காவலாளியை கண்காணிப்பவர் யார்? அரசு சேகரிக்கும் தரவுகளைப் பாதுகாக்கும் கொள்கை இந்தியர்களுக்கு ஏன் தேவை? -விக்ரம் ராஜ்

ஒரு கண்காணிப்பு அமைப்பைத் தொடங்குவதற்கு முன்பு, அரசாங்கம் முதலில் முறையான சட்ட மற்றும் நிறுவனப் பாதுகாப்புகளை உருவாக்க வேண்டும். தரவுகள் அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றியபிறகு, அவற்றை நீக்குவதை உறுதிசெய்யும் தரவு சேகரிப்பு விதிகள் நமக்குத் தேவை.


மார்ச் 24 அன்று, மும்பை மேற்கு ரயில்வேயால் நிறுவப்பட்ட கண்காணிப்பு (CCTV cameras) மற்றும் முக அங்கீகார அமைப்புகளை (facial recognition systems (FRS)) பயன்படுத்தி காவல்துறை இரண்டு வழக்குகளை எவ்வாறு தீர்த்தது என்பதை விவரிக்கும் ஒரு அறிக்கை எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் வெளியிடப்பட்டது. இதில் ஒரு வழக்கானது, போர்த்துகீசிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் துன்புறுத்தப்பட்டது தொடர்பானதும், மற்றொன்று வழக்கு, 14 வயது குழந்தை காணாமல் போனது தொடர்பானது ஆகும். நாடு முழுவதும் எண்ணற்ற வழக்குகளைத் தீர்ப்பதில் சிசிடிவி மற்றும் முக அங்கீகார அமைப்பு (FRS) ஆகியவை பயனுள்ளதாக அமைந்துள்ளது. இருப்பினும், இந்த அமைப்புகளுடன் தொடர்புடைய தரவுகள் மற்றும் பொதுமக்களின் தனியுரிமை என்று வரும்போது, இதற்காக பதிலளிக்கப்படாத பல கேள்விகள் உள்ளன.


செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அல்காரிதம் அடிப்படையிலான கண்காணிப்பை (algorithm-guided surveillance) நோக்கிய மாற்றம் இனி பெருநகரங்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. மார்ச் 16 2026 அன்று, கோவாவின் போக்குவரத்து அமைச்சர் மௌவின் கொடின்ஹோ, வாகனங்களை ஊடுகதிராக்கம் (scan) செய்து அந்தத் தகவல்களை அமலாக்கத் தரவுத்தளங்களுடன் இணைப்பதற்காக, தானியங்கி வாகனப் பதிவு எண் அங்கீகார வசதியுடன் (automatic number plate recognition) கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்களை 92 இடங்களில் நிறுவும் தனது திட்டங்கள் குறித்து சட்டமன்றத்தில் தெரிவித்தார். அவர் இந்த நடவடிக்கையை ஒரு சாலைப் பாதுகாப்பு நடவடிக்கையாகக் குறிப்பிட்டாலும், இந்தத் திட்டம் ஒரு பரந்த போக்கைப் பிரதிபலிக்கிறது.


டெல்லியின் தெருக்கள்கூட மெதுவாக ஒரு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பாக மாறிவருகின்றன. இது பொதுப் பாதுகாப்பு மற்றும் திறன் நிர்வாகத்திற்காக என்று அரசாங்கம் கூறுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், அது கேமராக்கள், தரவுத்தளங்கள் மற்றும் நிரல் நெறிமுறைகளின் பெரிய வலையமைப்புகளை அமைத்து வருகிறது. இதன் நோக்கமானது, "குற்றங்களுக்கு விரைவான பதில் நடவடிக்கை" (faster crime response) என்பதே இதன் வாக்குறுதியாகும். இந்தச் செயல்பாடுகளைக் கண்காணிக்க விதிமுறைகளோ அல்லது தெளிவான அமைப்புகளோ இல்லாத நிலையில், தொடர்ச்சியான கண்காணிப்பு ஒரு வழக்கமான செயலாக உணரப்படலாம். அரசு பாதுகாப்பு பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, தனிப்பட்ட இடத்தைப் பாதுகாப்பது கடினமாகி வருகிறது.


இந்தியாவின் பாதுகாப்பான நகரத் திட்டம் (India’s Safe City project) இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். 2018-ல் டெல்லியில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில், ஆயிரக்கணக்கான கேமராக்களை ஒரு மையப்படுத்தப்பட்ட காவல் கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதல்கட்டமாக, அக்டோபர் 2025 முதல், சுமார் 3,500 செயற்கை நுண்ணறிவு (AI) திறன் கொண்ட கேமராக்களைப் பொருத்தும் பணியை நகரம் தொடங்கியது. அத்துடன், துப்பாக்கிச் சூடு உணர் கருவிகள் மற்றும் திறன்மிகு எச்சரிக்கை அமைப்புகளையும் நிறுவத் தொடங்கியது. இந்தக் கேமராக்கள் வெறும் காணொளிகளைப் பதிவு செய்வதோடு நின்றுவிடுவதில்லை; அவை ஒலிகளை உடனடியாகப் பகுப்பாய்வு செய்கின்றன. அவற்றால் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கண்டறிய முடியும். மேலும், ஒருவரின் குரலில் மறைந்திருக்கும் உதவிக்கான கூக்குரல்களையும் அவற்றால் அடையாளம் காண முடியும். இவ்வகையில், டெல்லியின் கண்காணிப்பு அமைப்பு மெல்ல மெல்ல 'முன்கணிக்கும்' தன்மையை அடைந்து வருகிறது. ஒரு ஆபத்து மேலும் பரவுவதற்கு முன்பாகவே, அதை முன்கூட்டியே கண்டறிவதற்கு இது முயல்கிறது.


இனிமேல் கேமராக்களை மட்டும் சார்ந்திருக்காமல், தகவல்களைச் சேகரித்து நிர்வகிப்பதற்காக இப்போது நாம் பெரிய தரவு சேமிப்பு அமைப்புகளை உருவாக்குகிறோம். இதற்கு ஒரு உதாரணம் தேசிய உளவுத்துறை கட்டமைப்பு (National Intelligence Grid(NATGRID)) ஆகும். இந்த அமைப்பு, முன்பு தனித்தனி தரவுத்தளங்களில் வைக்கப்பட்டிருந்த தரவுகளை ஒன்றிணைக்கிறது. 26/11 தாக்குதலுக்குப் பிறகு சிறந்த ஒருங்கிணைப்புக்கான வலுவான தேவை இருந்ததால் இது முதலில் திட்டமிடப்பட்டது. காலப்போக்கில், இது வெவ்வேறு துறைகளிலிருந்து தகவல்களை இணைக்கத் தொடங்கியுள்ளது. 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில், இது தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுடன் (National Population Register) அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. இதன் மூலம், சட்ட அமலாக்கத் துறைக்கு "ஏறக்குறைய 119 கோடி குடியிருப்பாளர்களின் குடும்ப அளவிலான மக்கள்தொகைத் தரவுகளுக்கான நேரடி அணுகும் வசதியை" வழங்கியது. நடைமுறையில், இதன் பொருள் என்னவென்றால், அதிகாரப்பூர்வ அனுமதி பெற்ற ஒரு துப்பறிவாளர், ஒரே நேரத்தில் பல தரவுத்தளங்களில் தேடமுடியும். அவர், வெவ்வேறு தரவுத் தொகுப்புகளை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம், சந்தேக நபர்களின் பயணம், நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் குடும்பத் தொடர்புகளைக் கண்காணிக்க முடியும்.


இந்தக் கருவிகள் அனைத்தும் டிஜிட்டல் துறையின் மாறிவரும் விதிமுறைகளைச் சார்ந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில், நமது அரசாங்கம் இணையவழி தளங்களுக்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகள்-2021, இடைத்தரகர்கள்மீது கடுமையான கடமைகளை விதித்துள்ளன. அவர்கள் உரிய கவனத்துடன் செயல்பட்டு, தடயத்தைக் கண்டறியும் தன்மையை உறுதி செய்ய வேண்டும். அதேநேரத்தில், இந்தியாவின் புதிய டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம்-2023 (Digital Personal Data Protection Act), தரவுச் செயலாக்கத்திற்கான ஒரு கட்டமைப்பை வழங்குகிறது மற்றும் மக்களின் தனிப்பட்ட தரவுகளின் சில பயன்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. இந்தச் சட்டங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், அவை அரசாங்கத்தின் சொந்தத் தரவு அமைப்புகள் மீது அதிகம் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், பெரும்பாலும் தளங்கள் மற்றும் வழங்குநர்கள் மீதே கவனம் செலுத்துகின்றன. கேமராக்கள் அல்லது தரவுத்தளங்களிலிருந்து அரசு எவ்வாறு தகவல்களைச் சேகரிக்கிறது, தக்கவைத்துக்கொள்கிறது அல்லது பயன்படுத்துகிறது என்பதில் வெளிப்படைத்தன்மையைக் கோரும் கண்காணிப்புச் சட்டம் தற்போது இல்லை.


அதிகாரப்பூர்வ டிஜிட்டல் அமைப்புகள் குறித்தும் சில கடுமையான குறைபாடுகளைக் காட்டியுள்ளன. 2023-ல், ஒரு முடக்குநரின் தானியங்கி செயலி (hacker’s bot) மூலம், இந்தியாவின் CoWIN தரவுத்தளத்தைப் (CoWIN portal) ரகசியமாகப் பயன்படுத்தினர். அந்த பாட், யார் வேண்டுமானாலும் ஒரு தொலைபேசி எண்ணை உள்ளிட அனுமதித்தது. எண்ணை உள்ளீடு செய்தபிறகு, அந்த நபரின் பெயரையும் பாலினத்தையும் அவர்களால் பார்க்க முடிந்தது. கடவுச்சீட்டு அல்லது ஆதார் விவரங்கள் வழங்கப்பட்டிருந்தால், அவற்றையும் அணுக முடிந்தது. இது, அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு அமைப்பு எவ்வளவு விரைவாகத் தடம் மாறக்கூடும் என்பதை வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும்போது, மக்கள் நம்பிக்கையை இழக்கத் தொடங்குகிறார்கள்.


2025-ம் ஆண்டில் லோக்கல்சர்க்கிள்ஸ் (LocalCircles) நிறுவனம் 36,000-க்கும் மேற்பட்ட மக்களிடமிருந்து நடத்திய ஒரு கணக்கெடுப்பில், கிட்டத்தட்ட 87 சதவிகிதத்தினர் தங்களின் தனிப்பட்ட விவரங்கள் ஏற்கனவே அம்பலப்படுத்தப்பட்டுவிட்டதாக நம்புவதாக அது கண்டறிந்தது. இது வெறும் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. அதிகாரப்பூர்வ பதிவுகள் கடுமையான கவலைகளைக் காட்டுகின்றன. உதாரணமாக, 2022-ல், தலைமை கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General) ஆதார் திட்டத்தின் பாதுகாப்புகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்தார்.


இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில், ஒவ்வொரு கண்காணிப்புக் கேமராவும் மற்றும் தரவுத்தளத் தேடலும் மக்களின் தனியுரிமையைப் பாதிக்கக்கூடும். புட்டசாமி vs இந்திய யூனியன் வழக்கில் (Puttaswamy vs Union of India case), அரசால் தனியுரிமைமீது விதிக்கப்படும் எந்தவொரு கட்டுப்பாடும் சட்டப்பூர்வமானதாகவும், அவசியமானதாகவும், விகிதாசாரமானதாகவும் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த அளவுகோலின்படி, இந்தியாவின் கண்காணிப்புத் திட்டத்தில் தற்போது போதுமான பாதுகாப்புகள் இல்லை. காணொளிகள் அல்லது பயோமெட்ரிக் தரவுகள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன அல்லது முகத்தை அடையாளம் காணும் அமைப்புகளுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டு, பிழைகள் சரிபார்க்கப்படுகின்றன என்பது பற்றி தெளிவாக அறியப்படவில்லை.


அதிகாரிகள் டிஜிட்டல் தீர்வுகளை வலியுறுத்தும் அதேவேளையில், வன்முறை, ஹேக்கிங் அல்லது பிற சட்டவிரோதச் செயல்கள் போன்ற ஆபத்துகளையும் முன்னிலைப்படுத்துகின்றனர். பொதுவாக, காகிதத்தில், இது நியாயமானதாகத் தெரிகிறது. டிஜிட்டல் கருவிகள் சரியாகப் பயன்படுத்தப்படும்போது, அதிகாரிகள் மிகவும் திறமையாகச் செயல்பட உதவும். இருப்பினும், ஏதேனும் தவறு நடந்துவிடுமோ என்ற ஒரே காரணத்திற்காக அனைவரையும் உன்னிப்பாகக் கண்காணிப்பது சிக்கலானது. அந்த அணுகுமுறை வரம்பு மீறியது. தரவுகள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன அல்லது அவற்றை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது குறித்துத் தெளிவான விளக்கம் இல்லாதபோது, மூடிய கதவுகளுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று கேள்வி கேட்கும் திறனை மக்கள் இழக்கிறார்கள். வெளிப்படைத்தன்மை கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனாலும் தெளிவான விதிகள் பாதுகாப்பு முக்கியமானது, ஆனாலும் தெளிவான விதிகள் இல்லாத தொடர்ச்சியான கண்காணிப்பு, அடிப்படை நியாயத்தன்மையைச் சிதைக்கிறது.


ஒரு கண்காணிப்பு அமைப்பைத் தொடங்குவதற்குமுன், அரசாங்கம் முதலில் முறையான சட்ட மற்றும் நிறுவனப் பாதுகாப்புகளை உருவாக்க வேண்டும். இந்தப் பாதுகாப்புகள் இன்றியமையாதவை. தரவுகள் அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றிய பிறகு அவற்றை நீக்குவதை உறுதிசெய்யும் தரவு சேகரிப்பு விதிகள் (rules on data collection) நமக்குத் தேவை. தரவுகளை எவ்வளவு காலம் வைத்திருக்கலாம் என்பதற்கு கடுமையான வரம்புகள் இருக்க வேண்டும். நிரல்நெறிமுறைகளில் பயன்படுத்தப்படும் நெறிமுறைகள் பொறுப்புக்கூறக்கூடியவையாக இருக்க வேண்டும். அப்போதுதான், ஒன்றிற்காக மற்றொன்றை விட்டுக்கொடுக்காமல், இது பாதுகாப்பானது மற்றும் வெளிப்படைத்தன்மையானது என்று நம்மால் கூற முடியும்.


இந்தக் கட்டுரையாளர் இணைய சுதந்திர அறக்கட்டளையுடன் தொடர்புடையவர்.


Original Link: Who watches the watchman? Why Indians need policy that safeguards data gathered by the government?.

Share:

ஹீலியம் : எம்.ஆர்.ஐ ஸ்கேன்கள் (MRI scans) மற்றும் விண்வெளிப் பயணங்களுக்கு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? -ரோஷ்னி யாதவ்

தற்போதைய நிகழ்வு :


மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் வளைகுடா வழியாக வர்த்தகத்தின் மீதான கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, உலகளாவிய ஹீலியம் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறு, இந்தியாவின் சுகாதாரத் துறையில், குறிப்பாக காந்த அதிர்வுப் படமெடுப்பு (magnetic resonance imaging (MRI)) ஸ்கேன்களின் செலவு மற்றும் எம்.ஆர்.ஐ இயந்திரங்களை நிறுவுவதற்கான செலவும் அதிகரித்திருப்பது குறித்த கவலையும் நிலவுகிறது. இந்தச் சூழலில், ஹீலியம் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி கீழே குறிப்பிட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள் :


1. ஹீலியம் என்பது நிறமற்ற மற்றும் மணமற்ற ஒரு வாயுவாகும். தனிம அட்டவணையில் உள்ள ஆறு மந்த வாயுக்களில் (noble gases) இது முதலாவதாக இடம்பெறுகிறது. இது ஒரு புதுப்பிக்க இயலாத வளமாகும். அண்டத்தில் (universe) ஹைட்ரஜனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக அளவில் காணப்படும் தனிமமாக இருந்தபோதிலும், இது பூமியில் அரிதாகவே காணப்படுகிறது. ஹீலியம் அதன் குறைந்த அணு நிறை காரணமாக பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து எளிதாக விடுபட்டு வெளியேறிவிடுகிறது. இதன் விளைவாக, பூமியில் ஹீலியம் இயற்கையாகவே சேமிக்கப்பட்டு நிலைத்திருப்பது கடினமாகிறது.


2. ஹீலியம் ஒரு 'மந்தமான வாயு' ஆகும். அதாவது, இது மற்ற பொருட்களுடன் வேதியியல் ரீதியாக வினைபுரிவதில்லை. மேலும், இது தீப்பற்றி எரிவதும் இல்லை. இதன் அணு எண் 2 ஆகும். இது ஹைட்ரஜனுக்கு அடுத்தபடியாக, மிகக் குறைந்த எடையைக் கொண்ட இரண்டாவது தனிமம் இதுவேயாகும்.


3. கிரையோஜெனிக் வடித்தல் (Cryogenic Distillation) எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் இயற்கை வாயுவிலிருந்து ஹீலியத்தைப் பிரித்தெடுத்து வணிகரீதியாக உற்பத்தி செய்யப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்குப் பிறகு, கத்தார் உலகின் மூன்றாவது பெரிய இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளராக உள்ளது.


ஹீலியத்தின் பயன்பாடுகள்


1. எம்.ஆர்.ஐ இயந்திரங்களில் ஹீலியம் : எம்.ஆர்.ஐ இயந்திரங்களை இயக்குவதற்கு ஹீலியம் இன்றியமையாதது. இந்த இயந்திரங்களுக்குள் இருக்கும் மிகவும் சக்திவாய்ந்த மீக்கடத்தி காந்தங்களைக் (superconducting magnets) குளிர்விக்க திரவ ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் காந்தங்களே எம்.ஆர்.ஐ அமைப்புகளின் முக்கிய அங்கமாகும்.


மீக்கடத்தும் சுருள்கள் கிரையோஜெனிக் வெப்பநிலை எனப்படும் மிகக் குறைந்த வெப்பநிலையில் இயங்குகின்றன. மேலும், ஹீலியமானது வேதியியல்ரீதியாக மந்தமானதும், எந்தவொரு தனிமத்தையும்விட ஹீலியம் மிகக் குறைந்த கொதிநிலையைக் (-269 டிகிரி செல்சியஸ்) கொண்டதும், MRI இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரே நடைமுறை குளிர்விப்பான் ஹீலியம் ஆகும்.


2. விண்கலங்கள் மற்றும் ராக்கெட்டுகளில் ஹீலியத்தின் பயன்பாடு : ராக்கெட்டுகள் சுற்றுப்பாதையை அடைவதற்கும், நிலைத்திருப்பதற்கும் குறிப்பிட்ட வேகத்தையும் உயரத்தையும் அடைய வேண்டும். ஒரு ராக்கெட் கனமாக இருந்தால், அது மேலேறி விண்வெளியை அடைய அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இது எரிபொருள் பயன்பாட்டை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதிக சக்திவாய்ந்த இயந்திரங்களும் தேவைப்படுகின்றன. இந்த இயந்திரங்களை வடிவமைப்பதற்கும், சோதிப்பதற்கும், பராமரிப்பதற்கும் அதிக செலவாகும்.


ஹீலியம் மிகக் குறைந்த கொதிநிலையைக் கொண்டிருப்பதால், அது கடும் குளிர் சூழல்களிலும் வாயுவாகவே இருக்க முடிகிறது. இது ஒரு முக்கியமான அம்சமாகும். ஏனெனில், பல ராக்கெட் எரிபொருள்கள் எரிபொருள்கள் மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமிக்கப்படுகின்றன.


ராக்கெட் எரிபொருள் தொட்டிகளை அழுத்தவும் (pressurise fuel tanks), ராக்கெட்டின் இயந்திரங்களுக்கு எரிபொருள் தடையின்றி செல்வதை உறுதி செய்யவும் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளுக்கும் ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது. ராக்கெட்டின் இயந்திரங்களில் எரிபொருள் மற்றும் ஆக்சிஜனேற்றி எரிக்கப்படும்போது, ​​எரிபொருள் தொட்டிகளில் உருவாகும் வெற்றிடத்தை ஹீலியம் நிரப்பி, தொட்டிக்குள் இருக்கும் ஒட்டுமொத்த அழுத்தத்தை சீராகப் பராமரிக்கிறது. ஹீலியம் வேதியியல்ரீதியாக வினைபுரியாத தன்மை கொண்டது என்பதால், எரிபொருள் தொட்டிகளில் எஞ்சியிருக்கும் பிற பொருட்களுடன் இது பாதுகாப்பாகக் கலந்துவிடுகிறது.


3. பலூன்கள் மற்றும் வான் கப்பல்களில் ஹீலியத்தின் பயன்பாடு : பலூன்கள் (balloons) மற்றும் வான்கலன்களை (airships) மேலே உயர்த்தும் வாயுவாகவும் ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது. இது காற்றைவிட இலேசானது, எனவே அவை மிதக்க உதவுகிறது. ஒருவர் சிறிதளவு ஹீலியத்தை உள்ளிழுக்கும்போது, அது தற்காலிகமாகக் குரலின் ஒலியையும் தரத்தையும் மாற்றுகிறது. காற்றைவிட ஹீலியம் வேறுபட்ட அடர்த்தியைக் கொண்டிருப்பதால் இது நிகழ்கிறது.


ஹைட்ரஜன்


1. ஹைட்ரஜன் இயற்கையில் மிகவும் பரவலாகக் காணப்படும் தனிமம் ஆகும்.  இருப்பினும், அது இயற்கையில் தனித்து இருப்பதில்லை. அது எப்போதும் மற்ற தனிமங்களுடன் சேர்ந்தே காணப்படுகிறது. உதாரணமாக, நீர் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஒரு ஆக்ஸிஜன் அணுவால் ஆனது. இயற்கையாகக் கிடைக்கும் இத்தகைய சேர்மங்களிலிருந்து ஹைட்ரஜனைப் பிரித்தெடுக்க வேண்டும். இது ஒரு தூய்மையான மூலக்கூறாக இருந்தாலும், இதனைப் பிரித்தெடுக்கும் செயல்முறைக்கு அதிக அளவு ஆற்றல் தேவைப்படுகிறது.


2. ஒரு தூய்மையான எரிபொருளாகக் கருதப்படுவதன் மூலமாக ஹைட்ரஜனுக்கு உள்ள ஆற்றல் குறித்த சிந்தனைகளுக்கு ஏறக்குறைய 150 ஆண்டுகால வரலாறு இருந்தாலும், 1970-களில் ஏற்பட்ட எண்ணெய் விலை உயர்வு நெருக்கடிகளுக்குப் பின்னரே, ஹைட்ரஜனைக் கொண்டு புதைபடிவ எரிபொருட்களை மாற்றீடு செய்யமுடியும் என்ற சாத்தியக்கூறு தீவிரமாகப் பரிசீலிக்கப்படத் தொடங்கியது.


3. ஹைட்ரஜன் பெறப்படும் மூலங்களும், அதற்கான செயல்முறைகளும் பல்வேறு வண்ணக் குறியீடுகளின் (colour tabs) அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. புதைபடிவ எரிபொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன் 'சாம்பல் ஹைட்ரஜன்' (Grey Hydrogen) என்று அழைக்கப்படுகிறது. தற்போதைய நிலையில், தொழில்துறை பயன்பாடுகளுக்காக உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனில் பெரும்பகுதி இந்த 'சாம்பல் ஹைட்ரஜனே' ஆகும்.

4. கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு (carbon capture and storage (CCS)) வசதிகளுடன் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து உருவாக்கப்படும் ஹைட்ரஜன், நீல ஹைட்ரஜன் (Blue hydrogen) என்று அழைக்கப்படுகிறது.


5. புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயங்கும் மின்பகுப்பிகளைப் (electrolysis) பயன்படுத்தி, நீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிக்கும் நீர் மின்பகுப்பு மூலம் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனை பசுமை ஹைட்ரஜன் (Green hydrogen) குறிக்கிறது. இது ஹைட்ரஜன் உற்பத்திக்கான கிட்டத்தட்ட மாசு உமிழ்வற்ற ஒரு வழியாகக் கருதப்படுகிறது.


6. பசுமை ஹைட்ரஜனில் சில குறிப்பிட்ட நன்மைகள் உள்ளன : அவை,


(i) இது தூய்மையாக எரியும் ஒரு மூலக்கூறு ஆகும். போக்குவரத்து, இரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு போன்ற பல்வேறு தொழில்களில் கார்பன் உமிழ்வைக் குறைக்க இதைப் பயன்படுத்தலாம்.


(ii) மின்கட்டமைப்பால் சேமிக்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாத புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் செலுத்துவதன் மூலம் ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய முடியும்.


Original Link: Helium in focus: Why the rare gas behind MRI scans and space missions matters?

Share:

இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட 'தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்' (Nationally Determined Contributions) - முக்கிய அம்சங்கள் என்ன? - பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள்:


ஒவ்வொரு நாடும் காலநிலை நடவடிக்கைக்கான திட்டங்களைத் தயாரித்துச் செயல்படுத்தவும், ஐந்து ஆண்டு சுழற்சிகளில் அந்நடவடிக்கைகளின்  நோக்கத்தை படிப்படியாக உயர்த்தவும் கடமைப்படுத்தும், 2015-ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தின் விதிகளுக்கு ஏற்ப இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


புதன்கிழமையன்று அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய இலக்குகளின்படி, 2005-ஆம் ஆண்டின் அடிப்படை அளவிலிருந்து, 2035-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross domestic product (GDP)) உமிழ்வுச் செறிவில் (அதாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு அலகுக்கான உமிழ்வு அளவில்) குறைந்தது 47 சதவீதம் குறைப்பை எட்டப்போவதாக இந்தியா உறுதியளித்துள்ளது. 2030-ஆம் ஆண்டிற்கான தற்போதைய உறுதிப்பாட்டின்படி, 45% அடைவதே இலக்காக உள்ளது. உமிழ்வுச் செறிவுக் குறித்த தரவுகள் வெளியிடப்பட்ட கடைசி ஆண்டான 2020-ஆம் ஆண்டிற்குள், இந்தியா 2005-ஆம் ஆண்டின் அளவுகளிலிருந்து ஏற்கனவே 36 சதவீதத்தை எட்டியிருந்தது.


2035-ஆம் ஆண்டிற்குள், தனது மொத்த மின் உற்பத்தித் திறனில் குறைந்தது 60 சதவீதமாவது புதைபடிவமற்ற எரிபொருள் மூலம் பெற இருப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது. 2030-ஆம் ஆண்டிற்கான முந்தைய இலக்கு 50 சதவீதமாக இருந்தது. இந்த இலக்கு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்னதாகவே எட்டப்பட்டுவிட்டது. இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் நிலவரப்படி, மொத்த மின் உற்பத்தித் திறனில் 52 சதவீதத்திற்கும் அதிகமான அளவு புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களையே சார்ந்துள்ளது.


இந்தியாவின் மூன்றாவது உறுதிமொழி, நாட்டில் உள்ள வனப் பகுதிகளில் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் கூடுதல் திறனை உருவாக்குவது தொடர்பானது. 2030-ஆம் ஆண்டிற்குள், 2005-ஆம் ஆண்டின் இருப்பைவிட கூடுதலாக 2.5 முதல் 3 பில்லியன் டன்கள் அளவிலான கார்பன்-டை-ஆக்சைடுக்கு இணையான உறிஞ்சும் திறனை (carbon sink) உருவாக்க இந்தியா உறுதியளித்துள்ளது. 2021-ஆம் ஆண்டிற்குள், குறைந்தது 2.3 பில்லியன் டன்கள் அளவிலான கூடுதல் உறிஞ்சும் திறன் உருவாக்கப்பட்டுவிட்டது. 2035-ஆம் ஆண்டிற்குள், இந்த அளவை 3.5 முதல் 4 பில்லியன் டன்கள் அளவிலான கார்பன்-டை-ஆக்சைடுக்கு இணையான அளவிற்கு விரிவுபடுத்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.


காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சியில், இந்தியாவின் பங்களிப்பின் மையமாக இந்த மூன்று இலக்குகள்  உள்ளன. தனது கார்பன் தடம் அல்லது சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் இந்தியா எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளும் உள்ளன; எனினும், இவற்றுக்குக் குறிப்பிட்ட அளவீட்டு இலக்குகள் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. காலநிலை மாற்றத்தைத் தாங்கி நிற்கும் வகையிலான உள்கட்டமைப்பை  உருவாக்குவது, நிலையான வாழ்க்கை முறைகளை ஊக்குவிப்பது மற்றும் பசுமை முதலீடுகளுக்குத் துணைபுரியும் வகையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான புதிய காலநிலை நிதியாதாரங்களை ஒருங்கிணைப்பது ஆகியவை இத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


2015-ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தங்களின்கீழ், நாடுகள் தங்கள் காலநிலை சார்ந்த நடவடிக்கைகளைத் தாங்களே தீர்மானித்துக்கொள்கின்றன. இந்தான் இவை 'தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்' (Nationally Determined Contributions) அல்லது NDCs என்று அழைக்கப்படுகின்றன. இருப்பினும், அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு காலநிலை நடவடிக்கை தொகுப்பும், அதற்கு முந்தைய நடவடிக்கைகளைவிட முன்னேற்றத்தைக் குறிப்பதாக அமைந்திருக்க வேண்டும்.


• இது இந்தியாவின் மூன்றாவது தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் ஆகும். முதல் இரண்டு தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் முறையே 2015-ஆம் ஆண்டில் 2025 மற்றும் 2022-ஆம் ஆண்டில் (2030-ஆம் ஆண்டைக் குறிவைத்து) சமர்ப்பிக்கப்பட்டன. உலகின் மிகப்பெரிய உமிழ்வு நாடான சீனா உட்பட, மற்ற பெரும்பாலான பெரிய உமிழ்வு நாடுகள் அனைத்தும், பிரேசிலின் பெலெம் நகரில் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற வருடாந்திர காலநிலை மாநாட்டிற்கு முன்னதாகவே, கடந்த ஆண்டில் தங்கள் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை பற்றி தெரிந்து வைத்திருந்தன. 


இந்தியாவின் 2031-35ஆம் ஆண்டுக்கான தேசிய பங்களிப்பு முதலீடானது, 'வளர்ந்த இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படுகிறது. இது 2047-ஆம் ஆண்டுக்கான ஒரு இலக்கு மட்டுமல்ல, மாறாக, வருங்கால சந்ததியினருக்காக வளமான மற்றும் பருவநிலை மாற்றங்களைத் எதிர்கொள்ளக்கூடிய ஒரு இந்தியாவைக் கட்டமைக்க இன்றே செயல்படுவதற்கான உறுதியான நடவடிக்கையாகும்.


2015-ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தியாவின் தொடக்கக்காலப் பருவநிலை உறுதிமொழிகள், ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தன; 2030-ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) உமிழ்வுச் செறிவை 33–35% குறைப்பதும், புதைபடிவமற்ற வளங்களைச் சார்ந்த மின் உற்பத்தித் திறனின் பங்கை 40%-ஆக உயர்த்துவதும் இதன் இலக்குகளாக உள்ளன. இந்த இரண்டு இலக்குகளுமே, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முறையே 11 ஆண்டுகள் மற்றும் 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எட்டப்பட்டன. இது காலநிலை மாற்றத்தின் (climate governance) மீதான இந்தியாவின் நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் செயல்பாடுகள் சார்ந்த அணுகுமுறையைத் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.


Original Link: India’s updated Nationally Determined Contributions-What are the key provisions


Share:

பார்சியல்லாதவரைத் திருமணம் செய்துகொண்டதற்காகப் பார்சி பெண்கள் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட முடியுமா? உச்சநீதிமன்றம் ஆராயவுள்ளது. -அமால் ஷேக்

பார்சி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் சமூகத்திற்கு வெளியே திருமணம் செய்தால், அவர்கள் சமூகத்திலிருந்து விலக்கப்படலாம். ஆனால்,  ஆண்கள் அவ்வாறு செய்தால், அவர்களுக்கு இது போன்ற ஒரு நிலை இல்லை. இந்த நிலை சமத்துவக் கொள்கைக்கு (equality) எதிரானது என்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இதை தீர்மானிக்கும் போது சிறுபான்மை சமூகங்களின் (minority communities) உரிமைகளையும் கருத்தில் பார்க்க வேண்டும்.


தமது சமூகத்திற்கு வெளியே திருமணம் செய்துகொள்ளும் ஒரு பார்சிப் பெண், அதன் மூலம் பார்சி அல்லாதவராகக் கருதப்பட முடியுமா என்பதை உச்சநீதிமன்றம் ஆராய உள்ளது. இதன் மூலம், 2012-ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருந்து வந்த அரசியலமைப்பு தொடர்பான ஒரு கேள்வி மீண்டும் கவனம் பெற்றுள்ளது.


இந்த வழக்கு, 2024ஆம் ஆண்டு தனது பாட்டியின் இறுதி சடங்கிற்காக ஒரு அகியாரி (agiary)-க்குள் (ஜொராஸ்ட்ரியன் நெருப்புக் கோவில்) நுழையஅனுமதி மறுக்கப்பட்ட தினா புத்ராஜா என்பவரின் மனுவிலிருந்து உருவானது.


2009-ஆம் ஆண்டில், 1954-ஆம் ஆண்டின் சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் அவர் ஒரு இந்து ஆணைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர் இந்துமதத்திற்கு மாறவில்லை. இருந்த போதிலும், நாக்பூர் பார்சி பஞ்சாயத்து விதிகளின்படி, நடைபெற்ற திருமணம் மட்டுமே அவரைச் சமூகத்திலிருந்து விலக்கிவைப்பதற்கு முக்கிய காரணியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இங்கு 'பஞ்சாயத்துகள்' என்பவை, பல்வேறு பிராந்தியங்களில் உள்ள சமூகத்தினர் தங்கள் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக அமைத்துள்ள அறக்கட்டளைகளைக் (charitable trusts) குறிக்கின்றன.


பெண்களை விலக்கி வைக்கும் இந்தச் செயலை எதிர்த்துத் தனது மனுவில் வாதிட்டுள்ள அவர், அரசியலமைப்பின்கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்தச் செயல் பெண்களைத் தங்கள் மதத்திலிருந்து ‘சமூகத்திலிருந்து விலக்கப்பட்டதாகவும்’ (ostracised), அவர்களின் ‘அடையாளத்தைப் பறிப்பதாகவும்’ (stripped) அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்ஜி, விபுல் எம். பன்சோலி ஆகியோரைக் கொண்ட அமர்வு, நாக்பூர் பார்சி பஞ்சாயத்திற்கும்  ஒன்றிய அரசுக்கும் அறிவிப்பாணை அனுப்பியுள்ளது.


வழக்கின் பின்னணி


2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 60,000-க்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட பார்சி சமூகம், இந்தியாவில் உள்ள மிகச்சிறிய மதச் சிறுபான்மையினரில் ஒன்றாகும். அவர்கள் பெரும்பாலும் குஜராத் மற்றும் மும்பையில் அதிகமாக உள்ளனர். பிறப்பு விகிதங்கள் குறைவாக உள்ளன. மக்கள் தொகை  குறைந்து வருகிறது. மேலும், கலப்புத் திருமணம் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. யார் பார்சி எனக் கருதப்படுவார், இறுதியில் அதை யார் தீர்மானிக்கிறார்  போன்ற கேள்விகள்  முக்கியத்துவம் பெற்றுள்ளன.


2012-ஆம் ஆண்டில், குஜராத்தில் உள்ள வல்சாத் பார்சி பஞ்சாயத்து, சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் ஒரு பார்சியல்லாத நபரைத் திருமணம் செய்துகொண்டதன் மூலம் தான் இனி ஒரு பார்சி அல்ல என்று அறிவித்ததைத் தொடர்ந்து, கூல்ரோக் குப்தா உச்சநீதிமன்றத்தில் ஒரு சிறப்பு அனுமதி (Special Leave Petition (SLP)) மனுவைத் தாக்கல் செய்தார். குடிமைச் சட்டம் மதமாற்றம் இன்றி வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கிறது. இருப்பினும், அந்தச்செயல் எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று நாக்பூர் பார்சி பஞ்சாயத்து தனது வாதத்தை முன்வைத்தது.


சிறப்பு அனுமதி (Special Leave Petition (SLP)) என்றால் என்ன?


           உச்ச நீதிமன்றத்தில், கீழ் நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களின் உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய, அரசியலமைப்பின் பிரிவு 136-ஐ பயன்படுத்தி தாக்கல் செய்யப்படும் மனுவே  சிறப்பு அனுமதி (Special Leave Petition (SLP)) மனுவாகும்.


இந்தப் பிரச்சினையை ஆராய்வதற்காக உச்சநீதிமன்றம் ஒரு அரசியல் சாசன அமர்வை அமைத்தது; இருப்பினும், அந்த வழக்கு அப்போதிருந்து நிலுவையிலேயே உள்ளது. வல்சாத் பஞ்சாயத்து, குப்தா தனது பெற்றோரின் இறுதிச் சடங்கு பிரார்த்தனைகளில் ஒரு 'அகியாரிக்குள்’ (Zoroastrian fire temple) கலந்துகொள்ள அனுமதி அளித்தது.


உச்சநீதிமன்றத்தின் முன் தற்போது உள்ள வழக்கு 


2026-ஆம் ஆண்டு தாக்கல் செய்யபட்ட மனுவில், தீனா புத்ராஜா, பதில் மறுக்கப்படலாம் என்று தெரிந்திருந்ததால், அக்யாரிக்குள் நடைபெறும் உடல்நலம் குன்றிய தனது பாட்டியின் இறுதிச் சடங்கு பிரார்த்தனைகளில் கலந்துகொள்ள அனுமதி கேட்டு நாக்பூர் பார்சி பஞ்சாயத்திற்கு முன்கூட்டியே கடிதம் எழுதியதாகக் கூறினார்.


சட்டம் கூறுவது என்ன?


பஞ்சாயத்தின் 5(2) விதிப்படி, “ஒரு பார்சி/இரானி ஜரோஸ்திரியன் பெண், பார்சி அல்லாத ஆணை திருமணம் செய்து, குழந்தைகள் பெற்றால், அந்த பெண்ணும் அவரது குழந்தைகளும் பார்சி/இரானி ஜர்தோஷ்டிகள் (Zarthostis) என்று ஏற்கப்படமாட்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


கோயிலுக்கு வெளியே உள்ள வெளிப்புற மண்டபத்தில் அந்த பெண்   அமரலாம் என்று பஞ்சாயத்து தெரிவித்துள்ளது. செப்டம்பர் 2024-ல் அந்த பெண்ணின் பாட்டி காலமான ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்த பெண் தன்னை பார்சியாக எந்தவிதத்திலும் அடையாளப்படுத்திக்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தி, பஞ்சாயத்து அந்த பெண்ணிற்கு ஒரு கடிதம் எழுதியது.


விதிக்கு எதிரான சவால்


இந்த மனு விதி 5(2)-ஐ “உயிரியல் அபத்தம்” (biological absurdity) என்றும் “வெளிப்படையாக தன்னிச்சையானது” (manifestly arbitrary) என்றும் அழைக்கிறது. இது பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆண் மதத்திற்கு வெளியே திருமணம் செய்துகொண்டால், அவர் தனது மத அடையாளத்தையும், அந்த சமூக இடங்களில் இருக்கும் உரிமையையும் தக்க வைத்துக் கொள்கிறார்.


மேலும், இத்தகைய பார்சி ஆண்களின் குழந்தைகள் மத உரிமைகளுடன் கூடிய பார்சிகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். ஆனால், அதே போன்றதொரு செயலைச் செய்யும் பார்சிப் பெண்களின் குழந்தைகள் அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. உயிரியல்ரீதியாக 50% பார்சி உள்ளவர்கள் அனைத்து உரிமைகளுடன் பார்சிகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். ஆனால் மனுதாரர் 100% மரபியல் ரீதியாக பார்சி ஆனவராக இருந்தும், ஒரு இந்து ஆணை திருமணம் செய்ததன் காரணத்தினால் மட்டும் அகியாரி (Agiary) கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 


2023-ஆம் ஆண்டில், தனது மகனை ஜொராஸ்ட்ரிய மதத்தில் முறைப்படி இணைக்கும் 'நவ்ஜோத்' சடங்கை புத்ராஜா ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், பஞ்சாயத்தின் நிர்வாகக் குழு இதற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதுகுறித்த செய்திகளை சமூக ஊடகங்களிலும் பரப்பியது.


இந்த மனு, மூன்று அரசியலமைப்பு அடிப்படைகளின்கீழ் உள்ள விதிகளைச் சவாலுக்கு உட்படுத்துகிறது.


அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 14-ன் (சட்டத்தின் முன் சமத்துவம்) கீழ், இந்த விதியின் வகைப்படுத்தல் முழுமையாக பாலினத்தை (gender) அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று வாதிடப்படுகிறது. நியாயமான வகைப்பாட்டிற்கான உச்சநீதிமன்றத்தின் அளவுகோலானது, மாறுபட்ட முறையில் நடத்தப்படும் குழுக்களுக்கு இடையே நிலவும் உண்மையான வேறுபாட்டின் அடிப்படையில் அத்தகைய பாகுபாடு அமைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.


இங்கு, தங்கள் சமூகத்திற்கு வெளியே திருமணம் செய்துகொள்ளும் ஒரு பார்சி ஆணுக்கும், அதே செயலைச் செய்யும் ஒரு பார்சி பெண்ணுக்கும் இடையிலான ஒரே செயல்முறை சார்ந்த வேறுபாடு அவர்களின் பாலினமே ஆகும். சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்த விதிமுறை பெண்களை மட்டுமே சமூக விலக்கிற்கும், சமய வழிபாட்டு உரிமைகளை மறுப்பதற்கும், தங்கள் அடையாளத்தை இழப்பதற்கும் உள்ளாக்குகிறது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21-ன் (வாழ்வுரிமைப் பாதுகாப்பு) கீழ், ஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமானது, அரசியலமைப்புரீதியாகப் பாதுகாக்கப்படும் கண்ணியம் மற்றும் சுயநிர்ணய உரிமையின் ஒரு பகுதியாகும் என்று கூறும் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை இந்த மனு மேற்கோள் காட்டுகிறது. ஒரு பெண்ணின் திருமணத் தேர்வின் காரணமாக, அந்த பெண்ணினது மத அடையாளத்தையும் சமூக அணுகலையும் பறிக்கும் விதி, அத்தேர்வுக்கு விதிக்கப்படும் ஒரு தண்டனையாகவே செயல்படுகிறது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


அந்த விதி திருமணத் தேர்வைத் தடுப்பதில்லை என்றாலும், அந்தத் தேர்வால் வரும் பாதிப்புகள் பெண்கள் மீதே விழுகிறது. அந்த விதி, "பெண்ணின் அடையாளம் அந்த பெண்ணின் கணவனின் அடையாளத்தைச் சார்ந்ததாகவே கருதப்படும் ஆணாதிக்கக் கருத்துக்களை வலுப்படுத்துகிறது என்றும், பார்சி பெண்களை "பார்சி ஆண்களுக்குக்  அடிபணிபவர்களாகவே" நடத்துகிறது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 25-ன் (சமயச் சுதந்திரம்) கீழ், ஒரு அறக்கட்டளையாகச் செயல்படும் நாக்பூர் பார்சி பஞ்சாயத்திற்கு, இத்தகைய விளைவுகளை விதிக்கும் அதிகாரம் உள்ளதா என்று கேள்வி எழுப்புகிறது. ஜாம்ஷெட் கங்கா v பார்சி பஞ்சாயத்து நிதிகள் (Jamshed Kanga v Parsi Panchayat Funds) வழக்கில், பம்பாய் உயர்நீதிமன்றம், ஜரோஸ்திரிய மதத்தில் சமூக விலக்கு (excommunication) என்ற நடைமுறைக்கு இடமில்லை என்றும், அத்தகைய அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை என்றும் தீர்ப்பளித்தது.


புத்ராஜா தனது சமயத்தை மாற்றிக்கொள்ளாமல்,  குடிமை சட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொண்டார் என்பதைக் கருத்தில் கொண்டு, அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் ஒரு சமயத்தை அவர் துறந்துவிட்டதாகக் கருதி, அவரை ஒரு அறக்கட்டளை மட்டுமே தீர்மானிக்க முடியாது என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


மேலும், இது "பார்சி" மற்றும் "ஜொராஸ்ட்ரியன்" ஆகிய இரு சொற்களுக்கு இடையிலான வேறுபாட்டையும் தெளிவுபடுத்துகிறது. சர் தின்ஷா மானெக்ஜி பெட்டிட் தொடர்பான 1909-ஆம் ஆண்டின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, 'பார்சி' (Parsi”) என்பது பரம்பரை மற்றும் சமூகத்தைக் குறிக்கிறது என்றும், அது வம்சாவளியை அடிப்படையாகக் கொண்டது என்றும், அதேவேளையில் 'ஜொராஸ்ட்ரியன்' (Zoroastrian) என்பது சமயத்தைக் குறிக்கிறது மனுவில் கூறப்பட்டுள்ளது. "பார்சி பெற்றோருக்குப் பிறந்த ஒரு நபர், பிறப்பாலேயே பார்சியாகவே நீடிக்கிறார். அத்தகைய இன அடையாளத்தை திருமணத்தின் மூலம் பிரிக்க முடியாது” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும்


நீதிமன்றங்கள் பொதுவாக மதங்களின் உள்ளக நிர்வாகம் தொடர்பான கேள்விகளில் தலையிடுவதைத் தவிர்த்து வந்துள்ளன. மதப் பிரிவுகள் தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கிறது. ஆனால், அந்தப் பாதுகாப்பு முழுமையானதல்ல. கூல்ரோக் வழக்கில், இந்த விவகாரம் சட்டரீதியன கேள்வியை  எழுப்புகிறது என்று நீதிமன்றம் கருதியதால், அதை அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்பியதாக  குறிப்பிட்டுள்ளது.

மேலும், இது ஒரு தெளிவான நடைமுறை இல்லாததையும் எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில், டெல்லி மற்றும் கொல்கத்தாவில் உள்ள பார்சி பஞ்சாயத்துகள், தங்கள் மதத்திற்கு வெளியே திருமணம் செய்யும் பெண்களைத் தங்கள் அடையாளத்தை இழந்தவர்களாகக் கருதுவதில்லை. இந்த விதி ஒரு கோட்பாட்டு விஷயமாக இருந்தால், அதில் ஒரு சீரான தன்மை இருக்கும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கும்.


சமத்துவம் (equality), தனிநபர் சுதந்திரம் (personal liberty) மற்றும் மதச் சுதந்திரம் (religious freedom) ஆகியவற்றுக்கான உத்தரவாதங்களுக்கு இணையாக, அத்தகைய விதி நிலைத்திருக்க முடியுமா என்பதை நீதிமன்றம் உறுதிபடுத்த  வேண்டும்.


Original Link: Can Parsi women be excommunicated for marrying non-Parsis? SC to examine.


Share:

இந்தியாவின் புதிய காலநிலை இலக்குகள் எளிமையானவை, ஆனால் மிகவும் முக்கியமானவை. -அமிதாப் சின்ஹா

அமெரிக்கா புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களிலிருந்து பின்வாங்குவதாலும், காலநிலை மாற்றத்திற்கான நிதி உதவி குறித்த எதிர்பார்ப்புகள் குறைந்து வருவதாலும், இந்தியா தூய்மையான எரிசக்திப் பாதையில் உறுதியாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.


இந்தியா தனது 2035-ஆம் ஆண்டிற்கான காலநிலை இலக்குகளை கடந்த புதன்கிழமை அன்று அறிவித்தது. இதில் நாட்டின் பொருளாதாரத்தில் கார்பன் உமிழ்வு தீவிரத்தைக் குறைக்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை விரிவுபடுத்தவும், காடுகள் மற்றும் மரங்கள் மூலம் கார்பன் சேமிப்பிடங்களை (Carbon Sinks) உருவாக்கவும் இந்தியா உறுதியளித்துள்ளது.


இந்தியா தனது 2030-ஆம் ஆண்டிற்கான இலக்கான 50 சதவீதத்திலிருந்து உயர்த்தி, 2035-ஆம் ஆண்டிற்குள் நிறுவப்பட்ட மின்சாரத் திறனில் (Installed electricity capacity) குறைந்தது 60 சதவீதத்தை பெட்ரோலியம் அல்லாத எரிபொருள் (Non-fossil fuel) ஆதாரங்களிலிருந்து (சூரிய சக்தி, காற்று போன்றவை) பெறுவதை உறுதி செய்வதாகத் தெரிவித்துள்ளது. மேலும், 2005-ஆம் ஆண்டின் அளவோடு ஒப்பிடுகையில், நாட்டின் கார்பன் உமிழ்வுத் தீவிரத்தை, (அதாவது ஒரு யூனிட் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வெளியாகும் உமிழ்வு) குறைந்தது 47 சதவீதத்திற்குக் குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தற்போதைய 2030-ஆம் ஆண்டிற்கான இலக்கான 45 சதவீதத்தைவிட இரண்டு சதவீதம் அதிகம் ஆகும். இத்துடன், 2005-ஆம் ஆண்டைவிட 3.5 முதல் 4 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடுக்கு இணையான கூடுதல் கார்பன் சேமிப்பிடத்தை (Carbon Sink) உருவாக்குவதாக இந்தியா வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


2015-ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் தேவைப்படுவதற்கேற்ப, ஒவ்வொரு புதிய இலக்கும் ஏற்கனவே உள்ள 2030-ஆம் ஆண்டிற்கான உறுதிமொழிகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி, உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கு எதிரான போரில் பங்களிக்க, ஒவ்வொரு நாடும் தனக்கான காலநிலை நடவடிக்கைகளைத் தாமாகவே முடிவு செய்து செயல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவை தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally Determined Contributions (NDCs)) என்று அழைக்கப்படுகின்றன. அதாவது, நாடுகள் தங்களின் பணிகளின் வகை மற்றும் அளவை தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது.



இந்தியாவிலிருந்து வரும் சமிக்ஞைகள்


முதன்முதலில் பார்க்கும்போது, இந்தியாவின் புதிய பருவநிலை இலக்குகள், ஏற்கனவே 2030-ஆம் ஆண்டிற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைவிடச் சற்று மட்டுமே மேம்படுத்தப்பட்டதாகத் தோன்றுகின்றன. மேலும், அந்தப் பழைய இலக்குகளை இந்தியா நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே அடைந்துவிடும் நிலையில் உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான இலக்கு ஏற்கனவே எட்டப்பட்டுவிட்டதாகவும் மற்ற இரண்டு இலக்குகளும் புதிய புள்ளிவிவரங்கள் வெளிவரும்போது இலக்கை நெருங்கியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.


இருப்பினும், தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில், நாடுகள் தங்களது எரிசக்தி, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இத்தகைய சூழலில், இந்தியா தான் தேர்ந்தெடுத்த தூய்மையான எரிசக்தி தொடர்பான திட்டங்களை மீண்டும் உறுதிப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.


அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிகழ்வுகள், உலகளாவிய பருவநிலை மாற்றத் தடுப்பு முயற்சிகளைப் பெருமளவு பலவீனப்படுத்தியுள்ளன. இவை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியது மட்டுமின்றி, நிலக்கரி மற்றும் பெட்ரோல் போன்ற பெட்ரோலிய எரிபொருட்களில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு உலகம் மாறிவரும் வேகத்தைத் தலைகீழாக மாற்றும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.


அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களைக் கைவிட்டுவிட்டு, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை மேம்படுத்துவதற்கும் அதைக் கட்டுப்படுத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 


உலகின் இரண்டாவது மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தியாளராகவும் நுகர்வோராகவும் இருக்கும் ஒரு நாடு, தனது நிலையில் இருந்து இப்படிப் பின்வாங்கியது உலகளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் மேற்கு ஆசியாவில் நடக்கும் போர் ஆகியவற்றின் மூலம், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகள் பல நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன. இதனால், அந்த நாடுகள் தங்களுக்குத் தேவையான எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாப்பாக உறுதிசெய்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.


இந்தச் சூழலில், உலகின் மூன்றாவது மிகப்பெரிய கார்பன் உமிழ்வு நாடாகவும், அதிக எரிசக்தி நுகர்வோராகவும் திகழும் இந்தியா—தூய்மையான எரிசக்தி மற்றும் வலுவான பருவநிலை செயல்பாடுகளில் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.


ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான நிர்வாகச் செயலாளர் (UN Climate Change Executive Secretary) சைமன் ஸ்டீல், இந்தியாவின் புதிய காலநிலை இலக்குகளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியாவிலிருந்து வெளிவந்துள்ள இத்தகைய அறிவிப்பு மிகவும் முக்கியமானதாகிறது. குறிப்பாக, நிலையற்ற நிலக்கரி மற்றும் பெட்ரோலிய எரிபொருட்களை மட்டுமே சார்ந்திருப்பதால் ஏற்படும் செலவுகள் அதிகரித்துவரும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த எரிபொருள் சார்ந்து இருப்பது உலகளவில் தேசிய பாதுகாப்பையும் இறையாண்மையையும் பலவீனப்படுத்துவதோடு, விலைவாசி உயர்வையும் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்துகிறது. இதற்கு மாறாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறுகிய கடல் போக்குவரத்து பாதைகளையோ அல்லது கப்பற்படையின் பலத்த பாதுகாப்பையோ சார்ந்து இருப்பதில்லை என்றும் சைமன் ஸ்டீல் கூறினார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மூடப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் இந்தப் புதிய காலநிலைத் திட்டம் அதன் பொருளாதார ஆதிக்கத்தை வலுப்படுத்தும் என்றும் ஐக்கிய நாடுகள் அவையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.




சர்வதேச நிதிச் செயல்பாடுகள் மீதான ஏமாற்றம்


தற்போதைய இலக்குகளை அடைவதில் இந்தியா ஏற்கனவே அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கருத்தில் கொள்ளும்போது, 2035-ஆம் ஆண்டிற்காக இன்னும் கூடுதலான இலக்குகளை இந்தியா நிர்ணயித்திருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.


உதாரணமாக, மத்திய மின்சார ஆணையத்தின் (Central Electricity Authority (CEA)) சமீபத்திய அறிக்கையில், மின்உற்பத்தித் திறனில் பெட்ரோலியம் அல்லாத எரிபொருள் ஆதாரங்களின் பங்கு இப்போதுள்ள 52%-லிருந்து 2035-ஆம் ஆண்டிற்குள் 70%-ஆக உயரக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா தனது தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு (Nationally Determined Contribution (NDC)) இலக்கில் 2035-ஆம் ஆண்டிற்குள் 60% அளவை அடைய வேண்டும் என்று மட்டுமே இலக்கு நிர்ணயித்துள்ளது. முன்கூட்டியே சர்வதேச உறுதிமொழிகளால் தங்களைக் கட்டாயப்படுத்திக் கொள்வதைவிட, வாய்ப்புகள் மற்றும் வசதிகள் இருக்கும்போது அதிகப்படியான இலக்குகளைச் சாதிக்க இந்தியா விரும்புவதையே  இந்த நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. 


காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு வளர்ந்த நாடுகள் போதிய நிதியுதவியை வழங்காதது இந்தியாவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் எனவே, இந்தியா தனது 2035-ஆம் ஆண்டிற்கான இலக்குகளை இன்னும் உயர்த்தி நிர்ணயிக்காததற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


2024-ஆம் ஆண்டு பாகு (Baku) நகரில் நடைபெற்ற காலநிலை நிதிப்பேச்சுவார்த்தையின் முடிவுகளில் இந்தியா கடும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதில், வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்காக ஆண்டுக்கு சுமார் 300 பில்லியன் டாலர் (அதாவது, சுமார் ₹25 லட்சம் கோடி) நிதியைத் திரட்ட மட்டுமே ஒப்புக்கொண்டன. அந்தத் தொகையும் 2035-ஆம் ஆண்டிலிருந்துதான் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. வளரும் நாடுகள் தங்கள் காலநிலை மாற்ற நடவடிக்கைகளுக்காக ஆண்டுக்குக் குறைந்தது 1.3 டிரில்லியன் டாலர் (சுமார் ₹109 லட்சம் கோடி) நிதி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்ததாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.


இந்தியா சர்வதேச மேடைகளில் இந்த விவகாரத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறது. கடந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் (United Nations Climate Change Conference (COP30)), காலநிலை நிதி தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் விவாதிப்பதற்கான இரண்டு ஆண்டுகால திட்டத்தை உருவாக்குவதற்கான முடிவை எடுப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.


இந்தியா போன்ற நாடுகளுக்குப் போதுமான நிதி கிடைக்கவில்லை என்றால், அவை தங்கள் காலநிலை மாற்றத் திட்டங்களின் இலக்குகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம் என்று இந்தியா வாதிட்டு வருகிறது. இது குறித்து இந்திய அதிகாரி ஒருவர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழிடம் கூறுகையில், பாகுவில் (Baku) நடந்த 29-வது காலநிலை (COP29) மாநாட்டில் காலநிலை நிதி தொடர்பாகக் கிடைத்துள்ள முடிவுகள் ஏமாற்றமளிப்பதாகவும், இந்தியாவின் 2035-ஆம் ஆண்டுக்கான காலநிலை இலக்குகளில் எதிரொலிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதன் விளைவாக, பசுமை முதலீடுகளுக்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து குறைந்த வட்டியிலான, நீண்டகால நிதியைப் பெறுவது இந்தியாவின் 2035-ஆம் ஆண்டுக்கான காலநிலைத் திட்டத்தின் (2035 Climate Plan) மிக முக்கியமான இலக்காக மாறியுள்ளது.


இருப்பினும், இந்தியா தனது இலக்குகளைத் தற்போது குறைந்த அளவே அதிகரித்துள்ளது. இதன் மூலம், காலநிலை மாற்றத்திற்கு எதிராகச் செயல்படுவதில் தங்களுக்கு அர்ப்பணிப்பு இருந்தாலும், சர்வதேச அழுத்தங்கள் தங்கள் செயல்பாட்டின் வேகத்தைத் தீர்மானிக்க அனுமதிக்கப்போவதில்லை என்பதை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துவதாகத் தெரிகிறது. ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற அமைப்பிடம் (UN Climate Change (UNFCCC)) இன்னும் சமர்ப்பிக்கப்படாத இந்தியாவின் 2035-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு (Nationally Determined Contributions (NDC)), தகவமைப்பு நடவடிக்கைகளுக்கு  அதிக முக்கியத்துவம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Original Link: India’s new climate targets are modest but significant.


Share:

பெண்களுக்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்குத் தொகுதி மறுவரையறை ஏன் அவசியமாகிறது? - பிரியா குமாரி சுக்லா

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (National Democratic Alliance (NDA)), மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய விகிதாச்சாரத்தை மாற்றாமல், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முன்மொழிந்துள்ளது. மேலும், பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை (Women’s Reservation Act) நடைமுறைப்படுத்துவதற்காக, சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பதிலாக, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் சட்டப்பேரவை இடங்களை நிர்ணயிக்கவும் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கை சட்டரீதியாகவும், அரசியலமைப்புரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


முக்கிய அம்சங்கள்:


• மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ (Nari Shakti Vandan Adhiniyam - Women’s Reservation Act, 2023) சட்டத்தை அமல்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பு ஒத்துழைப்பைப் பெறுவதற்காக, ஒன்றிய அரசு இந்த யோசனையைச் சில எதிர்க்கட்சிகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைகளின் போது முன்மொழிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


• இந்தத் திட்டத்தின்கீழ், 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தபிறகு, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைத் தற்போதைய 543-லிருந்து 50% உயர்த்தி 816-ஆக அதிகரிக்க அரசு உத்தேசித்துள்ளது. இதில் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படவுள்ளன.




உங்களுக்குத் தெரியுமா?


• இந்திய அரசியலமைப்பின் விதி 81 ஆனது, "ஒரு நபர், ஒரே வாக்கு, ஒரே மதிப்பு" (One Person, One Vote, One Value) என்ற சமத்துவக் கொள்கையை உறுதி செய்கிறது. இதன்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் மக்களவையில் இடங்கள் ஒதுக்கப்படும்போது, இந்த இடங்களின் எண்ணிக்கை அந்த மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப விகிதாசார அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், முடிந்தவரை அனைத்து மாநிலங்களிலும் இந்த விகிதம் ஒரே சீராகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பதையும் இந்தச் சட்டப்பிரிவு வலியுறுத்துகிறது.


• இந்திய அரசியலமைப்புச் சட்டம் 81(2)(b)-ன்படி, ஒவ்வொரு மாநிலமும் தொகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு பிரிக்கப்படும்போது, ஒரு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும், மக்கள்தொகைக்கும் இடங்களின் எண்ணிக்கைக்குமான விகிதம் முடிந்தவரை சமமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.


• இந்த விதியானது ஒரு குறிப்பிட்ட விதிவிலக்கை வழங்குகிறது. 60 லட்சத்திற்கும் மிகாத மக்கள் தொகையைக் கொண்ட மிகச்சிறிய மாநிலங்களுக்கு இந்த விதிவிலக்கு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்த மாநிலங்கள் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும், நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் அதாவது, மக்களவையில் தங்களுக்குரிய முறையான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது.


• இந்திய அரசியலமைப்பின் பிரிவு-82-ன்படி, ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகும், நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் தீர்மானிப்பதற்கேற்ப, மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையும், ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் உள்ள தொகுதிகளின் பிரிவுகளும் மறுசீரமைப்பு செய்யப்படும் என்கின்றனர்.


• தொகுதி மறுவரையறை மீதான தற்போதைய தடையானது 1976 மற்றும் 2001-ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட இரண்டு அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களால் ஏற்பட்டது. 1976-ஆம் ஆண்டு திருத்தத்தின் மூலம், மாநிலங்களுக்கிடையேயான இடஒதுக்கீட்டைத் தீர்மானிக்கும்போது, அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் 81 மற்றும் 82-ல் குறிப்பிடப்பட்டுள்ள "முந்தைய கடைசி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு" என்பது 1971-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பையே குறிக்கும் என 25 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2001-ஆம் ஆண்டில், இந்தச் சட்டப்பிரிவுகள் மீண்டும் திருத்தப்பட்டு, 2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகும் வரை இந்தத் தடை நீட்டிக்கப்பட்டது. எனவே, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் வெளியானவுடன் இந்தத் தடை தானாகவே முடிவுக்கு வரும் என்கின்றனர்.


• இந்தச் சட்டத்திருத்தங்களுக்கான ஒரு மிக முக்கியமான காரணம் தென் மாநிலங்களின் கவலையாகும். தென் மாநிலங்களின் மக்கள்தொகை நிலையான அளவை எட்டியிருந்த வேளையில், சில வட மாநிலங்களின் மக்கள்தொகை மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கு பிறகும் மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், மக்களவையில் தங்களின் பிரதிநிதித்துவப் பங்கு குறைந்துவிடும் என்று தென் மாநிலங்கள் கவலை தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.



Original Link: Why delimitation is required for the implementation of women reservation?


Share:

இந்திய அரசியலமைப்பில் நிதிநிலை மசோதா (Finance Bill) என்பது என்ன? - பிரியா குமாரி சுக்லா

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், புதன்கிழமை அன்று மக்களவையில் கொண்டு வந்த 33 அரசு திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களை நிராகரித்தும், 2026-ஆம் ஆண்டிற்கான நிதி மசோதா (Finance Bill 2026) குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.


முக்கிய அம்சங்கள்:


• இந்த மசோதா இனி மாநிலங்களவைக்கு (Rajya Sabha) அனுப்பப்படும். அங்கு மேலவை இதற்கு ஒப்புதல் அளித்தவுடன், 2026-27-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை  செயல்முறைகள் முழுமையடையும் என்கின்றனர்.


• 2026-27-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய நிதிநிலைத் திட்டம் மொத்தம் ₹53.47 லட்சம் கோடி செலவினத்தை மதிப்பிட்டுள்ளது. இது மார்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டைக் காட்டிலும் 7.7 சதவீதம் அதிகமாகும். மேலும், 2026-27 நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) 4.3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டின் 4.4 சதவீதத்தைவிடக் குறைவு ஆகும்.


உங்களுக்குத் தெரியுமா?


• இந்திய அரசியலமைப்பின் பிரிவு 110(1)-ன்கீழ், ஒரு மசோதா பின்வரும் விவகாரங்கள் அனைத்தையும் அல்லது அவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பற்றிய விதிகளை மட்டுமே கொண்டிருந்தால், அது ஒரு பண மசோதாவாக (Money Bill) கருதப்படும், அவை:


(a) ஏதேனும் ஒரு வரியை விதித்தல், நீக்குதல், குறைத்தல், மாற்றுதல் அல்லது ஒழுங்குபடுத்துதல் தொடர்பான விஷயங்கள்.


(b) அரசின் கடன் பெறுதல் முறையை ஒழுங்குபடுத்துதல்;


(c) இந்தியாவின் தொகுப்பு நிதி (Consolidated Fund) அல்லது அவசரகால நிதி (Contingency Fund) ஆகியவற்றைக் கையாளுதல், அவற்றில் பணத்தைச் செலுத்துதல் மற்றும் நிதியைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும்.


(d) இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து (Consolidated Fund of India) பணத்தைப் பயன்படுத்துதல்.


(e) இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் கட்டாயச் செலவினங்களாக சில குறிப்பிட்ட செலவுகளை அறிவிப்பது அல்லது அத்தகைய செலவினங்களின் அளவை அதிகரிப்பது.


(f) இந்தியாவின் தொகுப்பு நிதி அல்லது பொதுக் கணக்கில் பணத்தைப் பெறுதல், அத்தகைய நிதியைப் பாதுகாப்பாக வைத்திருத்தல், அதன் பயன்பாடு, அல்லது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கணக்குகளைத் தணிக்கை செய்தல் ஆகியவற்றை இது குறிக்கிறது.


(g) மேலே குறிப்பிடப்பட்டுள்ள (a) முதல் (f) வரையிலான நிபந்தனைகளுடன் தொடர்புடைய எந்தவொரு விவரமும் பணமசோதாவாகக் கருதப்படும்.


இருப்பினும், ஒரு மசோதாவில் அபராதங்கள், பணத்தண்டனைகள் (Financial Penalties), உரிமங்கள் அல்லது சேவைகளுக்கான கட்டணங்கள் இடம் பெற்றிருப்பதாலேயே அல்லது உள்ளூர் தேவைகளுக்காக உள்ளூர் அதிகார அமைப்புகளால் விதிக்கப்படும் வரிகளைக் கையாள்கிறது என்பதாலேயே, அந்த மசோதாவை ஒரு பண மசோதா (Money Bill) என்று கருதிவிட முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.


• அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 110(3)-ன்படி, “ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா என்ற கேள்வி எழும்போது, மக்களவைத் தலைவரின் முடிவே இறுதியானது” என்று கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், சபாநாயகர் ஒரு மசோதாவைப் பண மசோதா என்று அங்கீகரித்துவிட்டால், அதன் தன்மையை நீதிமன்றத்திலோ, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலோ அல்லது குடியரசுத் தலைவராலோகூட கேள்வி கேட்க முடியாது என்றும் தெரிவிக்கின்றனர்.


• அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 109(1)-ன்கீழ், ஒரு பண மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த முடியாது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு, அது சபாநாயகரின் ஒப்புதலுடன் மாநிலங்களவையின் பரிந்துரைகளுக்காக அனுப்பப்படுகிறது. மாநிலங்களவை இந்த மசோதாவை நிராகரிக்கவோ அல்லது திருத்தவோ முடியாது என்கின்றனர்.  மாறாக, 14 நாட்களுக்குள் அதைத் திருப்பி அனுப்ப வேண்டும். மாநிலங்களவை வழங்கும் பரிந்துரைகளை மக்களவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம், எப்படி இருந்தாலும் மசோதா நிறைவேற்றப்பட்டதாகவே கருதப்படும் என்கின்றனர். ஒருவேளை மாநிலங்களவை 14-நாட்களுக்குள் மசோதாவைத் திருப்பி அனுப்பவில்லை என்றால், சட்டப்பிரிவு 109(5)-ன்படி தானாகவே நிறைவேறியதாகக் கருதப்படும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.


• சபாநாயகரால் சான்றளிக்கப்படாத நிதி மசோதாக்கள் இரண்டு வகைப்படும், அவை: முதலாவது, இந்திய அரசியலமைப்பின் 110-வது பிரிவில் உள்ள விஷயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவை மட்டுமே தனித்துவமாக இல்லாமல் மற்ற விஷயங்களையும் சேர்த்துக்கொண்ட மசோதாக்கள் [பிரிவு 117(1)] ஆகும்.  இரண்டாவது, இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ள வேண்டிய சாதாரண மசோதாக்கள் [பிரிவு 117(3)] ஆகியனவாகும்.


பண மசோதாவைப் போன்றே, முதல் வகை நிதி மசோதாக்களும் மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும், இதற்கு குடியரசுத் தலைவரின் பரிந்துரை கட்டாயம் தேவைப்படும் என்றும் இருப்பினும், பண மசோதாக்களுக்கு விதிக்கப்படும் மற்ற கட்டுப்பாடுகள் இந்த வகை மசோதாக்களுக்குப் பொருந்தாது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். அரசியலமைப்புச் சட்டம் 117 (3)-ன்கீழ் வரும் மசோதாக்களை நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் (மக்களவை அல்லது மாநிலங்களவை) அறிமுகப்படுத்தலாம் என்றும் ஆனால், இந்த மசோதாக்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கும், அவற்றை நிறைவேற்றுவதற்கும் குடியரசுத் தலைவரின் பரிந்துரை மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.


Original Link: What is Finance Bill in Indian Constitution?


Share:

சட்டமன்ற அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கும் அப்பால்... - ஆஞ்சல் சிங்கால்

பெண் வேட்பாளர்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும்  குறைப்பதையும், தேர்தல் தொடர்பான செயல்முறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதையும், தொடர்ச்சியான மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான பயிற்சித் திட்டங்களை நடத்துவதையும், அவர்களுக்கு அத்தியாவசியமான நிதி மற்றும் டிஜிட்டல் திறன்களை வழங்குவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொள்ள வேண்டும்.


2023-ஆம் ஆண்டு பெண்கள் இட ஒதுக்கீடு (Nari Shakti Vandan Adhiniyam) சட்டம், முதலில் வரவிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்த தொகுதி மறுவரையறைப் பணிகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டமான, வீடு பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், தொகுதி மறுவரையறைப் பணிக்கான தெளிவான காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை. மேலும், இந்தச் சட்டம் 2034-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரை நீட்டிக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


 ஒன்றிய அரசு, நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அல்லது மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு பிறகு ஒரு சிறப்பு கூட்டத் தொடரை கூட்டி, ஒரு திருத்த மசோதாவை கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருகிறது. ஒன்றிய அரசின்  நோக்கம், தொகுதி மறுவரையறை (delimitation) செயல்முறையை 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைத்து, 2029-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (1/3) இடஒதுக்கீட்டை விரைவாக அமல்படுத்துவது ஆகும். இந்த நடவடிக்கை, இந்தியாவில் பெண்கள் இடஒதுக்கீட்டின் பின்னணி, இடஒதுக்கீட்டால் கிடைத்த பயன்கள் மற்றும் அதில் உள்ள வரம்புகள், மேலும் இடஒதுக்கீட்டைத் தாண்டி நாம் எதை நோக்க செயல்பட வேண்டும் என்பதுக் குறித்து ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை உருவாக்குகிறது.


பெண்கள் இயக்கம் (Women’s movement)


இந்தியாவில் தேர்தல் தொகுதிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதம் 1920-கள் மற்றும் 1930-களில் தொடங்கியது. அந்தக்காலகட்டத்தில், காலனித்துவம், எழுச்சி பெற்ற தேசிய விடுதலை இயக்கம் மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் ஆகியவை ஒன்றிணைந்து "புதுமைப் பெண்களை" (new women) உருவாக்கின. இதன் விளைவாக, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்கள் இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. அரசியலமைப்பின் முகவுரையில் "அரசியல் நீதி" (Justice-Political) என்ற கருத்து, ஆட்சியில் பெண்கள் பங்கேற்பது முக்கியம் என்பதை வலியுறுத்தியது. மேலும், சுதந்திரம் கிடைத்த காலத்தில் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் பெண்கள் 48.04%-ஆக இருந்ததால், இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டிய தேவை இருந்தது. ஆனால், அது அப்போது அமல்படுத்தப்படவில்லை. அகில இந்திய மகளிர் மாநாட்டின் பிற்காலத் தலைவர்களான சரோஜினி நாயுடு மற்றும் முத்துலட்சுமி ரெட்டி போன்ற பெண் தலைவர்கள், பெண்கள் இட ஒதுக்கீடு என்ற கருத்தை நிராகரித்தனர். ஏனெனில், அது பெண்களைத் தாழ்வாகக் கருதும் ஒரு நிலைக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் நம்பினர்.


1970-களில், பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்த விவாதங்கள் மீண்டும் எழத் தொடங்கின. 'இந்தியாவில் பெண்களின் நிலை குறித்த குழு' (Committee on the Status of Women in India), சட்டரீதியான 'பெண்கள் பஞ்சாயத்தை' (statutory women’s panchayat) உருவாக்கப் பரிந்துரை செய்தது. அதனைத் தொடர்ந்து, 'தேசிய தொலைநோக்குத் திட்டம்' (National Perspective Plan), மாவட்டப் பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்தது. இறுதியாக, 1993-ஆம் ஆண்டில், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடங்களை ஒதுக்கும் வகையில், நாடாளுமன்றம் 73-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இயற்றியது. சரியாக 30 ஆண்டுகளுக்குப் பிறகு, பலமுறை அறிமுகப்படுத்தப்பட்டும் காலாவதியாகியும் வந்த நிலையில், நாடாளுமன்றம் 106-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை,  பெண்கள் இட ஒதுக்கீட்டுச் சட்டமாக (women’s reservation Act) நிறைவேற்றியது.


இட ஒதுக்கீட்டினால் கிடைக்கும் நன்மைகள்


பஞ்சாயத்து அளவில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, பஞ்சாபில் பின் தங்கியுள்ள பிரிவினரின் முன்னேற்றத்திற்காக பெண் தலைவர்கள் தீவிரமாகப் பங்கேற்றுப் பணியாற்றியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில், பெண் தலைவர்கள் பாலின சமத்துவம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளனர். கேள்விகள் பாலினம் மற்றும் அரசியல், அம்ரிதா பாசு தொடர்பானதாகும். சமீபத்தில், COVID-19 காலத்தில், பீகார் மாநிலத்தின் கிராமப்புறங்களில் பெண்கள் அரசியல் தலைவர்கள் முதன்மையான உதவி செய்பவர்களாக (first responders) உருவெடுத்து, தங்கள் தொகுதிகளின் அவசர தேவைகளை பூர்த்தி செய்தனர். இதன்மூலம் அவசரநிலைகளில் உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். மேற்குவங்க மாநிலத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கையை குறைப்பது (below the poverty line (BPL)), பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்களை குறைப்பது, திருமண வயதை மற்றும் கல்வியறிவு அளவை உயர்த்துவது போன்ற முயற்சிகளில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். இத்தகைய சாதனைகளுக்கு துணையாக, சுயஉதவி குழுக்கள் (Self-Help Groups  (SHGs)) முக்கிய பங்காற்றியுள்ளன. உதாரணமாக, குடும்பஸ்ரீ' (Kudumbashree) இயக்கம் போன்ற அமைப்புகள் கேரளா மாநிலத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. மேலும், மகாராஷ்டிர மாநிலத்தில், பெண்களின் தன்னம்பிக்கை போன்ற தனி திறன்கள் அதிகரித்துள்ளன. இதனால், அவர்கள் இடஒதுக்கீடு இல்லாத தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர். பொதுவாக, பெண் ‘கிராம பஞ்சாயத்து தலைவர்கள் (Pradhans) சுகாதாரம், மின்சாரம், வீட்டுவசதி மற்றும் கல்வி போன்ற பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதன் மூலம், மக்களின் குரல் தெளிவாக கேட்கப்படுவதையும் உறுதி செய்கின்றனர்.


அதிகரித்த பிரதிநிதித்துவத்தின் மற்றொரு நேர்மறையான விளைவாக, அத்தொகுதிகளில் பெண்கள் குற்றங்கள் குறித்துப் புகாரளிப்பது அதிகரித்துள்ளது. பெண்களைத் தலைமைப் பொறுப்புகளில் ஏற்றுக்கொள்வதில் சமூகத்திற்கு இருக்கும் தயக்கத்தின் விளைவாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதே இத்தகைய புகார் அதிகரிப்பிற்குக் காரணமாக இருக்கலாம் என்றபோதிலும்; குற்றங்களைப் பற்றி புகாரளிக்கும் செயல்முறையில் உள்ள பல்வேறு காரணிகளை  காவல்துறையின் விரைவானச் செயல்பாட்டையும், அச்சமின்றி புகார் அளிக்கும் பெண்கள் போன்ற அம்சங்களை மேம்படுத்துவதன் மூலமும், குற்றங்களை புகார் செய்யும் செயல்முறையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம்.


பெயரளவு பிரதிநிதித்துவம் (Proxy representation)


கிராமப்புறங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் ஒரு முக்கிய குறைபாடு பெயரளவிலான பிரதிநிதித்துவம் அல்லது பதிலிப் பிரதிநிதித்துவம் பரவலாக இருப்பதே ஆகும். இந்தியில் பொதுவாக “சர்பஞ்ச்-பதி” அல்லது “பிரதான்-பதி” என்று குறிப்பிடப்படும் அடையாளப் பிரதிநிதித்துவம் என்பது, சமத்துவத் தோற்றத்தை அளிப்பதற்காக விளிம்புநிலைக் குழுக்களை அடையாளப்பூர்வமாகவோ அல்லது மேலோட்டமாகவோ பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். இடஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள், பல நேரங்களில் சக்திவாய்ந்த மேல்சாதி ஆண்களின் கட்டுப்பாட்டில் இருந்து, அவர்களின் நலன்களுக்குச் சேவை செய்கிறார்கள். ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அங்கு, “பெண்ணின் கணவர் அவருக்காக அதிகாரப்பூர்வ கூட்டங்களை நடத்தியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து” ஒரு பெண் தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். பெண்தலைவர்களிடையே தங்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, மற்றும் கிராமப்புறங்களில் காணப்படும் அதிகமான கல்வியறிவு குறைவு (illiteracy), இத்தகைய நடைமுறைகளுக்கு காரணமாகின்றன. மேலும், இது “பொதுமக்கள் மத்தியில் ஆணாதிக்கம்” (public patriarchy) என்ற ஒரு பண்பாட்டையும் உருவாக்குகிறது. பெண்கள் அரசியலில் ஈடுபட்டாலும், அவர்களுக்கு உண்மையான பிரதிநிதித்துவம் வழங்கப்படாது. மேலும், அவர்களின் உழைப்பு தொடர்ந்து குறைத்து மதிப்பிடப்படுகிறது. இட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளில் உள்ள பெண்கள் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், அவர்கள் இயல்பிலேயே பன்முகத்தன்மை கொண்டவர்களாகத் திகழ்கின்றனர் என்றபோதிலும், பாலினம், சாதி மற்றும் ஆணாதிக்கம் போன்ற உள்ளூர் அளவிலான சமத்துவமின்மை கட்டமைப்புகளே அவர்களின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கின்றன.


அதேபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு எதிராக,   விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக, வன்முறை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளன. இத்தகைய அரசியல் வன்முறையானது, பாலியல்ரீதியான வற்புறுத்தல் மற்றும் நற்பெயரைக் கெடுப்பது முதல், வாய்மொழி அத்துமீறல், அச்சுறுத்தல்கள் மற்றும் உணர்ச்சிரீதியான மிரட்டல் வரை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. தலித் பெண்ணான கிரண் குமாரி, தனது பிரச்சாரத்தின்போது ஒரு கிராம கவுன்சிலரின் கால்களைத் தொட வைக்கப்பட்டது போன்ற சம்பவங்கள், சாதி மற்றும் பாலினப் படிநிலைகளின் ஆழமாக வேரூன்றிய தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. சமூக ஆராய்ச்சி மையம் நடத்திய ஓர் ஆய்வின்படி, இத்தகைய வன்முறைகளில் ஈடுபடுபவர்கள்  எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அல்லது ஒரே அரசியல் கட்சியைச் சேர்ந்த ஆண்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் நபர்களாகவே உள்ளனர்.


பஞ்சாயத்தில் உள்ள மற்றொரு குறைபாடு, ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் சுழற்சி முறை மற்றும் தலைவர் பதவிகளின் கட்டாய சுழற்சிமுறை ஆகியவற்றுடன் தொடர்புடையது. இது பெண்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைக் கட்டுப்படுத்துவதோடு, தொகுதி மக்கள் பிரதிநிதிகளைப் பொறுப்பேற்க வைப்பதையும் கடினமாக்குகிறது. ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், ஒரு வெற்றிகரமான பதவிக்காலத்திற்குப் பிறகு, மற்றவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் பெண்களுக்கு இரண்டாவது முறையாக போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு ஆண்களுக்கு அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. மாறாக, நிரந்தரமாக இடஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில், அவை உயர்சாதி அல்லது செல்வாக்குள்ளவர்களின் கட்டுப்பாட்டை (elite capture) ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும், உண்மையான தேர்தல் தேர்வுகளை குறைக்கும் வாய்ப்பும் உள்ளது.


இதை 50 சதவீதமாக உயர்த்துதல்


பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது, அரசியல் சமத்துவத்தை அடைவதற்கான இந்திய அரசின் முக்கிய முயற்சியாகும். ஆனால், இந்த அமைப்புக்குள், பெண்களின் மக்கள்தொகை விகிதத்தை பிரதிபலிக்கும் வகையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 50% இடஒதுக்கீட்டை  வழங்க வேண்டும் என்ற தேவை உள்ளது. இடஒதுக்கீட்டைத் தாண்டி, தேர்தலுக்கு முன்னரும், தேர்தலின் போதும், தேர்தலுக்குப் பின்னரும் பெண் வேட்பாளர்களுக்கு எதிராக நடைபெறும் அனைத்து வகையான வன்முறைகளையும் - இணையவழித் துன்புறுத்தல்கள் உட்பட - முழுமையாக ஒழிப்பதை அரசாங்கம் தனது இலக்காகக் கொள்ள வேண்டும். வாக்காளர் பதிவு முதல் தேர்தல் தலைமை அலுவலர்கள் வரையிலான தேர்தல் தொடர்பான அனைத்துச் செயல்முறைகளிலும் பெண்களின் இருப்பை அதிகரிப்பது, அவர்கள் பங்கேற்பதற்கு  ஏற்ப மற்றும் நம்பிக்கையான சூழலை மேலும் உருவாக்க உதவும். குறிப்பாக கிராமப்புறங்களில், பெண்களுக்கு அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளைப் பற்றித் தெளிவுபடுத்தவும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை நிதி மற்றும் டிஜிட்டல் திறன்களை உருவாக்கவும், தொடர்ச்சியான மற்றும் பங்கேற்பு சார்ந்த பயிற்சித் திட்டங்களை உருவாக்குவது முக்கியமானதாகும்.


இட ஒதுக்கீடு என்பது உண்மையான பிரதிநிதித்துவமாக உருவெடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்; அந்தத் தருணம் வெகு தொலைவில்  இல்லை என்றே தோன்றுகிறது.


ஆஞ்சல் சிங்கல் ஒரு சுயாதீனமான கொள்கை மற்றும் நிர்வாக ஆய்வாளர் ஆவார்; மேலும் இவர், 2023-24-ஆம் ஆண்டிற்கான 'நாடாளுமன்ற உறுப்பினருக்கான சட்டமன்ற உதவியாளர்' (Legislative Assistant to Member of Parliament (LAMP)) ஆய்வுத் திட்டத்தின் முன்னாள் ஆய்வாளராகவும்  பணியாற்றியவர்.

Original Link: Beyond reservation for women in legislative bodies.


Share: