மேற்கத்திய நாடுகளில் வர்த்தகக் கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், ஓமன் ஒப்பந்தம் இந்தியாவின் மேற்கு ஆசிய வர்த்தக உத்தியை (West Asia trade strategy) எவ்வாறு பலப்படுத்துகிறது? -ரவி தத்தா மிஸ்ரா

இந்தியா-ஓமன் வர்த்தக ஒப்பந்தம்: ஓமனுடன், இந்தியாவும் தற்போது மேற்கொண்டுள்ள இந்த வர்த்தக ஒப்பந்தமானது, 2022-ல் கையெழுத்தான ஐக்கிய அரபு அமீரகத்துடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு, மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் இரண்டாவது வர்த்தக ஒப்பந்தமாகும். இது ஏன் முக்கியமானது என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது.


இந்தியா–ஓமன் வர்த்தக ஒப்பந்தம் - சமீபத்திய புதுப்பிப்பு : அமெரிக்காவில் வரிவிதிப்புகள் காரணமாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் கார்பன் வரிகள் காரணமாகவும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் அதிகரித்துவரும் நிலையில், இந்தியா தனது ஏற்றுமதிகளின் பரவலை மேற்கு ஆசியாவில் விரிவுபடுத்துவதற்காக டிசம்பர் 18, வியாழக்கிழமை அன்று ஓமனுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த  தொடர்ச்சியான நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், மேலும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களை (free trade agreements (FTA)) விரைவாக முன்னெடுத்து, அதன் மூலம் புதிய சந்தைகளைப் பாதுகாக்கும் இந்தியாவின் பரந்த உத்தியுடன் ஒத்துப்போகிறது.


ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பிடும்போது குறைவான தரநிலைகள் காரணமாக, இந்திய ஏற்றுமதியாளர்களும் அரபு பிராந்தியத்தில் சிறந்த சந்தை அணுகலுக்காக அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இது ஏற்றுமதியாளர்களுக்கான இணக்கச் செலவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பெரும்பாலும் ஒரு கட்டணமில்லாத் தடையாகவும் (non-tariff barriers (NTB)) செயல்படுகிறது. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடன் (Gulf Cooperation Council (GCC)) ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையிலும், ஓமன் ஒப்பந்தம் வந்துள்ளது. இப்போது இந்தியாவுக்கு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) இரண்டு உறுப்பினர்களான ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பந்தங்கள் உள்ளன.

இந்தியா-ஓமன் வர்த்தகம்


ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பிடும்போது ஓமன் மிகவும் பன்முகத்தன்மை குறைந்ததாகவும், இந்தியாவிற்கு ஒரு சிறிய சந்தையாகவும் இருந்தாலும், அதன் இராஜதந்திர இருப்பிடம் ஒரு முக்கிய மையமாகச் செயல்படுகிறது. அங்கிருந்து இந்தியப் பொருட்கள் இப்பிராந்தியத்திலும், ஆப்பிரிக்காவிலும் உள்ள மற்ற சந்தைகளையும் அடைய முடியும். ஓமனின் மொத்த ஆண்டு இறக்குமதி சுமார் 40 பில்லியன் டாலராகும். ஆனால், அது தனது இயந்திரப் பொருட்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கை இறக்குமதி செய்கிறது மற்றும் முதன்மையாக ஒரு எரிசக்தி ஏற்றுமதி நாடாகவும் உள்ளது.


குறிப்பிடத்தக்க வகையில், ஓமனுக்கு அமெரிக்காவுடன் ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. அது 2009-ல் நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், ஓமனில் இருந்து பரந்த அளவிலான பொருட்கள் அமெரிக்காவிற்கு வரி இல்லாமல் சென்றடைகின்றன. அமெரிக்காவிற்கு ஓமனின் முக்கிய ஏற்றுமதிகளில் தொழில்துறைப் பொருட்கள், அலுமினியம், உரங்கள், நகைகள் மற்றும் நெகிழி போன்ற எண்ணெய் துணைப் பொருட்கள் ஆகியவை அடங்கும். அதேநேரத்தில் இந்தியா, அதிக வரி தொடர்பான அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள இரத்தினங்கள் மற்றும் நகைகளின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் முயல்கிறது.


இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களை முக்கியமாகக் கொண்ட இந்திய ஏற்றுமதிகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் 3 பில்லியன் டாலரிலிருந்து 6 பில்லியன் டாலராக இருமடங்காக அதிகரித்துள்ளன. நாப்தா மற்றும் பெட்ரோலைத் தவிர, இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களில் இயந்திரங்கள், விமானங்கள், அரிசி, இரும்பு மற்றும் எஃகுப் பொருட்கள், அழகு மற்றும் தனிநபர் பராமரிப்புப் பொருட்கள், மற்றும் மட்பாண்டப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.


ஓமன் தனது 98 சதவீத வரிப் பிரிவுகளுக்கு சுங்க வரி இல்லாத அணுகலை வழங்கியுள்ளதால், இந்த ஒப்பந்தம் இந்தியத் தொழில்துறை ஏற்றுமதிகளின் போட்டித்தன்மையை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஓமனின் ஒப்பீட்டளவில் சிறிய சந்தையில் நீடித்த வளர்ச்சி என்பது தர மேம்பாடுகள் மற்றும் தயாரிப்பு வேறுபாடுகளைப் பொறுத்தே அமையும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.


ஓமன் பெரும்பாலும் கச்சா எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் உரங்கள், மெத்தில் ஆல்கஹால் மற்றும் நீரற்ற அம்மோனியா போன்ற இரசாயன உள்ளீடுகள், அத்துடன் பெட்ரோலியம் கோக் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறது. இந்த பொருட்கள் இந்தியாவின் எரிசக்தித் துறைக்கு மிகவும் முக்கியமானவை மற்றும் இந்தியாவின் பிற தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் ஏற்கனவே குறைந்த வரிவிதிப்புகளை அனுபவித்து வருகின்றன.


இந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் சேவைத் துறையில் இந்தியா அதிகப் பலன் பெறக்கூடும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். ஓமனின் கணிசமான உலகளாவிய சேவை இறக்குமதிகளின் மதிப்பு 12.52 பில்லியன் டாலராகும். இதில் ஓமனின் உலகளாவிய இறக்குமதிப் பட்டியலில் இந்தியாவின் ஏற்றுமதிகளின் பங்கு 5.31 சதவீதமாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, கணினி தொடர்பான சேவைகள், வணிக மற்றும் தொழில்முறை சேவைகள், ஒலி-ஒளி சேவைகள் (Audio-visual services), ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கல்வி மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட பரந்த அளவிலான துறைகளில் ஓமன் கணிசமான உறுதிமொழிகளை வழங்கியுள்ளது.


"இந்த விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் (Comprehensive Economic Partnership Agreement (CEPA)) ஒரு முக்கிய அம்சம், இந்திய தொழில் நிபுணர்களுக்கான மேம்படுத்தப்பட்ட நகர்வு கட்டமைப்பு (mobility framework) ஆகும். முதல்முறையாக, ஓமன் நாடு முறை-4-ன் கீழ் பரந்த அளவிலான உறுதிமொழிகளை வழங்கியுள்ளது. இதில், நிறுவனங்களுக்குள் பணியிட மாற்றம் செய்யப்படுவோருக்கான ஒதுக்கீட்டை 20 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் கணிசமாக அதிகரிப்பது, அத்துடன் ஒப்பந்த சேவை வழங்குநர்களுக்கான நீண்டகாலம் தங்குவதற்கும் அனுமதிப்பது ஆகியவை அடங்கும். இந்த காலம் தற்போதுள்ள 90 நாட்களிலிருந்து இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதற்கான ஒரு ஏற்பாடும் உள்ளது." என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Original link:

How Oman deal adds heft to India’s West Asia trade strategy amid rising trade curbs in the West?



Share:

ஊரகப் பகுதிகளின் வாழ்வாதாரத்தை துண்டித்தல் மற்றும் வழிகாட்டுதல் கோட்பாடுகள் - பிருந்தா காரத்

2025-ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)), ஊரக இந்தியாவில் உள்ள ஏழைத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.


ஒன்றிய அரசு, மக்களவையில் தனக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கு (Rural Employment Guarantee Act (MGNREGA)) மாற்றாக ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. முன்மொழியப்பட்ட இந்த வரைவு - இது வெளிப்படையான "அதிகாரச் சுரண்டல்" மசோதா - தற்போதைய சட்டமான MGNREGA-வின் தன்மையையே மாற்ற முயல்கிறது. இந்த மசோதா ஊரகப் பகுதிகளில் உழைக்கும் ஏழைகளின் உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாக இருந்தாலும், இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கப்பட வேண்டும். இதனால்தான் இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு (Standing Committee) அனுப்பப்பட வேண்டும்.


அரசியலமைப்பின் 41-வது பிரிவு: "அரசு, தனது பொருளாதாரத் திறன் மற்றும் வளர்ச்சிக்கு உட்பட்டு, வேலை செய்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்குத் திறம்பட வழிவகை செய்ய வேண்டும்" அரசியலமைப்பு நிர்ணய சபையில், வேலை செய்வதற்கான உரிமையை ஒரு அடிப்படை உரிமையாகச் சேர்க்க விரும்பிய சமத்துவக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்களுக்கும், அதை எதிர்த்த வலுவான முதலாளித்துவ ஆதரவு குழுவினருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இறுதியில், அது அரசியலமைப்பின் வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகளில்  (Directive Principles) சேர்க்கப்பட்டது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இதை ஒரு “புதிய அம்சம்” (novel feature) என்று வர்ணித்தார். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் நீதிமன்றத்தால் கட்டுப்படுத்த முடியாதவை என்றாலும், அவை சட்டமியற்றுபவர்களுக்கு “வழிகாட்டும் கருவிகளாகவும்”, “பொருளாதார ஜனநாயகத்திற்கு முக்கியமானவையாகவும்” கருதப்பட வேண்டும் என்று  வலியுறுத்தினார். சமத்துவ ஆதரவாளரான கே.டி.ஷா இதை ‘வெறும் நல்லவிருப்பங்கள்’ (pious wishes) என்று குறிப்பிட்டிருந்தார். பல ஆண்டுகளாக முதலாளித்துவ ‘வளர்ச்சி’ இருந்தபோதிலும், பலர் வேலைவாய்ப்பின்றித் தவித்து, வேலை தேடுவதில் சிரமப்படுவதால், ஷாவின் வார்த்தைகள் இன்றும் எதிரொலிக்கின்றன.


இடதுசாரிகளின் முக்கியப் பங்கு


வேலை செய்வதற்கான உரிமையை ஆதரிக்கும் கொள்கைகளை நோக்கி முன்னேற, தொழிலாளர்களின் 55 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டமும் முக்கிய அரசியல் மாற்றங்களும் தேவைப்பட்டன. 2004 தேர்தல்களில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பாஜக-வை தோற்கடித்தது. ஆனால், அக்கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காததால், முதல்முறையாக ஒன்றிய அரசாங்கம் இடதுசாரி கட்சிகளின் ஆதரவைச் சார்ந்திருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. முக்கியமாக, சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி கட்சிகள் தங்களின் சொந்தத் திட்டம் மற்றும் பலத்தின் அடிப்படையில் தேர்தல்களைத் தனித்து எதிர்கொண்டன. இந்த அரசியல் சூழலின் காரணமாகவே மகாத்மா காந்தி தேசிய இந்த அரசியல் சூழல் காரணமாகவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் (MGNREGA) திட்டம் சாத்தியமானது. 2005-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதிச் சட்டத்தை உருவாக்குவதில் இடதுசாரிக் கட்சிகள் முக்கியப் பங்கைக் வகித்தன.


இந்தச் சட்டம், வேலை செய்வதற்கான உரிமையை ஓரளவு அங்கீகரிப்பதுடன், குறைந்தபட்ச ஊதியத்தில் வேலை வழங்குவதற்காக தேசிய வளங்களில் ஒரு பெரிய பங்கை உறுதிசெய்ய வேண்டிய அரசின் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது. இந்தச் சட்டம் ஊரகப் பகுதிகளில் வசித்துவரும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டு முழுவதும் குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்தச் சட்டம் அனைவருக்கும் பொதுவானது; உடல் உழைப்புக்குத் தாமாக செய்ய முன்வரும் அனைத்து வயதுவந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது பொருந்தும். முக்கியமாக, இந்தச் சட்டம் வேலைக்கான தேவையை நிறைவேற்றுவதை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தேவை நிலையானது அல்ல, ஊரகப் பகுதிகளில் வசித்துவரும் குடும்பங்களின் தேவைக்கேற்ப அதிகரிக்கவோ அல்லது குறையக் கூடும். இதில் ஒரு ஆழமான ஜனநாயக உள்ளடக்கம் (deep democratic content) உள்ளது. ஒரு குடும்பத்திற்கு வேலைவாய்ப்பிற்கான சிறந்த வாய்ப்புகள் இருந்தால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் வழங்கும் பாதுகாப்பு வலையைத் தக்கவைத்துக்கொண்டே, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அதற்கு உரிமை உண்டு. இந்தச் சட்டம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. மேலும், அனைத்து ஊதியங்களையும் ஒன்றிய அரசே செலுத்த வேண்டும்.


சட்டத்தின்படி, மாநில அரசுகள் 10% நிதிப் பொறுப்பை ஏற்கின்றன. மேலும், மாநிலத்தின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களின் வடிவமைப்பு மற்றும் அவற்றின் செயலாக்கத்தில் அவற்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும் உரிமையும் உண்டு. பஞ்சாயத்துகளுக்குத் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் தேவைப்படும் திட்டங்களைக் கண்டறிந்து வடிவமைப்பதில் உரிமையும் பொறுப்பும் உள்ளன. தேவைக்கேற்ப செயல்படுத்தப்படும், அனைவருக்கும் பொருந்தக்கூடிய இந்தச் சட்டம், முதலாளித்துவ உலகில் (capitalist world) ஒருவேளை இதுவே முதல் வகையாக இருந்திருக்கலாம்.


அடிப்படை அம்சங்களை அழித்தல்


நரேந்திர மோடி அரசாங்கம், அதன் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜனதா தளம் (ஐக்கிய) ஆகியவற்றைத் தாளம் போடுபவர்களாக வைத்துக்கொண்டு, தனது வரைவு மசோதாவில் இந்த அனைத்து அடிப்படை அம்சங்களையும் நீக்குகிறது. இது இனி தேவையால் உந்தப்படுவதாக இருக்காது, மாறாக மத்திய அரசால் தீர்மானிக்கப்படும் "சட்டப்பூர்வ நிதி ஒதுக்கீடுகளால்" நிர்ணயிக்கப்படும். இந்த ஒதுக்கீட்டைவிட செலவு அதிகரித்தால், மத்திய அரசுக்கு இனி சட்டப்பூர்வமாக எந்தக் கடமையும் இருக்காது. ஒன்றிய வரி வருவாயில் தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்டதால் ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் மாநிலங்கள் மீது, செலவில் 40% சுமை ஏற்றப்படுகிறது. இந்த மசோதா, திட்டமிடல் முதல் டிஜிட்டல் தணிக்கைகள் வரை அனைத்தின் மீதும் மத்திய அரசுக்கு முழுமையானக் கட்டுப்பாட்டை வழங்குகிறது, இது அரசியலமைப்பின் கூட்டாட்சி அமைப்புக்கு முரணானது.


இந்த மசோதா, வேலையைத் தடைசெய்வது கிராமப்புறத் தொழிலாளர்களைப் பலவீனப்படுத்தும், அவர்களைப் பெரிய நில உரிமையாளர்களிடமிருந்து குறைந்த ஊதியம் மற்றும் மோசமான வேலை நிலைமைகளை ஏற்கும்படி கட்டாயப்படுத்தும். இது ஏற்கெனவே குறைவாகச் சம்பாதிக்கும் பெண்களைப் பெரிதும் பாதிக்கும். மேலும், இந்தச் சட்டம் ஊதியம் பெறுவதற்கு ஆதார் அட்டைகளையும் ஆன்லைன் வருகைப் பதிவையும் கட்டாயமாக்குகிறது; ஆனால் மோசமான இணைய வசதி தொழிலாளர்களுக்குப் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.


இந்தத் தடை, கிராமப்புறத் தொழிலாளர்களின் பேரம் பேசும் திறனைக் குறைக்கும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் இல்லாத நிலையில், அவர்கள் பெரிய நில உரிமையாளர்களால் நிர்ணயிக்கப்படும் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். இது, விவசாயத்தில் ஆண்களைவிட குறைந்த ஊதியம் பெறும் பெண்களைப் பாதிக்கும். இந்தச் சட்டம், ஆதார் அட்டை இணைப்பு, தகுதி மற்றும் ஊதியப் பணத்திற்கான நிபந்தனையாக இணையவழி டிஜிட்டல் முறையில் பதிவுசெய்யப்பட்ட வருகைப் பதிவை சட்டப்பூர்வமாக்குகிறது. மோசமான இணைய இணைப்பு உட்பட இத்தகைய நிபந்தனைகள் தொழிலாளர்களைப் பாதித்துள்ளன என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருந்தபோதிலும் இது செய்யப்படுகிறது.


சட்டத்தின் பெயராக வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா திட்டம் (கிராமின்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G)) என்று பெயரிடுவது, பக்தர்களைக் கவரும் ஒரு சிறிய தந்திரம். ஆனால், லட்சக்கணக்கான மக்கள் 'ஜி-ராம்-ஜி ஒழிக' என்று முழக்கமிட்டுப் போராடும்போது, ​​அது மக்களைக் கோபப்படுத்தி, அரசாங்கத்திற்கே எதிராகப் பாதகமாக முடியக்கூடும்.


துன்பத்தின் பிரதிபலிப்பு


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு அந்த வேலை எவ்வளவு கடினமானது என்பது தெரியும். இலக்குகளை எட்டுவதற்காக சில பெண்கள் ஒரு நாளைக்கு 3,000 கிலோகிராம் வரை மண்ணைத் தூக்குகிறார்கள். பெரும்பாலான மாநிலங்களில் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களாக இருப்பது, விவசாயத்தில் உள்ள கடுமையான சிக்கல்களையும், வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பதையும் காட்டுகிறது.


பழங்குடியினர் மக்கள்தொகையில் 8.6% ஆக உள்ளனர். ஆனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணியாளர்களில் அவர்கள் 18% ஆகவும், பட்டியல் சாதியினர் 19% ஆகவும் உள்ளனர். எனவே, தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உரிமைகளில் எந்தவொரு மாற்றமும் அரசியலமைப்பின் மீதான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. ஆனால், வரைவுச் சட்டத்தில் குறைதீர்ப்பு/ஆலோசனைக் குழுக்களில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டுள்ளது.


2014ஆம் ஆண்டு  முதல், நரேந்திர மோடி அரசாங்கம் பெருநிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளையும் தள்ளுபடிகளையும் பெருமளவில் அதிகரித்த அதே வேளையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை நீர்த்துப்போகச் செய்து, தேவையான நிதியை வழங்காமல் முடக்கியுள்ளது. ஆரம்ப நாட்களில் சுமார் இரண்டு கோடி தொழிலாளர்களாக இருந்த எண்ணிக்கை இப்போது 7.7 கோடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ள போதிலும், செலவினங்கள் தேக்கமடைந்துள்ளன அல்லது குறைந்துள்ளன. அது ஒருபோதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2%-ஐத் தாண்டவில்லை. 2024-25ஆம் ஆண்டில், 8.9 கோடி தொழிலாளர்கள் வேலை கோரினர். ஆனால், 7.9 கோடி தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்தது — 99 லட்சம் தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஊதிய நிலுவைகள் குவிந்துள்ளன — சில சமயங்களில் ரூ.8,000 கோடி வரை உயர்ந்துள்ளது. சராசரியாக, குடும்பங்களுக்கு 100 நாட்களுக்குப் பதிலாக 50 நாட்களுக்கும் குறைவான வேலைகளே கிடைத்துள்ளன. சட்ட வரைவில் 125 நாட்கள் வேலைக்கு உறுதியளிப்பது தவறான தகவலை அளிப்பதாகும். மக்களுக்கு வேறு வழிகள் இல்லாததால்தான் அவர்கள் இன்னும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணிகளுக்குச் செல்கிறார்கள்; இது இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் வசித்துவரும் ஏழைகளின் வாழ்வில் உள்ள நிச்சயமற்றத் தன்மையை காட்டுகிறது.


அந்த முக்கிய ஆதரவு வலுப்படுத்தப்படுவதற்குப் பதிலாக பலவீனப்படுத்தப்படுகிறது. அரசியலமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகள் புறக்கணிக்கப்படுகின்றன. 


பிருந்தா காரத் சிபிஐ(எம்) கட்சியின் மூத்த தலைவர் ஆவார்.

Original link:

Cutting off a rural lifeline and the Directive Principles


Share:

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சிறப்பு நீதிமன்றம் ஏன் அமலாக்கத்துறைக்கு எதிராக தீர்ப்பளித்தது? -அபூர்வா விஸ்வநாத்

காங்கிரஸின் மற்ற நிர்வாகிகளுடன் சேர்ந்து, காந்தி குடும்பத்தினர், பொதுப் பங்கு நிறுவனமும் நேஷனல் ஹெரால்டு நாளிதழின் வெளியீட்டாளருமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (Associated Journals Limited (AJL)) நிறுவனத்தின் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக ஒரு குற்றச் சதியில் ஈடுபட்டனர் என்பதே அமலாக்க இயக்குநரகத்தின் முக்கியக் குற்றச்சாட்டாகும்.


காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி மற்றும் ஐந்து பேர் மீது நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate’s (ED’s)) தொடர்ந்த வழக்கை விசாரிக்க டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது. Rouse அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, அமலாக்க இயக்குநகரத்தின் புகாரின் அடிப்படையில் நீதித்துறை நடவடிக்கைகளைத் தொடங்க மறுத்துவிட்டார்.


காந்தி குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு


அமலாக்க இயக்குநகரத்தின் முதன்மையான குற்றச்சாட்டு, காந்தி குடும்பத்தினர், காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகளுடன் சேர்ந்து, பட்டியலிடப்படாத பொது நிறுவனமும், நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் வெளியீட்டாளருமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்ன் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க ஒரு குற்றவியல் சதியில் ஈடுபட்டனர் என்பதுதான். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்க்கு ரூ.90.21 கோடி கடனாக வழங்கியது. அதைத் தொடர்ந்து, சோனியாவும் ராகுல் காந்தியும் சேர்ந்து 76% பங்குகளை வைத்திருந்த தனியார் இலாப நோக்கற்ற நிறுவனமான யங் இந்தியன், கடனை வசூலிக்கும் உரிமையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடமிருந்து ரூ.50 லட்சத்திற்கு வாங்கியது.


ஏ.ஜே.எல் நிறுவனத்தின் 90.21 கோடி ரூபாய் கடனை, யங் இந்தியன் நிறுவனத்திற்காக தலா 10 ரூபாய் மதிப்புள்ள 9.02 கோடி பங்குகளாக மாற்றி, ஏ.ஜே.எல் பங்குதாரர்களையும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நன்கொடையாளர்களையும் ஏமாற்றியதாக அமலாக்கத்துறை கூறுகிறது. இதுகுறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி 2014-ல் அமலாக்கத்துறையிடம் புகார் அளித்திருந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி, அமலாக்கத்துறை இது தொடர்பாக ஒரு குற்றவியல் வழக்குப் பதிவு செய்தது.


சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு


117 பக்க உத்தரவில், நீதிமன்றம் பணமோசடி குற்றத்தை முதன்மையாக இரண்டு காரணங்களுக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது.


தனிப்பட்ட புகார்: சுவாமி அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்த 2014-ஆம் ஆண்டு மாஜிஸ்திரேட்டின் உத்தரவின் அடிப்படையிலேயே அமலாக்க இயக்குநரகத்தின் வழக்கு தொடுக்கப்பட்டது. செவ்வாயன்று, பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) என்பது சட்ட அமலாக்க முகமையின் விசாரணை அதிகாரியால் அளிக்கப்படும் புகார்களை மட்டுமே கருத்தில் கொள்கிறது, பொதுமக்களால் அளிக்கப்படும் புகார்களை அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


முன்நிபந்தனை குற்றம் இல்லாதது: குற்றத்தின்மூலம் கிடைத்த பணத்தை மறைத்தல், வைத்திருத்தல், பெறுதல் அல்லது பயன்படுத்துதல் போன்ற செயல்களில் உதவுபவர், பங்கேற்பவர் அல்லது சம்பந்தப்பட்ட எவரும் பணமோசடி குற்றத்தைச் செய்தவராகக் கருதப்படுவார் என்று பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) கூறுகிறது.


இங்கு, “குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானம்” (proceeds of crime) என்பது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் “பட்டியலிடப்பட்ட குற்றம்” (scheduled offences) அல்லது மூலக் குற்றம் எனப் பட்டியலிடப்பட்ட ஒரு குற்றத்தின் மூலம் ஒரு நபர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெறும் எந்தவொரு சொத்தையும் குறிக்கும். செவ்வாயன்று, காந்தி குடும்பத்தினருக்கு எதிராக அத்தகைய எந்தக் குற்றத்திற்காகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததால், அமலாக்க இயக்குநகரத்தின் புகாரை விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.


ஜூலை 2014-ல், சுவாமியின் புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறை ஒன்றிய புலனாய்வு முகமைக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தது; 2015-ல் அமலாக்கத்துறை இயக்குநர் ஒன்றிய புலனாய்வு முகமையின் இயக்குநருக்கு எழுதிய கடிதத்திலும் இது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஒன்றிய புலனாய்வு முகமையின் இயக்குனர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. நீதிமன்றம் தனது உத்தரவில், அமலாக்கத்துறை மற்றும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (Financial Action Task Force (FATF)) ஆண்டு அறிக்கைகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்புகளை மீண்டும் ஆய்வு செய்து, "பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குத் தொடர, அட்டவணைப்படுத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்வது ஒரு முக்கியமான நிபந்தனையாகும்" என்பதை மீண்டும் வலியுறுத்தியது.


கடந்த சில ஆண்டுகளில், பணமோசடி குறித்துத் தனியாக விசாரணை நடத்தலாம் என்று அமலாக்கத்துறை வாதிட்டாலும், தொடர்புடைய அட்டவணைப்படுத்தப்பட்ட குற்றம் இல்லாமல் அத்தகைய விசாரணையைத் தொடங்க முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது.


அடுத்து என்ன நடக்கும்?


அமலாக்கத்துறை வழக்கைத் தவிர, யங் இந்தியன் (Young Indian) நிறுவனம் மீது கூறப்படும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு தொடர்பான ஒரு வழக்கை வருமான வரித் துறை 2017 முதல் விசாரித்து வருகிறது. இருப்பினும், வருமான வரி வழக்குகள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் பட்டியலிடப்பட்ட குற்றங்களாக வகைப்படுத்தப்படவில்லை.


கடுமையான பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) கடுமையான பிணை நிபந்தனைகளைக் கொண்டுள்ளது மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்மீது ஆதாரத்தைச் சமர்ப்பிக்கும் சுமையைச் அதிகரிக்க செய்கிறது. மேலும், சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அந்த அமைப்புக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. எனவே, நவம்பரில், டெல்லி காவல்துறை பொருளாதார குற்றப் பிரிவு (Economic Offences Wing (EOW)) அதே வழக்கில் ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இது பணமோசடி விசாரணைக்கு மற்றொரு வழியைத் திறக்கும் நோக்கில் செய்யப்பட்டிருக்கலாம். இந்த புகார் அமலாக்கத் துறையின் உதவி இயக்குநர் சிவ குமார் குப்தாவால் அளிக்கப்பட்டது. மேலும், இது முன்னரே வழங்கப்பட்ட 2014ஆம் ஆண்டு உத்தரவின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    

Original link:

National Herald case: Why special court ruled against ED.


Share:

இந்தியாவில் பெண் குழந்தைகளின் கல்விக்கான உரிமை எப்படி - ஏன் - சீக்கிரமாகவே முடிவுக்கு வருகிறது? -பிண்டு பால்

கல்வி உரிமை சட்டம் (Right to Education Act) 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதி செய்கிறது. பள்ளிக்குச் செல்லவில்லை என்று புகாரளித்த குழந்தைகளில் கணிசமான எண்ணிக்கையிலானோர் 14 வயது வரம்பை மீறியிருக்கலாம்.


குழந்தைகளுக்கான சட்ட நடவடிக்கை மற்றும் நடத்தை மாற்ற மையம் (Centre for Legal Action and Behaviour Change for Children (C-LAB)) மற்றும் அவுட்லைன் இந்தியா ஆகிய நிறுவனங்கள் 2025-ஆம் ஆண்டு நடத்திய ஓர் ஆய்வில், அசாம், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 757 ஊரக பகுதிகளில் 10,474 சிறுமிகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 6 முதல் 18 வயதுக்குட்பட்ட 5,781 மாணவிகள் பள்ளிக்குச் செல்லாத நிலையில், பீகார் மாநிலத்தில்தான் பள்ளிக்குச் செல்லாத மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் (1,627), அசாம் (1,127), கர்நாடகா (1,051) மற்றும் மகாராஷ்டிரா (888) ஆகிய மாநிலங்கள் உள்ளன.


அனைவருக்கும் கல்வி வழங்குவதில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவது ஒரு பெரிய தடையாக இருந்து வருகிறது. இது இரு பாலினத்தவரையும் பாதிக்கிறது; சமீபத்திய ஆதாரங்கள் பெண்களைவிட அதிக சிறுவர்கள் பள்ளியிலிருந்து விலகுவதைக் காட்டுகின்றன. இது குழந்தைகளின் எதிர்கால வேலைவாய்ப்பு வாய்ப்புகள், அறிவுசார் வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த மேம்பாடு போன்றவற்றை பலவீனப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களை குழந்தை தொழிலார்கள் மற்றும் பிற பாதிப்புகளுக்கும் ஆளாக்குகிறது. பெண்களைப் பொறுத்தவரை, இது அவர்களின் கண்ணியம், சுயநிர்ணய உரிமை மற்றும் இனப்பெருக்க சுகாதாரத் தேர்வுகளைப் பாதிக்கிறது. பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்துவது பொருளாதார முன்னேற்றத்திற்கும், நிலையான வளர்ச்சிப் பாதைகளுக்கும் தடையாக அமைகிறது.


கல்வி உரிமைச் சட்டம் (Right to Education (RTE)) பல ஆண்டுகளாக அமலில் இருந்தும், ஐந்து மாநிலங்களில் இந்தப் பிரச்சினை ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாகவே உள்ளது. U-DISE தரவுகளுடன் தரவுகளுடன் ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த அறிக்கை, தொடக்கப் பள்ளி (வகுப்புகள் 1-5) மற்றும் நடுநிலைப் பள்ளி (வகுப்புகள் 6-8) நிலைகளை விட, உயர்நிலைப் பள்ளி (வகுப்புகள் 9-10) மற்றும் மேல்நிலைப் பள்ளி (வகுப்புகள் 11-12) நிலைகளில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதும் விகிதங்கள் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கிறது.


கல்வி உரிமைச் சட்டம் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதி செய்கிறது. பள்ளிக்குச் செல்லவில்லை என்று புகாரளித்த குழந்தைகளில் கணிசமான எண்ணிக்கையிலானோர் 14 வயது வரம்பை மீறியிருக்கலாம். மேலும், 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவதற்கு குறிப்பிட்ட அரசுத் திட்டம் அல்லது ஒழுங்குமுறை கட்டமைப்பு எதுவும் இல்லை. இது அவர்களை, குறிப்பாகப் பெண்களை, பல்வேறு வகையான சுரண்டல்களுக்கும், குழந்தைத் திருமணத்திற்கும் ஆளாகக்கூடியவர்களாக ஆக்குகிறது.


பீகாரின் மாநிலத்தின் நிலை மற்ற மாநிலங்களை சற்று வேறுபாடானது. அந்த மாநிலத்தில் பெண்கள் மிகவும் முன்னதாகவே பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர் - உயர்நிலைப் பள்ளியில் 6.6 சதவீதமும், உயர்நிலைப் பள்ளியில் 6.8 சதவீதமும் நிறுத்தும் அளவு உள்ளது. மேல் தொடக்கப் பள்ளிக் கல்வி மட்டத்தில் ஏன் அதிக மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதைக் கண்டறிய, ஒரு ஆழமான பகுப்பாய்வு தேவைப்படுகிறது.


மேலும், U-DISE தரவுகள் 2019 மற்றும் 2025ஆம் ஆண்டிற்கு இடையில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவைக் குறிக்கின்றன. இது பள்ளிகளின் இணைப்புகள் அல்லது மூடல்கள் காரணமாக இருக்கலாம். மதிப்பிடப்பட்ட 32,500 பள்ளிகள் மூடப்பட்டன (23,000) அல்லது இணைக்கப்பட்டன (9,500), இது சுமார் 5.3 லட்சம் குழந்தைகளை பாதித்தது மற்றும் சேர்க்கையில் 7.2 சதவீத வீழ்ச்சிக்கு பங்களித்தது. பள்ளி மூடல்/இணைப்பு வசிப்பிடத்திற்கும் பள்ளிகளுக்கும் இடையிலான தூரத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடும், இது RTE சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை மீறுகிறது. இது குழந்தைகளின் பள்ளிப்படிப்பு அணுகலையும் பாதிக்கிறது.


பள்ளிக்குச் செல்வதற்கான தடைகள் சிக்கலானவையாகவும் சுவாரஸ்யமானவையாகவும் உள்ளன. சமூக-கலாச்சார காரணிகளில், குழந்தைத் திருமணம் என்பது பள்ளிக்குச் செல்லாததற்கு ஒரு முக்கிய காரணமாக இன்றும் இருந்து வருகிறது. குழந்தைத் திருமணம் என்பது பீகார், அசாம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நீண்டகாலமாக நிலவிவரும் ஒரு சமூகப் பிரச்சனையாகும். 2022 மற்றும் 2025-க்கு இடையில் இத்தகைய நிகழ்வுகள் குறைந்திருந்தாலும், இது இன்னும் சாதாரணமாகவே காணப்படுகிறது. மேலும், இது பெரும்பாலும் சிறுமிகள் பள்ளியை விட்டு வெளியேற காரணமாகிறது.


மோசமான பொருளாதார நிலைமைகள், போதுமான உள்கட்டமைப்பு இல்லாமை, பாதுகாப்பு கவலைகள், கலாச்சார விதிமுறைகள்/களங்கம், போக்குவரத்து பற்றாக்குறை மற்றும் பிற காரணிகள் உட்பட பள்ளிக்குச் செல்லாததற்கு பல பரந்த காரணங்களை இந்த ஆய்வு அடையாளம் கண்டுள்ளது.


பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், இந்தியாவில் பள்ளி கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கும் அந்த அறிக்கை பல பரிந்துரைகளை முன்வைத்தது. அரசாங்கத்திற்கும் குடிமைச் சமூகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பின் மூலம் நிலைநிறுத்தப்படும் பன்முகத் தலையீடுகளைச் செயல்படுத்துவது மிகவும் முக்கியம். மேலும், அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதற்கு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை ((Right to Education (RTE))) திறம்படச் செயல்படுத்துவது முக்கியமான நடவடிக்கையாகும். பெண் குழந்தைகளுக்கான கல்வியை மேம்படுத்துவதற்கும், குழந்தை திருமணங்களைத் தடுப்பதற்கும், 18 வயது வரை அல்லது மேல்நிலைப் பள்ளிப் படிப்பு முடியும் வரை பெண் குழந்தைகளை உள்ளடக்கும் வகையில் கல்வி உரிமைச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது மிகவும் முக்கியம். கூடுதலாக, பள்ளி இடைநிற்றல் விகிதங்களைக் கையாள்வதற்காகப் பெண் குழந்தைகளுக்கான இலக்கு சார்ந்த தக்கவைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதும், பள்ளிப் படிப்பை நிறைவு செய்வதை ஊக்குவிப்பதற்காக உதவித்தொகைத் திட்டங்களைச் செயல்படுத்துவதும் மிகவும் முக்கியம்.


எழுத்தாளர் புது டெல்லியில் உள்ள இந்திய சமூக நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

Original link:

How – and why – the Right to Education ends too early for girls in India.


Share:

ஆளுநரின் பங்கு குறித்த உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை குறைபாடுடையது, அது ஒரு ஆலோசனையாகவே இருக்கட்டும். -தோராப் ஆர். சோபரிவாலா


உச்ச நீதிமன்றத்தின் ஒரு ஆலோசனைத் தீர்ப்பில், டாக்டர் அம்பேத்கர் ஒரு காலத்தில் வெறும் 'பெயரளவிலான' தலைவர் என்று வர்ணித்த ஆளுநருக்கு, அதிக அதிகாரமும் முக்கியத்துவமும் வழங்கப்பட்டுள்ளது.


பல ஆண்டுகளாக, ஆளுநர்கள் மசோதாக்களை நிறுத்திவைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. பெரும்பாலும், அவர்கள் மத்தியிலுள்ள ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். மேலும், அவ்வாறு நிறுத்தி வைக்கப்படும் மசோதாக்கள் விதிவிலக்கின்றி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவையாகவே இருக்கின்றன.


தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக பல மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார். எனவே, இந்த ஆண்டின் தொடக்கத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார். ஏப்ரல் 8 ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக தீர்ப்பு வழங்கியது. சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்மீது ஆளுநர்கள் மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலாகக் கருதப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இந்த முடிவால் அதிருப்தியடைந்த குடியரசுத் தலைவர், மே 13 அன்று, அரசியலமைப்பின் 143வது பிரிவின்கீழ் உச்சநீதிமன்றத்திடம் ஒரு ஆலோசனை கருத்தைக் (advisory opinion) கோரினார். அதில் கேட்கப்பட்ட கேள்விகள் பின்வருமாறு: சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்மீது ஆளுநர்களும் (மற்றும் குடியரசுத் தலைவரும்) நடவடிக்கை எடுக்க வேண்டிய காலக்கெடுவை நீதிமன்றங்கள் நிர்ணயிக்க முடியுமா? நவம்பர் 20 அன்று, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, மசோதாக்களை அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ ஆளுநர்களுக்கு நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது (cannot impose timelines) என்று ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.


நல்ல செய்தி: ஆலோசனை இந்த தீர்ப்பு எந்த நீதிமன்றத்தையும் கட்டுப்படுத்தாது. கெட்ட செய்தி என்னவென்றால், தீர்ப்பு பல்வேறு குறைபாடுடைய கருத்துகளை கொண்டுள்ளது.


வாசகருக்கு 111 பக்கங்கள் கொண்ட தீர்ப்பைத் திணிக்க விரும்பாமல், பக்கம் 108-இல் உள்ள சுருக்கத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறேன்: “165.1 ஆளுநருக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவின்கீழ் மூன்று அரசியலமைப்பு விருப்பத்தேர்வுகள் உள்ளன, அதாவது — ஒப்புதல் அளித்தல், மசோதாவைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஒதுக்கீடு செய்தல், அல்லது ஒப்புதலைத் தடுத்து மசோதாவை கருத்துகளுடன் சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்புதல்.”


நீதிப்பேராணை (Mandamus)  என்றால் என்ன?


நீதிப்பேராணை என்பது, ஒரு பொது அதிகாரி தனது உத்தியோகபூர்வ கடமைகளைச் செய்யத் தவறினாலே அல்லது மறுத்தலே, அவற்றைச் செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பிக்கும் ஒரு உத்தரவாகும்.


சரி. ஆனால், ஆளுநர் நடவடிக்கை எடுக்க எடுத்துக்கொள்ளும் நேரம் குறித்து என்ன சொல்வது—இதுதானே இங்குள்ள முக்கியப் பிரச்சினை? அது குறித்து, தீர்ப்பின் சுருக்கம் மேலும் கூறுவதாவது: 165.3 பிரிவு நீண்டகாலமாக, விளக்கமளிக்கப்படாத மற்றும் காலவரையற்ற செயலற்ற தன்மையின் வெளிப்படையான சூழ்நிலைகளில் — ஆளுநரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதன் தகுதிகள் குறித்து எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்காமல், அவர் அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவின்கீழ் தனது கடமையை ஒரு நியாயமான காலக்கெடுவிற்குள் நிறைவேற்றுமாறு நீதிமன்றம் ஒரு வரையறுக்கப்பட்ட நீதிப்பேராணையை வழங்கலாம்.


மன்னிக்க வேண்டும், மாண்புமிகு நீதிபதிகளே, அப்படியென்றால், ஆளுநர் ஒரு மசோதாவின்மீது காலவரையின்றி முடிவெடுக்காமல் இருக்க முடியாது என்று நீங்கள் கூறுகிறீர்கள். இரு நீதிபதிகள் கொண்ட அமர்வும் இதே தீர்ப்பை வழங்கியது. ஆனால், 'நீண்டகாலம், விளக்கமற்ற மற்றும் காலவரையற்ற செயலற்ற தன்மையின் வெளிப்படையான சூழ்நிலைகளை' நீங்கள் வரையறுப்பீர்கள் என்றும், 'ஒரு நியாயமான காலக்கெடுவை' குறிப்பிடுவீர்கள் என்றும் நாங்கள் நினைத்தோம். ஆனால், பிரிவு 165.3 உண்மையில் எதையும் மாற்றிவிடவில்லை. உதாரணமாக, மேற்கு வங்கத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு 9 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது—அது அதிகப்படியான தாமதமாகக் கருதப்படுமா? அல்லது ஆளுநர் ரவி மூன்று வருடம் மசோதாவை நிறுத்தி வைத்திருப்பது என்பது ஒரு வழக்கமான செயலா?


அமெரிக்க உச்சநீதிமன்றம் அரசியலமைப்பின் பொருளைப் புரிந்துகொள்வதற்காக ஃபெடரலிஸ்ட் ஆவணங்களை (Federalist Papers) அடிக்கடிப் பார்ப்பது போலவே, நீதிபதிகள் நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் நோக்கத்தை நன்கு ஆராய்ந்திருந்தால், இந்த குழப்பங்களில் பெரும்பாலானவற்றைத் தவிர்த்திருக்கலாம்.


ஆளுநர்களின் பங்கு, அந்தப் பதவியை வகிக்க வேண்டிய நபர்களின் தகுதி அல்லது தரம், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா அல்லது நியமிக்கப்பட வேண்டுமா மற்றும் அவர்களின் ஊதியம் போன்ற பிரச்சினைகள் குறித்து, அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர்களால் மே 31, 1949 அன்று ஆழமாகவும் விரிவாகவும் விவாதிக்கப்பட்டது. ஆனால், ஒரு ஆளுநர் என்னென்ன செய்ய முடியும், என்னென்ன செய்ய முடியாது என்பது குறித்த அவர்களின் ஒருமித்த கருத்து, உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைத் தீர்ப்பில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.


எனவே, வரைவுக் குழுவின் தலைவர் பி.ஆர். அம்பேத்கரின் வார்த்தைகளை நான் மேற்கோள் காட்டுகிறேன். மே 31, 1949 அன்று அம்பேத்கர், “இந்த அவையில் உள்ள அனைவருக்கும் தெரிந்தபடி, ஆளுநருக்குத் தன்னிச்சையான அதிகாரங்களோ அல்லது தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும் உரிமையோ இருக்கக்கூடாது என்பதை வரைவுக் குழு தெளிவுபடுத்தியது. புதிய அரசியலமைப்பின் கொள்கைகளின்படி, ஆளுநர் அனைத்து விவகாரங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும்” என்று கூறினார்.


ஆளுநர் ஏன் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், அரசியலமைப்புச் சட்டத்தில் அவரது பங்கு குறித்தும் தனது கருத்துக்களை அம்பேத்கர் சுருக்கமாக கூறினார்.


இந்த உண்மையைக் கருத்தில் கொண்டு, வாக்காளர்கள் மீது அதிக நேரத்தையும், அதிக சிரமத்தையும், மேலும் நான் சொல்வதென்றால் அதிக பணத்தையும் செலவழிக்கக்கூடிய ஒரு தேர்தல் செயல்முறையைத் திணிப்பது விரும்பத்தக்கதா என்று கருதப்பட்டது. அரசியலமைப்பின் கீழ் தனக்கு என்னென்ன அதிகாரங்கள் கிடைக்கக்கூடும் என்பதை நன்கு அறிந்த எவரும் தேர்தலில் போட்டியிட முன்வர மாட்டார்கள் என்றும் கருதப்பட்டது. ஆளுநரின் அதிகாரங்கள் மிகவும் வரையறுக்கப்பட்டவை, பெயரளவிலானவை. தேர்தலில் போட்டியிட மிகச் சிலரே முன்வருவார்கள் என்று நாங்கள் கருதினோம். அதனால் தான் வரைவுக் குழு மற்றொரு மாற்று வழியைப் பரிந்துரைக்கலாம் என்று நினைத்தது. இந்த கருத்து வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது.


இருப்பினும், இந்த உச்சநீதிமன்ற ஆலோசனைக் கருத்தில், அம்பேத்கரின் கூற்றுப்படி 'பெயரளவிலான' தலைவர் என்று வர்ணித்த ஆளுநருக்கு, அதிக அதிகாரமும் முக்கியத்துவமும் வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மன்னர் நமது நாட்டில் உள்ள ஆளுநர்களின் அதிகாரங்களைப் பார்த்து பொறாமைப்படுவார் என்று நான் நம்புகிறேன்.


எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரி (Westminster model) நாடாளுமன்ற ஜனநாயகத்தில், மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நம்பப்பட்டு நீதித்துறைக்கு அனுப்பப்பட வேண்டியிருந்தால் தவிர, தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின்மீது தனது கருத்துக்களைத் திணிக்க அனுமதிப்பது மிகவும் அநீதியானது. அதுபோல செய்யப்படும் ஒவ்வாரு நடவடிக்கையும் ஜனநாயகக் கொள்கைகளை அவமதிப்பதற்கு சமமானதாகும்.


இந்த ஆலோசனை முடிவு ஒரு ஆலோசனையாகவே இருக்கட்டும். தேர்ந்தெடுக்கப்படாத மற்றும் நியமிக்கப்படும் ஒரு ஆளுநரின் அதிகாரங்களை (clarity the powers) உச்சநீதிமன்றமோ அல்லது நாடாளுமன்றமோ தெளிவாக வரையறுக்க வேண்டும்.

அரசியலமைப்பு சபையில் ஆளுநர்கள் பற்றிய விவாதத்தில் ஒரு சுவாரஸ்யமான மேற்கோளுடன் நான் முடிக்கிறேன். இந்த மேற்கோள் பிஸ்வநாத் தாஸிடமிருந்து வந்தது. 1935ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ், இந்திய மாகாணங்களுக்கு பிரதமர்கள் இருந்தனர். மேலும், தாஸ் ஒரிசாவின் பிரதமராக இருந்தார். அவரது நேரடி மேற்கோள், "ஐயா, ஆளுநருக்கு மிகக் குறைவான பணிகள் மட்டுமே உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பில் நாம் வகுத்துள்ள அமைப்பின் கீழ் அவருக்கு மிகக் குறைவான அதிகாரங்களே இருக்குமானால், பிறகு ஆளுநர் பதவி எதற்கு? ஆளுநருக்கு நல்ல சம்பளமும் படிகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், அவர் செய்யவேண்டிய வேலை முக்கியமற்றதாகவோ அல்லது அந்தப் பணத்திற்குத் தகுதியற்றதாகவோ இருந்தால், ஒரு ஆளுநர் பதவி என்பதே தேவையா என்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம்” என்பதாகும்.


ஒருவேளை டாக்டர் அம்பேத்கர் பிஸ்வநாத் தாஸின் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும்.


எழுத்தாளர் டெகோடரில் ஒரு ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.

Original link:

SC advisory opinion on Governor’s role is flawed, let it stay advisory.


Share:

IRDAI பற்றி… -ரோஷ்ணி யாதவ்

முக்கிய அம்சங்கள்:


— திருத்தப்பட்ட விதிகளின்படி, காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது தொடர்புடைய நிறுவனங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்காமல் இருந்தால், விசாரணைக்கு தேவையான தகவல்களை மறைத்தால் அல்லது பதிவுகளை அழிக்க முயற்சித்தால் என்று சந்தேகிக்க நியாயமான காரணம் இருந்தால், இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Insurance Regulatory and Development Authority of India (IRDAI)) தலைவருக்கு சோதனை, பறிமுதல் மற்றும் ஆய்வு நடத்த உத்தரவிடும் அதிகாரம் வழங்கப்படுகிறது. இந்த அதிகாரங்கள், சட்டவிரோத கமிஷன் அல்லது தள்ளுபடி கொடுத்தல், புத்தகங்கள், கணக்குகள், ரசீது, தகவல் அறிக்கைகள் அல்லது பிற பதிவுகளை மாற்றுதல் அல்லது அழித்தல் போன்ற சந்தேகமான மீறல்களைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.


— காப்பீட்டு இடைத்தரகர்களில் முகவர்கள், தரகர்கள், வங்கிகள் போன்ற கார்ப்பரேட் முகவர்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (Non-Banking Financial Company (NBFC)), நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு தயாரிப்புகளை வழங்கும் பிற நிறுவனங்கள், காப்பீட்டுக் கொள்கைகளை ஒப்பிட்டு விற்கும் இணையதளங்கள் போன்ற வலைத் திரட்டிகள், சுகாதார காப்பீட்டு கோரிக்கைகள் மற்றும் சேவைகளை நிர்வகிக்கும் மூன்றாம் தரப்பு நிர்வாகிகள் (third-party administrators (TPA)), ஆய்வாளர்கள் மற்றும் இழப்பு மதிப்பீட்டாளர்கள் மற்றும் காப்பீட்டு சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (insurance marketing firms (IMF)) ஆகியவை அடங்கும்.

— முன்மொழியப்பட்ட மசோதாவின்படி, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Insurance Regulatory and Development Authority of India (IRDAI)) தலைவர் ஒரு மூத்த அதிகாரியை (துணை இயக்குநர் பதவிக்கு குறையாதவர்) அங்கீகரிக்கலாம். அந்த அதிகாரி: ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடத்தில் நுழைந்து சோதனை செய்யலாம், சாவி கிடைக்கவில்லையெனில் பூட்டுகளை உடைக்கலாம், தொடர்புடைய பதிவுகளை பறிமுதல் செய்யலாம், விசாரணைக்கு தேவையான ஆவணங்களை குறிக்கவோ அல்லது நகலெடுக்கவோ செய்யலாம். மேலும், பயனுள்ள ஒழுங்குமுறை மேற்பார்வையை உறுதிப்படுத்த, காப்பீட்டு நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் வருமான அறிக்கைகள், அறிக்கைகள் மற்றும் தகவல்களை ஆய்வுசெய்ய பல்வேறு இடங்களில் ஊழியர்களை நியமிக்க இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கு (Insurance Regulatory and Development Authority of India (IRDAI)) அதிகாரம் வழங்கப்படுகிறது.


— தற்போது, ​​சந்தை ஒழுங்குமுறை ஆணையமான இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India (SEBI)), விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறுவதாக சந்தேகித்தால், ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களைத் தேடி பறிமுதல் செய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.


— இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கு (IRDAI) மேம்படுத்தப்பட்ட அமலாக்க அதிகாரங்கள் கிடைக்கும். அதில் காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது இடைத்தரகர்கள் பெற்ற தவறான ஆதாயங்களை திரும்பப் பெறும் அதிகாரமும் அடங்கும் என்று கூறப்படுகிறது. 


— கூடுதலாக, இந்தத் திருத்தங்கள் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரத்தை வலுப்படுத்துகின்றன. அதன்படி, பொது நலனுக்காக காப்பீட்டு நிறுவனங்களுக்கு பிணைப்பு உத்தரவுகள் பிறப்பிக்கலாம், பாலிசி வைத்திருப்பவர்களைப் (policyholders) பாதுகாக்கலாம், தவறான நிர்வாகத்தைத் தடுக்கலாம் அல்லது நல்ல நிர்வாகத்தை உறுதி செய்யலாம். காப்பீட்டு நிறுவனங்கள் இத்தகைய உத்தரவுகளுக்கு கட்டாயம் இணங்க வேண்டும். ஆனால், அவற்றுக்கு எதிராக தனிப்பட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, அவற்றுக்குக் கேட்க நியாயமான வாய்ப்பு வழங்கப்படும்.


— காப்பீட்டு முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு வழங்கப்படும் தரகுத்தொகை மற்றும் ஊதியத்தை ஒழுங்குபடுத்துவதற்கு, ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மேம்பட்ட அதிகாரங்கள் வழங்கப்படும். இதன் நோக்கம் தவறான விற்பனையைத் தடுப்பது மற்றும் பாலிசிதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பது. இதற்காக வரம்புகளை நிர்ணயித்தல், வெளிப்படுத்தல் விதிமுறைகளை பரிந்துரைத்தல், கட்டண கட்டமைப்புகளைக் குறிப்பிடுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவானது மக்களவையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்  தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. 


— காப்பீட்டுச் சட்டத் திருத்தம் மசோதா, 2025 (சப்கோ பீமா சப்கோ ரக்ஷா) இந்தியாவின் காப்பீட்டுத் துறை கட்டமைப்பை சீர்திருத்தும் நோக்கில் 1938 காப்பீட்டுச் சட்டம், 1956 ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டம் மற்றும் 1999 இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள்  மேற்கொள்வதற்கான நடைமுறையானது  கடந்த செவ்வாய்கிழமை, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 


— இந்தத் திருத்தம், இந்திய காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்துகிறது. இது முதலீட்டை ஈர்க்கவும், தொழில்நுட்பப் பரிமாற்றத்தை எளிதாக்கவும், காப்பீட்டு ஊடுருவலை அதிகரிக்கவும், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் உதவும் என்கின்றனர்.


— வெளிநாட்டு மறுகாப்பீட்டு நிறுவனங்களுக்குத் தேவையான நிகர சொந்த நிதி ரூ.5,000 கோடியிலிருந்து ரூ.1,000 கோடியாகக் குறைக்கப்படும்.

Original link:

About IRDAI


Share:

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026, சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம், மனித உரிமைகள் தினம், அணுசக்தி மசோதா 2025, விக்சித் பாரத் ஷிக்ஷா அதிக்ஷன் மசோதா, உமீத் போர்டல், மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு போன்றவை குறித்து… -குஷ்பூ குமாரி


உலக சமத்துவமின்மை அறிக்கை 2026


சமீபத்திய, உலக சமத்துவமின்மை அறிக்கை-2026-ன் படி, இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வு உலகின் மிக உயர்ந்த நிலைகளில் ஒன்றாக உள்ளது. அதிக வருமானம் ஈட்டுபவர்களில் முதல் 10 சதவீதம் பேர் தேசிய வருமானத்தில் 58 சதவீதத்தைப் பெறுகின்றனர். அதே நேரத்தில், இதற்கு மாறாக, குறைந்த வருமானம் பெறும் 50 சதவீதத்தினர் வருமானத்தில் வெறும் 15 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றனர்.


இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் செல்வ ஏற்றத்தாழ்வு இன்னும் அதிகமாக உள்ளது. இதில், பணக்காரர்களில் முதல் 10 சதவீதம் பேர் மொத்த செல்வத்தில் சுமார் 65 சதவீதத்தையும், முதல் 1 சதவீதம் பேர் சுமார் 40 சதவீதத்தையும் வைத்துள்ளனர்.


உலகின் மக்கள் தொகையில் பணக்காரர்களான 10 சதவீதம் பேர் உலகளாவிய மொத்த செல்வத்தில் சுமார் முக்கால் பங்கிற்குச் சொந்தக்காரர்களாக உள்ளனர். இதற்கு நேர்மாறாக, ஏழ்மையான 50 சதவீதம் பேர் மொத்த செல்வத்தில் 2 சதவீதத்தை மட்டுமே வைத்துள்ளனர்.


கோடியில் ஒருவர் என்ற விகிதத்தில் உள்ள பெரும் பணக்காரர்கள், உலகளாவிய செல்வத்தில் 3 சதவீதத்தை வைத்திருக்கிறார்கள். இந்த பங்கு, உலகின் வயது வந்த மக்கள் தொகையில் கீழ்ப்பாதியில் உள்ளவர்கள் வைத்திருப்பதைவிட அதிகமாகும்.


உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 இந்தத் தொடரில் மூன்றாவது அறிக்கையாகும். இதற்கு முந்தைய பதிப்புகள் 2018 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. இந்த அறிக்கை உலகம் முழுவதிலும் உள்ள 200-க்கும் மேற்பட்ட அறிஞர்களின் ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த அறிஞர்கள் உலக சமத்துவமின்மை ஆய்வகத்துடன் (World Inequality Lab) தொடர்புடையவர்கள்.


தினங்கள்


சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (International Anti-Corruption Day)


2005-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (International Anti-Corruption Day) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் ஊழல் குறித்தும், அதை எதிர்த்துப் போராடுவதிலும், தடுப்பதிலும் மாநாட்டின் முக்கியப் பங்கு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


இந்த ஆண்டிற்கான கருப்பொருள் ‘ஊழலுக்கு எதிராக இளைஞர்களுடன் ஒன்றிணைதல்; நாளைய நேர்மையை வடிவமைத்தல்’ (Uniting with Youth Against Corruption: Shaping Tomorrow’s Integrity) என்பதாகும்.


ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான மாநாட்டில் உறுப்பு நாடுகளின் மாநாட்டின் 11-வது அமர்வு, 2025-ம் ஆண்டு டிசம்பர் 15 முதல் 19 வரை கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற உள்ளது.


மனித உரிமைகள் தினம் (Human Rights Day)


ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ம் தேதி மனித உரிமைகள் தினம் (Human Rights Day) அனுசரிக்கப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தை (Universal Declaration of Human Rights (UDHR)) ஏற்றுக்கொண்ட நாளைக் குறிக்கிறது.


2025-ம் ஆண்டிற்கான கருப்பொருள் ‘மனித உரிமைகள், நமது அன்றாட அத்தியாவசியத் தேவைகள்’ (Human Rights, Our Everyday Essentials) என்பதாகும்.


டிசம்பர் 10, 1948 அன்று, ஐ.நா. பொதுச் சபை பாரிஸில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த நிகழ்வு, இரண்டாம் உலகப் போரின் தாக்குதல்களுக்குப் பிறகு உருவான சர்வதேச ஆணையின் (international order) அடிப்படைக் கற்களில் ஒன்றாக அமைந்தது.


இந்தியா சர்வதேச அறிவியல் விழா (India International Science Festival (IISF)) 2025


சமீபத்தில், இந்தியா சர்வதேச அறிவியல் விழா (IISF) 2025, புது தில்லியின் பூசா வளாகத்தில் உள்ள, சிஎஸ்ஐஆர்-தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR–National Institute of Science Communication and Policy Research (CSIR-NIScPR)) விவேகானந்தா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வை CSIR-NIScPR மற்றும் CSIR-தேசிய இயற்பியல் ஆய்வகம் (CSIR–National Physical Laboratory (CSIR-NPL)) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.


இந்த விழாவின் கருப்பொருள் “விஞ்ஞானத்தால் செழிப்பு: தற்சார்பு இந்தியாவிற்காக” (Vigyan Se Samruddhi: for Aatmanirbhar Bharat) என்பதாகும். இது ஒரு தற்சார்பு மற்றும் வளமான இந்தியாவிற்காக அறிவியல் தலைமையிலான வளர்ச்சியின் உணர்வைக் கொண்டாடுவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.


அணுசக்தி மசோதா, 2025 (Atomic Energy Bill)


நாட்டின் அணுசக்தித் துறையை நிர்வகிக்கும் சில முக்கிய சட்டங்களைத் திருத்தி அமைப்பதற்காகத் தயாரிக்கப்பட்டு வரும் முக்கியத் திருத்தங்களில் ஒன்றான, 'இந்தியாவை மாற்றுவதற்கான அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாடு' (ustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India (SHANTI)) மசோதா என்றும் அழைக்கப்படும் அணுசக்தி மசோதா, 2025-க்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.


இது இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களின் செயல்பாடுகளில் தனியார் நிறுவனங்கள் நுழைய வழிவகுக்கும். 


இந்தத் திருத்தம், கையெழுத்திடப்பட்டு கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்குப் பிறகு, இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தின் (Indo-US civil nuclear deal) வணிக ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள உதவும் ஒரு சீர்திருத்த முயற்சியாகக் கருதப்படுகிறது.


தற்போது நிறுவப்பட்டுள்ள 8 ஜிகாவாட்டிற்கும் குறைவான அணுசக்தித் திறனிலிருந்து, 2047-ம் ஆண்டுக்குள் படிப்படியாக 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனைச் சேர்க்க நாடு திட்டமிட்டுள்ளதால், இது முக்கியத்துவம் பெறுகிறது.


விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன் மசோதா (Viksit Bharat Shiksha Adhikshan Bill)


உயர்கல்விக்காக ஒரு ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை அமைப்பை முன்மொழியும் விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன் மசோதாவிற்கு (Viksit Bharat Shiksha Adhikshan Bill) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (All India Council for Technical Education (AICTE)) மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (National Council for Teacher Education (NCTE)) போன்ற தற்போதுள்ள சட்டப்பூர்வ அமைப்புகளுக்குப் பதிலாக அமையும்.


இந்த மசோதா முன்னதாக இந்திய உயர்கல்வி ஆணையம் (Higher Education Commission of India (HECI)) மசோதா என்று அழைக்கப்பட்டது. இந்தியாவின் உயர்கல்வித் துறையில் நிர்வாகத்தையும், மேற்பார்வையையும் சீரமைப்பதற்காக ஒரு ஒற்றை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பது குறித்த தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-இன் பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ இயக்கம் (Your Money, Your Right’ Movement)


மக்கள் தங்களின் உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள், காப்பீட்டுத் தொகை, ஈவுத்தொகை மற்றும் பிற நிதிச் சொத்துக்களைத் திரும்பப் பெறுவதற்கு உதவும் நோக்கில் தொடங்கப்பட்ட ‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ இயக்கத்தில் (Your Money, Your Right’ Movement) பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடி குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


நிதி கோரும் செயல்முறையை எளிமையாகவும், வெளிப்படையாகவும் மாற்றுவதற்காக, பிரத்யேக இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் அவர் வலியுறுத்தினார். அவை,


(i) இந்திய ரிசர்வ் வங்கி (RBI) : உரிமை கோரப்படாத வங்கிக் கணக்கு வைப்புத்தொகைகள் மற்றும் இருப்புக்களுக்கான UDGAM இணையதளம்.


(ii) இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) : உரிமை கோரப்படாத காப்பீட்டுக் கொள்கைத் தொகைகளுக்கான பீமா பரோசா இணையதளம்.


(iii) இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) : பரஸ்பர நிதிகளில் உள்ள உரிமை கோரப்படாத தொகைகளுக்கான மித்ரா இணையதளம்.


(iv) பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் : செலுத்தப்படாத ஈவுத்தொகைகள் மற்றும் உரிமை கோரப்படாத பங்குகளுக்கான (Investor Education and Protection Fund (IEPF)) இணையதளம்.


ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாடு (Unified Waqf Management, Empowerment, Efficiency and Development(UMEED)) இணையதளம்


சமீபத்திய தரவுகள், 8 லட்சம் வக்ஃப் சொத்துக்களில் 2.16 லட்சம் மட்டுமே உமீத் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன. இதற்கிடையில், பதிவு செய்வதற்கான காலக்கெடு முடிந்த பிறகு, வக்ஃப் வாரிய அதிகாரிகள் தீர்ப்பாயங்களை அணுகத் தயாராகி வருகின்றனர்.


மோசமாகச் செயல்பட்ட மாநிலம் மேற்குவங்காளம் ஆகும். அந்த மாநிலத்தில் உள்ள 80,480 சொத்துக்களில் 716 சொத்துக்களுக்கு (0.89%) மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.


மத்திய அரசு வக்ஃப் (திருத்தச்) சட்டத்தின் (Waqf (Amendment) Act) கீழ் உமீத் இணையதளத்தைத் தொடங்கியது. அனைத்து வக்ஃப் சொத்துக்களையும் ஒரு மைய டிஜிட்டல் தரவுத்தளத்திற்குக் கொண்டு வருவதே இதன் இலக்கு. இந்த இணையதளத்தில் புவிக்குறியிடுதல் மற்றும் ஆவணப்படுத்தல் ஆகியவை அடங்கும். இது சொத்துக்களைச் சிறப்பாக நிர்வகிக்கவும் பாதுகாக்கவும் உதவும் என்றும், செயல்முறையை மேலும் வெளிப்படையானதாக மாற்றும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.


சர்வதேச ஒத்துழைப்பு (International Cooperation)



20-வது யுனெஸ்கோ புலப்படாத கலாச்சார பாரம்பரிய அமர்வு (UNESCO Intangible Cultural Heritage Session)


இந்தியா, அருவமான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான யுனெஸ்கோ அரசுகளுக்கிடையேயான குழுவின் 20-வது அமர்வை, 2025-ம் ஆண்டு டிசம்பர் 8 முதல் 13 வரை புது தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடத்துகிறது.


இந்த யுனெஸ்கோ குழுவின் அமர்வை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிகழ்வு, புலப்படாத கலாச்சார பாரம்பரியத்தைப் (intangible cultural heritage) பாதுகாப்பதற்கான 2003 யுனெஸ்கோ மாநாட்டை இந்தியா அங்கீகரித்ததன் 20-வது ஆண்டு நிறைவையும் குறிக்கிறது.


இந்த அமர்வின் போது, ​​இந்தியாவின் ஒளித் திருவிழாவான தீபாவளி, மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்திற்கான யுனெஸ்கோ பிரதிநிதித்துவப் பட்டியலில் பொறிக்கப்பட்டது. 2025 பட்டியலில் இருந்து மேலும் பத்தொன்பது கலாச்சார பாரம்பரியங்களும் சேர்க்கப்பட்டன.


யுனெஸ்கோவின் கூற்றுப்படி, புலப்படாத கலாச்சார பாரம்பரியம் என்பது "பாரம்பரியமானது, சமகாலத்தியது மற்றும் ஒரே நேரத்தில் உயிருள்ளது", "அனைவரையும் உள்ளடக்கியது", "பிரதிநிதித்துவமானது" மற்றும் "சமூக அடிப்படையிலானது" ஆகும்.


யுனெஸ்கோ புலப்படாத கலாச்சார பாரம்பரியப் பட்டியலில் மொத்தம் 16 அருவமான கலாச்சார பாரம்பரியங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


இந்தியாவிலிருந்து யுனெஸ்கோவின் மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவப் பட்டியல் :


புலப்படாத கலாச்சார பாரம்பரியம்

யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப்பட்ட ஆண்டு

தீபாவளி

2025

குஜராத்தின் கர்பா

2023

கொல்கத்தாவில் துர்கா பூஜை

2021

கும்பமேளா

2017

நவ்ருஸ் மற்றும் யோகா

2016

பஞ்சாபில் உள்ள ஜாந்தியால குருவின் ததேராக்கள், பாரம்பரிய பித்தளை மற்றும் செப்புப் பாத்திரங்கள் தயாரிப்பு

2014

மணிப்பூரின் சங்கீர்த்தனா

2013

லடாக்கின் புத்த மந்திரப் பாடல்கள்

2012

சாவ் நடனம், ராஜஸ்தானின் கல்பேலியா நடனம்,

மற்றும் கேரளாவின் முடியெட்டு

2010

கர்வாலின் ராம்மன் திருவிழா

2009

குடியாட்டம் சமஸ்கிருத அரங்கம், ராம்லீலா மற்றும் வேத மந்திரம்

2008


உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக உச்சி மாநாடு (WHO Global Summit on Traditional Medicine)


பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது உலக சுகாதார அமைப்பு (WHO) உலக உச்சி மாநாடு 2025 டிசம்பர் 17-19 தேதிகளில் புது தில்லியின் பாரத் மண்டபத்தில் நடைபெறும். இது WHO உலக பாரம்பரிய மருத்துவ மையத்தால் (Global Traditional Medicine Centre (GTMC)) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள் “சமநிலையை மீட்டெடுத்தல்: ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் அறிவியல் மற்றும் நடைமுறை” (Restoring balance: The science and practice of health and well-being) என்பதாகும்.


உலக சுகாதார அமைப்பின் உலக பாரம்பரிய மருத்துவ மையம் (GTMC) என்பது பாரம்பரிய மருத்துவத்திற்கான ஒரு அறிவு மையமாகும். இதன் மையம் குஜராத்தின் ஜாம்நகரில் நிறுவப்பட்டுள்ளது.




சுற்றுச்சூழல் (Environment) 


வங்காளப் புலி (Bengal Tiger)


ஒரு அரசாங்கத் திட்டம், பாகேஷ்வர் மாவட்டத்தின் (Bageshwar district) சுந்தர்துங்கா பனிப்பாறைப் பள்ளத்தாக்கில் 3,010 மீட்டர் உயரத்தில் வங்காளப் புலியின் இருப்பை வெளிப்படுத்தியுள்ளது. அடர்ந்த துணை-ஆல்பைன் காடு வழியாக ஒரு புலி நகர்ந்து செல்லும் படத்தை ஒரு கேமராப் பொறி பதிவு செய்துள்ளது.


இந்த ஆராய்ச்சி முதலில் பனிச்சிறுத்தைகளைப் பற்றி ஆய்வு செய்வதற்காகவே தொடங்கப்பட்டது. இப்போது, ​​ஒரு புலி பதிவு செய்யப்பட்டுள்ளது, இது அந்த விலங்கு தெராய் பகுதியிலிருந்து மலை மாவட்டத்திற்கு எப்படி வந்தது என்பது குறித்து கேள்விகளை எழுப்புகிறது.


வங்காளப் புலி ஒரு தனித்துவமான மரபணு மாற்றத்தின் காரணமாக, துடிப்பான ஆரஞ்சு நிற உரோமங்களையும் அடர் கோடுகளையும் கொண்டுள்ளது.


புலி பற்றிய உண்மைகள்


  • அறிவியல் பெயர் : பாந்தெரா டைக்ரிஸ்


  • வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் (WPA), 1972 நிலை : அட்டவணை I.


  • IUCN செம்பட்டியல் நிலை : அருகிவரும் இனம்.


  • CITES நிலை : பின் இணைப்பு I.


  • வாழ்விடங்கள் : வெப்பமண்டல மழைக்காடுகள், பசுமைமாறாக் காடுகள், மிதவெப்பக் காடுகள், சதுப்புநிலங்கள், புல்வெளிகள் மற்றும் சவன்னாக்கள்.


  • இந்தியாவின் வாழ்விடங்கள் : சிவாலிக்-கங்கை சமவெளிகள், மத்திய இந்தியா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள், மேற்குத் தொடர்ச்சி மலைகள், வடகிழக்கு மலைகள் மற்றும் பிரம்மபுத்திரா வெள்ளச் சமவெளிகள் மற்றும் சுந்தரவனக் காடுகள்.




புதிய ராம்சார் தளங்கள் (New Ramsar sites)


ராஜஸ்தானில் உள்ள சிலிசெர் ஏரி மற்றும் சத்தீஸ்கரில் உள்ள கோப்ரா ஜலாஷய் ஆகியவை ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் உள்ள ராம்சர் தளங்களின் மொத்த எண்ணிக்கை 96-ஆக உயர்ந்துள்ளது.


கோப்ரா ஜலாஷய் சத்தீஸ்கரின் முதல் ராம்சர் தளமாகும். IUCN இணையதளத்தின்படி, “இந்த நீர்த்தேக்கம் மகாநதி ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த ஈரநிலம் 60-க்கும் மேற்பட்ட வலசை போகும் பறவை இனங்களுக்கு ஆதரவளிக்கிறது. அவை கூடு கட்டுவதற்கும், உணவு தேடுவதற்கும், ஒரு தற்காலிகத் தங்குமிடமாகவும் இதைச் சார்ந்துள்ளன. குறிப்பிடத்தக்க இனங்களில், அழியவாய்ப்புள்ள நிலையில் உள்ள பெரிய புள்ளி கழுகு (Aquila clanga) மற்றும் அருகிவரும் எகிப்திய பிணந்தின்னிக் கழுகு (Neophron percnopterus) ஆகியவை அடங்கும்”. ராஜஸ்தானில் உள்ள சிலிசார் ஏரி, சரிஸ்கா புலிகள் காப்பகத்தின் இடைநிலை மண்டலத்திற்குள் அமைந்துள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு ஈரநிலமாகும். இது ஒரு வறண்ட பகுதிக்கு அருகிலுள்ள மண்டலத்தில் அமைந்துள்ளது. மேலும், இந்த இடம் அப்பகுதியின் பல்வேறு உயிரினங்களுக்கு ஒரு முக்கியமான நீர் ஆதாரமாக விளங்குகிறது.


நோய்கள் (Diseases)


இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் (Influenza viruses)


இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் மனித செல்களுக்குள் 'சர்பிங்' (surfing) செய்வது போன்ற நிலையில் நுழையும் நிகழ்வின் நேரலைக் காட்சிகளை விஞ்ஞானிகள் முதன்முறையாகப் படம்பிடித்துள்ளனர். இது, காய்ச்சல் தொற்றுகள் எவ்வாறு தொடங்குகின்றன என்பது பற்றிய புரிதலை மாற்றியமைக்கக்கூடிய ஒரு திருப்புமுனையாகும்.


செல் சாதரணமாக வைரஸுக்காக செயலற்றுக் காத்திருப்பதில்லை என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். உண்மையில், அது வைரஸை நோக்கி நீள்வதுபோல் தெரிகிறது.


உள்ளே நுழைவதற்கு முன்பு, இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் செல்லின் சவ்வில் உள்ள குறிப்பிட்ட மூலக்கூறுகளில் ஒட்டிக்கொண்டு, ஏற்பிகள் (receptors) அடர்த்தியாக உள்ள ஒரு பகுதியை அடையும்வரை, கிட்டத்தட்ட சர்பிங் செய்வது போல அதன் மேற்பரப்பில் சறுக்கிச் செல்கிறது. இந்த செறிவான பகுதிகள் வைரஸ் நுழைவதற்கு மிகவும் எளிதான பாதையை வழங்குகின்றன.


வைரஸ் அங்கு பிணைந்தவுடன், செல் அதன் அடியில் ஒரு சிறிய குழியை உருவாக்கத் தொடங்குகிறது. கிளாத்ரின் (clathrin) எனப்படும் ஒரு புரதம் இந்த பள்ளத்தை வலுப்படுத்தி ஆழமாக்குகிறது. அந்தக் குழி விரிவடையும்போது, ​​அது வைரஸை உள்ளடக்கிக்கொண்டு, ஒரு குமிழியை உருவாக்குகிறது. அந்தக் குமிழியை செல் உள்ளே இழுத்துக்கொள்கிறது. உள்ளே சென்றதும், அதன் வெளிப்புற உறை கரைந்துவிடுகிறது. மேலும், வைரஸ் தொற்றுநோயைத் தொடங்க விடுவிக்கப்படுகிறது.


Original link:

Key topics to catch up on: World Inequality Report 2026, International Anti-Corruption Day, Human Rights Day, Atomic Energy Bill 2025, Viksit Bharat Shiksha Adhikshan Bill, UMEED portal, and international cooperation so on . . .



Share: