புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டு முறையில், மொத்த விற்பனை விலை குறியீட்டின் தாக்கம். -ஆர் கோபாலன் மற்றும் எம்சி சிங்கி

மொத்த விற்பனை விலை குறியீடு (Wholesale Price Index (WPI)), காலாவதியான ஒரு அடிப்படை ஆண்டை பயன்படுத்துவதால், அது பணவீக்கத்தின் உண்மையான அளவைக் குறைத்துக் காட்டுவதோடு பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் கணக்கிடும் காரணியையும் பாதிக்கிறது.


2022–23 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) புள்ளிவிவர வரிசையில், பயன்படுத்தப்பட்டுள்ள பணவீக்கக் காரணிகள் (Deflators) துல்லியமானவைதானா என்ற சந்தேகம் எழுகிறது. காலாவதியான மொத்த விற்பனை விலை குறியீட்டை (WPI) அடிப்படையாகக் கொள்வதால் ஏற்படும் பிழைகள், இந்த புதிய புள்ளிவிவர வரிசையிலும் தொடர்வதாகத் தெரிகிறது.


2022–23-ஆம் ஆண்டின் தேசிய கணக்கு புள்ளிவிவரங்கள் (National Accounts Statistics (NAS)) வரிசையானது 'இரட்டை விலைக்குறைப்பு' (Double Deflators) முறையைப் பயன்படுத்துகிறது. ஆனால் 2011–12-ஆம் ஆண்டு வரிசையில் 'ஒற்றை விலைக்குறைப்பு' (Single Deflators) முறையே பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், சரியான பணவீக்கக் காரணிகளைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல் இன்னும் நீடிக்கிறது, இதற்கு முக்கியக் காரணம் மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) ஆகும்.


முந்தைய தொடர்களைப் போலவே, 2022-23 தேசிய கணக்கு புள்ளிவிவரங்கள் (National Accounts Statistics - NAS) வெவ்வேறு பொருட்களின் விலை மாற்றத்தைச் சரிசெய்ய, மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) மற்றும் நுகர்வோர் விலை குறியீடு (CPI) ஆகிய இரண்டையும் பயன்படுத்துகின்றன. மொத்த மதிப்புக் கூட்டலில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவற்றிற்கு மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், 2011-12-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட மொத்த விற்பனை விலை குறியீடு (WPI), ஒரு நிலையான பொருட்களின் பட்டியலையும் அடிப்படையையும் கொண்டுள்ளது. இதனால், காலம் செல்லச் செல்ல அது சந்தையின் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கும் தன்மையை இழக்கிறது.


தொழில்துறை உற்பத்தி குறியீடு (Index of Industrial Production (IIP)) குறித்த பல்வேறு ஆய்வுகள் ஒரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளன. நிலையான அடிப்படை ஆண்டு (Fixed Base Year) மற்றும் நிலையான பொருட்கள் பட்டியல் (Fixed Basket) கொண்ட இத்தகைய குறியீடுகள் பழையதாகும்போது, அவை உண்மையான வளர்ச்சி விகிதத்தைவிட குறைவான அளவையே காட்டுகின்றன. எனவே, இதுபோன்ற குறியீட்டுத் தொடர்களை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அந்த மாற்றங்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடைமுறைக்கு வரவேண்டும். ஆனால், மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) தொடர்பாக இது போன்ற ஆய்வுகள் எதுவும் இல்லை. ஏனெனில், அதன் தன்மைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இணையான மாற்று அளவீடுகள் ஏதும் தற்போது வரை இல்லை என்கின்றனர்.


இருப்பினும், மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) நாட்டின் பொருளாதார நிலையை எவ்வளவு துல்லியமாகப் பிரதிபலிக்கிறது என்பதை மதிப்பீடு செய்ய இரண்டு முறைகள் பயன்படுத்தப்படுகிறது. முதலாவதாக, பொருளாதாரத்தில் கட்டமைப்பு மாற்றங்கள் தொடங்கிய 2015–16 ஆம் ஆண்டிலிருந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி பணவீக்க குறியீட்டு (GDP Deflator) மதிப்பினை, மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) மற்றும் நுகர்வோர் விலை குறியீடு (CPI) ஆகியவற்றின் துணைப் பிரிவுகளுடன் ஒப்பிடுகின்றனர். (அட்டவணை 1).







மொத்த விற்பனை விலை குறியீட்டு போக்குகள் 


2015-16-ஆம் ஆண்டு முதல் 2020-21-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அனைத்துப் பொருட்களுக்கான மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) மிதமான அளவிலேயே இருந்தது. பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (GST) சீர்திருத்தங்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்று ஆகியவை நிகழ்ந்த காலப்பகுதியையும் இது உள்ளடக்கியது. அக்காலகட்டத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அளவிடும் மொத்த உள்நாட்டு உற்பத்தி பணவீக்க குறியீடு (GDP Deflator) என்பது, மொத்த விற்பனை விலை குறியீட்டிற்கும் (WPI) நுகர்வோர் விலை குறியீட்டிற்கும் (CPI) இடைப்பட்ட அளவிலேயே இருந்தது.


இருப்பினும், 2017–18-ஆம் ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பணவீக்க குறியீடு, மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) மற்றும் நுகர்வோர் விலை குறியீடு (CPI) ஆகிய இரண்டையும்விட அதிகமாக இருந்தது. ஆனால் 2018–19-ஆம் ஆண்டில், அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட அளவில் இருந்தது. முற்றுப்பெற்ற பொருட்களின் (Final goods) விலையைவிட, முதன்மைப் பொருட்கள் (Primary goods) மற்றும் இடைநிலை உற்பத்திப் பொருட்களுக்கான (Intermediate products) மொத்த விலை குறியீட்டால் (WPI) இந்த பணவீக்க குறியீடு அதிக தாக்கத்தைப் பெறுவதாகத் தெரிகிறது. இதே போன்ற ஒரு போக்கு புதிய தேசிய கணக்கு புள்ளிவிவரங்கள் (NAS) மற்றும் நுகர்வோர் விலை குறியீடு (CPI) தொடர்களிலும் காணப்படுகிறது. மேலும், முதன்மைப் பொருட்களுடன் ஒப்பிடும்போது, மூலதனப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களில் பணவீக்கம் கணிசமாகக் குறைவாகக் காட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.


நிலையான உற்பத்தித் திறன் பயன்பாடு, நுகர்வோர் பொருட்களின் ஆயுட்காலம் குறைந்துவிட்டதையும், மக்கள் அவற்றை அடிக்கடி மாற்றுகிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், மொத்த விலை குறியீட்டு எண் (WPI) இனி பொருளாதார நிலையை முழுமையாகப் பிரதிபலிக்கும் ஒரு காரணியாக இருக்க வாய்ப்பில்லை என்கின்றனர்.


தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுகளுக்கான மொத்த விலை குறியீட்டு (WPI) பணவீக்கம் குறித்த தரவுகள் (அட்டவணை 2) இந்தப் பிரச்சினையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. 2%-க்கும் குறைவான பணவீக்கத்தைக் கொண்ட பொருட்களின் எண்ணிக்கை 2025–26 (ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை) காலகட்டத்தில் 447-ஆக உயர்ந்துள்ளது. 2015-2021-ஆம் ஆண்டு வரையிலான அமைப்புரீதியான மாற்றங்கள் ஏற்பட்ட காலத்தில், இந்தப் பொருட்களின் பங்களிப்பு சுமார் 63%-ஆக இருந்தது. இது கடந்த இரண்டு ஆண்டுகளைவிட அல்லது 2013-2022-ஆம் ஆண்டு வரையிலான முந்தைய காலத்தைவிட மிக அதிகமாகும். இதே போன்ற ஒரு நிலை 2025-26-ஆம் ஆண்டிலும் காணப்படுகிறது. இதிலிருந்து, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் பொருட்களின் தொகுப்பு படிப்படியாக அதன் உண்மையான பிரதிநிதித்துவத்தை இழந்து வருவதாகத் தெரிகிறது. போதிய தரவுகள் கிடைக்காதது அல்லது பழைய விலைகளையே மீண்டும் மீண்டும் குறிப்பிடுவது இதற்கான முக்கியக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.


பணவீக்கத்தின் இயக்கவியல்


எதிர்மறைப் பணவீக்கத்தைக் காட்டும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம், சில பொருட்கள் குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுவது நிறுத்தப்பட்டதுதான் என்கின்றனர். புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கணக்கீட்டு முறையில் (2022–23), இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிர்ணயித்த இலக்கைவிட அதிக பணவீக்கம் கொண்ட பொருட்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.


இருப்பினும், 2025–26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தில், 526 பொருட்கள் (மொத்த மதிப்பில் 93% பங்கு கொண்டவை) 2% வரை மட்டுமே பணவீக்கத்தைக் கொண்டிருந்தன. அதே சமயம், 277 பொருட்கள் (மொத்த மதிப்பில் 53%-க்கும் அதிகமான பங்கு கொண்டவை) எதிர்மறை பணவீக்கத்தைக் (விலை குறைவு) கொண்டிருந்தன. இதிலிருந்து, தேசிய கணக்கு புள்ளிவிவரங்களுக்கான (NAS) முக்கிய விலைக்குறைப்பு காரணியாக விளங்கும் மொத்த விலை குறியீட்டு எண் (WPI), தற்போதைய பொருளாதார நிலையைத் துல்லியமாகப் பிரதிபலிப்பதில்லை என்பது தெளிவாகிறது.


இதன் விளைவாக, நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (Real Gross Domestic Product growth), பணமதிப்பு அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைவிட (Nominal GDP growth) சற்றே குறைவாகவே இருந்தது. மேலும், பணவீக்கத்தைக் கணக்கிடும் பணவீக்க குறியீடானது (GDP Deflator), 1 சதவீதத்திற்கும் கீழே குறைந்து ஒரு வரலாற்றுச் சரிவைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


புதிய மொத்த விற்பனை விலை குறியீடு (WPI) முறையை விரைவாக அமல்படுத்த வேண்டும். பொருட்கள் மற்றும் பணவீக்கத்தைக் கணக்கிடும் காரணிகளை இன்னும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில், இதற்குப் பதிலாக விரிவான உற்பத்தியாளர் விலை குறியீடு (Producer Price Index (PPI)) முறையைக் கொண்டுவர வேண்டும். அதுவரை, புதிய தேசிய கணக்கு புள்ளிவிவரங்கள் (NAS) வரிசையானது நாட்டின் உண்மையான வளர்ச்சியை முழுமையாகப் பிரதிபலிக்காது என்கின்றனர்.


கோபாலன், பொருளாதார விவகாரங்கள் துறையின் முன்னாள் செயலாளர் ஆவார்; மற்றும் சிங்கி, நிதி அமைச்சகத்தின் முன்னாள் மூத்த பொருளாதார ஆலோசகர் ஆவார்.



Original Link: WPI effect on new GDP series.


Share:

வங்கிகளின் தேசியமயமாக்கல் குறித்து… - குஷ்பூ குமாரி

முக்கிய அம்சங்கள்:


— இந்த  வரலாற்று முக்கியத்துவம் முடிவு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால்   மேற்கொள்ளப்பட்டது. இவர் நிதியமைச்சராகவும் ஒரே நேரத்தில் பதவி வகித்தபோது, ​​1969 ஜூலை 19 அன்று நாட்டின் 14 மிகப்பெரிய தனியார் வங்கிகளைத் தேசியமயமாக்கினார்.


 இந்த முடிவு, நிதி அமைப்பை பரந்த அளவிலான வளர்ச்சி மற்றும் சமூக இலக்குகளுடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டு, ஒரு சமத்துவக் கட்டமைப்பின் மீதான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் வேரூன்றியிருந்தது. வங்கித்துறையில் அரசின் செயல்முறை, 1955-ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி நாட்டுடைமையாக்கப்படுவதற்கு முன்னரே தொடங்கியது.


1960-கள் வரை, வங்கிக் கிளைகளின் விரிவாக்கம் பெரும்பாலும் நகர்ப்புறங்களுக்குள்ளேயே  இருந்தது என்றும், கிராமப்புற மற்றும் பகுதி நகர்ப்புறப் பகுதிகள் தொடர்ந்து வங்கிச் சேவையின்றித் தவித்தன என்றும் 'இந்திய ரிசர்வ் வங்கியின் வரலாறு' (History of the RBI) எனும் ஆவணம் குறிப்பிடுகிறது. இதன் விளைவாக, வேளாண்மை சார்ந்த பல்வேறு பொருளாதாரச் செயல்பாடுகள், சிறுதொழில் நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் செய்வோர் ஆகியோர் முறையான வங்கி வசதிகளைப் பெறும் வாய்ப்பின்றி இருந்தனர்.


தனியார் வங்கிகள் லாபத்தால் மட்டுமே அதீக அக்கறை கொண்டவையாகக் கருதப்பட்டன. இதனால், பல்வேறு அளவிலான பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு தங்கள் கடன் வழங்கலை (loan portfolios) வகைப்படுத்த  முன்வரவில்லை. ஏனெனில், அவ்வாறு செய்வது பரிவர்த்தனைச் செலவுகளை அதிகரிக்கவும், லாபத்தைக் குறைக்கவும் கூடும் என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.


தனியார் வங்கிகள் லாபத்தில் மட்டுமே அதீத அக்கறை கொண்டவையாகக் கருதப்பட்டன. இதனால், பல்வேறு  பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு தங்கள் கடன் வழங்கலை (loan portfolios) பல்வகைப்படுத்த வங்கிகள் முன்வரவில்லை. ஏனெனில், அவ்வாறு செய்வது பரிவர்த்தனைச் செலவுகளை அதிகரிக்கவும், லாபத்தைக் குறைக்கவும் கூடும் என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.


1967-ல் முதன்முதலில் முன்வைக்கப்பட்ட 'வங்கிகள் மீதான சமூகக் கட்டுப்பாடு' (Social Control) எனும் கருத்தானது, அந்தக்காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியால் முக்கியமாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அரசியல் தலைவர்களிடையே நிலவிய, வங்கித் துறை குறித்த இரண்டு மாறுபட்ட தீவிரக் கண்ணோட்டங்களுக்கு இடையிலான ஒரு சமரசத்தின் விளைவாகவே உருவானது.


  1967 மே மாதம் நடைபெற்ற காங்கிரஸ் காரியக்கமிட்டிக் கூட்டங்களில், பொருளாதாரக் கொள்கை "ஜனநாயக சமத்துவம்" என்பதன் உண்மையான பொருள் குறித்துத் தீவிரமான விவாதங்கள் நடைபெற்றன. இதன் முக்கிய கருத்தாக 'வங்கிகளின் தேசியமயமாக்கல்' எனும் விவகாரம் உருவெடுத்தது. இறுதியில், வங்கி, காப்பீடு, அயல்நாட்டு வர்த்தகம் மற்றும் உணவு விநியோகம் ஆகிய துறைகளில் அரசின் பங்கேற்பை அதிகரிப்பதை  அந்தக்குழு இறுதியில் அங்கீகரித்தது.


ரிசர்வ் வங்கியின் வரலாற்றின்படி, ஜூலை 19 அன்று அறிவிப்பு வெளியாவதற்கு முந்தைய நாளில், பொருளாதார விவகாரச் செயலாளரான ஐ.ஜி. படேலிடம், வங்கிகளைத் தேசியமயமாக்கும் முடிவை தாம் "அரசியல்" சார்ந்த காரணங்களின் அடிப்படையில் எடுத்திருப்பதாகவும், அடுத்த 72 மணி நேரத்திற்குள் அவர் அதற்கான உரையைத் தயார் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். படேல் காந்திக்கு இரண்டு ஆலோசனைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது: அதன் படி, முதலாவதாக, வெளிநாட்டு வங்கிகளைத் தேசியமயமாக்கக் கூடாது. இரண்டாவதாக, அனைத்து வங்கிகளையும் தேசியமயமாக்க வேண்டிய அவசியமில்லை என்றும், மொத்த வங்கி வர்த்தகத்தில் 85 முதல் 90 சதவீதம் வரையிலான பங்கைக் கொண்ட முக்கிய வங்கிகளை மட்டும் தேசியமயமாக்குவதே சிறந்தது என்றும் அவர் ஆலோசனை வழங்கியதாக ரிசர்வ் வங்கியின் வரலாறு குறிப்பிடுகிறது.


 தொடக்கத்தில், ரூ. 100 கோடி வைப்புத்தொகை கொண்ட வங்கிகள் தேசியமயமாக்கலுக்காகப் பட்டியலிடப்பட்டன. ஆனால், ரூ.98 கோடி வைப்புத்தொகை கொண்ட 'தேனா வங்கி' (Dena Bank) போன்ற சில முக்கிய வங்கிகள் இந்தப் பட்டியலிலிருந்து விடுபட்டுவிடும் என்பது தெரியவந்தது. எனவே, அந்த வைப்புத்தொகை வரம்பு ரூ.50 கோடியாகக் குறைக்கப்பட்டது.


 1969 ஜூலை 19 அன்று, ரூ. 50 கோடிக்கும் அதிகமான வைப்புத்தொகை கொண்ட 14 முக்கிய வங்கிகளை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தேசியமயமாக்குவதற்கான ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னரே குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் காலமானதால், அப்போதைய துணைக் குடியரசுத் தலைவரும், தற்காலிகக் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பு வகித்த வி.வி. கிரி அவர்கள் இந்த அவசரச் சட்டத்தில் கையெழுத்திட்டார்.


ஜூலை 27 அன்று, ராஜ்கோட்டில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், வங்கிகள் கையகப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கையை "தவறானது மற்றும் தேவையற்றது" என்று வர்ணித்தார். இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாது என்றும், மாறாக, அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் அரசு நிர்வாக அமைப்புகளின் (bureaucracy) அதிகாரத்தை மட்டுமே அதிகரிக்கும் என்று அவர் கூறியதாக அந்த புத்தகம் குறிப்பிடுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


1926-ல் அமைக்கப்பட்ட இந்திய நாணயம் மீதான அரச ஆணையத்தின் (Hilton Young Commission)) பரிந்துரைகளின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி  நிறுவப்பட்டது. ‘இந்திய ரிசர்வ் வங்கி’ என்று அழைக்கப்படும் ஒரு மத்திய வங்கியை நிறுவ ஆணையம்  பரிந்துரைத்தது.

பணத்தாள்கள் வெளியீட்டை ஒழுங்குபடுத்துதல், பண நிலைத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் கையிருப்பை பராமரித்தல் மற்றும் நாட்டின் கடன் மற்றும் நாணய முறையை தனக்குச் சாதகமாக பயன்படுத்துதல் ஆகிய பணிகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.


ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர், இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியாவின் இரண்டு நிர்வாக ஆளுநர்களில் ஒருவரான ஆஸ்திரேலியரான சர் ஆஸ்போர்ன் ஆர்கெல் ஸ்மித் ஆவார். சர் சி.டி. தேஷ்முக் ஆளுநரான முதல் இந்தியர் ஆவார்.


 இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய அலுவலகம் ஆரம்பத்தில் கொல்கத்தாவில் நிறுவப்பட்டது. 1937-ல் நிரந்தரமாக மும்பைக்கு மாற்றப்பட்டது. மத்திய அலுவலகத்தில் தான் ஆளுநர் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.


இந்திய ரிசர்வ் வங்கி (பொது உடைமைக்கு மாற்றுதல்) சட்டம், 1948-ன் அடிப்படையில், 1949 ஜனவரி 1 முதல் இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்டது. வங்கியின் மூலதனத்தில் உள்ள அனைத்துப் பங்குகளும், தேவையான இழப்பீடு வழங்கப்பட்டதன்  மூலம்  ஒன்றிய அரசுக்கு மாற்றப்பட்டது.


ரிசர்வ் வங்கியின் விவகாரங்கள், ஆளுநர் மற்றும் 4-க்கும் மேற்பட்ட துணை ஆளுநர்களைக் கொண்ட மத்திய இயக்குநர் குழுவால் நிர்வகிக்கப்படுகின்றன. அரசால் பரிந்துரைக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற இயக்குநர்களில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 இயக்குநர்களும், இரண்டு அரசு அதிகாரிகளும், 4 உள்ளூராட்சி வாரியங்களிலிருந்து தலா ஒரு இயக்குநர் என நான்கு இயக்குநர்களும் அடங்குவர்.


இந்திய ரிசர்வ் வங்கி, விலை நிலைத்தன்மையைப் பராமரிப்பது, அரசு மற்றும் வங்கிகளுக்கு நாணயத்தை வழங்குவது என்று பல்வேறு பணிகளைச் செய்கிறது. தற்போதைய காலகட்டத்தில் முக்கியத்துவம் பெறும் அதன் முக்கியப் பணிகளில் ஒன்று அந்நியச் செலாவணிக் கையிருப்பை நிர்வகிப்பதாகும். இது வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் பணம் செலுத்துதலை எளிதாக்கவும், இந்தியாவில் அந்நியச் செலாவணிக் சந்தையின் சீரான வளர்ச்சி மற்றும் பராமரிப்பை ஊக்குவிக்கவும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (Foreign Exchange Management Act) 1999-ஐ நிர்வகிக்கிறது.



Original Link: What do you understand by nationalisation of banks?

Share:

கடல்சார் வெளி திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக ஒடிசா திகழ்கிறது. - சுஜித் பிசோயி

முதல் கட்டத்தில், இது புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் கட்டத்தில் கடல்சார் வெளி திட்டம் செயல்படுத்திய நாட்டின் முதல் மாநிலமாக ஒடிசா திகழ்கிறது.  


ஒருங்கிணைந்த கடலோர மற்றும் கடல்சார் திட்டமிடலுக்காக, மாநிலத்தில்  'கடல்சார் வெளி  திட்டத்தை' (Marine Spatial Plan (MSP)) அறிமுகப்படுத்துவதற்காக, மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் 'தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்துடன்' (National Centre for Coastal Research (NCCR)) ஒடிசா அரசு சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.


இந்தியா மற்றும் நார்வே நாடுகளின் கூட்டு முயற்சியுடன், இந்தியாவில் நிலையான கடல்சார் திட்டமிடல் பணிகள் 2019-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் கட்டமாக, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் இந்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் கட்டத்தில், 'கடல்சார் வெளி  திட்டமிடல்' (Marine Spatial Plan (MSP))  முறையைச் செயல்படுத்திய நாட்டின் முதல் மாநிலமாக ஒடிசா திகழ்கிறது.


கடல்சார் வெளி  திட்டமிடல் (Marine Spatial Planning)  என்றால்  என்ன?


கடல்சார் வெளி  திட்டமிடல் என்பது நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதையும், காலநிலை மீள்திறனை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட, நிலையான மற்றும் ஒருங்கிணைந்த கடல் மேலாண்மைக்கான ஒரு கருவியாகும். இது ஆற்றல், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறைகளை மேம்படுத்துதல், தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற பொருளாதார நடவடிக்கைகள், சுற்றுச்சூழல், மீன்வளம், மீன் வளர்ப்பு மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தவும், அதற்கேற்ப கொள்கைகளை வகுக்கவும் உதவுகிறது.


இந்தச் செயல்முறையின் ஒரு பகுதியாக, வல்லுநர்கள் கடற்கரைகளை ஆய்வு செய்து, சூழலியல், பொருளாதாரம் மற்றும் சமூக நோக்கங்களை அடைவதற்காக கடல்சார் பகுதிகளில் மனித நடவடிக்கைகளுக்கான இடங்களைக் குறிப்பிடுகின்றனர். இது, 2019-ல் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள இந்திய-நார்வே ஒருங்கிணைந்த கடல்சார் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். இது, வளர்ச்சியின் 10 முக்கிய பரிமாணங்களில் ஒன்றாக நீலப் பொருளாதாரத்திற்கு ஒன்றிய அரசு அளிக்கும் முக்கியத்துவத்திற்கு ஏற்ப உள்ளது.


ஒடிசாவின் சூழல்


ஒடிசா 550 கி.மீ.க்கும் அதிகமான ஒரு நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. மேலும், இந்தக் கடற்கரையானது காயல்கள், சதுப்புநிலக் காடுகள் மற்றும் முகத்துவாரங்களைக் கொண்டு பல்வேறு வழிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சித்ரா ஆறுமுகம் அவர்களின் கூற்றுப்படி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஒடிசாவின் கடற்கரையை ஒட்டியுள்ள அனைத்துப் பெருங்கடலிலும் உள்ள நீரின் கூறுகளை 'தேசிய கடலோர ஆராய்ச்சி மையம்' (National Centre for Coastal Research (NCCR)) ஆய்வு செய்யும்.


"ஆராய்ச்சி மையம் நீருக்கு அடியில் உள்ள தாவரங்களை வரைபடமாக்கும், இது benthic வரைபடம் என்று அழைக்கப்படுகிறது. தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் நீரின் தன்மை, உப்புத்தன்மை, வெப்பநிலை மற்றும் பிற அம்சங்களை ஆய்வு செய்து, சுற்றுலா நடவடிக்கைகள், மீன்வளம், கடற்புற்கள் மற்றும் கடற்பாசிகள் வளர்ப்பதற்கும், பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏற்ற பகுதிகள் போன்ற அளவுருக்களைத் தயாரிக்கும்" என்று அவர் கூறினார். இதன் மூலம் மாநில அரசுக்கு தேவையான கொள்கைகளை உருவாக்க முடியும். இந்த முயற்சி, மாநிலத்தின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் உள்ள பல்வேறு பொருளாதாரத் துறைகள் மற்றும் பங்குதாரர்களின் வளர்ச்சிக்கு உதவும்.


மாநிலத்தின் கடலோர மற்றும் கடல் பகுதிகள் பல்லுயிர் வளமானவை என்றும், வாழ்வாதாரம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஏராளமான இயற்கை வளங்களை வழங்குகின்றன என்றும் ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி கூறினார். “அதிகரித்துவரும் வளர்ச்சிப் பணிகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் துறைசார்ந்த தேவைகள் காரணமாக, கடல்சார் சூழல் அமைப்பை அறிவியல் பூர்வமாக நிர்வகிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 'கடல்சார் வெளி திட்டம்' (Marine Spatial Plan (MSP)) என்பது ட ஒரு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இது கடல்சார் சூழல் அமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, மீன்வளம், சுற்றுலா, துறைமுகங்கள், கடல்சார் ஆற்றல் மற்றும் பிற துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவும்” என்று ஒடிசா முதலமைச்சர் கூறினார்.


பிற முயற்சிகள்


ஆகஸ்ட் 2025-ல், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக உயிரித்தொழில்நுட்பப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், ஒடிசா அரசு ஒடிசா கடல்சார் உயிரித்தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க வழித்தடத்தை (Odisha Marine Biotechnology Research and Innovation Corridor (OMBRIC)) அறிமுகப்படுத்தியது.


கடல்சார் உயிரித்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதையும், ஆராய்ச்சி, சூழலியல் பாதுகாப்பு, அறிவியல் சுற்றுலா மற்றும் கடலோர மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதையும் ஓம்ப்ரிக் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்னெடுப்பானது கடல்சார் வெளி  திட்டமிடல் (Marine Spatial Planning) முன்னெடுப்பை வலுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்" என்று முதலமைச்சர் தெரிவித்தார்.


Original Link: Odisha becomes first state to launch Marine Spatial Plan. Here is what to know.


Share:

பணப் பரிவர்த்தனைகளில் கூடுதல் பாதுகாப்பிற்காக ‘Kill Switch’ வசதியைக் கொண்டுவர இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. அது என்ன, ஏன் முக்கியமானது? - ரோஷ்னி யாதவ்

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ‘‘Kill Switch’ எனப்படும் ‘அவசரகால முடக்கும்’ முறையை இந்திய ரிசர்வ் வங்கி ஏன் முன்மொழிந்துள்ளது? அது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் இணையவழி மோசடிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது? 


தற்போதைய செய்தி :


டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) Kill Switch எனப்படும் அவசரகால முடக்கும் வழிமுறையை முன்மொழிந்துள்ளது. இந்த நடவடிக்கை இணையவழி மோசடிகளை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய இணையக் குற்றப் புகாரளிப்பு இணையதளத்தின் (National Cyber Crime Reporting Portal (NCRP)) தகவல்படி, 2025-ஆம் ஆண்டில்  28 லட்சம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் மதிப்பு ரூ. 22,931 கோடியாகும்.


இந்தச் சூழலில், ‘Kill Switch’ எனப்படும் அவசரகால முடக்கும் முறை என்றால் என்ன என்பதையும், நாட்டில் அதிகரித்துவரும் டிஜிட்டல் மோசடி வழக்குகளைக் கையாள்வதற்காக அரசாங்கம் எடுத்துள்ள பல்வேறு முயற்சிகளை பற்றி தெரிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. ‘கணினிவழிப் பணப் பரிமாற்றங்களில் மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை ஆராய்தல் – ஒரு கலந்துரையாடல் ஆவணம் (‘Discussion Paper – Exploring Safeguards in Digital Payments to Curb Frauds’)’ என்ற அறிக்கையில், கணினிவழிப் பரிமாற்றங்களில் அதிகரித்து வரும் மோசடிச் சம்பவங்களைக் கையாள்வதற்கு மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.


2. இந்திய ரிசர்வ் வங்கி, அட்டை அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை முறைகள் தற்போது வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச பயன்பாட்டிற்காக 'செயல்படுத்தும்/நிறுத்தும்' வசதியையும், பல்வேறு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரம்புகளை நிர்ணயிக்கும் வசதிகளையும் வழங்குகின்றன. பணம் செலுத்தும் கருவிகள் மீதான வாடிக்கையாளர்களின் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதிலும், மோசடிச் சம்பவங்களைக் குறைப்பதிலும் இது வாடிக்கையாளர்களுக்கு  உதவியாக இருப்பதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.


3. இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி இதே போன்ற பயனர் கட்டுப்பாட்டு வசதிகள் மற்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகளில் இன்னும் சீராகவும் முழுமையாகவும் கிடைக்கவில்லை என்று குறிப்பிடுகிறது.


சிங்கப்பூரில் ‘கில் சுவிட்ச்‘


சிங்கப்பூரில், Kill Switch எனப்படும் அவசரகால முடக்கும் முறை’ எனப்படும் ஒரு செயல்முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள், மொபைல் செயலி அல்லது உதவி எண் வழியாகத் தங்கள் ஆன்லைன் வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க முடியும். இதனால், பணப் பரிமாற்றங்கள், டிஜிட்டல் வங்கி அணுகல் மற்றும் இதர கட்டணச் சேவைகள் அனைத்தும் முடக்கப்படும். வங்கியின் அடையாளச் சரிபார்ப்புக்கு பின்னரே, இந்த வசதியை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர முடியும்.


4. இதேபோல், இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) வாடிக்கையாளர்களுக்கு ஒரே ஒரு வசதியின் மூலம் அனைத்து டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களையும் உடனடியாக முடக்கும் ‘Kill Switch’ வசதியை வழங்க முன்மொழிந்துள்ளது. இந்தக் ‘Kill Switch’ செயல்படுத்தப்பட்டால், வாடிக்கையாளர் ஏற்கனவே அமைத்துள்ள மற்ற அனைத்து கட்டுப்பாடுகளையும்விட இதுவே முதன்மையானதாக இருக்கும்.


5. “Kill Switch எனப்படும் அவசரகால முடக்கும் முறை செயல்படுத்தப்பட்டவுடன், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மீண்டும் செயல்படுத்துவதற்காக அவசரகால இயந்திர முறையை முடக்குவதற்கு, முறையான அங்கீகாரம் / சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு டிஜிட்டல் முறைகள் மூலமாகவோ அல்லது கணக்கு வைத்திருப்பவர் வங்கி கிளைக்கு நேரில் செல்வதன் மூலமாகவோ அனுமதிக்கப்படலாம். டிஜிட்டல் முறைகள் மூலம் அவசரகால இயந்திர முறையை முடக்குவதற்கு, வாடிக்கையாளரின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக வங்கி ஒப்பீட்டளவில் கடுமையான அங்கீகாரம் / சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், என்று அறிக்கை குறிப்பிடுகிறது.


6. இருப்பினும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட கட்டணங்கள் மற்றும் தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் போன்ற சில குறிப்பிட்ட பரிமாற்றங்களுக்கு இந்தக் ‘Kill Switch’ வசதியிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டிஜிட்டல் மோசடிச் சம்பவங்களின் அதிகரிப்பை எதிர்கொள்வதற்கான அரசின் முன்னெடுப்புகள்




1. வங்கிகளுக்கான ‘bank.in’ தளம்: டிஜிட்டல் பண மோசடிகளைத் தடுக்க, கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி இந்திய வங்கிகளுக்காக ‘bank.in’ என்ற தனிப்பட்ட இணைய தளத்தை அறிமுகப்படுத்தியது. இது இணைய பாதுகாப்பு தொடர்பான  அச்சுறுத்தல்களை குறைத்து, டிஜிட்டல் வங்கி சேவைகளில் நம்பிக்கையை அதிகரிக்க உதவும்.


2. புதிய இணைய வழி பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை (e-Zero FIR): 1930 உதவி எண் மூலமாகவோ அல்லது தேசிய இணையக் குற்றப் புகாரளிப்பு இணையதளம் (National Cybercrime Reporting Portal (NCRP)) மூலமாகவோ பதிவு செய்யப்படும். ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான இணைய குற்றம் தொடர்பான நிதிமோசடிப் புகார்களை, தானாகவே முதல் தகவல் அறிக்கைகளாக (FIR) மாற்றும் வகையில், இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையமானது (I4C) புதிய 'இணையவழி பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை' என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


3. சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு கட்டாய விதி: ஒரு செயலியைப் பதிவு செய்யப் பயன்படுத்திய சந்தாதாரர் அடையாள அட்டை இல்லாமல், பயனர்கள் தங்கள் சேவைகளை அணுகுவதைத் தடுக்க வேண்டும் என்று இணைய செய்திப் பரிமாற்றத் தளங்களுக்கு தொலைத்தொடர்புத்துறை (Department of Telecommunications (DoT)) உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் டிஜிட்டல் மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழிதான் இந்த உத்தரவு என்று தொலைத்தொடர்புத் துறை  தெரிவித்துள்ளது.


WhatsApp, Telegram, Signal, Arattai, Snapchat, Sharechat, Jiochat மற்றும் Josh போன்ற நிறுவனங்களுக்கு இந்த வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தத் தளங்கள் இனிமேல், தங்கள் சேவைகள் அவற்றில் பதிவு செய்துகொள்ளப் பயன்படுத்தப்பட்ட சந்தாதாரர் அடையாள அட்டையுடன் "தொடர்ச்சியாக" இணைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், சாதனத்தில் சந்தாதாரர் அடையாள அட்டை இல்லையென்றால், அந்தச் சேவைகளுக்கான அணுகலை அவை அனுமதிக்கக் கூடாது. தொழில்நுட்பரீதியாக, இது சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு கட்டாய விதி 'SIM binding' என்று அழைக்கப்படுகிறது.


4. இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre (I4C)): 2020-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம், நாட்டில் இணையக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதையும், இணையக் குற்றங்களுக்கு எதிராகப் போராடுவதற்கான ஒட்டுமொத்தப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. செப்டம்பர் மாதம் 2024-ஆம் ஆண்டில், இணைய மோசடித் தடுப்பு மையம் (Cyber Fraud Mitigation Centre (CFMC)), ‘சமன்வயா’ (Samanvaya) தளம், இணையக் கமாண்டோக்கள் திட்டம் மற்றும் சந்தேக நபர்கள் பதிவேடு ஆகிய நான்கு I4C தளங்கள் தொடங்கப்பட்டன. இது, சட்ட அமலாக்க முகமைகள் இணையக் குற்றங்களை ஒருங்கிணைந்த மற்றும் விரிவான முறையில் கையாள்வதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குகின்றன.


5. குடிமக்கள் நிதிசார் இணைய மோசடி புகாரளித்தல் மற்றும் மேலாண்மை அமைப்பு (Citizen Financial Cyber Fraud Reporting and Management System (CFCFRMS)): இது இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையத்தால் உருவாக்கப்பட்டு, சமந்தபட்ட மாநிலம்/யூனியன் பிரதேசத்தால் இயக்கப்படுகிறது. நிதி சார்ந்த இணைய மோசடிகள் குறித்து 1930 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, மாநிலக் காவல் துறையினர், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ஒரே தளத்தில் இந்த அமைப்பு ஒருங்கிணைக்கிறது.


6. MuleHunter.AI: டிசம்பர் மாதம் 2024-ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI), MuleHunter.AI என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியை உருவாக்கியுள்ளதாக அறிவித்தது. இது வங்கிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் "Mule" (சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் வாடகை வங்கிக் கணக்குகள்) கணக்குகளைக் கண்டறிய உதவுவதன் மூலம், டிஜிட்டல் பண மோசடிகளைக் குறைக்க வழிவகை செய்யும். இந்தத் தொழில்நுட்பத்தை ரிசர்வ் வங்கி கண்டுபிடிப்பு மையம் (Reserve Bank Innovation Hub (RBIH)) உருவாக்கியுள்ளது.


வங்கி மோசடி கணக்குகள் (mule accounts) என்றால் என்ன?


ஒரு கழுதை சுமையைச் சுமந்து செல்வதைப் போல, திருடப்பட்ட பணத்தைப் பரிமாற்றம் செய்ய இந்த வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சம்பந்தப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, தங்கள் கணக்கு தவறாகப் பயன்படுத்தப்படுவது தெரியாமலிருக்கலாம், அல்லது சிலர் பணத்திற்காகத் தெரிந்தே தங்கள் அடையாளத்தை மற்றவர்களுக்குக் கொடுத்திருக்கலாம்.


வங்கி மோசடிகள் (banking scams) என்றால் என்ன?


வங்கி மோசடிகள் அல்லது ஏமாற்று வேலைகள் என்பவை, குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணத்தையோ அல்லது முக்கியமான தகவல்களையோ திருடுவதற்காக ஏமாற்றும் தந்திரங்களைப் பயன்படுத்துவதைக் குறிக்கின்றன. மோசடிக்காரர்கள், தனிநபர்களை ஏமாற்றி அவர்களின் நிதி விவரங்களைப் பெறுவதற்காக, மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் போலி இணையதளங்கள் போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். சில பொதுவான வங்கி மோசடிகள் பின்வருமாறு:


1. மின் தூண்டிலிடல் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட மின் தூண்டிலிடல் (Phishing and spear-phishing): மோசடிக்காரர்கள், கணக்கு விவரங்கள், கடன் அட்டைத் தகவல்கள் மற்றும் தனிப்பட்ட அடையாள எண்கள் போன்ற முக்கியமான தகவல்களைப் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறுவதற்காக, போலியான மின்னஞ்சல்கள் அல்லது செய்திகளை அனுப்புகின்றனர்.


2. செயற்கை அடையாள மோசடி: மோசடிக்காரர்கள், தரவுக் கசிவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக, கடன்களைப் பெறுவதற்கோ அல்லது கணக்குகளைத் தொடங்குவதற்கோ உண்மையான மற்றும் போலியான தகவல்களை இணைத்து அடையாளங்களை உருவாக்குகின்றனர்.


3. மொபைல் வங்கி மோசடிகள்: இணையக் குற்றவாளிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பாதுகாப்பு குறைபாடுகளைப் பயன்படுத்தி, இரு-நிலை அங்கீகாரத்தை (two-factor authentication (2FA)) மீறி பணத்தைத் திருடுவதற்காக தொலைபேசி எண்களைப் பெறுகின்றனர்.


4. தவறான வைப்புத்தொகை: மோசடிக்காரர்கள், பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காகச் சிறிய தொகையை வைப்புத்தொகையாகச் செலுத்துகின்றனர். பின்னர், அவர்களை ஏமாற்றி அவர்களின் ஒருங்கிணைந்த பண இடைமுகம் - தனிப்பட்ட அடையாள எண்களைப் (Unified Payments Interface Personal Identification Number (UPI PINs)) பெறும் வகையில் போலியான கணக்குகள் மூலம் பணத்தைத் திரும்பப் பெறுகின்றனர்.


5. ஏடிஎம் ஸ்கிம்மிங் மற்றும் கார்டு குளோனிங்: ஏடிஎம் இயந்திரங்கள் அல்லது பணம் செலுத்தும் கருவிகளில் (Payment terminals) அட்டைகளின் தரவைத் திருடுவதற்கு இணைய (Internet of Things) சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  மோசடியான பணப் பரிவர்த்தனைகளைச் செய்யவும் அல்லது போலியான அட்டைகளை உருவாக்கவும் (Card duplication) இந்தத் தகவல்களைப் பயன்படுத்துகின்றனர்.


6. அரசு அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகள்: மோசடி செய்பவர்கள் தங்களை அரசு அதிகாரிகள் போலக் காட்டிக்கொண்டு, பொதுமக்களிடம் இருந்து தனிப்பட்ட விவரங்களைச் சேகரிப்பார்கள் அல்லது பொய்யான காரணங்களைக் கூறிப் பணம் செலுத்தச் சொல்லி ஏமாற்றுவார்கள்.


Original Link: RBI proposes ‘Kill Switch’ for payment safety. What it is and why it matters.


Share:

ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதியில் இந்தியாவின் முதல் குவாண்டம் மையம் -குஷ்பூ குமாரி

உலக குவாண்டம் தினத்தன்று இந்தியா தனது முதல் உள்நாட்டு குவாண்டம் கணினி சோதனை மையத்தை நிறுவியது. அது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் பார்ப்போம். தேசிய குவாண்டம் இயக்கம் (National Quantum Mission) என்றால் என்ன?


தற்போதைய செய்தி :


அமராவதியில் உள்ள SRM பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட, இந்தியாவின் முதலாவது உள்நாட்டு குவாண்டம் கணினிச் சோதனை வசதியை, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஏப்ரல் 14 அன்று முறைப்படி தொடங்கி வைத்தார். அமராவதி குவாண்டம் குறிப்பு வசதி மையம் (Amaravati Quantum Reference Facility (AQRA)) தொடங்கப்பட்டதன் மூலம், அமராவதி குவாண்டம் தொழில்நுட்ப வளர்ச்சி மையம் (Amaravati Quantum Valley) ஒரு சர்வதேச குவாண்டம் கணினி மையமாக உருவெடுக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.


முக்கிய அம்சங்கள்:


1. உலக குவாண்டம் தினமான ஏப்ரல் 14 அன்று அமராவதி குவாண்டம் குறிப்பு வசதி மையம் (Amaravati Quantum Reference Facility (AQRA)) நிறுவப்பட்டது. இதன் மூலம் இந்தியா இப்போது வெளிப்படையான இறையாண்மை கொண்ட குவாண்டம் உள்கட்டமைப்பைப் பெற்றுள்ளது. இந்த முன்னெடுப்பில் இரண்டு முக்கிய தளங்கள் இடம்பெற்றுள்ளன: அவை மேதா டவர்ஸில் உள்ள 1Q சோதனைக்களம் மற்றும் அமராவதியில் உள்ள SRM பல்கலைக்கழகத்தில் உள்ள 1S சோதனைக்களம் ஆகும்.


2. இது, இந்தியாவின் தேசிய குவாண்டம் திட்டத்தின் கீழ் இயங்கும் ஆந்திரப் பிரதேச அரசின் முக்கிய குவாண்டம் தொழில்நுட்ப மையத்தின்கீழ் நிறுவப்பட்டது.


3. தேசிய குவாண்டம் இயக்கம் (National Quantum Mission (NQM)): 2023-24 முதல் 2030-31 வரை ரூ.6003.65 கோடி மொத்த செலவில் தொடங்கப்பட்ட குவாண்டம் தொழில்நுட்பம் (QT) துறையில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (R&D) வளர்த்து அதை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், குவாண்டம் தொழில்நுட்பத் துறையில் புதுமையான சூழலமைப்பை உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


4. தேசிய குவாண்டம் இயக்கத்தின் (National Quantum Mission (NQM))  நோக்கங்கள்: அவை,


மிகைக்கடத்தல் மற்றும் ஒளியியல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தளங்களில், 8 ஆண்டுகளில் 50-1000 இயற்பியல் குவாண்டம் பிட்களைக் கொண்ட இடைநிலை அளவிலான குவாண்டம் கணினிகளை உருவாக்குதல்,

இந்தியாவில் 2000 கி.மீ தூரத்திற்குள் உள்ள நில நிலையங்களுக்கு இடையில், செயற்கைக்கோள் அடிப்படையிலான பாதுகாப்பான குவாண்டம் (Satellite-based secure quantum communications) தொடர்பை ஏற்படுத்துதல்,


அணு அமைப்புகளில் அதிக உணர்திறன் கொண்ட காந்தமானிகளையும், துல்லியமான நேரக்கணிப்பு, தகவல் தொடர்பு மற்றும் திசைகாட்டும் அணு கடிகாரங்களையும் உருவாக்குதல்.



குவாண்டம் சாதனங்களைத் தயாரிப்பதற்காக, மிகைமின்கடத்திகள், புதுமையான குறைக்கடத்தி கட்டமைப்புகள் மற்றும் இடம்சார்ந்த பொருட்கள் போன்ற குவாண்டம் பொருட்களை வடிவமைத்துத் தொகுத்தல்,


குவாண்டம் தொடர்பு, உணர்தல் (sensing) மற்றும் அளவீட்டு  பயன்பாடுகளுக்காக, ஒற்றை ஒளிக்கற்றைகள் (single photons) உருவாக்கும் கருவிகள், அவற்றை கண்டறியும் கருவிகள், ஒன்றோடொன்று இணைந்த (entangled) ஒளிக்கற்றைகள் உருவாக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் ஆகும்.


5. குவாண்டம் தொழில்நுட்பம் (Quantum Technology) என்பது, குவாண்டம் இயக்கவியலின் கோட்பாடுகளை மையமாகக் கொண்டு குறிப்பாக நிர்வகிக்கப்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கான ஒரு பொதுவான சொல்லாக  அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. இது, குவாண்டம் கணினிகள் போன்ற குவாண்டம் கணினிச் சாதனங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்குத் தேவையான வன்பொருள், மென்பொருள், நெறிமுறைகள் மற்றும் வழிமுறைகளை உருவாக்குவதை  கொண்டுள்ளது.



6. இந்த தொழில்நுட்பம், குவாண்டம் இயற்பியலின் முக்கியக் கோட்பாடுகளை பயன்படுத்துகிறது. அவை, பல நிலைகளில் ஒரே நேரத்தில் இருப்பது, துகள்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும் நிலை மற்றும் அலைகள் ஒன்றுடன் ஒன்று பாதிக்கும் தன்மை ஆகியவற்றை பயன்படுத்தி, பெரிய அளவிலான கணக்கீடுகளை அதிக திறனுடன் மேற்பார்வை செய்தல் ஆகும்.



7. மேற்பொருந்தல் (Superposition) என்பது, ஒரு குவாண்டம் அமைப்பு அளவிடப்படும் வரை ஒரே நேரத்தில் பல ,ஊகிய நிலைகளில் இருப்பதை குறிக்கிறது. இந்த நிகழ்வு, துகளைக் கவனிக்காத வரை மட்டுமே நீடிக்கும். ஒருமுறை அதை கவனித்தவுடன், அந்த துகள் ஒரு இடத்தில் மட்டும் தோன்றும் மற்ற இடங்களில் அது இருப்பதை நிறுத்திவிடுகிறது.


8. மரபுசார் கணினியியலில், கணக்கீட்டிற்கான அடிப்படை அலகு ‘பிட்’ ஆகும், இது ‘0’ அல்லது ‘1’-ஆல் குறிக்கப்படுகிறது. ஒரு பிட் (bit) ‘0’ அல்லது ‘1’ என்ற இரண்டு மதிப்புகளில் ஒன்றாக மட்டுமே இருக்கும். இதற்கு மாறாக, குவாண்டம் கணினியியல் ‘க்யூபிட்’ அல்லது குவாண்டம் பிட் என்பதை அதன் அடிப்படை அலகாகப் பயன்படுத்துகிறது. மரபுசார் பிட்களைப் போல் இல்லாமல், க்யூபிட்கள் ‘0’ மற்றும் ‘1’ ஆகிய இரண்டின் மேற்பொருந்தலிலும் இருக்க முடியும்.  (இது ‘0’ மற்றும் ‘1’ ஆகியவற்றின் நேரியல் சேர்க்கையால் விவரிக்கப்படுகிறது மற்றும் அளவிடப்படும்போது.  க்யூபிட் ‘0’ அல்லது ‘1’ மூலம்  குறிக்கப்படுகிறது).


9. இணைப்பு நிலை: இது, இரண்டு அணுத்துகள்கள் தூரத்தைப் பொருட்படுத்தாமல் எவ்வாறு ஒன்றோடொன்று பிணைக்கப்படுகின்றன என்பதையும், ஒரு துகளின் அளவில் ஏற்படும் மாற்றம் மற்றொன்றில் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதையும் விளக்கும் ஒரு நிகழ்வாகும். அனுப்புபவர் மற்றும் பெறுபவரின் க்யூபிட்களை (qubits) இணைப்பதன் மூலம், பாதுகாப்பு மீறல்களை (security breaches) தவிர்க்க முடியும்.


10. குறுக்கீடு: அளவிடப்படும்போது, ​​அணுத்துகள்களின் நிலைகளின் நிகழ்தகவுகளைப் பாதிக்கும் ஒரு அலை போன்ற மேற்பொருந்தல் நிகழ்வே துணை அணுத்துகள்களின் நிலைகளாகும். சிக்கல் என்பது இரண்டு துகள்களுக்கு இடையேயான ஒரு நிகழ்வாகும். அதேசமயம், குறுக்கீடு என்பது ஒன்றையொன்று சூழ்ந்துள்ள பல துகள்களின் விளைவாகும்.


குறுக்கீடு ஆக்கப்பூர்வமாகவும் அழிவுப்பூர்வமாகவும் இருக்கக்கூடும். இது குவாண்டம் கணக்கீட்டில், குறைந்த வாய்ப்பு உள்ள முடிவுகளை குறைத்து, அதிக வாய்ப்பு உள்ள முடிவுகளை மேம்படுத்தி, துல்லியத்தன்மையை வழங்குகிறது. 


அல்ட்ராகோல்ட் அணுக்கள்


1. அல்ட்ராகோல்ட் அணுக்களே குவாண்டம் தொழில்நுட்பப் புரட்சியின் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science (IISC)), புனேவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ராமன் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற நிறுவனங்களில் உள்ள முன்னணி குழுக்களுடன், குளிர் மற்றும் அல்ட்ராகோல்ட் அணு இயற்பியலில் இந்தியா ஒரு வலுவான மற்றும் வளர்ந்து வரும் இடத்தைப் பிடித்துள்ளது.


2. இந்தியாவில் போஸ்-ஐன்ஸ்டீன்  வேகத்தை உருவாக்கிய முதல் ஆய்வகம் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி  (Tata Institute of Fundamental Research (TIFR)) நிறுவனமாகும். இது  இந்தத்துறையில் ஒரு முக்கிய சாதனையாக உள்ளது. மேலும், இது அல்ட்ராகோல்ட் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள்மீது தொடர்ந்து இயங்கி வருகிறது.


3. இயற்பியலில் மிகக் குறைந்த வெப்பநிலை தனிச்சுழி வெப்பநிலை (absolute zero) ஆகும். அது −273 15°C இந்த நிலையில் அணுக்கள் அசைவதை நிறுத்தி அமைதியாக இருக்கும். இந்த வெப்பநிலையில், பொதுவாகப் பொருளுக்கு வெப்பநிலையை வழங்கும் வகையில் அசைந்துகொண்டிருக்கும் அணுக்கள், அந்த நிலையில் நகர்வதை நிறுத்திவிடும். இயற்கை அனுமதிக்கும் அளவிற்கு அவை முழுமையாக அசையாமல் இருக்கும்.


4. தனிச்சுழி வெப்பநிலைக்குச் சில பில்லியனில் ஒரு பாகம் மட்டுமே மேலே உள்ள இந்த வரம்பிற்கு, அணுக்களை மிக அருகில் கொண்டு வருவது எப்படி என்பதை விஞ்ஞானிகள் கற்றுக்கொண்டுள்ளனர். அந்த உறைந்துபோன, அசைவற்ற உலகில், அணுக்கள் சிறிய பில்லியர்ட் பந்துகளைப் போலச் செயல்படுவதை நிறுத்திவிட்டு, ஒன்றுடன் ஒன்று  இணைத்து அலைகளைப் போலச் செயல்படத் தொடங்குகின்றன.


5. பொதுவாக குவாண்டம் இயற்பியல் எலக்ட்ரான்கள் மற்றும் அணுக்கள் அளவில் மட்டுமே காணப்படும். ஆனால், இங்கே தெளிவாக தெரிகிறது. அணுக்கள் மெதுவாகும் போது, அவற்றின் குவாண்டம் தன்மை அவற்றின் நடத்தையை நிர்ணயிக்கும்.


6. மிகக் குறைந்த வெப்பநிலைகளில், ஒரு அணுவின் அலை போன்ற தன்மை விரிவடைந்து ஒன்றுடன் ஒன்று இணைகிறது. போதுமான அளவு அணுக்கள் குளிர்ந்தால், அவை அனைத்தும் ஒரே குவாண்டம் நிலையில் சேர்ந்து ஒரே பொருளாக நடக்கத் தொடங்கும். இந்த நிலை போஸ்-ஐன்ஸ்டீன் செறிமம் (Bose–Einstein Condensate) என்று அழைக்கப்படுகிறது. இதில் கோடிக்கணக்கான அணுக்கள் தனித்தனியாக இல்லாமல்  உயர் அணு (super-atom) போல செயல்படும்.


7. குவாண்டம் தொழில்நுட்பத்தில், சூரிய ஒளியைப் பயன்படுத்தி குளிர் அணுக்களை சீரான வடிவங்களில் அமைப்பதன் மூலம், இயற்பியலாளர்களால் வேறுவிதமான திடப்பொருள்கள், மிகக் குறைந்த கடத்திகள் போன்ற அமைப்புகளின் நடத்தையைப் பிரதிபலிக்கும் செயற்கைப் பொருட்களை உருவாக்க முடியும். இந்த “குவாண்டம் மாதிரி அமைப்பாளர்கள்”, சாதாரண கணினிகளால் தீர்க்க முடியாத சிக்கலான பிரச்சினைகளை விஞ்ஞானிகள் ஆய்வுசெய்ய உதவுகின்றன.


8. குளிர்ந்த அணுக்கள், குவாண்டம் கணினிகளின் அடிப்படை கூறுகளாகவும் உருவாக்கப்படுகின்றன. இவை மூலக்கூறு வடிவமைப்பு அல்லது குறியாக்கவியல் போன்ற சில பிரச்சினைகளை, இன்றைய கணினிகளைவிட மிக வேகமாக தீர்க்கும் திறன் கொண்டவை.


Original Link: India’s first quantum facility in Andhra Pradesh’s Amravati 


Share:

விஷ அம்புகள் வீழ்த்தப்பட்டன. -ப. சிதம்பரம்

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் "அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து" என்ற விவாதத்தின் அடிப்படையிலேயே நடைபெற்றது. தற்போது கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு பிரிவு 131-வது திருத்த மசோதா அந்த அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியது, ஆனால் இறுதியில் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.


ஒன்றிய அரசாங்கமும் பாரதிய ஜனதா கட்சியும் அரசியலமைப்பின் 131-வது திருத்தச் சட்டம், (Constitution (131st) Amendment Bill, 2026) 2026-ஐச் சுற்றி ஒரு குறிப்பிட்ட கருத்தை உருவாக்க முயற்சித்தன. இருப்பினும், இந்தத் தகவல் தவறான உண்மைகளையும், சட்டத்தின் மீதான சந்தேகத்திற்குரிய விளக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்ததால், இது ஒரு குறைபாடுள்ள கருத்தாகவே அமைந்தது.


ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, சட்டரீதியான நிலைப்பாடு மிகவும் தெளிவாக இருந்தது. 106-வது அரசியலமைப்புத் திருத்தம் செப்டம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டு, இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இது சட்டப்பிரிவு 334A-ஐ அறிமுகப்படுத்தியது. ஆனால், அரசுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களால், ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி இரவு வரை இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்தத் திருத்தம் மக்களவையின் தற்போதைய பலமான 543 உறுப்பினர்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கியது. எனவே, பெண்களுக்கான இடஒதுக்கீடு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது, சட்டப்பிரிவு 334A-ஐ மீண்டும் பரிசீலிக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு மாறாகச் சொல்லப்பட்ட வாதங்கள் அனைத்தும் தவறானவையாகும். 


இருப்பினும், அரசாங்கம் பல நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் ஒரு வியூகத்தை வகுத்தது. தமிழகம் மற்றும் மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு இடையூறு விளைவிப்பது, தொகுதி மறுவரையறை நேர்மையாக நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவது, தென்னிந்திய மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மறுவரையறை செயல்முறையை மெல்ல அறிமுகப்படுத்துவது, மற்றும் இடஒதுக்கீட்டிற்கும் தொகுதி மறுவரையறைக்கும் தொடர்பு உண்டு என்ற தவறான கருத்தைப் பரப்புவது போன்றவை இதில் அடங்கும். இந்த நோக்கங்கள் வெளியானதும், அரசாங்கம் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் வலுவிழந்தது.


ஒன்றிய அரசும் பாரதிய ஜனதா கட்சியும் பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளன:


1. பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தை நீங்கள் ஏன் மீண்டும் கையில் எடுத்தீர்கள்?


அரசியலமைப்புச் சட்டத்தின் 106-வது திருத்தச் சட்டம், 'பிரிவு 334A'-வைச் சேர்த்ததன் மூலம் அந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அந்தப் பிரிவு 334A-வில் என்ன தவறு இருந்தது? அதைச் செயல்படுத்துவதில் உங்களுக்கு என்ன சிக்கல் ஏற்பட்டது? குறிப்பாக, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை இன்னும் முடிவடையவில்லை என்று கூறி, மக்களிடையே ஏன் சந்தேகத்தையும் குழப்பத்தையும் உருவாக்கினீர்கள்? சட்டப்பிரிவு-334A ஏற்கனவே முழுமையாகத்தான் இருந்தது. அதற்கு மேல் செய்வதற்கு எதுவுமில்லை.


2. ஏப்ரல் 16-18 தேதிகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் அவ்வளவு அவசரமாகக் கூட்டுவதற்கு என்ன காரணம்?


தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க மாநிலத்திற்கான வாக்குப்பதிவு தேதிகள் ஏப்ரல் மாதம் 23-ஆக (மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 29) நிர்ணயிக்கப்பட்டிருந்தன. தொகுதி மறுவரையறை முடிந்த பிறகுதான் பெண்களுக்கான இடஒதுக்கீடு முறை நடைமுறைபடுத்தப்படும்; இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு நாடு முழுவதும் பல மாதங்களோ அல்லது ஆண்டுகளோகூட ஆகக்கூடிய ஒரு நீண்ட செயல்முறையாகும். எனவே, பெண்களுக்கான இடஒதுக்கீட்டுடன் கூடிய முதல் மக்களவைத் தேர்தல் 2029-ஆம் ஆண்டுதான் நடைபெற வாய்ப்புள்ளது. ஒருவேளை சட்டப்பிரிவு 334A-வில் மாற்றங்கள் தேவைப்பட்டால் கூட—உண்மையில் அங்கு அத்தகைய அவசரத் தேவை ஏதுமில்லை. ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்குப் போதுமான கால அவகாசம் இருந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த  39-நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேற்குவங்கத்தின் 42-நாடாளுமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 81-நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சூழலில், அவர்களை ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதியன்று அவசரமாக அழைப்பதன் மூலம் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. எனவே, இந்த அவசரம் செயற்கையானது. மேலும், இது அரசாங்கத்தின் அரசியல் உள்நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது.


3. மக்களவையின் உறுப்பினர் எண்ணிக்கையை ஏன் அதிகரிக்க வேண்டும், அதன் விளைவாக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இடங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை ஏன் உயர்த்த வேண்டும் என்பதற்கான காரணங்கள் என்ன?


மக்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50% அதிகரிக்க வேண்டும் என்று எந்தவொரு நபரோ அல்லது கட்சியோ கோரவில்லை, மாறாக இந்த யோசனைக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புதான் கிளம்பியது. 815-உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையை நிர்வகிப்பது கடினமான ஒன்றாக இருக்கும் என்பதோடு, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஆக்கபூர்வமான விவாதங்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளும் குறைந்துவிடும். இதன் உண்மையான நோக்கம் என்னவென்றால், மாநிலங்களின் பிரதிநிதித்துவமும், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையும் 181-லிருந்து 272-ஆக 50% உயரும் என்ற தோற்றத்தை உருவாக்குவது மட்டுமே. உண்மையில், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை அதிகரித்தாலும், அந்தந்த மாநிலங்களின் விகிதாச்சாரப் பங்கு அப்படியேதான் இருக்கும். இது மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மேம்பட்டுள்ளது என்ற ஒரு தவறான பிம்பத்தை மட்டுமே உருவாக்கும். இந்த மாயையை மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள் என்று ஒன்றிய அரசு (மற்றும் பாஜக) கருதியது மிகவும் வருத்தமளிக்கிறது.


4. அரசியலமைப்புச் சட்டத்தின் (131-வது) திருத்த மசோதா, 2026-ஐக் கருத்தில் கொள்ளாமல், தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும்?


அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 81(2)(a)-ல் (Article 81(2)(a)) எந்த மாற்றமும் செய்யப்படாதவரை, தொகுதி மறுவரையறை என்பது "ஒரு நபர், ஒரு வாக்கு" என்ற கொள்கையைப் பின்பற்றியே இருக்க வேண்டும். அதாவது, மக்களவையின் ஒவ்வொரு தொகுதியும் தோராயமாகச் சமமான வாக்காளர்களைக் கொண்டிருக்க வேண்டும். மக்கள்தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், தேசிய சராசரியைவிட அதிக மொத்தக் கருத்தரிப்பு விகிதத்தைக் (Total Fertility Rate (TFR)) கொண்ட மாநிலங்களில் இடங்களை அதிகரிப்பதற்கும் இந்த மசோதா வழிவகுக்கும். இதன் விளைவாக, தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களின் மக்களவைப் பிரதிநிதித்துவம் 24.3%-லிருந்து 20.7%-ஆகக் குறையும்; அதேசமயம் பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் கூட்டாகச் சுமார் 5% கூடுதல் இடங்களைப் பெறும். இதுவே இந்த விவகாரத்தின் மையப்பொருள் ஆகும். சட்டப்பிரிவு 81(2)(a)-க்கு ஒரு நியாயமான மாற்று வழியை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சனையைச் சரிசெய்ய முடியும், ஆனால் அரசாங்கமோ அல்லது பாரதிய ஜனதா கட்சியோ இந்தச் சிக்கலைத் தீர்க்க முன்வரவில்லை.


5. பெண்களுக்கான இடஒதுக்கீட்டை, தொகுதி மறுவரையறையுடன் இணைப்பதில் அரசு ஏன் இவ்வளவு உறுதியாக இருந்தது?


ஏனென்றால், இது ஒரு தவறான கருத்தை உருவாக்கியது. எனவே, இந்த இரண்டு விவகாரங்களையும் ஒன்றோடொன்று இணைக்காமல் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.


6. அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான அந்த முயற்சியை எதிர்க்கட்சிகள் ஏன் இவ்வளவு தீவிரமாக எதிர்த்தன?


2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் "அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து" என்ற விவாதத்தின் அடிப்படையிலேயே நடைபெற்றது. தற்போது கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு பிரிவு 131-வது திருத்த மசோதா அந்த அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியது, ஆனால் இறுதியில் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.


Original Link: Poisoned arrows shot down.


Share:

தொகுதி மறுவரையறை: தேவையா இல்லையா?. -கே.எஃப். வில்ஃபிரட்

தொகுதி மறுவரையறை குறித்த விவாதம், மக்களின் பிரதிநிதித்துவம் மற்றும் சமூக சமத்துவம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.


அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதா, 2026 (Constitution 131st Amendment Bill, 2026), யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026 (Union Territories Laws Amendment Bill, 2026) மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா, 2026 (Delimitation Bill, 2026) ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளை மாற்றி அமைப்பதையும், புதிய தொகுதி மறுவரையறை நடவடிக்கையின் அடிப்படையில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதையும் இவை நோக்கமாகக் கொண்டிருந்தன. இந்தத் திட்டமானது, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் சட்டமன்றங்களைக் கொண்ட யூனியன் பிரதேசங்களுக்கு இடையே இடங்களைப் பகிர்ந்தளிக்கவும், தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைக்கவும் முன்மொழிந்தது. மேலும், மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை 850-ஆக உயர்த்தவும் இதில் பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்கள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தக் கூட்டத்தொடர் நடத்தப்பட்டது, பல எதிர்க்கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


சட்டமும் அதன் நடைமுறையும்


இந்திய அரசியலமைப்பின் 82 மற்றும் 170(3) ஆகிய பிரிவுகளின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் எல்லைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். சுதந்திர இந்தியாவில் முதன்முதலில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தொகுதி மறுசீரமைப்பு, 1950–51-ஆம் ஆண்டில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (Election Commission of India (ECI)), ஒவ்வொரு மாநிலத்திற்குமான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக்களின் உதவியுடன் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டியிருந்ததாலும், 1951-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முழுமையடையவில்லை என்பதாலும், இந்த முதல் முயற்சியின்போது மக்கள் தொகை ஆணையர் (Census Commissioner) வழங்கிய மார்ச் மாதம் 1-ஆம் தேதி, 1950-ஆம் ஆண்டு வரையிலான மதிப்பீட்டு மக்கள் தொகை புள்ளிவிவரங்களே பயன்படுத்தப்பட்டன.


அரசியலமைப்புச் சட்டத்தின் தேவைக்கேற்ப, முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு 1951-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மீண்டும் செய்யப்பட்டது. இதே போன்ற மாற்றங்கள் 1961 மற்றும் 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளுக்குப் பிறகும் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1971-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட தொகுதி மறுவரையறை 1976-ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. பின்னர், அரசியலமைப்பின் 42-வது திருத்தச் சட்டம் (42nd Amendment Act), 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை அடுத்தகட்ட தொகுதி மறுவரையறையை நிறுத்தி வைத்தது. மக்கள்தொகை கட்டுப்பாட்டு முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக இந்தத் தற்காலிகத் தடையை இந்திரா காந்தி தலைமையிலான அரசாங்கம் கொண்டு வந்தது. மக்கள்தொகையை வெற்றிகரமாகக் குறைத்த மாநிலங்கள் தங்கள் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடாது என்பதையும், அதிக மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெற்றுவிடக்கூடாது என்பதையும் இது நோக்கமாகக் கொண்டிருந்தது.


மக்கள்தொகை வளர்ச்சி தொடர்பான சிக்கல்


தொகுதிகள் மறுவரையறை செய்வதற்கான தற்காலிகத் தடை 2001-ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இருப்பினும், அப்போதைய அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல் அப்படியே தொடர முடிவு செய்தது. அதற்குப் பதிலாக, தொகுதி எல்லைகளை மட்டும் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஏனெனில், 1971-ஆம் ஆண்டிற்குப் பிறகு தொழில் மற்றும் வாழ்வாதாரத்திற்காக மக்கள் அதிகளவில் இடம் பெயர்ந்ததால், தொகுதிகளுக்கு இடையே இருந்த மக்கள்தொகை சமநிலை மாறியிருந்தது. இதற்காக, 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இடங்களின் எண்ணிக்கையை மாற்றாமல் தொகுதிகளின் எல்லைகளை மட்டும் மாற்றி அமைக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.


அரசியலமைப்புச் சட்டத்தின் (எண்பத்தி நான்காவது திருத்தம்) சட்டம், 2001-ன் 'நோக்கங்கள் மற்றும் காரணங்களுக்கான அறிக்கையில்' (Statement of Objects and Reasons) விவரிக்கப்பட்டுள்ளதாவது: தேசிய மக்கள்தொகை கொள்கையின்கீழ் (National Population Policy) குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு, புதிய தொகுதி மறுவரையறைக்கான தடையை 2026-ஆம் ஆண்டு வரை நீட்டிக்க அரசு முடிவு செய்தது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள மாநிலங்களை ஊக்கப்படுத்துவதே இதன் நோக்கமாகக் கூறப்பட்டது.


எனவே, அனைத்து மாநிலங்களிலும் மக்கள்தொகை வளர்ச்சி 25-ஆண்டுகளுக்குள் சீராகும் என்று அக்காலத்தில் நம்பப்பட்டது. 2001-ஆம் ஆண்டின் 84-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி (84th Constitutional Amendment Act), சட்டப்பிரிவுகள் 82 மற்றும் 170(3)-ன்கீழ், தொகுதிகள் மறுவரையறை செய்வதற்கான தடை, 2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகள் வெளியாகும் வரை தொடரும் என்கின்றனர். இதற்கிடையில், தாமதமான 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பதிலாக, தற்போது புதிய தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.


மக்களவைத் தொகுதி மறுவரையறை மசோதா, 2026-ன் (Delimitation Bill, 2026) நோக்கங்கள் மற்றும் காரணங்களுக்கான அறிக்கையில் சில முக்கிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு மக்கள் இடம்பெயர்ந்தது போன்ற காரணங்களால், தொகுதிகளுக்கு இடையே மக்கள்தொகை அடர்த்தி சமச்சீரற்ற நிலையில் உள்ளது. இந்தச் சிக்கலைச் சரிசெய்வதையே இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் சமமான மக்கள் தொகை பங்கீட்டை உறுதி செய்ய, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுகளைப் பயன்படுத்த இந்த மசோதா பரிந்துரைக்கிறது. இதன்மூலம், தற்போது செய்யப்படவுள்ள மாற்றங்கள் சுமார் 15 ஆண்டுகள் பழமையான மக்கள்தொகை புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே  அமையும் என்கின்றனர்.


முன்னோக்கிப் பார்க்கையில்

2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு இடப்பெயர்வு (Migration) குறைந்துவிட்டது என்று சொல்வதற்கும், அல்லது மக்கள்தொகை வளர்ச்சி அனைத்துப் பகுதிகளிலும் சமமாக நிலைபெற்றுள்ளது என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. எனவே, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு முடியும் காலத்திற்குள், அந்தத் தொகுதிகளின் மக்கள்தொகையும் வாக்காளர்களின் எண்ணிக்கையும் சமமாகவே இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.


சில ஆண்டுகளில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது, அவற்றில் பல தொகுதிகள் தற்போதைய மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்களின் அறிக்கையில் (Statement of Objects and Reasons) குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டும், தெளிவான நடைமுறை முரண்பாடுகளைக் கொண்டிருப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்திய அரசியலமைப்பின் விதி 81(2) [Article 81(2)], ஒவ்வொரு மாநிலத்திற்கும் மக்களவை இடங்களை எவ்வாறு ஒதுக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. இதன்படி, அனைத்து மாநிலங்களிலும் மக்கள்தொகைக்கும் இடங்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதம் சமமாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் வகுக்கப்பட்டுள்ளது.


இந்தக் கட்டுரையில் மக்கள்தொகை முதன்மையான அளவுகோலாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அரசியலமைப்பின் பரந்த பார்வை மாநிலங்கள் தங்களுடைய தற்போதைய பிரதிநிதித்துவ நிலையைத் தக்கவைத்துக் கொள்வதையும் ஆதரிக்கிறது. கடந்த காலங்களில் செய்யப்பட்ட சிறிய அளவிலான சீர்திருத்தங்களைப் போலல்லாமல், இந்த முறை நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் தொகையுடன் மற்ற காரணிகளையும் கருத்தில் கொள்ள வாய்ப்புள்ளது. முடிவாக, மாநிலங்கள்தான் இந்திய ஒன்றியத்தின் அடிப்படைத் தூண்கள்; வலுவான மாநிலங்களே ஒரு வலுவான ஒன்றியத்தை உருவாக்குகின்றன.


கே.எஃப். வில்ஃபிரட், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் மூத்த முதன்மைச் செயலாளர் ஆவார்.


Original Link: Delimitation — a case of to be or not to be.


Share: