புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) தேசிய வருமானக் கணக்குகளின் புதிய தொடரை வெளியிட்டுள்ளது. இது 2011-12-ஆம் ஆண்டிலிருந்து 2022-23-ஆம் ஆண்டுக்கு அடிப்படை ஆண்டை மாற்றியுள்ளது. மேலும், தேசிய கணக்குகளை தற்போதுள்ள பொருளாதார நிலைகளுடன் சீரமைக்கும் நோக்கில் வழிமுறை சீர்திருத்தங்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடைசியாக மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர் 2015-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருத்தப்பட்டது.
முக்கிய அம்சங்கள்:
1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) என்பது ஆண்டிற்கு ஆண்டான பொருளாதார வளர்ச்சி அல்லது ஒரு நாட்டின் பொருளாதார அளவை மதிப்பீடு செய்யும் முக்கியமான அளவுகோல் ஆகும். “அடிப்படை ஆண்டு (base year)” என்பது கணக்கீடுகளுக்கான துவக்க ஆண்டாகக் குறிப்பிடப்படும் ஆண்டு ஆகும். இப்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு 2022-23 ஆகும். 2022-23-ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, அடுத்த ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியைக் கணக்கிடுவதற்கான "அடிப்படையாக" பயன்படுத்தப்படுகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டது 8-வது திருத்தமாகும்.
2. மொத்த மதிப்பு கூட்டளிற்கான இரட்டை பணவாட்ட முறை (Double-deflation method): 2022-23-ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர் முக்கியமான மாற்றங்களையும் கண்டுள்ளது. அவற்றில் மிகவும் முக்கியமானது, பெயர் மதிப்பிலான விலை மாற்றங்களுக்கு ஏற்ப சரிசெய்து நிகர மொத்த உள்நாட்டு உற்பத்தியாக மாற்றும் முறை ஆகும். வேளாண்மை மற்றும் சுரங்கத் துறை (mining and quarrying) தவிர மற்ற அனைத்து துறைகளின் மொத்த மதிப்பு சேர்க்கை (Gross Value Added (GVA)) கணக்கிடுவதற்கு புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) பயன்படுத்திய “ஒற்றை விலைச் சீரமைப்பு முறை” (single-deflator), சில சமயங்களில் பொருள் விலைகள் குறைந்திருந்தாலும் அல்லது நுகர்வோர் விலைகளைப் போல வேகமாக உயராத நிலையிலும், வளர்ச்சி அளவு அதிகமாக காட்ட வேண்டிய சுழலிற்கு வழிவகுக்கும்.

ஒரு முக்கிய நடவடிக்கையாக, புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர் ஒற்றை விலைச் சீரமைப்பு முறையைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக இரட்டை விலைச் சீரமைப்பு முறையை பயன்படுத்துகிறது. உள்ளீடு மற்றும் வெளியீடுகளை அந்தந்த பணவீக்க விகிதங்களால் சரிசெய்கிறது. விலைச் சீரமைப்பு முறைகளும் மிகவும் நுணுக்கமாக பயன்படுத்தப்படுகின்றன. இது உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை துல்லியமாக தெரிந்து கொள்ள அனுமதிக்கிறது.
3. தரவு மற்றும் கணக்கெடுப்புகளின் புதிய ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன: இது சரக்கு மற்றும் சேவை வரி, இ-வாகன், இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு, காலமுறை தொழிலாளர் நலன் கணக்கெடுப்பு போன்றவற்றிலிருந்து தரவை இணைத்துள்ளது. மேலும், தேசிய கணக்கியல் தரவுகளை விநியோகம் மற்றும் பயன்பாட்டு அட்டவணைகள் (Supply and Use Tables) உடன் இணைப்பதன் மூலம், உற்பத்தி முறையில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் செலவின முறையில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றுக்கு இடையில் ஏற்படும் வேறுபாட்டை குறைக்க புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) முயற்சி செய்கிறது.
4. இந்தியாவிற்கான தேசிய வருமானம் (GDP) பற்றிய முதல் மதிப்பீடுகள் 1949ஆம் ஆண்டு PC மஹலனோபிஸ் தலைமையில் “தேசிய வருமானக் குழுவால்” (National Income Committee) தொகுக்கப்பட்டன. இந்தக் குழுவின் தேசிய வருமானம் பற்றிய முதல் மற்றும் இறுதி அறிக்கைகள் முறையே 1951ஆம் ஆண்டு மற்றும் 1954-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டன.
5. பின்னர், அதிகமான மற்றும் தரமான புதிய தகவல்கள் கிடைத்ததால், மத்திய புள்ளிவிவர அலுவலகம் (Central Statistics Office (CSO)) மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும் முறையை முழுமையாக மறுபரிசீலனை செய்தது. தேசிய கணக்குத் தொடரின் அடிப்படை ஆண்டுகளை மாற்றுவதைத் தவிர, செயல்பாடுகளின் பாதுகாப்பு, சமீபத்திய தரவுத்தொகுப்புகளை இணைத்தல் மற்றும் சமீபத்திய சர்வதேச வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய கணக்குத் தொடரின் தொகுப்பில் மாற்றங்களை செய்ய மத்திய புள்ளிவிவர அலுவலகம் முயற்சித்தது.
6. அடிப்படை ஆண்டை திருத்துவதற்காக, பொருளாதார பகுப்பாய்வு மற்றும் கொள்கை வகுப்பிற்கான நோக்கங்களுக்காக தேசிய கணக்கு புள்ளிவிவரங்களைத் தொகுத்து வழங்குவதற்கான வழிமுறைகளில் புதிய தரவு மூலங்களைச் சேர்ப்பது மற்றும் மேம்பாடு குறித்து அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்கும் பணியைக் கொண்ட தேசிய கணக்கு புள்ளிவிவரங்களுக்கான ஆலோசனைக் குழுவை (Advisory Committee on National Account Statistics (ACNAS)), பேராசிரியர் பி.என். கோல்டர் தலைமையில், மத்திய நிதி அமைச்சகம் இந்த ஆலோசனைக் குழுவை அமைத்தது.
7. கடந்த வாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி உட்பட தேசிய கணக்குகளின் பல்வேறு மதிப்பீடுகளைத் தொகுப்பதில் உள்ள வழிமுறை மாற்றங்களை மையமாகக் கொண்ட வழிமுறை மேம்பாடுகள் குறித்த துணைக் குழுவின் அறிக்கையை வெளியிட்டது.

8. தேசிய கணக்கு புள்ளிவிவரங்களுக்கான ஆலோசனைக் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து, வரவிருக்கும் தொடருக்கான அடிப்படை ஆண்டாக நிதியாண்டு 2022–23-ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. 2019–2021-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பிறகு, “சாதாரண” நிலைக்கு திரும்பிய சமீபத்திய ஆண்டாக 2022–23 இருப்பதால், அதையே புதிய அடிப்படை ஆண்டாக தேர்வு செய்துள்ளனர். 2019-20 மற்றும் 2020-21 ஆண்டுகள் COVID-19 தொற்றுநோயால் பாதிப்புகளை சந்தித்தன. இது தற்காலிகமாக நுகர்வு முறைகள் மற்றும் தொழில்துறை உற்பத்தியை மாற்றியது.
9. 2011-12-ஆம் ஆண்டு தொடரில் பயன்படுத்தப்பட்ட விகிதாசார முறைக்கு பதிலாக சர்வதேச அளவில் பரிந்துரைக்கப்பட்ட டென்டன்-விகிதாசார தரப்படுத்தல் முறையைப் பின்பற்றவும் இது பரிந்துரைத்தது. காலாண்டு தேசிய கணக்குகள் (Quarterly National Accounts (QNA)) தொடரில் செயற்கையான தொடர்ச்சிகளை நீக்குவதற்கும் குறிகாட்டிகளின் இயக்கத்தைப் பாதுகாப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது காலாண்டு தேசிய கணக்குகளின் மதிப்பீடுகளை வருடாந்திர தேசிய கணக்குகள் (annual national accounts (ANA)) மதிப்பீடுகளுடன் சீரமைக்கிறது.
10. புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் காதின் கூற்றுப்படி, “தேசிய கணக்குகளில் தரப்படுத்தல் முறை, உயர் அதிர்வெண் தகவல்களை வருடாந்திர அளவுகோலால் வரையறுக்கப்பட்ட குறைந்த அதிர்வெண் தகவல்களின் தொகுப்புடன் (வருடாந்திர மாறிகளின் அடிப்படையில்) தொகுப்போடு இணைப்பதன் மூலம் காலாண்டு தொடர்களைப் பெறப் பயன்படுத்தப்படுகிறது. தரப்படுத்தல் முறை, காலாண்டு தேசிய கணக்குகள் (QNA) தரத்தை மேம்படுத்துகிறது. அவை வருடாந்திர தேசிய கணக்குகள் அளவுகோல்களுடன் ஒத்துப்போகும் மற்றும் காலாண்டு பொருளாதார குறிகாட்டிகளின் குறுகிய கால பரிமாணத்திற்கு ஏற்ப இருக்கும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படை ஆண்டை திருத்துவதற்கான காரணம்
1. மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படை ஆண்டை திருத்துவதற்கான காரணம், பொருளாதார நிலையை சரியாகப் புரிந்து கொண்டு அறிவிப்பது ஆகும். இது உண்மையான பொருளாதார வளர்ச்சியை (real economic growth) வெளி காட்ட உதவுகிறது. இது பணவீக்கத்தின் விளைவை நீக்கிய பின் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியாகும். சரியான தகவல் அளிப்பது மிக முக்கியம். ஏனெனில், அது அரசின் கொள்கை உருவாக்குனர்களுக்கு (policymakers) உதவுகிறது. இது பெரிய நிறுவனங்களிடமிருந்து புதிய தொழில்முனைவோர் (entrepreneurs) உட்பட அனைவருக்கும் பயன்படும்.
2. இந்தியா முதலில் வேளாண் பொருளாதாரமாகத் தொடங்கியது. பெரும்பாலான மக்கள் வேளாண்மை அல்லது தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மேலும், பெரும்பாலான மொத்த உள்நாட்டு உற்பத்தி அந்த நடவடிக்கைகளிலிருந்தே வந்தது. ஒவ்வொரு ஆண்டையும் கடந்து செல்லும்போது, இந்தியாவின் பொருளாதார அமைப்பு மாறிக்கொண்டே வருகிறது.
3. இன்றைய நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) பெரும்பகுதி 55% சேவைத் துறையிலிருந்து (services sector) வருகிறது. ஆனால், வேளாண்மை மற்றும் பிற துறைகள் 20%-க்கும் குறைவாக பங்களிக்கின்றன. வேளாண்மையில் ஈடுபடும் மக்கள் எண்ணிக்கை தற்போதைய காலகட்டத்திலும் குறையவில்லை. வேளாண்மை துறையிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுவதற்கும், சேவைத் துறையிலிருந்து கணக்கிடுவதற்கும் வேறு தரவுத்தொகுப்புகள் மற்றும் வேறு முறைகள் தேவைப்படுகிறன.
4. மேலும், தரவுகளில் முன்னேற்றம் ஏற்படும்போதும், பொருளாதார இணைப்புகள் பற்றிய நமது புரிதல் சிறப்பாகும்போதும் இந்த முறைகளும் மாறுகின்றன. உதாரணமாக, 1999 வரை, இந்தியா ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒரு முறை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொடரைத் திருத்தியது. ஒவ்வொரு முறையும், அடிப்படை ஆண்டு 1 என்ற இலக்கத்துடன் முடிவடையும் ஆண்டாக மாற்றப்பட்டது.
5. இந்திய பொருளாதாரத்தில் அங்கீகரிக்கப்படாத (informal/unorganised) துறை மற்றும் அமைப்புசாரா துறைக்கான பணியாளர் மதிப்பீடுகள் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பிலிருந்து பெறப்பட்டன. எனவே, ஒவ்வொரு திருத்தத்திற்கும் அத்தகைய ஆண்டுகளை அடிப்படை ஆண்டுகளாக மாற்றுவது இயல்பான நடவடிக்கையாகும்.
6. இருப்பினும், 1993-94 தொடரிலிருந்து, மத்திய புள்ளிவிவர அலுவலகம் (Central Statistics Office (CSO)), ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் (National Sample Survey Organisation (NSSO)) வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை ஆய்வுகளின் முடிவுகளிலிருந்து பணியாளர் மதிப்பீடுகளைப் பயன்படுத்தத் தொடங்கியது.
7. இதனால், 1999ஆம் ஆண்டு முதல், அடிப்படை ஆண்டு ஒவ்வொரு ஐந்து ஆண்டிற்கும் (2015-ஆம் ஆண்டு வரை) மாற்றப்பட்டது. இது, தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் (National Statistical Commission) பரிந்துரையின் படி, அனைத்து பொருளாதார குறியீடுகளும் குறைந்தது ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை “மீண்டும் அடிப்படை மாற்றப்பட வேண்டும்” என்ற ஆலோசனைக்கு ஏற்ப செய்யப்பட்டது .
மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிடுவதற்கான மூன்று அணுகுமுறைகள்
1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் ஒரு ஆண்டில் உருவாகும் அனைத்து இறுதி பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பின் கூட்டுத்தொகை ஆகும். தற்போதைய விலைகளில் கணக்கிடப்படும் GDP பெயர்மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Nominal GDP) என அழைக்கப்படுகிறது. ஆனால், விலை உயர்வால் மதிப்பு அதிகரித்தால் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்றால், இது சரியான அளவீடாக இருக்காது.
2. மொத்த உள்நாட்டு உற்பத்தியை துல்லியமாக அளவிட பொருளாதார வல்லுநர்கள் மூன்று அணுகுமுறைகளை நம்பியுள்ளனர்: அவை செலவு, வருமானம் மற்றும் தயாரிப்பு ஆகும். அனைத்து அணுகுமுறைகளிலிருந்தும் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரே மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும். இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவீடும் பொருளாதாரத்தின் கட்டமைப்பைப் பொறுத்து இருக்கும்.
3. செலவு அணுகுமுறை: இது நான்கு முக்கிய கூறுகளை கொண்டுள்ளது. அவை தனிப்பட்ட நுகர்வுச் செலவு (personal consumption expenditure (C)), முதலீட்டுச் செலவு (investment expenditure (I), அரசாங்கச் செலவு (government expenditure (G)) மற்றும் உலகின் பிற துறையின் (rest of the world sector (ROW)) மற்ற பகுதிகளின் நிகர ஏற்றுமதிகள் (X-M) ஆகும்.
4. வருமான அணுகுமுறை: இது அனைத்து மூலங்களிலிருந்தும் ஈட்டப்படும் வருமானமாகக் கணக்கிடப்படுகிறது. மேலும், ஊதியங்கள் மற்றும் சம்பளங்கள், உரிமையாளர்களின் வருமானம் (சுயதொழில் மற்றும் இணைக்கப்படாத வணிகங்களிலிருந்து கிடைக்கும் வருவாய்), வாடகை வருமானம், நிறுவன இலாபங்கள் மற்றும் ஈட்டப்படும் நிகர வட்டி (ஈட்டப்படும் வட்டியைக் கழித்தல் செலுத்தப்படும் வட்டி) ஆகியவை அடங்கும். கூடுதலாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கருத்தில் நிகர மறைமுக வரிகள், புள்ளிவிவர முரண்பாடு, தேய்மானம் மற்றும் உலகின் பிற துறைக்கு செய்யப்படும் நிகர கொடுப்பனவுகள் ஆகியவை அடங்கும்.
5. தயாரிப்பு அணுகுமுறை: வெளியீட்டு முறை (output method) அல்லது மதிப்பு கூட்டப்பட்ட முறை (value-added method) என்றும் அழைக்கப்படுகிறது. இது உற்பத்தியின் இடைநிலை நிலைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களைத் தவிர்த்து, உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பையும் சேர்க்கிறது.
Original article : New series of GDP estimates with base year 2022-23 released. -Khushboo Kumari