தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை எவ்வாறு முன்மாதிரியாகத் திகழ்கிறது? -ஜி.எஸ்.கே. வேலு

 தமிழ்நாடு மாநிலம், நாட்டிற்கு எளிதில் அணுகக்கூடிய ஒரு சுகாதார அமைப்பு மாதிரியை வழங்குகிறது.


பல ஆண்டுகளாக இந்தியாவில், சுகாதாரத் துறையின் முன்னேற்றம் என்பது பெரும்பாலும் மருத்துவமனைகளின் விரிவாக்கங்கள், மருத்துவக் கல்லூரிகளின் நிறுவுதல் மற்றும் பொது சுகாதார உள்கட்டமைப்பின் மேம்பாடு ஆகியவற்றைக் கொண்டே அளவிடப்பட்டது. இவை முக்கியமானவையாக இருந்தாலும், சுகாதார சீர்திருத்தத்தின் அடுத்த கட்டத்திற்கு, உள்கட்டமைப்பை அணுகல், பணியாளர்களின் திறன், நோயறிதல், தொழில்நுட்பம் மற்றும் நீண்டகால சுகாதார விளைவுகளுடன் இணைக்கும் ஒரு பரந்த, ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்தச் சூழலில், தமிழ்நாடு ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறது.


தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை பலங்கள் ஒரே இரவில் உருவாகிவிடவில்லை. அவை, ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு, தாய் மற்றும் குழந்தை நலன், மருத்துவக் கல்வி, நோய்த் தடுப்பு, பொது சுகாதாரத்தை சென்றடைதல் மற்றும் பரவலாக்கப்பட்ட சுகாதாரச் சேவை வழங்குதல் ஆகியவற்றில் பல பத்தாண்டுகளாகக் கவனம் செலுத்திய நிறுவனங்களின் விளைவாக உருவானவை ஆகும். தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (Tamil Nadu Medical Services Corporation (TNMSC)) என்பது, அரசு நிறுவனங்கள் முழுவதும் அத்தியாவசிய மருந்துகளின் கொள்முதல், சேமிப்பு மற்றும் விநியோகத்தை நெறிப்படுத்துவதற்காக 1994-ல் நிறுவப்பட்ட ஒரு இலட்சிய மாதிரியாகும். மருந்துகள் கிடைப்பதை மேம்படுத்தி, செயல்திறன் குறைபாடுகளைக் குறைப்பதன் மூலம், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) பொதுத்துறை மருந்து கொள்முதலுக்கான ஒரு தேசிய முன்மாதிரியாக மாறியது. சுகாதாரத் துறை முன்னேற்றம் என்பது மருத்துவமனைகளைக் கட்டுவது மட்டுமல்ல, சிகிச்சையை எளிதில் அணுகக்கூடியதாகவும் பொறுப்புக்கூறக்கூடியதாகவும் மாற்றும் அமைப்புகளை உருவாக்குவதுதான் என்பதை இந்தச் சீர்திருத்தம் காட்டியது.


காலப்போக்கில், தமிழ்நாடு பொது சுகாதார உள்கட்டமைப்பை தனியார் கூட்டமைப்புகளுடன் இணைத்து ஒரு மேம்பட்ட சுகாதாரப் பாதுகாப்புச் சூழலை உருவாக்கியுள்ளது. மாவட்டங்கள் முழுவதும் உள்ள 8,700 துணை சுகாதார மையங்கள் ஒரு முக்கியக் கொள்கையைப் பிரதிபலிக்கின்றன. முதலீடு நகர்ப்புற மருத்துவமனைகளில் மட்டும் குவிக்கப்படாமல், சமமாகப் பகிரப்படும்போது வலுவான சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகள் கட்டமைக்கப்படுகின்றன.


தமிழ்நாட்டின் முக்கிய பலங்களில் ஒன்று, ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பில் நோயறிதலுக்கு (diagnostics) அளிக்கும் முக்கியத்துவம் ஆகும். பொது சுகாதாரத் திட்டங்களும் சமூகப் பரிசோதனைகளும் இப்போது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள லட்சக்கணக்கான குடிமக்களைச் சென்றடைகின்றன. இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய, பன்முகத்தன்மை வாய்ந்த நாட்டிற்கு, வலுவான நோயறிதல் வசதிகளைக் கொண்ட ஆரம்ப சுகாதார அமைப்புகள் அவசியமானவை. ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவது, மூன்றாம் நிலை மருத்துவமனைகளின் மீதான அழுத்தத்தைக் குறைத்து, அதன் மூலம் நீண்டகால சிகிச்சைச் செலவுகளைக் கட்டுப்படுத்துகிறது. பரவலாக்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு வழங்கல் மற்றொரு முக்கியமான பாடமாகும். மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் உள்ளூர் நுண்ணுயிரியல் ஆய்வக வலையமைப்புகளில் செய்யப்பட்ட சுமார் ₹360 கோடி முதலீடுகள், சுகாதாரச் சேவைகளை அணுகுவதில் உள்ள பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க உதவுகின்றன.


தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்தல்


சுகாதாரப் பராமரிப்பின் அடுத்த கட்டத்தில் தொழில்நுட்பமும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகள், தொலைமருத்துவம் மற்றும் தொலைநிலை நோயறிதல் போன்றவற்றின் செயல்திறனை மேம்படுத்தி, போதிய மருத்துவ வசதி இல்லாத பகுதிகளுக்கும் சுகாதார அணுகலை விரிவுபடுத்தும். எனவே, டிஜிட்டல் பொது சுகாதார அமைப்புகள் மற்றும் தரவு சார்ந்த சுகாதார நிர்வாகத்தில் தமிழ்நாட்டின் கவனம் ஒரு முக்கியமான வளர்ச்சியாகும்.


சுகாதாரப் பணியாளர்களின் திறனும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI)) முக்கியக் கவனம், பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதிலும், எதிர்காலத்திற்குத் தேவையான பராமரிப்பை வழங்குவதிலும் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் காரணமாக, இந்தியா முழுவதிலுமிருந்து நோயாளிகள் வருகின்றனர். பணியாளர் மேம்பாட்டிற்கான முதலீடுகள் மேற்கொள்ளாமல், பௌதீக உள்கட்டமைப்பை மட்டும் உருவாக்குவது, சுகாதார வசதிகள் திறம்படச் செயல்படுவதற்குத் தேவையான செயல்பாடுத்துவதற்கான வலிமையை இழக்கக்கூடும். நோயறிதல், டிஜிட்டல் சுகாதாரத் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு உதவியுடனான அமைப்புகள் மற்றும் பல்துறை மாதிரிகளில் தொடர்ச்சியான திறன் மேம்பாடு, ஒரு நிலையான சூழலமைப்பை உருவாக்க உதவுகிறது.


வாகன உதிரிபாகங்கள், மின்னணுவியல் மற்றும் துல்லியமான பொறியியல் ஆகியவற்றில் தற்போதுள்ள தனது பலத்தைப் பயன்படுத்தி, மருத்துவ சாதனங்கள் மற்றும் உபகரணங்களுக்கான விருப்பமான உற்பத்தி மையமாக மாறுவதற்கும் தமிழ்நாடு சிறந்த நிலையில் உள்ளது. மாநிலத்தின் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்த, இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும். இறுதியாக, அமைப்புரீதியான சவால்களை எதிர்கொள்வதில் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான வலுவான ஒத்துழைப்பு இன்றியமையாதது. பொது சுகாதார அமைப்புகள் பெரிய அளவிலான சேவைகளையும் பரந்த அளவிலான மக்களைச் சென்றடையும் அதே வேளையில், தனியார் சுகாதாரப் பராமரிப்பு, நோயறிதல், மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சுகாதாரச் சூழல் அமைப்புகள் புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் சிறப்புத் திறன்களுக்குப் பங்களிக்கின்றன.


இருப்பினும், ஒப்பீட்டளவில் மேம்பட்ட சுகாதார அமைப்புகள்கூட சவால்களை எதிர்கொள்கின்றன என்பதை அங்கீகரிப்பதும் அவசியமாகும். அதிக நோயாளிகளின் சுமை, சுகாதாரப் பணியாளர் விநியோக இடைவெளிகள், செயல்பாட்டுத் தடைகள் ஆகியவை இந்திய மாநிலங்கள் முழுவதும் கவலைக்குரியவையாகவே இருக்கின்றன.


தமிழ்நாட்டிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், ஒரு ஒத்த கட்டமைப்பைப் பிரதிபலிப்பது அல்ல. மாறாக, நீடித்த முதலீடுகள், பரவலாக்கப்பட்ட சேவை வழங்கல், பணியாளர் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட அமைப்புகள் ஆகிய அடிப்படைக் கொள்கைகளைப் பிரதிபலிப்பதாகும். அதுவே இந்தியா இப்போது பின்பற்ற வேண்டிய செயல்திட்டமாகும்.


டாக்டர். ஜி.எஸ்.கே. வேலு, FICCI தமிழ்நாடு மாநில மன்றத்தின் தலைவராகவும், டிரிவிட்ரான் ஹெல்த்கேர், நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் மற்றும் மேக்சிவிஷன் கண் மருத்துவமனைகளின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார்.


Original article : How Tamil Nadu’s healthcare leads by example? -G.S.K. Velu

Share:

பசுமை ஹைட்ரஜன் வாயுவை தொழில்துறையில் சாத்தியமாக்குவது எப்படி? -அமரேந்து நந்தி மற்றும் கௌதம் தலபதி

 எரிபொருள் பற்றாக்குறை நிலவும் சூழலில், பசுமை ஹைட்ரஜன் வாயுவுக்கான நீண்டகாலத் தேவையை உருவாக்கும் கொள்கைகளும், அதன் விநியோகச் செலவைக் குறைப்பதற்கான வழிமுறைகளும் மிகவும் அவசியமானவை ஆகும்.


பெட்ரோல் மற்றும் டீசலை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வேண்டுகோள், இந்தியாவின் எரிசக்தித் துறையில் உள்ள பலவீனத்தை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், வீடுகளில் மட்டும் தற்காலிகமாக எரிபொருளைச் சேமிப்பதோடு இந்தியாவின் நடவடிக்கைகள் நின்றுவிடக் கூடாது. ஏனென்றால், நாம் இறக்குமதி செய்யும் பெட்ரோலிய எரிபொருட்கள் உர உற்பத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், அம்மோனியா தயாரிப்பு போன்ற அதிக எரிசக்தி தேவைப்படும் தொழில்துறைகளோடு மிக ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. எனவே, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமானால், இந்தத் தொழிற்துறைகளில் பெட்ரோலிய எரிபொருட்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்க வேண்டும்.


இந்தச் சூழ்நிலையில், இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 'தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை' (National Green Hydrogen Mission (NGHM)) இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும். 2030-ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 5 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இந்தத் திட்டத்தின் இலக்கு மிகப்பெரியதுதான். ஆனால், இந்தியாவின் எரிசக்தித் துறையைத் தற்சார்புடையதாக மாற்ற, தற்போதைய உடனடித் தேவை என்னவென்றால் — ஏற்கனவே தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் 'சாம்பல் ஹைட்ரஜன்' (Grey hydrogen) மற்றும் அம்மோனியாவிற்குப் பதிலாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த 'பசுமை ஹைட்ரஜன்' மற்றும் 'பசுமை அம்மோனியாவை' பயன்படுத்த ஊக்குவிப்பதுதான். இதற்கு நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் ஆதரவளிப்பதன் மூலம், நிறுவனங்களால் பெரிய அளவில் முதலீடு செய்து இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். இந்த மாற்றத்தை வேகப்படுத்த பல முக்கியக் கொள்கை வழிகாட்டுதல்களும் சட்டங்களும் தேவைப்படுகின்றன.


முதலாவதாக, உரம் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு போன்ற முக்கியத் தொழில்துறைகளில் பசுமை ஹைட்ரஜன் (Green hydrogen) பயன்பாட்டை இந்தியா வேகப்படுத்த வேண்டும். இந்தத் துறைகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் சாம்பல் ஹைட்ரஜன் (Grey hydrogen) மற்றும் அமோனியாவிற்குப் பதிலாக, நம்பகமான மற்றும் பொருளாதாரரீதியாக லாபகரமான பசுமை ஹைட்ரஜனை மாற்றாகக் கொண்டுவர முடியும். இதற்காக, இந்தியாவின் சூரிய ஆற்றல் கழகம் (Solar Energy Corporation of India (SECI)) 13 உரத் தொழிற்சாலைகளுக்கு ஆண்டுதோறும் 7,24,000 டன் பசுமை அமோனியாவை வழங்குவதற்காக 10 ஆண்டுகால ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இதன்மூலம் அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 2.5 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுடன் இணைந்து ஆண்டுக்கு 30,000 டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மிக முக்கியமான படிகளாகும். இவற்றின் முக்கிய மதிப்பே சந்தையில் பசுமை ஹைட்ரஜனுக்கான ஒரு தேவையை உருவாக்குவதுதான். தற்போதைய தொழில்துறை தேவையை, பசுமை ஹைட்ரஜனுக்கான நம்பகமான நீண்டகாலத் தேவையாக மாற்றும்போது மட்டுமே இந்தியாவின் ஹைட்ரஜன் கொள்கை முழு அர்த்தத்தைப் பெறும். இது, உற்பத்தித் துறையில் இந்தியா இறக்குமதி செய்யும் பெட்ரோலிய எரிபொருட்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் என்கின்றனர்.


இறுதி விநியோகச் செலவு


இரண்டாவதாக, ஹைட்ரஜன் பொருளாதாரத்தின் வெற்றியை அதன் உற்பத்திச் செலவை மட்டும் வைத்து மதிப்பிடக் கூடாது, அது நுகர்வோரைச் சென்றடையும் இறுதிச் செலவை வைத்தே மதிப்பிட வேண்டும். மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்தாலும், அதைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து, சேமிப்பு, மாற்று இழப்புகள் மற்றும் சுத்திகரிப்புக்கான செலவுகள் சேரும்போது, அது சந்தையில் போட்டியிட முடியாத அளவுக்கு விலை அதிகமாகிவிடும். இறுதிச் செலவு தொடர்ந்து அதிகமாகவே இருந்தால், இறக்குமதியைக் குறைப்பதற்கான ஒரு மாற்றாக பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்த முடியாது. ஹைட்ரஜன் சந்தையில் முன்னணியில் உள்ள நாடுகளின் தரவுகள் காட்டுவது என்னவென்றால், உற்பத்திச் செலவு ஒரு கிலோவிற்கு வெறும் 2-3 டாலராக ($2-3/kg) இருந்தாலும்கூட, அதை நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதற்கான இறுதிச் செலவில் 70 முதல் 85 சதவீதம் வரை இடைநிலை மற்றும் இறுதிப் பயன்பாட்டு உள்கட்டமைப்பிற்கே செலவாகிறது.


எனவே, இந்தியா தனது ஆரம்பகால ஹைட்ரஜன் சந்தையை வெறும் பெரிய கடலோர மையங்களையும், நீண்டதூர விநியோகச் சங்கிலிகளையும் மட்டுமே சார்ந்து உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய கடலோர மையங்கள் ஏற்றுமதிக்கும் பெரிய தொழிற்சாலைகளுக்கும் பயன்படுமே தவிர, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள உள்நாட்டுத் தொழிற்சாலைகளுக்கு இவற்றால் மட்டுமே முழுமையாக உதவமுடியாது. உள்நாட்டில் ஆங்காங்கே பரவியிருக்கும் தொழிற்சாலைகள் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் போன்ற பெட்ரோலிய எரிபொருட்களைச் சார்ந்து இருப்பதை குறைப்பதுதான் இந்தியாவின் 'தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின்' (NGHM) முக்கிய நோக்கமாகும்.


மூன்றாவதாக, ஹைட்ரஜன் பயன்பாடு என்பது வெறும் பெரிய, மையப்படுத்தப்பட்ட திட்டங்களை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடாது. பல சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் இடத்திற்கு அருகிலேயே, குறைந்த அளவில் நம்பகமான மற்றும் தரமான ஹைட்ரஜன் தேவைப்படுகிறது. இவர்களுக்குத் தூரத்திலிருக்கும் பெரிய உற்பத்தி மையங்களிலிருந்து ஹைட்ரஜனை வாங்குவதைவிட, தாங்கள் இருக்கும் இடத்திலேயே அல்லது அதற்கு அருகிலேயே சிறிய அளவில் தயாரித்துக் கொள்ளும் 'Modular' உற்பத்தி முறையே அதிக லாபகரமாக இருக்கும். எனவே, கொள்கை வடிவமைப்பாளர்கள் சிறிய அளவிலான மின்பகுப்பிகள் (Modular electrolysers-தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிரிக்கும் கருவி), மிகத் தூய்மையான ஹைட்ரஜன் அமைப்புகள் மற்றும் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கான பொறியியல் தொழில்நுட்பங்களில் உள்நாட்டுத் திறனை மேம்படுத்துவத்தில் கவனம் செலுத்தவேண்டும். இது தவிர, சிறப்பு இரசாயனங்கள், மேம்பட்ட பொருட்கள் மற்றும் காலப்போக்கில் பசுமை அமோனியா, செயற்கை எரிபொருள்கள் போன்ற ஹைட்ரஜன் வழிப்பொருட்களிலும் பெரிய வாய்ப்புகள் உள்ளன. ஒரு சில பெரிய பொதுத்துறை நிறுவனங்களின் பயன்பாடுகளை மட்டுமே நம்பி உருவாக்கப்படும் ஹைட்ரஜன் கட்டமைப்பு, ஒரு நிலையான சந்தைக்குத் தேவையான பொறியியல் நிறுவனங்களையோ, உதிரி பாக உற்பத்தியாளர்களையோ அல்லது சிறப்பு உற்பத்தியாளர்களையோ உருவாக்கத் தவறிவிடும் என்கின்றனர்.


நான்காவதாக, மின்பகுப்பிகள் (Electrolyser) கொள்கையானது, பெரிய அளவிலான உற்பத்தி மற்றும் பரவலாக்கப்பட்ட சிறிய அளவிலான பயன்பாடு ஆகிய இரண்டிற்குமே ஆதரவளிப்பதாக இருக்க வேண்டும். தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் (NGHM) ₹4,440 கோடி ஊக்கத்தொகைத் திட்டம், 15 நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 3,000 மெகாவாட் உள்நாட்டு உற்பத்தித் திறனை வழங்கியுள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு இன்னும் பெரிய உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாகவே உள்ளது. இதற்கான ஏலத்தின் முக்கியப் பிரிவுகள் 100 மெகாவாட் என்ற குறைந்தபட்ச வரம்பைக் கொண்டிருந்தன.      ஒரே ஒரு சிறிய பிரிவில் மட்டுமே 10 மெகாவாட் முதல் ஏலம் எடுக்க அனுமதிக்கப்பட்டது. பசுமை ஹைட்ரஜன் தயாரிப்புச் செலவில் மின்பகுப்பிகளின் (Electrolyser) பங்கு மிக அதிகம் என்பதால், பெரிய அளவிலான உற்பத்தியும் அதன் திறனும் முக்கியம்தான். ஆனால், ஒட்டுமொத்தத் தொழிற்துறையிலும் பெட்ரோலிய எரிபொருட்களின் தேவையைக் குறைக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றால், தேவைக்கேற்ப மாற்றியமைக்கக்கூடிய சிறிய மின்பகுப்பிகளின் (Electrolyser) பயன்பாடுகளையும் ஆதரிக்க வேண்டும். 10 கிலோவாட் (kW) முதல் 2 மெகாவாட் (MW) வரையிலான சிறிய அளவிலான கருவிகளுக்கு எனத் திட்டமிடப்பட்ட ஒரு சிறு-குறு தொழிற்துறை வாய்ப்பை உருவாக்கினால், அது கடற்கரைக்கு அருகில் உள்ள பெரிய உற்பத்தி மையங்களுடன் இணைய முடியாத சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (Micro, Small and Medium Enterprises (MSME)) உதவும். சிறு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான இடத்திற்கு அருகிலேயே, சிறிய அளவில் ஹைட்ரஜனைத் தயாரித்துக் கொள்ளமுடியும். போக்குவரத்து மற்றும் மின்சாரக் கட்டமைப்புக்கான செலவுகளையும் சேர்த்துக் கணக்கிட்டுப் பார்த்தால், இத்தகைய சிறிய அமைப்புகளும் பெரிய உற்பத்தி மையங்களுக்கு இணையான அல்லது அதைவிடச் சிறந்த லாபகரமான கால அளவை அடைந்துவிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, இவற்றுக்கு 20 முதல் 30 சதவீதம் வரை மூலதன மானியம் வழங்கப்பட்டால் இந்தத் திட்டம் சாத்தியமாகும் என்றும் கூறப்படுகிறது.




இறுதியாக, ஒரு நாட்டின் ஹைட்ரஜன் கொள்கையை மின்சாரத் துறை சீர்திருத்தங்களில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. தொழிற்சாலைகளில் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய எரிபொருட்களின் தேவையைக் குறைப்பதற்கு 'பசுமை ஹைட்ரஜன்' (Green hydrogen) உதவ வேண்டுமானால், அதற்குப் பயன்படுத்தப்படும் மின்பகுப்பிகள் (Electrolysers) மலிவான, நம்பகமான மற்றும் தேவைப்படும்போது விநியோகிக்கக்கூடிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் (Renewable power) இயங்க வேண்டும். இந்தியா தனது தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு (Nationally Determined Contribution (NDC)) 2030 காலக்கெடுவிற்கு முன்பாகவே, 50 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோலியம் அல்லாத மின்உற்பத்தித் திறனை (Non-fossil installed capacity) அடைய ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. இருப்பினும், மின்விநியோகக் கட்டமைப்புப் போக்குவரத்துத் தடைகள், சேமிப்புக் கிடங்குப் பற்றாக்குறைகள், மற்றும் திறந்த அணுகல் கட்டுப்பாடுகள் ஆகியவை தொடர்ந்து நீடித்தால், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் எரிபொருளின் விலை மிக அதிகமாகவே இருக்கும். இதனால் சர்வதேச சந்தையில் மற்ற எரிபொருட்களுடன் அதனால் போட்டியிட முடியாது.


சாதாரண தொழிற்சாலைச் சூழலில் பசுமை ஹைட்ரஜன் வணிகரீதியாகப் பயன்படுத்தக்கூடியதாக மாறும்போது மட்டுமே, இந்த தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் (NGHM) உண்மையான வெற்றியைப் பெற்றதாகக் கருதப்படும்.


நந்தி, ராஞ்சியில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தின் (IIM Ranchi) பொருளாதாரம் மற்றும் பொதுக் கொள்கைத் துறையில் இணைப் பேராசிரியராக உள்ளார். தலபதி, ‘Hydrogen Innovation Pte. Ltd.’ நிறுவனத்தில் முதன்மை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றுகிறார்.


Original article : How to make green hydrogen viable in industry. -Amarendu Nandy and Goutam Dalapati

Share:

பிரம்மோஸ் ஏவுகணையின் முக்கிய அம்சங்கள் யாவை? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— ஷாங்க்ரி-லா கலந்துரையாடலில் (Shangri-La Dialogue) பங்கேற்பதற்காகச் சிங்கப்பூர் சென்றுள்ள சிங், பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை வாங்கக்கூடிய சாத்தியமுள்ள நாடுகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.


— இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய இருநாடுகளுடனான ஒப்பந்தமும் இறுதிக் கட்டத்தில் உள்ளது. உண்மையில், வியட்நாமுடன் ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது, அநேகமாக அது இன்னும் பொதுவெளியில் அறிவிக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது என்று அவர் கூறினார்.


— சுமார் 375 மில்லியன் டாலர் (₹3,100 கோடிக்கு மேல்) மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், 2022-ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை வாங்கிய முதல் வெளிநாட்டு வாடிக்கையாளராக பிலிப்பைன்ஸ் உருவெடுத்தது. கடந்த மார்ச் மாதத்தில், இந்தோனேசியாவும் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பைப் பெறுவதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது.


— இந்தோனேசியா மற்றும் வியட்நாம் உடனான இந்த ஒப்பந்தங்களின் விரிவான விவரங்கள் இன்னும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. பொதுவாக நாடுகள் தங்களின் அதிநவீன ஆயுத அமைப்புகளையும் தளவாடங்களையும் தாங்கள் நட்புரீதியான கூட்டாளிகளாகக் கருதும் நாடுகளுக்கே விற்கும் என்று சிங் கூறினார்.


— தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் (Association of Southeast Asian Nations (ASEAN)) உள்ள நாடுகளுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளது என்று கூறினார். மேலும், நாங்கள் உங்களை எல்லாம் எங்களின் நட்பு நாடுகளாகக் கருதுகிறோம்; உங்களுடன் எங்களின் மேம்பட்ட பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார் .


— கடல்சார் பொதுப் பகுதிகளைப் பாதுகாப்பதுடன், மீள்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகளை உருவாக்கவும், நம்பகமான பாதுகாப்பு கூட்டாண்மைகளை ஏற்படுத்தவும் இந்த பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள கூட்டமைப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளதாகவும் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.


— கடந்த பத்தாண்டுகளில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் இந்தியா பெரிய அளவிலான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், இத்துறையில் அதிகப்படியான தனியார் துறையினரின் பங்களிப்பிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


உங்களுக்குத் தெரியுமா? 


— இந்தியாவின் முப்படைகளிலும் பயன்பாட்டில் இருக்கும் 'பிரம்மோஸ்' அதிவேக ஏவுகணைகள் (BrahMos supersonic cruise missiles), இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation (DRDO)) மற்றும் ரஷ்யாவின் ‘NPO Mashinostroyeniya’ நிறுவனம் ஆகிய இரண்டும் இணைந்து உருவாக்கிய 'BrahMos Aerospace' கூட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன.


— பிரம்மோஸ் என்பது திட எரிபொருள் உந்துவிசை இயந்திரத்தைக் (Solid propellant booster engine) கொண்ட இரண்டு நிலைகளை உடைய ஒரு ஏவுகணையாகும். இதன் முதல் கட்டம் ஏவுகணையை ஒலியின் வேகத்தைவிட அதிவேகத்திற்கு கொண்டு சென்று, பின்னர் தனியாகப் பிரிந்து விடுகிறது. அதன் பிறகு, 'Liquid ramjet' எனப்படும் இரண்டாம் கட்டம், ஏவுகணை இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது ஒலியின் வேகத்தைப் போல ஏறக்குறைய மூன்று மடங்கு வேகத்திற்கு அதைக் கொண்டு செல்கிறது. இந்த ஏவுகணையை ரேடார் (Radar) மூலம் கண்டறிவது மிகவும் கடினம் என்பதால், இது எதிரிகளின் கண்ணில்படாமல் மறைந்து தாக்கும் திறன் கொண்டது. மேலும், இது பல்வேறு பாதைகளைப் பின்பற்றிச் சென்று இலக்கைத் தாக்கும் வல்லமை பெற்றது.


— பிரம்மோஸ் ஏவுகணைகள் இலக்கை நோக்கிச் சீராகச் செல்லும் நிலையில் ஒலியின் வேகத்தைப் போல ஏறக்குறைய 3 மடங்கு வேகத்தில் இயங்குகின்றன. இது ஏவுகணை இலக்கைச் சென்றடையும் நேரத்தைக் குறைப்பதுடன், இலக்குகள் சிதறிப்போகும் வாய்ப்பைக் குறைக்கிறது, மிக விரைவாக இலக்கைத் தாக்க உதவுகிறது மற்றும் எதிரிகளால் இடைமறித்து அழிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது.


— இந்த ஏவுகணை 'தானியங்கி' கோட்பாட்டின்படி (Fire and Forget Principle) செயல்படுகிறது. அதாவது ஏவப்பட்ட பின் இதனை நாம் வழிகாட்ட வேண்டியதில்லை, இலக்கை நோக்கிச் செல்லும் வழியில் பல்வேறு வகையான பறக்கும் முறைகளை தானாகவே மாற்றிக்கொள்ளும். பிரம்மோஸ் இணையதளத்தின்படி, இது அதிகபட்சமாக 15 கிலோமீட்டர் உயரம் வரையிலும், இலக்கைத் தாக்கும் இறுதி நேரத்தில் வெறும் 10 மீட்டர் போன்ற மிகக் குறைந்த உயரத்திலும் பறக்கக்கூடியது. இந்த ஏவுகணை 200 முதல் 300 கிலோகிராம் எடையுள்ள வழக்கமான வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.


— நிலப்பரப்பு மற்றும் கப்பல்களைத் தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட சில பிரம்மோஸ் ஏவுகணைகளின் தாக்குதல் தூர வரம்பு, சமீபத்திய ஆண்டுகளில் ஏறக்குறைய இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.


Original article : What are the key features of the BrahMos missile? -Roshni Yadav

Share:

இந்தியாவின் சமையல் எரிவாயு நெருக்கடி: ஹார்முஸ் நீர்சந்திப் பகுதியில் ஏற்பட்ட இடையூறுகளுக்குப் பிறகு, உத்திசார் கையிருப்பு ஏன் முக்கியமானதாகிறது? -குஷ்பூ குமாரி

 ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியிலான விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு இடையில், 30 நாட்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு (Liquified Petroleum Gas (LPG)) கையிருப்பை உருவாக்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. உத்திசார் கையிருப்பு என்றால் என்ன? இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) கையிருப்பின் தற்போதைய நிலை என்ன? இது உத்திசார் பெட்ரோலிய கையிருப்பில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?


ஏன் செய்திகளில் இடம்பெற்றது?


பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களான (Oil Marketing Companies (OMCs)) இந்தியன் ஆயில் நிறுவனம் (Indian Oil), பாரத் பெட்ரோலியம் (Bharat Petroleum), மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum) ஆகியவற்றை, அவற்றின் வழக்கமான வணிகக் கையிருப்புடன் கூடுதலாக, குறைந்தது 30 நாட்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அவசரகால சமையல் எரிவாயு (LPG) இருப்பை உருவாக்குவதற்கான திட்டத்தில் ஈடுபடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கூடுதல் சேமிப்பு வசதியானது—அவசரகால கச்சா எண்ணெய் இருப்புகளைப் போலவே, பூமிக்கு அடியில் உள்ள குகை போன்ற அமைப்புகளில் அமைக்கப்படுமா அல்லது பூமிக்கு மேல் உள்ள பெரிய தொட்டிகளில் அமைக்கப்படுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.


இந்தச் சூழலில், அரசின் இந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தையும், இந்தியாவில் தற்போதுள்ள சமையல் எரிவாயு (LPG) மற்றும் கச்சா எண்ணெய் இருப்புகளின் நிலைமையையும் புரிந்து கொள்வோம்.



முக்கிய அம்சங்கள்:


உத்திசார் இருப்புகள் என்றால் என்ன?


1. உத்திசார் இருப்புகள் என்பது அவசரகால நிலைமைகள் அல்லது கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்படும் காலங்களில் பயன்படுத்துவதற்காக, அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் கச்சா எண்ணெய் சேமிப்பாகும். இந்த பிரத்யேக உத்திசார் இருப்புகள் என்ற கருத்து, 1973-ஆம் ஆண்டில் ஏற்பட்ட முதல் எண்ணெய் நெருக்கடிக்குப் பிறகே முதன்முதலில் முன்வைக்கப்பட்டது. இருப்பினும், உத்திசார் இருப்புகள் என்பவை வணிகரீதியான இருப்புகளிலிருந்து வேறுபட்டவை ஆகும். ஏனெனில், வணிக இருப்புகளின் முக்கிய நோக்கம் குறுகிய கால அன்றாட செயல்பாட்டுத் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்வதாகும்.


2. இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கான 'உத்திசார் பெட்ரோலிய இருப்புகள்' (SPR) இருந்தாலும், சமையல் எரிவாயு (LPG) மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு (Liquefied Natural Gas (LNG)) ஆகியவற்றுக்கு அத்தகைய உத்திசார் இருப்புகள் எதுவும் இல்லை. தற்போது நாட்டில் கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெயின் பெரும் பகுதி, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளிடம் உள்ள வணிகரீதியான சேமிப்புகளே ஆகும்.


LPG எனப்படும் சமையல் எரிவாயுவின் இறக்குமதியை இந்தியா எந்த அளவிற்குச் சார்ந்து இருக்கிறது?


3. இந்தியா தனக்குத் தேவையான சமையல் எரிவாயு (LPG) தேவையில் சுமார் 60%-ஐ இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதியில் ஏறக்குறைய 90% விநியோகம் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகவே வருகிறது. இதன் விளைவாக, இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எரிவாயு நுகர்வில் சுமார் 54% இந்த வழித்தடம் வழியாக வரும் விநியோகத்தையே சார்ந்துள்ளது.


4. இந்தியா தனது இயற்கை எரிவாயு தேவையில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. இந்த இறக்குமதியில் 55–60% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கடந்து வருகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 40 சதவீதமும் இந்தக் கப்பல் போக்குவரத்து வழித்தடம் வழியாகவே வருகிறது.


ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே அமைந்துள்ள ஒரு குறுகிய நீர்வழியான இந்த ஹார்முஸ் ஜலசந்தி, உலகளாவிய ஒரு முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையாகும். மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக தற்போது இந்த வழித்தடத்தில் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.


5. போர் தொடங்குவதற்கு முன்பு, இந்தியா ஒரு நாளைக்கு சுமார் 90,000 டன் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தி வந்தது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி வழியிலான விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் மற்றும் பருவகாலத் தேவை குறைவு காரணமாக, இந்தியாவின் தினசரி சமையல் எரிவாயு நுகர்வு சுமார் 72,000 டன்னாகக் குறைந்துள்ளது என்று பெட்ரோலிய அமைச்சகத்தின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

6. எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தடையானது, வீடுகளில் சமையல் எரிவாயுவைச் (LPG) சார்ந்துள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக, தொழில் மற்றும் வணிகரீதியான நுகர்வோருக்கான எரிபொருள் விநியோகத்தை இந்தியா கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது LPG சமையல் எரிவாயு இணைப்பு வைத்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 33 கோடிக்கும் அதிகமாகும். எரிவாயு தேவையைச் சரியான முறையில் மேலாண்மை செய்வதற்காக, வீடுகளில் அடுத்தடுத்த சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச இடைவெளிக் காலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


7. மேலும், இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ஓரளவுக்கு ஈடுகட்டுவதற்காக, உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களின் உள்நாட்டு சமையல் எரிவாயு (LPG) உற்பத்தியை அதிகபட்சமாக அதிகரித்துள்ளன. அத்துடன், சுத்திகரிப்பு நிறுவனங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா போன்ற மாற்று நாடுகளில் இருந்து சமையல் எரிவாயு சரக்குகளைப் பெறுவதற்கும் தீவிரமாக முயன்று வருகின்றன.


8. மேற்கு ஆசியப் போர் , அவசர காலத்திற்கான ஆற்றல் சேமிப்பு மிகக் குறைவாக இருப்பதில் உள்ள அபாயங்களை வெளிப்படுத்தியுள்ளது. இதனால், இந்திய அரசும் இந்தத் துறைசார்ந்த பிற நிறுவனங்களும், சமையல் எரிவாயு மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு (LNG) ஆகியவற்றுக்கான கூடுதல் சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குவது குறித்தும், நீண்டகால ஆற்றல் விநியோகத் தடைகளின்போது பயன்படுத்தக்கூடிய கச்சா எண்ணெய் இருப்புகளின் கொள்ளளவை விரிவாக்கம் செய்வது குறித்தும் தற்போது பரிசீலித்து வருகின்றன.


சமையல் எரிவாயு (LPG) மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு (LNG) ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?


சமையல் எரிவாயு (LPG) என்பது முக்கியமாக புரோப்பேன் (Propane) மற்றும் பியூட்டேன் (Butane) ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வாயு எரிபொருள் கலவையாகும். இது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் இயற்கை வாயு பதப்படுத்துதலின்போது கிடைக்கும் ஒரு துணைப் பொருளாகும். இதில் சிறிய அளவில் புரோப்பிலீன் (propylene), பியூட்டிலீன் (butylene) மற்றும் ஐசோபியூட்டிலீன் (isobutylene) போன்ற வாயுக்களும் இருக்கலாம். ஓரளவிற்கு குறைந்த வெப்பநிலை அல்லது மிதமான அழுத்தத்தில், இந்த வாயு கலவை திரவமாக மாறுகிறது. இது பெரும்பாலும் சமையல் மற்றும் வெப்பமூட்டும் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. சில தொழில்துறைப் பயன்பாடுகளும் இதற்கு உண்டு. திரவ நிலைக்கு மாறும்போது, இது தன் வாயு நிலையின் கொள்ளளவில் சுமார் 260-ல் 1 பங்காக (1/260th) சுருங்கிவிடுகிறது.


மறுபுறம், திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு (LNG) என்பது முதன்மையாக இயற்கை வாயு ஆகும். இதில் முக்கியமாக மீத்தேன் (Methane) உள்ளது. இது -160°C குறைவான வெப்பநிலைக்குக் குளிர்விக்கப்பட்டு, மிகக் குறைந்த வெப்பநிலை தொழில்நுட்பம் மூலம் திரவமாக மாற்றப்படுகிறது. தற்போது கனரக வாகனங்கள், கப்பல்கள் மற்றும் ரயில்களை இயக்குவதற்கான ஒரு வளர்ந்துவரும் எரிபொருளாகப் பயன்படுவதைத் தவிர, இந்த திரவமாக்கப்பட்ட இயற்கை வாயுவுக்கு நேரடியாக அதிகப் பயன்பாடுகள் இல்லை. குழாய்கள் மூலமாக அதைக் கொண்டு செல்வது சாத்தியமில்லை. அத்தகைய சூழ்நிலைகளில், அதை எளிதாகக் கொண்டு செல்வதே இயற்கை எரிவாயுவை திரவமாக்கப்பட்ட இயற்கை வாயுவாக மாற்றுவதன் முக்கிய நோக்கமாகும்.

இந்தியாவின் உத்திசார் பெட்ரோலிய இருப்புகளின் (SPRs) நிலை என்ன?


1. மார்ச் மாதம் 23-ஆம் தேதி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (Ministry of Petroleum and Natural Gas (MoPNG)) மாநிலங்களவையில் அளித்த அறிக்கையின்படி, இந்தியா தற்போது 3.37 மில்லியன் டன் எண்ணெயைக் கையிருப்பில் வைத்துள்ளது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த சேமிப்புத் திறனில் (5.33 மில்லியன் டன் கச்சா எண்ணெய்) ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே ஆகும்.


2. இந்த உத்திசார் பெட்ரோலிய இருப்புகள், குறுகிய கால எண்ணெய் விநியோகத் தடைகளின்போது ஒரு தற்காலிகப் பாதுகாப்பு அரணாகச் செயல்படுவதற்காக உருவாக்கப்படுபவை ஆகும். இந்தியாவின் இந்த மூன்று உத்திசார் இருப்புகளும் அவற்றின் முழுத் திறனை எட்டும்போது, தோராயமாக 9.5 நாட்களுக்கான நாட்டின் கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடும் என்கின்றனர்.


3. இந்தியா ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மூன்று இடங்களில் இந்த உத்திசார் பெட்ரோலிய இருப்புகளைக் கொண்டுள்ளது. இவை பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட பாறைக்குகைக் குடைவுகள் ஆகும். அவை: ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் (1.33 மில்லியன் டன்), கர்நாடகாவில் உள்ள மங்களூரு (1.5 மில்லியன் டன்), கர்நாடகாவில் உள்ள பாதூர் (2.5 மில்லியன் டன்) ஆகும். 


4. இந்தியாவில், இந்த உத்திசார் கச்சா எண்ணெய் சேமிப்பு நிலையங்களை உருவாக்குவதற்கும் நிர்வகிப்பதற்கும், எண்ணெய் தொழில் வளர்ச்சி வாரியத்தின் (Oil Industry Development Board (OIDB)) முழு உரிமையின்கீழ் இயங்கும் ஒரு துணை நிறுவனமாக, 'இந்திய உத்திசார் பெட்ரோலிய இருப்பு நிறுவனம்' (Indian Strategic Petroleum Reserves Limited (ISPRL)) என்ற சிறப்பு அமைப்பு உருவாக்கப்பட்டு, இந்தப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


5. சர்வதேச எரிசக்தி முகமை (International Energy Agency (IEA)), நாடுகள் தங்களின் நிகர எண்ணெய் இறக்குமதியில் குறைந்தபட்சம் 90 நாட்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பை வைத்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. சர்வதேச எரிசக்தி முகையில் (IEA) உள்ள முழுநேர உறுப்பு நாடுகள் இந்த அளவிலான இருப்புக்களை பராமரிக்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளன. இந்தியா இந்த அமைப்பில் முழுநேர உறுப்பினராக இல்லை, மாறாக ஒரு இணை உறுப்பினராக மட்டுமே உள்ளது.


6. கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான இந்தியாவின் தற்போதைய ஒட்டுமொத்த தேசிய சேமிப்புத் திறன் 74 நாட்களாகும்; இதில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களிடம் உள்ள வணிகரீதியான இருப்புகளும் அடங்கும். இருப்பினும், இது சர்வதேச எரிசக்தி முகமை (IEA) பரிந்துரைக்கும் அளவைவிடக் குறைவானதே ஆகும்.


7. சமீபத்தில், இந்திய உத்திசார் பெட்ரோலிய இருப்பு நிறுவனம் (ISPRL) மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (Abu Dhabi National Oil Company (ADNOC)) ஆகியவற்றிற்கு இடையே ஒரு முக்கிய ராஜதந்திரரீதியான கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் உத்திசார் பெட்ரோலிய இருப்புகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்களிப்பை 3 கோடி பேரல்களாக உயர்த்தவும், இந்தியாவில் உத்திசார் எரிவாயு இருப்புகளை அமைப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


8. இந்தியாவின் உத்திசார் பெட்ரோலிய இருப்புகளில் கூட்டணி சேர்ந்துள்ள முதல் நாடு ஐக்கிய அரபு அமீரகம் ஆகும். 2018-ஆம் ஆண்டில், மங்களூருவில் உள்ள இந்திய உத்திசார் பெட்ரோலிய இருப்பு நிறுவனத்தின்  (ISPRL) சேமிப்புக் கிடங்கில் ஐக்கிய அரபு அமீரகம் 50 லட்சத்திற்கும் அதிகமான பேரல் கச்சா எண்ணெய் இருப்புகளைச் சேமித்து வைப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்திய உத்திசார் பெட்ரோலிய இருப்பு நிறுவனம் (ISPRL) மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் (ADNOC) நிறுவனங்கள் கையெழுத்திட்டன.


சர்வதேச எரிசக்தி முகமை (IEA) அமைப்பின் தரநிலைகளைப் புரிந்துகொள்ளுதல்: இந்தியாவின் எரிபொருள் இருப்பு இலக்குகள் ஏன் மிக முக்கியமானவை?


1. உலகளாவிய எண்ணெய் நெருக்கடிக்கு தீர்வாக 1974-ஆம் ஆண்டில் சர்வதேச எரிசக்தி முகமை (IEA) நிறுவப்பட்டது. இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Organisation for Economic Co-operation and Development (OECD)) கட்டமைப்பிற்குள் செயல்படும் ஒரு சுதந்திரமான அரசுளுக்கிடையேயான அமைப்பாகும்.


2. பிப்ரவரி மாதம் 2026-ஆம் ஆண்டில், இந்த அமைப்பின் முழுநேர உறுப்பினர் தகுதிக்காக இந்தியா விண்ணப்பித்தது. தற்போது இந்தியா, பாரீஸைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த முகமையின் ஒரு இணை உறுப்பினராக மட்டுமே உள்ளது. இந்த முக்கிய அரசுளுக்கிடையேயான அமைப்பு ஆற்றல் பாதுகாப்பு, உலகளாவிய எரிசக்தி கொள்கை, காலநிலை மாற்றம் மற்றும் ஆற்றல் மாற்றம் ஆகியவற்றில் பணியாற்றி வருகிறது.

3. சர்வதேச எரிசக்தி முகமை (IEA) அமைப்பின் நிறுவன சாசனத்தின்படி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (OECD) உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் மட்டுமே சர்வதேச எரிசக்தி முகமையில் உறுப்பினராக முடியும். தற்போது, சர்வதேச எரிசக்தி முகமை அமைப்பில் 33 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் கொலம்பியா 33-வது முழுநேர உறுப்பினராக சமீபத்தில் இணைந்துள்ளது.


4. கடந்த 2015-ஆம் ஆண்டில்,  பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (OECD) இல்லாத நாடுகளும் இணை உறுப்பினர்களாவதற்கு சர்வதேச எரிசக்தி முகமை அனுமதி அளித்தது. இந்த இணை உறுப்பினர்கள் கொள்கை விவாதங்கள் மற்றும் பிற செயல்பாடுகளில் பங்கேற்கலாமே தவிர, அவர்களுக்கு வாக்களிக்கும் அதிகாரமோ அல்லது முடிவெடுக்கும் அதிகாரமோ கிடையாது. கடந்த 2017-ஆம் ஆண்டில் இந்தியா, ஓர் இணை உறுப்பினராக இணைந்தது. தற்போதைய நிலவரப்படி, இந்த அமைப்பில் 13 இணை உறுப்பு நாடுகள் உள்ளன.


5. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (OECD) உறுப்பினராக இருப்பதோடு மட்டுமல்லாமல், சர்வதேச எரிசக்தி முகமையில் (IEA) உறுப்பினராவதற்கு சில குறிப்பிட்ட தகுதிகளை ஒரு நாடு பூர்த்தி செய்ய வேண்டும். சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) விதிகளின்படி அத்தகைய சில முக்கியத் தேவைகள் பின்வருமாறு: ஒரு நாடு கடந்த ஆண்டின் நிகர இறக்குமதிக்கு சமமான, 90 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் அல்லது எண்ணெய் தயாரிப்புகளின் இருப்பைக் கொண்டிருக்க வேண்டும்; இந்த இருப்பை அந்த அரசு நேரடியாகச் சொந்தமாகக் கொண்டிருக்காவிட்டாலும், அவசரக் காலத்தில் உடனடியாகப் பயன்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும். உலகளாவிய எண்ணெய் விநியோகத் தடைகளைச் சமாளிக்க இந்த இருப்பு பயன்படுத்தப்படலாம். மேலும், நாட்டின் எண்ணெய் நுகர்வை 10% வரை குறைப்பதற்கான அவசரக் கட்டுப்பாட்டுத் திட்டத்தையும், அரசின் கோரிக்கையின் பேரில் தங்களின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் தங்களுக்குரிய தகவல்களைத் தெரிவிப்பதை உறுதிசெய்யும் சட்டங்களையும் முறைகளையும் அந்த நாடு கொண்டிருக்க வேண்டும்.


Original article : India’s LPG Crisis: Why strategic reserves are critical after strait of hormuz disruptions. -Khushboo Kumari

Share:

யார் இந்தியக் குடிமகன் என்பதைத் தேர்தல் ஆணையத்தால் தீர்மானிக்க முடியுமா? சிறப்புத் தீவிர திருத்த வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியது என்ன? -ஆதித்ய பிரசன்னா பட்டாச்சார்யா, வாசுதேவ் தேவதாசன்

வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்படுவதை குடியுரிமை இழப்பிலிருந்து முழுமையாகப் பிரித்துக் காட்டவில்லை என்பதைக் கவனிக்க கருத்தில் கொள்ள வேண்டும். சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், வாக்குரிமையை இழக்காமல் இருப்பதற்கான பொறுப்பு தற்போது குடிமக்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.


மே 27 அன்று, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் vs இந்தியத் தேர்தல் ஆணையம் (Association for Democratic Reforms v. Election Commission of India) வழக்கில், வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. பீகாரில் நவம்பர் 2025-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தத்தில் இருந்து இந்த சவால் எழுந்தது.


அதன் பிறகு, இந்தியத் தேர்தல் ஆணையம் மேலும் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தச் செயல்முறையை நிறைவுசெய்து மற்ற 19 இடங்களில் சிறப்புத் தீவிர திருத்தத்தின் அறிக்கைகளுக்கான தேதிகளை அறிவித்துள்ளது. சிறப்புத் தீவிர திருத்தத்தை நடத்துவதற்கான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் குறித்தும், குடியுரிமை குறித்த கேள்வி குறித்தும் நீதிமன்றம் கூறியவற்றை நாங்கள் விளக்குகிறோம்.


சிறப்புத் தீவிர திருத்தம் நடத்துவதற்கான அதிகாரம்


அந்தத் தீர்ப்பு நான்கு கேள்விகளை முன்வைத்தது: அவை சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக விசாரணையை நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா, அந்த அதிகாரத்தை அது விகிதாசாரப்படி பயன்படுத்தியதா, அந்த நடைமுறை சட்டப்பூர்வ திட்டத்தை மீறியதா மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களின் குடியுரிமையை ஆய்வு செய்யமுடியுமா  என்பதாகும். ஒவ்வொரு நிலையிலும், நீதிமன்றம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது.

சிறப்புத் தீவிர திருத்த அறிக்கையை வெளியீடுவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும், அது சட்ட நடவடிக்கைகளை கடைப்பிடித்துள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நடவடிக்கை   விகிதாசாரமானது என்றும், வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவதற்கான துல்லியமான தொழில்நுட்ப வழிமுறைகளைத் தீர்மானிக்க இந்தியத் தேர்தல் ஆணையமே மிகவும் சரியான அமைப்பு என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது. சிறப்புத் தீவிர திருத்தில் பல சிக்கல்கள், ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளுமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுதல், நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியல்களை வெளியிடுதல், மற்றும் விசாரணைகளுக்கு உதவுவதற்காக நீதிபதிகளை நியமிக்குமாறு  உத்தரவிட்டது  போன்ற  நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுகளின் மூலமே சரிசெய்யப்பட்டுவிட்டன என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம் மற்றும் கேரளாவில் தேர்தல்களுக்கு சில காலத்திற்கு முன்னர் சிறப்புத் தீவிர திருத்தத்தை (SIR) வெளியிடப்பட்டதன் காலமானது, வாக்களிக்கும் உரிமையை அனுமதிக்க முடியாத அளவிற்குப் பாதித்ததா என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. மேலும், மேற்கு வங்கத்தில் இந்த செயல்முறையின் சட்டப்பூர்வத்தன்மையையும் நீதிமன்றம் ஆராயவில்லை. அங்கு, பெற்றோரின் பெயர்கள் அல்லது வயதுகளை பார்க்காமல் இருப்பதுபோன்ற, படிவங்களில் உள்ள "தேவையற்ற முரண்பாடுகள்" காரணமாக 1.36 கோடி வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் அனுப்பப்பட்டிருந்தன. மேற்கு வங்கத்தைச் சார்ந்த விவகாரம், நீதிமன்றத்தின் முன் தனி மனுவாக நிலுவையில் உள்ளது.


இந்தத் தீர்ப்பு, நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை மேற்கொள்ள வழிவகை செய்கிறது. சட்டப் போராட்டம் முடிந்துள்ள நிலையில், வாக்குரிமையை இழக்காமல் இருப்பதற்கான பொறுப்பு தற்போது குடிமக்களிடமே உள்ளது. மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான 30 நாள் கணக்கெடுப்பு (Enumeration) கட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே, வாக்காளர்கள் இந்த நடைமுறையைப் புரிந்துகொண்டு, தங்களின் வாக்குப்பதிவுக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதை கவனமாக கண்காணிக்க வேண்டும். அரசியல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் குடிமைச் சமூக அமைப்புகள், உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுகளின் பாதுகாப்பு அம்சங்களுடன் இணைந்து, தேர்தல் ஆணையம் தனது அறிவிப்புகளில் கூறியுள்ள நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.


குடியுரிமை குறித்து நீதிமன்ற கூறியது


1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 16-ஆம் பிரிவு, குடிமக்கள் இல்லாதவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்வதைத் தடை செய்வதால், வாக்காளர் பட்டியல்களைத் திருத்தும்போது இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு நபரின் குடியுரிமையை ஆராயலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள ஒருவர், வாக்காளர் மற்றும் குடிமகன் என்ற அனுமானத்தைப் பெறுகிறார் என்றும் அது தெளிவுபடுத்தியது.


ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்த அறிக்கையை வெளியிடும்போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின்  தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், வாக்காளர்களின் பதிவை நிராகரிக்கலாம் அல்லது பெயர் நீக்கதைத் தொடங்கலாம். முக்கியமாக, அது போன்ற முடிவு அந்த நபரை ஒரு குடிமகன் அல்லாதவர் என்று அறிவிப்பதில்லை. தேர்தல் நோக்கங்களுக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் திருப்தியடையவில்லை என்பதையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான சட்டப்பூர்வ நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதையும் மட்டுமே அது குறிக்கிறது. இதன் ஒரே விளைவு, வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது மட்டுமே.


வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது ஒரு தனிநபரின் வாக்களிக்கும் உரிமையை மட்டுமே பாதிக்கும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தாலும், தீர்ப்புக்கு முன்பு, பீகார் மற்றும் மேற்கு வங்க அரசியல் தலைவர்கள், சிறப்புத் தீவிரத் திருத்ததிற்குப் (SIR) பிறகு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். வாக்காளர் பதிவை அடிப்படையாகக் கொள்ளாத தகுதியைக் கொண்ட தற்போதைய திட்டங்களை,  சிறப்புத் தீவிரத் திருத்ததில் சேர்க்கப்படாதவர்களுக்கு சட்டப்படி மறுப்பு தெரிவிக்க முடியாது. ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை வெளிப்படையாக விலக்குவதற்காகத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டால், அந்தப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த நிலைப்பாடுகள் மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இந்தத் தீர்ப்பு, வாக்காளர் பட்டியலிலிருந்து பெயரை நீக்குவது மற்றும் குடியுரிமையை இழப்பது ஆகியவற்றை முற்றிலும் தனித்தனியாகப் பார்க்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு நபர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான குடியுரிமை நிபந்தனைகளை பூர்த்தி செய்கிறாரா என்பது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம்  திருப்தியடையவில்லை என்றால், அந்தக் கேள்வியை 1955-ஆம் ஆண்டு  குடியுரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.


சந்தேகத்திற்குரிய குடியுரிமை என்ற அடிப்படையில் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டாலும், அதற்கான இறுதி முடிவு ஒன்றிய அரசின் தீர்மானத்திற்குட்பட்டதாகவே இருக்கும். அந்த முடிவு நியாயமான காலக்கெடுவிற்குள் எடுக்கப்பட வேண்டும் என்றும், எந்த நிலையிலும் அந்த நபரின் தொகுதியில் அடுத்த நாடாளுமன்ற, சட்டமன்ற அல்லது உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதனால் வாக்குரிமை மற்றும் குடியுரிமை தொடர்பான நிலை நீண்ட காலம் தெளிவற்றதாக இருக்காமல் தடுக்க முடியும். மேலும், குடியுரிமை மறுக்கப்படுவது ஒரு நபரின் “அடையாள உணர்வையும் சமூக அங்கீகாரத்தையும்” பாதிக்கும் என்பதால், இது போன்ற முடிவுகள் “நியாயமான நடைமுறைகளுடனும் அமைப்புரீதியான கட்டுப்பாட்டுடனும்” அணுகப்பட வேண்டும் என்று நீதிமன்றம் எச்சரித்தது.


வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களை குடியுரிமை தீர்மானத்திற்காக அனுப்புவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கான முன்னுதாரணம் ஏற்கனவே உள்ளது. 1997-ஆம் ஆண்டு அசாமில் நடைபெற்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, பல இலட்சம் மக்கள் “சந்தேக வாக்காளர்கள்” (D-Voters) எனக் குறிக்கப்பட்டு, அவர்களின் குடியுரிமையை இறுதியாகத் உறுதிசெய்ய வெளிநாட்டு தீர்ப்பாயங்களுக்கு  அனுப்பப்பட்டனர். ஏறக்குறைய 30 ஆண்டுகளை கடந்தும், இந்த சந்தேக வாக்காளர்கள் தொடர்பான பல வழக்குகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. அவர்கள் குடிமக்களாகவும், வெளிநாட்டவர்களாகவும் இல்லாமல் இடையில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக, குடும்பஅட்டைகள், வங்கி கணக்குகள் போன்ற அடிப்படை உரிமைகளையும் சேவைகளையும் பெறுவதில் அவர்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


சிறப்புத் தீவிர திருத்த (SIR) செயல்முறையின்கீழ் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை, ஒருகாலத்தில் “சந்தேக வாக்காளர்கள்” (D-Voters) எனக் குறிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும். இதனால் தற்போதுள்ள வெளிநாட்டவர் தீர்ப்பாயங்களின் (Foreigners Tribunals (FTs)) திறன் கடுமையாக அழுத்தங்களை எதிர்கொள்ளலாம். பெயர்களில் உள்ள சிறிய எழுத்துப் பிழைகள் அல்லது ஆவணங்களில் பெயர் பொருந்தாதது போன்ற   நிர்வாகத் தவறுகளுக்காகவே பலரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி, அவர்களை குடியுரிமை விசாரணைக்கு அழைப்பது, அவர்களின் வாக்குரிமையை மட்டுமல்லாமல், பல ஆண்டுகள் நீடிக்கக்கூடிய உரிமையற்ற நிலைக்கு (rightlessness) அவர்களை தள்ளும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம்.


ஷெனாஸ் சௌத்ரியின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது. ஆதித்யா பிரசன்ன பட்டாச்சார்யா கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், வாசுதேவ் தேவதாசன் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரும் ஆவர்.

 

Original article : Can Election Commission decide who is an Indian citizen? What Supreme Court said in SIR verdict. -Aditya Prasanna Bhattacharya, Vasudev Devadasan

Share:

பின்னோக்கிய வரிவிதிப்பு என்றால் என்ன? உச்சநீதிமன்றத்தின் இணைய வழி விளையாட்டுத்துறை மீதான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு தீர்ப்பின் மூலம் விளக்கம் -ரோஷ்னி யாதவ்

 ஆன்லைன் கேமிங் மீதான பின்னோக்கிய வரிவிதிப்பு (Retrospective) சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் அரசியலமைப்புச் சட்ட செல்லுபடித்தன்மையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இருப்பினும், பின்னோக்கிய வரிவிதிப்பு (Retrospective Taxation) என்றால் என்ன? இந்தியாவில் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் ஒழுங்குமுறை கட்டமைப்பு எது? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளன.

 

தற்போதைய செய்தி?


மே 27-ஆம் தேதியன்று, இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் மீது அரசு பிறப்பித்த, பின்னோக்கிய வரிவிதிப்பு  28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை (Goods and Services Tax (GST)) விதிக்கும் நடவடிக்கையின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பானது, விளையாட்டு நிறுவனங்கள், கற்பனை விளையாட்டுத் தளங்கள் மற்றும் சூதாட்ட விளையாட்டு மீது நிலுவையில் உள்ள 2.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வரி கோரிக்கைகளை மீண்டும் வெளிக் கொண்டுவருகிறது. மேலும், 2025-ஆம் ஆண்டில் அரசு விதித்த தடையின் காரணமாக ஏற்கனவே கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இணையவழி விளையாட்டுத் துறைக்கு இது இறுதி முடிவாக அமையக்கூடும்.


முக்கிய அம்சங்கள்:


1. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு மற்றும் அதிகாரிகளால் வழங்கப்பட்ட முன்தேதியிட்ட வரி அறிவிப்புகளை எதிர்த்து பல்வேறு சூதாட்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்தது.


2. சரக்கு மற்றும் சேவை வரி  குழுவால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்கள் நடைமுறைக்கு வந்த பிறகு, இணையவழி விளையாட்கள் மீதான 28% சரக்கு மற்றும் சேவை வரி , 2023-ஆம் ஆண்டு  அக்டோபர் 1 முதல் மட்டுமே வருங்கால அடிப்படையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற இணையவழி விளையாட்டு நிறுவனங்களின் வாதத்தை தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்தது.


3. இருப்பினும், உச்சநீதிமன்றம் அரசாங்கத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, 2023-ஆம் ஆண்டின் சரக்கு மற்றும் சேவை வரியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதியது. இதன் மூலம், அக்டோபர் 1, 2023-க்கு முந்தைய காலங்களுக்கும் இந்தத் திருத்தங்களை பின்னோக்கிய வரிவிதிப்பதன் மூலம் பயன்படுத்திக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.


பின்னோக்கிய வரிவிதிப்பு (Retrospective taxation) என்றால் என்ன?


1. பின்னோக்கிய வரிவிதிப்பு என்பது, புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு நடைபெற்ற செயல்பாடுகளைப் பாதிக்கும் வகையில் வரிச் சட்டங்களை மாற்றுவதாகும். எளிமையாக, பின்னோக்கிய வரிவிதிப்பு ஒரு நாடு, சில பொருட்கள், சரக்குகள் அல்லது சேவைகள் மற்றும் ஒப்பந்தங்களுக்கு வரி விதிப்பது குறித்த ஒரு விதியை இயற்றவும், சட்டம் நிறைவேற்றப்பட்ட தேதிக்கு முந்தைய காலத்திலிருந்து நிறுவனங்களிடம் கட்டணம் வசூலிக்கவும் அனுமதிக்கிறது.


2. நிறுவனங்கள் கடந்தகாலங்களில் வரி சட்டங்களில் உள்ள இடைவெளிகளை (loopholes) பயன்படுத்தி தேவையற்ற வரிச்சலுகைகளைப் பெற்றிருக்கின்றன. அது போன்ற வரிவிதிப்பு கொள்கைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் முரண்பாடுகளைச் சரிசெய்வதற்காக நாடுகள் இந்த வழிமுறையைப் பயன்படுத்துகின்றன.


2025-ஆம் ஆண்டு இணையவழி விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம், என்றால் என்ன மற்றும் அதன் முக்கிய அம்சங்கள் யாவை?


பணமோசடி மற்றும் சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்களுக்கு டிஜிட்டல் பணப்பைகள் மற்றும் கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட தேசியப் பாதுகாப்பு தொடர்பான கவலைகளைக் காரணம் சுட்டிக்காட்டி, இந்தியாவில் செயல்படும் இணையவழி விளையாட்டு நிறுவனங்களுக்குக் கடந்த ஆண்டு அரசாங்கம் கடுமையான தடைவிதித்தது. இதன் விளைவாக, இந்தியாவின் இணையவழி விளையாட்டுத்துறைக்கு ஒரு விரிவான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்காக, 2025-ஆம் ஆண்டு இணையவழி விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.


முக்கிய அம்சங்கள்


1. இணைய வழியில் பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகளுக்கு தடை: இந்தச் சட்டம், Dream11, Mobile Premier League, WinZO போன்ற  செயலிகள் உட்பட, அனைத்து வகையான இணைய வழியில் பணம் வைத்து விளையாடும் (Real Money) விளையாட்டுகளையும் தடை செய்கிறது. மேலும், இணைய வழியில் பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களும் தடைசெய்யப்படுகின்றன. அதனுடன், எந்த ஒரு நபரும் இணைய வழியில் பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகளை அல்லது அவற்றுடன் தொடர்புடைய சேவைகளை வழங்குதல், உதவுதல், தூண்டுதல், ஊக்குவித்தல், உடந்தையாகச் செயல்படுதல் அல்லது வேறு எந்த வகையிலும் ஈடுபடுதல் கூடாது என்று இந்தச் சட்டம் குறிப்பிடுகிறது.


இணையவழிப் பண விளையாட்டுகளால், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய குழுக்களிடையே ஏற்படும் “கடுமையான சமூக, நிதி, உளவியல் மற்றும் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளே” இந்தத் தடைக்கான முக்கிய காரணமாகும்.


இந்த விளையாட்டுகள் மனிதர்களை கவர்ந்து ஈர்க்கும் வகையிலான வடிவமைப்பு அம்சங்கள் (manipulative design features), அடிமைப்படுத்தும் அல்கோரிதம்கள் (addictive algorithms), போட்கள் மற்றும் வெளிப்படுத்தப்படாத முகவர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. இதனால் நியாயத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பயனர் பாதுகாப்பு பாதிக்கப்படுகின்றன. மேலும், இவை கட்டுப்பாடற்ற மற்றும் கட்டாயமான விளையாட்டுப் பழக்கத்தை ஊக்குவித்து, இறுதியில் நிதி சீர்குலைவிற்கு வழிவகுப்பதாக சட்டம் கூறுகிறது.

2. சட்டத்தை மீறுவதற்கான தண்டனைகள்: இணைய வழியில் பணம் வைத்து விளையாடும் (Online Money Gaming) சேவையை வழங்கினால், அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படலாம். மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.2 கோடி வரை அபராதமும் விதிக்கப்படலாம்.


சமூக ஊடகத்தில் செல்வாக்குள்ளவர்கள் மற்றும் பிரபலங்கள் உட்பட எந்த ஒரு நபரும், இதுபோன்ற விளையாட்டுகளை விளம்பரப்படுத்தினாலோ அல்லது ஊக்குவித்தாலோ, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம்.


அடிக்கடி குற்றம் செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.


வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள், இணைய வழியில் பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகளுக்கு சேவைகளுக்கான எந்தவொரு பரிவர்த்தனையையும் எளிதாக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.


3. மின்னணு விளையாட்டுப் போட்டிகளை (Electronic Sports) ஒரு விளையாட்டாக அங்கீகரித்தல்: மின்னணு விளையாட்டுப் போட்டிகள் என்பது பல்துறை விளையாட்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக விளையாடப்படும் இணையவழி விளையாட்டாக வரையறுக்கப்படுகிறது. இது தனிநபர்கள் அல்லது அணிகளுக்கு இடையிலான ஒழுங்கமைக்கப்பட்ட போட்டி நிகழ்வுகளை உள்ளடக்கியதுடன், தேசிய விளையாட்டு நிர்வாகச் (National Sports Governance Act) சட்டத்தின் கீழ் முறையாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.


உடல்திறன், மனத்திறன், வியூகச் சிந்தனை போன்ற காரணிகளின் அடிப்படையில் முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. இதில், பங்கேற்பாளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், பந்தயம், சூதாட்டம் அல்லது வேறு எந்த வகையான பணயம் வைப்பதும், அதன்மூலம் வெற்றி தொகை பெறுவதும் இடம்பெறாது. மேலும், இதர தொடர்புடைய செயல்பாடுகளும் இதில் அடங்காது.


2026-ஆம் ஆண்டு சர்வதேச மின்னணு விளையாட்டு  கோப்பை (Esports Nations Cup (ENC))


இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒரு முக்கிய சர்வதேச நாடுகள் அடிப்படையிலான போட்டியான தேசிய மின்னணு விளையாட்டு போட்டியின் முதல் பதிப்பு, சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் 2026 நவம்பர் 2 முதல் 29-ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் அணிகள் போட்டியிடும் வழக்கமான போட்டிகளைப் போல இல்லாமல், தேசிய மின்னணு விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தங்கள் சொந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த அனுமதிக்கிறது. சர்வதேச மின்னணு விளையாட்டு  துறைக்கு ஒரு கட்டமைப்பை வழங்குவதற்காகவே ENC உருவாக்கப்பட்டுள்ளது.


4. ஒரு மைய அதிகார அமைப்பை உருவாக்குதல்: மின்னணு விளையாட்டு போட்டிகளை ஊக்குவிப்பதற்கும், அதே நேரத்தில் சட்டத்திதின் படி  முழுமையாக செயல்பாடுகளை உறுதி செய்வதற்கும் ஒரு முக்கிய அதிகார அமைப்பை உருவாக்க இந்தச் சட்டம் வழிவகை செய்தது. இந்த மையம், "இணையவழி சமூக விளையாட்டுகளை" அந்த அதிகார அமைப்பில் அங்கீகரித்து, வகைப்படுத்தி, பதிவு செய்வதுடன், பொழுதுபோக்கு மற்றும் கல்வி நோக்கங்களுக்காக இது போன்ற விளையாட்டுகளின் வளர்ச்சிக்கும் அவை கிடைப்பதையும் எளிதாக்கும்.

ஓர் இணைய விளையாட்டு, 'இணையயில் பணம் வைத்து விளையாடும்  விளையாட்டு' என்ற  வரையறைக்குள் இடம் பெற்று இருக்குமா என்பதை அந்த அதிகார மையம் தீர்மானிக்கும்; இதன் மூலம், அந்த விளையாட்டைத் தடைசெய்ய வேண்டுமா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்யும்.


இந்திய இணையவழி  விளையாட்டு ஆணையம் 


1. இந்தியாவில் இணையவழி விளையாட்டுத் துறையை ஒழுங்குபடுத்துவதில் ஒரு முக்கியப் படியாக, இணையவழி விளையாட்டுகளை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் விதிகள், மே 1, 2026 அன்று நடைமுறைக்கு வந்தது. இது, இத்துறையின் டிஜிட்டல்-சார்ந்த ஒழுங்குமுறை அமைப்பான இந்திய இணையவழி விளையாட்டு ஆணையத்தை (Online Gaming Authority of India (OGAI)) உருவாக்குவாதற்கு வழிவகுத்தது.


2. இந்திய இணையவழி விளையாட்டு ஆணையம் (Online Gaming Authority of India (OGAI)) என்பது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Ministry of Electronics and Information Technology (MietY)) கீழ் இயங்கும் ஒரு ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை அமைப்பாகும். இந்த ஆணையம் இணைய விளையாட்டுகளை வகைப்படுத்தும், இணக்கத்தைக் கண்காணிக்கும், பயனர் குறைகளைக் கையாளும், மேலும் நிதி நிறுவனங்கள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து சட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும்.


3. இந்திய இணையவழி விளையாட்டு ஆணையம் (Online Gaming Authority of India (OGAI))  என்பது ஒரு விளையாட்டு எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தீர்மானிக்கும்.


இணையவழி விளையாட்டு என்பது பயனர்கள் கட்டணம் செலுத்தி அல்லது பணத்தைப் பணயமாக வைத்து விளையாடும் விளையாட்டுகள் ஆகும்.


இணையவழி ஆன்லைன் சமூக விளையாட்டு என்பது பணத்தைப் பணயமாக வைக்காமல் பொழுதுபோக்கிற்காக விளையாடப்படும் விளையாட்டுகள் ஆகும்.


மின்னணு விளையாட்டு போட்டிகள் என்பது உடல் திறன், விரைவான செயல்பாடு மற்றும் உத்தி சார்ந்த சிந்தனை போன்ற திறன்களை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்ட போட்டி விளையாட்டுகள் ஆகும்.


இந்திய இணையவழி விளையாட்டு ஆணையம் இவ்வகைகளில் எதற்குள் ஒரு விளையாட்டு வருகிறது என்பதை நிர்ணயிக்கும்.


4. இணையவழி விளையாட்டு ஆணையம் வழிகாட்டுதல்களை வழங்கவும், புகார்களை விசாரிக்கவும், அபராதங்களை விதிக்கவும் அதிகாரம் பெற்றுள்ளது. ஆணையம் முழுமையாக அரசாங்கத்தால் வழிநடத்தப்படும் ஆறு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதன் தலைவராக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் இருப்பார். மற்ற ஐந்து உறுப்பினர்களில் உள்துறை அமைச்சகம், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை மற்றும் சட்ட விவகாரங்கள் துறை ஆகியவற்றின் இணைச் செயலாளர்கள் இடம்பெறுவர்.


Original article : What is Retrospective Taxation? Explained through SC’s Online Gaming GST Verdict. -Roshni Yadav

Share:

இந்தியா வெப்பமடைந்து வருகிறதா? - ஜேக்கப் கோஷி

 உலகின் அதிக வெப்பம் மிகுந்த நகரங்கள் பெரும்பாலும் இந்தியாவில்  உள்ளனவா? 'நகர்ப்புற வெப்பத் தீவுகள்' (Urban Heat Islands) எப்படி உருவாகிறது? எல் நினோ (El Niño) பருவமழையில் தாக்கதை ஏற்பத்துமா?


தற்போதைய செய்தி :


இந்தியாவின் பல நகரங்கள் கடும் வெப்ப அலைகளினால் தகித்து வருகின்றன. தென்மேற்குப் பருவமழை தொடங்குவதில்  ஏற்படும் தாமதம்  ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை மாதங்களில் 'எல் நினோ' (El Niño) உருவாகுவதற்கான உறுதியான சாத்தியக்கூறுகள், வெப்பம் தொடர்பான பாதிப்புகளை அதிகரிக்க செய்யும்.


2026-ஆம் ஆண்டு மே மாதம், இந்தியாவில் வழக்கத்திற்கு மாறாக வெப்பமான மாதமாக இருந்ததா?


பகல் நேர வெப்பநிலையின்படியோ அல்லது தேசிய அளவிலோ அல்ல. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மே 2026-க்கான கணிப்பின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 'இயல்பான' அல்லது 'இயல்புக்குக் குறைவான' அளவில் இருக்கும் என்றும், இயல்பைவிட அதிகமான அளவுகள் தென் தீபகற்பம் மற்றும் வடகிழக்கு, வடமேற்குப் பகுதிகளில் மட்டுமே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. பெரும்பாலான சூழல்களில், 'இயல்பான' என்பது ஒரு குறிப்பிட்ட நிலையத்தில் உள்ள 30 ஆண்டுகால சராசரி வெப்பநிலையைக் குறிக்கிறது. இது கணிசமாக மாறுபடும். இமயமலையில் உள்ள  கீழ்சரிவுகள், கிழக்குக் கடற்கரை மாநிலங்கள், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே இயல்பைவிட அதிகமான வெப்ப அலை நாட்கள் கணிக்கப்பட்டன. அதே நேரத்தில், மே மாதத்திற்கான அகில இந்திய மழைப்பொழிவு நீண்டகால சராசரியைவிட 110% அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. தெளிவான அறிகுறி நீண்டகால அடிப்படையில் உள்ளது: 1961-2020 காலகட்டத்தில் மைய வெப்ப அலை மண்டலம் (Core Heatwave Zone (CHZ)) குறித்த இந்திய வானிலை ஆய்வுமையத்தின் ஆய்வில், வெப்ப அலைகளின் நிகழ்வு பத்தாண்டுக்கு 0.1 நாட்களாகவும், அதன் கால அளவு பத்தாண்டுக்கு 0.44 நாட்களாகவும் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. இவை இரண்டுமே புள்ளிகளின்ப்படி முக்கிய  மாற்றங்களகும். மேலும், இந்த ஆய்வில், பகல் நேரத்தைவிட இரவு நேரம் வேகமாக, பத்தாண்டுக்கு 0.21°C என்ற அளவில் வெப்பமடைவதும் கண்டறியப்பட்டது. நாட்டில் உள்ள மத்திய வெப்ப மண்டலத்தில், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களும், மேலும் மராத்வாடா, விதர்பா, மத்திய மகாராஷ்டிரா மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய வானிலை துணைப் பிரிவுகளும் அடங்கும். பல ஆண்டுகளாக வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்படுவதோடு, நீண்டு கொண்டே வருகின்றன. ஆனால், 2026-ஆம் ஆண்டு  மே மாதத்தை மட்டும் பார்க்கும்போது, அது அதிகபட்ச வெப்பத்தை பதிவுசெய்த மாதமாக இல்லாமல், அதிக மழை பெய்து, பிராந்தியங்களுக்கு இடையே வானிலை வேறுபாடுகள் காணப்பட்ட மாதமாக இருந்தது.

பரவலாகப் பகிரப்பட்ட ஒரு பட்டியல், ஏப்ரல் மாதத்தில் உலகின் 50 வெப்பமான நகரங்களும் இந்தியாவில்தான் இருந்ததாகக் கூறியது. அது எந்த அளவுக்கு நம்பகமானது?


அதை எச்சரிக்கையுடன் படிக்க வேண்டும். காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் ஒரு இணையதளத்தால் தொகுக்கப்பட்ட இந்தத் தரவரிசை, ஏப்ரல் 27, 2026 என்ற ஒரே ஒரு நாளை மட்டும் தரவுகளாகப் பதிவுசெய்து, அதை ஒரு காலநிலைக்கான செய்தியாக முன்வைத்தது. ஒரே ஒரு நாள் பதிவான தரவு மட்டும் ஒரு போக்கை தீர்மானிக்க முடியாது என்பதை அந்தக் கட்டுரையே ஒப்புக்கொள்கிறது. அந்தப் பட்டியல், இணையதளம் கண்காணிக்கும் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அவற்றில் பெரும்பாலானவை வட மற்றும் மத்திய இந்தியாவில் உள்ளன. மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலிய நகரங்கள் இல்லாதது, அந்தத் தரவுத்தொகுப்பின் அமைப்பையே காட்டுகிறது. மேலும், 24 மணிநேர சராசரி வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப்படுத்துவது, இரவிலும் அதிக வெப்பம் நீடிக்கும் இடங்களுக்கு சாதகமாகவும், இரவில் வெப்பநிலை வேகமாகக் குறையும் பாலைவன நகரங்களுக்கு பாதகமாகவும் அமைகிறது. இது போன்ற காரணிகள்தான் இந்தியாவின் அனைத்துக்கால அதிகபட்ச வெப்பநிலை பதிவான மாநிலமான ராஜஸ்தானின் நகரங்கள் பட்டியலில் கடைசி இடங்களில் இடம்பெற்றன. பயன்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நேரடி நிலையத் தரவுகளிலிருந்து பெறப்படவில்லை. மாறாக அந்த இணையதளத்தின் குறியீட்டிலிருந்தே பெறப்பட்டுள்ளன. மேலும், சராசரி மதிப்புகளை கணக்கிட பயன்படுத்தப்பட்ட முறை பற்றிய எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை.


ஏப்ரல் 2025-ஐ விட ஏப்ரல் 2026 வெப்பமான ஆண்டாக இருந்ததா?


பகல் நேர வெப்பநிலையைப் பொறுத்தவரை, ஏப்ரல் 2026 பொதுவாகக் குளிர்ச்சியாக இருந்தது. இதற்குக் காரணமாக, வழக்கத்தைவிட அதிகமாக செயல்பட்ட மேற்கத்திய இடையூறுகள் (Western Disturbances) அதிக மழையை கொண்டு வந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்தது. இதற்கு முந்தைய ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகபட்ச வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், 2026-ஆம் ஆண்டில் காணப்பட்ட மிதமான சூழல் பகல்நேரத்தில் மட்டுமே காணப்பட்டது. இருப்பினும், இரவு நேர வெப்பநிலைகள் தொடர்ந்து அதிகமாகவே இருந்தன. டெல்லியில் இரவு வெப்பநிலை இயல்பைவிட 2.2°C அதிகமாகவும், பஞ்சாபில் 2.4°C அதிகமாகவும் பதிவானது. மேலும், தேசிய சராசரியானது, குறிப்பிட்ட மாவட்டங்களில்  நிலவிய தீவிரமான நிகழ்வுகளை வெளிக்காட்டவில்லை.


நகர்ப்புற வெப்பத் தீவுகள் எவ்வாறு செயல்படுகின்றன, மற்றும் குளிரூட்டிகளின் பங்கு என்ன?


ஒரு நகரம் மண் மற்றும் தாவரங்களுக்குப் பதிலாக கான்கிரீட் மற்றும் நிலக்கீல் மணற்கலவை ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது, ​​அந்த மேற்பரப்புகள் பகலில் வெப்பத்தை உறிஞ்சி, இரவில் மெதுவாக வெளியிடுகின்றன. குறைந்த ஆவியாதல் குளிர்ச்சி,  மோசமான காற்றோட்டம் மற்றும் வெப்பம் ஆகியவற்றுடன் இது சேரும்போது, ​​இந்திய நகரங்கள் சுற்றியுள்ள கிராமப்புறங்களைவிட 2–10°C வரை அதிக வெப்பமாக மாறக்கூடும். இந்த வெப்ப வேறுபாடு இரவில் அதிகமாக இருக்கும். குளிரூட்டிகள் இதை மேலும் தீவிரப்படுத்துகின்றன: ஒவ்வொரு அலகும் வெப்பத்தை வெளிப்புறமாக வெளியேற்றுவதன் மூலம்  உட்புறத்தைக் குளிர்விக்கிறது.


காலநிலை மாற்றத்தை விட நகர்ப்புற வெப்பத் தீவுகள் வெப்பத்தை உருவாக்குவதில் பெரிய காரணியாக உள்ளதா?


பெரும்பாலான நகரங்களில், இல்லை என்றே சான்றுகள் காட்டுகின்றன. Nature Cities  இதழில் 2024-ல் வெளியான ஒரு ஆய்வின்படி, நாடு முழுவதற்கும் பத்தாண்டுக்கு 0.26°C என்ற அளவில் வெப்பமடைவதோடு ஒப்பிடுகையில், இந்திய நகரங்கள் பத்தாண்டுக்கு 0.53°C என்ற அளவில் வெப்பமடைவதாகக் கண்டறியப்பட்டது. ஆனால், அந்த நகர்ப்புற வெப்பமயமாதலில் 38% மட்டுமே நகரமயமாக்கலால் ஏற்படுகிறது என்றும், இது பிராந்திய, காலநிலை சார்ந்த வெப்பமயமாதலுக்கு மேல் ஏறக்குறைய 60% அதிகரிப்பு என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டது. நகர்ப்புறங்களில் வெப்பம் அதிகரிப்பதற்கு வெப்பமயமாதல் முக்கியமான தொடர்பை கொண்டுள்ளது. இது, பிராந்திய அளவிலான பருவநிலை மாற்றமே நகர்ப்புறங்களில் ஏற்படும் வெப்பநிலையில் பெரும்பகுதியை உருவாக்குகிறது என்பதைக் காட்டுகிறது.


உருவாகி வரும் எல் நினோ, வெப்பநிலை மற்றும் பருவமழையை எவ்வாறு பாதிக்கும்?


இது வெப்பமான, வறண்ட பருவத்திற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. எல் நினோ, பருவமழையின் ஈரப்பதம் நிறைந்த மேல்நோக்கி செல்லும் தன்மையை பலவீனப்படுத்துகிறது. இது வறண்ட "இடைவெளி" (break) காலங்களை அதிகரிக்க செய்கிறது. வடமேற்குப் பகுதி முழுவதும் ஈரப்பதமிக்க வெப்ப அலைகளைத்  அதிகரிக்க செய்யும்.


Original article : Is India getting hotter? -Jacob Koshy

Share: