனித்துவமான பார்கோடு அல்லது QR குறியீட்டை ஒட்ட வேண்டும்.



மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organisation (CDSCO))


1. ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organisation (CDSCO)), ராஜஸ்தானில் சர்ச்சைக்குள்ளான ஆக்சிடோசினைத் தயாரிக்கும் ஜாக்சன் லேபரட்டரீஸ் நிறுவனத்தின் பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள உற்பத்தி அலகுகளை அந்த இரு மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையங்களுடன் இணைந்து கூட்டாக ஆய்வு செய்தது.


2. 1940-ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் (Drugs & Cosmetics Act) சட்டமும், 1945-ஆம் ஆண்டின் விதிகளும், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்கான பல்வேறு பொறுப்புகளை ஒன்றிய மற்றும் மாநில ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு வழங்கியுள்ளன. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின், சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்தியாவின் தேசிய ஒழுங்குமுறை ஆணையமாக (National Regulatory Authority (NRA)) இருந்து வருகிறது.


3. மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின்கீழ், மருந்துகளுக்கு ஒப்புதல் அளித்தல், மருத்துவப் பரிசோதனைகளை நடத்துதல், மருந்துகளுக்கான தரநிலைகளை வகுத்தல், நாட்டில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தை அமல்படுத்துவதில் ஒரு சீரான தன்மையைக் கொண்டுவரும் வகையில்  ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organisation (CDSCO)) பொறுப்பு ஏற்றுள்ளது.


4. சமீபத்தில், ஒன்றிய அரசு 16 நிலையான அளவு கலவை மருந்துகள் (Fixed Dose Combination (FDC)) மருந்துகளுக்கு உடனடித் தடைவிதித்துள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் (Drugs and Cosmetics Act) சட்டத்தின் பிரிவு 26A-ன்கீழ் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் இந்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.


நிலையான அளவு கலவை மருந்துகள் ஒரே மருந்தளவு வடிவத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வீரியமிக்க மூலப்பொருட்களைக் கொண்டுள்ளன. மருந்துத்துறையில் இவற்றின் உற்பத்தியும் பயன்பாடும்  அதிகரித்துள்ளன.


5. இந்த நடவடிக்கை, இந்திய மருந்துச் சந்தை குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட ஆய்வின் விளைவாகும். நீதிமன்றத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (Central Drugs Standard Control Organisation (CDSCO)) மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (Drugs Technical Advisory Board (DTAB)), தீங்கு விளைவிக்கக்கூடிய மருந்துக் கலவைகளை முழுமையாக நீக்குவதற்காக ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.


Original Link: What is oxytocin and why is it critical in c-sections?

Share:

ராமர் கோயில் நிதி முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாட அயோத்தி வழக்கறிஞர்கள் சங்கம் மறுப்பு : இது சட்டப்படி சரியா? - சதாஃப் மோடக்

ஒரு வழக்கறிஞர், நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களில், தனது தொழில்முறை தகுதி மற்றும் வழக்கின் தன்மைக்கு ஏற்ற கட்டணத்தில் எந்தவொரு வழக்கையும் (brief) ஏற்று நடத்தக் கடமைப்பட்டவர். இத்தகைய அறிவிப்புகள் குறித்து நீதிமன்றங்கள் முன்பு வழங்கிய தீர்ப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.


இராமர் கோயில் நிதியை முறைகேடு செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட எட்டு பேர் சார்பாகத் தங்கள் சங்கத்தைச் சேர்ந்த எந்தவொரு வழக்கறிஞரும் வாதாட மாட்டார்கள் என்று அயோத்தி வழக்கறிஞர்கள் சங்கம் திங்கள்கிழமை (ஜூன் 29) அறிவித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடினால், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சங்கம் கூறியது.


"அரசியலமைப்புச் சட்டம், சட்ட விதிகள் மற்றும் தொழில்முறை நெறிமுறைகள் ஆகியவற்றுக்கு முரணானது" என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த போதிலும், வழக்கறிஞர்கள் சங்கங்கள் இத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றுவது இது முதல் முறையல்ல.


குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்குத் தற்காத்துக்கொள்ளும் உரிமை குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?


அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 22(1), ஒவ்வொரு நபருக்கும் தங்களுக்கு விருப்பமான ஒரு வழக்கறிஞரைக் கலந்தாலோசிக்கவும், அவர் மூலம் தற்காத்துக்கொள்ளவும் உள்ள உரிமையை மறுக்கக்கூடாது என்ற அடிப்படை உரிமையை வழங்குகிறது.



பிரிவு 14, இந்திய எல்லைக்குள் சட்டத்தின் முன் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சட்டங்களின் சமமான பாதுகாப்பை உறுதி செய்கிறது. அரசு கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளின் ஒரு பகுதியான பிரிவு 39A, நீதி அமைப்பானது நீதியை ஊக்குவிப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. பொருளாதார அல்லது பிற தடைகள் காரணமாக எந்தவொரு குடிமகனுக்கும் நீதியைப் பெறுவதற்கான சம வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்காக இலவச சட்ட உதவியை வழங்க வேண்டும் என்றும் அது கூறுகிறது.


இத்தகைய தீர்மானங்கள் குறித்து உச்சநீதிமன்றம் என்ன கூறியுள்ளது?


2010-ம் ஆண்டில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டை விசாரிக்கும்போது, ​​நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு மற்றும் ஜியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, வழக்கறிஞர்கள் சங்கங்கள் நிறைவேற்றும் தீர்மானங்களின் சட்டவிரோதத் தன்மை குறித்து விரிவாக ஆய்வு செய்தது.


2006-ம் ஆண்டில் கோயம்புத்தூரில் ஒரு வழக்கறிஞருக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்த வழக்கு உருவானது. அதைத் தொடர்ந்து, காவல்துறை ஊழியர்களுக்காக எந்தவொரு வழக்கறிஞரும் வாதாட அனுமதிக்கக்கூடாது என்று வழக்கறிஞர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். சென்னை உயர்நீதிமன்றம் இச்செயலை "தொழில்முறைக்கு முரணானது" என்று தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.


அந்த மேல்முறையீட்டு வழக்கின் ஏ.எஸ். முகமது ரஃபி vs தமிழ்நாடு அரசு (A S Mohammed Rafi vs State of Tamil Nadu)  விசாரணையின் போது, ​​"மிகப்பெரிய சட்ட மற்றும் அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த" இந்த விவகாரம் நீதிபதிகள் அமர்வுக்கு "ஆழ்ந்த மனவேதனையை" ஏற்படுத்தியதாக உச்சநீதிமன்றம் கூறியது. "எங்கள் கருத்தின்படி, இத்தகைய தீர்மானங்கள் முற்றிலும் சட்டவிரோதமானவை, வழக்கறிஞர் தொழிலின் அனைத்து மரபுகளுக்கும் மற்றும் தொழில்முறை நெறிமுறைகளுக்கும் எதிரானவை. ஒரு நபர், சமூகத்தால் எவ்வளவுதான் தீயவராக, சீரழிந்தவராக, கீழ்த்தரமானவராக, வக்கிரமானவராக, அருவருப்பானவராக, கொடியவராக அல்லது வெறுக்கத்தக்கவராகக் கருதப்பட்டாலும், அவருக்கு நீதிமன்றத்தில் வாதாட உரிமை உண்டு. அதற்கேற்ப, அவருக்காக வாதாடுவது வழக்கறிஞரின் கடமையாகும்," என்று நீதிமன்றம் கூறியது.


எழுத்தாளர் தாமஸ் பெயினின் (Thomas Paine) உதாரணத்தையும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. 1792-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் அவர் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்றது. வேல்ஸ் இளவரசரின் தலைமைச் சட்ட அதிகாரியாக (Attorney General) இருந்த தாமஸ் எர்ஸ்கின், தாமஸ் பெயினுக்கு ஆதரவாக வாதாடினால் தனது பதவியை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டார். அந்த எச்சரிக்கையையும் மீறி, எர்ஸ்கின் அந்த வழக்கை ஏற்றுக்கொண்டார். குற்றச்சாட்டின் தன்மை அல்லது முன்வைக்கப்படும் வாதங்களின் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் ஒருவருக்காக வாதாட மறுத்தால், அவர் தவறான முறையில் நீதிபதியின் தன்மையை ஏற்றுக்கொள்வதாக அர்த்தமாகும் என்று அவர் கூறினார்.


பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான புரட்சியாளர்கள், மகாத்மா காந்தி மற்றும் இந்திரா காந்தியின்மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபர்கள், மற்றும் நூரம்பெர்க் விசாரணைகளில் இலட்சக்கணக்கானோரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நாஜி போர்க் குற்றவாளிகள் போன்ற, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடப்பட்ட பிற வரலாற்று உதாரணங்களையும் உச்சநீதிமன்றம் மேற்கோள் காட்டியது.


நீதிபதி கட்ஜு எழுதிய உச்சநீதிமன்றத் தீர்ப்பில், இந்தியாவின் சுதந்திரப் போராட்டமும் குறிப்பிடப்பட்டிருந்தது. அக்காலத்தில், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய புரட்சியாளர்களுக்கு வழக்கறிஞர்கள் சட்டரீதியான பாதுகாப்பை வழங்கினர். சில குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்காக வாதாட வழக்கறிஞர் சங்கங்கள் மறுப்பதாக வரும் செய்திகளால் தாங்கள் "கலக்கமடைந்துள்ளதாக" நீதிமன்றம் கூறியிருந்தது. "ஒரு வாடிக்கையாளர் தனது கட்டணத்தைச் செலுத்தத் தயாராக இருக்கும் வரையிலும், வழக்கறிஞர் வேறு எந்தப் பணியிலும் ஈடுபடாத வரையிலும், ஒரு வழக்கறிஞர் ஒரு வழக்கை ஏற்க மறுக்க முடியாது என்பதே தொழில்முறை நெறிமுறையாகும்."



"எனவே, ஒரு குறிப்பிட்ட குற்றம் சாட்டப்பட்டவருக்காகத் தங்கள் உறுப்பினர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று வழக்கறிஞர் சங்கம் ஏதேனும் தீர்மானம் நிறைவேற்றுவது, அது சம்பந்தப்பட்டவர் ஒரு காவலராகவோ, அல்லது பயங்கரவாதி, பாலியல் வன்கொடுமையாளர், அல்லது பலரைக் கொன்றவர் எனச் சந்தேகிக்கப்படுபவராகவோ இருந்தாலும் சரி அரசியலமைப்புச் சட்டம், சட்ட விதிகள் மற்றும் தொழில்முறை அறநெறிகள் ஆகிய அனைத்திற்கும் முரணானதாகும்," என்று கூறிய நீதிமன்றம், இத்தகைய தீர்மானங்களை "சட்டத் துறைக்கே ஒரு அவமானம்" என்றும் வர்ணித்தது.


மேலும், அத்தகைய தீர்மானங்கள் செல்லாது என்று அறிவித்த நீதிமன்றம், "இந்நாட்டில் ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று விரும்பும் நேர்மையான சிந்தனை கொண்ட வழக்கறிஞர்கள், இத்தகைய தீர்மானங்களைப் புறக்கணிக்கவும் அவற்றை மீறவும் வேண்டும்" என்றும் வலியுறுத்தியது. 


வழக்கறிஞர்களின் தொழில்முறை நெறிமுறைகள் எவ்வாறு வரையறுக்கப்படுகின்றன?


வழக்கறிஞர்கள் சட்டத்தின் (Advocates Act) கீழ் பின்பற்றப்பட வேண்டிய 'தொழில்முறை நடத்தை மற்றும் கண்ணியத்திற்கான தரநிலைகளின்' ஒரு பகுதியாக, 'தொழில்முறை தரநிலைகள்' குறித்த விதிகளை இந்திய வழக்கறிஞர்கள் மன்றம் (Bar Council of India) வகுத்துள்ளது. நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களில் எந்தவொரு வழக்கையும் (brief), தனது தொழில்முறை தகுதி மற்றும் வழக்கின் தன்மைக்கு ஏற்ற கட்டணத்தில் ஏற்று நடத்த வேண்டிய கடமை ஒரு வழக்கறிஞருக்கு உண்டு.


"சிறப்புச் சூழ்நிலைகளில்" ஒரு குறிப்பிட்ட வழக்கை ஏற்று நடத்த மறுப்பதற்கான வாய்ப்பையும் இவ்விதிகள் வழங்குகின்றன. ஒரு தனிப்பட்ட வழக்கறிஞர் குறிப்பிட்ட ஒரு வழக்கில் ஆஜராகாமல் இருக்கத் தீர்மானிப்பதையே இது குறிக்கிறது என்று உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு தெளிவுபடுத்தியது. ஆனால், ஒரு குற்றம் சாட்டப்பட்டவருக்காக வாதாடுவதிலிருந்து அவரைத் தடுக்கும் வகையில், வழக்கறிஞர் சங்க உறுப்பினர் பதவியைப் பறிப்பதாக மிரட்ட முடியாது.


குற்றம் சாட்டப்பட்டவருக்காக வாதாடக்கூடாது என்ற தீர்மானங்கள் பொதுவாகக் காணப்படுபவைதானா?


நாடு முழுவதும் உள்ள பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சட்டப் பிரதிநிதித்துவம் கிடைப்பதைத் தடுக்கும் வகையிலான தீர்மானங்களை அவ்வப்போது நிறைவேற்றியுள்ளன. பொதுவாகப் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குகள், பயங்கரவாத வழக்குகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்குகளில் இத்தகைய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.


2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கசாப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு எதிராக இதேபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வழக்கை நடத்த நியமிக்கப்பட்ட சட்ட உதவி வழக்கறிஞர் கசாப் சார்பாக வாதாட மறுத்துவிட்டார். அதேவேளையில், அவருக்காக வாதாட முன்வந்த மற்றொரு வழக்கறிஞர் ஒரு அரசியல் கட்சியால் அச்சுறுத்தப்பட்டார். பின்னர், ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு அவருக்குக் காவல் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.


Saket Court :  டெல்லியின் தெற்கு மற்றும் தென்கிழக்கு மாவட்டங்களுக்கான முதன்மை நீதிமன்றம் சாகேத் மாவட்ட நீதிமன்ற வளாகம் (Saket Court Complex) ஆகும். இது ஆகஸ்ட் 28, 2010 முதல் புது டெல்லியில் செயல்படத் தொடங்கியது.


டிசம்பர் 16, 2012 டெல்லி கூட்டுப் பலாத்கார வழக்குக்குப் பிறகு, சாகேத் நீதிமன்றத்தில் (Saket court) வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்க மறுத்து இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். 2019-ல் ஹைதராபாத்தில் 26 வயதுடைய கால்நடை மருத்துவர் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் சட்டப் பிரதிநிதித்துவம் அளிக்க வழக்கறிஞர் சங்கம் மறுத்துவிட்டது. பின்னர் அவர்கள் காவல் துறை என்கவுண்டரில் (மோதலில்) கொல்லப்பட்டனர்.



குருகிராமில் உள்ள ஒரு பள்ளியில் ஏழு வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்காக வாதாடும் எந்தவொரு வழக்கறிஞரையும் தடுக்கக்கூடாது என்று குர்கான் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்திற்கு 2017-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆரம்பத்தில் ஒரு பேருந்து நடத்துனரைக் கைது செய்திருந்த காவல்துறை, பின்னர் அக்குற்றத்திற்காக அப்பள்ளியைச் சேர்ந்த ஒரு சிறாரைக் கைது செய்தது.


இதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்றியதற்காக வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?


ஒரு வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்காக வாதாடுபவர்களின் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படும் என்று கோட்வார் வழக்கறிஞர் சங்கம் (Kotdwar Bar Association)  தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து, 2019-ல் உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு (writ petition) தாக்கல் செய்யப்பட்டது. அந்தத் தீர்மானம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


எதிர்காலத்தில் இதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்றும் எந்தவொரு வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில வழக்கறிஞர்கள் கவுன்சிலுக்கு (State Bar Council) நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வழக்கறிஞர்கள் மீது, 1971-ம் ஆண்டின் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் பிரிவு 15(2)-ன் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்தும் பரிசீலிக்கலாம் என்று அது கூறியது.


தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களுக்கு நீதிமன்றத்தில் வாதாட எதிர்ப்புத் தெரிவித்து உள்ளூர் வழக்கறிஞர் சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றிய சூழலில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் வாதாட மறுத்து தீர்மானம் நிறைவேற்றுவது நெறிமுறையற்றதும் சட்டவிரோதமானதுமாகும் என்று 2020-ம் ஆண்டில் கர்நாடக உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.


Original Link: Ayodhya Bar Association refuses to represent the accused in Ram Temple funds case. Is this legal?

Share:

சீர்திருத்தங்கள் 3.0 : 'இந்தியாவின்' வளர்ச்சி விகிதத்தை நோக்கி . . . - ஸ்ரீவத்ச கிருஷ்ணா

'சீர்திருத்தங்கள் 3.0', செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நாட்டை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வாய்ப்பை இந்தியா தவறவிடக் கூடாது.


சுதந்திரத்திற்குப் பிந்தைய 45 ஆண்டுகளில், இந்தியாவின் வளர்ச்சி வெறும் 3% என்ற குறைவான விகிதத்திலேயே இருந்தது. இது 'இந்து வளர்ச்சி விகிதம்' (Hindu rate of growth) என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது. 1991-ல், இந்தியா ஒரு 'செலுத்துச் சமநிலை நெருக்கடியை' (balance-of-payments crisis) எதிர்கொண்டது. இந்த நெருக்கடி நாட்டைப் பொருளாதார தாராளமயமாக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தியது. ஒரு பத்தாண்டிற்குள்ளேயே, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி வெகுவாக அதிகரித்தது. இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், நெருக்கடிகள் பெரும்பாலும் சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கின்றன. இந்தச் சீர்திருத்தங்கள் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. 1991-ல் தாராளமயமாக்கல் ஏற்படுத்திய அதே போன்றதொரு பெரும் மாற்றத்தை உருவாக்கும் ஆற்றலை இன்று செயற்கை நுண்ணறிவு (AI) வழங்குகிறது. இந்தியா இதில் முதலீடு செய்ய முடியுமா என்பது கேள்வியல்ல; மாறாக, முதலீடு செய்யாமல் இருக்க இந்தியாவுக்கு முடியுமா என்பதே கேள்வி. பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால தலைமைக்குப் பிறகு, சீர்திருத்த நடவடிக்கைகளில் இந்தியா மற்றொரு முக்கிய மைல்கல்லை (WhatsApp போன்றதொரு புரட்சிகரமான தருணத்தை) எட்டியுள்ளது. அதாவது, 'இந்து வளர்ச்சி விகித' (Hindu rate of growth) நிலையிலிருந்து 'இந்தியா வளர்ச்சி விகித' (Bharat rate of growth) நிலைக்கு — அதாவது அடுத்த பத்தாண்டுகளில் 8% மற்றும் அதற்கும் மேலான வளர்ச்சிக்கு இந்தியாவை உயர்த்துவதற்கான தருணமாக உள்ளது.


செயற்கை நுண்ணறிவு (AI) அணுகலை (AI tokens) இலவசமாக்குவதற்கான அவசியம்


புத்தாக்கத்தின் மூலம் உள்கட்டமைப்பில் பல தலைமுறை வளர்ச்சிகளை ஒரே நேரத்தில் கடந்து செல்ல முடியும் என்பதை இந்தியா ஏற்கனவே நிரூபித்துள்ளது. உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் (உயிரியல் அடையாள) அமைப்பான 'ஆதார்' (Aadhaar) திட்டத்தில் 138 கோடி மக்கள் பதிவு செய்துள்ளனர். உலகின் நிகழ்நேர டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் (real-time digital payments) 50%-ஐக் கையாளும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI), தற்போது ஆண்டுக்கு 250 பில்லியன் பரிவர்த்தனைகளை (மதிப்பு $3.4 டிரில்லியன்) மேற்கொள்கிறது. 2016-ல் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), வெறும் ஐந்து மாதங்களில் 10 கோடி சந்தாதாரர்களை இணைத்ததுடன், இணைய வசதியையும் கிட்டத்தட்ட இலவசமாக்கியது. திறந்தநிலை AI மாதிரிகளை (open AI models) ஏற்றுக்கொள்வது, கணினி வன்பொருள் (compute hardware) தேர்வுகளைப் பன்முகப்படுத்துவது மற்றும் 'டேட்டா'வைப் போலவே 'AI அணுகலையும்' இலவசமாக்குவது ஆகியவற்றின் மூலம், ஆதார் மற்றும் UPI போன்ற சாதனைகளை செயற்கை நுண்ணறிவு (AI) காலகட்டத்திலும் இந்தியா எவ்வாறு மீண்டும் நிகழ்த்த முடியும்?


இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வெறும் 0.65%-ஐ மட்டுமே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (R&D) செலவிடுகிறது. இது சீனா (2.4%), அமெரிக்கா (3.5%), தென் கொரியா (4.9%) மற்றும் இஸ்ரேல் (5.4%) ஆகிய நாடுகளின் செலவினங்களைவிட மிகக் குறைவு. 1947 முதல் 1991 வரை ஆட்சியில் இருந்த சோசலிசக் கொள்கை கொண்ட காங்கிரஸ் அரசாங்கங்கள், நாட்டின் நிதி நிலைமை காரணமாக அதிகச் செலவு செய்ய முடியாது என்று வாதிட்டன. அந்த வாதம் இன்று பொருந்தாது; இனிமேலும் அது பொருந்தவும் கூடாது. இப்போது எழும் முக்கிய கேள்வியானது, செயற்கை நுண்ணறிவு (AI) அணுகல்களை இலவசமாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதா? அப்படியென்றால், அதை நாம் எவ்வாறு செயல்படுத்தப் போகிறோம்? நாட்டின் முதல் 100 தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கும், 5,000 பள்ளிகளுக்கும் அணுகல்களை இலவசமாக்குவதன் மூலம், செயற்கை நுண்ணறிவை விஞ்ஞானிகளுக்கும் மாணவர்களுக்கும் ஒரு பயனுள்ள கூட்டமைப்பாக மாற்ற முடியுமா?


இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கலோரிகள், இரசாயனங்கள் மற்றும் கார்பன் ஆகியவற்றிற்கு மானியம் வழங்க சுமார் 49 பில்லியன் டாலர்களைச் செலவிடுகிறது. இப்போது அது அறிவாற்றலுக்கு மானியம் வழங்கத் தயாராக இருக்கிறதா என்பதுதான் கேள்வி. அதற்கான பதில் 'ஆம்' என்பதாகும். இந்தியாவால் ஏற்கனவே இதற்கான செலவை மேற்கொள்ள முடியும். தற்போது பிற மானியங்களுக்குச் செலவிடப்படும் தொகையுடன் ஒப்பிடுகையில், இதற்கான செலவு மிகச் சிறிய அளவே ஆகும். நாட்டின் முதல் 100 பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், அத்துடன் 5,000 உயர்நிலைப் பள்ளிகளுக்கான முழுமையான செயற்கை நுண்ணறிவு அணுகல் மானியத்திற்கு ஆண்டுக்கு சுமார் 2 பில்லியன் டாலர் செலவாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 0.06% ஆகும். இந்த செயற்கை நுண்ணறிவு முதலீடு, இந்தியாவின் உணவு மானியத்தில் சுமார் பதினான்கில் ஒரு பங்காகவும், அதன் உர மானியத்தில் பத்தில் ஒரு பங்காகவும், மேலும் ஒரே காலாண்டில் எல்பிஜி வருவாய் இழப்புகளுக்காக எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையைவிடக் குறைவாகவும் உள்ளது. இது மிகப்பெரிய அல்லது நடைமுறைக்குச் சாத்தியமற்ற நிதித்தொகை அல்ல. இது இந்தியாவின் தற்போதைய நலத்திட்டச் செலவினங்களில் இது மிகச்சிறிய ஒரு பகுதியே ஆகும். ஆனால், இது மாற்றத்தை உருவாக்கும், கூட்டுவட்டி வருமானத்தை ஈட்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது.


இந்தியாவுக்கு கூடுதல் நிதி தேவையில்லை. அதற்குத் தேவைப்படுவது புதிய முன்னுரிமைகள், புதிய கொள்கை கட்டமைப்புகள் மற்றும் தற்போதுள்ள வளங்களைச் சிறப்பாக மறுபகிர்வு செய்தல் ஆகியவைதான். முதலாவதாக, தற்போதுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளில் ஒரு ரூபாயைக்கூட குறைக்காமலேயே 'AI அணுகலுக்கு' (செயற்கை நுண்ணறிவுச் சேவைக்கான அலகுகள்) நிதியளிக்க முடியும். மானியத் தொகையின் வளர்ச்சியை ஓராண்டுக்கு மட்டும் நிறுத்தி வைப்பதன் மூலம் இதைச் சாத்தியமாக்கலாம். கடந்த பத்தாண்டுகளில் உரமானியம் மட்டுமே ஆண்டுக்கு 11% கூட்டு வளர்ச்சி விகிதத்தில் (CAGR) அதிகரித்துள்ளது. இரண்டாவதாக, AWS, Google மற்றும் Microsoft போன்ற மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் (hyperscalers) இந்தியா பொது-தனியார் கூட்டாண்மையை உருவாக்க வேண்டும். இதன் மூலம், தரவு மையங்களுக்கான நிலம், மின்சார மானியங்கள் மற்றும் தரவு குறித்த உத்தரவாதங்களை, அரசு வழங்கலாம். அதற்குப் பதிலாக, இந்நிறுவனங்கள் இலவச AI செயலாக்கத் திறனை (AI inference capacity) வழங்க முடியும். இந்தியாவின் 1.4 பில்லியன் பயனர் சந்தை, சில நாடுகளால் மட்டுமே ஈடுசெய்யக்கூடிய ஒரு பேரம்பேசும் (bargaining) ஆற்றலை அதற்கு வழங்குகிறது. இருப்பினும், புவிசார் அரசியல் மற்றும் நிச்சயமற்ற தன்மையால் வடிவமைக்கப்படும் இத்தகைய தொழில்நுட்ப-வணிகப் பேச்சுவார்த்தைகளுக்குக் கணிசமான திறமை தேவைப்படும். மூன்றாவதாக, தேவைப்பட்டால், கட்டணம் செலுத்தும் பெருநிறுவனங்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகள் மூலம் பள்ளிகள் பள்ளிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான இலவச அணுகலை வழங்க நிதியளிக்க முடியும்.


இலவசத் தரவு (data) சேவையானது இந்தியாவை மாற்றியமைத்தது போலவே, இலவச செயற்கை நுண்ணறிவு (AI) அணுகல்களும் அதே மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். மாறாக, அரசு 'ஜியோ' (Jio) நிறுவனத்திற்கு நேரடியாக மானியம் வழங்கவில்லை; மாறாக, அதற்கான சரியான ஒழுங்குமுறைச் சூழலை உருவாக்கியது. அலைக்கற்றை ஏலங்கள், இணைய நடுநிலைமை (net neutrality), உள்கட்டமைப்புப் பகிர்வு மற்றும் நீண்டகால முன்னோட்டத் திட்டம் (pilot programme) ஆகியவற்றின் மூலம் அரசு இதைச் சாதித்தது.


இதன் விளைவாக, மூன்றாண்டுகளுக்கும் குறைவான காலத்தில், இணைய அணுகலின் விலை ஒரு ஜிபிக்கு சுமார் $3-லிருந்து $0.10 ஆகக் குறைந்தது. இதே உத்தியை செயற்கை நுண்ணறிவு (AI) அணுகலுக்கும் பயன்படுத்தலாம். இதனால், சரியான சூழலை உருவாக்குவதன் மூலம், சந்தை வளர்ச்சியை ஏற்படுத்தலாம். இந்தியாவின் பங்கு காசோலையை எழுதுவது அல்ல, மாறாக அதைத் தேவைப்படாத நிலையை உருவாக்குவதே அதன் பணியாகும்.


மாதிரிகளை வழங்குதல்


சான் பிரான்சிஸ்கோ அல்லது பெய்ஜிங்கிலிருந்து பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface(API)) மூலம் பெரிய மொழி மாதிரிகளைப் (LLMs) பயன்படுத்துவது மட்டுமல்லாமல், அவற்றை தெளிவுப்படுத்தி இயக்குவதற்கான திறனை இந்தியா உருவாக்க வேண்டும். சர்வம் (Sarvam) மூலம், முன்னணி மாதிரிகளை இந்திய மண்ணிலேயே பயிற்றுவிக்க முடியும் என்பதை அது ஏற்கனவே காட்டியுள்ளது. அடுத்த கட்டமாக, சில திறந்த-வள மாதிரிகள் (open-source model) சீனாவிலிருந்து வந்தாலும், க்வென் (Qwen), டீப்ஸீக் (DeepSeek), கிமி (Kimi), லாமா (Llama) மற்றும் சர்வம் (Sarvam) போன்ற மாதிரிகளை இறையாண்மைக் கொண்ட உள்கட்டமைப்பில் வெளிப்படுத்த வேண்டும். மாதிரிகள் இலவசமாக இருக்கலாம். இருப்பினும், அவற்றை பெரிய அளவில் நிறுவுவதற்குத் தேவையான நிபுணத்துவமும் உள்கட்டமைப்பும் இலவசமானவை அல்ல. விண்வெளி மற்றும் அணுசக்தித் திட்டங்களுக்கு அரசாங்கம் ஏற்கனவே செய்ததைப் போலவே, செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பையும் ஒரு உத்திசார் தேசியத் திறனாகக் கருதவேண்டும். எந்தவொரு தனிப்பட்ட சூழலமைப்பையும் சார்ந்திருப்பதைத் தவிர்க்க, இறையாண்மை மற்றும் திறந்த மூல மாதிரிகளை இணைக்கும் ஒரு கலப்பின உத்தியை இந்தியா பின்பற்ற வேண்டும். திறந்த மூல மாதிரிகள் நான்கு முக்கிய நன்மைகளை வழங்குகின்றன. ஒரே இரவில் கட்டுப்படுத்தப்படக்கூடிய வெளிநாட்டு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்களைச் (API) சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் அவை இறையாண்மையை மேம்படுத்துவதன் மூலம், ஒரு அணுகலுக்கான உரிமக் கட்டணங்களை நீக்குவதன் மூலம் குறைந்த செலவுகள், அதன்மூலம் இலவசக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பயன்பாடுகளைச் சாத்தியமாக்குதல்; இந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரச் சூழல்களுக்கு ஏற்ப தனிப்பயனாக்குதல் மற்றும் அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப் பயன்பாடுகளுக்கான தணிக்கை செய்யக்கூடிய மாதிரிகளின் தன்மை மூலம் வெளிப்படைத்தன்மையை வழங்குகின்றன.


தேசிய அளவில் பெரிய மொழி மாதிரிகளை (LLMs) நிறுவுவது என்பது ஒரு மென்பொருள் கொள்கலனை நிறுவுவது போல் எளிமையானது அல்ல. இந்தியா பின்வரும் அம்சங்களில் ஆழ்ந்த நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பல பிராந்திய மிகைத்தன்மை மூலம் அதிகளவு கிடைப்பதை அது உறுதி செய்ய வேண்டும். மேலும், முக்கிய அரசு சேவைகளுக்கு 99.99% செயல்பாட்டு நேரத்தை அது வழங்க வேண்டும். அது தாமதத்தைக் குறைக்க வேண்டும். அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களில் கூட, அணுகல் பதிலளிப்பு நேரங்கள் 200 மில்லி விநாடிகளுக்குக் குறைவாக இருக்க வேண்டும். செயல்திறன் (தொகுப்பு அட்டவணைப்படுத்தல் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தி, நுகரப்படும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு அணுகலின் எண்ணிக்கை); பாதுகாப்பு (தரவு இருப்பிட இணக்கத்தை உறுதிசெய்து, உடனடி ஊடுருவல் தாக்குதல்களிலிருந்து தற்காத்து, விரிவான தணிக்கைப் பதிவுகள்) பராமரிக்க வேண்டும்.


இந்தியா தனது செயற்கை நுண்ணறிவு கணினி எதிர்காலத்திற்காக ஒரே ஒரு விற்பனையாளரின் ஏகபோகத்தில் சிக்கிக்கொள்ள முடியாது. என்விடியாவின் (NVIDIA) ஆதிக்கம், நிதி மற்றும் உத்திரீதியான என அசாதாரணமான விலையில் வருகிறது. என்விடியா 80%-க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு பயிற்சி வன்பொருளைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் வன்பொருளைத் தாண்டியும் நீண்டு செல்லும் ஒரு ஆழமான விற்பனையாளர் பிணைப்பை உருவாக்குகிறது. 140 கோடி மக்களுக்காக இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டுமானால், என்விடியாவின் விலை நிர்ணய முறையை மட்டுமே சார்ந்திருப்பது நிதிரீதியாகச் சாத்தியமானதல்ல.


ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) உருவாக்க இந்தியா ஒப்பீட்டளவில் குறைவாகவே செலவிட்டது. என்விடியா ஜிபியூக்களுக்காக (GPU) 50 பில்லியன் டாலர் செலவிட இந்தியாவால் முடியாது. இந்த மாற்று வன்பொருள் சூழலமைப்பு குறைந்த செலவில் கிடைப்பது மட்டுமல்லாமல், உத்திரீதியாகவும் முக்கியமானது. ஒரே ஒரு விற்பனையாளரைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, இந்தியா 40:30:30 என்ற விகிதத்திலான வன்பொருள் கலவையை (hardware mix) பின்பற்ற வேண்டும். கட்டமைப்பில் சுமார் 40% பகுதி AWS Trainium மற்றும் AMD ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். இந்தியாவில் கிடைக்கக்கூடிய, செலவு குறைந்த 'இன்ஃபெரன்ஸ்' (inference - AI மாதிரியின் செயல்பாட்டுப் பயன்பாடு) பணிகளுக்கு இவை ஏற்றவை. மேலும் 30% ஆராய்ச்சி, மாதிரிப் பயிற்சி மற்றும் கல்விசார் கூட்டாண்மைகளுக்காக கூகிள் டென்சர் ப்ராசசிங் யூனிட்-களைப் (TPU) பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள 30% சிறப்புப் பயிற்சி, பழைய தொழில்நுட்ப இணக்கத்தன்மை மற்றும் உள்நாட்டு சிலிக்கான் பாதுகாப்புக்காக என்விடியாவை (NVIDIA) சார்ந்திருக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு (AI) அணுகல் கொள்கை, செயல்படுத்தும் காலவரிசை


இந்தியா ஒரு தேசிய செயற்கை நுண்ணறிவு (AI) அணுகல் கொள்கையை அறிவித்து, அடுத்த 24 மாதங்களில் அதைச் செயல்படுத்த வேண்டும். பல விற்பனையாளர்களைக் கொண்ட ஒரு இறையாண்மை கணினி கட்டமைப்பை நிறுவுவதற்காக, AWS, கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவற்றுடன் பொது-தனியார் கூட்டமைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் மூலம் இது தொடங்கப்பட வேண்டும். முதல் முன்னோட்டத் திட்டமானது, முதல் 20 ஐஐடி-க்கள் மற்றும் ஐஐஎஸ்சி-க்கு வரம்பற்ற ஆராய்ச்சி அணுகல்களை வழங்க வேண்டும். ஹைப்பர்ஸ்கேலர் (hyperscaler) அளவிலான அனுமானத் திறன் செயல்பாட்டிற்கு வரும்போது, இந்தியா 500 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API) சாண்ட்பாக்ஸைத் திறக்க வேண்டும். 100 பல்கலைக்கழகங்களுக்கு அணுகலை விரிவுபடுத்த வேண்டும், மேலும் 10 மாநிலங்களில் உள்ள 500 உயர்நிலைப் பள்ளிகளில் AI எழுத்தறிவு முன்னோட்டத் திட்டத்தைத் தொடங்க வேண்டும். இந்தத் திட்டம் நாட்டின் முதல் இறையாண்மை கொண்ட இந்திய மொழி AI மாதிரி அளவுகோல்களை (Indic AI model benchmarks) வெளியிடுவதன் மூலம் இத்திட்டம் நிறைவடைய வேண்டும்.


இதன்பிறகு, முன்பு பரிந்துரைக்கப்பட்டபடி, குறுக்கு மானியங்கள் (cross-subsidies) மூலம் இந்தச் சூழலமைப்பை விரிவுபடுத்தி, சுகாதாரம், விவசாயம், நீதித்துறை மற்றும் கல்வி ஆகிய துறைகளில் செம்மைப்படுத்தப்பட்ட மாதிரிகளைச் செயல்படுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து 5,000 உயர்நிலைப் பள்ளிகளில் முழுமையாகச் செயல்படுத்துதல் மற்றும் அனைத்து 22 அதிகாரப்பூர்வ மொழிகளுக்கும் ஆதரவளித்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் இந்தியாவின் அணுகல் நுகர்வு உலக அளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் வரக்கூடும். இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் பயிற்சி பெற்ற மாதிரிகள் சர்வதேச அளவுகோல்களில் போட்டித்தன்மை வாய்ந்தவையாக மாறும். மேலும், 10,000-க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு சார்ந்த புத்தொழில் நிறுவனங்கள் உருவாகி, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை அதிக வேகத்தில் உயர்த்தும்.




முடிவாக, நாட்டின் மாற்றத்திற்கு இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு-துறை சார்ந்த முன்னேற்றம் மிக அவசியமாகும். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் (DPI) இந்தியா பெற்ற வெற்றியை, செயற்கை நுண்ணறிவு காலகட்டத்தில் இந்தியா மீண்டும் நிலைநாட்ட வேண்டும். திறந்த மாதிரிகளை ஏற்றுக்கொள்வதன் மூலமும், கணினி வன்பொருட்களைப் பன்முகப்படுத்துவதன் மூலமும், அணுகல்களைத் தரவைப் போலவே இலவசமாக்குவதன் மூலமும், இந்தியா தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) தனித்துவத்தை செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மீண்டும் நிகழ்த்த வேண்டும். செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளில் உலகளாவிய தலைவராக மாறுவதற்குத் தேவையான அனைத்து நிலைமைகளும், சாதகமான கொள்கைகள், நிலையான பேரியல் பொருளாதாரம், அபாரமான திறமையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவிடம் உள்ளன. இந்தியாவின் தீர்க்கமான, தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையே போதுமான நிபந்தனையாகும். இந்த மாற்றத்தை அடைவதற்கு மூன்று முக்கிய நடவடிக்கைகள், ஒரு பத்தாண்டு காலம் மற்றும் செயற்கை நுண்ணறிவால் (AI) இயங்கும் ஒரு தேசத்தை உருவாக்குதல் ஆகியவை அவசியமாகும்.


ஸ்ரீவத்ஸா கிருஷ்ணா ஒரு ஐஏஎஸ் அதிகாரி.


Original Link: Reforms 3.0 — towards the Bharat rate of growth 

Share: