நீதிபதிகளின் நியமனம் தொடர்பான அரசியலமைப்பு விதிகள் என்ன? -ரோஷ்ணி யாதவ்

முக்கிய அம்சங்கள்:


— “மாற்றம் ஒன்றே மாறாதது. சமூகம் வளர்ச்சியடையும்போது, நிறுவனங்களும் அதற்கேற்ப தங்கள் முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். இது கொலீஜியம் (Collegium) அமைப்புக்கும் பொருந்தும். இது ஒரு காலத்தில் இருந்ததைவிட இன்று நிச்சயமாக மிகவும் வெளிப்படையானதாகவும் தெளிவாகவும் உள்ளது. ஆனாலும், இதை இன்னும் சிறப்பாக்க எப்போதும் வாய்ப்பு உள்ளது,” என்று அவர் கூறினார்.


— இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், கொலீஜியம் (Collegium) அமைப்பு காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தாலும், “எந்தவொரு அமைப்பாக இருந்தாலும் அல்லது நடைமுறையாக இருந்தாலும், எவ்வளவு நன்கு நிலைநிறுத்தப்பட்டிருந்தாலும், ஏதோ ஒரு கட்டத்தில் மேம்பாடு தேவைப்படும்” என்று தலைமை நீதிபதி (Chief Justice of India (CJI)) கூறினார். வேட்பாளர்களுடன் நேரடி கலந்துரையாடலை அறிமுகப்படுத்தியதை அவர் “மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை” என்று சுட்டிக்காட்டினார். மேலும், இது உறுப்பினர்கள் நடுநிலையான முடிவு எடுக்க அனுமதிக்கிறது என்றும் அவர் கூறினார்.


— தலைமை நீதிபதியின் “வழக்குகளின் பட்டியலைத் தீர்மானிப்பவர்” (master of the roster) என்ற பங்கு பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதாக அவர் கூறினார். தலைமை நீதிபதி மிக மூத்த நீதிபதியாக நிர்வாகப் பொறுப்புகளை வகித்தாலும், அது வழக்குகளைத் தன்னிச்சையாக ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தைத் தருவதில்லை என்றார். அனுபவத்தையும், கிடைக்கும் வசதிகளையும் கருத்தில் கொண்டு, கலந்தாலோசனை செய்த பிறகே முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


— பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, பஞ்சாபின் போதைப்பொருள் பிரச்சினை தொடர்பான வழக்குகளை அவர் கையாண்டார். அதை நினைவுகூர்ந்த தலைமை நீதிபதி (CJI), அந்த காலத்தை "பொறுமைக்கான ஒரு உண்மையான சோதனையாகவும், வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், அன்பின் உழைப்பாகவும்" அவர் விவரித்தார்.


— 2015-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்தப் பிரச்சினை தனக்கு ஒதுக்கப்பட்டதாக அவர் கூறினார். அதைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக அவர் அதனை தவறாமல் பட்டியலில் வைத்திருந்தார் என்றும் தெரிவித்தார். “இது ஒரே ஒரு விரிவான உத்தரவால் தீர்க்க முடியாத வழக்கு என்பதால்  இதற்கு குடும்பங்கள், அதிகாரிகள், நிறுவனங்கள் ஆகியோருடன் இணைந்து செயல்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.


— அவர் ஒரு முழுமையான அணுகுமுறையை விளக்கினார். அதில் குற்றவியல் விசாரணை, எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், குற்றவாளிகளை நாடு கடத்துதல், போதை மறுவாழ்வு மையங்களில் சிகிச்சை அளித்தல், பாடத்திட்ட மாற்றங்கள் மூலம் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை இடம்பெற்றன. "அதனால், இந்த வழக்கில் கையாளப்பட்ட அணுகுமுறை முழுமையானதாக இருந்தது: தண்டனை, தடுப்பு, மறுவாழ்வு மற்றும் கல்வி அடிப்படையிலானது," என்று அவர் கூறினார்.


— நீதிமன்ற விசாரணைகளின் சுருக்கமான வீடியோக்களால் சமூக ஊடகங்களில் நீதிபதிகள் மீது எழும் விமர்சனங்களையும் அவமதிப்புகளையும் குறித்து தலைமை நீதிபதி தெளிவாகப் பேசினார். அவர் கூறியது: “அந்த மாதிரியான இணையக் கேலிகளை (Trolling) எந்த விலை கொடுத்தாவது புறக்கணிக்க வேண்டும். ஏனெனில் அது அறியாமையால் வருவது; அது ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார். சமூக ஊடகங்களில் என்ன பேசப்படுகிறது என்பதற்காக கவனத்தைத் திருப்பினால், நீதி வழங்கும் பணி தவிர்க்க முடியாமல் பாதிக்கப்படும்.”


— எதிர்காலத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைப்பதற்கும், அனைவருக்கும் நீதி மற்றும் பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அமைப்புகளையும் நடுநிலையாகத் தீர்க்கும் முறையையும் வலுப்படுத்துவதிலேயே தன் கவனம் இருக்கும் என்று அவர் கூறினார். "அது எனக்கு மிக அடிப்படையானது" என்றும் அவர் தெரிவித்தார்.


உங்களுக்குத் தெரியுமா? 


— இந்திய அரசியலமைப்பின் 124(1)-ஆவது சட்டப்பிரிவின்படி, இந்திய உச்சநீதிமன்றம் என்பது இந்தியத் தலைமை நீதிபதி தலைமையில், அவருடன் சேர்ந்து சில பிற நீதிபதிகள் கொண்ட ஒரு நீதிமன்றமாக அமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.


— சட்டப்பிரிவு 124(2)-ன்படி: "உச்ச நீதிமன்ற நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். நியமனத்திற்கு முன், தேவையான உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுடன் கலந்தாலோசித்த பிறகே நியமன ஆணை வழங்கப்படும். நீதிபதிகள் 65 வயது வரை பதவியில் இருப்பர் என்று கூறப்படுகிறது. ஆனால், தலைமை நீதிபதியைத் தவிர மற்ற நீதிபதிகளை நியமிக்கும்போது இந்தியத்  தலைமை நீதிபதியுடன் கட்டாயம் கலந்தாலோசிக்க வேண்டும்."


— கொலீஜியம் (Collegium) என்பது உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான ஒரு அமைப்பாகும். இது "நீதிபதிகள் வழக்குகள்" (Judges Cases) என்று அழைக்கப்படும் தொடர்ச்சியான உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் உருவானது ஆகும்.

Original link:

What are the constitutional provisions related to the appointment of judges? 


Share:

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026: இந்தியாவின் வளர்ச்சி மாதிரி நடுத்தர வர்க்கத்தினரை பின்தங்க வைக்கிறது. -தீபன்ஷு மோகன் மற்றும் அங்குர் சிங்

உலக சமத்துவமின்மை ஆய்வகம் மற்றும் இந்தியாவின் அணுகல் (சமத்துவமின்மை) குறியீட்டிலிருந்து பெறப்பட்ட புதிய தரவுகள் கட்டமைப்பு நெருக்கடியை வெளிப்படுத்துகின்றன. செல்வந்தர்களிடையே செல்வம் அதிகரித்து வருகிறது. மக்களின் திறன்கள் மற்றும் நல்வாழ்வில் செய்யப்படும் முதலீடு மந்தமடைந்துள்ளது.


சமீபத்திய உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (World Inequality Report (WIR)) வெளியீடு, இந்தியாவின் வளர்ச்சி மாதிரியின் அடிப்படைகளையும் அதன் விநியோக நெருக்கடியையும் மறுபரிசீலனை செய்ய ஒரு வாய்ப்பை வழங்குகிறது. Thomas Piketty போன்ற பொருளாதார வல்லுநர்களின் முன்னோடிப் பணிகளை அடிப்படையாகக் கொண்ட 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களின் வலையமைப்பான பாரிஸை தளமாகக் கொண்ட உலக சமத்துவமின்மை ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, விநியோகக் கணக்குகளைக் கண்காணிப்பதில் உலகளாவிய தங்கத் தரத்தை பிரதிபலிக்கிறது.


உலக சமத்துவமின்மை அறிக்கை தரவுகள் எந்தவித சமரசமும் அற்றவை. பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அதிக ஏற்றத்தாழ்வுள்ள நாடுகளைப் போலவே, இந்தியாவின் முதல் 1% மக்கள் மொத்த வருமானத்தில் 22–23% சம்பாதிக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலும், அடித்தட்டு மக்களில் பெரும்பாலானோர் இதனால் பெரிதாகப் பயனடையவில்லை.


வாங்கும் சக்தி சமநிலை (purchasing power parity) அடிப்படையில் பார்த்தாலும், அடித்தட்டு மக்களில் 50 சதவீதத்தினர் உலகளாவிய சராசரியைவிடக் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். செல்வப் பங்கீட்டில் ஏற்றத்தாழ்வு இன்னும் அதிகமாக உள்ளது. நாட்டின் மொத்தச் செல்வத்தில் 40 சதவீதத்தை இப்போது முதல் 1 சதவீதத்தினர் வைத்திருக்கின்றனர்; 1990-களிலிருந்து இந்த பங்கு கடுமையாக அதிகரித்துள்ளது. அதே சமயம் அடித்தட்டு மக்களிடம் குறைவான செல்வமே உள்ளது.

முக்கியமாக, உலக சமத்துவமின்மை அறிக்கை ஒரு கட்டமைப்பு ரீதியான அபாய எச்சரிக்கையை அடையாளம் காட்டுகிறது: 'நடுத்தர வர்க்கம்' போதிய வருமானத்தை பெறாததால் பல்வேறு சந்தித்து வருகிறது. இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 40 சதவீதத்தினர் மொத்த வருமானத்தில் 30 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றனர். இது, அதிக சமத்துவமான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் காணப்படும் 40-45 சதவீதத்தைவிட குறைவான அளவாகும். இது, இந்தியா ஒரு பரந்த நுகர்வோர் வர்க்கத்தை உருவாக்கவில்லை என்பதையும், மாறாக, ஒரு சிறிய, அதீத செல்வந்த உயரடுக்கு மற்றும் ஒரு பரந்த, போராடும் பெரும்பான்மையினரைக் கொண்ட ஒரு இரட்டைப் பொருளாதாரத்தை உருவாக்கி வருகிறது என்பதை வெளிக்காட்டுகிறது.


இருப்பினும், எந்தவொரு விளைவு அடிப்படையிலான பகுப்பாய்வுத் தரவும் என்ன நடந்தது என்பதை மட்டுமே விவரிக்க முடியும்; வாய்ப்புகள் ஏன் இவ்வளவு கடுமையாகப் பங்கீடு செய்யப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள, ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் உள்ள புதிய பொருளாதார ஆய்வுகளுக்கான மையம் உருவாக்கியுள்ள 2025-ஆம் ஆண்டு பல்பரிமாண அணுகல் சமத்துவமின்மை குறியீடு உதவக்கூடும்.


வருமானத்தைத் தாண்டி அணுகல் (சமத்துவமின்மை) குறியீடு, ஒவ்வொரு ஆண்டும், ஐந்து முக்கியத் தூண்களில், அணுகலின் “4A”க்களை — அதாவது, கிடைக்கும்தன்மை, கட்டுப்படியாகும் தன்மை, அணுகக்கூடிய தன்மை மற்றும் பொருத்தமான தன்மை ஆகியவற்றை — மதிப்பிடுகிறது. அணுகல் (சமத்துவமின்மை) குறியீட்டின் தரவுகள், வளர்ச்சியைத் திறன்களாக மாற்றும் நிறுவன வழிமுறைகள் கட்டுப்படுத்தப்பட்டே இருக்கும் ஒரு கட்டமைப்பு ரீதியான அணுகல் பங்கீட்டு முறையே என்பதை வெளிப்படுத்துகிறது.


இந்தப் பிரச்சனை தற்செயலாக ஏற்படவில்லை. மாறாக கடந்த பத்தாண்டுகளில், தனித்துவமான நிதித் தேர்வுகளின் விளைவாகும். கடந்தகாலத்தை நோக்கிய ஒரு பகுப்பாய்வு, இயற்பியல் உள்கட்டமைப்பு மீதான ஒன்றிய அரசின் மூலதனச் செலவினம் சாதனை அளவுகளுக்கு உயர்ந்திருந்தாலும், மனித மூலதனத்தில் மாநிலத்தின் முதலீடு திறம்பட தேக்கமடைந்துவிட்டது என்பதை வெளிப்படுத்துகிறது.


பட்ஜெட் தரவுகளின்படி, கல்விக்கான மொத்த பொதுச் செலவினம் கடந்த பத்தாண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதமாகவே தொடர்ந்து வருகிறது. இது நீண்டகாலமாக நிர்ணயிக்கப்பட்ட 6 சதவீத இலக்கைவிட மிகக் குறைவான அளவாகும். அதே சமயம், சுகாதாரச் செலவினம் 1.2 முதல் 1.5 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. பெயரளவிலான பட்ஜெட் ஒதுக்கீடுகள் (nominal budget allocations) அதிகரித்தபோதிலும், பணவீக்கம் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சியின் ஒருங்கிணைந்த அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அவை போதுமானதாக இல்லை.


நிதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals (SDG)) இந்தியா குறியீடு 2023–24, இந்த முரண்பாட்டை புவியியல் கண்ணோட்டத்தில் எடுத்துக்காட்டுகிறது. ஒட்டுமொத்த மதிப்பெண்கள் 71-ஆக உயர்ந்திருந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக அணுகலுக்கும் இடையே ஒரு ஆழமான வேறுபாடு இருப்பதை இந்தத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த முரண்பாடு குஜராத் போன்ற அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட மாநிலங்களில் அதிகமாக உள்ளது.


நிதி ஆயோக் தரவுகளின்படி, கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் 79 மதிப்பெண்களுடன் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நிலையில், பீகார் 57 மதிப்பெண்களுடன் பின்தங்கியுள்ளது. இது ஒரு மிகப்பெரிய திறன் இடைவெளியை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது. மாநிலங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு ஓரளவிற்கு குறைந்திருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் (intra-state inequality) ஏற்றத்தாழ்வு அதிகளவில் அதிகரித்துள்ளது. மாநிலங்களுக்குள் ஏற்படும் வளர்ச்சியின் பலன்கள் நகர்ப்புற மையங்களாலும், மூலதன உரிமையாளர்களாலும் அதிகளவில் கைப்பற்றப்படுகின்றன. இதனால் ஊரகப் பகுதிகள் பின்தங்கி விடுகின்றன.


மற்றொரு உதாரணம் ஊரக-நகர்ப்புறப் பிளவு ஆகும். இது நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளி ஏற்றத்தாழ்வுகளுக்கு ஒரு முக்கிய காரணமாகும். அணுகல் சமத்துவமின்மை குறியீடு தரவுகளின்படி, 92 சதவீத நகர்ப்புறக் குடும்பங்களுக்குத் தூய்மையான சமையல் எரிபொருள் கிடைக்கும் நிலையில், ஊரகப் பகுதிகளில் உள்ள குடும்பங்களில் 49.8 சதவீதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது. இதேபோல், நகர்ப்புற இந்தியாவில் 58.9 சதவீதத்தினர் தங்கள் வளாகத்திற்குள் குழாய் நீரைப் பெறும் வசதியைப் பெற்றுள்ள நிலையில், இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 22.5 சதவீதத்தினருக்கு மட்டுமே இந்த அடிப்படைத் தேவை கிடைக்கிறது.


இந்த உள்கட்டமைப்பு பற்றாக்குறை ஊரகப் பகுதிகளில் ஏழைகள் உள்ள, குறிப்பாகப் பெண்கள் மீது ஒரு நேரச் சுமையை ஏற்படுத்துகிறது. இது பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 15.7 சதவீதமாக மட்டுமே இருப்பதை வெளிக்காட்டுகிறது. இது ஆசியாவிலேயே மிகக் குறைந்த விகிதங்களில் ஒன்றாகும். அணுகல் சமத்துவமின்மை குறியீடு (AEI) அமைப்பு சமூகவாரியான போக்குகளை ஆய்வு செய்யும்போது வெளிப்படும் கிடைமட்ட சமத்துவமின்மை (horizontal inequality) அதிகக் கவலை அளிப்பதாக உள்ளது.


இந்த இரண்டு அறிக்கைகளின் தொகுப்பு தற்போதைய கொள்கைச் சிந்தனைக்குமுன் ஒரு சவாலை முன்வைக்கிறது. சமத்துவமின்மை என்பது கிடைமட்டமானது மட்டுமல்ல, செங்குத்தானது என்றும், பொதுச் செல்வம் சரிந்ததே இதற்கு முக்கியக் காரணம் என்றும் உலக சமத்துவமின்மை அறிக்கை எச்சரிக்கிறது. வளங்களை வழங்குவதற்கான அமைப்புகள் பலவீனமாக இருப்பதும், அவற்றை அரசாங்கம் முறையாக நிர்வகிக்கத் தவறவதும் ஏற்பட்டால், வளங்களை வழங்குவது பெரிய அளவில் உதவாது.


உலக சமத்துவமின்மை அறிக்கை அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டபடி, பெரும் செல்வந்தர்கள் மீது விதிக்கப்படும் ஒரு மிதமான சொத்து வரி (modest wealth tax), உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.45 சதவீதம் முதல் 1.11 சதவீதம் வரை வருவாயை ஈட்டி, அணுகல் சமத்துவமின்மை குறியீட்டை (AEI) தாண்டி அடையாளம் காணப்பட்ட இடைவெளிகளை நிரப்புவதற்குத் தேவையான பொது முதலீடுகளுக்கு நிதியளிக்கக்கூடும்.


இருப்பினும், பணம் “4As” நோக்கி திசைதிருப்பப்பட வேண்டும் — பள்ளிகள் கட்டப்படுவது மட்டுமல்லாமல், பட்டியல் பழங்குடியினர் (ST) சமூகங்களுக்கு அணுகக்கூடியதாக இருக்கவேண்டும்; மருத்துவமனைகள் இருப்பது மட்டுமல்லாமல், ஊரக பகுதிகளில் உள்ள ஏழை குடும்பங்கள் வாங்கக்கூடியதாக இருக்க வேண்டும். இந்தியாவின் சமத்துவமின்மைப் பிரச்சினை வெறும் மறுவிநியோகம் (redistribution) மட்டுமல்ல, அரசின் திறன் சார்ந்தது. பொதுச் சொத்துக்களும் நிறுவனங்களும் வலுப்படுத்தப்படாவிட்டால், மக்களுக்கு உதவுவதற்காக விதிக்கப்படும் வரிகள் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தாது.


மோகன், ஓ. பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆவார். இவர் தற்போது லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் வருகை தரும் பேராசிரியராகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வருகை தரும் கல்வி ஆய்வாளராகவும் உள்ளார். சிங், ஜிண்டால் அரசாங்கம் மற்றும் பொதுக் கொள்கைப் பள்ளியில் பயின்று வருகிறார். மேலும்,, ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுகள் மையத்தில் ஆராய்ச்சி ஆய்வாளராகவும் பணியாற்றுகிறார்.

Original link:

World Inequality Report 2026: India’s growth model is leaving the ‘middle’ behind.


Share:

கர்நாடகாவின் புதிய வெறுப்புப் பேச்சு சட்டம் ஏன் விமர்சிக்கப்படுகிறது? -அபூர்வா விஸ்வநாத்

கர்நாடகா வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு குற்றங்கள் (தடுப்பு) மசோதா, 2025-ன் நோக்கம், 'வெறுப்புப் பேச்சைப் பரப்புவது, வெளியிடுவது அல்லது ஊக்குவிப்பதைத் தடுத்து நிறுத்துவது' என்று கூறுகிறது.


கடந்த புதன்கிழமை, கர்நாடக அரசு மாநில சட்டமன்றத்தில் ஒரு புதிய சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தது. இது முதல்முறையாக வெறுப்புப் பேச்சுகளைக் கையாள்வதற்கான சட்டம் என்று கூறப்படுகிறது. கர்நாடக வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் (தடுப்பு) மசோதாவானது, 2025 (The Karnataka Hate Speech and Hate Crimes (Prevention) Bill, 2025), "வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புதல், வெளியிடுதல் அல்லது ஊக்குவிப்பதைக் கட்டுப்படுத்துவதும், தடுப்பதும்" மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதுமான இழப்பீட்டை வழங்குவதும் இதன் நோக்கங்களாகக் குறிப்பிடப்படுகிறது.


இந்த மசோதா, 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை உட்படக் கடுமையான அபராதங்களை முன்மொழிகிறது. மேலும், இது வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சாகக் கருதப்படும் இணையதளப் பதிவுகளைத் தடுக்கவோ அல்லது அகற்றவோ அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இது சட்டத்தின் வரையறைகளையும் கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், இது பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தும் ஒரு கடுமையான சட்டமாக இருப்பதால் கவலை எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


கர்நாடகாவின் வெறுப்புப் பேச்சுச் சட்டம், மாநில அரசை வெறுப்புப் பேச்சுக்கு எதிராகத் தடுப்பு நடவடிக்கை எடுக்கவும், மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் இந்த இது வழிவகை செய்கிறது.


விரிவான வரையறை


இந்த மசோதாவின்படி, வெறுப்புக் குற்றம் என்பது "வெறுப்புப் பேச்சின் தகவல் தொடர்பு" என வரையறுக்கப்படுகிறது. இது, ஒரு தனிநபர் (வாழ்பவர் அல்லது இறந்தவர்) அல்லது ஒரு குழுவிற்கு எதிராகவோ, அல்லது ஒரு சமூகத்திற்கு எதிராகவோ, ஏதேனும் ஒரு பாரபட்சமான நலன்களின் அடிப்படையில், தீங்கு, நல்லிணக்கமின்மை அல்லது வெறுப்பு, பகைமை அல்லது விரோத உணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொதுவில் வெளிப்படுத்தப்படும் வாய்மொழி, எழுத்து, காட்சி அல்லது மின்னணு வடிவத்திலான எந்தவொரு வெளிப்பாட்டையும் உள்ளடக்கியதாக வரையறுக்கப்படுகிறது.


இந்தச் சட்டம், "இடையூறு நலன்" (prejudicial interest) என்றால் என்ன என்பதை விரிவாக வரையறுக்கிறது. அதில் மதம், இனம், சாதி, சமூகம், பாலினம், பால் அடையாளம், பாலியல் நாட்டம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி, குறைபாடு அல்லது பழங்குடி ஆகிய காரணங்களால் ஏற்படும் பாரபட்சமும்  சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான கலைப் படைப்புகள், செயல்திறன்கள் அல்லது பிற வெளிப்பாடுகள்; கல்வி அல்லது அறிவியல் விசாரணைகள்; நியாயமான மற்றும் துல்லியமான அறிக்கைகள் அல்லது கருத்துகள்; மதமாற்றம் (proselytization) ஆகியவை இதிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.


வெறுப்புப் பேச்சு கட்டுப்பாடுகளுக்கென்று தனியாக ஒரு சட்டம் இல்லை. ஆனால், அதைக் கையாள பெரும்பாலும் பாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita (BNS)) சில பிரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் புதிய வரையறை, தற்போது பயன்படுத்தப்படும் இந்தப் பிரிவுகளைவிட மிகவும் விரிவானதாகவும் பரந்ததாகவும் உள்ளது. பிரிவு 299: மத உணர்வுகளைக் கோபப்படுத்தும் வகையில் பேசுதல் அல்லது செயல், பிரிவு 298: வழிபாட்டுத் தலத்தை சேதப்படுத்துதல் அல்லது அசுத்தப்படுத்துதல், பிரிவு 300: மதக் கூட்டங்களை குழப்பும் வகையில் செயல்படுதல், பிரிவு 301: சமாதி அல்லது புதைக்கும் இடத்தில் அத்துமீறுதல், பிரிவு 302: ஒருவரின் மத உணர்வுகளை வேண்டுமென்றே காயப்படுத்தும் நோக்கில் சொற்களைப் பயன்படுத்துதல் போன்ற சட்டப்பிரிவுகள்

பெரும்பாலும் மதம் சம்பந்தப்பட்ட வெறுப்புப் பேச்சுகளைக் கையாள்வதற்கே பயன்படுகின்றன.


அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்தும் சட்டங்களில் உள்ள அதிகமான விரிவும் தெளிவின்மையும் கொண்ட வரையறைகள், பெரும்பாலும் அந்தச் சட்டத்தை தன்னிச்சையாகவோ தவறாகவோ பயன்படுத்த வழிவகுக்கும் என்கின்றனர்.  இதுபோன்ற சட்டங்களை முதன்மையாக அமல்படுத்தும் காவல்துறையினர், சட்டத்தை பாகுபாடு இன்றி நடைமுறைப்படுத்தவும், செல்லுபடியான பேச்சுரிமையை சட்டவிரோத செயல்களிலிருந்து சரியாக வேறுபடுத்திப் பார்க்கவும் திறன் பெற்றிருக்க வேண்டும். இதுபோன்ற தெளிவில்லாத வரையறைகள் “குளிரூட்டும் விளைவை” (Chilling Effect) உண்டாக்குகின்றன. அதாவது, மக்கள் சட்டவிரோதமான செயல்களிலிருந்து பயந்து, அவற்றிலிருந்து மிகத் தொலைவில் இருக்க முயல்கிறார்கள். 2015-ஆம் ஆண்டு வந்த முக்கியமான ஷ்ரேயா சிங்கால் vs இந்திய ஒன்றியம் வழக்குத் தீர்ப்பில், ஒரு குற்றவியல் சட்டம் குற்றத்தை போதுமான அளவு துல்லியமாக வரையறுக்கத் தவறினால், அது தெளிவின்மை காரணமாக செல்லாது (void for vagueness) என்று உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.


அரசாங்கத்தின் நீக்குதல் அதிகாரங்கள்


இந்த மசோதா, வெறுப்புக் குற்றப் பதிவுகளைத் (hate crime materials) தடுக்கவோ அகற்றவோ மாநில அரசுக்கு புதிய அதிகாரங்களை வழங்குகிறது. மாநில அரசு நியமிக்கும் ஒரு அதிகாரிக்கு, மின்னணு ஊடகங்கள் உட்பட எந்த சேவை வழங்குநர், இடைத்தரகர், நபர் அல்லது நிறுவனத்திடமும், அவர்களது தளத்தில் இருந்து வெறுப்புக் குற்றப் பதிவுகளைத் தடுக்கவோ அகற்றவோ உத்தரவிடும் அதிகாரம் உள்ளதாகக் கூறப்படுகிறது. 


அத்தகைய தடை உத்தரவுகளை எதிர்க்கும் செயல்முறை அலுவலக ரீதியானது மற்றும் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். பொதுவாக, 2009-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பம் (தகவலுக்கான பொதுமக்கள் அணுகலைத் தடுப்பதற்கான நடைமுறை மற்றும் பாதுகாப்பு) விதிகள் ("தடுப்பு விதிகள்") அரசாங்கம் உள்ளடக்கத்தைத் தடை செய்ய முடிவெடுக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வழங்குகின்றன.





நிறுவன ரீதியான குற்றவாளிகள்


முக்கியமாக, இந்த மசோதா வெறுப்புக் குற்றங்களுக்காக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில் தண்டிக்க முயல்கிறது என்கின்றனர். இதில் “நிறுவனங்கள்” என்பது பதிவு செய்யப்பட்டதாக இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, “நபர்களின் கூட்டமைப்பு” என்று மிகத் தளர்வாக வரையறுக்கப்பட்டுள்ளது.


இந்தச் சட்டத்தின்படி ஒரு குற்றம் செய்யும் நபர் அமைப்பு அல்லது நிறுவனமாக இருந்தால், குற்றம் நடந்த நேரத்தில் அந்த அமைப்பின் வணிகத்தைப் பொறுப்பேற்று நடத்தியவர்களும், அந்த அமைப்பும் குற்றவாளிகளாகக் கருதப்படுவர். அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்படும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த ஏற்பாடு ஒரு முக்கியமான விலக்கைக் கொண்டுள்ளது. அதாவது, ஒரு நபர், அந்த குற்றம் தனக்குத் தெரியாமல் செய்யப்பட்டது என்பதையோ, அல்லது அக்குற்றம் இழைக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான அனைத்து உரிய விழிப்புடன் (due diligence) செயல்பட்டதற்கான ஆதாரத்தை நிரூபித்தால், அவர் தண்டிக்கப்பட மாட்டார். ஒருவர் வெறும் தொடர்பின்மூலம் குற்றவாளியாகக் கருதப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதில் இந்த விலக்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், தாம் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டிய சுமை (onus) குற்றஞ்சாட்டப்பட்டவர் பக்கமே உள்ளது. குற்றவியல் வழக்கின் இயந்திரம் ஒருமுறை இயங்கத் தொடங்கிவிட்டால், அந்தச் செயல்முறைதான் பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனையாக மாறிவிடுகிறது.


தண்டனை


கர்நாடக அரசால் முன்மொழியப்பட்ட மசோதாவின்படி, வெறுப்புக் குற்றத்திற்கு (hate crime) குறைந்தபட்சம் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை கட்டாயம் விதிக்கப்படும், இது ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம், மேலும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும். அடுத்தடுத்த அல்லது மீண்டும் மீண்டும் செய்யப்படும் குற்றங்களுக்கு, தண்டனை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும், இது ரூ.1,00,000 அபராதத்துடன் பத்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. 


பாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita (BNS)) விதிகளில் வெறுப்புப் பேச்சுக் குற்றங்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை உள்ளது. ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை உள்ள குற்றங்களுக்கு “சிறை இல்லை, பிணைதான்” என்பதை உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் வலியுறுத்தியுள்ளது. இதனால், கர்நாடக மசோதாவில் வெறுப்புப் பேச்சுக்கு அதிகரிக்கப்பட்ட தண்டனையை குறிப்பிடத்தக்கதாகக் கருதலாம். இந்த “சிறைக்குப் பதில் பிணை” என்ற தாராளக் கொள்கையை நடைமுறையில் பாதுகாக்க வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், அர்னேஷ் குமார் வழிகாட்டுதல்கள் என அழைக்கப்படுகின்றன.


மற்ற மாநிலங்களும் வெறுப்புப் பேச்சு வழக்குகளில் தேசத்துரோகச் சட்டத்தைப் பயன்படுத்தி, அர்னேஷ் குமார் வழிகாட்டுதல்களை மீற முயன்றுள்ளன என்று சுட்டிக் காட்டப்படுகிறது. உதாரணமாக, அசாம் அரசு பழைய இந்திய தண்டனைச் சட்டத்தில் (Indian Penal Code (IPC))  இருந்த தேசத்துரோகப் பிரிவுக்கு இணையான புதிய பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 152-ஐ (இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்கள்) மேற்கோள் காட்டி, வெறுப்புப் பேச்சு என்று கூறப்படும் கருத்துகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நடந்த ஒடுக்குமுறையில், அசாம் போலீஸ் இரண்டு மாதங்களில் குறைந்தது 97 பேரைக் கைது செய்தது. பாகிஸ்தானை ஆதரிப்பதாகவோ, இந்துக்களுக்கு எதிராகவோ கருதப்பட்ட கருத்துகள், இடுகைகள் மற்றும் தாக்குதல்கள், தேர்தலுடன் தொடர்புடைய “சதி” என்று கூறும் பதிவுகளுக்காகவே பலர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கூடுதல் சட்டம்


இந்த முன்மொழியப்பட்ட சட்டம் "தற்போதைக்கு நடைமுறையில் உள்ள வேறு எந்த சட்டத்தின் விதிகளுக்கும் கூடுதலாக இருக்கும், அவற்றை இழிவுபடுத்தாது" என்று கர்நாடக மசோதா தெளிவுபடுத்துகிறது. இதன் பொருள் பாரதிய நியாய சம்ஹிதாவின் (BNS) உள்ள விதிகளுக்கு மாறாக அல்லாமல், இந்தப் புதிய செயலும் தனியாக ஒரு குற்றமாகச் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

வெறுப்புப் பேச்சைத் தடுக்க புதிய சட்டம் கொண்டுவந்தால் அது பயனுள்ளதாக இருக்குமா என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது. கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் செய்த தலையீடுகள் பெரும்பாலும் வழக்குகளைத் தொடங்குவதிலேயே கவனம் செலுத்தின. 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் அமர்வு, “நாட்டில் வெறுப்பு சூழல் நிலவுகிறது” என்று கூறி, டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநில காவல்துறையினருக்கு, புகார் வந்தால்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றில்லாமல், தாங்களாகவே (suo motu) வெறுப்புப் பேச்சு வழக்குகளில் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. இந்த வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினை என்னவென்றால், இருக்கும் சட்டங்கள் போதாது என்பதல்ல; மாறாக, குறிப்பிட்ட வழக்குகளில் சட்டத்தை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் பாரபட்சமாக நடந்துகொண்டதா என்பதே ஆகும்.


நீதிமன்ற உத்தரவுகளுக்கு தயக்கம் காட்டுவது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. பின்னர், இந்த வழிகாட்டுதல் ஏப்ரல் மாதம் 2023-ஆம் ஆண்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.


Original link:

Why Karnataka’s new hate speech law is being criticised.


Share:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MNREGA) என்றால் என்ன? -ரோஷ்ணி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


- இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், சட்டத்தின் பெயரையே பூஜ்ய பாபு கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் (Pujya Bapu Rural Employment Guarantee Act) என்று மாற்றுவது குறித்து ஒன்றிய அமைச்சரவை விவாதித்ததாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.


— சட்டம் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்திருந்தாலும், 2024-25ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின்கீழ் ஒரு வீட்டிற்கு வழங்கப்படும் சராசரி வேலை நாட்கள் 50 நாட்களாக மட்டுமே இருந்தன. உண்மையில், கடந்த ஆண்டு 100 நாட்களை நிறைவு செய்த குடும்பங்களின் எண்ணிக்கை 40.70 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு, 6.74 லட்சம் குடும்பங்கள் மட்டுமே முழுமையாக 100 நாட்கள் வேலையை முடித்துள்ளன.


— ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் 11-வது நிதிக் குழுவின் கீழ் இந்தத் திட்டத்தைத் தொடர்வதற்கான அரசாங்கத்தின் ஒப்புதல் செயல்முறையைத் தொடர்ந்து இந்த முன்மொழிவு வந்துள்ளது.


— 2022ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) நிர்வகிக்கும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழு, மாநிலங்களின் செயல்திறன் மற்றும் திட்டத்தின் நிர்வாகம் தொடர்பான சிக்கல்களைப் பற்றி ஆய்வு செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டது. குழு கடந்த ஆண்டு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.


— தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் 2005ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மேலும், அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தால் அக்டோபர் 2, 2009 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் என மறுபெயரிடப்பட்டது. ஆதாரங்களின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கம் அதன் பெயரை மாற்றவும், உத்தரவாதமான வேலை நாட்களின் எண்ணிக்கையை 100-லிருந்து 125ஆக அதிகரிக்கவும் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும்.


— கடந்த காலங்களில், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் மூலம் பணி செய்த தொழிலாளர்களிடம் 100 நாள் வேலை உச்சவரம்பை உயர்த்தக் கோரி வருகின்றன. மாநிலங்கள் 100 நாட்களுக்கு மேல் வேலை வழங்க முடியும் என்றாலும், அவர்களே அதற்கு நிதியளிக்க வேண்டும், சில மாநிலங்கள் மட்டுமே அவ்வாறு செய்கிறார்கள்.


 2024-25ஆம் ஆண்டு நிதியாண்டுகளில் உருவாக்கப்பட்ட 290 கோடி மனித நாட்களில், வெறும் 4.35 கோடி வேலை நாட்கள் மட்டுமே மாநிலங்கள் தங்களின் சொந்த நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை ஆகும். தங்களின் சொந்த வளங்களைப் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகும்.


 கடந்த நான்கு ஆண்டுகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின்கீழ் பணிபுரியும் குடும்பங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துள்ளது — 2021-22ஆம் ஆண்டில் 7.25 கோடி 2022-23-ல் 6.18 கோடியாகவும், 2023-24இல் 5.99 கோடியாகவும், 2024-25இல் 5.79 கோடியாகவும் இருந்தது. கடந்த மூன்று நிதியாண்டுகளுக்கான (2022–23 முதல் 2024–25 வரை) தரவுகளில் மேற்கு வங்கம் சேர்க்கப்படவில்லை. ஏனெனில், அந்த மாநிலத்தில் மார்ச் 2022 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


— ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) கீழ், திறமையற்ற உடலுழைப்பு வேலைகளைச் செய்ய தன்னார்வத் தொண்டு செய்யும் வயது வந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு ஊரகப் பகுதிகளில் உள்ள குடும்பமும், ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்கள் கூலி வேலைவாய்ப்பைப் பெற உரிமை உண்டு.


2006-07ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய 200 ஊரக மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், 2007-08ஆம் ஆண்டில் மேலும் 130 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. மேலும், 2008-09 நிதியாண்டு முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.


— மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தின் பிரிவு 3 (1) ஒரு நிதியாண்டில் ஒரு கிராமப்புற குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், மாநிலம்/யூனியன் பிரதேசம் குறிப்பாகக் கோரினால் தவிர, ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்தில் 100 நாட்களுக்கு மேல் வேலைவாய்ப்புக்கான தரவுகளை உள்ளீடு செய்ய தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தின் மென்பொருள் அனுமதிக்காததால், இது நடைமுறையில் ஒரு உச்சவரம்பாக மாறிவிட்டது.


— இருப்பினும், அரசாங்கம் (நிலையான 100 நாட்களை தாண்டி) கூடுதலாக 50 நாட்கள் வேலை செய்ய அனுமதிக்கிறது. உதாரணமாக, வனப் பகுதியில் உள்ள ஒவ்வொரு பழங்குடியினக் குடும்பமும், 2016ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் (Forest Right Act) கீழ் வழங்கப்பட்ட நில உரிமைகளைத் தவிர வேறு எந்தத் தனியார் சொத்தும் அக்குடும்பங்களுக்கு இல்லாத பட்சத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 150 நாட்கள் வேலை பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆவார்.


- மேலும்,, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் சட்டத்தின் பிரிவு 3(4)-ன் கீழ், வறட்சி அல்லது இயற்கை பேரிடர் என்று உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட ஊரக பகுதிகளில், 100 நாட்களுக்கு மேலாக, ஒரு வருடத்தில் கூடுதலாக 50 நாட்களுக்கு திறமையற்ற உடல் உழைப்பு வேலையை (unskilled manual work) அரசங்கத்தால்  வழங்க முடியும்.


Original link:

What is MNREGA Scheme? 



Share:

தீபாவளிக்கு யுனெஸ்கோ (UNESCO) அங்கீகாரம் -ரோஷ்ணி யாதவ்

தீபாவளி UNESCO-வின் புலப்படாத கலாச்சார பாரம்பரியப் பட்டியலில் (Intangible Cultural Heritage List) இடம்பிடித்துள்ள நிலையில், அந்தப் பட்டியல் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மற்ற தகவல்கள் இங்கே.


தற்போதைய செய்தி :


சமீபத்தில், 'தீப ஒளித் திருநாளுக்கான” இந்தியாவின் பரிந்துரை, 2025-ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) மனிதகுலத்தின் புலப்படாத பண்பாட்டுப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தீபாவளியைத் தவிர, டாங்கைலின் பாரம்பரிய புடவை நெசவுக் கலையும் (saree weaving art of Tangail) இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்தச் சூழலில், புலப்படாத கலாச்சார பாரம்பரியப் பட்டியல் குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் புலப்படாத கலாச்சார பாரம்பரியப் பட்டியல் (Intangible Cultural Heritage (ICH)) என்பது தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வரும் வாழும் மரபுகள், திறன்கள் மற்றும் வெளிப்பாடுகளை உள்ளடக்கியது. இவை வெறும் பொருட்கள் அல்ல, மாறாக அவை அடையாளம் மற்றும் பன்முகத்தன்மையை வலுப்படுத்தும் நடைமுறைகளாகும். மேலும், இவை மனிதகுலத்திற்கு மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. புலப்படாத பண்பாட்டுப் பாரம்பரியப் பட்டியலில் உள்ள  ஐந்து துறைகள்:


(i) வாய்மொழி மரபுகள்,


(ii) நிகழ்த்துக் கலைகள்,


(iii) சமூக நடைமுறைகள், சடங்குகள் மற்றும் பண்டிகைகள்,


(iv) இயற்கை மற்றும் பிரபஞ்சம் பற்றிய அறிவு


(v) பாரம்பரிய கைவினைத்திறன்.


2. உலகம் முழுவதும் உள்ள முக்கியமான புலப்படாத கலாச்சார  பாரம்பரியங்களுக்குச் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளது.


3. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு புலப்படாத கலாச்சார பாரம்பரியம் என்பது பாரம்பரியமான, சமகாலத்திய மற்றும் ஒரே நேரத்தில் நடைமுறையில் உள்ள, அனைவரையும் உள்ளடக்கிய, பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாகும். உலகமயமாக்கல் வளரும்போது, ​​புலப்படாத பண்பாட்டுப் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க இந்த பட்டியல் உதவுகிறது. இது வெவ்வேறு சமூகங்களின் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்வது, கலாச்சாரங்களுக்கு இடையேயான உரையாடல் மற்றும் வெவ்வேறு வாழ்க்கை முறைகளுக்கு இருதரப்பு மரியாதையை உருவாக்குகிறது.


4. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் புலப்படாத பண்பாட்டுப் பாரம்பரிய பட்டியலில் இப்போது 140 நாடுகளைச் சேர்ந்த 700 கூறுகள் உள்ளன. இந்தியாவில் தற்போது கும்பமேளா, கொல்கத்தாவின் துர்கா பூஜை, குஜராத்தின் கர்பா நடனம், யோகா, வேத மந்திரங்களின் பாரம்பரியம் மற்றும் ராம்லீலா உள்ளிட்ட 16 கூறுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.


புலப்படாத கலாச்சார பாரம்பரியம்

கல்வெட்டு ஆண்டு

குடியாட்டம், சமஸ்கிருத நாடகம்

2008

வேத மந்திரங்களை உச்சரிக்கும் பாரம்பரியம்

2008

ராமலீலா, ராமாயணத்தின் பாரம்பரிய நிகழ்ச்சி

2008

ராம்மன், இந்தியாவின் கர்வால் இமயமலையின் மத விழா மற்றும் சடங்கு அரங்கம்.

2009

சாவ் நடனம்

2010

ராஜஸ்தானின் கல்பேலியா நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்கள்

2010

முடியட்டு, சடங்கு நாடகம் மற்றும் கேரளாவின் நடன நாடகம்

2010

லடாக்கின் புத்த மந்திர உச்சாடனம்: இமயமலைக்கு அப்பால் உள்ள லடாக் பகுதியில் புனித புத்த நூல்களை ஓதுதல்.

2012

மணிப்பூரின் சங்கீர்த்தனா, சடங்கு பாடல், டிரம்ஸ் வாசித்தல் மற்றும் நடனம்

2013

பஞ்சாபின் ஜான்டியாலா குருவின் தாத்தேராக்களிடையே பாரம்பரிய பித்தளை மற்றும் செம்பு கைவினைப் பாத்திரங்கள் தயாரித்தல்.

2014

நவ்ரஸ்

2016

யோகா

2016

கும்பமேளா

2017

கொல்கத்தாவில் நடைபெறும் துர்கா பூஜை

2021

குஜராத்தின் கர்பா

2023

தீபாவளி

2025


உங்களுக்குத் தெரியுமா?

உலகம் முழுவதும் உள்ள கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியங்களைப் பாதுகாப்பதில் UNESCO முக்கியப் பங்காற்றி வருகிறது. மனிதகுலத்திற்குச் சிறந்த மதிப்புமிக்க இடங்களைக் கண்டறிந்து, பாதுகாத்து, பேணிப் பராமரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இது, UNESCO-வால் 1972ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமான, உலக கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பது தொடர்பான மாநாட்டின் மூலம் வழிநடத்தப்படுகிறது.


ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) புலப்படாத கலாச்சார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி சேர்க்கப்பட்டதன் முக்கியத்துவம்


1. பட்டியலில் தீபாவளியின் பெயர் இடம்பெற்றிருப்பது, பண்டிகையின் பெருமையை உயர்த்துகிறது, அதன் மரபுகளைப் பாதுகாக்க ஊக்குவிக்கிறது மற்றும் ஒரு துடிப்பான கலாச்சார வெளிப்பாடாக அதன் மீதான உலகளாவிய விழிப்புணர்வை அதிகரிக்கிறது.


2. நடைமுறை ரீதியாகப் பார்த்தால், இது சுற்றுலாவையும் கலாச்சாரப் பரிமாற்றங்களையும் மேம்படுத்துகிறது. மேலும், அதன் மரபுகளை துடிப்புடன் வைத்திருக்கும் கைவினைக் கலைஞர்களுக்கு (artisans) நிலையான வருமானத்தை உறுதி செய்கிறது.


3. இந்தியாவின் தீபாவளி பரிந்துரை, பரந்து விரிந்துள்ள இந்திய வம்சாவளியினரை இலக்காகக் கொண்டுள்ளது. அரசுகளுக்கிடையேயான குழு, உறுப்பு நாடுகள் கையொப்பமிட்ட 2003-ஆம் ஆண்டு மாநாட்டின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்கிறது மற்றும் உறுப்பு நாடுகள் முழுவதும் அவற்றின் திறமையான செயல்பாடுகளை உறுதி செய்கிறது. இது சிறந்த நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்குகிறது, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறது மற்றும் புலப்படாத கலாச்சார பாரம்பரிய நிதிக்காக வளங்களைத் திரட்டுகிறது.

2025-ஆம் ஆண்டு மனிதகுலத்தின் புலப்படாத கலாச்சாரப் பாரம்பரியத்தின் முழுமையான பிரதிநிதித்துவப் பட்டியல்

செக் குடியரசில் அமெச்சூர் தியேட்டர் நடிப்பு- செக் குடியரசு 


பல்கேரியாவில் பேக்பைப்ஸ் மற்றும் பேக்பைப் இசைத்தல்: அறிவு மற்றும் திறன்களின் பரம்பரை-பல்கேரியா


பெஹ்ஸாதின் மினியேச்சர் ஓவியக் கலை பாணி-ஆப்கானிஸ்தான்


பிஷ்ட் (ஆண்களுக்கான அபா): திறன்களும் நடைமுறைகளும் | கத்தார் – பஹ்ரைன் – ஈராக் – ஜோர்டான் – குவைத் – ஓமன் – சவூதி அரேபியா – சிரிய அரபுக் குடியரசு – ஐக்கிய அரபு அமீரகம்


பிரஸ்ஸல்ஸின் ராட் மேரியோனெட் மரபு-பெல்ஜியம்


பெலிஸின் கேல்ஸ் பாயிண்ட் மனாட்டியின் கிறிஸ்துமஸ் பிராம் மற்றும் சம்பை-பெலிஸ்


பிரஸ்ஸல்ஸின் கோல் பொம்மலாட்ட பாரம்பரியம் -பெல்ஜியம்


பெலிஸ் நாட்டின் கேல்ஸ் பாயிண்ட் மனாட்டியைச் சேர்ந்த கிறிஸ்மஸ் பிராம் மற்றும் சம்பாய்-பெலிஸ்


கமாண்டேரியா ஒயின்-சைப்ரஸ்


குவார்டெட்டோ: அர்ஜென்டினாவின் கோர்டோபா நகரில் இசை, நடனம் மற்றும் பாடல் வரிகள்.


தீபாவளி-இந்தியா


குடும்ப பாரம்பரிய சர்க்கஸ்-சிலி


சுக்ரேயின் புரவலர் தெய்வமான குவாடலூப் கன்னியின் திருவிழா-பொலிவியா (பன்னாட்டு அரசு)


கிஃபாட்டா, வொலைட்டா மக்களின் புத்தாண்டு விழா-எத்தியோப்பியா


குருனா, மாசா மக்களிடையே கால்நடைகளை மையமாகக் கொண்ட மேய்ச்சல், சமூக-கலாச்சார மற்றும் கலை சார்ந்த பின்வாங்கல்களின் ஒரு நடைமுறை | சாட் – கேமரூன்


ஹத்ராமி டான் கூட்டம் | வெனிசுலாவில் யேமன் ஜோரோபோ | வெனிசுலா (பொலிவேரியன் குடியரசு)


கோஷரி, அன்றாட வாழ்க்கை உணவு மற்றும் அதனுடன் தொடர்புடைய நடைமுறைகள்-எகிப்து


ம்வெட் ஓயெங், எகாங் சமூகத்துடன் தொடர்புடைய இசைக்கலை, நடைமுறைகள் மற்றும் திறன்கள் | காபோன் – கேமரூன் – காங்கோ


பூக்கள் மற்றும் பனைகளின் சகோதரத்துவம்-எல் சால்வடோர்


சோன் இசைப் பயிற்சி-கியூபா


பாரம்பரிய திருமணத்தில் நடைபெறும் ஜாஃபா ஊர்வலம் | ஜிபூட்டி – கொமொரோஸ் – ஐக்கிய அரபு அமீரகம் – ஈராக் – ஜோர்டான் – மௌரித்தேனியா – சோமாலியா.


டாங்கைலின் பாரம்பரிய புடவை நெசவு கலை-வங்கதேசம் 


ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் உலக நினைவகத் திட்டத்தில் (Memory of the World (MoW)) இடம்பெற்றுள்ள புதிய இலக்கியப் படைப்புகள்:


1. 1992-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் உலக நினைவகத் திட்டம், ஆவண பாரம்பரியத்தை, குறிப்பாக அரிதான மற்றும் அழிந்து வரும் பாரம்பரியத்தை, பாதுகாத்தல், அணுகல் மற்றும் பயன்பாட்டை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வதேச ஒத்துழைப்பு உத்தி ஆகும்.


2. 1997ஆம் ஆண்டு தொடங்கி, இந்தப் பதிவேடு 2017 முதல் 2023 வரையிலான நீண்டகால இடைவெளியைத் தவிர, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை  புதுப்பிக்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் பதிவுகளின் எண்ணிக்கை 9 (1999) முதல் 78 (2017) வரை மாறுபடுகிறது. மேலும், ஒரு நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக 2 பதிவுகள் சேர்க்கப்படுகின்றன.


3. இந்த ஆண்டு, பகவத் கீதை மற்றும் பரத முனியின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் கையெழுத்துப் பிரதிகள் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் 'உலக நினைவகப் பதிவேட்டில்' சேர்க்கப்பட்டன. இதன் மூலம், அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவைச் சேர்ந்த ஆவணங்களின் மொத்த எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.


நாட்டிய சாஸ்திரம் (Natyashastra): நாட்டிய சாஸ்திரம் என்பது நிகழ்த்துக் கலைகள் பற்றிய ஒரு பழங்கால சமஸ்கிருத நூலாகும். இது பாரம்பரியமாக பரத முனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. 36,000 செய்யுள்களைக் கொண்ட இந்த 'நாட்டிய சாஸ்திரம், நாட்டியம் (நாடகம்), அபிநயம் (நடிப்பு), ரசம் (அழகியல் அனுபவம்), பாவம் (உணர்ச்சி), சங்கீதம் (இசை) ஆகியவற்றை வரையறுக்கும் ஒரு விரிவான விதிமுறைகளின் தொகுப்பை கொண்டுள்ளதாக என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் மேற்கோள் கூறுகிறது.


பகவத் கீதை: பகவத் கீதை என்பது 18 அத்தியாயங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட 700 வசனங்களைக் கொண்ட ஒரு சமஸ்கிருத வேதமாகும். இது காவியமான மகாபாரதத்தின் 6வது புத்தகமான பீஷ்ம பருவத்தில் (Bhishma Parva) பதிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக பகவத் கீதை வியாச முனிவருக்கு உரியதாகக் கருதப்படுகிறது.


4. குறிப்பிடத்தக்க வகையில், கடந்த ஆண்டு, மூன்று இந்திய இலக்கியப் படைப்புகளான ராமசரிதமானஸ், பஞ்சதந்திரம் மற்றும் சஹ்ருதயாலோக-லோச்சனா ஆகியவை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் 'உலகின் நினைவகம்' ஆசிய-பசிபிக் பிராந்தியப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டன. இந்த இலக்கியப் படைப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.


ராமசரிதமானஸ்: இந்த கையெழுத்துப் பிரதி (manuscript) கோஸ்வாமி துளசிதாஸால் இயற்றப்பட்டது.


பஞ்சதந்திரம்: விஷ்ணு சர்மாவால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் பஞ்சதந்திரம், உரைநடை மற்றும் செய்யுள் வடிவில் அமைந்த, ஒன்றோடொன்று தொடர்புடைய விலங்குக் கதைகளின் (animal fables) ஒரு பழங்காலத் தொகுப்பாகும்.


சஹ்ருதயலோக-லோகனா: 15-ஆம் நூற்றாண்டின் காஷ்மீரி அறிஞர்களான ஆச்சார்ய ஆனந்தவர்தன் மற்றும் அபிநவகுப்தர் ஆகியோரால் எழுதப்பட்ட இது, அதன் அழகியல் முக்கியத்துவத்திற்காக (aesthetic significance) தேர்ந்தெடுக்கப்பட்டது.

Original link:

Diwali’s UNESCO recognition


Share: